Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    38770
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    7054
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46793
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/03/25 in all areas

  1. அம்மா தாயே குஷ்பு! கொஞ்ச நாளாய் 24ம் இடத்திலையே அங்காலை இஞ்சாலை அரக்காமல் அரங்காமல் நிக்கிறவர் முற்பிறவியில என்னென்ன பாவங்களை செய்து தொலைச்சார் எண்டு சொல்லு தாயே...😎
  2. எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see something, say something" "ஏதும் சந்தேகத்துக்கிடமாகக் கண்டால், உம்மென்றிருக்காமல் வாயைத் திறந்து சொல்லு" என்பது தான் தொனி. இதை அமெரிக்கர்கள் எல்லோரும், எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றியிருந்தால் இன்றைக்கு உலகம் தலைகீழாக மாறியிருக்காது! 2015 இலேயே வெட்டிப் போட்டிருக்க வேண்டிய விஷச் செடியை, சின்னச் சின்ன லாபங்கள், கோபங்களுக்காக சிலர் ஆதரிக்க, ஆதரிக்காதோர் மௌனமாக இருக்க, இன்று அந்த விஷச் செடியே உலகின் சக்தி மிக்க அரசைச் சுற்றி வளைத்திருக்கிறது. பாடம்? சிறிதோ, பெரிதோ - பிழையை, மொள்ளமாறித்தனத்தை சுட்டிக் காட்டவும், போட்டு மிதிக்கவும் வேண்டும்! நாம் மிதிப்பதால் உலகம் மாறிவிடுமா என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்காமல், அறரீதியில் சரியான பக்கம் நிற்கவும், பேசவும் வேண்டும்!
  3. என்னாலேயே நம்ப முடியவில்லை.இதுதான் முதல்தடவை இடைக்கால முதல்வராக வந்துள்ளேன்.இதுவரை காலமும் என் தெரிவுகளில் என் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து பின்வரிசை உறுப்பினராக இருந்தேன்.இம்முறை திறமை அடிப்படிடையில் யதார்த்தத்துக்கு முன்னுரிமைகொடுத்து தெரிவுகளைச்செய்திருந்தேன்.3 உறுப்பினர்களை வைத்திருந்த ஜேவிபி ஆட்சியைப் பிடித்த மாதிரி தேர்தலில் தோற்ற ரணில் ஜனாதிபதியாகிய மாதிரி ஒரு பீலிங்
  4. குழு நிலைப் போட்டிகளின் இறுதியான பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கடினமான ஆடுதளத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை எடுத்திருந்தது. நியூஸிலாந்து பந்துவீச்சாளார் மாற் ஹென்றி 8 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுகளை 42 ஓட்டங்கள் கொடுத்துச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, கேன் வில்லியம்ஸின் நிதானமான 81 ஓட்டங்களைத் தவிர பிறரின் ஒத்துழைப்புக் கிட்டாமையால் 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. வருண் சக்கரவர்த்தி பத்து ஓவர்கள் பந்து வீசி 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முடிவு: இந்திய அணி 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் 20 பேருக்குத் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்த மற்றைய 04 பேருக்கும் புள்ளிகள் இல்லை. யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை:
  5. நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்............. என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்................... 'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' என்றார் இன்னொருவர். இந்த அளவு மரியாதை கூட யாழ் களத்தில் நேரடியாக ஒருமையில் எழுதினால் கூண்டுக்குள் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தினால் மட்டுமே கிடைத்தது.............. இப்படித்தான் என்னிடம் விசயம் இருக்கின்றது என்ற விசயம் எனக்கு தெரிய வந்தது............😜.
  6. உ்ங்களை தர்க்கத்தில் வெல்லும் நோக்கம் எனக்கில்லை அண்ணை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தகவல்களில் தவறு இருக்கலாம் என கருதியே கைத்துப்பாக்கி அனுமதி தொடர்பான விபரங்களை பகிர்ந்தேன். கைத்துப்பாக்கி அனுமதி உள்ள பாதுகாவலர்களுக்கு சம்பளம் அதிகமாம் என குறிப்பிடுகிறார்கள். சீமானுடைய பேச்சு, முன்னைய செயற்பாடுகளால் அவர் மீது உங்களுக்கு கடும் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என எனக்கு புரிகிறது, ஆனால் எல்லோருக்கும் அந்த புரிதல் வருகையில் உங்கள் நிலைக்கு எல்லோரும் வருவார்கள். சில வேளைகளில் அவரை திட்டமிட்டு வீழ்த்த செய்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது. எல்லாவற்றையும் விட யாழ் இணையமும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும். அதற்கு பாதகமாக எந்த ஒரு எழுத்தையும் எழுத விரும்பவில்லை. அளவுக்கு அதிகமாக சிதறிவிட்டோம்.
