Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  2. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    11884
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38770
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/01/25 in all areas

  1. எப்போதுமே பழரசங்களை அருந்தி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னர்கள் மக்களின் நிலையை அறிந்து கொள்ள மக்களுடன் மக்களாக வாழ்ந்து கஞ்சி குடித்து வாழ்வது மன்னர்களின் குடியுரிமை அல்லவா😂 மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு வாழ்த்துக்கள்
  2. அதாவது இந்திய கொலைகாரப் படை வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் விருப்புக்கு எதிராக ஆக்கிரமித்து இருந்த காலத்தில் இதே பிரேதச்சந்திரன் உருவாக்கிய அச்சமற்ற சூழ்நிலையை மீண்டும் கொண்டு வருவாராம்.
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 50வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ரியான் ரிக்கெல்ரன் (61 ஓட்டங்கள்), ரோஹித் ஷர்மா (53 ஓட்டங்கள்), சூர்யகுமார் யாதவ் (ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள்), ஹார்டிக் பாண்டியா (ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள்) மின்னல் வேகத்தில் ஓட்டங்களை எடுத்தமையால் இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் திணறி விரைந்து ஆட்டமிழந்தனர். பின்னணி வீரரான ஜொஃவ்ரா ஆர்சர் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியனர். இறுதியில் 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களுக்கு சுருண்டனர். முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் knock out க்குச் செல்லும் தகுதியை இழந்து வெளியேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் பட்டியலில் முதலிடத்தில் நிலைக்கின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: தொடரின் ஆரம்பத்தில் பல நாட்கள் முதலாவது இடத்தில் நின்ற @suvy ஐயா பத்தாவது நிலைக்கும் கீழே இறங்கியுள்ளார்!
  4. GMT நேரப்படி நாளை வெள்ளி 02 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 13 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 சுவைப்பிரியன் செம்பாட்டான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிலாமதி சுவி பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  5. நூருக்கு ஒரு பந்துதான் இருந்தது. அதன் பின் கடைசிப் பரிபாற்றம். சிவம்தான் எல்லாப் பந்தையும் அடிக்கப் போகின்றார். அவர்கள் ஒன்று ஓடுவதற்கு முயற்சியே செய்யப்போவதில்லை. ஆதலினால் இருக்கும் அந்த ஒரு பந்தை அடி என்றுதான் நூருக்கு சொல்லி இருபடும். வந்தால் மலை அல்லது..... அவர்கள் விட்ட பிழை என்னவென்று சொன்னால், சாகல் வரும்போது, தலை தான் அடிக்காமல் ஒரு ஓட்டத்தை எடுத்து மிச்ச பந்துகளை சிவத்திடம் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் சிவம் தான் சுழல் பந்து வீச்சாளர்களை போட்டு விளாசுவார். அணித் தலைவரே அவ்வாறு யோசிக்காவிட்டால், எப்படி மற்ற வீரர்கள் யோசிப்பார்கள். இதெல்லாம் சிறிய விடயங்கள். ஆனால் போட்டியின் போக்கையே மாற்றி விடும். மாற்றியே விட்டது. சரி அடித்தது தான் அடித்தார் ஏன் எல்லா பந்தையும் படிக்க வேண்டும்.
