Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்15Points88827Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்11Points46979Posts -
satan
கருத்துக்கள உறவுகள்10Points10278Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்8Points19670Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/14/24 in all areas
-
திண்ணை
4 pointsமுன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில் பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂4 points
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல் காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர். சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.4 points
-
குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம்
3 pointsகுறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம் எழுத்துப் பழக்கம் ஏற்படும் முன்பே அடியேனுக்கு மேடைப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. எழுத்திற்காக எனக்குக் கொம்பு சீவி விட்டவள் என் மகள் சோம.அழகு என்றால், மேடை நோக்கி என்னை ஏவி விட்டவர்கள் எனது MUTA தொழிற்சங்கத் தோழர்கள். எனது எழுத்திற்கு நானே வாசகனாய் மனநிறைவு கொள்வதுண்டு. மேடையைப் பொறுத்தவரை பெரும்பான்மை மேடைப் பேச்சாளர்களின் வரையறையில் நான் நிற்பதில்லை என்பதே என்னைப் பற்றிய எனது கணிப்பு (அவர்கள் அப்படி ஏதோ வரையறை வைத்திருக்கிறார்கள் என்பது எனது கற்பனையாகவும் இருக்கலாம்). மேடையின் கீழே நின்றுகொண்டு நான்கைந்து பேர் கொண்ட நண்பர் குழாமில் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் மேடையிலும் எனக்கு வருகிறது. பேசும்போதே யோசித்துக் கொண்டு, சொல்ல வந்தது பாதி வாக்கியத்திலேயே தெளிவானால் அடுத்த வாக்கியத்திற்குத் தாவி விடுவது, பேச்சில் முன்னும் பின்னும் செல்வது இவையெல்லாம் நீங்களும் நானும் அன்றாட உரையாடலில் அவை பற்றிய உணர்வே இல்லாமல் நடைமுறைப் படுத்துவது. மேடையிலும் இது அனிச்சைச் செயலாக வருவதே என் மேடைப் பேச்சு. இது குறையா நிறையா என்று நான் ஆய்வு செய்யும் முன்பே, அந்த என் பேச்சு இயல்பாக இருப்பதாக எனது நட்பு வட்டம் எனக்கு முறுக்கேற்றி விட்டது. அதனால்தானே அது நட்பு வட்டம் ! குறிப்பாக என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் அந்த என் பாணியை மாற்ற முயல வேண்டாம் என அறிவுரைத்து, அது மேடையில் வேறாகத் தெரிவதே ரசனைக்குரியது என்று குறித்தது நான் எதிர்பாராத ஒன்று. மாற்ற முயன்றாலும் என்னால் இயலுமா என்பது வேறு. என்னுள் ஏற்பட்ட இந்த சிந்தனையை உங்கள் முன் சிதறி விட்டேன். எடுத்துக்காட்டாக எனது சமீபத்திய சிற்றுரைகளுக்கான இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன். ஒன்று, நண்பரின் புத்தக வெளியீட்டில்; மற்றொன்று, ஜமாஅத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில். புதிதாக மேடையேற நினைக்கும் இளையோருக்கு, அவர்கள் எடுக்கவும் விடுக்கவும் இங்கு சில விடயங்கள் அமையலாம். (1) (2) https://drive.google.com/file/d/1VezZulqg8lUh9rqkM8XRPDGUA92w2cqk/view?usp=drivesdk இக்காணொளிகள் எனது சமீபத்திய கட்டுரைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. வாசிக்க நேரமில்லாதோர் கேட்கலாம்.3 points
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன். எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன். அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.3 points
-
திண்ணை
3 pointsதிண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄3 points
-
இறக்குமதி அரிசியில் வண்டுகள் - மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
அது சரி தெரியாமல் கேக்கிறன்.....😎 சிலோன் வரலாற்றிலை எப்ப கூப்பன்மாவிலையும்,கூப்பன் அரிசியிலையும் வண்டு,புழுக்கள் இல்லாமல் இருந்தது? 🤣 பாணிலை கூட வண்டு இருந்தால் அப்பிடியே நுள்ளி அங்காலை எறிஞ்சு போட்டு ஒண்டு தெரியாதமாதிரி சம்பலோட ஒரே அமுக்காய் அமுக்கிற ஆக்கள் எல்லோ நாங்கள்....2 points
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
மாவை இராஜினாமாசெய்வதாக அறிவித்தது அவருக்கு தேர்தலில் போட்டியிட சுமத்திரன் தரப்பப பெரும்பான்யைhகக் கொண்ட தேர்தல்நியமனக்குழு அனுமதியளிக்காத கடுப்பில். அ(.அவருக்கு மட்டுமல்ல சிறிதரனுக்கும் அனுமதி மநறுக்கப்பட்ட பொழுது நான் போட்டியிடக்கூடாதென்றால் சுமத்திரனும் போட்டியிடக்கூடாது என்று வாதாடியமையால் வேறு வழியின்றி சம்மதித்தனர்).வரது ராஜினமாக்கடிதம் தனக்கு கிடைக்க வில்லை என்று செயலாளர் சத்தியலிங்கம் அறிவித்திருந்தது.குறிப்பிடத்தக்கது.அப்படியாயின் சட்டப்படி அவரே தொடர்ந்து லைவராக இருக்க முடியும். கட்சித்தலமை சுமத்திரன்கைக்குப் போகக் கூடாது என்றே மாவை இந்த தள்ளாத வயதிலுத் தான்தான் தலைவர் என்று அடம்பிடிக்கிறார். சுமத்தரன்கையில்தலைமை இருப்பதிலும்பார்க்க அறளை பேந்த மாவையின் கையில் தலைமை இருப்பது நல்லது.2 points
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........2 points
-
திண்ணை
2 points
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின் மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா? பிரச்சனைகளை தீர்ப்பதை விட பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால் கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார். இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை. அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும். இதனை சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம் ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன் நேரடியாக பேசக்கூடிய இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு. இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின் அலுவலக்கதுக்குள் அத்து மீறி நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும் தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே. மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம். ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத, அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் ஒரு மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார். பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.2 points
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள் சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள் இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான அபிவிருத்தி நடைபெற உதவலாம்..ஆனால் அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்2 points
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
ஆமா ....முன்பு சுமந்திரனும் காலதாமதமாக வந்துள்ளார். இருக்கட்டும்.... என்ன காரணம் என்று கேட்டால் குறைந்தா போய்விடுவார்கள்? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன ஆவது? இவ்வாறு சக உறுப்பினர் மீது கரிசனை இல்லாதவர்கள் மக்களை எப்படி அணுகுவார்கள்? நல்லவேளை, சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்படுவார் என்கிற செய்தி வந்ததும், விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் சாணக்கியன் தப்பித்துக்கொண்டார். இல்லையென்றால் முந்திய வரலாற்றை மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறன். அர்ச்சுனனையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும். மக்கள் அல்லல் படும்போது அதை தடுக்க திராணியில்லை, கட்சிக்குள் குடைச்சல், மக்கள் தமக்கு உதவக்கூடியவர்களை தெரிந்தெடுத்தார்கள். சும்மா இருப்பதற்கு மக்கள் ஏன் வாக்குபோடவேண்டும்? அதிகாரம் செலுத்தவும் மக்களை குறை சொல்லவுமா?2 points
-
குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?
2 points
- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மத்திய கிழக்கு முழுவதுமே ஓரளவுக்குமேல் நாகரீகமடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டது. இந்த வகையான ஆட்சிக்குத்தான் அது பழக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளை உற்றுக் கவனித்திருந்தீர்களென்றால் அது ஏன் என்று புரியும். குர்ரானைக் கட்டிப்பிடித்து வரிக்குவரி அதனைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் இது அப்படியே தொடரும்.2 points- திண்ணை
2 pointsகருக்குமட்டை எல்லாம் வேண்டாம் பெருமாள் ........கருத்துக்கள் வைத்தால் போதும் . ........எனக்கும் திண்ணை இருப்பது விருப்பம் . ...... எதாவது ஒரு விரைவில் பெற்றுக் கொள்ளலாம் . ...... அதேநேரத்தில் தங்களின் பல வேலைகளுக்கு இடையில் மட்டுறுத்தினர் இங்கு வருகிறார்கள் . .....அவர்களின் நிலைமைகளையும் புரிந்து நயமான கருத்துக்களை நாங்கள்தான் பொறுப்போடு இட வேண்டும் . ........! 😁 ஏதாவது ஒரு தகவல்கள் . ......!2 points- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இந்து முறைப்படி… ஈமச்சடங்கு செய்துள்ளார்கள் போலுள்ளது. 🥸2 points- குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?
