Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14676
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    23920
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/05/25 in all areas

  1. இப்பதான் விதைகளை நாட்டுள்ளேன்😁
  2. கீழே முதலாவது வீடியோ முறையில் கற்றாழையை பயன்படுத்தி பல கன்றுகளை உருவாக்கலாம், நான் கொய்யாவை இந்த முறையில் செய்து 1 மாதத்தில் அரும்பு விட்டத்து, இப்ப கொத்து மல்லிகையை வெட்டி நட்டுள்ளேன். முட்டையையும் அடித்து மண்ணுடன் கழந்துவிடுங்கள், நல்ல சத்து
  3. சாதாரண நிகழ்வுகளுக்கும் தேவையில்லாமல் அதிகப்பிரசங்கித்தனமான தலையங்கங்கள் ........! 😁
  4. யாழ்ப்பாணத்தின் அனுமதியுடன் சுண்ணாம்புக் கல் அகழ்கிறோம் என்று சொன்னால்.. நமது எதிர்காலச் சந்ததியிற்கு கடல் நீரை ஊரிற்குள் வரவேற்று நாசம் செய்கிறோம் என்று அர்த்தம். அரச அனுமதி என்பது புவியில் அடிப்படை ஆய்வுடன் கொடுக்கப்படுகிறதா என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும். யாழ்ப்பாணம் கடலால் சூழ்ந்த பிரதேசம்; அப்படியிருப்பினும் எப்படி நன்னீர் வளம் இருந்தது என்பதற்கு விஷேச புவியியல் அமைப்புக் காரணமாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நிலவியல் அமைப்பு நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுக்கை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர் ,நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். இந்த வகையில் இலங்கையில் காணப்படும். நீர்ப்படுக்கைகளை ஆறுவகையாக (C.RPanboke, என்ற அறிவியலாளர்) வகைப்படுத்தி இருக்கிறார். இந்த ஆறுவகை நீர்ப்படுக்கைகளில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப்படுக்கை மிக விசேடமானதும், தனித்துவமானதுமான ஒன்றாகும். இதனை Shallow Karstic Aquifer என்று குறிப்பிடுவர். இதனை தமிழில் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை என தமிழில் கூறலாம். முழு யாழ் குடாநாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால்தான் நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இதுதான். இந்தப் பாறையெல்லாம் அனுமதி பெற்று உடைத்துக்கொண்டிருந்தால் கடல் உள்ளுக்குள் வந்தால் பிறகு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி கதை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! ஏற்கனவே எண்ணைக் கழிவு மாசு, விவசாய இரசாயன மாசால் பாதிப்புற்றிருக்கும் யாழ்ப்பாண நிலத்தடி நீரிற்கு கடல் நீரையும் வரவேற்கும் அரிய முயற்சி இந்த சுண்ணாம்புக்கல் அகழ்வு. Sivakumar Subramaniam
  5. வளர்ச்சியினை தூண்டும் பொடி தேவையில்லை, மரத்தில் இருக்கும் ஒரு கொப்பில் ஒரு அங்குலத்திற்கு மோதிரம் போல பட்டையினை நீக்கும் போது மரத்திலிருந்து குறித்த கொப்பிற்கு தேவையான நீர் மற்றும் சத்துக்கள் செல்லாது ( கீழ் மரத்திற்கும் கொப்பிற்குமிடையே பட்டை மூலமான தொடர்பற்ற நிலையில் கொப்பிற்குத்தேவையான நீர் மற்றும் சத்துக்களை பெறுவதற்காக வேர்கள் உருவாகும்). 3 மாத காலத்தில் மரத்திற்கு தேவையான அளவில் வேர்கள் அந்த மண் பையினுள் உருவாகிவிடும், வளவனின் காணொளியில் உள்ளது.
