Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்20Points3061Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்16Points19126Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
alvayan
கருத்துக்கள உறவுகள்8Points5417Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/12/25 in all areas
-
ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே!
ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என்னை யாழில் வா தல, போ தல என உரிமையோடு ஒருமையில் எழுதும் ஒரே ஒருவர், நான் அப்படி ஒருமையில் விளிக்கும் ஒரே ஒருவர். அண்மையில் ஒரு கருத்தை சொல்லி விட்டு அதை நிறுவ முடியாமல் போய் விட, தன் credibility உடைந்து விட்டதென கூறி யாழில் கருத்து எழுதுவதை விட்டு விட்டார் (படங்கள் இணைக்கிறார்). இதெல்லாம் சப்பை மேட்டர், எல்லோருக்கும் நடந்ததுதான் என அவருக்கு நன்கு தெரியும். அத்தோடு என்னை போலவே குப்புற படுத்து கிடந்து இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசு கூட இல்லை என அடிக்கடி உணர்பவர் ஓணாண்டி. ஆகவே இந்த சப்ப மேட்டரை தூக்கி போட்டு விட்டு ஓணாண்டி மீண்டும் கருத்துகளம் மீள வேண்டும் என்பதை வலியிறுத்தி…. குணா பட பாடலை உல்டாவாக்கி கீழே வெளியிடுகிறேன். பாடல் பெற்ற தலம் போல், பாடல் பெற்ற கருத்தாளர் ஆகிறார் ஓணாண்டி. பாடலை ஒரிஜினல் மெட்டில் வாசிக்கவும்/பாடவும். ———— ஓணாண்டி அன்போட கோஷான் நான்… நான்… எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சிக்கலாமா? வேணா கடிதமே இருக்கட்டும், படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே… ஹ்ஹ பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும்…. மொதல்ல ஓணாண்டி சொன்னேன் இல்ல.. இங்க பேராண்டி போட்டுக்க…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்… பேராண்டி சாவச்சேரியில்… சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே….. ஆஹ… உன்ன நினைச்சு பாக்கும் போது வாண்டை, வாண்டையா…கெட்டவார்த்தை கொட்டுது… ஆனா அத எழுதனும்னு உக்காந்தா…. அந்த எழுத்து தான், ஹும் வார்த்த ஹு… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது (அதான்)… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது… அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை, படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா…. நான் இங்கு சௌக்கியமே… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது…. ————————— ம், என்னை யாழ்களத்தில பிராண்டுற காயம் அது தன்னால ஆறிடும்….. அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல…. எனக்கு ஒண்ணுமே ஆவரது இல்ல, இதையும் எழுதிக்க…. நடுவுல நடுவுல மாப்பு, ஆப்பு, கொய்யாலா. யோவ்…. இதெல்லாம் போட்டுக்கணும் ஹும்….. தோ பாரு என்னை கும்பலா சேர்ந்து கும்மினாலும் உடம்பு தாங்கிடும் உன் மனசு தாங்குமா? தாங்காது. ஓணாண்டி, ஓணாண்டி, ஓணாண்டி…. (அதையும் எழுதனுமா?) ஹ்-ஹ்ன், அது நட்பு ஹஹ், என் நட்பு என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது… ஆனா நான் அழுது அதனால சீமான் குரூப் சந்தோசப்பட்டிடுமோ அப்படின்னு நினைக்கும் போது வர்ற அழுக கூட நின்னுடுது….. ஹ்-ஹஹ-ஹ-ஹஹ-ஹ மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் சாதாரண கருத்துக்களம் அல்ல…. கருத்துக்களம் அல்ல….(4 எக்ஹோ) அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது புனிதமானது.. பிராண்டி வைத்த காயம் இங்கு தன்னாலே மாறிப் போன மாயம் என்ன கொய்யால, கொய்யால… என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி தாங்காது மாப்புள்ள… எந்தன் நட்பு என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…. சீமான் குருப் சந்தோசப்படும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது… மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் கருத்து களம் அல்ல…. அதையும் தாண்டி புனிதமானது…. ஓணாண்டியே நீ மீண்டும் வாடியேய், என் பாட்டு உனக்கு கேட்குதா… ஓணாண்டியே யாழில் நீ பேராண்டியே… அதுவும் உனக்கு புரியுமா…. சுபலாலி லாலியே லாலி லாலியே லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லால-லால-லால-லா, லால-லால-லா லல-லால-லால-லா-லால-லால-லா ஓஹோ லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா11 points
-
ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே!
இன்னொன்று👇😂 ” யமனாக நிழலியும், சித்திரகுப்தனாக தமிழ் சிறியும், யமதூதர்களாக தூயவன்,நிர்மலன்,புத்தன்,தும்பளையான்,ஜீவா ஆகியோரும் நந்தனாக நந்தனும் கலந்து சிறப்பிக்கும்... எமலோகத்தில் நந்தன் நாடகம் இதோ...[/size] ______________________________________________________________________________________________________________________________ 2054 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்திருக்கிறார் நந்தன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய சிலர் அவரிடம் வருகிறார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி நந்தனை தர தரவென இழுத்துச் செல்கிறார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்). காட்சி௧ள் (வானவீதியில்) நந்தன்: ஆமாஆஆஆ நீங்கெல்லாம் யாருப்பா..? யமதூதர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம். நந்தன் : என்னாது... என் உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை. யமதூதர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க...பொத்திக்கொண்டு இருடா டுபாக்கு... நந்தன் : ஆமா யமதூதா..., ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் அங்கிட்டு நல்லா இருக்காங்களா. யமதூதர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா கிராதகா..? நந்தன் : என்னது நீங்க மட்டும் வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் நமக்கு வராதா? யமதூதர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா. நந்தன்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?...இப்பிடி ரொம்பத்தூரமின்னு தெரிஞ்சிருந்தா வரும்போது வீட்டிலிருந்து கொஞ்சம் வொட்காவை எடுத்துவந்திருப்பனே.. யமதூதர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வருகிறாயா நரனே. நந்தன்: இங்கை திண்ணையும் இல்லை..போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை... யமதூதர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்பிடி வசதி. நந்தன் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப். காட்சி - 2 (எமலோகத்தில் எமனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது). சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும். யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி. நந்தன் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?. யமதூதர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும். நந்தன் : சரி அப்பு. சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது..... யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம். நந்தன் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாவது போட்டுக்குவேம். யமதூதர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா. சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் திண்ணையில் குடித்துவிட்டு, ஒருமுறை....... யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி, உன்னை.... சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள். யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,திண்ணை என்றவுடன் அங்கு இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வெறியில் பேசிக்கொள்ளும் பாசை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு யமதூதர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள். சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,லண்டனில் இவன்........ யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும். சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, யாழில் இவன் பதில் எழுதுறன் எண்ட பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் களௌறவுகளிடம்...... யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் வறுவல் பண்ணுங்கள். நந்தன்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,வடகம் போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்....? யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். யமதூதன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா? நந்தன் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம். சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள். யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன். நந்தன்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய். சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம். நந்தன்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவோ பார்த்துட்டேம்,இது என்ன.. யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது. நந்தன் : பேசாமல் எல்லாரையும் மன்மோகன் ஆக்கிடுங்க...யாரும் வாயைத் தொறக்க மாட்டாங்க... யமதூதன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு. யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை. சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள். நந்தன்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க. யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய். நந்தன் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும். யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ நெடுக்காலபோவான் எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை. நந்தன் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கியபடி....அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்திக்கொண்டு கண்விழிக்கிறார்.... _____________________________________________________________________________________[size=6] [/size] [size=6]நந்தன் கண்விழிக்கவும்..நாடகம் இனிதே நிறைவேறுகிறது...நன்றி வணக்கம் உறவுகளே..நிழலி மட்டும் தான் போட்டிருக்கும் வாடக்கைக்கு எடுத்த எமதர்மன் உடுப்புகளை தரமாட்டன் என்டு மண்டபத்தின் பின்னால் அடம்பிடிக்கிறார்..இப்பிடியே இருந்து யாழுக்கை வெட்டப்போறாராம்... [/size] “3 points
-
ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே!
