Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19122
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3054
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/17/24 in all areas

  1. ஊதாரி ஊடகங்கள் ************************ எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள் எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள். உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர் விலைக்கு விற்கும் வேடதாரிகள். தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே தரமில்லா செய்தியால் மடையராக்குவார் ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார் ஒருசில நாட்களில் ஏறியும் மிதிப்பார். செய்திகள் பற்றி கவலையே இல்லை சேரும் பணம்தான் அவர்களின் எல்லை ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஏழை மக்களின் படங்களைக் காட்டி எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில போக்கிரியர்களும் இணையத்தில் திரிகிறார். நல்லசெய்தியும் சிந்தனை உயர்வும் நலம்கெடா நடுநிலை ஊடகத் தெழிவும் உள்ள பலபேரின் உண்மைத் தன்மையும் உலகமறியும் இதுஉங்களுக்கில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  2. யூ டியுப்பர்கள் என்ன தலையங்கம் போடுவார்கள் ? 1)அர்ஜூனா அதிரடி விஜயம்..வைத்தார் வெடி பூட்டுக்கு... 2)அர்ஜூனாவின் ...சுவினால் அதிர்ந்தது நகராட்சி 3)அர்ஜூனா வைத்தர்ர் ஆப்பு தமிழ்தேசிய வாதிகளுக்கு 4)அர்ஜுனாவின் படை தளபதி கெளசல்யாவின் தலமையில் முற்றுகை 5) திணறுகின்றனர் சாவகச்சேரி மக்கள் அர்ஜூனாவின் காலில் விழ... 😅
  3. முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... வழக்கமாக அணியும்.. கோட்டு, சூட்டு, கழுத்துப் பட்டி (Tie) எதுவும் இல்லாமல்... வெறும் சேர்ட்டுடன் போன படியால்.... சாணக்கியனின் வாகன சாரதியாக, "பைல்" தூக்கிக் கொண்டு, பின்னால் போயிருப்பார். படத்தைப் பார்க்க... "மிக்சர்" சாப்பிடப் போன ஆள் மாதிரித்தான் தெரியுது. 😂 🤣
  4. நீங்கள் இப்படியான ஒரு ராசாவாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் என்றைய விருப்பமும்............ ஆனால் போலிப் பெருமைக்காக உங்களை அவர்களில் ஒருவராக காட்டிக்கொள்ள நீங்கள் எவ்வளவு பிரயத்தனங்கள் செய்கின்றீர்கள்...................😌. பண்ணைப்புரமும், அந்த தாயும் எந்த கோவிலுக்கும் ஈடானதே என்ற ஒரு இறுமாப்புடன் நீங்கள் வாழ்ந்திருக்கவேண்டும்........................
  5. சரியான திட்டமிடல் இல்லாமலும்,எதோ ஒரு காரணத்திற்காகவும் அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்புறது...கேட்டால் சிங்கள அரசு ஒன்றும் தருவதில்லை என்று சொல்றது. 9 மணிக்கு வேலைக்கு 9 மணிக்கு தான் வீட்டை இருந்து வெளிக்கிடுறது...12 மணி எண்டவுடனே வீட்ட சாப்பிட ஓடி வாறது,5 மணி என்றவுடனே பறக்கிறது, இடையிடையே சொந்த அலுவல்கள் என்று வெளிக்கிடுவது ,பத்தாததற்கு ஆளாளுக்கு அரட்டை சிங்கள பகுதிகளில் ஒரு நாளில் முடிக்கிற வேலையை தமிழர் பகுதிகளில் 6 மாதத்திற்கு இழுத்தடிக்கிறது ...பிறகு நேரமின்மையால் வேலை முடியல்ல என்று குற்றம் சொல்றது
  6. நன்றி. பார்ப்பாரற்று எங்கோ இருந்த “மூனா என்னும் தோழமைக் கரம்” பதிவை மீண்டும் கொண்டு வந்த மோகனுக்கு நன்றி. இங்கே தங்கள் கருத்துக்களை பதிவிட்ட அனைவருக்கும் எனது நன்றியை ஒட்டு மொத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். “மூனாவின் கிறுக்கல்கள்” புத்தகத்துக்கு அதிகம் செலவாகி இருக்கும் என கிருபன் கேட்டிருந்தார். உண்மை. ஒரு பதிவாக இருக்கட்டுமே என்றுதான் அதை வெளியிட்டேன். (அதற்கும் ஒரு கதை இருக்கிறது) புத்தகத்தை பார்க்க விரும்பினால் இந்தப் பக்கத்தில் pdf வடிவத்தில் இருக்கிறது. https://noolaham.net/project/711/71035/71035.pdf மீண்டும் ஒரு தடவை அனைவருக்கும் நன்றி.