பட மூலாதாரம்,FIDE தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ். செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம். இந்த முறை அவர் கண்களை மூடி யோசித்தது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் காட்சியாக இருந்திருக்கலாம், அந்தக் காட்சி தற்போது நனவாகியுள்ளது. உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான 18 வயது குகேஷ் தொம்மராஜா ஆடினார். இருவருக்கும் இடையில் 14 சுற்றுகள் நடைபெற்றன. ஆரம்பம் முதலே மிகவும் சவாலான போட்டியாக இருவருக்கும் இருந்து வந்துள்ளது. முதலில் சில சுற்றுகளில் குகேஷின் கை ஓங்கியிருந்தாலும், அதன் பின் சீனாவை சேர்ந்த 32 வயதான டிங் லிரேன் தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாக ஆடினார். ஒன்பதாவது சுற்றின் முடிவில், இருவரும் சமநிலையில் இருந்தனர். கபில்தேவ் 175: சாதனை ஆட்டம் ஆடியும் கவாஸ்கர் உள்பட யாரும் வரவேற்காதது ஏன்? வீரர்கள் அறையில் என்ன நடந்தது?18 செப்டெம்பர் 2023 நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது?20 செப்டெம்பர் 2023 பட மூலாதாரம்,FIDE அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் இருவருக்கும் சமமான வாய்ப்புகளும் சமமான சறுக்கல்களும் இருந்தன. ஆனால ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். பத்தாவது சுற்றின் இறுதியிலும் இருவரும் சமநிலையில் இருந்தனர். பதினொன்றாவது சுற்றில் குகேஷ் சிறப்பாக ஆடி, ஆட்டத்தைத் தன்வசப்படுத்தி இருந்தார். அடுத்த சுற்றையும் அவர் கைப்பற்றியிருந்தால் உலக சாம்பியன் பட்டத்துக்கான கனவு கிட்டத்தட்ட அப்போதே நிறைவேறியிருக்கும். டிங் லிரேனை ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கும் போதுதான் அவர் ஆபத்தானவராகிறார் என்று இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றாற்போல், 12வது சுற்றில் மீண்டும் சவாலான ஆட்டத்தைக் கொடுத்து, தனக்கான புள்ளிகளை அதிகரித்துக் கொண்டார் டிங் லிரேன். எனவே அடுத்த சுற்றான 13வது ஆட்டத்தை உலகின் செஸ் ரசிகர்கள் அனைவரும் உற்று நோக்கி வந்தனர். அதற்குள்ளாக இரு வீரர்களின் நகர்வுகளையும் நேரலையில் பார்த்துக் கொண்டு, யார் எந்த நகர்வை எப்படிச் செய்திருந்தால், யார் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற தீவிர அலசல்கள் ஒருபுறம் இருந்து வந்தன. ஆனால், அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த 13வது ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது. 14வது ஆட்டம் தொடரும் போது, அது டிராவில் முடிவடையும் என்று பலர் கணித்தனர், ஆனால் குகேஷ் இறுதிவரை தொடர்ந்து உறுதியாக விளையாடி வெற்றி பெற்றார். குகேஷ்: பொழுதுபோக்காக செஸ் ஆடத் தொடங்கி 18 வயதில் உலக சாம்பியன் ஆன இவர் யார்?2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் என்ன கூறினார்? உலக செஸ் சாம்பியன் போட்டியின் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், "இரண்டு வருட தீவிர பயிற்சிக்குப் பின் கிடைத்த வெற்றி இது" என்றார். இந்தப் போட்டிக்கு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குகேஷ் 10 வருட பயிற்சியின் விளைவாக இந்த சாதனையைப் படைத்துள்ளதாகக் கூறியதோடு, இந்தியாவுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கனவு கண்டதாகவும் தெரிவித்தார். உலக சாம்பியன் ஆனது பெரு மகிழ்ச்சி என்று குறிப்பிட்ட அவர் லிரேன் தோல்வி அடைந்ததற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இறுதியாக, இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்பணிப்பதாகக் கூறினார் குகேஷ். இந்திய தேசியக்கொடி முன் பாகிஸ்தான் வீரர் நின்றது ஏன்?2 செப்டெம்பர் 2023 பிரக்ஞானந்தா வெற்றியை நாடே கொண்டாடுவது ஏன்? செஸ் உலகில் இந்தியா கோலோச்சுமா?26 ஆகஸ்ட் 2023 11 வருடங்கள் கழித்து நனவான கனவு பட மூலாதாரம்,FIDE இதனால் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. இருவருக்கும் வெற்றி பெறுவதற்கான சம வாய்ப்புகள் இருந்தன. ஒரே ஒரு தவறான நகர்வினால், இளம் உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தைப் பெறும் குகேஷின், இந்தியாவின் கனவு நொறுங்கிவிடும். இந்த நிலையில் இரு வீரர்களுக்கும் இடையில் நெருக்கமான போட்டி நிலவியது. ஆரம்பத்தில் இந்தப் போட்டியும் ட்ராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குகேஷ் டிங் லிரேனை செக் மேட் செய்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி புதிய உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் குகன், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியர் ஆவார். பட மூலாதாரம்,FIDE மேக்னஸ் கார்ல்சனுடன் விஸ்வநாதன் ஆனந்த் விளையாடிய போது, குகேஷ் பார்வையாளராக இருந்தார், மேலும் ஒருநாள் உலக சாம்பியன்ஷிப்பிற்காக விளையாட வேண்டும் என்று அன்றே முடிவு செய்தார். 11 வருடங்கள் கழித்து அந்த கனவு நனவாகி உள்ளது. போட்டியின் 13வது ஆட்டத்தின் முடிவில் குகேஷ் மற்றும் லிரன் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 14வது ஆட்டம் தொடரும் போது, அது டிராவில் முடிவடையும் என்று பலர் கணித்தனர், ஆனால் குகேஷ் இறுதிவரை தொடர்ந்து உறுதியாக விளையாடி வெற்றி பெற்றார். அவரது வெற்றியானது, ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் செஸ் உலகில் மீண்டும் ஒரு புதிய சக்தியாக இந்தியா உருவெடுத்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பு, இதில் பங்குபெற்ற இருவருமே ஆசியாவைச் சேர்ந்த வீரர்கள். இறுதி போட்டியில் ஆசிய வீரர்கள் மட்டுமே மோதிக் கொள்ளும் முதல் செஸ் சாம்பியன்ஷிப் இதுதான். Ind vs Aus: பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? - யாருக்கு சாதகமாக அமையும்?4 டிசம்பர் 2024 ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்: ரூ.1.1 கோடிக்கு ஏலம் போன இந்த 13 வயது சிறுவன் சாதித்தது என்ன?27 நவம்பர் 2024 குகேஷுக்கு முதல்வர், பிரதமர் வாழ்த்து பட மூலாதாரம்,FIDE படக்குறிப்பு, சீன வீரர் டிங் லிரேனுடனான ஆட்டத்தின்போது குகேஷ் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோதி இதை வரலாற்றுச் சாதனை என்றும் குகேஷ் அனைவருக்கும் முன்மாதிரியான ஆளுமை என்றும் பாராட்டியுள்ளார். ``இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இந்த சாதனைக்கு குகேஷுக்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவு. அவரது வெற்றி, இந்திய செஸ் வரலாற்றில் அவரது பெயரைப் பொறித்தது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "உங்களை பார்த்து தமிழகம் பெருமை கொள்கிறது" என்று பாராட்டியுள்ளார். ``மிகவும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது இந்தப் பெரும் சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தை நிலை நிறுத்துகிறது. மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலகின் செஸ் தலைநகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது" என்று முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ``எங்கள் மண்ணின் மைந்தனான கிராண்ட்மாஸ்டருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ``தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) இலைட் (ELITE) பிளேயர்ஸ் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச செஸ் போட்டிகளில் நிலையான வெற்றிகளைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது வெற்றி நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதோடு மட்டுமின்றி, தமிழகத்தின் மீதான கவனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமை கொண்டிருப்பது உத்வேகம் அளிக்கிறது" என்று பாராட்டியுள்ளார். தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை - தமிழகம் முழுக்க நிலவரம் என்ன? புகைப்பட தொகுப்புஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்5 டிசம்பர் 2024 குகேஷ் சாதனை குறித்து விஸ்வநாதன் ஆனந்த் கூறியது என்ன? பட மூலாதாரம்,CHESS24INDIA விஸ்வநாதன் ஆனந்த் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ``இதுவொரு பெருமையான தருணம், இந்தியாவிற்கு பெருமையான தருணம், வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமிக்கு (WACA) ஒரு பெருமையான தருணம், தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பெருமையின் தருணம். டிங்கும் மிகவும் பரபரப்பான ஆட்டத்தைத் திறம்பட விளையாடினார். அவரும் ஒரு சாம்பியன்தான்" என்று விஸ்வநாதன் ஆனந்த் பதிவிட்டுள்ளார். மேலும், செஸ் தொடர்பான ஒரு யூட்யூப் சேனலில் குகேஷின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்வில் வீடியோ மூலமாகப் பங்கேற்ற ஆனந்த், குகேஷுக்கு நேரலையில் வாழ்த்து தெரிவித்தார். ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்ததாகக் கூறிய விஸ்வநாதன் ஆனந்த், 15 நிமிடத்திற்கு முன்பு வரை குகேஷ் வெல்வாரா என்று சந்தேகித்ததாகக் கூறினார். குகேஷ்: பொழுதுபோக்காக செஸ் ஆடத் தொடங்கி உலக சாம்பியன்ஷிப் போட்டி வரை சென்ற இவர் யார்?2 மணி நேரங்களுக்கு முன்னர் குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 குகேஷின் பின்னணி படக்குறிப்பு, வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ் சென்னையை சேர்ந்த குகேஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார். குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக, தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார். பள்ளி மாணவராக இருந்த போதே, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் குகேஷ். வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார். தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். குகேஷை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார் அந்த பயிற்சியாளர். அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர். வார இறுதி நாட்களில் நகரில் எங்கு சதுரங்கப் போட்டி நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்று, பரிசுடன் பள்ளிக்கு திரும்புவது குகேஷின் பொழுதுபோக்காகவே ஆனது. பட மூலாதாரம்,FIDE குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை (இஎன்டி) அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார். எல்லா நாடுகளுக்கும் குகேஷை அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார் குகேஷின் தந்தை. இதற்காக தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார். குகேஷின் தாய் பத்மகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் வெற்றி மேல் வெற்றி கடந்த 2015ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். 2015ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார். கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஷை மிகவும் ஊக்கப்படுத்தியது. FIDE தரவரிசையில் குகேஷ் தற்போது இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் உலகத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார். இலோ (ELO) தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவ்வளவு போட்டிகளை எதிர்கொண்டு, பதக்கங்களை பெற்று வரும் சென்னையைச் சேர்ந்த குகேஷின் குடும்பத்தில் இவரே முதல் சதுரங்க வீரர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cly25l0z231o1 point- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
1 point- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
முதலில் இந்த படத்தில் இருக்கும் கண்ணாடி போட்ட குரங்கை யும் சீனாவுக்கு அனுப்பும் குரங்குகள் உடன் அனுப்பி வைக்கவும் தமிழரசு கட்சி உருப்படும் இந்த குரங்கின் வேலைதான் இவ்வழவு கலவரமும் .1 point- மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.1 point- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
உஷ்….உப்பிடி எல்லாம் கதையாதேங்கோ…. அப்புறம் அனுர தெய்யோ கண்ணை குத்தி போடும்…. வேணும் எண்டால் - அனுரவின் கீழும் இனவாத நடவடிக்கை அப்படியே தொடர்கிறது என்பதை மறைக்க சாணக்கியன் போன்ற சோப்பிளாங்கிகளை போட்டு வறுக்கலாம்🤣1 point- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
தமிழ் பிரதேசத்தில்(பெளத்த சிலைகள் ,விகாரைகள்,சிங்கள குடியேற்றங்களை) இவற்றை செய்தால் தான் ஒன்றிணைந்த இலங்கையை உருவாக்க முடியும் என 75 வருடங்களாக சிங்கள புத்திஜீவீகள் போராடுகிரார்கள் ...நாங்கள் அதை புரிந்தும் புரியாதது போல நடிக்கின்றோம்... அவர் இப்ப அரிசியில் வண்டுகளை மீட்கின்றார் ..எல்லாத்தையும் அவரின்ட தலையில் கட்டி விடவேண்டாம் வடமாகாண தோழர்களே உங்களது தலமைக்கு கை கொடுங்கள் ... அபிவிருத்தி கூட்டத்தில் முப்படையினருக்கு என்ன வேலை ...வட மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஜெ.வி.பி தோழர்கள் அவர்களுக்கும் வணக்கம் செலுத்தி காலில் விழாத குறையாக தங்கள் அடிமை விசுவாசத்தை செய்கின்றனர் ...1 point- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
Some people are going to leave a mark on this world while others will leave a stain. Fleonor Bookerell சிலர் வரலாற்றில் தம் முத்திரையை பதித்துச் செல்வார்கள். இன்னும் சிலர் வரலாற்றில் ஒரு அழுக்காக படிந்துவிடுவார்கள்.1 point- திண்ணை
1 point1 point- மனதைக் கவர்ந்த கவிதைகள்
1 pointநீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.1 point- திண்ணை
1 pointதிண்ணையை பற்றி திரும்பவும் வாய் திறக்கும் ஆக்களுக்கு கருக்கம் மட்டையால (அந்த இடத்திலதான்) அடிவிழும் என்று அதிபர் சொல்லப்போகின்றார்.1 point- திண்ணை
1 point- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
உண்மைகளை மூடி மறைத்தால் அது மேற்குலகுக்கு ஆதரவானது என்றும் உண்மைகளை சொன்னால் அது மேற்குலகுக்கு எதிரானது என்று ஒரு புதிய கொள்கை வகுக்கப்படுகிறது யாழ் களத்தில். உண்மையைச் சொல்வது ❤️ லைக் வேண்டுவதற்காக அல்ல.1 point- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
திரு. முதுகுகுத்தி ... உங்களுக்கு ஒரு மைனஸ் பாக்கி...1 point- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த முன்னாள் ஜிகாதிகள் கையில் ஒட்டு மொத்த சிரியாவும் விழவில்லை. முன்னாள் ஜிகாதிகள் என்பதில் பல ஐஎஸ் ஆட்களும் உண்டு. இவர்களுக்கு பெயர்தான் முன்னாள் ஜிகாதிகளே தவிர இவர்கள் ஐஎஸ் போல மிலேச்சர்கள்தான். IKR எனப்படும் ஈராக்கி கேர்டிஸ்தான் போல சிரியாவில் வடக்கே பல நிலத்தொடர்புள்ள இடங்கள் குர்தி இன போராளிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முன்னாள் ஜிகாதிகள் எஞ்சிய இடத்தை Free Syrian Army உட்பட்ட ஏனைய குழுக்களுடன் பங்கிடுகிறார்கள். முன்னாள் ஜிகாதிகள் இப்போ துருக்கியின் நண்பர்கள். ரஸ்யா தன் வான், கடற் படை தளங்களை இன்னும் அகற்றவில்லை. அசாத்தை கைவிட்டு விட்டு, இப்போ முன்னாள் கிளரையாளர்களுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். இனி சிரியாவில் ஒரு நிழல் யுத்தம் உள்நாட்டு போர் என்ற பெயரில் அரங்கேறும் என்றே நான் நினைக்கிறேன். இதில் முக்கிய பாத்திரம் துருக்கி, ரச்யாவுக்குத்தான் இருக்கும், ஆனால் பலவீனப்பட்டு வடகொரியாவிடம் படைகளை யாசிக்கும் நிலையில் உள்ள ரஸ்யாவால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை - மேற்கு FSA, குர்தீக்களை போசிக்க முனையலாம் - டிரம்ப் இதில் தலையிடேன் என அறிவித்து விட்டார். உண்மையில் இதில் ஆர்வம் உள்ள எல்லோரும் James Barr எழுதிய The Line in the Sand புத்தகத்தை வாசிக்க வேண்டும். வரைபடத்தை பார்த்தால் தெரியும் சிரியா, ஈராக் பகுதியில் எல்லை ஒரு ரூலரை வைத்து நேர் கோடு அடித்தது போல் இருக்கும். உண்மையில் நடந்ததும் அதுவே. இவை இயற்கையாக அமைந்த இனவழி தேசிய நாடுகள் அல்ல. அசாத், சதாம், கடாபி போன்ற கொடுங்கோலர்களின் இரும்புபிடி உடைய - நாடுகள் இன, மத உட்பிரிவு அடிப்படையில் உடைவது தவிர்க்கவியலாதத்து. மார்ஷல் டிட்டோவுக்கு பின் யூகோஸ்லாவியாவில் நடந்ததும் இதுவே.1 point- மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம்
அடேங்கப்பா… படத்தை பார்க்க பகீரென்று இருக்குது. மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர். அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம். நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ… இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.1 point- திண்ணை
1 pointபிறகென்ன…நேரில் சந்திக்கும் அளவு பழக்கம் எண்டால் போன் நம்பரும் இருக்கும்…. ஒரு கோலை போட்டு வாய்யா என கேட்பதுதானே? உண்மையில் அவருக்கு ஏதும் இடர்பாடோ என்னமோ என நான் கவலைபடுவதும் உண்டு. தொடர்புகள் இருந்தால் ஒருக்கா சுகம் விசாரிக்கவும். கோஷானும் மிஸ் பண்ணுகிறார் வாங்கோ எண்டும் சொல்லி விடவும். பிகு அப்ப நாதம் பற்றிய என் “பாய்” சந்தேகம் பிழை எண்டுறியள்?🤣1 point- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
1) வடக்கன்ஸ் அர்ச்சுனா ரமநாதனுக்கும் அனுரவுக்கும் வாக்களித்து டமில் தேசியத்தை காற்றினிலே பறக்கவிட்டபோது, வீரம் விளை நிலம்தான் தமிழரின் மானத்தைக் காப்பாற்றியது. ஆகவே சாணக்கியன் தொடர்பாக அவதூறு கூற சாத்தானுக்கு அருகதை இல்லை. 2) ஒரு நிகழ்வு குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது சாதாரணமாக பள்ளிக்கூடம் சென்ற எல்லோருக்கும் தெரியும். ஆகவே, குறித்த நேரத்திற்கு நிகழ்வை ஆரம்பிக்குமாறு கோருவது தவறான விடயம் அல்ல. நிகழ்வை காலம் தாழ்த்தி ஆரம்பிக்குமாறு கோருவது தவறு என்பது பாடசாலை செல்லும் சிறு குழந்தைக்கும் தெரியும். 3) இப்படியான கூட்டங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது வழமையான ஒன்று. இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை ""போர்களமாக மாறிய "" என்று போடும் ஆதவனின் வறுமைத்தனத்தை நம்பிக் கருத்து கூறுவது ஆபத்தான முயற்சி. 😁1 point- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
சாணக்கியனின் காதலி... சிங்கள இனத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். இப்ப.. புத்த சிலையை பற்றி கதைத்தால், "காதலில்... விரிசல்" ஏற்படுமே. 💔 🤣1 point- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
சாணக்கியன் எங்கே போய்விட்டார் இதுகளை கவனிக்காமல்?1 point- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
அட😊 தேர்தலில் வென்ற பின் சாணக்கியன் கதைக்க வெளிக்கிட்டார்1 point- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
2006 - 2009 வரை தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி சிறீலங்கா ராணுவத்தினரால் கொல்லப்பட்டபோது அதனை இந்தியாவில் நியாயப்படுத்தி அறைகூவித் திரிந்த இந்த நபர் இன்று மரணம். Kunalan Karunagaran1 point- குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம்
மெல்லிய நகைச்சுவை கலந்த அருமையான மேடைப் பேச்சு. 👍🏽 மனதார ரசித்து கேட்டேன். நன்றி சுப. சோமசுந்தரம் ஐயா. 🙂1 point- மலரும் நினைவுகள் ..