  6. வீரசிங்கம் மண்டபத்தில் ஆகக்கூடியது 300 பேர் என்று பார்த்தால் யாழ்மாநகரசபை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் வந்தாலே போதும். மேதினம் என்றால் மேதின பேரணியாக வந்து ஒரு திறந்த வெளியில் குறிப்பாக அந்தக்காலத்தில் முற்றவெளியில்நடக்கும் மாபெரும் பெரும் கூட்டம் நடைபெநறும். மேதினப் பேரணியைக் கட்சிகள் தங்கள் பலத்தைகக் காட்டப்பாவிப்பார்கள். ஆனால் வழமைக்கு மாறாக அதுவும் தேர்தல் நேரத்தில் ஒரு சிறிய மண்டபத்திற்குள் சுருக்க வெுண்டிய காணம் என்ன? மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்! 2025 மே 1 இன்று இலங்கை, சர்வதேச தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுடன் நினைவுகூருகிறது. குறிப்பாக கொழும்பில் குறைந்தது 15 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர். முக்கிய மே தின பேரணிகள் இங்கே: கொழும்பு தேசிய மக்கள் சக்தி (NPP): தேசிய மக்கள் சக்தி அதன் முக்கிய பேரணியை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துகிறது. இந்த இடத்தில் அரசியல் கூட்டங்கள் மீதான முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் காலி முகத்திடலுக்கு திரும்புவதை இந்த நிகழ்வு குறிக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP): SLPP யின் பேரணி நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP): கொழும்பு 10, டார்லி வீதியில் உள்ள அதன் தலைமையகத்தில் முன்னாள் தலைவர் டி.பி. இளங்கரத்னவுக்கு மலர் அஞ்சலி செலுத்துதல் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு நினைவு நிகழ்வை நடத்துகிறது. முன்னணி சோசலிசக் கட்சி: அவர்களின் பேரணி கிருலப்பனை லலித் அதுலத்முதலி மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிற குறிப்பிடத்தக்க இடங்கள்: ஹைட் பார்க், விஹாரமஹாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கம், கொழும்பு நகராட்சி மன்ற வளாகம், ஆர்மர் வீதி, ஈ.ஏ. குணசிங்க சிலைக்கு அருகில் உள்ள வாழைத்தோட்டம், பி.டி. சிறிசேனா மைதானம், தபால் தலைமை அலுவலகம், கொஸ்கசந்தி மற்றும் பொது நூலகத்தில் கூடுதல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. கொழும்புக்கு வெளியே ஐக்கிய மக்கள் சக்தி (SJB): எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாகலை நகரில் பிற்பகல் 2:00 மணிக்கு SJB தனது பேரணியை நடத்துகிறது. இதில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வஜன பலய (மக்கள் சக்தி கட்சி): இந்தக் கட்சி, வாரக்காபொல வாராந்திர சந்தை மைதானத்தில் காலை 10:30 மணிக்கு “தொழிலாளர்கள் தொழில்முனைவோரை நோக்கி” என்ற தலைப்பில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்கிறது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமை தாங்குகிறார். இலங்கை தமிழரசுக் கட்சி : ITAK வின்பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. பேரணிகள் காரணமாக இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், பணியில் உள்ள போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1430151
  7. எங்க இந்தப்பக்கமாக் காணேல என்று பார்த்தன். நானும் இரண்டு பேரோட மாட்டுப்பட்டு இன்றைக்குத்தான் 2 புள்ளி கிடைத்தது. நாளைக்கு அவை இரண்டு பேரும் பிரிஞ்சிட்டினம். கிளியும் மற்றப் பக்கம் போட்டுது. என்னமோ ஏதோ என்டு பதறுது🤣
  8. காரணம் எதுவாக இருந்தாலும் இப்படியான இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும்..... தடுக்கப்பட வேண்டும்..... மாணவர்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படல் மிக அவசியம். கல்லூரிகளில் பல்கலைக் கழகங்களில் இப்படியான நிகழ்வுகள் அதிகரித்துச் செல்வது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல
  9. நீங்கள் கேட்கும் எல்லாவற்றையும் அப்படியே literal ஆக எடுத்துக் கொள்ளும் ஒருவர் போல தெரிகிறது. உதாரணமாக, "நாங்கள்"- The Royal We 😎 என்று சாமி தன்னைத் தான் குறித்திருப்பார் என நான் ஊகிக்கிறேன். நீங்கள், அதற்கு ஒரு சதி வேலை அர்த்தம் கொடுத்து, வியாக்கியானம் செய்து ...மூளை காய்கிற உரையாடல் தான் அனேகமாக உங்களுடன் செய்ய வேண்டியிருக்கிறது ஐயா! (மனக்குரல்: ஐயோ சாவடிக்கிறாங்களே!!😂)
  10. குத்துக்கரணத்துக்கு மும்பாயின் தொடர் வெற்றிகளும் ஒரு காரணம். முதல் 5 போட்டிகளில் மும்பாய் ஒரு போட்டி மட்டுமே வென்றது. ஆனால் கடைசி 6 போட்டிகளில் தொடர் வெற்றி
  11. அடுத்தடுத்து எட்டு , பத்து முறை தோல்விதான் .......... " வென்றால் மகிழ்ச்சி, தோல்வி பயிற்சி"யாகி பழகிப் போச்சு ....... ஒரே கஞ்சிதான் ......... ! 😂
  12. சரி எல்லாம் முடிந்தது. ராஜஸ்தான் மூட்டையைக் கட்ட வேண்டியது தான். மும்பை புள்ளி பட்டியலில் முதலாவது. யாழ் களத்தில் அந்த இரண்டு பேரும் ஒன்றாக இருந்தும் எமக்கு புள்ளிகள் கிடைப்பதில் மகிழ்ச்சி.