  7. யானையின் குடும்பம் ஒன்று, நித்திரை கொள்கின்றது.
  8. புலவர் எல்லோரையும் ஏப்பம்விட்டு, வந்துட்டாரையா முதல்வராக. மொத்தமாக 48 புள்ளிகளில் 39 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் மட்டும்தான், இரு குழுக்களிலும் முதலாவது இரண்டாவது அணிகளைச் சரியாகக் கணித்தவர். இங்கிலாந்து இறுதியாக வரும் என்று கணித்தவர், பாகிஸ்தானுடன் கோட்டைவிட்டுவிட்டார் (அந்த ஒரு புள்ளிதான் அவருக்குக் கிடைக்கவில்லை). தரமான சம்பவம் புலவர். 🖖
  9. 18 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  10. 15 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  11. ஐந்து பெண்களுக்கு வாழ்க்கை( பராமரிப்பு ) கொடுத்து 14 குடிமக்களை உலகிற்கு தந்த மனிதரை பாராடட தானே வேண்டும். நம்ம நாட்டில் ஒருத்திக்கு வாழ்கை கொடுத்து 14 க்குமேல் பெற்றும் இருக்கிறார்கள் விண்ணர்கள். 😃
  12. கறுப்பன் குசும்பன்… இன்னொரு புது லுமாலா சைக்கிளுக்கு ரூட் போடுறான்🤣 Johnny English 🕵️‍♂️
  13. பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (04 மார்ச்) முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், இந்திய அணி (குழு A முதல் இடம்) எதிர் அவுஸ்திரேலியா அணி (குழு B இரண்டாவது இடம்) 17 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். மூவர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக்கணித்துள்ளனர். போட்டியில் இல்லாத வேறு அணிகளைக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது! நாளைய அரையிறுதிப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  14. Arbitration வழி தீர்க்கும் படி சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கட்டளையின் எழுத்து வடிவத்தை தேடிப் பார்த்தேன், காணவில்லை! ட்ரம்பிற்கும் சீமானுக்கும் பல ஒற்றுமைகள். அவற்றுள் ஒன்று இவ்வாறு வழக்குகளை இழுத்து, தாமதமாக்கி சகல சந்து பொந்துகளுக்குள்ளாலும் பூந்து ஓடி, ஒழிந்து கொள்வது. இனி அமித்ஷாவின் அண்டர் வேயாருக்குள் இருந்து அடிக்கடி வெளியே வந்து "மானத்திற்காக இறந்தவர்களின் மகன் நான்" என்று வாய் வேட்டு விடுவார் என நினைக்கிறேன், ஆள் மானஸ்தன்😎!
  15. இளங்காத்து வீசுதே இசைஞானி இப்பாடலில் செய்த நுணுக்கங்களை மேற்படி கலைஞர் விளக்குகிறார்.
  16. ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது அவரவர் சொந்த விருப்பம். அதற்கு நீங்கள் இப்படி கதை கதையாக எழுதுவது உங்கள் அனுமானங்கள். அங்கே நிறுவினேன் இங்கே நிறுவினேன் என்பதெல்லாம் உங்கள் சொந்தக்கருத்துகள். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இணைக்கப்படுவதில்லை எல்லோரும் அதை நம்பத்தான் வேண்டுமென்பது கொஞ்சம் அதிமேதாவித்தனம் என்பது எனது கருத்து!
  17. விதி வலியது.🤣 நான் தனியாள் இல்லை.🤣 கப்பல் மூழ்கும் போது தலைமை மாலுமி மற்றவர்களை அனுப்பிவிட்டு கடைசியாக கப்பலுடன் மூழ்குவாராம், இங்கு தலை அவர்தான் என நிரூபிக்கின்றார்.