என்னத்தை சொல்ல ........ கமல் கண்டால் கதறிடுவார் ...........! 😂 அடுத்த கவிதை வருமுன் ஓணாண்டி தயவு செய்து மேடைக்கு வரவும் . ........!3 points
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
3 points
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@தமிழ் சிறி, @nunavilan , @நிலாமதி, @alvayan ஆகியோர் விடைகளை மீண்டும் சரிபார்க்கவும். Jasprit Bumrah, Mitchell Starc, Yashasvi Jaiswal ஆகியோர் இம்முறை விளையாடவில்லையாம்!3 points- காற்றாடி
3 pointsஇதெல்லாம் கப்சா சார்...அனுபவம்தான் ..கதை ..கவிதையாக வரும் ...வந்துகொண்டேயிருக்கும்...இது அடிச்சட்டியில் இருந்தே வெளிக்கிடுகுது...நமக்கு கொண்டாட்டம்தானே ...வாசித்து எஞ் யாய் பண்ணுறம்...தொடர்க3 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK NZ Select NZ Select BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) PAK #A2 - ? (2 புள்ளிகள்) IND 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA SA ENG Select ENG Select AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) PAK இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி PAK சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AUS 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Travis Head 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shaheen Shah Afridi 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rohit Sharma 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) PAK 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Shaheen Shah Afridi 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammad Rizwan 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK3 points- காற்றாடி
3 pointsகாற்றாடி - அத்தியாயம் நான்கு ----------------------------------------------- தனம் மாமி வீட்டுக்கு வந்திருந்தார். ஊரில் முறை தெரிந்த சொந்தக்காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் மாமா, மாமி, அண்ணா, அக்கா, அப்பாச்சி, அம்மாச்சி, இப்படி ஏதாவது ஒரு உறவுமுறை சொல்லி அழைப்பதே வழக்கம் என்றாகியிருந்தது. முறை தெரிந்த சொந்தக்காரர்களை அவர்களின் முறையை வைத்தே அழைத்துக் கொண்டார்கள். ஒரு சில அரச உத்தியோகத்தர்களைத் தவிர, வேறு எவரையும் ஒரு உறவுமுறையில் இல்லாமல் குறிப்பட்டதாகவோ அல்லது அழைத்ததாகவோ ஞாபகமில்லை. தனம் மாமி சொந்தத்தில் மாமி இல்லை. இதே ஒழுங்கையில் அவரும் குடியிருக்கின்றார். வீடு நிறைய ஆண் பிள்ளைகளை பெத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றார். அவர்களில் இருவரைத் தவிர மற்ற எல்லோருமே அவனை விட வயது கூடியவர்கள். பெண் பிள்ளை ஒன்று வேண்டும் என்றே, அடுத்து அடுத்து ஆண்பிள்ளைகளை சளைக்காமல் பெற்றதாக தனம் மாமி சொல்லியிருக்கின்றார். அவனின் வீட்டில் ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் மாறி மாறிப் பிறந்திருந்தார்கள். அவனின் வீட்டில் வேறு ஒரு கொள்கை வழியில் பெற்றிருக்கின்றார்கள் போல. 'என்ன, மூத்தவன் படிப்பை நிற்பாட்டி விட்டானாம்.................' என்று ஆரம்பித்தார் தனம் மாமி. அவனின் அம்மா பரீட்சை அன்று கடுமையாக மழை பெய்ததால், அவன் பரீட்சைக்கு போகவில்லை, அதனால் படிப்பு நின்று போனது என்று ஒரு வெள்ளந்தியாக கதைக்கவில்லை. அம்மா அப்படிக் கதைக்கவேமாட்டார். அவர் பிடி கொடுக்கவேமாட்டார். ஒரு ஆணாக பிறந்திருந்தால், அவர் எப்படியோ ஒரு பெரியாளாக ஆகியிருப்பார். பெண்ணாகப் பிறந்தபடியால், ஓட்டைகளில்லாத கறுப்பு புல்லாங்குழல் போல இருக்கும் ஒன்றால் சர்வ காலமும் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கின்றார். அவனும் அதை ஊதிப் பார்த்திருக்கின்றான். ஒரு தடவை ஊதுவதற்கு பதிலாக, அடுப்புப் புகையை உள்ளே இழுத்துவிட்டான். இருமிக் கொண்டே ஊதுகுழலை கீழே போட்டு விட்டு, அதை திருப்பி எடுக்கும் போது, அதன் அடுத்த பக்கத்தில் பிடித்து தூக்கியும் விட்டான். எந்த வேலைக்கும் அனுபவம் மிகவும் முக்கியம். 'படிப்பு என்ன படிப்பு, படிக்காதவர்கள் தான் இன்று உலகத்தை ஆளுகின்றார்கள்............' என்று தொடர்ந்தார் தனம் மாமி. ஏட்டுச் சுரைக்காயில் எங்கே கறி வைப்பார்கள், கழனிப் பானைக்குள் யார் கவிழ்ந்து விழுகின்றார்கள், இப்படி இன்னும் சில உதாரணங்கள் ஒரு மன ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டன. அவரின் பிள்ளைகள் எவருக்கும், இதுவரை, இந்தப் பழமொழிகளையும், முதுமொழிகளையும் எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேவையும் வரவில்லை. நாலு மனிதர்களுடன் மட்டும் பழகுகின்றோம், அந்த நால்வரும் ஒன்றையே சொல்கின்றனர் என்றால் முழு உலகமே ஒத்த குரலில் அதையே சொல்வது போன்றே இருக்கும். இன்று இலங்கையின் பெரிய பணக்காரராக இருப்பவர், அவர் படிக்கவேயில்லை, கொழும்பில் தெருத்தெருவாக பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தாராம் என்று தனம் மாமி இலங்கையில் உள்ளவர்களிலேயே பெரிய சாட்சியாக ஒருவரை கொண்டு வந்து நிறுத்தினார். 'பிறகு............... அவருக்கு என்ன லொத்தரே விழுந்தது...............' என்று அவனின் அம்மா ஆச்சரியம் காட்டினார். அம்மா கேட்பதைப் பார்த்தால், அந்தப் பணக்காரருக்கு லொத்தர் விழவில்லை என்பது அம்மாவிற்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது போன்றே அவனுக்கு தெரிந்தது. கடுமையாக உழைத்து, படிப்படியாக அவர் முன்னேறினார் என்று தனம் மாமி சொன்னார். தன்னுடைய மூத்த பிள்ளைகளும் கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அதில் மூத்த அண்ணன் போன மாதம் இதே ஒழுங்கையில் இருக்கும் அக்கா ஒருவருக்கு கடிதம் கொடுத்து, அது பெரிய வாக்குவாதம் ஆகியது. அன்று இரவு அந்த அக்காவின் வீட்டிற்கு கல்லெறி கூட விழுந்தது. இரவு வெளியே வரப் பயந்து இருந்த அவர்கள், விடி விடியென ஆள் சேர்த்துக்கொண்டு அடிக்கப் போனார்கள். தனம் மாமி வீட்டில் என்ன நடந்தது என்றே தெரிந்திருக்கவில்லை. வேற யாரோ ஒரு கணக்குப் பண்ணி, அந்த அக்காவின் வீட்டிற்கு இரவு கல்லை எறிந்து விட்டுப் போயிருக்கின்றார்கள் போல. கொழும்பில் பேப்பர் பொறுக்கி, பின்னர் பெரும் பணக்காரராக ஆனவரும் முதலில் அவரின் சொந்த ஊரில் ஒரு கடிதப் பிரச்சனையில் மாட்டுப்பட்டிருப்பாரோ என்று அவன் நினைத்தான். அவனை அப்பொழுது தான் கண்ட தனம் மாமி, 'என்ன வேலைக்கு போகின்றாய்..................' என்றார். அவனின் அம்மா வயரிங் வேலைக்குப் போகின்றான் என்று சொன்ன அதே நேரத்தில், அவன் தான் தியேட்டரில் வேலை செய்வதாகச் சொன்னான். சில பின்னேரங்களிலும், இரவுகளிலும் அங்கே போய் தியேட்டரிலும் சும்மா நிற்கின்றவன் என்று அவனின் அம்மா, அப்படியே அவனை முறைத்துக் கொண்டே, சமாளித்தார். 'தியேட்டருக்கு எல்லாம் போகவே கூடாது, அங்கே தான் எல்லா கெட்ட பழக்கங்களையும் இந்தப் பிள்ளைகள் பழகுதுகள்...............' என்று சொல்லிக்கொண்டே மாமி நல்ல வசதியாக பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்து கொண்டார். மேடைப்பேச்சாளர் ஒருவர் தொண்டையைக் கணைத்து முழுவீச்சில் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பது போன்ற ஒரு நிலையில் மாமி இருந்தார். இன்று இரவு மாமி வீட்டிற்கு யாரும் கல்லால் எறிந்தால் பரவாயில்லை என்று எண்ணம் ஒரு மின்னல் போல தோன்றி மறைந்தது. புகை, குடி, கூத்து என்று பல கெட்ட பழக்கங்கள் வரிசையாக அடுக்கப்பட்டன. எல்லாமே தியேட்டரிலேயே ஆரம்பிக்குது என்றார். ஆனால், காதல், கடிதம் என்ற சொற்கள் மட்டும் வரவேயில்லை. நல்லதோ, கெட்டதோ வெளியில் தான் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. எந்த மனிதனும் கொஞ்சமாக கண்ணை மூடி அவனுக்குள்ளே எவைகளையும் தேடுவதில்லை. (தொடரும்.........................)3 points- காற்றாடி
2 pointsகாற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)2 points- வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!
வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்! Mathivanan MaranUpdated: Tuesday, February 11, 2025, 7:21 [IST] ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளவன், அவரது தந்தை குயில்தாசன் உள்ளிட்டோர் அனைவருமே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு பொதுமேடையிலும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பங்கேற்பது இல்லை. Also Read பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட குயில்தாசன் பொதுவாக அரசியல் மேடைகளில் பேசுவதும் இல்லை. திருப்பத்தூரில் பெரியாரிய ஆய்வறிஞர் ஆனைத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் பங்கேற்று பேசினார். "EPS ஆட்டம் முடிஞ்சது.. அடுத்து நடக்கப்போகும் பிரளயம்" - Theni Karnan பகீர் | ADMK | Sasikala | OPS இவ்விழாவில் பேசிய குயில்தாசன், பேரறிவாளன் கைது செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டார். அந்த துயர காலங்களில் துணையாக இருந்த பலரையும் நினைவுபடுத்தி பேசினார் குயில்தாசன். மேலும் திருப்பத்தூர் நகரம் எப்படி எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியாக இருந்தது என்பதையும் விவரித்தார் குயில்தாசன். அப்போது, தந்தை பெரியாரையும் ஆனைமுத்துவையும் எதிர்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தங்களது பிள்ளைகளுக்கோ தங்களுக்கோ அரசு கல்வியிலும் பணியிலும் இடஒதுக்கீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள். பெரியாரையும் ஆனைமுத்துவையும் திட்டினால் அவங்க செய்ததை மட்டும் ஏற்றுக் கொள்வீர்களா? அதனால்தான் நீங்கள் விட்டுவிடுங்கள்.. மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். Recommended For You சினிமாவில் ஒரு நகைச்சுவை காட்சி வரும்..கொய்யால.. காசு கொடுத்ததற்கு மேல பேசுகிறார் என்கிற வசனம் வரும்.. அந்த மாதிரி பேசுகிறார்கள் (சீமான் பெயரை குறிப்பிடாமல்).. பெரியார் எனும் கிழவனும் சரி.. ஆனைமுத்து எனும் கிழவனும் சரி.. செய்துவிட்டு போன பணிகளால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்..ஏனெனில் நாய்களோடும் நரிகளோடும் பெரும் போராட்டம் நடத்துகிறோம்..ஒரு காலை நாய் கடிக்குது.. இன்னொரு காலை நரி கடிக்குது.. பெரியார் எனும் கிழவன் ஏன்தான் பிறந்து இப்படி சமூக சீர்திருத்தம் செய்தாரோ என நினைக்கத் தோன்றும் அளவுக்கு பேசுகின்றனர். https://tamil.oneindia.com/news/chennai/perarivalans-father-kuyildasan-slams-ntk-chief-seeman-for-remarks-against-periyar-679043.html டிஸ்கி புலம்பெயர் நாம்தற்குறிகள் நவ்: பேரறிவாளன் அப்பாவுக்கு சுடச் சுட ஒரு தெலுங்கன் பட்டம் பார்சல்!!!!2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
👍.............. நன்றிகள் அல்வாயன். பச்சைக் கலர் அடிக்கிறதில் இருந்த கவனம், பெயர்களைப் பதிவதில் எனக்கிருக்கவில்லை.......🤣. @கிருபன், என்னுடைய 30 மற்றும் 31 வது விடைகளை இடம் மாற்றிவிடவும், ப்ளீஸ்......... நாட்டின் பெயரையும், வீரரின் பெயரையும் மாற்றிப் போட்டுவிட்டேன்..............🙏.2 points- வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?
