Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    7048
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3054
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19122
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/04/24 in all areas

  1. என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து, டிபிஸ் சொல்வது உண்மையாக இருந்தால், ஊரில் இருந்த சிலரை வைத்துக் கொலை முயற்சி கூடச் செய்திருக்கிறார்கள். மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும். நேற்று ஒரு திரியில், ஏராளமான தமிழ் அரசியல் அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள் என்று தான் நம்புகிறேன். வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration முடித்த அர்ச்சுனா போன்றோர் தான் இனி "அரசியல் அறிஞர்களாக" உழைக்க வேண்டும்😂!
  2. தொடர்ந்து அவர் தேசியப் பட்டியலில் (பின் கதவால்) மட்டும் வந்து ஒன்றும் பேசாமல் "பின் குசினியில் வேலை" செய்திருக்கலாம் என்கிறீர்களா😂? ஐயா, 2 முறை தேர்தல் வென்றதையே சகித்துக் கொள்ளாமல் பொங்கிய பட்டாசு ரீம் தாங்களே போட்டுத் தள்ளியிருப்பர் சுமந்திரனை. ஆனால், இந்த சுமந்திரன் மீதான இவர்களின் ஒற்றை வன்மம் எப்படி இவர்களைத் தேர்ந்தெடுத்த குருடர்களாக - selective blind மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா? 1. ஈழவேந்தனை புலிகள் தேசியப் பட்டியல் (பின் கதவு) மூலம் வர வைத்தனர். நல்ல பேச்சாளர். லீவு போட்டு விட்டு ஊர் சுற்ற ஆரம்பித்து இறுதியில் அதனாலேயே பதவி பறி போனது. பதவி பறி போகும் தறுவாயிலும் தன் பா.உ குடியிருப்பு சலுகையை வைத்திருக்கப் போராடியவர் அமரர் ஈழவேந்தன். இதையெல்லாம் மறந்து விட்டு, அவருக்கு "தேசியப் புகழ் மாலை" சாத்தியவர்கள் இருக்கிறார்கள். 2. நம் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் முதல் முறை பா. உ ஆனது புலிகள் கிழக்கில் தெரிவான ஒரு கூட்டமைப்பு பா. உவை ஆயுத முனையில் மிரட்டி பதவி விலக வைத்தமையால் வந்த வெற்றிடத்திற்கு.இதைப் பின் கதவென்று கூட சொல்ல முடியாது, "கூரையைப் பிரிச்சு" இறங்கியதாகத் தான் சொல்ல முடியும்😂! இதுவும் கண்ணுக்குத் தெரியாமல் தேர்ந்த குருடர்களாக இருக்கிறார்கள்!
  3. சீனா மக்களை அடக்கி ஆள்வதற்கு கம்யூனிசத்தையும் நாட்டை முன்னேற்ற முதலாளித்துவ கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றது. சீன மக்களின் வாழ்கை வசதிகள் ஈரான் உக்ரைனுக்கு கீழே உள்ளது. சிங்கப்பூர் அதிக உயர்தர மக்கள் வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
  4. இந்த சர்வதேச கோமாளிகளின் பக்கச்சார்பை நினைக்க..............🤣😂 இவர்கள் நல்ல நடிகர்கள், பாராட்ட வேண்டும் நடிப்பிற்கு👍
  5. 1. சும் த.தே.கூட்டமைப்பிற்குள் வரும் போது கஜேந்திரகுமாரும் உடன் இருந்தார். ஆனால் 2010 தேர்தலில் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களையும் தமிழ் தேசியவாதிகளையும் அகற்றிய போது குறிப்பாக அகில இலங்கை காங்கிரஸ் இற்கு ஒரு ஆசனத்தை மட்டும் வழங்கியதாலேயே கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். 2. அருச்சுணாவிற்கு 6 பிளாஸ்ரிக் கதிரைகள் என கிண்டலடித்ததை மறந்து விட்டீர்களா?