  6. வளவன் இணைத்துள்ள இந்த காணொளியில் உள்ளதனை போல செய்து பாருங்கள் வெற்றி வாய்ப்பு கிட்டதட்ட 90 % மேல் உள்ளது, இவ்வாறு முன்பு பல தாவரங்களை பதியம் செய்துள்ளேன், ஊரில் நான் வெறும் லக்ஸ்பிறே பையினை பயன்படுத்தியதாக நினிவுள்ளது எந்த பையாக இருந்தாலும் பயன்படுத்தலாம், அத்துடன் மண்ணும் அந்த மண்ணை தொடர்ச்சியாக ஈரப்பதனில் வைத்திருப்பதற்காக பிளாஸ்ரிக் போத்தலில் ஊசி துளையிட்டு தண்ணீர் மிக மெதுவாக சொட்டும் வண்ணம் பதியத்தின் மேல் இணைத்திருந்தேன். ஒரு மாதங்களின் பின்னர் உங்களால் ஆதன் வேர்களை பார்க்கலாம் (3 மாதத்தின் பின்னர் பதியத்தினை மரத்திலிருந்து வெட்டி வேறாக்கலாம்) 1 மீட்டர் உயரமான தாவரங்களைக்கூட இதனால் உருவாக்கலாம், சில வேளை வேர்கள் பூரணமாகாவிடில் அல்லது தாவரம் (பதியம்) பெரிதாக இருந்து அதன் இலைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அந்த வேர்களினால் வளங்க முடியாமல் தாவரம் சோர்ந்து போகுமாயின் தாவரத்தினை நேரடி சூரிய ஒளி பரவுவதை தடுத்தல், இலைகளை குறைத்தல் செய்யலாம் (சிறிய தாவரமானால் பெரிய பொலிதீன் பையினால் அதனை மூடிநீர் இழப்பினை தவிர்க்கலாம்). ரசோதரன் இணைத்த இணைப்பில் 3 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றுவதன் நோக்கம் பங்கஸ் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு, ஒட்டுத்தாவரத்தினை பொலித்தீனால் மூடும் போது ஒட்டு பகுதியில் அந்த பங்கஸ் தாக்கம் ஏற்படலாம் (காயம் உள்ள பகுதி). தாவரங்களை ஒட்டும் போது ஒட்டப்படும் தாவரத்திற்கும் ஒட்டும் தாவரத்தின் வளர்ச்சி திசுக்களின் தொடுகை இருந்தாலே அந்த ஒட்டு வெற்றி அடையும், தாவரத்தின் பட்டையினை அடுத்து உள்ள பகுதியில் இந்த வளர்ச்சி திசுக்கள் உண்டு, பொதுவாக இரண்டு தண்டுகளும் ஒரே அளவில் இருப்பது இரண்டு வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை அதிகரிக்கும், எனது இந்த கத்தரி ஒட்டில் கத்தரியின் தண்டு சுண்டைங்க்காய் மரத்தின் தண்டினை விட பெரியதாக இருந்தது அதனால் 'V' வடிவ வெட்டினை செய்து அதிக வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை ஏற்படுத்த முயன்றேன். இந்த விடயங்கள் அனைத்தும் இலங்கை இடைநிலை பாடசாலை விஞ்ஞான புத்தகத்தில் உள்லதாக நினைவுள்ளது, இணையத்திலும் இது தொடர்பான விபரங்கள் இருக்கும் என கருதுகிறேன்.
  7. நானும் இப்படி பலவித முயற்சி செய்வதுண்டு . கருவேப்பிலை தடியில் root பவுடர் பூசி , மாங்கொட்டையை பிரித்து விதையை பொலித்தீன் பையில் கட்டி எல்லாம் செய்வதுண்டு .......வரும் நாலு இலை .....அதைத்தொடர்ந்து குளிரும் வந்து விடும் . ...... எப்படிப் பாதுகாத்தாலும் சித்திரை வர அவை மீளா நித்திரையாகி விடும் .......ஆயினும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் செய்வதுதான் வளமை . ....... எல்லாம் ஒரு ஆசைதான் ...... கைராசியும் தேவை போல் இருக்கு . .......சரியாக செய்து எடுப்பவர்களுக்கு பாராட்டுக்கள் . .......! 😁
  8. கப்பித்தான், அழகு குணசீலன் புள்ளையானின் அபிமானி! அவர் அப்படி இப்படி எழுதினாலும், சுமந்திரன் விசயத்தில தெளிவாத்தானே இருக்கார். நீங்கள் சுமந்திரன் அபிமானி என்பதால் பொங்குகின்றதாக்கும்!😁
  9. "ஆடம்பரம்" போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரின் நடுவே, எழுச்சிமிக்க ஒரு தமிழ்க் குடும்பம் கம்பீரமும் ஆடம்பரமும் நிறைந்து காணப்பட்டது. அவர்களைச் சூழ்ந்து இன்னும் சவால்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் அதன் மத்தியிலும் தமக்கு இயல்பான, பழக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடிந்தது. உண்மையில் ஆடம்பரம் என்பது பார்ப்பவரின் பார்வையில் தான் உள்ளது. நேற்று (கடந்த காலம்) ஆடம்பரமாகக் கருதப்படுவது இன்று (தற்போது) ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்று ஆடம்பரமானது ஸ்மார்ட்போன்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சொகுசு வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகள் போன்ற உயர் தொழில்நுட்ப கேஜெட்டுகளை உள்ளடக்கியது. விரைவான இணைப்புகள் மற்றும் இருப்புக்கான வசதிகள் ஆகியவை நவீன ஆடம்பரத்தின் மிகவும் மதிப்புமிக்க அம்சங்களாகியுள்ளன. ஏன் உணவு உடை கூட “தென்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி, உடுப்பது இரண்டே" என்ற கருத்தில் இருந்து மாற்றம் அடைந்துதான் உள்ளது. அவரவர் வாழும் சூழல் மற்றும் அவர்களின் வசதிகளைப் பொறுத்து. இலங்கையின் இறுதிக்கட்ட