2 pointsBlind Runners: பார்வையற்ற Paralymic Athletes வழிகாட்டி உதவியுடன் ஓட்டப்பந்தயத்தில் சாதிப்பது எப்படி? பார்வை மாற்றுத் திறனாளி தடகள வீரர்கள் கைட் ரன்னர்களை பயன்படுத்துகின்றனர். அபே, 2 மாதங்களாக சிம்ரனின் கைட் ரன்னராக இருக்கிறார். ரக்ஷிதாவும் அவரது கைட் ரன்னர் ராகுலும் நெகிழிக் கயிற்றால் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கைட் ரன்னரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது. தடகள வீரர் வென்றால் அவர்களுக்கும் பதக்கம் கிடைக்கும், ஆனால், வேறு உதவி எதுவும் கிடைக்காது. "எங்களுக்கு பணமோ, வேலையோ எதுவுமே கிடைக்காது. கைட் ரன்னராக ஓடுவதில் என்ன பயன் இருக்கிறது?" என்கிறார் ரக்ஷிதாவுக்கு கைட் ரன்னராக இருக்கும் ராகுல் பாலகிருஷ்ணா. அதில், கைட் ரன்னரான அபே குமாரின் வழிகாட்டுதலோடு சிம்ரன் 200மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு2 points- ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே!
🤣............ ஓணாண்டியார், நீங்கள் எந்த குணா குகைக்குள் போய் இருந்தாலும், உங்களை விடுவதாகவில்லை. குகைக்குள் ஒரு கூட்டமே இறங்குது......................🤣.2 points- இடியப்பமும்.. முரல் மீன் சொதியும்.
2 pointsமாசி மாதம் எண்டாலே... மாதகல் முரல் மீனுக்கு நாக்கு தவியா தவிச்சிடும்... ஓம் என் அன்பு மனைவீட பிறந்த கிராமம்... மாசி மாதம் வந்திட்டா பட்டுவோட அம்மப்பா சொல்லிட்டு திரிவார் தம்பி ஒரு நாளைக்கு முரல் வாங்குவம் எண்டு ஆனா என்ன விலையெண்டாலும் அஞ்சாறு நாள் வாங்கீடுவார்... சரி வாங்கோ கடக்கரைக்கு போவம்... அங்க தம்பி மார் கூம்பு வலைய கொண்டு ஏழுமணிக்கு கடலுக்கு போவினம் ஒரு ரெண்டுகடல் மைல் தூரம் போக நேரம் சரியா இருக்கும்... அப்ப பாத்து இளம் முரல் மீனுகள் வெளிச்சத்துக்கு துள்ளி பாய்வினம். அந்த நேரத்தில கச்சிதமா வலைய வீசி அள்ளீடுவாங்கள் தம்பி மார்...பிறகு ஒரு எட்டுமணி மட்டில கரைக்கு வரவே வாங்கின மீன் மாயமாகீடும்... அவைக்கு அவ்வளவு கிராக்கி.... சரி மீனை வாங்கிக்கொண்டு வீட்டை ஓடி வந்து மீனை கோடிப்பக்கம் கொண்டுபோய் ஒரு சட்டீல போட்டு அலசீட்டு அரிவாளில இருந்து செதில் அடிச்சு செட்டைய மண்ணில தடவி(வழுக்காம இருக்க) வெட்டி சொண்டையும் வெட்டி போட்டு பூவோட சொட்டு மேல் குடல உருவீட்டு வயித்த நெரிச்சு சரிமானகடையல உருவிட்டு நல்லா நாலு தண்ணீல அலசி கழுவினா மீன் சமையலுக்கு தயார்... சரியெண்டு குசுனீக்க போனா மனிசி சின்னவெங்காயம் இரு இருவது பல்லு ரெண்டா பிளந்த பச்சமிளகாய் ஒரு பத்து ஒரு தேங்காயில புழிஞ்சரரெண்டு வகை பால்(முதல் பால் கப்பிப்பால்) தயாரா இருக்கும்... அங்கால வெள்ளை புட்டு சிவத்தை புட்டு இடியப்பம் எண்டு அதுவும் சைட்டா கமகமத்துக்கொண்டு வேகும்.... 😍😍 இப்ப பெரிய மீன் ஒரு பதினஞ்சு முழுசா சொத்திக்கு எடுத்து வைச்சிட்டு பிஞ்சு மீன் ஒரு இருவது பொரியலுக்கு...😊😊😊 நான் அளவா உப்பு மஞ்சல் தூள் போட்டு பொரியல் மீனை பிரட்டி வடிய போட்டிருவன்.... அதுக்கு பிறகு கணக்கான மண்சட்டி ஒண்ட அடுப்பில வைச்சு அதுக்க வெட்டின வெங்காயம் மிளகாய் ரெண்டு பேணி கப்பிப்பால விட்டு மூடி போட்டு வேக விடுவன்... அதுக்க இதமான ரெண்டு பாட்டு பாட விட்டிருவம் பட்டுவும் அம்மப்பாவும் அம்பது தடவை குசுனீக்க வந்து நோட்டம் விட்டிட்டு போவினம்... சரி இப்ப மூடிய திறந்து உப்பு அளவா போட்டு மெல்ல மீனை அடுக்கு கப்பி பால முழுவதையும் விட்டு திறந்த படி மீனை வேக விடுவம்... முரல் வாசம் மூக்கை துளைக்கும் அப்பிடியே மனிசீட முகத்தை பாத்து லைட்டா சிரிச்சா காதலும் கூடவே ருசி சேர்த்திடும்... கொதிச்சு வர முதல் பாலை விட்டு அதில புற அகப்பையால மஞ்சல் தூள அமத்தி சாடயா துலாவிவிட்டா ஒரு தரம் கலர் வரும் பாருங்கோ... இப்ப ஒரு கொதியோட சொதிய இறக்கி அதுக்க ரெண்டு தேசிக்காய வெட்டி நல்லா புழிஞ்சு புழி விட்டா ஆ சொதி அசத்தீடும்... லைட்டா உள்ளங்கைல சுடச்சுட விட்டு நக்கினா அடடே அமிர்தமெல்லோ. மனிசியும் ஓரமா கைய நீட்டுவா கொஞ்சமெடுத்து ரொம்ப ஊதிட்டு அவவிட கையில விட்டா ஒரு குட்டிக் கையும் மேல நீளும் ஆருமில்ல பட்டுவோட குட்டிக் கை... சுடுமாத்தை மெல்ல எண்டு சொல்லு பக்குவமா அவாக்கு ஒரு சொட்டு மருந்து... பிறகு அடுப்பில ஒரு தாச்சி சட்டிய வைச்சு நல்லா காய விட்டிட்டு செக்கில ஆட்டின நல்ல நல்லெண்ணை மீனை மூடுற அளவுக்கு விட்டு கொதிக்க வைச்சிட்டு உப்பு மஞ்சல் ஊறி வடிஞ்ச மீனில ஒரு அஞ்ச ஒண்டா மெல்லமா அடுக்கி மூடி விட்டா... "டுப்பு டுப்பு எண்ட சத்தத்தோட தரமா பொரிஞ்சுவர மெல்ல அகப்பையால பிரட்டி விட்டு மத்தப்பக்கமும் பொரிய விட்டு எடுத்தா மீன் பொரியலு ரெடி... அப்பிடியே எல்லாரும் நான் மனிசி பட்டு அம்மப்பா தங்கச்சி எல்லாரும் ஒண்டா இருந்து புட்டு நிறைய சொதி ரெண்டு சொதி மீன் ரெண்டு பொரியல் எண்டு போட்டு வெளுத்து கட்டுறப்ப சொர்க்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்... இப்ப சீசன்... வாழ்க்கை வாழ்வதற்கே ஆதலால் நீங்களும் வாழ்ந்திடுங்கள் தோழர்களே... அன்புடன் கலைவாணன். Organic Farm-Jaffna2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
# Question Team1 Team 2 Prediction குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND NZ குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) பிரிவு A: Team Pld W L IND Select IND Select IND 3 1 2 PAK Select PAK PAK PAK 3 2 1 NZ Select NZ NZ NZ 3 3 0 BAN Select BAN Select BAN 3 0 3 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) NZ <- Choose IND or enter your preferred Team A1 IND #A2 - ? (2 புள்ளிகள்) PAK <- Choose PAK or enter your preferred Team A2 PAK 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) பிரிவு B: Team Pld W L AUS Select AUS AUS AUS 3 3 0 SA Select SA Select SA 3 1 2 ENG Select ENG ENG ENG 3 2 1 AFG Select AFG Select AFG 3 0 3 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS <- Choose AUS or enter your preferred Team B1 AUS #B2 - ? (2 புள்ளிகள்) ENG <- Choose ENG or enter your preferred Team B2 ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) NZ * Semi-final 1 will involve India if they qualify இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் Semi Final 1 NZ vs ENG 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) AUS *Semi-final 2 will involve Pakistan if they qualify பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் Semi Final 2 AUS vs PAK இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS If India qualify for the final it will be played at the Dubai இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AUS 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kane Williamson 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Spencer Johnson 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Jake Frase McGurk 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashid Khan 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kane Williamson 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Steve Smith2 points- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
அர்ச்சுனாவின் பிரச்சினைகளை கவனிக்க என்றே, தனி பொலிஸ் படை அமைக்க வேண்டும் போல் உள்ளது. 😂 அதற்கு முதல் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து… ஆள் “நோர்மல்” ஆன நிலையில் இருக்கின்றாரா உறுதிப் படுத்த வேண்டும். 🤣2 points- இடியப்பமும்.. முரல் மீன் சொதியும்.
2 pointsஎமது உணவு வகைகளான…. புட்டு, இடியப்பம், இட்டலி, தோசை போன்றவற்றை செய்வதற்கு நீண்ட தயாரிப்பு முறையும், நுண்ணியமான செய்முறையும் காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றேன். இடியப்பம், புட்டு தயாரிக்க மா… பதமாக அவித்து, அரித்து எடுத்து… கணக்கான சூடு அளவில் தண்ணீர் விட்டு குழைத்து எடுக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூடிக் குறைந்தாலே… பிழைத்து விடும். இட்டலி, தோசைக்கும்…. முதல் நாள் அரைத்து, புளிக்க வைத்து பதமாக சுட வேண்டும். இதனை பழகி வர… நீண்ட காலம் எடுக்கும். அதனால்… பிற நாட்டவர் எமது உணவுகளை தாம் தயாரிக்க அதிகம் அக்கறை காட்டுவதில்லை என நினைக்கின்றேன். எமது உணவுகள் தயாரிக்க…. இடியப்ப உரல், இடியப்ப தட்டு, புட்டுக்குழல், இட்டலி சட்டி என்று ஸ்பெஷல் உபகரணங்கள் தேவை. அதனை மினைக்கெட்டு வாங்கி சமைக்க எல்லோரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். பிற நாட்டவர்… எமது உணவு விடுதிகளில் போய் சாப்பிடப் போனாலும், அங்குள்ள அழுக்கான நிலைமையும், உணவு பரிமாறுபவரின் உடைகளும்… மற்றவர்களை தலை தெறிக்க ஓட வைக்கும். 😂2 points- ‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
ரம்புக்கு வயது போட்டுது.இல்லாவிட்டால் இவவையும் வடிவாக கையாண்டிருப்பார்.2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Bank transfer ஆ மணிஓடரா என்பதை தனிமடல் இடவும் சுவியின் சார்பாக @நந்தன் நேரடியாக பெற்றுக் கொள்வார். அக்காவுக்கும் கிருபனின் அதட்டலில் ரோசம் வந்துவிட்டது. வேறு யாராவது ரோசக்கண்டுகள்.2 points- வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!