  7. நீங்கள் புதிசுதானே? 🤣 சில விடயங்கள் யாழ் கள உறவுகள் குறைந்தது நால்வர் தனி தனியாக கையாளப்பட எத்தனித்து - எதேற்சையாக அது வெளி வந்து - ஒரு குட்டு உடைக்கப்பட்டது. குட்டை உடைத்தவர்களுக்கு யாழ் நிர்வாகமும் நன்றியை சொல்லி இருந்தது. இது நடந்தது அநேகம் திண்ணையில். அநேக யாழ்கள உறுப்பினர்களிற்கு குறித்த நபர் யாரென்பதும் - அவர் இயற்பெயர், வெளி உலகில் அவர் நடத்தும் இந்திய சார்பு இணையத்தளம் என்ன என்பதும் தெரியும். யாழில் இந்திய எதிர்ப்பு வேஷம். ஆனால் உண்மையான நோக்கம் மேற்கை நோக்கி புலம்பெயர் தமிழர்களை திருப்புவது. சும்மா சொல்லக்கூடாது - மஹாராசன் - தொழில் ரொம்ப சுத்தம். வாங்குவற்கும் மேலாலயே கூவிறாண்டா கொய்யால ரகம். மற்றையவர் தான் இந்திய இராஜதந்திரிகளிடம் பேசுவதாக அவரே யாழில் கூறி உள்ளார். இவர் காசு வாங்காமலே கூவும் ரகமாக இருக்க கூடும் என்பது என் அனுமானம். இலங்கையில் இவ்வளவு மினக்கெடும் இந்தியா - யாழ் போன்ற ஒரு தளத்தில் ஊடுவாது விட வாய்ப்பே இல்லை. அது யார் என்பதை உய்தறிவது கஸ்டம் ஆனால் முடியாத காரியமில்லை. Rule of thumb - 1. யார் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பது போல் காட்டி கொள்கிறார்களோ, குறிப்பாக ஹிந்தியா போன்ற வார்த்தைகளை பயன்படுத்திகிறார்களோ - அவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். (நெடுக்காலபோவான் விதி விலக்கு). 2. கணக்குகள் 2009 க்கு பின் உருவானவையாக இருக்கும்.
