Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்14Points19638Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்10Points33292Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46965Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points88788Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/15/25 in all areas
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இதை பற்றி யாழில் முன்பே எழுதியுள்ளேன். ஜனவரி 13-16 க்கு இடையில் இந்திய துணை கண்டத்தின் கிழக்கு கரையில் இருப்போர் கொண்டாடும் பண்டிகை. அதில் மிகவும் ஸ்பெசலாக கொண்டாடும் கூட்டம் நாம். அவ்வளவுதான். அதில் கூட தமிழ் நாட்டில் பொங்கல் நான்கு நாள் கொண்டாட்டம். எமக்கு ஒருநாள். மாடு வைத்கிருப்போருக்கு 2 நாள். https://www.holidify.com/collections/harvest-festivals-in-india ———— பொங்கல் இயற்கையை வழிபட்டு நன்றி சொல்லும் நாள். சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் இந்த புதிய பைத்தியங்கள் எம்மை பீடிக்க முதல் நாம் இயற்கை வணங்கிகள். கடவுளாக அன்றி எம்மை பாலிக்கும் சக்தியாக இயற்கையை வணக்கிய தத்துவ மார்க்கத்தினர். அணங்குகளும், பேய்களும், சூரனும், நில தெய்வங்களுமே எமது இறை. அதன் தொடர்சியே பொங்கல். இப்படி தனியே தமிழர் திருவிழாவும் இல்லாத, சைவத்துக்கு சம்பந்தமே இல்லாத பொங்கலை - தமிழ்-சைவர் கொண்டாட்டம் என நீங்கள் சுவீகாரம் செய்ய முனைவது அபத்தமானது. ————- எனக்கு தெரிய கிறிஸ்தவர்கள் என் அயலில் கொண்டாடியதில்லை. ஆனால் இங்கே பலர் தம் சொந்த அனுபவத்தை எழுதும் போது அதை நான் எப்படி மறுதலிக்க முடியும்? சில இடங்களில் முன்பே கொண்டாடி இருக்கலாம். சில இடங்களில் புதிதாக கொண்டாட தொடங்கி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பொருட்டா? எது முக்கியம்? நாம் எல்லோரும் தமிழராக உணர்ந்து கொண்டாடும் ஒரு போக்கு வலுப்பெறுகிறது. இன ஒற்றுமைக்கு இது மிக நன்மையானது. இதை வரவேற்கவேண்டியது மட்டுமே நம் கடமை. பெளத்த-சிங்களவன் ஏனைய சிங்களவரை இப்படித்தான் உள்வாங்குவான். என்ன செய்வது வட்டத்தை குறுக்கி, குறுக்கி அழிந்துபோவது இந்த இனத்தின் சாபக்கேடு.6 points
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தைப்பொங்கல் வரலாறு தைப்பொங்கல் - ஒரு வரலாற்று நோக்கு நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றை வழிபாட்டு விழாக்கள், குடும்ப விழாக்கள், தொழில் விழாக்கள் என பருமட்டாகச் சில பகுப்புகளுக்குள் அடக்கலாம். ஓரினம் கொண்டாடிவருகின்ற அனைத்து விழாக்களுமே காலத்தின் வழியே நின்று நிலைத்து விடுவதில்லை. சில விழாக்கள் மறைந்துவிடக் கூடியவை, வேறு சில காலத்தை வென்று நிலைத்து நின்றுவிட வல்லவை. இன்றைய காலத்தில் தமிழர் கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் பன்னூறு ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வோடு நிலைத்து நிகழ்கின்ற விழாவாகச் சிறப்புற்றிருக்கின்றது. கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் விழாவாக மட்டுமன்றி, ஓரினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் மானுட விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தைப்பொங்கல் விழா. மானுடத்தின் வரலாற்றையும் வாழ்வையும் வடிவமைப்பதில் நிலவமைவு முதன்மை இடம் பெறுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிலவமைப்பின் அடிப்படையில் தமது வாழ்வை நான்காக வகுத்து, ஒவ்வொன்றுக்குமான சிறப்புகளை வரையறுத்து அதற்கமைய வாழ்ந்தோர் தமிழர். இவ்வாறான நிலவகைப்பட்ட வாழ்விலிருந்தே தேவைக்கேற்ப, விழாக்களும் தோற்றம் கொள்கின்றன. நான்கு நிலத்து மக்களும் தமது அமைவுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, வேறுபட்ட விழாக்களையே கொண்டாடி வந்திருக்கின்றனர். பழந்தமிழர் வாழ்வு கொண்டாட்டங்களால் நிறைந்தது. ஆடுவோரும் பாடுவோரும் வாழ்வை அழகுமிக்கதாக்கினர். கூத்தர், பாணர், விறலியர் போன்ற இலக்கிய மாந்தரே இந்தக் கொண்டாடங்களுக்குச் சான்றாவர். ஒவ்வொரு நிலத்தவரும் பல்வகைப்பட்ட கூத்துகளை ஆடியுள்ளனர். நிலவமைவில் பொருளியல் வேறுபாடு: மேற்குறித்த நில அமைவியல் வழி நின்றே தமிழரின் நிலவுடைமைச் சமூக வரலாறு தோற்றம் பெறுகின்றது. நிலவமைவைப் பொறுத்தே ஒரு சமூகத்தின் உறவுகள் வடிவமைக்கப்படுகின்றன வலிமை பெறுகின்றன. சமூக இருப்பின் தளமான பொருளாதார ஆக்கத்தையும் நிலவமைவே வடிவமைக்கின்றது. "ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் காணப்படும் பண்பாடு என்பது அடிக்கட்டுமானமான பொருளாதார உற்பத்தியைச் சார்ந்தே அமைகின்றது" என்கிறார் கார்ஸ் மார்க்ஸ். நால்வகை நிலத்தினுடைய பண்பாட்டு வேறுபாடுகளும் பொருளாதார வளர்ச்சியின் போக்குகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மலைகளைக் கொண்ட நிலவமைவான குறிஞ்சியும் மலைகளின் சாரல்களான காடுகளைக் கொண்ட முல்லை நிலமும் வேட்டை சமூக வாழ்வின் கூறுகளைக் கொண்டவையாக இருந்தன. அதேவேளை நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்கக் களங்களைக் கொண்டவையாகவும் இருந்தன. நெய்தல் நில மக்களின் பொருளாதார இருப்பு நிலத்தைச் சார்ந்திராது கடலைச் சார்ந்திருந்தது. இதுவே மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்குக் காரணமாயிற்று. இந்நிலவமைவுகளில் மருதநிலமே வலிமையான நிலவுடைமைச் சமூகம் வேகமாக உருவாகவல்ல தளமாக இருந்தது. வரட்சியால் பெரிதும் அழிவுறும் நிலமாக இல்லாமலும் பரந்த விவசாய வயல்வெளிகளைக் கொண்ட தளமாகவும் இது அமைந்தது. நேர்த்தியான குடும்பக் கட்டமைப்பும் தலைமைத்துவத் தோற்றமும் இங்குதான் தோன்றியது என்பர். மக்கள் பாதுகாப்பாக வாழ வல்லதாகவும் தேவைகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய இடமாகவும் மருதம் அமைந்திருந்தது. மக்களின் வாழ்க்கை முறைரய மேலாண்மையை நோக்கி நகர்த்திய சமூகமாகவே மருதச் சமூகம் அடையாளம் காணப்படுகின்றது. இந்த நகர்வுகளின் வழியே நகர், நகரம், நகரியம் நாகரிகம் என்ற சொற்கள் தோன்றியதாகக் கூறுவர். ஒவ்வொரு நிலத்திலும் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உற்பத்திகள் வழியே அறுவடை முடிந்து, விளைந்த பொருட்கள் வீடு வரும் நாட்களை மகிழ்வோடு கொண்டாடியிருக்கின்றனர். ஏனைய மூன்று நிலத்தோருக்கும் தலைமை நிலமாகவே மருதம் திகழ்ந்தது. தமிழ் நிலத்தின் பெரும் பரப்பு மருதநிலமாகவே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு அமைவாகவும் இருந்தது. இதன்வழியே தமிழ்ச் சமூகம் வேளாண்மை சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக உருப்பெற்றது. விவசாய நிலங்களின் பண்பாடு மற்ற திணைக்குரிய சிறுபான்மை நிலப்பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியது. எனவே மருதத்திணையில் அறுவடைக்காலக் கொண்டாட்டங்கள் மற்ற திணை சார்ந்த மக்களிடம் பரவியது. இதனால் மருதநில மக்களின் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா காலவோட்டத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமாக மாறியது. இப்பொங்கல் விழாவுடன் தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகள் தமிழர்களின் அடையாளங்களாக நிலைபெற்றன. பொங்கல் விழாவின் தோற்றம்: உழவு: வேட்டைச் சமூக வாழ்வின் முடிவாகவும் வேளாண்மைச் சமூக வாழ்வின் தொடக்கமாகவும் அமைந்த காலமே மானுடத்தை வாழ்வியல் மேன்மையை நோக்கி நகர்த்திய காலமாகும். நீர்நிலையருகே நிரந்தரமாகத் தங்கி, உழவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய மாந்தர் இயற்கை இடர், பிறவுயிரிகள் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தே விளைவுகளைப் பெற்றனர். நீண்டதும் கடுமையானதுமான உழைப்புக்குப் பின்னர் உழவின் பயனை வீட்டுக்கு எடுத்துவரும் வேளையில் மகிழ்ச்சி இயல்பாகவே ஏற்படும். அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கு