Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46783
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1569
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/08/24 in all areas

  1. அரசியல்வழியில் சிங்களவனிடம் தீர்வுகளை எதிர்பார்த்து காலம் காலமாக ஏமாந்த எம் சமூகம் பின்னாளில் ஆயுதம் ஏந்தி பிரிந்து செல்ல முற்பட்டது. சேர்த்து வாழாதவனிடம் இருந்து பிரிந்து செல்ல எத்தனிப்பது ஒன்றும் வரலாற்று தவறல்ல. பிரிந்து சென்று தனியரசு அமைப்பது என்ற இலட்சியத்துக்காகவே வடக்கு கிழக்கிலிருந்து பல ஆயிரம் இளைஞர்கள் நம்பிக்கையுடன் தமது உயிரை ஈந்தார்கள், அவர்கள் உயிரை மாகாணசபைக்கே தாரை வார்ப்பதற்கு பிரபாகரன் என்ற தனி மனிதனுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை, அதைத்தான் அவரும் செய்தார், அவர் வாயாலேயே தமிழீழம் என்ற கோட்பாட்டை கைவிட்டால் பிரபாகரனும் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவரே என்றும் சொன்னார். 1987 மாகாண சபை முறையினை ஒட்டுமொத்தமாக புலிகளுட்பட எவரும் புறக்கணிக்கவில்லை, காலத்தின் தேவைகருதி ஏற்றே கொண்டார்கள். ஆனால் அந்த தீர்வு திட்டத்தில்கூட வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பில்லை, பிரபாகரன் முதலமைச்சர் இல்லை, இந்திய ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்ட பிற ஆயுத குழுக்கள் பிரசன்னம், இந்திய விசுவாச கூட்டணியை உள்ளுக்குள் திணித்தல். எந்த அரசியல் கைதிகளும் விடுதலை இல்லை, மாறாக ஆயுதமின்றி இருந்த தளபதிகள் போராளிகளையும் ஆயுத குழுக்கள் இலங்கை அரசு வேட்டையாட அனுமதித்தது, சிங்கள குடியேற்றங்களை கண்டும் காணாமல் விட்டது, புலிகளிடம் ஆயுதங்களை கையளிக்க சொல்லிவிட்டு தமிழர் தேசமெங்கும் எந்த பாரிய சிங்கள ராணுவ முகாம்களையும் அகற்றாதது. மாறாக சிங்கள இந்திய ராணுவங்களால் மட்டுமே தமிழர் பிரதேசத்தை நிரப்பியது, அவசரகால சட்டத்தை நீக்காதது என்று இத்தனையும், இதைவிடவும் அதிக கொடுமைகள் இருந்த மாகாண சபை திட்டத்தில் என்ன இருக்கிறது, இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது? இந்திய இலங்கை ஒப்பந்தமென்று வந்தது அப்பட்டமாக இந்திய பிராந்திய நலன் கருதிய திட்டம், இல்லையென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வு திட்டமென்றால், சண்டைபோட்டவர்களுக்கு இடையில்தான் ஒப்பந்தம் நடந்திருக்கவேண்டும், அதெப்படி சம்பந்தப்படாத இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்று என்றாவது நாம் சிந்தித்ததுண்டா? அன்றே அது உப்பு சப்பில்லாதது என்று உறுதியாகிவிட்டது. ஆயிரக்கணக்கான எம் மக்களும் போராளிகளும் தம்மை ஆகுதியாக்கியது இன்னொரு நாட்டின் பிராந்திய நலனுக்கா? பிளேட் கையில் வெட்டினாலும், தலைவலி காய்ச்சல் வந்தாலும் ஒப்பாரி வைக்கும் பழக்கமுள்ள மனிதன், உயிரையும் உடல் அவயங்களையும் உரிமைக்காக போராட தந்து சிதைந்து போனபோது அவன் தியாகத்தை உருப்படியற்ற தீர்வுகளுக்கு பயன்படுவது வரலாற்று துரோகம் அதையே இயக்கமும் செய்தது. ஆயுதரீதியில் பலம் எம்மைவிட பலமடங்கு அதிகமானதால் சிங்களவனிடம் நாம் தோற்று போனோம், ஆனால் மண் ரீதியாக சிங்களவனிடம் நாம் தோற்றுவிட்டாலும், மண்ரீதியாக , சிங்கள