  8. சும்மரும் செய்தவர் என யாராவது போர் கொடி தூக்கினால் உங்கள் பதில்?😅
  9. ஓம். யோஷித்த ராஜபக்‌ச ஒரு பெண்ணை காதலித்தவர். அந்தப் பெண் இவரை விரும்பாமல்... முஸ்லீம் பையன் ஒருவரில் காதல் கொண்ட போது, அந்த முஸ்லீம் பையனை கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. மேலதிக தகவல்களுக்கு.... @goshan_che, @குமாரசாமி, @Nathamuni ஆகியோரை அணுகவும். 😂
  10. கவி அருணாச்சலத்தைப் பற்றி.... வீரகேசரி பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) அன்று.. //"மூனா" என்கிற தெட்சிணாமூர்த்தி செல்வகுமாரன். ஈழத்தின் கருத்தோவிய உலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்// எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வந்ததாக அறிகின்றேன். அதனை @ஏராளன், @கிருபன் அல்லது வேறு யாராவது தேடி எடுத்து இங்கு இணைத்து விடும்படி அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி. 🙂
  11. இதைத் தான் நானும் அண்ணைக்கு எழுத இருந்தேன். இப்படி தான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். அது தொடர்ந்தபோது இங்கே அதை சில நாட்களின் பின்னர் சுட்டிக் காட்டினேன். இதையும் இங்கே பல தடவைகள் சுட்டிக் காட்டி இருக்கின்றேன். எமக்கான நீதி வேண்டும் என்று நாம் முயலும் முன் இவ்வுலகில் யார் நீதிக்கு எதிரானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே முதற்படி உலகின் எந்த நாட்டிலும் எந்த கட்சியிலும் இருக்கலாம். அவர்கள் எவராயினும் எமது அநீதிகளுக்கு குரல் தரவேண்டும் என்றால் நாம் மற்றவர்களின் அநீதிகளுக்கு குரல் கொடுப்பவராக கொடுத்தவராக இருக்கவேண்டும். நன்றி சகோ.
  12. உள்ளக ஆபத்து அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்த தேசத்திற்கு வந்தாலும் என்ன செய்ய வேண்டுமென்று யாப்பில் எழுதியிருக்கும். இப்போதும் ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது seditious conspiracy குற்றம் நீதிமன்றில் விசாரணை செய்து நிரூபணமாகி சிறையில் இருக்கிறார், நிலத்தின் கீழ் சித்திரவதைக் கூடத்தில் அல்ல😎. இப்ப இவை பற்றியா பேசுகிறோம்? ஒரு தனிக் குடும்பம் - அதுவும் சோசலிஸ்ட் பாத் கட்சி என்று கட்சிப் பெயரில் சோசலிசம் வைத்துக் கொண்டு- தான் ஆட்சியில் இருக்க செய்த படுகொலைகளைப் பேசுகிறோம். இதையெல்லாம் "சகஜமயப்படுத்த" நீங்கள், உங்களுக்கு பின்னால் இருந்து உசுப்பேத்த ஒருவர்😂. உங்கள் போன்ற போலிப் புத்திஜீவிகளால் தான் உலகம் இன்று ட்ரம்ப்,புரின், கிம், பராஜ், லீ பென் போன்ற ஆட்களையெல்லாம் "விடுதலை வீரர்களாகக்" கொண்டாடும் நிலையில் நிற்கிறது. இந்த முட்டாள் தனங்களை தமிழ் சமூகத்திலும் அறிமுகம் செய்தால் இன்னும் ஒரு தலைமுறையில் நம் கதையும் கந்தல் தான்!
  13. தமிழரசுக் கட்சியில் இருந்து தெரிவாகி பாராளுமன்றம் போன யாராவது பதவி விலகினால் அந்த இடத்துக்கு பின்னால் உள்ளவர்கள் உள்நுழையலாம்.
  14. என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள். இலங்கையில்... இதன் மூலம், மாதம் 40 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் தமிழ் "யூ ரியூப்" நடத்துபவர்களும் இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில்... ஒரு கிராமிய சமையல் யூ ரியூப் நடத்துபவர்கள் இந்திய ரூபாயில் 80 லட்ச ரூபாய் வரை ஒரு காணொளிக்கு, வருமானம் பெறுவதாக சொன்னார்கள். அவர்கள் கிழமைக்கு ஒரு காணொளியை வெளியிடுவார்கள். வயல் வரப்பில் இருந்து சமைத்து ஒரு கிழமைக்கு 80 லட்ச ரூபாய் பெறுவது எவ்வளவு பெரிய வருமானம்.