வித்திடும். பொங்கல் என்ற அறுவடைத் திருநாளுக்கு இந்த மகிழ்வே வித்தாக இருந்திருக்க வேண்டும். உழவுத்தொழில் சிறு பயிர் உற்பத்தியிலிருந்து வளர்ச்சி பெற்று, மாரிகால மழையை நம்பிய பெரும்பயிர்ச்செய்கையாக மாற்றம் கண்ட காலத்தில் நெல் பயிரிடல் முதன்மைத் தொழிலாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆவணியில் விதைத்த விதை பயிராகி தைமாதத்தில் அறுவடைக்காகக் காத்திருக்கும். தன்னிறைவுக்கு அப்பால் பிறருக்கும் வழங்கும் வணிகத்தன்மையோடு உழவுத் தொழில் மேன்மை பெறத் தொடங்கிய காலத்தில் உழவைப் போற்றும் விழா மற்றுமொரு வடிவத்தைக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. உற்பத்திப் பொருட்களை வணிகம் செய்வதன் வாயிலாகப் பிற தேவைகளையும் நிறைவேற்றி மகிழும் காலமும் இதுவே என்பதால் இந்த அறுவடைக்காலம் கொண்டாட்ட காலமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அறுவடைக்காலத்தில் புத்தரிசி இட்டு மக்கள் பொங்கல் கொண்டாடினர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் எவ்வகைச் சான்றுகளும் இல்லை. அறுவடை சிறப்பாக நடைபெற்று, தாம் விரும்பியவை நிறைவேற வேண்டும் என பெண்கள் தை மாதத்தில் நோன்பு இருந்தார்கள் எனச் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் கூறுகின்றன. வானவியல்: ஆங்கில நாட்காட்டிக்கு அமைய ஜனவரி 14ம் நாள் தமிழ் நாட்காட்டியின்படி தை முதல்நாள் ஆகும். கதிரவனைச் சுற்றும் பூமின் நீள்வட்டப் பாதையில் கதிரவன் வடக்கு நோக்கி நகரத் தொடங்குவதைப் போன்ற நிலையில் பூமி தன் சுற்றுவட்டத்துக்குள் நகர்கின்றது. இதனை சூரியத் தோற்ற நகர்ச்சி என்பர். தை முதல் ஏற்படும் தோற்ற நகர்ச்சி ஆனி மாதம் வரை இருக்கும் இதை வட செலவு என்பர். வடமொழி உத்தர அயனம் எனப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை தென்படும் தோற்ற நகர்ச்சியைத் தென் செலவு (தக்கண அயனம்) என்பர். தென் செலவில் இருந்து கதிரவத் தோற்ற நகர்ச்சி வட செலவுக்குள் நுழையும் நாளே தமிழர் நாட்காட்டிக்கமைய தை முதல் நாளாகும். இரவும் பகலும் எப்போதும் ஒத்த நேரங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆண்டில் இரு நாட்கள் மட்டும் இரவும் பகலும் ஒத்த நேரத்தைக் கொண்டிருக்கும். இதைத் தமிழர் ஒக்க நாட்கள் என அழைக்கின்றனர். மார்ச் 22 இல் இரவும் பகலும் 12 மணி நேரத்தைக் கொண்டிருப்பதைப் போல, செப்டெம்பர் 22ம் நாளும் கொண்டிருக்கும். மார்ச் 23 வசந்தகாலத்தில் தொடக்கமாக ( Spring equinox) அமைகின்றது. செம்ரெம்பர் 23 இலையுதிர்காலத்தின் தொடக்கமாக அமைகின்றது. இதைப் போன்றே ஓராண்டில் அதிக நீளமான இரவைக் கொண்ட நாள் ஒன்றும், அதிக நீனமான பகலைக் கொண்ட நாள் ஒன்றும் உள்ளன. டிசம்பர் 22 நீளமான இரவைக் கொண்ட நாளாகவும் ஆனி 22 மிக நீளமான பகலைக் கொண்ட நாளாகவும் உள்ளன. பனிகாலத்தைக் கொண்ட நீண்ட இரவு குறைத் தொடங்குவதால் இதைப் தமிழர் பனி முடங்கல் என்பர். கடும் வெய்யிலைக் கொண்ட வேனில் காலத்தின் பகல் நேரம் குறையத் தொடங்குவதால் ஆனி 23ம் நாளை வேனில் முடங்கல் என்பர். மேற்குறித்த இந்த நான்கு நாட்களுமே நான்கு காலத்தினதும் தொடக்கங்களாக இருக்கின்றன. அத்தோடு பலவினத்தவரின் ஆண்டுத் தொடக்கங்களாகவும் இவை இருக்கின்றன. பூமி தன் உருட்டம் (self-rotation) வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration) என்ற இயக்கத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றும் பூமியை என்றும் ஒரே மாதிரியாக இயங்க விடுவதில்லை. நீண்டகால ஒழுங்கில் மேற்கூறிய நான்கு நாட்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த இயக்கங்களை அடிப்படையாக் கொண்டு கணிக்கும் முறைக்கு சக அயன முறை (Sayana method) என இந்தியர் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த முற்செலவத்தைப் பொருட்படுத்தாமல் காலம் கணிக்கும் முறைக்கு, நில்லாயன அயன முறை (Nirayana method) என்று பெயர். மேலை நாட்டவர் சக அயன முறையைப் (Sayana method) பின்பற்றியே காலத்தைக் கணிக்கின்றனர். இந்த முறைக்கமைய எப்போதுமே நீண்ட இரவு டிசம்பர் 22ம் நாளில் இருந்ததும் இல்லை. நீண்டகாலத்தின் பின் இருக்கப் போவதும் இல்லை. பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேறு நாட்களில் இருந்திருக்கும் என்கிறது அறிவியல். சில ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய, பனி முடங்கல் என அழைக்கப்படும் இரவு கூடிய இறுதிநாள் ஜனவரி 14 அல்லது 15 நாளிலே முன்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். குளிர் தரும் இரவுப்பொழுது குறையத் தொடங்குகின்ற, பனி முடங்கல் எனப்படும் அந்த நாளை, தமிழர் பொங்கலாகக் கொண்டாடத் தொடங்கியிருப்பர் என்கின்றது இந்த ஆய்வு. தெற்கு நோக்கிச் சென்று குளிர் தந்த கதிரவன் இனி வடக்கு நோக்கிச் சென்று வெய்யில் தரப் போகின்றான், அவனுக்கு நன்றி கூறுவோம் எனத் தோன்றியதே தைப்பொங்கல் என மேலும் கூறுகின்றது இந்த ஆய்வு. இதுவே பண்டைத் தமிழரின் ஆண்டுத் தொடக்கமாகும் என்பதையும் இது குறிப்பிடத் தவறவில்லை. பொங்கலின் தோற்றமும் ஊரக ஒருமைப்பாடும் தைப்பொங்கல் விழாவின் தோற்றம் குறித்து பல்வகைக் கருத்துகள் கூறப்பட்டாலும் வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இந்த விழா நீண்டகாலமாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது எனக் கருத இடமுண்டு. சமூகப் பொருண்மை மிக்க விழாக்களின் வேர்கள் பாமரர்களை அதிகமாகக் கொண்ட ஊரக வாழ்க்கைமுறைகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஊரும் உறவுமாய் நெருங்கி வாழும் கிராமத்தோர், சமூக ஒருமைப்பாட்டையும் ஒருமித்த இலக்குகளையும் கொண்டதாக விழாக்களை உருவாக்கினர். இவர்களே குடும்ப விழாக்களைக் கூட ஊர் கூடி நடத்தும் விழாக்களாகக் கொண்டாடியோர் ஆவர். விழைவுற்று நிகழ்த்துவது விழா என வேர்ச்சொல் ஆய்வாளர் கூறுவர். கிராமத்தார் எப்போதுமே விழைவுகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை நாட்டுப்புற இலக்கியங்கள் கூறுகின்றன. பொங்கல் விழாவும் ஊரக வாழ்வியலின் பொதுமைச் சிறப்புகளைக் கொண்டதாக அவர்களாலேயே வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வேதகால வழிபாட்டு நெறிகளை அறிந்திராத பாமர மக்கள், குழுக்களாக வழிபடும் கிராமியத் தெய்வ வழிபாடுகளை விடுத்து, அனைவருக்கும் பொதுவான கதிரவனுக்கு நன்றி செலுத்துவதைப் பொதுப் பண்பாகக் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. பொங்கல் விழா வெளிப்படுத்தும் உயர் கூறுகள் ஊரக வாழ்வியலுக்கே உரியவை. நகர மாந்தரால் வகுக்கப்பட முடியாத தனித்துவங்கள் பொங்கல் விழாவிலே உண்டு. சங்க இலக்கியங்கள் உட்பட பல பெரும்பாலான ஏட்டு இலக்கியங்கள், நாட்டுப்புற வாழ்வியலை பெரிதும் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மையே. வேந்தரையும் கடவுளரையும் பாடுபொருளாகக் கொண்ட இலக்கியங்கள் பாரம மக்களின் வாழ்வைப் பதிவு செய்யத் தவறியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கியங்களுக்கு உண்டு. ஆனால் உழவுத்தொழில் குறித்துப் பல குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. ஏறு தழுவுதல் குறித்தும் பல செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. இவ்வகையில் பாமர மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் போன்ற பல ஊரக மக்களின் விழாக்களை ஏட்டு இலக்கியங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறே ஊரக அளவில் நடைபெற்று வந்த பொங்கல்விழாவும் இலக்கியங்களில் வேறு பதிவுகளிலும் இடம் பெறாது போயிருக்கலாம். பொங்கல் பற்றிய வரலாற்றுச் சான்றுகள்: பழங்காலப் பெண்கள் தைமாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன என்பதை முன்னர் பார்த்தோம். தைமாத்தில் நோன்பிருந்து, வையை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்ப்பபெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாகப் பரிபாடல் (பாடல் 11) கூறுகின்றது. ‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர் தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ தாயருகா நின்று தவத் தைந்நீராடல் நீயுரைத்தி வையை நதி’ பண்டைக்காலத்தில் நெற்பயிர்ச்செய்கை செழித்துச் சிறந்திருந்ததைப் பல இலக்கியங்கள் அழகாக எடுத்துக் கூறுகின்றன. உழவுத் தொழிலின் அனைத்துப் படிநிலைகளையும் சங்கப் பாடல்களில் காணலாம். சேற்றில் நாற்றை அழுத்தி நடுவதை, 'நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த நடுநரொடு சேறி ஆயின்..." என நற்றிணை கூறுகின்றது. 'பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்" என அறுவடை செய்யும் உழவரைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. இவ்வாறு உழவைப் போற்றிய பண்டைத் தமிழர் அறுவடைவிழாவைக் கொண்டாடியிருப்பர் என்பதை உறுதியாக நம்பலாம். புறநானூறு என்ற சங்க இலக்கியத்தின் 22வது பாடலில், குறுங்கோழியூர்க் கிழார் என்ற புலவர், 'அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல.." எனக் குறிப்பிடுகின்றார். அதாவது 'நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன' என்று கூறுகின்றார். அறுவடைக்களங்களில் விழாக்கள் கொண்டாப்பட்டிருக்கின்றன என்ற செய்தி இதன் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாற்சோறு செய்யும் வழக்கம் பழந்தமிழர் காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. அதை புழுக்கல் என்றே இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும் நோடையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' எனச் சுட்டுகிறார். சங்ககாலத்திலும் பக்தி இயக்க காலத்திலும் புழுக்கல் என்பது தான், பொங்கலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அடுத்து, கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றிய குறிப்பு இடம்பெறுகின்றது. ‘மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ என கூறுவதன் வாயிலாகப் பொங்கல் என்ற சொல்லை முதல் தடவையாக இலக்கியத்தில் பதிவு செய்கின்றது. சோழர்காலத்தில் 'புதியேடு' பண்டிகை என்ற என்ற பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாகத் திருவொற்றியூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. முதல் ராஜேந்திரனின் காளஹஸ்தி கல்வெட்டில் மகர சங்கராந்தி அன்று பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலைத் தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். தை முதல்நாளைக் கதிரவனின் வடசெலவு தொடங்கும் மகர சங்கராந்தி என்றே வட இந்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு படைக்கப்பட்ட திருவமுதை நாம் பொங்கலாகக் கொள்ளலாம். கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு கீழ்க்காணும் தகவலைத் தருகின்றது. சோழர் காலத்தில் உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள் 'உரட்டை சரஅபயன்" எனப்படும் திரிபுவன மாதேவி கைலாசமுடைய மாகாதேவர் கற்கோவிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளாள். சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில் நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறாள். இக்கல்வெட்டின் வாசகத்தில் 'உத்தராயண சங்கராந்தி" எனும் தொடரும், 'பொங்கல் சோறு" எனும் தொடரும் நம் கருத்தைக் கவருகின்றன. சமயப் போர்வையில் 'பொங்கல் விழா" கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்போ டூபாய் எனும் போத்துகல் நாட்டைச் சேர்ந்த பயணி இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்" (Manners and Customs of the Indus ) எனும் நூலை எழுதியுள்ளார். உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும் சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் மக்கள் செய்ததாகவும் வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் கூடக் குறிப்பிட்டிருக்கின்றார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் 'மஞ்சு விரட்டு" போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார். இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல்: விஜயநகரப் பேரரசு காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் தைப்பொங்கல் பற்றிய செய்திகள் பரவலாக எங்கும் காணப்படவில்லை. எனினும் தொடர்ச்சியாக நாட்டார் வாழ்வியல் அழுத்தமானதோர் விழாவாக பொங்கல் நடைபெற்று வந்திருக்கின்றது. தமிழகக் கிராமங்களில் கொண்டாடப்படுகின்ற பொங்கல் விழாக்களை உற்று நோக்கினால் அதன் ஆழமான நீண்ட தொடர்ச்சியையும் செழுமையையும் உணர முடியும். தமிழினத்தவரிடையே இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல் பெற்ற எழுச்சி அதற்கு முன்னான காலங்களில் இருக்கவில்லை என்பது உண்மையே. பொங்கல் பற்றிய பிந்திய இலக்கியப் பதிவாக நமக்குக் கிடைப்பது பாரதிதாசன் பாடல்களே. தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்கிறார் பாரதிதாசன். இக்காலத்தின் தோன்றிய திராவிட அமைப்புகளும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஊரக வாழ்வியலின் எல்லைகளுக்குள் மட்டுப்பட்டிருந்த பொங்கல்விழாவைத் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக வெளிக்கொணர்ந்தனர். பொங்கல் விழாவினூடே விரவிக் கிடந்த தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தி விழாவின் சிறப்பை உலகறிச் செய்தனர். அதுவே தமிழரின் புத்தாண்டு எனவும் அறிவித்தனர். இன்றைய நாட்களில் உலகத் தமிழர் அனைவரும் பொங்கல் திருநாளைத் தமது தனித்துவமான பண்பாட்டு விழாவாகவே கருதத் தலைப்பட்டுவிட்டனர். மெய்யியற் சமய வழிபாடுகளுக்கப்பால் பழந்தமிழர் வழிபாட்டு முறையான இயற்கை வழிபாட்டின் எச்சமாகவே பொங்கல்விழா திகழ்கின்றது. இவ்விஉண்மையும் உணர்வும் மிக்கதாக இருக்கின்றது. பொங்கல் விழா வெளிப்படுத்தும் நுட்பமும் ஆழமும் மிக்க பண்பாட்டுக் கூறுகள் குறித்து மற்றுமொரு கட்டுரையில் காண்போம். https://paniveli.blogspot.com/2019/01/blog-post.html5 points
-
யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
ஒவ்வொரு ஊருக்கும், பிரதேசத்திற்கும் என்று சில சிறப்புகள் இருக்கும். சிறு வயதுகளில் இருந்தே ஊருடன் அல்லது பிரதேசத்துடன் சேர்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்பவர்கள் ஒரு மீன் குஞ்சு நீந்துவது போல அங்கிருப்பவற்றில் தேர்ந்தவர்கள் ஆகின்றனர். வல்வையில் கடல் நீச்சல், உதைபந்தாட்டம், பட்டம் கட்டுதல், புகைக்குண்டு செய்தல் போன்றன அந்த ஊரின் சிறப்புகள். நான் பதின்ம வயதுகளில் அங்கு இருக்கும் போது, 80ம் ஆண்டுகளில், ஊரில் பெரிய பெரிய படலங்களை கட்டுவது, படலங்களை ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்து விடுவது, 'லைட் படலம்' ஏற்றுவது என்பன தான் பெரிய முயற்சிகள். இன்று இந்த இளைஞர்கள், அவர்கள் கட்டி ஏற்றும் பட்டங்கள் போன்றே, வேறு ஒரு உயரத்திற்குப் போய்விட்டார்கள்............................