  18. அப்படியே ....? அப்போ நாடு நாடாக போய் புலிகள் மீது விமர்சனம் மட்டும் வைத்த லக்ஷ்மன் கதிர்காமரை எதற்கு தலைவர் போட்டுத்தள்ளினார் ...? நானறிந்தவரை கதிர்காமர் எந்த முன்னரங்கிலும் நின்று தமிழர்களுடன் அடிபட்டதாக கேள்விப்படவில்லை. திரியை விட்டு விலகாமல் இருக்க நான் சொல்லவருவது என்னவென்றால் தர லோக்கல் பார்ட்டிக்கு தர லோக்கல் அளவுக்கு இறங்கி சீமான் வெளுப்பதில் எமக்கு பேரானந்தம். மற்றபடிக்கு இந்த கர்மா, மட்டன் குருமா எல்லாம் ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் உண்டு. தனி மனித ஒழுக்கம் என்பதும் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. விஜயலக்ஸ்மிக்கு அண்ணன் சீமானை அடையவேண்டுமென்பதல்ல நோக்கம் அவருக்கு இந்த விடயத்தை வைத்து எல்லா பக்கமும் கறக்கவேண்டும் என்பது எப்போதோ வெளிவந்துவிட்ட உண்மை. இதிலும் அண்ணன் சீமான் விஜயலஷ்மியுடன் நிறுத்தியிருக்கிறார் விஜயலஷ்மியை போல் விஜயலட்சுமியின் அக்காவையும் இழுத்து தர லோக்கலுக்கு சாத்தியிருந்தால் விஜயலட்சுமியிற்கு குடும்பஉறவுகளையும் இழுத்து தரக்குறைவாக பேசினால் வலி எப்படியிருக்கும் என்று புரிந்திருக்கும்.
  19. @புலவர் என்னையா புலவர் இப்படி பண்ணீட்டீங்களே. வாழ்த்துக்கள். உங்களாலேயே நம்ப முடியலை இல்ல. தம்பீ @கிருபன் எல்லோரும் கைவிட்டுட்டாங்களா?
  20. பிசிறில்லாத லாண்டிங் .......! 😂
  21. ஏன் வீணா காசிப்புக்கு செலவு செய்யுறியள் ..?
  22. பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.
  23. பையா இன்னும் போட்டிகள் முடியவில்லை.
  24. பெரிய‌ப்பு உங்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கு ஆர‌ம்ப‌த்தில் அவுஸ்ரேலியாவை தெரிவு செய்து விட்டு இங்லாந்தை தெரிவு செய்த‌த‌ன் விலைவு 5 புள்ளி ப‌றி போக‌ கார‌ன‌ம் இங்லாந் அணி இப்ப‌டி ப‌டு கேவ‌லாமாய் விளையாடுவின‌ம் என்று நானும் நினைத்து கூட‌ பார்க்க‌ வில்லை..............இந்த‌ தொட‌ரில் ஏதாவ‌து ஒரு போட்டியில் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணியும் இங்லாந் தான்.................. ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர்கள் மூன்று வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் முக‌மெட் சாமி ( இந்தியா ) ஹென்ரி ( நியுசிலாந் ) வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி ( இந்தியா ) குறைந்த‌ ர‌ன்ஸ் கொடுத்து 5 விக்கேட் எடுத்த‌து இர‌ண்டு வீர‌ர்க‌ளும் ச‌ம‌ நிலையில் ஹென்ரி ம‌ற்றும் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி , 42 / 42 ர‌ன்ஸ் தான் விட்டு கொடுத்து இருக்கின‌ம் ஹென்ரி 8ஓவ‌ர் போட்டு 42 ர‌ன்ஸ் விட்டு கொடுத்து 5 விக்கேட் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி 10 ஓவ‌ர் போட்டு 42 ர‌ன்ஸ் விட்டு கொடுத்து 5 விக்கேட் / இதில் யாருக்கு புள்ளி போடுவிங்க‌ள்.................நியுசிலாந் வீர‌ர் ஹென்ரி தான் குறைந்த‌ ஓவ‌ர் போட்டு 5 விக்கேட் எடுத்து இருக்கிறார்🤔😁......................
