Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2132
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87979
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3043
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/01/25 in all areas

  1. தமிழ் திரைத்துறை வீழ்சசி என்பது ஒரு இயல்பான சுற்று என்றே கருதலாம். உலக பொருளாதாரங்கள் எப்படி ஏற்ற இறக்கங்களை கொண்டதோ அதை போல் தான் இதுவும் தற்போதைய OTT தளங்களின் வளர்ச்சி திரையரங்குகளை பாதிப்பதும் ஒரு காரணம். அதை விட தரமற்ற கதைக்களங்கள். தமிழ் திரை உலக வரலாற்றில் வீழ்சசியை சந்திப்பது இது முதல் முறை அல்ல. பல முறை அது சவால்களை சந்தித்த போதும் ஒவ்வொரு முறையும் அதை அடக்கி அது எழுந்தேயுள்ளது. 1980 களில் விசிஆர் களின் வருகை தமிழ் சினிமாவை பாதித்தது. பின்னர் திருட்டு விசிடி ஆகியன முன்னைய காலங்களில் தமிழ் சினிமாவை பாதித்தது.
  2. வருடச் செய்முறை ------------------------------ முப்பது கிலோ கோழி இருபது கிலோ மீன் பதினைந்து கிலோ ஆடு இவற்றை கழுவி துண்டு துண்டாக்கி கறியாக்கவும் ஒரு பகுதியை பொரிக்கவும் 50 கிலோ அரிசி இதை சோறாக்கவும் பத்து கிலோ பருப்பு போதும் இதைவிடக் குறைய கத்தரிக்காய் வாழைக்காய் பயற்றங்காய் போன்றன இவற்றில் பொரித்த குழம்பு பொரிக்காத குழம்பு பால்கறி இப்படி எல்லாம் வைக்கவும் தேவையான அளவு பாகற்காய் பொரிக்கவும் மிளகாய் பொரிக்கவும் வடகம் பொரிக்கவும் வாழைக்காய் பொரிக்கவும் அப்பளம் பொரிக்கவும் ஊறுகாய் வாங்கவும் தயிர் வாங்கவும் நல்ல நாட்களில் வடை சுடவும் பாயாசம் வைக்கவும் பொங்கல் பொங்கவும் வேண்டும் ஆடிப் பிறப்பன்று கொழுக்கட்டை ஆவணிச் சதுர்த்தியில் மோதகம் மீண்டும் விளக்கீட்டில் கொழுக்கட்டை நவராத்திரிக்கு அவல் கடலை நல்ல நாவல் பழம் அம்மாவின் திதி அப்பாவின் திதி என்றால் பதின்மூன்று கறிகள் வைக்கவும் அவ்வளவும் மரக்கறிகளே இன்னும் சிலதும் இருக்கின்றது உடனே நினைவில் வருகுதில்லை உதாரணமாக முழுப் பலாப்பழங்கள் ஒரு ஐந்து இவை மொத்தமும் 2024ம் ஆண்டில் நான் ஒருவன் உண்டு முடித்த கணக்கு வெளியில் உண்டதையும் சேர்த்தால் அசைவம் இன்னும் அதிகமே சைவம் ஒரு சம்பிரதாயத்திற்கே நாளையிலிருந்து இதே கணக்கு மீண்டும் தொடங்குகின்றது கள நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
  3. இவ்வளா காலமும் தமிழ்நாட்டு அரசியல் செய்திகளைதான் பார்ப்பம்.. இப்பதான் இலங்கை அரசியலை பார்க்க பிடிக்கிறது.. இவ்வளவுகாலமும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பழையகதை தீர்வுத்திட்டம் பற்றித்தான் கதைப்பாங்கள்.. மக்கள் பிரச்சினையை எவனும் கதைப்பதில்லை.. அதை பாக்கிறத விட பேசாம கண்ணமூடி நித்திரை கொள்ளலாம்.. டொக்ரர் ராமநாதன் அர்ச்சுனாவின் வருகையின் பின் இலங்கை தமிழ் அரசியலில் பொறிபறக்குது.. எங்களுக்கும் எம்பி இருக்கெண்டு ஞாபகம் வருது..👏👏
