Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    19667
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88812
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46969
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1582
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/09/24 in all areas

  1. அரசியல்வழியில் சிங்களவனிடம் தீர்வுகளை எதிர்பார்த்து காலம் காலமாக ஏமாந்த எம் சமூகம் பின்னாளில் ஆயுதம் ஏந்தி பிரிந்து செல்ல முற்பட்டது. சேர்த்து வாழாதவனிடம் இருந்து பிரிந்து செல்ல எத்தனிப்பது ஒன்றும் வரலாற்று தவறல்ல. பிரிந்து சென்று தனியரசு அமைப்பது என்ற இலட்சியத்துக்காகவே வடக்கு கிழக்கிலிருந்து பல ஆயிரம் இளைஞர்கள் நம்பிக்கையுடன் தமது உயிரை ஈந்தார்கள், அவர்கள் உயிரை மாகாணசபைக்கே தாரை வார்ப்பதற்கு பிரபாகரன் என்ற தனி மனிதனுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை, அதைத்தான் அவரும் செய்தார், அவர் வாயாலேயே தமிழீழம் என்ற கோட்பாட்டை கைவிட்டால் பிரபாகரனும் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவரே என்றும் சொன்னார். 1987 மாகாண சபை முறையினை ஒட்டுமொத்தமாக புலிகளுட்பட எவரும் புறக்கணிக்கவில்லை, காலத்தின் தேவைகருதி ஏற்றே கொண்டார்கள். ஆனால் அந்த தீர்வு திட்டத்தில்கூட வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பில்லை, பிரபாகரன் முதலமைச்சர் இல்லை, இந்திய ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்ட பிற ஆயுத குழுக்கள் பிரசன்னம், இந்திய விசுவாச கூட்டணியை உள்ளுக்குள் திணித்தல். எந்த அரசியல் கைதிகளும் விடுதலை இல்லை, மாறாக ஆயுதமின்றி இருந்த தளபதிகள் போராளிகளையும் ஆயுத குழுக்கள் இலங்கை அரசு வேட்டையாட அனுமதித்தது, சிங்கள குடியேற்றங்களை கண்டும் காணாமல் விட்டது, புலிகளிடம் ஆயுதங்களை கையளிக்க சொல்லிவிட்டு தமிழர் தேசமெங்கும் எந்த பாரிய சிங்கள ராணுவ முகாம்களையும் அகற்றாதது. மாறாக சிங்கள இந்திய ராணுவங்களால் மட்டுமே தமிழர் பிரதேசத்தை நிரப்பியது, அவசரகால சட்டத்தை நீக்காதது என்று இத்தனையும், இதைவிடவும் அதிக கொடுமைகள் இருந்த மாகாண சபை திட்டத்தில் என்ன இருக்கிறது, இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது? இந்திய இலங்கை ஒப்பந்தமென்று வந்தது அப்பட்டமாக இந்திய பிராந்திய நலன் கருதிய திட்டம், இல்லையென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வு திட்டமென்றால், சண்டைபோட்டவர்களுக்கு இடையில்தான் ஒப்பந்தம் நடந்திருக்கவேண்டும், அதெப்படி சம்பந்தப்படாத இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்று என்றாவது நாம் சிந்தித்ததுண்டா? அன்றே அது உப்பு சப்பில்லாதது என்று உறுதியாகிவிட்டது. ஆயிரக்கணக்கான எம் மக்களும் போராளிகளும் தம்மை ஆகுதியாக்கியது இன்னொரு நாட்டின் பிராந்திய நலனுக்கா? பிளேட் கையில் வெட்டினாலும், தலைவலி காய்ச்சல் வந்தாலும் ஒப்பாரி வைக்கும் பழக்கமுள்ள மனிதன், உயிரையும் உடல் அவயங்களையும் உரிமைக்காக போராட தந்து சிதைந்து போனபோது அவன் தியாகத்தை உருப்படியற்ற தீர்வுகளுக்கு பயன்படுவது வரலாற்று துரோகம் அதையே இயக்கமும் செய்தது. ஆயுதரீதியில் பலம் எம்மைவிட பலமடங்கு அதிகமானதால் சிங்களவனிடம் நாம் தோற்று போனோம், ஆனால் மண் ரீதியாக சிங்களவனிடம் நாம் தோற்றுவிட்டாலும், மண்ரீதியாக , சிங்கள தேசத்தில் அவர்கள் வேறு நாங்கள் வேறு என்ற சிந்தனை தமிழர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். அந்த அடிமனது துயரத்தை நீக்கும்வரை இலங்கை எனும் நாடு உருப்பட வாய்ப்பில்லை என்பது உலகுக்கும் தெரியும் மாறி மாறி ஆட்சி செய்பவர்களுக்கும் தெரியும் சிங்களவனுக்கும் தெரியும், எம்மில் சிலருக்குத்தான் எப்போதும் தெரிவதில்லை. வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். எம்மீது பிறர் ஏறி மிதித்து போவதைகூட மன்னித்துவிடலாம், ஆனால் எம் எதிர்கால கெளரவமான இருப்பிற்காக மட்டுமே போராடியதை தவிர வேறெந்த தவறும் செய்யாத எம் போராளிகள், தலைமையின் ஆன்மாவின் நெஞ்சு மீது ஏறி மிதித்து போகவோ மறைமுகமா ஏளனம் செய்யவோ எவருக்கும் அனுமதி இல்லை.
  2. அனுமதி என்றால் திரு.ஜஸ்டின் , சரி உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறேன். நாங்கள் யாழ்களம் என்ற ஒரு தளத்தில் சம்பாசணை செய்கிறோம் அதன் ஸ்தாபகர் திரு.மோகன், கண்காணிப்பாளர்களாக சில மட்டுறுத்தினர்கள் இருக்கிறார்கள், கருத்து பகிர்வாளர்களாக நாங்களிருக்கிறோம் இங்கே அவரவர் கருத்துக்களை பகிரலாம் உரையாடலாம், அதை சக உறுப்பினர்கள் மறுக்கலாம், ஒத்துபோகலாம் அதுதான் விதியாம். ஆனால் உரிமைபோரில் உயிர் துறந்தவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சித்தால் அந்த கருத்துக்கள் மூர்க்கதனமாக எதிர்க்கப்படும், அதாவது உங்கள் கருத்துக்களை உங்கள் போக்கில் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்பதே சக கள உறுப்பினராகிய எனது கருத்து. தேசியதலைவர் போராளிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டிய யாழ்கள விதிகளில் ஒன்று என்றும் நினைக்கிறேன். ஆக அனுமதி என்றால் அதுதான் அர்த்தம், அலுவலகம் என்று அர்த்தமில்லை, அனுமதி வேறு அலுவலகம் வேறு . கருமங்களுக்கு அலுவலகம் தேவைப்படும் கருத்துக்களுக்கு அலுவலகமும் தேவையில்ல பாஸும் தேவையில்லை . அமெரிக்காவில் விலங்கியல் துறையில் மருத்துவராக கடமையாற்றும் திரு.ஜஸ்டினுக்கு அனுமதி என்று எதை அர்த்தப்படுத்தினோம் என்பது விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன். இல்லை விளங்கவில்லை அனுமதி என்றால் அலுவலகம் வைத்து பியோன் வைத்து மேசையில் ஒரு கொம்புயூட்டர் வத்து வளவன் பாஸ் கொடுக்கவேண்டும் அதுக்கு பேர்தான் அனுமதி என்று நீங்கள் இன்னமும் கருதினால் விதிவிட்ட வழி.
