Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    2958
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46793
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3061
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/27/24 in Posts

  1. இப்ப அர்ச்சனா எண்ட பொறுத்த காய்ட்ட மாட்டுப்பட்டு இருக்கினம்...😂 70 வருசமாய் அவிச்ச பருப்புகள் இனி அவியாது எண்டு நினைக்கிறன்.😁
  2. சொல்வது முழுக்க உருட்டும் பிரட்டும். இத்திணைக்களத்தில் வேலை செய்யும் உறவினருடன் பேசிய போது திட்டத்தை தற்காலிகமாக அமல் படுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் சிறிதரன் தான் முட்டுக்கட்டையாக உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
  3. மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி அங்கே போனதும், குழந்தைபிள்ளைபோல் எதிர்கட்சி சிங்களவன் கதிரையில் குந்தபோயி அவங்களோட புடுங்குபட்டதும், தேவையற்ற முறையில் தலைவரையும் போராளிகளையும் இழுத்து பேசியும் சிங்களவனுக்கு பேட்டிகள் கொடுத்தும் எந்த திட்டங்களும் ஆரம்பிக்காமலே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியதும், இவருக்கெல்லாம் எதுக்கு அரசியல், வாக்குப்போட்ட மக்களின் கோபத்தை சம்பாதிக்கபோகிறார், இவரெல்லாம் பாராளுமன்றத்துக்கு போனதே தவறு என்று பதிவிட்டதுண்டு, விசனப்பட்டதுண்டு. ஆனால் வெள்ளநிலவரத்தில் வீடுவீடாக சென்று பார்வையிட்டதும், தெருவில் நின்று போராடிய வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்து குறை கேட்டதும் அவர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்ததும், இப்போது மருத்துவ பணியாளர்களுக்கு ஆதரவா அவர்களை கொழும்புவரை அழைத்து சென்று நீதி கேட்டதும் மெச்சத்தக்க விஷயங்கள். அப்படியே முன்னாள் போராளிகள் நிலவரம் பற்றியும் கவனம் எடுங்கள் மாறிவரும் உங்கள் போக்கு மிகவும் சிறப்பாக அமையும். அப்படியே எது பேசினாலும் பத்துவினாடி யோசித்துவிட்டு பேசுங்கள், அர்த்தமற்ற ஆக்ரோசங்கள், ஆக்கபூர்வமாக அமையாது கோமாளிதனமாக மாறிவிடும். தவறு செய்யும்போது தவறென்று சுட்டிக்காட்டுவதும், சரியாக செயல்படும்போது பாராட்டுவதும், மீண்டும் தவறு செய்யும்போது மறுபடியும் திட்டுவதுமே உண்மையான விமர்சனம், இல்லாமல் ஒரு பக்கம் மட்டுமே சார்ந்த கருத்துக்கள் என்றால் அது விமர்சனம் அல்ல காழ்ப்புணர்ச்சி என்றாகிவிடும். மருத்துவ தொண்டர் பணியாளர்கள் விடையத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் மகிழ்ச்சியானதே. பெரும்பாலும் பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வறுமை, குடும்ப சுமை, வயிற்று பசி என்பவற்றுடன் எவ்வளவு தூரம் போராடுவார்களென்பது யாரும் சொல்லி யாரும் அறியவேண்டியதில்லை, அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறு ஒளியை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உண்மையாகவே இவரால் ஏற்படுத்தி கொடுக்க முடியுமென்றால் அது என்ன நடக்க போகிறதென்று பார்க்காமலே ஏகப்பட்ட விசனங்கள் தெரிவிப்பது முறையல்ல. அது உதவும் உறவுகளுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையிலுள்ள தகராறு, நாம் எதுக்கு முண்டியடிக்கணும்? புலம்பெயர் உறவுகளிடம் காசுவாங்கி பொதுமக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி ஒன்றுக்கு இரண்டு மூன்று வீடுகளும், கார்,அயல்நாட்டு பயணங்கள் உயர்தர பைக்குகள் என்று கொடிகட்டி பறக்கும் யூடியூபர்களுடன் ஒப்பிடும்போது அர்ச்சுனா அப்படியொன்றும் பெரிய தப்பான காரியங்களில் இறங்குவதாய் தெரியவில்லை. மக்களிடம் வாக்கை வாங்கிக்கொண்டு மக்கள் பணியாற்றவில்லையென்றே முன்பிருந்த தமிழரசியல்வாதிகளை திட்டி தீர்த்து வீட்டுக்கு துரத்தினோம், இப்போ மக்கள் பிரச்சனைகளில் கரிசனம் காண்பிப்பவர்களையும் திட்டினால், குழப்பம் அவர்களிடமில்லை, நம்மிடம்தான்.
  4. பதுனோராவதாக, சிறீதரனுக்கும் ‘பார்’ சிபாரிசுக்கும் தொடர்பில்லை என்பதையும் சேர்ததுக் கொள்ளலாம். முதல் பத்தும் சின்னவயதிலே நம்பிய பொய்கள்.
  5. நான் ஊரில் இருக்கிறன்.. கீரக்கடைக்கும் எதிர்க்கடை வேணும்.. பூனைக்கு யார் மணிகட்டுவாங்கள் எண்டு இவ்வளவு நாளும் சனம் இருந்திச்சு.. நாங்கள் மட்டும் இல்லை எங்கட ஊரே இப்போதைக்கு அர்ச்சுனாவுக்குத்தான் வோட் போடுவம் வேறு இன்னும் புதிதாக யாரும் வரும் வரைக்கும்.. ஒருபோதும் பழைய தமிழ்கட்சிகளுக்கு இனி வோட் போட போவதில்லை.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதை விளங்கிக் கொள்ளமுடியாது.. நாங்கள் ஒவ்வொரு திணைக்களத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் போகும்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சொல்லி மாளாது..அரச உத்தியோகத்துக்கு எடுபட்டாலே நிரந்தரம், இனி நான் நினைச்சதுதான், என்னை யார் கேள்வி கேட்டாலும் எனக்கு வேலை போகாது எண்ட திமிர் இருந்தது.. அதால நாங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் கேள்வி கேட்டாலும் எடுபடாது.. செவிடன் காதில் ஊதின சங்குதான்.. ஆனா இப்ப ஒருத்தன் நாங்கள் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் அதிகாரத்தில் இருந்து கொண்டு கேக்கும்பொழுது வரும் சந்தோசம் இருக்கே.. அர்ச்சனா என்ன விசர்க்கூத்து ஆடினாலும் பார்சிறி போன்ற நரியன்களை எதிர்த்து கேள்வி கேட்டு அவங்களின் முகத்திரையை கிளிப்பதும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் திருடர்களை கேள்வி கேட்பதும் அந்த கேள்விகள் ஊடகங்களில் பேசுபொருள் ஆகி வருவதும் மக்களை சென்றடைவதும் மிகப்பெரிய ஒரு மாற்றம்.. தமிழ் தேசிய தமிழ் எம்பிக்களும் தங்களைவிட்டால் தமிழ் மக்கள் ஓட் போட வேறு கட்சிகள் இல்லை என்ற நிலைமையும் இல்லாமல் போவதும் வரவேற்கப்படவேண்டிய விடயம்.. இவற்றுக்கு அர்ச்சுனா ஒரு முதல்க்கல்லாக இருக்கட்டும்..
  6. நத்தார் பரிசு யேர்மனிய மொழி பேசும் நாடுகளில் "கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் டிசம்பர் 24 மாலை ஆரம்பமாகின்றது. பெரும்பாலான குடும்பங்களில் "பரிசு வழங்குதல்" மாலை 5 முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு நித்திரைக்குப் போன ஒரு பெண்மணி நடு இரவில் விழித்துக் கொண்டார். யேர்மனி ரோசன்ஹைம் (Rosenheim) நகரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முடிந்து இரவு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண்மணிக்கு (47) நடு இரவில் விழிப்பு ஏறப்பட்டது. வீட்டின் கதவை உதைத்து, உடைத்து யாரோ உள்நுளையும் அரவமும் கேட்டது. படுக்கையில் இருந்து எழுந்த பெண்மணி பின் கதவால் வீதிக்கு ஓடி வந்து பொலீஸுக்கு அழைப்பை எடுத்து விடயத்தைச் சொன்னார். பொலிஸார் வரும்வரை அந்தப் பெண் தனது வீட்டின் முன் தெருவிலேயே குளிருக்கு நடுங்கியபடி காத்திருந்தார், அவரது கூற்றுப்படி, குற்றவாளி இன்னும் கட்டிடத்தினுள் இருக்கின்றார் எனப் புரிந்து கொண்ட பொலிஸார், வீட்டுக்குள்ளே தேடுதலை மேற் கொண்டார்கள். அங்கே அமைதியாக ஆழ்ந்த நித்திரையில் ஒரு இளைஞன் (19) படுத்திருந்தான். பொலிஸார் அந்த இளைஞனை எழுப்பிய போது, “இந்த நேரத்தில் என் வீட்டில் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டான். அவனைப் பொலிஸார் பரிசோதித்த போது அவன் நன்றாகக் குடித்திருக்கின்றான் என்பது தெரிய வந்தது. ஆக, அவன் ரோசன்ஹைம் நகரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் நன்றாகக் குடித்து விட்டு தனது வீடு எது என்று தெரியாமல் இங்கே வந்திருக்கின்றான் என்பதைப் பொலிஸார் புரிந்து கொண்டனர். “இது உனது வீடு இல்லை” என அவனை அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ‘செல்’லில் படுக்க வைத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து விட்டேன் என்ற நினைப்புடன் அவன் மீண்டும் நித்திரையாகி இருப்பான். விடிந்த பின்தான் அவனுக்குத் தெரியவந்திருக்கும், ஒரு அந்நியன் வீட்டின் கதவை உடைத்து அத்துமீறி உள் நுளைந்ததற்காக ஒரு வழக்கு தனக்காகக் காத்திருக்கின்றது என்பது. அது அவனுக்கு மறக்க முடியாத கிறிஸ்மஸ் பரிசாகவும் இருக்கும்.
  7. ஒருவரியில் வரவேண்டிய செய்தி வீரகேசரி படிப்பவர் எண்ணிக்கை குறைவு செய்தியைநீட்டிப்பதில் அவர்களின் வறுமை தெரிகிறது . ஒத்தை வரி செய்திகள் என்ற திரியை திறக்கலாமா என்ற யோசனை உள்ளது காலையில் எழுந்ததும் நான்கு தளம்களுக்கு விசிட் பண்ணி இப்படி நேரத்தை விழுங்கும் செய்திகளை படிச்சு நொந்து போவதை தவிர்க்கலாம் .
  8. சிரிப்போம் சிறப்போம் என்று வந்தால் சினக்கிறீங்களே? வாய் விட்டுச் சிரியுங்கள் நோய் விட்டுப் போகும். இதில் எனக்குச் சற்றுக் குழப்பமாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்றுதான் இவ்வளவு காலமும் நம்பி ஆறுதலடைந்திருந்தேன்.