  4. 2024/2025 *************** பழமைக்கு பிரியாவிடையும் புதுமைக்கு வரவேற்பும் இன்றிரவு 12 மணிக்கு! இழப்புகள், ஏற்றங்கள் துக்கங்கள், மகிழ்சிகள் வேதனைகள், சாதனைகள் வெறுப்புகள், வெற்றிகள எல்லாமே இரண்டறக் கலந்து எமக்குத் தந்தாய். அத்தோடு.. உலகச் சண்டைகளும் இயற்கையழிவுகளும் பொருளாதார சிக்கல்களும் தந்து.. பொறுமையிழக்க வைத்தாய். இத்துடன் முடிந்தது என்றுதான் இருந்தோம் உனது கோரப் பற்களால்-தென் கொறியா விமானத்தை தீயிட்டுக் கொளுத்தி 179 அப்பாவி உயிகளை தின்றுவிட்டுச் செல்கிறாயே இது நியாயமா? நீயே சொல். அவர்களின் துக்கத்தில் மூழ்கி உன்னை அனுப்பி வைக்கிறோம் போய் வா! ஆண்டே 2024. 2025தே வருக! வருக! புலரும் புது ஆண்டே வந்து- நீ உயிர் கொல்லி நோய்களை நீக்கு உலகத்தின் சண்டைகள் போக்கு ஊழல்கள் இலஞ்சத்தை கொழுத்து ஊர்களெல்லாம் அன்பை நிலை நிறுத்து. செயற்கை உணவுகளை பொசுக்கு தேசத்தில் உணவில்லா நிலைதன்னை ஓட்டு ஏழைகள் என்ற சொல்லை எடுத்தெறி இருள் சூழ்ந்த இனங்களுக்கு ஒளி கொடு மதச் சண்டை இனச் சண்டை அகற்று மனிதரெல்லாம் ஒன்றென நீ உயர்த்து இயற்கையவள் அழிவிலிருந்து காப்பாற்று எல்லோர்க்கும் உலகமென்பதை உணர்த்து. அன்பு இதயங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். அன்புடன்-பசுவூர்க்கோபி.
  5. "மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி........" "மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி தொட்டு உறவாட கேட்டு நிக்கிறேன்டி" "மொட்டு மலருதையா மெட்டு போடுதையா பொட்டு வைக்கத் தட்டு தேடுதையா" "நாட்டுப் பாடலில் நயமாகப் பாடுகிறேன்டி காட்டு வழியிலே விறகு பொறுக்கப்போறவளே" "வாட்டும் வெயில் உனக்குப் புரியாதாடா கட்டு விறகை வந்து சுமக்கமாட்டாயோ" "வெட்டிப் பேச்சில் வெகுளி காட்டுறாயடி குட்டைப் பாவாடையில் என்னை ஆட்டுபவளே" "கேட்காத இனிமை காதில் தருபவனே வாட்டாத நிலவு நானென்று தெரியாதோ" "ஒட்டி உடையில் பெண்மை சொல்லுபவளே கட்டி அணைக்க நெஞ்சம் துடிக்குதடி" "நாட்டி வளர்த்த காதல் எல்லாம் கூட்டிக் குழைத்து உனக்குத் தரவாடா" "தட்டிக் கேட்க துணையாய் வாறேன்டி ஒட்டி உரசி போவமா பெண்ணே" "மொட்டு விரிந்து வாசனை தரவாடா போட்டி போட்டு கொஞ்சிக் குலாவவா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. உண்மை. ஒவ்வொரு அரச அதிகாரிகளும், திணைக்களங்களும், சர்வாதிகாரிகள் போலவே நடந்து கொண்டனர் .யாரும் சட்டம் ஒழுங்கு சேவை என்று செய்யவில்லை. கேள்வி கேட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், ஒதுக்கப்பட்டார்கள், பழிவாங்கப்பட்டார்கள். அடிதடி காரர் நிஞாயமற்ற வகையில் எல்லா சலுகைகளையும் சேவைகளையும் பெற்றுக்கொண்டார்கள், மரியாதை செலுத்தப்பட்டார்கள். போலீஸ் தனக்குரிய கடமையை செய்யாது மற்ற துறைகளில் மூக்கை நுழைத்து செயற்பட்டது. தாடியர் அவரது அமைச்சு கடற்தொழில். ஆனால் அதை விட்டு மற்ற எல்லாத்துறைகளையும் பற்றி கருத்துச்சொல்வார். இனிமேல் இவர்களுக்கெல்லாம் இருக்கு ஆப்பு. முடியா விட்டால் பணியில் இருந்து ஒதுங்கி செய்யக்கூடியவர்களிடம் கையளியுங்கள் பணியை.
