Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19134
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3061
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    10103
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/07/25 in all areas

  1. இந்த நேர்காணலை பார்க்கும்போது சிரிப்பாகவும் அதேநேரம் ரணிலின் கால நேரத்தையும் நினைத்தேன். விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்தபின் கோத்தாவை சணல் நான்கு என நினைக்கிறன், நேர் காணலில் கேட்ட கேள்விக்கு உண்மைக்கு புறம்பான கருத்தை கோத்த சொன்னபோது, கேள்வி கேட்டவர் ரொம்ப கடுப்பாகிவிட்டார். அப்போ கோத்த அவரை பாத்து சொன்னது, நீங்கள் ஏன் பதற்றப்படுகிறீர்கள்? பதற்றமடைய வேண்டியவன் நான், நானே அமைதியாக இருக்கிறேன் என்றார். திட்டமிட்டு செய்பவன் பதற்றமடைய மாட்டான், தேவையுமில்லை என்றே புரிகிறது. அதன் பின் மஹிந்தவை பல பத்திரிகைகள் நேர்காணல் கண்டன, அதில் அல் ஜெஸீரா, சணல் நான்கு கேட்ட கேள்வி ஒன்று. அதெப்படி உங்கள் அரசில் பல உங்கள் குடும்ப உறவுகள் பதவி வகிக்கின்றனர்? அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, மக்கள் வாக்களித்து தெரித்தெடுக்கின்றனர், அவர்கள் விரும்பாத போது அவர்கள் நம்மை வெளியேற்றுவார்கள் என்றார். கடந்த வருடமென நினைக்கிறன் இந்த நரியை ஒருவர் நேர்காணல் செய்து, உயிர்த்த ஞாயிறு பற்றி வினவிய போது. எப்படி அட்டகாசம் போட்டார்? சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டேன், நான் இலங்கை கத்தோலிக்க சபையோடு உறவில் இருக்கிறேன், கர்தினால் மட்டுமே பிரச்சனை செய்கிறார் என்று என்று படு பொய் சொல்லி தப்பித்துக்கொண்டார். இந்தமுறை வளமாக மாட்டினார். உயிர்த்த ஞாயிறு சம்பவம் பற்றி கேள்வி கேட்டவுடன் நான் கார்த்தினாலோடு உறவிலுள்ளேன் என பொய் சொல்லுகிறார். அதே நேரம் எல்லா குற்றங்களுக்கும் தான் பொறுப்பில்லை என்கிறார். மஹிந்த வீட்டில் கேக் வெட்டினாராம். இவரது கட்சி ஆட்சி செலுத்திய காலத்திலும் தமிழருக்கு அநிஞாயம் நடந்திருக்கு. பலதடவை இவர் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். ஏன் இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண இவரால் முடியவில்லை? தாங்கள் பாடசாலைகளை திறந்து மக்களுக்கு உணவு வழங்கினார்களாம். அப்போ கப்பலில் மக்களை வடக்கிற்கு அனுப்பியது யார்? ஏன் அந்த கலவரத்தை உடனடியாக நிறுத்தவில்லை? இதே ஜே .ஆர் .சொன்னார், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம். புலிகளை அழிப்பதற்கு எந்தப்பேயுடனும் பேசத்தயார் என்றார். பாவம், அவரது இறப்பு நாட்டில் பொதுவிடுமுறை விடவில்லை, நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவில்லை. இப்போ, கோத்த பாய, விமானப்படையே போருக்கு காரணம் என்பது மாதிரி சொல்லி தப்பி விட்டேனென நினைத்திருப்பார். ரணில் நாட்டுக்கு வர, எப்படியான வரவேற்பிருக்கிறது என்று பாப்போம். அப்படியானால், ஐநாவில் இவரது ஆட்சிக்காலத்தில் இவற்றை ஒத்துக்கொள்ளாதது ஏன்? ராஜ பக்சக்களை காப்பாற்றியது ஏன்? பாவம் ரணில்! ஆப்பிழுத்த குரங்குபோல டுமாட்டுப்பட்டு முழிப்பது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. உண்மையிலேயே ஹசனுக்கு ஒரு சலூட். பிச்சு உதறிட்டார். நிராஜ் தேவா என்பவரா அவர்? அவருந்தான் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம், தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்.
  2. உங்களுக்கும் தலை சுத்தி விட்டதா? மேலே நீங்கள் சொல்வதெல்லாம் அரசியல். ஆனால் நான் கேட்பது வெறும் வழக்கு பற்றிய ஒரு கேள்வி மட்டுமே. கேள்வி இதோ… இங்கே சீமான் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். அவருக்கும், விஜி அண்ணிக்கும் 2010 இல் இருந்த உறவு எப்படியானது? மாலைமாற்றிய திருமண உறவு மாலை எதுவும் மாற்றவில்லை, ஆனால் திருமணம் செய்வேன் என்று இருவரும் பரஸ்பரம் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த உறவு இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு உறவே அல்ல, ஒரு பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளர் சீமான் வைத்து கொண்ட வியாபாரம் (transactional sex). செந்தாமரை விடயத்தை தயவு செய்து பரப்ப முன்னம் கொஞ்சம் யோசிக்கவும். அது உருவ ஒற்றுமையை வைத்து சொல்லப்படும் பொய் கதை என்கிறார்கள். உங்கள் கருணாநிதி மீது உள்ள கோவம், அநியாயமாக செந்தாமரையின் மனைவி மீது அவதூறு பரப்புவதில் முடிய கூடாது. இல்லை என்றால் ராஜாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுங்கள். அந்த படத்தில் இருப்பது கெளசல்யா செந்தாமரையும், செந்தாமரை தம்பதிகளின் மகள் இராஜலட்சுமி என்கிறார்கள். யாழ் போன்ற ஒரு கண்ணியமான தளத்தில் செந்தாமரை போன்ற ஒரு அறியப்பட்டவரின் மனைவி, மகள் பற்றி ஆதாரம் இல்லாத அவதூறு பரப்பகூடாது. அவர் இப்போதும் இருக்கலாம், மகள் இருக்கிறார், பேரப்பிள்ளைகள் இருப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் இப்படி அவர்களை இழுத்து சேறடிக்க கூடாது. ஒன்றில் நம்பகமான ஆதாரத்தை தாருங்கள் அல்லது நீங்களே எழுதியை நீக்கி விடவும் இரெண்டும் இல்லை என்றால் நிர்வாகத்திடம் முறையிடுவேன். அதன் பின் அவர்கள் இஸ்டம். இது பற்றி நான் அறிந்த fact-check கீழே ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact Check/Verification ராசாத்தி அம்மாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கனிமொழி. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் செந்தாமரை மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற பலத் தமிழ் படங்களில் நடித்தவர். இதையும் தாண்டி அவர் மிகப்பெரிய நாடகக் கலைஞரும் ஆவார். செந்தாமரை அவர்கள் ஒரு மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவர் உயிர் பிரிந்ததாகக் கூறுவர். இவர் எம்.ஜி.ஆர், கலைஞர் என அனைவருடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். இப்படி இருக்க இவரின் மனைவிதான் ராசாத்தி அம்மாள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம். உண்மை என்ன? பரப்பப்படும் புகைப்படத்தில் நடிகர் செந்தாமரையும் அவருடன் ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தைக் காணப்படுகிறார்கள். அப்பெண்மணி ராசாத்தி அம்மாள் என்றும் அக்குழந்தை கனிமொழி என்றும் அப்புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையை அறிய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் பரிசோதித்தோம். இதன்பின் இதனுள் இருக்கும் உண்மையை எங்களால் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. உண்மையில், வைரலாகும் படத்தில் செந்தாமரை அவர்களுடன் இருப்பவர் ராசாத்தி அம்மாளே கிடையாது. அப்பெண்மணியின் பெயர் கௌசல்யா செந்தாமரை ஆகும். இவர் ஒரு நடிகை ஆவார். உடன் இருக்கும் குழந்தை இவர்களின் மகள் ராஜலட்சுமி ஆவார். கௌசல்யா செந்தாமரை அவர்களின் படம். இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “பூவே பூச்சுடவா” உட்பட பலத் தொடர்களில் நடித்து வருகிறார். பூவே பூச்சூடவாத் தொடரில் யுவராணியுடன் கௌசல்யா செந்தாமரை அவர்கள். வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி, கௌசல்யா செந்தாமரைதான் என்பதை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக, வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியின் புகைப்படத்தையும் கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படம். ஒப்பீடுப் படம். கௌசல்யா செந்தாமரை அவர்கள் ஆனந்த விகடனுக்கு நேர்காணல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் இவரின் குடும்பப் படத்தையும் பகிர்ந்துள்ளார். ஆனந்த விகடன் கட்டுரைக் குறித்த டிவீட். இந்தப் புகைப்படத்தை வைத்தே விஷமிகள் இவ்வாறு பொய்யான செய்தியைப் பரப்பியுள்ளனர் என்று நம் ஆய்வில் தெளிவாக உணர முடிகிறது. Conclusion நம் விரிவான ஆய்வுக்குப்பின் ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவி என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதும் வைரலானப் புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவியும் நடிகையுமான கௌசல்யா செந்தாமரை அவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. Result: False Our Sources Onenov.in: https://www.onenov.in/kousalya-senthamarai-actress/ Andrukandamugam: https://antrukandamugam.wordpress.com/2019/01/03/kousalya-senthamarai/ Ananda Vikadan Twitter Profile: https://twitter.com/vikatan/status/987659938901217280 https://newschecker.in/ta/fact-check-ta/it-is-a-rumour-that-rasathi-ammal-is-the-wife-of-senthamarai
