Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38754
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20010
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3053
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/23/25 in all areas

  1. ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி, இலகுவான ஓட்ட இலக்கை விராட் கோலியின் சதத்துடன் 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 244 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்த்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்! கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்புடைய குழுவினருடனான சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை கவனத்திற்கொண்டு விசேசட தேவைகள் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழிவை அவர்கள் முன்வைத்தனர். விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல், விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் அவர்களுக்கான உயர்கல்வி நிலைகளை அறிமுகம் செய்தல் போன்ற பல விடயங்கள் குறித்து இந்த முன்மொழிவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மதியிருக்கம் (ஒட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை உயர்த்தவும், அநாதை பிள்ளைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய அரசு 2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை அவர்கள் பாராட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், விசேட தேவையுடையவர்கள் பொதுச் சமூகத்தில் இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க தேவையான சமூக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். Clean sri lanka திட்டத்தினூடாகவும் நாம் அதனை செய்ய எதிர்பார்க்கின்றோம். எமது நாட்டில் பல கொள்கைகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் பிரச்சனை. நாம் பார்ப்பது போல், கொள்கைகளை செயற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது இங்கு மிகவும் முக்கிய விடயம். அதுதான் 2025 வரவுசெலவுத்திட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு குறிப்பாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்வியை ஒரு தலைப்பாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கு தேவையானவர்களை நியமித்துள்ளோம். கல்வியில் ஒரு பாரிய மாற்றத்திற்கு நாம் இப்போது தயாராகி வருகிறோம். 2025-ம் ஆண்டு இது தொடர்பான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு, 2026-ல் இதை நடைமுறைப்படுத்தத் தொடங்குவோம். இது முழு முறைமையையும் மாற்றும் நீண்ட காலத் திட்டம். நிச்சயமாக, விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வி முறைக்கு விசேட கவனம் செலுத்தப்படும். அனைத்து பாடசாலைகளிலும் விசேட தேவையுடைய பிள்ளைகள் வழமை போன்று கல்வியில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். ஆனால் இது ஒரு பெரிய செயல்முறை. ஒரேயடியாக அதைச் செய்ய முடியாது, படிப்படியாக அந்த இலக்குகளை அடைவோம் என்று நம்புகிறோம். முதற்கட்ட நடவடிக்கையாக, ஒரு கல்வி நிர்வாக வலயத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையிலாவது இந்த பிள்ளைகளை கல்வி கற்க தகுதியுடையவர்களாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று பிரதமர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டி.டி.டி.எல்.தனபால உள்ளிட்ட அங்கவீனமுற்ற சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1422689
  3. எங்க கிருபனைக் காணலை? குவாட்டர் அடிச்சிட்டு படுத்துட்டாரோ?
  4. அதற்கு ஒரு தடியில் கரட்டினை கட்டி தொங்கவிட்டு அதனை நாட்டிற்கு முன்னே நீட்டினால் நாடு முன்னோக்கி நகரும்😁. மக்களுக்கு இப்படி பேச்சுக்களை பேசி பேசியே அடுத்த 4 வருடங்கள் கொல்ல போகிறார்கள்.
  5. முதல்வர் என்று சொன்னவுடனேயே, அப்பிடி இப்படி வரும் போல. ஆனால் உங்கள் காண்டீபத்திலிருந்து விடுகின்ற அம்புகளை விட்டுவிடாதீர்கள். டிரம்ப் சும்மாதான் இருப்பார். ஆனா ரசோதரனுக்கு நேரம் இருக்குமோ தெரியாது. நாம எல்லாரும் சேர்ந்து பாகிஸ்தான கொண்டுபோறம். 😁
  6. டெஸ்ட் அணியாக இருந்தாலும் ..அனைவரும்தைரியசாலிகள்...ஆனால் அவர்களிடையில் ஒற்றுமையின்மை காணப்படுகிறது...கீப்பர் ரிசுவான் எவ்வளவு கலகலப்பாய் நிற்பவன் ..ஏனோதானோவென்று நிற்கிறான்...பாபருக்கும் அதேநிலமைதான்...அரசியல் அழுத்தமாக இருக்கும்.. இந்தியனிடமும் ...பிரச்சினை இருக்கு...பாகிஸ்தான் என்றால் எல்லாம் மறந்து ஒன்றாகி விடுவார்கள்.... எங்கை கிருபன்சார் ..புள்ளி அடிச்சிட்டாரா.. இதனைத்தான் நானும் கேட்டனான்
  7. நான் இந்தியாவைத் தெரிவு செய்திருந்தாலும் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.முந்தைய போட்டிகளில் பாகிஸ்தான் வெல்லும் என்று கணித்த பொழுதுகளில் இந்தியா வென்று விட்டது. அதற்குப்பழிவாங்க இந்தியா வெல்லும் என்று கணித்திருக்கிறேன் புள்ளிகள் போனாலும் பரவாயில்லை பாகிஸ்தான் வெல்ல வேணும்.
  8. ஹரிணி அமரசூரிய அவர்கள் உண்மையில் சொன்னது எதுவெனில் " முன்பு எமது தலைவர்கள் எமது கடந்த கால பெருமைகளை பற்றி பேசினார்கள் (Previously our leaders talked about the glories of our past)" . வீரகேசரியில் வேலை செய்பவர்களுக்கு ஆங்கில மொழியாக்க வறுமை இருக்கின்றது. இப்பொழுது கூகுள் மொழிபெயர்ப்பி, செயற்கை நுண்ணறிவு கருவிகள் என்பன இலவசமாக கிடைக்கின்றன, அவற்றை பயன்படுத்தலாம் தானே.சிங்கள தலைவர்கள் மட்டும் அல்ல, எமது தமிழ் தலைவர்களும் கால பெருமைகளை பற்றி பீத்திக்கொள்வார்கள்.
  9. ஜேர்மனியில் இருந்து நவீன நாஸிக்களான வலதுசாரிகளால் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..? இது இன்று தேர்தல் நடக்கப்போகும் ஜேர்மனுக்கு மட்டுமல்ல வாற வருடம் தேர்தல் நடக்கப்போகும் பிரான்ஸ் மற்றும் அடுத்து தேர்தலைகளை எதிர்கொள்ளவிருக்கும் பெரும்பாலானா ஜரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும்.. அப்படி ஒரு நிலமை வந்தால் உலகமெங்கும் அலைந்த யூதர்கள்போல் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்க இங்க என்று மறுபடியும் இன்னொரு புது நாட்டுக்கு அலைவதை விட்டு உடனும் நேராக தாய்மண்ணுக்கு வந்து புல்லுசெருக்கி வீடுவாசலை துப்புரவுசெய்து புள்ளகுட்டி பெத்து தமிழர்களின் எண்ணிக்கையை தாயகத்தில் அதிகரித்து உங்கள் பிரதேசங்களை கட்டி எழுப்ப உதவுவது நல்லது.. செத்தாலும் தன் மண்ணில் சாவதே சுதந்திரம்.. சரி இப்போ ஜேர்மன் நிலமையை பார்ப்போம்..👇
  10. Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 01:09 PM இவற்றை பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கொழும்பில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பான சில விடயங்களை நாங்கள் பேசவேண்டியுள்ளது. இந்த நாட்டில் முன்னரும் பொலிஸார் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் அல்லது உண்மையாக குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நபர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு சென்று கொலை செய்யக்கூடிய சில செயற்பாடுகளை செய்துள்ளார்கள்.கொலைசெய்துள்ளார். இப்படி பல தடவைகளில் பல தடவைகளில் இப்படியான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை நாங்கள் கூறவில்லை ஏற்கனவே அனுரகுமாரதிசநாயக்க நாடாளுமன்றத்தில் ' ஒருவர் ஆயுதம் இருக்கென்று கூறுவார் அவரை அழைத்து செல்வார்கள்,அவர் அந்தஆயுதத்தை எடுத்து பொலிஸாரை சுடுவதற்காக முயற்சி செய்வார் பின்னர் பொலிஸார் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சுட்டார்கள் என்று இந்த கதையை கூறுவார்கள்,என தெரிவித்திருந்தார். இந்த கதை வந்து பல தடவைகள் தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட ஒன்று, இது பொய்யான கதை என்பது அனைவரும் அறிந்தது,பலரும் பல தடவைகளில் இதனை தெரிவித்துள்ளனர். கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவரும் எப்படி ஆயுதம் இருக்கின்ற இடத்திற்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்கள்?