  7. தமிழரசு கட்சியின் உதவாக்கரை பேச்சாளர். 😂 🤣
  8. ஊருக்கு போனபோது....கனடாவில் பிறந்த பெறாமக்களும் வந்தாளவை..யாழ்ப்பாணம் சுற்றிப்பார்க்க கூகிளில்தேட ..ஒரே பவுத்த விகாரைதான் வருகுது..முதலாவது மாதகல் சங்கமித்தை வந்த இடத்துக்கு போனால் ..ஆமிதான் கூட நிக்குது..பெரூகு ஒரு பிக்கு முத்தம் கூட்டுகிறார்...அடுத்து சுன்னாகம் பனங்காணிக்கை பாத்தி போட்டமாதிரி 6-7 கும்பம் இருந்தது..மரத்துக்கு கீழை ஒரு சின்ன புத்தரும் இருக்கிறார்...அங்கையும் ஆமிதான் காவல்..ஒரு புக்கு முகம்கழுவி சுவாமி கும்பிடுகிறார்.. .. இப்படிப்பார்த்தால்...யாழ்ப்பாணத்தில் 3 லட்சம் ஆமி வேணும்தானே...ஒரு நப்பாசையிலை ஒர்ரு ஆமியைகேட்டன் ஒரு செல்பி எடுப்பமோவென்று...தூக்கினானெ துவக்கை ..கிட்ட வராதை போவென்று...அதுக்குபின்னர் பெட்டையள் நோ கூகிள் சேச்..
  9. காரிய வம்சத்தின் சந்தேகம் அதுவல்ல, இப்போ, ஊழல்வாதிகளை விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். ஒவ்வொருவராக சுழி இழுக்கப்போகுது. இவர்கள் எல்லோரும் சிக்குவது உண்மை. அதற்கிடையில் எங்கே கொழுத்தினால் பத்தும் என்று ஒவ்வொன்றாக பரீட்சித்துப்பார்க்கிறார்கள். சேரவும் முடியவில்லை, தப்பவும் முடியவில்லை இன்று அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள் நிலைமை. அவர்கள் தம்மை பாதுகாப்பதற்காக இவ்வாறு சொல்கிறார்கள், செய்கிறார்கள். முன் போல் வீதிகளில் இறங்கி கர்ச்சிக்க முடியவில்லை, அவர்கள் போட்ட முடிச்சு இன்னும் இருக்கு. எப்படியாவது இந்த அரசை கலைத்து தம்மை காப்பாற்ற வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று ஆளாளாளுக்கு கண்சிமிட்டி செய்த வேலையெல்லாம் செய்து ஏமாற்ற முடியாது. நல்லவேளை! இந்த கூத்தாடிகளை அனுர தனது ஆட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஒருபுறம் எதிர்க்கிறார்கள், மறுபுறம் சேர்த்துக்கொள்ள மாட்டாரா என ஏங்குகிறார்கள். அங்கு மட்டுமல்ல எங்கள் பக்கமுந்தான். அனுராவுக்கு சட்ட உதவி செய்யவே தவம் கிடக்கிறார்கள். தன் பிரச்சனையை தீர்க்க வழி தெரியவில்லை அதற்குள் அனுராவுக்கு உதவிசெய்யப்போகிறேன் என்று தவம் கிடக்கிறார்கள்.