தேசத்தில் அவர்கள் வேறு நாங்கள் வேறு என்ற சிந்தனை தமிழர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். அந்த அடிமனது துயரத்தை நீக்கும்வரை இலங்கை எனும் நாடு உருப்பட வாய்ப்பில்லை என்பது உலகுக்கும் தெரியும் மாறி மாறி ஆட்சி செய்பவர்களுக்கும் தெரியும் சிங்களவனுக்கும் தெரியும், எம்மில் சிலருக்குத்தான் எப்போதும் தெரிவதில்லை. வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். எம்மீது பிறர் ஏறி மிதித்து போவதைகூட மன்னித்துவிடலாம், ஆனால் எம் எதிர்கால கெளரவமான இருப்பிற்காக மட்டுமே போராடியதை தவிர வேறெந்த தவறும் செய்யாத எம் போராளிகள், தலைமையின் ஆன்மாவின் நெஞ்சு மீது ஏறி மிதித்து போகவோ மறைமுகமா ஏளனம் செய்யவோ எவருக்கும் அனுமதி இல்லை.
  2. எல்லாவற்றிற்கும் சுமந்திரனை திட்ட முடியாthu. மாகாண சபை முறையினை இல்லாதொழிக்க சிங்களவன் திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கும்போது, மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்த வேண்டுமென கோருவது ஒரு சூட்சுமம்தான். அரசாங்கமே தேர்தல் நடத்தி தெரிவு செய்த ஒரு அமைப்பை அரசாங்கமே இல்லாதொழிப்பது சட்ட சிக்கலை எதிர்நோக்க கூடிய காரியம்தான். ஒருகாலம் மாகாணசபை முறையையே உப்பு சப்பில்லாதது என்று புறக்கணித்த எம் சமூகம், இன்று அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவது காலத்தின் பரிணாம துயரம்.
  3. தமிழரசு கட்சியின் தேசியப் பட்டியல் மூலம்... தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்தியர் சத்தியலிங்கத்தை, பதவி விலக வைத்து... அவரை வடக்கு மாகாண சபைக்கு போட்டியிடச் செய்வதன் மூலம் பாராளுமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... வழக்கம் போல் பின்கதவால் பாராளுமன்றம் போக முயற்சிக்கின்றார். 😎 முன்பு சுமந்திரன்... " நான், தேர்தலில் மக்களால் நிராகரிக்கப் பட்டால்... தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக மாட்டேன்" என்று கூறினாரே என்று நீங்கள் கேட்டால்... "அது... போன மாசம், இது... இந்த மாசம்" என்று சொன்னாலும் சொல்வார். 😂 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்... ராஜதந்திர சிந்தனைகளை எல்லாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே... டக்கென்று கண்டுபிடித்து விடுவதுதான் சுமந்திரனின் கஸ்ரகாலம். 🤣
  4. இதைககேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இலங்கை ஒரு விவசாயநாடு.முன்பு சிறமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் இருந்த பொருளாதாரதடை காரணமாக அதிகளவான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். அரசசேவையில் இருப்போர் கூட பகுதியளவில் விவசாயம் சிறுதோட்டங்கள் போனறவற்றைச் செய்து தமக்கான உணவுத்தேவையையையும் பணத்தேவையைுயும் பூர்த்தி செய்து கொண்னர்.அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயம் அதிக செலவில்லாத குறகிய காலத்தில் 2-3 மதங்களில் பணத்தை ஈட்டக் கூடிய பயராக இருந்தது. மாரிப்போகம் என்றால் தண்ணீர் இறைக்க வேண்டிய தேவையும் இருக்காது.யா;ப்பாணத்தில் வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து வெங்காயத்தைக் கொளவனவு செய்தார்கள்.