Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்17Points87990Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்6Points38770Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points31990Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்5Points46791Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/02/25 in Posts
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025 இன் 14வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக விக்கெடுக்களை இழந்து வெளியேறியதால், பின்னர் ஆடவந்த லியம் லிவிங்ஸ்டனின் அரைச் சதத்துடனும், ஜிதேஷ் ஷர்மா, ரிம் டேவிட் போன்றோரின் அதிரடி ஆட்டத்துடன் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், ஷேர்ஃபான் ரதஃபோர்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்துடனும், ஜொஸ் பட்லரின் மின்னல் அடியுடன் ஆட்டமிழக்காமல் எடுத்த 73 ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:4 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் சாயி சுதர்சன் இன்று காயம் காரணமாக சிலவேளை விளையாட மாட்டாராம். வீரப்பயனுக்கு ஆட்டமத்தில சனி என்று நினைத்தேன். 4 புள்ளியில் இருந்து 8 புள்ளிக்கு வந்திட்டார். எனக்குத்தான் அட்டமத்தில் சனி போல. முதல் 6 போட்டி முடிவில் 4 கேள்விக்கு சரியான புள்ளிகள் பெற்று 8 புள்ளிகள் பெற்றேன். பிறகு வந்த 7 போட்டிகளுக்கும் புள்ளிகள் கிடைக்கமால் இப்பவும் 8 புள்ளிகள். போற போக்கை பார்த்தால் நான் தான் கடைசி போல 😳4 points
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவரைப் போன்ற மோசடிவாதிகளும்,நம்பிக்கை துரோகம் செய்தவர்களும்,ஏழைகளின் மடியில் கை வைத்தவர்களும் உள்ளே இருப்பதுதான் சமூகத்திற்கு செய்யும் நல்ல செயல். அது யாராக இருந்தாலும் குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். இப்படியான தண்டனைகளை பார்த்துத்தான் ஏனையவர்கள் திருந்த வாய்ப்புகள் உண்டு. அல்லது தவறுகள் செய்யாமல் இருக்க ஒரு முன்னுதாரணம். யதார்த்தமும் கூட.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு உங்களின் குருநாதரின் மேல்தான் சந்தேகமாக உள்ளது, அந்த விக்கெட்டுகளை எங்காவது எடுத்து ஒளித்து வைத்திருப்பாரோ? சத்தமில்லாமல் புள்ளிப்பட்டியலில் மேலே வருகிறார், இன்றைய போட்டியில் கைதராபாத் வெல்வதுடன் செம்பாட்டானுடன் புள்ளிப்பட்டியலில் சேர்ந்து விடுவார். 🤣2 points
-
தமிழ்நாட்டில் திருநங்கை மகளின் திருமணத்திற்காக போராடிய தாய் - நெகிழ வைக்கும் பாசப் போராட்டம்
2 pointsகட்டுரை தகவல் எழுதியவர், மேகா மோகன் பதவி, பிபிசி உலக செய்திகள் 2 ஏப்ரல் 2025, 01:20 GMT கடந்த 2019ஆம் ஆண்டில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக திருமணமான முதல் திருநங்கை என்ற பெருமையை ஸ்ரீஜா பெற்றார். தற்போது, அம்மாவின் பெருமை எனப் பொருள்படும் 'அம்மாஸ் பிரைட்' (Amma's pride) என்ற புதிய ஆவணப்படம், ஸ்ரீஜாவின் திருமணத்திற்கு அரசு அங்கீகராம் கிடைக்க வேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தையும், அதில் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது அம்மா வள்ளியின் முக்கியப் பங்கையும் விவரிக்கிறது. தனது மகளைக் கட்டி அணைத்துக்கொண்டே,"ஸ்ரீஜா, எனக்குக் கிடைத்த வரம்," என்று 45 வயதான வள்ளி பிபிசியிடம் கூறினார். தமிழ்நாட்டின் தூத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரீஜா, "என்னிடம் இருப்பது எல்லா திருநர் சமூகத்தைச் சேர்ந்த அனைவரிடமும் இல்லை என்பது எனக்குத் தெரியும்," என்கிறார். "எனது கல்வி, வேலை, திருமணம் என அனைத்தும் என் அம்மா எனக்கு அளித்த ஆதரவால்தான் சாத்தியமானது." தமிழ்நாட்டில், சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்ட முதல் திருநங்கை என்ற ஸ்ரீஜாவின் தனித்துவமான அனுபவத்தை எடுத்துக்காட்டும் வகையில் 'அம்மாஸ் பிரைட்' என்னும் ஆவணப்படம் வெளியாகவுள்ளது. இதில் ஸ்ரீஜா மற்றும் அவரது அம்மா முதன்முறையாக தங்களது கதையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை சிறுகோள்களில் இருந்து பிரித்தெடுத்து வர முடியுமா?31 மார்ச் 2025 வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?31 மார்ச் 2025 'என் மகளுக்கு என்றும் துணையாக நிற்பேன்' பட மூலாதாரம்,CHITHRA JEYARAM/ BBC படக்குறிப்பு,ஸ்ரீஜா, அவரது கணவர் அருண் மற்றும் அம்மா வள்ளி (இடமிருந்து வலம்) ஸ்ரீஜா, தனது கணவர் அருணை 2017ஆம் ஆண்டில் ஒரு கோவிலில் சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் வட்டாரம் இருந்ததை அறிந்த பிறகு, அவர்கள் தொடார்ச்சியாகப் பேசிக்கொள்ளத் தொடங்கினர். அதற்கு முன்னதாகவே, ஸ்ரீஜா தனது பாலின மாற்றத்தை உணரத் தொடங்கி, திருநங்கையாக வெளிப்படையாக வாழ்ந்து வந்தார். "நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டோம். ஒரு திருநங்கையாகத் தனது அனுபவங்கள் குறித்து ஸ்ரீஜா என்னிடம் மனம் திறந்து பகிர்ந்தார்," என்று 29 வயதான அருண் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார். அதன் பின்னர் சில மாதங்களுக்குள், காதலிக்கத் தொடங்கி, வாழ்க்கை முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்தனர். இருப்பினும், 2018ஆம் ஆண்டில், அவர்களது திருமணத்தைப் பதிவு செய்யும் அவர்களது முயற்சி நிராகரிக்கப்பட்டது. கடந்த 