  3. யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்... நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂 அதே குணம் கொண்டவர்தான், வைத்தியர் அர்ச்சுனா... என்று சொல்கிறார்கள். 🤣 ஆக... சத்தியமூர்த்திக்கு, "ஏழரை" ஸ்ரார்ட் பண்ணி விட்டது. 😂 🤣
  4. முன்பு... டக்ளஸ் தேவானந்தா, திறந்த வீட்டிற்குள் நுழைந்த 🐕 நாலுகால் பிராணி 🐕‍🦺 மாதிரி போகாத அலுவலகமா? கல்விக்கூடமா? வைத்தியசாலையா...? அப்போ... ஒருவரும் காவல்துறையிடம் முறையிடவில்லையே, ஏன்..ஏன்... ஏன்...? 😂
  5. ஐலண்ட் தனக்கான வக்காலத்தை வாங்குவார். வாங்காது விடுவார். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் இங்கே மாவீரர்களோ, போராளிகளோ அவமானப்படுத்தபட்டதாக எனக்கு தெரியவில்லை. 87 இலும் அதன் பின்னும்….இந்திய வல்லாதிக்கத்தை நாம் கையாண்ட முறை நையாண்டிக்கு ஆளாகியது. அது கூட கையாண்ட தலைவர் மீதான நையாண்டி அல்ல. அணுகுமுறை மீதான நையாண்டியே.
  6. ஓ ஓ ...விசயம் அதுவா?..ம்ம்ம்...லண்டனிலிலிருந்து யூ டியுப் பை தொழிலாக கொண்டு வாழ்வது என்பது இலகுவான காரியம் அல்ல...ஏதோ பிழைச்சு போகட்டும்
  7. @valavan எனது கருத்து என்பது அரசியல் தீர்மானம் குறித்த விமர்சனமே. அவ்வாறான விமர்சனங்கள் உலகில் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அரசியல் விடுதலை அமைப்புகளின் தலைமைகளுக்கும் பொருந்தும். ஒரு அரசியல் அமைப்பு அல்லது கட்சியின் அரசியல் தீர்மானங்கள் ஒட்டு மொத்தமான ஒரு தேசிய இனத்தின் மீது பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் போதும், அந்த தாக்கம் தலைமுறைகளை கடந்தும் தொடரும் போதும், அதை நோக்கிய விமர்சனங்கள், விவாதங்கள் நடப்பது உலக வழமை. சாதாரணமாக கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை திரை போட்டு மறைக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு என்பது கடந்த கால அரசியலை எதிர்கொண்டதில் ஏற்பட்ட தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளும. காரணமாக இருக்கும் போது அவற்றை பற்றி உரையாடுவது தவறானதல்ல. இங்கு அரசியலில் புனிதப்படுத்தலுக்கு இடமில்லை. அரசியல் தீர்மானங்கள் முடிவுகள் புனிதமானவை அல்ல. அரசியல் தலைமைகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டாதாக புனிதப்படுத்துதல்(sanctification )என்பது மிக தவறான முன்னுதாரணம். அவ்வாறு செய்வது அது சார்ந்த சமூகத்திற்கே தீமை விளைவிக்கும். ஒரு பழைய அரசியல் தலைமைகளை புனிதப்படுத்துவதானது, அவர்களது தவறான தீர்மானங்களையும் முடிவுகளையும் சிக்கலின்றி மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது ஒரு தலைமுறையின் அரசியல் தவறுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. ஒரு அரசியல் தலைமையின் தீர்மானங்கள் இவ்வாறு புனிதப்படுத்தப்பட்டால் அந்த அரசியலை உள்வாங்கி, அதை முன்னுதாரணமாக தொடரும் புதிய தலைமுறையும் அதே பாணியை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும். அதே எதிர்பார்பபில் எந்த பொறுப்புத்தன்மை ( Accountability) இல்லாத முடிவுகளை மீண்டும் எடுக்கும். மூன்று தசாப்சங்களுக்கு முன்பான ஒரு அரசியல் தீர்மானத்தை பற்றி பேசக்கூடாது என்று இப்போது அச்சுறுத்தல் வருகிறது என்றால் அந்த சுதந்திர போராட்டம் மக்களுக்கானதில்லையா? ஆகவே திரும்பவும் கூறுகிறேன் ஒரு அரசியல் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது ஒரு போதும் மாவீரர்களை இழிவு படுத்துவதாகாது. அவ்வாறு நீங்கள் கருதுவது உங்கள் உரிமை உங்களுக்கு அந்த கருத்து இருக்கலாம். ஆனால் , அதை நீங்கள் என்மீது திணிக்க முற்படுவது தவறானது. அதை நான் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.
  8. எனக்கு விளக்கிய போது யாழ் களத்தில் உங்கள் "எல்லை" உங்களுக்கும் போல விளங்கியிருக்குமென நினைக்கிறேன், அதைப் பின்பற்றினால் மகிழ்ச்சி! இந்தக் குறிப்பிட்ட விடயத்தைப் பொறுத்தவரை, இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய திரியில் அதன் கடந்த காலம் பற்றி ஐலன்ட் எழுதியிருப்பது பொருத்தமானதே. அதைப் "பேசுவதால் இப்போது பயனில்லை" என்பதில் எனக்கு முழு உடன்பாடில்லை. அப்போது தூக்கியெறிந்தது போல இப்போதும் நடந்து கொள்ளக் கூடாதென்ற கருத்து அங்கே வெளிப்படுகிறதல்லவா? அது தான் ஐலன்ட் கருத்தின் பயன். "இதைப் பேசுவதால் பிரபாகரனையும், மாவீரர்களையும் கொச்சைப் படுத்தினார்கள், நெஞ்சில் மிதித்தார்கள்" என்று நீங்கள் சொல்வது உங்கள் உணர்ச்சிமயமான புரிதலின் பாற்பட்டது. உங்கள் கருத்திற்கு ஆதரவு தந்திருப்போர் அனைவருமே நியாயமான விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாமல் ஒரு மூலையில் முடங்கும் போது இறுதி அஸ்திரமாக "மாவீரர்கள், போராளிகள், பிரபாகரன்" கொச்சை என்று சவுண்ட் விட்ட படி எஸ்கேப் ஆகும் உறவுகள் தான்😎. என் அபிப்பிராயத்தில், இப்படியான செயல்கள் செய்வோர் தான் மேற்சொன்ன தரப்புகளை அதிகம் மலினப் படுத்துகிறார்கள்.