சீமான் இப்படி செய்வார் என நான் நினைக்கவில்லை. அவரை பொறுத்தவரை தலைவர் ஒரு பொன்முட்டையிடும் வாத்து. அதை அவர் ஒரு போதும் வெட்டமாட்டார். குடிபோதையில் வார்த்தை தவறுதலாக மனதில் நினைப்பதை சொல்லக்கூடும். ஆனால் அதை “போலி” என சொல்லி கடந்து விடுவார். தலைவர் படத்துக்கு முன் ஒரு சிறுமியை தடுக்க தடுக்க பாலியல் வன்கொடுமை செய்ததை கூட “இருவர் மனமொத்து வைத்து கொண்ட, வீடியோ எடுத்த உறவு” என நாக்கூசாமல் முட்டு கொடுக்க அவருக்கு அமெரிக்காவிலும், அவுஸ்ரேலியாவிலும் ஆட்கள் இருக்கிறார்கள். ———— சீமான் அடுத்து கடக்க போகும் ரெட் லைன், பாஜக ஆதரவு நிலை. நேரடியாக அல்லது மறைமுகமாக. அதற்கான ஏற்பாடுதான், பெரியாரை தூசிப்பதை ஏற்காத தம்பிகள் வெளியேறுங்கள் என்ற நேற்றைய அறிவிப்பு. அநேகமாக மறைமுகமாக அல்லது நேரடியாக இதை 2026 க்குள் செய்வார் என நினைக்கிறேன். இதன் ஒரு அங்கமாக…. திருவள்ளுவருக்கு காவி அடிக்க முனைந்தது போல்….. தலைவருக்கும் காவியை போத்தி…. சைவத்திருமகன் பிரபாகரன் என முந்தள்ளுவார்….. புலத்து நாம்தற்குறிகளும், தலைவர் நேரடியாக கஸ்பருக்கு சொன்னதை….கேணல் கிட்டு பகிரங்கமாக மேடையில் சொன்னதை, பாலா அண்ணை அறிக்கையில் சொன்னதை எல்லாம்….வேணும் என்றே புறம் தள்ளி…. தலைவருக்கு காவி அடிப்பதில் முன்னுக்கு நிற்பார்கள்.2 points- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
அழைப்பிற்கு நன்றி சிறீ.🙏 குரங்கு மின்சாரம் செல்லும் கம்பியை தொட்டு அதன் உடல் மூலம் கடத்தும் இணைப்பு ஏற்பட்டால் மின்சாரம் பாய்ந்து(Arc discharge) இறக்க வாய்ப்பு அதிகம். மின் துண்டிப்பு(Trip) ஏற்பட்டால் மாற்று வழியில் மின்சாரம் வருமாறுதான் மின்சார வலையமைப்பு இருக்கும். ஓரிரு இடங்களில் குரங்கு சேட்டையால் மின் தடை ஏற்பட்டால் நகரங்களே இருளில் மூழ்கும்படியான மிக மோசமான மின்சார வலையப்பா(Electrical Transmission and Distribution Network) இலங்கையில் இருக்கு..? வாய்ப்பே இல்லை. எந்த நாட்டிலும் அப்படி வடிவமைக்க மாட்டார்கள்.2 points- வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!
அமெரிக்காவில் சீமானுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக ட்ரம்ப் இருக்கிறார்: ஒவ்வொரு முறையும் "இது தான் எல்லை, ரெட் லைன்" என்று எல்லோரும் நினைத்துக் கண்டித்துக் கொண்டிருக்கும் போது, "பண்ணிப்பார்!" என்ற தோரணையில் ட்ரம்ப் எல்லையைத் தாண்டி அடுத்த கோட்டுக்குப் போயிருப்பார். எல்லோரும் பொறுத்திருந்து பாருங்கள்: பொட்டம்மான் மீதான வசவு, இப்போது பெரியார் மீதான போலித்தகவல் அடிப்படையில் வசை என்று போய்க் கொண்டிருக்கும் சீமான், ஒரு கட்டத்தில் உரிய "தெளிவு"😎 பெட்டி/wire transfer வடிவிலோ அல்லது உயிர் அச்சுறுத்தல் வடிவிலோ கிடைக்கும் போது "பிரபாகரன் என்ன...?" என்ற வசவுடன் இன்னொரு கோட்டையும் தாண்டுவார். யாழ் கள சீமான் விசிறிகள் என்ன செய்வார்கள் அப்போது என்று காண்பதற்காகவே நான் இங்கே இருப்பேன்😂!2 points- காற்றாடி
2 pointsகாற்றாடி - அத்தியாயம் மூன்று ----------------------------------------------- இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வேலை என்று சொல்லப்படும் வீடுகளுக்குள் செய்யும் மின்சார அமைப்பு வேலையையும், பின்னேரம் மற்றும் இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் தியேட்டரில் ஒரு வேலையையும் செய்ய ஆரம்பித்திருந்தான். வயரிங் வேலை செய்வதற்கு அவன் வீட்டில் உடன்பட்டார்கள். ஆனால் தியேட்டரில் வேலை செய்வதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தனர். அவன் வயரிங் வேலைக்கு போவதற்கு காரணமே, அதன் காரணமாக தியேட்டரில் அவன் வேலைக்குப் போவதற்கு வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்ற ஒரே ஒன்றுக்காக மட்டுமே. மற்றபடி வயரிங் வேலையில் அவனுக்கு எந்த நாட்டமும் இல்லை. அதுவும் அந்தக் காங்கிரீட் சுவர்களுக்குள்ளால் வயர்களை கொண்டு செல்வதற்காக, அந்த சுவற்றை வெட்டுவது போன்ற ஒரு வேலையில் எவருக்குத் தான் நாட்டம் வரும். ஆனால், அவனை வேலையில் துணையாக கூட்டிப் போகும் அயலவர் சில வயதுகள் கூடியவர் என்றாலும், நல்ல ஒரு நண்பர் போன்றே பழகினார். வேலை முடிந்தவுடன் அன்றன்றே அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். அதில் ஒரு பகுதியை அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான். பல நாட்களிலும் வேலையும் இருக்கும். சினிமாவும் தியேட்டரும் அவனுக்கு ஒரு கனவு போல. அவன் பிறந்ததே சினிமாவிற்கு என்று அவனுக்குள் ஒரு உறுதியான எண்ணம் இருந்தது. பொதுவாக சமூகத்தில் எல்லோருக்கும் இருக்கும் அளவில்லாத நாயக நாயகிகள் மீதான கவர்ச்சி அவனிடம் மிகக்குறைவாகவே இருந்தது. சினிமா என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, அதில் வரும் விடயங்களும், அங்கே வரும் கதாபாத்திரங்களும், அவற்றை திரையில் கொண்டு வரும் நடிகர்களும் உண்மை என்றே பலரும் எண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் முடியாத, ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் சில நாயகத்தனங்களை திரையில் கண்டு, அதுவேதான் தாங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் போல. இந்த சமூகத்தில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் தீராத கவர்ச்சிக்கு இந்த மனப்பன்மையும் ஒரு அடிப்படைக் காரணம். அவனுக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகின்றது, பின்னர் அது எவ்வாறு திரையில் ஓடுகின்றது என்பதிலேயே ஆர்வம் இருந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் இருக்கும் படங்களை ஒரே அளவுகளில் வெட்டி, அவற்றை நீட்டாக ஒட்டி, ஒரு சுருளாகச் சுற்றி , நடுவே ஒரு ஈர்க்கை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து, இப்படித்தான் சினிமா உருவாகின்றது என்று அவனாகவே பரீட்சித்துப் பார்த்திருக்கின்றான். பின்னர் சிந்தனையில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு படம் அளவு இடைவெளியில் இரண்டு ஈர்க்குகளை வைத்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவனின் படச்சுருளை சுற்றிப் பார்த்தான். இது தான் சரியான தொழில்நுட்பம் என்று, அதையே இன்னும் முன்னேற்றி, பலருக்கும் அம்புலிமாமா படங்கள் காட்டியும் இருக்கின்றான். தியேட்டரில் வேலைக்கு போனவுடன், தினமும், தியேட்டரின் உள்பக்கத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையாக கூட்ட வேண்டும் என்றில்லை. முன்பக்கம், முகாமையாளர் அறை மற்றும் தியேட்டரின் உள்ளே இருக்கும் நடைபாதைகளை கூட்டவேண்டும். அத்துடன் படம் பார்த்து விட்டுப் போனவர்கள் போட்டுவிட்டுப் போகும் கஞ்சல், குப்பை, கழிவுகளையும் அள்ளி எடுத்து, வெளியில் தியேட்டரின் பின்னால் இருக்கும் குப்பையில் கொண்டு போய் கொட்டவேண்டும். அதை விட்டுவிட்டுப் போனோம், இதை விட்டுவிட்டுப் போனோம் என்று பின்னர் ஓடி வருபவர்களும் உண்டு. அவன் நேராக பின்னால் இருக்கும் அந்த சின்ன குப்பை மலையைக் காட்டுவான். அநேகமானவர்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடி எடுக்காமலேயே போய்விடுவார்கள். சிலர் அவனையும் சேர்ந்து தேடச் சொல்லியிருக்கின்றனர்.சிலருக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பொல்லாத கோபம் வந்து, சீறி விழுந்தும் இருக்கின்றனர். தங்களின் கதாநாயகர்களின் பின்னால், அவர்கள் உலவும் இடத்தின் பின்னால், இப்படி ஒரு குப்பை மலை இருப்பதை அவர்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்தவுடன், கலரிப் பகுதியில் உள்ள கதவில் அவன் போய் நிற்கவேண்டும். அங்கே வருபவர்களின் அனுமதிச்சீட்டுகளை கிழித்து, அவர்களை உள்ளே விடவேண்டும். கலரிப் பகுதியில் நீண்ட வாங்குகள் மட்டுமே போடப்படிருந்தது. தனிதனியான இருக்கைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்ற இரு பக்கங்களும் கிடையாது. அதனால் தான் அது மிகக்குறைந்த விலையில் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. திரைக்கு அருகில் இந்தப் பகுதி இருக்கும். கழுத்தை நிமிர்த்தியே படம் பார்க்கவேண்டும். இந்தப் பகுதியின் பின்னால் இரண்டாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, ரிசர்வ் என்று மூன்று பகுதிகள் அந்த தியேட்டரில் இருந்தன. மேலே பால்கனி என்று இன்னொரு பிரிவும் இருந்தது. அதற்கான அனுமதி எல்லாவற்றையும் விட மிக அதிகம். பால்கனிக்கு அருகிலேயே, ஒரு தனி அறையில், படம் ஓடும் இயந்திரங்கள் இருந்தன. ஒரு நாள் கலரியிலிருந்து அந்த அறைக்கு முன்னேறுவதே அவனின் இலட்சியமாக இருந்தது. (தொடரும்...................)2 points- சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - சோம.அழகு