  3. யாழில் மாற்றுவலுவுடையோருக்காக விசேட திட்டம் இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தினால் இலங்கையில் முன்னுதாரணமான முறையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வடமாகாண மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. https://www.facebook.com/LankasriTv/videos/1166145185015299/?ref=embed_video&t=42 சாரதி அனுமதி பத்திரம் இதன் பொழுது உள்ளூரில் மாற்றுதிறனாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு பயணிப்பது மற்றும் அவர்களுக்கான விசேட சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குமாறும் இதன் காரணமாக தாம் பொலிஸ் மற்றும் சட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மோட்டார் வாகன தலைமையக தொழில்நுட்ப பிரவின் உதவியுடன் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவியுடனும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு வாகன பதிவு வழங்கப்பட்டு சாரதி அனுமதி பத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்த பொழுதிலும் குறித்த சாரதி அனுமதி பத்திரத்தில் அவர்களுடைய வாகன இலக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. [ZKFXWMB ] 8 மோட்டார் வாகனங்கள் இந்நிலையில் வேறு வாகனங்களை அவர்கள் செலுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அனுமதி வழங்கபட்ட 8 மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்களான எட்டு மாற்றுத்திறனாளி உரிமையாளர்களுக்கு இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய முற்படுகின்ற பொழுது அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/special-program-for-the-disabled-in-jaffna-1741293670#google_vignette
  4. பிரான்ஸில் உள்ள சில தமிழர்களின் நிலையும் இதுதான். எனது குடும்பத்திலும் 80 ஆம் ஆண்டுகளில் இங்கு வந்தவர்கள் சிலர் ஒரு வசனம் கூடச் சரியாக பிரெஞ்சில் பேச மாட்டார்கள். ஆயுட்காலத்தில் பெரும்பாலான வருடங்கள் பிரான்சில் வாழ்ந்தவர்கள் - கிட்டத்தட்ட அரை நுற்றாண்டுகள் - பிரெஞ்சு தெரியாமல் இருப்பதற்கான காரணங்கள் : வேலை செய்யும்போது வேறு நாட்டவர்களுடன் பழகுவதில்லை. ஓரிரு தமிழர்கள் கூட வேலை செய்தால் தமிழிலேயே கதைத்துக் கொள்வது. வீட்டில் தமிழ் தொலைக்காட்சி, படங்களை மட்டுமே பார்ப்பது தற்போதும் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தமிழ் யூரியூபர்களையும் சாத்திரிகளையும் தொடர்வது ஓய்வு நேரங்களில் வெளியில் சென்று உலாவ விரும்பாமல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை தொலைபேசியில் வீணாகச் செலவிடுவது (அல்லது லா சப்பலுக்குச் செல்வது) பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருந்தால் மொழிப் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள என்று பொறுப்பின்றி இருப்பது மறுபடி இலங்கை திரும்ப விரும்பாதவர்கள் இனிமேல் இதுதான் தமது நாடு என்பதை ஏற்றுக் கொண்டு இங்குள்ள மொழி வரலாறு கலாச்சாரம் அரசியல் போன்றவற்றை ஓரளவாவது அறிந்து கொள்ள வேண்டும்.
  5. முழிக்கும் மொழி --------------------------- இருமொழிக் கொள்கையா அல்லது மும்மொழிக் கொள்கையா எது சரி, எந்த வழியில் போவது என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடத்தில் வார்த்தைப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே வார்த்தைப் போர்கள் தான். இந்தப் போர்க் களத்தில் நிற்கும் பெரும்பாலான முன்னணி தளபதிகளின் குடும்பங்களில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகினறன. ஆனாலும் தமிழைக் காப்பதற்காக, தமிழை வளர்ப்பதற்காக தாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று இவர்கள் வெளியில் சொல்லிக் கொள்கின்றனர். இதில் பலரும் மும்மொழிகளும் படிப்பிக்கும் தனியார் பாடசாலைகளின் உரிமையாளர்களாகவும் கூட இருக்கின்றனர். வழமையான அரசியல் தான் இங்கேயும். மேடையில் ஏறி வாக்குகளுக்காகவும், கைதட்டலுக்காகவும் எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து அதையே பேசுவது, மேடையிலிருந்து இறங்கிய பின் தங்களின் குடும்ப நலன்களையும், தங்களின் வளமான எதிர்காலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, மேடையில் பேசியதற்கு முற்றிலும் எதிரான செயல்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம். சர்வாதிகாரிகளுக்கு இந்த இரட்டை நிலைப்பாடுகள் தேவையில்லை. ஊரில் சிறுவயதில் ஒருமொழிக் கொள்கையுடனேயே என் இளமைக்காலம் கழிந்தது. அந்த ஒரு மொழி கூட எந்தப் பாடசாலையிலும் கற்றதால் வந்தது அல்ல. என்னுடைய அம்மாச்சியும், அம்மாவும், அப்பாவுமே அந்த ஒரே மொழியை எனக்கு கொடுத்தார்கள். அம்மாச்சி கதைகள் சொல்வார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கமரூன் போன்றவர்களால் கூட அம்மாச்சியை நெருங்கமுடியாது. அவர் ஒரே சேலையையே தினமும் உடுத்திக் கொண்டே தமிழ் வார்த்தைகளால் பிரமாண்டங்களை உருவாக்கினார். பின்னர் ஊரில் இருந்த வாசிகசாலைகள் அம்மாச்சியின் இடத்தை நிரப்ப முயன்றன. தமிழ் சொற்களும், வசனங்களும் அவ்வாறே உள்ளே புகுந்தன. தமிழையே சொல்லிக் கொடுக்காத பாடசாலைகளில் இன்னொரு மொழியை சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நான் போன எந்தப் பாடசாலையிலும் ஆங்கிலத்தை மருந்துக்கு கூட படிப்பிக்கவில்லை. என்னுடைய பாடசாலை நாட்களில் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடும். ஆனால், பின்நோக்கிப் போய் நிதானமாகப் பார்த்தால், அவர்களுக்கும் உண்மை தெரியவரக்கூடும். அன்று ஆங்கில மொழியில் பரிச்சயம் வருவதற்கு வளரும் சூழலில் ஏதாவது சிறிய அளவில் தன்னும் ஒரு ஆங்கில புழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போயிருக்க வேண்டும். இவை அமையாவிடத்து ஆங்கிலமும் அமையாது. சிங்கள மொழியின் நிலை இன்னும் பரிதாபம். அதைக் கற்றல் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தது. ஊரில் ஒரு இடத்தில் 'மேக்கட்ட கீயா......' என்று பெரிதாக தமிழில் எழுதப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின், ஊரை விட்டு வெளியே வந்த பின் தான், இவை சிங்கள மொழிச் சொற்கள் என்பது தெரியவே வந்தது. அது எழுதப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார். அப்போது அந்த அக்காவை ஒரு அண்ணன் விரும்பிக் கொண்டிருந்தார். அந்த அண்ணனின் நண்பர்கள் தான் இந்த சிங்கள மொழி வசனத்தை தமிழில் அங்கே எழுதியிருந்தனர். அவர்களுக்கு எப்படி சிங்கள மொழி தெரிய வந்தது என்றால் அவர்களில் சிலர் வெளிநாடு அல்லது கப்பலில் போவதற்காக கொழும்பிற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். போகும் வழிப்பாதையில் வழித்துணையாக சிங்கள மொழியில் சில சொற்களையும், வசனங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். நான் பின்னர் தேவை காரணமாக சிங்கள மொழியையும், ஆங்கிலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மொழியை வெறும் மொழியாகவே பார்க்கும் போது அது உண்டாக்கும் ஆச்சரியம் அளவில்லாதது. எப்படி இவை உண்டாகியிருக்கும், எப்படி