கார்த்திகை மாதம் அளவில் நட்டு இருதடவை புல்லுப் பிடுங்கி யூரியாவையும் 2 தடவை போட்டு விட்டால் தைை மாசிமாதமளவில் அறுவடைசெய்து உடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அன்று வெங்காயம் வசய்த தோட்டங்களில் இப்பொழது வெங்காயம்பயரிடப்படுவதில்லை. கேட்டால் வேர் அழுகல் நோய் வருவதால் மாரிப்போக் செய்ய முடியாமல் இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள். விவசாய அமைச்சு இதற்கான ஈராய்ச்சிகளைச் செய்து அதைதடுப்பதற்கான வழிமுறைகளை இலகுவான முறையில் விளங்கப்படுத்தி வெங்காயச் செய்னகயை ஊக்குவிக்க வேண்டும்.அந்தக் காலத்தில்1977 இற்கு முதல் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த இலங்கை இன்று அரிசிக்கும் வெங்காயத்திற்கும் கையேந்துகின்ற நிலமையில் இருக்கிறார்கள்.வெங்காயம் நடுவதற்கும் புல்லுப்பிடுங்குவதற்கும் அறுவடைசெய்வதற்கும் ஒரே நேரத்தில் பல 10-15 கூலிஆட்கள் தேவைப்படுகிறார்கள். இலகுவான வேலை என்பதால் பெண்களே இந்த வேலைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்டபொழுது வேலை ஆட்கள் பிடிப்பது மிகவும் கடினம் விவசாயிகள் சொல்கிறார்கள். ஆகவே இப்படியான டீவலைகளுக்குரிய இயந்திரங்களைக் கண்டு பிடித்து அற்முகப்படுத்த வேண்டும்.
  5. அவர்கள் நெய்தல் படையுடன் 💪வந்தால் ஶ்ரீலங்கா நேவி ஒண்டுமே புடுங்கேலாது. விட்டுட்டு ஒட வேண்டுயது தான்.
  6. குண்டி காய்ந்தால் புலியும் புல்லுத் தின்னுமாம் என்று இதனை அழகாகச் சொல்லலாம்😂 குறிப்பு: ஒறிஜினல் பழமொழி வருமாறு: கும்பி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்!
  7. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடந்த தமிழரசு கட்சித் தலைவருக்கான போட்டியில்... அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களாலேயே தோற்கடிக்கப் பட்டார். பின்... சென்ற மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்களால் தோற்கடிக்கப் பட்டார். ஆக... சுமந்திரனுக்கு இந்த ஆண்டு... "கனதியான" இரண்டு தோல்விகளை கொடுத்துள்ளது. முன்னாள் பா. உ. சுமந்திரன்... இந்த இரண்டு தோல்விகளையும் ஏற்றுக் கொண்டு, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே.. நல்லது. அவர், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவாரேயானால்.. தமிழ் மக்கள், வடக்கு மாகாண சபைக்கு... அனுரவின் சிங்கள கட்சியை தெரிவு செய்வார்கள் என்பது 100 வீதம் உண்மை.
  8. ஈராக் லிபியா போல் வரும்.இதே போல் சவூதியிலும் ஜோர்தானிலும் புரட்சிகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தங்களுக்குள் அடிபட்டு சாவார்கள்.
  9. 'எல் போர்ட்' அணி என்று ரணில் சொன்னதை இப்பொழுது பலரும் சுட்டிக் காட்டப்போகின்றனர்.............. அரிசியை இறக்குகின்றோம் என்றார்கள், நான்கு மணித்தியாலங்களில் சுங்கச் சோதனையை முடித்து விடுவோம் என்றார்கள்................... கடைசியில் அரிசிக் கப்பல்கள் இப்ப எங்கே நிற்குது என்றே தெரியவில்லை...........🫣. நன்றாகப் பாடத்தை படித்து பாடமாக்கிக் கொண்டு வரும் மாணவர்கள், பரீட்சையில் 'out of syllabus ' கேள்விகள் வந்தால் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடுவார்கள், அது போலவே இது..............😜.