'திண்ணை' இணைய வார இதழில் வெளிவந்த மகள் சோம.அழகுவின் கட்டுரை : சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -- சோம. அழகு அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் விழுங்கிவிட்ட ஒரு செயற்கையான மேட்டுக்குடித் தமிழ் அது. குழந்தைகளின் தமிழைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கேனும் எப்போதேனும் அவர்களிடமிருந்து எட்டிப் பார்க்கும் தமிழில் ர, ட போன்ற எழுத்துகள் அவற்றை ஒத்த ஆங்கில ஒலியைப் பெற்றுவிட்டன. [ல, ள, ழ], [ர, ற] மற்றும் [ந, ன, ண] ஆகியவற்றினுள் வித்தியாசமே இல்லை. நம் ஊரிலேயே இல்லையே என்கிறீர்களா? ஒவ்வொரு மாகாணத்திலும் தமிழ்ப் பற்றாளர்கள் சேர்ந்து இலவசமாகத் தமிழ்ப்பள்ளி நடத்துகிறார்கள். நான் இருக்கும் இடத்திலும் ஆறு நிலைகளில் தமிழ் வகுப்பு நடைபெறுகிறது. தாம் சேவை செய்வதாகவெல்லாம் இவர்கள் எண்ணவில்லை. அதையும் தாண்டி அடுத்த தலைமுறைக்கு நம் மொழியை எப்படியேனும் கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டும் என்ற பதட்டம் கலந்த அதீத பொறுப்புணர்வைத்தான் காண்கிறேன். தன்னார்வலர்களின் முயற்சியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் வாரம் ஒரு முறை வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக பத்து மாணவர்கள். சிங்கப்பூரில் இரண்டாம் மொழியாகத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள்தாம் பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே நமது ஒன்றாம் இரண்டாம் வகுப்புத் தமிழ் பாட நூல்கள் இவர்களது ஆறாம் நிலை பாட நூலுக்கு ஒப்பாக இருந்தது. மிகவும் எளிமையான பாடத்திட்டம். நான் அங்கு ஆசிரியராக இணைந்த முதல் நாளே ஆறாம் நிலையில் அமர்த்தப்பட்டேன். பத்து முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்கள். அந்த வகுப்பின் பொறுப்பாசிரியர் பிள்ளைகளின் தமிழ் அறிமுகத்தைப் பற்றி என்னிடம் எடுத்துக் கூற வந்தவர் வகுப்பு முடிந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி முதலில் அவர்களைத் தாம் கூறும் சில தமிழ்ச் சொற்களை எழுதுமாறு பணித்தார்கள். நாங்கள் இருவரும் ஒவ்வொருவரின் எழுத்துக் கோர்வையையும் சரி பார்த்துத் திருத்தம் கூறிக் கொண்டிருந்தோம். ‘மான்புளு’ என்ற புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்திருந்தான் ஒருவன். தென்தரவு, னீச்சள், இடவாளை, சுறியன், மதாம், காட்டயம், மதியவற், மன்தர பேட்டி என எல்லாமே ஏதோ எதிரி நாட்டுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக ரகசியமாக எழுதப்பட்ட சங்கேத மொழியைப் போல் இருந்தன. அதன் பிறகு வாசிப்புப் பயிற்சி. ஒவ்வொருவரையும் வரிசையாக ஒவ்வொரு வரியாக வாசிக்கச் சொன்னோம். முதலாமவன் வாசித்துக் கொண்டிருக்கையில் பிறர் அனைவரும் தம்முடைய முறையின் போது வரப் போகும் தமக்கான வரியை வாசித்துப் பழகிக் கொண்டிருந்தார்களே தவிர வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த வரியையோ வாசிப்பவனையோ சிறிதும் சட்டை செய்யவில்லை. அதிலும் ஒருவள் பென்சில் கொண்டு ஏதோ அந்தப் பத்தியின் அருகில் எழுதிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல எட்டிப் பார்க்க புன்னகையுடன் அதை மறைக்க முற்பட்டாள். ஆனால் பார்த்துவிட்டேன். Antha nari kuyilidam sendru…. என எழுதியிருந்ததைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்து “என்னடா பண்ணியிருக்கீங்க?” என சிரித்தவாறே கேட்டேன். “This way I could read easily. Otherwise am too slow” என்றாள். அங்குள்ள நிலைமையை விளக்க முனைந்த பொறுப்பாசிரியரின் வேலையை வெகுவாகக் குறைத்து விட்டிருந்தனர் அரும்பெரும் செல்வங்கள். ஒரு நாள் ‘தொட்டம்’ என்ற சொல்லைத் திருத்தும் பொருட்டு “ஒற்றைக் கொம்பு இடக்கூடாது. இரட்டைக் கொம்பு போடுங்க” என்றதும் அம்மாணவன் புரியாமல் விழிக்க இன்னொருவன் உதவினான் – “Hey! That telephone letter!”. பிறிதொரு நாள் விளையாட்டாகப் படிக்க வைக்கும் விதமாக அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து நான் தமிழ்ச் சொற்களைக் கூற யார் முதலில் சரியான பொருளைத் தருகிறார்கள் என போட்டி வைத்தோம். ‘சிறப்பு’ என்ற சொல்லுக்கு ஆர்வம் பொங்க Red என பதில் தந்து பூரிப்படைய வைத்தான் ஒருவன். ‘அரிது’ ‘knowledge’ எனப் புதிய பொருள் பெற்றதில் லேசாகத் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது எனக்கு. ‘இரும்பு’ என அடுத்த வார்த்தையைக் கூறிவிட்டு நான் தண்ணியை எடுத்துக் குடித்துக் கொண்டிருக்கும் போது Cough என்று பதில் மொழிந்தவனைப் பார்த்து என் கண்கள் அதிர்ச்சியில் விரிய அவனோ எனக்குப் புரியவில்லை என நினைத்துத் தன் முழங்கையைக் கொண்டு வாயை மூடி இருமி வேறு காண்பித்துச் செயல்முறை விளக்கம் தந்து புரையேற வைத்தான். துணிவு – Dress, பொறுமை – Jealousy… பொறுமை இழந்து இப்போது நான் ஆங்கிலச் சொற்களுக்கு மாறினேன். அப்போதும் Forest – விவசாயி, River – நிதி, Competition – பேட்டி என இப்பட்டியலும் பெரிசாகிக் கொண்டே செல்ல எல்லாச் சிறார்களுக்கும் சேர்ந்தாற் போல் திருஷ்டி கழிக்கும் பொருட்டு என் கைகளால் நெட்டி முறித்து, “நா பங்காரம்” எனக் கொடூரமாகத் தெலுங்கு பேசத் துவங்கிருந்தேன். இந்தத் தமிழ்ப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் குழந்தைகள் விருப்பத்துடனும் மகிழ்ச்சியாகவும் படிக்க வேண்டும் என்பதற்காகத் தேர்வு முறை வேண்டாம் என நல்லதொரு வரவேற்கத்தக்க முடிவைப் பின்பற்றி வந்தார். தமிழ் வகுப்புகளில் கட்டாயம் தமிழில்தான் கதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பிள்ளைகள் இயல்பாக ஆங்கிலத்தில்தான் உரையாடத் துவங்கினர் ஒவ்வொரு முறையும். மீண்டும் மீண்டும் தமிழில் பேச நினைவூட்டினாலும் ஒன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது குறித்து பொறுப்பாசிரியருடன் இன்னும் அளவளாவிய போது பள்ளிகளில் முழுக்க ஆங்கிலம் என்பதால் வீடுகளிலும் அதுவே பெற்றோருடனான புழக்க மொழியாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும் பதிமூன்று பதினான்கு வயதுகளில் பாடத்திட்டத்தின் சுமை அதிகரித்து விடுவதால் விளையாட்டு, ஆடல், இசை… என நீளும் extra curricular activities பட்டியலில் இருந்து முதலில் அடி வாங்குவது தமிழ் வகுப்பு என்றும் ஆதங்கத்துடன் கூறினார். மேலும் இங்குள்ள பெற்றோர்கள் அனைவரின் ஒருமித்த குரலில் ஒலிக்கும் ஒரே வாக்கியம் – என் பிள்ளைக்குத் தமிழில் பேசத் தெரிஞ்சா, ஓரளவு எழுதப் படிக்கத் தெரிஞ்சாப் போதும். இதையே பெரிய விஷயமாகக் கருதி ஒரு தேக்க நிலையை எட்டி அங்கேயே நின்றுவிட்டார்கள் எனத் தோன்றிற்று. தமிழ் என்னும் தேன்கடலில் நமது இரு கைகளாலும் அள்ளிப் பருகினாலே இந்த வாழ்நாளில் எல்லா இலக்கியங்களையும் சுவைக்க இயலாது. இவர்களோ ஒரு துளியை விரல் நுனியில் தொட்டு அடிநாக்கில் இட்டுப் போதுமென்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். நம் ஊர்களில் தம் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழியாக இந்தியைத் தேர்வு செய்து தமிழைப் புறக்கணிக்கும் பெற்றோர்களுடன் இவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொஞ்சம் ஆறுதலடைந்து கொள்ளலாம். தொன்மையான தமிழ் மொழியில் இருக்கும் சங்க இலக்கியங்களைப் போல் வேறெந்த மொழியிலாவது காட்ட இயலுமா? நான் கேள்விப்பட்டவரை முதல் வகுப்பிலேயே திருக்குறள், ஆத்திசூடி மேல்நிலை வகுப்புகளில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி,…. என மாபெரும் காப்பியங்களைக் கற்றுக் கொடுக்க முடிகிற ஒரே மொழி தமிழ். உலக அரங்கில் ஈடு இணையற்றதாக விளங்கும் நமது பதினெண்கீழ்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐங்குறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள்…… என அனைத்தும் இவர்களைக் கழிவிரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்விலக்கியங்களின் இருப்பைப் பற்றியே தெரியாமல் தாம் வாழ்க்கையில் எத்துணை நற்பேற்றினை இழந்து கொண்டிருக்கிறோம் என்று கூட உணர வழியில்லாமல் வளரும் இக்குழந்தைகளின் மீது பரிதாபமே மேலிடுகிறது. அதிகபட்சமாக தொண்ணூறுகள் வரை கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியர்கள் மில்டன், ஆஸ்கர் வைல்ட்,…. என ஆங்கிலக் கவிஞர்களைக் கரைத்துக் குடித்தவர்களாயிருப்பர். வகுப்புகளுக்கு வீசின கையும் வெறுங்கையுமாக வந்து அக்கவிதைகளை முறையான ஏற்ற இறக்கத்துடன் கூறி பொருளுடன் விளக்குவதைக் கேட்க அவ்வளவு ரசனையாக இருக்கும் என அப்பா கூறக் கேட்டிருக்கிறேன். தற்போது (இந்தியாவிலும்) ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரையும் கீட்ஸையும் படிக்காமலேயே ஒருவன் முனைவர் பட்டம் பெற்றுவிட முடிகிற அளவிற்குப் பாடதிட்டத்தை மேம்படுத்தி(!?) வைத்திருக்கிறார்கள். பெரும்பாலானோரால் உயர்வாகக் கருதப்படும் ஆங்கிலத்திற்கே இந்த கதி என்றால்… ? எல்லாமே வணிகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுவதுதான் முக்கிய காரணம். இந்த இடத்தில் Dead Poets Society திரைப்படத்தில் வரும் அருமையான வரிகள் நினைவிற்கு வருகின்றன. We don’t read and write poetry because it’s cute. We read and write poetry because we are members of the human race. And the human race is filled with passion. And medicine, law, business, engineering, these are noble pursuits and necessary to sustain life. But poetry, beauty, romance, love, these are what we stay alive for. மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற ஊடகம் மட்டுமல்ல – மாபெரும் வரலாற்றையும் செழுமையும் வளமையும் நிறைந்த ஒரு பண்பாட்டையும் உள்ளடக்கியது. ஒரு குழந்தைக்கு