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி, திருமணம் என்பது "மணமகன்" மற்றும் "மணமகள்" ஆகிய இருவருக்கும் இடையிலான பந்தம் என்று மட்டுமே வரையறுக்கிறது என பதிவாளர் வாதிட்டார். அதாவது அந்தச் சட்டத்தின் மூலம், திருநங்கைகள் திருமணத்துக்கான சட்ட வரம்புக்கு உட்படவில்லை. ஆனால் பால்புதுமை ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்ற இந்தத் தம்பதியினர், தங்கள் உறவை பொதுவெளியில் அறிவித்து சட்டபூர்வ அங்கீகாரம் பெறப் போராடினர். இந்த முறை அவர்களது முயற்சி வெற்றி பெற்றது. பட மூலாதாரம்,ARUN KUMAR / BBC படக்குறிப்பு,ஸ்ரீஜா மற்றும் வள்ளி கடந்த 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டமானது, திருநர்களை "மணமகள்" அல்லது "மணமகன்" ஆக சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என அறிவித்து, 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் திருமண உரிமையை உறுதி செய்தது. இதன் மூலம், அவர்கள் உலகளாவிய கவனத்தைப் பெற்றனர். இந்தத் தீர்ப்பு, இந்தியாவில் திருநர்களின் சமூக அங்கீகாரத்திற்கு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று பால்புதுமையின ஆர்வலர்கள் கருதினர். மேலும், கலாசார மரபுகளின் சவால்களை எதிர்கொண்டதற்காக ஸ்ரீஜா, அருண் ஆகிய இருவரும் சமூகத்தில் கவனம் பெற்றனர். ஆனால், இத்துடன் அவர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார்கள். "செய்திகளில் எங்கள் கதை வெளியான மறுநாளே, நான் வேலையில் இருந்து நீக்கப்பட்டேன்," என்று கூறுகிறார் போக்குவரத்துத் துறையில் தொழிலாளராகப் பணியாற்றிய அருண். இது திருநர் சமூகத்தின் மீதிருந்த வெறுப்பின் காரணமாகவே ஏற்பட்டதாக அவர் நம்புகிறார். அதன் பிறகு ஆன்லைன் மூலமாகவும் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. "திருநங்கையைத் திருமணம் செய்ததற்காக மக்கள் என்னைக் கடுமையாக விமர்சித்து, அவதூறான கருத்துகளை அனுப்பினர்," என்று அவர் கூறுகிறார். இந்த அழுத்தமான சூழ்நிலையால், தம்பதியினர் ஒரு குறுகிய காலத்திற்குப் பிரிந்து வாழ நேரிட்டது. இருப்பினும், ஸ்ரீஜா தனது கல்வியில் சிறந்து விளங்கி, உயர்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்தார். பின்னர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஸ்ரீஜா, அவரது குடும்பத்தில் உயர்கல்வி பெற்ற மிகச் சிலருள் ஒருவரானார். 14 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய வள்ளிக்கு, இது மிகவும் பெருமையான தருணமாக இருந்தது. Play video, "ஸ்ரீஜா", கால அளவு 1,22 01:22 காணொளிக் குறிப்பு, தனது திருமணத்திற்கான அரசின் அங்கீகாரத்திற்காகப் போராடுவதற்கு முன்பே, ஸ்ரீஜாவும் அவரது குடும்பத்தினரும் சமூக விரோதத்தையும் அவமானங்களையும் எதிர்கொண்டனர். தனது 17 வயதில் ஸ்ரீஜா ஒரு திருநங்கையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவரும் அவரது தாயும் இளைய சகோதரரும், அவர்களது வீட்டு உரிமையாளரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். குடும்ப உறுப்பினர்கள் பலர் அவர்களுடன் பேசுவதை நிறுத்தினர். ஆனால், ஸ்ரீஜாவின் அம்மாவும் சகோதரரும் உறுதியாக இருந்து, ஸ்ரீஜாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்தனர். "என் மகளுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன்" என்கிறார் வள்ளி. "அனைத்து திருநங்கைகளும் அவர்களது குடும்பத்தினரால் ஆதரிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீஜாவுக்கு ஆறு வயதாக இருக்கும்போது அவரது அப்பா இறந்ததால் தனி ஆளாக அவரது அம்மா வள்ளி அவரை வளர்த்து வந்தார். வள்ளி ஒரு பள்ளியின் உணவுக்கூடத்தில் வேலை செய்கிறார். குடும்ப வருமானம் குறைவாக இருந்தபோதிலும், மகளின் பாலின மாற்று சிகிச்சைக்குத் தேவையான செலவுகளைச் சமாளிக்க வள்ளி உதவினார். இதன் காரணமாகத் தனது தங்க நகைகள் சிலவற்றை வள்ளி விற்றார். "என் அம்மா என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்" என்கிறார் ஸ்ரீஜா. குழந்தை கையில் செல்போனை கொடுத்ததால் பிகார் நபரிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - எப்படி தெரியுமா?31 மார்ச் 2025 சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'ஜிப்லி' என்றால் என்ன? அது முதலில் எப்படி உருவானது?31 மார்ச் 2025 'இந்த மனநிலை மாறும் என்று நம்புகிறேன்' பட மூலாதாரம்,ARUN KUMAR / BBC படக்குறிப்பு,தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக திருமணமான முதல் திருநங்கை என்ற பெருமையை ஸ்ரீஜா பெற்றுள்ளார். உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், திருநர்களின் எண்ணிக்கை சுமார் இருபது லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். திருநர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பது மற்றும் "மூன்றாம் பாலினம்" என்ற சட்டபூர்வ அங்கீகாரமும் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும் சமூகத் தடைகளையும், பாகுபாட்டையும் திருநங்கைகள் இன்றும் எதிர்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் திருநங்கைகள் அதிகளவில் வன்முறைக்கும், மனநலப் பிரச்னைகளுக்கும் ஆளாகி, கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சுகாதார சேவைகளைக் குறைந்த அளவிலேயே