Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்18Points3054Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்12Points20012Posts -
பகிடி
கருத்துக்கள உறவுகள்10Points597Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/08/25 in all areas
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது வருடாவருடம் திருவிழா மாதிரி வந்து போகிறது. எனது மகளும் மிக அருகிலேயே இருக்கிறார்.வேறு இடத்துக்கு போகவே எண்ணுகிறார். @நீர்வேலியான் @ரசோதரன் உங்கள் நிலமை எப்படி?5 points
-
இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
இலங்கையில் நல்ல விஷயங்கள் நடக்குது போல. இதேபோல் பேருந்தில் மத குருமார்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கைளையும் இல்லாது செய்ய வேண்டும் மத பீடங்களின் கருத்தை ஏற்காமல் கட்டாக்காலி நாய்களை இல்லாது செய்தல் வேண்டும் அரசாங்கம் மத அமைப்புகளுக்கு ஒதுக்கும் நிதியை நிறுத்த வேண்டும்4 points
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
சைனாக்காரர்களால் வைரஸை நிற்பாட்ட முடியாது.......... ரஷ்யர்களால் உக்ரேனை நிற்பாட்ட முடியாது............... மத்திய கிழக்கால் இஸ்ரேலை நிற்பாட்ட முடியாது.............. அமெரிக்கர்களால் ட்ரம்பை நிற்பாட்ட முடியாது............ இந்த மனுஷன் முழுச் சந்திரமுகியாகித்தான் முடியும் போல.............4 points
-
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
அது வெடில்! செடில் குத்தி காவடி ஆடுவார்கள்!3 points
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
மகள் இன்று காலை இடம் பெயர்ந்து விட்டா. நீங்கள் இன்னும் கீழே இருக்கிறபடியால் பிரச்சனை இல்லை. எப்போதும் இல்லாதவாறு காற்று அசுர வேகத்தில் வீசுகிறது.3 points
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது எங்களுக்கு சிறிது தொலைவு, நான் பாதுகாப்பாக இருக்கிறேன், போன வருடம் மிகவும் பக்கத்தில் எரிந்தது, நாங்கள் மலைப்பகுதியில் இல்லாதபடியால் தப்பி விட்டோம்3 points
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
காட்டோர ஊருக்குள் யானைகளும், காட்டு மிருகங்களும் வருவது போலத்தான் இதுவும். காடுகளை ஊர்களாக்கினால் காட்டு மிருகங்கள் வேறு எங்குதான் போவது................ லாஸ் ஏஞ்சலீஸ் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மக்கள் தொகை மிக அதிகமாக அதிகரித்த பின், மக்கள் நகரிலிருந்து வெளியே அடிவாரங்களையும், மலைகளையும் நோக்கிப் போனார்கள். அத்துடன் வசதி படைத்தவர்கள் மலை உச்சிகளில் குடியேறினர். புதிய வீடுகள், மிகப் பெரிய வீடுகள் அத்துடன் ஆரம்பத்தில் நகர்ப் பகுதிகளில் இருப்பதை விட இவற்றின் விலை குறைவாக இருந்தது. ஆகவே மக்கள் அதிகமாக இந்த இடங்களை நோக்கிப் போனார்கள். இன்று இந்தப் பகுதிகளும் நகர்களாகி விட்டது, அத்துடன் இன்று விலைகளும் எல்லா இடங்களிலும் ஒன்றே. மிக உலர்ந்த காலநிலை, அதிக வெப்பம், எளிதில் தீப்பற்றும் இந்த மண்ணின் மரங்கள் மற்றும் புதர்கள் இவற்றுடன் சேர்த்து மிக வேகத்துடன் வீசும், மிக உலர்ந்த காற்றும் வருடத்தில் சில நாட்கள் வீசும். இவையே தான் மலைகளிலும், அதையொட்டிய பகுதிகளிலும் தீ ஆரம்பிப்பதற்கும், பரவுவதற்கும் மூல காரணங்கள். இது இயற்கையின் ஒரு சுற்று தான். இப்படித்தான் மலைக்காடுகளில் இருக்கும் முதிய மரங்கள் அழிவதும், புதிய மரங்கள் உண்டாவதும் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இப்பொழுது, புதிதாக மனிதர்கள் போய் இடையில் மாட்டுப்பட்டுவிட்டார்கள். அத்துடன் மனிதர்களின் புதிய நடவடிக்கைகளால் மண் அரிப்பு, நிலச்சரிவு என்பனவும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. ஒரு துவாரத்தை நாங்கள் அடைக்க முற்பட்டால், இன்னுமொரு துவாரத்தை இயற்கை உண்டாக்கும் போல.....................3 points
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
என்னுடைய பகுதியில் நெருப்பு வருவதில்லை, அண்ணா........... உங்கள் மகள் இருக்கும் இடத்திலிருந்து கொஞ்ச தொலைவில் ஒன்று எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அது உங்கள் மகள் இருக்கும் இடத்திற்கு பரவாது. பயப்படாதீர்கள், அண்ணா...............3 points
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
யசோதரன். கவனம் இது உங்கள் பகுதியா??? மற்றும் நீர்வேலியன் இருபாலையன். ......பிரபா சுகமாக இருக்கிறீர்களா?? இதை ஒழுங்காக கையாள தெரியவில்லை வருடாந்தம். நடைபெறுகிறது தடுக்க வழிமுறைகள் இல்லையா?? இதுக்கை கனடா வேண்டும் கீறிஸ்லான்ட வேண்டும் பனாமா. வேண்டும் .... முதலில் அமெரிக்காவை ஒழுங்காக ஆளுங்கள்3 points
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
இல்லை. Fact டு, செக்கிடு👇 https://www.reuters.com/fact-check/us-contributes-16-nato-annual-budget-not-two-thirds-2024-05-31/#:~:text=VERDICT,about our fact-checking work. நேட்டோவின் செலவில் 16% சதவீதம்தான் அமெரிக்காவினது. நீங்கள் சொல்லும் 60% - ஒட்டு மொத்த அமெரிக்க பாதுகாப்பு பஜெட்டையும் நேட்டோவிற்கான செலவு என பொய்யான கணக்கு காட்டும் - சோசல் மீடியா உருட்டு. —— நேட்டோ உடைந்தால் முதல் பாதிப்பு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு. அடுத்த பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் உள்ளே ஒரே வித்தியாசம் - இராணுவ பலம். அமெரிக்காவின் இராணுவ பலமே அதன் பொருளாதார பலத்தின் அச்சாணி. நேட்டோவை உடைப்பது இந்த அச்சாணியை உடைப்பற்குச் சமன். 🤣 இனி எங்களை Dads Army என உள்ளூரில் சென்ரி பார்க்கும் வேலைக்குத்தான் எடுப்பார்கள். ஆனால் எமக்கு அடுத்த தலைமுறை பெரும் பாடு பட வேண்டி வரலாம்.3 points
-
சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
தமிழ் நாட்டில் திமுக மீது எவ்வளவு விமர்சனம் இருப்பினும் இது போன்ற விஷயங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலே இந்த அறிவுப்புக்கு குதர்க்கமாக பதிலளித்து இருந்தவர்கள் தங்கள் தகமையை தாமகவே பறை சாற்றிக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம் குடும்ப உறவுகள், திருமணம் செய்யும் முறை, உண்ணும் உணவு, தாய்வழி சமூக ஒற்றுமை, உருவ ஒற்றுமை, DNA, ஆகியவற்றை ஒப்பிட்டால் தமிழர் தெலுங்கர் கன்னடர் என நாம் எல்லோரும் ஒரே இனத்தவரே. அவர்கள் தாம் வேறு என்று சொன்னாலும் நாம் அந்த உண்மையை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனென்றால் தாய் நாம் தான். பிள்ளைகள் தாயை மறுத்தலித்தாலும் தாய் அதை ஏற்று சும்மா வாய் பொத்தி இருக்க முடியாது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி!3 points
-
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்
இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை. தோண்டினால் பாராளுமன்றமே நாறிடும். இது இலங்கை போன்ற கௌரவத்திற்காக எதையும் செய்யும் நிலையில் இருக்கும் நாடுகளில் சரி செய்ய வாய்ப்பில்லை2 points