1 point- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன். நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல. எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும் அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா? தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள் அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை? அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.1 point- மலரும் நினைவுகள் ..
1 point- குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?
ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் - கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருது.. இரண்டரை மில்லியன் டாலர் பரிசுத்தொகையோடு.. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் இருபது கோடி ரூபாய் இருக்கலாம்.. பணம் இரண்டாம்பட்சம்.. ஒரு தமிழராக நாமும்.. இந்தியராக மொத்த நாடும் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்... அறிவு மற்றும் கணித்தலின் பெரும் அளவுகோலாக கருதப்படும் சதுரங்க விளையாட்டில் வெற்றிகளை குவிப்பதின் மூலம் ஆனந்த், மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்.. இச் சாதனையை பெற்ற உலகின் 18 வயதே நிரம்பிய இளம் வீரர் என்கிற சாதனையையும் நிகழ்த்திய தம்பிக்கு இதயம் கனிந்த பாராட்டு. Suyambu Lingam1 point- திண்ணை
1 point- கழுத்து சுளுக்கிற்காக மசாஜ் செய்த பாடகிக்கு இறுதியில் நேர்ந்த சோகம்
முன் பின் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 😂1 point- `உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான்
கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂1 point- `உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான்
அடுத்த வாரமே தன்னைப் பிரபாகரனின் பேரன் என்பார். இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு அடிக்கிற (B)பிராண்டை பொறுத்து மாறுபடலாம். 😂1 point- திருவள்ளுவருடைய சிலை 07.12.24 அன்று திறந்து வைக்கப்பட்ட விழா - டோட்முண்ட் , யேர்மனி
டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்1 point- உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா?
உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா? 7 டிசம்பர் 2024 Getty Images 'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல உடல் நாற்றம் (Body odour) என்று சொன்னவுடன், பலரும் அதை உடலின் சுத்தத்துடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள். அதிகமாக வியர்த்தால் உடலில் அதிக நாற்றம் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஆனால், உடல் துர்நாற்றம் என்ற பிரச்னையின் காரணமாக சிலர் உடலின் இந்த அத்தியாவசிய செயலை வெறுக்கிறார்கள் அல்லது அதை குறைக்க நினைக்கிறார்கள். ஆனால் வியர்வை என்பதே எந்தவொரு நாற்றமோ அல்லது மணமோ இல்லாத ஒரு திரவம்தான். சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள், வியர்வையை 'மணமுள்ள சேர்மங்களாக' பிரிக்கும்போது உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. 'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, உணவுமுறை, ஹார்மோன் மாற்றங்கள், மரபியல், சில மருந்துகள், நீரிழிவு அல்லது கல்லீரல் நோய் போன்ற மருத்துவ நிலைமைகள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வுகளும் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதைவிட ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் வயதிற்கு ஏற்ப உடலின் நாற்றம் மாறும் என ஓர் ஆய்வு கூறுகிறது. Getty Images தினமும் இருமுறை குளிக்கும் நபருக்கு கூட 'உடல் துர்நாற்றம்' என்பது ஒரு பிரச்னையாக இருக்கலாம் உடலின் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது. உடற்பயிற்சி செய்யும்போது உடலெங்கும் சுரக்கும் வியர்வை எக்ரின் (Eccrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இந்த வியர்வை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. முடி நிறைந்த தோல் பகுதி, அக்குளிலும், பிறப்பு உறுப்பு பகுதிகளிலும் சுரக்கும் வியர்வை அபோக்ரின் (Apocrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இவ்வியர்வையில் புரதம் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன. பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றுகின்றன. மனித உடலில் இருந்து நூற்றுக்கணக்கான ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile organic compounds- விஓசி) வெளியேற்றப்படுகின்றன என்றும், பொதுவாக அவற்றின் கூறுகள் ஒரு நபரின் வளர்சிதை மாற்ற நிலையை பிரதிபலிக்கின்றன என்றும் 'தி ஜர்னல் ஆப் பயோகெமிஸ்ட்ரி' எனும் அறிவியல் ஆய்வு இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. இந்த ஆய்விதழ், 1922ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. இந்த ஆவியாகும் கரிம சேர்மங்கள் தான் உடலின் நாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. சுவாசம், வியர்வை, தோல், சிறுநீர், மலம் ஆகியவை இந்த சேர்மங்களின் முக்கிய ஆதாரங்கள். உடல் துர்நாற்றங்களுக்கு ரத்தமும் ஒரு முக்கிய காரணமாகும், ஏனெனில் வளர்சிதை மாற்றத்தில் உற்பத்தி செய்யப்படும் சில விஓசி சேர்மங்கள் ரத்தத்தில் சுரந்து, பிறகு சுவாசம் மற்றும் அல்லது வியர்வை வழியாக வெளிப்புறச் சூழலுக்கு உமிழப்படுகின்றன. அதே சமயம், இந்த ஆவியாகும் கரிம சேர்மங்களில் மணமற்றவையும் உள்ளன. மனித உடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெளிப்படும் இந்த சேர்மங்கள் வயது, உணவு, பாலினம், உடலியல் நிலை மற்றும் மரபணு பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன. Getty Images நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன 'வயதிற்கு ஏற்றார் போல மாறும் உடல் நாற்றம்' ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோஹன் லுண்ட்ஸ்த்ரோம், உடல் துர்நாற்றம் குறித்தும் உடல் வாசனைகள் குறித்தும் ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவரது குழு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், "நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக, இளம் வயது நபர்கள் (20–30 வயது), நடுத்தர வயது நபர்கள் (45–55), மற்றும் முதியோர்கள் (75–95) ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 41 தன்னார்வலர்களிடமிருந்து உடல் நாற்றத்தை ஆய்வு செய்வதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் இளம் மற்றும் நடுத்தர வயது நபர்களுடன் ஒப்பிடுகையில், முதியோர்களின் உடல் நாற்றம் என்பது குறைவான தீவிரம் கொண்டதாகவும், அதிக துர்நாற்றம் இல்லாததாக இருந்ததாகவும் தெரிய வந்தது. இதற்கு காரணம், முதுமை வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இது வேறுபட்ட 