  25. நீங்கள் என்ன சாது… நவீனன் என்ற ஒருவர் இருந்தார் …முன்னர் அவர்தான் செய்திகள் வெட்டி ஒட்டுவார். ஒரு கடமை போல் செய்வார். செய்தி திரியில் அவர் மருந்துக்கும் கருத்து எழுதி நான் காணவில்லை. தாம் இணைக்கும் பக்கசார்பான செய்திகளை அவர் இணைக்கும் செய்திகள் பின்னே தள்ளி விடுகிறது அவர் அவதாராக சங்ககாராவை வைத்தார் அவருக்கு ஏறு நெத்தி, தெத்தி பல்லு என எதையோ சொல்லி விரட்டியே விட்டார்கள் 🤣. இதை போல் Tulpen என ஒருவர். நான் முன்னர் எல்லாம் இதைவிட 100% கடுமையாக இவர்களுடன் டீல் பண்ணுவேன். அந்த மனிசன் என்னை அமைதியாக இருக்க சொல்லும், சமாதானமாக எழுதும்…கடைசியில் அவர் என்னை விட கடுமையாக இவர்களை கிழித்து தொங்க போட்டு விட்டு போய்விட்டார் 🤣. அர்ஜூன், ஜூட், ஜீவன் சிவா…சாதுவாக வந்து சேதுவாக போனோர் பலர் 🤣. ஆனால் முன்னர் போல் இப்போ குழுவாதம் இல்லை. முன்னர் மாபியா போல் இருக்கும் ஒவ்வொரு நகர்வும். நான் தேடிய போது இது கிடைத்தது👇. நீதிமன்றம் நியமித்த 3வது நீதிபதியே - நீதிபதி சுவாமிநாதன் சொன்ன “அந்த இருவர்” கதை ஒரு கஞ்சா கப்ஸா கதை என சொல்லாமல் சொல்லுகிறார். சுவாமிநாதனின் நெற்றி பட்டையை நான் காணவில்லை🤣 சவுக்கு சங்கர் வழக்கு: “நீதிபதி சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பளித்திருக்கிறார்” - 3வது நீதிபதி! Published:11th Jun, 2024 at 12:53 PM நீதிபதி ஜெயச்சந்திரன் - சவுக்கு சங்கர் - நீதிபதி சுவாமிநாதன் புதிய தலைமுறை தமிழ்நாடு “நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு பாரபட்சமானது” என்று, சவுக்கு சங்கர் வழக்கில் மூன்றாவது நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருந்தார்கள். Also read:சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம் இதை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், 'இரண்டு நீதிபதிகளும் கொடுத்த தீர்ப்பு முழுமையானது அல்ல' என கடந்த வியாழன் அன்று தெரிவித்து இருந்தார். சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம் இந்நிலையில், 3 வது நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வந்தபோது, அரசு தரப்பிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பாரபட்சமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார். Also read:சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம் மேலும், “எதிர்தரப்பினருக்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் அவசரகதியில் இந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு வழக்கில் இரண்டு தரப்பினருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கிய பிறகே வழக்கில் முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் சட்ட கல்லூரியின் அடிப்படை பாடம். நீதிபதி சுவாமிநாதன் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அனுகியதாலேயே, அரசின் விளக்கத்தை கேட்காமல் நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது என்பது ஒரு தரப்பினருக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அவ்வாறு அவரை சிலர் அணுகி இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அல்லது இது குறித்து பொறுப்பு தலைமை நீதிபதியிடம் புகார் அளித்திருக்க வேண்டும். அல்லது இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும். ஆனால், நீதிபதி சுவாமிநாதன் இந்த நடைமுறையை கடைப்பிடிக்காமல் உத்தரவு பிறப்பித்தது பாரபட்சமானது” என குறிப்பிட்டுள்ளார். சவுக்கு சங்கர் இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதி கொண்ட ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றிய நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். Puthiyathalaimuraiசவுக்கு சங்கர் வழக்கு: “நீதிபதி சுவாமிநாதன் பாரபட்சமாக தீ...சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புக
  26. இதெல்லாம் சுத்த அநியாயம்................... வெறும் ஆறே ஆறு மாத தொடர்பு....... தொடர்பு என்று கூட சொல்ல முடியாது, ஒரு சேவை கொடுக்கல் வாங்கல் என்று தானே அவர் சொன்னார்............ இதற்குப் போய் என்ன பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நீதிமன்றின் வெளியே............. இந்த தடவை மதுரை செல்வம் பேச்சுவார்த்தையில் உசாராக இருக்கவேண்டும். விஜயலட்சுமி பல வருடங்களாக யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்று பட்டியலிட்டிருக்கின்றார்கள்......... என்ன, இந்தப் பக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே என்றவுடன் தான் கொஞ்சம் யோசனையாக இருக்கின்றது............. 'அண்ணனின் ஆறு மாதங்கள்.........' என்று இன்னொரு பட்டியலை அவரின் எதிரிகள் வெளியிட்டு விடுவார்களோ என்று............................ அரசியலிலும், சினிமாவிலும் இது எல்லாம் சகஜம் என்ற முடிவுக்கு வந்து விட்டதால், இனிமேல் பிரச்சனை ஒன்றுமே இல்லை, இப்படியான விசயங்களை இடதுகை புறங்கையால் ஒதுக்கி விட்டு முன்னர் போலவே போய்க் கொண்டேயிருக்கலாம்...............
