Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்17Points3061Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்17Points19134Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்7Points38770Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/30/25 in all areas
-
பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்!
6 points14.01.1986 தைப் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்த இந்தக் கவிதையை எனது பழய பொக்கிஷங்களிலிருந்து கண்டேன். அதை 14.01.2025 நடந்த பொங்கலோடு சேர்த்துக் கொள்ளுவோம். பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்! ************************************* ஏட்டைப் படித்த நாங்களனைவரும் சேட்டைக் கோட்டை வெறுத்திடுவோம் காட்டையழித்து மாட்டைப் பூட்டி நாட்டை ஏரால் உயர்த்திடுவோம் சூட்டையடித்து நெல்லைக் கொட்டி மூட்டையிலிட்டுச் சேர்த்துதிடுவோம் ஆட்டை மாட்டை பண்ணையில் வளர்த்து சோட்டையுணவை உண்டிடுவோம் வீட்டையாளும் பஞ்சப் பாட்டை ஓட்டை வழியால் துரத்திடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.6 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீங்கள் சொல்வது சரியே, நாதமுனி. நீங்க சொல்வது போலவே, அயல் நாட்டுத் தமிழர் என்ற வகையில் நாங்கள் அவர்களின் சாதி அடுக்குக்குள், அதன் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் சமூக, அரசியல் அமைப்புகளுக்குள் ஆழமாக போகத் தேவையேயில்லை. ஆனால், நான் ஆழமாக போகவேண்டி இருந்ததிற்கு இரண்டு காரணங்கள்: 1. நீங்கள் என்னிடம் கேட்டிருந்த ஒரு கேள்வியும், நீங்களே சொல்லியிருந்த விளக்கமும்: "நீங்கள் தமிழக அரசியலை, ஈழ அரசியல் ஊடாக பார்க்கிறீர்கள் என்று நிணைக்கிறேன், சரியா? எனக்கும் அதே குழப்பம் இருந்தது. தமிழக அரசியலை தனித்தே அதன் போக்கில் மட்டும் பார்தால் சில பரிமாணங்கள் புரியும்." 2. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நான் ஒரு அயல் நாட்டுத் தமிழனே இல்லை. எனக்கு இலங்கையின் வடக்கு கிழக்கை விட தமிழ்நாடு தான் அதிகப் பரிச்சயம். ஒப்பிடுகையில், அதிகமான ஆட்களை எனக்கு தமிழ்நாட்டில் தான் பழக்கம். நான் அவர்களின் தமிழைக் கூட சில வட்டாரவழக்குகளில் அப்படியே பேசுவேன். இதன் பின்னணி, எங்கள் பலரினதும் வாழ்வில் இருப்பது போன்ற, துன்பமும், அலைச்சலும் தான். இது ஒரு மகிழ்வோ அல்லது பெருமையோ கிடையாது. இவற்றை கதைகளாக எழுதினால் அனுதாபம் கிடைக்கும், ஆனால் அது என்னத்திற்கு................... அங்கிருக்கும் ஊர்கள் மட்டும் இல்லை, எம்மவர்களின் அகதி முகாம்களும் தெரியும். அங்கு தங்கியும் இருக்கின்றேன். எம்மவர்கள் ஏதாவது பிரச்சனைகள், சிக்கல்கள் வந்தால், அங்கே யாரிடம் போகின்றார்கள் என்றும் தெரியும். நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஆட்களிடம் இல்லை. அவர்களை நான் அங்கே பார்த்ததே இல்லை. தமிழ்நாட்டு அரசியல் பற்றிய என்னுடைய பார்வை தமிழ்நாட்டுக்காரர் ஒருவருடையதாகவே இருக்கின்றது. 'முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடுங்கள், அது தான் முக்கியம்...............' என்று தான், என் தமிழ்நாட்டு நண்பர்கள் போலவே, நானும் நாதகவிற்கு சொல்கின்றேன்..............4 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஓணாண்டியாரின் மைன்ட் வாய்ஸ், அடேய்களா, கருத்து எழுதினாத்தானே நான் ஏறுக்குமாறா கதை சொல்லுவதை கண்டு பிடித்து எனக்கு மொக்காடு போடுவீங்க… இனி வெறும் வீடியோதான்…🤣 யாழ் சேவர் பிரண்டாலும் பரவாயில்லை. நீங்களாச்சு, நிராஜ் டேவிட் ஆச்சு🤣4 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நாதம்ஸ் சும்மா “அடிச்சு” விடுகின்றீர்கள்😂🤣 தமிழ் தேசியம் வளர சீமானை ஒன்றும் தலைவர் கண்டடையவில்லை. புலிகளின் ஆவணப்படத்தை இயக்கக்கூடத் தெரிவு செய்யப்படவில்லை என்பதுதான் வரலாறு! தலைவர் தன் வழியில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க ஒருவரும் இல்லை என்பதை உணர்ந்துதான் தனக்குப் பிறகு புலிகள் அமைப்பை மொத்தமாகவும், சில்லறையாகவும் பிரித்து எடுங்கள் என்று இறுதிக் கட்டங்களில் சொன்னார். அதை நேரில் கேட்ட யாழ் உறவையே புலிகளின் அமைப்பில் இல்லை என்று நிறுவும் போக்கும் இந்த யாழ் களத்தில் பார்ர்ததுதான்! இந்த ஆதரவு கொடுக்கும் போராளிகள் யார்? பையன், ஓணாண்டி, நாதம்ஸ்?😂🤣 விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்புக்களான அனைத்துலகச் செயலகமும், தலைமைச் செயலகமும் கூட சீமானைப் புறக்கணித்துவிட்டார்கள் அல்லது கண்டுகொள்வதில்லை. சேர்க்கை: 1993 இல் விடுதலைப் புலிகள் பத்திரிகை (புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை) வைகோவை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பவர் என்று கூறியது. ஆதாரம் இணைப்பில் உள்ளது: https://tamileelamarchive.com/article_pdf/article_0b5150d211e28e703c01866b7b0cc204.pdf4 points
-
இலங்கையர்கள் நாளாந்தம் மதுபானத்திற்கு 690 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றனர் - மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்
இவ்வளவும் நடக்க சந்தர்ப்பம் உள்ளது அண்ணை. வருமானம் அதிகரிக்க வழி தெரியாமல் தவிக்கும் அரசிற்கு வழிகாட்டி என உங்கள் பெயர் வரவும் சந்தர்ப்பம் உள்ளது. கலியாண வீடு, சாமத்திய வீடுகளில் சத்தமாகப் போடும் பாடல்களில் இருந்து இதயத்தையும் கேட்கும் திறனையும் பாதுகாக்க கிட்டவே போவதில்லை!!3 points
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
அவுசின் வட மானிலப் பகுதிக்கு நிறைய இந்தோனேசிய படகுகள் நிறைய வந்து களவாக மீன் பிடிக்க வரும். சொல்லிப் பார்த்தார்கள். கேட்கவில்லை. மீனவர்களை வேறொரு படகில் பத்திரமாக ஏற்றி விட்டு, அவர்களது படகுகளை அப்படியே கடலில் வைத்தே கொழுத்தி விடுவார்கள். அவை எரிந்து அவ்விடத்திலேயே தாண்டு போகும். நோ மீடியா. நோ பப்பிளிசிற்றி…! பிரச்சனை தானே தீர்ந்து விட்டது. இப்போது அவர்கள் படகுகள் வருவதில்லை. சுறாவைப் பிடித்து, அதன் செட்டையை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு, சுறாவை உயிருடன் கடலில் போட்டு விடுவார்கள். இந்திய மீனவர்கள் போலத் தான், இவர்களும்…!3 points
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
