Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38754
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    12678
    Posts
  4. island

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1747
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/03/25 in all areas

  1. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், யூனியன் கல்லூரிக் கீதத்தை எழுதியவரும் ஆன கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் பார்டன் தொகுதியில் ஆளும் தொழிற்கட்சி சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்.
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 52வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஜாகப் பெதலினதும் விராட் கோலியினதும் வேகமான அரைச் சதங்களுடனும், பின்னர் வந்து மரண அடி கொடுத்து 14 பந்துகளில் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் எடுத்த ரொமாரியோ ஷெப்பேர்ட்டினது ஆட்டத்துடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 17 வயதேயான வீரர் ஆயுஷ் மாத்ரேயின் புயல்வேக 94 ஓட்டங்களுடனும், கூட இணைப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்கள் எடுத்த ரவீந்திரா ஜடேயாவினது பங்களிப்புடனும் வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறினர். எனினும் ஆயுஷ் மாத்ரே 16.2 ஓவரில் ஆட்டமிழக்க அடுத்த பந்தில் டெவால்ட் ப்ரெவிஸும் ஆட்டமிழக்க போட்டி திசை மாறியது. 18வது ஓவரை சுயாஷ் ஷர்மா இறுக்கமாகப் போட்டு ஆறு ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்தார். இறுதி ஓவரில் வெற்றிபெற 15 ஓட்டங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பந்தில் தோனி அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்த பந்து ஷிவம் டுபேயால் சிக்ஸருக்குப் போனதும், அது உயரம் காரணமாக நோபோல் ஆனதும் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் திசை மாற்றியது. மூன்று பந்துகளில் ஆறு ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் யஷ் தயாலின் இறுக்கமான பந்துவீச்சால் மூன்று ஓட்டங்களே எடுக்கமுடிந்தது. இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களையே எடுத்தனர். முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டே இரண்டு ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான் நீலன் தயாரிக்க உதவினார். அதை சந்திரிக்கா நீர்த்து போகவைத்தார் எனில் அதற்கு நீலன் பொறுப்பாக முடியுமா? நியாயமான தீர்வை அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை எனிலும், அதை முன் வைக்கவாவது தன் உழைப்பை கொடுக்கலாம், புலிகளின் பலத்தை ஒரு காரணியாக வைத்து ஒரு நியாயமான தீர்வை பெறலாம் என முயற்சிப்பது, எமக்கு விருப்பம் இல்லாத நகர்வாய் இருக்கலாம் - ஆனால் அது மரண தண்டைக்குரிய குற்றம் அல்ல. குறிப்பாக இன்னொரு மாவீரரை பலி கொடுத்து. இந்த ஆரம்ப வரைபு கொடுத்த தீர்வை ஒத்த ஒரு தீர்வைதான் புலிகள் ஆஸ்லோ பிரகடனம் மூலம் கோரி நின்றனர். நீலனோடு அதே நிலைப்பாட்டில் 1995 இருந்த சிவசிதம்பரம், சம்பந்தர், மாவை இதர ஆட்களை நீலன் கொல்லப்பட்டு இரு வருடங்களுக்குள் புலிகள் அரவணைத்தனர். இதே காலகட்டாதில் புலிகளை எதிர்த்து யாழ் மேயர் ஆகி, கடும் விமர்சனங்களை வைத்த ரவிராஜை பின்னாளில் மாமனிதர் ஆக்கினர். நீலன் மீது கட்டுரையாளர் கூட “இலங்கையின் அரசுக்கு மறைமுகமாக உதவினார்” என்பதை தவிர வேறு எந்த தமிழர்/புலிகள் விரோத நடவடிக்கை குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை. நீலன் அமெரிக்காவில் அதிகாரத்தில் உள்ள பலரின் உற்ற நண்பர். அனைவருக்கும் தெரிந்த உண்மை, புலிகளுக்கும் தெரிந்திருந்தது. நீலன் சி ஐ ஏ என பரவலாக சந்தேகிக்கப்பட்டது. நிச்சயம் இதுவும் புலிகளுக்கு தெரியும். அவர் இலங்கை வந்து இப்படி பட்ட அரசியலில் ஈடுபட்டதும் இதற்கே எனவும் பலர் சந்தேகித்தனர். இப்படி பட்ட அமெரிக்காவின் இலங்கை நண்பரை கொல்லுவது, கிட்டதட்ட அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவரை கொல்லுவது போன்றது. இது புலிகளால் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்றே கருதப்பட்டிருக்கும். இவ்வளவு நடந்த பின்னும், நமக்கு ஏன் அமெரிக்கா நம்மை தடை நீக்கவில்லை, உதவி வழங்கும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பது புரியவில்லை என்பது ஒரு துன்பியல்.
  4. தந்தை செல்வாவைப்பற்றி சொல்லும் தகுதி இவருக்குண்டா? அவர் சென்ற வழியில் இவர் செல்கின்றாரா? அவரே, தமிழரை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கையளித்தவர். பாராளுமன்றத்தேர்தலில் அவர் குடும்ப உறுப்பினரை களம் இறக்கினாரே, மக்கள் செவி சாய்த்தனரா? அவர் வழியை விட்டு விலகி பலதூரம் சென்று தொலைந்தபின் அவர் வழியை மீண்டும் தேடி கண்டுபிடிக்க, பல நபர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். உந்த பச்சா எல்லாம் வாய்க்காது. உதெல்லாம் தேர்தலுக்கான தந்திரமென மக்கள் நன்கறிவர்.
  5. RCB, அவங்களும் கஷ்டப்பட்டு தோக்கத்தான் பார்த்தவங்கள். ஆனாலும் முடியல்ல!
  6. தந்தை செல்வா உண்மையில் அதிஷடக்காரர். 1977 ல் இயற்கையெய்துவிட்டார். சற்று இளமையானவராக இருந்து சற்று காலம் கூடுதலாக வாழ்ந்துருந்தால் ஏதோ ஒரு ஆயுத இயக்கத்தினால் துரோகியாக்கி போட்டு தள்ளப்பட்டிருப்பார். நினைவேந்தல் கூட இப்படி கெளரவமாக நடந்திருக்காது.
  7. அவன் தனக்கு வாற கேட்சையே பிடிக்கமாட்டான்! இந்த லட்சணத்தில் ஜடேஜாவின் கேட்சை பிடிக்க போனவனாம்! CSK விளங்கீடும்!