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
அண்மையில் பெற்ற இரு அனுபவங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு முட்டாள் தலைமுறையை உருவாக்கி விடுமென்ற அச்சத்தை எனக்குத் தந்திருக்கிறது. 1. ஒரு மாணவர் ஆராய்ச்சி பழகுகிறேன் என்று வந்தார். ஆனால், வரவேண்டிய நாட்களில், நேரங்களில் வருவதில்லை. நானே அவர் சம்பந்தப் பட்ட வேலைகளை முடித்து விட்டு இருந்த போது புள்ளிகள் பெற கடைசி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய காலம் வந்தது. வேலை செய்யாமல் எப்படி அறிக்கை எழுதுவது? எனவே இரக்கப் பட்டு "ஒரு தியரிப் பேப்பர் எழுது, புள்ளிகள் தரலாம்" என்று சலுகை கொடுத்தேன். மாணவரின் அறிக்கை, கிடைக்க வேண்டிய இறுதி நாளில் வந்தது. ஒரு பிழையுமில்லாமல் திறமாக இருந்த அறிக்கை சந்தேகம் தரவே, 4 வெவ்வேறு AI detectors மூலம் சோதித்துப் பார்த்தேன். நான்கிலும் "இந்த ஆவணம் 98 முதல் 100 வீதம் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப் பட்டது" என்ற தீர்ப்பு வந்தது. அப்படியே அந்த தீர்ப்பை அவரது மேற்பார்வையாளருக்கு அனுப்பி விட்டு "இனி இங்கே வராதே" என்று துரத்தி விட்டேன். 2. சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்க முதல் குறைந்தது 2 பேர், துறை அனுபவம் இருப்போர் (peer reviewers) பரிசோதித்து பிரசுரிக்க தகுதியானதா என்று சோதிக்க வேண்டும். சீனாவில் இருந்து அப்படி அனுப்பப் பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை என்னிடம் பரிசீலிக்க அனுப்பி வைத்தார்கள். ஒரு இலக்கண, எழுத்துப் பிழை கூட இல்லாமல் இருந்த கட்டுரை சந்தேகம் தரவே, சஞ்சிகை இதை பரிசோதிக்க வேண்டுமெனக் கேட்டேன். சஞ்சிகையின் பரிசோதனையில், "80 முதல் 90 வீதம் செயற்கை நுண்ணறிவு எழுதிய கட்டுரை" என முடிவு வந்தது. என்னுடைய துறை/வேலைப் புலம் சாதாரண உலகத்தில் இருந்து ஒரு மூலையில் (niche) இருக்கலாம். ஆனால், இந்த துறையில் செயற்கை நுண்ணறிவை துஷ்பிரயோகம் செய்வதால் வரும் விளைவுகள் பெரும் எண்ணிக்கையானோருக்கு அநீதி விளைவிக்கும். உழைத்து எழுத வேண்டிய அறிக்கைகளை, இப்படி உழைக்காத சோம்பேறிகள் உரிமை கொண்டாட செயற்கை நுண்ணறிவு இலகுவாக வழி செய்திருக்கிறது. 10 வருடங்களில், பொதுவான சமூகத்தில் இதன் விளைவுகள் வெளிப்படும்.2 points
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️2 points
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும். இன்று ரம்பின் புளோரிடா மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கிறீன்லாந்தையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றுவதைப் பற்றி விபரமாக கூறினார். கனடாவையும் அமெரிக்காவுடன் இணைக்கும் திட்டத்தையும் வரவேற்றுக் கூறினார். நான் பதவி ஏற்பதற்கிடையில் கமாசால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படவில்லை என்றாமல் மிகப் பெரிய அழிவு மத்திய கிழக்கில் நடக்கும் என்று பயமுறுத்தியுள்ளார். 1959 ம் ஆண்டிற்குப் பின் அமெரிக்க வரைபடத்தில் மாற்றங்களைக் காணலாம். குறுகிய நேரத்தில் மிகப் பெரிய குண்டுகளைப் போட்டுள்ளார். பூட்டினுக்கு போட்டியாக ரம்பும் தொடங்கப் போகிறாரோ? President-elect Donald Trump on Tuesday intensified his push for American expansionism, refusing to rule out using military force to add Greenland to the United States and retake control of the Panama Canal. In a wide-ranging news conference at Mar-a-Lago — his second since winning the 2024 election — he also said he could use “economic force” to turn Canada into the United States’ 51st state. “You get rid of that artificially drawn line and you take a look at what that looks like — and it would also be much better for national security,” Trump said at his Florida estate. The imperialistic land grabs Trump is floating — which, if he follows through and succeeds, would represent the first major changes to the American map since Hawaii’s statehood in 1959 — are a dramatic break from the foreign policy approaches of presidents in both parties in recent decades. And they come as Western leaders have opposed Russia’s attempts at expansion into formerly Soviet territory, including its war in Ukraine. During his hour long remarks, Trump also stewed over a series of grievances — including the legal cases brought against him, the Biden administration’s handling of the transition and energy efficiency and environmental regulations that he doesn’t like. Asked about his pledge to issue pardons over convictions in connection with the January 6, 2021, attack on the US Capitol, Trump said he’d be “making major pardons,” although he didn’t answer a question about whether that would include those who attacked police. He also threatened Hamas, saying it must release the hostages kidnapped in Israel during the October 7, 2023, attack. “If those hostages aren’t back … by the time I get into office, all hell will break out in the Middle East — and it will not be good for Hamas and it will not be good, frankly, for anyone,” Trump said. “All hell will break out. I don’t have to say anymore, but that’s what it is.” Military action on Panama, Greenland As he continues to push for American territorial expansion, Trump would not rule out military action to take control of Panama and Greenland, an autonomous territory of Denmark. Asked directly whether he would rule out using “military or economic coercion” to see through his goal of gaining those territories, the president-elect responded, “No.” “No, I can’t assure you on either of those two, but I can say this: We need them for economic security,” he said. Trump has frequently, in public appearances and social media posts in recent weeks, raised the prospect of adding both to the United States. He said Denmark should give up its control of Greenland or it would also face steep tariffs. He also suggested the people of Greenland could vote for independence or to join the United States. “I’m talking about protecting the free world,” Trump said. He again criticized Panama’s management of the Panama Canal, which he said was “built for our military.” The US-built canal was opened in 1914 and controlled by the United States until a 1977 agreement provided for its eventual handover to Panama. The canal was jointly operated by both countries until the Panamanian government retained full control after 1999. https://www.cnn.com/2025/01/07/politics/trump-news-conference-key-lines/index.html2 points
