Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38770
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/27/25 in all areas

  1. ஐபிஎல் 2025 இன் 07வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இரு விக்கெட்டுகளை மூன்றாவது ஓவரில் இழந்திருந்தும் ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடியான 47 ஓட்டங்களுடன் அனிகெற் வேர்மாவின் ஐந்து சிக்ஸர்களுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மிச்செல் மார்ஷினதும் மின்னல் அடி நிக்கொலஸ் பூரனினது 70 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. மைதானங்களை விட இந்த ஐபிஎல் போட்டிகளே பணத்துக்காக தான். ஆறுகளும் நான்குகளும் பறந்தால் தான் மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கொண்டாட்டம். அதிகமான விதிகள் மட்டையாளர்களுக்குச் சாதகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் தான் நான் ஜபிலை பெரிதாகப் பார்ப்பதில்லை. இந்தக் களத்தில் கலந்து கொண்ட பின்னர் தான் கூடுதலாக பார்த்திருக்கின்றேன், பார்த்துக் கொண்டிருக்கின்றேன், தொடர்ந்தும் பார்ப்பேன் போல தான் உள்ளது. ஏனென்றால் இந்தக் களம் கொடுக்கும் போதை. இந்த முறை எந்த அணி 300 ஓட்டங்கள் அடிக்கும் என்று அடிக்கடி கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் நோக்கமே இப்படி உசுப்பி விட்டு பணம் பார்ப்பது தான். கிரிக்கெட் என்ற விளையாட்டின் அடிப்படையே காணாமல் போய்விட்டது.
  3. கண்ணிலே இருப்பதென்ன கன்னியிள மானே ........... ! 😍
  4. பிரித்தானியா அரசாங்கத்தின் இராணுவ அதிகாரிகள் மீதான தடை தங்களின் நல்லிணக்க செயல்முறைக்கு உதவாது என ஜேவிபி அறிவித்திருக்கின்றது அதே போல பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக சொல்லி இருக்கின்றது குறிப்பாக மனித உரிமை மீறல்கள் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும் என பழைய கதை பேசியிருக்கின்றது ஆனால் அதே ஜேவிபி போர்குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படுள்ள சம்பத் துயகொண்டாவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்துள்ளது Haiti நாட்டில் குழந்தைகளை பா*லியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த இராணுவத்திற்கு தலைமை தாங்கிய அதிகாரிகளில் ஒருவரான அருணா ஜெயசேகராவை பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளது பிரித்தானியா தடை விதித்த அதிகாரிகளில் 11 கொழும்பு தமிழ் இளைஞர்கள் கடத்தி கொ*ல்லப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி வசந்த கரன்னாகொட அவர்களும் உள்ளடங்கிருக்கிறார் உள்நாட்டு பொறிமுறையில் தீர்வு பற்றி பேசும் ஜேவிபி இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு உதவிய கடற்படை தளபதி சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க அவர்களை துறைமுக அதிகார சபை தலைவராக நியமித்துள்ளது யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிராகரித்திருக்கின்றது போர்க்குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்ட எந்த அதிகாரிகளையும் தண்டிக்க போவதில்லை என அறிவித்துவிட்டு பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதாக சொல்லுகின்றது நல்லிணக்கம் பற்றி பேசும் ஜேவிபி தையிட்டி விகாரை விவகாரத்தில் போராடிய மக்கள் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் விசாரணைகளை நடத்தி அச்சுறுத்தி வருகின்றது இது போதாதென்று குறித்த விகாரை சூழலில் சட்டவிரோதமாக புதிய மடாலயம் மற்றும் புத்தர் சிலையை திறந்து