  8. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் புயல்வேகத் துடுப்பாட்டத்தினால் எதிரணியின் பந்துவீச்சை சின்னாபின்னமாக்கினர். சாய் சுதர்சன் 48 ஓட்டங்களையும், சுப்மன் கில் 76 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 64 ஓட்டங்களையும் எடுத்து வலுவான நிலைக்குச் செல்ல உதவியதால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்களில் அபிஷேக் ஷர்மா மாத்திரம் மின்னல் வேகத்தில் 74 ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியனர். இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்களையே எடுத்தனர். முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  9. அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கா அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கங்கா அதிவேக நெடுஞ்சாலையில் ரபேல், ஜாகுவார், மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரை யிறக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த நெடுஞ்சாலை பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிலையில் இந்திய விமானப்படையின் நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1430384
  10. இலக்கிய உறுபொருள் - சுப.சோமசுந்தரம் எனது பள்ளித் தோழர்களுக்கான வாட்ஸ்அப் குழுமத்தில் 'தினம் ஒரு தமிழ்ப் பாடல்' எனும் தலைப்பில், எனது சிறிய இலக்கிய வாசிப்பின் அடிப்படையில், தற்போது சுருக்கமாகப் பதிவிடுகிறேன். அங்கு இன்றைய என் பதிவை இங்கும் பகிரத் தோன்றியது. இன்றைய இப்பதிவின் நோக்கங்கள் இரண்டு (இரு நோக்கு இதன் கண்ணுளது !). ஒன்று, நட்பின் திறம் பேசுவது; இரண்டு, இலக்கியத்தின் உறுபொருள் பற்றியது. மனதின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடிப்பதில் கம்பன் கைதேர்ந்த கலைஞன். நட்பின் திறம் கூற ஓரிடத்தில் ராமனையும் சுக்ரீவனையும் கையிலெடுக்கிறான். கம்பராமாயணம் பாடல் 3812 இல் "வானிடை மண்ணில் நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்" என்று சுக்ரீவனிடம் நட்பு பாராட்டுகிறான் இராமன். பாடற் பொருள் : விண்ணுலகானாலும் மண்ணுலகானாலும் உன்னைப் பகைத்தவர் (செற்றவர்) என்னையும் பகைத்தார்; தீயவராய் இருப்பினும் உனக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர். இலக்கியம் அறிந்தோர் ஒரு பாடலை மேம்போக்காகப் பொருள் கொள்வதில்லை. 'தீயரே எனினும்' என்றது நட்பின் திண்மை பற்றிக் கூற வந்த உயர்வுநவிற்சி. அவ்வளவே ! மேலும் அது தேர்ந்து தெளிந்த நட்பின் மீது உள்ள நம்பிக்கை. அத்தகு நண்பன் தீயோரை நட்பாகக் கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையும் உள்ளடக்கியது. "பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்" (குறள் 580) என்ற வள்ளுவமும் நட்பின் வலிமையும் நம்பிக்கையும் பற்றியது. மேலும், தேர்ந்து தெளிந்த நண்பன் தந்ததோ சொன்னதோ மனதிற்கு ஏற்புடைத்தாய் இல்லையெனினும் அதனை ஏற்றமைவது நாகரிகம் என்பதன் குறியீடே குறளில் வந்த நஞ்சும் நாகரிகமும். "முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்" (நற்றிணை பாடல் 355; வரிகள் 6 & 7) என்று மேற்சொன்ன குறளுக்கு நல்ல இணையாக நற்றிணை பகர்வதும் உவந்து நோக்கத்தக்கது.
  11. அதே கருத்து தான் எனதும் உங்களுக்கு நன்றி இல்லை நன்னிச் சோழன் தகவலை படிக்கவும் 👇 வட்டுக்கோட்டைத் தீர்மானம்- இத்தீர்மானமானது யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயிலிற்கு அருகில் பண்ணாகத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கு 1976 மே 14 ம் திகதி எஸ். ஜே. வி. செல்வநாயகம்இ ஜீ. ஜீ. பொன்னம்பலம்இ சௌ. தொண்டமான் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நடாத்திய தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. எங்கள் இயக்கம் முழுவதும் வன்முறையற்றதாக இருக்கும்
  12. சென்னை மன்னர்களின் ஆட்டத்தை ஒரு மாதிரி அடக்கியாச்சு ராஜஸ்தான் அரச பரம்பரையும் ஆட்டம் ஆடி அடங்கி விட்டது அடுத்து அடுத்து ஹைதராபாத்..... கொல்கத்தா..... அடங்க..... ஒரு நெருப்பு அலை வரும் அந்த அலையில் டெல்லியும் லக்னோவும் கருகிவிட பஞ்சாப்பும் குஜராத்தும் மும்பாயும்..... பெங்களூருக்கு எதிராக...... தனித்து நிற்கும்.... எனக் காண்டம் கதை சொல்கின்றது 😇
  13. சம்மர் கட் ..😄😄😄 சம்மர் கட் ..😄😄😄
  14. நாளை ஞாயிறு 04 மே GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் ஆறு பேர் மாத்திரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ அல்வாயன் சுவி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  15. சிறந்த மறுமொழிக்கான விருது உங்களுக்கு. உருண்டு பிரண்டு சிரித்தபடி.
  16. இந்த மட்ச் நடக்கும்போது கேம்பிரிட்ஜுக்குப் போய் முடியும்போது மோட்டர்வேயில் வந்துகொண்டிருந்தேன். ஃபோனை கோல்டரில் போட்டுவிட்டு கிரிக் இன்ஃபோவைத்தான் பார்த்துக்கொண்டு காரை ஓட்டினேன்.. கடைசி நான்கு ஓவர்கள் திக்திக்கென்று போய்க்கொண்டிருந்தது! ஒரு மாதிரி RCB வென்றதால் இரண்டு புள்ளிகள் கிடைத்தது.😀
  17. நீங்கள் இழுத்த இழுவைதான். கடைசியில வேலைசெய்யவில்லை. நாம சேர்ந்திருந்தா எல்லாம் மாறித்தானே. ஏதோ இன்று நல்ல காலம். அந்த பந்தெல்லாம் அந்த நேரத்தில ஏன் அப்பிடிப் போட்டான். கையை விட்டு வழுகிச் சென்றிருக்கும். ஆனால் அந்த நேரத்தில கவனமா இருக்க வேண்டாமோ.
  18. சிவம் டுபேயின் நோ போலுடன் அதிஸ்டம் சி எஸ் கேக்கு என நினைத்தேன். பிழைத்து விட்டது. நல்ல ஒரு call மட்டும்.( பொறுத்த நேரத்தில்)
  19. கோலி ரெண்டு காலால் (ரன்னால்) ஓடித் தப்பி விட்டது ......... ! 😂
  20. @sachidhananthanarayanan2270 2 hours ago (edited) "சிந்து நதியின் மிசை நிலவினிலே, காஷ்மீர் நாட்டிளம் பெண்களுடனே, சுந்தர உருது பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்!" "மன்னார் நீரிணை நிலனிலே சிங்கள நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தமிழினில் பாட்டிசைத்தே தோணிகள் ஓட்டி விளயாடி வருவோம்!" பிரம்மபுத்திரா நதி நிலவினிலே வங்கதேசத்திளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே தோணிகளோட்டி விளயாடி வருவோம்!" "ஐராவதி நதி நிலவினிலே ஆந்திர நாட்டிளம் பெண்களுடனே, இன்புறு செந்தமிழ்ப் பாட்டிசைத்தே தோணிகளோட்டிவிளையாடி வருவோம்!" அடைந்து முடிந்தது அகண்ட இந்தியா = தோணிகள் ஓட்டி நீங்கள் விளையாட, உங்கள் அகண்ட இடையில் பாக்கி சீனா நுழைந்துவிட போகின்றார்கள் கவனம்🤣
  21. 😂😂 Comments from youtube 😂😂 பேச்சு பேச்சா இருக்கனும் இன்னும் எத்தனை நாள் இதையே சொல்வீர்கள் போரடிக்குது பேசுரானே தவிர பாம்ப வெளியவிடமாட்ரானேயா. வரும்..... ஆனால்......??? சீனா வுடன் போர் வந்தால் எப்படி இருக்கும்? இந்தியாபம்பைஇப்பகாட்டாதே🎉 போர் வந்தால் அவ்வளவு தான்! உலகமே மிரளும் இந்தியாவின் பலம்.. 🤣😂
  22. பாகிஸ்தானில் கழுதை வண்டில் போகின்ற நெடுஞ்சாலையில், போர் விமானத்தை இறக்கலாமா. 😂
  23. இவர்கள்… எங்கள் பொறுமையை சோதிக்கின்றார்கள். 🤣
  24. எத்தனை நாளுக்குதான் இப்படியே சண்டை தொடங்கிற மாதிரி நடிக்க போகின்றீர்கள்😂🤣
  25. 1995 காலப பகுதியில் கனடாவில் வசித்த உங்களுக்கு தெரிந்தவர்களை கேட்டு பாருங்கள். அப்போது கியூபெக் மாகாண தனி நாட்டு கோரிக்கைக்கு எதிராக தமிழர்களில் பெரும்பாலானோர் வாக்களித்தது ஒன்றும் இரகசியமல்ல. “கனேடியன்”, என்ற அந்தஸ்து போய்விடும் என்று பதட்டப்பட்டார்கள்.