  10. நாங்கள் வாழும் சமூகத்தில் எது சரி தவறு என்பதனை ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறோம், இவை கேள்விக்கிடமின்றிய கோட்பாடாக பின்பற்றுகிறோம், எமது Perception இல் இவை ஆதிக்கம் செலுத்துகிறது, இதே மாதிரியான சமூக சூழலில் வாழ்ந்தமையால் சில விடயங்களை எங்கு வெளிநாடு சென்றாலும் எம்மால் மாற முடிவதில்லை. நெருப்பு சுடும் என கூறினால் அதனை அனுபவத்தின் பின்னரே உணர்வோம் அல்லது அனுபவஸ்தர்களை பின்பற்றி அதனை தவிர்ப்போம் என இரண்டு தெரிவுகள் உண்டு, முடிவு எமது கையில். மற்ற சமூகங்களில் இருக்கும் குறைபாடுகளை சுட்டி காட்டும் எம்மால் எம்மிடையே உள்ள குறைபாடுகளை கூட இனங்காண முடியாமல் இருக்கின்றது, இது அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான ஒற்றுமை. மதங்கள் மக்களை நல்வழிப்படுத்துபவை, ஆனால் அவை மிகவும் பழமையானவை, அதில் குறைபாடுகள் உள்ளன அதனை நிவர்த்தி செய்ய உள்ள ஒரு வழி! அனைவருக்கும் கல்வி. எனது அம்மாவின் அம்மா தீவிர சாதி வெறியராக இருந்தார், அதற்கு நேரெதிராக எனது தாயார் இருந்தார், இருவருக்குமிடையே ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது! கல்வி (ஆனால் படித்த பலரே எமது சமூகத்தில் சாதியத்தினை தூக்கி பிடிப்பவர்களாகவும், அவ்வாறானவர்களை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர், ). பெண்களின் கல்வி மிக முக்கியமானது, ஒரு பெண்ணிற்கு கல்வியூட்டினால் அதனால் ஒரு முழுகுடும்பமும் பயனடையும், ஒரு சமூகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கல்வி அறிவுடன் இருந்தால் அந்த சமூகம் மிக சிறந்த சமூகமாகும். முன்னர் எமது சமூகத்தில் கூட பெண்கள் கல்வியினை மறுக்கின்ற நிலை காணப்பட்டது (மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அனுக்கூலம் பெறும் தரப்பு பெண்கள் கல்வியினை விரும்புவதில்லை) ஆனால் பெண்களின் கல்வியினை மறுக்கின்ற சமூகமாக இருக்கும் நிலை மோசமானது, இதனை அவர்கள் சமூக எதிர்காலம் கருதியாவது மாற்ற முன்வரவேண்டும். அனைத்திலும் நல்லது கெட்டது உண்டு, அதனை உய்த்தறிந்து தெரிவு செய்ய சிந்திக்க கூடிய கல்வி வேண்டும். இந்த வேகமான உலகில் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து சமூக பொருளாத முன்னேற்றத்தினை பெற்ற சமூகமாக மாற முக்கியமாக கல்வியில் முதலீடு செய்யவேண்டும் என கருதுகிறேன், அந்த கல்வி அனைவருக்கும் கிடைப்பதனை சட்டம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.