  13. சில மாதங்களின் பின் சும்: நாம் யாழ் மண்ணில் கால்வைக்க விட மாட்டோம் என சொன்னதை செய்துகாட்டியுள்ளோம். எமக்கு பயந்து அனுர சப்பாத்து போட்டுத்தான் யாழ் மண்ணில் இறங்க கூடியதாக இருந்தது. அவருக்கு செல்வாக்கு ஏறுதோ இல்லையோ… நீங்கள் எழுதியதை வாசித்து இங்க பலருக்கு பிளட் பிரசர் ஏறப்போது.
  14. எப்படி ப்ரோ? 1987-89 காலப்பகுதியில் மக்கள் அச்சமின்றி வாழ மண்டையன் குழு என்ற தர்மஸ்தாபனத்தை உருவாக்கி உழைத்தீர்களே, அப்படி ஏதும் செய்யும் உத்தேசமா ப்ரோ😀.
  15. நிச்சயம் யோகசங்கரி இல்லை. அவர் 90 இலேயே இறந்து விட்டார். விக்கியின் சான்றுப்படி, வீரசிங்கம் என்ற பருத்திதுறையை சேர்ந்த பிரின்சிப்பலுக்கு 6 ஆண் பிள்ளைகள். அனைவர் பெயரும், அவர்களின் ஆண் பிள்ளைகளின் பெயரும் சங்கரி என முடியும். 6 பேரில் மூத்தவர் இராஜ சங்கரி, ஈபியால் கொல்லப்பட்டுள்ளார். 1988 இல் இன்னொரு ஆனந்தசங்கரியின் சகோதரரான ஞான சங்கரியும், 1990 இல் ஞானசங்கரியின் மகனான யோகசங்கரியும் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். வீரசிங்கம் பிரின்சிப்பலுக்கு பிறகு அந்த குடும்பத்தில் பிறந்த ஆண்கள் அனைவரின் பெயரும் சங்கரி என முடிவதால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. முறைப்படி மார்க்கானி 5 வருடம் பூர்த்தி செய்த பின் naturalization மூலம் பிரிதானிய பிரஜை ஆனவர் என ஆதராம் மூலம் நிறுவியவன் நான். Registration, honorary citizenship என எங்கோ கேள்விபட்டதை எல்லாம் வாயில் வந்த கோலத்தில் எழுதியவர் நீங்கள். யார் பொத்தாம் பொதுவில் எழுதுபவர் என்பதும், ஆதாரபூர்வமாக தான் எழுதியதை பிழை என இன்னொருவர் நிறுவியதும், அது தியரி நான் சொல்வது நடைமுறை என சடைபவர் யார் என்பதும் களம் அறியும்.
  16. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அரசியல் செய்தால் குற்றம். சிலவேளை இவர் முறைபடி அனுமதி பெற்று வந்திருக்கலாம். ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காசிநாத் செந்திலுடன் பேச்சு வார்த்தை நடத்தி என்ன பலன் கிடைக்கப் போகுது.
  17. இந்தாளே யாழ் மண்ணில் கால் வைக்க யோசிக்குது. அந்தாளை எப்படி கால் வைக்காமல் பண்ணுவார். அந்தாளின் பாதுகாப்பிலேயே இந்தாள் வந்துபோகுது.
  18. மன்னார் இந்தியா உடன் இணைக்கப்பட்டுள்ளதா. ?? இலங்கை அரசின் அனுமதி இன்றி இப்படி வந்து கலந்துரையாடல் நடத்தலாமா.??