அழைத்து சென்றார்கள் என்பது தொடர்பில் பூரண விளக்கமில்லை. 2023ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கிலே குற்றவாளிகள் யாரையாவது எந்த இடத்திற்காக கொண்டு செல்லவேண்டும் என்றால் அதனை வீடியோ வடிவிலே பொலிஸார் பதிவு செய்யவேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஆதாரம் இருக்கவேண்டும், எங்கே கூட்டிச்சென்றார்கள் என்ன நடந்தது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் இது எதுவுமே,செயற்படுத்தப்படவில்லை இவர்கள் குற்றவாளிகள் தான? இல்லையா? எதற்காக கொலை செய்தார்கள் யாரின் தூண்டுதலின் பேரில் கொலை செய்தார்கள் என்ற விடயங்கள் என்பது எல்லாம் தெரியவராமலே இருவரும் உயிரிழந்துவிட்டனர். பொலிஸாரை பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பதாகயிருந்தால்,நாளை எங்களில் எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகும் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் செல்லவும் நீதிமன்றம் செல்லவும் குற்றவாளியென்றால், அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குமான அனைத்து சட்டதிட்;டங்களும் இலங்கையில் இருக்கின்றது. இவ்வளவு அவசரஅவசரமாக பொலிஸார் இவர்களை கொலை செய்வதற்கான காரணம் என்ற கேள்வியை அரசை நோக்கி நாங்கள் எழுப்புகின்றோம். இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களிலே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன. எங்களை போன்ற செயற்பாட்டாளர்கள் பல தடவை கைதுசெய்யப்பட்டிருக்கின்றோம், எந்த வித பாரிய வன்முறையிலும் ஈடுபடாத எங்களையே கைவிலங்குகளை போட்டுத்தான் அழைத்துச்செல்வார்கள். ஆனால் இரண்டுபேர் கொலைகளை செய்த இரண்டுபேரை எந்த கைவிலங்கும் இல்லாமலா அழைத்து சென்றார்கள் என்ற கேள்வி எங்களிற்குள்ளது. அதுமட்டுமல்லாது தொடர்ச்சியாக எத்தனை காலம்தான் ஆயுதத்தை காட்டஎடுத்துச்சென்றார்கள் ஆயுதத்தை எடுத்து தங்களை சுட முயன்றார்கள் அவர்களை நாங்கள் கொலை செய்தோம் என தெரிவிப்பார்கள். அவர்களிற்கு சரியான பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லையா அல்லது இந்த ஒரு பொய்கதைதான்அவர்களிடம் இருக்கின்றாதா என்ற கேள்வியெல்லாம் எங்களிடம் உள்ளது. உண்மையிலேயே இந்த நாட்டில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை காண்பிக்கவேண்டிய காலமாக உள்ளது, சுமார் இரண்டு நாட்களில் ஆறுகொலைகள் இடம்பெற்றுள்ளன, ஜனவரியிலிருந்து இன்றுவரை 17 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன,. இன்று நேற்றல்ல இலங்கையில் பலகாலமாக பாதாளஉலகம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்; என இந்தசூட்டு சம்பவம் இடம்பெறுவதை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இவற்றை பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் கொலைகள் மலிந்துபோகின்றநாடாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த கொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்,அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் , பொலிஸார் கொலைகாரர்களாக மாறுவதை எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த அரசாங்கம் ஏற்கனவே எதிர்கட்சியாகயிருந்தபோது தீவிரமாக எதிர்ப்பை தெரிவித்தஒரு அரசு. https://www.virakesari.lk/article/207442
  11. உங்கன்ட பெயரை சொன்னா டிஸ்கவுன்ட் ஏதாவது கிடைக்குமோ அடபாவிகளா வடைக்கும் தோசைக்கும் அப்பத்தக்குமா டிஸ்கவுண்ட்?
  12. அன்றுதான் தொடங்கியது எம் பின்னடைவுகள்.☹️
  13. அய்யா இதிலை என்ன சட்டமீறல் இருக்கு...நான் ஒரு பவுலிங் கோச் ...கடமயை செய்தேன்...கோச் மாணவனை அப்பு ..ராசா என்றே கூப்பிடவேணும்....இது என்பக்க நியாயம்...அன்ரவின்ரை பொலிசு பிடிக்கிற குற்றவாளிகளை போட்டுத்தள்ளுது...அதுக்காக நீங்கள் அனுரவை வெறுக்கிறியளா... அப்பிடி எடுங்கோ
  14. ஒரு முதல்வருக்கு இருக்க வேண்டிய அடக்கமும், பணிவும் இல்லாததால், இன்றைய முதல்வர் முன்னால் நடந்து கொண்டு போக, பின்னால் அவருக்கு குழி தோண்டுவதாக சமூகம் முடிவெடுத்திருக்கின்றது...............🤣.
  15. அந்த கொடுமையை வேற பார்க்க வேணுமா என நித்திரை கொள்ள சென்றுவிட்டேன் (11 ஆவது ஓவரில் கரிஸ் ராபின் பந்தில் கில்லின் கட்சை விட்டவுடன்), ஆனால் இந்தியணி மிகவும் பலவீனமான அணியாகவே எனக்கு தெரிகிறது.
  16. பெரிய‌ப்பு உங்க‌ளுக்கு எதிர் பார்த்த‌ மாதிரி ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ர் அமைய‌ வில்லை.................பாகிஸ்தான் வெளிய‌ போனால் மேல் எழும்ப‌ வாய்ப்பு குறைவு பாக்கிஸ்தான் , இர‌ண்டு தோல்வியோடு புள்ளி ப‌ட்டிய‌லில் க‌ட‌சி இட‌த்தில் அதோட‌ மைனேஸ்சில் நிக்குது நியுசிலாந் இட‌ம் ப‌டு தோல்வி இந்தியாவிட‌மும் ப‌டு தோல்வி..............நீங்க‌ள் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ள் சாதிச்சால் இதில் இழ‌ந்த‌ புள்ளிய‌ அதில் எடுக்க‌லாம் , நீங்க‌ள் எந்த‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள் என்று இனித் தான் பார்க்கனும் அல்ல‌து போட்டி முடிவில் பார்த்து தெரிந்து கொள்ள‌லாம்.............................
  17. @ரசோதரன் அர‌சிய‌லில் இதெல்லாம் சாத‌ர‌ன‌ம‌ப்பா எனக்கு இந்தியாவின் வெற்றிய‌ விட‌ இங்லாந்தின் தோல்வி தான் க‌வ‌லை அளித்த‌து , கார‌ண‌ம் இங்லாந் அணியில் வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் எத்தனையோ பேர் இருந்தாலும் இன வெறி பார்க்காம திற‌மைக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் நாடு தான் இங்லாந்.....................நேற்றுக் கூட‌ இங்லாந் அணியில் விளையாடின‌ மூன்று பேர் வெளி நாட்ட‌வ‌ர்க‌ள்.................இந்தியா அணியில் அக‌தி முகாமில் இருக்கும் ஈழ‌த்து இளைஞ‌னுக்கு திற‌மை இருந்தாலும் ர‌ஞ்சிரொபிக்கிள் கூட விளையாட‌ முடியாது , அந்த‌ நாட்டு குடி உரிமை அவ‌ர்க‌ளுக்கு இல்லை வேற்று நாட்ட‌வ‌ர்களுக்கு இந்திய குடி உரிமை இருக்காம்.............. இங்லாந்தில் 18கிரிக்கேட் கில‌ப் இருக்கு ஒவ்வொரு கில‌ப்பிலும் ஏதோ ஒரு வெளி நாட்டு வீர‌ர் விளையாடுவார்..................... உண்மையை சொல்ல‌ப் போனால் அண்ணா என‌க்கு ஜ‌பிஎல்ல‌ விட‌ இங்லாந்தில் ந‌ட‌க்கும் 100 பந்து கிரிக்கேட் ம‌ற்றும் 20ஓவ‌ர் உள்ளூர் விளையாட்டு , 50 ஓவர் கில‌ப் விளையாட்டு அதிக‌ம் பிடிக்கு..............இங்லாந்தில் 5மாத‌ம் மட்டும் தான் கிரிக்கேட் விளையாட‌ முடியும் இந்த‌ ஜ‌ந்து மாத‌த்தில் ம‌க‌ளிருக்கான‌ கிரிக்கேட் ஆண்க‌ளுக்கான‌ பல வ‌கை கிரிக்கேட் போட்டி எல்லாம் கிறுகிய மாத‌த்தில் ந‌ட‌க்கும்.............அதோட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளும் இடை விடாது ந‌ட‌ந்து கொண்டு இருக்கும்..................உண்மையில் மனித‌ நேயம் மிக்க தேர்வு குழு என்றால் அது இங்லாந் தேர்வுக்குழு தான்.................. 100ப‌ந்து கிரிக்கேட்ட‌ பார்க்க ஆசையா இருக்கும்.............அதுக்கு ரூள்ஸ் வேறு மாதிரி ஒரு வீர‌ர் தொட‌ர்ந்து 10 ப‌ந்து போட‌லாம் ஒவ்வொரு வீர‌ரும் 20ப‌ந்து தான் போட‌லாம் ஒரு வீர‌ர் ப‌ந்து வீச்சில் சுத‌ப்புகிறார் என்றால் 5வாது ப‌ந்தோட‌ நிறுத்தி கொள்ள‌லாம்.................அந்த விளையாட்டு இங்லாந் ம‌க்க‌ளிடையே அதிக‌ வ‌ர‌வேற்ப்பு பெற்று விட்ட‌து 100 ப‌ந்து விளையாட்டை ஒலிம்பிக்கிலும் சேர்க்க‌லாம் , கூட‌ நேர‌ம் எடுக்காது , ஒரு விளையாட்டு மிஞ்சி போனால் இர‌ண்டு மணித்தியாலம் தான் பிடிக்கும் அண்ணா👍....................