சத்தங்களை வார்த்தைகளாக உருவாக்கினார்கள், எப்படி உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தினார்கள் என்பது மனிதர்களின் கூட்டு ஆற்றலுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. எந்த மொழியையும் மனிதர்களுடன், நிலத்துடன், வரலாற்றுடன், பண்பாட்டுடன் சேர்த்து பார்க்கும் போது பேதங்கள் வர ஆரம்பித்து, அவை பெரும் மோதல்களாவும் ஆகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை பாடசாலைகளில் புகுத்தும் போது, ஒரு மொழியைக் கொண்டு இன்னொரு மொழியை அழிக்க முற்படுகின்றார்கள் என்பதே இன்று சொல்லப்படும் பெரும் குற்றச்சாட்டு. உதாரணமாக, தமிழ் மொழியை இந்தி மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் அல்லது தமிழ் மொழியை சிங்கள மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் என்பன. ஆங்கிலத்திற்கு இந்தக் கட்டுப்பாடு அநேக நாடுகளில் இல்லை. ஆங்கிலம் இன்று உலக இணைப்பு மொழி ஆகிவிட்டது, ஆகவே ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகக் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு பெரும்பாலான நாடுகளில், பிரதேசங்களில் எதிர்ப்புக் காட்டப்படுவதில்லை. கோவாவில் இருக்கும் மக்கள் கொங்கணி என்னும் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது கர்நாடகாவில் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அந்தப் பிரதேசத்தின் பேச்சு மொழியாக துளு இருக்கின்றது. கன்னடம் கர்நாடக மாநிலத்தின் மொழி. இந்த மக்கள் மூன்று மொழிகளிலும் முதலில் பரிச்சயம் ஆகின்றனர். ஆண்கள் தங்கள் பகுதி பெண்களுடன் துளு மொழியிலும், ஆண்களுடன் கொங்கணி மொழியிலும், பிறருடன் கன்னடத்திலும் உரையாடுகின்றனர். இதைவிட ஆங்கிலமும், இந்தியும் பாடசாலைகளில் கற்றுக்கொள்கின்றார்கள். இந்த தகவல்களை அங்கிருந்த வந்த ஒரு நண்பன் சொன்னான். அவனுடைய ஆங்கில மொழித்திறனும் அபாரம். அவன் இந்தி மொழியையும் மிக நன்றாகப் பேசுகின்றான் என்றே வட இந்திய நண்பர்கள் சொன்னார்கள். அவனுக்கு தமிழும் ஓரளவு தெரிந்திருக்கின்றது. பழைய கன்னட மொழி அப்படியே தமிழ் தான், ஆனால் இதை இங்கு இருக்கும் வேறு எந்த தமிழர்களுக்கும் சொல்லாதே என்று அவன் எனக்கு சொன்னான். எத்தனை மொழிகளை சிறுவயதில் கற்க ஆரம்பிக்கலாம் என்பதில் பெரிய சிக்கல்கள் இல்லை என்றே தெரிகின்றது. மூன்று அல்லது நான்கு மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என்றே சொல்கின்றனர். இந்த மொழிகள் புழங்கும் சூழல் இருந்தால், இன்னும் மிக இலகுவாக இவைகளை கற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர், என்னுடைய கொங்கணி - துளு - கன்னட - ஆங்கில - இந்தி மொழிகள் தெரிந்த நண்பன் போல. அதிக மொழிகளை தெரிந்திருப்பதால் அது நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை விடவும் பல பயன்கள் உண்டு. உதாரணமாக, அதிக மொழிகள் தெரிந்திருப்பவர்களின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், சிக்கல்களுக்கு தீர்வுகளைக் காண்பதில் அதிக நெளிவுத்தன்மை இருக்கும் போன்றன. இலங்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் மும்மொழி வல்லுநர்கள் என்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் தெரிந்த அவர்களால் ஏதாவது நல்லது நடக்கப் போகின்றது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடந்தது போல தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் தங்களுக்கு மட்டும் தேவையானவற்றை தங்களின் திறமைகளின் ஊடாக பெற்றுக் கொண்டார்களோ என்னவோ. அரசியலில் பலதும் பொய்த்துப் போகின்றன. எவரும் இன்னும் ஒரு மொழியை அறிந்து கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவற விடுவது சரியென்று தெரியவில்லை. அதுவும் வசதியுள்ளவர்களுக்கு இந்த வசதி கிட்டும் போது, வசதியில்லாதவர்கள் மட்டும் இதை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம். மற்றும் உலகெங்கும் பத்து கோடிப் பேர்கள் வரையும், தமிழ்நாட்டில் மட்டும் ஒன்பது கோடிப் பேர்கள் வரையும் பேசும் தமிழ் மொழி இன்று இன்னொரு மொழியால் அழிந்து போகும் என்றால், பிரச்சனை உள்ளே வரும் அந்த புதிய மொழியால் இல்லை, அது எங்களில் என்று தானே அர்த்தம்.
  6. "மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" "மன்னிப்பாயா என்னை" மன்னிப்பாயா என்னை அழகு சுந்தரியே அன்பைப் புரியாத பாவி நானே இன்பம் ஒன்றுக்கே பெண்ணென நினைத்தேனே துன்பம் தந்து கண்ணீரை வரவழைத்தேனே! பெண்ணில் பிறந்தவன் அவளையே தேடுகிறான் கண்ணை நம்பி எங்கேயோ அலைகிறான் மண்ணில் மனிதம் காக்கத் தவறி கண்ணியம் தாண்டியவனைப் பொறுத்தால் என்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. தாய்மை [கைக்கூ] தாய்மை என்பது தாயாக இருக்கும் நிலையோ தாலியின் பாக்கியமோ கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. "தாத்தா" [தன்முனைக் கவிதை] தாராள பாசத்துடன் தன்னையே கொடுக்கும் தாத்தா! கண்ணைப் போலவே பேரனைக் காக்கும் பாட்டன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  7. மதச்சார்பற்ற நாடாக மாறாத எந்த நாடும் உருப்படாது.. அதுவும் முட்டாள் அடிப்படைவாத இந்துக்களும் முஸ்லீம்களும் இருக்கும் இந்தியா ரெம்ப நல்லா உருப்படும்.. இப்படி மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும்..
  8. சட்டம் மிக அரிதாகவே black and white ஆக இருக்கும். இதுவும் அப்படி நிறைய grey areas உள்ள விடயம்தான். எது public place என்பதில், என்னத்துக்காக எடுக்கப்படுகிறது (intention) என்பதில் நிறைய தங்கி உள்ளது. அத்தோடு, upskirting போட்டோ எடுப்பது நிச்சயமாக குற்றம். இன்னொரு விடயம் வீடியோ எடுப்பதற்கு உள்ள சுதந்திரம் அதை பகிர இல்லை. அங்கே reasonable expectation of privacy யையும் கருத்தில் எடுக்க வேண்டும். இங்கேதான் பெண்பிள்ளைகளின் ஸ்போர்ட்ஸ் மீட்டில் போய் படம் எடுத்தது பிரச்சனையாகலாம். Intention அதை விட மோசமானது என நிறுவினால் - சிறுவர் பாலியல் வழக்கும் ஆகலாம். உதாரணமாக ஒரு வங்கியில் போய் 20x ஆப்டிகள் சூம் லென்சை பாவித்து ஒவ்வொருவருடைய பாங் பலன்சையும் ஸ்கீரீனில் போட்டோ எடுக்க முடியுமா? ஆகவே இடம் பொருள் ஏவல் முக்கியம். இங்கே இவர் செய்வது யூடியூப் லைக்சுக்காக video auditors என்பவர்கள் எடுக்கும் வீடியோக்கள். இப்படி போய் வீடியோ எடுத்து, சர்ச்சையாக்கி லைக்ஸ் அள்ளுவது. யூகேயில் விடுற சேட்டையை ஊரில் விட்டிருக்கிறார்…சேட்டை கிழிச்சு போட்ட்டானுவோ🤣. பிகு ஆள் லண்டன் ரிட்டேர்ன்னாம் எண்டதும் எனக்கு திக் என்றாகிவிட்டது. இப்ப எல்லாம் ஓகே யா🤣
  9. உங்களைப் போல திறமையான இயந்திர வல்லுநர்கள் சிலருடைய முயற்சிகளால் இது சாத்தியமாகி உள்ளது. நானும் எனது பற்றறியில் இயங்கும் முச்சக்கர ஸ்கூட்டரிற்கு சோலார் பனல் பூட்ட திட்டமிடுகிறேன். வெயிலுக்கு நிழலும் பற்றறிக்கு மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்யலாம்! கடந்த மாதத்தின் பெருமளவு நாட்கள் எனதும் தம்பியினதும் வண்டிகள் பழுதடைந்ததால்(வயறிங் டமேஜ், பற்றறி புதிது மாற்றம்) றீசார்ஜ் செய்வது குறைந்துவிட்டது. இதனால் 30-35 யுனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது lead acid battery மாற்றிவிட்டேன்.
  10. சிலருக்கு…. வெளி நாட்டு பாஸ்போட்டுடன், ஊருக்குப் போனவுடன்.. ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த மாதிரி ஒரு நினைப்பு. இப்ப… இவர் வழக்கு முடியும் மட்டும், நாட்டை விட்டு போக இயலாது என நினைக்கின்றேன். கிடைத்த விடுமுறையில்… இரண்டு கிழமையை இலங்கை விளக்கமறியலில் கழிக்க வேண்டி வந்திட்டுது. 😂
  11. இதுக்கேன் இவ்வளவு சீரியசாக இருக்கிறாங்கள்? "ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே, அது அறிவல்ல" 😉
  12. கொஞ்சக் காலம் இந்த விமான நிலையத்தில், நெல் காயப் போட்டார்கள். இப்போ.... காயப் போட, நெல்லும் இல்லைப் போலுள்ளது.