  26. KKR க்கு இன்னும் 4 போட்டிகள் . இதில் 3 இனை வென்றால் 15 புள்ளிகள். 4 இனையும் வென்றால் 17 புள்ளிகள். மிகுதி இருக்கும் போட்டிகளில் 3 போட்டிகளில் தற்போது கடைசி 3 இடங்களில் இருக்கும் அணிகளான CSK, RR, SRH எதிரான போட்டி. 4 வது போட்டி RCB க்கு எதிரான போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் பங்களூரில் நடைபெறாத 6 போட்டிகளிலும் RCB வென்று இருக்கிறது. ஆனால் பங்களூரில் நடைபெற்ற 4 போட்டிகளில் RR க்கு எதிரான போட்டிகளை தவிர மிகுதி 3 போட்டிகளிலும் தோல்வி.
  27. அதுதான் எட்டுக் கிரகமும் ஒரே கோட்டில என்று சொல்லிப் போட்டாரே. RCBஜ தெரிவு செய்தது எத்தினை பேர் என்று பார்த்தீர்களானால்....
  28. நீலன். எப்படி பேச. முடியும் ??? கூடாது கூடாவே கூடாது,.... பேசிப். பலனில்லை என்று தான் பல கட்சிகள் இணைந்து வட்டுக்கோட்டையில். இனியும் பேசி பலனில்லை ஆயதப்போராட்டத்தின். மூலம் தமிழ் ஈழம். காண்போம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானம் இந்த தமிழ் தலைவர்கள் மீறிவிட்டார்கள். எப்படி ???? 1,..ஆயுதப்பயிற்சியை. பெறவில்லை ஆயுதமேத்தி போராவுமில்லை 2,...இயங்கங்கள். தீர்மானம் நிறைவேறாமல் இந்த தமிழ். தலைவர்களின் தீர்மானங்களை. பூரணமாக நம்பிக்கை வைத்து படிப்பைக்கூட இடைநிறுத்தம் செய்து பயிற்சி எடுத்து போராடினார்கள். 3,...போராட்டம் நடந்த போது நீலன். பேச்சுவார்த்தை நடத்தியது குற்றம் இந்த பேச்சுவார்த்தை போராட்டங்களை குழப்ப. நடத்தப்பட்டுள்ளது சம்பளத்துக்கு நடத்தப்பட்டது இது ஒரு உழைப்பு இவர்களின் நோக்கம் வாழ் நாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதே 4,.....நீலன். படித்தவர். பல நாடுகளில் ஆலோசனைகளையும். வரைபுகளையும் வழங்கியவர் அந்த நாட்டு தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் அந்த நாடுகளில் ஆனால் இலங்கையில் இலங்கையின் தலைவர்கள் எற்றுக்கொண்டு நடைமுறை படுத்துவார்களா??? இல்லை ஒருபோதும் இல்லை கிழிச்சே ஏறிவார்கள். ஆகவே நீலனின் யோசனைகள் கிழிச்சே ஏறியப்பட்டிருக்கும். இது என்னை விட நீலனுக்கு நன்கு தெரியும் ஆனாலும் அவருக்கு உழைப்பு முக்கியம் பணம் முக்கியம் இந்த பதினாறு ஆண்டுகளில் நீலனின். யோசணைகள். ஏன். நிறைவேற்றப்படவில்லை ?? 1,...புத்த. பிக்குகள். அனுமதியில்லை 2,..பாராளுமன்றம் அனுமதியில்லை இந்த இரண்டுமே அனுமதிக்காது என்பது நீலனுக்கு தெரியும் ஆகவே தனது யோசணைகள். நிறைவேற்றப்படாது என்பதும் நீலனுக்கு தெரியும் ஆனாலும் இதை அவர் தமிழ் மக்களுக்கு சொல்லவில்லை சொல்லமாட்டார். ஏனெனில் அது வருமானம் வரும் வழி இல்லை நீலன். தமிழ் மக்களுக்குக்காக போராடிய தலைவர் இல்லை அவர் தான் பாராளுமன்றம் போகத்தான் தமிழ் மக்களை பயன்படுத்தி உள்ளார் ஒன்றுயரை இலட்சம் தமிழ் மக்களின் இறப்பில். நீலனுக்கும் பங்குண்டு ஏனெனில் ஆயுதப் போருக்கு விதைகளை போட்டவர்களில். இவரும் ஒருவர் முப்பது ஆண்டு ஆயுதப் போராட்டத்தில் ஆயுதப்பயிற்சியைப் பெற்று இளைஞர்களுடன் தோளேடு தோள் நின்று போரடிய. ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை சொல்லுங்கள் பார்ப்போம் இவர் சுடப்பட்டிருக்க. வாய்ப்புகள் இல்லை தன்தோன்றிதனாமாக. தன்னிச்சையாக இடையில் புகுந்து தீர்வு என்று போராட்டத்தை. குழப்பினார்கள் இது ஏற்றுக்கொள்ள முடியாது உயிர்கள் எல்லாம் சமம் எத்தனையோ போராளிகள் இறக்கவில்லையா??? 🙏
  29. இவை உண்மையான தங்கந்தானா என்பது யாருக்குத் தெரியும்? மஹிந்தவின் காலத்தில் ஒருவருக்கு இந்த நகை அளிக்கப்பட்டது, அதை பரிசோதித்த போது அது போலியானது என பத்திரிகைகளில் வெளிவந்தது. இவ்வளவுகாலமும் வெளிவராத நகை இப்போ வெளிவந்ததன் பின்னணி என்ன? போலியானாலும் மக்கள் திரும்பப்போய் கேட்பார்களா வாங்கியவர்கள்? அதை திருப்பி அவர்கள் மேல் பழிபோட மாட்டார்களா? இவ்வளவையும் இழந்த பின்னும் புலிகளை வணங்குபவர்கள், புலிகள் கொள்ளையடித்தார்கள் என்று சொல்வார்களா? சுமந்திரன் தனக்கு முன்னாள் விடுதலைப்புலிகளால் உயிர் அச்சுறுத்தல் உள்ளது எனக்கூறி, இராணுவபாதுகாப்பு கோரியதையே ஆதாரமாக வைத்து பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்ய முடியாதென சர்வதேசத்துக்கு அறிக்கை விட்ட முன்னைய அரசாங்கம், இதனையும் ஆதாரமாகக் கொண்டு தம் போர்க்குற்றங்களை நிஞாயப்படுத்தும். ஏதோ ஒரு அவசரம் அவர்களை இப்படி ஒரு கதையை உருவாக்க வைத்துள்ளது. சர்வதேசத்தை ஏமாற்றி, போர்க்குற்றங்களை, மக்களை பாதுகாப்பதற்கே போர் புரிந்தோம் அது குற்றமாகாது மக்களே சாட்சி என்று இந்த சம்பவத்தை ஆதாரமாக வைக்கலாம். தேர்தல் வெற்றி. அரசாங்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக யோசிக்கின்றன தம்மை பாதுகாக்க. ஆனால் நம்ம தலைமைகளும், அவர்களோடு சல்லாபிக்க மக்களை பணயம் வைக்கின்றனர். மக்களின் வீட்டு கதவு, யன்னல்களை திருடிக்கொண்டுபோன இராணுவம், நிலத்தை கிண்டி நகை தேடிய இராணுவம், இத்தனைகாலம் தமிழரின் நகைகளை பாதுகாத்து வைத்திருந்ததாம், நம்பிற்றோமில்ல. அவர்கள் எடுத்தது இவ்வளவு தங்கம் அவ்வளவும் இங்குள்ளது என்று நிரூபிப்பயது யார்?