❤️. சில பழைய நினைவுகள். என் வீட்டுக்கு பக்கத்து ஒழுங்கையில், தெணியம்பை ஒழுங்கை, இருந்த ஒரு குடும்பம் 25 பட்டங்களை தொடுத்துவிடுவார்கள். முதலில் ஏறும் பட்டம் மிகக் குட்டியாக இருக்கும். அடுத்தது கொஞ்சம் பெரிதாக இருக்கும். இப்படியே 25 பட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வானத்தில் வரிசையாக நிற்கும். இன்னும் அது கண்களை விட்டு மறையவில்லை. கடைசியாக ஏறும் பட்டம் கயிறு போன்ற ஒரு நூலில் தான் ஏற்றப்படும். அதுவே நைலோனாக இருந்தால், கொஞ்சம் அசந்தாலே கையை துண்டாக்கி விட்டுவிடும். குர்லோன் வகை என்றால் கையை வெட்டாது, ஆனாலும் ஒருவராலோ அல்லது இருவராலோ 25 பட்டங்களையும் இழுத்து வைத்துக்கொள்ள முடியாது. அது ஆட்களை இழுத்துக் கொண்டு போய் அடுத்த அடுத்த ஊர்களில் போட்டுவிடும். கப்பி கட்டி, அதனூடு நூலை/கயிற்றை விட்டு, பட்டங்களை பிடிப்பதும் உண்டு. நான் ஒருமுறை எட்டுப் படலங்களை தொடுத்து விட்டுவிட்டு, வீட்டுக் கூரையின் வளை ஒன்றில் துணிகளை சுற்றிவிட்டு, பட்டங்களைக் கட்டி வைத்திருந்தேன். மிகவும் தடித்த நைலோன் நூல். திடீரென்று மேல் காற்று குழம்ப, பட்டங்கள் அதிகமாக அசைய, வீட்டு வளை தூக்கப்பட்டது. அப்படியே பல ஓடுகள் பொலபொலவென்று விழுந்தன. விழுந்த ஓடுகளை விட முதுகில் விழுந்த அடிகள் கூட. மாரிகாலம் வேற. முன்னோடிகளுக்கு முதுகில் அடி விழும் என்பதை அனுபவமாக அறிந்துகொண்ட தருணம் அது. பெரிய பட்டங்களை கமுகம் சலாகையில் கட்டுவோம். ஓரளவான பட்டங்களை மூங்கிலில் கட்டுவோம். ஆகச் சிறியவற்றை ஈர்க்கிலில் கட்டுவோம். மூங்கிலில் கல் மூங்கில், தோல் மூங்கில் என்று இரண்டு வகைகள் அந்த நாட்களில் இருந்தன. ஊரில் வளர்வது கல் மூங்கில். தோல் மூங்கில் கடலில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அதன் விலை அதிகம். விடிய முன்னரே கடற்கரைக்கு ஓடிப் போய் ஏதாவது மூங்கில் மிதந்து வருகின்றதா என்று கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை துலாவிய நாட்களும் உண்டு. இதை எழுத ஆரம்பித்தால் எழுதி முடியாது போலிருக்கின்றது..................❤️.4 points
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
முதல் வரியில் இருப்பதை மானசீகமாக எழுதியிருந்தால் இரண்டாவது கேள்வி வந்திருக்காதே😂? தேவாலயத்திற்குள் தமிழர்கள் இருப்பதால், பொங்கல் தேவாலயத்தினுள்ளும் செல்ல முடியும். கிறிஸ்தவர்கள் தமிழர்களாக இருப்பதால் வேறென்ன எல்லாம் தேவாலயத்தினுள் எடுத்து செல்லப் பட்டன என்று தேடிப் பார்த்தால், இப்படியான முக்கியத்துவமற்ற கேள்விகள் எழாது: வண.சிங்கராயர், வண.இம்மானுவேல், இன்னும் பல கத்தோலிக்க, கிறிஸ்தவ தலைவர்களால் தமிழர்களுக்கெதிரான அநீதிகள் பற்றிய கதையாடலும் தேவாலயத்தினுள் நுழைந்தது. மறு பக்கம், சைவ சித்தாந்தத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று, அதை யாழ் பல்கலையில் முக்கிய துறையாக உருவாக்கிய வண. மரியசேவியர் அவர்களால், சைவம் பற்றிய அறிவூட்டல் கூட தேவாலயத்தினுள் நுழைந்தது (திருமறைக்கலா மன்றத்தில், அவர் நடத்திய சைவ சித்தாந்த வகுப்புகளுக்குச் சென்றோருக்கு இது புரியும்!). எனவே, மீண்டுமொருமுறை: தரவுகள், தகவல்களை நல்ல நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம்!4 points
-
இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசும் உடனடியாக தடைசெய்ய வேண்டும் - தமிழக முதல்வரிடம் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை
Published By: DIGITAL DESK 2 14 JAN, 2025 | 07:39 PM (நமது நிருபர்) இழுவைமடிப்படகு , சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசாங்கமும் தடைசெய்வதற்கு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வர், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் கைது செய்யப்படுகின்றார்கள் என்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஆனால் அவர்கள் ஏன் கைது செய்யப்படுகின்றார்கள் என்பதை கூறுவதற்கு அவர் மறுதலித்துவிட்டார். எந்தவொரு பிரஜையும் வெளிநாட்டுக்குச் செல்கின்றபோது காரணம் இல்லாது கைது செய்யப்படுவதில்லை. உண்மையில் இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதாலும், சுருக்குவலை, இழுவைமடிப்படகு ஆகிய சட்டவிரோத முறைமைகளை பின்பற்றுவதாலும் தான் கைது செய்யப்படுகின்றார்கள். இவ்வாறு அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி முறைமைகள் மூலமாக நாளைய தலைமுறைக்குச் சொந்தமான வளங்கள் நிறைந்த கடற்பரப்பினையே நாசமாக்கிக் கொண்டுவருகின்றார்கள். இந்தச் செயற்பாட்டுக்கு பெருமளவான தமிழக மீனவர்களே எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலர் தான் அவ்விதமாகச் செயற்படுகின்றார்கள். அவ்வாறு குறிப்பிட்ட சிலர் வளங்கள் நிறைந்த கடற்பரப்பினை நாசமாக்குவதால் பாதிக்கப்படுவது யாரென்று பார்த்தீர்கள் என்றால் வடக்கில் உள்ள தமிழர்கள் தான். அவர்கள் மூன்று தசாப்தமாக போருக்கு முகங்கொடுத்து உயிர்கள், உடைமைகள் என்று அனைத்தையும் இழந்து நின்றவர்கள் தற்போது தான் தங்களுடைய வாழ்க்கையை பொருளாதார ரீதியாக மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். வடக்கு தமிழ் மீனவர்கள் என்னிடத்தில் நேரடியாகவே பல சந்தர்ப்பங்களில், இழுவை மடிப்படகுகள் உட்பட சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் நாங்கள் கடலில் வீழ்ந்து தான் மரணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஆகவே இந்தவிடயம் சம்பந்தமாக நாம் இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில் எடுத்துரைத்துள்ளோம். தமிழக முதல்வரிடத்திலும் ஒருவிடயத்தினை நாம் கோரிக்கையாக முன்வைக்கின்றோம். அதாவது சட்டவிரேதமான மீன்பிடி முறைமைகளை தடைசெய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மேலும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபவர்கள் தான் கைது செய்யப்படுகின்றாhகள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். தமிழக மீனவர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திராவுக்குள்ளோ, குஜராத்துக்குள்ளோ, கேரளாவுக்குள்ளோ செல்லமுடியுமா? இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள்ளோ, சீனக் கடற்பரப்பிற்குள்ளோ செல்ல முடியுமா? இல்லை. ஆனால் இலங்கைக் கடற்பரப்பினையே தான்தோன்றித்தனமாக பயன்படுத்தும் செயற்பாடு எதேச்சதிகாரமாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்தச் செயற்பாட்டையே நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். சட்டவிரோத மீன்பிடி முறைமைகளான சுருக்குவலை மற்றும் இழுவைமடிப்படகு ஆகியவற்றை தடைசெய்யும் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் தமிழக அரசாங்கமும் அத்தீர்மானத்தினை எடுப்பதோடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அதில் காணப்படுகின்ற தாமதங்களால் தான் கைதுகள் தொடருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/2038123 points
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தமிழர்கள் மட்டுமல்ல உலகில் தற்போதய மதங்கள் உருவாவதற்கு முன்னரே இயற்கை தெய்வ வழிபாடு இருந்துள்ளது, பயத்தினடிப்படையிலேயே இந்த வழிபாடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் பொங்கல் நிகழ்வு ஒன்றும் சாமி கண்ணை குத்தும் என்று பாமரர்களை ஏமாற்றும் ஒரு மத நிகழ்வல்ல மாறாக கோசான் கூறுவது போல உலக மக்கள் கொண்டாடும் அறுவடை தின கொண்டாட்டம். அறுவடைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் நிகழ்வாக அது பின்னாளில் மாறியிருக்கலாம், அதனை மத உரிமை கொண்டாடும் பரிதாப நிலையில் தற்போது பொங்கல் உள்ளது. பொங்கலுக்கு மத சாயம் பூச விளைவது இல்லாத ஒன்றை உருவகிக்கும் ஒரு முயற்சி.3 points
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
எங்களில் மறவன்புலவு சச்சிதானந்தன் இருப்பது போல் எல்லா இனங்களிலு எல்லா மதங்களிலும் இப்படியான லூசுக் கூட்டங்கள் இருக்கின்றன. இதே போன்று அல்லா தான் ராமன் (இராமர்) என்று சொல்லும் இஸ்லாமிய மதவெறியர்களும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளனர். தம் குறுகிய நலங்களை அடைவதற்காக ஒற்றுமையாக இருக்கும் சமூகங்களிற்கிடையில் பிரிவினைகளை தோற்றுவிக்க முயல்கின்ற அயோக்கியர்கள் இல்லாத இனமோ மதமோ கிடையாது. மாட்டிறைச்சி உண்டதுக்காக முஸ்லிம்களை வெட்டி கொன்ற இந்து சமய வெறியர்களும் இருப்பதும் இந்தியாவில் தான். ஆனால் இப்படியானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு இனத்தையோ தேசத்தையோ எடை போட முடியாது. அவ்வாறு எடை போடுவதும் இவர்களை வைத்துக் கொண்டு இனவாத / மதவாத ரீதியில் நாம் சிந்திப்பதும் இப்படியானவர்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவே அமையும்.3 points
-