  18. அங்குதான்...இரவிராக கோலிக்கு பந்து போட்டு பழக்கினதே நான் தான்...அந்த பந்த்துகளை பழகினப் பின்புதான் மைத்தனத்துக்கே வந்தவன்.. என்ரை மானத்தை காப்பாத்திப் போட்டான்.. இந்தா பின்னுறன்..பெடலெடுக்கிறன் என்று நின்றான்.. விளையாட்டு வழமையைவிட விறுவிறுப்பற்ற விளையாட்டு..எனினும் ஆதரவாளருக்கு படபடப்புத்தான்...கோலிக்கு சதி கூடத்தான் என்ன கிருபன்சார் ...இன்றைய முதல்வர் யார்... ஐயோ பாவம் ...பாகிஸ்தானைப் பார்க்க அப்படியா தெரியுது... 42.3 ஓவரில் முடித்தே விட்டாங்கள் வசீ...நடு ஓவர்களில் ஒரு தள்ளாட்டம் இருந்தது..
  19. நீண்ட‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு கோலி 100 அடிச்சு இருக்கிறார் ஒரு க‌ட்ட‌த்தில் ச‌ச்சினின் ரெக்கோட்டை கோலி உடைப்பார் எனும் நிலை இருந்த‌து.................கோலிக்கு ஜ‌பிஎல்ல‌ இருக்கும் ஆர்வ‌ம் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இல்லை அத‌னால் ப‌ல‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடாம‌ல் ஒதுங்கி விட்டார்................... கோலி 2027 உல‌க‌ கோப்பை ம‌ட்டும் விளையாடினால் சிற‌ப்பாய் இருக்கும்.............. ர‌ன் மிசின் சில‌ வ‌ருட‌ம் வேக‌மாய் ஓடாம‌ல் ப‌டுத்து விட்ட‌து.....................இந்தியா கோப்பையோடு நாடு திரும்ப‌ போகுது இந்தியாவுக்கு இன்னும் மூன்று மைச் தான் இருக்கு அடுத்த‌ மைச் நியுசிலாந் கூட‌ அத‌ற்க்கு பிற‌க்கு சிமி பின‌ல் , பிற‌க்கு பின‌ல்..........................
  20. ரசோதரனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள். வங்காளதேசம் நியுசிலாந்துக்கு அடிக்குது (நாளைக்கு). பிறகு பாகிஸ்தான் வங்காளதேசத்தை ஓட விடுது. இந்தியா நியுசிலாந்த முடிச்சு வைக்குது. பாகிஸ்தான் உள்ள வருது. நம்பிக்கைதானே வாழ்க்கை. வாழ்ந்து பார்த்திடலாம்.
  21. அரியும் சிவனும் ஒன்று, இதை அறிந்தவனுக்கு முட்டை...................... என்று தொடர்வதாக இருக்கின்றேன்...........🤣. திடீரென்று கண்கள் பரந்து விரிந்து, எல்லாமே சொந்தபந்தமாகவும் தெரிகின்றது..........🤣.
  22. சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES லாகூரில் பிப்ரவரி 22 அன்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான பி பிரிவில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. 352 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தவுடன் லாகூர் கடாபி அரங்கில் கூட்டம் கலையத் தொடங்கியது. சிலர் நின்று கொண்டு ஆட்டத்தைப் பார்க்கத் தொடங்கினர். ஆனால், நேரம் செல்லச் செல்ல வீட்டுக்கு புறப்படலாம் என நினைத்த ரசிகர்களை ஆஸ்திரேலிய பேட்டர்கள் தங்கள் ஆட்டத்தின் மூலம் கட்டிப்போட்டனர். வெளியே செல்லலாம் என நினைத்த ரசிகர்களும் ஆட்டத்தின் போக்கை கேள்விப்பட்டு மீண்டும் இருக்கைக்கு வந்து ஆட்டத்தை ரசித்தனர். பாகிஸ்தானின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? கோலி, ரோகித் சரியாக பயன்படுத்துவார்களா? இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தானின் 5 வீரர்கள் - இந்தியாவின் துருப்புச் சீட்டு எது? சாம்பியன்ஸ் டிராபியில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் - இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள் இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்? உண்மையில் நேற்றைய ஆட்டத்தை, சாத்தியமில்லாத வெற்றியை ஆஸ்திரேலிய இளம் பேட்டர்கள் சாதித்துக் காட்டினர் என்று தான் அழைக்க வேண்டும். இங்கிலாந்து அணியினர் மனம் நொந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. ஆஸ்திரேலியாவின் வெற்றி சாத்தியமானது எப்படி? சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்ட்ராக் ஆகிய 3 பிரதான வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லை. ஸ்டாய்னிஷ் ஓய்வு பெற்றுவிட்டார். கேமரூன் கிரீன், மிட்ஷெல் மார்ஷ் இல்லை. இத்தகைய இக்கட்டான சூழலில் பிக்பாஷ் லீக்கில் விளையாடிய வீரர்களையும், ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் விளையாடிய வீரர்களையும் அணியில் சேர்த்து, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா. சமையலில் அவசரத் தேவைக்கு உப்புமா செய்வதைப் போல், அவசர கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை நியமித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு நிர்வாகம் அனுப்பிவைத்தது. ஆனால், சர்வதேச போட்டிகளில் 20 ஆட்டங்களுக்கும் குறைவாக ஆடிய வீரர்களை வைத்து அற்புதமான வெற்றியை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதில் ஸ்பென்ஸர் ஜான்சன், இங்கிலிஸ், வாரிஷிஸ் ஆகியோர் 10 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடியவர்கள். ஆனால், இவர்களின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. 1996ஆம் ஆண்டு லாகூரில் கடைசியாக பேட்டர்கள் ஆதிக்கம் செய்த போட்டியைப் பார்த்த ரசிகர்கள் அதன்பின் ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப்பின் இப்படிப்பட்ட ஆட்டத்தை ரசித்துள்ளனர். ஆஸ்திரலேிய அணி தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட், ஸ்மித் விக்கெட்டை இழந்து 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எனத் தடுமாறியது. இவ்வளவு பெரிய ஸ்கோரை எவ்வாறு சேஸ் செய்யப் போகிறார்கள், அனுபவமான பேட்டர்களும் இல்லை, வெற்றி சாத்தியமாகுமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். ஆனால், மேத்யூ ஷார்ட், லாபுஷேன் அமைத்த 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் லேசான நம்பிக்கையை அளித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதன்பின் அலெக்ஸ் கேரே, இங்கிலிஸ் இருவரும் 5-வது விக்கெட்டுக்கு அமைத்த144 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி சாத்தியம் என்பதை நிரூபித்தது. லாபுஷேன்-மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரே-இங்கிலிஸ், இங்கிலிஸ்-மேக்ஸ் இந்த 3 கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றி தேடித்தந்தது. இதில் சதம் அடித்த இங்கிலிஸ் பூர்வீகத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனதால் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி வருகிறார். இப்போதும் அவரின் உறவினர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பூர்வீகம் நியூசிலாந்து. ஆனால், பிறந்து வளர்ந்தது இங்கிலாந்தில் என்பதால் இங்கிலாந்து அணிக்காக ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம் என ஆஸ்திரேலிய பேட்டர்கள் மனம் தளரவில்லை. லாபுஷேன், மேத்யூ ஷார்ட் இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கினர். ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்ததால், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர். மேத்யூ ஷார்ட் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார். லாபுஷேன் 47 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நெருங்கிய நிலையில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சிறிது நேரம் மட்டுமே களத்தில் நீடித்த ஷார்ட் 63 ரன்கள் சேர்த்திருந்த போது லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் அலெக்ஸ் கேரே, ஜோஸ் இங்கிலிஸ் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் நிதானமாகத் தொடங்கி பின்னர் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுக்கத் தொடங்கினர். மெல்லமெல்ல ஆட்டம் தங்கள் கரங்களை விட்டு நகர்வதை இங்கிலாந்து வீரர்கள் உணரத் தொடங்கினர். கேரே, இங்கிலிஸ் ஆட்டத்தில் நேரம் செல்லச்செல்ல ஆக்ரோஷமும் காணப்பட்டது. இங்கிலிஸ் 41 பந்துகளிலும், கேரே 49 பந்துகளிலும் அரைசதத்தை எட்டினர். ஆஸ்திரேலிய அணியும் வெற்றியை மெல்ல நெருங்கியது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து 50 பந்துகளில் வெற்றிக்கு 70 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜின் நம்பிக்கை பயணம்20 பிப்ரவரி 2025 சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES 42-வது ஓவரில் அலெக்ஸ் கேரே 69 ரன்களில் கார்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் இங்கிலாந்து வீரர்கள் நிம்மதி அடைந்து ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். ஆனால், மேக்ஸ்வெல் களத்துக்கு வந்து, இங்கிலிஸூடன் சேர்ந்தார். இதன்பின் இருவரின் ஆட்டமும் இன்னும் வேகமெடுத்தது, ஆர்ச்சர் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் விளாசி இங்கிலிஸ் 77 பந்துகளில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 41 பந்துகளில் 50 ரன்களை எட்டிய இங்கிலிஸ், 46 பந்துகளில் சதத்தை எட்டினார். மேக்ஸ்வெல் தனக்கே உரிய ஸ்டைலில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலிஸ் 86 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து(6சிக்ஸர், 8 பவுண்டரி)அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியப் பந்துவீச்சிலும் பெரிதாக எந்த நெருக்கடியும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கவில்லை. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ், வாரிஷ், மேக்ஸவெல், ஜம்பா என அனைவருமே ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல்தான் வாரி வழங்கினர். ஆஸ்திரேலிய அணியில் வலுவான பேட்டிங் இருந்ததால் தோல்வியிலிருந்து தப்பித்தது. இங்கிலாந்து தோல்விக்கு காரணம் என்ன? இங்கிலாந்து அணி 351 ரன்கள் சேர்த்து அதை டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது வேதனைக்குரியது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சு உயிரற்ற நிலைக்கு சென்றுவிட்டது என்றுதான் கூற முடியும். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 26.3 ஓவர்கள் வீசி 226 ரன்களை வாரி வழங்கினர். 8.52 எகானமி ரேட் வைத்திருந்தனர். அதாவது ஓவருக்கு 8.50 ரன்களை இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கினர். ஆர்ச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த இங்கிலாந்து அணி அதை நேற்றோடு மறந்திருக்கலாம். ஆர்ச்சர் 10 ஓவர்கள் வீசி 82 ரன்களைக் கொட்டிக் கொடுத்தார், மார்க்வுட் நானும் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் 75 ரன்களும், கார்ஸ் 7 ஓவர்கள் வீசி 69 ரன்களை வாரிக்கொடுத்தனர். அதில் ரஷித் ஒருவர் மட்டுமே 4.7 ரன்ரேட்டில் பந்துவீசியிருந்தார். லிவிங்ஸ்டன், ஜோ ரூட் இருவருமே 6 ரன்களுக்கு மேல் வழங்கினர். மார்க்வுட், ஆர்ச்சர் பந்துவீச்சில் வேகம் இருந்ததே தவிர ஸ்விங், கட்டர்கள், லைன் அன்ட் லென்த் ஏதுமில்லை. இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றுதான் கூற முடியும். அது மட்டுமல்லாமல் ஜோஸ் இங்கிலிஸ் அளித்த கேட்சை ஆர்ச்சர் பிடிக்காமல் கோட்டை விட்ட போதே ஆட்டம் அவர்களை விட்டு நகர்ந்துவிட்டது. இங்கிலாந்து அணி மிகப்பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் முக்கியக் காரணம். ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவைத்து எடுத்து பென் டக்கெட் 165 ரன்கள் சேர்த்தார். இதில் 17 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கும். சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பென் டக்கெட்(165) பதிவு செய்தார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் நாதன் ஆஸ்லே 145 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அவருக்கு துணையாக ஜோ ரூட் இருந்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் அடித்த ஸ்கோர்தான் இங்கிலாந்து அணிக்கு உயிரூட்டியது. மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். சாம்பியன்ஸ் டிராஃபி 2025: வெற்றிநடை போடுமா இந்திய அணி? துபை ஆடுகளம் எப்படி?20 பிப்ரவரி 2025 மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா?19 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கும் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பென் டக்கெட்(165) பதிவு செய்தார் சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் இங்கிலிஸ் 86 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜோஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டிக்கு முன்புவரை சாதாரண பேட்டராக மட்டுமே அறியப்பட்ட இங்கிலிஸ் ஒரே ஆட்டத்தில் உச்சத்துக்கு சென்றுவிட்டார். சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். ஆஸ்திரேலிய பேட்டர் ஜோஸ் இங்கிலிஸ் 77 பந்துகளில் சதத்தை எட்டி, சாம்பியன்ஸ் டிராபியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் வரிசையில் இந்தியாவின் வீரேந்திர சேவாக் சாதனையை சமன் செய்தார். 2002ல் கொழும்புவில் இங்கிலாந்துக்கு எதிராக 77 பந்துகளில் சேவாக் சதம் அடித்திருந்தார். இங்கிலாந்து செல்ல மாட்டார் ஜோஸ் இங்கிலிஸ் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் " எங்கள் வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர். ஷார்ட் ஆட்டம் அற்புதம். ஆடுகளத்தின் தன்மையை நாங்கள் பந்துவீச்சிலேயே கண்டுபிடித்தோம், இதில் 350 ரன்களை எளிதாக அடையலாம் எனத் தெரி்ந்துவிட்டது. 400 ரன்களை எட்டுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், எங்கள் வீரர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். கேரே, இங்கிலிஸ் இருவரின் ஆட்டம் அழகாக இருந்தது, இங்கிலிஸ் அடித்த ஷாட்கள் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறந்தன. ஜோஸ் இங்கிலிஸிடம் பிரிட்டன் பாஸ்போர்ட் இருந்தாலும் அவர் இனிமேல் அங்கு செல்ல மாட்டார்" எனத் தெரிவித்தார். சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?18 பிப்ரவரி 2025 பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது வென்ற அவ்னி லேகரா வாழ்க்கையின் திருப்புமுனை என்ன?18 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய வரலாறு படைத்த ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்து வரலாறு படைத்திருந்தது. ஆனால், அந்த சாதனையை வெறும் 3 மணிநேரம் மட்டுமை நிலைக்க வைத்திருந்த ஆஸ்திரேலியா 356 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தனர். இதற்கு முன் 2004ல் அமெரிக்காவுக்கு எதிராக 347 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து சாதனை படைத்திருந்தது. 352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது என்பது, ஐசிசி ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச சேஸிங்காக மாறியது. இதற்கு முன் 2023 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 345 ரன்களை பாகிஸ்தான் சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது, அதை ஆஸ்திரேலியா நேற்று முறியடித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwye4j1l3v8o