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
ChatGPT திருடுகிறது என்ற கருத்தே ஒரு நகைச்சுவையானது தான். ஒரு இணையதளத்தில் "search" என்ற வசதி இருந்தாலே அது தகவல்களை எங்கோ பதிந்து வைத்திருக்கிறது என்று தான் பொருள். இப்பொழுது இந்த search வசதி இல்லாமல் ஒரு இணையமும் இல்லை. ChatGPT தன்னை தானே வளர்த்துக்கொள்ளும் ஒரு மிருகம். அதனை இனி நிறுத்தமுடியாது. ஆனால் அதற்கு தீனி போடுவது நாங்கள் தான் என்பதை மறந்து தான் இங்கே குய்யோ முய்யோ என்று குதிக்கின்றோம். அதை வளர்ப்பதால் எங்களுக்கு இணையங்களில் "லைக்" என்ற அங்கீகாரம் கிடைக்கிறது. அதில் எங்களுக்கு ஒரு சுகம் இருக்கிறது தானே. ChatGPT தகவல்களை உள்வாங்கி, அதனை செதுக்கி, பின்னர் எங்களுக்கு ஒன்றை தருகிறது. இந்த செதுக்கும் இடம் ஒரு "black box". உள்ளே என்ன நடக்கிறது என்பதை இனி மனித அறிவால் பிரித்து மேய முடியாது. அவ்வளவு தூரம் இடியாப்பச் சிக்கல் போன்றது அதன் அல்கோரிதம். அந்த இளைஞன் வெறுமனே தகவல் திருட்டு என்பதற்காக கொலைசெய்யப்பட்டிருக்க மாட்டார். தகவல் திருட்டு என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். கொலை என்றால் அதை தாண்டி அவருக்கு வேறு ஏதோ ஒன்று தெரிந்திருக்க வேண்டும். கையில் எப்பொழுது தொலைபேசி வந்ததோ அன்றோடு "privacy" க்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. முன்னர் எங்களுடைய புகைப்படத்தை யாராவது இணையத்தில் வெளியிட்டால் அதை நாம் விரும்பமாட்டோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே இணையத்தில் ஏற்றுகிறோம். உங்களிடம் ஒரு இணையதளம் இருந்தால் ChatGPT அந்த தளத்தினை தொடர்புகொள்ளாமல் இருப்பதற்கு வேண்டும் என்றால் இப்போதைக்கு நீங்கள் செட்டிங் செய்துகொள்ளலாம். மற்றும்படி தனிப்பட்ட தகவல், பிரைவசி எல்லாம் எதிர்காலத்தில் ஊ ஊ ஊ தான். இதிலிருந்து தப்பிக்க அமேசான் காடுகளில் குடியேறி செருக்கு காட்டலாம்.2 points
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
90 -100 வயது ஆட்களை பார்க்கும் பொழுது இரண்டாம் உலகப் போர் கதைகளை சொல்வார்கள். அவர்களிடம் கேட்க விஷயம் இருக்கும், ஆனால் இப்போது 65 வயதில் உள்ளவர்களிடம் எம்மிடம் பகிர பெரிய வசீகரமான சம்பவக் கதைகள் எதுவும் இல்லை. ஒரே boring அவர்கள். இந்தப் பிரச்சனை எங்களுக்கு வரக்கூடாது. ஆகவே எங்களுக்கு எங்கள் கண் முன் சம்பவங்கள் நடக்க வேண்டும் ஆகவே கிரீன்லண்ட் பனாமா கால்வாய், canada போன்ற இடங்கள் அமெரிக்காவுடன் சேர்க்கப்பட வேண்டும் எப்போதும் 100-200 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியை மட்டுமே வரலாறாக வாசிக்கும் எங்கள் தலைமுறையில் சில சம்பவங்கள் நடந்தால்த் தான் 100 வருஷம் கழித்து இப்பொழுது வாழும் நபர்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும்2 points
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
அமெரிக்கா மட்டுமே நன்றாக இருக்க வேண்டும், மற்றவர்கள் என்னவானாலும் எங்களுக்கு கவலை இல்லை என்ற நிலைப்பாடு தான் அமெரிக்காவில் இருக்கும் ட்ரம்பினதும், ட்ரம்பின் ஆதரவாளர்களினதும் கொள்கை, அண்ணா. அந்தக் கொள்கையைத் தான் நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். அது சீனா, மெக்சிக்கோ, கனடா, ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளுடனான ஒரு மறைமுக, வர்த்தக யுத்தம் என்றாலும் எதிர்க்கின்றோம். மத்திய கிழக்கு நாடுகளுடனான, முக்கியமாக ஈரானுடனான, நேரடி யுத்தம் என்றாலும் எதிர்க்கின்றோம். நேட்டோ வேண்டும் என்கின்றோம். அணு ஆயுத ஒப்பந்தங்கள் வேண்டும் என்கின்றோம். ஐநாவிற்கும், உலக ஸ்தாபனங்களிற்கும் அமெரிக்காவின் பெரிய பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என்கின்றோம். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய பங்கு அமெரிக்காவிற்கு தொடர்ந்தும் இருக்கின்றது என்கின்றோம்............ இப்பொழுது புதிதாக, பனாமாக் கால்வாய் பனாமாவிற்கும், கிரீன்லாந்து டென்மார்க்கிற்கும், கனடா கனடாவிற்கும் ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நாங்கள் சொல்கின்றோம், அண்ணா.............2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!
🎧 விழிகள் மூடி செவிகள் திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல்! காதோடு உறவாடும்,புல்லாங்குழல்! தீக்காயம் பட்ட போதும்,வருந்தவில்லை புல்லாங்குழலை பட்டாபோதும் என்பதில்லை புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்! மௌனமாக இருக்கும் காற்றுத் தீண்டும் வரை புல்லாங்குழல்! உருவில் சிறியது உணர்வில் பெரியது புல்லாங்குழல்! காட்டில் விளைந்து காதோடு உறவாடும் புல்லாங்குழல்! தீயால் துளைத்தபோதும் இசை நல்கும் புல்லாங்குழல்! இதழ் குவித்து விரல் பதித்து காற்றுத் தந்ததும் இசைக்கும் புல்லாங்குழல்! அன்று முதல் இன்று வரை அற்புத இசை புல்லாங்குழல்! எம்மொழியும் சம்மதம் இனிய இசைப் பிறக்கும் புல்லாங்குழல்! கானம் இசைத்து கவலைப் விழிகள் மூடி செவிகள் திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல்! 👍🔔1 point- போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
மலரவனின் 'போர் உலா'வை முன்னிட்டு சில நினைவுகள்.. ********** 1. மலரவன் எழுதிய 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இதை எனது பதின்மத்தின் தொடக்கத்தில் தமிழில் வந்தபோது வாசித்திருக்கின்றேன். அப்போது யாழ்ப்பாணம் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 'போர் உலா'வை சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கருகில் இருந்த புத்தகசாலையில் வாங்கி வாசித்திருக்கின்றேன். 13/14 வயதுகளில் கையில் காசு புழங்குவதே அரிதென்பதால், புதுப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதென்பது பெரும் சாதனை போல அன்று இருக்கும். அப்படி காசு கொடுத்து புதிதாய் வாங்கிய இன்னொரு புத்தகம் புதுவை இரத்தினதுரையின் ' பூவரம் வேலியும், புலுனிக் குஞ்சுகளும்' என்ற கவிதைகளின் பெருந்தொகுப்பு. இப்போது 'எழுநா'வில் எழுதுவதற்காக ஆங்கிலத்தில் வந்த 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கின்றேன், இந்த நூலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாலதியை நான் வன்னியில் நேரில் சந்தித்திருக்கின்றேன். முப்பது வருடங்களுக்கு மேல் நியூசிலாந்தில் வசித்துவிட்டு மீண்டும் தாய்நிலம் அவர் அப்போது திரும்பியிருந்தார். மனிதவுரிமைகள் சம்பந்தமாக செஞ்சோலைக்கு வந்து அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார். மாலதி, செஞ்சோலைக்குப் பொறுப்பான ஜனனி அக்காவிடம், 'இப்படி அநாதரவராக இருக்கும் பெண்பிள்ளைகளை, இயக்கப் போராளிகளான நீங்கள் வளர்ப்பதால் அவர்களும் இயக்கத்தில் இயல்பாக