  6. குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம் எழுத்துப் பழக்கம் ஏற்படும் முன்பே அடியேனுக்கு மேடைப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. எழுத்திற்காக எனக்குக் கொம்பு சீவி விட்டவள் என் மகள் சோம.அழகு என்றால், மேடை நோக்கி என்னை ஏவி விட்டவர்கள் எனது MUTA தொழிற்சங்கத் தோழர்கள். எனது எழுத்திற்கு நானே வாசகனாய் மனநிறைவு கொள்வதுண்டு. மேடையைப் பொறுத்தவரை பெரும்பான்மை மேடைப் பேச்சாளர்களின் வரையறையில் நான் நிற்பதில்லை என்பதே என்னைப் பற்றிய எனது கணிப்பு (அவர்கள் அப்படி ஏதோ வரையறை வைத்திருக்கிறார்கள் என்பது எனது கற்பனையாகவும் இருக்கலாம்). மேடையின் கீழே நின்றுகொண்டு நான்கைந்து பேர் கொண்ட நண்பர் குழாமில் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் மேடையிலும் எனக்கு வருகிறது. பேசும்போதே யோசித்துக் கொண்டு, சொல்ல வந்தது பாதி வாக்கியத்திலேயே தெளிவானால் அடுத்த வாக்கியத்திற்குத் தாவி விடுவது, பேச்சில் முன்னும் பின்னும் செல்வது இவையெல்லாம் நீங்களும் நானும் அன்றாட உரையாடலில் அவை பற்றிய உணர்வே இல்லாமல் நடைமுறைப் படுத்துவது. மேடையிலும் இது அனிச்சைச் செயலாக வருவதே என் மேடைப் பேச்சு. இது குறையா நிறையா என்று நான் ஆய்வு செய்யும் முன்பே, அந்த என் பேச்சு இயல்பாக இருப்பதாக எனது நட்பு வட்டம் எனக்கு முறுக்கேற்றி விட்டது. அதனால்தானே அது நட்பு வட்டம் ! குறிப்பாக என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் அந்த என் பாணியை மாற்ற முயல வேண்டாம் என அறிவுரைத்து, அது மேடையில் வேறாகத் தெரிவதே ரசனைக்குரியது என்று குறித்தது நான் எதிர்பாராத ஒன்று. மாற்ற முயன்றாலும் என்னால் இயலுமா என்பது வேறு. என்னுள் ஏற்பட்ட இந்த சிந்தனையை உங்கள் முன் சிதறி விட்டேன். எடுத்துக்காட்டாக எனது சமீபத்திய சிற்றுரைகளுக்கான இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன். ஒன்று, நண்பரின் புத்தக வெளியீட்டில்; மற்றொன்று, ஜமாஅத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில். புதிதாக மேடையேற நினைக்கும் இளையோருக்கு, அவர்கள் எடுக்கவும் விடுக்கவும் இங்கு சில விடயங்கள் அமையலாம். (1) (2) https://drive.google.com/file/d/1VezZulqg8lUh9rqkM8XRPDGUA92w2cqk/view?usp=drivesdk இக்காணொளிகள் எனது சமீபத்திய கட்டுரைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. வாசிக்க நேரமில்லாதோர் கேட்கலாம்.
  7. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பா.உ.மன்ற உறுப்பினர்கள் இதை செய்திருப்பினம் போல..😅
  8. உண்மைதான்…. என்ன செய்வது ஐலண்ட் …..இனி போய் நீலனை கூட்டி வர முடியாது. தலைவரையும் கூட்டி வந்து செய்தது பிழை என ஏற்றுகொள்ளவைக்கம்முடியாது…. இப்படியே எவ்வளவு காலம்தான் மாறி மாறி பழைய கறள் கதைகளை கதைச்சு கொண்டே இருக்க போறம்.