  9. சத்தியமூர்த்தி ஏழரை சனி தொடங்கி விட்டது இதுவரை நடந்த ஊழல் அம்பலம் ஆகப் போகிறது என்று கவலைப்படுகிறார் அவரிடம் [டக்ளஸ் ] துப்பாக்கி இருந்தது அடிபெடி இருந்தது அரசாங்கம் இருந்தது அருச்சுனாவிடம். என்ன உண்டு ??? பயப்பட. இன்னும் கொஞ்ச நாள் சிறையில் போட விரும்புகிறார்கள் ஆனால் இந்த சாவகச்சேரி மக்கள் எனது தொகுதி மக்கள் அர்ச்சுனாவை கடவுளாக. பாரக்கிறார்கள 🤣🤣. எனவே… சத்தியமூர்த்தி வெல்ல முடியாது தோல்வி நிச்சயம்
  10. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் முற்றிலும் இலவச Software Engineering பாடநெறி இலங்கை கணினிச் சங்கத்தின் அங்கீகாரத்தின் கீழ் DP Education அனுசரணையில் மொறட்டுவை பல்கலைக்கழகம் இலவச மென்பொருள் பாடநெறியை வழங்குகிறது. Trainee Full Stack Developer எனப்படும் இந்த பாடநெறியானது software engineering மற்றும் web development அறிவை வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பாடநெறியில் பின்வரும் விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. 1. Python for Beginners 2. Web designing for beginners 3. Python programming 4. Front-end web development 5. Server-side web programming 6. Professional practice in software development (Soft skills & Technical skills) பாடநெறி முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும். இன்றைய நாட்டு நிலைமையில் சாதாரண தரப் பரீட்சை ,உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர் மாணவர்கள் IT படிக்கிறேன் என்று பணத்தை அள்ளி செலவழிக்காமல் இத்தகைய பெறுமதியான இலவச பாடநெறியை கருத்திற் கொள்ளவும். நீங்களும் இவ்விலவச பாடநெறியை கற்க விரும்பினால் கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். https://open.uom.lk உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிரவும்
  11. நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?
  12. நிச்சயமாக அது ஐலண்ட் ஒருவருக்கான பதிலும் மட்டுமோ கோபதாபமுமோ இல்லை ரஞ்சித், அதுபோன்ற எண்ணங்களைகாவி திரியும் அனைவருக்குமான ஒரு பதிவு. ஐலண்டின் எல்லா கருத்துக்களுடனும் எனக்கு முரண்பாடில்லை, சரியென்று தெரியும் சமூக ஒதுக்கல் பிரதேச வேறுபாடுகளுக்கெதிரான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் பல லட்சம்பேரின் ரணங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் எள்ளிநகையாட கூடாது என்பதால் எழுதினேன். இனமானம் என்ற விடயத்தில் ரஞ்சித்துக்கு தெரியாத ஒன்றையா புதிதாக எழுதிவிட போகிறேன்.
  13. மறியாடொண்டு வேண்டப்போறன், அது குட்டிபோட்டு (அதுவும் கிடாய்க்குட்டியாய்ப் போடுமெண்டு நினைக்கிறன்), அது வளந்து அறுக்கிற நேரம் வரேக்கை, அவசரப்படாமல் ஆட்டை முழுக்க அறுத்துப் போட்டு ஆறுதலாய் "அதை" அறுக்கலாம் எண்டு நினைக்கிறன், இதில என்ன பிழை? 76 வருசம் காத்திருக்கையில்லையே, இன்னொரு 5 வருஷம் காக்கிறதில குடி மூழ்கிப் போகாது எண்டுறன்.
  14. இப்பிடியே இலவு பழுக்கும் எண்டு பாத்திருந்த கிளிபோலவும், காளை மாட்டில பால்கறக்கக் காத்திருந்த சோணகிரிகள் போலவும் 76 வருடங்களைக் காத்துக் காத்தே கடந்துவிட்டோம். கண்ணைமூடிக்கொண்டு காலில் விழுந்து வணங்கமுன் சிந்தியுங்கள் எண்டு சொன்னால் எங்கே கேட்கிறார்கள்?
  15. இவை எல்லாம் யாழில் பல வருடங்கள் முன்பே எதிரும் புதிருமாக பலமுறை விவாதிக்கப்பட்ட விடயங்கள் வல்லவன். உங்களை விட யாழில் வீரியமாக எழுதிய பலர் - இப்போ அனுரவிற்கு கொஞ்ச காலம் கொடுப்போம், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதிருப்போம், இனவாதத்தை கட்டுப்படுத்த பயங்கரவாத சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு இறங்கி வந்து விட்டார்கள். இதுதான் 87 இல் எடுத்த சாதுரியமற்ற முடிவுகள் இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை, திம்பு கோட்பாட்டை கொண்டு வந்து விட்டுள்ள இடம். 2009 இன் பின் வந்த, வருகின்ற ஒவ்வொரு வருடமும், 87 இல் ஒரு இனமாக நாம் எந்தளவு பெரிய தவறை இழைத்தோம் என்பதை ஒவ்வொரு படி அதிகரித்தே காட்டி போகிறது. மண்டியிடாத வீரமும், விட்டு கொடாத கொள்கை பற்றும், குடும்பத்தையும் காவு கொடுத்த வீரமும் இன்ன பிற செயற்கரிய பண்புகளும் எவ்வளவு உண்மையோ அதே போலத்தான், நண்பர்கள் யாருமற்ற ஒரு சின்னம் சிறிய இனத்தின் தலைவருக்கு அத்தியாவசியமான நெகிழ்வுபோக்கு இல்லாமல் இருந்தது என்ற உண்மையும். இதை சொல்லும் பாங்கில் முரண்படலாம். செய்தியில் அல்ல.
  16. 👍🏼👍🏼👍🏼 என் மண்ணும் என் இனமும் என் மதமும் என் பெற்றோரும் என் ஆசான்களும் என் உடன் பிறப்புகளும் என் கல்விகளும் என் சூழலும் என் சுற்றாடலும் என் நண்பர்களும் நீங்கள் சொன்னதையே அறிவுறித்தினார்கள். ஆனால் ஒரு காலத்தில் தெரிந்தது அதை வைத்து நாக்கு ஊத்தை கூட வழிக்க முடியாது என...☹️
  17. மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துவது நல்லதே. 1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட கெஞ்ச வேண்டிய நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂 முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை மறைக்கவும் வேண்டுமானால் சுமனை வைச்சு செய்யலாம். 😂
  18. இதுதான் சிங்களவர்களின் பிரச்சினை. ஆனால் தமிழர்களுக்கு இவற்றுடன் கூடவே இனப்பிரச்சினையும் அதன் உபபிரச்சினைகளான காணாமல்போனோர் பிர்சினை>காணிவிடுவிப்பு பிரச்சினை.குடியேற்றப்பிரச்சனை.தமிழ்ப்புகுதிகளில் அத்துமீறிக்கட்டப்படும் விகாரைகள் தொடர்பான பிரச்சினைமாவீரர்களை நினைகூருதல்தொடர்பான பிரச்சினை>அரசியல்கைதிகள் தொடர்பான பிரச்சினை>தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரச்சினை>போர்குற்ற விசாரணை தெடர்பான பிரச்சினை முஸ்லிங்கள் தெடர்பான பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன.
  19. இத்தோடு நின்றுவிடாமல் காணி சொந்தக்காரருக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும். யாராவது எந்த சிங்கள தமிழ் மகனாவது தமது வீட்டில் ஒரு அறையைக் கூட கொடுக்க மாட்டார்கள்.ஒரு இளநீர் பறித்தாலே கையை வெட்டப் போவார்கள். இலங்கையில் இன்று முகாம்களில் இருக்கம் மக்கள் அனைவருக்கும் எங்கோ ஓர் மூலையில் சொந்தமாக சிறு குடிசை என்றாலும் இருந்தது. அவர்களையும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற ஆவன செய்ய வேண்டும்.