15/01/2025: "83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother"
15/01/2025: "83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother" 83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா! கலாநிதி கந்தையா சுந்தரலிங்கமே! ஒளிரும் விண்மீனே! எங்கள் நேசத்துக்குரிய அத்தியடியின் வாரிசே புகழ் சூழ பெருமையுடன் வாழ்ந்தவரே! யாழ் மத்திய கல்லூரியில் வேர்கள் நாட்டப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளர்ந்து மலர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஞானப் பழமாகி அறிஞன் வாழ்க்கை ஒளிர்ந்து வீசியதே! இயற்பியல் விரிவுரையாளராக கனிந்த பழமாகி சரியான இடத்திற்கு மாணவர்களை வழிநடத்தி மெல்போர்னில் பெருமையுடன் ஓய்வு பெற்றவரே ஞானம் நிறைந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதே! உங்கள் இரக்கமும் நகைச்சுவையும் ஆறுதல் தர எங்கள் இதயங்களில் பிரகாசமாக இருப்பவரே எண்பத்து மூன்று ஆண்டு அன்பும் மகிழ்ச்சியும் நேர்மையான ஆன்மாவின் நலமான வாழ்வே! உவகை மலர மகிழ்வு பெறுக கொண்டாடுகிறோம் ஒரு சகோதரர், ஒரு வழிகாட்டி, ஒரு கலங்கரை விளக்கை! ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் என்றென்றும் இருக்கட்டும் அன்புள்ள அண்ணா அகவை திருநாள் வாழ்த்துக்கள்! அன்புடன் தம்பி 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம்' Happy 83rd Birthday, dear brother of mine, Dr. Kandiah Sundarlingam, a star that shines. Born in Athiady, our cherished hometown, Your journey through life brings you renown. From Jaffna Central, your roots were laid, At Colombo’s halls, your brilliance displayed. Durham’s towers saw your wisdom grow, A scholar’s path, a radiant glow. A Physics lecturer of honor and grace, Guiding students to a brighter place. In Melbourne now, your well-earned rest, A life of wisdom, truly blessed. Your kindness and humor, a comforting light, In our family’s hearts, forever bright. Eighty-three years of love and cheer, A life well-lived, a soul sincere. So today we celebrate, with joy and delight, A brother, a mentor, a guiding light. May health and happiness forever stay, Happy Birthday, dear Anna, on this special day! With love and admiration, Thampi 'Kandiah Thillaivinayagalingam'3 points
-
யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
சர்வதேச பட்டத் திருவிழா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வினோத விசித்திர சர்வதேச பட்டத் திருவிழா நேற்று (14) மிகச் சிறப்பான விழாவாக இடம்பெற்றது. கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பட்டத் திருவிழா இடம்பெற்றது. இதனைக் கண்டுகழிக்க பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக வெளிநாட்டவர்களும் பட்டத் திருவிழாவை பார்வையிட வந்திருந்தனர். இதன் போது இலங்கை அரசின் Clean Srilanka என்ற பெயரைப் பொறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் இளைய தளபதி விஜய் அவர்களது உருவப் படம் பொறித்த ஒரு நூலில் இரட்டைப் பட்டங்கள் மூன்றாமிடத்தைப் பிடித்துக் கொண்டது. வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=1987903 points
-
யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
Published By: DIGITAL DESK 3 15 JAN, 2025 | 10:39 AM தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்டிருந்தனர். அவற்றில் "உயிர்த்தெழும் ராகன்" பட்டம் முதலாமிடத்தையும், "மின் பிறப்பாக்கி பட்டம்" இரண்டாம் இடத்தினையும் , "ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு" பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. அத்துடன் இந்த நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களையும் ஆளுநர் கௌரவித்தார். இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக 2018ஆம் ஆண்டு இருந்தபோது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்ததுடன் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார். எமது மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இந்தப் போட்டிகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், இது பாராட்டப்படவேண்டிய விடயம் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொருவரதும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் பட்டப்போட்டி அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சிந்தித்து பட்டங்களை உருவாக்குவது சிறப்பானது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/2038352 points
-
யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
ஆனால் பாருங்கோ அவையள் இளைய தளபதியை பெரிய தியட்டரிலயும் ,தோழரை சின்ன தியட்டரிலயும் ஓட விட்டிருக்கினம் .(என்க்கு மீசையில் மண் படவில்லை ) ..ஒரு காலத்தில் தோழரின்ட அப்பா ,தாத்தாமார் கடற்படையில் கடமை செய்யும் பொழுது உழைப்பு காட்டிய கிராமம் அல்லவோ ...2 points
-
மாற்குவியம் – சி.ஜெயசங்கர்
2 pointsமாற்குவியம் – சி.ஜெயசங்கர். adminJanuary 8, 2025 நவீன காலத்து ஈழத்து ஓவிய உலகின் ஆச்சரியந்தரும் ஓவியப் படைப்பாளி அ.மாற்கு அவர்கள். ஓவிய உலகின் உருவாக்கமான ஓவியர் அ.மாற்கு அவர்கள் நவீன ஓவிய உலகின் தராதரங்களாலும்;; வரன்முறைகளாலும் கட்டுப்படுத்தமுடியாத ஓவிய ஆளுமையாகத் திகழ்ந்திருப்பதை அவரது வாழ்க்கைக் காலப் படைப்புகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அ.மாற்கு அவர்கள் தான் வாழ்ந்த சூழலையும், சூழ்நிலைமைகளையும் தனது கைக்கெட்டும் சாதனங்களை வைத்து சாதித்திருப்பதை அவரது படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர் தனது படைப்பாக்கங்களுக்கான சாதனங்களுக்காகக் காத்திருந்ததில்லை, அங்கலாய்ந்திருந்ததில்லை. இந்தத் திறந்த, பரந்த, துணிந்த தன்மை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான வடபுல ஈழத்தமிழர்களது வாழ்வின் சவால்களைப் பார்வைக்கும், பகிர்விற்கும் அதன்வழியான பொது உரையாடலுக்குமான கலை ஊடகங்களாகவும், அடையாளங்களாகவும் பதிவாக்கியிருக்கின்றன. காலங்கடந்த வாழ்விற்குரியதான உணர்வுபூர்வமானதும், அறிவுபூர்வமானதுமான விடயப்பரப்பாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அசாதராரணமான ஓவியங்களை எவரும் எதிர்பாராத வகையிலான வெகு சாதரணமான சாதனங்களில் படைத்துக் கொண்டே இருந்தமை ஓவியர் மார்க்குவின் வாழ்க்கையாக இருந்தது. காலம் அவரது கைக்கு கிடைக்கச் செய்த எதனிலும் படைப்பை நிகழ்த்திச் சென்றிருக்கிறார். உயிரை வாங்க விழுந்து வெடித்த செல் சிதைவுகளில் இருந்து சிற்பங்களை உருவாக்குவதும் அவரது இயல்பாக இருந்தது. தராதரமான நீண்ட ஆயட்காலம் கொண்ட ஊடகங்களுக்காக அவர் அங்கலாய்த்துக் கிடக்கவில்லை. அனர்த்த காலத்தை எதிர்த்து கணந்தோறும் எதிர்வினையாற்றிய ஓவியக் கலைஞர் அவர். ஓவியர் அ.மாற்கு அவர்களின் இந்தத் திறந்த பரந்த துணிந்த தன்மை பெரிதும் கவனத்திற்படாததும், நுண்ணிதானதுமான விடயங்களைப் பரந்து விரிந்த தளங்களில் உரத்துப் பேச வைத்திருக்கின்றன. அன்றாட வாழ்வின் இடையறாத தொழிற்பாடாகவும்; புதிய புதிய ஆக்கமுறைகள் உத்திமுறைகளின் எதிர்பாராத சாதனப் பயன்பாடு என்பவற்றின் ஆற்றல் வெளிப்பாட்டுக் களங்களாக ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவிய இயக்கம் அமைந்திருப்பதைக் காணமுடியும். ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவியப் பயணம் தனிமனிதன் சார்ந்ததாக இருந்ததில்லை. அது ஓவியர் குழாமின் இணைந்த இயக்கமாக அவரது மாணவர்களுடன் இணைந்து ஏனைய ஓவியக் கலைஞர்களை இணைத்து மற்றும் பல்துறை அறிஞர், கலைஞர், இளைஞருடன் சேர்ந்து இயங்கியதாக இருக்கிறது. ஓவியர் அ.