  30. நம்ம முதல் தாண்டு போச்சே. ஒருத்தர் கிளி ஜோசியம். நீங்க எந்த ஜோசியர்? எப்பிடியே நம்ம பலனையும் ஒருக்கா.
  31. மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள் என்ற சம்பவங்கள் இருக்க..... விடுதலைப்புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள் என உரிமை கோர வெளிக்கிடும் போது.... இன்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெறும் வாயை அசை போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அவலும் பஞ்சாமிர்தமும் தானாக வாயில் விழுந்த மாதிரி இருக்கும்.
  32. கஜேந்திரகுமாரை சக தமிழ் தரப்போடு பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டுவரவே ஐ.நா சபை தலையிட வேண்டும் போல இருக்கிறது! இந்த இலட்சணத்தில், இவையெல்லாம் சிங்களத் தலைமையோடு பேசி தமிழர்களுக்கு தீர்வு...ஆகாசக் கோட்டை தான்😂!
  33. GMT நேரப்படி நாளை சனி 03 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 08 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 15 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் வாத்தியார் சுவி பிரபா செம்பாட்டான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி குமாரசாமி புலவர் கோஷான் சே அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  34. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஒரு புதிய வைரஸ் பரவி வருவதால், மற்றொரு சாத்தியமான தொற்றுநோய்க்கு தயாராகுமாறு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மனிதகுள வரலாற்றில் பல முக்கிய தொற்று நோய்கள் பரவின. இவற்றில் SARS-CoV-2 என்று அழைக்கப்படும் வைரஸ், COVID-19 எனப்படும் நோயை உருவாக்கி, உலகளாவிய நெருக்கடி ஏற்படுத்தியது. இந்த நோய் 5 ஆண்டுகளுக்கு மேல் உலகளாவிய அளவில் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தற்போதைய நிலைமை, வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கா மற்றொரு COVID-19 போன்ற தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க பால் பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கைகளை எழுப்பி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களிடம் பேசிய அதிகாரிகள், மார்ச் 2024 முதல் நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட பால் பண்ணைகளை இந்த நோய் பாதித்துள்ளதாக உறுதிப்படுத்தினர். இதன் விளைவாக 70க்கும் மேற்பட்ட மனித நோய்த்தொற்றுகள் மற்றும் குறைந்தது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட மரணம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, லூசியானாவில் முதல் மனித மரணத்தை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) உறுதிப்படுத்தியிருந்தன, மேலும் பல மாநிலங்களிலும் அடுத்தடுத்த வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலூட்டிகளில் வைரஸ் தொடர்ந்து இருப்பது, மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவ உதவும் பிறழ்வுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று உலகளாவிய வைரஸ் நெட்வொர்க் (GVN) எச்சரிக்கிறது. விலங்குகள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் இருவருக்கும் மேம்பட்ட கண்காணிப்பு, தரப்படுத்தப்பட்ட சோதனை மற்றும் தடுப்பூசி உத்திகளின் அவசரத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர். தொற்றுநோய் பரவிய போதிலும், பொது மக்களுக்கு ஆபத்து குறைவாகவே இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகின்றன. இருப்பினும், குறிப்பாக பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். CDC இன் படி, H5 பறவைக் காய்ச்சல் உலகளவில் பறவைகளில் பரவலாக உள்ளது மற்றும் கோழி மற்றும் அமெரிக்க கறவை மாடுகளில் வெடிப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் அமெரிக்க பால் மற்றும் கோழி பண்ணை தொழிலாளர்களில் பலருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. தற்போதைய பொது சுகாதார ஆபத்து குறைவாக இருந்தாலும், CDC நிலைமையை கவனமாகக் கண்காணித்து வருகிறது, மேலும் விலங்குகளுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்காணிக்க மாநிலங்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களில் H5 பறவைக் காய்ச்சல் செயல்பாட்டைக் கண்காணிக்க CDC அதன் காய்ச்சல் கண்காணிப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/317486
  35. திரு. நீலன் திருச்செல்வம் சர்வதேச ரீதியில் அறியப்பட்ட அரசியலமைப்பு சட்ட நிபுணர். உலகப் புகழ் மிக்க சட்ட அறிஞர். இவரது நூல்கள், கட்டுரைகள் சர்வதேச ரீதியில் அரசியலமைப்பு சட்ட மாணவர்களால் தேடி வாசிக்கப்படும் அளவுக்கு பிரபலமானவை. அவர் பல்வேறு நாடுகளில், குறிப்பாக கஜகஸ்தான், தென்னாபிரிக்கா, சிலி போன்ற நாடுகளில் அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்குவதில் பங்கு வகித்தார். இவ்வாறு உலகம் அறியப்பட்ட ஒருவரை தற்கொலை குண்டு மூலம் படுகொலை செய்த செயலானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் தனக்கு தானே குழி பறித்த பல செயல்களில் ஒன்றாகும். இவரது கொலையினல் பலன் அடைந்தது இலங்கை அரசு. படுகொலை நடந்த உடனேயே ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் கொபி அன்னான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரன் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்திதில் இருந்து இவரது அனைத்துலக முக்கியத்துவம் உணரப்பட்டது. சகிப்பு தன்மை அற்று தாம் செய்த படுகொலைகளை மறைக்க கொலை செய்யப்பட்டவர் மீது அபாண்டமாக பழி போடுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அனைத்து ஆயுத இயக்கங்களாலும் மேற்கொள்ளப்பட்ட இத்துப்போன தந்திரம் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். அதை போன்ற ஒன்றே இந்த படுகொலையின் நியாயப்படுத்தலும்.