  20. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர 08 Dec, 2024 | 03:29 PM ஆர்.ராம் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலிருந்து ஆரம்பமாகுமா இல்லை முழுமையாக ஆரம்பத்திலிருந்தான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா என்றும், மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தப்படுகின்றபோது அச்செயற்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புக்கள் வலுவடையும் சவாலான நிலைமைகள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாளவுள்ளீர்கள் என்றும் வினவியவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், 2015-2019 அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இருந்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அதனை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும், அந்த இடைக்கால அறிக்கையை விடவும் முற்போக்கான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாம் அதுபற்றி கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம். எவ்வாறாக இருந்தாலும் 22திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்ற விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எமது அமைப்பின் கொள்கைகளை மையப்படுத்திய விடயத்தினை முன்வைப்போம். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதவில்லை. எமது முன்மொழிவுகள் தீர்வினை அடைவதற்கான ஒரு பயணப்பாதையாகும். சிலதரப்பினர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அந்த வழியால் தீர்வினை அடையலாம் என்ற குறிப்பிடுகின்றார்கள். நாட்டில் அனைத்துப் பிரஜைகளும் சம அந்தஸ்துடன் சாந்தியும் சமாதானமுமாக வாழ வேண்டும். வளங்கள் சமமாக பகிரப்பட வேண்டும் என்பது தான் இலக்காக உள்ளது. அதனை அனைவரினதும் பங்களிப்புடன் அடைந்து கொள்வது தான் நோக்கமாக உள்ளது. இதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றபோது 13ஆவது திருத்தச்சட்டம் மட்டுமல்ல முதலாவது திருத்தத்திலிருந்து 22ஆவது திருத்தம் வரையில் அகற்றப்பட்டு அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டதொரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது. அதேநேரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபை முறைமை நீக்கப்படாது. நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றது. பல தசாப்தங்களாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினை நீடித்துக்கொண்டு தான் உள்ளது. அதற்கான தீர்வு வழங்கப்படும் வரையில் மக்களிடத்திலிருந்து வெளிவருகின்ற கோசங்கள் ஓயப்போவதில்லை. எனவே எமது நோக்கம், அனைவரினது இணக்கத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தீர்வானது மக்களின் அங்கீகாரத்துக்காக விடப்படும். அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவோம். அதேநேரம், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் இனவாதம், மதவாதத்தை பேசவில்லை. அவ்வாறு பேசுவதற்கு இடமளிக்கவும் இல்லை. வழக்கமாக ஆளும் தரப்பு தான் அவ்விதமான மனோநிலையில் செயற்படும். ஆனால் இம்முறை அவ்விதமான நிலைமை காணப்படவில்லை. ஆகவே இந்த மாற்றமானது, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு சவால்களை அளிக்காது என்றே கருதுகின்றேன். நிச்சயமாக மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றமொன்று ஏற்படும் என்றார். https://www.virakesari.lk/article/200735
  21. 2015 ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு தீரணி சென்றியிருந்தேன். வல்வையில் கடற்கரை ஓரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்ச்சாரக் கூட்டம். மணிவண்ணன் , காண்டீபன் செல்வராசா கஜேந்திரன் , கஜேந்திர குமார் என பலர் பீரங்கிகளாக முழங்கினார்கள். கடற்கரையின் கட்டில் அமைதியாக அமர்ந்திருந்த. அவர்களின் பிரச்ச்சாரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாஜி அண்ணனை எனது தம்பி அறிமுகம் செய்து வைத்தார். அந்த உரையாடலின் பொது அவர் கூறிய ஒரு சிறு செய்தி கஜேந்திர குமாருடன் சேரும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக அவர் செல்லும் வழி பிழை என்று கூறும் அற்ப பதர் நான் இல்லை என்பதே.... நலம் பெற வேண்டுகின்றேன்🙏
  22. ஏன் ...மகிந்த...மைத்திரி ...கோத்தாகூட ஏகோபித்த அளவில்தானே தெரிவு செய்யப்பாட்டவை...சர்வதேசமும் ஏற்றுக்கொண்டதுதானே ...இறுதியில்...கண்டபலன்...இதுவும் அவ்வாறே..
  23. 🤣................... 'இதுக்கு மேல நீ ஒரு எழுத்து வாசித்தாலும், நீ ஆள் குளோஸ்..............' என்று ஒரு டாக்டர் வந்து சொல்லும் வரை சகல செய்திகளையும் வாசித்துக் கொண்டே இருக்கப் போகின்றோம், கபிதன்................. நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும், குமாரசாமி அண்ணா. அசாத் போன்று பலர் வரலாற்றில் வந்து போயிருப்பார்கள். தொடர்ந்தும் அங்கேயே இருப்பார்களா............. ரஷ்யாவில் எந்தப் புலம்பெயர் சமூகமும் தொடர்ச்சியாக இருப்பதாக நான் தகவல்கள் எதுவும் பார்த்ததில்லை............. சீனாவிலும் இப்படியே. அந்த நாட்களில் பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் ஜப்பானுக்கு சில புலமைப்பரிசில்கள் கிடைக்கும். எந்த நாட்டிலும் கிடைக்கும் பணத்தின் அளவை விட ஜப்பான் கொடுக்கும் பணத்தின் அளவு பெரும்தொகை. படிக்கும் போதே 'ஒரு பணக்காரன்' ஆகிவிடலாம். அத்துடன் ஐந்து வருடங்கள் தான் மேற்படிப்பு என்றால், ஜப்பானில் சரியாக ஐந்து வருடங்களில் அதை முடித்தும் விடுவார்கள். ஆனாலும் படிப்பு முடிந்தவுடன் அங்கு எவரும் நிரந்தரமாகத் தங்குவதில்லை. ஜப்பானியச் சமூகத்தில் அந்நியர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு இடம் இல்லை என்றே சொல்கின்றனர். அங்கே படித்து முடித்தவர்கள் சிலர் இலங்கைக்கு திரும்பிப் போனார்கள், பலர் மேற்கு நாடுகளுக்கு போனார்கள். இதையொட்டியே என் எண்ணம் இருந்தது.....................