  10. என்ன விசுகர்? பொசுக்கெண்டு உப்பிடி சொல்லிப்போட்டியள்? நீங்கள் சொல்லுற மாதிரி எல்லா நாடுகளும் சண்டை சச்சரவில்லாமல் சந்தோசமாக வாழ வெளிக்கிட்டால் உங்கடை ஆக்கள்(அமெரிக்கா,பிரான்ஸ்,ஜேர்மனி,பெரீய பிரித்தானியா) பிறகு ஆருக்கு ஆயுதங்களை விக்கிறதாம்? 😎 அடி மடியிலையே கை வைக்கிறீங்கள் விசுகர்! நீங்கள் ஆகலும் மோசம் 🤣 😂
  11. சரி தான் கோஷான் இருந்தாலும்…. நையாண்டி சர்வாதிகாரிகளின் சிம்ம சொப்பனம் மட்டுமல்ல வரட்டு தேசியர்களுக்கான மாமருந்தாகவும் அமையலாம். உறைக்க சொன்னால் அதனால் என் மீது கொண்ட பெருஞ்சினத்தில் ரோஷம் வந்து திடீரெண்டு திருந்தி விட்டால்..👌 நான் இவர்களுடன் vacation போகப் போவதும் இல்லை. எலெக்சன் கேட்கப்போவதும் இல்லை. 😂
  12. மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துவது நல்லதே. 1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட கெஞ்ச வேண்டிய நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂 முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை மறைக்கவும் வேண்டுமானால் சுமனை வைச்சு செய்யலாம். 😂
  13. இதேதான்...நான் நினைத்ததும் இதுதான்...அதுதான் அவர் நாடாளுமன்றத்தில் பொதுச் சுடலை கதை தைத்தவர்...மாகாணசபைதலைவராக வந்ததும் முதல் வேலை இதுதான்
  14. ஒரு காட்டில் வயசாகி போன🐱 புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு🐜 வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்மூர்ல பணம் படைச்சவனுக்கு தோணுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோணுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுச்சு. புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவு நாளா இது தோணலையேன்னு ஒரு முயலை🐰 செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவணையாவும் கொடுக்கனும்"னுச்சு. "ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னுச்சு, அப்படியே வாங்கிகிச்சு... ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை 🐱ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு. இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு🐒 அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி. 'எதைத் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஒரு ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்" "யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பை தானென்று" அதிரடியாக சொன்னது ஆந்தை.🦉 இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே "படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான்". வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்...! Latha Babu 😂 🤣
  15. கடவுள் பற்றி கமல் சொன்னதுதான். இல்லை எண்டு சொல்லவில்லை…. இருந்தா நல்லா இருக்கும் எண்டுதான் சொல்றேன்…. ஆனா இதுவரைக்கும் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
  16. டாக்டர் "ஸ்டெதஸ்கோப்"பை காதில் வைக்க மறந்துட்டீங்க. 😂
  17. இனி அசாத்தும் "சிரியாவை வளர்த்த முன்னுதாரண ஆட்சியாளர்" என்று மேற்கு நாடுகளில் "கஷ்டப் பட்டு, இஷ்டமில்லாமல்" வாழும் எங்கள் தமிழ் குடிகளால் புகழப் படுவார் என நினைக்கிறேன்😎. சீரியசாகப் பார்த்தால்: அப்பன் அசாத்தின் மேற்குலகோடு இருந்த தொடர்பால், பிரிட்டனில் மேற்படிப்புப் படித்து கண் மருத்துவரான ஒருவர் சின்ன அசாத். பிரிட்டன் பிரஜையான மனைவி அஸ்மா 2011 இன் பின்னரும் கூட இங்கிலாந்தில் தான் வசித்தாரென நினைக்கிறேன். உள்நாட்டு யுத்த ஆரம்பத்தில், இந்த "கண் மருத்துவரின்" கட்டளையின் படி குளோரின் வாயுத் தாக்குதல் எதிர் தரப்பின் கட்டுப் பாட்டில் இருந்த மக்கள் மீது நடத்தப் பட்டது. குளோரின் வாயுவின் விளைவினால் மூச்சுத் திணறும் குழந்தைகளை மக்கள் தண்ணீரினால் கழுவும் காட்சிகள் வெளிவந்தன. "Do no harm" என்ற அடிப்படை மருத்துவ அறத்தினையே பின்பற்ற இயலாத இந்த இழிபிறவியை, கடாபியைப் போலவே தெருவில் இழுத்து வந்து சுட்டிருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.