  27. இன்னும் எந்த கோட்டிலும் எதுவும் நிரூபணம் ஆகவில்லை நீங்கள் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்? சீமானுக்கு பக்கத்தில் படுத்து இருந்தீர்களா?
  28. சென்னை நீதிமன்றுக்கு........ தமிழ்நாட்டு காவல்துறைக்கு .......... மாமி வேலை என்ன என்றே தெரியாது பொதுவாவே இப்படியான காமெடிக்கு வெளியில் இருந்தே வாசிச்சு சிரித்துவிட்டுதான் செல்வேன் ...... வயிறு வலி தாங்கல
  29. களவிதிகளில் நீங்கள் திடீர் கரிசனை காட்டுவதால், கீழே விதிகளைத் தந்திருக்கிறேன். "....பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது: உயிரோடு வாழும்/மறைந்த பிரபலமானவர்களின் படங்கள். குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள். தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் படங்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்). மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்). பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள் இதில் எந்த விதி மீறப் பட்டிருக்கிறது என்கிறீர்கள்? படங்கள் அல்லாமல் சித்திரங்கள் (Artwork), கேலிச்சித்திரங்கள் (cartoon) ஏனையோரும் பயன்படுத்துகிறார்கள் (சசி வர்ணம் எஸ்பிபியின் சித்திரத்தைப் பயன்படுத்துகிறார்) தடை இல்லை! எனவே, கருத்துக்களை எழுதுவதை விட்டு விட்டு, நொய்மையான முறைப்பாடுகளோடு வராதீர்கள். ஒரு பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் ஒழித்து ஓடும் ஒரு அரசியல்வாதியை எதிர்த்து, நக்கலடித்து 90% வீதம் கருத்துக்கள், அதுவும் 3 உறுப்பினர்களால் எழுதப் பட்டிருக்கின்றன. இடையிடையே வந்து "வுட்ரா, வுட்ரா" பாணியிலும், "இது சினிமாவில் சகஜம், எனவே ஓகே" என்ற பாணியிலும் எழுதிய 10% வெள்ளையடிப்புக் கருத்துக்கள் பற்றி உங்களுக்கு முறைப்பாடெதுவும் இல்லையா? இங்கே இது நடக்கவேயில்லையா? "கறுப்புத் தங்கம்" வைரமுத்துவுக்கும் இதே முட்டுக் கொடுத்தார்களே? இங்கே பொய் உரைப்பதும், மிகவும் தவறான கருத்துகளை உங்கள் "பக்தி" யின் காரணமாகப் பரப்புவதும் நீங்கள் மட்டும் தான்! அதற்கு புதிதாக நீங்கள் கோசானுக்குக் கொடுத்த விளக்கம் பார்த்துச் சிரித்தேன்: "அண்டர்கவர் Op செய்து பிடிக்க இருந்தேன், சத்தம் போட்டுக் கெடுத்து விட்டீர்கள்" என்று😂!