  36. விலங்குகளிலும், தாவரங்களிலும் hybrid vigor என்று ஒன்று இருக்கிறது. ஒரே மாதிரியான இயல்புடைய சோடிகளை விட வெவ்வேறு இயல்புடைய சோடிகள் உருவாக்கும் கலப்பின வழித்தோன்றல்கள், சில நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியைக் காட்டும், நல்ல வளர்ச்சியைக் காட்டும், எனவே சந்ததி பிழைக்க உதவும். இது உயிரியல் ரீதியானது. குடியேற்றம், பல்லினத்தன்மை என்பவற்றின் காரணமாக மனித சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மை உயிரியலையும் தாண்டிய ஒன்று: எண்ணங்களின் பல்லினத்தன்மை - diversity of ideas. இது தான் ஐரோப்பாவில் நடந்திருக்கும் என நினைக்கிறேன். ஆக்கிரமிக்கும் எல்லா மக்களையும் முற்று முழுதாகத் தங்களைப் போலவே யோசிக்கும் படி வற்புறுத்தாமல், அவர்களது ஐடியாக்களையும் உள்வாங்கிக் கொண்ட ரோமர்கள் இந்த எண்ணங்களின் பல்லினத்தன்மைக்கு உதவியிருக்கிறார்கள். இதற்கு நேர் எதிரான நிலைக்கு உதாரணம் ஜப்பான். ஒரு ஆய்வில், கடந்த 3000 ஆண்டுகளில் ஜப்பான் நோக்கி மக்கள் குடியேறிய (population influx) சந்தர்ப்பங்கள் இரண்டு தான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். தற்போது கூட நவீன ஜப்பானில் ஒரு தெளிவான குடியேற்றக் கொள்கையோ, அகதி அந்தஸ்துக் கொள்கையோ இல்லை என நினைக்கிறேன். மக்களும் பல்லினம் அல்ல, ஐடியாக்களும் பல்லினத் தன்மையை இழந்து விட்டன. இதன் விளைவு, ஜப்பானின் சனத்தொகையும், பொருளாதார நிலையும் தேங்கி விட்டது. இதன் அடிப்படையில் தான் diversity is a blessing என்று நான் நம்புகிறேன்.
  37. மூன்று கோமாளிகள்: தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த யாழ்ப்பாணத்து எம்பிக்கள். பைத்தியம்: பைத்தியர்
  38. ‘ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்’ - ட்ரம்ப் எச்சரிக்கை ‘ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார். தற்போது ஈரானுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் சமூக வலைதளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் , ஈரான் எண்ணெய் அல்லது பெட்ரோ இரசாயன பொருட்களின் அனைத்து கொள்முதல்களும் இப்போதே நிறுத்தப்பட வேண்டும். ஈரானில் இருந்து எந்த அளவு எண்ணெய் அல்லது இரசாயனங்களை வாங்கினாலும், அந்த நாடு அல்லது நபர் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் அமெரிக்காவுடன் எந்த வகையிலும், வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும். என்று கூறியுள்ளார். https://athavannews.com/2025/1430359
  39. 8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை kavithalaxmi / மே 1, 2023 தீப்பெட்டித் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (1889) ஜனநாயகம் மட்டுமல்ல, நடைமுறையில் வாழ்வதற்கு உலகின் சிறந்த நாடாக நோர்வே இருப்பதற்கான காரணங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் முதன்மையானதாகும். அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது. நோர்வே நாட்டின் இன்றைய வளர்ச்சியின் அடைவுகளுக்கான பாதையில், தொழிற்சங்கங்களின் உருவாக்கம், கூட்டுணர்வு, வேலைநிறுத்தப் போராட்ட முன்னெடுப்புகள் என்பனவற்றின் பங்களிப்புகள் முக்கியமானவை என்பது அறிஞர்களின் கருத்து. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் உள்ள அதிகார இடைவெளியை சமநிலையாக்குவதையும், குறைந்த அளவிலான ஏற்றத்தாழ்வுகளைக் நடைமுறைப்படுத்துவதையும் வேலைநிறுத்தப் போராட்டங்களே இங்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன. இதனால் வேலைநிறுத்த முன்னெடுப்புகள் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இம் முன்னெடுப்புகளின் பின்னால் தொழிச்சங்கங்களின் கூட்டுணர்வும், கூட்டிணைவும், தொடர்ச்சியும் இருக்கின்றன. நோர்வேயின் முதல் வேலைநிறுத்தப் போராட்டம் பெண்களும் தீப்பெட்டித் தொழிற்சாலையும் 1875 ஆம் ஆண்டு 134 தொழிலாளர்களுடன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்று நோர்வேயில் கிறான்வொல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இத்தீப்பெட்டிச் தொழிற்சாலை பெண்களையும், குழந்தைகளையும் பிரதான தொழிலாளர்களாகக் கொண்டிருந்தது. 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தீப்பெட்டித் தொழிற்சாலையைச் சார்ந்திருந்தன. இவர்களில் 38 பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் குழந்தைத் தொழிலாளர்களை அங்கீகரித்து வந்த நாடாகவம் நோர்வே இருந்தது. 1890ஆம் ஆண்டில் க்ரோன்வொல்லில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 510 ஆக உயர்ந்தது. இவர்களில் 55 பேர் 12 முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள், 16 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள். குறைந்த ஊதியமும், மோசமான சுகாதார நிலைமையும் உள்ள தொழிற்சாலையாகவே இது செயற்பட்டது. பணியாளர்களின் வேலைநேரம் ஒரு நாளைக்கு 13 – 16 மணிநேரங்களாக இருந்தது. மற்றும் தீப்பெட்டி செய்யவதற்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துத் துகள்கள் (பொஸ்பரஸ் – The phosphorus) நச்சுத்தன்மை கொண்டதாகவும், உடலுக்குப் பாரிய தீங்குகளை விளைவிப்பதாகவும் இருந்தன. தொழிற்சாலையில் சவர்க்காரம் மற்றும் தண்ணீர் போன்ற சுகாதார வசதிகள் எதுவும் இருக்கவில்லை. பல தொழிலாளர்கள் – ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் தீங்கு விளைவிக்கும் -பொஸ்பரஸால்- (The phosphorus) நோயினால் தாக்கப்பட்டனர். பாஸ்பரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோற்றம் .. ‘பொஸ்பரஸ்’ குச்சிகளைக் கொண்டு வேலை செய்த கைகளினாலேயே தமது மதிய உணவை உட்கொண்டதால் நோயின் தாக்கம் பலமாக ஏற்பட்டது. பொஸ்பரஸ் துகள்கள், கைகள் மற்றும் உணவு வழியாக பற்களின் துளைகளுக்குட் சென்று அங்கிருந்து தாடை எலும்பை அடைந்தன. இதனாற் தாடை எலும்புகள் சிதைந்தன. பற்கள் கழற்ற வேண்டிய நிலைக்கு பல தொழிலாளர்கள் ஆளாகினர். பலருக்குத் தாடை எலும்பின் பாகங்கள் வெட்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிமுகங்கள் வெட்டப்பட்ட நிலை பலருக்கும் ஏற்பட்டது. ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிலும் அதிக அளவு ஊதியம் வழங்கப்பட்டது. அத்துடன் ஆண்கள் அதிகமாக நீராவி சார்ந்த பிரிவில் வேலைசெய்ததால் அவர்களுக்கு நோய்கள் சார்ந்து பாரிய சேதம் ஏற்படவில்லை. ஏற்கனவே மிகக் குறைந்த ஊதியத்தில் வேலைபுரிந்த பெண்களின் ஊதியம் மேலும் 20 சதவீதம் குறைக்கப்படும் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் 1889ல் அறித்தனர். இதன் எதிரொலியாகப் பெண்கள் பணியை நிறுத்திப் போராட்டத்தில் இறங்கினர். 