  9. * சிறுவயதில் எல்லாக் கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நம்பியிருக்கின்றேன். பதின்ம வயதுகளில் ஒரு கடவுளும் இல்லை என்று முடிவெடுத்தேன். இப்பொழுது எல்லாக் கடவுள்களும் எங்கே போய் விட்டார்கள் என்று தேடுகின்றேன். * பூமி அப்படியே நடுவில் நிற்கின்றது என்று சிறுவயதில் நம்பினேன். பூமி சுற்றுகின்றது, சூரியன் நடுவில் அப்படியே நிற்கின்றது என்று பதின்ம வயதுகளில் சொல்லித் தந்ததை அப்படியே நம்பினேன். எல்லாமும், எங்களின் சூரியன் உட்பட, கண் மண் தெரியாத ஒரு வேகத்தில் அண்டவெளியில் இழுபட்டுப் போகின்றன என்று இன்றைய அறிவியல் சொல்வதை இப்பொழுது நம்புகின்றேன். * சினிமாக் கதாநாயகர்கள் எல்லோரும் நிஜத்திலும் நாயகர்களே என்று நம்பினேன். எம்ஜிஆர் மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று நம்பியிருக்கின்றேன். ஒன்றும் மாணிக்கம் கிடையாது, எல்லாமுமே கரிக்கட்டிகள் தான் என்று இன்று வாழ்க்கை போகின்றது. * சிங்கள மக்கள் பொல்லாதவர்கள் என்று சிறுவயதில் நம்பியிருக்கின்றேன். சிங்கள மக்கள் மட்டும் அல்ல, இங்கு எல்லா மக்களும் ஒன்றே என்று உலகம் தெரிய தெரியவந்தது. * அரிசிச் சோற்றில் தான் ஆரோக்கியம் இருக்கின்றது என்று நம்பியிருக்கின்றேன். இன்று அதில் ஆரோக்கியம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், அதுவே தேவை, போதும் என்று ஆகிவிட்டது. * எந்தக் கடலையும் நீத்திக் கடக்கலாம் என்று அன்று நம்பியிருக்கின்றேன். என்னை சுருட்டி அடித்த ஒரு அலையின் பின், நான் மட்டும் இல்லை, இங்கு எல்லா மனிதர்களும் இயற்கையின் முன் ஒரு தூசி என்று தெரிந்தது. * பேய்கள் என்று நம்பிப் பயந்திருக்கின்றேன். இன்று பேய்கள் இல்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும், அந்தப் பயத்தில் கொஞ்சம் இன்னும் உள்ளே ஒட்டியிருக்கின்றது. * வயது போனாலும் என்னுடைய வயதான அப்பா, அம்மா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி போல நான் இருக்கமாட்டேன் என்று நம்பியிருக்கின்றேன். இப்பொழுது கண்ணாடியில் பார்க்கும் போது அவர்களே தெரிகின்றார்கள்.............🤣.
  10. பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் பாவம் செய்தால் சித்திரகுப்தனால் எண்ணேய் சட்டியில் வைத்து வறுக்கப்படுவீர்கள் அம்மா சத்தியம் செய்து பொய் சொன்னால், அம்மா இறந்து விடுவார் சரஸ்வதி பூசை செய்தால் படிப்பு நல்லா வரும் சோதனைக்கு முன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி கொளுத்தினால் சோதனை பாஸ் செய்யலாம் வலம்புரிச் சங்கை காதில் வைத்து கேட்டால் அதன் மூச்சு சத்தம் எப்பவும் கேட்கும் இது பொய் என்று எப்ப எப்படி கண்டு பிடிச்சீர்கள்?
  11. ஓம்.இதில் வாழ்க்கை துணைவியின் பங்கு மிக மிக முக்கியம். அத்துடன் அந்தப் பெண்... சாதுரியமான, புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லையேல்... குடும்பமே நரகம்தான். இரண்டிற்கும்... நம் சமூகத்தில் நிறைய உதாரணங்கள் உள்ளன.
  12. இதையும் நம்பலாம் தான்.ஆனால் நான் இப்ப சின்ன வயதில் இல்லை.😂
  13. இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு - அமைச்சர் சந்திரசேகர் Published By: Digital Desk 7 27 Dec, 2024 | 02:16 PM இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான விடயங்கள் பேசப்படும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் உள்ளமை கவலையளிக்கிறது. நாங்கள் எதிர்காலம் தொடர்பில் திட்டமிடல்களை தயாரிக்க வேண்டும். அவ்வாறான திட்டமிடல்கள் மூலமே முன்னேற்றங்களை உண்டு பண்ணலாம். சுகாதாரம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் அத்தோடு, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இம்முறை கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அத்தோடு,கிடைக்கவுள்ள பாரிய நிதி மூலம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறான குறைபாடுகளை அடையாளம் கண்டு அதனை தீர்க்கும் திட்டங்களை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/202283
  14. என்னதான் தேர்தலுக்காக நிமிர்வுகாட்டி வாக்குக்கொடுத்து, வாக்கு வேண்டிப் பதவியைப் பிடித்தாலும் யதார்த்தமென்று ஒன்று இருக்கிறதல்லவா? அதனைக் கடந்துபோக முடியாது. பெரும் வல்லரசுகள் முதல் எண்ணெய்வளம் உள்ள நாடுகளே தடுமாறிநிற்க, சுயபொருண்மியத் திரட்டுகளற்றுக் கடனிலும், சுற்றுலாத்துறையிலும் தங்குபொருளாதாரத்தில் நிற்கும் இலங்கைத்தீவை ஆள்வது அவளவு இலகுவல்ல. என்று இவர்கள் ஒரு தெளிவான அரசியல் கொள்கையை முன்வைத்து நகர்கிறார்களோ அன்றுதான் உண்மையான வளர்ச்சியைக் காணமுடியும். அதுவரை இப்படிக் கையேந்தியநிலையே தொடரும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. Donald Trump ன் நகைச்சுவைக்கு அளவில்லை. ஆனாலும் காரணங்கள் இல்லாமல் இல்லை. உலகில் தனக்குத் தேவையான கனிம வளங்கள் தீர்ந்து போனாலோ அல்லது தனக்குத் தேவையான கனிம வளங்களை அடைய முடியாமல் போனாலோ அமெரிக்காவிற்கு இருக்கும் இறுதித் தெரிவுகளில் சிலவற்றில் கனேடிய வளங்களை தனது தேவைக்கு பலப் பிரயோகம் மூலம் அடைதல் என்பதும் ஒன்று. அந்தப் பலப் பிரயோகம் வட அமெரிக்கா மட்டுமல்ல தென்னமெரிக்க வரைக்கும் நீழும் என்பது ஏற்கனவே பலராலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதற்காகத்தான் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை எப்போதும் பலவீனமான நிலையில் வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. Trump ன் மென் நகைச்சுவை அதைத்தான் சுட்டி நிற்கிறது. அதற்காக Trum ன் நகைச்சுவையைக் கேட்டவுடன் கிறீன்லன்ட் ரின் பாதுகாப்பை டென்மார்க் அதிகரிக்கிறது என்பது Trump ன் நகைச்சுவையைவிட சற்று அதிகமான நகைச்சுவை.
  16. மிகமிக கஸ்டமான ஒரு பணியை அதுவும் ஆங்கிலத்தில் உள்ளதை மொழிபெயர்த்து எழுதி முடிப்பது சாத்தியமான வேலை இல்லை. எப்படி செய்து முடித்தீர்கள் என்று மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி கலந்த பாராட்டுக்கள்.
  17. 🤣.................... சைனா ஒரு கெட்டபயல்............... எல்லாவற்றையும் செய்து தானே வைத்துக்கொள்ளும் ஒரு நாடு......... ஈரானுக்கு நாலு, ரஷ்யாவிற்கு நாலு, சிரியாவிற்கு நாலு என்று கொடுத்தால், இஸ்ரேலையும் உக்ரேனையும் தூள்தூளாக்கியிருக்கலாமே............... அமெரிக்கா தன் அணுகுண்டையே இஸ்ரேலிற்கு கொடுக்க, அதை இஸ்ரேல் சிரியாவில் போட்டிருக்கின்றார்களாம்.............. பாலகிருஷ்ணா ஓடுகின்ற புகைவண்டியை ஒற்றைக் கையால் நிற்பாட்டியது, பறக்கிற விமானத்தை கைதட்டியே விழுத்தினது எல்லாம் ஒன்றுமே இல்லை இன்றைய சில ஊடகங்களுடன் ஒப்பிடுகையில்.........
  18. இலங்கையிலை முந்தியெல்லாம் பெரிய, குட்டிக் குட்டி தமிழின அழிப்புகள் நடக்கிறது எல்லாரும் அறிஞ்சிருப்பியள் தானே! அப்ப நான் சின்னனாய் இருக்கேக்க ஒரு இன அழிப்பும் நடந்தது. அந்த நேரம் நாங்கள் பள்ளிக்கூட மைதானத்திலை விளையாடிக்கொண்டிருக்கேக்கை ஆகாயத்திலை ஒரு பிளேன் போய்க்கொண்டிருந்தது.அப்ப கூட நிண்ட ஒருத்தன் கேட்டான் உந்த பிளேன் எங்கையடா போகுது எண்டு.....அதுக்கு இன்னோருத்தன் சொன்னான் அடேய் உதிலை கலைஞர் கருணாநிதி கொழும்புக்கு போறார். அங்கை போய் சிங்களவரை வெருட்டி தமிழர் பிரச்சனையை தீர்ப்பார் எண்டு.... அந்த இரண்டு பேர் கதைச்சதை கேட்டு உண்மை எண்டு நம்பினவன் தான் இந்த குமாரசாமி😟
  19. முன்பெல்லாம் ஊடகவியலாளர்களால் செய்திகள் தயாரிக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டு வெளிவந்தன. தற்காலம் ஊதகவியலாளர்களால் செய்தியிடப்படுவதால் வந்த வினை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  20. தமிழருக்குள் கொம்புசீவுவதில் வேகமாகச் செயற்படும் ஊடகங்கள், ஏன் மக்களது பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக அணுகி விளக்குவதில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  21. 🤣.................. மனித வாழ்வில் மூன்று விசயங்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாதவை போல, விசுகு ஐயா - அறிவு, படிப்பு, லூசுத்தனம்...................😜. ஆறு முறைகள் தன்னை அடிப்பேன் என்று சொல்லிவிட்டு எட்டு முறைகள் அடித்தும் விட்டார்......... அண்ணாமலையாருக்கு கணக்கு வேற மட்டுப் போல............🤣. அந்த சவுக்கடியை ஆறு அடிகளுடன் ஓடி வந்து தடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்ட நபர் தான், வேண்டும் என்றே எட்டு அடிகள் வரை விட்டுப் பார்த்தாரோ தெரியவில்லை...........🤣.