நாம் தாய்மொழியை மறுக்கும்போது, அதுவும் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியை மறுக்கும் போது ஒரு நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் வலுவான அடையாளத்தையும் மறுத்துக் கொண்டே வருகிறோம். போர்க்காலச் சூழலில் குடும்பம் சிதறடிக்கப்பட்டு வதைமுகாமில் அகதியாக அடைபட்டுத்தான் அடையாளத்தை இழக்க வேண்டும் என்பதில்லை. தாய்மொழியைச் சரியாகக் கற்காமல் கூட அடையாளத்தை இழக்கலாம். **************************** பள்ளி துவங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஆண்டு மலர் கொண்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சில திருக்குறள்களைப் பொருளோடு அச்சிட்டுக் கொடுக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அனைத்து இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தும் பொருட்டு உவமை, உருவகம், அளபெடை, அணி உள்ளிட்ட கவிதைக் கூறுகள் தென்படும் ரசனையான சங்ககாலப் பாடல்கள் சிலவற்றை ஒவ்வொரு நூலிலும் இருந்து திரட்டி ஒன்றாகத் தொகுக்கலாம் என்ற எனது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்தப் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டது. அகமகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். அப்பாவிடம் உதவி பெறும் துணிச்சல்தான், வேறென்ன? மனம் காலச்சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழற்றியது. முதலில் எனக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் நினைவுகூரத் துவங்கினேன். இவையும் அப்பாவிடம் கற்றவைதாம். கம்பராமாயணம் – “கண்டெனன் கற்பினுக் கணியைக் கண்களால்….” – அனுமன் சீதையைக் கண்டுவிட்டதாக இராமனிடம் தெரிவிக்கும் இடம். கம்பர் இப்பாடல் இயற்றிய விதத்தை வெகுவாகச் சிலாகிப்பார்கள் அப்பா. கதாகலட்சேபம் மற்றும் வில்லுப்பாட்டுக் கச்சேரிகளில் “கண்டேன் சீதையை” என்று கேட்டுப் பழக்கமாகியிருந்ததால் இதில் என்ன பெரிய வேறுபாடு என்று அப்பா விளக்கித்தான் புரிந்தது. “சீதையைக் கண்டேன்” எனக் கூறும்போது இரு சொற்களுக்கும் இடையில் “ஐயோ! சீதைக்கு எதுவும் நேர்ந்துவிட்டதோ” எனச் சட்டென இதயத்துடிப்பு அதிகரிக்குமாம். அதனால்தான் முக்கியச் சொல் முதலில் வருகிறது. ஆனால் வில்லுப்பாட்டில் கூட கண்ட செய்தி மட்டும்தான் இருக்கிறது. ‘அவள் எப்படி இருக்கிறாளோ?’ என்ற பதைபதைப்பை உணர வழியில்லாமல் அந்த ஒரு வரியிலேயே அவள் நலமுடன் இருக்கும் செய்தியையும் சேர்த்து வெளிப்படுத்தியிருப்பார் கம்பர். இப்படியெல்லாம் சொல்லித் தந்தால் இலக்கியம் ஏன் ரசிக்காது? கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியிருந்தாலும் அப்பாவினுள் உறைந்தே இருக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பேராசிரியரின் தரிசனமும் எங்களுக்கு அவ்வப்போது கிட்டும். அன்றிலிருந்து அப்பாவிடம் “95 கணக்கில்” என்றுதான் மதிப்பெண் கூறுவேன். இது போலவே “….புதல்வரால் பொலிந்தான் நுந்தை” என்னும் கம்பராமாயணப் பாடலில் இன்றும் காணப்படும் பேச்சுவழக்கு, “குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோடு….” (சிலப்பதிகாரம்), “கருங்கொடிப் புருவ மேறா கயனொடுங் கண்ணு மாடா….” (சீவகசிந்தாமணி), “யாண்டு பல வாக…” என்னும் பிசிராந்தையார் பாடல், “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்…” என்ற திருமூலரின் வாக்கு, “நட்ட கல்லைத் தெய்வமென்று….” என்னும் சிவவாக்கியார் பாடல், அனிச்ச மலர் இடம்பெரும் திருக்குறள்கள், தும்மல் series என நாங்கள் பெயர் கொடுத்த திருக்குறள்கள் உள்ளிட்ட பல நினைவிற்கு வந்தன. இவையெதுவுமே முறையாக உட்கார்ந்து அப்பாவிடம் கற்றதல்ல. எப்போதேனும் எங்கள் பேசுபொருள் தொடர்பாக அப்பாவிற்கு ஞாபகம் வருவதை எடுத்துக் கூறுவார்கள். உதாரணமாக அம்மா மோர்க்குழம்பு செய்த ஒரு நாளில்தான் “முளிதயிர் பிசைந்த காந்தண் மென்விரல்….” என்ற குறுந்தொகைப் பாடல் அறியக் கிடைத்தது. இவ்வாறாக வயிற்றுக்கும் செவிக்கும் அன்று தீம்புளிப் பாகர் கிட்டியது. மகிழுந்தில் செல்லும் போதும் மிகச் சாதாரண உரையாடல்களின் போதும் அப்பா புகட்டியவைதாம் அனைத்தும். உட்கார்ந்து மெனக்கிடுதலைக் காட்டிலும் இப்படிப் போகிற போக்கில் சான்றோனாக்கும் தம் கடமையைச் செவ்வனே செய்து வருகிறார்கள் அப்பா. கற்றலுக்கு அதுதான் சிறந்த வழி என்பதே அப்பாவின் கருத்து. அப்பாவிற்கும் எனக்கும் இருக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பில் வினையூக்கியாக முக்கியப் பங்காற்றியது எங்கள் தாய்மொழி. இப்பிள்ளைகளுக்கு? மொழிக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்பது பேதைகளுக்கான வாதம். எனில் அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் பெற்றோருடன் இணக்கமாக இருந்திருப்பார்களே! எனவே தயாராகும் ஆண்டு மலரில் வரப்போகும் பாடல்களைச் சில பெற்றோரேனும் ரசித்து வாசித்துப் பிள்ளைகளுக்கும் சொல்லித் தருவார்கள் என்ற அவா வேகமாக என்னை முடுக்கியது. அவர்களில் சில குழந்தைகள் அடுத்த கட்டமாக இன்னும் தேடித்தேடி வாசிக்காமாட்டார்களா என்ற நைப்பாசையும் என்னை ஆட்கொண்டது. இவையனைத்தும் நடந்தே விட்டால்…? மனம் கற்பனைத் தேரில் ஏறியது. நாளை தமிழ் மொழியின் சிறப்பும், தமிழர்களின் நாகரிகமும் உலகின் முன்னோடியாக ஓங்கியுயர்ந்து நிற்கும் போது இக்குழந்தைகள் “ஆதி மொழிக்குச் சொந்தக்காரன் நான். எனது பாதங்கள் இங்கே இருந்தாலும் எனது வேர்கள் கீழடியிலும் ஆதிச்சநல்லூரிலும் ஊன்றப்பட்டவை” எனப் பெருமையாக, மிடுக்காகக் கூறும் நாள் வராமலா போய்விடும்? தமிழ் வகுப்புகளும் ஆலோசனைக் கூட்டமும் முடிந்தன. மிகுந்த நம்பிக்கையுடன் வெளியே வந்தேன். எனது வலதுபுறத்தில் இருந்து ஒரு நடுத்தர வயதுக்காரரின் குரல், “So? How was your Tamil class today?”. தேர்க்கால் ஒடிந்து நான் தொப்பென்று கீழே விழுந்தாற்போல இருந்தது. திரும்பிப் பார்த்து அக்குரலுக்கு முகம் கொடுக்க விரும்பாமல் விடுவிடுவென வேகமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். “இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!” – பாரதி சத்தமாக என் காதுகளில் ஒலிக்கத் துவங்கி “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்னும் வரிகளில் முடித்தான். தமிழுக்குக் கொண்டு வந்து சேர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இருப்பதைக் கொண்டு சென்று போகும் இடத்தின் நீரோட்டத்தில் கலந்து கரைத்து மொத்தமாகத் தொலைத்தல் தொழிலைச் செய்யாமலிருப்பதே தமிழுக்கு ஆற்றும் ஆகப் பெரிய நன்றி. மெல்லத் தமிழினிச் சாவதையும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்குவதையும் தடுக்கும் இத்தமிழ்ப் பள்ளிகளின் அரும்பணியும் முயற்சியும் நிச்சயம் பாராட்டுக்குரியன.1 point- தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
தப்பு தனிகாட்டு ராஜா ..இது உயர் பாதுகாப்பு வலயத்தில் கட்டப்பட்டது ....மக்களுக்கு அப்பொழுது அருகிலும் செல்ல முடியாத நிலை ..காணிகள் விடுவிக்க பின்பு தான் அங்கு விகாரை கட்டியது தெரிய வந்தது... முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் அடிகல் நாட்டினவர்......மக்கள் எப்பொழுது சென்று பார்க்க முடிந்ததோ அப்பொழுது தொடக்கம் போராட தொடங்கி விட்டார்கள் ...1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், SA அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shubman Gill 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Arshdeep Singh 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Kane Williamson 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? NZ 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Arshdeep Singh 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Hardik Pandya 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் மோதும் அணிகளின் வீரர்களின் விபரங்கள் - புதுப்பித்து குழு A: இந்தியா (IND) BATTERS: Rohit Sharma (c), Shubman Gill (vc), Shreyas Iyer, Virat Kohli, Rishabh Pant, KL Rahul† ALLROUNDERS: Hardik Pandya, Washington Sundar, Ravindra Jadeja, Axar Patel BOWLERS: Arshdeep Singh, Mohammed Shami, Kuldeep Yadav, Varun Chakravarthy பாகிஸ்தான் (PAK) BATTERS: Mohammad Rizwan† (c), Babar Azam, Fakhar Zaman, Saud Shakeel, Tayyab Tahir, Usman Khan ALLROUNDERS: Salman Agha, Faheem Ashraf, Kamran Ghulam, Khushdil Shah BOWLERS: Abrar Ahmed, Haris Rauf, Mohammad Hasnain, Naseem Shah, Shaheen Shah Afridi நியூஸிலாந்து (NZ) BATTERS: Tom Latham†, Kane Williamson, Will Young, Devon Conway ALLROUNDERS: Mitchell Santner(c), Michael Bracewell, Mark Chapman, Daryl Mitchell, Nathan Smith, Glenn Phillips, Rachin Ravindra, BOWLERS: Lockie Ferguson, Matt Henry, Ben Sears, Will O’Rourke பங்களாதேஷ் (BAN) BATTERS: Najmul Hossain Shanto (c), Jaker Ali, Tanzid Hasan, Towhid Hridoy, Parvez Hossain Emon†, Mushfiqur Rahim † ALLROUNDERS: Mehidy Hasan Miraz, Mahmudullah, Soumya Sarkar, Nasum