Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19134
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3328
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2958
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/22/25 in Posts

  1. அட கருமமே🤣… இது ஒரு கோப்பி கடை. பல்தேசியம் எல்லாம் இல்லை இந்தியா, இப்போ இலங்கையில் உள்ளது. இலங்கையில் நெஸ்கபே, நெஸ்டி என சீனிபாணியை தரும் கடைகளுக்கு மத்தியில் ஓரளவு தரமான மேற்கத்திய பாணியில் காப்பி பருக உகந்த இடம். உண்மையில் நல்லூர் போன்ற ஒரு செல்வ செழிப்பான இடத்தில் இது அமைவதுதான் பொருத்தம். இதில் மொக்கன் கடை போல் மிச்ச எலும்பை நாய் தூக்கி போக எல்லாம் வாய்பில்லை. Beef panini, sandwich, மிஞ்சி போனால் ரோல்ஸ்… ஐரோப்பாவில் Cafe Nero, Costa, Starbucks போல ஒரு கடை அவ்வளவுதான். கோவிலில் இருந்து 300,400 மீட்டருக்கு அப்பால் கூட இப்படி ஒரு கடை வருவதை எதிர்ப்பது உண்மையிலே தமிழர்கள், குறிப்பாக யாழ்பாண தமிழர்கள் பிற்போக்குவாதிகள் என கூவவே வழி செய்யும். இப்படி தமிழ் (சைவ) தலிபான்களாக மாறி எல்லா தொழில் முயற்சியையும் அடித்து நூத்தால் - ஆப்கானிஸ்தான் மாதிரி இருக்க வேண்டியதுதான். பிகு படத்துக்கும் தகவலுக்கும் நன்றி.
  2. பையன், யாரோ ஜக்கம்மாவாம், அவரையும் அடுத்த யாழ்கள கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளசொல்லுங்கள், பார்ப்போம் கிளிஜோசியமா அல்லது ஜக்கம்மாவா வெல்கிறார்கள் என.
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 64வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் சூறாவளி போன்று பந்துகளை மைதானத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டி தொடர்ச்சியாக அடித்தாடியதாலும், மிச்சல் மார்ஷின் 64 பந்துகளில் எடுத்த 117 ஓட்டங்களுடனும், நிக்கொலஸ் பூரனின் ஆட்டமிழக்காது 27 பந்துகளின் எடுத்த 56 ஓட்டங்களுடனும் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் சவாலான வெற்றி இலக்கை எட்டும் நோக்கில் வேகமாக அடித்தாட முயன்றபோது நட்சத்திர ஆரம்பத் துடுப்ப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்து டக்அவுட்டுக்குத் திரும்பினர். ஷாருக்கான் 29 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் வெற்றி இலக்கை அடையக் கூடிய ஓட்ட விகிதத்தில் தொடர்ச்சியாக ஆடாததால் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  4. கொழும்பு மயூராபதி அம்மன் கோவில் அயலில், பொன்னம்பலவாணேச்சர் கோயில் அயலில், மற்றும் வெவ்வேறு இடங்களில் உள்ள பிரசித்த பெற்ற இந்துக் கோவில் அருகில் எல்லாம் இப்படி எத்தனை கோப்பிக் கடைகளும், அசைவ உணவகங்களும் உள்ளன! யாழில் எனக்கு தெரிந்த பல சின்ன மற்றும் நடுத்தர இந்துக் கோவில்களின் அருகில் எத்தனை பேக்கரிகள் உள்ளன. அதில் எப்பவும் 'மாலு பாண்' விற்பார்கள். சாமியை கும்பிட்டுப் போட்டு பசிக்கு மாலுபாணும் ரோல்ஸும் வாங்கி சாப்பிடுகின்ற எண்ணற்றவர்கள் உள்ளனர். இதை எதிர்க்கும் கூட்டத்திடம் போய் கவுணாவத்தையில் செய்யப்படும், ஆடு மாடு சேவல்களை அறுத்து செய்யப்படும் வேள்வி தவறாகாதா என கேட்டுப் பாருங்கள். அதை நியாயப்படுத்த இன்னொரு லொஜிக் சொல்வார்கள். வர வர யாழ்பாணம் சங்கிகளின் கூடாரமாக மாறிக் கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இப்படியான மதவாத செயல்கள் ஈற்றில் தமிழ் /யாழ்ப்பாண சமூகத்தை மேலும் மேலும் ஒதுக்கப்படும் சமூகமாகவும் நலிவுற்ற சமூகமாகவும் மாறவே உதவி செய்யும்
  5. இன்றொரு பாகிஸ்தானியர் எப்படி அடி இந்தியாவுக்கு என்று மிகுந்த ஆர்ப்பாட்டத்தோட கேட்டார். இந்தியாவுக்கு எவன் அடித்தாலும் மகிழ்ச்சியே என்றேன்.
  6. அவிங்க தான் சொல்லீட்டாங்களே? இதில் "மத வாதம்" இல்லை! தீவகத்தில் அரச பாடசாலையில் நடந்தது போலவே, பொதுச் சுகாதாரத்தை காக்கும் ஒரு நடவடிக்கை மட்டுமே😎! NB: நல்லூர் சுற்றாடலில் திரியும் கட்டாக்காலி நாய்கள் மரக்கறி மட்டும் தான் உண்ணும் என அறிந்திருக்கிறேன். அணில், ஓணான் ஓடினால் கூட, அவை கோவிலில் இருந்து 500 மீற்றர்களுக்கு வெளியே ஓடிய பின்னர் தான் அவை துரத்தவே ஆரம்பிக்குமாம்😂!
  7. சுமந்திரனும், சிவஞானமும் நடத்தும் வில்லுப்பாட்டு. 😂 🤣 இந்த வருடத்தின்... மிகச் சிறந்த கருத்தோவியம். 👍
  8. ச்சப்பா, முடியலடா சாமி! ஒன்றை எழுதும்போது கோர்வையாக மற்றவர்களுக்கு விளங்கும்படி எழுதவேண்டும்! முதல் வசனத்திற்கும் அடுத்த வசனத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் எழுதுகிறீர்கள்! அப்படி எழுத தெரியவில்லையென்றால் Chatgpt இடமாவது உதவிகிட்டு எழுதவும்!
  9. இதேதான் புலவர் அய்யா எனக்கும் ...நம்பின என்னை கழுத்தறுத்து விட்டினம்
  10. இந்தியா என்றதும் காந்தி தேசம் என்ற மாயை நீங்கி இப்போது வாந்தி வருகிறது.🤮😩
  11. முருகப் பெருமானே............ நீ தானே தமிழுக்கு கடவுள்............ இறங்கி வந்து வேலால் குத்தமாட்டியா....................🤣.