  22. எல்லாத் துறைக்கும் சரிவராது. நாங்கள் மட்டக்கிளப்பில் பார்த்தோம். மன்னாரில், அந்த பிரசவித்து, சில நாளில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் இறப்பைப் கண்டோம் - அகிலும் தாதி நிலைமையின் அவசரத்தை, விபரீதத்தை உணரவில்லை என்பதே. இதை வெளியில் தெரிந்தவை. அப்போது ஏன் (மருத்துவ துறை), தாதி துறை என்று விழுந்து, விழுந்து படிக்கச் வேண்டும் முதலில், பின் அதை அடிப்படையாக வைத்து பயிற்சி எடுக்க வேண்டும். கனக்க வேண்டாம். நீங்கள் சொல்லுவது போல பயிற்சி எடுத்தார்களா? அனால், தொழில்முனில்லையாக பயிற்றுவிக்கப்படும் தாதி பயிற்சியில் அதில் உள்ள நுணுக்கங்களை அறியாது நீங்கள் சொல்வது. அதில் உண்மையில் அவர்கள் பகுதி நேரம் படிப்பு, பின் படித்தது எவ்வாறு யதார்த்த மருத்துவ நிலைமைகளில் பாவிக்கப்படுகிறது என்பதெல்லாம் பயிற்சி. எல்லாம் பரீட்சைக்கு உட்படும் - எழுத்து, வாய்மொழி என்று எல்லா முறையிலும். குறிப்பாக கட்டமைக்கப்பட்ட கற்கை நெறி வழியே அளிக்கப்படும் பயிற்சி. ஒரு nurse ஆக பணி புரிவதற்கு license தேவை. எந்த முறையில் படித்தாலும்.. உங்கள் தங்கை செய்த நீங்கள் சொல்லும் பயிற்சி - nurse ஆக register செய்வதத்தில் உரிய தகமை என்று எடுத்துக்கொள்ளப்பட்டதா? (10ம் வகுப்பில் வகுப்பில் இருந்து தாதி துறை பயிற்சி , இது எங்கு நடக்கிறது என்று சொல்ல முடியுமா, ஐரோப்பாவில்?) மனித உயிர்களை கையாளுவதை, வேறு தொழில்நுட்ப பயிற்சியுடன் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள் நான் இதை சொல்ல வேண்டும் என்று இல்லை.
  23. அல்வாயன்... எமது சிறிய வயது கற்பனைகளை இப்போ நினைத்துப் பார்க்க பிரமிப்பாக உள்ளது. விபரிக்க முடியாத ஏதோ ஒரு சக்தி, எம்மை வழிகாட்டிக் கொண்டு இருந்ததாகவே நான் கருதுகின்றேன். 🙂
  24. பதினோராவதை கிழட்டு வயசிலயும் நம்புதுகள்..😂
  25. சி.எஸ்.ஜெயராமன் குரலையும், பாலையாவின் நடிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்
  26. மேளம் கொட்டி தாலி கட்டி ........ எம் . ஜி . ஆரின் அபாரமான நடிப்பாற்றல், படம்: புதுமைப் பித்தன் . ..........!
  27. 1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும். 4)பல்லி கத்துனா கெட்ட சகுனம். 5)வானவில் போட்டால் மழை பெய்யாது. 6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம். 7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது. 8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும். 9)படித்தால் வேலை கிடைக்கும். 10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்.....
  28. அது தான் பயிற்சி ......மட்டுமல்ல படிப்பும்கூட. பத்தாவது வகுப்பு படித்து விட்டு தாதிகள்கள் வேலையில. நேரடியாக இணைந்து படிப்படியாக சொல்வதை கேட்டு கேட்டு படிக்கவும் பழகவும். முடியும் இப்படி வேலை செய்பவர்களை படிக்கதாவர்கள் ..என்று எப்படி கூற முடியும் ?? அவர்கள் பார்த்து கேட்டு படித்து உள்ளார்கள் இல்லையா ?? இவர்களுக்கும் ஒரு தொழில்நுட்ப கல்லுரியில். படித்து வேலையில். அமர்பவர்களுக்கும். என்ன வித்தியாசம் உண்டு?? பெரிய வித்தியாசம் இல்லை இல்லையா??? 1975,...1980 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏதாவது வேலைவாய்ப்பு கிடைக்குமா ?? என்று தேடியபடியே இருந்தேன் அந்த நேரத்தில் என்னிடத்தில் செல்வம் செல்வாக்கு இல்லை,...ஒரு நாள் விளம்பரம் தாதி வேலைக்கு விண்ணப்பங்கள் கேட்டிருந்தார்கள் திருநெல்வேலியில் ஒரு புதிய வைத்தியசாலை யாழ்ப்பாணம் தொழில் அதிப்ர் சாமி அன் கோ. உடன் சிலர் சேர்ந்து திறந்தார்கள். எனது தங்கச்சிக்கு கட்டி விண்ணப்பிக்க சொன்னேன் .....தெரிவு செய்யப்பட்டாள். பத்தாவது வகுப்பு உடன் இரண்டு வருடங்களில் கொழும்பில் யூனியன் பிளேஸ். இரத்தினம். வைத்தியசாலையில் இணைத்து வேலை செய்தாள். சகல வேலைகளும். தாதிக்குரிய. சகல வேலைகளும். செய்வாள். இன்று கனடாவில் வன்குவார். நகரில் வயோதிபகள். தங்கும் நேசிங் கேம் இல். வேலை செய்கிறாள். அதுவும் ஒரு வைத்தியசாலை தான் என்பாள்.
  29. "தீர்ப்பு" இந்தியப் பெருங்கடலின் நீலமான அலைகள் மற்றும் இலங்கையின் செழிப்பான பசுமைக்கு மத்தியில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரமான காலியில், பிரகாசமான கண்களை தன்னகத்தே கொண்ட லோசனி என்ற இளம் பெண்ணும் மற்றும் இரக்கமும் அழகுமுடைய அன்பழகன் என்ற வாலிபனும் ஆழமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், அவர்களின் காதல் குளிரான கடற்கரை காற்றில், நிலாவின் மங்கலான ஒளியில், பண்டைய காலி கோட்டையின் எதிரொலிக்கும் சுவர்களுக்குள் மலர்ந்தது. லோசனி ஒரு சிங்கள பெண், அவளது சிரிப்பு பாறைக் கரையில் மோதும் அலைகளைப் போல இனிமையாக இருக்கும். அதில் சிலைத்து சிதைந்து விழுந்தவன் தான் தமிழ் வாலிபன் அன்பழகன். அவளது மழலை பேச்சும், வெண்ணிற வானில் கருநிற நிலவாய் எட்டு திசையும் அசைந்து கவரும் அவளது மையிட்ட கண்களும், பட்டம்பூச்சியின் சிறகுகள் போல கண்ணிமைகள் படபடத்து அவனை அழைக்க, அவனது நெஞ்சம் தன்னை அவளிடம் பறிகொடுத்தது ஒன்றும் புதுமை இல்லை. அமைதியான அவனின் இதயத்தில் இதமான தேவதையாக அவள் குடியேறினாள். பல மாதங்களாக, அவர்களின் காதல் இன எல்லைகளைத் தாண்டி, வளமாக வளர்ந்து வந்தது. ஆனால், சூரியன் மேற்கில் மறைவது போல, நீண்ட நிழல்களை வீசுவது போல, அவர்களின் வாழ்க்கையின் மீது இருண்ட நிழலைப் போடும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் ஆழமான இன வெறியை கக்கும் பதட்டங்களைத் தூண்டியது. திடீரென்று, அவர்களின் காதல் கதை அரசியல் முரண்பாடு மற்றும் சமூக அமைதியின்மையின் சூறாவளியில் சிக்கியது. உண்மையில் பக்க சார்பு அற்று தீர்வைத் தருவது - தீர்ப்பு! பொதுவாக ஒரு பிரச்சினை, சிக்கல் முதலியவற்றை தீர்க்கும் வகையில் அதனை ஆராய்ந்து - முடிவு காணும் வகையில் அமையும் நீதியான வழிமுறை - தீர்ப்பு!! என்றாலும் "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" என்ற 1983 இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனாவின் தீர்ப்பு அதற்கு முரணாக ஏற்கனவே எரியும் நிலக்கரியில், இரும்பு காலணிகள் கொண்டு வரப்பட்டு, அவற்றை இடுக்கிகளால் பிடித்து, சிவப்பு-சூடான காலணிகளை தமிழருக்கு முன்னால் வைக்கப்பட்டது போல அது மாறி விட்டது. உயர் வல்லமையான ஜனாதிபதியின் இந்த தீர்ப்பு இப்படி இருக்கும் பட்சத்தில், மற்ற அரச இயந்திரங்களின் செயல்கள், தீர்ப்புக்கள் எப்படி இருந்து இருக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை. ஒரு காலத்தில் துடிப்பான நகரம் இப்போது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல பிரிக்கப்பட்டுள்ளது. சிங்களக் கலாச்சாரத்தில் வேரூன்றிய லோசனியின் குடும்பம், அன்பழகனுடனான தங்கள் மகளின் உறவைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தார்கள். அன்பழகனின் குடும்பமும் அதே போல தங்கள் மகனின் பாதுகாப்புக்கு பயந்து, லோசனியிடமிருந்து தூர விலக்குமாறு வற்புறுத்தினார்கள். கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், எந்த குழப்பமும் தங்கள் காதலை வரையறுக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். "சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி. " பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும்,பெண்மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. இப்படித்தான் அவர்களின் அன்பு இருந்தது. அங்கு நாம் மனிதர், நாம் இலங்கையர் என்ற ஒரு எண்ணமே ஓங்கி இருந்தது. ஆனால் இனங்களுக்கு இடையான பிரிவுகள் ஆழமாக வளர, கஷ்டங்களும் அதிகரித்தன. நண்பர்கள் எதிரிகளாகவும், சந்தைகள் போர்க் களங்களாகவும் மாறத் தொடங்கின. இதனால் அவர்களின் காதல் கூட இலக்காக மாறியது. இந்த சுழலில் சிக்கிய, லோசனியும் அன்பழகனும் ஒருவருக்கொருவர் என்ன செய்வது என்று, ஆளுக்கு ஆள் ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டாலும், அது அவர்களின் கையில் இருந்து விலகுவதை உணராமலும் இருக்கவில்லை. எனினும் தங்கள் காதல் பிளவுகளைக் குறைக்கக்கூடிய ஒரு எதிர்காலத்தை அவர்கள் கனவு கண்டார்கள், அங்கே தங்கள் குழந்தைகள் ஒரு ஐக்கிய நாட்டில் வளரும் என்று நம்பினார்கள். எது என்னவாகியினும் ஒரு இனவாத அரசியல் தலைவரின் தலைமையில் பொய் வதந்திகளால் உந்தப்பட்டு, அதனால் கோபத்தாலும் தப்பெண்ணத்தாலும் ஒரு கும்பல் அன்பழகனின் குடும்பத்தாரின் வீட்டைத் தாக்கிய ஒரு மோசமான நிகழ்வு ஒருநாள் வந்தது. அவர்களின் வீட்டைச் சூழ்ந்த தீப்பிழம்புகள் அவர்களின் கனவுகளை எரித்த நெருப்பாகியது. அன்பழகன் தன் உயிருடன், ஆனால் எரிகாயங்களுடன் தப்பித்துக்கொண்டான், லோசனி உடைந்து போனாள், அன்பழகனின் மீதான காதலுக்கும் அவள் குடும்பத்தின் மீதான பொறுப்புக்கும் இடையே அவளது இதயம் துண்டு துண்டாக கிழிந்தது. 