  13. ஆள்... இவர் தான். நல்ல அடி கொடுத்து, பிற கைதிகளுடன் சேர்த்து விலங்கும் மாட்டி, சட்டையையும் கிழித்து அனுப்பி இருக்கின்றார்கள். 😅
  14. நீங்கள் இருவரும்.. டக்கென்று புரிந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. காணொளி என்றால், யூ ரியூப் முகவரியை பதிய வேண்டும். முகநூல் காணொளிகளை யாழ். களத்தில் நேரடியாக இணைக்க முடியாது. அதன் இணைப்பை பதிந்தால்... பார்வையாளர்கள் சுட்டியை அமத்தி காணொளிகளை பார்வையிட முடியும். உதாரணம்: யூ ரியூப்: 👉 https://www.youtube.com/watch?v=52kDVborPj 👈 முகநூல்: 👉 https://www.facebook.com/watch/?v=743323616693101 👈
  15. சின்ராசு என்ன பிராண்ட் கஞ்சா இழுக்கிறார் என்று அறிய ஆவல். ஒருக்கா ட்ரை பண்ணி பாப்பம் எண்டுதான் எபெக்ட் தாறுமாறா இருக்கும் போல.
  16. முயற்சி பண்ணிப் பார்த்தேன். கீழே பாருங்கள்.🥰 செய்து பார்த்தோம். தலையைச் சுத்தி மூக்கத்தொடுற மாதிரி. ஆனா மூக்கத் தொட்டாச் சரிதானே. கீழே பாருங்கள்.
  17. உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது, எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அத்தனையையும் உடைத்துக்கொண்டு ஒருநாள் தக்க சமயத்தில் வெளியில் வரும். சமுதாயத்தில் மதிக்கப்படவும் வரலாற்றில் இடம்பெறவும் செய்த சாகசங்கள் பின்னாளில் மறக்கப்பட்டு குற்றவாளிகளாக வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களுமுண்டு. இதுதான் ஆரம்பம் உண்மைகள் வெளியே வர, இது தொடரும். எல்லோராலும் சிங்கள இனவாதிகளின் முகம் வெளியே கொண்டுவரப்படும். புதிய சமுதாயம் இதற்காக வெட்கப்படும்.
  18. யுத்தம் முடிந்து 15 வருடங்கள் முடிந்தும் பாதிக்கப்பட்ட இனத்துக்கு நீதி வழங்க முடியாத தலைவர்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? போர் நடந்தபோது தவறுதலாக குண்டு போட்டீர்கள் என்றால் போர் முடிந்து சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றது எந்த விதத்தில் நிஞாயம்? சர்வதேச சட்டத்திலேயே சரணடைந்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்று தானே சொல்கிறார்கள். தலைவரின் மகன் என்பதற்காக பாலகனை விசுக்கோத்து கொடுத்து சுட்டுக் கொன்றீர்களே இதுவும் தவறுதலாகவா நடந்தது? இதற்கெல்லாம் என்றோ ஒருநாள் பதில் சொல்லயே ஆகணும்.
  19. காற்றாடி - அத்தியாயம் ஐந்து -------------------------------------------- சிவா அண்ணாவும், முரளி அண்ணாவுமே அந்த அறையில் எப்போதும் இருப்பார்கள். இருவருக்கும் மட்டுமே அந்த அறையில் இருந்த இரண்டு திரைப்படக் கருவிகளையும் இயக்கத் தெரிந்திருந்தது. அவன் திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது, அந்த அறையின் கதவோரம் நின்று எட்டிப் பார்ப்பான். சிவா அண்ணா எதுவும் சொல்லமாட்டார். முரளி அண்ணா அவன் அங்கே வருவதை விரும்புவதில்லை. 'கீழே போடா.........' என்று சத்தம் போடுவார். அந்த அறையின் கதவோரத்திலேயே வெக்கை அடிக்கும். ஒரு அடி அளவு நீளமான கார்பன் குச்சிகள் திரப்படக் கருவிகளின் உள்ளே எரிந்து கொண்டிருக்கும். அங்கிருந்து வரும் ஒளியே திரையில் ஓடும் திரைப்படமாக விழுத்தப்படுகின்றது. அந்த வெக்கை தான் முரளி அண்ணாவை எரிச்சல் படுத்துகின்றது போல என்று நினைத்துக் கொள்வான். படங்கள் ஆயிரம் அடிகள் நீளமான ரீல்களாக வரும். அநேகமாக ஒரு தமிழ்ப் படம் என்றால் 14 ரீல்கள் இருக்கும். ஒவ்வொரு படமும் 14000 அடிகள் நீளமானது என்று சொல்லலாம். ஒவ்வொரு ரீலும் தனிதனியே ஒரு வட்டமான, தட்டையான தகரப் பெட்டிக்குள் இருக்கும். எல்லா வட்ட தகரப் பெட்டிகளும் ஒரு பெரிய வெள்ளி நிறத்திலான பெட்டிக்குள் இருக்கும். ஒரு ரீல் 11 நிமிடங்கள் வரை ஓடும். பெரிய படங்கள் என்றால் ரீல்களின் எண்ணிக்கை இன்னும் கூடும். ஆங்கிலப் படங்கள் போல சிறிய, 90 நிமிடங்களே ஓடும், படங்கள் என்றால், அதில் எட்டு அல்லது ஒன்பது ரீல்களே இருக்கும். திரைப்படக் கருவிகளில் இரண்டு ரீல்களை ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தும் வசதி இருக்கின்றது. ஒரு ரீல் ஓடி முடிந்தவுடன், அதைக் கழட்டி விட்டு அடுத்த ரீலை எடுத்து மாட்டி விடவேண்டும். இப்படி மாறி மாறி செய்து கொண்டிருப்பதால், தடங்கல்கள் இல்லாமல் படம் ஓடும். இரண்டு திரைப்படக் கருவிகளையும் ஒரு காட்சிக்கு பயன்படுத்தமாட்டார்கள். இரண்டுக்கும் கார்பன் குச்சிகளை போடுவது தேவையில்லாத மேலதிக செலவு. கார்பன் குச்சிகளை கடைசிவரை எரிய விடமுடியாது. ஓரளவு எரிந்து முடிந்து கொண்டு வரும் போது, புதுக் குச்சிகளை போடவேண்டும். அவனிடம் வீட்டில் ஏராளமான எரிந்து மீதமான கார்பன் குச்சிகள் இருந்தன. காதலிக்கும் பெண் எறிந்து விட்டுப் போன பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்வது போல, அவன் சினிமா தியேட்டரிலிருந்து பொருட்களை சேகரித்து வைத்துக் கொண்டிருந்தான். ஓடிக் கொண்டிருக்கும் ரீல் இடையில் பொசுங்கி அல்லது எரிந்து போவது தான் பெரிய பிரச்சனை. ரீல் எரிவது திரையிலும் தெரியும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சத்தம் போடுவார்கள், கூவென்று கத்துவார்கள். பதட்டப்படாமல் எரிந்து கொண்டிருக்கும் ரீலை கழட்டி, எரிந்த பகுதிகளை வெட்டி எறிந்து விட்டு, இரண்டு பக்கங்களையும் மீண்டும் பொருத்தி, ஓடவிட வேண்டும். பொருத்துவதற்கு ஒரு பசை இருக்கின்றது. அப்படி வெட்டி எறியப்படும் ரீல் துண்டுகளையும் அவன் சேர்த்து வைத்திருந்தான். சில படங்களின் ரீல்கள் அடிக்கடி எரிந்துவிடும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளே கதிரைகளை உடைத்தும் இருக்கின்றார்கள். பெரிய வாய்ச்சண்டையாகவும் மாறிய நாட்களும் உண்டு. ஆனால் எவரும் எவருக்கும் இதுவரை அடித்ததேயில்லை. அது திரையில் கதாநாயகனும், வில்லன்களும் மட்டுமே செய்வது என்பதில் நல்ல ஒரு தெளிவு எல்லோரிடமும் இருந்தது. அன்றோரு நாள் சிவா அண்ண வரவில்லை. அவரால் சில நாட்களுக்கு வர முடியாத ஒரு நிலையில் இருக்கின்றார் என்று சொன்னார்கள். சிவா அண்ணாவிற்கு ஏர்ப்பு வலி வந்து, அவரை மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார்கள். அவர் அருந்தப்பில் உயிர் தப்பியதாக சொல்லிக்கொண்டார்கள். எப்பவோ ஏதோ ஒரு பழைய ஆணியோ எதுவோ அவருக்கு காலில் குத்தி இருக்கின்றது. அவர் அதைக் கவனிக்காமல் விட்டிருந்ததாகவும் சொன்னார்கள். பின்னர் அவருக்கு முடியாமல் போகவே, உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தனர். அங்கிருந்து அவசரம் அவசரமாக மந்திகைக்கு அவர் அனுப்பப்பட்டார். அவனின் வீட்டில் இப்படி ஏதாவது நடந்தால், ஏதாவது குத்தினாலோ அல்லது வெட்டினாலோ, மரமஞ்சளை அவித்து குடிக்கக் கொடுப்பார்கள். சிவா அண்ணாவின் வீட்டில் கொடுக்கவில்லை போல. இல்லாவிட்டால் இந்த மரமஞ்சள் அவ்வளவாக வேலை செய்வதில்லையோ தெரியவில்லை. அவன் ஏர்ப்பு வலி என்று கேள்விப்பட்டிருந்தான், ஆனால் இதுதான் முதல் தடவையாக அந்த வலியால் ஒருவர் சாகும் வரை போனார் என்று தெரிந்து கொண்டது. கீழே குனிந்து காலைப் பார்த்தான். பாடசாலைக்கு போய் வரும் நாட்களில் செருப்பு போட்டிருந்தவன், ஆனால் இப்பொழுது போடுவதில்லை. இனிமேல் செருப்பு போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். சிவா அண்ணா இல்லாததால் முரளி அண்ணா அவனை உதவிக்கு வைத்திருக்க ஒத்துக்கொண்டார். முகாமையாளர் உரத்துக் கதைத்தபடியால் மட்டுமே முரளி அண்ணா சம்மதித்தார். 