  11. பெண்களின் கருப்பைகள் ஆண்களுக்கு சொந்தமில்லை! குழந்தை பெற்றுக்கொள்வதா இல்லையா என்பது அவர்களின் சுதந்திரமாக இருக்கவேண்டும். தலிபான்கள் பெண்களை வெறும் பிள்ளைபெறும் இயந்திரமாகவே பார்க்கின்றார்கள். பெண்களின் கல்வியை, மருத்துவம் உட்பட, முற்றாக அழித்து ஒரு காட்டுமிராண்டி சமூகத்தைக் கட்டமைக்கின்றார்கள்.
  12. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை . ........! 👍
  13. தமிழர்கள் பலர் செய்கின்ற இப்படியான சம்பிரதாய நிகழ்வுகள் போன்றதே இலங்கை சுதந்திர தின கொண்டாட்டமும்.
  14. இங்கு பிரச்சினை தலிபான் அல்ல, சித்தாந்தம் (மதம்) அனைத்து பிரச்சினைக்கும் காரணமாக அமைகிறது, அது தன்னை தக்கவைக்க பெண்கல்வி, சுதந்திரம் என்பவற்றை அழிக்க நினைக்கிறது அதன் மூலம் காலதால் உக்கி போன கோட்பாடுகளுக்கு ஏற்படும் சவால்களை தவிர்க்க விரும்புகின்றது, மக்கள் சிந்திக்க கூடாது என்பதே அதன் நோக்கம்.
  15. உண்மை, எனக்குத் தெரிந்து ஒரு மருத்துவத் தம்பதிகள் இப்படி செய்து பிள்ளை பெற்று இருக்கிறார்கள் கொழும்பில்
  16. Kerala · Rejoindre Vijayan Nair · tprndsoeSomuufmit261thiah2g9mg2fu8c21i1994a72h11 tc501m304m5 · GoodMorning & Happy New Year
  17. நான் மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் தகவல்களை பார்த்து வருகின்றேன். இப்போது தனது யூரியூப் ஊடாக காணொளிகள் பிரசுரம் செய்கின்றார். பல பொழுது போக்கு அம்சங்களுடன் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளையும் பற்றி உரையாடுகின்றார். அரசியல் களத்தில் பல புதிய விடயங்களை புகுத்தி வருகின்றார். இனிவரும் தேர்தல்களில் இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இவரை ஓரம் கட்டுவதாக நினைத்து செய்யப்பட்ட விடயங்கள் அவரை வளர்த்துவிடுகின்றன. தொடர்ந்து அவதானிப்போம்.
  18. செந்தமிழன் சீமான் அண்ணாவின் பரம்பரையில் மன்னிப்பு கேட்கும் வழக்கம் மட்டுமல்ல பொய், பித்தலாட்டம், கப்ஸா, பெண்களை ஏமற்றுதல் எவருக்குமே இல்லை! அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா! பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம். மண்டியிடாத மானம் அல்லவா இது!😂 இப்ப கொஞ்சநாள் எமவுண்ட் ஒழுங்காப் போகுது போலை அதுதான் விஜி அண்ணி பேசாம இருக்காங்க!😂 எண்டு மக்கள் பேசிக்கிறாங்க!