3 points@பாலபத்ர ஓணாண்டி, நிச்சயமாக உங்களுக்கும், வாலிக்கும் இடையான தர்கத்தில் தலையிடும் எண்ணம் இல்லை. ஆனால் சில விளக்கம் எனக்கு தரமுடியுமா? 1. இந்த ஓணாண்டி பெயரில் முதலில் உள்ளே வரும் போது, நான் இலண்டனில் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன், போராட்டம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாது, சைக்கிளில்தான் சுத்துகிறேன், அதிகம் தகமைகள் இல்லாதவன், பல கால யாழ் வாசகன், கோஷானை எனக்கு நல்லா பிடிக்கும், இப்போதுதான் எழுத ஆரம்பிக்கிறேன் என்பதே உங்கள் சுய அறிமுகமாக இருந்தது. காலப்போக்கில் நீங்கள் ஐடி துறையில் வல்லுனர் என்பதும், இலண்டனில் இருந்து மீண்டும் நாட்டுக்கு குழந்தை குட்டிகளோடு திரும்பும் அளவு வசதியானவர் என்பதையும் நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். இது நீங்கள் இணையும் போது உங்களை பற்றி சொல்லியதற்கு (கட்டிய விம்பத்துக்கு?) மாறாக இருந்த போதும், மனதில் குறித்து கொண்டேன், கேட்கவில்லை. இப்போ நீங்களே முன்பு வேறு ஒரு ஐடியில் வந்து, மிகவும் வினைதிறனாகவும் செயல்பட்டவர் என்கிறீர்கள். தனிப்பட்டு உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை இது பலத்த கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. முடிந்தால் விளக்கம் தரவும். இல்லை கோஷான் எல்லாம் என்ன ஹைகோர்ட்டா - என கடந்து போனாலும், காரியமில்லை. 2. அமரதாஸ் பற்றி நீங்கள் சொல்லியது பாரிய குற்றசாட்டு. அதை நீங்கள் செய்த போது வேறு ஐடியில் இருந்தீர்கள் - இப்போ ஊரில் வசிக்கிறீர்கள். அந்த ஐடி வெளியில் வந்தால் ஆபத்து நேரலாம். இதை நான் முழுமையாக ஏற்கிறேன். ஆனால் நீங்களும் அந்த குற்றசாட்டை வீச முன்னர் இதை யோசித்து இருக்க வேண்டும். ஒருவரை குற்றம் சாட்டும் போது நம்மிடம் உள்ள ஆதாரத்தை நாம் வெளியிட தயாராக இருக்க வேண்டும். இல்லை எண்டால் குற்றசாட்ட கூடாது. இப்போதும் சொல்கிறேன்…உங்கள் பழைய ஐடி விபரம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியேனும் அதை காணும் ஆவல் எனக்கு அறவே இல்லை. ஆனால் - நீங்கள் ஆதாரம் தரும் வரை அமரதாஸ் மீதான உங்கள் குற்றச்சாட்டை ஆதாரம் அற்ற பதிவு என்றே கருத முடியும். யாழ்களத்திலேயே எழுதாத அமரதாசை “வேணும் எண்டால் என்னுடன் கதைக்க சொல்லுங்கள்” என்பது “அண்ணை வந்ததும் காசை தாறோம்” டைப் லொஜிக்.3 points -
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
எல்லோருக்கும் தலைவராக வர விருப்பம் இருக்கும். அரசியலில் தலைவராக வருவது இலகுவானதல்ல. ஜனவசியம் இருக்கவும் வேண்டும். முடிவுகளை உறுதியாககவும், சரியாகவும், வேகமாகவும் எடுக்கவும் வேண்டும். அதிகாரத்தைப் பாவித்து கட்சியைக் கட்டும்கோப்பாகவும் வைத்திருக்கவேண்டும். அப்படி ஒரு ஆளுமையுள்ள தலைவர் தமிழர்களின் தேசியக் கட்சிகளில் இல்லை!2 points
-
பாட்டுக் கதைகள்
2 pointsசா…இப்படி ஒரு திரி யாழில் ஓடி கனகாலம்…. டிவி டெக் எடுத்து பார்த்த அதே சிறுவன் கோஷானாக பாதி விளங்கியும், பாதி விளங்காமலும் பார்த்துகொண்டிருக்கிறேன்🤣2 points
-
பாட்டுக் கதைகள்
2 pointsநாங்களும் இதே மாதிரி ரிவியும் டெக்கும் வாடகைக்கு எடுத்து ஒரு வீட்டு முற்றத்தில் போடுவோம். இரண்டு மூன்று நாட்கள் முதலே அதற்கான ஒழுங்கும் செய்து ஊர் முழுவதும் செய்தியை பரப்பிவிடுவோம். கட்டணங்கள் எவ்வளவு வாங்கினோம் என்பதை மறந்து விட்டேன். குடும்பத்தில் ஒருவருக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு சிறிது தள்ளுபடி. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். விஞ்ஞானிகள் போல மட்டுமல்ல அந்தப் பகுதியில் மசிந்திக் கொண்டு நிற்பவர்களையும் உள்ளுக்கு போறதென்றால் போ இல்லாவிட்டால் மாறுமாறு என்று கலைத்து விடுவோம். தொடருங்கள்.2 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
கறுப்பு குறியிடப்பட்ட பகுதியை அழுத்துங்கள், பின்பு வருவது உங்களுக்கு நன்றாக புரியும் அண்ணை.2 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வங்கத்தில் இந்தியா தலையிட ஒரே காரணம் - அது பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் தனது ஒரு எல்லையில் இருந்து பாகிஸ்தானை கிளப்பலாம் என்பதாலேயே. இலங்கை பாகிஸ்தான் இல்லை. ஆகவே யார் எப்படி தமிழ் நாட்டில் முக்கினாலும் இந்திய நலன் கருதியே முடிவு எடுக்கப்படும். 1987 இல் எம் ஜி ஆர், கருணாநிதி இருவரும் எதிர்த்த போதும் இலங்கைக்கு படைகளை அனுப்பினார் ரஜீவ். தான்னால் முடியவில்லை என புலிகளிடம் கைவிரித்தார் எம்ஜிஆர்.2 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீங்கள் பார்க்காததால் உங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.2 points
-
பாட்டுக் கதைகள்
2 pointsபாடசாலை காலத்தில் எனது வகுப்பில் சிறப்பாக படிக்கும் ஒரு மாணவர் இருந்தார், அவர் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக செய்கின்ற செயல்கள் கோமாளித்தனமாக எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கும், அவர் கவிதைகள் எழுதிகிறேன் என படம் காட்டுவார், ஒரு முறை என்னிடம் அவர் எழுதிய கவிதை என ஒரு கவிதையினை காட்டினார், அது ஏதோ காதல் கதை போல் இருந்தது பதில் சொல்லாமல் அவரை பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டேன். எமது வகுப்பிற்கு தொண்டராசியராக பாடசாலை படிப்பினை முடித்துவிட்டு ஒரு பெண்மணி பணியேற்றிருந்தார், வகுப்பு தொடங்கியது அவரிடம் அதே கவிதையினை அந்த மாணவர் கொடுத்தார், அதனை வாசித்துவிட்டு அவர் கேட்டார் விழியில் விழுந்து இதயம் நுழைந்து எனும் அலைகள் ஓய்வதில்லை பாடலை கொப்பியடித்திருக்கிறாயா என😁, அவர் சொன்ன பிறகே உணர்ந்தேன் உண்மையில் அந்த பாடலை சில சொற்களை மாற்றி அந்த கவிதையினை எழுதியிருக்கிறார் என.2 points
-
அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?
அர்ஜுனா தனக்கு அரசியல் பிடிக்காது என்றால், ஏன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். இவரின் செய்கைகளையும், உளறல்களையும் மக்கள் இனியும் ரசிக்கத் தயார் இல்லை என்றே நினைக்கின்றேன்.2 points
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
உயிருடன் இருக்கும்போது, "நான் செத்த பின்னர்" என்று ஒரு மனிதன் தானே யோசிப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ போற்றுதலுக்குரியது அல்லது ரசனைக்குரியதாக இருக்கலாம். உதாரணமாக மருத்துவக் கல்லூரிக்குத் தனது இறப்புக்குப் பின் உடலைத் தானம் செய்வதாக எழுதி வைப்பது போற்றுதலுக்குரியது. ஒரு மராட்டியத் திரைப்படத்தில் சற்று வயதான ஒரு பெண்மணி தமது இறப்புக்குப் பின் வீட்டில் மாட்டி வைக்க வேண்டிய தமது சிறந்த ஃபோட்டோவுக்காக மெனக்கிடுவது ரசிக்கும்படி இருக்கும். ஒரு நபர் தம் மரணம் பற்றி நகைச்சுவை கலந்து இடும் பின்வரும் பதிவும் ரசிக்கலாம் : ஆனால் "அவர் செத்த பின்னர்" என்று இன்னொருவர் பேசுவது சற்று வேடிக்கைதான். ஒரு வேளை மகிந்த ராஜபக்ச தம் உள்ளக் கிடக்கையை இன்னொருவர் மூலம் வெளிப்படுத்துகிறாரோ !2 points
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