மாற்கு அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம், விபத்தின் பின் சக்கர நாற்காலியில் நகர்ந்த நிலையிலும் அவரது ஓவிய உருவாக்கமும், மாணவர் உருவாக்;கமும் ஓயாது நிகழ்ந்து வந்திருப்பதைக் காணமுடியும். ஓவியர் அ.மாற்கு அவர்களின் வரன்முறை கடந்த ஓவிய ஆக்கமுறைகளும், அணுகுமுறைகளும் நிகழ்காலத்தின் யதார்த்தத்தை உணர்ந்து இயங்கிய, வாழ்ந்த மனிதரின் பெரும் சிறப்பியல்பாகும். இத்தகைய சிறப்பியல்பு கொண்ட மனிதரின் இயக்கமானது போர், இடப்பெயர்வு, முற்றுகை வாழ்வு, பொருளாதாரத்தடை என்பவற்றைப் பொருட்படுத்தாத ஒன்றாக அமைந்தது. அத்தகைய நிலைமையின் நெருக்குவாரத்துள் வாழ்ந்துகொண்டு ஈழத்தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் அவர்களது மாணவர் பரம்பரையின் ஓவியச் செயற்பாடுகள் மூலம் ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளது சமூக அரசியல் பண்பாட்டு இயக்கங்களின் ஓவிய அதிர்வுகள் வலுவாக ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கான மூலச்சக்தி ஓவியர் அ.மாற்கு அவர்கள் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள குருநகரில் அமைந்துள்ள வீட்டின் சிறியதொரு வீட்டு முன்றலில் இருந்தும் பின்நாட்களில் வன்னியிலும், நிறைவாக மன்னாரிலும் பலரையும் இணைத்த தனிமனித ஓவியப் பயணத்தின் உலகந்தழுவிப் பரந்து விரிந்து செல்லும் எதனையும் எதிர்கொள்ளும் எதிலும் தங்கியிராத இயக்கந்தான் ஓவியர் அ.மாற்கு அவர்களுடையது. மாற்குவின் ஓவியப் பயணம் அவராலும் அவருடன் இணைந்த மாணவர்களாலும் ஆர்வலர்களாலும் திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டவை. முற்றுமுழுதாக கலைஞர் மைய பயணமாக அமைந்ததன் காரணமாக அதன் கலை வெளிப்பாடுகளான ஓவியங்களும் அந்தக் கலைஞர்கள் நோக்கிலானதாக அமைந்திருப்பது முக்கிய படிப்பினைக்குரியது. இதையொத்த சமாந்தரக் கலைப்பயணத்தை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது மூப்பிலான ஈழத்து நாடக அரங்க இயக்கத்திலும் காணமுடியும். எங்கள் வளத்தில் எங்கள் பலத்தில் எங்கள் தளத்தில் எங்கள் நோக்கில் நாங்கள் நின்றோம், முன்சென்றோம் என்ற வகையிலான படிப்பினைக்குரிய பயணம் இது. அ.மாற்கு அவர்களது வியக்க வைக்கும் பயணம் குவியப்படுத்தப்பட வேண்டியது. அவரது படைப்பின் பொருள் மட்டுமல்ல படைப்பின் ஊடகங்களும்;; படைப்பாக்க முறைமைகளும் வியம்பப்படுத்தப்பட வேண்டியது. அ.மாற்கு அவர்களே வியம்பத்தக்க செய்தியாகி நிலைநிற்கின்றார். மாற்குவியம் என்பது இதுதான். சி.ஜெயசங்கர் https://globaltamilnews.net/2025/210054/2 points
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
2 pointsசாத்திரியார் ***** செய்தது எல்லாம் ஆதாரமா?2 points
-
யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
பட்டங்கள் செய்வதிலும் அவற்றைப் பறக்க விடுவதிலும் வல்வெட்டித்துறை தேசத்தின் ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்லவேண்டும் . ....... அனைவருக்கும் பாராட்டுக்கள் . .......! 👍2 points
-
பொங்கல் சிரிப்புகள்.
2 points2 points
- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இது திடீர் குற்றச்சாட்டு அல்ல திட்டமிட்ட குற்றசாட்டாகத்தான் பார்க்கிறேன். எஜமான் சொன்னால் பொட்டு அம்மானை கேவலமாக பேசியது போல் இயக்கத்தையும் பேசுவார். வாயை வாடகை விடுபவருக்கு அதிலிருந்து வரும் சொற்களுக்கு பொறுப்பில்லை, வாடகைக்கு எடுத்தவருக்கே பொறுப்பு. என்ன வேணாலும் பேசிக்கட்டும் ஆனா பேசிட்டு இயக்கத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்வது வெட்கக்கேடு.2 points- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
யாக்கோபு சைமன் செபஸ்டியன் என்பவர் சீமான் ஆகலாம் என்றால், தெட்சணாமூர்த்தி என்பவர் கருணாநிதி ஆகலாம் என்றால் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பவர் ரஜினிகாந்த் என்றாவது ஒன்றும் தப்பில்லையே!😂2 points- மாற்குவியம் – சி.ஜெயசங்கர்
2 pointsமார்க் மாஸ்ரர் எங்காவது செல்ல நேரிட்டால் தனது அறைத் திறப்பை சிவபாதம் கடையில் கொடுத்து விட்டுச் செல்வார். மாலையில் நான் ஓவியம் பயிலச் செல்லும் முன் சிவபாதம் கடைக்கு ஒரு தடவை சென்று விட்டுத்தான் மார்க் மாஸ்ரரின் அறைக்குப் போவேன். திறப்பு சிவபாதம் கடையில் இருந்தால் மார்க் மாஸ்ரர் எத்தனை மணிக்கு தனது அறைக்கு வருவார் என்ற தகவலும் அங்கிருக்கும். மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லித் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் college of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இந்த வேளையில்தான் எனது பாடசாலையில் பயிலும் சகமாணவனான சேகரும் ஓவியம் பயில விருப்பம் தெரிவித்ததால் மார்க் மாஸ்ரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவனையும் என்னுடன் சேர்ந்து வந்து தன்னிடம் ஓவியம் பயில ஒப்புதல் தந்தார். சிலவேளைகளில் எனக்கு நேரம் போதாதிருந்தால் சேகரே சிவபாதம் கடைக்குப் போய் மார்க் மாஸ்ரரின் அறைத் திறப்பை வாங்கி வருவான். ஒருநாள் என்று மில்லாதவாறு மார்க் மாஸ்ரரின் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. சந்தேகமோ, சலிப்போ அவரது முகத்தில் நிறைந்திருந்தது. நானும் சேகரும் வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மார்க் மாஸ்ரர் சிவபாதத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென மார்க் மாஸ்ரர் என்னைக் கூப்பிட்டார். "இதிலையிருந்த ரண்டு புத்தகங்களைக் காணயில்லை. எடுத்தனீரோ?" எடுத்தனீரோ என்ற வார்த்தைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை. "நானெடுக்கேல்லை.. நானெடுக்கிறதெண்டால் உங்களிட்டை சொல்லிப் போட்டுத்தானே கொண்டு போவன்..." "அப்ப.. இதிலையிருந்த ரண்டு புத்தகங்களும் எங்கை? " "எனக்குத் தெரியாது.." "உமக்குத் தெரியோணும்.. நீர்தான் இதுக்குப் பொறுப்பு... நானில்லையெண்டால் சிவபாதத்திட்டை போய் திறப்பு வாங்கி வந்து ரூமை கவனிக்கிறது நீர்தானே..? நீர்தான் இதுக்குப் பதில் சொல்லோணும்." நான் சேகரைப் பார்த்தேன். எந்தவித குழப்பமுமில்லாமல் படத்தைக் கீறிக் கொண்டிருந்தான். "அந்தப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்காது.. நான் கனபேரிட்டை சொல்லித்தான் அதை வாங்கி வைச்சிருந்தனான்.. எப்பிடியோ அந்தப் புத்தகங்கள் இஞ்சை திரும்பி வரவேணும்.." மார்க் மாஸ்ரர் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குள் நான் சிறுமையாகப் போனது போன்ற உணர்வு. எனது தன்மானத்தை தட்டிவிட்டது போன்ற பிரமை. அன்று பயின்று முடிந்து புறப்படும் போது ஏதோ ஒப்புக்குத்தான் சொன்னேன். "போட்டு வாறன்." "அடுத்த முறை வரக்கை புத்தகங்களையும் கொண்டு வாரும் " மார்க் மாஸ்ரர் சொல்வது காதில் கேட்டது. அதன் பின்னர் நான் அந்தப் பக்கம் செல்லவேயில்லை. ஒன்று, அந்தப் புத்தகங்களை யார் எடுத்தது அது இப்போ எங்கே இருக்கிறது என்பது பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. மற்றது, என்னை சந்தேகித்தது என்னிடம் அதைப்பற்றி அவர் கேட்டமுறை எனக்குப் பிடிக்கவில்லை. நீண்ட நாட்களின் பின்னர் நகரத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்புறமாக இருந்து ஒரு கை எனது தோளில் விழுந்தது. முன்னால் நின்ற நண்பர்களின் கண்களில் மரியாதை தெரிந்தது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். மார்க் மாஸ்ரர். வார்த்தைகள் வர மறுத்தன. அவரே எனக்காவும் பேசினார் போல் இருந்தது. "எப்பிடி இருக்கிறீர்..? அந்தப் பக்கம் பிறகு ஆளையே காணேல்லை..." நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். "வாரும் பஸ் ஸ்ரான்ட்டுக்குத்தான் போறன். அதுமட்டும் கதைச்சுக் கொண்டு போவம். அலுவல் ஒண்டு இருந்ததாலைதான் பள்ளிக் கூடத்துக்கு வந்தனான்.. இப்ப நான் இங்கை படிப்பிக்கிறேல்லை.. மாறி அங்கை போட்டன்.." "தெரியும்..." "தெரிஞ்சு கொண்டும் என்னை வழியனுப்ப