  18. அப்போதைய பத்திரிகைகளில்... வடக்கு மாகாணசபை அங்கத்தவர்களால் பகிரங்கமாக சுமந்திரனை குற்றம்சாட்டி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களே அவை. அத்துடன்.... அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச கூட, சுமந்திரனின் தலையீட்டைப் பற்றியும், மாகாணசபைத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டாம் என்று, சுமந்திரன் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார். நான் எனது நினைவில் உள்ளதை வைத்தே எழுதுகின்றேன். உதாரணத்துக்கு ஒன்று கீழே உள்ளது. எல்லா... ஆதாரமும் என்னால் திரட்ட எனக்கு நேரம் இல்லை. ஆர்வம் இருந்தால்... நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால்.... சுமந்திரன் இவற்றை செய்திருக்க மாட்டார் என்று நம்புவதுபோல் தெரிகின்றது. அதுசரி... உங்களிடம் இருந்து நான் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதானே. 😂 நேரம் பொன்னானது. நன்றி, வணக்கம். 🙏 https://www.samakalam.com/தலைகாட்ட-தயங்கும்-தலைவர/
  19. மாகாணசபைத் தேர்தல் நடாத்தப் பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்... இலங்கையின் தமிழ் மக்களுக்கு வடக்கிலும், கிழக்கிலும் இரு மாகாண சபைகள் கிடைக்க இருந்தது. அதில் கிழக்கில் இருந்ததை... சம்பந்தன் முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்தபின்... மிஞ்சி இருந்தது விக்கியர் தலைமையில் இருந்த வடக்கு மாகாண சபை. அதனை பொறுக்க முடியாத சுமந்திரன்... இல்லாத குடைச்சல் எல்லாம், சி. வி. கே. சிவஞானம் மூலமாக கொடுத்து அதை இயங்க விடாமல்... இறுதியில் ஜனாதிபதிவரை சென்று, அதனை முடக்கியவர்தான் சுமந்திரன். அவர்... மீண்டும் மாகாண சபை தேர்தல் வேண்டும் என்று கேட்பது முரணின் உச்சம். தனக்குத் தேவை இல்லாவிடில்... குழப்பி அடிப்பது. இப்போ... தனக்குத் தேவை என்றவுடன், தேர்தல் வேண்டும் என்று சொல்வதைத்ததான் தவறு என்கிறோம்.
  20. தமிழர்களது பலத்தை அணுஅணுவாகச் சிதைக்காது ஓயாரென்று சொல்கிறீர்கள் என்று எடுக்கலாமா?
  21. மூஞ்சூறு சும்மா குறுக்க ஓடுது,?? பாராளுமன்ற உறுப்பினர் அல்லது மாகாணசபை தலைவர் இரண்டில் ஒன்று உறுதி?