  24. ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் ஏதோ ஒரு சிறிய ஒற்றுமையுடன் பல சங்கதிகளை செய்துகொண்டிருக்கின்றார்கள் என எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் நாங்கள் விஜய்-அஜித் ரசிகர் சண்டை போல் ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாமல்.....😂
  25. நா நா…அனுர தெய்யோ ஏம கத்த வெட கரண் நா அப்பா🤣
  26. பார் பேமிட் ஏன் வழங்கினேன்?; ரணில் விளக்கம். கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து கலால் உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழக்கப்பட்ட உரிமங்கள் ஊடாக, குறித்த ஒன்பது மாதங்களில் அரசாங்கம் ஈட்டிய மொத்த வருமானம் 3.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு, 2022 வரை கலால் உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் பணம் வசூலிக்கவில்லை. அப்போது, நாட்டில் நேரடி வரியை இழக்கும் போக்கு காட்டப்பட்டது. அப்போது, நாடு நிலவும் கடுமையான பொருளாதார திவால்நிலையில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான பாராளுமன்றக் குழுவும் அரசுக்குத் தெரிவித்தது. அதன்படி, உடனடி நேரடி வரி இழப்புக்கு மாற்றாக, அரசு வருவாயை அதிகரிக்க, பணம் வசூலிக்கவும், கலால் உரிமம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. 2024 பட்ஜெட் உரையில், கலால் நிர்வாக மேம்பாட்டு முறை மற்றும் வரிக் கொள்கைத் திருத்தம், பல்வேறு வகையான கலால் உரிமங்களுக்குப் பொருந்தும் வழிகாட்டுதல்களை நெறிப்படுத்துதல், புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், உரிமங்களைப் பெறுவதற்கான வரம்புகளை நிர்ணயித்தல், நிர்வாகக் கட்டணங்களை வழங்குதல் கோரிக்கைக்கு ஏற்ப உரிய உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் அடங்கிய வரவு-செலவுத் திட்ட ஆவணத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது. அரசியலமைப்பின் பிரிவுகள் 148 முதல் 152 வரை, பொது நிதிக் கட்டுப்பாட்டின் மீது பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இது தவிர, பொது நிதிப் பொறுப்புச் சட்டத்தின் பிரிவு 3, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. மேலும், பொருளாதார மாற்றச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ், அமைச்சர்கள் குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதை மேற்பார்வையிட பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில், கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் 03/2024 ஆம் இலக்க கலால் அறிவிக்கையானது ஏற்கனவே உள்ள கட்டணங்களை அதிகரித்து, புதிய திருத்தங்களை 2024 பெப்ரவரி 1 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பொருளாதார மேம்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 4 இன் துணைப் பிரிவுகளின் d மற்றும் h இன் படி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2008 ஏப்ரல் 10, திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு எண். 1544/17 (கலால் அறிவிப்பு எண். 902) மூலம் வெளியிடப்பட்ட விதிமுறைகள் 2024 ஜனவரி 12, திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு எண் 2366/39 மூலம் திருத்தப்பட்டன. அவை அனைத்தும் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இதன்படி, மாநகரசபை அதிகார வரம்புகளுக்கு வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அறவிடப்படும் 15 மில்லியன் ரூபாய் கட்டணத்திற்கு மேலதிகமாக, வருடாந்த அனுமதிப்பத்திரக் கட்டணமாக 1 மில்லியன் ரூபாவும், 05 இலட்சம் ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகையும், நகராட்சி அதிகார வரம்புகளுக்கு வணிகத்தில் நுழைவதற்கு வசூலிக்கப்படும் ரூ.10 மில்லியன் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.08 லட்சம் வருடாந்திர உரிமக் கட்டணம் மற்றும் ரூ.05 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகை, ஏனைய பகுதிகளுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அறவிடப்படும் ஒரு மில்லியன் ரூபாய் கட்டணத்திற்கு மேலதிகமாக வருடாந்த அனுமதிப்பத்திரம் 06 இலட்சம் ரூபாய் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை 05 இலட்சம் ரூபாய், 1,000 மில்லியனுக்கும் அதிகமான வணிக வளாகங்கள் அல்லது கடைகளுக்கு, வணிகத்தில் நுழையும் போது வசூலிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக, வருடாந்த உரிமக் கட்டணமாக 1.5 மில்லியன் ரூபாவும், 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு வைப்புத் தொகையும் வழங்கப்பட்டன. மதுபானங்களின் சில்லறை விற்பனை வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 1, முதல் 2024அக்டோபர் 31, வரை, புதிய திருத்தத்தின்படி, 172 மதுபானக் கடைகள் மற்றும் 89 மால்கள் அல்லது கடைகளுக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமத்தின் கீழ் R.B.4 (F.L.4) இன் எக்சைஸ் உரிம வகைப்பாட்டின் கீழ். புதிய மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த உரிமங்கள் அனைத்தும் கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி வழங்கப்பட்டுள்ளன. உரிமம் வழங்கும் போது, கலால் ஆணையர் ஜெனரல் பரிந்துரைத்த விண்ணப்பங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. அந்த அமைப்புக்கு வெளியே ஒரு கலால் உரிமம் கூட வழங்கப்படவில்லை. இது தொடர்புடைய ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தால் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 3.1 பில்லியன் ரூபாவைக் கொண்டு வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த முறை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 04 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தைப் பெற முடியும். இந்த முறையின் வெற்றி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு முதல் 250-300 கலால் உரிமங்கள் ஏல அடிப்படையில் குறைந்தபட்சம் 25 மில்லியன் ரூபாய் ஏலத்தில் வழங்கப்படும், மேலும் 25 சதவீத வருமானத்தில் இருந்து ஒரு நிதி ஒதுக்கப்படும். நிதானமான இயக்கத்தை ஊக்குவிக்கவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது மேலும் இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிய கலால் சட்டம் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன. வழங்கப்பட்ட மதுபான உரிமம் தொடர்பாக கலால் திணைக்களத்திற்கு கிடைத்த பொது முறைப்பாடுகளின் அடிப்படையில் கலால் ஆணையாளர் நாயகம் உரிமத்தை இடைநிறுத்துவதற்கு 2024 ஆகஸ்ட் 9, அன்று உரிமம் பெற்றவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 2024.07.26 முதல் 2024.09.21 வரை) மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டால் முறையானவை தேர்தல் ஆணையம் 19.08.2024 திகதியிட்ட கடிதத்தின் மூலம் கலால் ஆணையர் ஜெனரலுக்கு ஒரு நடைமுறையைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் அரசியல் பதவி உயர்வு இல்லாத உரிமங்களை வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. என்ன நடந்தது என்றால், அவை விற்கப்பட்டு கணிசமான தொகை மாநில வருவாயில் வசூலிக்கப்பட்டது. நாடு பொருளாதார சிக்கலில் இருந்த நேரத்தில் வரி வருமானத்திற்கு மேலதிகமாக நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வரும் புதிய உத்தியாக இந்த உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும். வங்குரோத்து நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காக நீண்ட கால நோக்குடன் செயற்படுத்தப்பட்ட இந்த கலால் உரிமம் வழங்கும் நடைமுறை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது. தற்போதைய செயல்பாடு வெளிப்படையானது மற்றும் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வருமான வழியை இரத்து செய்வதா, இல்லையா என்பது தொடர்பில், அவ்வாறு இல்லையேல் புதிய கலால் வரி சட்டத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தொடர்பில் பாராளுமன்ற அனுமதியுடன் அமைச்சரவை நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல, இதனை முன்னெடுத்து செல்வதற்கோ அல்லது இரத்து செய்வதற்கான அதிகாரம், அமைச்சரவைக்கு உரித்துடையது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Thinakkural.lk
  27. 🤣.................... மக்கள் தேவை இருந்தால் கடவுளாகப் பார்ப்பார்கள். தேவை முடிந்தவுடன், கோவில் கதவையே உடைத்தும் விடுவார்கள்.................... இங்கே என்ன வெற்றியும், தோல்வியும்................. முடிவில்லாத அஞ்சலோட்டம் போல தடியை மாற்றி மாற்றிக் கொடுத்து ஓடிக் கொண்டேயிருப்பார்கள்......... சும்மா இருந்த கேதீஸ்வரன் மீதே போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்றார் என்று போகிற போக்கில் ஒரு குண்டைத் தூக்கிய வீசிய அர்ச்சுனா (அதையும் பலர் நம்பி சமூக ஊடகங்களில் கொண்டு திரிந்தனர்..............🫣), இன்னும் ஏன் சத்தியனை மட்டும் விட்டு வைத்திருகின்றார், இத்தனைக்கும் சத்தியன் மீது பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே இருக்கின்றன................