  23. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 21 "மற்றவைகளும் முடிவுரையும்" (மூட நம்பிக்கையின் வெவ்வேறு அம்சத்தை [கூறுபாடுகளை] காட்டக்கூடியதாக நான் படித்த, கேட்ட இரு கதைகளை, இந்த நீண்ட கட்டுரையின் முடிவுரையாக சுருக்கமாக தருகிறேன். உங்களின் இந்த கட்டுரை பற்றிய கருத்து, ஆக்கபூர்வமான திறனாய்வு [விமர்சனம்], எண்ணம், மதிப்பீடு வரவேற்க தக்கது.) ஒருவருக்கு அடிக்கடி வருத்தம் வந்து கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது. அவரும், அவரது மனவியும் இப்படி நெடுகவும் உடல்நிலை குன்றிப் போவதற்கு என்ன காரணம் என யோசித்தார்கள். இறுதியாக ஒரு 'மை' போட்டுப் பார்ப்பவரிடம் போவோம் என முடிவு எடுத்தார்கள். இவரின் குடும்பத்துக்கு என சிறு வைரவர் கோவில் உள்ளது. அந்த மை போட்டுப் பார்ப்பவர் இவர்களிடம் சொன்னார்: "உங்களுடைய கோவிலில் இருக்கும் வைரவரை உங்கள் எதிரி ஒருவர் கட்டி வைத்திருக்கிறார். அதனால் தான் உங்களுக்கு இப்படி அடிக்கடி உடல் நலமற்றுப் போகின்றது. இதை சரி செய்ய, அந்த கட்டி வைத்திருப்பவர் செய்திருக்கும் செய்வினையை கண்டு பிடித்து அகற்ற வேண்டும்" என அறிவுரை கூறினார். அதன் படி, அந்த மை போட்டுப் பார்ப்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்து, அந்த காணி முழுவதும் சுற்றித் திரிந்து, செய்வினை புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்ததாக கூறி, அந்த இடத்தை தோண்டச் சொல்லி, அங்கிருந்து ஏதோ சில பொருட்களை அகற்றினார். அதன் பின் தட்சனையாக பணமும் வேறு சில பொருட்களும் வாங்கிச் சென்றார். அவருக்கு அதற்குப் பின்னர் எந்த உடல் நலக் குறைவும் வரவில்லையாம். அது மட்டும் அல்ல அவரால் இப்ப துவிச்சக்கர வண்டி கூட ஓட்டிக் கொண்டு செல்ல முடிகிறதாம் என ஆனந்தமாக கூறுகின்றார். அதாவது அவருக்கு, அந்த மை போடுபவர் சொன்னதில் இருந்த முழுமையான நம்பிக்கை, அவரை சுகமானவராக்கி வைத்திருக்கின்றது. அது தற்காலிகமானதாக இருந்தாலும், அவர் கொஞ்ச நாளைக்கு, சந்தோஷமாகவும், உடல்நலத்துடனும் இருக்கப் போகின்றார் என்பது உண்மை. இனி நாம் இரண்டாவது கதைக்கு போவோம் . முன்னொரு காலத்தில் ராமாபுரி என்ற ஒரு நாடு இருந்தது. அதை ராஜகம்சன் என்ற அரசன் ஆண்டுவந்தான். மாதம் மும்மாரி பொழிய எல்லாவளமும் பெற்று செழிப்பாக இருந்தது அந்தப் பூமி. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர். கொலை, கொள்ளை என எந்தக் குற்றமும் நடப்பதில்லை. ஏனெனில், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து வந்தது. மக்களை நேசிக்கக் கூடிய ராணுவத்தைக் கொண்ட நாடு அது. ராமாபுரிக்கு அண்டை நாடு தாணடவராயன் ஆளும் விஜயபுரி. அவன் தந்திரமானவன், அதே சமயம் பேராசைக்காரனும் கூட. அவனும் சிறப்பாகத்தான் ஆட்சி புரிந்து வந்தான். மக்களை எந்தக் குறையும் இல்லாமல் ஆண்டான். அவனுக்கு ராமாபுரியின் மீது எப்பொழுதும் ஒரு கண் இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென துடியாய் துடித்துக் கொண்டிருந்தான். ஆனால், அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையையும், ராணுவத்தின் வீரத்தையும் கண்டு அவன் மிகவும் யோசித்தான். அந்த நாட்டின் பலமே பொருளாதாரத்தில் தான் இருக்கிறது. அதைக் குலைத்தால், அங்கே மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு ... அதையே நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, நாம் படையெடுத்து விடலாம் என மந்திரி கூறியதை பல முறை சிந்தித்துப் பார்த்தான். அப்போதுதான் திடீரென்று அவனுடைய மனதுக்குள் ஒரு யோசனைப் பிறந்தது. ராமாபுரி மக்கள் வலிமையானவர்களாக இருந்தாலும், மூடநம்பிக்கைச் சேற்றில் மிகவும் ஊறியவர்கள். ஏன் இந்த ஒரு காரணத்தை வைத்து ஏதாவது செய்ய முடியாதா என்று யோசித்தான் தாண்டவராயன். உடனே மந்திரிகளை அழைத்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். ராமாபுரிக்கு சாமியார் ஒருவர் வந்தார். ஒரு கோயில் மண்டபத்தில் அவர் தங்கிக் கொண்டார். புதிதாக சாமியார் வந்திருக்கும் விஷயம் கேள்விப்பட்டதும், அந்நாட்டு மக்கள் அலை அலையாய் வந்து அந்தச் சாமியாரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். வெகு விரைவிலேயே அந்தச் சாமியாரின் புகழ் பரவியது. சாமியாரின் வருகையை அறிந்த ராமாபுரி மன்னன் ராஜகம்சன். அவரை தன்னுடைய அரண் மனைக்கு அழைத்துவர உத்தரவிட்டான். “சிறிது காலத்திற்கு நீங்கள் அரண்மனையில் தங்கி இந்த இடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்” என்று மன்னன் கேட்டுக் கொண்டான். துறவியும் உடனே சம்மதித்தார். ஒரு வாரம் சென்றது. துறவிக்கு ராஜ உபசாரம்தான். அவர் தானாக எதையும் கேட்கவில்லை. அதே சமயம் கொடுப்பதையும் மறுக்கவில்லை. அன்று ஒரு நாள் மன்னன் ராஜகம்சன் துறவியின் அறைக்கு வந்தான். அங்கு துறவி சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட மன்னன் “என்ன காரணம்?” என்று பணிவாகக் கேட்டான். முதலில் வாய் திறக்காத அந்தத் துறவி, மன்னன் சிறிது வலியுறுத்திக் கேட்ட பின்னர் பேச ஆரம்பித்தார். “மன்னா! உங்கள் நாட்டை கேடு சூழ்ந்துள்ளது” என்றார். இதைக் கேட்ட மன்னன் திகைப்படைந்தான். “என்ன சொல்லுகிறீர்கள்?” “ஆம் மன்னா! இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆபத்து காத்திருக்கிறது. அவர்களின் உயிர் அவர்களின் கையில் இல்லை” என்றார் துறவி. இதைக் கேட்டதும் மன்னன் அதிர்ச்சியடைந்தான். “நீங்கள் கூறுவது வியப்பாகவும், அதிர்ச்சியாவும் உள்ளதே!” என்றான் மன்னன். “உன்மை மன்னா! நான் கூறுவது உண்மை.உயிரைப் பறிக்கும் தீய சக்தியின் தற்போதைய இருப்பு எங்குள்ளது என்பதை சக்தியின் அருளால் நாம் கண்டு கொண்டோம். இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பச்சை மரத்திலும் அந்த தீயசக்தி குடிகொண்டுள்ளது. வரும் அமாவாசை அன்று அது உயிர் பெற்று வெளியே வரும். மக்கள், படைவீரர்கள் ஆகியோர் அதன் இலக்கு!” “நம்பவே முடியவில்லையே.” “நம்பித்தான் ஆக வேண்டும். நான் சொல்வதை சொல்லிவிட்டேன். தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும்.” “எவ்வாறு தடுப்பது?” “அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. அதற்குள் தீய சக்தி குடியிருக்கும் மரங்களை வெட்டி அழிக்க வேண்டும். “அப்படிப்பட்ட மரங்களை எவ்வாறு அடையாளம் காண்பது? “அடையாளம் காண வேண்டிய அவசியமே கிடையாது. இருக்கும் ஒவ்வொரு மரத்திலும் தீய சக்தியின் இருப்பு உள்ளது.” “அய்யய்யோ! அப்படி என்றால் ஒவ்வொரு மரத்தையும் வெட்டி ஆக வேண்டுமா?” “நிச்சயமாக வேறு மார்க்கமே இல்லை. மரம் கூட வேறொன்று நட்டுவிடலாம். ஆனால் மனிதரை ...” “உண்மைதான்! இப்போதே ஆணையிடுகிறேன்.” படை வீரர்களுக்குத் தகவல் அனுப்பட்டது. அவர்கள் துரிதரீதியில் செயல்பட்டு அனைத்து மரங்களையும் வெட்டினர். மன்னன் துறவிக்கு நன்றி தெரிவித்தான்.பரிசு கொடுக்கவும் முனைந்தான். ஆனால் துறவி எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாந்தமாக புறப்பட்டுப் போனார். மக்களின் உயிரைக் காப்பாற்ற வந்த அந்தத் துறவியை எல்லோரும் மனதில் நினைத்து வழிபட்டனர். அமாவாசை கழிந்தது.எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.அவர்கள் விடுகிற அசுத்தக் காற்றை எடுத்துக் கொண்டு தூயக் காற்றை கொடுக்க இப்போது ஒரு மரமும் அந்த நாட்டில் இல்லை.மக்களும் சரி, மன்னனும் சரி இதையெல்லாம் உணரவேயில்லை. இரண்டு, மூன்று நாளாக ஓய்வு இல்லாமல் வேலை செய்த களைப்பு காரணமாக மக்களும்,வீரர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது தான் அது நடந்தது. வெளியே போர் முரசு ஒலிக்கும் சத்தம் கேட்டது. அரண்மனைக்கு வெளியே வந்து பார்த்தான் மன்னன் ராஜகம்சன். விஜயபுரி நாட்டு கொடி பறக்க ஒரு பெரும்படை திரண்டு வந்திருந்தது. “முன் அறிவிப்பு இன்றியே போர் தொடுக்க தாண்டவராயன் வந்து விட்டானே ... அவன் புத்தியே இதுதான்” என நினைத்த மன்னன், அவசரமாக படைகளுக்கு ஆனணயிட்டான். ஆனால், உடல் களைப்பு காரணமாக யாருமே செயல்பட முடியவில்லை. சிறிது நேரத்தில்... எது நட்க்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது.ராமாபுரியைக் கைப்பற்றினான் தான்டவராயன்.மன்னன்,மந்திரிகள்,படைவீரர்கள்,மக்கள் எல்லோருமே அவன் பிடியில்.