  22. ஜோர்தானில் புரட்சி ஏற்பட்டாலும்... சவூதி கொஞ்சம் கஸ்ரம் என நினைக்கின்றேன். 😂 நம்ம அமெரிக்க Cow Boy அண்ணர் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே. 🤣
  23. ஏற்றமுன்னா ஏற்றம் இதில் இருக்குது முன்னேற்றம் .......! 👍
  24. எனக்கு பிடித்திருந்தது...வெள்ளைக்கார நாட்டில் நிக்கிற பீலிங் இருந்தது...வெளிநாட்டு பயணிகள் வரும் இடத்தை விட மற்றைய இடங்கள் அமைதியாய் இருந்தது ..அங்கிருக்கும் மக்கள் சோம்பேறிகளாவும்,துவேசம் பிடித்தவர்களாய் இருப்பார்களோ என்று ஒரு சந்தேகம் ...ஜெர்மனியின் மற்ற இடங்களையும் வந்து பார்க்க வேண்டும் என்று ஆவல்
  25. 🤣 தெரியும் அநுரகுமார திசாநாயக்கவின் வாலாக மாறிவிட்டனர். வால்களின் தலைவர் சொல்கின்றார் வாலக மாறி பொறுமையாக இருக்க வேண்டுமாம்.
  26. @putthan ஏன் அவசரம்? கள்வனின் மனித உரிமையையும் மதிக்கும் மனு நீதி கண்ட அனுரனின் ஆட்சி இது. ஒரு ஐந்து வருடம் பொறுங்கள்…பெயர் வெளியிடப்படும்.
  27. பெயரை போடலாந்தான் ஆனால் இன்னொரு பகுதி பெயரை வெளியிட்டது தவறு என கூப்பாடு போடும், அதோடு சம்பந்தம் இல்லாத உறவுகளும் பாதிக்கப்படும் இதனால். ஒருவேளை நன்றாக வழக்கை ஆராய்ந்தபின் வெளிப்படுத்தக்கூடும். திருடனின் பெயர் அறிவதில் அவ்வளவு அவசரம் உங்களுக்கு. அவன் திருடன், அவன் பெயரை அறிந்து, அவன் பெயரிலுள்ள எல்லோரையும் சந்தேகப்பட, திருடன் என பெயர் சூட்ட ஏதுவாகிவிடும்.
  28. பெருமாளுக்கு உங்களோட புடுங்குப்படாட்டி பத்தியப்படுறேல்லையெண்டு தெரிஞ்ச விசயம் தானே தங்கச்சி!😂 நான் யாழ்களத்துக்கு வாற நேரமெல்லாம் உங்களை நினைக்காமல் போனதேயில்லை.....ஏனோ தெரியேல்லை. உங்கள் எழுத்துக்கள் எனக்கு மட்டுமில்லை யாழ்களத்தில் உள்ள எல்லோருக்குமே பிடிக்கும் என நினைக்கின்றேன். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். அது எதிர்மறையான கருத்துக்களாகவும் இருக்கட்டும். 👈
  29. பிரான்ஸில் 5 ஆண்டுகளின் பின் திறக்கப்படும் தேவாலயம்; பல உலகத்தலைவர்கள் பங்கேற்பு Shar விளம்பரமபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
  30. உங்கள் நோக்கம் தமிழரை புலம்பெயர் தாயகம் என பிரித்தல் தமிழர்களிடமும் அவர்களது போராட்டம் சார்ந்தும் குறைகளை மட்டுமே தேடி தேடி மீண்டும் மீண்டும் பரப்புரை செய்து தமிழர்கள் ஒற்றுமையாக பலமடையாது பார்த்துக் கொள்ளல் இதனூடாக தமிழ்த் தேசியத்தை பலவீனமாக்குதல் இது போன்ற உங்கள் பரப்புரைகள் தொடரும் வரை உங்களை நான் எச்சரிக்கை செய்வேன். அது என் உயிர் உள்ளவரை......
  31. இந்தியாவே வெல்லும் என இந்தியர்கள் கூறுகிறார்களே?