'ஆவியாகும் கரிம சேர்மங்களின்' (விஓசி) உற்பத்திக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, முதியோர்களின் உடலில் அதிக அளவு 2-நோனீனல் (2-nonenal) எனும் சேர்மம் உற்பத்தியாகிறது. இதனால் முதியோர்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேக உடல் மணம் (old person smell) உருவாகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. Getty Images முதுமையின் மணத்திற்கும் (old person smell), சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை முதியோர்களின் இந்த பிரத்யேக உடல் மணம் சிலருக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும், பெரும்பாலானோர் அந்த மணத்தை தங்களது தாத்தா, பாட்டி மற்றும் வயதான பெற்றோர்கள் குறித்த அன்பான நினைவுகளுடன் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள். அதேசமயம் இந்த முதுமையின் மணத்திற்கும், சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை. இந்த 2-நோனீனல் சேர்மம் தண்ணீரில் கரையாது. எனவே குளிப்பதன் மூலமோ அல்லது துணிகளை துவைப்பதன் மூலமோ அதை எளிதில் அகற்ற முடியாது. உடல் துர்நாற்றத்தைக் குறைப்பது எப்படி? இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது என்கிறார் தோல் மருத்துவர் மித்ரா வசந்த் இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தோல் மருத்துவர் மித்ரா வசந்த், "ஒவ்வொருவருக்கும் என தனித்துவமான, இயற்கையான உடல் வாசனை இருக்கும். அதிக வியர்வையால் அந்த வாசனை, நாற்றமாக மாறும்போது அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு என்று பல வழிகள் உள்ளன. சுலபமான வழி என்றால் டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம்" என்கிறார். ஆனால் அதுபோன்ற டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களை நேரடியாக தோல் மீது அல்லாமல், உடுத்தும் ஆடைகள் மீது பயன்படுத்துவது சிறந்தது என்று கூறுகிறார். "அதுமட்டுமல்லாது, இருமுறை குளிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது, துர்நாற்றத்துடன் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் இருக்கும் முடிகளை அகற்றுவது, போன்றவை உடல் நாற்றத்தைக் குறைக்க உதவும். மற்றபடி வியர்வை என்பது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று." "வியர்வையை தவிர்த்தால் உடல் நாற்றத்தை தவிர்க்கலாம் என்ற எண்ணம் நல்லதல்ல. உங்கள் அன்றாட வாழ்க்கையை உடல் துர்நாற்றம் பாதிக்கிறது என்றால், அதற்கு மேற்கூறிய வழிகளைப் பின்பற்றலாம். இல்லையென்றால் அடுத்த கட்ட சிகிச்சைகளும் உள்ளன" என்றும் கூறுகிறார். அளவுக்கு அதிகமான வியர்வையால், உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால், முறையாக ஒரு தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டுமென மருத்துவர் மித்ரா அறிவுறுத்துகிறார். "அதீத வியர்வைக்கு என பிரத்யேக மருந்துகள், சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இதையெல்லாம் தாண்டி உடல் நாற்றம் எப்போதுமே மோசமான விஷயம் அல்ல. இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது. அது மிகவும் இயல்பான ஒன்று தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்." என்று கூறுகிறார் மருத்துவர் மித்ரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0j18jv02exo1 point- மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் முற்றிலும் இலவச Software Engineering பாடநெறி
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் முற்றிலும் இலவச Software Engineering பாடநெறி இலங்கை கணினிச் சங்கத்தின் அங்கீகாரத்தின் கீழ் DP Education அனுசரணையில் மொறட்டுவை பல்கலைக்கழகம் இலவச மென்பொருள் பாடநெறியை வழங்குகிறது. Trainee Full Stack Developer எனப்படும் இந்த பாடநெறியானது software engineering மற்றும் web development அறிவை வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பாடநெறியில் பின்வரும் விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. 1. Python for Beginners 2. Web designing for beginners 3. Python programming 4. Front-end web development 5. Server-side web programming 6. Professional practice in software development (Soft skills & Technical skills) பாடநெறி முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும். இன்றைய நாட்டு நிலைமையில் சாதாரண தரப் பரீட்சை ,உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர் மாணவர்கள் IT படிக்கிறேன் என்று பணத்தை அள்ளி செலவழிக்காமல் இத்தகைய பெறுமதியான இலவச பாடநெறியை கருத்திற் கொள்ளவும். நீங்களும் இவ்விலவச பாடநெறியை கற்க விரும்பினால் கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். https://open.uom.lk உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிரவும்1 point- மாவீரர் நினைவுகள் - உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் - மித்யா கானவி
மாவீரர் நினைவுகள் - உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் - மித்யா கானவி கப்டன் மணிமாறன்(சிலம்பரசன்) பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஒப்பிறேசன் ஜெயசிக்குறு. இந் நடவடிக்கை 13.05 1997 ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாக முட்டிமோதி திறன் இழந்துபோனது. இந்த எதிர்ச்சமர் நடவடிக்கை போராளிகளிற்கு கடினமானதும் நீண்டதுமானது. களவாழ்வில் ஓய்வு, உறக்கமின்றி நல்ல உணவின்றி போராளிகள் களத்தில் பணியாற்றினார்கள். அதே நேரம் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளிற்குள் தொல்லைப்பட்ட மக்கள் சீரற்ற காலநிலைக்கு முகம் கொடுத்து மலேரியா போன்ற தொற்றுநோய்களுடனும் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தது. பெரும்பாலான வயல் நிலங்கள் செய்கை பண்ணப்படாமல் போனதால் தன்நிறைவு விவசாயமும் வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களிற்கு மட்டுமன்றி மருந்துத் தடை, மண்ணெண்ணெய் தடை ,சக்கரைக்கும் தடை, பெண்கள் மாதவிடாய் காலங்களில் பாவிக்கும் பஞ்சுகளிற்கும் (period products) ஒரு பெண் அரச தலைவி சந்திரிக்கா அம்மையாரே தடைவிதித்திருந்ததும் அது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்ததும் நாம் அனுபவித்த வலிகளே. மக்களைப்போலவே போராளிகளின் எல்லாப்பிரிவுகளிலும் வளத்தட்டுப்பாடு நிலவியது. அப்போது மருத்துவப்பிரிவும் நிர்வாக இலகுவாக்கலுக்காக வன்னிமேற்கு,கிழக்கு என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. வன்னி மேற்கின் நிர்வாகப் பொறுப்பாளராக நளன் அண்ணா இயங்கினார் எமது பிரதான தளமருத்துவமனையும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் சோலை என்ற இடத்தில் லெப் கேணல் நீலன் ஞாபகார்த்தமாக அமைந்திருந்தது. அங்கு ஓய்வின்றி தொடர்ச்சியாக சத்திரசிகிச்சை