அந்த முறை உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்ட ஒன்று முடிந்தால் தமிழக கடற்கரையில் 1௦ மைலுக்குள் அதே இழுவை படகு களை ரோலிங் செய்து காட்ட சொல்லுங்க சிறு தொழில் செய்பவர்களுக்கும் ரோலிங் பன்னுவர்களுக்கும் பெரும் கலவரமே உருவாகிவிடும் . இப்படியான இலங்கையின் வடகிழக்கு ஆழம் குறைந்த சூரிய ஒளி இலகுவாக கடலின் அடி வரை செல்லும் இந்த இயற்க்கை சூழ்நிலை ஒரு வரம் மீன்கள் இலகுவாக இனப் பெருக்கம் அடையும் கருவறை இப்படியான கருவறையில் 1௦௦லிருந்து 15௦ தமிழக ரோலர்கள் சொல்லி வைத்தது போல் ரோலிங் பண்ணி கடலின் அடியை பாலைவனமாக்கும் செயலை யார் பொறுத்து கொள்வார் ? முதலில் ஆசியாவில் அரசியலில் ஈடுபடனும் என்றால் குறிப்பிட்ட படிப்பு தகுதி இருக்கணும் என்ற நிலையை கொண்டு வாருங்கள் .2 points
-
மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என அறிய முயன்ற மாணவி உயிரிழப்பு
" ஒரே மகள் " எத்தனை பாஷை தெரிந்து என்னென்ன வசதி இருந்து என்ன பயன் ....பெற்றார் கவனிக்காமல் விட்டுவிடடார்கள் போலும்.2 points
-
பாட்டுக் கதைகள்
2 pointsபாடல் மூன்று - புத்தம் புது காலை பொன்னிற வேளை ----------------------------------------------------------------------------------- வீடியோ என்று சொல்லப்படும் சின்னத்திரையில் படங்களை ஓட விடும் காலம் அது. ஒரே இரவில் இரண்டு அல்லது மூன்று படங்களை அடுத்தடுத்து போடுவார்கள். அன்றைய நிலைக்கு பெரிய தொலைக்காட்சி என்பது 20 அங்குலங்களை விட சிறிது பெரிதாகவே இருந்ததாகவே ஞாபகம். ஒரு விசிஆர் கொண்டு வருவார்கள். அதை டெக் என்று சொல்வார்கள். அத்துடன் சில வீடியோ கேசட்டுகளும் வரும். இதைக் கொண்டு வருபவர்களும், இணைப்புகளைக் கொடுப்பவர்களும் விஞ்ஞானத்தின் உச்சியில் இருப்பவர்கள் போன்ற ஒரு பிரமை அன்று மனதில் இருந்தது. அதிலும் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் வரும் குறுக்கு கோடுகளை இல்லாமல் செய்பவர் இன்றைய நாசாவின் தலைமை விஞ்ஞானி போன்று அன்று தெரிந்தார். ஊரில் ஒரு சின்னப் பாடசாலை அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட வெறும் காணிக்குள் இந்த வீடியோ படக்காட்சி நடக்கும். பெரியவர்களுக்கு ஒரு கட்டணம், சின்னவர்களுக்கு ஒரு சின்னக் கட்டணம் என்று அனுமதியின் விலை இருக்கும். பின்னர் தமிழ்நாட்டில் இருந்து கேள்விப்பட்ட 'தரை டிக்கெட்' தான் இது. தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள கொட்டைகைகள் எனப்படும் தியேட்டர்களில் மண்ணைக் சின்னதாக குவித்துப் போட்டு அதன் மேல் அமர்ந்து திரையில் ஓடும் படங்களை ஒரு காலத்தில் பார்த்திருக்கின்றார்கள். இங்கும் எங்கு இடம் கிடைக்கின்றதோ அங்கு அமர வேண்டியதுதான். பல வீடுகளில் படிக்கும் பிள்ளைகளை இந்த மாதிரியான வீடியோ படங்கள் ஓடும் இடங்களுக்கு போக அனுமதிக்கமாட்டார்கள். என் வீட்டில் அனுமதி இலவசம் தான், ஆனால் காசு கொடுக்கமாட்டார்கள். என்ன படம் என்றாலும் பார்த்தே தீர வேண்டும் என்ற அவா இருந்த நாட்கள் அவை. ஒரு சினிமாப் பைத்தியம் போல. அந்த வயதில் என்னவென்றே விளங்கியிருக்காத 'அக்ரஹாரத்தில் ஒரு கழுதை' என்ற படத்தை கூட முதலில் இருந்து முடிவு மட்டும் பார்த்திருக்கின்றேன். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் தான் என்ற நம்பிக்கையை ஆரம்பத்தில் கொடுத்த இடங்களில் ஒன்று இந்த வீடியோ காட்சிகள் நடைபெற்ற இடங்கள். அங்கே வாசலில் போய் அங்கேயே நிற்கவேண்டும். காசு கொடுத்துப் படம் பார்க்க வருபவர்களை எல்லாம் உள்ளே விடுவார்கள். பின்னர் அன்றைய முதலாவது படம் ஆரம்பிக்கும். படம் சிறிது ஓடிய பின், அங்கு இன்னமும் காத்துக்கொண்டு நிற்கும் என் போன்றோரை, இலவசமாக, உள்ளே விடுவார்கள். முதல் படத்தில் தான் ஒரு ஆரம்பப் பகுதியை பார்க்க முடியாது. ஆனால் மற்றைய படங்களை முழுவதும் பார்த்துவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்குப் போய் வசதியான ஒரு இடத்தை கூட பிடித்தும் விடலாம். ஒரு படம் முடியும் முன்னமே நித்திரையாகிப் போகின்றவர்களும் பலர் உண்டு. 'இது என்ன கண்றாவி...............' என்று எழும்பிப் போகின்றவர்களும் உண்டு. கடைசி வணக்கம் காணாமல் கண் மூடாத கூட்டங்களாக சிலர் உடன் இருப்பார்கள். ஒரு நாள் நாங்கள் வேதப் பள்ளிக்கூடம் என்று சொல்லும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வீடியோ காட்சி போட்டார்கள். வழமையான அதே நடவடிக்கைகள் தான். முதல் படத்தின் இடையில் உள்ளே விட்டார்கள். 'அலைகள் ஓய்வதில்லை' என்று கார்த்திக்கும் ராதாவும் ஊரை விட்டு அந்தப் படத்தின் முடிவில் ஓடினார்கள். 'ஓடிப் போன பின் தானே இருக்கின்றது வாழ்க்கை..........' என்று பெரியவர்கள் சொல்லிச் சிரித்தனர். வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் சின்னவர்களுக்கே, பெரியவர்கள் அவர்களின் இஷ்டப்படி வாழலாம், இவர்களுக்கு என்ன கஷ்டம் வந்து விடும், இவர்கள் ஏன் இப்படிச் சொல்கின்றார்கள் என்று அப்போது பொதுவான ஒரு எண்ணம் மனதில் இருந்தது. அன்று இலங்கை வானொலியில் காலை 6:30 மணிக்கு செய்திகள் வாசிக்கப்படும். அதற்கு முன்னர் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள். இரண்டோ மூன்றோ பாடல்கள். இவை பெரும்பாலும் காலை நேரப் பொழுது பற்றிய பாடல்கள் அல்லது பக்திப் பாடல்களாக இருக்கும். 'அலைகள் ஓய்வதில்லை' என்னும் படத்திலிருந்து 'புத்தம் புது காலை பொன்னிற வேளை.......' என்று அந்தக் காலை நேரத்தில் கிறங்க வைக்கும் ஒரு பாடலை இடையிடையே ஒலிபரப்புவார்கள். ஆனால், நான் இந்தப் பாடலை அந்தப் படத்தில் பார்க்கவில்லை. நான் உள்ளே போகும் முன்னர் இந்தப் பாடல் முடிந்திருக்க வேண்டும் என்று தான் பல வருடங்கள் நினைத்து இருந்தேன். ஆனால் இளையராஜா இந்தப் பாடலை அந்தப் படத்திற்காக பதிவு செய்திருந்தார் என்றாலும், இந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவே இல்லை என்ற தகவல் மிகவும் பிந்தியே எனக்கு தெரியவந்தது. காசு கொடுக்காமல் இலவசமாக ஒன்றை நுகர்ந்ததால் வந்த விளைவு இது என்றும் சொல்லலாம். கதை இத்துடன் முடியவில்லை. பின்னர் ஒரு புதுப்படம் ஒன்றில் ஒரு நடிகை, ராதா அல்ல வேறொரு நடிகை, ஒரு வீட்டுக்குள் இருந்து இந்தப் பாடலை பாடும் காட்சி இருந்தது. அதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன எனக்கு. ஒன்று, இந்தப் பாடல் எப்படி இந்தப் படத்தில் வந்தது என்று. இரண்டாவது, இந்தப் பாடலுக்கான என் மனதில் இருந்த காட்சியை இந்தப் புது இயக்குனர் சுக்குநூறாக உடைத்துப் போட்டாரே என்ற ஏக்கம். ஒரு பெண் 'புத்தம் புது காலை, பொன்னிற வேளை..........' என்று வீட்டுக்குள் இருந்து நடனமாடுவதை ஏற்றுக் கொள்வது இன்றுவரை சிரமமாகவே இருக்கின்றது. ஆகக் குறைந்தது, வீட்டுக்கு வெளியே நின்றாவது அந்த நடிகை இந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கலாம் என்று தோன்றுகின்றது.2 points
-
பரணில் கிடக்கும் பழைய நாட்குறிப்பேட்டின் பொக்கிசமான நினைவுகள்..