  19. வருடம் பிறந்து பாட்டும் பரதமுமாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
  20. உலகம் இன்று நீதி தர்மம் அறம் அத்தனையும் தொலைந்து சுழல்கிறது எங்குமே யுத்த சத்தங்களும் மனிதப் பேரழிவுமாய் பசி பட்டினியுமாய் மனிதத் துன்பங்களுமாய் கிடக்கிறது. இனி பிறக்கும் வருடத்தில் எங்கும் மனிதாபிமானமும் அமைதியும் சமாதானமும் நிலவி இருள் கடந்து ஒளி பிறக்கட்டும். -பா.உதயன் செந்தமிழாய் எங்கும் இசை- காலை புலரும் நேரம் கடல் கரையில் ஒரு ஓரம் தானாய் வந்த பறவை எல்லாம் ஏதோ சொல்லிப் பாடுது ஏழு கடல் ஓடி வந்து எத்தனையோ வர்ணம் தீட்டும் காடு எல்லாம் ஆடி ஆடி கவிதை பல பேசும் ஆலமரம் செழித்து நிற்கும் அன்னைத் தமிழ் இசை பாடும் பாடி வரும் தென்றல் காற்று பண் இசைத்து ஓடி வரும் வசந்தம் எல்லாம் பூத்திருக்கும் வானம் எங்கும் கவி பாடும் பச்சை கிளி பறந்து வந்து மெட்டோடு பாட்டிசைக்கும் வயல்கள் எங்கும் பச்சையாக புல் முளைக்கும் மழைகள் வந்து துளிகளாக நனைந்திருக்கும் ஆலயத்தின் அருகில் ஒரு ஆலமரம் ஆடி நிற்கும் அங்கு வந்து மெல்ல மெல்ல குயில்கள் கூவும் செந்தமிழாய் எங்கும் இசை எட்டுத் திசை ஒலிக்கும் எம் தமிழே எழுந்து வர எத்தனையோ மணி ஒலிக்கும் எங்குமே கவிதை மொழி எம் தமிழில் உயிர்க்கும் வண்ணமான வாழ்வு தனை தமிழ் எங்கும் சொல்லும் ஆற்றம் கரை ஓரம் அன்னை சக்தி வாழும் கோவில் மணி ஏழு கடலும் ஒலிக்கிறது எங்கும் அமைதி கொள்கிறது எங்கிருந்ததோ பெண் ஒருத்தி ஏழு சுரம் இசைக்கின்றாள் இனி ஒரு குறை இல்லை என்றே இருள் விலகப் பாடுகிறாள். பா.உதயன்🌺
  21. லைக்கா பெரிய படங்களை தயாரிப்பதை விட்டு சிறிய படங்களைத் தயாரித்தால் புதியவர்களின் திறமைகளை வெளிப்படுத்தலாம் பெரிய நட்டமும் வராது.ரெட்ஜெயண்டும் தனக்குத்தான் விநியோக உரிமை என்று கேட்காது. ஆனால் அந்தப்படங்களை ஓட விடாமல் எல்லா தியேட்டர்களையும் தமது வெளியீடுகளுக்குப் பாலிப்பார்கள். ஓடிடியில் வெளியிட்டு நல்ல வரவேற்பு கிடைத்து விட்டால் அதன்பிறகு தியேட்டர் தானாக் கிடைக்கும்.
  22. சமையல் கவிதையுடன், புத்தாண்டு வாழ்த்துக்கள். வவெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்கும்..ஆம்மன்கோவில் திருவிழாவிற்கும் போய் வர கையும் கணக்கும் சரியாப்போம்..