பெறுகிறார்கள் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பலர் யாசகம் பெற்றோ, பாலியல் தொழிலில் ஈடுபடவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். உலகளவில், கணிசமான திருநங்கைகள் தங்கள் குடும்பத்தினரால் நிராகரிக்கப்படுகிறார்கள் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. "இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் பெரும்பாலான திருநங்கைகள் குடும்பத்தின் ஆதரவின்றி வாழ்கிறார்கள்," என்று 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படத்தின் இயக்குநர் சிவ கிரிஷ் கூறுகிறார். ஆனால், ஸ்ரீஜா மற்றும் வள்ளியின் கதை தனித்தன்மை வாய்ந்தது. திருநங்கைகளைச் சுற்றியுள்ள ஒரே மாதிரியான பார்வையையும், ஊடகங்களில் அவர்களைப் பற்றி அடிக்கடி வெளியாகும் ஒரே போன்ற கதைகளையும், குறிப்பாக, அதிர்ச்சிகரமான மற்றும் வன்கொடுமையை மையமாகக் கொண்ட கதைகளையும் சவாலுக்கு உட்படுத்த இந்தப் படம் உதவும் என்று ஸ்ரீஜா நம்புகிறார். "நாம் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது. நான் ஒரு மேலாளர், மற்றும் தொழிலில் ஒர் ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்" என்கிறார் ஸ்ரீஜா. "திருநர்களைப் பற்றிப் புதிய கோணங்களில் சொல்லப்படும் கதைகளை மக்கள் பார்க்கும்போது, அவர்கள் மனநிலையும் மாற்றம் அடையும் என்று நான் நம்புகிறேன்." விண்வெளியில் ஒரு குழந்தை பிறந்தால் அதன் உடல் அமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்8 மணி நேரங்களுக்கு முன்னர் பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 'நான் விரைவில் பாட்டி ஆக விரும்புகிறேன்' படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டில், தங்களது திருமணத்தைப் பதிவு செய்யும் ஸ்ரீஜா, அருண் தம்பதியின் முயற்சி நிராகரிக்கப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்ட பிறகு, 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படம் தற்போது இந்திய பார்வையாளர்களைச் சென்றடைய உள்ளது. மார்ச் 31, திங்கட்கிழமை நடைபெறும் சர்வதேச திருநர் தினத்துக்கு முன்னதாக, சென்னையில் பால்புதுமையின சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான சிறப்புத் திரையிடலுடன் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. சென்னையில் இந்தத் திரையிடலைத் தொடர்ந்து, ஒரு பயிற்சி பட்டறை நடைபெறும். இதில் குடும்பத்தினர் திருநங்கைகளை ஏற்றுக் கொள்வதன் அவசியத்தையும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக ஆதரவின் முக்கியத்துவத்தையும், சிறு குழுக்களாகப் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் விவாதிக்கவுள்ளனர். "எங்கள் திரையிடல் நிகழ்வுகள் திருநங்கைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை வளர்க்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சித்ரா ஜெயராம் கூறுகிறார். சமூக பழமைவாதத்துக்கு எதிரான குடும்ப ஆதரவை முக்கிய கருப்பொருளாகக் கொண்டுள்ளதால், 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படத் திரையிடல் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் கிராமப்புற பார்வையாளர்களுக்கும், இந்தியாவின் பிற நகரங்களுக்கும், நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று தயாரிப்புக் குழு நம்புகிறது. ஸ்ரீஜாவும் அருணும் தற்போது தனியார் நிறுவனங்களில் மேலாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். விரைவில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் கனவாக உள்ளது. "நாங்கள் ஒரு சாதாரண, சராசரியான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம்," என்கிறார் ஸ்ரீஜா. "நான் விரைவில் பாட்டி ஆக விரும்புகிறேன்," என்று கூறிச் சிரிக்கிறார் வள்ளி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd02zkpv44jo2 points
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
உண்மைதான் சிறுமிகளின் மீதான பாலியல் வன்முறை, பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றை சுற்றி வளைத்தும், சிவப்பு நிறம் தீட்டி ஆதரித்தும் நீங்கள் எழுதும் கருத்துகளை நீக்கியதும், நீங்கள் எழுதிய அவ்வாறான கருத்துகளுக்கு எதிராக எழுதிய கருத்துகளை நீங்கள் மறைக்குமாறு கேட்டும் அவற்றை மறைக்காமல் விட்டதும் உண்மைதான். ஏனெனில் சிறுமிகள் / பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பதை எக்காரணம் கொண்டும் நானோ அல்லது என்னைப் போன்றே நடந்து கொள்ளும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களோ அனுமதிக்கப் போவதில்லை. இனியும் அவ்வாறுதான் நடந்து கொள்வோம். அத்துடன் இந்த என் பதிலுக்கு பின்னூட்டம் இடுகின்றேன் என்ற ரீதியில் மீண்டும் சிறுமிகள் / பெண்கள் மீதான பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் உங்கள் கருத்துகளை, சிந்தனையோட்டத்தை நியாயப்படுத்தும் விதமாக மீண்டும் நீங்கள் பதில்கள் இட்டால், அவற்றையும் நீக்குவோம். சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றவர்களை நியாயப்படுத்துகின்ற கருத்துகளை எழுதும் நீங்கள் ஆதிக்க வெறி பற்றி எழுதுவதும் சாத்தான் ஓதும் வேதங்களில் ஒன்று தான். நன்றி2 points
-
இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன்
இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன்ஆங்கிலஅர்த்தங்களை சாதாரணமாக கூறிய சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயதுடைய சிறுமி சாதனை படைத்துள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயதுடைய சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார். தந்தையார் முச்சக்கர வண்டிஓடுனராகவும் தாயார்குடும்ப பெண்ணாகவும் கொண்டபெரியஅளவிலான பின்புலங்கள் இல்லாதகுடும்பத்தில் பிறந்தகுறித்த குழந்தையானது இதுவரைஏடுதொடக்க பாடாத நிலையில் இவ்வாறு அதி சிறந்த ஞாபகசக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யாழ்ஊடகஅமையத்தில் இவ்விடயம் குறித்து ஊடகசந்திப்பொன்றை பெற்றோர் புதன்கிழமை(03) முன்னெடுத்திருந்த துடன்குறித்த சிறுமியின் அசாத்திய திறனைவெளிக்கொண்டு வருவதுடன் அந்தஆற்றலைஉலகசாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிதர்சன் வினோத் https://www.tamilmirror.lk/செய்திகள்/இரண்டரை-வயது-சிறுமியின்-அசாத்திய-திறன்/175-3548741 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நெருப்புடா.. நெருங்குடா.. பார்ப்போம்… நெருங்கினா… பொசுக்கிற கூட்டம்… முடியுமா 💪💪💪🤣1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மிக்க மிக்க நன்றி வாத்தியாரே...நீங்கள் எப்பவுமே ..என் உயர்வில் கவனம் அப்படி முதல் இருந்த சேனையை துவம்சம் செய்து துணை முதல்வராயிருக்கின்றேன்..ஏன் நீங்கள் கூட வெளிநாடமச்சராக வந்திட்டீங்களே1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொங்குமான் குறூப்பில இணைந்து கொண்ட கிருபனாருக்கு உற்சாக வரவேற்புகளும் வாழ்த்துகளும்....🤣1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள். நாளைக்கு கொல்கத்தா தோற்றால் செம்பாட்டான் காலி.1 point
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
தரவுகள் அழிக்கபட்டால் ஒன்றும் குடுக்க இயலாது தானே..அதிகம் படித்த பட்டதாரிகள் இருக்கும் வீடு அப்படித் தான்./இதையே பேசிக் கொண்டு இருப்பதனால் நமக்கு ஏன்ன வரப்போகிறது.1 point
-
இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
பொறுங்கோ தூர்வாரனும் ஊற்றெடுக்குதா எண்டு பாக்கணும் எவ்வளவு வேலையிருக்கு1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல சூடா சீனி கம்மியாக 17 முட்டைக்கோப்பி பிளீஸ். இதில தோற்றாலும் கொஞ்சம் சந்தோசம் என்னவென்றால் செம்பாட்டானுக்கும் முட்டை.1 point
-
மன்னாரில் முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு அஞ்சலி
02 APR, 2025 | 04:09 PM காலம் சென்ற மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (02) காலை 10 மணியளவில் மன்னாரில் நடை பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு முன் நடை பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் உருவச் சிலைக்கு அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் அடிகளார் உள்ளடங்களாக அருட்சகோதரி, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை சமூக சம நீதிக்காய் தமிழ் தேசிய உணர்வுடன் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைக்குரலாக பல சவால்களுக்கு மத்தியிலும் இன உணர்வுடன் இன உணர்வுக் காய் அறப்பணி புரிந்தார். நீண்ட காலமாய் சுகயீனமடைந்திருந்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி இயற்கை எய்தியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/2109411 point
-
இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
இரத்த தானம் செய்யச் சொல்லி... தொண்டை கிழிய கத்தினாலும், எவனும் அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கிறானுங்க இல்லை. 😂 விந்தணு தானம் என்றவுடன், வரிசை கட்டி நிற்கிறானுங்க. 🤣1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப நீங்க வாயு புத்திரனின் தம்பி தான் போல! சஞ்சீவி மலையை அவர் தூக்கினார், வீரசிங்கத்தை சீ மண்டபத்தை நீங்க தாங்கிப்பிடித்தீர்கள்!!1 point
-
"உன்னைச் செதுக்கு"
1 point
-
200 ரூபாவுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்
02 APR, 2025 | 09:54 AM மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் "பெலெஸ்ஸ" உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டம் "Clean Sri Lanka" திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் 200 ரூபாய் என்ற குறைந்த விலையில் போசாக்கு நிறைந்த உணவை உண்டு மகிழும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். இந்த போசாக்கான சமச்சீர் உணவின் செய்முறை அனைத்து அரச மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பொதியிடப்பட்ட தேசிய உணவுகள் மற்றும் போசாக்கான சிற்றூண்டிகளையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, தரமான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது என குறிப்பிட்டார். அதற்காக வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் வர்த்தக சமூகத்தில் அணுகுமுறை ரீதியான மேம்பாட்டை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கில் “Clean Sri Lanka”வேலைத்திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (போசாக்கு) வைத்தியர் மொனிகா விஜேரத்ன மற்றும் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறை வர்த்தகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/2108881 point
-
இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்!