காலப்பயணம் (time travel) செய்ய வீடியோ முழுதும் பார்க்கவும் …1 point
-
பாட்டுக் கதைகள்
1 pointமனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. *********************************************************************************** பாடல் ஒன்று - கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் -------------------------------------------------------------------------- எத்தனை தடவைகள் தான் ஊரின் ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு நடப்பது. என்னதான் தெருவெங்கும் குழாய் மின்விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒன்று என்று இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, அவை பளிச்சென்று பகல் போல எரிந்து கொண்டிருந்தாலும், சூடான தேநீர் கோப்பி மற்றும் குளிரான இனிப்பு பானங்கள் என்று தாராளமாக, இலவசமாகவே, பல இடங்களில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், கால்கள் போதும் போதும் என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. அக்காவின் கால்களின் நிலைமையும் அதுவே தான். ஆனால் அக்காவிற்கு பாடல்கள் மேல் இருக்கும் ஆசை பூமிக்குள் கொதித்து எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்றது. அன்று அது வெளியே வந்து ஆகாயம் வரை பரவிக் கொண்டிருந்தது. பாடல்களை கேட்பதில் மட்டுமே அவரின் கவனம் குவிந்திருந்தது. அந்த இரவில் ஊரின் பிரதான வீதியில் பத்து இசைக்குழுக்கள் பாடிக் கொண்டிருந்தன. இரண்டு மைல்கள் நீண்ட வீதியில் ஓரளவிற்கு சரியான இடைவெளிகள் விட்டு இசைக்குழுக்களின் மேடைகள் இருந்தன. ஒரு இசைக்குழுவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் அக்கா, 'சரி வா, அடுத்ததிற்கு போவோம்.............' என்று சொல்லிக் கொண்டே, என் பதிலை எதிர்பார்க்காமலேயே, எழும்பி நடந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். அக்காவிற்கும் எனக்கும் ஒரு வயது தான் இடைவெளி. ஆனால் அக்கா எங்களிருவருக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல நடந்துகொள்வார். அவருக்கு எல்லாமே தெரிந்தும் இருந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான் எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை. அக்காவும் நானும் ஊரின் ஒரு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் இசைக்குழுவின் மேடை போடப்பட்டிருந்த பாடசாலை மைதானத்தின் முன் மீண்டும் வந்து விட்டிருந்தோம். இது நாலாவது தடவை. இதற்கு மேலால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, இங்கேயே இருப்போம் என்று நான் அக்காவிடம் கெஞ்சினேன். அக்கா என்னைக் கவனிக்கவில்லை. அவர் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு மேற்காக நீண்ட மைதானத்தில் மேடை வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் ஒரு வரிசை வீடுகள், அதன் பின்னர் இராணுவ முகாம். மைதானத்தின் வடக்குப் பக்கமாக, மேடையின் பின்னால், பனைமரங்கள், அதன் பின்னால் கடல். தெற்குப் பக்கத்தில் வீதி, அதன் பின்னர் பாடசாலை. அக்கா மைதானத்திற்குள் கால் வைக்காமல் வீதி ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தார். திரும்பி நடந்து விடுவாரோ என்று நான் ஏங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். இராணுவ முகாமில் இருந்து பல இராணுவ வீரர்கள் அங்கங்கே வந்து நின்று இசைக்குழு பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்றும், எங்களுக்கிடையில் ஏதோ சில அடையாள வித்தியாசங்கள் இருப்பதும் வெளிப்படையாகவே இருந்தன. மேடையின் பின்னால், கொஞ்சம் மேற்குப் பக்கமாக, முன் நின்ற மிக உயர்ந்த சில பனைமரங்களின் முன்னால் மிகப்பெரிய ஒரு போர்டிகோ கட்டப்பட்டிருந்தது. கட் அவுட்டை நாங்கள் போர்டிகோ என்று சொல்வோம். இன்று நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கும் கட் அவுட்டுகளை விட என்னுடைய ஊரில் சிறப்பானதும், பெரியதுமான கட் அவுட்டுகளை அன்றே வைப்பார்கள். ஐம்பது அடிகளில் கூட சாதாரணமாக செய்து வைப்பார்கள். எல்லா கட் அவுட்டுகளும் சாமியின் உருவங்களாகவோ அல்லது அழகிய பெண்ணின் உருவங்களாகவோ மட்டுமே இருக்கும். ஆண் உருவங்களில் கட் அவுட் வைப்பதில்லை போல. நான் பார்த்ததில்லை. அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் பிரமாண்டமாக இருந்தது. லவனும் குசனும் ஒரு குதிரையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற மிக உயர்ந்த ஒரு கட் அவுட். பனைமரங்களிற்கு மேலால் லவனும் குசனும் நின்றார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வெள்ளைக் குதிரை. சீதாப்பிராட்டியின் புத்திரர்களின் அதே அளவு கம்பீரத்துடன் அந்தப் புரவியும் அங்கே நின்று கொண்டிருந்தது. அடுத்த பாடல் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..................' என்று அந்த இசைக்குழுவின் அறிவிப்பாளர் அறிவித்தது எதிரொலித்துக் கொண்டிருந்தது. 'சரி............. வா, போய் இருப்பம்...........' என்று அக்கா மைதானத்திற்குள் நடந்தார். நான் அக்காவைப் பின்தொடர்ந்தேன்.1 point
-
சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்!
சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்! என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக உமது விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் விட்டமைக்கு ஒரே ஒரு காரணம் உங்கள் கூட்டு இனப்பிரச்சினை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு என் தலையீடு முட்டுக்கட்டையாக அமையக்கூடாது என்பதற்காகவே. அன்றேல் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மறுப்பு கூற முடியும். என்னைப் பொறுத்த வரையில் உங்களது செயற்பாடுகள் எதுவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவையே. எதுவித கருத்தும் வெளியிடாது பொறுத்திருந்தேன். எது எப்படியானாலும் இனி எதையும் பொறுக்க நான் தயாரில்லை. உம்மைப் போன்றவர்களின் செயற்பாட்டால் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கின்றேன். உண்மைகளை மறைக்க முடியாது. அவை வெளிவந்தால் தான் மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படும். ஓர் ஆயுதக்குழு பற்றிய என் கருத்துக்கள், உங்களின் தந்திரத்தால் உங்களுக்கே சாதகமாக அமைந்தது. உங்களுக்கு அதிஸ்டமாகவும் அமைந்தது. விளைவு எம் மக்களுக்கு என் சேவை கிட்டாமல் போனதே. நீங்கள் என்னைப் பற்றி நன்றி அறிதலுடன் சிந்திக்கத் தவறிய பல விடயங்களில் சிலவற்றையேனும் ஞாபகமூட்ட வேண்டுமென என் உள்ளம் குமுறுகிறது. ஆனால் என் பெருந்தன்மை அதைத் தடுக்கிறது. உங்களுக்கு 06.11.2003 தேதியிட்டு எழுதிய கடிதம் கையிலிருந்தால் ஒரு தடவை அதைப் படியுங்கள். அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் பெரும் அரசியல் தலைவர். இனத்துக்காகத் தன் உயிரைப் பலி கொடுத்தவர். இன்று வரை என்னால் அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை. ஆனால் அவர் அமரத்துவம் அடைந்த ப+த உடலின் சாம்பல் சூடு ஆற முன்பு அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியையும் உமக்கே தர வேண்டுமென நீர் கேட்டது ஞாபகம் இருக்கா? விக்கிரமாதித்தன் கதையில் வரும் சம்பவம் போல் இவ்வளவு தைரியம் உமக்கு எப்படி வந்தது என நாம் ஆச்சரியப்பட்டோம். அக்காலத்தில் நீர் கட்சியின் ஓர் ஊழியனாகவே இருந்தீர். தற்போது உம்முடன் செயற்படுபவர்கள் பலருக்கு என்னைப் பற்றித் தெரியாது. தெரிந்திருந்தால், என்னைப் பற்றி விமர்சிக்கும் உமது நண்பர்கள், சின்னச்சின்ன தம்பிமார்களுக்கும் அதற்குரிய தகுதி இல்லை என்பதை உணர்வர். எனது அரசியல் அவர்களது, உமது வயதிலும் பார்க்கக் கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன். பொய், புரட்டு, களவு, சதி, ஏமாற்று, கழுத்தறுப்பு, முதுகில் குத்துவது, இலஞ்சம் ஆகியவற்றுக்கு நான் அப்பாற்பட்டவன். நீதியாகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அரசியலில் தீவிரமாக 53 ஆண்டுகளும், அதற்கப்பால் 7 ஆண்டுகளும் மொத்தமாக 60 ஆண்டு அனுபவம் உள்ளவன் நான். என் சேவை எம் மக்களுக்கு இல்லாமற் செய்த பெருமை உம்முடையதே. பொய் மூட்டைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் மக்கள் மத்தியில் என்னை ஓர் துரோகியாகக் காட்டின. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். அன்று நான் சொன்னவை எவ்வளவு நியாயமாக இருந்தாலும் என்னை திட்டித் தீர்த்தீர்கள். இன்று உங்களுக்குள்ளேயே குளம்புகிறீர்கள். இவற்றை மக்களுக்கு எடுத்து விளம்ப மாட்டீர்களா? அண்மையில் கூட ஒரு பிஞ்சு, உமது வாரிசு, விளாசித் தள்ளுகிறார் என்னைப் பற்றி. கொஞ்சம் அவருக்கு சொல்லக் கூடாதா? உமது முன்னேற்றத்துக்கு நான் என்றும் முட்டுக் கட்டை போட்டவன் அல்ல. உமக்காக எத்தனை விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளேன் என்பதை எனது அரசியல் வாழ்விலிருந்து நீர் பட்டுணர்ந்திருப்பீர். தமிழர் ஐக்கிய முன்னணி உருவாகியது, தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தே. இருசாராரும் சமமாக பதவிகளைப் பகிர்ந்து கொண்டோம். நானும் நண்பன் ஆலாலசுந்தரமும் பிரச்சார செயலர்கள். அமிர்தலிங்கம், சிவா ஆகிய இருவரும் செயலாளர்கள். கதிரவேற்பிள்ளை, திருநாவுக்கரசு பின்னர் தருமர் தனாதிகாரிகள் த.வி.கூ உருவாகிய போது நீர் தடுப்புக் காவிலில் இருந்தீர். நீர் தமிழரசு கட்சிக்கு முறை தவறி உயிர் கொடுக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி தான் செயற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் உண்மையை மறைத்து, ஸ்தாபகராலேயே மூடி வைக்கப்பட்ட தமிழரசுக் கட்சியை, அவர் 1977 இல் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், முறையற்ற விதத்தில் புத்துயிர் கொடுத்து மக்களை தப்பான வழியில் கொண்டு சென்றது யார்? 1977 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை 26 ஆண்டுகள், தமிழ் அரசுக் கட்சி இயங்கியதா? எந்த ஆண்டு நடைபெற்ற மகாநாட்டில் நீங்கள் செயலாளராக தெரிவானீர்கள்? முற்று முழுதாக தந்தை செல்வாவை ஏன் அவமதிக்கின்றீர்கள். இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாகக் கூறி மக்களையும் வெளிநாட்டுத் தூதுவர்களையும் ஏமாற்றுகிறீர்கள். தந்தை செல்வாவால் 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அவரின் இறுதி மூச்சு இருக்கும் வரை மட்டுமன்றி, தொடர்ந்து இன்று வரை, அதாவது 40 ஆண்டுகளுக்கு மேல் இயங்குவது தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். ஆனால் தமிழரசுக் கட்சியோ, தந்தைசெல்வாவின் மரணத்தின் பின், அதாவது 1977க்கு பின்னர் வெறும் செயலாளர் பதவியை எடுப்பதற்காக, அதற்கு 2004ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 25 ஆண்டுகளில் யார் யார் எவ்வெப்போது எந்தெந்தப் பதவியை வகித்தனர் என்பதைக் கூற முடியுமா? முழுப் ப+சணிக்காயைச் சோற்றுக்குள்ளே புதைப்பது போல் அண்மையில் பின்வருமாறு கூறியுள்ளீர்கள். “ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நாங்கள் அமைத்திருந்த போது அதில் அங்கம் வகித்த ஓர் கட்சியினால் உயர் நீதிமன்றம் வரை சென்று தேர்தல்களில் சின்னம் கட்சி என்பன முடக்கப்பட்டிருந்தன” என்று. இது உண்மை இல்லையே. செய்யாத ஒரு குற்றத்திற்குப் பொய்யாக என்மீது ஓர் நம்பிக்கை இல்லாத தீர்மானம், புலிகளின் கட்டளைக்கமைய, கொண்டு வந்ததும் நான் கலந்து கொள்ள முடியாத ஓர் இடத்தில், அம்பாறையில் தலைவர் என்ற முறையில் என் அனுமதி பெறாமல், பொதுச்சபை கூட்டம் ஒழுங்கு செய்ததை ஆட்சேபித்து அதன் காரணமாகவே கோட்டுக்கு செல்ல வேண்டிவந்ததென கூற ஏன் பயப்படுகிறீர்கள்? “இதே நிலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டால்” என்று பயப்படுகிறீர்களாமே இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா? தமிழர் ஐக்கிய முன்னணியோ, தமிழர் விடுதலை கூட்டணியோ உருவாகும் போது அதை உருவாக்கியவர்களில் ஒருவன் நான் அல்லவா நீர் அதில் சம்பந்தப்படவே இல்லையே. கடந்த 10ஆண்டுகளாக உமது விடயத்தில் நான் கடைப்பிடித்த மௌனம் உம்மைப்பெரும் உத்தமராகவும் கொள்கைப் பற்றுள்ளவனாகவும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதுகூட எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை மட்டம் தட்டி உலகுக்குக்காட்டி குறுக்கு வழியில் நீர் உயர முனைவதே எனக்கு வேதனை அழிக்கிறது. உமது திறமையாலும் தியாகத்தாலும் நீர் உயர்வதை நான் மனதார பாராட்டுவேன். தனது கடந்த காலத்தையும் ஏறிவந்த படிகளையும் ஒருவன் மறந்து செயற்படுவானேயானால் அவன் மானிடப்பிறவி எடுத்ததில் அர்த்தமில்லை. நான் கடந்தகாலத்தையோ ஏறிவந்த படிகளையோ என்றும் மறப்பதில்லை. மறக்கப்போவதுமில்லை. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு என் வீட்டுக்கு கல் வீசுவது உமக்கே கஷ்டமானதாக முடியும். இப்போது அது தான் நடக்கிறது. எனது கல்லறையில் சாம்ராஜ்யம் அமைக்க முயல்வது நல்லதுக்கல்ல. எனக்கு சமாதிகட்ட நீர் முனைவது எனக்கல்ல. எம் இனத்துக்குத்தான். இது நீர் செய்யும் பெரும் வரலாற்றுத் துரோகமாகும். எனது அரசியல் பாரம்பரியம்பற்றி நீர் அறிந்திருக்க நியாயமில்லை. தந்தைசெல்வாவை 1947ஆம் ஆண்டு முதல்முதல் புத்தூர் கிராமசபை மைதானத்தில் கண்டு அவரின் பேச்சைக்கேட்டு மகிழ்ந்தவன் நான். அப்போது நீர் சிறு குழந்தையாக இருந்திருப்பீர். கோப்பாய் தொகுதி வேட்பாளர் திரு.தம்பியப்பா அமரத்துவம் அடைந்த நாளும் அன்று தான். 1949ஆம் ஆண்டு தொட்டு தந்தைசெல்வா என்னாலும், எனது குடும்பத்தவராலும் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவர். மாற்றுக்கட்சியில் நான் செயற்பட்டகாலத்திலும் அவருக்குரிய மதிப்பையும் மரியாதையும் நான் கொடுத்தே வந்துள்ளேன். தந்தை செல்வாவுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தவர்களில் நான் மட்டும் தான் இன்று உயிருடன் இருக்கின்றேன். பாராளுமன்றத்தில் தந்தை. செல்வாக்குப்பின் இருந்த ஆசனத்திலேயே நான் இருந்தேன். தினமும் இரவு 8.00 மணிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கும் வேளையில் என்னையும் தன்னுடன் தனது வாகனத்தில் அழைத்துக்கொண்டு தன் வீட்டையும் தாண்டிச்சென்று எனது நண்பன் திரு.தா.திருநாவுக்கரசு அவர்களின் வீட்டில் விட்டுவிட்டே தனது வீட்டுக்கு திரும்புவார். இப்படிப்பல நாட்கள் தொடர்ந்தன. ஒரு சமயம் நான் கிளிநொச்சி கரைச்சி கிராமசபைத் தலைவராக இருந்தவேளை எனது தலைவர் பதவியைப்பறிக்க சிலர் முற்பட்ட போது அதை தடுத்து நிறுத்தியவரும் தந்தை செல்வாவே. மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட பெரியவரின் செயலால் அன்றைய உள்ளுராட்சி அமைச்சராயிருந்த திரு.மு.திருச்செல்வம் அவர்கள் (கலாநிதி நீலனின் தந்தை) ஒரு தடவையேனும் தனது அமைச்சர் பதவிக் காலத்தில் கிளிநொச்சிக்கு வரப்போக இந்த ஒரு சிலர் ஒருபோதும் விடவில்லை. அன்றும் உம்மைப்போன்ற சிலர் தழிழரசுக் கட்சியில் இருந்திருக்கிறார்கள். 1970ல் சும்மா கை கட்டிக்கொண்டிருந்து கிளிநொச்சித் தொகுதியில் நான் வெற்றி பெறவில்லை. கால்கள் கொப்பளிக்க கால்நடையாக நடந்து சென்று வென்றவன். எனது வெற்றிக்குச் சவாலாக பல தமிழரசுகட்சித் தலைவர்கள் தந்தைசெல்வா. அமிர் போன்றோர் வந்து தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்தார்கள். 700 சதுரமைல் விஸ்தீரணம் கொண்ட கிளிநொச்சித் தொகுதியில் என் கால்கள் படாத வீடு கிடையாது. கிளாலி தொடக்கம் மாங்குளம் ஊடாக துணுக்காய் ஆலங்குளம் வரை ஏறக்குறைய 100 கிலோமீற்றரும், பரந்தன் தொடங்கி முழங்காவில் வரை 50 கிலோமீற்றரும் கால்நடையாக நடந்து சென்றே அத்தொகுதியை வென்றெடுத்தேன். கிளிநொச்சி மக்கள் இன்றும் சான்றுபகர்வார்கள். இலங்கையில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் நான் பட்ட கஸ்டம் அனுபவிக்கவில்லை. அவ்வாறு பெறப்பட்ட பதவி என்பதால் தான் கர்வம் அடையாது அப்பதவியின் பெறுமதியை உணர்ந்து செயற்பட்டேன். 