  15. எந்தத் தகுதியும் இல்லாமலே நானும் கிளறிக்கல் சேவன்ராக வேலைபார்த்த காலமும் உண்டு. அதைக் கிளற அப்போது ரணிலும் இல்லை, சஜித்தும் இல்லை. என் பேரன் இரண்டு வயதில் ஏதோ கல்லை விழுங்கிவிட்டான், அது என்ன கல் என்று பார்ப்பதற்கு அவன் கடன்களை முடித்த வேளைகளில் எல்லாம் நானும் அதனைக் கிளறிக் கல் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன்.🤪
  16. காவோலையை நிமிர்த்துவதற்கும் படிமனவாக்குவதற்கும் வேறு வழிகள் உள்ளது. குழைக்காட்டார் இல்லையென்றால் நகரத்தாரின் வண்டியும் குண்டியும் வற்றிப்போகும்😎
  17. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் பிரசன்னமாகியிருந்த எனது அண்ணாவுடன் கதைத்தேன். அவர் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு; 1. அருச்சுனா கேள்வி கேட்டது தப்பில்லை ஆனால் மற்றவர்க்ளுக்கு கதைப்பதற்கு சந்தர்ப்பமே வழங்கவில்லை. 2. அருச்சுனா சிலரை தனிப்பட தாக்கி கேள்வி கேட்டதுமல்லாமல் அவர்களின் பதவிக்கு அவசியமில்லாத தகமைகள் அவர்களிடம் உள்ளதா என தனிப்பட தாக்கியுள்ளார். 3. அன்றையநிகழ்ச்சிநிரலை சரியாக கொண்டு செல்லவிடாமல் மின்சாரசபைப்பிரச்சினையையும் சத்தியமூர்த்தியின் பிரச்சினையையும் மாத்திரம் கதைத்தார். 4. அருச்சுனா கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டாலும் அருச்சுனா அதைக்கணக்கிலையே எடுக்கவில்லை. 5. இவ்வளவும்நடந்ததன் பின் தான் பின்வரிசையில் இருந்த கிராம அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள் சத்தம் போட்டார்கள் அருச்சுனாவைப் பார்த்து வெளியே போகுமாறு. முன்வரிசையில் இருந்த அரச அதிகாரிகள் ஒருவரும் எதுவும் பேசவில்லை. அமைச்சர் எத்தனையோ தடவை சொல்லியும் அருச்சுனா கேட்கவில்லை. இனி அபிவிருத்திக்குரிய பணம் திரும்பிச் செல்வது பற்றி, 1. பிரதேச செயலகங்களால் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை மாறாக அரசியல் வாதிகளால் முன்மொழியப்படுபவைக்கே ஒதுக்கப்படும். 2. ஒதுக்கப்படும் பணம் பெரும்பாலும் ஜூனுக்குப் பிறகே வந்து சேரும். 3. அரசியல்வாதிகளால் முன்மொழியப்படும் திட்டங்கள் பெரும்பாலும் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்படாததாகவும் சிலவேளைகளில் செய்யமுடியாததாகவும் இருக்கும். 4. ஒதுக்கப்படும் பணம் தெவையுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகவே இருக்கும் (உ+ம் ஒருகிலோமீற்றர் தார் வீதிக்கு 80லட்சம் தேவை ஆனால் சில அரசியல்வாதிகள் 3கிலோமீற்றர் வீதிக்கு 5லட்சம் மட்டும் ஒதுக்கியுள்ளனர். 5. சிலதிட்டங்களுக்கு திறமையான உள்ளூர் ஒப்பந்தகாரர் இல்லை. அப்படி இருந்தாலும் ஒரேநேரத்தில் பலவேலைகளை எடுத்து எந்த வேலையையும் அந்தநேரத்திற்கு முடிப்பதில்லை. 6. அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு சாத்திய அறிக்கை முதலே தயாரிக்கப்படாத்தால் பணம் ஒதுக்கப்பட்டபின்னரே எல்லாம் செய்யவேண்டும். சிலவேளைகளில் பல திணைக்களங்களின் ஒப்புதல் தேவைப்படும். எல்லா ஒப்புதலும் பெறுவதற்கிடையில் வருடம் முடிந்துவிடும் (எங்களுடைய திணக்களங்களின் வேகம் தெரியும் தானே). 7. பெரும்பாலான திணக்களங்களில் திறமையான தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு தட்டுப்பாடு. 8. இருக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கும்நவீன தொழில்நுட்பத்துக்கு தேவையான பயிற்சி வழங்குவது குறைவு. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அபிவிருத்தித் திட்டங்கள்நேரத்துக்கு முடிக்க முடிவதில்லை. அதைவிட பெரும்பாலான திட்டங்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாகவே செய்யப்படுகிறது. அவர்களுக்கு சட்டரீதியான பொறுப்புக் கூறல் என்பது இல்லை. இதனால் சிலவேளைகளில் ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிச்செல்கிறது. கேள்வி கேட்பது இலகு செய்து முடிப்பது கடினம். இதற்கு மூளைசாலிகள் வெளியேற்றமும் ஒரு காரணம்
  18. மூனாவைப் பற்றி விக்கிப்பீடியாவில்..... https://ta.wikipedia.org/wiki/மூனா
  19. தம்பீ எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. கிறிக்கியதெல்லாம் வீணா குமாரூ?