  30. இதில் மட்டுமல்ல இன்னும்பல இடங்களில் நான் அவதானித்திருக்கிறேன்.. சீமானுக்கெதிரான ஒருசார்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.. பெரியமனம் பண்ணி சீமான் திரிகளில் நம்மள கருத்தெழுத விட்டதே பெரியகாரியம்..🤣 நன்றி நிர்வாகம்..🙏
  31. ஏன் அதை உங்கள் வீட்டிலேயே தொடங்கலாமே!! அப்படி இல்லாவிட்டால் ஈவேராவின் திராவிட கழக வெப் சைட்டில் தொடங்கலாமே!!
  32. மிகத் தவறான பொய்யான இங்கே நடக்காத நடக்கமுடியாத கருத்து இது. இங்கே பதியப்பட்டுள்ள திரியின் தலைப்பு மற்றும் கருத்துக்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவை சீமானுக்கு எதிரானவை. தலைவர்களின் படங்களை அவதாரில் போடக்கூடாது என்ற யாழ் களத்தின் விதிமுறைகளையே சீமானுக்கு மட்டும் பிரத்தியேகமாக மீறப்பட்டு உள்ளது அதுவும் நாயாக.
  33. உண்மை அண்ணை. கருத்து மோதல்கள் என்றால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம். கருத்தாளர்களை சீண்டாமல் அவர்களின் கருத்துகள்/எழுத்துகளின் தவறை அவர்கள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பதில் எழுதும் போது அவர்களே ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கலாம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துகளை சொல்லலாம். இவ்வளவு காலமும் இங்கு வாசித்து புரிந்துகொண்டதின் அடிப்படையில் தலைவர் போல சீமான் அவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ?! ஒரு நாளும் அது சாத்தியமில்லை. நாம் எமது மக்களுக்கான பணிகள், சேவைகளில் ஒன்றுபட்டே ஆகவேண்டும்.
  34. இதற்கு இடையில் சஜித் மக்கள் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க இந்த அரசு காரணமாகி விட்டது என கூறியுள்ளார்.
  35. ஒரு சின்ன தன்னிலை விளக்கம் என்மீதான தனிமனித தாக்குதல்களின் இன்னொரு வடிவமாகவே நான் இந்த சதிகோட்பாடு, conspiracy theorist என்ற அவதூறையும் பார்க்கிறேன். சதி கோட்பாடு என்றால் ஒரு சிறு உண்மையை வைத்து ஒரு பொய்யை கட்டுவது. இங்கே அப்படி அல்ல, சுப முத்துகுமார் மரணம், அவர் இடுகல் உடைப்பு, சீமானின் மறுதலிப்பு தொட்டு, 15 வருடமாக, இப்போ army wing வரை சீமான் ரோவின் கையாள் என்பதற்கு நான் ஒரு சந்தர்ப சாட்சியங்களின் கோவையையே யாழில் பதிந்துள்ளேன் (வேறுபட்ட திரிகளில்) (dossier of circumstantial evidence). ஆனால் கோஷானை தர்க்கத்தில் வென்று விட வேண்டும், அல்லது சீமானை தப்பாக எண்ண முடியாமல் உள்ளது போன்ற காரணங்களால் இவற்றை எப்போ, புலவர், குசா அண்ணை, ஓணாண்டி, ஏராளன் என பலர் ஏற்க மறுக்கின்றனர். விசுகு அண்ணா ஒரு படி மேலே போய் கோஷான் சொல்வதால் சில உண்மையை கூட நான் ஏற்பதில்லை என எழுதுகிறார். அதன் தொடர்ச்சிதான் இந்த “சதிக்கோட்பாடு” சேறடிப்பும். என்றோ ஒரு நாள், அது சீமான் முதலமைச்சர் ஆன பின்பாக கூட இருக்கலாம், நான் சொன்னது உண்மை என நீங்கள் அனைவரும் உணர்ந்தே ஆவீர்கள். அப்போ, சீமான் என்ற நச்சை வளர நீங்கள் செய்த செயல்கள் இட்டு, ஒரு ஈழத்தமிழனாக உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். ஆனால் நான் உங்கஊக்காக காத்திருக்க போவதில்லை. சீமான் வெளுப்பு தொடரும்.