  23. லைக்காவின் தாயாரிப்புக்களில் 90% சராசரி படங்களாகவும் தோல்வி படங்களாகவும் பேரழிவு தயாரிப்பாகவுமே அமைந்தன. ஆனால் 2024 தயாரிப்புக்களில் 1000 கோடி நஷ்டம் என்றால் அதில் குறைந்தது 400 கோடி லைக்காவையே சாரும். லைக்கா திரைப்பட விளம்பரங்களுக்கு செலவிடுவதில்லையென்றும் அதுவே தோல்விகளுக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள், மிக விரைவில் லைக்கா லண்டன் நோக்கி விமானம் ஏறும் வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். உலகவியாபாரத்தின் சூட்சுமம் தெரிந்த லைக்கா உலக வியாபாரத்தில் குப்புற விழும் வாய்ப்பு அதிகமுள்ள சினிமா துறையில் பணத்தை கொண்டுபோய் லொறிலொறியாக கொட்டுவது ஏன் எனும் மர்மத்துக்கான விடை அவர்களுக்கே சொந்தமானது. அப்படி சத்தமாக சொல்லாதீர்கள் தமிழ்சிறி, ஏனென்றால் எங்கட ஆக்களுமெல்லோ சாகவேணும். இது இன்றைய யாழ்ப்பாண கூத்து: கடவுளே அஜித்தே என கதறிய இளைஞர்கள் யாழில்
  24. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
  25. இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதே கேலிக்கூத்தான விடயம், இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையின் தற்போதய நிலை, பல இன வன்முறைகள், இன அழிப்பு போர்கள் மற்றும் பட்டினி, பொருளாதார பிரச்சினை என இலங்கை நாடு உள்ள நிலையில் இலங்கை மக்களின் மனங்களில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் மனநிலையே காணப்படுகிறது. மக்கள் பட்டினியிலும் அடக்குமுறைகளுக்குள்ளும் அவலப்படும் போது சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு? சுதந்திரம் கிடைத்து எதனை சாதித்துவிட்டார்கள்? தமிழ்த்தலைவர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதே தவறு.
  26. தேசியக்கொடி புகழ் சம் இல்லாதபடியால்..இம்முறை சும் போவார்...கொடி பிடிப்பார்.......அசைப்பார்
  27. நல்ல ஒரு யோசனை, அண்ணா. 365 எபிசோட்............ ஒவ்வொன்றும் விளக்கம் மற்றும் அளவுகளுடன். இப்பவே ஒரு நட்சத்திரம் உதயமானது போல ஒரு உணர்வு..............🤣.
  28. பிறகென்ன "செட்டன் வந்தல்லோ செய்தி சொல்ல செட்டன் (அனுரா தவ்வல்கள்)வந்தல்லோ"....'சோ நோ டமில் ப்ரொப்பளம் ஒன்லி சிறிலங்கன் ப்ரொப்பள்ம் '.. உப்படித்தானே நம்ம ஈழத்து எம்.ஜீ.ஆரும் வந்த புதிசில படைப்பலத்துடன் அட்டகாசமா ...நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என ..திரிந்தவர் ...இப்ப
  29. நாங்கள் வரவேற்காவிட்டாலும் அது வந்தேதான் தீரும். இந்தா பிறந்துவிட்டது 2025 எனும் புதுக்குழந்தை!
  30. அரண்மனை 4 லைக்கா தயாரிக்கவில்லை. அருண்குமார் நடித்த மிஷன் சாப்டெர் 1 , வேட்டையன், இந்தியன் 2, லால்சலாம் ஆகிய 4 படங்களைத்தான் லைக்கா தயாரித்தது
  31. 'லப்பர் பந்து', 'நிறங்கள் மூன்று' போன்ற படங்களை எடுப்பதற்கு சில கோடிகளே, ஐந்து கோடிகள் அல்லது குறைவாகவே, போதும் என்று நினைக்கின்றேன். இவற்றை விடவும் குறைந்த செலவில் பல படங்கள், நூற்றுக் கணக்கில், வந்திருக்கின்றன போல............ நாம தான் பார்க்காமல் விட்டுவிட்டோம்.......... நீங்கள் சொல்லியிருக்கும் ஆயிரம் கோடி கணக்கு சரியே. நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை, ஆனால் தனிப்பட்ட சிறிய தயாரிப்பாளர்களின், விநியோகஸ்தர்களின் நிதிநிலைக்கு இது மிகவும் அதிகமே.
  32. நன்றாக இருக்கின்றது, உதயன்.