  20. எல்லாமும் எமது சமூகத்தின் அங்கம்தானே. யாழில் அண்மையில் நடந்த நல்ல விடயங்களில் ஒன்று நீங்கள் எழுத தொடங்கியது. முதுகு சொறியவில்லை. நீங்கள், @பகிடி, தில்லைவிநாயகம் ஐயா போன்றோர் யாழுக்கு புது ரத்தம் பாச்சுவதாக நான் உணர்கிறேன். இப்போ @RishiKயும் காத்திரமான கருத்துக்களை எழுதுகிறார். கடந்த ஆறு மாதத்தில் யாழ் ரொம்பவே பன்முகபட்டு மெருகேறியுள்ளது. முட்டல் மோதல் தவிர்க்கவியலாது ஆனால் பலர் தெண்டித்து குழு வாதத்தை தவிர்கிறார்கள். அனுர காதல் கடிதத்தை சுக்கல் சுக்கலாக கிழிக்கும் போது பொலிடோல் குடிக்காமல் விட்டால் சரி🤣
  21. 👍.................. நான் இங்கு இணைந்து இது பத்தாவது மாதம். பல வருடங்களாக முன் பக்கத்திற்கு வந்து, அங்கிருந்து ஏதாவது வாசித்து விட்டுப் போய்க் கொண்டிருந்தேன். இந்த விடயங்களை, அரசியலை கவனிக்கவில்லை. உங்களின் எழுத்துகளை, கருத்துகளை முன்னரும் வாசிப்பேன். சாத்திரியாரின் தொடர் வாசித்திருக்கின்றேன். நெடுக்காலபோவான், வல்வை சகாறா, தனிக்காட்டு ராஜா போன்ற சில பெயர்கள் அந்தப் பெயர்களின் காரணமாகவும் மனதில் தங்கியது................... ஆனால், இப்படியான 'அரசியல் மயப்படுத்தலை' கவனிக்கத் தவறிவிட்டேன்............. யாழ் களத்திற்கு இப்படியான ஒரு பெறுமதியும் இருப்பது மிகவும் சந்தோசம்...........❤️. யாழ் களத்தின் கட்டமைப்பும், இங்கு வந்து போகும் பல கள நட்புகளின் திறமைகளும், பன்முக ஆளுமைகளும் வியக்கத்தக்கவை என்று முன்னரும் சொல்லியிருக்கின்றேன்..................👍.
  22. 🤣🤣 நிர்வாகம் அந்த அம்பலப்படுத்திய திரியை நீக்கியிருக்கக்கூடாது.... கடைசி வரைக்கும் யாழ் பக்கம் தலைவைத்துக்கூட படுத்திருக்க மாட்டார், அந்த இந்திய முகவர் ... மொத்தமாய் கழட்டி காட்டின நாளது🤪🙃 இதில ஹைலட் - நிர்வாகம் நன்றி சொன்னதும், தனது யாழ் பரப்புரை செய்திகளை நீக்கி விட்டு ஓடியதும்.