படையினரை குறை சொன்னால்...இங்கு சிலருக்கு பிடிப்பதில்லை. என்ன, கள்ளத் தொடர்போ... யாரறிவர். 😂1 point
-
நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
ஏப்பிரல் 1´ம் திகதி என்றால்... சின்ராசு பாடத் தொடங்கி விடுவான். 🤣1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரிஷாப் பாண்ட் இதோட வீட்டை போக வேண்டியதுதான்! அவருடைய கேள்விகளுக்கான பதில்களிலும் கொஞ்சம் மிதப்பு தெரிகிறது. இன்னும் இரண்டு போட்டிகளில் ஒழுங்காக விளையாடாவிட்டால் லக்னோவ் owner ராகுலுக்கு கொடுத்ததுபோல் மைதானத்திலேயே பேச்சு விழலாம்! ஷிரேயாஸ் ஐயரின் போமை பார்க்கும்போது இம்முறை பஞ்சாப் கோப்பையை தூக்கும்போலத்தான் இருக்கிது! அவரில்லாத KKR இம்முறை playoff இற்கு போவதே கஷ்டம்தான்!!1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point
-
அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்
25 % என்றால் கண்ணில் குத்தும் என்று ஒரு வீதத்தை குறைத்து எல்லா ஊழலவாதிகளும் கடசி இனம் மத பேதம் இன்றி தங்கள் மடியை கனமாக்க வாக்குகள் போட்டு நிறைவேற்றி இருக்கிறார்கள். இதுவே ஒரு மக்கள் பிரச்சனையாக இருந்து இருந்தால் எததனை வாக்குவாதம் எத்தனைஇழுபறிகள்?1 point
-
இலங்கையில் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக எச்சரிக்கை
எங்கேயோ கேட்ட குரல் ......... அந்த குரல் ரஞ்சிதா மரத்தடியில் ஞானம் பெற்றது போல புதன் ஜீ ஆனந்தா ரம்சிகா மரத்தடியில் ஞானம் பெற வாழ்த்துகிறேன்!1 point
-
பாடசாலை மாணவர்கள் தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள்; வைத்தியர் நிபுணர்
பல இருதய நோய்களுக்கு அத்திவாரம் விடுவதே இந்த நித்திரை உண்மைதான் அத்திவாரம் இடுவதே இந்த நித்திரை இன்மைதான் என்று பல ஆய்வுகள் முடிவுகளை வாசித்து இருக்கிறேன். நானும் இரண்டு வேலைகள் படிப்பு என்று இளவயதில் இருந்தே நித்திரை சரியாக கொள்ளாது பழகியதால் இப்போதும் கொஞ்சம் கடினமாக இருக்கிறது நான்கு ஐந்து மணித்தியாலங்கள் தூங்கினாலே விழித்து விடுகிறேன். அப்போது இது பெரிதாக தெரியவில்லை .... இப்போது உடல் சோர்வாக இருக்கிறது அதிக உடற்பயிற்சி இதை சரி செய்யும் என்று நம்புகிறேன்1 point
-
மாகாணசபை தேர்தல்கள் இந்த வருடம் இல்லை - அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
மாவட்ட சபை அதிகாரங்களுடனும் ,உள்ளூராட்சி அதிகாரங்களுடனும் இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது ....இனி அபிவிருத்திதான் ...பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி "ரஜ லுணு"வுடன் மாங்காய் திண்ணலாம் ....1 point
-
நானும் ஊர்க் காணியும்
1 pointச்...சா சொல்லி வேலை இல்லை.துரவுப்புட்டியள்ள தடக்குப்பட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வருதே... சொப்பன வாழ்க்கை 😍 சொர்க்க வாழ்க்கை 🥰 இந்த வாழ்க்கை அருமை தெரியாதோர் 😁 ஆயுளில் 20 வருடம் இழந்தோர் ஆவர் 🙃1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் வாழ்த்துக்கள் கொஞ்ச நாளைக்கு உங்க காட்டிலை மழையாக இருக்கு எதையும் தாங்கும் தில் இருக்கும் கோஷான் சே யின்😂 பக்குவம் யாருக்கும் வராது 😅 முதல்வர் அந்தப் பக்குவத்தை இப்போதே பழகிக் கொள்ள வேண்டும் கொஞ்சம் சறுக்கினால் .........😇எல்லாமே தலை கீழாக மாறிவிடும்1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெரிய Home work எல்லாம் செய்துதான் கேள்விக்கு விடை எழுதியிருக்கிறீர்கள்.நமக்கு இதுக்கெல்லாம் பொறுமையில்லை.தொடர்ந்து முதல்வர் நாற்காலியில் வீற்றிருக்கும் செம்பாட்டானுக்கு வாழ்த்துகள்.1 point
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
வடிவாக இருக்கட்டும் என்று அப்போ தான் பொல்லு விலைபோகும் நான் முட்டாள் இல்லை என்பதை பணிவுடன். தெரிவித்துக்கொள்கிறேன் 🙏1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனால் என்னை போல் வராது… நான் வீரசிங்கம் மண்டபத்தையே விழாமல் தாங்கி பிடித்த ஆள் ஆக்கும்🤣1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025 இன் 13வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததாலும், நிக்கொலஸ் பூரனையும் அயூஷ் படோனியையும் தவிர எவரும் 40 க்கு மேல் ஓட்டங்கள் எடுக்காததாலும், 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:1 point
-
நானும் ஊர்க் காணியும்
1 pointமுழங்கால் வருதத்தை..வலு அழகாக சொன்னமாதிரி இருக்கு ..நான் நினைத்தது சரியா1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Strategic Timeout - என்ன மாதிரியான நகைச்சுவை இது. சும்மா timeout என்றே வைத்திருக்கலாம். 16வது ஓவர் முடிவில எடுக்க வேணுமாம். ஏதாவது strategy பண்ண என்றால் எடுக்கலாம். ஓட்ட எண்ணிக்கை சமமாக இருக்கும் போது என்ன மாதிரியான strategy பண்ணலாம். நகைச்சுவையின் உச்சம்.1 point
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
உண்மையில் நீயா நானா வே மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பும் நிகழ்ச்சி ...ஊர் உலகமறியவா..டி வீ யில் வந்து சொல்வார்கள். நாளைக்கு மானம் கப்பலேறிவிடும். இப்படியும் சில மனிதர்கள். 😠1 point