நீர் வரேல்லை? ம்.. கோவம் எல்லாருக்கும் வாறதுதான்.. ஆனால் இந்த வயசிலை உமக்கு இவ்வளவு கோவம் கூடாது... நான் அப்பிடித்தான் கேக்கவேணும்.. சேகரை எனக்குத் தெரியாது.. நீர்தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டனீர்.. நீர்தானே அதுக்குப் பொறுப்பு.. அதுசரி அந்தப் புத்தகங்கள் எங்கேயிருக்குது எண்டாவது தெரியுமே?" குனிந்து பார்த்தபடியே தலையசைத்து "தெரியாது" என்று பதில் சொன்னேன். "மோகன் ஆர்ட்ஸ் கடையிலை இருக்குது. சேகர்தான் கொண்டே குடுத்திருக்கிறான். சேகரும் அவனும் நல்ல சிநேகிதம்.. அங்கை புத்தகங்கள் இருந்ததை சிவபாதம் பாத்திட்டு வந்து என்னட்டை சொன்னாப் போலைதான் எனக்கு புத்தகங்கள் காணாமல் போன விசயமே தெரியும். வீணா ஏன் படிக்கிறவனை குழப்புவான் எண்டிட்டுதான் உம்மட்டை உரிமையோடை கேட்டன். அவனும் திருப்பிக் கொண்டுவந்து புத்தகங்களை வைப்பான் எண்டு பாத்தன். நீர் கோவிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்." என்னால் எதுவுமே பேச முடியவில்லை. "புதுவீடு கட்டியிருக்கிறன். குடிபோகக்கை ஓரு அறைக்கு உம்முடைய பெயின்றிங் இருக்கோணும் என்று ஆசைப்பட்டன்.. நீர் வரவேயில்லை........... கதையோடை கதையா எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.." "வாழ்த்துக்கள் மாஸ்ரர் " "அவனுக்கு என்ன பெயர் தெரியுமோ?" கேட்டுவிட்டு வாஞ்சையுடன் என்னைப் பார்த்தார். நானும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். "அவனுக்கு உம்முடைய பெயரைத்தான் வைச்சிருக்கிறன். " சொல்லிவிட்டு புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு யன்னலூடாகக் கையசைத்தார். மார்க் மாஸ்ரரை நான் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான். நான் புலம் பெயர்ந்து வந்த போது மார்க் மாஸ்ரரும் இடம் பெயர்ந்து மன்னாருக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது. 2002 இல் நான் தாயகம் போன போது “மன்னாருக்குச் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா?” என அரசியல்துறையிடம் காரணத்தையும் சொல்லிக் கேட்டேன். “செய்யலாம்” என்றார்கள். அடுத்தநாள் நேரில் வந்து செய்தி சொன்னார்கள், “மார்க் மாஸ்ரர் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் 2000ம் ஆண்டில் காலமாகிவிட்டார்” என்று. 1973ம் ஆண்டு பிறந்த மார்க் மாஸ்ரரின் செல்வகுமாரனுக்கு இப்பொழுது 51 வயதாக இருக்கும். இன்னும் நான் அவரைப் பார்க்கவில்லை. “நான் எனது மாணவர்களால் நினைவு கூரப்படுவேன்” மார்க் மாஸ்ரர் சொன்னது நினைவில் இருக்கிறது.2 points- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அது அதன் ஒரு குறியீடே தவிர, அது தான் என்று இல்லை. அப்படி ஆயின், வேறு தினங்களில், வேறு நிகழுவுகளில் அப்படி பொங்கப்படுவதையும் பொங்கல் என்று ஏன் அழைக்க வேண்டும்? உண்மையில் பொங்கலின் அர்த்த குறியீடு, ((உணவு) வளம் கைக்கு கிடைத்து (வாழ்க்கை)) பொங்கும் (ஒரு) நாள். பொங்கி பிரவகித்து (பொஙங்கலை போல ) எழுவது ஒன்றேயொன்று தான் நீர் (ஆறு அல்லது கடல்), அடிப்படை வளம் (பொங்குவது). இதுவே பொங்கலின் அர்த்தக் குறியீடு.1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அது சாவகர் சேரி என்றும் சொல்கிறார்கள். சைவம் வர முதல் அங்கே சாவக மதத்தை பின்பற்றியே மக்கள் வாழ்ந்திருக்க கூடுமாம். சாவகர் ஒரு வகை சமணர் பிரிவு. வள்ளுவர் கூட சாவகராக இருக்கலாம் என்போருமுளர். https://www.tamilvu.org/courses/diploma/p202/p2023/html/p2023203.htm1 point- முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
இந்த சீனா விஜயத்துடன் ...இந்திய கலாச்சார உட்ப்புக்கு பை.பை..சீனாவில் இருந்து மிக இறுக்கமான ஆடைவகை, நீச்சல் உடை என்பன இறக்குமதியாகின்றன..இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது..🙃1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நாங்களும் நத்தார்,ஈஸ்டர்,ஆங்கில புதுவருடம், மற்றும் பல வேற்று மத பண்டிகைகளை கொண்டாடுகின்றோம்.ஆனால் சொந்தம் கொண்டாடவில்லை.அதை தேசியம் என விளிக்கவில்லை. ஏனைய மதத்தில் உள்ள ஆயிரத்தில் பத்து பேர் பொங்கல் பொங்கினால் அதுவே தேசிய உதாரணங்கள் ஆக முடியாது. என் கிறிஸ்தவ நண்பன் சைவ கோவில்களுக்கு போகின்றான் என்பதிற்காக கிறிஸ்தவ சமூகமே அப்படித்தான் என்ற கோட்பாட்டை நிறுவ முடியாது. நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வது வழமை. அதற்காக ஏனைய மதத்தினரும் அங்கே செல்கிறார்கள் என கதை விடப்படாது அல்லவா?1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அப்ப தமிழர் "ஜாவாவில்" இருந்து வந்த வந்தேறு குடிகளா? இது தமிழர்-திராவிடர் பிணக்கிற்கு புதிய பரிமாணமொன்றைத் தருகிறதே😎?1 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 pointபி…ஜே….பி…. மூன்றே எழுத்துத்தானே…இதை சொல்ல ஏன் நேற்று சமைந்த பொண்ணு மாரி வெக்கப்படுறியள் 🤣.1 point- முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
அடி மடியிலையே கை வைக்கிறீங்களே.....அதன் சொகம் உங்களுக்கு தெரியுமா 😂 தென்றல் வந்து தீண்டும் போது.. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கேத்தபடி.. வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்.. பொன்னம்மா சின்னக் கண்ணே.. தென்றல் வந்து தீண்டும் போது. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல...1 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 pointவிசுகர்! இந்த முறை சீமானுக்கான ஆதரவு வேறு திசைகளில் இருந்து வருகின்றது என நினைக்கின்றேன். அந்த வகையில் பணத்திற்கான வாக்களிப்பு பின்னடைவை சந்திக்கும் என நம்புகின்றேன்.1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointசுமந்திரன் எம்பி பதவியிலை இருக்கேக்கையே அமெரிக்கா,கனடா,லண்டன் எண்டு சுத்தியடிச்சு படம் போட்டு காட்டினவர் எல்லோ? பதவிக்காக தன் இனத்தையே அழிவுப்பாதைக்கு கொண்டு செல்பவர். நாற பயல்.1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
கோலம், மாவிலை, தோரணம் மற்றும் பூக்கள் என்று எல்லாவற்றையும் தமிழர் பண்பாடு என்று முழங்கி விட்டு மற்றைய நாட்களில் எட்டியும் பார்பதில்லை. இவர்களின் உண்மை முகம் என்ன? பொங்கல் திகதியே தமிழ் நாட்காட்டியின் மூலம் நிர்ணயிக்கப்படும் 🤣1 point- 15/01/2025: "83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother"
தில்லை ஐயா, உங்கள் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!1 point- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
சட்டத்தரணிகள் பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பதவி விலகியா பாராளுமன்றம் வந்தார்கள்?1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இங்கு வெளிவருவது உங்களது வெறுப்பு. இதுவரை பொங்கல் தமிழர் பண்டிகை என நிறுவதற்கான எந்தவொரு ஆதாரத்தையோ ஆராட்சியையோ இணைக்கவில்லை. (உங்க வீட்டு புக்கைப் பானை கருகிவிடும் கவனம்…) பொங்கல் சூரியனை தெய்வமாக வழிபடுபவர்களுக்கானதே. அம்புட்டுத்தான்.1 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 pointமூடியை திறப்பம் எண்டு பாக்கிறன்.....நாசமறுப்பு மூடி திறபடுதில்லை 😂1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தாராளமாக.....😂 நாலு பேர் சிரிக்கணும் எண்டா அந்த பாவத்தையும் செய்து தொலையும்....😎1 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 pointகயவன், ஊழல் மன்னன், கருணாநிதி வைகோ விடயத்தில் தன் மகனுக்காக செய்தது மாதிரி…. பிகு நான் தலைவர் என ஏற்கும் தகுதி இந்த உலகில் ஒருவருக்கு மட்டுமே உண்டு. அது யார் என்று யாழுக்கு தெரியும். பெயிண்ட் வாளியை இறக்கி வைக்கவும்🤣.1 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 pointஇதென்ன பிரமாதம், சந்திரனில் ஆம்ஸ்டிரோங் போய் இறங்கிய போது… அங்கு தமிழில் ஒரு பேச்சு சத்தம் கேட்டதாம்….🤣1 point- இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதாவது 1984 ல் எம்ஜியால் ஆட்சி வழங்கிய ஈழதமிழருக்கான கல்வி வசதியை உங்களினதும் உங்கள் தலைவர் சீமானினதும் தலைவி ஈழத்தாய் ஜெயலலிதா பறித்தெடுத்ததைப்பற்றியோ பின்னர் 1996 ல் அவர் தோற்கடிக்கபட்டவுடன் அவ்வசதி மீண்டும் ஈழத்தமிழருக்கு வழங்கப்பட்டதை பற்றியோ உங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் எனது உறவினர் எப்படி படித்தார் எனபது மட்டும் உங்களுக்கு உறுத்துகிறதோ?1 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 point1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