  19. உங்க ஆள் தானே நேற்று கீறோ. 50 அடித்தவுடன் பண்ணிய அட்டகாசம் இருக்கே அப்பப்பா சொல்லிமாளாது. யாருக்கு போன் பண்ண சொன்னார்? என்னதான் இருந்தாலும் நேற்று அவரைப் போற்ற வேண்டும்.
  20. தொடங்கிட்டாங்களா. முந்தி பாக்கிஸ்தான் வீரர்களை அப்பிடிச் சொல்லுவினம். அப்ரிடி தனது 18 வயதில் வேகமான சதம் அடித்த போதும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு வந்திருந்தது. இப்படி கதைப்பவர்களின் மனதில் எரிச்சலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்தப் பையன் அதிர்ஷ்டத்தால் தான் அன்று நூறு அடித்தான் என்று நைசாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நேரடியாக அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் அன்று அவனது நாள், அடித்ததெல்லாம் எல்லைக்கோட்டை தாண்டியது, அப்படி இப்படி என்று ஒரு கூட்டம். ஒருவனது திறமையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கீழே தள்ளாமல் இருந்தாலே போதுமானது.
  21. நினைத்துப் பார்க்க அழகாய் இருக்கும் ஹாட்ரிக் + ஒன் விக்கட் , (ஒரு ஓவரில் குறைந்த ரன்கள் நான்கு விக்கட் ) . ........ சூப்பர் ஷாகுல் ....... ! 😂
  22. ஒரு வயதான அம்மா துவக்கால் சுட்டுவிட்டா. இதுதான் பரபரப்பாக பொலிசுக்கு வந்த தொலைபேசி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி... அவ சுட்டுக் கொன்றது, அவவின் சொந்தக் கணவனை.😳 பொலிசாருக்கு டென்ஷனால் தலை கிறுகிறுத்தது. ஏனென்றால் அவ கொன்ற காரணம்......🥶 அவ தனது வீட்டில், தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த போது, வெளியே சென்ற கணவன் கழுவிய தரையில் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பதற்காக.🧐🥺 அதிர்ச்சி அடைந்த பொலீஸ் அதிகாரி, உடனே ரேடியோ தொலைபேசி மூலம் தனது பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பொலிசாரை அங்கு சென்று அந்த அம்மாவை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.😉🧐 நீண்ட நேரமாயும் போன பொலிசாரைக் காணவில்லை. குழம்பிப் போன பொலீஸ் அதிகாரி, தொலைபேசியில் கோபமாக..... " இன்னுமா கைது செய்யவில்லை என்று உறுமினார்.😡 அதற்கு அங்கு போன பொலிஸார் சொன்னார்கள்......🤭 " நோ சேர்... இன்னும் இல்லை. கழுவிய தரை, இன்னும் காயவில்லை..!😁😄😂 Rj Prasath Santhulaki
  23. முதலில் கோச்சை வெளியே அனுப்ப வேண்டும். ஒருவர் ஆடப்போகும்போது என்ன செய்யவேண்டும் என்று கூடவா சொல்லி அனுப்ப முடியாது! நூர் அஹமட் தலைக்குள் எதுவுமே இல்லாத மாதிரித்தான் ஒவ்வொருமுறையும் பேட்டிங் செய்கிறார்! பத்திரனாவின் பந்துவீச்சும் சுத்த வேஸ்ட்! அவருக்கு பதிலாக நேதன் எல்லிஸை விளையாடலாம்!! தோனியிலும் பிழை உள்ளது! பதிரான தொடர்ந்து நான்கு ஓவர் போட்டுக்கொடுப்பது மிகவும் பிழை. பேட்ஸ்மேன் மிக இலகுவாக கணிக்கக்கூடியதாக போய்விடும்! இப்போதுதான் KKR யோசிக்கும் அந்த வெங்கடேஷை வாங்கிய நேரம் ஷிரேயஸை வாங்கி இருக்கலாம் என்று! சென்னை தோற்கும்போது "அது ஒரு அழகிய நிலாக்காலம்" என்ற பாடலை போட்டது அருமை!