இராணுவ யுத்த நகர்வின் போது, வன்னிப்பிரதேசத்தில் இருந்த மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றுமோரிடத்திற்கு விரட்டியடிக்கப்பட்டு இறுதியாக முள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து அவர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அப்போது, பிள்ளைகள் மற்றும் தாய்மார் என குடும்ப உறவினர்களின் கண்முன்னாலேயே கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி சரணடையும் சம்பவம் இடம்பெற்றிருந்தது. ஆனால் இவ்வாறு சரணடைந்தவர்களை அதன் பின்னர் அவர்களது உறவினர்கள் இன்னும் காணவில்லை. சரணடைந்தவர்களின் நிலைமை என்ன அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் அல்லது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற மக்களின் போராட்டமும் மற்றும் காணி பறிப்பு, பலவந்த குடியேற்றம், திடீரென முளைக்கும் புத்தருக்கு எதிரான சாத்வீக கொந்தளிப்பால் இன்னும் அங்கு அமைதியில்லா அரசியல் மோதல்கள் தொடர்ந்து இருந்தபோதிலும், மதியழகன் குடும்பம் தங்கள் செல்வத்தையும் சமூக அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொண்டனர். குடும்பத்தின் தலைவரான மதியழகன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார், அவர் தனது செல்வத்தை ஜவுளி மற்றும் கட்டுமானம் உட்பட பல்வேறு தொழில்களில் பன்முகப்படுத்தினார். அவரது தீவிர வணிக புத்திசாலித்தனம், துன்பங்களை எதிர்கொண்டாலும் குடும்பத்தை செழிக்க அனுமதித்தது. மதியழகன் குடியிருப்பு வவுனியாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த ஒரு அற்புதமான மாளிகையாகும். வீட்டின் பிரமாண்டம் அதன் ஈர்க்கக்கூடிய கட்டிடக்கலை, பசுமையான தோட்டங்கள் முதலியவற்றை கொண்டு இருந்ததுடன், பாதுகாப்பிற்காக உயர்ந்த சுவர்களாலும் சூழப்பட்டு இருந்தது. உள்ளே, வீடு நேர்த்தியான கலைப்படைப்புகள், பழங்கால பொருட்கள் மற்றும் சிறந்த அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டும், பார்ப்பவர் கண்களுக்கு, அது அமைந்து இருக்கும் சூழலைப் பொறுத்து ஒரு ஆடம்பரமாக காட்சி அளித்தது. அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றிவிட்டது என்ற கருத்து பரவலாக இருந்தாலும், மதியழகனின் மனைவி பொற்கொடியை அப்படி முழுதாக சொல்லமுடியாது. இவர் கலையில் வல்லவர் மற்றும் கருணையுள்ள உள்ளமும் படைத்தவர். அவர் அடிக்கடி ஆடம்பரமான விருந்துகள் மற்றும் கலாச்சாரக் கூட்டங்களை ஏற்படுத்தி அதற்கு நகரத்தின் உயரடுக்கினரை அவர்களின் வீட்டிற்கு அழைப்பதும் உண்டு. என்றாலும் தம்மைச் சுற்றியிருந்த மக்கள் படும் துன்பங்களை அவர் மறக்கவில்லை. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு தம்மால் இயன்ற ஆதரவையும் வழங்கி வந்தார். இதற்கு அவர்களின் வீட்டில் நடைபெறும் விருந்துகளும், அதனால் ஏற்பட்ட பல்வேறு பட்ட உயரடுக்கினரின் தொடர்பும் உதவின. அவர்களின் இரண்டு குழந்தைகளான ஆரன் மற்றும் ஆதிரை ஆகியோருக்கும் சிறந்த கல்வி மற்றும் வாய்ப்புகள் வழங்கியதுடன் ஆரன் லண்டனில் படிக்கவும் அனுப்பப்பட்டார், அதேவேளை ஆதிரை கொழும்பில் உள்ள ஒரு புகழ்பெற்ற சர்வதேச பள்ளியில் படித்தார். குடும்பம் தங்கள் குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் உறுதியாக இருந்ததுடன், குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் மற்றும் தாம் வாழும் பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு சாதகமான பங்களிப்பை வழங்கவும் தயார் படுத்தினார்கள். உண்மையில் அவர்களின் ஆடம்பர வாழ்க்கை வெறும் பொருள் செல்வத்தைப் பற்றியது அல்ல; அவர்களின் பரம்பரை செழித்து வருவதற்கான ஒரு சான்றாகவும் இருந்தது. நகரின் மறுபுறம், ஒரு சுமாரான சுற்றுப்புறத்தில், வாணன் என்ற இளைஞன் வசித்து வந்தான். ஆதிரைக்குப் பழக்கப்பட்ட செல்வமும் ஆடம்பரமும் அவனுக்கு இல்லை என்றாலும், அவன் அறிவால் நிறைந்தவனாகவும், நல்ல இதயத்தை உடையவனாகவும் இருந்தான். வாணன் தனது வாழ்க்கையை கல்வி மற்றும் விளையாட்டுக்காக அர்ப்பணித்திருந்தான், மேலும் அவன் தனது திறமை மற்றும் இரக்கத்திற்கு பெயர் பெற்ற உயர் தகுதி வாய்ந்த மருத்துவனாக சித்தியடைந்து, வவுனியாவில் தன் முதல் பணியை ஆரம்பித்தான். வாணனின் தந்தை ஒரு சாதாரண தோட்டக்காரனாக இருந்ததால், அவன் படிக்கும் காலத்தில் கஞ்சியுடன் வெங்காயம் மிளகாய் கடித்து சாப்பிட்ட காலமும் இருந்தது. பிறகு பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது பல கறிகளுடன், நண்பர்களுடன் சுவைத்து சாப்பிட்ட காலமும் இருந்தது. அது அவனுக்கு அப்ப ஒரு ஆடம்பர உணவாக இருந்தது. ஆனால் இன்று அவன் ஒரு மருத்துவனாக, உயர் சம்பளத்தில் வந்ததும், அந்த உணவு அவனுக்கு ஒரு சாதாரண உணவாக அமைந்துவிட்டது. உடைகளும் அப்படியே! அதுதான் ஆடம்பரம்! ஒருமுறை ஆதிரை விடுமுறையில் வவுனியா வந்து இருந்தாள். இப்ப அவள் கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி. அவளின் ஒரு துரதிஷ்டமான நாளில், வாணன் பணிபுரிந்த மருத்துவமனைக்கு கொஞ்சம் அருகில் உள்ள தூசி நிறைந்த தெருவில் ஆதிரையின் கார் பழுதடைந்தது. மன உளைச்சலும் விரக்தியும் அடைந்து, தன் பயணத்தை எப்படித் தொடர்வது என்று யோசித்துக் கொண்டே காரை விட்டு இறங்கினாள். அப்போது, ஆஸ்பத்திரிக்கு செல்லும் வாணன் அவளின் இக்கட்டான நிலையைக் கவனித்தான். அவன் உடனடியாக அவளை அணுகி, தன் உதவியை வழங்கினான். வாணனின் கனிவான புன்னகையும், உதவும் குணமும் ஆதிரையை ஒருமுறை நிலைகுலைய வைத்தது. அவன் காரின் நிலையை விரைவாக மதிப்பிட்டு, இயந்திரவியல் பற்றிய தனது அறிவைக் கொண்டு, காரை சரிப்பண்ணிக் கொடுத்தான். அவனது உதவிக்கு நன்றியுடன், ஆதிரை தனது பாராட்டுக்கு அடையாளமாக அவனை ஒரு காபிக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தினாள். ஆனால் தனக்கு வேலைக்கு போக நேரமாச்சு என்று அதை நிராகரித்து, தன் மோட்டார் சைக்கிளுக்கு போனான். அவள் நீங்க யார்? எங்கே வேலை? என்று கேட்டதுக்கு அவன் பதில் சொல்லாமல், தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தான். என்றாலும் அந்த நேரம் அதன் வழியே சென்ற வவுனியா மகாவித்தியாலய அதிபர், தன் காரை விட்டு இறங்கி, 'ஐயா, உங்களால் தான் என் மகள் இன்று தப்பி பிழைத்தாள். உங்கள் உடனடியான சத்திர சிகிச்சைக்கு மிக்க மிக்க நன்றி' என அழாக்குறையாக கூறி நன்றி தெரிவிப்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை. "அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன் தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;" அவன் கம்பீரமான அழகை மட்டும் அல்ல, இப்ப அவனின் தகமையையும் அறிய, அவளை அறியாமலே ஒரு காதல் நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. அவள் ஆடம்பரமான கார் மற்றும் அலங்காரம் கொண்டு இருந்தாலும், அவன், அவனின் எளிமை, அறிவுத் தகமை அதை விட உச்சமாக அவளுக்கு தெரிந்தது. அவனின் கழல் அணிந்தது போன்ற கால்களையும் கருநிறத் தாடியையும் கண்டு, கொண்ட காதலால் அவளின் ஆடம்பர கைவளைகள் கூட ஜொலிக்க மறந்து அவளின் கையில் இருந்து வெட்க்கி கழல்கின்றன. அவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி அங்கிருந்து அகன்றாள். என்றாலும் அடுத்தகிழமை வரும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு, ஆடம்பரமான விருந்த்துக்கு அவனையும் அழைக்க தாயிடம் கேட்கவேண்டும் என்று முடிவு செய்தாள். பிறந்த நாள் விருந்தின் போது, வாணனை, வவுனியா மகாவித்தியாலய அதிபர், எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, ஆதிரை வாணனுடன் கொஞ்சம் நெருக்கமாக உரையாடலைத் தொடங்கினள். அப்பொழுது வாணனின்புத்திசாலித்தனம் மற்றும் பணிவு ஆகியவற்றால் அவன் மேலும் ஈர்க்கப்பட்டதுடன் அவன் தனது தொழிலில் காட்டும் அர்ப்பணிப்பு, சமூகத்தின் மீதான அவனது பார்வை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான அவனது கனவுகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயப் பட்டாள். வாணனும் அவளின் கருணை மற்றும் அழகால் வசீகரிக்கப்பட்டான். அவர்களின் சந்திப்பு அழகான நட்பாக அன்றில் இருந்து மாறியது. தன் பெற்றோரினூடாக வாணனின் மருத்துவமனைக்கு தன்னால் இயன்ற விதத்தில், தொண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலிருந்து குறைந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு பொருட்களை வழங்குவது வரை உதவினார், வாணனும் தேவைப்படுபவர்களுக்கு உதவும் மனதைக் கவரும் உலகத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தினான், இது அவள் எப்போதும் அறிந்த ஆடம்பரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. ஆகலாம் ,ஆனால் தோழர் அனுராவின் புலனாய்வு துறை இவர் மீது ஒர் கண் வைத்திருக்கும்....இந்தியா பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்ற பயத்தில் ...என்ன தான் இடதுசாரியாக இருந்தாலும் இந்தியா டமிழன் என்ற பயம் இருக்கத்தான் செய்யும்..