சேர்ந்து விடுவார்களே, இது சரியில்லை அல்லவா?' எனக் கேட்டபோது நானும் சாட்சியாக இருந்திருக்கின்றேன். அதனால்தான் அவர்களை இப்போது உள்ளே வைத்து படிப்பிக்காமல், மற்றவர்களும் போகும் சாதாரண பாடசாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என்று பல உதாரணங்களை ஜனனி அக்கா சொல்லிக் கொண்டிருந்தார். நானும், பின்னர் அங்கிருந்த செஞ்சோலைக்குப் பொறுப்பான பெண் போராளிகளிடம், இங்கே வளரும் பிள்ளைகள் இயக்கத்தில் போய்ச் சேர்வதில்லையா எனக் கேட்டேன். அவர்கள் அப்படிச் சேர நாங்கள் இயக்கத்தில் விடுவதில்லை. என்றாலும் சில பேர் அப்படி இங்கிருந்து தப்பியோடி வேறு பெயரில் இயக்கத்தில் இணைந்திருக்கின்றார்கள் என்றும், அவர்களை மீண்டும் இங்கே மீட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம் என்றும் சொன்னார்கள். அப்படி ஓடிப்போய் இயக்கத்தில் சேர்ந்து திரும்பி வந்த சிலரை செஞ்சோலைக்குள் சந்தித்திருக்கின்றேன். இவற்றையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் இயக்கத்தை விளங்கிக் கொள்வதென்பது மிகச் சிக்கலான விடயம். அதுவும் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய, தம்மை மீறி எவரையும் இயங்க விடாத ஒரு இயக்கத்தை ஒற்றைப்படையாக வைத்து எதையும் எளிதில் விளங்கிவிடவும் முடியாது. எனவேதான் இப்போது புலிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ மிகைப்படுத்தி வரும் படைப்புக்களை மெல்லிய புன்முறுவலோடு விமர்சிக்கக்கூட விருப்பில்லாது கடந்து போய்விட முடிகின்றது. மனிதவுரிமைகள் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்த இதே மாலதி வன்னிக்குள் இறுதியுத்தம் முடியும்வரை புலிகளின் சமாதானக் காரியாலயத்தில் இயங்கியிருக்கின்றார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். யுத்தம் மிக மோசமாக நடந்த காலங்களிலே, வேறு எதுவும் செய்வதற்கு வழியற்றபோது, மாலதி இந்தநூலை வன்னிக்குள் இருந்தபடி தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றார் என்ற குறிப்பு இந்த ஆங்கில நூலில் இருக்கின்றது. இறுதி யுத்தம் அவரை அதிஷ்டவசமாக உயிர் தப்ப விட்டிருக்கின்றது. அதனால் மலரவனின் 'போர் உலா'வை நாங்கள் ஆங்கிலத்திலும் இப்போது வாசிக்க முடிகின்றது. ஆங்கிலப் பதிப்பை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. 2. ஈழப் போராட்ட வரலாற்றிலே 'போர் உலா' மிக முக்கியமான பிரதி. மாங்குளம் இலங்கை இராணுவம் முகாமை அழிக்க, மணலாற்றில் இருந்து (இப்போது சிங்களக்குடியேற்றம் நிகழ்ந்து வெலிஓயா என அழைக்கப்படுகிறது), மாங்குளம் செல்லும் பயணத்தையும், அம்முகாம் மீட்கப்பட்டதையும் மலரவன் இதில் லியோ என்கின்ற கதாபாத்திரத்தினூடாக எழுதுகின்றார். மணலாற்று காட்டிலிருந்து தொடங்கும் பயணம் இறுதியில் மாங்குளம் இராணுவ தகர்ப்புடன் முடிவடைகின்றது. ஆனால் அந்தப் பயணத்தில் லியோ என்கின்ற பாத்திரம் சந்திக்கும் மக்கள், வறுமை/சாதியப் பெருமிதங்கள், இராணுவத்தால் கொல்லப்பட்ட மனிதர்களின் உறவுகள் என்று பலவற்றை அவர் தொட்டுச் செல்கின்றார். ஒருவகையில் இது அந்தக்காலத்தைய வன்னி மக்களின் வாழ்க்கையை சொல்லும் ஓர் முக்கிய ஆவணமாகவும் ஆகின்றது. மேலும் அவர் மக்களை/போராட்டத்தை/யுத்தத்தை மட்டுமில்லாது மிக நிதானமாக இயற்கையை விவரித்துச் செல்வது அவ்வளவு அருமையாக இருக்கின்றது. இதைவிட வியப்பாக இருப்பது, மலரவன் போர் உலா'வை எழுதும்போது அவருக்கு 18 வயதேதான். இத்தகைய ஓர் நடந்த சம்பவங்களை புனைவிற்குரிய மொழியில் ஒருவர் தனது பதின்மத்திலேயே எழுதிவிட்டார் என்கின்றபோது ஒரு வியப்பு வருகின்றது. மலரவன் பின்னர் அவரது 20 வயதில் பலாலியில் நடந்த முக்கிய தாக்குதலில் இதன் பிறகு இரண்டு வருடங்களில் இறந்துவிடுகின்றார். அந்தப் பலாலி தாக்குதல் என் நினைவில் நன்கு இருக்கின்றது. ஏனெனில் எங்கள் கிராமங்களை அச்சுறுத்தும் முக்கிய இராணுவ/விமானத் தளமாக பலாலி கூட்டுப்படைத்தளம் அன்று இருந்தது. அந்தத் தாக்குதலில் இயக்கத்தின் முக்கியமானவராக செல்வராஜா மாஸ்டர் என்பவர் உள்ளிட்ட 50இற்கும் மேற்பட்ட போராளிகள் இறந்திருந்தனர். எனினும் 'போர் உலா' எழுதிய மலரவனும் இறந்தார் என்பதை அப்போது அறிந்தேனில்லை. இந்தப் பிரதி மலரவன் இறந்தபின்னே அவரது உடமைகளோடு கண்டுபிடிக்கப்பட்டு இயக்கத்தால் வெளியிடப்படுகின்றது. இருபது வயதுக்குள் உக்கிரமான சமர்க்களத்தில் களமாடியபடி மலரவன் தனியே 'போர் உலா' மட்டும் எழுதவில்லை. 'புயல் பறவை' என்ற நாவலையும், வேறு பல கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கின்றார். அவரின் ஒன்றிரண்டு புனைவு நூல்கள் கிடைக்காமலே அழிந்து போயிருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது. 'போர் உலா' முடியும்போது அவர் அடுத்து பங்குபற்றிய சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதல் பற்றியும் எழுத இருப்பதான குறிப்பையும் பார்க்கின்றோம். அதை எழுத முன்னர் மலரவன் காலமாகிவிட்டார் என்பது துயரமானது. அந்தச் சிலாவத்துறை சமரிலே மலரவன் படுகாயமுற்று தனது சிறுநீரகம் ஒன்றையும் இழக்கின்றார். 'புயல் பறவை' நூல், பின்னர் மலரவனின் தாயால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 'புயல் பறவை' யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயக்கத்தில் போகின்றவர்களையும், இயக்கத்தில் பெண்களைச் சேர்ப்பது குறித்த உரையாடல்களும் இருக்கின்றன என அறிகின்றேன். (இந்நூல்களைத் தேடுபவர்க்கு, 'போர் உலா', 'புயல் பறவை' இரண்டையும் 'விடியல்' பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கின்றது). மலரவன் சிலாவத்துறை சமரில் (சிறுநீரகம் ஒன்றை இழந்து) காயங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரின் தாயாரோடு இந்தப் பிரதிகளைப் பற்றிப் பேசியும், திருத்தங்களையும் செய்திருக்கின்றார் என்று அவரது தாயான எழுத்தாளரான மலரன்னை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் -2000 பீரங்கிப்படையில் முன்னணிப் படைவீரராக இருந்தவர். இது இயக்கத்தின் உள்ளூர்த் தயாரிப்பு மோட்டார்களைக் கொண்டிருந்தது. யாழ் கோட்டையை அன்று இயக்கம் கைப்பற்றியதில் இந்தப் படையணியின் பங்கும் அளப்பரியது என்பதை அன்றையகாலத்தில் யாழில் இருந்தவர்க்கு தெரியும். பசீலன் என்பவர் வன்னி மாவட்டத் தளபதியாக இருந்து இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டவர். அவர் நினைவாக இந்தப் படையணி தொடங்கப்பட்டது. போர் உலாவிலும் மலரவன் இந்தப் படையணியின் ஒருவராகவே தாக்குதலுக்கு வருகின்றார். மணலாற்றில் இருந்து பீரங்கிகளையும் நகர்த்த வேண்டும். அதேசமயம் இலங்கை இராணுவத்தின் விமானங்களின் கண்களுக்கும் தெரியக் கூடாது. இதை நகர்த்தும்போது சாதாரண மக்களும் காணக்கூடாது. இல்லாவிட்டால் ஒரு தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற செய்தி பரவி, முழுத்தாக்குதலுமே தோல்வியில் முடியும் ஆபத்தும் இருக்கின்றது. 