நீங்கள் கொஞ்சம் “கடந்த காலத்தின் சிறையில்” இருந்து மீண்டு வர வேண்டும் என்பது என் நயமான வேண்டுகோள். இன்றைக்கு பொதுவெளியில் தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எண்ணிக்கை, குறிப்பாக புலம்பெயர் சமூகத்தில், அரிது என்றே நினைக்கிறேன். தமது உள்ளக அரசியலுக்காக உதாரணமாக சுமந்திரனை தாக்க, அல்லது சிறிதரனை பாதுகாக்க, அல்லது சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் தலையை போடும் ஒரு காவாலிக்கூட்டமே நீங்கள் சொல்லும் ஆட்கள். ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களில் இந்த காவாலிகள் மிக, மிக சொற்பமானவர்கள். இவர்களிடம் எந்த புலம்பெயர் அமைப்பும் இல்லை. இவர்கள் புலம்பெயர் நாடுகலில் உயர் நிலைகள் நோக்கி போவோரும் இல்லை. கரி ஆனந்தசங்கரிகளுக்கும், உமா குமரனுகளுக்கும் மட்டும் அல்ல, பல அறியப்பட்ட தமிழ் அமைப்புகள், செயல்பாட்டாளர்களுக்கும் கூட இந்த காவாலிகளிடம் எந்த தொடர்பும் இல்லை. இந்த காவாலிகளிடம் சிறிய தொடர்பை வைத்திருப்பது யார் எனில், தாம்தான் இப்போ புலிகள் என சொல்லி, பல்வேறு பெயர்களில் கொள்ளை அடிக்கும் முன்னாள் புலிவால்கள், இந்நாள் மாபியாக்கள். ஆனால் இவர்களுக்கும் புலம்பெயர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. மாவீரர்தின மக்கள் கூட்டம், போக இடம் இன்றி, வேறுவழியில்லாமல் போகும் கூட்டம். அது மாவீரர்களுக்கானது, அவர்களுக்காக போவது. புலம்பெயர் தேசத்திலாவது கொஞ்சம் இந்த காவாலிகள், மாபியாக்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. இலங்கையில் அறவே இல்லை. அங்கே இவர்கள் போனால் தமிழ் மக்களே செருப்பை சாணியில் முக்கி அடிப்பார்கள். ஆகவேதான் சொல்கிறேன். இந்தியாவுக்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புகள், எவரும் தேவையில்லை. நான் சொன்ன வகையில் ஒரு தீர்வை இலங்கையை நெருக்கி இந்தியாவே கொண்டு வர செய்யலாம். இதற்கு ஓம் படுங்கள் என சொன்னால் - இலங்கை தமிழ் எம்பிகள் பலர் ஓம் என்றே சொல்வாகள். சில நேரம் தன் ஒரு எம்பி சீட் பதவி கருதி பொன்னம்பலம் எதிர்க்கலாம். ஆனால் உண்மையில் தீர்வு காத்திரமானது எனில் - நாட்டில் வாழும் மக்கள், புலம்பெயர் மக்கள் - அதற்கு அமோக ஆதரவு கொடுப்பர். காவாலிகள்+மாபியாக்கள்+ கஜன் எதிர்ப்பு எடுபடாது.