  28. சிங்களம் தெரியாது. எனவே, தற்போது கூட சமூக வலை ஊடகங்களிலும், செய்திகளின் பின்னூட்டமாகவும் சிங்கள மக்கள் எழுதுவதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது. பின்னர் எப்படி பெரும்பாலான சிங்களவர்களின் "அப்பாவித் தனத்திற்கு" அத்தாட்சி கொடுக்கிறீர்கள்? குறைந்த பட்சம் இலங்கையில் இருந்த போது சிங்களப் பகுதிகளில் வசித்தாவது அனுபவம் பெற்றிருக்கிறீர்களா? இல்லையென்று தான் ஊகிக்கிறேன். பின்னர் எப்படி ஐயா இப்படி பந்தி பந்தியாக அளக்கிறீர்கள்😂?
  29. வைத்தியர் அர்ச்சனாவும் -வைத்தியர் சத்தியமுர்த்தியரும்.🤭
  30. ஒரே தலைவலி... மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன். அவருக்குச் சரியான தலைவலி.. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன். என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது.. அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன். டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம். அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன். ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது. மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்" என்றேன். நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள். 1200 ரூபாயில் ஆரம்பம்.. 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட். பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா?) மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது. ‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன். அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள். 2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன். நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார். அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன். அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார். பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன். ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன். சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார். அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன். "சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்” அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?” “ஊஹூம்.. ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்”. என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று விழித்தது. அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது.. இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது. நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள். இதில் ரகசியம் என்னவென்றால்... அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை. நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்..
  31. சிங்கள அடியான் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக காணொளியில் அடிச்சுவிடுகிறாராம் காரணம் புலம் பெயர் அர்ச்சுனா ஆதரவாளர்களை எல்லாம் கூட்டோடு அள்ளி கொண்டு அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் கொண்டு செல்வதற்காகவாம். புலனாய்வு தகவல் தெரிவிக்கின்றன.
  32. தயார் போலிருக்கே! விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். வியட் னாம் எல்லாம் போகவேண்டியதில்லை. என்னென்ன சாதனையெல்லாம் படைக்கிறார்கள். ஆண்டவன் கொடுத்த உடலையும் ஆரோக்கியத்தையும் வைத்து.
  33. 87 ஐ பற்றி இப்பொ கதைப்பாதால் ஏதும் பலன் உண்டா என என்னை கேட்டால்? 2024 முடியும் இந்த நேரத்தில் இல்லை என்பேன். புலிகள் பிழையே விட்டாலும் - இப்போ அவர்கள் இல்லை. அதை இட்டு கதைத்து இனி ஒன்றும் ஆக போவதில்லை. 2009 ற்கு பின்னான 10 வருடம் நாம் சுயபரிசோதனைக்கான review காலம் - அதில் கதைத்தது சரி. வாழ்க்கை முழுவதும் ரிவியூவில் வாழ முடியாது. இனி முன்னோக்கி பார்க்கும் காலம், இப்போ இதை உடைந்த ரெக்கோர்ட் போல மீள மீள சொல்வது தேவையில்லை. அதே போல், பிழையே விடவில்லை, தலைமையை விமர்சித்தால் மாவீரரை அவமரியாதை செய்தது போல என உணர்சி பிழம்பாவதும் வெறும் மாய்மாலம். Move on guys …. புலிகள் மெளனித்து 15 வருடங்கள். இன்னுமா அவர்களை வைத்து வால் தலை என ஆடுவீர்கள்.
  34. இதற்கு மொட்டையாக பதில் எழுத முடியாது. விளக்கங்களுடன் மட்டுமே ஆம் இல்லை என்பதற்கு பதில் எழுத முடியும். நீங்கள் விடுதலைப்புலிகளின் அணுமுறையிலும் தவறு கூறுகின்றீர்கள். அனுரவின் அணுகுமுறையிலும் தவறு கூறுகின்றீர்கள். ஒட்டு மொத்த உலகின் அரசியலில் ஒன்றையாவது சரியென விவாதித்தது இன்றுவரைக்கும் இல்லை.
  35. அப்ப தமிழரு கேட்கிற தீர்வைத் தரப்போறதில்லை எண்டு ஒரு தமிழ் பேசும் ஆளை வைத்தே அநுர சொல்லிப்போட்டார் எண்டு நினைக்கிறன். தமிழ்ச்சனம் 1987 இல வேண்டாம் எண்டு தூக்கியெறிஞ்ச‌ அதே 13 ஆம் திருத்தத்தை அடிப்படையா வைச்சாவது ஏதாவது தீர்வு வருமா என்று பார்த்தால், "அந்தக் கதையே வேண்டாம், ஆனால் தமிழ் மக்கள் விரும்புகிற தீர்வை சிங்கள மக்களின்ர ஆதரவோடு" தருவாராம். ஒரே குழப்பமாக் கிடக்கு. 13 ஐத் தர ஏலாது ஏனெண்டால் அது நாட்டைப் பிரிக்கிறதாப் போகும், தமிழருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறதாப் போகும் எண்டதுதான் உவையின்ர ஒரே நிலை. ஆனால் 13 இலேயே ஒண்டுமில்லை எண்டு தமிழ்ச் சனம் கைய்யை விரிச்சிருக்கிற நிலையில, அதையே தரமாட்டம், சிங்களச் சனம் ஓமெண்டு குடுக்கிறதைத்தான் தருவம் எண்டால், அப்படியொரு தீர்வு இருக்கிறதா என்ன? 13 ஐ விடக் குறைஞ்ச, தமிழ்ச்சனம் விரும்புகிற, சிங்களச்சனம் ஓமெண்டு அனுமதியளிக்கிற தீர்வு என்னவெண்டு இங்கை இருக்கிற அநுர பிரிகேட் தளபதிகள் தங்களின்ர தலைவரிட்டைக் கேட்டுச் சொன்னால் எங்களுக்கு விளங்கிக்கொள்ள வசதியாய் இருக்கும் எண்டுறது என்ர தாழ்மையான அபிப்பிராயம். என்ன நான் சொல்லுறது?
  36. கடந்த 76 வருடத்தில் எப்போ அண்ணை சர்வதேச அரசியல் போக்கு எமக்கு சாதகமாக இருந்தது - ஆனாலும் நாம் கேட்பதை கேட்டோம் இல்லையா ? நாம் அனுர ஆட்சியின் ரிப்போர்ட் கார்ட்டை ஆராயத்தேவையில்லை. அது இலங்கை தேசியம் சம்பந்தபட்டது. நாம் இலங்கையின் அரசுகளை, தலைவர்களை எடைபோடும் ஒரே அளவிடை - இனப்பிரச்சனைக்கான தீர்வில் அவர்கள் நிலைப்பாடு. நாம் கூறுவது எதிர்வு கூறலும் அல்ல, பண்டாடநாயக்க-ரணில் போல இன்னுமொரு இனவாதியே அனுரா. தென்னிலங்கையின் இன்னொரு இனவாத கட்சியே ஜேவிபி. மைத்திரி வந்த போது அவகாசம் கொடுத்தோமா? கோட்ட வந்த போது? அவர் ஓடி ரணில் வந்த போது? அப்போ இவருக்கு மட்டும் ஏன் அவகாசம்? அப்படி இவர் மீது நம்பிக்கை வர என்ன இருக்கிறது?