  9. இப்ப... உங்களுக்கு, என்ன பிரச்சினை? கீழே உள்ள செய்தி தமிழில் தானே உள்ளது. அதனை நீங்கள் வாசித்து விளங்கிக் கொள்வதில், உங்களுக்கு ஏதாவது கோளாறு உள்ளதா? கிளிநொச்சியில்.... அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசிய கட்சியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சந்திரகுமார் எல்லோரினது சாராயக் கடைகளும் உள்ளது தெரியுமா? ஸ்ரீதரன்... //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று... வெளிப்படையாக அறிவித்த பின்பும், லூசுத் தனமாக எழுதிக் கொண்டு இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். 👇 கீழே உள்ள இணைப்பை... உங்கள் மூளையில் பதியும் வரை... திரும்ப, திரும்ப வாசிக்கவும். அப்படியும் விளங்கவில்லை என்றால், ஏதோ... கோளாறு இருக்குது என்று அர்த்தம். நல்ல வைத்தியரை நாடவும். நன்றி. 👇
  10. பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣. டி 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு நியூயோர்க் மைதானத்திற்கு வந்த பிட்ச் அடிலேட்டில் இருந்தே கொண்டு வரப்பட்டது என்று ஒரு ஞாபகம். வேற ஒன்றும் வேண்டாம்............. அதே பிட்சை இப்பவும் போடுங்கோ................ ஒரு விக்கட் இலவசம்..................🤣.
  11. நாய்... கடித்து இறந்த கோழியை, சமைத்து சாப்பிடலாமா? 😂
  12. நல்லவேளை இலங்கை குடியுரிமையும், வாக்குரிமையும் வைத்திருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நானும் என் நிலையறிந்து பயரும் விடுவதில்லை அதனால் பெயரில் அக்கினியையும் நெருப்பையும் வைத்திருக்க முடிகிறது. கொழுப்பெடுத்து போய் பயர் விட்டால் எந்த நாட்டிலும் பிதுக்கி விடுவார்கள் என்பது உண்மைதான் போலும். அனுர மட்டும்தான் பிதுக்குவார் என்பதில்லை போல
  13. அது என்ன ஒரு மனிசன் கருத்து சொல்லலாம்னு வந்தா நீங்களே அத முதல்ல சொல்லிடுறது?😝 கந்தையா அண்ணை அறிந்த தகவல் தவறானது, சீனா முதலில் ஒரு அபிவிருத்தியடைந்த நாடல்ல, பிரமாண்ட நகர வளர்ச்சியை கொண்டிருந்தாலும், கிராமப்புறங்கள் இன்னும் சுகாதாரம் வறுமை மிக குறைந்த ஊதியம், வேலையில்லா திண்டாட்டம் , சேரிப்புற மக்கள் என மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன. விளங்க நினைப்பவன் சொன்னதுபோல் உள்நாட்டு விவகாரங்களில் கம்யூனிச கொள்கையை கடைப்பிடிக்கும் சீனா பொருளாதார விஷயத்தில் முற்று முழுதாக மேற்குலகம் சார்ந்தே செயல்படுகிறது. உலகின் புகழ்பெற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் சீனாவிற்குள் நிலைகொண்டு சீனர்களின் உழைப்பு பணத்தை முதலீடு என்ற பெயரில் அள்ளி செல்கின்றன, சீனாவில் நிலைகொண்டுள்ள மேற்குலக சில உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் https://msadvisory.com/list-of-foreign-companies-operating-in-china/ சீனா எப்படி உலக பொருளாதாரத்தை சுரண்டுகிறதோ அதேபோல் சீன பொருளாதாரத்தையும் உலகம் சுரண்டுகிறது