23.ஒக்டோபர் 1889 அன்று 372 பெண் தொழிலாளர்களுடன் நோர்வேயில் முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஆரம்பக்கட்ட விளைவுகள் நோர்வே தீப்பெட்டித் தொழிச்சாலைப் பெண்களின் போராட்டத்திற்கு சில காலங்களுக்கு முன் இலண்டனில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தன. இலண்டனில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் பற்றி நோர்வேயின் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. கிழக்கு இலண்டனின் பெண்தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை ஒழுங்கமைக்கத் தொடங்கினர் என்ற செய்திகளும் பரவின. இலண்டனில் எழுந்த வேலைநிறுத்த போராட்டங்கள் பற்றிய செய்திகளால் நோர்வே நாட்டுப் பெண்களும் உத்வேகம் பெற்றனர். 1889ல் – போராட்டத்திற் பங்குகொண்ட பெண்கள் நிறுவன ரீதியாகத் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளவில்லை. பெண்களுக்குப் பின்னால் எந்த அமைப்பும் இருக்கவில்லை. வேலைநிறுத்தக் கொடுப்பனவு நிதியும் இருக்கவில்லை. வருமான நட்டஈட்டுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையிலும், அவர்களுடைய மோசமான வேலைதளங்களிற்கு எதிராக வேலை செய்வதை நிறுத்தி நடவடிக்கை எடுக்கத்தொடங்கினர். நோர்வே நாட்டின் பெண்களும், சிறுமியரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கியதும், தொழிற்சாலை உரிமையாளர்கள் பிற கிராமங்களில் இருந்து புதிய தொழிலாளர்களைக் கொண்டுவந்தனர். பிற தொழிலாளர்களிடம் ஊதிய-பேரம் பேசப்பட்டது. மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யச் சம்மதித்தவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர். இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலை கேள்விக்குள்ளானது. தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் ஆண்களும் பணிபுரிந்தனர் எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிக ஊதியத்தின் காரணமாக ஆண்கள் யாரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற் கலந்துகொள்ளவில்லை. மேலும் பெண்களுக்கு ஆண் தொழிலாளர்களிடமிருந்தோ வீட்டில் இருந்த ஆண்களிடமிருந்தோ எவ்வித உதவிகளும் கிட்டவில்லை. அவர்கள் பெண்களைப் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குப் போகுமாறு வலியுறித்தியபடியே இருந்தனர். தொழிற்சங்கமோ வேலைநிறுத்தத் தலைமையோ இல்லாமல், முழு வேலைநிறுத்தமும் விரைவிற் கைவிடப்படும் அபாயத்தில் இருந்தது. பெண்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கப் பணிகளில் அனுபவம் இருக்கவில்லை. மேலும் அவர்களே மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த காலகட்டம் அது. தாமாகவே எழுந்து நின்று பிரச்சாரத்தைத் தங்கள் சொந்த முயற்சியினால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லவேண்டியிருந்தது. ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட போராட்டம் டிசம்பர் மாதம் வரை நீடித்தது. வேலைநிறுத்தம் செய்த பெண்களுக்கு எவ்வித நியாயங்களும் வழங்கப்படமலேயே போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும், மக்களிடம் தொழிலாளரின் கூட்டிணைவின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டது. தொழிலாளர் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. போராட்டம் காரணமாக தொழிலாளர் பாதுகாப்புக் குறித்த மாற்றங்களும், சிறந்த சுகாரதார நிiமைகளும் தொழிற்சாலைகளிற் கொண்டுவரப்பட்டன. வேலை நிறுத்தத்தை ஒரு போராட்ட வழிமுறையாக மாற்றுவதற்கு இப்பெண்களின் போராட்டம் பெரிதும் வழிவகுத்து. இது போராட்டக்கார்களின் முதற்கட்ட வெற்றியாக அமைந்ததெனினும் எட்டவேண்டிய தூரம் நோக்கிய பயணம் மிக நீண்டதாகவே இருந்தது. கவிஞரும், சமூகப் போராளியுமான பியோன்;ஸ்தியான பியோன்சன் (Bjørstjerne Bjønson) அவர்கள் 1889ஆம் ஆண்டு பத்திரிக்கையில் எழுத வாசகம். «நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தது போன்ற உணர்வு» என்று 1889ல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். பெண்களின் தீப்பெட்டித் தொழிற்சாலைப் பெண்களின் வேலைநிறுத்தம் நோர்வே நாட்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். வேலைநிறுத்தப் போராட்ட இயக்கம் “வேலைநிறுத்தம்” Theodor Kittelsen, 1879. தொழிற்சங்க அமைப்புத் தொழிலாளர்கள் தமது முதலாளிகளிடம் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிக்கும் காட்சி. தொப்பிகளைக் கழற்றி கையில் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. .. சோஷலிஸப் பத்திரிகையான சமூக ஜனநாயக நாளிதழின் (ளுழஉயைட னுநஅழஉசயஉல) ஆசிரியர் கார்ல் ஜெப்சென் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கான இயக்கத்தின் தேவையை உணர்ந்தவராகக் காணப்பட்டார். ஆவர்களுக்கு உதவவும் முன் வந்தார். ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் மூன்று பெண்களைக் கொண்ட ஒரு போராட்டக் குழு அமைக்கப்பட்டது. நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யும் வழக்கம், ஊதியக் குறைப்பு மற்றும் அபராத முறை அனைத்தையும் நீக்கம் செய்தல், தீப்பெட்டித் தொழிற்சாலையின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை ஆலை உரிமையாளர்களிடம் போராட்டக்குழு முன்வைத்தது. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் 14இல் இருந்து 16 மணிநேரம் பணி கொடுக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலையில் ஊதியம் குறைவாக இருந்தாலும், குடும்பங்கள் இவ்வேலையை நம்பியே இருந்தன. பெண்கள் நீண்ட நாட்களாக வருமானம் இல்லாமல் இருக்க முடியவில்லை. வேலைநிறுத்தக் கொடுப்பனவு இல்லாமையினாற் பெண்கள் விரைவில் வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கார்ல் ஜெப்சென் அறிந்துகொண்டார். எனவே வேலைநிறுத்தப் பங்களிப்புகளுக்குப் பணம் வசூலிக்க ஜெப்சென் முன்முயற்சி எடுத்தார். வேலைநிறுத்தக் கொடுப்பனவு சார்ந்து பொதுமக்களின் மனசாட்சியுடன் பேசுவது முக்கியமானதாக அவருக்குப் பட்டதால் ஒக்டோபர் 27 அன்று அவரது சொந்தப் பத்திரிகையான சோஷல் டெமோக்ரட்டனில், “தொழிளாலர் சங்கம் இல்லாமல் மக்களாற் தங்கள் நிலையை மேம்படுத்த முடியாது. ஒரு சங்கத்தின் மூலம் மட்டுமே அவர்கள் எதையாவது சாதிக்கும் சக்தியையும் வலிமையையும் பெற்றிட முடியும். வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அமைப்புக்கும் பங்களிப்பு வழங்குங்கள்” என்று