வைத்திருக்கின்றது ஆனால் அங்குள்ள சட்டவிரோத கட்டுமானம் குறித்தோ அல்லது அதற்கு மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் எந்த விசாரணையும் இல்லை இது போதாதென்று பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு 20 தமிழ் சிவில் மற்றும் அரசியல் செயற்பட்டாளர்கள் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஏவிவிட்டிருக்கின்றது சம காலத்தில் மட்டக்களப்பு அரச வங்கியொன்றில் நுழைந்து அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சுமணரத்தின தேரர் மீது எந்த நடவடிக்கையுமில்லை திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்திய பாணமுரே திலகவன்ச தேரர் மீதான முறைப்பாடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வவுனியா ஊற்றுக்குளம் சாட்டவிரோத சபுமல்கஸ்கட விகாரை சூழலில் புதிய தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கிருக்கின்றது திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் வட்டவான் பகுதியில்“வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு புதிய தொல்லியல் இடமொன்றுக்கு அனுமதியளித்திருக்கின்றது அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது பயங்கரவாத சட்டம் நீக்கப்படும் என்கின்ற வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிருக்கின்றது விசேடமாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று கொடுப்பது குறித்து எந்த அக்கறையுமில்லை குறிப்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்ளும் அமைப்பு என்பது தெளிவாக இருக்கின்றது நடைபெற்ற குற்றங்களை விசாரித்து தமிழர்களுக்கு நீதி செய்ய வேண்டும் என்கின்ற அரசியல் விருப்பு (political will) எள்ளளவும் ஜேவிபி க்கு கிடையாது என்பதும் நிரூபணமாகின்றது ஜேவிபியின் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களும் ஜேவிபியை நியாயம் செய்யும் அறிஞ்சர் (?) பெருமக்களும் இப்போதாவது தங்கள் வாயை திறக்க கூடாதா ? Facebook...இனமொன்றின் குரல்..நன்றீ
  5. இது தோழர் அனுராவின் ஆட்சியை கவிழ்க்க வலதுசாரிகள் செய்யும் திட்டமிட்ட செயல் ...சுற்றுலா பயணிகள் கடற்கரையில் சுதந்திரமாக திரிவதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சி..இதனால் சுற்றுலா துறை பாதிப்படைய போகின்றது....டொலர் நாட்டுக்குள் வருவது குறைந்து விடும்...இதை சாட்டாக வைத்து ரணில் ,மகிந்தா போன்றவர்கள் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர் ....😅 மீன்பிடி அமைச்சர் இந்த முதலைகளை வடபகுதி கடற்கரைக்கு துரத்தி விட்டு இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்த நடவடிக்கை எடுக்கலாம் 😅
  6. ஒரே ஒரு இழையில் தொங்கியபடி ஒரு சிலந்தி இருந்தது. எங்கிருந்தோ யாரோ சொன்னார்கள், சிலந்தி இருப்பது கூட்டுக்கு நடுவில் அல்லவா? சிலந்தியும் ஊடுபாவாக கூடு கட்டத் துவங்கிற்று. போதாக்குறைக்கு உலக வலைப்பின்னலிலும். ... இப்போதெல்லாம் அது கட்டிவிட்ட கூட்டிலிருந்து தப்பிவிடத் தான் எத்தனிக்கிறது ஆனால் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி இழைகளே அதை நெரிக்கின்றன அதன் கூக்குரலோ வலைப்பின்னல்களில் எதிரொலித்தாலும் யாருக்கும் கேட்பதாயில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் தன்னைப் போலவே பல சிலந்திகள்... சிலதோ ஏதோ ஒரு உத்வேகத்தோடு, கழுத்தை நெரித்தாலும் - மேலும் மேலும் வலைகளைப் பின்னுவதும் தெரிகிறது. இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது வலையைப் பின்னப்போய் வாழ்க்கையை இழந்து விட்டேனே.