'சின்னப் பொடியன், அவன் அங்கே வேண்டாம்...................' என்று மட்டுமே முரளி அண்ணா மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். தன்னால் தனியாக சமாளிக்க முடியும் என்றும் அவர் சொன்னார். ஆனாலும் முகாமையாளர் விடவில்லை. தியேட்டரில் கதிரைகள் உடைந்தால், அதற்கு முகாமையாளர் தான் முதலாளிக்கு பதில் சொல்லவேண்டும். முதல் பயிற்சியாக எரிந்து பொசுங்கிப் போன ரீல்களை எப்படி வெட்டி ஒட்டுவது என்று முரளி அண்ணா அவனுக்கு செய்து காட்டினார். மிக வேகமாகச் செய்ய வேண்டும் என்றார். பாடல் காட்சியாக இருந்தால் எவ்வளவையும் வெட்டி எறியலாம், சண்டைக் காட்சியாக இருந்தால் அளவாகத்தான் வெட்டி எறிய வேண்டும் என்று சில தொழில் ரகசியங்களையும் சொன்னார். வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தவனின் பார்வை அந்த அறையின் ஒரு மூலைக்கு போனது. அங்கே பல வெறும் போத்தல்கள் இருந்தன. 'அங்கே என்ன பார்க்கின்றாய்............. இங்கேயோ அல்லது வேறு எங்கேயுமோ இதை எதையாவது தொட்டாய் என்றால், உன்னை கொன்று போடுவேன்..........................' என்று அதட்டினார். பின்னர், 'படிப்பை விட்டிட்டு ஏண்டா இங்க வந்தாய்............' என்று மெதுவாக முணுமுணுத்தார். அவரின் குரலிலும், முகத்திலும் ஒரு மெல்லிய சோகம் தெரிந்தது. (தொடரும்................................)
  20. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1kcsdXNbmjH_DgikjBBctvJFH2ulbAnjaEcdBUmVBdxI/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 218 குழுநிலைப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 25 மே 2025 அன்று ஏடென் கார்டன்ஸ் மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வியாழன் 20 மார்ச் 2025 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  21. ஒரு ரோயலிஸ்ட் இப்படி செய்யலாமா? ஒ வட் ஏ செம்... அந்த குருசை வைத்து ஆடியது கிரிஸ்தவரா? பெளத்தரா? இந்துவா? இஸ்லாமியனா? கிறிஸ்தவனாக இருந்தால் நாங்கள் மன்னிப்போம் ..ஆசிர்வதிப்போம்.. ஏனைய மதத்தினர் என்றால் நாங்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம் ....நாட்டில் பிரிவினையை தூண்டும் செயல் இது
  22. பாடசாலை பப்ளிக் பிளேஸ் அல்ல என்பதால் இந்த கேள்வியே தேவை இல்லை.. எடுக்க முடியாது.. அதுதான் சட்டம்.. அதேதான்.. இதை எழுதி அப்டேற் பண்ண நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.. சேம் வேவ்லெந்.. ஒருவர் மீது கோபம் அல்லது காழ்ப்புணர்ச்சியில் பதில் எழுதுவது இப்படித்தான்.. முழுவதும் புரியாமலே முந்திக்கொண்டு நம்ம கோள்வத்தை தீர்க்கோணும்..🤣🤣
  23. எனக்கு ஒரு சந்தேகம் ...தப்பா நினைக்காடையுங்கோ ...விமானம் கட்டுநாயக்காவில் இறங்கும் பொழுது பழுதடைந்து விட்டது என்றால் எப்படி மீண்டும் மத்தள விமானநிலையத்துக்கு எடுத்து செல்வது ...கட்டுநாயக்காவிலிருந்து மத்தளத்துக்கு நீண்ட ஒடு பாதையை சீனா போட்டு கொடுக்குமோ?
  24. இங்கு அனுமதி இல்லாமல், 18 வயதுக்குட்பட்ட பெண்ணின் படத்தை எடுத்து, அதற்கெதிராக பொலிசாருக்கு முறைப்பாடு செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். பாடசாலைக்கருகில் ஒருவர் காரிற்குள் இருந்து சுய இன்பம் அனுபவித்ததுக்கே கைது செய்யப்பட்டார். அவ்வளவு ஏன், பாடசாலை முடிந்து வீதியில் வந்து கொண்டிருந்த ஒரு மாணவிக்கு லிப்ட் தர முயன்றதுக்கே ஒருவரை கடுமையாக விசாரித்தார்கள்.
  25. எனக்குப் பிடித்த காமெடி பீசு…. தெர்மகோல் செல்லூர் ராஜுதான். 😂 🤣
  26. இல்லை….உண்மையிலேயே சீமான் விஜியோடு வெறும் உடல் இச்சையை தீர்க்கும் casual sex தான் வைத்தார் என்றால் அது rape (obtaining consent through deception - promise of marriage) குற்றசாட்டை தவிடுபொடியாக்கும். சீமான் செய்ய வேண்டியதெல்லாம் இதை கோர்ர்ட்டில் வந்து வெளிப்படையாக சொல்வதுதான். அப்படி சொன்னால் நீதிபதி ஈவேரா வோ அல்லது எபொத வோ சீமானை விடுவிக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படி சொல்ல மாட்டார்… ஏன்? ஏன் எண்டால் ஈவேரா போல் ஆமா நான் அப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என சொல்லும் கெத்து சீமானிடம் இல்லை. அத்தோடு தான் உள்ள ஊத்தை வேலை எல்லாத்தையும் செய்து போட்டு நான் பிரபாகரன் பிள்ளை, என அந்த கண்ணியவானின் பின்னால் ஒழிந்து கொள்ள முடியாது.
  27. இலங்கை இராணுவத்திற்கு வெள்ளைஅடிக்கும் வேலையாகவும் இருக்கலாம்...அனுர அரசின் ராக்கெட் ..வல்வைதான்...இதற்காக அங்கு அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள்.... அதாவது சாம பேத ..தாண்டவம்
  28. கம்பனும் கண்ணதாசனும் கவிதைக்கு ஒரு அதிர்ச்சியும் இன்பமும் கொடுப்பான் , ஆனால் அவன் வம்பன் இல்லை, அவனின் எதிரொலி, சமூகத்தில் நடப்பாவையின் பதிவு, இதை உணர்ந்து, அறிந்து திருந்தானா என்ற ஒரு ஏக்கம், அவ்வளவுதான்!
  29. என்ன தில்லை நீங்கள்? நல்ல மனிசன் என்று எண்ணினால் இப்படியும் ஒருபக்கம் இருக்கிறதா?
  30. சமநிலையில் மோதப்படும் 108ஆவது பொன் அணிகளின் போர்; யாழ்ப்பாணக் கல்லூரி 153, சென். பற்றிக்ஸ் 50 - 2 விக். Published By: Vishnu 06 Mar, 2025 | 09:05 PM (நெவில் அன்தனி) சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமான சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கொட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர்களில் ஒருவரான ஈ. எமக்ஷன் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். ஆனால் மற்றைய ஆரம்ப வீரர் ஆர். ஜோன்சனும் 3ஆம் இலக்க வீரர் கே. ஹரிஷனும் 2ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். ஹரிஷன் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆர். ஜோன்சன் 6 பவுண்டறிகளுடன் 61 ஒட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் வி. விஷ்னுகோபன் 30 ஓட்டங்களையும் அணித் தலைவர் எஸ். மதுசன் 12 ஓட்டங்களையும் எஸ். கோபிஷன் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஜயகுமார் எவொன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பிரேமநாயகம் மதுசன் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விமலதாஸ் பிரியங்கன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குமணதாசன் சாருஷன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் சென். பற்றிக்ஸ் அணி அதன் முதல் இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. விமலதாஸ் டிபானோ 7 ஓட்டங்களுடனும் ரொபின்சன் டினோவன் (ரன் அவுட்) ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழந்தனர். ஸ்டீவ் ஆதித்தியா 21 ஓட்டங்களுடனும் டேவிட் அபிலாஷ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் வி. விஷ்னுகோபன் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/208486
  31. சின்ராசு...எப்படியும் பதவி எடுத்திடவேணுமென்று ஓடுப்பட்டுத்திரியிது...ஒருமாதத்திலை 3 விசிட் இந்தியாவுக்கு.. அது இரத்தமெல்லே...