வசிஷ்டர் வாயால் ராஜரிசி🤣1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
எனது பல தமிழ் புரட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ நண்பர்கள் பலரும் இன்றும் பொங்கல் கொண்டாடுவது இல்லை. அவர்கள் சொல்லும் காரணம் பொங்கல் பண்டிகையில் சூரியனுக்கு வணக்கம் செலுத்தப் படுகின்றது என்பதால் கடந்து சென்று விட வேண்டும்1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஊரில் எங்கள் வீட்டில் இருந்தது. விக்ஸ் மரம் என்போம்1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதிகாரம் இல்லாத போது திரள்நிதியில் சாப்பிடுபவர்… அதிகாரம் வந்தால் மக்கள் நிதியில் சாப்பிடுவார். #சின்னக்கருணாநிதி இதைத்தானே ஆரம்பம் முதல் சொல்கிறேன்… அவர்களை போல ஒரு பக்கா பிராடுதான் செக்ஸ் சைக்கோ சீமானும். கட்சி நடத்துவதை யாரும் குறை சொல்லவில்லை. தானும் சாப்பிட்டு, கயல் அண்ணிக்கும் சாப்பாடு போட்டு, விஜி அண்ணிக்கும் கொடுப்பதுதான் கேள்வி. இப்படி ஒரு மானம் கெட்ட பிழைப்புக்கு பர்மா பாஜாரில் பிச்சை எடுக்கலாம். இவர் தான் ஆர் எஸ் எஸ் சின் தமிழக ஏஜெண்ட். சின்னச் சோ. ரஜனிகாந்தின் அரசியல் வாழ்வை பாடையில் ஏற்றியவர். இப்போ சீமானின் handler.1 point- இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
1 point- கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
இந்த ஆதவன் அவைக்கு நோகாமல் ஊசி போடுவதில் கில்லாடிசார்1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointஆங்கிலம் தெரிந்தும் பிரயோசனம் இல்லை.1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது! பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது. சூரியனாக கருதப்படும் இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையானது உழவர் திருநாளாக தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை உருவான கதை: பொங்கல் பண்டிகையின் தோற்றமானது எப்போது உருவானது என்று சரியாக தெரியவில்லை என்றாலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. இதற்கு என்ன பொருள் என்றால் ஆண்டினுடைய முதல் அறுவடை என்று அர்த்தமாம். உழவர்கள் தை மாதம் முதல் நாளில் அறுவடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பின்னர் இதுதான் பொங்கல் பண்டிகையாக மாறியது என்று கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாளாகும். பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியைஇ புதுப்பானையில் பொங்கலிட்டுஇ தோட்டத்தில் விளைந்த இஞ்சிஇ மஞ்சள்இ கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்துஇ நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும். ஒரு சிலர் பொங்கல் அன்று புதிய பானையிலோ அல்லது வழக்கம் மாறாமல் எப்போதும் வைக்கும் பொங்கல் பானையில் மஞ்சள் குங்குமம் இட்டுஇ பொங்கல் பானையின் கழுத்து பகுதியில் விளைந்த மஞ்சள் கொத்தினை கட்டி நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பார்கள். பால் பானையிலிருந்து பொங்கி வழியும் நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் உரைப்பார்கள். பொங்கல் தயார் செய்த பிறகு அவர்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு படைத்துவிட்டு தீபம் காட்டிய பிறகு அனைவருக்கும் கொடுத்துவிட்டு உண்பார்கள். பொங்கல் பொதுவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். முதல் நாளில் போகி பண்டிகையும் இரண்டாம் நாளில் பொங்கல் பண்டிகையும் மூன்றாம் நாள் பட்டிப்பொங்கல் அல்லது மாட்டுப்பொங்கலும் நான்காவது நாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. அதற்கமைய போகி பண்டிகை தினத்தன்று காலையிலேயே அனைவரும் குளித்து வீட்டில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருள்களை வீட்டின் முன்பு எரித்து போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை – இந்த பண்டிகைக்கு சர்க்கரை பொங்கல் என்ற பெயரும் உள்ளது. புதுப்பானை எடுத்துஇ மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டிஇ புதுப் பாலில்இ புது அரிசியிட்டுஇ வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். மாட்டு பொங்கல்: உழவர்களின் வாழ்வில் முக்கிய பங்காக இருப்பது கால்நடைகள். கிராமங்களில் மாட்டு பொங்கலானது மிக சிறப்பாக கொண்டாடப்படும். மாடுகள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி மாடுகளை குளிப்பாட்டி வண்ணம் பூசி உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்துஇ வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக பொங்கல் வைக்கபடுகிறது. மாட்டு பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். காணும் பொங்கல்: காணும் பொங்கல் அன்று பிரிந்த நண்பர்கள்இ உறவினர்களை சந்திக்கும் நாளாகும். பெண்கள் தங்களுடைய சகோதரின் நலனுக்காக படைப்பது காணும் பொங்கல். இந்த நான்காம் தின பொங்கலை கன்னி பொங்கல்இ கணு பொங்கல்இ காணும் பொங்கல் என்று அழைப்பார்கள். பொங்கல் விளையாட்டு: பொங்கல் என்றாலே கிராமங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய விளையாட்டு போட்டிகள் நடைபெறும். பொங்கல் நிகழ்ச்சிகள் அன்று காலம் காலமாக கபடிஇ சிலம்பம்இ உறியடிஇ மாட்டு வண்டி பந்தயம்இ ஏறுதழுவுதல் பெண்களுக்கான சில போட்டிகளும் நடைப்பெறும். தமிழர்களின் திருநாளாக உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையைஇ தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் அறிவித்துள்ளதால்இ தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை இரட்டிப்பு சந்தோஷத்துடன்இ தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கி அது நீங்காமல் இருக்க உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் எல்லா வளமும் நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம். https://athavannews.com/2025/14162891 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 pointநான் உங்களை பற்றி இப்படி எழுதினால் - நீங்களும் என்னை பற்றி இப்படி எழுதலாம். நான் எழுதுவது சீமான் என்ற செக்ஸ் சைக்கோ அரசியல்வாதி பற்றி. அதர்க்கான பதில் கோசான் பற்றி எழுதுவதல்லவே? எழுதினாலும் ஓக்கேதான் - நாமும் கொஞ்சம் பிரபல்யம் ஆவோமே🤣. இது நியாயமான விமர்சனம்… இது போல் இன்னும் ஸ்டாலின், உதய், இன்பா இன்னும் பிறக்காத இன்பாவின் மகன் பற்றி எல்லாம் நீங்கள் எழுதலாம், எழுத வேண்டும். ஆவலோடு காத்திருக்கிறேன். கொஞ்ச காலம் போக இந்த பெண்களே சீமான் கேட்டபடி நடக்கவில்லை என கண்டால் - காளியம்மாள் போல் சீமானால் “பிசிறு” என அவமானப்படுத்த படுவார்கள்.1 point- கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
முஸ்லீம் இனம் என்றால்…. தமது செய்தித் தளங்களில் பெயரை வெளியிட மாட்டார்கள். தமிழர் என்றால்…. அக்கு வேறு, ஆணி வேறாக “பிரேக்கிங் நியூஸ்” போட்டு, பிரித்து மேய்ந்து விடுவார்கள். போதாக் குறைக்கு… “யூ ரியூப்” காரரும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு செய்தி சேகரிக்கப் புறப்பட்டு விடுவார்கள்.1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point - பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.