  36. குல்டிப்பா ,வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தியா , சிற‌ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் குல்டிப்புக்கு கொடுத்த‌ வாய்ப்பை வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்திக்கு கொடுத்து இருந்தால் இந்த‌ தொட‌ரில் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர்க‌ள் ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌த்தை பிடித்து இருப்பார்...............நேற்று வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ப‌ந்து போட்ட‌வ‌ர் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ப‌ந்து போடுவ‌து மிக‌ சிர‌ம‌ம் என்று ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும் , அப்ப‌டி இருந்தும் ப‌ந்தை இந்திய‌ க‌ப்ட‌ன் வ‌ருன் ச‌க்க‌ர‌வ்த்தியிட‌ம் கொடுக்க‌ சிறு த‌ய‌க்க‌மும் இல்லாம‌ ப‌ந்தை போட்ட‌வ‌ர் கில்டிப் ப‌வ‌ர் பிலே ஓவ‌ர் முடிந்தாப் பிற‌க்கு தான் போட‌ வ‌ருவார் ஹா ஹா மூன்று மைச் விளையாடி கில்டிப் எடுத்த‌ விக்கேட் 4 , ஒரு மைச் விளையாடி வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி எடுத்த‌ விக்கேட் 5💪❤️.........................
  37. எனக்கும் நீன்ட நாளாக அவுஸினை பிடிப்பதில்லை அதற்கு காரணம் அவர்களின் மோசமான நடவடிக்கைகள், ஆனால் தற்போது அந்த இடத்தினை இந்தியா தட்டி பிடித்துவிட்டதால் அவுஸில் இருந்த கடுப்பு இப்போது இல்லை.
  38. ரோவின் ஈழத்தமிழர் விடய தலையீடுக்கு முடிவு திகதி என்று ஒன்றில்லை. யார் போலிகாவை இறக்கினார்கள் - அப்பட்டமான இந்தியன் டெலி டிராமா அது இதே யாழ்களத்தில் குசும்பை காட்டவில்லையா? நான் முன்பே பலதடவை மிக தெளிவாக எழுதிவிட்டேன், சுப முத்துகுமார் கொலை முதல் எப்படி சீமான் மிரட்டலுக்கு பயந்து ரோவின் கைக்கூலி ஆகினார் என்பதை. நான் இதுவரை எழுதிய அத்தனை சந்தர்ப சாட்சி கோர்வையையும் விட்டு விடுங்கள். நேற்று நாம் தமிழர் கட்சியில் Ex-Indian Army Wing என ஒரு விங் இருப்பதும், அவர்கள் சீமானுக்கு துப்பாக்கி பாதுகாப்பு வழங்குவதும், இப்படி வழங்க இந்திய சட்டத்தில் இடம் ஏதும் இல்லை என்பதையும் நான் ஆதாரபூர்வமாக எழுதினேன். ஒரு தமிழ் தேசிய கட்சியில் ஏன் Ex Indian Army Wing? அவர்களை பார்த்தால் எவரும் ரிட்டையர் ஆன ஆட்கள் இல்லை. முடி நரைக்காத கட்டுமஸ்தான ஆபீசார்கள். இராமதாஸ்களுக்கு, திருமாவுக்கு, இன்னும் எத்தனையோ பேருக்கு இல்லாத இந்த பாதுகாப்பு படை ஏன் சீமானுக்கு மட்டும்? ஏன் என்றால் சீமான் ரோவின் ஏஜெண்ட். ஒரு அளவுக்கு மேல் ஸ்டாலின் கூட சீமான் மீது கைவைக்காமைக்கு இதுவே காரணம். இதுமட்டும் அல்ல சுப முத்துகுமார் கொலையை ரோ செய்ய அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், சீமானும் அன்றை திமுக அரசும், குறிப்ப்பாக ஜாபர் சேட். இதுதான் சீமானின் ரோ பின்ணணி. 👆நாதகவின் ex Indian Army wing என்ற பெயரில் சீமான், வீடு, குடும்பத்தை சூழ நிறுத்தபட்டிருக்கும் “ ஆயுதம் தாங்கிய அதிகாரிகள்”
  39. இப்ப உள்ள ஆண்களுக்கு இடுப்பில், பெலன் குறைவு. 😂 எலான் மஸ்க்… விதி விலக்கு. 🤣
  40. உங்களின் கோபம் எனக்கு முழுமையாக விளங்காவில்லை, கருத்தியல்ரீதயாக வேறுபாடு இருக்கலாம், நாம் வெவ்வேறு பாதையில் பயணிக்கலாம், அது அனைவரது உரிமை. ஆனால் அடிப்படை மனிதத்தன்மை என்பது பொதுவானது, நம் கொள்கைகளுக்கு என்ற தனி மனிததன்மை கிடையாது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, அடக்குமுறை எவ்வித தயக்கமின்றி, வேறுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டும், அதை எக்காரணம் கொண்டு நியாயபடுத்த முடியாது. அதுவும் நம்மினம் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாமல் இருக்கிறோம். நாம் இக்கொடுஞ்செயல் செய்கிறவன் நம்மொழி பேசுகிறான், நம் கொள்கையை தூக்கிபிடிக்கிறான் என்ற காரணத்திற்காக அவன் பின்னால் நின்றால் அது மனிததன்மையற்றது, நம் போராட்டத்தையும், அதன் நியாய குரலையும் நீர்த்து போக செய்வதேயாகும்.