கூடம் இயங்கிக்கொண்டேயிருக்கும். அப்போது இரத்தவங்கிக்கு பொறுப்பாக நானும், எனக்கு உதவியாக மணிமாறனும் இருக்கின்றோம். அடிப்படை மருத்துவக் கற்கை நெறியினை நிறைவு செய்த மணிமாறனுக்கும் அவனது அணிக்கும் மேலதிக கற்கை வகுப்புக்களும் அங்கு நடைபெற்றன. தெரியாத விடையங்களை கேட்டு படிப்பதில் மிக ஆர்வமாக இருப்பான். எல்லாக் களமுனைகளும் விரிந்திருந்ததால் தொடர்ச்சியாக காயமடைந்தவர்களும் வந்துகொண்டேயிருப்பார்கள். ஓய்வின்றி வேலை தொடர்ந்தாலும் கிடைக்கும் நேரத்தில் மேலதிக கற்கைகளும் நடைபெறும். அன்று ஒரு நாள் இரவு செய்தி பரிமாறப்பட்டிருந்தது, மன்னார் களமுனையில் நாளை அல்லது மறு நாள் இராணுவம் தாக்குதலை நடத்தவுள்ளதாக வைத்தியர் கெளரி அண்ணா என்னிடமும் மருத்துவத்தாதி அக்காவிடமும் முன் ஆயத்தங்களை செய்யுமாறு பணிக்கின்றார். கையிருப்பில்அதிகம் தேவைப்படும் குருதி வகைகள் இன்மையால் உடனடியாக குருதி சேகரிக்க காலையில் போக வேண்டியிருந்தது . இரண்டு நாட்களாக வாகனத்தை எதிர்பார்த்து வரவில்லை, குருதி எடுக்க தூரத்திற்கு போவதற்கு வாகன வசதியில்லை. வன்னிமேற்கு பகுதியில் மருத்துவத் தேவைகளை பூர்த்திசெய்ய நின்ற ஒரே வாகனமும், அது மாதத்தில் பாதி நாட்களிற்கு மேல் வாகன திருத்தகத்தில் தான் நிற்கும். முகாம் பொறுப்பாளரிடமும் ஏதாவது ஒழுங்கு செய்யுமாறு கேட்கின்றோம் …. “எப்பிடி எங்க போறிங்களோ நாளைக்கு Blood bank பொறுப்பாளர் விளட்டோட வந்தால் சரி” என்று தனது வழமையான பாணியில் சொல்லி சென்றார் கெளரி அண்ணா. என்ன செய்யலாம் என்று யோசித்தோம் மணிமாறன் தான் யோசனை சொன்னான் முகாம் பொறுப்பாளருக்கு, “விடிய கலை டொக்டரை நீங்கள் கொண்டுபோய் வைத்தியசாலையில் வீட்டிட்டு ராசாத்தியை கொண்டுவாங்கோ” Dr கலை காலையில் அக்கராயன் பிரதேச வைத்தியசலைக்கு கடமைக்கு செல்வது வழமை. நாங்கள் தேவையான பொருட்களுடன் cool box ஐ (இரத்தத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்துப் பாதுகாக்க பயன்படும் பெட்டி) கொண்டு வாறம்.” “ஓ நல்ல ஐடியா ….. நாங்கள் சைக்கிளில் (துவிச்சக்கரவண்டி) வாறம் என்றேன். தேவையான பொருட்களை எடுத்து வைக்கின்றோம் இரவு பத்துமணியாகியது . ஓ …அப்போது தான் நினைவு வந்தது காலை குளிப்பதற்கு தண்ணீர் இருக்காது, நாங்கள் இருந்த இடத்தில் கிணறு இல்லை ஒரு குளத்திற்கு அல்லது,ஒரு கி.மீற்றர் தூரம்சென்றால் ஒரு வெட்டையில் கிணறு இருக்கும் அங்கு தான் குளிக்க போவோம். இரவில் தான் அந்த கிணற்றில் குளிக்கலாம். அந்த இடத்தின் பெயர் சோலை நல்ல மாமரச் சோலையாகவும் தான் இருந்தது. எமது மருத்துவ மனை இருந்த இடம் ஏன் சோலை என பெயர்பெற்றது என்று தெரியாவிட்டாலும் நாம் இருந்த வளாகம் முழுவதும் மரங்களால் மூடி சோலை என்ற பெயரிற்கு ஏற்றால் போல பொருத்தமாகவிருந்தது . ஆனால் தண்ணீர் இல்லை என்பது ஒரு குறை. ஆண்கள் பகுதியில் ஒரு சிறு கிணறு இருந்தது. நோயாளிகளிற்கு வேண்டிய தண்ணீரை பணியாளர்களில் ஒருவரான செந்தில் அப்பா எடுத்து வருவார். அவருக்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியாது நடிகர் செந்திலின் சாயலில் இருந்ததால் போராளிகள் எல்லோரும் செந்தில் அப்பா என்று அன்பாக அழைப்போம் அது அவருக்கும் மகிழ்ச்சியூட்டும். ஆனால் அவர் தண்ணீரை ஒரு ராங்கில் நிரப்பி தள்ளுவண்டியில் வைத்து கைகளால் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்த்தால் மனசு இறுகிக் கொள்ளும். அதனால் நாங்கள் அவர் கொண்டு வரும் நீரை எடுப்பதில்லை மருந்தைப்போல சிக்கனமாக பாவித்துக் கொள்ளுவோம். செந்தில் அப்பா சொல்லுவார் “பிள்ளைகள் தண்ணியைப் பாவியுங்கோ பின்னேரம் கொண்டு வாறன்” என்று…. அப்போதும் அவரது முகம் மலர்ந்து தான் இருக்கும். கைகள் தான் மரத்துப் போய்க் கிடக்கும். ஆனால் அதை அவர் பொருட்டாக எடுப்பதில்லை. விடுதலைப் பாதையில் போராளிகள் மட்டுமல்ல மக்களும் மனமுவந்து தோள் கொடுத்தார்கள். இந்த செந்தில் அப்பா போல் இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை பேரின் நினைவுகளும், வியார்வைகளும் சிந்தியிருக்கின்றது எம் நிலங்களில். அதி காலை இரத்தவங்கியில் நிற்கின்றோம் மணி அழைக்கிறான் “அக்கா…அக்கா… ராசாத்தியை காணேல்லை” யார் இரவு கொண்டு போனது என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுதர்சனின் குரல் கேட்டது ராசாத்தியையும் இரவு மதனிட்ட விட்டிட்டன்….(மதன் வாகன திருத்தகத்தின் பெயர்) என்றபடி. சுதர்சன் பின்னாளில் தமிழீழத்தின் தலைசிறந்த பல் வைத்தியராக பலராலும் அறியப்பட்டான். 2009 ம்ஆண்டு இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இவனும் ஒருவன். வைத்திய போராளிகளிடம் ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் தான் இருந்தது. அதற்கு அவர்கள் வைத்த பெயர்தான் “ராசாத்தி “ அதனைத்தான் மாறி மாறி எல்லோரும் பயன்படுத்த வேண்டும் பல வைத்திய போராளிகள் அரசாங்க வைத்தியசாலைக்கு கடமைக்கு செல்லவேண்டும் . ராசாத்தி பகிடி மருத்துவ மனை முழுவதும் பரவி அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணா வின் காதுவரை போனது. “நீங்கள் நல்லா வருவீங்கள் அண்ணா ராசாத்தியையும் பழுதாக்கீட்டிங்களா “. சைக்கிளில எல்லாரும் போவோமா? என்றான் மணி . சரி, வேறு வழியில்லை போவோம் என்று cool box மற்றும் பொருட்களுடன் தயாரானோம். நன்றாக விடியவில்லை கருக்கல் நெருக்கலான மென் இருட்டு வன்னேரி கிராமத்தின் அலம்பல் வேலிகளின் பொத்தல்களாலும் மட்டை கடவையின் கீழாகவும் ஒவ்வொரு வீட்டு நாய்களும் குரைத்துக் கொண்டு அடுத்த வீட்டுப் படலை வரை கொண்டு போய் வழியனுப்பியது . மணிமாறன் சரியான குறும்புக்காரன் நாய்களுடன் சேட்டைபண்ணிக்கொண்டே மிதிவண்டியை ஓட்டினான். வன்னேரி ஐயனார் கோவில் மணியோசை கேட்கின்றது. ஐயனாரே இன்று எங்கள் தொழிலுக்கு நீ தான் துணை என்று சொல்லவும் அவனது மிதிவண்டி காற்றுப்போய் நிற்கவும் சரியாக இருந்தது. அப்போது முகாம்பொறுப்பாளர் வாணனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை . மணி என்ன செய்வதென்று தெரியாது திக்கிப்போய் நின்றான் அவனது முகம் வாடியது. ஐயனாரே நீயுமா இப்படிச் செய்வாய்? என்று நொந்து கொண்டான். பின்னர் சிறிது தூரத்தில் அஞ்சனாவின் மாமாவின் வீடு இருந்தது எமக்கு நிம்மதியை தந்தது. அஞ்சனாவும் நானும் சென்று அவர்களை எழுப்பி காற்றுப் பம்மை வாங்கி மணியிடம் கொடுக்கின்றோம். அடிக்கும் காற்று அப்படியே வெளியேறியது தெரிந்தது. இலங்கை அரசு சைகிள் ரயர், ரீயூப் ஏன் அதனை ஒட்டிப் பாவிக்கும் பசைக்கும் தடைதான் போட்டிருந்தது. இப்போ எங்கு சென்று ஒட்டுவது , என்ன சோதனையடா இது என்று மனம் சஞ்சலப்பட அஞ்சனாவின் மாமி சூடான தேனீருடன் படலைக்கே வந்தார் “கெதியண்டு குடிச்சிட்டு போங்கோ”என்றபடி. எங்கள் முகங்களில் பதில் இல்லை . ஏன் காற்று ஏறுதில்லையா? இல்லை அன்ரி ஒட்டுப்போல என்றேன். அவர்களிடமும் உதவி கேட்க முடியாது, எல்லாருக்கும் கஸ்ரம்தானே என்று மனம் சொல்ல மௌனித்தோம். அவர்களாகவே நிலமையை