1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக, அரசின் தீர்ப்பாக கொண்டுவந்து ஆரம்பித்த அரசியல் நாடகம், இன்று பல அரசியல் தீர்ப்புக்களை கடந்தும், உண்மையான இலங்கை மக்களுக்கு முடிவு இன்றி , தீர்ப்பு இன்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சிரிப்பால் எதிரொலித்த தெருக்கள் இப்போது வலி மற்றும் அநீதியின் அழுகையால் எதிரொலிக்கின்றன. பிரிவினைகள் மிகவும் ஆழமாக வளர்கின்றன, மிக அழகான பிணைப்புகள் கூட இன்று உடைகின்றன. அதில் லோசனி, அன்பழகனின் காதல் படகு, காகித படகாக மாறும் நிலைக்கு புறசூழல்கள் அதிகரிக்கக் தொடங்கின. அழிவின் மத்தியில், லோசனியும் அன்பழகனும் ஒரு சந்தியில் எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் தவித்தனர். ஒரு காலத்தில் அவர்களின் பலமாக இருந்த காதல் இப்போது ஒரு இனம் சார்ந்த மாயையில் அகப்படுவதை கண்டனர். கனத்த இதயத்துடன், தங்களைச் சுற்றியுள்ள உலகம் இன்று மிகவும் மாறிவிட்டது என்பதை உணர்ந்தார்கள், பல இனவாத உயர் தலைமைகளால் தீர்ப்பு வழங்கி, இன்று உடைந்த ஐக்கியத்தை, அவர்களின் அன்பால் மட்டுமே சரிசெய்ய முடியாது என்னும் உண்மையை அறிந்து, அவர்கள் பிரிந்து செல்வதற்கான வேதனையான முடிவை எடுத்தார்கள். அது அவர்களின் காதல் பலவீனமடைந்ததால் அல்ல, மாறாக வெறுப்பு மற்றும் தப்பெண்ணத்தின் சக்திகள் வலுவாக பல பல அரசியல் உயர் தலைவர்களின் தீர்ப்புக்களால் வளர்ந்ததால்! அவர்கள் ஒருவரையொருவர் கடைசியாகப் பார்த்தபோது, இன்றைய வெறுப்பு அரசியலின் மீது காதல் வெற்றி பெறும் எதிர்காலம் விரைவில் வரும் என இருவரும் கிசுகிசுத்தனர். லோசனியும் அன்பழகனும் தங்கள் காதலின் நினைவுகளையும், கடந்த கால பாடங்களையும் சுமந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை காலியிலும் யாழ்ப்பாணத்திலும் இன்று நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர். தீர்ப்பின் நிழல்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு நீண்ட மற்றும் இருண்ட காலத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவர்கள் துன்பங்களை எதிர்கொள்வதில் அன்பின் சக்திக்கு ஒரு சான்றாக இருந்தனர். காலப்போக்கில், ஒரு புதிய தலைமுறை தோன்றும், தங்கள் தேசத்தின் கதையை மீண்டும் எழுதும், பிளவுகளை சரிசெய்யும் , கடந்த காலத்தின் கடுமையான தீர்ப்புகளால் காதல் இனி ஒருபோதும் கெட்டுவிடாது என்பதை உறுதிப்படுத்தும் என்பதில் இருவரும் இன்னும் மனம் தளரவில்லை, உறுதியாக இருக்கின்றனர். "நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு" இதில்தான் - லோசனியும் அன்பழகனும் தெற்கிலும் வடக்கிலும் இப்பொழுது இருந்தாலும் - இன்னும் உறுதியாக இருக்கிறார்கள். எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும். அதனால் அதற்கான சாதாரண மக்கள் மட்டத்தில் அதற்கான ஆரம்ப வேலைகளை தொடங்கிவிட்டார்கள். சொல்லின் நடை தெரிந்து ஒருவர் சொல்லவேண்டும் என்று திருக்குறள் தனது பாடல் 712 இல் ஒரு தீர்ப்பு கூறுகிறது "இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்" சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும் என்று வள்ளுவர் தீர்ப்பு கூறுகிறார். ஆனால், அவையை பொறுப்படுத்தாமல், கூறிய ஜனாதிபதியின் கூற்றுதான் கொந்தளிப்புக்கும் வன்முறைக்கும் முக்கிய காரணம் ஆயிற்று! வள்ளுவரின் தீர்ப்பை உணர்ந்து இருந்தால் இன்று இலங்கை ஒரு சிங்கப்பூர்! லோசனி- அன்பழகன் ஒரு குடும்பம்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  30. இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும்? (இனமொன்றின் குரல்) ----------------------------------------------------------------- இரணைமடு குளத்துக்கு கீழ் விவசாயம் செய்யக் கூடிய 42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ளது ஆனால் இதில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச கூடிய நிலை தான் இரணைமடுவில் உள்ளது அதிலும் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டும் தான் சிறுபோகம் செய்ய கூடியதாக உள்ளது இது போதாதென்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை கல்லாறு போன்ற பகுதிகளிலும் கூட குடிநீர் நெருக்கடி தலைவிரித்தாடுகின்றது அதாவது கிளிநொச்சியில் குடிக்க, விவசாயம் செய்ய போதிதண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு போக போவதாக பல ஆண்டுகளாக அரசியல் செய்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இங்கு எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 Km to 15 Km களை தாண்டிய தூரங்களில் இல்லை. அந்த வகையில் 40 வீதத்திற்கு அதிக யாழ்ப்பாண கிணறுகளில் உவர் நீர் கலந்து காணப்படுகின்றன. சுண்ணாம்புத் தட்டுகள் கரைந்து கடலுக்குள் செல்வதால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்குகிறது என்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்ந்தால் யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில்குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள் ஆகவே நன்னீர் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியமானது ஆனால் இதற்கு இரணைமடு நீர் வேண்டும் என யாரும் கேட்கவில்லை இங்கே நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி கிணறு, புன்னாலைக்கட்டுவன் கிணறு, கீரிமலை கேணி, அல்வாய் குளம், கரவெட்டி குளக் கிணறு, ஊறணிப் பகுதி கிணறுகள், யமுனா ஏரி ஆகிய நீர் நிலைகள் ஊடக குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும் அதே போல நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் போதிய உவர் நீர்த் தடுப்பு அணைகள் ஏற்படுத்த பட வேண்டும். நிலக்கீழ் நீரைக் கடலில் சேர்க்கும் குகை வழிகளை அடையாளம் கண்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட் டு தடுக்கின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தின் 1,050 குளங்களும் ஆழமாக்கப்பட்டு புனரமைப்புகளுக்கு உட்படுத்த பட வேண்டும் ஆனால் குளங்களைத் தரைக்கீழ் நீர்ப் பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க அனுமதிக்க கூடாது ஆனையிறவு கடல் நீரேரி, தொண்டைமானாறு கடல் நீரேரி, உப்பாறுஉட்பட்ட நீரேரிகளை நன்னீராக்குகின்ற செயற்திட்டங்கள் மூலம் யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பை அதிகரிக்க முடியும் . அதே போல மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும். பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும். உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும். அதே போல வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் பல நீர் சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் அதே போல யாழ்ப்பாணம் வருடம் ஒன்றுக்கு 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை வீழ்ச்சி பெறுகின்றது இந்த மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் முயல வேண்டும் குறிப்பாக நிலாவரை கிணற்றில் 10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை இருப்பதாக சொல்லுகிறார்கள். ஆகவே மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும் . இதன் மூலம் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்க்கூடியதாக இருக்கும் . இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாசன முறைமைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் மேற்படி விடயங்களை தவிர்த்து விட்டு இரணைமடுவில் தொங்கி கொண்டு இருக்க வேண்டியதில்லை இது போதாதென்று இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது. இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும் யாழ்ப்பாண குடிநீரின் அளவு 50,000 கனமீற்றர்/நாள் என சொல்லப்படுகின்றது இது எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கக்கூடும். இந்நிலையில் நீண்டகாலத்திற்கான தேவையை நிறைவு செய்வதனையும் நிலைத்திருக்கக் கூடியதான நீர் முறைமை திட்டங்களை உருவாக்க வேண்டும் நீர் தேவையை முகமூடியாக வைத்து கொண்டு NGO களுக்காக அரசியல் செய்ய வேண்டியதில்லை . ஒரு முகநூல் பதிவு: https://www.facebook.com/share/1B9T1RHr9B/
  31. சொல்லில், செயலில் பொறுமையும் நிதானமும் மரியாதையும் வேண்டும் அர்ச்சுனாவுக்கு. அப்போ கள்வரை மிக இலகுவாக கையாளலாம். இல்லையேல்; அர்ச்சுனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி பொறுமையிழக்கச்செய்து தப்பித்து விடுவார்கள் ஊழல்வாதிகள்.