  7. சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு Published By: Rajeeban 24 Mar, 2025 | 09:05 PM இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய பாதுகாப்பிற்குஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் பிரிட்டன் எப்போதும் ஈடுபட்டுவந்துள்ளது. பிரிட்டனால் தடைவிதிக்கப்பட்டவர்கள் முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய.பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் கருணா அம்மான்.இவர் பின்னர் அதிலிருந்து பிரிந்து, துணை இராணுவக்குழுவை உருவாக்கினார் அந்த அமைப்பு இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டது. https://www.virakesari.lk/article/210107 UK sanctions for human rights violations and abuses during the Sri Lankan civil war The UK has today sanctioned figures responsible for serious human rights violations and abuses during the civil war in Sri Lanka. Foreign, Commonwealth & Development Office the UK sanctions former Sri Lankan commanders and an ex–Liberation Tigers of Tamil Eelam (LTTE) commander responsible for serious human rights violations and abuses during the civil war sanctions aim to seek accountability for serious human rights violations and abuses, committed during the civil war, and to prevent a culture of impunity UK is committed to working with new Sri Lankan government on human rights, welcoming their commitments to national unity The UK government has imposed sanctions on 4 individuals responsible for serious human rights abuses and violations during the Sri Lanka civil war, including extrajudicial killings, torture and/or perpetration of sexual violence. The individuals sanctioned by the UK today include former senior Sri Lankan military commanders, and a former LTTE military commander who later led the paramilitary Karuna Group, operating on behalf of the Sri Lankan military against the LTTE. The measures, which include UK travel bans and asset freezes, target individuals responsible for a range of violations and abuses, such as extrajudicial killings, during the civil war. Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs, David Lammy, said: During her January visit to Sri Lanka, Minister for the Indo-Pacific, Catherine West MP, held constructive discussions on human rights with the Prime Minister, Foreign Minister, civil society organisations, as well as political leaders in the north of Sri Lanka. For communities to move forward together, there must be acknowledgement, and accountability for past wrongdoing, which the sanctions listings introduced today will support. We want all Sri Lanka communities to be able to grow and prosper. The UK remains committed to working constructively with the Sri Lankan Government on human rights improvements as well as their broader reform agenda including economic growth and stability. As part of our Plan for Change, the UK recognises that promoting stability overseas is good for our national security. The UK has long led international efforts to promote accountability in Sri Lanka alongside partners in the Core Group on Sri Lanka at the UN Human Rights Council, which includes Canada, Malawi, Montenegro, and North Macedonia. Background Those sanctioned are: former Head of the Sri Lankan Armed Forces, Shavendra Silva former Navy Commander, Wasantha Karannagoda former Commander of the Sri Lankan Army, Jagath Jayasuriya former military commander of the terrorist group, the Liberation Tigers of Tamil Eelam, Vinayagamoorthy Muralitharan. Also known as Karuna Amman, he subsequently created and led the paramilitary Karuna Group, which worked on behalf of the Sri Lankan Army The UK has supported Sri Lanka’s economic reform through the International Monetary Fund (IMF) programme, supporting debt restructuring as a member of Sri Lanka’s Official Creditor Committee and providing technical assistance to Sri Lanka’s Inland Revenue Department. The UK and Sri Lanka share strong cultural, economic and people to people ties, including through our educational systems. The UK has widened educational access in Sri Lanka through the British Council on English language training and work on transnational education to offer internationally accredited qualifications. View the full UK Sanctions List. https://www.gov.uk/government/news/uk-sanctions-for-human-rights-violations-and-abuses-during-the-sri-lankan-civil-war
  8. "எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " "எங்கே எனது ஒளி" எங்கே எனது ஒளி சொல்வாயோ அங்கே எனக்கு இடம் வேண்டும் மங்காத ஒளியாய் வெண் பிரம்பு ஏங்கும் இதயத்துக்கு ஒரு வழிகாட்டி சங்கு ஊதி வழிகாட்டுவது போல தங்கக் கோல் குருடனின் வெளிச்சம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. "காளையை அடக்கு கன்னியை மடக்கு " காளையை அடக்கு கன்னியை மடக்கு மாலையை அணிந்து தாலியைக் கட்டு மேளத்தைத் தட்டி ஊர்வலம் செல்லு கோலத்தைப் போட்டு பொங்கலைப் பொங்கு! சிவப்புத் துணியை கையில் ஏந்து மஞ்சள் நிலாவில் மார்பில் சாய கருத்த எருதின் திமிலைப் பிடி வெள்ளை நெற்றியில் திலகம் இட! இடுப்புச் சிறுத்தவளை பரிகாசம் செய்தவளை இறுமாப்பு கொண்ட மண்டை பெருத்தவளை ஏறுதழுவி வெற்றி கண்டு மடக்கு வீறாப்பு விட்டு வந்திடுவாள் உன்னுடன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. அங்கும் பெரும்பான்மையின குரங்குகள் ஆட்சிஅமைக்கும்...மாகாணசபை எலக்கசன் வைத்தால் ..முசுலிம் என்பிபி..ஒருசபையையும்...தமிழ் என்பி பி ஒருசபையையும் கைப்பற்றும்...ஊராட்ட்சி சபை தேர்தலும் நடக்கலாம் ..அதில் சுமந்திரனின் ஆட்கள் சிங்களத்துக்கு ..ஊர் நமகென்றூ.. கேட்பினமோ.. குரங்குக்கு எல்லை போட்டுக்குடுக்கிற இனம் என்பதை வரலாறும் பதிவு செய்யும்...என்ன் அவர்களுக்கு மாற்றுடுப்பு..எடுத்துக் கொடுக்கவில்லையோ...அல்லது பின்னர் ஒரு கோடி ஒதுக்குவினமோ..