3. மலரவன், மாங்குளம் முகாம் உள்ளிட்ட சில தாக்குதல்களின் பங்குபற்றியபின், அவருக்கு இருந்த எழுத்துத் திறமையால் புலிகள் அவரை ஒவ்வொரு சண்டையின்போதும் நடப்பவற்றையும், அதை ஆராய்ந்து எழுதுவதற்குமென நியமித்திருக்கின்றனர் (பசீலன் -2000 அணியையும் பின்னர் இயக்கம் கலைத்து விட்டிருந்தது). மலரவன் எழுதிய முக்கிய இன்னொரு சண்டை அனுபவம், அவரின் பொறுப்பாளரான அப்போது இருந்த தமிழ்ச்செல்வனால் பாராட்டப்பட்டபோதும், நிறைய இராணுவ இரகசியங்கள் அதில் இருந்ததால் அது பிரசுரிக்காமலே போய்விட்டது. அதுவும் வெளிவந்திருந்தால் இன்னொரு 'போர் உலா' போல முக்கியமான படைப்பாக ஆகியிருக்கும். மாங்குள முகாம் தகர்ப்பு பெரும் செய்தியாக எங்களின் காலத்தில் பேசப்பட்டது. அதில்தான் புலிகளின் முக்கியமான ஒருவராக இருந்த லெப்.கேணல் போர்க் தற்கொலைப்போராளியாக சென்று முகாம் தகர்ப்பைத் தொடக்கி வைத்தவர். எங்கள் காலத்தில் ஒருவருக்கு லெப்.கேணல் என்ற பதவி கொடுக்கப்பட்டால், பின்னரான காலத்தில் கேணல்/பிரிகேடியர் போன்ற பெரும் தளபதிகளுக்கு நிகர்த்தது அது. புலிகளின் மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்த தளபதிகளான ராதா, விக்டர் போன்ற மிகச் சிலருக்கே இந்த லெப்.கேணல் பதவி அப்போது கொடுக்கப்பட்டிருந்தது ( எங்களின் காலத்தில் முதலாவது கேணல் பட்டம் பின்னர் கிட்டுவோடு தொடங்கியிருக்க வேண்டும்). போர்க்கின் புகைபடத்தோடு வந்த மாங்குளம் முகாம் தகர்ப்பை அவ்வளவு பதைபதைப்புடன் அன்று வாசித்ததும் நினைவில் இருக்கின்றது. இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. அதுபோல இன்னொரு சுவாரசியமான (அப்படிச் சொல்லலாமோ தெரியாது) விடயமும் நினைவுக்கு வருகின்றது. வன்னியில் இருந்த சமயம், எனக்கு பால்ராஜோடு பேசும் ஒரு சந்தர்ப்பம் நண்பர்களோடு வாய்த்தது. அப்போது பிரிகேடியர் தரத்தில் இருந்த பால்ராஜ், தற்செயலாக மாங்குளம் முகாம் தகர்ப்புப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மலரவன் எழுதிய போர் உலாவில் வந்த தாக்குதலை முன்னின்று நடத்திய அன்றைய வன்னித் தளபதியாக பால்ராஜே இருந்தவர். பால்ராஜ் அங்கே நடந்த தாக்குதலையோ, அவருக்கு நெருக்கமாக இருந்த போர்க் தற்கொலைப்போராளியாகப் போனது பற்றியோ எதுவும் பேசவில்லை. அவர் எங்களுக்கு அந்த சமரில் களமாடிய வீரமிக்க இலங்கை இராணுவ மேஜர் ஒருவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் அந்த மேஜர்தான் அந்த இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவர். புலிகள் கிட்டத்தட்ட முகாமைத் தகர்த்து வெல்லும் நிலை வந்துவிட்டது. அந்த இராணுவ மேஜர் உயிரோடு இருந்த மற்றவர்களையெல்லாம் தப்பிப் போகச் சொல்லிவிட்டு, அந்த முகாமைவிட்டு வெளியேறாமல் இறுதிவரை சண்டையிட்டு உயிர் நீத்தவர் என்று சொல்லிக் கொஞ்சம் இடைவெளி விட்டு, 'அவன் ஒரு மரியாதைக்குரிய வீரன்' என்றார். அப்போது நான் அவரில் பார்த்தது எதிர்த்தரப்பின் வீரத்தை மதிக்கும் ஓர் உயரிய தளபதியின் ஆளுமையை. 4. மலரவனின் படைப்பும், வீரமும் நின்று இயங்கிய ஓர்மத்தை, தமிழ்ச்செல்வன் இந்த நூலின் பிற்பகுதியில் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிடுகின்றார். சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதலில், பசீலன் -2000 அணி கடும் இழப்பைச் சந்திக்கின்றது. இந்த அணியில் மலரவனோடு பல சண்டைகளில் சேர்ந்து நின்ற அவரது நண்பன் (மேஜர்) லம்பா இறந்துவிடுகின்றார். அவ்வளவு வேதனையோடும், கோபத்தோடும் இருக்கும் மலரவனை விட்டால் அவனும் உணர்ச்சி நிமித்தம் இராணுவ எல்லைக்குள் புகுந்து இறந்துவிடுவான் என்று தமிழ்ச்செல்வன் அஞ்சுகின்றார். அந்தக் கோபத்தை, அந்த உக்கிர சண்டையின் நடுவிலும் எங்கோ ஒரு மூலையில் ரோர்ச் லைட்டின் உதவியுடன், லம்பா பற்றிய நினைவுக்குறிப்பை எழுதிவிட்டு அதை பத்திரிகைக்கு அனுப்பிவிடுங்கள் என்று மலரவன் கொன்டு வந்து தந்தான் என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகின்றார். அதேபோன்று சிலாவத்துறை தாக்குதலில் இறுதிநாள்களில் பீரங்கியை இராணுவத்துக்கு அருகில் நகர்த்தி அவ்வளவு உக்கிரமானமாக சண்டை செய்தான் என்றும், இவன் இனி தப்பியே வரமாட்டான் என்று நம்பியவளவுக்கு அவனது மூர்க்கம் அப்படி இருந்தது என்றும் தமிழ்ச்செல்வன் பதிவு செய்கின்றார். இச்சமரிலே மலரவன் காயமடைந்து அவரது சிறுநீரகமொன்றையும் இழந்திருக்கின்றார். மலரவன் போல அன்றைய காலங்களில் பல போராளிகள், படைப்பாளிகளாகவும் பரிணமித்தார்கள். மேஜர் பாரதி, கப்டன் கஸ்தூரி, 2ம். லெப்.வானதி, பின்னர் மலைமகள் என பெண்களிடையேயும் வீரியமிக்க பல படைப்பாளிகள் தோன்றினார்கள். அவர்களின் பெரும்பாலான படைப்புக்கள் அன்றைய காலங்களில் தொகுப்புக்களாகியபோதும் இப்போதைய தலைமுறைக்குக் கிடைப்பதில்லை. இந்தப் பெண்களின் சிலர் இயக்கம் படுமோசமாக முதலில் தோற்ற ஆனையிறவு முகாம் ('ஆகாய கடல் வெளி சமர்') தகர்ப்பில் இறந்துபோனவர்கள். இன்று சிலர், தாம் ஒன்றிரண்டு வருடங்கள் இயக்கங்களில் இருந்து தம்மைத் தொடர்ந்து முன்னாள் போராளிகளாக முன்வைக்கும்போது, மேலே குறிப்பிட்டப்பட்டவர்கள் போராளிகளாகவும் படைப்பாளிகளாகவும் இருந்து மரணித்தவர்கள் என்பதை நாம் நினைவில் இருத்தவேண்டும். அவர்களே மிகுதி அனைவரையும் விட போராளிப் படைப்பாளிகளாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவர்கள். ஒருவர் தன்னை கடந்தகாலத்தில் போராளியாகவோ அல்லது ஆதரவாளராகவோ முன்வைத்து பொதுவெளியில் பேசினால், அவர்கள் எந்தக்காலத்தில், எப்போது அப்படி இருந்தார்கள் என்பதை தமது நூல்களில் தம்மைப் பற்றிய அறிமுகத்தில் முன்வைக்க வேண்டியது குறைந்தபட்ச அறமாகும். ஏனெனில் அதுவே தமது முழு வாழ்க்கையையே களத்தில் காவுகொடுத்த மலரவன், பாரதி, கஸ்தூரி, வானதி, மலைமகள் என்கின்ற எண்ணற்ற போராளிப் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும். ***************** இளங்கோ டிசே - முகநூலில்1 point- நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
இவரைப்பொறுத்தவரையில் ஆர்வக்கோளாறு1 point- நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
ஆகிவிட்டாரே மருத்துவர் ..அவர் படித்த பல்கலைகழகத்துக்கு இவரது பேச்சுக்கள் அழகல்ல....நொடிக்கு நொடி டொக்கடர் அர்ஜுனா ,,,கூறும் இவர் ..மருத்துவர் ஒருவர் என்ன பண்புகளை கொண்டிருக்க வேணும் என்ற எண்ணமே இல்லாமல் இன்னுமொரு பெண்ணின் பெயரை சொல்லி..... அதன் விளைவுகளை டிக்டொக் மக்கள் அனுபவிக்க போவதில்லை ...அவரை முன்னுக்குகொண்டு வந்த யூ டியுப் அடியான்களும் அனுபவிக்க போவதில்லை ... ஒர் இனம் மறைமுக பாதிப்புக்கு உள்ளாக போகிறது ஒர் சாதாரண மனிதன் இவரை போல கதைத்தால் ஏற்றுக்கொள்ளலாம் ,ஆனால் மருத்துவர் இப்படி தரக்குறைவாக தனிநபர் தாக்குதல் செய்வது ஏற்புடையது அல்ல ..மேலும் இவர் தான் தேசியத்தலைவரின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு இவ்வளவு இழிவாக பேசுவது அழகல்ல...யூ டியுப் அரசியல் என்பது வேறு நிஜ அரசியல் வேறு ...1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️ நான் சுகமாகவுள்ளேன். உங்கள் அக்கறைக்கு நன்றிகள். எமது பகுதியில் எந்த நேரமும் மின்சாரம் தடைப்படலாம் என அறிவித்துள்ளார்கள். மின்சாரம் நிப்பாட்டினால் அகதி தான் 😪. நண்பர்கள் வீடுகள் அல்லது விடுதிகளை தேடிச் செல்ல வேண்டும்.1 point- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