  32. Published By: DIGITAL DESK 7 17 DEC, 2024 | 10:28 AM டி.பி.எஸ். ஜெயராஜ் கடந்த வாரம் பாராளுமன்ற சபாநாயகர் அசோகா சப்புமால் ரண்வலவை பதவியில் இருந்து விலகவைத்த அவரது உயர்கல்வித் தகைமைகள் தொடர்பான சர்ச்சை விடுதலை புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் தொடர்பிலான இதே போன்ற முன்னைய சர்ச்சை ஒன்றை நினைவுபடுத்துகிறது. ஊடகங்களில் அடிக்கடி கலாநிதி பாலசிங்கம் என்று குறிப்பிடப்பட்ட விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் பற்றியதே அந்த குழப்பமாகும். விடுதலை புலிகளுக்கு எதிரான இயக்கங்களின் உறுப்பினர்கள் பாலசிங்கம் ஒரு கலாநிதி அல்ல என்று பரவலாக மறுதலித்தனர். பாலசிங்கம் ஒருபோதுமே கலாநிதி பட்டத்தை பெறவில்லை என்றும் அதனால் அவர் ஒரு " பாசாங்கு கலாநிதி " என்றும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் நடந்தது இதுதான். இளம் பராயத்தில் ஏ.பி.ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்ட பாலசிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்று கலைமாணி ( B.A. degree ) பட்டம் பெற்றவர்.பிறகு பிரிட்டனுக்கு சென்ற பாலசிங்கம் சவுத்பாங்க் லண்டன் பொலிரெக்னிக்கில் முதுமாணி (M.A. degree) பட்டத்தை பெற்றார். மார்க்சிசத்தின் உளவியல் ( Psycology of Marxism ) தொடர்பாகவே அவரது ஆய்வு அமைந்தது. அதற்கு பிறகு பேராசிரியர் ஜோன் ரெயிலரின் கீழ் சமூகவியலில் உடமை மாற்றம் தொடர்பான மார்க்சின் கோட்பாடு ( Marx's theory of alienation in sociology) குறித்து கலாநிதி பட்டத்துக்காக ஆய்வைச் செய்யத் தொடங்கினார். விடுதலை அரசியலில் ஈடுபடத் தொடங்கியதனால் பாலசிங்கம் கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை பூர்த்தி செய்யவில்லை. 1983 கறுப்பு ஜூலை இனவன்செயலுக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் மதியூகியாக, பேச்சுவார்த்தையாளராக, பேச்சாளராக பாலசிங்கம் இந்தியாவுக்கு வந்தார். இந்திய ஊடகங்களை தொடர்ந்து சர்வதேச ஊடகங்களும் அவரை " கலாநிதி பாலசிங்கம் " என்று குறிப்பிடத் தொடங்கின. அவர் தன்னை " கலாநிதி " என்று ஒருபோதும் அழைத்ததில்லை என்பதை நேர்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால், தன்னை கலாநிதி என்று அழைத்த ஊடகச் செய்திகளை திருத்துவதற்கு அவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. பாலசிங்கம் கலாநிதி பட்டத்தை கொண்டிருக்கவில்லை என்பது பிறகு நம்பத்தகுந்த முறையில் நிரூபிக்கப்பட்டது. அது போட்டிக் குழுக்களை சேர்ந்த எதிர்பாளர்களினால் செய்யப்படவில்லை. பதிலாக விடுதலை புலிகள் மத்தியில் இருந்தவர்களே அதைச் செய்தார்கள். அந்த நாட்களில் லண்டனில் விடுதலை புலிகள் இயக்கம் இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டிருந்தது. ஒரு பிரிவு பாலசிங்கத்தின் கீழும் மற்றைய பிரிவு இலங்கையில் மயிலிட்டியைச் சேர்ந்த ஒரு கணக்காளரான சீவரத்தினத்தின் கீழும் இருந்தன. இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியான சஞ்சிகை ஒன்றை (Tamil Voice International ) சீவரத்தினம் நடத்தினார். பாலசிங்கத்தின் கலாநிதி பட்டத் தகைமைகள் குறித்து அந்த சஞ்சிகைக்கு "வாசகர் " ஒருவர் கேள்வியை அனுப்பினார். அதற்கு ஆசிரியர்கள் அளித்த பதில் உண்மை நிலையை தெளிவாக விளக்கியது. இத்தகைய ஒரு பின்புலத்தில் இந்த கட்டுரை பாலசிங்கத்தின் 18 வது நினைவு தினத்தை ( டிசம்பர் 14 ) முன்னிட்டு அவர் மீது கவனத்தைச் செலுத்துகிறது. " பாலா அண்ணை " என்று அறியப்பட்ட பாலசிங்கம் கிளர்ச்சியூட்டுகின்ற ஆனால் அதேவேளை சர்ச்சைக்குரிய புள்ளியாக விளங்கினார். அவரை நேசிப்பவர்களும் வெறுப்பவர்களும் இருந்தார்கள். பாலசிங்கத்துடனான இந்த கட்டுரையாளரின் உறவுமுறையும் கூட நெளிவுசுழிவுகளைக கொண்டதாகவே இருந்தது. பிரச்சினைகளைப் பொறுத்து அவரை நான் கண்டித்ததும் உண்டு, மெச்சியதும் உண்டு. அதேபோன்று அவரும் கூட எனனைப் பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் எழுதியும் பேசியும் இருக்கிறார். இந்த மனிதனைப் பற்றியும் தமிழர் விவகாரங்களில் அவரின் பாத்திரம் பற்றியும் பல சந்தர்ப்பங்களில் நான் எழுதியிருக்கிறேன். இந்த கட்டுரையில் " பாலா அண்ணைக்கும் " எனக்கும் இடையிலான துறைசார் மற்றும் தனிப்பட்ட உறவுமுறை பற்றி கவனம் செலுத்துகின்ற அதேவேளை முன்னைய எழுத்துக்கள் சிலவற்றில் இருந்தும் விடயங்களை குறிப்பிடுகிறேன். 1938 மார்ச் 4 ஆம் திகதி பிறந்த பாலசிங்கம் பல்வேறு குணப் போக்குகளின் ஒரு கலவை. இந்துவான அவரது தந்தையார் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவரான தாயார் வடமாகாணத்தவர். ஒரு கத்தோலிக்கராக பாலசிங்கம் வளர்க்கப்பட்ட போதிலும் விரைவாகவே அவர் ஒரு பகுத்தறிவாளராகவும் உலோகயதவாதியாகவும் மாறிவிட்டார். பாலசிங்கத்தின் முதல் மனைவி புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண தமிழ்ப் பெண்மணி. இரண்டாவது மனைவி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அங்ளோ -- சக்சன் மரபைக் கொண்ட பெண்மணி. பிரிட்டிஷ் பிரஜையாக இருந்த போதிலும், பாலசிங்கம் தனது " தமிழ் ஈழம் " தாயகத்தைக் காண்பதற்கு வேட்கை கொண்டிருந்தார். அது அமைக்கப்படுகின்ற ஒரு கட்டத்தில் இருந்ததாக அவர் நம்பினார். பாலசிங்கத்தின் தந்தைவழி பாட்டனார் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூரைச் சேர்ந்த ஒரு " சைவக் குருக்கள்." அவரது தந்தையார் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒரு மின்சார மேற்பார்வையாளர். யாழ்நகரைச் சேர்ந்த பாலாவின் தாயார் முன்னர் மார்ட்டின் வீதியில் வசித்தவர். மருத்துவமாதுவான அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றியபோது பாலாவின் தந்தையாரைச் சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார். கரவெட்டி அவர் கணவரிடமிருந்து பிரிந்ததுடன் இளவயதிலேயே விதவையாகியும் விட்டார். பாலசிங்கம் தனது தாயாருடனும் மூத்த சகோதரியுடனும் சிறுபிள்ளையாக வடக்கிற்கு சென்றார். வடமராட்சி கரவெட்டியில் குடியேறி அவர்கள் வாழ்க்கையை தொடங்கினர். பாலாவின் தாயார் ' அம்பம் ஆஸ்பத்திரியில் ' மருத்துவமாதாக பணியாற்றினார். நான் வீரகேசரியில் பத்திரிகையாளராக இணைந்த நேரத்தில் பாலசிங்கத்தின் இரு மருமகன்கள் விக்டரும் அன்டனும் அச்சுக்கோப்பாளர் பகுதியில் பணியாற்றினார்கள். எனது தாயாரும் கூட கரவெட்டியை சேர்ந்தவரே. துன்னாலை தெற்கு, கரவெட்டி என்பதே தபால் விலாசம். பிற்காலத்தில் பாலசிங்கம் அதை அடிக்கடி கூறி தானும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களே என்று உரிமை கொண்டாடுவார். வீரகேசரி சிறுவர் பராயத்தில் பாலசிங்கம் ஏ.பி. ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்டார். கரவெட்டி திருஇருதயக் கல்லூரியிலும் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் அவர் கல்வி கற்றார். அந்த நாட்களில் கரவெட்டி ஒரு இடதுசாரிக் கோட்டையாக விளங்கியது. 'ஸ்ரனி ' என்று அப்போது அறியப்பட்ட இளம் பாலசிங்கமும் இடதுசாரி கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டார். சுந்தர் என்று அறியப்பட்ட பிரபல்யமான தமிழ் கார்ட்டூனிஸ்ட் சிவஞானசுந்தரம் கரவெட்டியில் இருந்தே ' சிரித்திரன் ' என்ற பெயர்பெற்ற சஞ்சிகையை வெளியிட்டார். சிவஞானசுந்தரத்தின் முயற்சியின் காரணமாக ஸ்ரனிஸ்லோஸ் 1960 களின் முற்பகுதியில் கொழும்பு தமிழ்ப் பத்திரிகையான வீரகேசரியில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். பெரும்பாலான நேரத்தை வாசிப்புக்கு செலவிடும் ஒரு மனிதனாக ஸ்ரனியை பற்றி பேசும்போது வீரகேசரியில் அவரின் முன்னாள் சகாக்கள் கூறுவார்கள். தனது தோற்றத்தில் அவர் அக்கறை செலுத்துதில்லை. குறிப்பாக உடைகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கிரமமாக நேரங்களில் அவர் சாப்படுவதுமில்லை. வீரகேசரியில் ஸ்ரனிஸ்லோஸ் விரைவாகவே வெளிநாட்டுச் செய்திகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை பிரதிகளையும் வெளிவிவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளையும் மொழிபெயர்ப்பது அதில் முக்கிய பணியாக இருந்தது. ஆனால், பாலசிங்கம் தத்துவத்திலும் உளவியலிலும் கருத்தூன்றிய கவனம் செலுத்தினார். மனதை வசியப்படுத்தும் கலையிலும் ( Hypnotism ) ஈடுபாடு காட்டினார். கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளராக ஸ்ரனிஸ்லோஸுக்கு நியமனம் கிடைத்ததும் நிலைமைகள் மாறின. நேர்த்தியான முறையில் உடைகளை அணியத் தொடங்கியதும் அவரின் தோற்றத்திலும் ஒரு உருநிலை மாற்றம் ஏற்பட்டது. புதிய தொழிலின் விளைவாக மாத்திரம் முற்றிலும் இந்த மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. காமனும் கணை தொடுத்தான். பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்துக்கு அருகாக பிரிட்டிஷ் கவுன்ஸிலில் பணியாற்றிய அழகான தமிழ்ப் பெண்மணி