  14. ஆயிரத்தில் ஒன்று. 1) பரவாயில்லை. பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து,... யாழ் களத்திலேயே பல பிர பல அறிவில் ஆதவன்கள் தேர்தல் நேரத்தில் போட்ட காட்டுக் கூச்சல் இதற்கு நல்ல உதாரணம். தேர்தல் முடிந்தவுடன் தற்போது தொப்பியைப் பிரட்டிப்போட்டு குத்துக்கரணம் அடிப்பதில் முஸ்லிம்கள் தோற்றார்கள். 2) மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகக் கூறியது, புலம்பெயர்ஸ் வியாபாரக் கூட்டத்திற்கு சகிக்க முடியவில்லை. அதன் விலை தற்போது அர்ச்சுனா (வடிவேலு style ல் கூறினால்🤣) ரமனாதான் போன்ற மனோவியாதிஸ்தர்களை இலங்கையின் அதியுயர் பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கே வடக்கன்ஸ்களின் கொஞ்ச நெஞ்ச மரியாதையையும் காற்றில் பறக்க வைத்திவிட்டது. 3) இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும். எந்தவிதமான கட்டுப்பாடோ அல்லது ஒழுக்கமோ அற்ற, கும்பலில் கோவிந்தா போடும் ஒரு மலினமான, சாதியை மூலதனமாகவும், கல்வியை கொழுத்த சீர்தனத்திற்கான மூலமாகவும் கொண்டு தன்னைக் கல்வியறிவுள்ள இனமாக எண்ணிக் கொண்டு, தாழ்வுச் சிக்கலில் உழலும் ஒரு இனத்திற்கு தனது நேரத்தையும் முயற்சியையும் வீணாக்காமல் இருப்பது சுமந்திரன் போன்றோருக்கு நன்மை பயக்கும். 4) ஏராளமான தமிழ் அரசியல் அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள்,.... உந்த வஞ்சகப் புகழ்ச்சிக்கு தமிழ் அரசியல் அறிஞர்கள் எவரும் சிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 5) வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration முடித்த அர்ச்சுனா உலகமெங்கிலும் பரந்திருக்கும் இலங்கைத் தமிழருக்குத் தலைமை தாங்கும் தகுதி உந்த Bar License புகழ் வாத்தியாருக்கும், தனக்கு சிறப்பு அளிக்கப்படாது என்பதை அறிந்தவுடன் விலகி ஓடும் Colombo - 7 பொன்னம்பலத்தாருக்கும், Joker அர்ச்சுனா ரமநாதனுக்கும் இருக்கிறது என்று நம்பும் உந்த டமில் இனம் அழிந்து போவதற்குத் தகுதியானதே.
  15. சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி. அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு? அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை. அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா? தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?
  16. முடிந்தால் கஜனிடம் சொல்லி விடுங்கோ… அவருக்கு ஒரு off ramp தேவைப்பட்டால்…இதோ👇 1. கட்சியின் கொள்கை என்றவகையில், ஒரு நாடு இரு தேசம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். 2. பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ் தேசிய வாக்குகள் சிதறியமை, மக்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற பொய்பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறது. 3. ஆகவே உடனடித்தேவை என்ற வகையில் - தமிழ் தேசிய சக்திகளை ஒரு முகப்படுத்தும் வகையில் - தமிழ் கட்சிகள் இடையே ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் - நாம் தமிழரசு கட்சி, ஏனைய கட்சிகள் முன்வைக்கும் யோசனைகளையும் பரிசீலித்து, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வர சித்தமாயுள்ளோம்.