-
ஏழரைக்கனவு
1 pointகிறிக்கட் போட்டிக்கு போக வெளிக்கிடுகிறேன் மோட்டார் சைக்கிள் கொஞ்சம் தாமதப்படுத்த நீங்கள் முந்திச்செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என நண்பர்களிடம் சொல்லிவிட அவர்கள் மைதானத்திற்கு செல்கிறார்கள். நானும் சைக்கிளை சரிபண்ணி எடுத்து அந்த ஊருக்கு செல்ல சைக்கிள் மீண்டும் பழுதடைகிறது என்னடா திரும்ப சைக்கிள் பழுதாகிறதே! என இறங்கி சைக்கிளை தள்ளி ஒரு திருகாணி இருந்தால் சரி பண்ணி விடலாம் என நினைக்க. ஒரு பெரிய பங்களா போல வீடு எதிரே இருக்க அங்கே ஒரு பெண்மணி ஒரு பிள்ளைக்கு சோறு ஊட்டிக்கொண்டு நிற்கிறார் அவவோ என்ன ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என எனைக்கேட்க ஓம் என நான் சொல்ல உள்ள வந்து நிறைய சாவிகள் இருக்கிறது எடுத்துப்போங்கள் என சொல்கிறார். நானும் உள்ளே சென்று சாவியை எடுக்கும் போது அங்கே சில பெண்களின் அழுகுரல் கேட்கிறது யார் அங்கே அழுவது? என நான் கேட்க அவாவோ அங்கு ஒருவரும் இல்லை என சொல்கிறார் நானும் சாவியை எடுத்து வாசலுக்கு வர 3 பெண்கள் அழுது கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறி அடித்துக்கொண்டு ஓடி வருகிறார்கள் வந்து என்னை பிடிக்க நானும் அவர்களை பிடிக்க ................சோறு கொடுத்த பெண்மணி பேய் போல வந்து என்னையும் இழுத்துக்கொண்டு போகிறாள். நானும் ஒரு மாதிரியாக கைகளை உதறினாலும் அவா விடுவதாக இல்லை என்னை இழுத்துக்கொண்டு ஒரு இருட்டு அறைக்கு உள்ளே தள்ளி கதவை பூட்டுகிறாள். அப்போது காப்பாற்ற சொல்லி ஓடிவந்த பெண்களும் சேர்ந்து சிரிப்பது என் காதில் கேட்கிறது. ஐயோ தெரியாத்தனமாக இந்த இடத்தில் மாட்டிக்கொண்டேனே என அந்த அறையை பார்க்க அது ஒரு சித்திரை வதை கூடம் போல தென்பட்டது அறை முழுவதும் இரத்தக்கறைகளாக இருந்தது அதிலே இரத்தத்தால் நீங்களே இன்றைய உணவு தயாராக இருங்கள் என எழுதி இருந்தது ஒரு சிலுவையின் கீழ். ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! என அலறி கத்தி கட்டிலால் உருண்டு விழுகிறேன் நேரமோ ஏழரை. மனிசி வந்து கட்டிலால விழுந்துவிட்டு நரகத்தில் விழுந்து விட்டாராம் என முறைத்து பார்த்து இது நரகமா என கேட்டு விட்டு போகிறாள் அநேகமாக கொஞ்ச நாளைக்கு இந்த வாசகம் எனக்கு ஓடும் என நினைக்கிறன் ஏழரைக்கனவு பொல்லாதது போல.😆😆1 point
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
புங்கை இது பரவாயில்லை. நிகழ்ச்சியைப் பார்த்தால் சிலர் இதை வைத்தே மனைவியை அடிமையாக வைத்திருக்கிறார்கள். விருந்தினர்களுக்கு தனி கோப்பை கிளாஸ் கப்.அவர்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால் எமக்கு வராமல் இருக்க வேண்டும். இன்னொருதன் உறவினர்கள் வந்து இருந்த கதிரை கவர் எல்லாம் கழட்டி தோய்ப்பாராம். உண்மையிலேயே இப்படி நடக்கிறதா? அல்லது நிகழ்ச்சிக்காக நடிக்கிறார்களா? சிறி இதில் மூன்றாவது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே சிகிச்சை கொடுக்க வேண்டும். எதிர் தரப்பில் இருக்கும் ஆண் பெண் இருபாலரையும் பார்க்க ரொம்ப பாவமாக உள்ளது. ஒரு பெண் ஐயோ கணவன் வரும் நேரமாச்சே என்ன குறைகுற்றம் கண்டு பிடிக்கப் போகிறாரோ என்று பயந்தபடியே இருப்பதாக சொல்கிறார். மனைவி எனக்கு பேச்சு.ஏதாவது நல்ல நிகழ்ச்சியை பார்ப்பம் என்று இல்லை.உதவாக்கரை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருங்கோ என்று நடக்குது.1 point
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
இன்று காலை எழுந்து கடவுளைத்தொழுததும் நினைத்தேன் இன்று சிறீத்தம்பியின் படடாசுகள் ஏதும் வெடிக்கும். சென்ற வருடங்களில்நடந்த உலகச்செய்திகளின் படி . கொழுத்துங்கோ கொழுத்துங்கோ எல்லோரும் சேர்ந்து வெடிக்கலாம் 😃😃😃🎆1 point
-
நானும் ஊர்க் காணியும்
1 point
-
நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டுக் கிடக்குமிந்தப் பைந்தமிழ் இனத்திற்குற்ற ஊழ்வினையகற்றவந்த உத்தமன் நித்தி. ஆளவோர் நாடுகண்டு அன்னையெம் தமிழை அங்கே வாழ்விக்க முயலும் போது வஞ்சகர் அவனை வீழ்த்த கோழைகளாக நின்று குரைப்பதேன்? வேண்டாமிந்தக் கீழ்நிலை.1 point
-
நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
சரியாக கண்டு கொண்டீர்கள் இது தமிழ் ஏப்பிரல் ஒன்று தினம் செய்தி இவர் சாமியார் மனிதர்கள் போன்று இறக்க மாட்டார் இறப்பில்லாதவர்1 point
-
நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
ஆளாளுக்கு ஏப்ரல் 1ம் திகதின்னா கிளம்(ப்பி)டுறானுவோ🤣1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
மூன்றாவது…. முற்றிய கேஸ் போல் உள்ளது. 😂 உடனடியாக மனநோய்க்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். 🤣1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