  12. என்னுடைய இரண்டு அண்ணா, அக்கா மற்றும் பிற சொந்தங்கள் என 5 குடும்பங்கள் நல்லூர் கோயில் சுற்றாடலில் தான் வசிக்கிறார்கள். அதிகமாக சைவம் தான் சமைப்பார்கள், மாமிசம் சமைப்பது மிகவும் குறைவு. காரணம் சுற்றி உள்ள கோயில்களில் தொடர்ந்தும் ஏதாவது உட்சவங்கள் நடக்கும் ( மூத்த விநாயகர், நாச்சி அம்மன் இப்படி பல) ஆகையினால் பெரும்பாலும் மாமிசம் தவிர்க்கப்படுகிறது. ஆனால் சமைக்கவே மாட்டார்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
  13. நின்று கொண்டு இருப்பவர் உசைன் போல்ட். வணங்குபவர் Gatlin. இது நடந்த இதே stadium த்தில் Gatlin போதை பொருள் உபயோகித்து ஓடியத்திற்காக 2012 ல் தடை செய்யப்பட்டு cheat பட்டம் வாங்கினார். உலக தடகள வீரர்கள் மத்தியில் அவரை ஒரு ஏமாற்றுக்காரர் என்று ஏசினார்கள். ஆனால் அதே போட்டியில் தங்கம் வென்ற போல்ட் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பல பேட்டிகளில் அவரை நோண்டி நோண்டி கேட்ட போது அவர் சொன்னது. Galtin ஒரு திறமையானவர். அவர் போதை பொருளை உபயோகித்தால் தடை செய்யப் பட்டு இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் போதை பொருளை உபயோகிக்காமல் இன்னும் முயற்சி எடுத்து இருந்தால் கண்டிப்பாக என்னை கூட ஜெயிக்கலாம் என்றார். உலகம் அவர் செய்த தவறை மட்டும் பார்க்கிறது. நான் அவரின் திறமையை மட்டும் பார்க்கிறேன் என்றார். அப்போது எல்லோரு சிரித்தார்கள். ஒரு கருப்பருக்கு இன்னொரு கருப்பர் வக்காலத்து வாங்குகிறார் என்று. ஆனால் அந்த பேட்டி Galtin க்குள் ஒரு பெறும் மாறுதலை உண்டாக்கியது. 6 வருடம் உழைத்து போதைகளை விட்டு விட்டு மீண்டும் களத்துக்கு வந்தார். அதே களத்தில் அவர் உசைன் போல்ட்டையே வென்றார். அவர் தரையில் அமர்ந்து போல்ட்டை வணங்கிய காட்சி... 🎉" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t8c/1/16/1f389.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🎉" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t8c/1/16/1f389.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">
  14. அறுபது நாட்களாக எம்மை அடக்கி வைத்திருந்த அந்த அடிமைச் சங்கிலி இன்று உடைத்தெறியப்பட்டு::::: விடுதலை::: விடுதலை::::🤣 என்ற கோசம் மட்டுமே என் காதில் கேட்கின்றது:😂 அந்த இரண்டு வெள்ளைத் துரைமார்களும் இப்போது என்பின்னால் :::😇 இப்போதும் நான் அழைக்கிறேன் வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம் 😅
  15. நாளையான் விளையாட்டு பெங்க‌ளூரில் ந‌ட‌க்க‌ வில்லை ல‌க்னோவில் ந‌ட‌க்குது............................... பெங்க‌ளூர் க‌ப்ட‌ன் ம‌ற்றும் அவுஸ்ரேலிய‌ வீர‌ர்க‌ள் காய‌ம்...........................
  16. GMT நேரப்படி நாளை வெள்ளி 23 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 65) வெள்ளி 23 மே 2:00 pm GMT லக்னோ - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் நுணாவிலான் எப்போதும் தமிழன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  17. சீமான் முதலமைச்சராக வந்தால் உங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றுவர். எனக்கு விருப்பமான தொழில் ஆனால் பசு மாடுகள் தான் இல்லை 😀
  18. இது இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதற்கான வியூகமோ என்னமோ?
  19. பிஞ்சுப்பாதங்களின் அழகில் பிழைகள் தெரிவதில்லை.
  20. இந்த மக்களை முடிந்த அளவிற்கு அந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரச் செய்வதே எங்களால் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அங்கேயே இருக்கும் எங்களின் தலைமுறை இந்தச் சூழலுக்கும், இது கொடுக்கும் ஒரு விதமான பெரும் பிரயத்தனங்கள் அற்ற வாழ்க்கை முறைக்கும் நன்கு பழகிவிட்டார்கள். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் அடுத்த அடுத்த தலைமுறையில் முன்னே போக முயற்சி செய்பவர்கள் இருக்கின்றார்கள். குடியுரிமை இல்லாததால் எம். காம் முடித்தாலும் ஒரு ஆசிரியப் பணி கூட கிடைக்காது என்ற இக்கட்டான நிலையிலும், இந்த இளையவர்கள் பலர் தனியார் துறை நோக்கிப் போக முயல்கின்றார்கள். குடியுரிமை பெற்றுத் தரும் ஒரே நம்பிக்கையாக இன்றைய திமுக மட்டுமே இருக்கின்றது. ஜெயலலிதா தன் கடைசி நாட்களில் அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் சாண் ஏற முழம் சறுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு இது மட்டும் அமைந்திடுமா என்ன......... அந்த அம்மா திடீரென்று போய்விட்டார். இன்றிருக்கும் அதிமுக மிகவும் பலவீனமானது. அதன் இன்றைய தலைவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுதும் மாநில அரசியலில் தங்களை ஒரு சக்திகளாக நிலைநிறுத்தவே போராடப் போகின்றார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கு இருக்கும் தீவிர எதிர்ப்பு பிரிவினரின் ஆதரவால் மட்டுமே அதிமுக ஒரு ஓரளவு பலமான கட்சியாக இன்றும் நீடிக்கின்றது. இன்னொரு மாற்றுக் கட்சி வந்தால், அதிமுக பத்தோடு இன்னொன்று ஆகிவிடும். இவர்கள் மத்திய அரசுகளை இனிமேல் கேள்வி கேட்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போகின்றது. பாஜக குடியுரிமை கொடுக்கவேமாட்டாது. அவர்களின் தமிழ் இன விரோதம் வெளிப்படையானது கூட. என்றாவது காங்கிரஸ் அல்லது ஒரு கூட்டாட்சி வந்தால், இது நடக்கக்கூடும். தமிழ்நாட்டு மாநிலத்திற்காக நீச்சல் போட்டிகளில் அங்கேயே, மண்டபம் குடியிருப்பில் என்று நினைக்கின்றேன், பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை சில வருடங்களாக பங்குபற்றிக் கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கூட இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக போட்டியிட்டு தங்கங்களை வென்றிருக்கின்றார். இந்தியக் குடியுரிமை இல்லாவிட்டாலும் கூட, மாநிலத்திற்காக விளையாட முடியும் என்றால், மாநிலத்தில் இருக்கும் சில வேலைவாய்ப்புகளையும் தகுதியான எம்மக்களுக்கு தமிழ்நாட்டு அரசால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று தெரியவில்லை.