  11. இப்படி நீங்கள் கேள்வி கேட்பதால் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது அது கதைதான் சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம் . கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்.. கழுதை ஒன்று புலியிடம் கூறியது "புல் நீல நிறமானது" என்று . புலி அதற்கு "இல்லை, புல் பச்சை." என்றது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் நடுவர் மன்றத்தை நாட முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர். கழுதை உடனே கத்த ஆரம்பித்தது "அரசே, புல் நீல நிறம் என்பது உண்மைதானே?". சிங்கம் "ஆம். உண்மை, புல் நீல நிறமானது." என்றது. "புலி என்னுடன் உடன்படவில்லை மற்றும் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்" என்றது கழுதை. "புலிக்கு 5 ஆண்டுகள் மௌன தண்டனை விதிக்கப்படும்" என்று அரசர் உத்தரவு போட கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சென்றது. புலி அரசரின் தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் புலி சிங்கத்திடம் தண்டனையை கடைபிடிக்கும் முன் கேட்டது "அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, எல்லாவற்றிற்கும் மேலாக, புல் பச்சையாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை". அதற்கு சிங்கம் "உண்மையில், புல் பச்சைதான் என்றது. "அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?". சிங்கம் பதிலளித்தது.. "புல் நீலமா அல்லது பச்சையா என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான உயிரினத்துக்கு உகந்ததில்லை என்பதால்தான் இந்தத் தண்டனை." உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். ஆனால் அவர்களது நம்பிக்கைகள், மாயைகளினால் அடையும் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்... எவ்வளவோ ஆதாரங்களை நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில்லாதவர்களும் இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஈகோ மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரி என்று நினைப்பதுதான். அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும். அறிவாளியாகிய உங்கள் அமைதி அதிக மதிப்புடையது என்பதை உணர்ந்து நடந்தால், வாழ்வு வளமாகும்..!. நன்றி . சுமத்திரன் எனும் முட்டாள் விசரனால் தமிழரின் அரசியலை பலவருடங்கள் பின்னோக்கி தள்ளியுள்ளான் அதை புரிந்து கொள்ளாது சுமத்திரன் நல்லவன் வல்லவன் என்று புல் நீல நிறம் போல் வாதிடும் உங்களுடன் இனி இந்த திரியில் வாதிப்பதில் பலனில்லை நன்றி வணக்கம் .
  12. வடக்கிற்கு ஒரு அர்ச்சுனா போன்று கிழக்கிற்கும் ஒரு அர்ச்சுனா வருவார்
  13. இரண்டு பட்டம் வேறு வாங்கியிருக்கா அதுவும் 2௦ வயதில் என்கிறார்கள் ஒரே குழப்பமா இருக்கு .
  14. அவ்வாறு இருப்பின் நல்லது என்ற உங்கள் கருத்துக்கே இல்லை என்று பதில் எழுதினேன். ஆனால் அதை பின்னர் பார்க்கலாம் என்ற எழுத்து வடிவ உத்திரவாதத்துடன் நகர்வதே இன்றைய நிலையில் நன்று. ஏனெனில் சிக்கலான, கடுமையான நிபந்தனைகளை முன்வைத்து இன்று பெற வேண்டியதை விட்டு விடுவது இன்றைய நிலையில் உகந்ததல்ல.
  15. இந்த அனுபவ பாடப்படி தான் ஆரம்பத்தில் இருந்தே நான் இங்கே சொல்கிறேன் அனுராவினால் சிறீலங்காவை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்ற முடியாது என்று.
  16. சரி இப்பொழுது தமிழசுக்கட்சியின் தலைவர் தொடர்பான வழக்கு முடிவுக்கு வருமட்டும் தமிழரசுக்கட்சி சுமத்தினின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. கடந்த தேர்தலில் சிறதரனைக்கழட்டி விட முடிவெடுத்தும் அது முடியாததால் அவரைத் தோற்கடிக்க தனது முழுவளத்தையும் பயன்படுத்தியும் கடைசியில் மக்கள் தீர்பு;பு சிதரைன வெல்ல வைத்து அவரைத ; தோற்கடித்து தலையில் குட்டு வைத்து விட்டார்கள். ஆனால் சுமத்தழன் விடுவதாக இல்லை ட்ம்களை வைத்து தமிழசுக்கட்சியைத் தற்காலிகக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். அடுத்து வரும் மாகாண சபைத் தே;தல்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தகளில் சிறதரன் அணிக்கு வாய்ப்பளிக்கப்படாது. அப்படி நிகழும் சந்தர்பத்தில் அது தமிழசுக்கட்சிக்கு வடக்கில் மேலும் பின்னடைவையே கொடுக்கும். அது மீள முடியாத பின்டைவாக இருக்கும்.