Ahmed, Rishad Hossain, Tanzim Hasan Sakib BOWLERS: Taskin Ahmed, Mustafizur Rahman, Nahid Rana குழு B: அவுஸ்திரேலியா (AUS) BATTERS: Travis Head, Josh Inglis, Alex Carey †, Marnus Labuschagne, Matthew Short, Steven Smith (c), Jake Fraser-McGurk ALLROUNDERS: Glenn Maxwell, Aaron Hardie, Sean Abbott BOWLERS: Nathan Ellis, Adam Zampa, Ben Dwarshuis, Spencer Johnson, Tanveer Sangha தென்னாபிரிக்கா (SA) BATTERS: Temba Bavuma (c), Heinrich Klaasen, David Miller, Ryan Rickelton, Tristan Stubbs, Tony de Zorzi, Rassie van der Dussen ALLROUNDERS: Aiden Markram, Marco Jansen, Wiaan Mulder, Corbin Bosch BOWLERS: Keshav Maharaj, Kagiso Rabada, Tabraiz Shamsi, Lungi Ngidi இங்கிலாந்து (ENG) BATTERS: Jos Buttler (c), Harry Brook, Ben Duckett, Phil Salt, Joe Root, Jamie Smith † ALLROUNDERS: Liam Livingstone, Jacob Bethell, Brydon Carse, Jamie Overton BOWLERS: Jofra Archer, Adil Rashid, Mark Wood, Gus Atkinson, Saqib Mahmood ஆப்கானிஸ்தான் (AFG) BATTERS: Hashmatullah Shahidi(c), Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Ikram Alikhil †, Sediqullah Atal ALLROUNDERS: Rahmat Shah (vc), Rashid Khan, Azmatullah Omarzai, Gulbadin Naib, Mohammad Nabi BOWLERS: Fareed Ahmad, Fazalhaq Farooqi, Noor Ahmad, Fareed Ahmad ஓம். இணைக்கலாம். நான் இன்னமும் பதில்களைத் தரவேற்றம் செய்யவில்லை! புதுப்பித்த வீரர்களின் பட்டியல் இணைத்துள்ளேன். சரி பார்த்துக்கொள்ளுங்கள்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣............. கோஷான், என்னுடையது 'பாக்கிஸ்தான் - இந்தியா' டெம்பிளேட். 'ஆஸ்திரேலியா' டெம்பிளேட் மற்றும் இன்னும் சில டெம்பிளேட்டுகளும் ஓட்டத்தில் இருக்கின்றன. நேற்றைய செய்தியின் பின், களத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா குரூப்பின் நம்பிக்கை கொஞ்சம் இறங்கி விட்டது போல............. பாக்கிஸ்தான் - இந்தியா டெம்பிளேட் இப்ப முன்னுக்கு வரும், பாருங்கள்....................😜.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியக் குழுவை நிச்சயப் படுத்தும் நாள் .. பிப்ரவரி 12 ..என்றும்...பும்ரா எப்படியும் அணியில் இடம்பிடிப்பார் என்று செய்திகளில் படித்தேன்..இதனைவிட பும்ராமீது தனி விருப்பமும் கூட...எல்லாம் ஒரு நப்பாசைதானே...நன்றி உங்கள் உதவிக்கு என்னா சார்..ஒருதொடரில் முதல் முதல் விளையாடுபவருக்கே..கவுரவமான ஒருவரால் தொப்பி போட்டு...ஏனயவர்கள் கட்டியணைத்து வாழ்த்தி வரவேற்கும்போது...நமக்கு இருக்கக்கூடாதா...🤣1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவழமை போல் உங்கள் எழுத்துக்களும் கதை சொல்லும் விதமும் மிகப்பிரமாதம்.👍🏼1 point- தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
இன்றைய போராட்டத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்துள்ளது.(சிறிதரன் தரப்பு)1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாழும்வரை போராடு ....... 08. என்ன அப்பா இப்படி சொல்லி விட்டீர்கள். மற்ற லொறியை சந்துரு எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். அந்த வண்டியிலும் பல லட்ஷம் பெறுமதியான பொருட்கள் எல்லாம் இருக்கு. அவையெல்லாம் என்னவாயிற்றோ தெரியவில்லையே. --- இந்தா பார் இராகவ். முதலில் எரிந்த வண்டியின் சாரதியும் கிளீனரும் என்ன ஆனார்கள் என்று பார். அவனை வெட்டினது, அடித்தது என்று இவன் சொல்கிறான். முதலில் அவர்களின் நிலமையைக் கவனிக்க வேண்டும். மேலும் இந்த நேரத்தில் எங்கட ஆள் என்று சந்துரு அங்கிருக்கிறான். அவனது நிலைமையையும் நீ யோசித்துப் பார்க்க வேண்டும். உன்னுடைய லொறி மட்டுமல்ல, எங்களுடையதும் எம்போன்ற பல கடைக்காரர்களின் நகை, நட்டு, பணம் எல்லாம் அவன் பொறுப்பில் இருக்கு தெரியுமா .... --- உங்களுக்கு என்ன தெரியும் அப்பா, நாங்கள் படிப்பை விட்ட காலத்தில் இருந்து நான் தனியாக உழைத்து நகரில் சொந்தமாய் ஒரு கடையும், எனக்கென்று ஒரு வீடு, மற்றும் இரண்டு புத்தம்புது லொறிகளும் சம்பாதித்திருக்கிறேன் என்று அவனுக்கு கொஞ்சம் பொறாமையுண்டு என்று எனக்குத் தெரியுமப்பா..... அவனுக்கு இன்னும் அந்தப் பழையவீடு ஒரு வேன் அதுவும் மாணிக்கம் மாமா வாங்கிக் கொடுத்தது . வேறு என்ன இருக்கு அவனிடம். இப்ப என்னுடைய லொறியொடு அவ்வளவு பொருட்களையும் தான் எடுத்துக் கொண்டு விடலாம் என்று திட்டம் போட்டிருப்பான். --- பொத்தடா வாய்......என்னடா சொல்லுறாய். கோத்தை மாதிரி அறிவு கெட்ட கதை கதையாதை சொல்லிப் போட்டன். இதற்கு மேலும் ஒரு வார்த்தை தப்பாகப் பேசினால் பல்லுடைத்துப் போடுவன். நீ இங்க ஏ. சி வீட்டுக்குள் இருந்து கொண்டு விண்ணானம் கதைக்கிறாய். அவன் அங்கு கலவரம் நடக்கும் இடத்தில் உயிரைப் பணயம் வைத்து நிக்கிறான். அவனிடம் என்ன இருக்கென்று கேட்கிறியா நீதி நேர்மை, யாரையும் ஏமாற்றாத குணம் இருக்கு. உன்னிடம் இருக்கா.....செய்யிறது முழுக்க கள்ளக் கடத்தலும் கஞ்சா விக்கிறதும் பெயருக்கு ஜவுளி வியாபாரம் செய்கிறன் என்று பினாத்தல் வேறு. அப்போது வீட்டுத் தொலைபேசி அழைக்கிறது. இராகவன் சென்று எடுக்கிறான். எதிர் முனையில் மாணிக்கம் பேசுகிறார். தம்பி இராகவனோ , அப்பாவைக் கொஞ்சம் அழைக்கிறீர்களா. சரி ஐயா என்று சொல்லிவிட்டு போனைத் தந்தையிடம் தரும்போது " உங்கள் நண்பர் மாணிக்கம் பேசுகிறார். சந்துருவைப் பற்றி நல்லா "டோஸ்" தருவார் வாங்குங்கோ என்று சொல்லிக் கொடுக்கிறான். --- தாமோதரம் அதை வாங்கி ஹலோ மாணிக்கம் இங்கு நான் பேசுகிறேன், என்ன விஷயம். --- செய்திகள் பார்த்தனீங்களோ, அனுராதபுரத்தில் ஒரே கலவரமாம். தம்பி சந்துருவும் நேற்றுப் போனவர்.ஒன்றும் தெரியேல்ல. உங்களுக்கு ஏதாவது செய்திகள் தெரியுமோ என்றுதான் எடுத்தனான். --- நீங்கள் பயப்படாதையுங்கோ. அவன் பத்திரமாய் இருக்கிறான் என்றுதான் நினைக்கிறேன். எங்களுடைய ஒரு லொறியும் சாமான்களுடன் அவன் பொறுப்பில்தான் இப்போது இருக்குது. நீங்கள் நிறையப் பொருட்கள் குடுத்தனுப்பினனீங்களோ என்று கேட்க...... --- இல்லையில்லை, அவை போனாலும்கூட பிறகு சம்பாரிச்சுக் கொள்ளலாம், பொடியனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. அதுதான் விசாரிச்சனான். நீங்களும் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, எனக்குத் தகவல் ஏதாவது தெரிந்தாலும் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிப் போனை வைக்கிறார். --- பின் இராகவனிடம் திரும்பி பார்த்தியா அவர் அவன்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். அதில் கொஞ்சமாவது அவன் நண்பன் உன்னிடம் இருக்க வேண்டாமா. --- ஓமப்பா நானும் எதோ கவலையில் அப்படிப் பேசிப்போட்டேன். அதற்காக மிகவும் மனம் வருந்துகிறேன் அப்பா. இப்பவே நானும் அங்கு சென்று நிலமைகளைப் பார்க்கின்றேன் என்று புறப்பட எத்தனிக்க .... --- சரி.....சரி..... எதுக்கும்கடையில் இருந்து உன்னுடன் இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போ என்று சொல்கிறார். --- மறுபடியும் ஒரு போன் வருகின்றது. இம்முறை ஸ்ரீகாந்த்திடம் இருந்து இராகவனுக்கு.......என்னடா சொல்லு.... --- அதெடா இராகவ் எங்களுடைய சாமான்கள் கொண்டுவந்த போட் இரண்டும் நடுக்கடலில் அடிபட்டுப் போச்சுதடா....கடற்படையைக் கண்டதும் பொருட்களை கடலில் தள்ளிப் போட்டாங்கள். இப்ப நீ ஒரு இடமும் திரிய வேண்டாம், யாராவது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கவும். உங்கள் வீட்டிலும் நிக்காதே, நான் எல்லாவற்றையும் சரி பண்ணிப்போட்டு மறுபடி உன்னைத் தொடர்பு கொள்ளும்வரை எனது வீட்டுக்கும் போன் எடுக்காதே. மிகக் கவனமாயிரு. --- டே ....என்னுடைய ஒரு லொறியும் உன்னுடைய இரண்டு லொறிகளும் கலவரத்தில் எரிச்சுப் போட்டாங்களடா....மற்ற லொறி இப்பொழுது சந்துரு வசம் இருக்கு, அதுவும் என்னாகும் என்றே தெரியவில்லை. --- டே இராகவ்......போனதைப் பற்றியெல்லாம் இப்ப யோசிக்கிற நேரமில்லை. சந்துரு சுழியன் எப்படியும் நல்ல செய்தியுடன்தான் வருவான். அதிகம் கவலைப்படாதே என்று சொல்லிப் போனை வைத்து விட்டான்...........! வாருங்கள் போராடலாம் ........... 🦔 🦔 🦔 🦔 🦔 🦔 🦔 🦔 .1 point- காற்றாடி
1 pointஅழகான படத்தை AI மூலம் உருவாக்கியிருக்கிறீர்கள். மழைத் துளிகள் உடலில் விழுந்து தெறிக்கும் அழகும் அதன் மேல் செலுத்தப்பட்ட ஒளியும் அருமை. சித்திரத்துக்கு அருகில்தான் அமர்ந்திருக்கிறீர்கள். தொடருங்கள்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- காற்றாடி
1 pointபொறுப்பான பிள்ளையாக இருந்திருக்கின்றார் புங்கை அண்ணா. என்னுடைய நான்கு நண்பர்களின் பெற்றோர்கள் நைஜீரியாவில் ஆசிரியர்கள், எஞ்சினியர்களாக வேலை செய்தவர்கள். நண்பர்களும் அங்குதான் பிறந்தவர்கள். அவர்களின் தந்தைமார்கள் எல்லோருமே வீட்டுப் பொறுப்பால் நைஜீரியாவுக்கு வேலைக்குப் போனவர்கள்.1 point- காற்றாடி
1 pointஒரு விதத்தில் உண்மை தான். அர்த்தம் என்பது வாசிப்பவர் விளங்கிக் கொள்ளுறது தான், ஆனா, அதுக்குரிய சொற்களை எல்லாராலும் சொல்லேலாது.1 point- இடியப்பமும்.. முரல் மீன் சொதியும்.