1 pointநன்றி @Kavi arunasalam அண்ணை, நான் சொல்ல வந்தது, பொதுவாக மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி. ஒரு ஓவியம், ஆயிரம் சொற்களால் சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லிவிட முடியும் என்பதும், இன்னொரு பரிமாணத்தை வாசகரிடம் ஏற்படுத்த வல்லது என்பதும் உண்மையாயிருந்தாலும், அதைப் படைக்கும் ஓவியர்களுடைய முயற்சியும் மற்றும் ஓவியங்களின் சிறப்பும் எல்லாருக்கும் விளங்குவதில்லை, அல்லது காலம் எடுக்கும். இப்போது ஏஐ வந்தாப்பிறகு, அந்த ஓவியர்களின் சிறப்பு இன்னும் விளங்காமற் போய்விடும் என்ற ஆதங்கத்தைத் தான் சொல்லியிருந்தேன்.1 point- பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
1 pointபண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 03 "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!" [நவாலியூர் சோமசுந்தரப்புலவர்] தை மாதம் அறுவடைக்குப் பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் எனவும் கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா ஆடவர் , விடலை இருவரும் திருப்ப திருப்ப சொல்லும் கூற்று "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆகும். அதேவேளை ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக கருதப்படுகிறது. தமிழ் இந்துக்களால் ஆடி மாதம் அமங்கலமான [an inauspicious month] மாதமாக கொள்ளப்படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்றும் ஆகும். ஆடி பிறப்பு என்பது ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஒரு பண்டிகை. சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும் கொழுக்கட்டையும், ஆடிக் கூழும் பகிர்ந்து கொண்டாடப்படுகிறது. மணமாகா இளம் பெண்கள், குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை / சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் / வாழ்க்கைத் துணைவர் அமைய அம்மனின் திருவருள் / பாக்கியம் வேண்டுகிறார்கள். 'சுப காரியங்கள் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது' களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது' 'ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.' என்ற நம்பிக்கை! 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைக்கும்' என்றும், 'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் கூட சொல்லி வைத்துள்ளார்கள். ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன [ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். ]. மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெறும். இதனால்த்தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறது [ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது. அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்!] . இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது / குறைக்கிறது . இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள் போலும் . மற்றும்படி ஒன்றும் இல்லை. மற்றும்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் மூடநம்பிக்கை தான். நல்லதை சொன்னால் நாம கேட்க மாட்டோமே. அதனால்த்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்! . அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்களைச் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான். அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான் இதற்கு காரணம். இது பொதுவான மத நம்பிக்கை. மற்றபடி ஆடியில் கர்ப்பம் தரித்தால், சித்திரையில் பிள்ளை பிறக்கும், அதனால் கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. இதற்கும், அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம், இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும். இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்: ஆடிப்பட்டம் தேடிவிதை [உழவர்கள் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கலாம்.. காலம் அறிந்து பயிர்செய்ய. இப்பொழுது வைத்தால் தானே தை மாதம் அறுவடை செய்ய முடியும்!] ஆடிக்காற்றில் அம்மி(மை)யும் பறக்கும் பொருள்: வழக்கத்தில் உள்ளது - ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும். உண்மையான விளக்கம் - சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மை பறந்து போய்விடும் என்று கூறி, நாளடைவில் திரிந்து இருக்கலாம்? அந்த காலத்தில், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும், சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெரியவர்கள் சொன்னார்கள். அது அன்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை . நம்மை எந்த அளவு வெப்ப நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் இன்று உள்ளது. ஆனால் இன்றும் இதைக் காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது. திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. ஆடி மாதத்தில். உதாரணமாக , புது வீடு செல்லக் கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ணக் கூடாது போன்றெல்லாம் சொல்லிக் கொண்டு இன்னும் நடை முறை படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயத்தில் அந்த நம்பிக்கைகள் எதனால் கடைபிடிக்க பட்டன என்பதன் ஆணி வேரை புரிந்து கொள்ளவும் வேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி / Part - 04:"தும்மல் / விக்கல் / கண் வெட்டசைவு / உள்ளங்கை அரித்தல் " தொடரும்1 point- பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