  10. உங்களுடைய கவிதையும் அதை உணர்த்தும் ஓவியமும் வெகு சிறப்பாக உள்ளது ......... உங்களிடம் பல திறமைகள் உள்ளது ......... அவற்றை வெளிப்படுத்த இது ஒரு நல்ல களம் ......... ! 👍
  11. சந்தேகம் ஏன்? உங்கள் கற்பனையும் ஓவியமும் நன்றாகத்தான் இருக்கின்றது. தொடருங்கள்.👌
  12. கண்ணதாசன் திரைப்படங்களுக்கானக்கான வசனகர்த்தாவாக இருந்து பாடலாசிரியரானவர். அந்த நேரத்தில் பாபநாசம் சிவம், தஞ்சை ராமதாஸ், குமா. பாலசுப்ரமணியம், காமு ஷெரிப் போன்றவர்களே திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருந்தனர். அம்பிகாவதி படத்தின் தயாரிப்பாளர், பானுமதி பாட இருந்த பாடலுக்கு கண்ணதாசனை பாட்டெழுதக் கேட்டுக் கொண்டார். கண்ணதாசனை பானுமதிக்கு பெரியளவு தெரிந்திருக்கவில்லை. தான் நடிக்கும் படத்துக்கு கண்ணதாசன் பாடல் எழுதுவதை பானுமதி விரும்பவில்லை. அனாலும் மறுக்க இல்லை. கண்ணதசனுக்கு இந்த விடயம் தெரியவர பாடலில் முடிந்தளவு தன் திறமையைக் காட்டினார். அதிலும் அவர்எழுதிய, “பானுமதி மாறி வரும் வானகத்து மீனே பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளமானே..” வரிகளில் பானுமதி அசந்தே போய்விட்டார்.
  13. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஆண் : உனக்கு மாலையிட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் எனக்கு என்மேலதான் ஆசையில்லை உன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றி உன்னோடதான் தச்சேன் பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியமா இருப்பேனே பகல் இரவா பெண் : உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் எனக்கு என்மேலதான் ஆசையில்லை உன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றி உன்னோடதான் தச்சேன் பெண் : ஒதுங்காதே தொட்டு உசுப்பேத்தி விட்டு உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சுல பச்சைய குத்தி வச்சேன் ஆண் : இதுதான்தி ரதம் இதுல தான் நெதம் உன்னதான் உட்கார வச்சி நான் ராசாத்தி ராசா நான் ஊர்கோலம் வந்திடுவேன் பெண் : உன்னோடு நான் சேர தின்னேனே மண் சோறு நேந்துதான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு ஆண் : ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும் நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும் பெண் : நீ மாலை இடும் வேலை எது கேட்குது என் தோளு பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியமா இருப்பேனே பகல் இரவா ........! --- எனக்காக பொறந்தாயே ---
  14. GMT நேரப்படி நாளை வெள்ளி 28 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK எதிர் RCB 18 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் மாத்திரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுவி செம்பாட்டான் ரசோதரன் நந்தன் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  15. திருவாளர் வசி அவர்களே, தன்னடக்கம் இருக்கலாம் அதற்காக இவ்வளவு அடக்கம் தேவை இல்லை. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் நுட்பமாக அலசக்கூடியவர் நீங்கள். அதை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். குப்பை கொட்டுவதற்கு நாங்கள் கொஞ்சம் பேர் இங்கே இருக்கின்றோம். நாங்கள் அந்தத் திணைக்களத்தைப் பார்த்துக் கொள்கின்றோம்.
  16. உண்மை. சிங்களம் தப்பிக்க தமிழர் தரப்பின் மேல் பழியை போடும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சரணடைய வந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளனர். கோத்தா தான் இதற்கு உத்தரவு இட்டது. அத்துடன் பாலச்சந்திரன் இவர்களுடன் சேர்ந்து சரணடைய வரவில்லை. தலைவரின் நெருங்கிய உறவு ஒருவரால் இராணுவம் அனைத்தையும் முழுமையாக கைப்பற்றிய பின் அழைத்துவரப்படும் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர் என்று தான் அறிந்தேன்.