  32. சின்ராசுவுக்கு அம்னெஸ்ரி , ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கவில்லையாம் செவ்வி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். ரனில் குடும்பியை மறைக்க முயன்றதை பார்க்க முடிந்தது. திக்குமுக்காடி போனார் ரனில்.
  33. உண்மை தான் @putthan . சற்றேறக் குறைய எல்லா உலக இராணுவங்களும்(!) மனிதத் தன்மை இல்லாமல் நடக்கப் பயிற்றப் பட்டவை தான்.
  34. வணக்கம் ரசோதரன் நீங்கள் சுவி எல்லாம் சினிமா படங்களுக்கே திரைக்கதை எழுதக் கூடியவர்கள். பெருமையாகவும் லேசான பொறாமையாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்.
  35. நன்றி ஐயா! காலத்திற்கேற்ற மாற்றங்கள் தெரிகின்றது. தேடல்கள் இலகுவாக இருக்கின்றது.சில தொழில் நுட்பங்கள் மறுக்கப்பட்டாலும் முன்னோக்கிய பயணத்திற்கு நன்றிகள்.🙏
  36. அட... பாவிங்களா.... அப்பாவி குரங்குகளை, மாட்டி விடப் பார்த்திங்களேடா...... 😂 அனுமாரின் சாபம்... உங்களை சும்மா விடாது. 🤣
  37. காற்றாடி - அத்தியாயம் ஆறு -------------------------------------------- சிவா அண்ணா சுகமடைந்து மீண்டும் வேலைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் எடுத்தது. அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் அவன் தியேட்டரில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் திரைப்பட கருவிகள் இருக்கும் அறையிலேயே இருந்தான். அவன் இப்பொழுது தியேட்டரை கூட்டுவதில்லை. காட்சிகள் ஆரம்பிக்கும் போது கலரி வகுப்பின் முன் போய் நிற்க வேண்டிய வேலையையும் அவன் இப்போது செய்வதில்லை. செல்வம் என்னும் ஒருவர் இந்த வேலைகளுக்காக புதிதாக வந்து சேர்ந்திருந்தார். செல்வம் அவனை விட சில வயதுகள் கூடியவர். அதிகமாக கதைக்கமாட்டார். அவரைப் பார்த்தால் தியேட்டரில் வேலை செய்பவர் போல தெரிவதில்லை. அந்த தியேட்டருக்கே அவர் தான் முதலாளி போன்று தான் அவரின் உருவமும், உடுப்புகளும், பாவனைகளும் இருந்தன. சிவா அண்ணா வந்த பின்னரும் அவனை அந்த அறையிலே தங்களுக்கு உதவியாக அவர்கள் இருவரும் வைத்துக்கொண்டனர். சில வேளைகளில் அவனை மட்டும் அங்கே அறையில் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் வெளியே போய் ஒரு பத்து நிமிடங்கள் கழித்தும் வருவார்கள். அவர்கள் சிகரெட் புகைக்கவே வெளியே போகின்றார்கள் என்று அவனுக்கு தெரியும். ஆங்கிலப்படம் ஒன்று தியேட்டருக்கு வந்திருந்தது. அது மாணவர்கள் பலரும் பார்க்க வேண்டிய படம் என்று பாடசாலைகளில், தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து என்று கூட்டம் கூட்டமாக மாணவர்கள் காட்சிகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவன் படித்த பாடசாலையில் இருந்தும் வந்திருந்தார்கள். அவனின் வகுப்பு மாணவர்களும் வந்திருந்தனர். அவன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. முதன் முதலாக அவன் மனதில் ஒரு தயக்கமும், வெட்கமும் வந்திருந்தது. அவனுடன் படித்த மாணவிகளும் வந்திருந்ததே அந்த தயக்கத்திற்கு காரணமாகக் கூட இருக்கலாம் என்றும் தோன்றியது. ஒரு நாள் அன்று வரவேண்டி இருந்த படப்பெட்டி வரவில்லை. பல ரீல்களும் மிகவும் சேதமாகி விட்டது என்று அந்த தியேட்டர்காரர்கள் படப்பெட்டியை அனுப்பவில்லை. புதுப்படம் ஒன்று அடுத்த நாள் வருவதாக இருந்தது. இந்த விடயம் தெரியாமல் அவன் தியேட்டருக்கு போயிருந்தான். அங்கு செல்வமும், முகாமையாளரும் மட்டுமே இருந்தனர். வெளியில் ஒரு அறிவிப்பை போட்டு விட்டு, சிறிது நேரம் இருந்து விட்டு முகாமையாளர் வீட்டிற்கு போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டார். செல்வமும், அவனும் இன்னும் சிறிது நேரம் அங்கிருப்போம் என்று தியேட்டரின் முன் மண்டபத்தில் இருந்த படிகளில் அமர்ந்தார்கள். 'இங்கேயே எப்போதும் இருந்து விடப்போகின்றாயா............' என்று அவனைப் பார்த்துக் கேட்டார் செல்வம். அவனுக்கு செல்வம் என்ன கேட்கின்றார் என்று புரியவில்லை. அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தான். 'இல்லை........... இது தான் நீ எப்பொதுமே செய்யப் போகும் தொழிலா...........' என்று கேட்டார் அவர். 'எனக்கு இது மிகவும் பிடித்திருக்கின்றது................' என்றான் அவன். 'எனக்கும் இது பிடித்திருக்கின்றது. ஆனால் இதில் கிடைக்கும் உழைப்பு ஒன்றுக்குமே காணாதே..............' 'அப்ப நீங்கள் வேறு ஏதாவது தொழிலும் செய்கின்றீர்களா........... நான் பகல் நேரங்களில் வயரிங் வேலைக்கும் போய்க் கொண்டிருக்கின்றேன்.' 'ம்ம்ம்............ அதுவும் ஒரு நிரந்தர வேலை என்றில்லை தானே...........' அவன் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் நிச்சயம் பணத் தேவைக்காக இங்கே வரவில்லை என்பது முன்னரே தெரிந்திருந்தது. ஆனால் இப்பொழுது அவனை என்ன செய்யச் சொல்லுகின்றார் என்பது அவனுக்கு சுத்தமாகவே விளங்கவில்லை. 'நீ ஏன் கப்பலுக்கு போகக் கூடாது...........................' கப்பலுக்கு போவது என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். கப்பலுக்கு போய் வருபவர்கள் ஊருக்கு வந்து நிற்கும் நாட்களில் ஒரு ராஜா போலவே நடமாடுவதை அவன் பார்த்திருக்கின்றான். அவனின் சொந்தத்தில் கூட ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். அவர் ஊர் வந்து நின்ற போது அவர்கள் வீட்டில் அவனுக்கு ஒரு சூயிங்கம் பாக்கெட் கொடுத்தார்கள். இன்னொரு சொந்தக்காரருக்கு ஒரு சட்டை கொடுத்தார்கள். அந்த சட்டையில் உட்புறம் முழுவதும் வெள்ளையாகவும், வெளியில் பளபளப்பாக இருந்ததையும் அவன் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கின்றான். இப்படியான ஒரு சட்டையை பின்னர் எங்காவது வாங்க வேண்டும் என்றும் நினைத்திருந்தான். அப்படி போய் வருபவர்களின் குடும்பமும் ஒரு திடீர் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருந்தனர். அவனும் ஒரு தடவை போய் வந்தால் என்னவென்று அவனுக்கு தோன்றியது. 'எல்லோரும் கப்பலுக்கு போகலாமா, செல்வம் அண்ணா..............' 'ஆ................. எல்லோரும் போகலாம். கட்டுக் காசு கொஞ்சம் கொடுக்க வேண்டும். அதைவிட சில விசயங்களும் இருக்குது. நீ நல்லா படிக்கக்கூடியவன் என்று சொல்கின்றனர்................' 'படித்தனான் தான் அண்ணா, ஆனால் தொடர முடியவில்லை...........' என்று பழியைத் தூக்கி விதியின் மேல் மெதுவாகப் போட்டான். 'கொஞ்சம் படித்தாலே கப்பலில் ஆபிசராக, இஞ்சினியராக வரலாம்........... போக முன் படித்து சில சேர்டிபிக்கட்டுகளை எடுத்தால், அங்கு போய் கடகடவென்று முன்னுக்கு வந்துவிடலாம்....................' செல்வம் அண்ணா தொடர்ந்தும் நிறைய தகவல்களைச் சொன்னார். தன்னுடைய சித்தப்பா ஒருவர் கப்பல் வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவராக இருப்பதாகச் சொன்னார். அவரின் சித்தப்பா மூலம் அவனுக்கு அவர் உதவி செய்வதாகச் சொன்னார். அவன் கொஞ்சம் திரிகோண கணிதம் படித்து வைத்தால் நல்லது என்றும் சொன்னார். அந்த ஒற்றை வசனம் அவனை தூக்கி அடித்தது. அவன் தன் கணிதப் பிரச்சனையை அவரிடம் இன்னும் சொல்லவேயில்லை. அவரே தொடர்ந்து ஊரில் இந்த அடிப்படைகளை ஒருவர் படிப்பிக்கின்றார் என்று சொல்லி, அவனை அங்கே போகச் சொன்னார். ரவி அண்ணா என்னும் அந்த ஆசிரியர் மிகவும் மெல்லிய குரலில் பாடத்தை ஆரம்பித்தார். பாடம் நடந்து கொண்டிருக்கும் இடம் அவனின் நண்பன் ஒருவனுடைய வீட்டின் பின்பக்கம் தனியாக இருக்கும் ஒரு அறை. அங்கு ஏற்கனவே பல மேசைகளும், வாங்கில்களும் போடப்பட்டிருந்தன. நண்பனின் அப்பா ஒரு ஆசிரியர். அவர் ஒரு காலத்தில் இங்கு பாடம் சொல்லிக் கொடுத்திருந்தார். இப்போது அவர் பாடசாலையை தவிர வேறு எங்கும் படிப்பிப்பதில்லை. பெரும்பாலும் கிரேக்க எழுத்துகளில் பாடம் போய்க் கொண்டிருந்தது. (தொடரும்.........................)
