போராட்டத்தின் நிதி நெருக்கடி காலத்தில் கிழக்கு மாகாணத்தைவிட பல மடங்கு அதிகமாக வடக்கில் நிதி அறவீடுகள் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன, வரிகள் விதிக்கப்பட்டன, வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டன, அப்பிளுக்கு கூட வரி விதிக்கப்பட்டது, அதனால் பலர் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளானார்கள், இதில் மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை.
இந்த நிதி அறவீட்டில் வசதியுள்ள மாவீரர் குடும்பங்களும் தப்பவில்லை. அதற்கு உதாரணமாக ஒரே குடும்பத்தில் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்து மாவீரர்களான ஜேம்ஸ் , வாசு, சுந்தரி குடும்பமும் அடக்கம்.
போராளிகள் சுயமாக நிதி வசூலிப்பில் ஈடுபடுவதில்லை, தலைமைபீடம், தளபதிகளின் கட்டளைப்படியே செயல்பட்டிருக்கிறார்கள், அக்காலத்தில் மட்டு அம்பாறை தளபதியாக இருந்த கருணாவின் மீது இந்த நிதி வசூலிப்பு தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தலைமைப்பீடத்தின் உத்தரவுப்படி கருணா செயற்பட்டார் என்று சடைந்து விடாதீர்கள், தலைமைப்பீட உத்தரவுப்படிதான் அவர் காலம் முழுவதும் செயற்பட்டார் என்றிருந்தால் போராளிகளையே வடக்கு கிழக்கு என்று பிரித்திருக்கமாட்டார்.
ஒரு ஆயுத போராட்ட போர் காலத்தில் தவறுகள் இல்லாமல் எதுவுமே ,எங்குமே அனைவரின் விருப்பப்படியே எல்லாம் நடந்தது என்று உலகின் ஒரு மூலையில்கூட நீங்கள் உதாரணம் காட்ட முடியாது.
வசூலித்த விதங்கள் தவறுதான், ஆனால் வசூலித்த பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? பயன் படுத்தப்பட்டிருந்தால், உலகிலேயே வசதியானவர்கள் வரிசையில் புலிகளின் அமைப்பும் சிங்களவனுக்கு கால் கழுவியபடி இன்று உயிருடன் இருந்திருக்கும்.
போராளியை கம்பியால் குத்தி உயிர் ஊசலாட ஜீப்பில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே சேர்ந்து ஜெயவேவா என்று கோஷம்போட்டு மகிழ்ந்து ஆரவாரித்ததா? கேட்கும்போதே புல்லரிக்கிறது,
சரி ஊர் ஊராக சுற்றி வளைத்து கொத்து கொத்தாக எம்மக்களை சிங்களவன் கொன்று குவித்தபோது என்ன சொல்லி ஆரவாரித்தார்கள்? கண்கண்ட சாட்சியான நீங்கள் இதையும் கண்டிருக்க வாய்ப்புண்டு அதனால் கேக்கிறேன்.
கப்பம் வசூலித்த போராளி கிழக்கில் எத்தனை பங்களாக்கள் கட்டியுள்ளார் என்று ஏதாவது தகவல்கள் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் பகிர்ந்து கொள்ளூங்கள் அதுவும் உங்கள் சாட்சிகளில் ஒன்றாய் அமையும்.
ஜேவிபி ஆயுத போராட்டத்தின்போது மிக குறுகிய காலத்தில் வகை தொகையின்றி சிங்கள இளைஞர்கள், அவர்கள் குடும்பங்கள் வகை தொகையின்றி இலங்கை பாதுகாப்பு படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர்,
ஆனால் எந்த சிங்களவனும் புலிகளால் இலங்கை ராணுவம் கொன்று குவிக்கப்பட்டபோது, தமிழில் வெற்றி வெற்றி என்று முழங்கவில்லை, மாறாய் இலங்கையின் ஆளும்கட்சிகளைவிட ஜேவிபியே தமது ராணுவத்தின் பக்கம் உறுதியாக நின்றது, காரணம் ஒன்றேதான், போராட்டகாலத்தில் தவறுகள் இருக்கத்தான் செய்யும் ஆனால் எமது இனம் எமது ராணுவம் என்ற ஒன்றை அவர்கள் எதற்காகவும் விட்டுகொடுக்க தயாரில்லை, சொல்லபோனால் தன்மானத்தில் சிங்களவன் நம்மைவிட சிறிது உயரம் அதிகம்தான்.
நிதி அறவீட்டில் அவர்களின் பொறுப்பாளர்கள் சொன்னதை தவறானமுறையில் அணுகிய போராளி செய்தது குற்றமே. அதேநேரம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட என்று போனவன் தோலை உரித்து லாண்ட்மாஸ்டரில் கட்டி இழுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மிக சிறந்த பழிவாங்கல் என்றால் , அவ்வாறான இனமான போராளிகளின் சாவில் மகிழ்கிறவர்கள், புலிகளால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, ராணுவத்தால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, இனவிடுதலைபோராட்டத்தை நேசித்த மக்கள் , மிக சிறந்த பழிவாங்கல் என்றே எடுத்துக்கொள்வார்கள்.
அதுதான் கடந்தகால வரலாறு, அதை புலிகள் பொதுமக்களை கொன்றார்கள் என்று தாம் செய்த தவறை வெளியே சொல்லாமல் சாயம் பூசி இன்றுவரை மறைப்பவர்கள் பலர்.
புலி போராளிகள் கொல்லப்பட்டது சிறப்பான சம்பவம் என்று ரோஷமுள்ள மக்கள் சொல்வதில்லை என்பதற்கு முற்றுமுழுதான ராணுவகட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு வருஷம் வருஷம் மாவீரர்நாள் அனுஷ்டிக்கும் பல லட்சம் மக்களே அதற்கு சாட்சி.
அதுபோதும் நம்மை விட்டு சென்றவர்கள் தவறுகள் செய்திருந்தாலும் சரியான ஒரு இலட்சியத்திற்கு போராடியபோதே ஒரு சில தவறுகளும் இழைத்தார்கள் என்று சாட்சி சொல்ல,