சாமியார் எத்தனை? ஏனையவர்கள் எத்தனை தரம் யோசிக்க வேண்டும்?? என்பதைக் குறிப்பிட்டால் தன்யனாவேன்.1 point- சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு? பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 8 ஜனவரி 2025, 04:25 GMT தென்னிந்தியாவில் கிடைக்கும் குறியீடுகளுடன், சிந்து சமவெளியில் கிடைக்கும் குறியீடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் 90 சதவீதம் அளவுக்கு ஒற்றுமை இருப்பதாகச் சொல்கிறது புதிய ஆய்வு ஒன்று. சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவு சென்னையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சிந்துவெளிப் பண்பாட்டைக் கண்டுபிடித்து அறிவித்த பிரிட்டிஷ் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷலின் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட ஓர் ஆய்வின் முடிவு பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது. 'Indus Signs and Graffiti Marks of Tamilnadu: A morphological Study' என்ற இந்த ஆய்வை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கே. ராஜனும் ஆர். சிவானந்தமும் இணைந்து மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகளின்படி, சிந்துவெளி நாகரீகத்தில் கிடைக்கும் எழுத்துகள் மற்றும் குறியீடுகளுக்கும் தமிழ்நாடு, தென்னிந்தியாவில் கிடைத்த பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் பெருமளவு ஒற்றுமை இருப்பது தெரிய வந்துள்ளது. சிந்து சமவெளியில் வளர்ச்சியடைந்த ஒரு எழுத்து முறை இருந்தது பல ஆதாரங்களின் மூலம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எழுத்துகள், முத்திரைகள், மட்பாண்ட ஓடுகள், உலோகப் பொருட்கள் ஆகிவற்றில் இருந்து கிடைத்தன. இம்மாதிரி கிடைத்த 4,000 பொருட்களில் இருந்து சுமார் 450 தரப்படுத்தப்பட்ட குறியீடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிந்து சமவெளி: சங்க இலக்கியத்தோடு ஒத்துப்போகும் வாழ்வியலை கொண்ட பண்டைய நாகரிகம் 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளின் ரகசியம் என்ன? முத்திரைகளில் மத அடையாளமா? தோலாவிரா: ஆரியர் படையெடுப்பால் அழிந்து போனதா இந்த சிந்து சமவெளி நகரம்? மிக நீளமான வாக்கியம் பொதுவாக எழுத்து வடிவத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் சித்திர எழுத்துகள், பிறகு ஒரு கருத்தை வெளிப்படுத்துவதைப் போன்ற சித்திரங்கள், அதன் பின் ஒரு வார்த்தையை குறிக்கும் வகையிலான முத்திரைகள் இறுதியாக ஒரு ஒலியைக் குறிப்பிடும் எழுத்துகள் என வளர்ச்சியடைகின்றன. சிந்துவெளியில் கிடைத்த தரப்படுத்தப்பட்ட குறியீடுகளைப் பொறுத்தவரை, அவை சித்திரங்களை எழுத்தாகப் (Logo-syllabic) பயன்படுத்தும் எழுத்து முறையை சார்ந்தவை என்றே பலரும் கருதுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. சிந்து சமவெளியில் கிடைத்த வாக்கியங்கள் 4-5 குறியீடுகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. 50க்கும் மேற்பட்ட வாக்கியங்களில் பத்து குறியீடுகள் இருந்தன. தோலாவிராவில் கிடைத்த ஒரு பலகையில் 10 எழுத்துகள் இருந்தன. இதுவரை கிடைத்தவற்றிலேயே மிக நீளமான வாக்கியத்தில் 26 எழுத்துகள் இருந்தன. ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?7 ஜனவரி 2025 ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலால் இந்தியா - கனடா உறவு மேம்படுமா? ஓர் அலசல்7 ஜனவரி 2025 பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN சிந்துவெளி எழுத்துகள் பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகவில்லை என்பது சிந்துவெளி குறியீடுகளில் இருக்கும் மற்றொரு முக்கியமான அம்சம் என்கிறது இந்த ஆய்வு. அந்த பரிணாம வளர்ச்சிக் கட்டத்தை அடைவதற்கு முன்பாகவே அவை தரப்படுத்தப்பட்டுவிட்டன. மேலும், பிராந்திய ரீதியான வேறுபாடுகளும் அக்குறியீடுகளில் இல்லை. கமில் ஸ்வலபில், அஸ்கோ பர்போலா, சுனிதி குமார் சாட்டர்ஜி ஆகியோர் சிந்துவெளி குறியீடுகள் தொல் திராவிட மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள். ஆனால், வேறு சில ஆய்வாளர்கள் அவை இந்தோ - ஐரோப்பிய மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள். மைக்கல் மிட்சல், ஸ்டீவ் ஃபார்மர் போன்றவர்கள் அவை எந்த மொழியையும் சார்ந்தவை அல்ல, வெறும் குறியீடுகள் மட்டுமே என்கிறார்கள். பகதா அன்சுமாலி முகோபத்யாய், இந்தக் குறியீடுகள் பொருளியல் சார்ந்த வடிவவியலைக் கொண்டவை என்றும் அவற்றுக்கு ஒலி கிடையாது என்றும் சொல்கிறார்கள். வங்கிக் கடன் - கிரெடிட் ஸ்கோர் என்ன தொடர்பு? சிபில் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி? 5 முக்கிய விஷயங்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை7 ஜனவரி 2025 திராவிட கலாசாரத்துடன் இணைத்து ஆராய்ச்சி பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN இந்த சிந்துவெளி எழுத்துகளைப் புரிந்துகொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஐராவதம் மகாதேவன், பகதா அன்சுமாலி முகோபத்யாய் ஆகியோர் இதில் சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம், சிந்து சமவெளி நாகரீகத்தை திராவிட கலாசாரத்துடன் இணைத்து ஆராய்வதிலும் பல ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே சிந்துவெளி குறியீடுகளையும் தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த குறியீடுகளையும் இந்த ஆய்வு ஆராய்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 140 தொல்லியல் தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 15,184 பானை ஓடுகளில் இருந்து, 14,165 பானை ஓடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2,107 குறியீடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அதிலிருந்து 42 குறியீடுகள் அடிப்படைக் குறியீடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 544 குறியீடுகள் அவற்றின் வேறுபாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN இப்படி தொகுத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் கிடைத்த பல குறியீடுகள் சிந்து வெளி எழுத்துகளுக்கு இணையாக விளங்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. தமிழ்நாட்டில் வகைப்படுத்தப்பட்ட 42 குறியீடுகள் மற்றும் அவற்றை ஒத்த குறியீடுகளில் 60 சதவீத குறியீடுகளுக்கு இணை எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளில் கிடைத்துள்ளன. இவை தற்செயலாக நடந்திருக்க முடியாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மேலும், சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் எவ்வித