  37. ஆகாயத்திலை சும்மா போய்க்கொண்டிருந்ததை சம்பந்தன் புடிச்சு இழுத்துக்கொண்டு வந்து நடு வீட்டுக்கை இருத்திப்போட்டு அது போய் சேர்ந்துட்டுது.இப்ப கறையான் அரிக்கிற மாதிரி கடைசி வரைக்கும் இருந்து அரிச்சுப்போட்டுத்தான் மிச்ச வேலையை பாக்கும். 🤣
  38. சூடு கண்ட திருட்டு பூனை இனி தேர்தலில் நிக்காது பின்கதவால் வரவே முயற்சிக்கும் .
  39. குர்திஸ் கிளர்ச்சியாளர்களதும் சிறுபான்மையினரது நிலைமைதான் தர்மசங்கடமானது. கிளர்ச்சியாளர்கள் + பயங்கரவாதிகளுக்கு US + Israel + Turkey ஆதரவு. குஸ்திஸ் கிளர்ச்சியாளர்களுக்கு + US + Israel ஆதரவு. ஆனால் Turkey, சிரிய சுனி கிளர்ச்சியாளர்கள் + பங்கரவாதிகளுக்கு ஆதரவு ஆனால் குர்திஸ் கிளர்ச்சியாளர்களுக்கு இவர்கள் எல்லோரும் எதிரானவர்கள். இப்போது களையெடுக்கும் படலம் ஆரம்பமாகியிருக்கும். மேற்கூடகங்கள் அமெரிக்காவால் தலைக்கு $10 Million அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியை இப்போதே சுதந்திரப் போராட்ட வீரராகச் சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் எல்லோரும் வழமை போன்று பாதிக்கப்படும் தரப்புக்கள் தொடர்பாக கிஞ்சித்தும் அக்கறை காட்டப்போவதில்லை. ☹️
  40. வழமையாக புங்குடுதீவு ஆட்கள்.... வியாபாரத்தில் கவனம் செலுத்தி முன்னேறுவார்கள். இவர்... களவில் இறங்கி முன்னேறியதை, பிரபா குறிப்பிடுகின்றார் என நினைக்கின்றேன் ரதி. 😂
  41. எல்லாம் மாறும். விடுதலைப்போர் முடிவுக்கு வந்தபின், மஹிந்த கோஷ்டியை யாரும் அசைக்க முடியாது என்கிற நிலையே இருந்தது. இப்போ, அவர்களால் இனி அரசியல் கதிரை ஏற முடியுமா என்பதே கேள்வி. பெரும்பான்மையோடு கம்பீரமாக ஆட்சியேற்ற கோத்தா அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவார் என்பதை நினைத்துப்பார்க்க முடிந்ததா? ஆனால் அந்த வரலாற்று அவமானம் நிகழ்ந்தது. மக்களோடேயே நாம் பேச வேண்டும், நமது கோரிக்கைகளை அவர்கள் பக்கம் வைக்க வேண்டும்.
  42. திராவிடமும், தமிழ்த் தேசியமும் வேறு வேறானாவையா? -சாவித்திரி கண்ணன் சமீப காலமாக திராவிடம் என்பதே ஒரு புரட்டு. தமிழர்களை திராவிடர்கள் என்பது பிழையானது. இது இந்த திராவிட கருத்தாக்கத்தை பிரிவினை நோக்கத்தில் ஆங்கிலேயேர்கள் ஊக்குவித்தனர்..என்றெல்லாம் கூறி வருகின்றனர். தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானதா? உண்மை என்ன…? நம்மை பொறுத்த வரை திராவிட இயக்க ஆதரவோ, தமிழ் தேசிய ஆதரவு நிலைபாடோ எடுக்காமல், உண்மை என்னவென்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு நம் தேடலை தொடங்கினோம். நம் தேடலின்படி, திராவிடம் என்ற சொற்றொடர் ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கியே கணிசமாக காணக் கிடைக்கின்றன. இந்தியாவின் தென் பகுதியை குறிக்கும் ஒரு சொல்லாடலாக அந்தக் காலங்களில் இவை பயன்பாட்டில் இருந்துள்ளன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணத் துறவியான வஜ்ரநந்தி என்பவர் “திரமிள சங்கம்” என்ற ஒன்றை உருவக்கியுள்ளார். இந்த திரமிள சங்கம் என்பதை திராவிட சங்கம் என்றே மயிலை சீனி வேங்கடசாமி , வையாபுரிபிள்ளை போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரிலபட்டர் என்ற ஆன்மீக அறிஞரும் ‘திராவிட பாசை’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். கிபி ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் காலகட்டத்தில் காஞ்சிபுரம் வருகை குறித்த தம் பயண நூலில் சீன அறிஞர் யுவான் சுவாங் திராவிட தேசமான காஞ்சிபுரம் சென்றேன் என பரவசமாகக் குறிப்பிடுகிறார். அந்த பரவசத்திற்கு காரணமாக அவர் சொல்வது, இது புத்தர் கால்பட்ட மண். போதி தர்மர் அவதரித்த பூமி, 100 க்கு மேற்பட்ட அழகிய புத்த விகாரங்களையும் , ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகளையும் இங்கு நான் கண்டேன் என்கிறார். சீன அறிஞர் யுவான்சுவாங் மகாபாரதத்தில் அனுஷான பர்வத்தில் திராவிட போர் வீரர்கள் என்ற வார்த்தை வருகிறது. எப்படி வருகிறது என்றால், மகாபாரத போர்க் களத்தில் பாண்டவர்களுக்கு ஆதரவாக பாண்டிய மன்னர்கள் தங்கள் வீரர்களை களத்தில் இறக்கினார்கள் என்ற இடத்தில் ‘திராவிட வீரர்கள்’ என அதில் குறிப்பிடப்படுகிறது. மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்றது ஆறாம் நூற்றாண்டு வாக்கில் என்பது கவனத்திற்கு உரியதாகும். ஆந்திராவில் கிடைத்த ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் கல்வெட்டு ஒன்றில், திராவிட தேசத்தில் குடியேறிய பிராமணர்கள் தங்களை ‘திராவிட புதிரலு’ என அழைத்துக் கொண்டதாக உள்ளது. இந்த வகையில் தான் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்…என்பதையும் நாம் உய்த்துணரலாம். அப்படியானால், ‘திராவிடர் என்ற வார்த்தை பிராமணர்களைக் குறிக்கிறதா?’ என்றால், இல்லை இந்த தென் இந்திய பிராந்திய மண்ணில் வாழ்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகவே இது இருந்துள்ளதை பல ஆவணங்கள் வெளிச்சப்படுத்துகின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்க்கண்டார் இயற்றிய ‘சிவஞான போதம்’ என்ற நூல் தான் இன்று வரை சைவ சித்தாந்தத்தின் பிரதான நூலாக கொண்டாடப்படுகிறது. இந்த சிவஞான போதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ள திருவாவடுதுறை ஆதினம் சிவஞான சுவாமிகள் இந்த நூலின் முகப்பில் இதனை ‘திராவிட மாபாடியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு திராவிட மொழியிலான பேருரை என்று பொருளாகும். இது அச்சு வடிவம் பெற்ற போதும் சைவ சித்தாந்த நூல் நிலையத்தார் நூலின் முகப்பில் சிவஞான முனிவரை ‘திராவிடபாடியகாரர்’ எனக் குறிப்பிடத் தவறவில்லை. தாயுமான