கை விலங்கு பூட்டப்பட்ட ராஜகம்சனைப் பார்த்து தாண்டவராயன் பேசினான். “என்ன ராஜகம்சா! நான் அனுப்பிய துறவி நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறார். வலிமையுள்ள மக்களும், படையும் கொண்ட நாடு ராமாபுரி. ஆனால், மூட நம்பிக்கைச் சேற்றில் சிக்கியிருந்தீர்கள். உங்களை அடிமைப்படுத்த அதையே நான் வாய்ப்பாகக் கொண்டேன்”. துறவி இங்கே வந்து நடந்து கொண்டதெல்லாம் நான் வகுத்த திட்டப்படியே. முட்டாள்களே! மரத்தில் தீய சக்தியாவது, அது மக்களை அழிப்பதாவது. இக்கணம் முதற்கொண்டு நீங்கள் எனது அடிமைகள். நான் உத்தரவிடுவதை தட்டாமல் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். “ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களை உடனடியாக சீன நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அடுத்து, எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டதோ அதே அளவுக்கு புதிய மரங்கள் நடப்பட வேண்டும்”. என்னுடைய இந்த முதல் உத்தரவை நிறைவேற்றி விட்டு வாருங்கள் என்று அட்டகாசமாய் சிரித்தவாரே கூறினான் தாண்டவராயன். ராஜகம்சன் ஏதும் பேசாது திரும்பி நடந்தான். மக்களும் அவனைப் பின் தொடர்ந்து தலைக்குனிந்து சென்றனர். முடிவுற்றது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  24. ஜேர்மனியின் உண்மையான அரசியல் தெரியாத ஒருவரின் காணொளி தயாரிப்பு என நினைக்கின்றேன். இதன் பின் புலத்தில் உள்ளவர்களையும் ஊகிக்க முடிகின்றது. ஜெர்மனிக்கு அகதி அரசியல் நெருக்கடி இருப்பது உண்மைதான். ஆனால் வெளிநாட்டவர் பிரச்சனை அல்ல.CDU,Afd கட்சிகள் அகதிகளை பற்றித்தான் பேசு பொருளாக எடுத்துள்ளார்கள்.வெளிநாட்டு வேலையாட்களைப்பற்றி அல்ல....அகதிகளாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் சோசல் காசு எடுத்துக்கொண்டு பிள்ளை குட்டிகளை டசின் கணக்கில் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் கவனிக்கவும். இந்த காணொளியில் பேட்டி கொடுக்கும் பெண் CDU,Afd கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் எனும் தொனியில் ஏதோவெல்லாம் கூறுகின்றார். ஆனால் எந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என சொல்லவில்லை.CDU கட்சிதான் என்றுமில்லதவாறு அகதிகளை உள்வாங்கியவர்கள்.அதனாலேயே ஜேர்மனிக்குள் அதிக பிரச்சனைகள் வந்தது.சிறுமிகள் பல்லியல் வன்கொடுமை,கத்திக்குத்துக்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை ஏன்?அகதிகள் பற்றி ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் வந்தது பற்றியும் இவர் ஒரு வார்த்தை கூறவில்லை.அது பற்றி அலசவுமில்லை. மொட்டையாக வெளிநாட்டவர்களை அடிக்கப்போகிறார்கள். துரத்தப்போகின்றார்கள் என ஏதோவெல்லாம் சொல்லி தான் சார்ந்த கட்சி பிரச்சாரம் செய்கின்றார்.அவ்வளவுதான். 80களில் SPD கட்சிதான் ஈவு இரக்கமில்லாமல் அன்றைய அகதிகளையும் அகதி தஞ்சம் கோரிய எம்மவர்களையும் இரவோடு இரவாக திருப்பி அனுப்பியவர்கள் இதெல்லாம் அந்த காணொளி தயாரித்தவர்களுக்கு தெரியுமா?படிக்கவும் விடாமல்,வேலை செய்யவும் விடாமல் இழுத்தடித்தவர்கள் எந்த கட்சியினர் என்றாவது இவர்களுக்கு தெரியுமா? தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். ஊர் திருவிழாக்களில் பக்கத்து ஊர்க்காரன் வந்து பெண்களுடன் சேட்டை விட்டால் உயிருடன் விட்டுவைக்காத எமது சமூகம்.....👈 ஜேர்மனிக்கு அகதியாக வந்து பெண்கள்,சிறுமிகள் என பாரபட்சம் இல்லாமல் பாலியல் கொடுமை செய்தும் கொலை செய்தும்,அப்பாவி மக்களை கத்தியால் குத்தி கொலை செய்தும்......பொது வீதி விழாக்களில் மக்கள் கூட்டங்கள் மீது வாகனங்களால் மோதி கொலை செய்வதையும் ஒரு ஜேர்மன்காரனை பார்த்து சும்மா இரு என சொல்ல வருகின்றார்களா? இதே மாதிரி உங்கள் ஊர்களில் நடந்தால் வாய் மூடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா?
  25. காணொளி 🖕 இன்னும் பார்க்கவில்லை .செய்திகள் தெரிந்தவர்கள் சொன்னதன் படி இனவெறி AFD வெல்லபோவது இல்லை. நல்ல கட்சிகளாள சோசல் ஜனநாயக கடசி பசுமை கட்சிகளை விட பழமைவாத கட்சி கருத்து கணிப்புக்களில் முன்னணியில் நிற்பதாக தெரிகின்றது. ஆனாலும் பழமைவாத கட்சி உக்ரேனை ஆதரிக்க வேண்டும் ஐரோப்பாவை பலப்படுத்த வேண்டும் செலென்ஸ்கியை பற்றி டரம் உளறினதை கண்டித்தல் என்ற நல்லவற்றை கொண்டுள்ளன இனவெறி AFD தலைவி தனது மனைவியுடன் வாழ்ந்து வருவது சுவிஸ்லாந்து நாட்டில். ஆனால் அரசியல் செய்து அதிகாரம் செய்து ஆளவிரும்புவது யேர்மன் நாட்டை. இது தமிழ் தமிழ் என்று அரசியல் செய்து கொண்டு மகனை ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் செயல்கள் போன்றது. இவா டிரம்பை தீவிரமாக ஆதரிக்கின்றா ஆனால் டிரம்போ ஒரு பாலினத்து ஆட்களுக்கு எதிரரானவர். இப்படி சுத்துமாத்துக்கள் உள்ளன
  26. எப்பிடி இருந்த நான்... இப்பிடி ஆயிட்டேன். 😂 🤣
  27. நம்ம நாட்டிலும் முன்பு இப்படித்தான் நடத்துனர் பற்றுசீட்டு கொடுப்பார்கள் . ...... நன்றி தோழர் . .........! 👍
  28. உண்மைதான் புத்தரே! ஆனால் அரசன் செய்யும் ஆட்சி ..நல்லாட்சியா? இல்லையா? என்றும் கண்டுகொள்ள முடியும். மக்களாட்சியில் அது முடியாது.😲
  29. அனுரா அரசு, கடந்த அரசுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்தகாலத்தில் ஆயுததாரிகள் கலாச்சாரம், அவர்களுக்கு சுதந்திரம், பாதுகாப்பு உருவாக்கம், தண்டனை விலக்கு, எல்லாம் அளவுக்கு மிஞ்சி அளித்து, தமது அரசை கட்டியெழுப்பி, தம்மை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து நாட்டை சூறையாடினார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேக்க யாருக்கும் முடியவில்லை. ஆயுத கலாச்சாரம், அச்சுறுத்தல், காட்டுச்சட்டங்கள், வடக்கில் பயங்கரவாதம் மீளெழுகிறது எனும் பிரச்சாரத்தின் மூலம் பிரச்னைகளை திசைதிருப்பல். இப்போ, அனுராவின் ஆட்சி மாற்றத்திற்கு தமிழரின் ஆதரவு, எல்லோரும் சமம் எனும் அவரின் கூற்று, கடந்த ஆட்சியாளரை கதிகலங்க வைத்துள்ளது. தமது அரசியல் மூலதனம் எனும் இனப்பிரச்சனை ஒழிக்கப்பட்டால்; தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் தமது ஊழல்கள் வெளிவந்தால் நிரந்தர சிறை அல்லது குடியுரிமை பறிப்பு நிகழலாம். பாதாள உலகத்தை வளர்த்து, போதைப்பொருள், வன்முறை கலாச்சாரத்தால் பயனடைந்தவர்கள், அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்படப்போகிறார்கள். அதனால் சாட்சிகளை அழித்தல், அரசாங்கத்தின்மீது பழிபோடல், நாட்டில் அமைதியின்மையை உருவாக்கல், இனக்கலவரத்தை ஏற்படுத்தல், ஜே .வி. பி .யை சாட்டி தாங்கள் அரங்கேற்றிய தமிழருக்கெதிரான கொடுமைகளை நேரடியாக அரசாங்கத்தின் தலையில் கட்டுதல். போன்றவற்றின் மூலம் அரசை கலைப்பது, ஆட்சியை கைப்பற்றுவது. முடிந்தால் அனுராவையே கொலை செய்வது போன்றன அரங்கேற ஒத்திகை நடக்கிறது. நாட்டில் அநேக ஆயுதப்படைகள் கடந்த ஆட்சியாளருக்கே விசுவாசமானவர்கள். காரணம்: அதிக சலுகைகள், லஞ்சம், ஊழல், தண்டனையிலிருந்து விடுதலை, விலக்களிப்புகள் பெற்றவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் எஜமானரையே ஆட்சிக்கு அமர்த்த விரும்புவார்கள். அனுர, சட்டங்களை கடுமைப்படுத்த வேண்டும், இராணுவம் போலீசை கண்காணிக்க வேண்டும். விசேடமாக கோத்தாவின் நன்மதிப்பைப்பெற்ற சவேந்திர சில்வா போன்ற தளபதிகள். மஹிந்த கோஷ்ட்டியின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படவேண்டும். எந்த விமர்சனத்துக்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுத்தால் ஒரு சில மாதங்களில் இவற்றை அடக்கி சாதகமான நாட்டை உருவாக்கலாம். விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் அஞ்சினால், ஜனாதிபதி பதவி பறிபோவதுடன் கொலை செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம். கடந்த கால அரசுகளுக்கு கைகொடுக்க இந்தியா வந்தது. அனுராவுக்கு வருமா என்பது கேள்விக்குறியே.