ஏனெண்டால் நம்ம மிளகாய்த்தூளின்ர மகிமை அப்பிடி....😎 எதுக்கெடுத்தாலும் செத்தல் மிளகாய்,பச்சை மிளகாய்..... கெட்ட கேட்டுக்கு போத்தில் மிளகாய்த்தூள் வேற.....நம்மளாலேயே மிளகாய்த்தூள் கொடுமை தாங்கேலாமல் கிடக்கு....😔 வெள்ளைக்காரன் எங்கட உறைப்பு கறியளிலை வாய் வைப்பானே?😂1 point- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம் Editorial / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 09:39 யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலம்புரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எம்.பி.க்கும் இரண்டு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அர்ச்சுனா-எம்-பி-தாக்கியதில்-இருவருக்கு-காயம்/150-3517761 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
26) ஆவது கேள்விக்கு வேறு வீரரின் பெயரைத் தந்ருங்கள் 30) ஆவது கேள்விக்கு வேறு வீரரின் பெயரைத் தாருங்கள்1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆஸ்திரேலியா அணியில் Mitchell Starc, Pat Cummins, Josh Hazlewood, Marcus Stoinis , Mitchell Marsh ஆகியோர் விளையாடவில்லை https://www.foxsports.com.au/cricket/australia/cricket-2025-australia-announces-final-squad-for-icc-champions-trophy-mitchell-starc-unavailable-due-to-personal-reasons-replacement-ben-dwarshuis-spencer-johnson/news-story/47649e093bf45323e54f06254e96379a1 point- ‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
🤣..................... அந்தப் பெண்மணி இப்படியே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், மெக்சிக்கோவின் பெயரையும் மாற்றும் ஒரு திட்டம் இருக்கின்றதாம்............1 point- காற்றாடி
1 pointநீங்கள் அங்கு படித்தீர்களா, புங்கையூரான். இங்கு ஈழத்தமிழர் ஒருவர் மருத்துவராக இருக்கின்றார். அவர் Zambia இல் படித்ததாகச் சொன்னார். முன்னர் எங்கள் நாட்டிலிருந்து ஆசிரியர்களாக அங்கு சிலர் போயிருந்ததாகவும் ஞாபகம். தத்துவமும், கவிதையும் என்ற வகையில் எதையாவது எழுதுவது சுலபம் தானே, வில்லவன், ஆனால் வாசிப்பவர்களின் நிலை தான் சில நேரங்களில் அப்படி இப்படி ஆகிவிடுகின்றது போல....................🤣.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கருத்துக்கள உறவுகள் Posted நேற்று 12:40 குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் AUS 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND NZ PAK BAN 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ENG AFG SA 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், AUS அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? ENG 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? ROHIT SHARMA 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? BUMRAH 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்?VIRAT HOLI 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? BUMRAH 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? HARDIK PANDYA 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 3 ..8 ..11 ம் கேள்விகளுக்கு தவறவிட்டமையால் விடை அளித்துள்ளேன்...நன்றி1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உறவே நீங்கள் 3 , 8 , 11 கேள்விக்கு சரியான அணிய தெரிவு செய்ய வில்லை , அந்த மூன்று கேள்விக்குமான அணிய தெரிவு செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா🙏.................... இங்கை தான் பெரியப்பு ஓய்வு தேவை👍....................1 point- ‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
அமெரிக்காவிலிருந்து பார்த்தால் கூகிள் Gulf of America என்று காட்டுகின்றது. மெக்சிக்கோவிலிருந்து பார்த்தால் Gulf of Mexico என்று காட்டுதாம். மற்ற இடங்களில் இருந்து பார்த்தால், இரண்டையும் காட்டுதாம். இந்த விளக்கம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நேற்று காருக்கு பெட்ரோல் அடிக்க போயிருந்தேன். ஒரு கலன் நான்கு டாலர்கள்...................... ஒரு கலன் இரண்டு டாலருக்கு தருவேன் என்று சொல்லிவிட்டு, முன்பு இருந்ததை விட இன்னும் மேலே போயிருக்குது விலை..............🤣. 'கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் ...................'1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கண்ணா, நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்…….🤣1 point- காற்றாடி
1 pointவசீ நானும் உங்கள் கூட்டாளிதான் ......... இவர்களின் படிப்பு அலப்பறை தாங்க முடியல்ல .........! 😂1 point- கர்ண பரம்பரையின் கனவு
1 pointகர்ண பரம்பரையின் கனவு ----------------------------------------- பொழுது சாய்ந்து விட்டது போதும் விளையாடியது உள்ளே வா............. என்று இழுத்து வைத்துக் கொள்ளும் அம்மா ஏன் தான் இது எப்படி தான் இது ஒவ்வொரு நாளும் சாய்கின்றது என்று நான் விடாமல் நச்சரிக்க அதுவும் தூங்கத்தானே வேண்டும் விடிய எழும்பி வரும் வா........... என்றார் எங்கே அதன் வீடு என்றேன் அந்தப் பக்கம் என்று காலுக்கு கீழே சுட்டினார் அம்மா ஒரு நாள் நிலத்துக்கு கீழே தூங்கப் போன சூரியனை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன் அம்மா எழுப்பும் போது அது மீண்டும் அடி வானத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது.1 point- காற்றாடி
1 pointநான் ஊரில் இரண்டு தவணை ஏ எல் படித்தேன். ஹாட்லியில் கணேசலிங்கம் மாஸ்ரரிடம் தூய கணிதம், உடுப்பிட்டி பீக்கோன் ரியூசனில் நல்லையா மாஸ்ரரிடம் தூயகணிதம், பிரயோக கணிதம், தில்லையம்பலம் மாஸ்ரரிடம் தூயகணிதம் என்று எல்லோரையும் போல ஓடுப்பட்டுப் படித்தேன். ஓ எல் ரிசல்ட்ஸ் தந்த செருக்கும், கூவிற வயசில் இருந்ததாலும் ஏ எல் படிப்பில் அக்கறை காட்டவில்லை. கெமிஸ்ற்றி, பிஸிக்ஸ் படிக்க வந்த பெண்பிள்ளைகள் மேல்தான் முழு நாட்டமும் போனது!🥰 பாடசாலையில் முதல் வரிசையில்தான் இருப்பேன். கணேசலிங்கம் மாஸ்டர் வந்து முதல்நாளே மற்றைய இடங்களில் படிப்பிக்காத தூயகணிதத்தில் கடினமான graph sketching (தமிழ் இப்ப தெரியாது) கேள்விகளைத் தந்தார். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரித்தான் இருந்தது. பின்னால் திரும்பி அவரிடம் ரியூசனில் படிக்கும் நண்பனை எப்படிச் செய்வது என்று கேட்டேன். அவன் மெதுவாக சொல்ல ஆரம்பிக்க, கணேசலிங்கம் மாஸ்ரர் எனது மேசையை நோக்கி வந்தார். கன்னம் பழுக்கப்போகின்றது என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வந்து எனது மேசையில் சோக்கால் இரண்டு கோடுபோட்டுவிட்டு கரும்பலகைக்குப் போய் ஒரு கேள்வியை விளங்கப்படுத்தினார். அதை அவர் எனக்காகத்தான் செய்தார் என்று புரிந்துகொண்டேன். மிச்சக் கேள்வி எல்லாவற்றையும் நான் கிறுகிறுவென்று செய்து முடித்தேன்😎 அவர் சொல்லித்தந்த method ஐ நான் இன்னமும் மறக்கவில்லை. பலருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்றேன், எனது வாரிசுகள் உட்பட! கணிதத்தில் இன்றுவரை குன்றாத காதலுக்கு ஓ எல் வரை படிப்பித்த சர்வானந்தா மாஸ்ரர், நம்ம ஊர் அரசன் வாத்தி, ஏ எல்லில் குறுகிய காலம் என்றாலும் கணேசலிங்கம் மாஸ்டர், நல்லையா மாஸ்டர், தில்லையம்பலம் மாஸ்டர் ஆகியோர் எனது ஆசான்கள். அதே போல இலண்டனிலும் இரண்டு ரீச்சர்கள் எனது மதிப்புக்குரிய ஆசான்களாக இருந்ததால் 100க்கு கீழே இலண்டன் ஏ லெவலில் எடுத்ததில்லை!1 point - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.