புரிந்து மாமாவின் சைக்கிளை தந்தார்கள். நல்ல பெரிய கரியல் வசதியாய் இருந்தது பெட்டியை வைத்து கட்டுவதற்கு. “போகேக்க வாங்கோ ஒட்டி வைக்கிறன் “ என்றார் மாமனார். அப்பாடி… என்று மனம் குளிர்ந்தது . ஆனாலும் எங்கு குருதி எடுப்பது என்ற முடிவு இருக்கவில்லை. அக்கராயன் முறிகண்டி நெடுஞ்சாலைகள் குன்றும் குழியுமாக கிடந்தது . மிதிவண்டி நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்தது. மேடு, பள்ளம் தாண்டி ஒருவாறு அக்கராயன் சந்தியை அடைந்தபின், மணிமாறன் கேட்டான் “எங்க அக்கா வையூரோவை திருப்புறது” மணிமாறன் எப்போதும் மெல்லிய நீலக்கலர் சேட் தான் அதிகம் போடுவான். அன்றும் அப்படித்தான் அவனது சேட் செம்மண் புழுதி பட்டு கலர்மாறி கிடந்தது . அவனின் உடையை போலவே மனமும் எப்போதும் மென்மையே. ஸ்கந்தபுரம் பகுதியிலேயே அனேகமான பாடசாலைகள் இயங்கின. கிளிநொச்சி பாடசாலை இடம்பெயர்ந்து அங்குதான் இயங்கியது; அங்கு போவோம் என்றேன் நான். வழமையாக அரசியற் போராளிகள் பாடசாலைகளில், கல்விநிலையங்களில் அல்லது வர்த்தக சங்கத்தில் குருதி சேகரிப்பதற்கான ஒழுங்கமைப்பை செய்வார்கள். இன்று அவர்களிடமும் உதவிகேட்க முடியவில்லை ஊருக்குள் இரண்டு மூன்று வீரச்சாவு நிகழ்வுகள் நடைபெற்றன. அக்காலத்தில் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் யுத்தத்தினால் இருப்பிடம் இழந்து அக்கராயன் தொடக்கம் மல்லாவி வரையுமே மிகவும் நெருக்கமாக வசித்து வந்தனர். மதியம் இரண்டு மணியாகியும் எட்டு பைகள் குருதிக்குமேல் எடுக்கமுடியவில்லை . மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமாக குருதி தருவதற்காக வந்தாலும் அவர்களில் சிலருக்கு உடல் நிறை காணாமல் இருக்கும், பலருக்கு தொடர்ச்சியாக மலேரியா வந்ததால் குருதிச்சோகை இருந்தது. பலர் குருதிக்கொடையாளராக உதவ மனம் இருந்தாலும் உடல் நிலை இடம் தரவில்லை. அவர்களிற்கு எல்லாம் நாங்கள் கொண்டு சென்ற விற்றமின் ,இரும்புச்சத்து மாத்திரைகளை கொடுத்து அடுத்த முறை வந்து உங்களில் குருதி எடுக்கின்றோம் என்போம், அவர்கள் மனம் நோகாமல். சில பிள்ளைகள் தன்மானப் பிரச்சினையில் அடம் பிடிப்பார்கள். நாங்கள் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றோம் எடுங்கள் என்று அழக்கூடத் தொடங்கி விடுவார்கள். அவர்களை ஏதாவது சொல்லிச் சாமாளித்து விடவேண்டும். வெய்யில் நன்றாக காயத்தொடங்கியிருந்தது cool box ல் உள்ள இரத்தத்தை குளிர் குறையுமுன் உடனடியாக முகாமிற்கு அனுப்பவேண்டும். அது இப்போது சாத்தியமற்றது, மாலை வன்னேரியிலும் அக்கராயன் வர்த்தக சங்கத்திலும் குருதி எடுக்க அரசியல்துறைப் போராளி ஒருவர் சிறு ஒழுங்கை செய்திருந்தார் . அக்கராயன் வைத்தியசாலைக்கு சென்று சேகரித்த குருதிகளை மாலை வரை பாதுகாப்பாக வைக்கலாம் என்று யோசனை தோன்றியது. அந்த மருத்துவமனையும் நோயாளர்களால் நிறைந்து கிடந்தது. அப்போது மாவட்ட வைத்திய அதிகாரியாக வைத்தியர் விக்கி அவர்கள் இருக்கின்றார். நேரடியாக அவரிடம் சென்று குருதி வங்கியில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் சேகரித்த குருதிகளை பாதுகாப்பாக வைக்க அனுமதி கேட்கின்றோம். அவர் இல்லை என்றா சொல்வார்…. பின்னர் நாம் எதிர்பார்க்காத ஒன்றை எம்மிடம் வினாவினார்; “இஞ்ச அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஒரு நோயாளிக்கு அவசரம் ரத்தம்வேணும் Bநெக்கற்றிவ் உங்களிட்ட இருந்தா தாங்கோவன்” என்றார் இப்ப இல்லை இனி எடுக்கிற இடத்தில கிடைச்சால் தாறம். என்று கதைத்தபடியே இரத்த வங்கிக்கு போகின்றோம். அந்த நோயாளியின் மனைவி கண்களிலிருந்து நீர் வடிய ஒட்டிய உடலும் குழி விழுந்த கண்களுடன் சுமார் ஒரு 38 கிலோ தான் இருப்பார். கெஞ்சிக்கொண்டு நிக்கின்றார், “எத்தனை பேரை கொண்டு வந்திட்டன் ஒருவரிலையும் எடுக்க ஏலாது எண்டிற்றிங்கள் என்னில கொஞ்சம் எண்டாலும் எடுங்கோ என்ர மனுசன் எனக்கு வேணும் பிள்ளைக்கு அப்பா வேணும் ” என்றபடி.மகனின் தலையை வருடினாள் எங்களிற்கும் அந்த காட்சியைப் பார்க்க கண்களில் நீர்நிறைந்து குளமாகியது. விக்கி டொக்டர் தான் அந்த அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டார். பின்னர் வர்த்தக சங்கத்திலிருந்தும் சிலரில் குருதிகளை எடுத்தும் Bநெக்கறிவ் கிடைக்கவில்லை. அப்போது மணிமாறன் “அக்கா நான் ஒருக்கா DT (குருதி வங்கியின் குருதி நோயாளிக்கு ஒத்துவருமா என்று அறியும் பரிசோதனை)செய்து பார்க்கவா? “ முதல் நீங்கள் ரத்தம் கொடுத்து இரண்டு மாதம் ஆகவில்லையே …. என்றேன். முதலில் எனது குருதி பொருந்துகின்றதா என்று பார்க்கின்றேன் என்றவன்; இவனது குருதிப் பொருத்தம் சரி என்றவுடன் உடனடியாக அடுத்த கதையின்றி “அம்மா அழாதேங்கோ நான் தாறன் ரத்தம் ” என்றான். ஏறி கட்டிலில் படுத்துக்கொண்டு அக்கா நீங்கள் எடுத்துக்கொடுங்கோ என்றான். ஆனால் அவனுக்கு ஊசி குத்துவது என்றால் பயம் கண்களை மூடிக்கொண்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, எடுங்கோ அக்கா என்றான். வாணணும் அஞ்சனாவும் “வேண்டாம் அக்கா பேச்சு வாங்குவீங்கள் டொக்டரிட்ட “ என்றனர். எனக்கும் தெரியும் மணிமாறன் 0- (நெக்கற்றிவ்) குருதி அடிக்கடி இரவுகளில் இவ்வகை குருதி தேவைப்படுவதுண்டு. அவசரதேவைக்கு ஒரு முறை கொடுத்து மூன்றுமாதத்திற்கு முன்பே அவனில் பல தடவை இரண்டாம் முறை எடுத்து விடுவோம் அதனால் தான் நான் சற்று தாமதித்தேன். “ஏனக்கா யோசிக்கிறிங்கள் பேச்சுத்தானே வாங்கிட்டு போங்கோ உயிரையே கொடுக்கிறார்கள் பேச்சு தானே வாங்கினா போச்சு எடுங்கோ” என்றான். “ அந்த அம்மா” என் தெய்வமே நீ நல்லாய் இருக்கவேணும் என்று கைகூப்பினாள் “ “.அன்று முழுவதும் உணவுமின்றி மணிமாறன் இன்னும் இழைத்திருந்தான். இரவு ஓரளவு குருதி சேகரித்த திருப்தியோடு நாமும் ,உதிரம் கொடுத்து உயிரை காப்பாற்றிய மகிழ்வில் மணியும் முகாம் திரும்பினோம். இரவு பதினொரு மணியிருக்கும் வாகனச் சத்தம் கேட்டது அதன் பின்னால் அன்பு அண்ணா (மூத்த மருத்துவப்போராளி பின்னர் பொக்கணைப் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனையில் வீழ்ந்தசெல்லில் வீரச்சாவு) தான் கூப்பிட்டார்” குயில் வாங்கோ” என்ற அவரது குரல் கண்ணீரென்றது பெண்களின் அவசரசிகிச்சை வோட்டில் இருந்த எனக்கு. ஏனோ மனம் பதை பதைத்தது “நல்ல பலாப்பழம் வந்திருக்கு” (பெரிய காயமென்றால் அப்படி அழைப்பது மருத்துவப் போராளிகளின் பரிபாசை) என்ன குருதிவகை என அறியமுனைந்த போது கும் இருட்டிலும் மின்னல் அடித்தது போல் இருந்தது 0- நெக்கற்விவ். மடியில் கனம் ஏறிக்கொண்டது “கடவுளே இரண்டு பையின்ற் தான் கிடக்கு அது காணுமா இருக்க வேண்டும்“என்று நினைவில் வந்த தெய்வங்களை வேண்டிக் கொண்டு சத்திரசிகிச்சை கூடத்தில் நுழைந்தேன். வைத்தியர் அஜோ,கெளரி அண்ணா மீனா அக்கா மற்றும் சிலரும் சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது சுமார் ஒரு மணித்தியாலம் கடந்தபின் “நல்ல அடிதான் ஈரலிலும் பட்டிற்று இன்னொரு விளட் போட்டு