  17. இயற்கை அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உதவி 29/11/2024 சந்ததியார் அறக்கட்டளையூடாக சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் குடும்பத்தினர் இயலாமையுடைய பிள்ளைகளின் 10 குடும்பங்களிற்கு அரிசி, பருப்பு, சோயாமீற், சீனி என்பவற்றை வழங்கி உதவியுள்ளனர். கதிர்காமநாதன் குடும்பத்தினருக்கு எமது புலர் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாகவும் இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் அண்மையில்(26/12/2024) காலமான செல்வி கஜீபனாவின் அம்மாவிடம் 30000 ரூபா புலர் அறக்கட்டளையின் வங்கி நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் செயலாளர் திரு இ.பரணீதரன், பொருளாளர் சி.தேவகுமாரன், உபசெயலாளர் இ.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
  18. அங்கொன்றும் இங்கொன்றுமாக ரசித்த REELS களை தொடர்ச்சியாக இணைக்கபோகிறேன். தம்பி கொஞ்சம் நில்லுங்க என் பொண்ணு சொல்றா நீங்க ரொம்ப அழகாம். காதலியை வெறுப்பேத்துவதும் ஒரு அழகுதான் எப்போபார் போனையா கிண்டிக்கொண்டிருக்கிற? இரு வாறன் ஏய் டக்கெண்டு பாக்காத பின்னால ஒரு வடிவானவ பொடியன் இருக்கிறான். அடிபாவி மானத்த வாங்கிட்டியே யூ ஆர் அண்டர் அரெஸ்ட் ஆ ..அப்படித்தான் ஒரு ஞானத்தோட பீப்பி வாசிக்கணும் ஒரு யானையையே மதிக்கலைனா யாருக்குத்தான் கோவம் வராது எப்போதும் உன் கூடவே பொறக்கணும்
  19. அப்படி நாங்கள் நினைக்கிறோம், ஆனால் சிங்களவர்கள் நினைப்பதில்லை. ஜேவிபி, புலிகள் அழிப்பில் முன்னணியில் நின்ற பிரேமதாச ,ரஞ்சன் விஜேரட்ண கொல்லப்பட்டபோது பெரும்பாலான சிங்களவர்கள் புலிகளை குற்றம் சொல்லவில்லை, அந்த இருவரும் செய்த பாவத்திற்கு உரிய தண்டனை பெற்றார்கள் என்று மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களை இப்போதும் திட்டி தீர்க்கிறார்கள். மொழிபெயர்ப்பின்மூலம் அவர்கள் பின்னூட்டங்களைகொஞ்சம் படியுங்கள், அப்படியே பிரேமதாச கொலையையும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று படியுங்கள் அவர்கள் இறப்பில் சிங்களவார்கள் மகிழ்ச்சியடைவதற்கு காரணம் ஜேவிபியை அழித்தார்கள் என்பதற்காகவே. அதுவே புலிகளையும் தமிழர்களையும் அவர்கள் அழித்ததுக்கு யுத்த கதாநாயகர்களாக போற்றப்படுவார்கள். அதே பிரேமதாசதான் தென் தமிழீழத்தில் கொத்து கொத்தாக எம் மக்கள விஷேட அதிரடிபடைமூலம் கொன்று குவித்தான் அதுபற்றி ஒருவரிகூட சிங்களவர்கள் மனம் வருந்தவில்லை ஆக சிங்கள இனம் புலிகளையும் ஜேவிபியையும் ஒன்றாக ஒருபோதும் நோக்காது. தமிழர்கள்மீது அவர்கள் மேலாதிக்கத்தை திணிப்பதே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். புலிகள் அழிவை கொண்டாடும் சிங்கள இனம் புலிகளால் கொல்லப்பட்ட தமது தலைவர்களின் மரணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறதென்றால் காரணம் இனவெறி என்ற ஒன்றேதான், அவர்களது இளைஞர்கள் அரசபடையினால் கொல்லப்பட்டால் அவர்கள் வீரர்கள், அதுவே தமிழ் இளைஞர்கள் அதே அரசபடையினால் கொல்லப்பட்டால் அவர்கள் பயங்கரவாதிகள். பிற இனம்மீது மேலாதிக்கத்தை திணிக்க துடிக்கும் ஒரு இனத்தின் மனது அந்த மேலாதிக்கத்தை எதிர்த்து இறந்தவர்களை ஹீரோக்கள் என்று கொண்டாட மனதார ஒருபோதும் அனுமதிக்காது.