1972ல் பாராளுமன்றத்தில் ( அரசியல் நிர்ணய சபையில்) புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டவேளை அதைக் கண்டித்து உரையாற்றியது மட்டுமல்ல அதை எதிர்த்து வாக்களித்த ஒரேயொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினன் நான் மட்டுமே. நான் அன்று பிரதிநிதித்துவப்படுத்திய அகில இலங்கைத் தழிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவாகிய ஏனைய இருவரும் அரசுடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்தும். தமிழரசுக்கட்சியினர் அரசியல் நிர்ணயசபையைப் பகிஷ்கரித்ததும் அனைவரும் அறிந்ததே. எனது இச்செயலால் பெரியவர் தந்தைசெல்வா உட்பட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களினதும் அன்றைய எனது கட்சித் தலைவரும், ஸ்தாபகருமாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களினதும் பாராட்டைப் பெற்றவன் நான். 1972.05.14 தமிழர் கூட்டணியை உருவாக்கினோம். இக்கூட்டணியில் நான் என்னை இணைத்துக்கொண்டவனல்ல. கூட்டணியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். நானும் எனது நண்பன் மு.ஆலாலசுந்தரமும் இணைப்பிரச்சாரச் செயலாளர்களாகத் தெரிவானோம். அந்தவேளை திருவாளர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தார்கள். குடியரசு தினத்திற்கு முதல்நாள் இரவு அல்லது ஓரிரு தினங்களுக்கு முன்னர் சரியாக ஞாபகமில்லை பல இளைஞர்களுடன் எனது மைத்துனர் ஜெயசீலன் உட்பட உம்மையும் கைதுசெய்து தடுப்புக்காவலில் இருந்த உமக்கு வெளியில் நடந்தவைபற்றி அதிகம் தெரிந்திருக்கமுடியாது. தெரிந்திருந்தால் இன்று என்னை முழுமூச்சாக ஆதரித்திருப்பதுடன், அர்த்தமற்ற நியாயமற்ற உண்மைக்குப்புறம்பான குற்றச்சாட்டுகளை நம்மவர் சிலர் வைக்கும் போது அவற்றைக் கண்டித்தும் இருப்பீர். அதற்குப் பதிலாக எனது உயிருக்கு உலை வைக்கும் பெரும் பணியில் அல்லவா நீர் ஈடுபட்டிருந்தீர். நீர் என் சார்பாக பேசவில்லை என நான் கவலைப்படவில்லை. ஆனால் எதுவித பலனையும் எதிர்பாராமல் புண்ணியத்திற்கு உழும் பன்றியை பல்லுக்குப் பதம் பார்ப்பதில் நீர் அல்லவா முன்னின்று செயற்படுகின்றீர். உம்மைப்போன்று ஏறக்குறைய 50 இளைஞர்கள் குடியரசு தினத்தை பகிஷ்கரிக்கத் தூண்டியதால் பொலிசாரர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த அதேவேளை சகல தழிழரசுப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், ஏனைய திருவாளர்கள் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோருடன் நானும் இன்னும் பல தொண்டர்களும் இணைந்து பல்வேறு சட்டமறுப்பு நடவடிக்கைகளிலும், பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம். அப்படியான ஒரு சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சித் தொண்டர்களும் நானும், என்னுடன் காலம் சென்ற ஜயம்பிள்ளை திருஞானம், லண்டன் பா.வை.ஜெயபாலன், ஜேர்மனி சுந்தரசாமி கண்ணன், இந்தியா ஞானப்பிரகாசம் ஞானராசா, வன்னேரிக்குளம் துரைராசசிங்கம் ஆகியோரும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு யாழ். கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டோம். மறுநாள் காலை சிறைக்கைதிகளின் உடையில் பலாலி விமானநிலையத்தில் எனக்காக தயாராயிருந்த விசேட விமானத்தில் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். பலாலி விமானநிலையத்தில் கொழும்பு செல்லவிருந்த பயணிகளும், திருச்சிக்கு செல்லவிருந்தவர்களும் மற்றும் அவர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் வந்திருந்த பலரும் பார்த்துக்கொண்டிருக்க நான் விமானத்தில் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வெலிக்கடைச்சிறையில் நான் அடைக்கப்பட்டேன். தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிகளின் வரலாற்றில் சிறைக்கைதி உடையணிந்து மக்கள் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே! என்னுடன் கைதான ஏனைய 6 இளைஞர்களும் இவ்வாறே சிறைக்கைதி உடையணிந்தே சிறை வைக்கப்பட்டிருந்தனர். திட்டமிட்டு என்னை அவமதிக்க அரசு செய்த செயல் இன்றைய இளம் தலைமுறைக்குத் தெரிந்திருக்கும். உமக்கும் இது தெரியாமலிருக்க நியாயமில்லை. சிறைவாசம் முடிந்து கொழும்பில் விடுதலை செய்யப்பட்ட என்னை மாலை அணிவித்து வரவேற்ற தந்தை செல்வாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்ததை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அதேநேரம் யாழ்.கோட்டையில் விடுதலையாகிய இளைஞர்களை வரவேற்றகச்சென்ற அமிர் தம்பதியினருக்கு என்னநடந்தது என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். திருமதி.அமிர்தலிங்கம் காரினுள் இருக்க சில பொலிசார்கள் காரின் மேலே நின்று தூஷண வார்த்தைகளைப் பேசி பைலா நடனம் ஆடியதும், அமிர்தலிங்கம் அவர்களின் பிடரியில் யாரோ ஒருவன் அடித்ததும் இப்பொழுது நினைக்கும் பொழுதும் எனது கண்கள் பனிக்கின்றன. இது மட்டுமல்ல எத்தனையோ தடவைகள் அவர் அவமரியாதைப்பட்டதும், தாக்குதலுக்குள்ளானதும் உமக்கு தெரியாததல்ல. இன்று நீர் தமிழரசுக்கட்சியை மீளப்புதுப்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை கருவறுப்பதன் மூலம் அவருக்குச் செய்யும் துரோகத்தை எண்ணி நான் வேதனைப்படுகின்றேன். கடந்த 10ஆண்டுகளில் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை ஒரு தடவையேனும் உச்சரித்தீரா. அவர் எப்படி இறந்தார் என்பதையேனும் சொல்லியிருக்கிறீரா? அக்கொலையை கண்டித்திருக்கிறீரா? அமிர் அவர்களின் வாரிசு போல, எடுத்ததெற்கெல்லாம் தந்தையையும், அமிரையும் சாட்சிக்கு கூப்பிடும் உமக்கு இச் சம்பவம் பற்றிப் படிக்கும் போது உள்மனம் உறுத்தவில்லையா? இந்தத் தியாகச் செம்மலுடன் எனது இறுதியான பயணம் கொழும்பில் இருந்து சென்றதே. அவரை விட்டுப்பிரியும் போது இனி அவரை உயிருடன் சந்திக்கமாட்டேன் என்பதை நான் உணரவில்லை. அவர் கூறிய இறுதி வார்த்தைகள் இன்றும் என் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அன்போடு என்னை அழைத்து “சங்கரி எம்மில் சிலருக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியும். என்ன செய்வது? நாம் அதற்கு முகம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்” என்று கூறிவிட்;டு என்னை அண்ணா மேம்பாலத்திற்கு அண்மையில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதை அன்று நான் உணர்ந்திருந்தால் நிழல்போல அவரைத் தொடர்ந்திருப்பேன் அல்லவா? உம்மைத் தனது நிழல் என்று தானே அவர் எண்ணியிருந்தார். அதற்கமைய நீர் நடந்தீரா? நடக்கின்றீரா? தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்ட பின் ஒரு சந்தர்ப்பத்தில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் கடும் சுகவீனமுற்றிருந்தபோது பலகாலம் பிரச்சாரத்தில் ஈடுபடாது ஏனைய கட்சிப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே காலத்தில் திரு.தா.சிவசிதம்பரம், அன்றைய வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.எக்ஸ்.எம்.செல்லத்தம்பு அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டு பிரச்சார வேலைகளுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். அந்த நாட்களில் தமிழர் கூட்டணியின் கூட்டமென்றால் நான் மேடையில் அமர்ந்தால் தான் அது கூட்டணிக் கூட்டமாயிருக்கும். அல்லது அக்கூட்டங்கள் தமிழரசுக் கட்சிக் கூட்டமாகவே மக்கள் பார்வைக்குத் தெரியும். காரணம் எத்தனை பேச்சாளர்கள் இருந்தாலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது இருந்தால் தான் கூட்டம் கலகலப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நான் மட்டுமே என்பதை மறந்துவிடவேண்டாம். கூட்டணி என்னால் தான் வளர்ந்தது என்று கூறவரவில்லை. இருகட்சிகளையும் சேர்த்த பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் தம் பங்களிப்பை செய்தனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சட்ட மறுப்பு, பிரசாரக்கூட்டம், கிராம யாத்திரை என்று எந்த நிகழ்விலும் நான் கலந்து கொள்ளாது விடுவதில்லை. நெடுந்தீவு தொடக்கம் பொத்துவில் உகந்தைவரை எனது வாகனத்துடன் சமூகமளிப்பதை பெருமையாக என்னைப் பாராட்டி தன் மனைவிக்கும், கூடியிருக்கும் தொண்டர்களுக்கும் அமிர் அவர்கள் கூறுவது இந்தக்கணத்திலும் எனக்கு நினைவுக்கு வருகிறது. அரசியல் கட்சிக்குள் உட்ப+சல் இல்லாத கட்சி எங்கும் கிடையாது. அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடன் பதவிப்போட்டியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் போட்டியிடமுன்வந்ததும், தந்தை செல்வாவின் தலையீட்டால் அவை தடைப்பட்டதும் அனைவரும் அறிந்தவிடயம். அதேபோல நீர் பதவிக்கு என்னுடன் போட்டியிட்டதில் தவறில்லை. ஆனால் எதற்கும் ஓர் வழிமுறையுண்டு. பதவி கிடைத்தால் கட்சியை அழிக்க உடைக்க முயல்வது நீர் அடிக்கடி பெயர் குறிப்பிட்டுப் பேசும் தவைவர்களுக்குச் செய்யும் படுதுரோகமாக இன்று உமக்குத் தெரியவில்லையா? நம் கட்சிக்குள் நடந்த சில கசப்பான சம்பவங்களைக் குறிப்பிடுவது அழகல்ல. இருப்பினும் உம்மைப்போன்ற சிலரின் விபரீதப் போக்கால் சிலவிடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். 