  17. நல்லது அவர்கள் என்ன சொன்னார்கள் பேச்சுவார்த்தையில் இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக தானாம் நிறுத்த முடியும்.தாங்கள் களவு எடுக்க வருகின்ற போது பாதிப்பு ஏற்பாடம இருக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாம்🤣
  18. பார்த்தேன் சிரித்தேன் இன்னும் நினைத்து நினைத்து சிரிக்கிறேன் . .......... bp , பிரசருகெல்லாம் சிறந்த மருந்து ........ (லாஜிக் பார்க்கக் கூடாது )...........! 😂
  19. பெரிதாக பள்ளிக்கூடத்தில் கனகாலம் குப்பை கொட்டாததால் (இடைநிலை கல்வியோடு முடிந்து விட்டது) இந்த ராங்குகளில் ஏனோ ஆர்வம் ஏற்படவில்லை. நான் எப்போதும் இறுதியாகவே வருவேன் அது தொடர்பில் எந்த வித உணர்வும் ஏதோ இருப்பதில்லை.🤣 ஆனால் சுவாரசியத்திற்காக எழுதுவதுண்டு நிங்களும் அவ்வாறே சுவாரசியத்திற்காக கூறுகிறீர்கள், ஆனால் பையன் இறுதியாக நடந்த சாம்பியன் கிண்ண சாம்பியன், அவரை இறுதியாக வந்த என்னுடன் இணைத்து விட்டீர்களே இது நியாயமா?🤣 செம்பாட்டான், எப்பொதும் தமிழன், கந்தப்பு, கோசான் என பலர் எங்களை விட விபரம் புரிந்தவர்கள் இருக்க எங்களை மட்டும் நீங்கள் குறிப்பிட்டுள்ளதனை உன்னிப்பாக கவனிக்கின்றோம்.🤣 ஆனால் இந்த போட்டிகளில் கலந்து கொண்ட பின் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தொடங்கியுள்ளேன்.
  20. ராஜ ராஜ சோழன் by சதா மாஸ்டர்
  21. ஒரு குற்றவாளி எவ்வாறு தன்னை தானே விசாரிக்க முடியும்??? தண்டனை வழங்க முடியும்?? மேலே உள்ள நால்வரும். குற்றவாளிகள் என்று ஒப்புக் கொண்டால் நீங்கள் விசாரணை செய்ய முடியும் .......அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று சொல்பவர்கள். விசாரணை செய்ய தகுதி அற்றவர்கள். அதாவது இலங்கை விசாரணை செய்ய தகுதி அற்றது 🙏
  22. இவற்றின் சூத்திரதாரிகளே நீங்கள்தான். மனித உரிமை மீறல்கள் நிரூபிக்கப்படவில்லையென்று அப்பாவி மக்களை ஏமாற்றுகிறீர்கள், சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறீர்கள், கால அவகாசம் கேட்டு இழுத்தடிக்கிறீர்கள், போரின்போது நடந்த சம்பவங்களை மக்கள் பார்க்காதபடி தடை விதிக்கிறீர்கள், சம்பந்தப்பட்ட நாடுகள் விசாரணையை ஆரம்பிக்க நாட்டை விட்டு தப்பியோடுகிறீர்கள், மின்சாரக்கதிரையில் ஏற்றப்போகிறார்கள் என்று சுய வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள், விசாரணை குழுக்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இவ்வளவும் செய்துபோட்டு நிரூபிக்கப்படவில்லையென்று எப்படி சொல்கிறீர்கள்? ஏன், உங்கள் பெயரும் தடைப்பட்டியலின் முடிவில் வெளிவருவதற்காக காத்திருக்கிறது. நீங்கள் உங்களை, உங்கள் வார்த்தைகளை நிரூபிக்க மிக சிறிய வேலைதான் உண்டு. சர்வதேச விசாரணைக்கு ஒப்புக்கொண்டு ஒத்தாசை வழங்குங்கள், இல்லையெனில் குற்றவாளி என்பதை ஏற்றுக்கொண்டு தண்டனையை அனுபவியுங்கள். இல்லையெனில் மக்களே உங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிப்பார்கள்.
  23. GMT நேரப்படி நாளை வியாழன் 27 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 20 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சுவி ஏராளன் அகஸ்தியன் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?
  24. உங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. பத்திரிகை காணொளிகளில் வரும் செய்திகளையே பார்ப்பது. உங்களைப் போன்றோர் எழுதும் போதே முழுவிபரமும் தெரிகிறது.