  38. தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன். இங்கு ஒரு குரங்கால்… நாடு முழுக்க மின்சாரம் தடைப்பட்டதாக, மின்சார துறை அமைச்சர் கருத்து கூறி… அரசாங்கத்தின் தவறை குரங்குகளின் மீது சுமத்தி இருந்தார். ஏற்கெனவே தேங்காய் தட்டுப்பாட்டிற்கும் குரங்குளின் மீது பழி சுமத்தி இருந்தது போதாது என்று… இது வேறு. 😂 சில வருடங்களுக்கு முன்பு… தமிழ் நாட்டில் மின்சாரம் தடைப் பட்டதற்கு… அணில்கள் காரணம் என்று ஒரு அமைச்சர் கூறியது உங்களுக்கு நினைவு இருக்கலாம். 🤣
  39. காற்றாடி - அத்தியாயம் நான்கு ----------------------------------------------- தனம் மாமி வீட்டுக்கு வந்திருந்தார். ஊரில் முறை தெரிந்த சொந்தக்காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் மாமா, மாமி, அண்ணா, அக்கா, அப்பாச்சி, அம்மாச்சி, இப்படி ஏதாவது ஒரு உறவுமுறை சொல்லி அழைப்பதே வழக்கம் என்றாகியிருந்தது. முறை தெரிந்த சொந்தக்காரர்களை அவர்களின் முறையை வைத்தே அழைத்துக் கொண்டார்கள். ஒரு சில அரச உத்தியோகத்தர்களைத் தவிர, வேறு எவரையும் ஒரு உறவுமுறையில் இல்லாமல் குறிப்பட்டதாகவோ அல்லது அழைத்ததாகவோ ஞாபகமில்லை. தனம் மாமி சொந்தத்தில் மாமி இல்லை. இதே ஒழுங்கையில் அவரும் குடியிருக்கின்றார். வீடு நிறைய ஆண் பிள்ளைகளை பெத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றார். அவர்களில் இருவரைத் தவிர மற்ற எல்லோருமே அவனை விட வயது கூடியவர்கள். பெண் பிள்ளை ஒன்று வேண்டும் என்றே, அடுத்து அடுத்து ஆண்பிள்ளைகளை சளைக்காமல் பெற்றதாக தனம் மாமி சொல்லியிருக்கின்றார். அவனின் வீட்டில் ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் மாறி மாறிப் பிறந்திருந்தார்கள். அவனின் வீட்டில் வேறு ஒரு கொள்கை வழியில் பெற்றிருக்கின்றார்கள் போல. 'என்ன, மூத்தவன் படிப்பை நிற்பாட்டி விட்டானாம்.................' என்று ஆரம்பித்தார் தனம் மாமி. அவனின் அம்மா பரீட்சை அன்று கடுமையாக மழை பெய்ததால், அவன் பரீட்சைக்கு போகவில்லை, அதனால் படிப்பு நின்று போனது என்று ஒரு வெள்ளந்தியாக கதைக்கவில்லை. அம்மா அப்படிக் கதைக்கவேமாட்டார். அவர் பிடி கொடுக்கவேமாட்டார். ஒரு ஆணாக பிறந்திருந்தால், அவர் எப்படியோ ஒரு பெரியாளாக ஆகியிருப்பார். பெண்ணாகப் பிறந்தபடியால், ஓட்டைகளில்லாத கறுப்பு புல்லாங்குழல் போல இருக்கும் ஒன்றால் சர்வ காலமும் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கின்றார். அவனும் அதை ஊதிப் பார்த்திருக்கின்றான். ஒரு தடவை ஊதுவதற்கு பதிலாக, அடுப்புப் புகையை உள்ளே இழுத்துவிட்டான். இருமிக் கொண்டே ஊதுகுழலை கீழே போட்டு விட்டு, அதை திருப்பி எடுக்கும் போது, அதன் அடுத்த பக்கத்தில் பிடித்து தூக்கியும் விட்டான். எந்த வேலைக்கும் அனுபவம் மிகவும் முக்கியம். 'படிப்பு என்ன படிப்பு, படிக்காதவர்கள் தான் இன்று உலகத்தை ஆளுகின்றார்கள்............' என்று தொடர்ந்தார் தனம் மாமி. ஏட்டுச் சுரைக்காயில் எங்கே கறி வைப்பார்கள், கழனிப் பானைக்குள் யார் கவிழ்ந்து விழுகின்றார்கள், இப்படி இன்னும் சில உதாரணங்கள் ஒரு மன ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டன. அவரின் பிள்ளைகள் எவருக்கும், இதுவரை, இந்தப் பழமொழிகளையும், முதுமொழிகளையும் எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேவையும் வரவில்லை. நாலு மனிதர்களுடன் மட்டும் பழகுகின்றோம், அந்த நால்வரும் ஒன்றையே சொல்கின்றனர் என்றால் முழு உலகமே ஒத்த குரலில் அதையே சொல்வது போன்றே இருக்கும். இன்று இலங்கையின் பெரிய பணக்காரராக இருப்பவர், அவர் படிக்கவேயில்லை, கொழும்பில் தெருத்தெருவாக பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தாராம் என்று தனம் மாமி இலங்கையில் உள்ளவர்களிலேயே பெரிய சாட்சியாக ஒருவரை கொண்டு வந்து நிறுத்தினார். 'பிறகு............... அவருக்கு என்ன லொத்தரே விழுந்தது...............' என்று அவனின் அம்மா ஆச்சரியம் காட்டினார். அம்மா கேட்பதைப் பார்த்தால், அந்தப் பணக்காரருக்கு லொத்தர் விழவில்லை என்பது அம்மாவிற்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது போன்றே அவனுக்கு தெரிந்தது. கடுமையாக உழைத்து, படிப்படியாக அவர் முன்னேறினார் என்று தனம் மாமி சொன்னார். தன்னுடைய மூத்த பிள்ளைகளும் கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அதில் மூத்த அண்ணன் போன மாதம் இதே ஒழுங்கையில் இருக்கும் அக்கா ஒருவருக்கு கடிதம் கொடுத்து, அது பெரிய வாக்குவாதம் ஆகியது. அன்று இரவு அந்த அக்காவின் வீட்டிற்கு கல்லெறி கூட விழுந்தது. இரவு வெளியே வரப் பயந்து இருந்த அவர்கள், விடி விடியென ஆள் சேர்த்துக்கொண்டு அடிக்கப் போனார்கள். தனம் மாமி வீட்டில் என்ன நடந்தது என்றே தெரிந்திருக்கவில்லை. வேற யாரோ ஒரு கணக்குப் பண்ணி, அந்த அக்காவின் வீட்டிற்கு இரவு கல்லை எறிந்து விட்டுப் போயிருக்கின்றார்கள் போல. கொழும்பில் பேப்பர் பொறுக்கி, பின்னர் பெரும் பணக்காரராக ஆனவரும் முதலில் அவரின் சொந்த ஊரில் ஒரு கடிதப் பிரச்சனையில் மாட்டுப்பட்டிருப்பாரோ என்று அவன் நினைத்தான். அவனை அப்பொழுது தான் கண்ட தனம் மாமி, 'என்ன வேலைக்கு போகின்றாய்..................' என்றார். அவனின் அம்மா வயரிங் வேலைக்குப் போகின்றான் என்று சொன்ன அதே நேரத்தில், அவன் தான் தியேட்டரில் வேலை செய்வதாகச் சொன்னான். சில பின்னேரங்களிலும், இரவுகளிலும் அங்கே போய் தியேட்டரிலும் சும்மா நிற்கின்றவன் என்று அவனின் அம்மா, அப்படியே அவனை முறைத்துக் கொண்டே, சமாளித்தார். 'தியேட்டருக்கு எல்லாம் போகவே கூடாது, அங்கே தான் எல்லா கெட்ட பழக்கங்களையும் இந்தப் பிள்ளைகள் பழகுதுகள்...............' என்று சொல்லிக்கொண்டே மாமி நல்ல வசதியாக பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்து கொண்டார். மேடைப்பேச்சாளர் ஒருவர் தொண்டையைக் கணைத்து முழுவீச்சில் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பது போன்ற ஒரு நிலையில் மாமி இருந்தார். இன்று இரவு மாமி வீட்டிற்கு யாரும் கல்லால் எறிந்தால் பரவாயில்லை என்று எண்ணம் ஒரு மின்னல் போல தோன்றி மறைந்தது. புகை, குடி, கூத்து என்று பல கெட்ட பழக்கங்கள் வரிசையாக அடுக்கப்பட்டன. எல்லாமே தியேட்டரிலேயே ஆரம்பிக்குது என்றார். ஆனால், காதல், கடிதம் என்ற சொற்கள் மட்டும் வரவேயில்லை. நல்லதோ, கெட்டதோ வெளியில் தான் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. எந்த மனிதனும் கொஞ்சமாக கண்ணை மூடி அவனுக்குள்ளே எவைகளையும் தேடுவதில்லை. (தொடரும்.........................)