  24. (முதலில் நான் சொன்னது சுருக்கமாக.) மார்க் கானி 2012 பதவியில் வரும் போது பிரித்தானிய பிரச உரிமை இல்லை. இதுவே உண்மை, அன்றைய யதார்த்தம். ஒரு பத்திரிகை சொன்னது 300 வருடம் அளவில் மீண்டும் வெளிநாட்டவர். மற்றவை முதல் முறை வெளிநாட்டவர் மார்க் கானி பதவியில் வருகிறார் என்று. (ஆயினும் (பிரித்தானிய பிரஷை ஆகும் தகமை) இருந்து இருக்கலாம் என்று நான் சொன்னது (மார்க் கானி அதை பற்றி பொருட்படுத்தாமல், மற்றது (உத்தியோகபூர்வமாக) எடுக்காமலும், ஏனெனில் மார்க் கானியின் தாய் வழி பற்றி அன்றும், இன்றும் தெரியாது)). (சிலருக்கு எல்லா பிரவுரிமையும், தகமையும், பெறும் காலம் ஒன்றாக, பிரித்தானியா பிரசா உரிமையாக தெரிகிறது போல இருக்கிறது.) மற்றது, மார்க் கானி London இல் கணிசமான காலம் வேலை செய்தவர், Goldman Sachs இல் (அவரின் அயர்லாந்து குடிஉரிமையினால்), வேறு நிறுவனங்களும் இருக்கலாம். (மார்க் கானியின் இங்கிலாந்து அரச தொடர்பு அவருக்கே தெரியாமல் , ஏனெனில் அவர்களை பொறுத்தவரையில் அயர்லாந்தில் இருந்தே அவர்களின் மூதாதையர் கனடாவில் குடியேறிதாக) (இப்படியான ஐரிஸ் - பிரித்தானிய இரத்த உறவு உள்ளோர் இப்போதும் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் பிரெக்ஸிற் இல் ஐரிஷ் பிரசவுரிமை எடுத்தது, eu வசதிக்காக) அன்று, உண்மையில், மார்க் கானி, முதல் தெரிவுசெய்யப்பட்ட தொகுதியில் bank of england governor பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. பின், அன்றைய UK நிதி அமைச்சர் (இதை Chancellor of the Exchequer என்று UK அரசாங்க மொழியில் சொல்வது), George Osborne, மார்க் கானியை பல சந்திப்புகள் வழியாக விண்ணப்பிக்க சம்மதிக்க வைத்ததாக. அன்று சொல்லப்பட்டது, கானி விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கோரல் காலம் முடிந்து விட்டதாக. இதை bank of england க்குள் இருந்து விண்ணப்பித்தோர் எதிர்த்ததாக. இதை bank of england க்குள் இருந்து விண்ணப்பித்தோர் எதிர்த்ததாக, முக்கியமாக Paul Tucker, அன்று bookmakers இன் முதல் தெரிவு bank of england governor யாருக்கு கொடுக்கப்படும் என்பதில், இயற்கையாகவே ஒரேயொரு கேள்வி எழுகிறது , ஒரு அரசாங்கம், அந்த நேரத்தில் பிரசை அல்லாதவருக்கு, இவ்வளவு இறங்கி, ஏன் மார்க் கானியை உள்ளுக்கு கொண்டு வந்தது என்று? (அனால், மார்க் கானி அரச தொடர்பு முன்பே தெரிந்ததா அல்லது பின்பு தெரிந்ததா, முக்கியமாக வெளியில், என்பது தெரியாது.) (அன்றைய பிரதமர் david cameron உம் பல சந்ததிகள் கடந்த அரச குடும்ப நீட்சி, உறவு ) சொல்ல மறந்து விட்டேன் - மார்க் கானி மனைவி பிறப்பிலேயே பிரித்தானியர் தான், Oxford பல்கலைக்கழகத்தில் இணைந்தார்கள். குறிப்பு: நான் காலை எழும்பி, சும்மா பொத்தாம் பொதுவாக சொல்லுவதில்லை.