மீது பாலசிங்கம் காதல் கொண்டார். பருத்தித்துறை ஹாட்டி கல்லூரியில் படிப்பித்த இராசரத்தினம் மாஸ்டரின் மகளான பேர்ள் இராசரத்தினமே அந்த பெண்மணி. அந்த குடும்பம் எனது தாயாரின் குடும்பத்துடன் நெருக்கமான பழக்கத்தைக் கொண்டது. எனது சிறுவர் பராயத்தில் பேர்ள் அரசரத்தினத்தை நான் " பூ அன்ரி " என்று அழைத்தது நினைவிருக்கிறது. அவரின் சகோதரி ரதியின் திருமணத்தில் எனது சகோதரிகளில் ஒருவர் மணப்பெண் தோழியர்களில் ஒருவர். பேர்ளின் மூத்த சகோதரி நேசம் எனது தாயாருடன் பல வருடங்களாக ஒரே பாடசாலையில் படிப்பித்தார். பேர்ளுக்கும் அன்டனுக்கும் இடையிலான காதல் 1968 ஜூலை 16 கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ட் தேவாலயத்தில் திருமணத்தில் முடிந்தது. இங்கிலாந்து புது மணமகன் பாலசிங்கத்துக்கு மணவாழ்வினை மகிழ்ச்சி நீடித்ததாக இருக்கவில்லை. அவரின் மனைவி பேர்ள் கடுமையாக சுகவீனமுற்றார். அவருக்கு வெளிநாட்டு நவீன சிகிச்சை தேவைப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகள் மிகவும் அனுதாபமுடையவர்களாகவும் பெருந்தன்மை கொண்டவர்களாகவும் இருந்தனர். பாலசிங்கத்தையும் மனைவியையும் இங்கிலாந்துக்கு செல்ல அவர்கள் அனுமதித்தனர். இருவரும் 1971 ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கையை விட்டுச் சென்றனர். இங்கிலாந்தில் பாலசிங்கம் தனது உயர்கல்வியை தொடர்ந்தார். ஆனால், அவரின் மனைவியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பாலசிங்கத்துக்கு வாழ்க்கை இடரும் தியாகமும் நிறைந்தாக மாறியது. அவர் வேலைக்கு செல்வதுடன் படிக்கவேண்டியிருந்தது. நோயாளியான மனைவியை பராமரிக்க வேண்டியும் இருந்தது.மனைவி 1976 நவம்பரில் காலமானார். வைத்தியசாலையில் ஒரு தாதியுடன் பாலசிங்கத்துக்கு நன்கு பழக்கமேற்பட்டது. அந்த தாதியும் அவுஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்த ஒரு " அன்னியரே. மனைவியை இளந்த இளம் பாலசிங்கத்துக்கு தாதி அுடல் ஆன் வில்பியுடன் இரண்டாவது காதல் மலர்ந்தது. தெற்கு லண்டனில் பிறிக்ஸ்டனில் பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் எளிமையான முறையில் 1978 செப்டெம்பர் முதலாம் திகதி திருமணம் செய்து கொண்டனர். மட்ராஸ் / சென்னை பாலசிங்கம் 1978 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுடன அணி சேர்ந்துகொண்டார். இந்தியாவுக்கு கிரமமாக வருகை தந்த அதேவேளை லண்டனில் இருந்து விடுதலை புலிகளுக்காக பெருமளவில் எழுதினார். 1980 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பிளவு ஏற்பட்டபோது பாலசிங்கம் தன்னை பிரபாகரனின் பிரிவுடன் இணைத்துக்கொண்டார். 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு பாலசிங்கமும் மனைவி அடேலும் சென்னைக்கு ( அப்போதைய மட்ராஸ் ) குடிபெயர்ந்தனர். " த ஐலண்ட் " வீரகேசரி தமிழ்த் தினசரியில் 1977 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டதன் மூலம் பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்த நான், 1981 ஆம் ஆண்டில் " த ஐலண்ட் " ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இணைந்து கொண்டேன். அந்த வேளையில் அதன் ஆசிரியராக இருந்த விஜிதா யாப்பா 1984/85 காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து இயங்கிய இலங்கை தமிழ்த் தீவிரவாத இயக்கத் தலைவர்களை பேட்டிகாணும் பணியை என்னிடம் ஒப்படைத்தார். தமிழ்நாட்டில் பெரும்பாலான தீவிரவாத குழுக்களை சந்தித்த எனக்கு விடுதலை புலிகளை சந்திப்பது சற்று சிரமமாக இருந்தது. இறுதியாக மரீனா கடற்கரையில் கண்ணகி சிலை ஓரமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருமாறு என்னிடம் கேட்கப்பட்டது. நானும் அதற்கு இணங்கினேன். " நான் பாலசிங்கம் " சரியாக 5.30 மணிக்கு அந்த இடத்தில் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதை ஓட்டிவந்த விடுதலை புலிகள் இயக்க முக்கியஸ்தரான " நேசன் " ( முன்னாள் கத்தோலிக்க குரு மாணவன் ) என்னை முன் ஆசனத்தில் வந்து ஏறுமாறு கேட்டார். காரை ஓட்டிச் சென்று இன்னொரு இடத்தில் அவர் நிறுத்தினார். சில நிமிடங்களில் இன்னொரு வாகனம் வந்து பின்னால் நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கிவந்து எமது வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். நான் திரும்பிப் பார்த்தபோது தனது கையை நீட்டி " நான் பாலசிங்கம் " என்று கூறினார். வாகனத்தை ஓட்டத் தொடங்கிய நேசன் எங்கு போவது என்று தெரியாத மாதிரி பல வீதிகளின் ஊடாக அதைச் செலுத்தினார். பாலசிங்கம் ஒரு மட்டுமதிப்பற்ற முறையில் வெடுக்கென்று என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தார். ஒருவிதமான பகைமையுணர்ச்சியுடனான அவரின் கேள்விகள் என்னை அவர் சந்தேகத்துடன் நோக்குகிறார் என்பதை உணர்த்தியது. நான் கதையை மாற்றி எனது குடும்பத்தைப் பற்றியும் காலமான அவரின் மனைவியின் குடும்பத்தைப் பற்றியும் கூறத் தொடங்கினேன். " உங்களைப் போன்றே நானும் வீரகேசரியில் வேலை செய்தேன்" என்றும் அவரிடம் கூறினேன். பாலசிங்கத்தின் மனநிலை மாறியது. அவர் சிரித்துக்கொண்டு " அப்போ நீங்கள் எங்களில் ஒருவர் " என்று அவர் கூறினார். " நாங்கள் புஹாரி ஹோட்டலுக்கு போவோம் " என்று பாலசிங்கம் நேசனிடம் கூறினார். எனவே நாம் அந்த முஸ்லிம் உணவகத்துக்கு சென்று இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு கடந்த்காலத்தை நினைவுகூர்ந்த வண்ணம் சமகால அரசியலையும் பேசினோம். அதுவே பாலசிங்கத்துடனான எனது முதலாவது சந்திப்பு. அதற்கு பிறகு அவரை நான் பல தடவைகள் சந்தித்தேன். கனடா 1988 ஆம் ஆண்டில் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை ஆய்வு மாணவனாக நீமன் புலமைப்பரிசில் பெற்று நான் அமெரிக்கா சென்றேன். பிறகு 1989 ஆம் ஆண்டில் கனடாவுக்கு மாறி ரொரண்டோவில் 1990 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் வாரப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கினேன். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்துடனான போர்நிறுத்தத்தை விடுதலை புலிகள் 1995 ஏப்ரிலில் முறித்துக்கொண்ட பிறகு நான் அவர்களை விமர்சித்தேன். ரொரண்டாவில் நான் ஆசிரியராக இருந்து எனது சொந்தத்தில் நடத்திய " மஞ்சரி " தமிழ் வாரப் பத்திரிகைக்கு எதிராக கனடாவில் விடுதலை புலிகள் ஒரு பிரசாரத்தை தொடங்கியதனால் நான் பெரிய விலையைச் செலுத்த வேண்டியதாயிற்று. எனது பத்திரிகையை அவர்கள் " தடை " செய்தார்கள். தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் நான் தளர்ந்துபோகவில்லை. அதையடுத்து விடுதலை புலிகள் தமிழ்ப் பத்திரிகைகளை விற்பனை செய்கின்ற தமிழர்களுக்கு சொந்தமான கடைகளையும் முக்கியமான தமிழ் விளம்பரதாரர்களையும் இலக்கு வைக்கத் தொடங்கினர். 48 பக்கங்களைக் கொண்ட அந்த ஒரு டொலர் ' ரப்லொய்ட் ' பத்திரிகை 22 பக்கங்களில் விளம்பரங்களை கொண்டு வெளியானது. 4,500 -- 5,000 பிரதிகள் விற்பனயாகின. விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக எனது பத்திரிகையை விற்பனை செய்வதை பல கடைகள் நிறுத்திக் கொண்டன. பத்திரிகை 24 பக்கங்களாக சுருங்கியதுடன் இரு பக்கங்களுக்கே விளம்பரங்கள் கிடைத்தன. விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையும் நூறுகளுக்கு கண்டது. விடுதலை புலிகளுக்கு முழந்தாழிட்டு உயிர் வாழ்வதையும் விட எனது காலில் நின்று சாவதற்கு முடிவெடுத்த நான் 1996 ஆம் ஆண்டில் பத்திரிகை வெளியிடுவதை நிறுத்தினேன். ஆங்கிலப் பத்திரிகைத்துறை நானும் எனது மனைவியும் அந்த பத்திரிகைக்காக முழுநேர பணியாற்றினோம். எங்களைத் தவிர, வேறு ஒன்பது பேர் பகுதிநேர ஊழியர்களாக பணியாற்றினர். பத்திரிகையை நிறுத்தியது அந்த நேரத்தில் பாரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. இருந்தாலும், கெடுதியின் உருவில் வந்த நன்மையாக, நான் மிண்டும் ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தேன். கொழும்பில் தமிழில் எழுதி வீரகேசரிக்காக பணியாற்றியதன் மூலமாக பத்திரிகைத்துறை வாழ்க்கையை தொடங்கியவன் நான். த ஐலண்டுக்காகவும் பிறகு 'தி இந்து ' வுக்காகவும் பணியாற்றியதன் மூலமாக ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவன் நான். கனடாவுக்கு வந்த பிறகு முதலில் " செந்தாமரை " வாரப்பத்திரிகையினதும் பிறகு " மஞ்சரி" யினதும் ஆசிரியராக தமிழ்ப் பத்திரிகைத்துறைக்கு திரும்பினேன். மீண்டும் "த ஐலண்ட்" , பிறகு "த சண்டே லிடர்", "த நேசன்", இப்போது " டெயிலி மிறர்" , " டெயிலி ஃபைனான்சியல் ரைம்ஸ் " ஆகியவற்றுக்கு எழுதுவதன் மூலம் ஆங்கிலப் பத்திரிகைத்துறைக்கு திரும்பி வந்திருக்கிறேன். என்னை மௌனமாக்க விடுதலை புலிகள் எனது பத்திரிகையை நிறுத்தினாலும் கூட, நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதி பதவியில் இருந்த அரசாங்கங்களையும் விடுதலை புலிகளையும் விமர்சித்தேன். புலிகளின் ஆதரவாளர்கள் என்னை ஒரு தமிழ்த் துரோகி என்று பழிதூற்றினார்கள். புலிகளுக்கு எதிரானவன் என்று எனக்கு பட்டஞ்சூட்டினாலும், எனது பத்திரிகையாளனாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தேன். பாலசிங்கம் நீட்டிய நேசக்கரம் புதிய மிலேனியம் ஒரு அதிர்ச்சியைக் கொண்டுவந்தது. 