  23. மூனா எனும் யாழ் கள கவி அருணாசலம் என்பவரை பற்றிய பதிவை மேலே கொண்டு வந்த மோகன் மற்றும் தமிழ்சிறீ, குசா,ரசோதரன் ஆகியோருக்கு நன்றி .ஒரு கலைஞனை திறமைசாலியை, அருகி வரும் ஓவியத்தில் புலமை மிக்கவரை, சிறந்தவரை யாழ் களம் உறுப்பினராக கொண்டதில் பெருமை படுகிறது. என் இளைய சகோதரனின் இழப்பின் போது அவரை படமாக வரைந்திருந்தார் . இவரது ஓவியத்திறமையை நம் இளம் சமுதாயம் கற்க வேண்டும். பாராட்டுக்களும் வாழ்த்துக் களும் உரித்தாகுக .
  24. இந்தியாவின் உதவி 25 மாவட்டங்களுக்கும் கிடைக்கும் என உறுதி வழங்கினார் என ஒர் செய்தி பார்த்தேன் .. சிறிலங்கா இருக்கும் வரை,இந்தியா இருக்கும் ஏன் இந்த கடல் இருக்கும் வரை கடற்றோழிலார் பிரச்சனை இருக்கும்...அரசியல் அரசியல் ...ஒரு காலத்தில் மீனவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை ஆனால் இன்று அப்படி அல்ல சுடமாட்டார்கள் ...ஆனால் கைதுகள் நடை பெறுகின்றது இது தொடர் கதை
  25. சூப்பர்..தலைப்புக்கள்...இது காணும்...ஒரு சின்ன இடைச்செருகலை செலுத்தி...இன்னும் ஐந்து போட...எதுக்கும் இந்த தலைபுக்களுக்கு காப்புரிமை எடுத்து வையுங்கோ... அதிர்ந்தது ஜாவாகச்சேரி....அதிரடியாக நுழைந்த அர்ச்சனா காரைச் சுற்றி மக்கள் கண்ணீர்.. மக்கள் வெள்ளத்தை கண் ட அர்ச்சனா...தங்கத்தை தழுவி...பாதுகாப்பாக அணைத்துச் சென்றார்
  26. 🫢............. இங்கு சம்பளத்திற்கும் எழுதுகின்றார்களா................... ஏற்கனவே ஒரே ஆள் பல அடையாளங்களுடன் இங்கே வந்து போகின்றார்கள் என்ற தகவலே சாடையாக தலையைச் சுற்ற வைத்தது................🤣. இந்த சம்பள விசயம் காலுக்கு கீழே பூமியை வழுக்க வைக்கின்றது............. சாரு பாவம்....... ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்து நல்ல நாவல்களாக எழுதினாலும், 50 பிரதிகள் கூட விற்பனை ஆகவில்லை, ஆயிரம் ரூபாய் கூட வருகுதில்லை என்று மொத்த தமிழ் சமூகத்திற்கும் சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றார்..... அவர் இங்கே வந்து சேரலாம் போல...........
  27. ஏன் ..இவருடைய அண்ணனுக்கு எதிராக வெள்ளவத்தை தமிழ் மாணவி சம்பந்தப்பட்ட ஒரு சம்பவமே இருக்கே..கொழும்பு சென்பிறிஜன்ட் கல்லுரி மாணவி..தோண்டினால் கனக்க வரும்...ஏனோ தாமதம் ஆகின்றது
  28. பிரபல டவாலி கோசானின் கருத்துப்படி… ஒப்பந்தங்கள் வாய்மூல ஒப்பந்தங்களாகவும் இருக்கலாம். அதே போல் இந்த உறுதிமொழியும் வாய்மூலமாக இருப்பினும் அது அமல்படுத்தபடலாம்…ஆனால் அது தகுந்த அதிகாரியால் கொடுக்கப்பட்டதா, அந்த அதிகாரம் அவருக்கு இருந்ததா, இதனால் சபைக்கு வியாபாரிகள் கொடுத்த அனுகூலம் என்ன உட்பட பல விடயங்கள், சூழமைவு தெரிந்த பின்பே இது செல்லும், செல்லாது என சொல்ல முடியும். இது முன்னர் இருந்த நடைமுறையாயி இப்போ இதை ஏன் கைவிட்டனர் என்பதை சபை விளக்க வேண்டி வரும்.