  25. அது பிரெஞ் மொழி பேசும் கியூபெக் மாகாணத்தில் (மொண்டிரியல் தலைநகர்). அல்பேர்ட்டா, வான்கூவர் (மேற்கு), ரொடெண்டோ (கிழக்கு) இடையே இருக்கும் மத்திய கனடா மாநிலம், தெற்கு எல்லை அமேரிக்கா. அண்ணேய் உங்களுக்கு பேய் பிசாசு சகவாசம் இருக்கோ😂. யோகசங்கரியை ஜூன் 1990 இல் சென்னையில் வைத்து நாபாவோடு இன்னும் பலரோடு புலிகள் போட்டுதள்ளி விட்டார்கள்.
  26. செம்பாட்டன் அவர்கள் பொதுவாக சொன்னதை எனக்கு சொன்னதாக நினைத்து எழுதினேன். ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்ன தோன்றுதோ அவற்றை எழுதுங்கள்
  27. யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் காட்டியதில் இருந்து இன்று வரை... யாழ். மக்களுக்காக ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. யாழ். மண்ணில் இந்தியா ஒரு மண்டபத்தை கட்டி, தனது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளது. யாழ். வைத்தியாசாலையில் இந்திய அமைதிப் படையால்... கொல்லப் பட்ட நோயாளர்களுக்கு, பொதுமக்களுக்கும், வைத்தியர்களுக்கும், தாதியர்களுக்கும் இவர்களால்... ஒரு அஞ்சலி நிகழ்வு வைக்க முடியுமா? அந்த மண்ணில் நிகழ்ந்த கொடுமைக்கு இல்லாத அஞ்சலி... காஷ்மீரில் நடந்த கொலைக்கு இங்கு ஏன் அஞ்சலி? இந்த நிகழ்வுக்கு போனதுகளுக்கு... காலில் இருக்கிறதை கழட்டி அடிக்க வேண்டும்.
  28. பைவவ் சூரியவம்சிக்கு 14 வயதினை விட வயது அதிகம் என ஒரு குண்டை எனது இந்திய நண்பர் போட்டார், அதற்கு அவர் கூறும் காரணம் பதினைந்து வயதிற்குட்பட்ட போட்டிகளில் வாய்ப்பு எடுப்பதற்காக பிறப்பு அத்தாட்சி பத்திரப்பதின்போது ஆண்டை மாற்றி உள்ளார்கள் என்றும் இது இந்தியாவில் பொதுவான விடயம் எனவும் கூறினார், 2017 உள்ள படத்தில் அவர் குழந்தையாக உள்ளாரே என கேட்ட பொது அதற்கான சரியான பதிலை அவர் வழங்கவில்லை, இந்த உரையாடல் நிகழ்ந்த போது அவருடன் நின்ற இன்னொரு இந்திய நண்பர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். பானையில இருக்கிறதுதானே அகப்பையில் வரும், நாங்கள் தெரிவு செய்த ஒரே காரணத்திற்காக அவர்களை வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.😂
  29. கந்தையர் கிண்டலாக சொன்னதை நீங்கள் சீரியஸாக எடுத்து உணர்ச்சி வசப்படுகிறீர்கள். இவர் ஒரு கட்சியை சேர்ந்தவர், அதிகம் பேசப்படாத கட்சி.
  30. 70வது போட்டி வரையும் அவர்தான். இனி அசைக்க முடியாது. எடக்கு முடக்குக் கேள்விகளில் ஏதாவது நடந்தால்தான் உண்டு. வாழ்த்துக்கள் நந்தன். உங்கள் தெரிவுகள் எல்லாம் பக்கா.
  31. மிக அமைதியான நாடு. அமெரிக்கா (நேட்டோ) வுடன் சேர்ந்ததால் பிழையான பெயர் கனடாவுக்கு வரலாம். அதே நேரம் அகதிகளை ஏற்கும் நாடுகளில் கனடாவும் முதன்மை பெறுகிறது. எம்மவர்கள் பலர் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை முன்னாள் அமைச்சர்(Bob Ray) ஒருவர் கூறும் போது குறுகிய காலத்த்தில் முன்னேறி நல்ல நிலைக்கு (பணக்காரர்களாக) வந்த ஒரு சமூகமாக குறிப்பிடுகிறார். கனடாவின் சுத்தமான நீரே அவர்களின் இலகுவான வருமானம் மிக நீண்ட கால நோக்கில். பெற்றோலியம், யூரேனியம் என்பன சொல்லவே தேவை இல்லை.