2000 ஆண்டு நடுப்பகுதியில் ரொரண்டோவுக்கு வந்த தமிழக் கத்தோலிக்க மதகுரு வணபிதா எஸ்.ஜே. இம்மானுவேல் என்னுடன் தொடர்புகொண்டார். லண்டனில் இருந்த பாலசிங்கம் என்னுடன் பேசுவதற்கு விருப்புவதாக வணபிதா என்னிடம் கூறினார். இது மீண்டும் பாலசிங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது. நான் இலங்கையை விட்டு வெளியேறிய பிறகு அவருடனான தொடர்பை இழந்துவிட்டேன். ஆனால், 1999 ஆம் ஆண்டில் பாலசிங்கம் லண்டனில் இருந்து வன்னிக்கு திரும்பவிருப்பதை பற்றிய செய்தியை ஏனைய ஊடகங்களை முந்திக்கொண்டு நானே பிரத்தியேகமாக வெளியிட்டிருந்தேன். பல வருடங்களுக்கு பிறகு என்னுடன் பேசிய பாலசிங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து பேச்சுவார்த்தை மூலமான ஒரு இணக்கத்தீர்வின் ஊடாக சமத்துவமான உரிமைகளுடன் சமாதானத்தை காணவேண்டியது தமிழ் மக்களுக்கு அவசியமாகிறது என்ற எனது கருத்துடன் உடன்படுவதாக எனக்கு கூறினார். நோர்வேயின் உதவியுடன் சமாதான முயற்சி ஒன்று தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறிய அவர் எனது எழுத்துக்களின் ஊடாக அதற்கு நான் ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த நேரத்தில் நான் ' த சண்டே லீடர் ' பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தேன். கலந்துரையாடல் அந்த பத்திரிகையின் ஆசிரியரும் எனது நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்கவிடம் அதைக் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து வெற்றிகரமாக இணக்கத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாக உறுதியளித்தார். அதற்கு பிறகு பாலசிங்கத்துடன் நான் கிரமமாக தொடர்பில் இருந்தேன். பல சந்தர்ப்பங்களில் நானும் அவரும் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவதற்கு அப்பாலான விடயங்கள் பலவற்றைப் பற்றி மணிக்கணக்காக பேசியிருப்போம். அந்த சம்பாஷணைகளின் ஊடாக விடுதலை புலிகளின் அந்தரங்கமான செயற்பாடுகள், அதன் படிமுறை வளர்ச்சி பற்றி பெருமளவு விடயங்களை அறிந்துகொண்டேன். போர்நிறுத்தம் ஒஸ்லோவின் அனுசரணையுடனான போர்நிறுததம் 2002 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், உண்மையான சமாதான இணக்கத்தீர்வுக்குை அனுகூலமில்லாத முறையில் விடுதலை புலிகள் நடந்து கொள்கிறார்கள் என்பதை விரைவாகவே நான் கண்டு கொண்டேன். பாலசிங்கத்திடம் எனது விசனத்தை வெளிப்படுத்தியபோது எனது முறைப்பாடுகளுக்கு அவர் செவிசாய்ப்பதாக இல்லை என்பதைக் கண்டுகொண்டேன். சமாதான முயற்சி ஒன்றுக்கு விடுதலை புலிகள் தங்களை பரிச்சியப்படுத்துவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்று நினைத்து நான் ஆறு மாதங்கள் காத்திருந்தேன். அது நடக்கவில்லை என்றபோது நான் விடுதலை புலிகள் செய்த எதிர்மறையான காரியங்களுக்காகவும் செய்யத்தவறிய காரியங்களுக்காகவும் அவர்களைை விமர்சிக்கத் தொடங்கினேன். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் விடுதலை புலிகளுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை நான் விரைவாகவே புரிந்துகொண்டேன். இந்த சிந்தனை எனது பத்திகளில் பிரதிபலித்தது. பாலசிங்கம் ஆத்திரமடைந்தார். எனது பத்திகளை பிரசுரிக்க வேண்டாம் என்றும் பிரசுரித்தால் அதனால் பத்திரிகைக்கு தமிழ் வாசகர்கள் மத்தியில் உள்ள மதிப்பு கெட்டுவிடக்கூடும் என்றும் லசந்த விக்கிரமசிங்கவுக்கு அவர் " ஆலோசனை " கூறினார். என்னிடம் அதைக் கூறிய லசந்த , மச்சான் வழமைபோன்று எழுது" என்று உற்சாகப்படுத்தினார். நான் தொடர்ந்து எழுதினேன். பிறகு பாலசிங்கம் செய்தியாளர்கள் மகாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் எனது பெயரைக் கூறி தாக்கத் தொடங்கினார். அவருக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போனது. என்னை கடுமையாக தாக்கி எழுதுமாறு அவர் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை கேட்குமளவுக்கு எனக்கு எதிராகச் சென்றார். தொலைபேசி அழைப்பு ஒரு சில வருடங்கள் கழித்து 2006 நவம்பர் மூன்றாம் வாரம் லண்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. பாலசிங்கம் தான் அழைத்தார். எங்களுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகள் காரணமாக இருவரும் சுமார் மூன்று வருடங்களாக பேசிக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருந்ததால் எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. ஆனால், " பாலா அண்ணை" யுடன் பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் நான் கேள்விப்பட்டேன். தனது பழைய சகாக்கள், நண்பர்கள் மற்றும் தொடர்பு வைத்திருந்தவர்கள் சிலருடன் தொலைபேசியில் பேசிவருவதாக பாலா அண்ணை தொடக்கத்தில் கூறினார். அவர் வெளிப்படையாக கூறாவிட்டாலும் கூட, விரைவில் எம்மிடமிருந்து விடைபெறப் போகின்ற ஒரு மனிதரிடமிருந்து வருகின்ற தொலைபேசி அழைப்பு அது என்பதை விளங்கிக்கொண்டேன். அவருக்கு மலவாசலில் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. அது ஒரு முதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. வைத்தியர்கள் அவர் ஒரு நான்கு தொடக்கம் ஆறு வாரங்களுக்கே உயிருடன் இருப்பார் என்று கூறிவிட்டார்கள். குதூகலமாக பகிடிவிட்டு பேசுவது பாலசிங்கத்தின் பழக்கம். நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் கவலையடைந்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன். அவருக்கு இருந்த அந்தக் கவலை தனக்கு நேரப்போகிற மரணத்தைப் பற்றியதல்ல. " தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை. நிலைமை படுமோசமாகுது. முழு உலகமும் சேர்ந்து புலிகளை மொங்கப்போகுது" என்று பாலா அண்ணை படபடவென்று பேசினார். தம்பி என்று அவர் கூறியது விடுதலை புலிகளின் தலைலர் வேலுப்பிள்ளை பிரபாகரனையே. போராட்டத்தின் ஆரம்பக்கட்டங்களில் பிரபாகரன் தம்பி என்றே அறியப்பட்டார். விடுதலை புலிகளின் நடவடிக்கைகளினால் சர்வதேச சமூகம் ஆத்திரமடைந்திருக்கிறது. புலிகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு முறையில் செயற்பட வில்லையானால் மேற்கு நாடுகள், சீனா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லாம் ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரித்து விடுதலை புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு நிராமூலம் செய்யப்படுவதை உறுதிசெய்யப் போகின்றன என்று பாலசிங்கம் சொல்லிக்கொண்டே போனார். யதார்த்த நிலையை பிரபாகரனுக்கு புரியவைத்து அதன் பிரகாரம் செயற்படவைக்க உங்களால் ஏன் முடியவில்லை என்று நான் அவரை கேட்டேன். பல தடவைகள் தான் முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது என்று அவர் மிகுந்த கவலையுடன் பதிலளித்தார். வடக்கில் வன்னி பெருநிலப்பரப்பில் கேப்பாபுலவில் பிரபாகரனை தனியாகச் சந்தித்து உண்மையான நிலைவரத்தை விளங்கிக்கொள்ளுமாறு கெஞ்சியதாகவும் ஆனால் பிரபாகரன் அசையவில்லை என்றும் மிகுந்த வேதனையுடனை பாலா அண்ணை கூறினார். " உனக்கு தெரியும்தானே ' வீரமார்த்தாண்டன் ' ( கோபம் வந்தால் பிரபாகரனை அவ்வாறுதான் பாலா அண்ணை அழைப்பார்) என்னுடன் எப்படி நடந்து கொள்கின்றவன் என்று " தமிழில் கூறியவாறு அவர் தொடர்ந்தார். " உண்மையான நிலைவரம் குறித்து நான் பேசிக்கொண்டிருந்த போது பிரபாகரன் திடீரென்று இடைமறித்து தமிழ்நாட்டின் பிரபல படத்தயாரிப்பாளர் சேரன் இயக்கிய " ஆட்டோகிராவ்" படம் பார்த்தீர்களா என்று என்னைக் கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் இப்போது அந்த படத்தை நாம் பார்க்கவேண்டும் என்று கூறினார்.டி.வி.டி.மூலம் தொலைக்காட்சியில் படம் போடப்பட்டு நாம் அமைதியாகப் பார்த்தோம். படம் முடிந்ததும் நான் மீண்டும் அன்றைய நிலைவரத்தைப் பற்றி மீண்டும் பேச முயற்சித்தேன். மீண்டும் அந்த படத்தை பார்ப்போமா என்று பிரபாகரன் கேட்டார். அதனால் அதே படத்தை மீண்டும் பார்த்தோம். மீண்டும் படம் முடிந்ததும் பழைய விடயத்தை மீண்டும் நான் பேசத்தொடங்க பிரபாகரன் குறும்புச் சிரிப்புடன் ' இன்னொருக்கா பார்ப்போம் ' என்று கேட்டார். அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை புரிந்துகொண்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். பிரபாகரன் இவ்வாறு நடந்துகொள்கிறபோது அவரை இறங்கி வரச்செய்ய எதனாலும் முடியாது என்பது எனது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு தெரியும்." விடுதலை புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுக்கு நிலைவரத்தை புரியவைக்க முயற்சிக்கவில்லையா என்று நான் கேட்டபோது வன்னியில் உள்ள தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ, பொட்டுஅம்மான், நியூயோர்க்கில் உள்ள உருத்திரகுமாரன் போன்றவர்கள் ஒஸ்லோவின் அனுசரணையுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று பாலசிங்கம் பதிலளித்தார். மேலும், இலங்கை இராணுவத்தை தோற்கடிக்க முடியும் என்றும் ராஜபக்சவுக்கு எதிராக உலகம் விடுதலை புலிகளை ஆதரிக்கும் என்றும் அவர்கள் தவறான விடயங்களை கூறி பிரபாகரனை நம்பவைத்தும் விட்டார்கள். சூசை, 'பேபி ' சுப்பிரமணியம், பாலகுமாரன் மற்றும் பரா போன்ற மூத்த தலைவர்கள் இடர்பாட்டை விளங்கிக் கொண்டார்கள். ஆனால், யதார்த்த நிலையை கண்திறந்து பார்க்க பிரபாகரனை வழிக்குக் கொண்டுவரக்கூடிய அளவுக்கு அவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கவில்லை என்று பாலசிங்கம் கூறினார். நாமிருவரும் 20 - 25 நிமிடங்கள் பேசியிருந்த நிலையில் பாலசிங்கம் தொடர்ச்சியாக இரும ஆரம்பித்தார்.அவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை. உரையாடலை நிறுத்த வேண்டியதாயிற்று. போர் தீவிரமடைவது தவிர்க்கமுடியாததாகப் போகின்றது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததால், பாலசிங்கத்துடனான உரையாடல் எனக்கு பெரும் கவலையைத் தந்தது. வன்னி மண்ணில் உள்ள அப்பாவி தமிழ்க் குடிமக்கள் ஒரு மனதாபிமான அவலத்தை சந்திக்கப் போகிறார்கள் என்று கவலையடைந்தேன். எனது பயம் நியாயமானது என்பதை அடுத்துவந்த நிகழவுகள் நிரூபித்தன. சர்வதேச சமூகம் விடுதலை புலிகளை " மொங்கப் போகிறது" என்ற பாலா அண்ணையின் எச்சரிக்கையும் சரியென்று நிரூபிக்கப்பட்டது. கேவலமான வேலை செய்வதற்கு கொழும்பை அனுமதித்துவிட்டு சர்வதேச சமூகம் இப்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறிக்கொண்டு விசாரணை நடத்த விரும்புகிறது. தப்பெண்ணம் பாலசிங்கத்துடனான இறுதி உரையாடல் எனக்கு பெருமளவு விடயங்களை தெளிவுபடுத்தவும் செய்தது. அவருடன் நான் கொண்டிருந்த ( மென்னயமாகக் கூறுவதானால்) "தப்பெண்ணம் " அவற்றில் பிரதானமானது. பாலசிங்கம் மெய்யாகவே பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தீர்வு ஒன்றில் ஆழமான கரிசனை கொண்டிருந்தார் என்பதையும் ஆனால் ( பின்னர் கட்டவிழ்ந்த நிகழ்வுகள் நிரூபித்ததைப் போன்று ) பிரபாகரன் அதை நிராகரித்துவிட்டார் என்பதையும் பாலசிங்கத்துடனான உரையாடல் ஊடாக எனானால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. என்னைத் தாக்கி ஏன் பேசினீர்கள் என்றோ அல்லது சண்டே லீடர் பத்திரிகைக்கு நான் எழுதுவதை ஏன் தடுக்க முயன்றீர்கள் என்றோ நான் அவரிடம் கேட்கவில்லை. இறக்கும் தறுவாயில் இருக்கும் மனிதரிடம் அவ்வாறு கேட்பது நயநாகரிகம் இல்லை என்று நான் உணர்ந்தேன். ஆனால், தன்னை விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பாதுகாப்பதற்காகவே எனக்கு எதிராக பாலா அண்ணை பகிரங்கமாக திரும்புவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கக்கூடும் என்று உணர்ந்தேன். தமிழ்ச்செல்வனும் காஸ்ட்ரோவும் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்த விடுதலை புலிகள் மத்தியில் எனக்கு எதிராக கயமைத்தனமான பிரசாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அத்துடன் முன்னைய காலகட்டங்களில் என்னுடன் பாலசிங்கம் வைத்திருந்த நெருக்கமான தொடர்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அவர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்திருக்கக்கூடியது மிகவும் சாத்தியமே. தேசத்தின் குரல் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் தெற்கு லண்டனில் உள்ள தனது வீட்டில் 2006 டிசம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை (பிரிட்டிஷ் நேரப்படி ) பிற்பகல் 1.45 மணிக்கும் அமைதியாக காலமானர். பாலா அண்ணை இறுதிமூச்சை விட்ட தருணம் அவரது அன்பு மனைவி அடேல் ஆன் அருகே இருந்தார்.2006 டிசம்பர் 20 ஆம் திகதி லண்டனில் அலெக்சாண்டிரா பலஸில் இறுதிச்சடங்கு இடம்பெற்றது. விடுதலை புலிகளின் தத்துவவாதியும் மதியூகியுமான பாலா அண்ணைக்கு இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் " தேசத்தின் குரல் " என்ற பட்டத்தை வழங்கி அஞ்சலி செய்தார். நான் பாலா அண்ணையுடன் கொண்டிருந்த உறவுமுறை பற்றிய நினைவுகளும் சிந்தனைகளும் கடந்த 14 ஆம் திகதி அவரது 18 வது நினைவு தினம் என்பதால் மீண்டும் எழுந்தன. https://www.virakesari.lk/article/201481
  33. இந்தப் பொம்மையை முன்னால் வைத்துக்கொண்டே ஈழத்தில் சோனியா தனது நரவேட்டையினை ஆடி முடித்தார். தான் செய்வது என்னவென்று தெரிந்தும் சோனியாவின் தாளத்திற்கு ஆடி ஆடியே தமிழினக்கொலையிற்கான அனுமதியை, கட்டளையினை இந்தியாவின் பிரதமர் எனும் சோனியாவினால் வழங்கப்பட்ட பிச்சையைப் பாவித்து இவர் நிறைவேற்றி வந்தார். 80 களில் தனது சொந்த இனமான சீக்கியர்களைப் படுகொலை செய்த அதே இந்திரா காந்தி குடும்பத்திற்கு, குறிப்பாக 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலையின் சூத்திரதாரியான ரஜீவின் மனைவிக்கு சேவகம் ஆற்றியதன் மூலம் இரு தேசிய இனங்களின் இனக்கொலையில் நேரடியான பங்களிப்பை இந்த நிதித்துறை வித்துவான் வழங்கிச் சென்றிருக்கிறார். இந்தக் காணொளியில் சோனியா கைகாட்டும் இடத்தில் நிற்கவும், அமரவும் துடிக்கும் நன்றியுள்ள நாயான மன்மோகனைப் பாருங்கள். மன்மோகனை அட்டைப் பிரதமராக வைத்துக்கொண்டு அமைச்சரவையினைத் தானே முடிவெடுத்த சோனியா
  34. ஆள் கதையோட கதையாக ஒரு பகிடி போல கனடாவே அமெரிக்காவின் ஒரு மாநிலம் என்று சொல்லியும் விட்டார்...........................🤣. இன்னும் போகப்போக இன்னும் புதிதுபுதிதாக வரும் போல............. நாலு வருடத்திற்கு புடின், ட்ரம்ப், அர்ச்சுனா, இந்த மூவரும் சேர்ந்து எங்களை ஒரு 'அலர்ட்' நிலையிலேயே வைத்திருக்கப் போகின்றார்கள்.............. விடுமுறைகளில் போனாலும் செய்திகளை தவறவிடக்கூடாது போல.............🤣.
  35. என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா....🙏
  36. கனடாவிலும் "அவசரத்திற்கு பணம் கையில் வைத்திருங்கள்" என்று வேலையிடத்தில் அறிவுறுத்தியதாக ஒரு உறவு எழுதியிருந்தார். (அமெரிக்காவில் இருக்கும் நான் பியர் ஸ்ரொக் அப் செய்து வருகிறேன்) நிராஜ் டேவிட் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும்😎!
  37. இதுவரை இருந்த முதல்வர்களிலேயே ஸ்டாலின் தான் மிகவும் கையாலாகாதவர் என்ற பட்டத்துடன் இவரின் பெயர் நிலைக்கப் போகின்றது................. ரவுடிகளுடனும், சமூகவிரோதிகளுடனும் கூட்டும் தொடர்பும் வைத்திருப்பதிலும், அவர்களை காப்பாற்றுவதிலும் திமுகவில் எந்த மாற்றமும் இல்லை....... 😡..... அன்றும், இன்றும், என்றும் இப்படியே....... இங்கு தான் ஜெயலலிதா அம்மையார் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது............. வழக்கும் இல்லை, ஒரு ம**ம் இல்லை............... பிடிபட்ட அடுத்த மணிநேரத்திலேயே கதை முடிந்திருக்கும்...........
  38. கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள ஒளிப்படக்காட்சி ஒரு பாமரனாக என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் தனிமனிதனாகத் தீயவர்களை அடிக்கும்போது பெரும்பாலானோர்க்கு (என்னையும் சேர்த்து) ஏற்படும் மனநிலை. நடைமுறை சாத்தியம் பற்றி மனம் சிந்திப்பதில்லை. The triumph of the good over the evil. தீமையின் மீது நன்மையின் வெற்றி. நம்மால் இயலாததை யாரோ நிகழ்த்தும் போது ஏற்படும் மகிழ்ச்சி. தன்னேரில்லாத் தலைவனைக் கொள்வது காவிய இலக்கணத்துள் ஒன்றாய் அமைந்தது இந்த அடிப்படையில்தான். இது ஒரு உளவியல். தமிழ்த் திரையுலகில் இந்த உளவியல் அடிப்படையில் முதன்முதலில் பெரிய வெற்றியைக் கண்டவர் மக்கள் திலகம் எம.ஜி.ஆர். நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இது ஏற்புடைத்தே ! https://www.facebook.com/share/r/1Co9gLaXdp/
  39. 🤣................. அடி பலமாகவே இருக்கின்றது. ஒற்றைக் காலில் நின்று சுழலும் போது இந்தப் பெண் காட்டும் உடற் சமநிலையும், கைகள் அசையும் வேகமும், அது இறுதியில் இறங்கும் இலாவகமும், இவர் உண்மையிலேயே 'பின்னி எடுப்பார்' என்றே தெரிகின்றது.............. கடந்த வாரம் என்று நினைக்கின்றேன். வட இந்தியாவில் பேரூந்தில் ஒருவர் ஒரு பெண்ணுடன் சேட்டைகள் செய்துள்ளார். அந்தப் பெண் ஒரு பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர்.......... ஆசிரியர் பிளந்து கட்டிவிட்டார்....... ஒரே மூச்சில் 26 அடிகளோ என்னவோ..........🤣.
  40. சிவஞானம் ஐயா அவர்களே, நீங்கள் தயவுசெய்து தீவிர அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும்.
  41. காட்டுக்குள்ளே திருவிழா .......அபிநயசரஸ்வதி சரோஜாதேவி .......! 😍
  42. எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள் புடுங்குப்படுவது..நாடகமா ....
  43. சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.