  30. இந்த இடத்தில்த் தான் எனது அண்ணனும் வசிக்கிறார். ஸ்ரேசன் பக்கத்தில் எனுது ஒன்றுவிட்ட அண்ணனின் மகன் சாப்பாட்டுக்கடை ஒன்று போட்டுள்ளார்.
  31. நாங்களும் உங்களை மாதிரி இந்தியாவைத்தான் நம்புகிறோம், பாகிஸ்தானை இல்லை, பார்ப்போம் யாரை இந்தியா கைவிடுகிறதென.😁 விளையாட்டில் யாராவது வென்றால் மற்றவர் தோற்றாக வேண்டும் அது முடிந்து போன போட்டி, முக்கியமான போட்டி இன்றுள்ளது. பங்களாதேஸ் காத்து கொண்டிருப்பார்கள் யாரை கூட்டி கொண்டு போவது என முடிவு எடுப்பதற்கு.😁
  32. இங்கு மாற்று கருத்துக்கள் எதையும் நான் வாசிக்கவில்லை ஆனால் ஒரு முன்னாள் அதிபரை அடித்து கொல்வது எந்த சமூகத்தில் நடந்து உள்ளது நிழலி சொல்வது போல் புலிகள் பிஸ்ட்டல் குழுவையாவது விட்டு சென்று இருக்கலாம் போல் உள்ளது .
  33. தவெகவில் பெண் ஆளுமைக்கு மட்டும் இல்லை, பல வெற்றிடங்கள் இருக்கின்றன. இன்னமும் 25 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவிக்கவில்லை. செயலாளர்கள் கூட்டம் என்று விட்டு, அதை இப்போது பிற்போட்டுவிட்டார்கள். 'நீங்கள் கூட்டதை கூட்டுங்கள், நான் தலைமையேற்க வருகின்றேன்...........' என்று சொன்ன ரஜனியிலிருந்து ஒரு அடி முன்னுக்கு போயிருக்கின்றார் விஜய். ஆனால் இன்னும் நூறு அடிகள் போகவேண்டும் வேகமாக. நேற்று கமல் அவர் கட்சியின் ஆண்டுவிழாவில் பேசியிருந்தார். தான் ஒரு தோற்றுப் போன அரசியல்வாதி என்று சொன்னார். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்றும் சொன்னார். இவர் அரசியலுக்கு வந்த போதே இதைத்தானே நாங்களும் சொன்னோம்........ என்ன ஆனாலும், நேற்று கமலின் பேச்சைக் கேட்டபோது கவலையாக இருந்தது. கமல் இறங்கிய அளவுக்கு கூட விஜய் இன்னும் இறங்கவில்லை. அவர் இறங்கி வரவேண்டும்.......... கிஷோர் தவெகவிற்கு 20 வீதம் அளவு வாக்கு வங்கி இருக்கின்றது என்கின்றார். இது உண்மையென்றால், இது ஒரு பெரிய எண். அதிமுகவின் அளவே அது தான். தவெக நடவடிக்கைகளை ஒழுங்காக்கி விரைவில் ஒருங்கிணைத்தால், அவர்கள் பலமான ஒரு மாற்றுச் சக்தியாக வரலாம். காளியம்மா போன்றவர்கள் இதற்கு இன்னும் வலுச்சேர்ப்பார்கள்.
  34. அது உண்மை, அண்மையில் நான் Pendle hill இற்கு போய்சா ப்பாடு வாங்கிவிட்டு அவனது காரை நோக்கிப் போகேக்க, 3 தமிழர்கள் நிறை வெறியுடன் footpath இல் வழியை மறைத்துகொண்டு நடந்து வந்து எதயோ சொன்னார்கள், நான் ignore பண்ணிகொண்டு போகேக்க தூஷண மழை பொழிந்தார்கள் எங்கள் தமிழர்கள். அப்பத்தான் நான் யோசிச்சேன் இவங்கள ஏன் ஆஸ்திரேலியா இன்னமும் வச்சுக்கொண்டு இருக்குது, நல் நடத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த பலரை திருப்பி அனுப்பி விட்டது ( பாலா என்ற முடி திருத்துனர் நல்ல பெடியன் Ceylon cut இல் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெடியன் visa கிடைக்காமல் திரும்ப போட்டான் - பாலா தான் எனக்கு முடி திருத்துனர்)
  35. அப்படி எல்லாம் அவராக பதவி விலகிப் போகமுடியாது.................. பையன் சாரிடம் நாங்கள் சொன்னால், அவர் அவரைப் பிடித்து ஒரு சந்தைக்கு அனுப்புவார்............🤣. குல்தீப் என்றால் தெரியாது, சுப்மன் ஹில் என்றால் தெரியாது................. ஆனாலும் இந்தக் கலகலப்பிற்காகத்தானே இங்கே போட்டியில், விராட் கோலி கிரிக்கெட் விளையாடுவது போல, நாங்கள் சிலரும் கலந்து கொள்ளுகின்றோம்................
  36. க‌ட்சிக்கு அதிக‌ம் உழைச்ச‌ திலீப‌ன் வ‌றுமையின் கார‌ன‌மாய் ஆதிமுக்காவில் இணைந்தார் ஆனால் க‌ட்சிய‌ விட்டு போன‌ பிற‌க்கு சிறு விம‌ர்ச‌ன‌ம் கூட‌ பொது வெளிக‌ளில் வைக்க‌ வில்லை வ‌டிவேலு ஏதோ ஒரு ப‌ட‌த்தில‌ சொல்லுவார் வாங்கின‌ காசுக்கு மேல‌ கூவுரான்டா கொய்யால‌ என்ர‌ மாதிரி , திமுக்காவுக்கு போன‌ பிற‌க்கு , நாற வாய் ராஜிவ் காந்தி எப்ப‌டி எல்லாம் ந‌க்கி பிழைக்கிறான் க‌ருணாநிதியின் பெய‌ரை விவாத‌ மேடையில் அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர் சொல்ல‌ , நீங்க‌ள் க‌ருணாநிதி என்று சொல்ல‌க் கூடாது அவ‌ரை க‌லைஞ‌ர் என்று சொல்ல‌னும் என்று சொன்ன‌ சில்ல‌றை தான் இந்த‌ ராஜிவ் காந்தி😁😁😁😁😁😁 நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் போது க‌ருணாநிதிக்கு எத்த‌ பெண்டாட்டி என்று பேசின‌ கோமாளி தான் ராஜிவ் காந்தி😁😁😁😁😁😁😁😁 இப்ப‌டி ப‌ல‌ அசிங்க‌ங்க‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌லில்..............ராஜிவ் காந்தி அள‌வுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் க‌ருணாநிதிய‌ விம‌ர்சிச்சு இருக்க‌ மாட்டின‌ம்😁😁😁😁😁😁😁................... ஈழ‌த்தில‌ பிற‌ந்த‌ ந‌ம‌க்கு த‌ன்மான‌மும் பெரிசு இன‌ மான‌ம் அதை விட‌ பெரிசு என்று நினைச்ச‌ ப‌டியால் தான் த‌லைவ‌ர் பின்னால் உத்த‌னை ஆயிர‌ம் போராளிக‌ள் த‌ங்க‌ளை போராட்ட‌த்தில் இணைச்சு மாவீர‌ர்க‌ள் ஆகின‌வை🙏😥.................... உண்மையா அண்ணா இதை நான் அடிக்க‌டி நினைப்ப‌து உண்டு 2002 ச‌மாதான‌ கால‌த்தில் ச‌ர்வ‌தேச‌ம் எங்க‌ட‌ த‌மிழீழ‌ நாட்டை அங்கிக‌ரித்து இருந்தால் த‌மிழ் நாட்டு அர‌சிய‌லை எட்டியும் பார்த்து இருக்க‌ மாட்டேன்..............என‌து சிந்த‌னை பூரா எங்க‌ட‌ நாட்டை க‌ட்டி எழுப்பி எம் ம‌க்க‌ள் ந‌ல்ல‌ வாழ்க்கை வாழுவ‌தையே விரும்பி இருப்பேன்.....................நேர்மையான‌ த‌மீழீழ‌ அர‌சாங்க‌ம் உருவாகி இருக்கும் ஜாதி பேதி எல்லாம் ம‌ண்ணோட‌ ம‌ண்ணாய் போய் இருக்கும் த‌மிழ‌ர்க‌ள் என்ர‌ ஒற்றுமையோட‌ வாழ்ந்து இருப்போம்🙏👍...........................