வையுங்கோ” என்றார். வைத்தியர் அஜோ இரண்டு தான் கிடந்தது டொக்டர் என்றேன். (0➖வகை குருதிக்கு அந்த வகை மட்டும் தான் ஏற்றலாம்) நெஞ்சு பட படத்தது அடுத்து மணிமாறனை தான் கேப்பார் என்பது எனக்கு தெரியும். மணிமாறன் னுக்கும் தெரியும். மணி என்னைப் பார்த்து சொல்லவேண்டாம் என கண்களால் சொல்லி அங்கிருந்து அடுத்த அறைக்கு நழுவிப் போனான். “மணி இரத்தம் கொடுத்து இரண்டு இரண்டரை மாதம் வந்திருக்கவேணும் போய் எப்ப கொடுத்தது என்று பாத்திட்டு DT போடுங்கோ தேவை என்றால் எடுக்கலாம்” என்றார் . பதிலுக்கு எதுவும் பேசமால் இன்று அக்கரயானில் கொடுத்ததை சொல்ல இது நேரமில்லை அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனை மூளையை குடைய சத்திரசிகிச்சை கூடத்தில் போடும் சட்டைகளை கழற்றிவிட்டு இரத்தவங்கிக்கு சென்றேன். என் பின்னால் மணிமாறன் “அக்கா ஏன் பயந்து சாகிறிங்கள் இரத்தம் தானே இன்னொருக்கா இழுத்து தள்ளுங்கோ” என்றான். அவனை கடிந்து கொள்ள முடியவில்லை. சுதர்சன் , வைத்தியர் சதா இருவரும் 0 – (நெக்கறிவ்) தான் கொடுத்து ஒரு மாதம் ஆகவில்லை என்ன செய்வோம் என்று அன்பு அண்ணையிடம் கேட்டேன். காயமடைந்த நோயாளர்களை பராமரிக்கும் பணியாளரில் ஒருவரான சுறுளி அண்ணாவை பக்கத்திலிருந்த அவரது வீட்டிற்கு சென்று கூட்டிவந்தார் அன்பு அண்ணா . அவரின் குருதி பொருந்தியது மனம் மகிழ்ந்தது. இப்படித்தான் மணிமாறனின் குருதி ஏற்றப்பட்டு அவசர நேரங்களில் உயிர் மீண்டோர் எத்தனை பெயர் என்று சொல்ல முடியாது. வவுனியா நொச்சிக்குளம்த்தை சொந்த இடமாக கொண்ட மணிமாறன்புதுக்குளம் ம.வி கல்வி கற்றபோது 1998 ஆம்ஆண்டு தன்னை போராளியாகமாற்றிக்கொள்கின்றன் தனபாலசிங்கம் தம்பதிகளின் ஐந்தாவது புதல்வனே ஞானேஸ்வன் என்ற இயற்பெயர்கொண்ட மணி இவனது மூத்த அண்ணா 1988இல் போராளியாகி1992 ம் ஆண்டு இந்த மண்ணிற்காய் விரகாவியம் ஆகினார். அவனதுபதையில் மணியும் சென்றுவிடுவான்என்று குடும்பத்தினர் நினைக்கவில்லை இரண்டு அக்காவும் தம்பி அண்ணா என்று பாசத்தில் கரைந்தள் குடும்பத்தைவிட்டுமணி தன் தாய்நாட்டை காக்கபுறப்பட்டான் ஆனால்குடும்பநிலை காரணமாக மீண்டும் 2004 போரத்திலிருந்து விலத்தி மனித நேய கன்னிவெடி அகற்றும் நிறுவனத்தில் வேலை செயதான். ஆனால் மீண்டும். போர் மேகங்கள் எமை சூழத்தொடங்க களமருத்துவ அணியுடன் இவன் களம்புகுந்தான் . 2006 ம் ஆண்டு மீண்டும் முகமாலையில் போர் வெடித்த போது அப்போது முகமாலைப்பகுதியில் களமருத்துவப் போராளியாக நின்ற மணி பாரிய காயமடைந்ததில் குருதிக்குழாய் பாதிப்படைந்தது. அதிக குருதி இழப்பால் அவன் எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்தான் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. தோழர் உயிர்காக்க போராடிய பிள்ளை பாரிய விழுப்புண்ணடைந்து வலியால் துடிக்கின்றான், பாரிய சிதைவுக்காயம் காப்பாற்றத் துடிக்கின்றார்கள் மருத்துவ குழாம். “ என்னை நீங்கள் காப்பாற்ற மாட்டீங்கள் என்ர Blood..(இரத்தம்)..இல்லை என்றவனை காயத்தை கட்டி நம்பிக்கை யூட்டி அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள் ஆனால் பிரதான மருத்துவமனையின் வாசலிலேயே தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொள்கின்றான். உதிரம் கொடுத்து எத்தனை உயிர்களிற்கு மீள உயிர் அளித்திருப்பான்… இவர்கள் தான் தெய்வப்பிறவிகள் நாம் வணங்க வேண்டிய ஆத்மாத்தமானவர்கள். அவனது அண்ணா மேஜர் சிலம்பரசனாக மாவீரனானார். அவரது பெயரைத்தான் மணிமாறன் அல்லது சிலம்பரசன் என்று சூடிக்கொண்டவன் இவனும் 12.08.2006 அன்று கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) ஆகிவிட்டான் . எப்போதும் சிரித்த அவனது முகம் வாடியிருந்தால் கேட்காமலே அறிந்து கொள்ளலாம் அவனது நோயாளர் விடுதியில் ஒரு போராளிக்கு உடல்நிலை மோசமாகவிருக்கிறது என்று. நேர்த்தியாக அவன் போடும் உடை, இரவில் எத்தனை மணிக்கு எழும்பி சத்திரசிகிச்சைக் கூடம் வந்தாலும் அவன் நேர்த்தியாக உடை அணிவான். மெல்லிய நீலநிற சேட் தான் அடிக்கடி போட்டிருப்பதால் அதன் பிரதிபலிப்பு அவன் அகமும் வெள்ளையே…. மற்றவர்களிற்கு ஒரு துன்பம் என்றால் அவனால் தங்கமுடியாது சிறிய விடையங்களில் கூட உன்னிப்பான கவனிப்பு இருக்கும். அவனது முகத்தில் எப்போதும் ஓர் பிரகாசமான ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். கண்களில் நிறைந்து பூத்திருக்கும் இலட்சிய உறுதி, மனதில் நிறைந்திருக்கும் பேரன்பு, எதையும் நுட்பமாக பார்த்தே தெரிந்துகொள்ளும் பக்குவம் என சொல்லில் வடிக்க முடியாத ஒரு துடிப்பும் எப்போதும் நாம் கண்ட சிறப்பு அவனிடம். சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் அதிகரித்ததால் எந்த இடங்களில் முகாம் இருக்கின்றதோ அந்தப் பகுதிகளை கவனிக்கும் பொறுப்பு அந்த துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட காலத்தில் கனகபுரம் துயிலும் இல்லத்திற்கு அண்மையில் யாழ்வேள் மருத்துவ மனையிருந்தது. காலையில் நாங்கள் தான் அந்தப்பகுதியை கண்காணிக்க றோந்து போகவேண்டும். ஒரு நாள்வழியில் ஒரு மாணவன் நீண்ட தூரம் நடந்து வெறும் காலுடன் பாடசாலை செல்கின்றான். இரண்டாவது நாளும் அதே மாணவனை வெறுங்காலுடன் கண்டபோது மணிமாறன் தான் போட்டிருந்த சப்பாத்தை கழற்றிக்கொடுத்து விட்டு வெறும் காலுடன் தான் நடந்து சென்று ரோந்தை முடித்து விட்டு வந்தபோது கல்லும் முள்ளும் கால்களில் குற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இது மட்டுமல்ல கிளி முறிப்புப் பகுதியில் காவலரனில் நின்றபோது உணவில் இருந்து உடைவரை அந்த சிறுவர்களிற்கு கொடுத்து விடுவான். இது ஒரு கதையில்லை இப்படித்தான் வாழ்ந்தவர்கள் மாவீரர்கள், இவர்கள் இறந்தபின்பும் எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை. தனக்காக வாழாது தன் இனத்திற்காய் வாழ்ந்த இவர்களா உங்கள் பார்வையில் பயங்கரவாதிகள்? மருத்துவப் பணியில் மணிமாறனும் நானும் பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து இருக்கின்றோம். பல நினைவுகள் மனதில் இன்றும் நினைவாக தொடர்கின்றது. காயமடைந்து இவன் கரங்களில் சிகிச்சை பெற்று இன்றும் வாழும் பல போராளிகள் இவனை மறந்திருக்க மாட்டார்கள். மணி துடிப்பான ஒருவன் எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன். எங்களிற்கு வயதில் சிறியவனாக இருந்தாலும் மனம் தளரும் போதெல்லாம் புத்துணர்ச்சி தரும் அவன் பகிடிகளும் வார்த்தைகளும் இன்றும் பசுமையாய் ஒலிக்கின்றது. குறிப்பு -இந்த பதிவு திருத்திய மீள்பதிவு இந்த மாவீரனின் புகைப்படம் பலரிடம் கேட்டு தேடிக் கொண்டிருந்தேன் .இப்போது கிடைத்தது ஊர் தேடிச்சென்று புகைப்படத்தை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தையும் இணைத்து விட்ட பசீலன் அண்ணா விற்கு பேரன்புடன் நன்றிகள் -நன்றி- மிதயா கானவி. https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/12/95446/1 point - சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.