1977ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டணி அமோக வெற்றியீட்டிய வேளையில், அன்றைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டிய ஒரு சந்தர்ப்பம் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கிடைத்தது. அந்தத்தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடமின்றி, பழைய காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த நாங்கள் நால்வரும், தமிழருசுக்கட்சியைச் சார்ந்த சிலரும் அமரர் அமிர் அவர்களையே விரும்பினோம். ஏனெனில் அவர் செய்த தியாகங்கள், இரவு பகல பாராது குடும்பமாக தன்னை அர்ப்பணித்து மக்களுக்காகச் செயற்பட்டவர் கட்சியிக்காக உழைத்தவர் என்ற காரணத்தால் தான். ஆனால் உம்மைப்போன்ற பாராளுமன்ற உறுப்பினர் சிலர் அன்றும் இருந்திருக்கிறார்கள். சரித்திரம் திரும்புகிறது என்பார்களே! அது இது தானா? திரு.மு.சிவசிதம்பரம் அவர்களை எதிர்க்கட்சித்தலைவராகப் பிரோரிக்க நடந்துகொண்டிருந்த சதியை அறிந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தானே முதலில் எழுந்து அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தவைவராக முன்மொழிந்து அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்டதை நீர் அறிந்திருக்காமல் இருக்கமுடியாது. அமிர் அவர்கள் தனது இறுதி நாட்களில் அடிக்கடி கூறும் ஓர்விடயம் திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் இன்றுகூடச் சான்று பகர்வார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த உறுப்பினர்களின் விசுவாசம்பற்றி. நீர் சிறையிலிருந்தவேளை அங்கு நடந்த விடயங்கள் குறித்து எந்த மேடையிலும் எடுத்துக்கூற நான் தவறவில்லை. ஆனால் உம்மைப் போல பல இளைஞர்களும் அரச தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டிருக்கிறார்கள். கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். உம்மையும், காசி ஆனந்தத்தையும் வண்ணை ஆனந்தத்தையும் அரசியலில் வளர்த்தெடுத்தது நாங்கள் தான். உமக்குச் செய்யவேண்டியதற்கு அதிகமாகவே எமது கட்சி செய்துள்ளது. எதுவித பலனையும் பெறாத எத்தனையோ இளைஞர்கள் அன்று இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். பல இடங்களில் இளைஞர் பேரவைக் கிளைகளை அமைத்தோம். எனது கிளிநொச்சித் தொகுதியில் மட்டும் 28 கிளைகள் இருந்தன. இளைஞர் பேரவைக் கிளைகளின் ஒன்றியத்தின் தலைவராக நீர் வாக்கொடுப்பு மூலம் என்றும் தெரிவுசெய்யப்படவில்லை. எப்போதும் அமிர்தலிங்கம் அவர்களின் நியமனத்தால்தான் உமக்குத் தலைவர் பதவி கிடைத்தது. அன்றெல்லாம் நீர் தேர்தல் மூலம் பதவிக்கு வரவேண்டும் எதிர்நோக்க வேண்டும் என்று எண்ணவில்லை. இவையெல்லாவற்றையும் மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைத்தெறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளீர். இன்று உமக்கும், கட்சியில் வேறுசிலருக்கும் உள்ள நெருக்குதல் எனக்குத் தெரியாததல்ல. தமிழரசுக் கிளையையோ, கூட்டணிக்கிளையோ இன்று அமைக்கும் பட்சத்தில் யார் யார் அங்கத்தவர்கள் ஆவார்கள், எப்படிப்பட்டவர்கள் முக்கிய பதவியைக் கைப்பற்றுவார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? உமக்கு வேண்டியதெல்லாம் தலைமையில் மாற்றம். அதை முறைப்படி செய்திருக்கலாம். அகில இலங்கைத் காங்கிரஸ் கட்சி பிரிந்து சென்று தனித்து இயங்கலாம் என்றால் தமிழரசுக் கட்சி ஏன் தனித்து இயக்க முடியாது என்ற உமது வாதத்தை சிலர் முன்வைக்கின்றனர் என்பதை அறிந்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. வரலாறு தெரியாதவர்களுக்கு வரலாற்றை எடுத்துக் கூறவேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு. 1970ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்களின் பெருந்தலைவர்கள் குறிப்பாக திருவாளர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் ஆகியோர் தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இக்கட்டான கட்டத்தில் புதிய அரசு அரசியல் சாசனம் உருவாக்க அரசியல் நிர்ணயசபையை அமைத்து செயற்பட்ட போது இப்பெரியார்களின் தோல்வி ஈடுசெய்ய முடியாது என உணர்ந்த தந்தை அவர்கள் தமிழ் கட்சிகள் ஒருசில சொற்ப வாக்குவித்தியாசத்தில் ஒருவரையொருவர் வெற்றிபெற்ற நிலையில் இனியும் நாம் பிரிந்து நின்றால் அழிந்துவிடுவோம் எனக்கூறி தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வேண்டினார். அன்றைய அரசின் சவாலுக்கு பெரியவருக்குப் புலப்பட்ட ஒரேவழி ஒற்றுமை தான். தனது அரசியல் பேதங்களை மறந்து வீடுதேடிவந்த தந்தையை ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் வரவேற்று, அவருடைய முயற்சிக்கு முழு ஆதரவு தருவதாகக் கூறி தன் கட்சித் தொண்டர்கள் அத்தனைபேரும் முழு ஒத்துழைப்புத் தருவார்கள் என்றும் உறுதியளித்தார். அன்றுதொட்டு இருகட்சிகளும் இணைந்தே செயற்பட்டன. பிரச்சாரக் கூட்டங்கள், குழுக்கூட்டங்கள் ஆகியவற்றில் காங்கிரஸின் செயலாளர் தா.சங்கரப்பிள்ளை, பிரபல வழக்கறிஞர் எஸ.ஆர். கனகநாயகம், முன்னாள் மேயர்.இராசா.விஸ்வநாதன், தனாதிகாரி தா.திருநாவுக்கரசு போன்றோர் தவறாது கலந்து கொண்டனர். இவையெல்லாம் நீர் தடுப்புக்காவலில் இருந்தகாலத்தில் நடந்தவை. தலைவர் ஜீ.ஜீ மட்டும் பிறிதொருநாளில் சேர்வதாக உறுதியளித்தார். வட்டுக்கோட்டை மாநாட்டில் 1976ல் தழிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கூட்டுத் தலைவர்களாக தந்தைசெல்வா, தலைவர் ஜீ.ஜீ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌ.தொண்டமான் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இறக்கும் வரை, தான் அப்பதவியை துறந்ததாக ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தெரிவிக்கவில்லை. இது கூடவா உமக்கு மறந்து போய்விட்டது. கூட்டுச்சேருவது பற்றி நீர் தெரிவித்த கருத்து உமக்கு வேடிக்கையாக தெரியவில்லையா? ஒரு சமயம் நான் இந்தியா போயிருந்தபொழுது தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களை தனது வழக்கொன்றில் ஆஜராகுமாறு கலைஞர் ம1 point
-
பாட்டுக் கதைகள்
1 point🤣.................... (பச்சைகள் முடிந்து விட்டது, கிருபன், இன்று இந்தப் பக்கம் ஒரே சிரிப்பாக போய்விட்டது..............) எங்களுக்கும், ஷோபா சக்திக்கும் ஒரு தொடர்பு இருக்குது தானே, கிருபன்..............🤣.1 point
-
பாட்டுக் கதைகள்
1 point
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
இந்தியா, துணைத் தூதுவராக சடை வளர்த்த ஒருவரை யாழ்ப்பாணத்தில் குந்த வைத்திருக்கிறதே? அவருக்குத் தெரியாதா காங்கேசன்துறை, நெடுந்தீவு, பருத்தித்துறை, வலவெட்டித்துறை எல்லாம் எங்கே இருக்கிறது என்று. அவர்கள் நினைத்ததைத்தான் செய்து முடிப்பார்கள். சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பலையும் தங்கள் கரைக்கு இழுத்து வருவார்கள். மாற்றான் கடலிலும் இழுவைப் படகை ஓட்டியும் வருவார்கள். கடப்பாரை விழுங்கியவன் மாதிரி முழுசிக் கொண்டிருக்கும் எங்கள் எம்பியும் என்னத்தைக் கிழிக்கப் போகிறார்? எல்லாம் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்1 point
-
பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்!
1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
Translation: நீங்கள் "கூகிள் மப்பில்" பார்த்து விட்டு தமிழ்நாட்டைப் பற்றி எழுதவில்லை👍!1 point
-
அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?