  29. சிங்கள மக்கள் மொத்தமாக உங்களைத் தூக்கி வெளியே வைத்துவிட்டார்கள்............... அதை நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை..............
  30. அண்ணை இது எனக்குத் தெரியலயே! கண்டக்ரரிடம் கட்டவேண்டுமீ!
  31. அண்ணை, வீதியின் அடிப்பகுதியில் நீரினால் ஏற்படும் அரிப்பு, நிலம் கீழிறங்குவதை தடுப்பதற்காக நெருக்கடி நேரத்தில்/யுத்த காலத்தில் இந்தமுறையை பயன்படுத்தியதாக தம்பி சொன்னான். தற்போது பொறியியலாளர்கள்/எந்திரிகள் ஓலை போட அனுமதிப்பதில்லையாம்.
  32. மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.
  33. எஞ்சினியர் தியரியில்...இப்படி ஒன்றும் இருக்கென்று இப்பதான் தெரியும் அய்யா..
  34. இதனால் என்ன வருமானம் வரும் ??? 🤣🙏 அவங்களை ஏமாற்ற முடியாது தம்பி பச்சை நீல சிவப்பு எழுத்தில் எழுதுவதை விட்டுட்டு பச்சை தாள்கள் நீல தாள்களை எடுத்து விடுங்கள் அலுவல்கள் நெடிப்பொழுதில். நடக்கும் 🤣
  35. யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே.... இந்த... "காவோலைகளுக்கு மேல் காப்பற் வீதியை" போட்ட... எஞ்சினியரையும், ஓவசியரையும் ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோப்பா... 😀 உங்களுக்கு புண்ணியமாக போகும். அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று எங்களுக்கும் கேட்க ஆசையாக உள்ளது. 😂 நீங்கள் அந்த "யூ ரியூப்" காணொளியை போட்டால்... நான் உங்களுக்கு... பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன். 🤣
  36. இதை இலங்கை செய்யாது எனவே கருதுகிறேன், யாரும் சொந்த செலவில் சூனியம் செய்ய மாட்டார்கள், சில வேளை மற்ற அரச தலைவர்களை விட இவர் தலையில் இலகுவாக மிளகாய் அரைக்கலாம் என நினைக்கிறார்களோ🤔
  37. குங்கும கலர் சட்டைக்காரன்ர பார்வையே சரியில்லை....😂
  38. @goshan_che நான் மேற்குலக எதிர்ப்பாளன் இல்லை. ஆட்சியில் இருந்து அநியாய அரசியல் செய்யும் மேற்குலக அரசியலை எதிர்க்கின்றேன்.அவ்வளவுதான். நான் வாழும் நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. இரு பெரும்பான்மை கட்சிகளை விட ஏனைய கட்சிகள் ஆட்சியில் இருக்கும் அரசின் கொள்கைகளை எதிர்க்கின்றாகள். போராட்டங்களும் செய்கின்றார்கள்.பாராளுமன்றத்திலும் எதிர்க்குரல் எழுப்புகின்றார்கள்.இன்றைய அரசின் போக்கை கண்டிக்கின்றர்கள்.உக்ரேன் போரில் பேச்சுவார்த்தையும் சமாதானமும் முக்கியம் என கருதுகின்றார்கள்.நானும் அந்த கட்சிகளில் ஒருவன் என்றவகையில் மாற்று கருத்துக்களை வைக்கின்றேன் . அவ்வளவுதான் . இனிமேலும் மேற்குலக விசுவாசமில்லாதவன்,நன்றி கெட்டவன்,மேற்குலகில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு....ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டியது தானே எனும் கிழிஞ்சு போன பொன் வாக்கியங்களை உதிர வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். ஒரே மாதிரியான வசனங்களை பழைய சீலை போல் எல்லா இடங்களிலும் கிழித்து போட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அது மட்டுமில்லாமல் உங்களைப்போன்றோர் வாழும் நாடுகளில் உள்ள அரசவையில் எதிர்க்கட்சிகளே இல்லையா? எல்லா கட்சிகளும் ஒரே கொள்கை உடையவர்களா? மாற்று கருத்துக்கள்,போர் எதிர்ப்புகள் ஏதும் இல்லையா? நீங்கள் சார்ந்தோர் நாட்டு மக்களும் ஒருமித்த கொள்கை உடையவர்களா?