  25. என்னப்பா இது ?கிரிக்கட்டை பிரித்து மேயும் வீரப்பையன்,வசீ எல்லோரும் கீழே கிடந்து நசிபடுகினம். நான் கடைசி நேரத்தில் பங்கேடுக்காமல் முதலே வந்திருந்தால் இப்ப செம்பாட்டானைக் கலைத்துக்கொண்டு வந்திருப்பன்.குருட்டு வாய்ப்பில் தெரிவு செய்த என்கு;கு அதிஸ்டம் கைகொடுக்குது போல ஈரோ மில்ல.லியன் இந்த வெள்ளிக்கிழமை 202 மில்லியனாம். இறங்கி அடிக்கிறன் மில்லியனர் ஆகிறன். காசு வேணுமெண்ட ஆட்கள் இப்பவே சொல்லி வையுங்கள்.
  26. தகவல்களுக்கு நன்றி ஐயா...
  27. வட மாகாணசபை நடை பெறுவதில்லை பிறகு எப்படி இவர் அவை தலவராக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்...யாராவ்து இதற்கு விளக்கம் சொல்ல முடியுமோ?ஆளுனர் அரச பிரதிநிதி வடமாகாணத்தை அரசு சார்பாக பிரதிநித்துவம் பண்ணுகின்றார் ஆனால் இயங்காத வடமாகாணசபைக்கு இவருக்கு என்ன வேலை?
  28. பிரச்சனைகளுக்கு காரணம் சொல்ல தேசிய மக்கள் சக்திக்கு (ஜேவிபி இற்கு) விலங்குகள் வரிசைக்கட்டிக் கொண்டு வருகின்றன. முதலில் குரங்குகள், பிறகு தெரு நாய்கள், இப்ப முதலைகள் என்று வரிசை கட்டிக் கொண்டு வருகின்றன. நுளம்புகளும் தம் பங்குக்கு சிக்கன் குனியா, டெங்கு என்று அடுத்த வரிசையில் வந்து நிற்கின்றன. இவற்றை காரணம் காட்டியே 5 வருடங்களை ஓட்டி விடுவார்கள் போலிருக்கு. @putthan இந்த பக்கம் வரவும். வந்து இந்த இடதுசாரிகள் பற்றி நறுக்கென்று நாலு வார்த்தை எழுதுங்கோ,
  29. போட்டி பார்க்கிற‌ நான் போட்டி முழுதா பாக்காட்டி க‌ட்லையிட் பாப்பேன்........................
  30. ஐபிஎல் 2025 இன் 06வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததால் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலகுவான வெற்றி இலக்கை ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த குயின்ரன் டிகொக்கின் அதிரடி ஆட்டத்தால் 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  31. அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் .......! 😍
  32. இந்த மூலையில் இருந்த கடையில் கீரைவடை விற்பார்கள்.சுவையாகவும் பசிக்கும் தாக்குப் பிடிக்கும். அனேகமாக வெள்ளிக்கிழமை அல்லது விரதநாட்களில் கடையில் சாப்பிட பணம் தருவார்கள். பத்மாகபேக்கு போனால் மதியம் கூட்டமாக இருக்கும். இதிலென்றால் ஒன்று 10 சதம் 2 வடை வாங்கி வைரவ கோவில் மதிலில் இருந்து ஆறுதலாக சாப்பிடலாம். ஓஓஓஓஓஓஓ வாத்தியாரும் இந்துவோ?
  33. முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள் 23வது இடத்தை தம்பி ஏற்றுக் கொண்டு @ஏராளன் சுமைதாங்கியாக உள்ளார்.
  34. இவர்கள் தான் மிக மும்முரமாக தமிழர் நிலங்களை அபகரிப்பது மட்டுமில்லாமல் புத்த கோவில்களை கட்டுவதற்கும் பொறுப்பாக உள்ளவர்கள். மிக திட்டமிட்டே இவர்கள் செயற்படுகிறார்கள்.