பத்திரிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுவரை பெண்களுக்கான தொழிற்சங்கம் முறையாக உருவாக்கப்படாத நிலையில், கார்ல் ஜெப்சென் தலைமையிலான பெண்கள் குழு தொழிற்சங்கத்தை உருவாக்க கடுமையாகப் போராடியதன் காரணமாக தொழில்முறை இயக்கம் ஒன்று நோர்வேயில் 28 ஒக்டோபர் மாதம் நிறுவப்பட்டது. ஆண்கள் அடுத்த நாளே (29 ஒக்டோபர்) தமக்கான சொந்த தொழிற்சங்கத்தை உருவாக்கினர். ஆண்கள் தொழிற்சங்கத்தை நிறுவியநாளே பின்னர் தொழிற்சங்கத்தின் அடித்தள நாளாகக் கருதப்பட்டதாக ஐம்பதாம் தொழிற்சங்க அறிக்கை தெரிவிக்கிறது. முதல் பல ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவர்களாக பெண்களின் பெயர்களை மட்டுமே கொண்டிருந்த தலைவர்கள் பட்டியல், 1913ல் இரண்டு சங்கங்களும் இணைந்த பிறகு, ஒரு பெண் தலைவர்களின் பெயர் கூட பட்டியலில் இல்லை. «பெரு-வேலைநிறுத்தம்” சுரங்கத் தொழிலாளர்கள் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஏற்படுத்திய தாக்கங்களின் காரணமாக, பெரும்பாலான நாடுகளில், வேலைநிறுத்தங்கள் விரைவாக சட்டவிரோதமாக்கப்பட்டன. தொழிற்புரட்சிக் காலத்தில் மேலும் வேலைநிறுத்தங்கள் பரவலாக முன்னெடுக்கப்படத் தொடங்கின. இதன் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல மேற்கத்தேய நாடுகள் பகுதி நேர வேலைநிறுத்தங்களைச் சட்டப்பூர்வமாக்கின. அன்றைய காலத்தில் மனித உழைப்பு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. தொழிற்சாலைகளுக்கும் சுரங்கங்களுக்கும் அதிக அளவு தொழிலாளர்கள் தேவைப்பட்ட காலம் அது. அக்காலத்தில் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதிக அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருந்தனர். நோர்வேயின் பெண்களினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு வேலைநிறுத்தம் 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்-வேலைநிறுத்தம், 1898இல், ராணா நகரில் 100 சுரங்கத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. நோர்வேயில் சுரங்கத் தொழிலுக்கு நீண்ட வரலாறு உண்டு. சுரங்க வேலைகள் 1623இல் தொடங்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட புதிய சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமது கைகளினாலேயே பாறைகளை உடைக்க வேண்டிய கட்டாயம் ஆரோக்கியமற்ற வேலைசு; சூழல்கள்;, சுரங்கங்களுக்குள் காற்று இல்லாமை, அருவருக்;கத்தக்க பாரபட்ச நடவடிக்கைகள் மற்றும் அகங்காரத்துடன் செயற்பட்ட நிர்வாகம் போன்ற நெருக்கடிகள் நிலவின. இவைகளின் மீதான அதிருப்திகளின் விளைவாக 1898ஆம் ஆண்டின் கோடை காலத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் தொடங்கிய இவவேலைநிறுத்தம் «பெரு-வேலைநிறுத்தம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தம் பின்னால் ஒரு தொழிற்சங்கத்தின் பலத்துடன் இயங்கிய நோர்வேயின் முதற் போராட்டமான இது நான்கு மாதங்கள் நீடித்தது. பின்னர் அது கைவிடப்பட்டது. இவ்விரு போராட்டங்களையும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பல வேலைநிறுத்தப் போராட்டங்கள், பல துறைகளிலும் நோர்வேயில் எழுச்சிபெற்றன. முக்கியமாக நாடகக்கூழுக்கள், கலைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 1 – தொழிலாளர் தினம் மே 1 – கவனயீர்ப்புப் பேரணி தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப நாட்களில், முதன்மையாக வேலை நேரத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. 1856 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கட்டுமானத் தொழிலாளர்கள் குழு – 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓயு;வு, 8 மணிநேர உறக்கம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து மே 1, 1886 அன்று, 2 இலட்சம் அமெரிக்கத் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலைக்காக போராட்டம் செய்தனர். வேலைநிறுத்தப் போராட்டம் பல நாட்கள் நீடித்தது. இப்போராட்டம், போராட்டக்காரர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல்களும் குண்டுத் தாக்குதல்களுடனும் முடிவடைந்தது. 1889 இல் பாரிஸில் நடந்த தொழிற்சங்க மாநாட்டில் மே முதல் தேதியை சர்வதேச வேலைநிறத்தப் போராட்ட நாளாக ஆக்க முடிவு செய்யப்பட்டது. மே 1, 1889 அன்று, பாரிஸ் மாநாட்டினைத் தொடர்ந்து, நோர்வே, ஒஸ்லோவில் ஏறத்தாழ 4,000 தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர். நோர்வேயின் பிற நகரங்களிலும் பெரும் ஆதரவுடன் உரிமைக்கான ஆர்ப்பாட்டப் பேரணிகள் தொடர்ந்தன. நோர்வேயிற் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் 1892 ஆம் ஆண்டு முதன்முறையாக நடைமுறைக்கு வந்தது. முதன்மையாக, இது தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. காலப்போக்கிற் தொழில் உரிமை, தொழிற் சூழல், பாதுகாப்பு, நேரவிதிகள் என்று தொழிலாளர் இயக்கம் படிப்படியாக தன் கோரிக்கைகளில் வெற்றி பெற்றது. 1956 ஆம் ஆண்டின் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் வேலை நேரத்தை ஒரு தொழிலாளியின் சாதாரண வேலை நேரம் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் வாரத்திற்கு 40 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் விதித்தது. 20 ஆம் நூற்றாண்டு முழுவதும், வேலை நேரத்தைக் குறைப்பது தொழிலாளர் இயக்கத்தின் மிக முக்கியமான செயற்பாடுகளில் ஒன்றாக இருந்தது. மேலும் மே 1 கோரிக்கையை முன்னெடுப்பதற்கான அடையாள நாளாகவும் இருந்துவருகிறது. பல நீண்ட போராட்டங்களின் பின் சட்டப்பூர்வ 8 மணிநேர வேலை போன்ற குறைந்தபட்ச உரிமைகள் கிடைக்கப்பெற்ற நாளாக உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகின்றது. தமக்கான நியாயமான ஊதியம் மற்றும் எட்டுமணிநேரப் பணி போன்றவற்றைப் பெற்றுத் தந்த தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்;டம், சமூகத்தை வகைப்படுத்தும் முறைகளையும், உத்திகளையும் தந்து சென்றுள்ளன. பெரும்பான்மை நோர்வே மக்கள் தமது தொழிற்சாலைகளில் ஏற்;பட்ட முரண்பாடுகளுக்குத் தாமே தீர்வுகண்டுள்ளனர். இன்று முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அரசாங்கங்களின் கொள்கைகளை மாற்றுவதற்கும், அவற்றை அகற்றுவதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றன. சமூகம் இந்த நிலைமையை அடைவதற்குப் பல துணிச்சலான பெண்களும் ஆண்களும் முன்னோடிகளாகப் போராடத்தை நடாத்திச் சென்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தின் மதிப்பையும் அதன் மூலம் தாம் பெற்ற வாழ்க்கைத் தரத்தினையும் நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளனர். உழைக்கும் மக்கள் ஒன்றுகூடி தொழிற்சங்கங்களாகக் கூட்டிணைந்து வேலை செய்தால் உழைப்பும் வாழ்வும் மேம்படும் என்ற கூட்டிணைவில், வருடாவருடம் மே மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறன்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. … கவிதா லட்சுமி Kavitha Laxmi8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கைதீப்பெட்டித் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (1889) வேலைநிறுத்தம் செய்வது பெருமிதத்திற்குரியது. ஜனநாயகம் மட்டுமல்ல, நடைமுறையில் வாழ்வதற்கு உலகின் சிறந்த நாடாக நோர்வே இருப்பதற…