  21. ஓம், இது நவீன முறை தான். இந்த முறையில் முக்கியமான பல இரசாயனக் கழிவுகள் நீரில் இருந்து அகற்றப் படும். உரக்கழிவுகளோடு தொடர்பான நைட்ரேற்றுகளும் அகற்றப்படும் கழிவுகளில் அடங்கும், எனவே இலங்கையின் வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு மிகவும் பொருத்தமான வடி கட்டல் முறை இது. ஆனால், நான் குறிப்பிட்ட பக்ரீரியாக்களை இந்த வடிகட்டல் அகற்றாது. எனவே, இந்த மென்சவ்வு வடி கட்டலோடு, நீரை UV light கொண்டு தொற்று நீக்கவும் வேண்டியிருக்கும். இதனால் தான் உங்கள் கிராமத்தில் இரண்டையும் இணைத்த முறையைப் பாவிக்கிறார்கள். இந்த நவீன முறையின் மூன்று தீமைகள்: செலவு அதிகம் (மின்சாரப் பாவனை, பராமரிப்பு என்பன காரணம்), சரியாக பராமரிக்காமல் விட்டால் வடி கட்டும் மென்சவ்வில் பக்ரீரியாக்கள் மிகவும் சௌகரியமாக வளரும், வரட்சியான இடங்களில் நீரை விரயம் செய்ய வேண்டிவரும் (ஆனால், நீரை மீள் சுழற்சி செய்து சமாளிக்கலாம்).
  22. உங்களுக்கு விளங்கினால் தயவுசெய்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்து எழுதவும்! நானும் எல்லாப்பக்கத்தாலையும் கோர்த்து வாசித்துப்பார்த்தாலும் ஒன்றுமே புரியுதில்லையே!
  23. அங்கெல்லாம் எமக்கு அதிகாரம் இல்லை. அதிகாரத்தை வாங்கி தாங்கோ, அப்புறம் நாங்கள. யார் என்று காட்டுகிறோம். 😂 போதுவாக இப்படியான விடயங்களுக்கு ஓவரா பொங்குறவர்கள. யாரெண்டா 25 நாள் திருவிழா எப்ப முடியும் என்று காத்திருந்து 26 ம் நாள் பூங்காவனம் முடிய மீன்சந்தைக்கும் இறைச்சிகடைக்கும் படையெடுப்பவர்களாக தான் இருக்கும். அதுக்குள்ள சதி அது இது என்று வேலன் சாமி என்ற **** பொங்கு***
  24. அதுதான் தோனியின் பலமும் பலவீனமும். வெல்லும் போது எல்லாம் நல்லாயிருக்கும். மும்பை இந்த வருடம் முழுக்க அப்பிடித்தான். சொல்லி வைச்சு ஆக்கள் ஆட்டமிழக்கச் செய்வினம். பந்து வீச்சாளர்களும் துல்லியமா வீசினம். போல்ட், பும்ரா, சான்ட்னர் எல்லாம் பயங்கர ஒழுங்கு. சொன்ன இடத்தில பந்து விழும். அப்பாடியான வீரர்களுடன் என்னமாதிரியான மாற்றங்களையும் செய்யலாம். மும்பை சரியான நேரத்தில பயங்கர formக்கு வந்திருக்கினம்.
  25. ராயூடு சொல்வ‌து என‌க்கும் ச‌ரி என்று ப‌டுது ராயுடு சென்னைக்காக‌ இர‌ண்டு அல்ல‌து மூன்று வ‌ருட‌ம் விளையாடி இருக்கிறார் டோனி த‌ல‌மையில்.........................ராயூடு ந‌ல்ல‌ போமில் இருந்த‌ கால‌த்தில் ஓய்வை அறிவித்த‌வ‌ர்..................... ராயுடு தினேஸ் கார்த்திக் சுரேஸ் ரையினா இவ‌ர்க‌ள் மூன்று பேரும் 2004ம் ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌வை ராயூடு தான் க‌ப்ட‌ன்..................அந்த‌ உல‌க‌ கோப்பையில் இவ‌ர்க‌ள் தோல்வி சுரேஸ் ரையினா அந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்லா விளையாடி இருந்தார்..................த‌மிழ‌க‌ வீர‌ர் தினேஸ் கார்த்திக்கும் ந‌ல்ல‌ விளையாடினார்..............அதே ஆண்டு தான் தினேஸ் கார்த்திக் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் அறிமுக‌ம் ஆன‌வ‌ர்..............சுரேஸ் ரையினா 2005ம் ஆண்டு ச‌ர்வ‌தேச‌ போட்டியில் அறிமுக‌ம் ஆனார்...............சுரேஸ் ரையினாவின் முத‌லாவ‌து போட்டியில் , முத்தையா முர‌ளி த‌ர‌ன் போட்ட‌ முத‌ல் ப‌ந்திலே அவுட் ஆனார்.................பிற‌க்கு சுரேஸ் ரையினா ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ஜ‌பிஎல் போட்டிக‌ளில் சிற‌ப்பாக‌ விளையாடினார்...................ராயூடு ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து தான் விளையாடின‌வ‌ர் ...........................................
  26. யாழ்ப்பாண‌ம் த‌மீழீழ‌ம் அல்ல‌வாம் ஒரு கோதாரியும் என‌க்கு விள‌ங்க‌ வில்லை அத‌னால் இவ‌ர் கூட‌ விவாதிப்ப‌தை த‌விர்த்து விட்டேன் ந‌ண்பா😁👍...........................
  27. அந்த அமைவிடம் எனக்கு சரியாக தெரியவில்லை கோசான். ஆனால் அந்த இடம்... நல்லூர் திருவிழாவின் போது, வாகனங்கள் செல்லாமல் வீதித் தடை ஏற்படுத்தும் எல்லைக்குள் வருகின்றதாம். அப்படி என்றால்... நிச்சயம் நல்லூர் கோவிலில் இருந்து 300 - 400 மீற்றர் அளவான இடத்தில் அமைந்திருக்கலாம்.
  28. நான் அரையிறுதிக்கு தெரிவுசெய்த எல்லா அணியும் வெளியாலை. உங்களைக்கொப்பி பண்ணி சில மாற்றங்கள் செய்து போட்டேன். செய்த மாற்றம் எல்லாமே பிழைச்சுப்போச்சு.நான் கடைசி இடத்துக்கு வரநிறையச் சந்தர்ப்பம் இருக்கு
  29. இரண்டு மாதம் ஒன்றாக இருந்து... தாம்பத்திய உறவில் ஈடுபட்டவர்களை கடத்துவதால் என்ன லாபம். திருமணம் செய்ய முதல் தடுத்திருக்க வேண்டிய வேலை இது. அமெரிக்கன் கட்டைதுரை @ஈழப்பிரியன் ஊரில்தான் நிற்கிறார். இது... அவரின் ஏரியா. இதுக்கு அவர் ஒரு பஞ்சாயத்து செய்து நல்ல தீர்ப்பை சொல்வது நல்லது.