1 pointபண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 02: முகவுரையின் இரண்டாவது பகுதி தொடர்கிறது ஊருக்கே குறி சொல்கிறது பல்லி, என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள்.மேலும் “பூனை குறுக்கால போனால் போகிற காரியம் சரிவராது” என்று சொல்லுவாங்க.அது பூனை பயத்தில் அல்லது ஏதாவது ஒன்றை பிடிக்க ஓடுது. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தானே கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறானே.வேடிக்கையாக இல்லையா? இப்ப இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "தும்மலை"[sneeze]ப்பற்றி வள்ளுவர் கூறுவதை கேளுங்கள் : "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்"- குறள் 1203 தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?. விக்கலும்[hiccough] அப்படியே. அவரைப்பற்றி யாரோ கதைக்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பார்கள்.இப்படி சொல்வதன் மூலம் தூர வசிப்பவர் ஒருவரின் அல்லது தூர பயணம் செய்துகொண்டு இருப்பவர் ஒருவரின் ஞாபகத்தை வைத்திருப்பதற்கு உதவும் என்பதாலே.ஆனால் நாளடைவில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. "சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்டநிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது"ம் அப்படியே .அதாவது ஏணியின் கீழாக நடக்கும் போது தவறுதலாக ஏணியை தட்டிவிட்டால் மேல் இருப்பவர் அல்லது அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் கை நழுவி,கீழால் நடப்பவரின் மேல் விழலாம் என்பதால் ஆகும்.இது ஒரு பகுத்தறிவு சிந்தனையே.ஆனால் நாளடைவில் அதுவும் மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. அவ்வளவுதான்! "மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும்நம்பிக்கையாக இருந்திருக்கிறது." பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன.சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால்,அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில் புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களை அரிசில் கிழாரும் (புறம் 281), வெள்ளி மாறனாரும் (புறம் 296) தருகின்றனர் "வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே - நீ வெம்பி விடாதே" [பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் படம்: அரசிளங்குமரி, 1957] இவை எல்லாத்தையும் விட ,"பன்றியே" சகுனம் பார்த்ததாக ஒரு போடு போட்டுவிட்டார் பாண்டிய மன்னர் ஒருவர் .எப்படி இருக்குது மூட நம்பிக்கை.இதோ அந்த சங்க கால பாடல்: [புலவர் -உக்கிரப் பெருவழுதி]/( நற்றிணை - 98. (குறிஞ்சி)]: "எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் செய்ம்மம் மேவல் சிறு கட் பன்றி ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி நூழை நுழையும் பொழுதில் தாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன் கல் அளைப் பள்ளி வதியும் நாடன் ......" [பொறி அமைக்கப்பட்ட புனத்தில் மேய்வதற்காகச் சிறிய கண்களைக் கொண்ட பன்றி ஒன்று வருகிறது. அது முள் போன்ற பிடரி மயிரைக் கொண்டிருந்தது. அது நுழையும் போது ஒரு குறித்த திசையிலிருந்து பல்லி கத்தியது. உடனே பன்றி நின்றது. ஏதோ ஒரு நுண் உணர்வு. அது திரும்பாமலேயே அப்படியே பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டது.] நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர் .உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்: "மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!" இதற்கு மாமி கூறுகிறாள்: "அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் பூப்பு[பெண்மை]அடைந்து அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!" இறுதியாக சங்க கால உரையாடல் ஒன்று : தோழி[தலைவியை.பார்த்து ]: "அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றானே. அப்படியிருக்கும்போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? " தலைமகள் [தோழியிடம்]: "தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து/ சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்". "கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுற மரீஇ வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியேன் யானே"-குறுந்தொகை 30 நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!. அடுத்த அடுத்த இதழ்களில் பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகளை ஒவ்வொன்றாக விபரமாக ,கூடிய வரை " பழ மொழிகள் :,+ சங்க இலக்கியம்" துணையுடன் பார்ப்போம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03: "ஆடி மாதம்" தொடரும்1 point - இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.