  32. அக்கான்ர காதில போட்டுவிடுவம்😅
  33. மன்னிப்பு கேட்டா அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை..சிங்கள புத்திஜீவிகள்/மற்றும் ஜெ.வி.பி அரசியல்வாதிகள் யாழ் நூலக எரிப்பை பற்றி ,மேடைக்கு மேடை.வீட்டுக்கு வீடு பேச தாயார் ஆனால் இனக்கலவரங்கள்,மற்றும் இனவிடுதலைக்காக போராடியவர்களின் உயிர் இழப்பை பற்றி பேச தயார் இல்லை ..அதை பகிரங்கமாக கூறவும் மாட்டார்கள் ...சில சமயம் தமிழ் இனத்தை முற்றாக அந்த மண்ணில் இருந்து துடைத்தெரிந்த பின்பு ,மீண்டும் தமிழ் இனம் அந்த மண்ணில்(வடக்கு கிழக்கில்) உயிர்ப்புடன் செயல் படாத நிலை ஏற்பட்ட பின்பு சிங்கள ஜனதாவின் முன்றாம் நாங்காம் தலை முறை சிங்களத்தில் மன்னிப்பு கேட்பார்கள் ....அதை அடையாளங்களை தொலைத்த தமிழர்கள் சிங்கள மொழியில் புரிந்து கொள்வார்கள்.... வெளிநாடுகளின் பூர்வீக குடிகளிடம் ஆக்கிரமிப்பாளர்களின் தற்போதைய த‌லைமுறையினர் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்பது போல...
  34. கவனம் லண்டனில் உள்ள ஒர் யூ டியுப் அடிப்பொடி (சிங்கள அடியான்) க்கு தெரிந்தால் எங்களை வறுத்தெடுத்து விடுவார்....
  35. கார் லைசென்ஸை பிடிக்கின்றேன், பார் லைசென்ஸை பிடிக்கின்றேன் என்ற படங்கள் எல்லாம் தியேட்டரிலிருந்து ஒரு வாரத்திலேயே ஓடி விடும்............... ஆனால் அரிசிப் பிரச்சனை தெய்வம் போல........... நின்று கொல்லும்................🤣. அரிசியை உடனடியாக இறக்கிக் கொடுங்கப்பா.............. சந்தையில் இல்லாத அரிசிக்கு நீங்கள் என்ன கட்டுப்பாட்டு விலையைப் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன...............
  36. நகர அல்லது பிரதேச சபைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நினைக்கின்றேன். சந்தைகளை ஏலத்தில் குத்தகையில் விடுவது போல இதையும் வருடாவருடம் ஏலத்தில் விடுவார்கள் போல............
  37. உழுற மாடு உள்ளூரிலையும் உழும் என்பதற்கிணங்க குமாரசாமியன் ஊரிலையே பஞ்சமில்லாமல் வாழ்கிறான். 😎 😂 Kumarasamy"Made in Karaveddy"
  38. என்னை பொறுத்த வரை….நான் மேலே சொன்ன காரணங்கள் ஏனைய சிங்கள தலைவர்கள் போலவே அனுர என்பதை காட்டி நிற்கிறது. இதுதான் அனுர பற்றிய தமிழரின் starting point ஆக இருக்க முடியும். அவர் நாட்டில் சட்டதின் ஆளுமையை உருவாக்குவார், ஊழலை ஒழிப்பார், நல்லாட்ட்சி செய்வார் என்பதல்லாம் நல்ல விடயங்களே ஆனால் இவை இலங்கை தேசியம் சம்பந்தபட்டது. தமிழரை பொறுத்தமட்டில் 13 ஐ முழுமையாக அமல் செய்வதே ஆக குறைந்த படி. காணி அதிகாரத்தை தமிழருக்கு பகிர மறுக்கு எந்த சிங்கள தலைவரும் அடிப்படையில் இனவாதிதான். அடுத்த நாலு வருடத்தில் அனுர காணி அதிகாரத்தை தமிழருக்கு பகிர்ந்தால் - அவரை வரவேற்க நானும் தயார். அதுவரை அவரின் கடந்தகால நடவடிக்கை அடிப்படையில் அவரை அணுகுவதே அறிவார்ந்த செயல். Talk is cheap, actions speak louder than words. தன்னை ஒரு இனவாதி என காட்டி கொண்ட அனுரவை அவர் செயலால் இதை மறுதலிக்கும் வரை வெள்ளை அடிக்க, காவடி தூக்க நான் தயார் இல்லை.