  40. காற்றாடி - அத்தியாயம் மூன்று ----------------------------------------------- இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வேலை என்று சொல்லப்படும் வீடுகளுக்குள் செய்யும் மின்சார அமைப்பு வேலையையும், பின்னேரம் மற்றும் இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் தியேட்டரில் ஒரு வேலையையும் செய்ய ஆரம்பித்திருந்தான். வயரிங் வேலை செய்வதற்கு அவன் வீட்டில் உடன்பட்டார்கள். ஆனால் தியேட்டரில் வேலை செய்வதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தனர். அவன் வயரிங் வேலைக்கு போவதற்கு காரணமே, அதன் காரணமாக தியேட்டரில் அவன் வேலைக்குப் போவதற்கு வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்ற ஒரே ஒன்றுக்காக மட்டுமே. மற்றபடி வயரிங் வேலையில் அவனுக்கு எந்த நாட்டமும் இல்லை. அதுவும் அந்தக் காங்கிரீட் சுவர்களுக்குள்ளால் வயர்களை கொண்டு செல்வதற்காக, அந்த சுவற்றை வெட்டுவது போன்ற ஒரு வேலையில் எவருக்குத் தான் நாட்டம் வரும். ஆனால், அவனை வேலையில் துணையாக கூட்டிப் போகும் அயலவர் சில வயதுகள் கூடியவர் என்றாலும், நல்ல ஒரு நண்பர் போன்றே பழகினார். வேலை முடிந்தவுடன் அன்றன்றே அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். அதில் ஒரு பகுதியை அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான். பல நாட்களிலும் வேலையும் இருக்கும். சினிமாவும் தியேட்டரும் அவனுக்கு ஒரு கனவு போல. அவன் பிறந்ததே சினிமாவிற்கு என்று அவனுக்குள் ஒரு உறுதியான எண்ணம் இருந்தது. பொதுவாக சமூகத்தில் எல்லோருக்கும் இருக்கும் அளவில்லாத நாயக நாயகிகள் மீதான கவர்ச்சி அவனிடம் மிகக்குறைவாகவே இருந்தது. சினிமா என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, அதில் வரும் விடயங்களும், அங்கே வரும் கதாபாத்திரங்களும், அவற்றை திரையில் கொண்டு வரும் நடிகர்களும் உண்மை என்றே பலரும் எண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் முடியாத, ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் சில நாயகத்தனங்களை திரையில் கண்டு, அதுவேதான் தாங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் போல. இந்த சமூகத்தில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் தீராத கவர்ச்சிக்கு இந்த மனப்பன்மையும் ஒரு அடிப்படைக் காரணம். அவனுக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகின்றது, பின்னர் அது எவ்வாறு திரையில் ஓடுகின்றது என்பதிலேயே ஆர்வம் இருந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் இருக்கும் படங்களை ஒரே அளவுகளில் வெட்டி, அவற்றை நீட்டாக ஒட்டி, ஒரு சுருளாகச் சுற்றி , நடுவே ஒரு ஈர்க்கை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து, இப்படித்தான் சினிமா உருவாகின்றது என்று அவனாகவே பரீட்சித்துப் பார்த்திருக்கின்றான். பின்னர் சிந்தனையில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு படம் அளவு இடைவெளியில் இரண்டு ஈர்க்குகளை வைத்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவனின் படச்சுருளை சுற்றிப் பார்த்தான். இது தான் சரியான தொழில்நுட்பம் என்று, அதையே இன்னும் முன்னேற்றி, பலருக்கும் அம்புலிமாமா படங்கள் காட்டியும் இருக்கின்றான். தியேட்டரில் வேலைக்கு போனவுடன், தினமும், தியேட்டரின் உள்பக்கத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையாக கூட்ட வேண்டும் என்றில்லை. முன்பக்கம், முகாமையாளர் அறை மற்றும் தியேட்டரின் உள்ளே இருக்கும் நடைபாதைகளை கூட்டவேண்டும். அத்துடன் படம் பார்த்து விட்டுப் போனவர்கள் போட்டுவிட்டுப் போகும் கஞ்சல், குப்பை, கழிவுகளையும் அள்ளி எடுத்து, வெளியில் தியேட்டரின் பின்னால் இருக்கும் குப்பையில் கொண்டு போய் கொட்டவேண்டும். அதை விட்டுவிட்டுப் போனோம், இதை விட்டுவிட்டுப் போனோம் என்று பின்னர் ஓடி வருபவர்களும் உண்டு. அவன் நேராக பின்னால் இருக்கும் அந்த சின்ன குப்பை மலையைக் காட்டுவான். அநேகமானவர்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடி எடுக்காமலேயே போய்விடுவார்கள். சிலர் அவனையும் சேர்ந்து தேடச் சொல்லியிருக்கின்றனர்.சிலருக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பொல்லாத கோபம் வந்து, சீறி விழுந்தும் இருக்கின்றனர். தங்களின் கதாநாயகர்களின் பின்னால், அவர்கள் உலவும் இடத்தின் பின்னால், இப்படி ஒரு குப்பை மலை இருப்பதை அவர்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்தவுடன், கலரிப் பகுதியில் உள்ள கதவில் அவன் போய் நிற்கவேண்டும். அங்கே வருபவர்களின் அனுமதிச்சீட்டுகளை கிழித்து, அவர்களை உள்ளே விடவேண்டும். கலரிப் பகுதியில் நீண்ட வாங்குகள் மட்டுமே போடப்படிருந்தது. தனிதனியான இருக்கைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்ற இரு பக்கங்களும் கிடையாது. அதனால் தான் அது மிகக்குறைந்த விலையில் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. திரைக்கு அருகில் இந்தப் பகுதி இருக்கும். கழுத்தை நிமிர்த்தியே படம் பார்க்கவேண்டும். இந்தப் பகுதியின் பின்னால் இரண்டாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, ரிசர்வ் என்று மூன்று பகுதிகள் அந்த தியேட்டரில் இருந்தன. மேலே பால்கனி என்று இன்னொரு பிரிவும் இருந்தது. அதற்கான அனுமதி எல்லாவற்றையும் விட மிக அதிகம். பால்கனிக்கு அருகிலேயே, ஒரு தனி அறையில், படம் ஓடும் இயந்திரங்கள் இருந்தன. ஒரு நாள் கலரியிலிருந்து அந்த அறைக்கு முன்னேறுவதே அவனின் இலட்சியமாக இருந்தது. (தொடரும்...................)
  41. ஒரு பெண் சுயநினைவில்லாமல் இருக்கும்போது அவரை தமது உடற்பசிக்கு இரையாக்கிய இந்த கேடுகெட்ட கயவர்களுக்குக் கொடுத்த தண்டனை போதாது. டொமினிக் ஒரு சதமும் வாங்காமல் தனது மனைவியை மற்றவர்கள் புணர்வதை வீடியோ எடுப்பதை மாத்திரம் நிபந்தனையாகச் சொல்லியிருக்கின்றான். இந்த விகாரமான விடயம் அந்த 50 பேருக்கும் ஏன் உறுத்தலை ஏற்படுத்தவில்லை? பெண்ணை வெறும் போகப்பொருளாக மட்டும் பார்க்கும் ஆணின் மனம்தான் காரணம் என்று நினைக்கின்றேன். அவர்களில் ஒருவர்கூட பொலிஸிடம் முறையிடவில்லை. டொமினிக் பாவாடைக்குள் படம்பிடித்ததை சுப்பர்மார்க்கெற் செக்கியுரிட்டி முறைப்பாடு செய்திருக்காவிட்டால் டொமினிக் இப்பவும் தனது மனைவியை மயக்கமருந்தைக் கொடுத்து மற்றவர்கள் அவரைப் புணர்வதை வீடியோ எடுத்துக்கொண்டிருப்பான்!
  42. கவிதைக் களத்திற்கு நல்ல கவிதையால் காருண்யத்துடன் நீர் வார்த்துள்ளீர்கள் ........! 👍 தொடர்ந்து வார்க்கவும் . ........!
  43. கவிதை அருமை. இன்னும் எழுதுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.