  17. இதென்ன கொடுமை இருவரும் மனமொத்து உறவு வைத்து விட்டு இப்ப வழக்குப் போடுவது என்ன நியாயம்.ட்ரம்பிடம் இல்லாத பணமா எதுக்கு கள்ள உறவுக்கு கள்ளக கணக்குக் காட்டி பணம் கொடுக்க வேண்டும் பணம் தர முடியாது பண்ணுவதைப்பண்ணிப்பார் என்று சொல்லி விட வேண்டியதுதானே.
  18. அநுர சகோதரயவும் இப்படித்தான்😁 பேப்பரில் இருக்கும், பேச்சில் இருக்கும், ஆனால் எதுவும் நல்லது நடக்காது!
  19. ஒருசிலர் தூக்கத்தில் இருக்கும்போதே இறந்துபோனது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு தூக்கத்தில் இருக்கும்போதே ஒருவர் மரணம் அடைவது ஏன் என்பது குறித்து விளக்குகிறார். தூக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  20. பேசாமல் ஊருக்குப் போய் மணல் வியாபாரம் செய்திருக்கலாம் என்று இப்ப நினைக்கின்றேன்😜
  21. ஆழ்ந்த நினைவஞ்சலிகள். சமாதான தேவதை சந்திரிகாவுக்கும் இதை அனுப்பி நினைவூட்ட வேண்டும்.
  22. தலைப்பைப் பார்த்து திக்குமுக்காடி விட்டேன் உடையார்.
  23. கனேடிய அரசுக்கு புரிந்தது என்னவென்று கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா பெருஸ்? அல்லது சுமந்திரன் தவிர்ந்த பிற அரசியல்வாதிகள் எல்லோரும் கையாலாகாதவர்களா? அவர்களாவது தமிழின அழிப்பு என்பதை நிறுவலாமே? மற்றைய அரசியல்வாதிகள் Bar License எடுத்து விற்பார்கள், சுமந்திரன் மட்டும் தமிழின அழிப்பு என்பதை நிறுவ வேண்டும் என்கிறீர்களா? 😁 Bar License என்றவுடன் இங்கே கூட்டம் கூடப்போகிறது,..🤣
  24. @கிருபன் ஜீ நீங்க டக்கியரின் ஆளென்டு தெரியாமல் போச்சே!
  25. தாங்களே உருவாக்குவார்களாம் பயப்படாதே என்றும் அறிக்கை விடுவார்களாம்
  26. முதன் முதலாக இப்போதான்... ஜக்கம்மாவை பார்க்கின்றேன். 😂 விதையை நட்ட உடையார்... சிலவருடங்களின் பின் காசு கொடுத்து மரத்தை தறிக்கின்றாரோ தெரியாது. 🤣
  27. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிா் கரைவதை நானே கண்டேன் ஆண் : கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பாா்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் ஆண் : குயிலென மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புனுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் ஆண் : யாா் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும் நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே ஆண் : இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோா்க்க உதட்டினை உவா்பாக்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரிங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன் ......! --- தூவானம் தூவ தூவ ---
  28. புத்தாண்டு வாழ்த்துக்கள் ........ எல்லோரும் கடலுக்கு வாருங்கள், காத்திருக்கிறேன் வரவேற்பதற்கு ........! 😂
  29. இவர்களை பிடித்து, ஐந்து Battery போட்ட ரோச் லைற்றால், கண்ணுக்குள் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். 😂 அதிக வெளிச்சம் உடலுக்கு துன்பத்தை கொடுக்கும். "முள்ளை... முள்ளால்தான் எடுக்க வேண்டும்". 🤣
  30. நான் வாசித்ததில் பூவரசங்கதியால் நட்டு வளர்ப்பது போல பெரிய உரப்பை போன்ற பாக்கில் எருவூட்டப்பட்ட மண்ணைப்போட்டு அங்கே கதியால் போன்ற பெரிய மாந்தடியை நட்டு வளர்ப்பதாக படத்தோடு குறிப்பிட்டு இருந்தார்கள். இதன் மூலம் குறுகிய காலத்தில் மாம்பழங்களை பெறலாம் என்பதும் ஒரு காரணம். எனக்கு உங்களது காணொளிப் பகிர்வின்படி மாந்தடியை வெட்டி வேர்வளர்ச்சியைத் தூண்டும் பொடி அல்லது கத்தாளைப்பசையை பூசி நட்டு வளர்த்துப் பார்க்கும் எண்ணம் பிறந்துள்ளது. ஏற்கனவே பெரியம்மாவின் மகன்(தம்பி) மூலம் மாந்தடி நட்டுப் பார்த்து வெற்றி பெறவில்லை. வேர்வளர்ச்சியை தூண்டும் முறையும் தெரியவில்லை, வெட்டி 2/3 நாளின் பின்னர் தான் மாந்தடி நடப்பட்டது. 7 POWERFUL FREE HOMEMADE ROOTING HORMONES| Natural Rooting Hormones
  31. நீங்கள் குறிப்பிடுவதில் உண்மையுள்ளது அக்கா. ஆனாலும் உண்மையான தேவை உள்ளவை வெளித்தெரியாமல் யாரிடம் கேட்பது எனத் தெரியாதும் இருக்கின்றனர்.