  33. அண்ணாமலையாருக்காக நாங்கள் எல்லோரும் பரிதாபப்படவேண்டும். தமிழ்நாட்டில் தான் பாஜகவிற்கு ஆகக்குறைந்த எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அமித்ஷா கூப்பிட்டுவைத்து குட்டி இருக்கின்றார். மலையார் நான் இங்கேயே இல்லையே, லண்டனில் இருந்தேனே என்று தப்பப் பார்த்திருக்கின்றார். ஆனால் அது அமித்ஷாவிடம் எடுபடவில்லை. இப்ப சாட்டையால் அடிப்பது, செருப்பு இல்லாமல் நடப்பது என்று ஒரே நேர்த்திக்கடன்களாக அண்ணாமலையார் செய்து கொண்டிருக்கின்றார்............ விஜய் காரில் வந்து ஆளுனரிடம் மனு கொடுத்து, அப்படியே காரிலேயே கிளம்பி, தன் போராட்டத்தை அவர் வழியிலேயே செய்துவிட்டார். அவர் ஆளுனரை பனையூருக்கு வரச் சொல்லாமல் இருந்ததே விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல் தான்.............. மாநிலங்களுக்கு ஆளுனரே தேவை இல்லை என்று விஜய் முன்னர் சொல்லியும் இருந்தார்.............. சீமான் கட்சிக்காரர் ஒருவரும் சில மாதங்களின் முன் இப்படியான ஒரு விவகாரத்தில் மாட்டுப்பட்டு போக்சோ சட்டத்தில் உள்ளே இருக்கின்றார்............. ஆதலால் மெதுவாகத்தான் வருவார், அப்படியே பட்டும்படாமலும் போயும் விடுவார்............
  34. அழகிய கவிதைக்கு நன்றி. 👍
  35. 👍............. பெரிய நிறுவனங்களுக்கு நீங்கள் சொல்வது பொருந்தும். உதாரணமாக, சண் பிக்சர்ஸ் இப்படிச் செய்யமுடியும். ஆனால், விஷால் போன்ற ஒருவர் பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் பல கோடிகளை கடன் வாங்கி படமெடுத்து நஷ்டப்படும் போது, அந்தக் கடன் விஷாலின் வாழ்க்கையை பாதித்துவிடுகின்றது. இதைப் போன்றே ஊரிலிருந்து அதுவரை தேடியதை எல்லாம் சினிமாக் கனவுகளுடன் கொண்டு வரும் பல தயாரிப்பாளர்கள். நடிகர் சசிகுமார் இன்னுமொரு உதாரணம். ஆனால், சினிமா எவருக்காகவும் நிற்பதில்லை, அது கால வெள்ளத்தில் மூழ்காமல், தேவையான மாற்றங்களுடன், ஓடிக் கொண்டே இருக்கும். மனிதர்கள் தான் மூழ்கிப் போகின்றனர்.
  36. சந்தோசமான விசயம். அழிவை நோக்கிச் செல்லும் தமிழ் சினிமாவிற்கு வாழ்த்துக்கள். "கட் அவுட்டுக்கு" பால் ஊத்துறவனும், மண் சோறு சாப்பிடுறவனும், நடிகர் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறவனும், சினிமாவில் தனது அரசியல் தலைவனை தேடுகின்றவனும் இனி தூக்குப் போட்டு சாவுங்க.
  37. சென்றவார "நீயா நானா " ( குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இரட்டை வருமானத்தில் விருப்பம்போல் வாழ்வது அதாவது dink, என்னும் வாழ்வியல் duel income no kids) பார்த்ததில் சுதந்திரம் என்னும் போர்வையில் இளம் சந்ததியின் வாழ்க்கை போகும் முறையைப் பார்க்கும்போது இவர்களின் தலிபான்களின் ) கட்டுப்பாடுகள் சரியோ என்று யோசிக்க வைக்கிறது ..........! 😴
  38. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஏராளன்
  39. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் ...........!
  40. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎂🎊
  41. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஏராளன்.
  42. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஏராளன்! தேவமைந்தனுக்கு முதல்நாள் ஏராளன் பிறந்தார் என்று ஞாபகத்தில் சேர்த்துக் கொள்கின்றேன்...........❤️.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.