  40. பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை! ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதுடன், மோடியின் தலைமையின் மீதும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மும்பையில் இன்று (01) ஆரம்பமாகியுள்ள வேவ்ஸ் எனப்படும் 2025 உலக ஆடியோ விஷூவல் பொழுது போக்கு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது 74 வயதான நடிகர் ரஜினிகாந்த், மோடியை ஒரு ‘போராளி’ என்று அழைத்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையை ‘கருணையுடன்’ கையாள பிரதமரை நம்புவதாகவும் பகிர்ந்து கொண்டார். “நமஸ்கார், மரியாதைக்குரிய பிரதமரே, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் அவர்களே. பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற நிகழ்வுக்குப் பின்னர், தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசாங்கம் இந்த நிகழ்வை ஒத்திவைக்கும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன், ஏனென்றால் எனது பிரதமர் – நரேந்திர மோடி ஜி (sic) மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.” “அவர் ஒரு போராளி. அவர் எந்த சவாலையும் சந்திப்பார், கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் சொல்லி வருவதை நிரூபிப்பார், இந்த சூழ்நிலையையும் அவர் அழகாகவும் துணிச்சலுடனும் எதிர்கொள்வார், காஷ்மீரில் அமைதியையும் நம் நாட்டிற்கு பெருமையையும் கொண்டு வருவார்” என்று அவர் கூறினார். இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2025 வேவ்ஸ் உச்சி மாநாடு என்பது மும்பையில் உள்ள JIO மாநாட்டு மையத்தில் நடைபெறும் நான்கு நாள் நிகழ்வாகும். இந்த நிகழ்வு இந்தியாவை கலை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உலகளாவிய முன்னணியில் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய திரைப்பட சகோதரத்துவத்தைச் சேர்ந்த முக்கியப் பெயர்களுடன் தொடர்ச்சியான அறிவார்ந்த உரையாடல்களைக் கொண்டிருக்கும். மேலும் நாட்டின் நாட்டுப்புற நடனம் மற்றும் இசையை அதன் மென்மையான சக்தியாக எடுத்துக்காட்டும். இந்த நிகழ்வில் ஷாருக்கான், தீபிகா படுகோன், அக்ஷய் குமார், கரண் ஜோஹர், ஹேமா மாலினி, மிதுன் சக்ரவர்த்தி, இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசாரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். https://athavannews.com/2025/1430224
  41. இதற்கும் பலாலிக்கும் என்ன சம்பந்தம் ? பலியாடுகள் தானே உங்களுக்கும் குசும்பு கூடிப்போச்சு 😃
  42. நம்புவது நம்பாதது உங்கள் விருப்பம். ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு. ஓலைசுவடியில் நான் படித்து அறிந்தது.
  43. விலா எலும்புகளை உடைத்து கண்கள், மூளையை அகற்றி கொடூரம்; உலகையே அதிரவைத்த பத்திரிகையாளர் மரணம் ரஷ்ய இராணுவக் காவலில் சித்திரவதையை அனுபவித்து உக்ரைன் பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷினாவின் மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஒரு இதயத்தை உடைக்கும் செய்தி வெளிவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், விக்டோரியா ரோஷ்சினா என்ற பெண் பத்திரிகையாளர், ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா பகுதியில் உக்ரேனிய குடிமக்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது குறித்து செய்தி வெளியிட்டார். இப்போது அந்த பத்திரிகையாளரின் மரணம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. இறப்பதற்கு முன், 27 வயதான விக்டோரியா ரஷ்ய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு பல மாதங்களாக சித்திரவதை செய்யப்பட்டார். CBS அறிக்கையின்படி, விக்டோரியாவின் உடல் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டபோது, தடயவியல் அறிக்கைகள் கொடூரமான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற சிகிச்சையின் அதிர்ச்சியூட்டும் அறிகுறிகளைக் கண்டறிந்தன. அவரது உடலில் கீறல்கள், உடைந்த விலா எலும்புகள், கழுத்தில் ஆழமான காயங்கள் மற்றும் அவரது கால்களில் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், மூளை, கண்கள் மற்றும் காற்றுக் குழாய் ஆகியவை அகற்றப்பட்ட கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. விக்டோரியா ரோஷ்சினா உக்ரேனிய செய்தித்தாள் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுடன் தொடர்புடையவர். அவர் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தரைவழி அறிக்கையிடலைச் செய்து வந்தார். உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் ஆசிரியர் செவ்கில் முசேவா, விக்டோரியாவை ஒரு போராளிப் பத்திரிகையாளராகக் கருதினார். மற்றவர்கள் சென்றடைய முடியாத இடத்தில் ஒரு பத்திரிகையாளர் இருக்க வேண்டும் என்று விக்டோரியா கூறுவார் என்று அவர் கூறினார். அவரது கொலை உக்ரேனிய மற்றும் சர்வதேச பத்திரிகைத் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு இந்தக் கொலையை நேரடிப் போர்க்குற்றம் என்று கூறி, ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியது. உக்ரைனிய வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, ரோஷ்சினா ரஷ்ய காவலில் இறந்தார். இதற்கான வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது. ஒருபுறம் கார்கிவ் மற்றும் டினிப்ரோ மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தாலும், மறுபுறம் தரைவழி செய்தி வெளியிடுவது பத்திரிகையாளர்களுக்கு ஒரு சவாலான வேலையாக மாறியுள்ளது. ஆனாலும், உண்மையை அம்பலப்படுத்த பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்துக்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். விக்டோரியாவின் மரணம் இந்த சவாலுக்கு உதாரணமாக உள்ளது. https://thinakkural.lk/article/317483

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.