  39. எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரு கௌரவ கலாநிதி பட்டத்தை - அவர்களின் அரசியல் சேவையை பாராட்டி - வழங்கினால் ஒரு பிரச்சனையையும் இருக்காது.
  40. இங்கே பணத்தை தான் பார்க்கிறார்கள் லாபம் தான் நோக்கம் காவோலை மலிவு அத்துடன் இரண்டு வருடங்களில் இடம். கீழே இறங்கும் மீண்டும் றோட்டு போடலாம் அதற்கான நிதியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல மணிநேரம் பேசி பெறுவார்கள் தொடர்ந்து உழைக்கவும் முடியும் நீங்கள் மட்டுமே உழைத்தால். போதுமா ???? 🤣🙏🤪😂
  41. சுமத்திரன். தேர்தலை கால தாமதமின்றி நடத்தும்படி எப்படி கோர முடியும்?? கட்சிக்கு விசுவாசமாக. நடக்க தெரியாது ஒரு சாதாரண அங்கத்துவராக. கட்சியில். இருக்க தெரியாது ஒரு கட்சி தலைவராக கூட இருக்க தெரியாது
  42. புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே? டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை. தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார். இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  43. 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........
  44. என்ன சார் யோசனை சொல்றேன் என்று ஆளை காலி பண்ண ஐடியா கொடுக்குறீங்க! ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ" என்றாள். கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா" என்றாள். கண்டக்டர் வந்து "என்னம்மா அந்தம்மா ஜன்னலை திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னலை சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா?" என்று கேட்டார். அதற்கு முதல் பெண் சொன்னாள் "இங்கே பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செத்துப் போவேன்" என்றாள். இரண்டாவது பெண் "இங்கே பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செத்துப் போவேன்"னாள். கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டரை கூப்பிட்டு "அங்கே என்ன பிரச்னை" என்று கேட்டான். கண்டக்டர் சொன்னார் "அதை ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செத்துப் போவேன்ங்குது. இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செத்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது". அந்த மனுசன் "நான் ஒரு யோசனை சொல்லவா?" என்று கேட்டான். கண்டக்டர் "சரி சொல்லுய்யா நீ என்ன சொல்லப் போறேன்னு பார்ப்போம்" என்றார். அவன் சொன்னான் "கொஞ்ச நேரம் ஜன்னலை அடைச்சி வை, அந்த அம்மா செத்துப் போகும், அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னலை திறந்து வை இந்தம்மா செத்துப் போகும் நாம நிம்மதியா போகலாம்" என்றான். கண்டக்டர் சொன்னார் "நல்ல ஆளுய்யா நீ அப்படி அவங்க ரெண்டு பேரும் செத்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்க வந்து கேட்டா நான் என்னய்யா பதில் சொல்றது"ன்னு கேட்டார். அதற்கு அவன் சொன்னான் "அதைப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான்.. அதனால தான் அந்த யோசனையை சொன்னேன்" என்றான். கண்டக்டர்: 😳😳😳

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.