  35. ஶ்ரீதர் வண்ணப்படங்கள் எடுத்து நொந்து போய் இருந்த நேரம், கறுப்பு வெள்ளையில் அலைகள் படத்தை எடுத்து வெளியிட்டார். விஷ்ணுவர்த்தன் (நடிகை பாரதியின் கணவர்), சந்திரகலா நடித்திருந்தார்கள். இருவரும் எங்களுக்குப் புதுமுகங்கள். இந்தப் பாடலைப் பாடிய ஜெயச்சந்திரனின் குரலும் புதிதுதான். பாடலும் அமைதியாக இருக்கும், பாடல் காட்சியில் ஆர்பபாட்டம் எதுவுமின்றி விஸ்ணுவர்த்தனும் அமைதியாக நடித்திருப்பார். எனக்குப் பிடித்த படங்களில் அலைகள் படமும் ஒன்று. இன்று ஶ்ரீதர்,விஸ்ணுவர்ததன், சந்திரகலா,ஜெயச்சந்திரன் ஆகியோர் எங்களிடமில்லை. ஆனலும் இப்பொழுதும் எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
  36. உங்கள் பின்னூட்டத்தை முழுவதுமாகப் படியெடுத்து சோம.அழகுவிற்கு அனுப்பி விட்டேன். நன்றி.
  37. சோம அழகு அவர்களின் தமிழ் சேவை பாராட்டுதலுக்குரியது! ஆனால், சிறார்களின் தமிழின் மீதான ஆர்வத்தை போலி விஞ்ஞானத்தை முன்வைத்து உருவாக்குவது நல்ல விடயமாகத் தெரியவில்லை. எபிரேயத்தில் இருக்கும் "ஆதாம், ஈவ்" போன்ற சொற்கள் தமிழில் இருந்து தான் அங்கே சென்றன என்பதும், ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த இடம் "செரண்டிப்" என பைபிளில் இருக்கிறது (பைபிளில் செராபிம்- Seraphim என்ற தேவதைப் பெயர் தான் இருக்கிறதேயொழிய செரண்டிப் என்ற பெயர் எங்கேயும் இல்லை) அது இலங்கை/இந்தியாவின் தென்முனை என்பதும் கோராவில் எந்த ஆதாரங்களுமில்லாமல் பரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் போலி விஞ்ஞானக் கருத்துக்கள். குமரிக் கண்டமும் அப்படியானது தான். இதை பற்றி இங்கே பல ஆண்டுகள் முன்பே விவாதித்திருக்கிறோம். இப்படியான போலி விஞ்ஞானத்தின் பால் அடுத்த தலைமுறையை ஈர்க்க எந்த தமிழ் ஆசிரியரும் உதவக் கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!
  38. அவரின் எழுத்தினூடக முதலில் அறிமுகமாகி, இப்போது ஒரு நல்ல நண்பியாகவும் உள்ளார் எனக்கு. அவர் முகனூலில் எழுதும் எழுத்துகள் / குறிப்புகள் கூட அருமையாக இருக்கும். நான் விரும்பி வாசிக்கும் நாவல்களில் / சிறுகதைகளில் பல ஈழத்து மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளும் அடங்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் யதார்த்தனின் நாவலான 'நகுலாத்தை' தான் நான் வாசித்த அனைத்து நாவல்களிலும் மிகவும் பிடித்த நாவல். முடிந்தால் வாசியுங்கள் அதை. எம் மண்ணில் இருக்கும் குல தெய்வ / பெண் தெய்வ வழிபாடு, வன்னி மண்ணில் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் கதைகளில் சில, இறுதிப் போர் போன்றவற்றின் பின்னனியில் எழுதப்பட்ட நாவல் அது. யாழிலும் அது பற்றிய குறிப்பை எழுதியிருந்தேன்.
  39. எனக்கென்ன குறைச்சல்? ஜாம் ஜாம் எண்டு இருக்கிறன் 😎 சிவகார்திகேயனும் கொழும்பிலை தான் நிக்கிறாராம் 🧐
  40. நானே கிட்னி இன்னும் இருக்கா இல்லையா எடுத்துட்டாங்களோ எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். இதுக்குள்ள மாலினியாவது மாதவியாவது....😂
  41. வணக்கம் வாத்தியார் ..........! ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே ஆண் : மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைப்பூ மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைப்பூ யார் வருவார் யார் பறிப்பார் யார் அறிவார் இப்போது ஆண் : ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒலியோடு நடை போடும் நீரோடையும் ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒலியோடு நடை போடும் நீரோடையும் சுகமானது சுவையானது உன் வாழ்வும் அது போல உயர்வானது ஆண் : செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா நடை போடுமா இசை பாடுமா நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா…....! --- பொன்னென்ன பூவென்ன கண்ணே ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.