  41. செலன்ஸ்கிக்கு அமெரிக்க மக்களிடையே ஆதரவு குறைந்திருப்பதாக எங்கே தரவு இருக்கிறது? ட்ரம்பின் கூல் எயிட்டை (அல்லது அவர் சொன்னால் பிளீச்சையும்) குடிக்கும் முட்டாள் கூட்டமொன்று இருக்கிறது, அது 2016 இல் இருந்த அதே சிறு எண்ணிக்கையில் தான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான அமெரிக்கர்கள் - இரு கட்சிகளையும் சேர்ந்தோர்- செலன்ஸ்கி மீது மரியாதை வைத்திருக்கின்றனர். இன்று சில நகரங்களில் செலன்ஸ்கிக்கு ஆதரவாக சில ஆர்ப்பாட்டங்களும் நடக்கின்றன. வேர்மொன்ற் மாநிலத்திற்கு குடும்பத்தோடு விடுமுறை போயிருக்கும் புண்ணாக்குப் பயல் ஜேடி வான்சை, அங்கே நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வேறிடத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். செலன்ஸ்கி தலை நிமிர்ந்து உலக வலம் வரும் நிலையில், புண்ணாக்குப் பயல் ஜேடி சொந்த நாட்டிலேயே ஒழித்துத் திரிய வேண்டிய நிலை வந்திருக்கிறது😂.
  42. புதிதாக வாசிப்பவர்களுக்காக உடனுக்குடன் மாறும் - rapidly evolving😂 நிலைப்பாட்டை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: 1. பெண்ணைத் தெரியாது. 2. விரும்பி வந்தார். 3. அவர் பாலியல் தொழிலாளி (இவர் சேவை நாடிப் போயிருக்கிறார்) பி.கு: இதற்குப் பிறகும் "அண்ணன் சீமான்", "தமிழ் தேசியம் வளர்க்கும் சீமான்" என்று யாழ் களத்தில் முட்டோடு வரும் எவருக்கும் நான் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
  43. உண்மையில் நானும் அதை நினைத்தேன். தனக்கு லாபம் என்றால்.... எந்த ஊத்தைவாளி வேலையும் செய்யத் தயங்காதவர் தான், சுமந்திரன்.
  44. சத்தியமூர்த்தி விலகினால் ஒன்றும் கட்சி முழுகிப்போகாது, அவர் ஒரு வவ்வால். அவர் கட்சியில் இருந்து சுமந்திரனுக்கு ஏவல் வேலைதான் பார்ப்பார். ஆனால் சிறிதரன் இவரின் பேச்சுக்கு எடுபடுமளவுக்கு முட்டாளல்ல. ஏற்கெனவே மாவையரை தலைவர் பதவியிலிருந்து விரட்ட சிறிதரனை கையாளாக பாவித்தவர் சுமந்திரன். அதிலிருந்து பாடம் கற்றிருப்பார் சிறிதரன். அந்தப்பாவத்திற்குத்தான் இப்போ அனுபவிக்கிறார். இனி சுமந்திரனால் விரட்டப்படுவது சிவஞானம் அண்ட் சத்தியலிங்கம். வெறி பிடித்து அலைகிறார் என்றும் சொல்லலாம். அது நிறைவேறாவிடில் ஆளுக்கு விசர் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  45. சுவியர்... உங்கள் படத்தை.. கீழுள்ள @ஏராளன் னின், தலைப்பில் பதிந்துள்ளேன். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.