  20. @goshan_cheநீலன் திருச்செல்வம் என்றுமே அரச எம்பியாக இருக்கவில்லை. இறக்கும் போதும் அவர் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினராகவே இருந்தார் என்பதே எனது ஞாபகம்.
  21. அதை தான் கூறுகிறேன். முன்னர் புலிகளால் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வி. பு. ம.மு கட்சியை மீண்டும் விண்ணப்பபிப்பதன் மூலம் புதுப்பிப்பதற்கான அனுமதியை எடுத்து அக்கட்சியில் அரசியல் போராளிகள் இயங்கும் போது அது சிறப்பாக இருக்குமல்லவா?
  22. முன்னாள் போராளிகள் கடந்த தேர்தலில் ஏனைய கட்சிகளின் தயவில் நாலாம் ஐந்தாம் நிலையில் நிற்கவைக்கப்பட்டார்கள் இந்த நிலை மாறி ...நீங்கள் கூறுவது போல அவர்களுக்கு தனிக்டசியை உருவாக்கி ஆளுமையுள்ள தரப்பாக மாற்ற வேண்டும் அடுத்த தேர்தலில் இதை செய்வார்களா? முன்னாள் பெண்போராளி பட்டதாரி ...கடந்த தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்டவர்
  23. இறந்து போன யாரையும் கூட்டிவர முடியாது. ஆனால் இன்று வரட்டு தமிழ் தேசியம் பேசி தம் பக்கத்தில் எல்லாவற்றையும் நியாயப்படுத்தி வருவோர் இவ்வாறான அரசியல் எமக்கு எப்படி பேரிழப்பை தந்தது, எனவே இனிமேல் அறிவுபூர்வ அரசியல் செய்ய வேண்டும் என்று எண்ணிப்பார்கக இவைகளை சுட்டிக்காட்டுதல் முக்கியம் இல்லையா? (உங்கள் திறமையான வாதத்தால் பிணை எடுத்ததற்கு உங்களுக்கு ஒரு நன்றி கூட கிடைத்துள்ளது. வாழ்த்துகள் கோசான்😂) just joke அந்நேரத்தில் சர்வதேச அனுசரணையுடன் அந்த தீர்வு திட்ட அடிப்படையில், ஒரு பேச்சுவார்ததையை நடத்தியிருந்தால், அந்த தீர்வுத்திட்டத்தை யாராலும் சாவடிக்க முடிந்திராது. மாறாக அதில் உ‌ள்ள குறைபாடுகள் களையப்பட்டு அது ஒரு தீர்வாக வந்திருக்க கூடிய சாத்தியத்தை நீங்கள் முற்றாக நிராகரிக்கின்றீர்களா? அதை போன்றதொரு தீர்வை இனி பெற முடியுமா? அதற்கான உலக சூழல் உள்ளதா?
  24. நினைவு கூரலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுருகிறது தானே. முன்பு மகிந்த கோட்டபாய காலத்தில் இதை கேட்கும. துணிச்சல் கஜேந்திரகுமாருக்கு இருக்கவில்லை. நினைவு கூரலுக்கு அனுமதி அளித்த அரசாங்கம் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் தன் இலட்சனைகளை பாவிப்பது சட்ட மீறல் என்பதையே குறிப்பிட்டனர். ஜேவிபி யை போல புலிகளுக்கும் இரு முறை தடை நீக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியே இலங்கை தேர்தல் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அது புலிகளாலேயே கலைக்கப்பட்டு விட்டது. அதன் தலைவரும் கொல்லப்பட்டு விட்டார். கஜேந்திரகுமார் வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு காலாவதியான அந்த கட்சியை மீள பதிவு செய்ய அனுமதி பெற்று முன்னாள் போராளிகளில் அறிவுசார் ஆளுமை உள்ளவர்களை கொண்டு அக் கட்சியை இயக்கும்படி செய்யலாம். அவர்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்து அரசியல் செய்வது சிறப்பாக இருக்கும். அவர்கள் படிப்படியாக தமது அரசியல் முதிர்சசி மூலம் கட்சியை கட்டியெழுப்பி ஒரு காலத்தில் தமது மடிந்த போராளிகளுக்கு ஜேவிபி போல தமது அடையாளங்களுடன் நினைவு வணக்கம் செய்யும் நிலையை உருவாக்க முடியும். செய்வாரா?