  30. காலையில் நல்ல செய்தியை தந்த ஏராளனுக்கும், யாழ்.மாநகர சபைக்கும் நன்றிகள். 🙂 நல்லூரில்... அசைவ கடை திறந்த, அந்தக் கடை முதலாளியை... ஆனையிறவில் ஆறுமாதம் உப்பு அள்ள விடுங்க சார். 😂 🤣
  31. கிருபனிடம், இந்தப் பேச்சு மட்டும் கேக்கக்கூடாது. ஏதோ தட்டுத்தடுமாறி, அங்கின நிக்கிறன். அங்கேயே நின்டுடனும்டா.
  32. மொத்தமாக இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் குடியிருப்புகளில் இருப்பவர்கள் அரைப்பங்கினர். மிகுதி அரைப்பங்கினர் சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் சிறிது குறைவு. இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சரியாக வரவில்லை என்று நினைக்கின்றேன். 'அகதி முகாம்' என்ற சொல்லைத் தவிர்த்து, அவற்றை அரசு வழங்கும் குடியிருப்புகள் என்று எழுதுகின்றேன். வெளியே வீடுகளில் வசிப்பவர்கள் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அங்கு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாலும் புலம் பெயர்ந்து மேற்குப் பக்கமாகச் சென்ற அவர்களின் உறவுகளிடமிருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் சுயமாக தொழிலும் செய்கின்றனர். இவர்களில் பலர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் கல்வி, திருமணம், சில வேலை வாய்ப்புகள் என்று தமிழக மக்களுடன் சிறிது சிறிதாக கலந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள். அரச குடியிருப்புகளில் இருப்பவர்களில் பல மாவட்டக்காரர்கள் இருந்தாலும், மன்னார், முல்லைத்தீவு அடங்கலாக வன்னி மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் என்று நினைக்கின்றேன். இவர்கள் தமிழ்நாட்டு அரசிலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றனர். பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, அதற்குள்ளேயே வளர்கின்றார்கள். மிகக்குறைவானவர்களே உயர்கல்விக்கு போகின்றார்கள். தமிழ்நாட்டில் அரச ஆதரவுடன் தங்கி இருப்பவர்களை புலம்பெயர் தமிழர்களின் உதவிகளுடன் இலங்கையில் மீளக் குடியேற்றி, அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரங்களையும் உருவாக்கலாம் என்ற யோசனை இடைக்கிடையே பல குழுமங்களிலும் பகிரப்படுவதுண்டு. ஆனால் ஏற்கனவே இலங்கையில் நாளாந்த வாழ்வே போராட்டமாக இருக்கும் ஒரு பிரிவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி இங்கு பொருத்தமானது என்று நினைக்கின்றேன். இந்த மக்களில் ஒரு பகுதியினர் போராளிகள். அவர்கள் தங்களை 'முன்னாள் போராளிகள்' என்று சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை என்றுமே போராளிகள் என்று சொல்வது மிகச்சரியே. இந்தப் போராளிகளின் வாழ்க்கைகளை புலம்பெயர் தமிழர்களால், இத்தனை வருடங்கள் ஆன பின்னும், பெரிதாக மாற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. முக்கியமாக பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள போராளிகள். 'பெண் போராளிகளை நோக்கிய எங்கள் சமூகத்தின் உளச்சிக்கல்...............' என்பது போன்ற தலைப்பில் சிலர் எழுதியும் விட்டார்கள். இதே போன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்று ஒற்றைத் தலைமையில், பெரும்பாலும் பெண் தலைமையில், இருக்கும் குடும்பங்கள். பதினாறு வருடங்களில் எவ்வளவை எங்களால் மாற்ற முடிந்தது. இதனாலேயே தமிழ்நாட்டிலிருந்து மக்களை இலங்கையில் மீளக் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விடயமாக இருக்கின்றது. ஊர்ச் சங்கங்கள், நலன்புரிச் சங்கள், அமைப்புகள், அன்புநெறிகள், மனிதநேயங்கள், ஐஎம்எச்ஓ,......... என்று நூற்றுக் கணக்கானவை இருக்கின்றன. இந்த அமைப்புகள் உதவிகளும் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் கடலில் விழுந்த துளிகள் போலவே இவை போய்க் கொண்டிருக்கின்றன. கடல் அப்படியே கரித்துக் கொண்டே இருக்கின்றது. ஒரு அரசுக்கு நிகரான ஒரு அமைப்பு வேண்டும் என்றே நினைக்கின்றேன். அப்படி ஒரு அமைப்பை உருவாக்க முடிந்தால் கூட, அந்த அமைப்பின் முதலாவது கடமையாக, செயற்பாடாக இலங்கையிலேயே இன்றும் இருக்கும் மக்களே அமைவார்கள். வேறு சில தகவல்கள்: தமிழ்நாட்டுக்கு 2009ம் ஆண்டின் பின் தான் எம் மக்கள் போனார்கள் என்றில்லை. பெரும்பாலான எம்மக்கள் 90ம் ஆண்டுகளிலேயேயும், அதற்கு முன்னரும் கூட அங்கே போய் விட்டார்கள். முள்ளிவாய்க்கால் கொடுமையை, அழிப்பை இந்தியா தடுக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த மன்னிக்க முடியாத துரோகமும், வலியும். ஆனால் ஈழத்தமிழ் மக்கள் அதற்கு பல வருடங்கள் முன்னரேயே தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய ஆரம்பித்துவிட்டார்கள். இவை இரண்டும் இணைந்தவை அல்ல. தமிழ்நாட்டு அரச குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சொல்லும் நாங்கள் இன்றும் இலங்கையில் எம் மக்கள் பலர் இருக்கும் இடங்களை போய்ப் பார்க்கவேண்டும். ஒரே ஒரு குடிசையில் தான் ஒரு குடும்பம் இருந்தது. அருகே தோண்டிய பள்ளம் தான் கிணறு............... தமிழ்நாட்டுக்கும், அந்த சிறிய குடியிருப்புகளுக்கும், அவர்கள் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் இலவச அரிசிக்கும் என்றென்றும் நன்றி. இவற்றை இன்று அந்த மக்களுக்கு கொடுப்பதற்கு இந்த உலகில் வேறு எவருமே இல்லை.
  33. இஸ்லாமிய பயங்கர, பிரிவினைவாதத்தை தூண்டும் பேச்சு. ஹன்சார்ட்டில் இருந்து நீக்கி, பாராளுமன்றத்துக்கு வெளியே இப்படி பேசினால் தூக்கி பத்து வருடம் உள்ளே வைக்க வேண்டும்? அது சரி ரிசாத் வீட்டில் கொல்லப்பட்ட வீட்டு வேலைக்கார சிறுமிக்கு நியாயம் கிடைத்துவிட்டதா?