இந்த பைத்தியரை கொஞ்சம் பக்குவப்படுத்தி தெளிவோடு வெளியே கொண்டுவந்து, புரிதலோடு வலம் வருவாரேயானால் நல்ல எதிர்காலம் இருக்கு. இந்த சிங்கள பேட்டியில் கூட யதார்த்தமான பதில்களை அனாசியமாக தருகிறார்.1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அரைகுறையாய் வரலாற்றை படித்துவிட்டு அத்துடன் தான் இட்டுக்கட்டிய கற்பனைகளை சேர்த்து, தான் நீண்ட காலமாய் காவித்திரியும் அந்த இத்து போன தனது போத்துகேய வரலாற்றை உண்மையாக்கி சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதிக்கு முட்டுக்கொடுக்க ஒருவர் படாத பாடுபடுகிறார். சீமானின் தம்பிகள் போல இங்கு சிந்திக்கும் அறிவு அற்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு போலும். சீமானுடன் சேர்ந்தாலே பொய்யும் புரட்டும் வியாதியை போல் பரவி விடுகிறது போலும்.1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
@Nathamuni ஓணாண்டி, பையன் வேற டீம். நீங்கள் வேற டீம். நீங்கள் #team Sri Lanka 🤣. உங்களுடன் இன்னும் ஒருவர்தான் சேர்த்தி😎1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
😂உங்கள் இந்த "நிலைப்பாட்டை" றோவுக்கு சொல்லி விட்டீர்களா? அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? தேசிய பாதுகாப்பிற்கு உள் (domestic) அரசியலில் இருந்து ஆபத்து வந்தால் IB ஆ றோ வா எதிர்வினையாற்றும்? இருக்கிறது. மிக ஆரம்பத்திலேயே ரசோதரன் எழுதி விட்டார் . தெரிவு செய்து வாசிக்காமல் எல்லாக் கருத்துக்களையும் வாசித்த பின்னர் நேரத்தை விரயம் செய்வதா இல்லையா என்று யோசியுங்கள்!1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இங்கேதான் முத்துகுமார் பிரதானமாகிறார்… சீமானை போல அன்றி பல.ம் வருடங்கள் வன்னியில் இருந்தவர் முத்துகுமார். அவரது படங்களை பார்தாலே தெரியும் அவர் எப்படி பட்ட பயிற்சிகளால் வெளிவந்துள்ளார் என. ராஜ்குமார் கடத்தல், பொலிஸ் மீது தாக்குதல் என பலதை செய்த நிஜப்போராளி. நாம்தமிழரை உண்மையான தமிழ் தேசிய அமைப்பாக கட்டி அமைக்க, கொள்கை தவறாது இருக்க, சீமான் மீது ஒரு கட்டுப்பாட்டை வைக்க - நியமிக்கப்பட்டவர் தான் முத்துகுமார். முத்துகுமார் யார் என்பதை தெரிந்து கொண்டு - அவர் மூலம் பெரும் ஆபத்து வரும் என்பதை கண்டு கொண்டு, றோ அவரை போட்டுத்தள்ளியது. எஞ்சிய சீமான் வெறும் வாய்வீரர் - தலைவரை 87 இல் மிரட்டியதை போல் மிரட்ட, சரண்டர் ஆகி விட்டார். முத்துகுமார் சாவின் பின் சீமானும், அவர் வழி நாம் தமிழரும் முழுக்க முழுக்க றோவின் வழிகாட்டலியேயே நடக்கிறன. றோவின் தலைமை அமித்ஷா. ஆகவே இப்போ அவர் சொல்படி. ஆனால் சீமான் தொடர்வது தமிழ் தேசியமே அல்ல. அது வெறும் போலி தமிழ் தேசிய கூச்சல். இது பிஜேபிக்கு வழி சமைத்து கொடுக்கும் வரை இதை ரோ அனுமதிக்கும். என்றைக்கு இதில் இருந்து உண்மையான ஒரு தமிழ் தேசிய தலைவர் வந்தாலும் - ஒன்றில் சீமானை போல் அவரையும் வாங்க பார்க்கும், இல்லை எண்டால் முத்துகுமார் போல போட்டுத்தள்ளும்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- 'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
சாராயம் விக்கிற தமிழக அரசியல் வாதிகள் தான் இந்த இழுவைப் படகுகளின் முதலாளிகள்..! தர்மம், நியாயம் என்று இவர்களுக்குக் கிடையாது. எந்த வழியிலும் பணம்…பணம்…பணம்…!1 point- பாட்டுக் கதைகள்
1 pointசெக்கோவின் கதை ஒன்றில் (குதிரைக்காரன் என நினைக்கிறேன்), ஒரு குதிரைக்காரர் தனது மகனின் இழப்பு பற்றி தனது வாடிக்கையாளர்களிடம் கூற முற்படும்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும் அதுதான் உலக நியதி என்பதனை கதையினூடே கடத்தியிருப்பார் ஆனால் கதையின் முடிவினை அவர் தனது மகனின் இழப்பிற்கான இயலாமையினை வெளிப்படுத்துவதாக முடித்திருப்பார். ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள இலக்கியங்கள் அக்காலத்தினை பிரதிபலிக்கும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையினை பிரதிபலிக்கும், சங்க காலத்தில் இருந்த காதல் அக்காலத்து இலக்கியத்தில் பிரதிபலிக்கும், இக்காலத்து இலக்கியத்தில் இக்கால காதல் இருக்கும், இலக்கியங்கள் ஒவ்வொரு காலத்தின் வரலாற்று சாட்சியாகும், இலக்கிய படைப்பாளிகள் மக்களின் வாழ்க்கையினையே பிரதிபலிக்கின்றார்கள். மார்டின் விக்கிரமசிங்க எனும் பெரும்பான்மை இன எழுத்தாளரின் அடிமைகள் எனும் கதை ஒரு அடுமட்ட சாதாரண மாட்டுக்காரரின் வாழ்க்கை அதில் ஏற்பட்ட விபத்து அது அவரது வாழ்க்கையில் ஏற்படுத்துகிற தாக்கம் அவரை சூழ உள்ள நிகழ்வு மனிதர்கள், மாடு என தொடர்கிறது அது கண்ணுக்கு தெரியாத இழையாக சமூகத்தில் அவரது நிலை, அவருக்கு கீழே இருக்கும் மாட்டின் நிலை மந்தர்கள் ஒருவருக்கொருவர் ஒரு சமூக கட்டமைக்குள் கட்டவைக்கப்பட்டுள்ளனர் என்பதனை அதன் தலையங்கத்தினை பார்க்காவிட்டால் புரியாது, அந்த கதையின் கருப்பொருள் அடிமைகள் ஆனால் அது கதையினை வாசிக்கும் போது புரியாது ஏன் கதைக்கு அடிமைகள் என பெயரிட்டார் என சிந்திக்க தூண்ட வைப்பதே கதாசீயர் நோக்கம்.1 point- இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
1 pointசீமானும் மிகச் சாதரண ஒரு சாதிக்கட்சியை நடத்தும் தலைவர் என்று தான் எழுதியுள்ளேன், விசுகு ஐயா. அதற்கு தமிழ்த்தேசியம் என்னும் முலாம் பூசி உள்ளார் என்றும் ஆதாரத்துடன் எழுதியிருக்கின்றேன். வேங்கைவயல் சமீபத்திய ஒரு ஆதாரம். இதுவே தான் என் பக்கத்தின் அடிப்படையே. இதை நான் எழுதவில்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை, விசுகு ஐயா. தன்னலம் மட்டுமே அங்கிருக்கின்றது, தமிழ்த்தேசியம் என்று ஒன்று அவரிடம் அறவே கிடையாது என்றும் சொல்லியிருந்தேனே. இவர் எம்மக்களை ஏமாற்றுகின்றார், எம்மவர்கள் இவரிடம் ஏமாறுகின்றார்கள் என்பதே என் நிலை. அதற்கு எதிரான ஒரு சாதாரண மனிதனின் குரலே என்னுடையது, ஐயா.1 point- 'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போல் ஒரு கருத்தை சொல்லியுள்ளீர்கள்.இன்றைய தமிழ்நாட்டு அரசியலை வைத்து என் கருத்தை சொல்கிறேன்.1 point- 'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
1 pointஓம்..மூடிட்டு படுக்கவும்..🤣1 point- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
அர்ச்சனா மாற்று அரசியல் செய்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது மக்களுக்கான சேவை செய்வதை விட்டு வேறு ஏதோ எல்லாம் சிந்திக்கின்றார் போலுள்ளது. ☹️ சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் வேறு ஆவேசமாக பேசியிருந்தார்.1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பொய் பித்தலாட்டக்காரன் செந்தமிழன் சீமான் அண்ணா ஒரு புழுகு விட்டால் மூடிமறைக்கலாம். அண்ணா விட்டது அண்டப் புழுகு ஆகாசப் புழுகு. அண்ணா அம்மணமா நிக்கிறார். அது தெரியாமல் சிலருக்கு மெய்சிலிர்க்குது!😂 ரீல் அந்து போச்சி! 😂1 point- இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
1 pointயாழ் களத்திற்கு இது தேவையில்லாத ஆணி. திரும்பத் திரும்ப பெரியார், சீமான், திமுக என்று யாழ் களம் திட்டமிட்டே அதகளப்படுத்தப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்குள் அடிபடுவார்கள். நாளை சேர்ந்து கொள்வார்கள். அவர்களது அரசியலில் இலங்கைத் தமிழர் கொஞ்சம் தள்ளி நிற்பதே சாலச் சிறந்தது.1 point- 'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
அடுத்தவன் சொத்துக்கு ஒப்பந்தம்! இந்தியன் இந்தியன் தான்! ஒருவேளை ஆமைப்படையணியை இறக்கினாலும் இறக்குவான்கள் இந்தியனுகள்!1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
காலம் இருக்குது தானே நான் சுவிஸ் வந்த பின் மகளுடன் சேர்ந்து எனது பதில்களை தாறன்.1 point- 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
ஐரோப்பாவில் யூதர்கள் உட்பட்ட மக்களை வதை/கொலை செய்த முகாம்கள் (concentration camps) விடுவிக்கப் பட்ட நினைவு நாளுக்கு அண்மையாக பொருத்தமான கட்டுரை. இதை வாசிக்க வேண்டிய புலம் பெயர் தமிழர்கள் எம்மிடையே இருக்கிறார்கள். இன்றும் ஜேர்மனியின் AfD போன்ற கட்சிகளை, ஏனைய குடியேறிகளுக்கெதிரான துவேசம் காரணமாக ஆதரிக்கும் புலத் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
பதப்படுத்த உப்பை பாவித்தால் இன்னும் திண்டாட வேண்டி வரும்🤣. ஆனாலும் உயிரோட இருக்கேக்கையே அனுதாபவாக்கு கேட்பது ராஜபக்சேக்கள்தான்🤣.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point - சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.