தடயங்களும் இல்லாமல் மறைந்திருக்காது என்ற அடிப்படையில் அவை வெவ்வேறு வடிவங்களாக மாறியிருக்கும் அல்லது பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கும் என நம்புகிறார்கள். கோவை: பிறந்த நாளன்று ஆடியோ பதிவிட்டு இறந்த மாணவர் - கல்லூரிகளில் உளவியல் ஆலோசனை தீர்வாகுமா?7 ஜனவரி 2025 அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்7 ஜனவரி 2025 வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN தென்னிந்தியாவில் ஒரே வகையான குறியீடுகள் கிடைப்பது, தென்னிந்தியாவுக்கும் சிந்துவெளி நாகரீகத்துக்கும் இடையில் இருந்த ஒருவித பண்பாட்டுத் தொடர்பைக் குறிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால், இதை உறுதிசெய்யக் கூடுதல் ஆய்வுகள் தேவை என்பதையும் இந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிந்துவெளி பண்பாடு செப்புக் காலத்தில் இருந்தபோது, தென்னிந்தியா இரும்புக் காலத்தில் இருந்தது. ஆகவே, இரு பகுதிகளுக்கும் இடையில் நேரடியாகவோ இடைநிலை மண்டலங்கள் வழியாகவோ பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம். தென்னிந்தியாவில் உள்ள இரும்புக் கால கல்லறைகளில் கிடைக்கும் சூது பவளம், அகேட் மணிகள், செப்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் ஆகியவை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்திருக்கலாம் என்கிறது ஆய்வு. பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN சிந்து சமவெளி நாகரீகம் முடிவுக்கு வந்ததற்கு காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தபோது, அவர்கள் தங்களுடன் தங்கள் மொழி, கலாசாரம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர். இந்த ஆய்வை மொழியியல் ரீதியான ஒப்பீட்டு ஆய்வு என்பதைவிட வடிவரீதியிலான ஒப்பீட்டு ஆய்வு என்று சொல்வதே சரி என்கிறார்கள் ஆய்வாளர்கள். பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகள் அல்லது எழுத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழியைக் கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் டாலர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையமும் இணைந்து சிந்துவெளிப் பண்பாடு குறித்தான ஆராய்ச்சிக்கு அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கும் பொருட்டு இரண்டு கோடி ரூபாய் நிதி நல்கை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj0r5de2pqvo1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து இருங்கள் ........ நெருப்போடு விளையாடக் கூடாது . .....!1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது என்னுடைய பகுதி இல்லை, இது அமெரிக்காவின் பகுதி, அண்ணா.............🤣. ஆமாம், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சுற்றித்தான் எரிந்து கொண்டிருக்கின்றது. மலைப்பகுதிகளிலும், அடிவாரங்களிலும் எரிகின்றது. இது எப்போதும், வருடா வருடம், நடக்கும். எந்த வருடம், எந்த மலைகள் எரியும் என்பது தான் நடந்த பின்பே தெரிகின்றது. என்னுடைய வீடு மலையிலோ அல்லது அடிவாரத்திலோ இல்லை. கடற்கரைப் பக்கமாக உள்ளது. தேவைப்பட்டால், ஓடிப் போய் கடலுக்குள் விழும் திட்டம் ஒன்று கைவசம் இருக்கின்றது. ஃபயர் வந்ததால் பனாமாக் கால்வாய் கிடையாது என்று நீங்கள் சொல்வது கொஞ்சமும் நியாயம் இல்லை, அண்ணா................ பனாமாவிலும் ஃபயர் வரும்....................🤣.1 point- இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
பா.உ இளங்குமரன் நடந்துகொண்டவிதம் முற்றிலும் சரியானதே. மக்களின் பிரதிநிதியாக திருடர்களை தப்பிக்கவிடாமல் உடனடியாக செயல்பட்டு கனிமம் கடத்திய லாரிகளை கைப்பற்றி பொலிசாரிடம் அவற்றை ஒப்படைத்தார். பொது மக்களே திரண்டுவந்து இதே போல் செயற்பட்டிருந்தால் அதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அதேபோலத்தான் இதுவும். அவசர நேரத்தில் குற்றச்செயலை தடுப்பதற்கு அவர் நடந்துகொண்டவிதம் பாராட்டுக்குரியது.1 point- ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
குறுகிய நோக்கில் மட்டுமே இலாபம். நேட்டோவின் நோக்கங்களில் ஒன்று ஐரோப்பாவைப் பாதுகாப்பது. ஏன் பாதுகாக்க வேண்டும் ? அமெரிக்காவின் வர்த்தகத்தில் ஐரோப்பா முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்றுமதி மற்றும் சேவைகள் மூலம் ஐரோப்பாவிலிருந்து கிடைக்கும் வருமானம் (ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லாத நாடுகள் தவிர்த்து) மட்டும் 870 பில்லியன் டொலர்கள். இரு தரப்பிலும் 10 மில்லியன் பேர் இடம்பெயர்ந்து வர்த்தகம் செய்கிறார்கள். ஆகவே அமெரிக்காவுக்கு ஐரோப்பிய கண்டத்தைப் பாதுகாக்கும் கடமைப்பாடு உண்டு. அதே வேளை ஏனைய நாடுகளைவிட அதிக பணம் செலவளிப்பதால் ஐரோப்பாவை ஒருவகையில் தனது கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருக்கலாம்.1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
அதேபோல் விமானத்தில் பயணஞ் செய்யும் பெண்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தால்: சாமியாருக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை கொடுப்பார், ஆனால் வீட்டுக்கார அம்மாவையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.1 point- இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
சட்ட விரோதமானவரிடம் பொருளை வாங்குவதும், விநியோகிப்பதும் குற்றம் என்பது சட்டத்தரணிக்கு தெரியவில்லையோ? அப்போ, தான் பொருள் யாரிடம் பெறுகிறேன் அவர்கள் எப்படிப்பெறுகிறார்கள் என்று அழைத்து வந்து கருத்து தெரிவித்தாரே, அது எப்படி? அப்படியென்றால், போதைப்பொருள் கடத்துபவரையல்லவா கைது செய்ய வேண்டும், ஏன் வியாபாரிகளை கைது செய்கிறார்கள்?1 point- புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
போக்குவரத்தில் தனியார் அரசு பஸ்கள் இடையான போட்டிகளைத் தடுத்து நிறுத்தினால் அரைவாசிப் பிரச்சனை தீர்ந்து போகும்.1 point- இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
ஆமா, இப்படியான சட்ட விரோதமான தொழில் செய்பவர்களுக்கு உதவுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அது பரீட்சயந்தான்.1 point- தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!
சும் இன் மைன்ட் : சரி இதுக்கும் ஆப்படிக்க வேண்டியது தான்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
நல்ல கவனிப்பு1 point- ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
அமெரிக்கா என்னதான் உலகை ஆட்டைய போட்டாலும் அவர்களையே ஆட்டையப்போடுபவர்கள் இந்தியர்கள், 2022 இல் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியர்கள் இந்தியாவில் இருந்தவாறே ஏமாற்றியுள்ளார்கள் என கூறுகிறார்கள். வல்லவனுக்கு வல்லவன்,மோடிஜி இன் டியிட்டல் இந்தியா😁 .1 point- இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
இது ஒரு நல்ல திட்டம்தான்.1 point- மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!