  34. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 63வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமாரின் ஆட்டமிழக்காது எடுத்த 73 ஓட்டங்களுடனும், நமன் டீரின் 8 பந்துகளில் புயல்வேகத்தில் எடுத்த 24 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் விரைவிலேயே ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பியதால் 18.2 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜஸ்பிரிற் பும்ராவும், மிச்சல் சன்ரெனரும் தலா 3 விக்கெட்டுகளை மிகக் குறைந்த ஓட்டங்களைக் கொடுத்து வீழ்த்தியிருந்தனர். முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அடுத்த கட்ட play-off ஆட்டங்களுக்குத் தெரிவாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: போட்டியின் ஆரம்ப நாட்களில் பல நாட்கள் முதல்வராக இருந்த @suvy ஐயா 20வது இடத்திற்கு வீழ்ந்துள்ளார்!
  35. ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெறுப்பை வெளிப்படுத்தி வரலாற்று துரோகங்களை அரங்கேற்றி வரும் இந்தியா தம்மை நம்பி வந்த ஈழ தமிழர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிகளாகவே நடாத்துகின்ற அவலம் நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழ அகதி ஒருவர் தொடர்பான தீர்ப்பின் மூலம் மீளவும் தன்னை ஒரு ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் காந்தி சதுக்கம் ,காந்தி பூங்கா , மகாத்மா காந்திக்கு சிலை என்று இலங்கையர்கள் இந்தியாவின் மீதான ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியாவோ ஒரு எதிரியை பாவிப்பது போலவே பாவித்து வருகிறது. இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில். இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளை பற்றியும் தமிழரின் தேசிய வேட்கையை சிதைத்த இந்திய நகர்வுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு. வணக்கம். இன்றைய நாளும் மற்றுமொரு ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று 2052025 இன்றைய நாளை பொறுத்தவரை நாங்கள் பேச வேண்டிய விடயம் அல்லது பேசுகின்ற மிக முக்கியமான ஒரு விடயமாக மாறியிருப்பது ஒரு அகதியினுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல் அதற்கு சொல்லப்பட்டிருக்கக்கூடிய காரணம் என்பது ஈழத்தமிழ் மக்களிடையே அவர்களுடைய மனங்களில் இவ்வளவு காலமும் இந்தியா தன்னுடைய தந்தைய நாடு என்பதும் இந்தியா எங்களுக்கு ஆதரவாக இப்போதாவது ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையோடும் இருந்த மக்களுக்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நான் உங்களோடு இப்போது பகிர்ந்து கொள்கிறேன். 140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கனவே போராடி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் தர்மசாலை அதாவது இலவச தங்குமி இடம் அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாகவும் இலங்கை தமிழகதியினுடைய தங்குமிடத்திற்கான அனுமதி கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் அந்த செய்தி வெளிவந்தது. தமிழில் விடுத்தலை புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக இலங்கை தமிழரான ஒரு மனுதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் யுஏபிஏ என்று சொல்லக்கூடிய சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தினால் அந்த நபர் குற்றவாளி என தீர்ப்பாளிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அவரது சிறைதண்டனையை 10 ஆண்டுகளில்ிருந்து ஏழு ஆண்டுகளாக கடந்த 2022 ஆம் ஆண்டு குறைத்திருந்தது. அதன் அத்தோடு அவரது சிறைதண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. மேலும் மூன்று வருடங்களாக அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த நபர் இலங்கைக்கு திரும்பினால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்து விளைதை தடுத்து நிறுத்த கூறியும் உச்ச நீதிமன்றத்திலே மனுதாக்கல் செய்திருந்தார். தான் முறையான விசாவின் மூலமாக இந்தியா வந்ததாகவும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது இந்தியாவிலே குடியேறி விட்டனர் எனவும் அந்த மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளான தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா இடங்களிலும் இருந்து வரும் வெளிநாட்டினரை மகிழ்விக்க கூடிய தர்மசாலை அல்ல. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மதுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறது என்பதை சொல்லிக்கொள்ளலாம். அதே நேரம் குறிப்பாக ஒரு விடயத்தையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கடந்த 2024ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்திலே ஒரு இலங்கை தமிழர்களுடைய குடியுரிமை மனைவை பரிசலித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதனை விரைவாக தீர்மானிக்குமாறு நீதிமன்றம் உத்திரவெற்றிருந்த ஒரு வழக்கையும் நான் உங்களுக்கு மேற்கொள் காட்டி விடுகிறேன். ஆக இந்த வழக்கினுடைய தீர்ப்பில் நான் இறுதியாக கூறியது. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுருந்தார்கள். ஆக இந்தியா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈழத்ததமிழர்களுக்கான தீர்வுக்காகவோ அல்லது ஈழத்ததமிழர்களுடைய பிரச்சனையிலோ தலையிட போவதில்லை. அவர்களுக்காக பரிந்து பேச போவதில்லை என்ற ஒரு விடயத்தை மிக் தெளிவாக இந்திய நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆக இந்த விவகாரத்திலே இன்று ஒரு நாள் இந்தியா எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும். இந்தியாவால் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று சொல்லி நம்பி இருக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் ஈழ தமிழ் உள்ளங்களை இந்தியா இந்த தீர்ப்பின் மூலமாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக சொல்லக்கூடிய வேண்டுமாக இருந்தால் நான் ஏழவே குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒரு விடயம்தான். இந்த இந்தியாவினுடைய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அப்போது அந்த அமைதிப்படை இலங்கைக்கு வந்த நாளினை மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அவர்களை தலையிலே தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ஈழத்தின் தமிழ் மக்கள். அதாவது எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது. ஸ்ரீலங்க அரசினுடைய தொடர் நடவடிக்கைகளில் இருந்து ஈழ தமிழ் மக்களாக எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்று சொல்லி அவர்கள் சந்தோஷப்பட்டார்கள் ஊர்வலங்க செய்தார்கள் மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிலைமை முற்றாக மாறி ஈழ தமிழ் மக்கள் கண்டு அஞ்சி ஒழிக்கின்ற ஒரு ராணுவமாக இந்திய ராணுவம் இருந்தது. இந்திய ராணுவம் படுகொலைகளை செய்தது பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டது. இன்னும் இன்னும் சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் மிக காடைனமாக வைத்திய சாலைக்குள் புகுந்து நோயாளர்களை சுட்டு கொண்டது. இப்படியான நடவடிக்கைகளை செய்தது. அந்த நிலைமையிலும் கூட அதன் பின்பதாகவும் கூட இளதமிழ் மக்கள் இன்றுவரை இந்தியா எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்யும் என்று சொல்லி நம்புகிறார்கள். அன்பான தமிழக உறவுகளே என்னுடைய இந்த பேச்சை கண்டு நீங்கள் கொதைத்து எழலாம். உங்களுடைய ஆக்ரோசமான கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் நான் சில விடயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் இந்தியாவை விரோதிகளாக பார்த்தது இல்லை. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை வருகிற போது பெரும்பாலான இழத்து தமிழ் மக்களுடைய மனநிலை இப்போதும் ஆகியிருக்கிறது பாகிஸ்தானுடைய பக்கமாக என்று சொல்லி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் துடுப்பாட்டம் அதாவது கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றால் கூட எங்களுடில் பலரினுடைய ஆதரவு என்பது இந்தியாவினுடைய பக்கமாக இருக்கும். ஏனென்று சொன்னால் இந்தியாவினுடைய எதிரிநாதரி பாகிஸ்தான். ஆகவே எங்களுக்கு பாகிஸ்தான் மீது விருப்பமில்லை. பாகிஸ்தானோடு உடன்பட நாங்கள் தயாரில்லை என்று மனநிலையில் தான் இளத்தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். எங்களுடைய ஒவ்வொரு வீதிகளிலும் ஒவ்வொரு ஊர்களிலும் வடக்குக்கிழக்கில் இருக்கக்கூடிய பெரும்பாலான இடங்களிலே மகாத்மா காந்திக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் இருக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் ஒரு வீதிக்கு காந்தி வீதி என்று பெயரிட்டிருப்பார்கள். அதேபோல காந்தி சதக்கம் என்று சொல்லி ஒரு சதக்கத்தை ஒதுக்கி இருப்பார்கள். அதை தாண்டி மகாத்மா காந்தி பூங்கா என்று சொல்லி பூங்காவை வைத்திருப்பார்கள். இப்படி நிறையவே இந்தியாவினுடைய விவகாரங்களிலும் இந்தியாவை சார்ந்தவர்களையும் அவர்கள் தூக்கி எறிந்ததாகவோ நிராகரித்ததாகவோ அல்லாமல் பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே செயல்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய பலரினுடைய ஒரு தலைமுறைக்கு முற்பட்ட பெயர்களை பார்க்கிற போது இந்திரா சந்திரபோஸ் இப்படியான பெயர்களை எங்களுடைய மக்கள் சூடி இருந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் இந்தியாவோடு மிக நெருக்கமாக எங்களுடைய உணர்வுகளை பேணி இருந்தோம். ஆனால் இந்தியா தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்கிறது? பெரும்பாலான உறவுகள் குறிப்பிடக்கூடிய விடயம் இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது. சந்தோஷமாக வைத்திருக்கிறது ஈழத்ததமிழர்களுக்கு நன்றி இல்லை என்பது. இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது என்பது ஈழதமிழர்களுடைய தேவை வீடு கட்டி தருவது அல்ல. எங்களால் உழைத்து எங்களுக்கான வீடுகளை கட்ட முடியாமல் இல்லை. ஆக இந்த விவகாரத்திலே வீடு கட்டி கொடுத்தது இந்தியா தமிழர்களுக்கு நன்றி இல்லை என்ற வார்த்தைகளை சொல்லுகின்றவர்கள் நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஒரு விடயத்தை நான் இங்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஈழ தமிழர்கள் தங்களுடைய கடந்த கால யுத்தத்தின் காரணமாக உலகமங்கிலுமே பரவிச் சென்றார்கள். அப்படி அவர்கள் பதவி சென்ற நாடுகளிலே ஒவ்வொரு நாடுகளிலும் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்று சொன்னால் அந்த நாடுகளிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாடுகளினுடைய அமைச்சர்களாக மாறும் அளவுக்கு இருந்திருக்கிறது. கனடாவிலே இப்போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரதானியாவுக்கு பார்க்கிற போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். உமாகுமரன் என்று சொல்லக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். ஆவஸ்திரேலியாவிலே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர்கள் எல்லாம் ஆவஸ்திரேலியாவிலேயும் பிரதானியாவிலும் கனடாவிலும் பிறந்து விளந்தவர்கள் அல்ல. இந்த நாட்டில இருந்து அகதியாக சென்றவர்கள் அந்த நாட்டிலே இருந்து அகதியாக சென்றவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு அந்த நாடுகள் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. பிரதானியாவை பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகள் அந்த நாட்டிலே அகதியாக இருந்தால் பெர்மனன்ட் ரெசிடன்ட் என்று சொல்லக்கூடிய பிஆர் வழங்குவார்கள். அதேபோல 10 ஆண்டுகளிலே அந்த நாட்டினுடைய குடியுரிமை வழங்குவார்கள். ஆனால் இந்த இந்தியாவிலே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 84ஆம் ஆண்டுக்கு பின்பதாக நிறைய பேர் எங்களுடைய தமிழ் மக்கள் இந்தியாவிலே தஞ்சம் கூறினார்கள். அவர்கள் 30 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அகதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக யாரோ யாரோ எல்லாம் அநிய நாடுகள் எல்லாம் இந்த தமிழர்களுக்குரிய உரிமையையும் அவர்களுக்கான அகதி அந்தஸ்தை நீக்கி அவர்களை தங்களுடைய குடிமக்களாக அரவணைத்துக் கொள்கிற போது நாங்கள் முழுவதுமாக நம்பி இருந்த இந்தியா எங்களை அகதிகளாக வைத்து பார்க்கிறது 30 ஆண்டுகள் கடந்தும் அகதி முகாம்களிலே அடிப்படை உரிமைகள் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு நிலைமை இருக்கிறது. நிச்சயமாக ஒரு விடயத்தை நாங்கள் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த இலங்கையில் இந்திய தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு குடியுரிமை இருக்கிறது. ஒரு காலத்திலே அவர்களுடைய குடியுரிமை கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோது இதே ஈழத்ததமிழர் சமூகம் அவர்களுக்காக பின்னின்றது. தந்தை செல்வநாயகம் அவர்கள் எதிர்த்து நின்றார். அந்த தமிழர்களுக்காக பேசினார். அவர்களும் எங்களுடைய மக்கள் என்று பேசினார். ஆனால் இந்தியா அப்படியாக பேசுவதற்கான வாய்ப்பையே நிராகரித்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் அன்பான தமிழக உங்களிடம் விரயமாக வேண்டுகின்ற விடயம். உங்களைப் போலவே நாங்களும் இருக்கிறோம். உங்களை போல உங்களை மீது நாங்கள் பற்றுத்தி கொண்டிருக்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். உங்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய உணர்வுகளில் கலந்து எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளாக நாங்கள் உங்களை பார்க்கிறோம். இந்தியா எங்களுடைய தந்தையர் தேசம் என்று சொல்லி நாங்கள் அடிக்கடி சொல்லி கொள்வோம். அப்பா என்று அழைத்து ஒரு பிள்ளையை தள்ளிவிட்டு நீ மாற்றான் பிள்ளை என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கிறதா இந்தியாவுக்கு என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. ஈழ தமிழர்கள் இன்று ஒரு நாள் இந்தியா எங்களுடைய விவகாரத்தில் தலையிடும் எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும் நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வழி அமைத்து தரும் என்று சொல்லி எதிர்பார்ப்போடுதான் இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்வு மிகப்பரிய அதிர்வலைகளையும், மிகப்பெரிய மாற்றங்களையும் உண்டு பண்ணும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆக அன்பான சொந்தங்களே எங்களுடைய தமிழ்நாட்டு சொந்தங்கள் எங்களுக்காக பேசுகிறார்கள். அவர்கள் எங்களுடைய வரலாறுகளை கடத்துகிறார்கள். எங்களுடைய கருத்துக்களை எங்களுடைய கதைகளை பேசுகிறார்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அவர்களை குற்றம் சொல்லவில்லை. ஒரு ஒன்றிய நாடாக ஒருமித்த நாடாக இந்தியாவிடம் இதனை வலியுறுத்துங்கள் அன்பான உறவுகளே ஈழ தமிழர்கள் நம்முடைய சொந்தங்கள் நம்முடைய மக்கள் இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அவர்கள் நிச்சயமாக இந்தியா எங்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். குறிப்பாக இந்த இளத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை பொறுத்தவரை அன்றைய காலகட்டத்திலே இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்த போராளிகளினுடைய மொத்த எண்ணிக்கை 40,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்காவினுடைய ராணுவ எண்ணிக்கை வெறும் 9,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் நினைத்திருந்தால் தமிழ் தரப்புகள் எந்த வகையான போராட்டங்களை எந்த வகையான நகர்வுகளை மேற்கொண்டிருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். ஆனால் இந்தியா ஒற்றுமைக்கு கொஞ்சம் விளைவிக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அதேபோல பிரட் என்று சொல்லக்கூடிய அமைப்புக்கு வந்திருக்கக்கூடிய அந்த காலப்பகுதியிலே ஆயுதம் ஏakே47 என்று சொல்லக்கூடிய ஆயுதங்கள் வந்தது. அதனை பறைத்துக் கொண்டதுமே இந்தியா. இப்படியாக நிறைய சம்பவங்களை செய்தது. ஒற்றுமையாக இருந்து அந்த 40,000 போராளிகளை பிளவுபடுத்தி அவர்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டு ஒருவர் ஒருவர் தங்களுடைய இனத்தினுடைய கூடாரை காம்புகளாக அவர்களை மாற்றிய பெருமை இந்தியாவை சார்ந்ததாக இருக்கிறது. ஆகவேதான் இந்த விவகாரத்திலே நாங்கள் தொடர்ச்சியான அதிர்வனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வேந்த புண்ணிலே வேல் பாற்றுவது போலவே இந்தியா நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா ஈழ தமிழர்களுடைய சுய நிர்ணயத்தை மறக்கிறது. ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை நிராகரிக்கிறது. உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே இனப்படுகொலை இடம்பெற்றது என்று சொல்லுகிற போது இந்தியா அது தொடர்பாக வாயை துறக்கவில்லை. யாரோ யாரோ என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் எங்களுக்காக பரிந்து பேசுகிற போது எங்களுடைய உணர்வோடு தொடர்புபட்டு எங்களுடைய உறவுகளாக இருக்கக்கூடிய இந்தியா இந்த விவகாரத்தில் இப்படியான ஒரு நிலைப்பாட்டையில் இருப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் ஒவ்வொரு ஈழ தமிழனின் கேள்வியுமாக இருக்கிறது. குறிப்பாக சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் இந்த விவகாரத்திலே தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் நாங்கள் எப்போதுமே இந்த தமிழ்நாட்டு தமிழர்களை நாங்கள் குற்றம் சாட்டியதில்லை. அவர்கள் எங்களுக்காகவே தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுடைய சுயநிர்மை உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் 21க்கும் அதிகமான தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களினுடைய உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டோம். அவர்கள் எங்களுடைய நினைவுகளில் கலந்தவர்கள். ஆனால் இந்தியா என்று ஒருமித்த நாடு என்று வருகிற போது இந்தியா எங்களுக்காக செய்கின்றது விடயங்களை பற்றிதான் நாங்கள் பேசுகின்றோம். எங்களினுடைய உரிமைகளை பறைக்கிறது எங்களுடைய இறப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. மீண்டும் மீண்டும் இப்படியான சம்பவங்களை இடம் பெறுகிறது. குறிப்பாக இளத்தமிழனே ஒரு சோகத்தின் வடுக்களிலே தாங்கி தங்களுடைய இழப்புகளை பேசி கொண்டிருக்கக்கூடிய காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜியா கென்றிக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய மகாநாயக தேர்களை சந்தித்து அவர்களுக்கு தன்னை அவர்களிடம் அரசு தன்னுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய நாட்டினுடைய எதிர்காலத்திற்காக அவர்களிடம் ஆசி பெற்று வந்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். ஆக ஒரு பக்கமாக ஈழத்ததமிழ் மக்கள் தங்களுடைய உறவுகளை தொலைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வீதிகளில் காத்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஒரு பக்கமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்பது போல இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒரு பக்கமாக இருந்தால் கூட போதும். ஆனால் மீண்டும் மீண்டும் ஈழ தமிழர்களுடைய மனதில் வெஞ்சினத்தை பாற்றி வெந்த புண்ணிலே வேலை பாற்றுவது போன்ற நகர்வுகளை எப்படி ஏற்றுக்கொள்வது என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இந்த விவகாரத்திலே திமுகாவினுடைய தலைவர் முக ஸ்டாலின் ஒரு அதிர்விலைகளை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல இன்னும் சொல்லக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அன்புமணி ராமதாஸ் இதனை கண்டித்திருக்கிறார். இப்படிக்காக சில கருத்துக்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜாகா தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றி இருப்பதாக சோதி இருக்கிறார்கள். இந்தியாவினுடைய சட்டங்களை மதிக்க வேண்டும் என்று சொல்லியும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் எந்த அளவுக்கு பாரதரமான நிலைமை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். ஒரு தமிழனாக தமிழனுடைய உணர்வை புரிந்து கொள்ள முடியாத நிலையில் எங்களுடைய தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியையும் நான் இந்த நேரத்தில் முன்வைத்து விடுகிறேன். அதே நேரம் நான் உங்களோடு இன்னும் சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு துருவான செய்தி வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ஒரு செய்தி தளத்திலே சில தமிழ்நாட்டு உறவுகள் இப்படி கருத்துக்களை இட்டிருந்தார்கள். இதனை வாசிக்கின்ற போது எங்களுடைய மனம் எந்த அளவுக்கு வெந்திருக்கும் என்று சொல்லி நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள். அதாவது இந்த சில மேற்கொள் காட்டக்கூடிய கருத்துக்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அப்போ இதுக்கு அகதிகள் முகாம் கட்டி இலங்கை அகதிகளை தங்க வைத்திருக்கிறீர்கள். அடிச்சு துரத்த வேண்டியதுதானே. ஒருவேளை இங்கே அகதிகள் முகாம் இருப்பது இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா? அடுத்தது சம்மட்டி வழக்கி பதிவு செய்யும்போது இந்த மாதிரியான தீர்ப்பை உடனே வழங்கி விட வேண்டும். இன்னும் ஒரு கருத்து இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க சட்டபூர்வ உரிமை இல்லை. சட்டபூர்வ விதி அதிகாரம் இல்லாத கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞன் வனுவாக தாக்கல் செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்தும் தீர்வும் சரியானது அப்படிங்கற கருத்து. அதேபோல திருட்டு ரயிலே வந்த வினைதான் இலங்கை அகதிகள் அனுபவிக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். திருட்டு ரயிலேறி வந்த வினைதான் இலங்கை அகதிகள் மீண்டும் அனுபவிக்கிறார்கள். இப்போதாவது நீதிபதிகள் உணர்ந்தார்களே இதை போல தட்டி வைத்து கொள்ள வேண்டும் அவர்களை அப்படியும் கருத்துக்கள். ஆனால் சில கருத்துக்கள் வந்திருக்கிறது. கேள்விகள் கேட்கும் உரிமை இந்த நீதிமன்றத்திற்கு இருக்கும் என்று சொன்னால் இனப்படுகலக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியது சரியா? ஒதுங்கி இருந்தால் அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் இந்த விடயத்தை நாங்கள் ஒரு முக்கியமான விடயமாக பார்க்கலாம். கனம் நீதிபதி அவர்களே ஏற்கனவே நமது சத்திரத்தில் பல டோகங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லி ஒரு கேள்வி இருக்கிறது. சில கருத்துக்களைதான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதாவது எங்களுடைய விவகாரத்திலே நீங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் உங்களுடைய அமைதிப்படை என்ற போர்டையில் அட்டூடிய படை இலங்கைக்கு வந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களை இருப்பை அவர்களின் மீது துப்பாக்கி சூடுகளை அவர்களுடைய இருப்பின் மீதான ஆயுத பிரயோகத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்திருப்பார்கள். எங்களுடைய மக்களுக்கான போராட்டம் அவர்களுக்கானதாக இருந்திருக்கும். நீங்கள் ஆயுதம் கொடுத்து படையினரை அனுப்பி 2009லே முள்ளிவாய்க்காலிலே அந்த பேரவலத்தை நிகழ்த்தாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் உங்களிடம் வந்து அகதிகளாக இருந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய சுய நிர்ணய ஆட்சியை நிரூபித்திருப்பார்கள். நான் ஒரே ஒரு விடயத்தை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திவிட்டு வருகிறேன். அதாவது 2009க்கு முற்பட்ட காலப்பகுதியிலே வடக்கிலே குறிப்பாக இந்த புதுக்குடியி இருப்பு வந்திரி பிராந்தியத்திலே ஒரு யாசகம் பெறுகின்ற நபரை கூட நீங்கள் அடையாளம் காட்ட முடியாது. அந்த அளவுக்கு எங்களுடைய நிலமும் எங்களுடைய மக்களும் எங்களை காப்பாற்றிக் கொண்டவர்களும் எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களும் இருந்திருந்தார்கள். இந்த தேசம் தன்னிறைவான ஒரு தேசமாக எங்களுடைய தேசம் இருந்தது. நாங்கள் யாருக்கு இடமும் சோற்றுக்காக பிச்சை எடுக்கவில்லை. அரிசிதாரங்கள் பரப்பு தாருங்கள் என்று சொல்லி வீதிக்கு செல்லவில்லை. நாங்கள் நிறைவானவர்களாக இருந்தோம். ஆனால் அந்த அத்தனை விடயங்களையும் மாற்றியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. நீங்கள் செய்த இந்த வினைகளின் பாரதூரங்களை உணர்ந்து என்றாலும் எங்களுடைய மக்களினுடைய இருப்பின் மீதான கேள்விக்கு உட்படுத்தலை தொடர்ந்து தவிர்த்து விடுங்கள். இது ஒரு அன்பான வினயமான வேண்டுகோள். மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கிறேன். எங்களுடைய தமிழ்நாட்டு உறவுகளின் மீது எங்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. உங்களிடம் அன்பான வேண்டுகோள். எங்களுடைய ஈழத் தமிழ் மக்களினுடைய அந்த இறப்புக்காக உங்களுடைய பிராந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துங்கள். அன்பான உறவுகளே நாளை மற்றுமொரு இன்றைய அதிர்வினோடாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் அதுவரை வணக்கம் https://tamilwin.com/
  36. சின்ன பிரச்சினைக்கும் மூக்கை நுழைத்து ஊதிபெரிதாக்குவதே இவர் வேலையாய்ப் போச்சு, நா டுகளுக்கிடையேயும், வீட்டுக்குள்ளேயுமா ? குடடையை குழப்பி மீன் இல்லை பெரிய திமிங்கிலத்தையே பிடிப்பார் .
  37. பூசை வேலை செய்யுது. புகையைப் போடுங்க. ராகுலையும் தூக்கிட்டாங்கள்.
  38. கபிலதேவுடன் தோனி .......... ! 🤞
  39. இந்தியாவின் உண்மை முகத்தை உரித்துக் காட்டிய கட்டுரை. பகிர்விற்கு நன்றி பெருமாள்.
  40. இப்படி ஒட்டு மொத்த கிரிகெட்டையும் இந்தியா புறக்கணித்தால் விளையாட்டு தப்பும்🤣. அவர்கள் தங்கள் தரக்குறைவா ஐ பி எல் லில் மாறி மாறி விளாசி இன்பம் அடையட்டும்🤣.
  41. ட்ரெவர் ஹெட்டுக்கு கோவிட் நோயினால் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் சிலவேளை விளையாட மாட்டார்
  42. தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று நடைபெற்ற 16ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் (சின்னம்மா), கலந்து கொண்டு இலங்கை போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
  43. Reverse osmosis (RO) is a water purification process that uses a semi-permeable membrane and pressure to separate water molecules from contaminants. It's essentially the reverse of natural osmosis, where water moves across a membrane from an area of lower solute concentration to an area of higher concentration. இங்கே பெருமளவு வடிகட்டிகள் இந்த தொழில்நுட்பத்தில் இயங்குபவை. RO WITH UV FILTER எமது கிராமத்தில் உள்ளது. இந்த வடிகட்டும் முறையில் உட்செலுத்தப்படும் நீரில் 1/3 நன்னீராகவும் 2/3 கழிவு நீராக வெளியேற்றப்படும் என தம்பி சொன்னவன்.
  44. கனிமா!!!! கனிமா!!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.