  32. சட்டு புட்டென்று ஒரு முடிவுக்கு வாங்க.
  33. ஏனைய அரசுகளும் இவற்றை தான் செய்தன. அப்போ இவர் பா.உறுப்பினராக இருந்தார். இப்படியான எந்த கருத்தையும் அரசுக்கு எதிராக அப்போ வைத்ததாக தெரியவில்லை.
  34. ஸ்சப்பா. பையன் விரல் நுனி என்றால் கந்தப்பு விரல் நகமாக இருக்கிறார். (தகவல் திரட்டலில்)🙂
  35. கனடா தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு இவற்றை எல்லாம் படித்துவிட்டு ஒருவர் யுரியுப் வெளியிடுகின்றார் கனடாவில் நடந்த அதிரடி மாற்றம் மகிழ்ச்சியில் தமிழர்கள் கலக்கத்தில் அமெரிக்கா இதை எல்லாம் பார்த்துவிட்டு இது தான் கனடா சென்று செற்றிலாவதற்கான சரியான நேரம் என்று இலங்கையில் இருந்து தமிழர்கள் நம்பிக்கையுடன் கனடா செல்வதற்கு திட்டமிடாமல் இருக்க வேண்டும்
  36. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 49வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் சாம் கரனின் புயல்வேக ஆட்டத்தில் எடுத்த 88 ஓட்டங்களுடனும், டெவால்ட் ப்ரெவிஸின் 32 ஓட்டங்களுடனும் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களின் மின்னல் அடியில், குறிப்பாக ப்ராப்சிம்ரனினதும், ஷ்ரேயஸ் ஐயரினதும் அரைச் சதங்களுடனும் மூன்று விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைய 12 ஓட்டங்கள் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த @நந்தன் க்கும் @புலவர் ஐயாவுக்கும் மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை!):
  37. அவசரப் படாதீர்கள் சாத்தான். மா... புளிச்சுக் கொண்டு இருக்கின்றது. எப்படியும் இன்று இரவு சண்டை தொடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்களில் எதிர்வு கூறுகின்றார்கள். நீங்கள்... சண்டையை உன்னிப்பாக அவதானிக்க, சோளன் பொரி (பொப் கோர்ன்) வாங்கி வைத்து இருங்கள். 😂
  38. லிபரல் தான் ஆட்சிக்கு வருவார்கள் என தெரியும். இதனை நான் மார்ச் 16 இலேயே எழுதியிருந்தேன். இந்த திரியில் நான் எழுதிய ஒரு விடயத்தை மட்டும் இறுதி நேரத்தில் செய்யவில்லை. அதாவது பழமைவாத கட்சிக்கு வாக்களிக்கவில்லை. நானும் தாரளவாத கட்சிக்கே வாக்களித்தேன். காரணம், பக்கத்து நாட்டில் இருக்கும் வலதுசாரி பைத்தியகாரனை சமாளிக்கும் வல்லமை கார்னேக்கு அதிகம் இருக்கலாம் எனும் நம்பிக்கையில்.
  39. நம்மைப் போன்ற அதிகப்பிரசங்கிகள் வெடியை எடுத்துக் கடித்தாலாவது பொறுத்துக் கொள்ளலாம் ......... ஆனால் ஒரு பல் வைத்தியருக்கு என்ன அறிவு , கண்ட கோதாரியையும் வாய்க்குள் போட்டுக் கடிக்கக் கூடாது என்று தெரியாதா ........ இது என்ன வாழைப்பழமா , சீனவெடி சும்மாவே வெடிக்கும் . .......... பிறகென்ன பல் வைத்தியர் ......... ☹️
  40. நீண்ட காலத்தின்பின் வசந்த காலத்தென்றல் உடன் வந்துள்ளீர்கள். உங்கள் மூலம் யாழ்களம் தென்றல் வீசட்டும். பகிர்வுக்கு நன்றி .
  41. பூக்களின் நறுமணம் வேர்களுக்கு தெரிவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.