  32. பாலில் புரட்சி தண்ணீரில் புரட்சி மண் அகழ்வதில் புரட்சி காலில் வீழ்வதில் புரட்சி கட்சிகளை உடைப்பதில் புரட்சி புதுக்கட்சிகளை தொடங்குவதில் புரட்சி யூ டியுப் தயாரிப்பதில் புரட்சி.... போதைப் பொருள் பாவனையில் புரட்சி... ஜோடி சேர்வதில் புரட்சி ஆகஹா,ஆஹா ..புரட்சி மேல் புரட்சி
  33. அவுஸ்ரேலிய அணி இலகுவாக நிர்ணயிக்கப்பட்ட 162 ஓடங்களை வெறும் 4 விக்கெட் இழப்புடன் பெற்று வெற்றியீட்டியுள்ளது, அவுஸ்ரேலிய அணியின் அற்புதமான பந்துவிச்சு போலில்லாமல் இந்தியணியின் சாதாரண பந்து வீச்சு இந்த இனிங்ஸில் காணப்பட்டது, பும்ரா இந்த இனிங்ஸில் பந்து வீசவில்லை, பும்ரா பந்து வீசியிருந்தால் சிறிது சுவாரசியமாக போட்டி இருந்திருக்கலாம் ஆனால் முடிவில் மாற்றம் இருந்திருக்காது.
  34. தமிழ் நிலம் ...சிறிலங்காவில் தமிழர் ஒர் தேசிய இனம் என்ப‌தை சிறிலங்கன்ஸ் ஏற்றுக்கொள்ள வேணும் ..அது பிரிவினை அல்ல என்பதை ஏனைய தேசிய இனங்கள் புரிந்து கொள்ள வேணும் .... நாங்கள் சிறிலங்கன்ஸ் எண்டு போட்டு ஏனைய தேசிய இனங்களை அழித்து எண்ணிக்கையில் அதிகமான ஒர் இனம் சிறிலங்காவை உரிமை கொண்டாட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ..... அணுரா தோழர் இந்தியாவிலிருந்து வந்தவுடன் பெளத்த பீட தலைவரை சந்திக்கின்றார் .. ஆனால் அமைச்சர் சந்திர சேகரம் வடமாகாணத்தில் ஒர் நிகழவின் பொழுது விபூதி பூச மறுக்கின்றார் ...அதே வட மாகாணத்தில் ஜெ.வி.பி பா .உக்கள் பெளத்த மதகுருவின் காலில் விழுந்து வணங்கின்றனர்.. மொழி பெரும்பான்மையை ஆயுத /அதிகார ஊடாக அழித்த சிங்கள சிறிலங்கன்ஸ் ... இப்பொழுது மதபெரும்பான்மையை (சைவ /இந்து) இடதுசாரி தத்துவங்கள் ஊடாக அழிப்பதில் முயற்சிக்கின்றனர்.... தமிழனின் தனித்துவ அடையாளங்கள்😅😅 ஏனைய இனங்களுடன் சேர்ந்து வாழ்பவன் ...பல தடவைகள் விட்டு கொடுத்து வாழந்தவன்,வாழ்பவன் .. ஒற்றுமையாக வாழ்பவன்... போராடியவன .. சக தமிழனை வீழ்ந்த மாட்டான் சாதி பார்க்க மாட்டான் பிரதேச வாதம் பேசமாட்டான் ...
  35. அது யார் விட்ட தவறு? நானும் செய்யேன், மற்றவரையும் செய்ய விட்டேன் என்று ஒருவரை ஒருவர் விமர்ச்சித்துக்கொண்டும் குழிபறித்துக்கொண்டும் இருந்தால்; மக்கள் வேறு வழியை நாடுவார்கள் என்பது கூட தெரியாமல், கொட்டிக்குலைக்கும் இவர்களால் மக்களுக்கு என்ன லாபம்? இன்றும் திருந்தினார்களா பாருங்கள்? கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் தனி முடிவு, அறிக்கை, கருத்து. கட்சிக்குரிய யாப்பை பின்பற்ற தெரியாதவர்கள், நீதிமன்றம் போகிறார்கள். அங்கே என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பது தெரியாதா சட்ட நிபுணருக்கு? சட்ட யாப்பிற்கு மேல் தீர்ப்பு சொல்லாது. அப்போ யாப்பு எதற்கு? தமக்கு பிடிக்காதவரை வெளியேற்றுவதற்கா?