  39. எங்கள் இடத்தில் இருந்து…. 280 கிலோ மீற்றர் தூரம்தான் München. உங்கள் அண்ணர்… @குமாரசாமி யின் இடத்தில் இருந்து 650 கிலோ மீற்றர். 😂 ஜேர்மனிக்கு முதன் முறையாக வந்தீர்களா? உங்கள் முதல் பார்வையில்… ஜேர்மனியை பற்றி மனதில் தோன்றிய அபிப்பிராயத்தை அறிய ஆவல் ரதி.
  40. பல மொழிகளை பேசி, அபிவிருத்திகளை காட்டி மக்களை ஏமாற்றுவது நீடித்து நிற்கக்கூடியதல்ல. மாறாக மக்களின் தேவைகள், இழப்புகள், பாதிப்புக்களை இனங்கண்டு மனந்திருந்தி, மன்னிப்பு கேட்டு, பரிகாரம் செய்து அந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதபடி உறுதி செய்வதே அரசின் பொறுப்பு. பேசுவதோடு கடமை முடிவதில்லை, மக்களின் நிஞாயமான ஆசைகளை வெளிகொண்டுவந்து தீர்த்து வைப்பதே மக்களின் தலைவர்களின் கடமை. அனுரா நடந்த கொடுமைகள், அதற்கான காரணங்கள், தீர்க்கப்படவேண்டிய முறைகளை தொட்டுச்சென்றிருக்கிறார். அவரின் சொந்த அனுபவங்கள் அதை புரிந்துகொள்ள உதவியிருக்கின்றன. அதை அவர் அரசியலுக்கப்பால் செயலாற்ற முன்வரவேண்டும். அர்ச்சுனா சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முன்வரவேண்டும். அப்போதான் மாற்றம் வரும். வெறும் பாராளுமன்றத்திற்குள் வீர வசனம் பேசுவதால் மாற்றம் ஏற்படவோ, மக்கள் மத்தியில் நல்லிணக்கமோ வரப்போவதில்லை. அனுரா செய்வார். ஆனால் அவரோடு கூட இருப்பவர்கள், இனவாதத்தை வளர்த்து அரசியல் ருசி கணடவர்கள் அவரை அனுமதிக்கப்போவதில்லை. மக்களே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
  41. ஆங்கில சொல் salary - லத்தின் சொல்லான salarium த்தில் இருந்து வருகிறது. இந்த லத்தின் சொல்லின் அர்த்தம் மாதாந்த கொடுப்பனவு. Salarium என்பது லத்தின் சொல்லான Sal இல் இருந்து வருகிறது. Sal இன் அர்த்தம் உப்பு. ஒரு காலத்தில் மாதசம்பளமக பணமன்றி உப்பே கொடுக்கப்பட்டதா நம்பபடுகிறது. இதே போல் Sal இற்கு வேலை செய்த வீரகள்தான் Soldiers எனவும் சொல்லப்படுகிறது. உப்பு மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். உப்பு அளவாக இல்லாதவிடத்து தசை பிடிப்பு ஏற்படும். இதை பேச்சு வழக்கில் குறண்டல் என்போம், எனக்கு விளையாடும் போது அடிக்கடி வரும். அதே போல் குறை இரத்த அழுத்தம் வந்து ஆளை கவிட்டும் விடும். எல்லாமும் அளவோடு தேவை. உப்பிட்டவரை உள்ளவரை நினை🤣
  42. நாவூறு கூடிப்போச்சு என்று சகதர்மினியிடம் சொன்னேன், செத்தல் மிளகாய் தட்டுப்பாடு நெருப்பு விலை என்று சொன்னார். அப்பப்பாவுக்கு ஏன் தூ தூ செய்யவில்லை என்று பேரன் அப்பம்மாவோடு சண்டை.😩😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.