சுவாமிகள் ( 1705- 1742) எழுதிய புகழ் பெற்ற பாடலான கல்லாத பேர்களே நல்லவர்கள் எனத் தொடங்கும் பாடலில், வட மொழியிலே வல்லான் ஒருத்தன் வரினும் த்ரவிடத்திலே விவகரிப்பேன்’’ என்ற வரி வருகிறது இந்தப் பாடலில்! இதற்கு உரை எழுதிய அந்த காலகட்டத்தின் பெரும் தமிழ் புலவர்கள் அனைவருமே வட மொழியிலே வல்லவன் ஒருவன் வரினும், தமிழ் மொழியில் கைதேர்ந்தவன் போல விவகரித்து பேசுவேன் என்றே எழுதியுள்ளனர். வைணவர்கள் தங்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ‘திராவிட வேதம்’ என்றே அழைக்கின்றனர். காரணம், 63 நாயன்மார்களும் தென்னகமாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் வட நாட்டு மொழியில் உள்ள வைணவ இலக்கியங்களில் இருந்து வேறுபட்டது என்பதைக் குறிப்பிடவே ஆழ்வார்கள் இயற்றிய பெருமாளைப் போற்றும் பிரபந்தங்கள் அனைத்தையும் ‘திராவிட வேதம்’ என்றனர். திவ்வியப் பிரபந்தத்தில் தலை சிறந்தது நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி; பக்தர்கள் பலரால் நாள்தோறும் போற்றிப் பாராயணம் பண்ணப்பட்டு வரும் இதனை ‘செந்தமிழ் வேதம்’ என்றும், திராவிட வேதம் என்றுமே அழைக்கின்றனர். இவ்வாறு வைணவர்களும், சைவர்களும் தமிழில் எழுதப்பட்ட தங்களின் புனித நூல்களை ‘திராவிட வேதம்’ என அழைத்து பெருமைபட்டுள்ளனர் என்பதே யதார்த்தமாகும். தென் இந்தியாவை குறிப்பிடுவதற்கு பல சமஸ்கிருத நூல்களில் ‘திராவிடம்’ என்ற சொல்லாடல்கள் வெளிப்பட்டுள்ளன. இதைக் கொண்டு ‘திராவிடம் என்பதே சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது’ என்பது கெடு நோக்கம் கொண்ட திரிபாகும். இதற்கு பதில் அளிக்க சிறந்த தமிழ் தேசியவாதியான தமிழ் அறிஞர் தேவ நேயப் பாவணரின் கூற்று ஒன்றே போதுமானது. அவர் எழுதிய ஒப்பியன் மொழிநூலில் எழுதப்பட்டு இருப்பதாவது, “இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறுபிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ்என்னும் சொல்லே”. அதாவது, ‘தமிழில் இருந்து திரிந்து சென்றதே திராவிடம்’ என்கிறார் தேவ நேயப் பாவாணர். இதன் மூலம் தமிழே முந்தியது, திராவிடம் பிந்தியது என்றும், ‘தமிழே, திராவிடம் என்ற சொல்லாக பிரிந்துள்ளதால் தமிழுக்கு திராவிடம் எதிரானதல்ல’ என்ற முடிவுக்கும் நாம் வரலாம். ‘தமிழ் உலக மொழிகளில் மூத்தது, திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கியது’ என்கிறார் தேவநேயப் பாவாணர். இதன் மூலம் தென் இந்திய நிலப்பரப்பை ‘திராவிடப் பகுதி’ என்றும், இந்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை குறிப்பதற்கு ‘திராவிடர்கள்’ என்ற சொல்லும் மிக இயல்பாக பழங்காலத்தில் இருந்துள்ளமையை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்தியாவின் தென் பகுதியில் அனைவருமே ஒரு காலத்தில் தமிழ் மொழியில் தான் பேசியுள்ளனர். அந்த தமிழ் மொழியில் இருந்து கிளைத்து எழுந்ததே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவையாகும். இதைத் தான் தமிழ்த்தாய் வாழ்த்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களும் எழுதியுள்ளார். ‘நீராருங் கடலுடுத்த..’ படலில் வரும் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தை கவனத்திற்கு உரியது. மேலும், ‘சீரிளமையோடு இருக்கும் தமிழில் இருந்து தோன்றியவையே தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும்’ என்ற பெருமையை அவர் குறிப்பிட்டு உள்ளார். ஆகவே, தமிழ் தான் ‘திராவிடம்’ என்ற பொருளில் முற்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது. மொழியியல் அறிஞர்கள் தமிழையும், தமிழில் இருந்து தோன்றிய மொழிகளையும் ‘திராவிட மொழிகள்’ அல்லது ‘தமிழியன்’ மொழிக் குடும்பத்தை சார்ந்தவை என்றே வகைப்படுத்துகின்றனர். முன்னை திராவிட மொழியும், மூலத் திராவிட மொழியும், தொன்மை திராவிட மொழியும் தமிழே என்பதால், பின்னைத் திராவிட மொழியும் தமிழே என நிலை பெற்றுவிட்டது. அந்த வகையில் திராவிட மொழியும் தமிழும் வேறு,வேறல்ல. திராவிடம் என்பது வெகுகாலமாக தமிழை மட்டுமே குறிப்பிட்டு வந்துள்ளதால், பிற்காலத்தில் தோன்றிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி பேசுவோர் தங்களை தனித்துக் காட்ட விரும்பியதால், ‘திராவிடர்’ என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம். தமிழின் மூலக் கூறுகளை ஆராய்ச்சி செய்த எல்லீஸ் பிரபுவும், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலணக்கணம்’ என்ற ஒப்பற்ற பெரு நூலை எழுதிய பேரறிஞர் கால்டுவெல்லும் நமது மூலத்தை நமக்கே உணர்த்திய நன்றிக்குரிய பெருமக்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. நமது அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ‘திராவிடன்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்திய காலத்தில் திராவிட கட்சிகள் தோன்றவில்லை. இன்றைய அரசியல் சூழலில், திராவிடக் கட்சிகள் மீதான கடும் குற்றச்சாட்டுகளுக்கோ, அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கோ ஆதரவு நிலை எடுத்து எழுதப்பட்டதல்ல, இந்தக் கட்டுரை. ஆனால், திராவிட கட்சிகளின் மீதுள்ள ஒவ்வாமையை நிலை நாட்டுவதற்காக திராவிடத்தையும், தமிழையும் ஒன்றுக்கொன்று முரணாக நிறுத்தி, நமது பகைவர்கள் நம்மை மோதவிட்டு ரத்தம் குடிக்க துடிக்கின்றனர். ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தாக்கமும், ‘திராவிட தேசியம்’ என்ற கருத்தாக்கமும் ஒன்றுக்கொன்று பகைமை பாராட்ட அவசியமில்லை’ என்பதை நாம் உணர்வோமாக! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20073/tamizhil-dravidam-meaning/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.