  37. ஐந்து முன்னாள் எருமைகளை வேண்டுமானால் விடுகிறோம் எங்கள் கம்பெனியால் இப்போதைக்கு அதுமட்டும்தான் முடியும் ! Sorry for the inconvenience பெருமைகள் not available at this time.
  38. பின்னாளில் ஆனந்தி அக்கா தாசியஸ் போன்றவர்களை வெளியேற்றி விட்டுத்தான் Propaganda ஊதுகுழலாக மாறி தமிழ் ஓசை தன் தரத்தை தாழ்த்திக்கொண்டதோடு ..... இப்போது இருக்கிறதா இல்லையா எனும் நிலைக்கும் வந்துள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள் !
  39. அதுதானே சொல்லிவிட்டேன் கிருபன்சார்.. எட்டிப் பிடித்திருக்கின்றேன்...இன்று ராசா நானே எல்லையில்லா மகிழ்ச்சியில் இந்த ராசா எனி எப்படிப் போனாலும் பரவாயில்லை பிரபாகரன் கொள்கையாளன்...இன்று நான் .நாளை வசீ...நாளை மறுதினம்..... வாழ்த்துக்கள் வசீ...நாளை முதல்வராவதற்கு...கிருபன் உங்களுக்கும்தான்
  40. இப்போ— டிரம்ப் புட்டினின் கையாள் என்ற என் தத்துவத்தை இங்கே அப்பிளை பண்ணி பாருங்கள். ஒரு சதிக் கோட்பாடு நிஜமாகும் தருணம் இது. அமெரிக்காவினை நேரே எதிர்த்து உடைக்க முடியாது என்பதால், உள்ளே இருந்து உடைக்கிறார் புட்டின். கிரேக்க இதிகாசத்தில் Trojan குதிரை எனப்படும் ஒரு மரக்குதிரை வரும். ஒரு அரசை போரில் வெல்ல முடியாத எதிரி அரசு, ஒரு பெரும் மரகுதிரையை செய்து அதனுள் போர்வீரர்களை பதுக்கி அனுப்பி வைக்கும். அந்த நாட்டினரும் பெரும் குதிரையை சுற்றி ஆடி பாடி மகிழ்ந்து, இரவில் தூங்க சென்ற பின், வீரர்கள் வெளிவந்து, அனைவரையும் போட்டு தள்ளுவார்கள். இப்படியான நகர்வுகளை ஆங்கிலத்தில் Trojan Horses என்பார்கள். IT யில் பின்னாளில் இப்படியான வைரஸ்சுகளை Trojan என அழைக்கவும் இதுவே காரணம். புட்டின் அமெரிக்காவுள் அதன் மூலம் மேற்குக்குள் அனுப்பி உள்ள Trojan Horse நாசகாரி தான் டிரம்ப். டென்மார்க்கோடு, கனடாவோடு, உக்ரேனோடு - டிரம்ப் எடுக்கும் நிலைப்பாடு எல்லாம் அமெரிக்காவை பலவீனப்படுத்தவே. ஆனால் டிரம்பும், வான்சும், மஸ்கும் அதிதீவிர ஆமெரிக்க வலது தேசியவாதம் என்ற Trojan குதிரைக்குள் பதுங்கி இருந்து இதை செய்கிறார்கள். இது அதி தீவிர வலதுசாரி கொள்கை போல இன்னுமொரு பேய்காட்டும் கதை. அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் என்ன வித்தியாசம்? அமெரிக்காவின் இராணுவ பலம். இராணுவ பலம், ஐரோப்பாவில் இருக்கும் கூட்டுக்கள், இவை எல்லாமும்தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஒரு அசுரனாக்கி வைத்துள்ளன. இதேபோல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆளுமையும். இவற்றை படிப்படியாக உடைத்தால் -அமெரிக்காவின் பொருளாதாரமும் அடி வாங்கும். ஆனால் இது உடனடியாக நடக்காது.
  41. நடந்து கொண்டிருக்கும் விடயங்களை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலேயே ஊகித்துக் கொள்கின்றனர். என் பார்வை அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது என்று சொல்கின்றது ஏனென்றால் அதுவே தான் எனக்கு பிடித்த தெரிவு. நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். 2026ம் ஆண்டில் எந்த வெற்றிடமும் இல்லை, எந்த அலையும் இல்லை, அந்த தேர்தல் ஒரு சரியான நிலவரத்தை காட்டும் என்று நினைக்கின்றேன். அதுவரை இப்படியே போய்க் கொண்டிருப்போம்..........👍.
  42. 350 ஓட்டங்கள் என்று கணித்த ... இவன் செம்பாட்டான்😁🤣
  43. மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். ஆடுறவனுக்குத்தான் தெரியும் ஆட்ட நுணுக்கங்கள். புரிதல் என்பது ஒரு வரம். அதேதான். இங்கிலாந்து அடி வெளுக்கப் போறாங்கள். ரூட் ஒருபக்கம் கட்டையைப் போட, மிச்ச எல்லாரும் அடிதான் இன்றைக்கு. பார்த்து அனுபவியுங்கள்.
  44. தமிழீழ தாயகத்தில் 17 ரூ றிக்கட் 10 + 5 + 2 என்று 3 சீட்டுகள் வாங்கிய அனுபவம் உண்டா..ரெல் மீ ImgBBgjgj hosted at ImgBBImage gjgj hosted in ImgBB
  45. இந்தி குடிமகன் கடை தெரியாம தடுமாறபடாது கண்டியளோ ..
  46. அமெரிக்காவிற்கு ரஷ்யாவிடமிருந்தூ ஏதோ சில பொருட்கள் மிகவும் மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைக்கப் போகின்றன.............. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போகமாட்டார்.... இது எல்லா நாடுகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும். ஒரு நாடு, ஒரு இனம் அதன் சுயநிர்ணய உரிமையை இழப்பது கொடுமையான, அநியாயமான ஒரு நிகழ்வு. எங்களுக்கு நடந்தது, இன்று உக்ரேனுக்கு நடக்கின்றது, இதே பலசாலிகளால் நாளை இன்னும் பலருக்கும் இதே நிலைமை வரும்................. பாதிக்கப்பட்டவர்களாவது பாதிக்கப்படுகின்றவர்களுக்கு ஒரு ஆதரவுக் குரலையாவது பதிவு செய்யவேண்டும்.
  47. அமெரிக்காவும், ஐரோப்பாவும்….. உக்ரைனுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து ரஷ்யாவுடன் தொடர்ந்து சண்டை பிடி என்று… கொம்பு சீவி விட்டு விட்டு, இப்ப ஒரேயடியடியாக உக்ரைனை மாட்டி விடுகின்றார்கள். சொந்தப் பலத்தை நம்பாமல், மற்றவனின் ஏவல் பேச்சைக் கேட்டு… போரில் குதித்த உக்ரைன் தனது நாட்டை… கற்குவியலாக மாற்றியதும் அல்லாமல், நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யாவிடம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது. செலன்ஸ்கியின் கோமாளித்தனத்துக்கு கிடைத்த விலை இதுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.