  36. கிளின் சிறிலங்காவுக்கு முதல் "கிளின் ஹவுஸ்"திட்டத்தை முதலில் தொடங்கி வைத்தவ்ர் விமல் ...அவரை போய் இப்படி மாட்டி விடலாமா? 😅
  37. ரியுசன் கொள்ளைக்கு கொடுப்பதற்கும் பணம் வேண்டும்
  38. எனக்கு பொலிஸ்ல இருந்து கூட உப்புடி காட்டமாய் கடிதங்கள் வந்ததில்லை. 🤣
  39. 2025 இல் யாருக்கு ஏழரை ஆரம்பம்? கால்தடம் போடும் கண்டகச்சனி ! அடிக்கடி தொல்லைதரும் அர்ஷடாமத்த சனி ! அலைச்சல் தரப்போகும் அஷ்டமத்துச்சனி! இப்படி அநேக பகீர் தலையங்கள் இருந்தாலும்…. ஏழரை முடிவு - கூரையை பிய்ய்து கொண்டு கொடுக்கப்போகும் சனிபகவான் போன்றனவும் உள்ளன. Conditioning …. யாழில் சிலருக்கு சாதி….சிலருக்கு சனி🤣
  40. சிறிலங்கா,மியான்மார் போன்ற நாடுகளின் பெளத்த அடிபடைவாதிகளை மறந்து விட்டீர்கள் ...😅
  41. இன்றைய பல தமிழ்மக்களின் மாற்றமடைந்த நல் இதயங்களை நோக்கும்போது தமிழீழம் உதயமானால்…..ஈழம் மட்டுமல்ல இலங்கையே குபேர பூமியாக மாற்றமடையும் என்பதில் சந்தேகம் இல்லை. 🙏🙏 உதவிப்புரியும் மக்களுக்கு நன்றிகள்!!🙌
  42. ஏராளன், இப்படிச் செய்யலாம் என்று ஒரு யூடியூப் வீடியோவில் சொல்லுகின்றார்கள். வீடியோவின் கீழே பதியப்பட்டிருக்கும் பின்னூட்டங்களையும் வாசிக்கவும். இது மட்டும் வேலை செய்தது என்றால், மண்கும்பான் முழுவதையும் கறுத்தக் கொழும்பான் ஆக்கிவிடலாம்..................🤣.
  43. கடந்த பல தசாப்தங்களாக தமிழரின் ஏக பிரதிநிதியாக இருந்த சுமந்திரன் அப்போது எல்லாம் தமிழரின் அபிலாசைகளை சிங்கள அரசுடன் பேசி தீர்க்கக் கூடிய சந்தர்பங்கள் பல இருந்தும் அப்போதெல்லாம் பேச்சுவார்ததைகளில் இருந்து வெளியேறி பொறுப்பற்ற தனமாக நடந்து மக்களின் பாரிய இழப்புகளுக்கு காரணமாக இருந்து விட்டு இப்போது தோல்வியடைந்த பின்னர் இவ்வாறு அறிக்கை இடுவது வடி கட்டிய முட்டாள்த்தனம். காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத சுமந்திரன்.
  44. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : { மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போல அல்லவா மனம் உன்னை பார்க்கும் போதில் எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும் } (2) பெண் : நீயே என் உயிரில் ஆகும் ஒரு புதிய ராகம் தானடா ஏன் ஏன் சிறகு நீள்கிறது பார்க்க தோணுதே ஏனடா ஆண் : பூங்காற்றில் அடி உன் வாசம் அதை தேடி தேடி தொலைந்தேன் நீ மீண்டு வர நான் தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன் பெண் : யாரோ இவன் யாரோ தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட பெண் : யாரோ இவன் யாரோ கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட ஆண் : { ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ } (2) பெண் : நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய் தீயில் கருகிப்போகும் ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய் ஆண் : { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2) பெண் : ஓஹோ ஹோ ஓஹோ நீயும் இனி நானும் நாமாய் சேரும் கோடி இன்பங்கள் கூடனும் பெண் : தேடும் கரை தேடும் அலைபோல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும் ஆண் : { ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ .........! --- மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை ---
  45. மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களிடமே உண்டு ...மேலும் வடக்கு கிழக்கிலிருந்து ஐந்தாறு அரசு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் உண்டு ...தமிழர் அபிலாசைகள் இந்த அரசாங்கம் நிறை வேற்றிய நிர்ப்பந்தம் இல்லை ....அதற்கான காலம் நீங்கள் பா.உ வாக இருந்த பொழுது இருந்தது ,ஆனால் நீங்கள் முயற்சி எடுக்கவில்லை ..இப்பொழுது அறிக்கை போர் நடத்துகின்றீர்கள்...உங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள .... தமிழருக்கு பிர்ச்சனை உண்டு என சிங்கள ஆட்சியாளர்களும்,தமிழ் பா. உ சொன்ன காலம் இருந்தது .. இப்ப தமிழ் பா.உ.(ஜெ,வி.பி டமிழ்ஸ்).,சொல்லினம் பொருளாதார பிரச்சனை மட்டுமே உள்ளது எண்டு..
  46. அமெரிக்கர்கள் எப்பவும் புதுமையை நாடிநிற்பவர்கள். புதுவருடம் உதயத்தில் வெடி கொளுத்தி மகிழ்வது உலகெங்கும் சாதாரண விடையம். இந்த மகிழ்வை அடைவதற்குப் புதுமையாக வாகனம் ஒன்றைக் கொளுத்திப் போட்டு மகிழ்ந்துள்ளார்கள் அங்குள்ள மக்கள் அவ்வளவுதான்.💃🏼🕺
  47. என்ர மனிசி கத்திரி பூ வண்ணத்தில் புடவை வாங்கிட்டு வர சொன்னவ .. இப்ப என்ன செய்ய ரெல் மீ ..?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.