இந்த மக்கள் இயல்பு வாழ்க்கையினை மீளப்பெறுவதென்பது மிகவும் சவாலான விடயம் (ஏற்கனவே இலங்கை ஒரு பொருளாதார பாதிப்பிற்குள்ளான நாடு), ஆனாலும் உள்ளூர் மக்கள்தான் முதலில் உதவியுள்ளார்கள் என்பது ஒரு ஆறுதலான விடயம் (முல்லை தீவு மீனவ சங்கத்தின் உதவி), அகதி வாழ்கை வாழ்ந்த எம்மால் ஒரு அகதி வாழ்க்கையின் நடைமுறை அனுபவத்தினூடாக அந்த வலிகளை புரிந்தமையால் அதிலிருந்து இந்த மக்களுக்கான உதவிகளை செய்வதனூடக அவர்களை விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும், அத்துடன் நில்லாது அரசு அவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கும் சொந்த இருப்பிட வசதிகளை உருவாக்கி வாழ்வதற்கு தேவையானவற்றை செய்யவேண்டும்.1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
நான் நாலைஞ்சு தரம் எயர் கனடாவிலை போயிருக்கிறன். சாப்பாடும் சரியில்லை. அதிலை வேலை செய்யிற ஆக்களும் வடிவில்லை. கனடா போறதையே வெறுத்துப்போச்சுது.1 point- இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
நான் சொல்லல, பொலிஸாருக்கு தமது கடமை பற்றிய தெளிவு, அறிவு இல்லை. கிளீன் என்றவுடன், அர்த்தம் புரியாமல், வாகனங்களை கிளீன் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காரணம், பெரும்பாலும் அவர்கள் லஞ்சம் பெறும் இடங்கள் இவைதான்.1 point- தமிழர்களிடையே சர்வநிவாரண ஆரோக்கிய பானம்
நான் 2010ம் ஆண்டுகளில் வேலை செய்த நிறுவனத்திற்கு அருகிலேயே இந்த ஹேர்பல் லைஃப் நிறுவனமும் இருந்தது. பெருந்தெருவில் இருந்து பார்த்தாலே இதன் பெயர் தெரிவது போல, உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் இதன் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதற்கு அருகில் தான் எனது வேலை இடம் என்று குறிப்பிட்டு இந்த நிறுவனத்தை ஒரு அடையாளமாக பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அது மட்டுமே தான் இந்த நிறுவனத்தின் ஒரே ஒரு பயன்பாடு எனக்கு. இங்கு இப்படி பல நிறுவனங்களும், பொருட்களும் உண்டு. சுகதேகியான ஒருவர் Balance Dietஐ தவிர்த்தால், நிச்சயம் பக்கவிளைவுகள் வந்தே ஆகும். உடல் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகளால் சிலவற்றைத் தவிர்ப்பது வேறு............. தமிழ்நாட்டில் இருவர் இறந்த நிகழ்வு சில வருடங்களின் முன் என்று ஒரு ஞாபகம். இங்கு நண்பர்கள் சிலர் புரதம் மற்றும் கொழுப்புணவுகள் மட்டுமே என்று முயன்றிருக்கின்றனர். சமிபாட்டுப் பிரச்சனை மற்றும் சில ஒவ்வாமைகளும் ஏற்பட்டு, இப்பொழுது எல்லோரும் ஓரளவிற்கு சமச்சீரான ஒரு உணவுப் பழக்கத்திற்கு வந்துவிட்டனர் என்று நினைக்கின்றேன்.1 point- தமிழர்களிடையே சர்வநிவாரண ஆரோக்கிய பானம்
இணையவன், நீங்கள் / நாங்கள் கரடியாக கத்தினாலும், தலையைக் குத்தி தாளம் போட்டாலும், எங்கள் சனம் திருந்தாது. பலவிதமான ஆய்வுகளுட்பட்டு, பரிசோதனை சுற்றுகளெல்லாம் முடிந்து வெளி வரும் ஒரு மருந்தையோ அல்லது தடுப்பூசியையோ நம்பாமல் சதிக்கதைகள் எல்லாம் சொல்லுவினம், ஆனால் இப்படி ஒரு குடி நீரை அல்லது பானத்தை அப்படியே நம்பி குடிப்பினம். ஆட்டு மந்தைக் குணம். இன்னும் ஒரு முட்டாள் கூட்டம் இருக்கு. அக் கூட்டம் " நீ ஆங்கில மருந்தைத் தான் நம்புவாய், ஆனால் இப்படியான மருந்துகளை நம்ப மாட்டாய்" என்று புளிச்சல் ஏவறைக் கதைகள் கதைப்பினம். இப்படி தவறான பானத்தை நம்பி பருகி நோயில் வீழ்ந்தவர்கள் எனக்குத் தெரிந்து இருவர் உள்ளனர். இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்து நல்ல தொழில் செய்கின்றவர்கள். கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். பாமரர்களைக் காட்டிலும் இவற்றை அதிகம் நம்புவது எம் மக்கள் மத்தியில் இருக்கும் படித்தவர் கூட்டம் தான்.1 point- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
இப்படி சில விடயங்கள் நடந்திருக்கின்றன. மேலதிக தகவல்கள் ஏதாவது இருந்தால் தந்துதவுங்கள். 1. போட்டது விசர் நாய் தடுப்பூசியா அல்லது வேறெதும் நோய்களுக்கான தடுப்பூசியா? 2. ஊசியை தொடையில் போட்டார்களா அல்லது முதுகில் தோலை உயர்த்திப் போட்டார்களா? 3. மிருக வைத்தியரிடம் சென்று அங்கே இருந்தோர் ஊசி போட்டார்களா அல்லது உள்ளூராட்சி சபை, பிரதேச சபை ஊழியர்கள் வீட்டுக்கு வந்து ஊசி போட்டார்களா? 4. ஊசி போட்ட பின்னர் புத்தகத்தில் பதிந்த ஊசி தயாரிப்புக் கம்பனியின் விபரம் இருக்கிறதா? 5. இறப்பதற்கு முன் நாயின் கண்கள், மூக்கில் இருந்து ஏதாவது சுரப்புகள் வெளிவந்தனவா? அல்லது நாய் நடக்க இயலாமல் அவயவங்கள் செயலிழந்த நிலை இருந்ததா?1 point- கருத்து படங்கள்
1 point1 point- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
அவர் பெயர் ஶ்ரீராம் கிருஷ்ணன், அண்ணா. ஶ்ரீராமை ட்ரம்ப் இந்தப் பதவிக்கு நியமித்த உடனே, சில நாட்களின் முன், அவரைப்பற்றி மிகச் சுருக்கமாக இங்கு எழுதியிருந்தோம். இங்குள்ள ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் நீங்கள் சொல்லும் குணாதிசயங்கள் உள்ள நம்மவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அநேகமாக இருப்பார்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில் கூட நான் இப்படியான சிலரைப் பார்த்திருக்கின்றேன். போட்டுக் கொடுப்பவர்கள். ஶ்ரீராமிடம் இந்தக் குணாதிசயங்கள் இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மிகக்கடுமையான் உழைப்பாளி, எலான் மஸ்க் போன்றே, என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இருவரும் வேலைத்தளத்திலேயே தூங்கி எழுபவர்கள்............. அதி உச்சத்தை அடைவதற்கு அதி உச்ச புத்திசாலித்தனமோ அல்லது அதி கூடிய திறமையோ தேவையில்லை, ஆனால், அளவான திறமைகளுடன், மிகக்கடுமையான உழைப்பும், விடா முயற்சியும். அர்ப்பணிப்பும் தேவை. அது ஶ்ரீராமிற்கு அளவுக்கதிகமாகவே இருக்கின்றது. சென்னையில் எஸ்ஆர்எம் கல்லூரியிலேயே பொறியியல் படித்தார் என்று நினைக்கின்றேன். அதைவிட தமிழ்நாட்டில் மட்டுமே குறைந்தது பத்துக் கல்லூரிகள் ஆவது தரவரிசையில் கூடியவை. ஏதோ சில காரணங்களால் அன்று ஶ்ரீராமால் தரவரிசையில் முன்னிருக்கும் ஐஐடியிலோ அல்லது அண்ணா பல்கலையிலோ சேர முடியவில்லை. சிலருக்கு இதுவே வாழ்க்கை முழுவதும் ஒரு பெரிய உந்துதலாக இருக்கும்.1 point - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.