  25. இந்த போட்டியில் ரோகித் , கில் திரும்ப அணிக்குள் வருகிறார்கள் (இந்தியாவிற்கு பாதகம்😁), அவுஸில் சர்ச்சைக்குரிய பந்து வீச்சாளர் கேசல்வூட் இந்த போட்டியில் இல்லை (இந்தியாவிற்கு சாதகம்). ஆனால் போலன்ட் விளையாடுகிறார் அவர் மெல்பேர்ன் போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர் (அவர் மெல்பேர்னை சேர்ந்தவர் பழங்குடி இனத்தினை சேர்ந்தவர்).
  26. நிச்சயம் முன்னேறலாம்…. நான் இப்போ இந்த முறையில் முன்னேற முடியாது என்று எங்கும் எழுதவில்லை. 1970, 80களில் ஜேவிபி உருவாக்க முனைந்த நாடு இந்தவகை நாடு இல்லை என்றே சொன்னேன்.
  27. மனதில் என்ன மயக்கம் . ....... ஜெமினி & ராகினி ..........மிக மிக அழகு . .....! 😍
  28. 🤣............ இல்லை, அண்ணன் இப்போது கிழக்கில் நிற்கின்றார். பேச்சு வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும்............🤣.
  29. சிங்கப்பூருக்கு மலேசியாதான் தண்ணி காட்டவேண்டும். அரசியலில் சிறு கீறல் வந்தாலும் சிங்கப்பூருக்கு நாக்கு வரண்டு போகும்.😃 கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள் ஏற்றத்தாழ்வு எரிச்சல் பொறாமை இல்லாமல் ஒரேமாதிரியாக வாழ்ந்தவர்களாம் 🤣
  30. அருமையாய் இருக்கு ..........! வளவன் நீங்கள் ஒரு கலைஞன் ஐயா ........! 😂
  31. இதைத் தான் ஆரம்பத்தில் இருந்தே நான் இங்கே எழுதி வருகிறேன். ஜேவிபியால் ஒரு போதும் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள வைக்க முடியாது என்று. ஏனெனில் அவர்களது கொள்கை அதற்கு எதிர்மறையானது.
  32. அவருக்கு அறுகம் பே மட்டும் தான் தெரியும் ...அங்கே தான் இஸ்ரேலியர்கள் சுற்றுலா வருகின்றனர் ...வடக்கில இஸ்ரேலியர்களின் சினொகளை கட்டி (புலம்பெயர்ஸின் பணத்தில்) நாலு இஸ்ரேலியருக்கு இலவசடிக்க்கெட்ட்டும் கொடுத்தால் சில சமயம் டிரம்பின் கடை கண் பார்வை வடக்கன்ஸ் மீது விழ வாய்ப்பு உண்டு
  33. டிராக்க்டர் விற்ற பெரியவரை யாழ்ப்பாணத்தவராகவும்...மற்ற இருவரை என்.பி.பி காரராகவும் கற்பனை செய்து பார்க்கலாமே....என்றாலும் கொப்பிக்கதை நன்றாக இருக்கு..அச்சுத் தவறாத மொழிபெய்ர்ப்பு
  34. பையன் அண்ணன்கிட்ட ஆசைப்பட்டு கேட்டதால அது என்ன காமெடி என்று யூடியூப்பில் தேடி பார்த்தால், அது எம்ஜிஆர் படம் ஆனா அந்த காமெடி பண்ணினது நாகேஷ் அல்ல சந்திரபாபு.
  35. பனையூரில் பத்து கிலோ அரிசி கொடுக்கின்றார்கள். அங்கே போய் வரிசையில் நிற்கின்றோம்................🫣. சர்வதேசங்களும் கோமாளிகளால் நிறைந்து இருக்குதே, ஏசப்பா...............😌.
  36. வ‌ங்கிளாதேஸ் வெற்றி சுழ‌ல் ப‌ந்து மாஜிக்🙏🥰....................
  37. 👍............... பயன்படுத்திய தேயிலையை ஒரு சின்ன மலையாக வீட்டில் குவித்து வைத்திருக்கின்றார் பொறுப்பாளர்...... இப்பொழுது தான் காரணம் புரிகின்றது...............🤣.
  38. அப்ப‌டியும் இருக்க‌லாம் தாத்தா இவ‌ரின் ப‌த‌விக் கால‌ம் முடியும் போது உக்கிரேனுக்கு பெருத்த‌ உத‌வியுட‌ன் ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌ங்க‌ளை ப‌ய‌ன் ப‌டுத்த‌வும் அனும‌தி கொடுத்தார்..................................
  39. மனுநீதிச் சோழன் மகனையே தேரால் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார் என்று இல்லாத பொல்லாத கதைளை எங்களுக்கு சொல்லி எங்கள் மனதுகளை சிறுவயதிலேயே மாற்றிவிட்டார்கள். ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் போல நாங்கள் வளர்ந்திருக்கவேண்டும்.......... அந்தச் சிலையை கடலுக்குள் தாட்டுவிடலாம்............................😌.
  40. திரைப்பட பாடலாசிரியர் வாலியின் நகைச்சுவை! திரைப்பட பாடலாசிரியர் 'வாலி'யை, ஒரு சமயம் அவருடைய நண்பர் ஒருவர் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர் "டி.எஸ். ரங்கராஜன் என்ற அம்சமான உங்கள் இயற்பெயரை விடுத்து, வாலி என்று தாங்கள் பெயர் வைத்துக்கொள்ள என்ன காரணம்?" என்று கேட்டார். அதற்கு வாலி அவர்கள், "இராமாயணத்தில் வரும் வாலி எதிராளியின் பலத்தில் பாதியைப் பெற்று விடுபவன். அதேபோல நான் பார்ப்பவர்களின் அறிவில் பாதியைப் பெறவே இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன் " என்று கூறினார். உடனே அந்த அதிக பிரசங்கித்தனமான நண்பர் வாலியை மட்டம் தட்டுவதாக எண்ணி "உங்களைப் பார்த்தால் அப்படி அறிவைப் பெற்றவர் போல் தெரியவில்லையே? என்று கிண்டலாகச் சொன்னார். அதற்கு வாலி சிரித்துக் கொண்டே, "நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவே இல்லையே!" என்று மடக்கி நண்பரை திக்கு முக்காட வைத்தாரே பார்க்கலாம் !
  41. இது ஒரு அபூர்வ சக்திவாய்ந்த மரம்! ஒருவன் வனப் பகுதியில் ட்ரெக்கிங் போய் கிட்டு இருந்தபோது அவனுடைய ஷு ! அறுந்து விட்டது! அங்கு இருந்த மரத்தில் அதை தொங்க விட்டான். ஒரு பலகை பக்கத்தில் இருக்க! " இந்த மரத்தில் உங்கள் காலணிகளை தொங்க விட்டால்! உங்கள் மனைவி உங்கள் பேச்சை கேட்பார்கள் " என்று எழுதி விட்டு சென்றான்! கொஞ்ச நாள் கழித்து அந்த மரத்தின் படம் இது! புரியுது! இந்த மரம் எங்கே என்று தானே கேட்கிறீங்க!😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.