Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    38754
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3049
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    23920
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19109
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/03/25 in all areas

  1. பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது அதுவும் இல்லை அடுத்த போட்டியில் சந்திக்க ஆ(அ)வலுடன் காத்து இருப்பார்கள் 😇
  2. எங்களின் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு மட்டுமே போதுமானது, அண்ணா. வேறு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நாங்கள் சமாளித்திருப்போம். இன்று கூட அது தான் நிலை. ஆனால் இந்திய மத்திய அரசு என்றும் அப்படியான ஒரு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்பவில்லை. எங்களின் நிலை மட்டும் இல்லை, காசாவில் பாலஸ்தீன மக்களின் நிலையைப் பாருங்கள், அண்ணா. நேற்று நிவாரணம் பெற வரிசையில் நின்ற அந்த மக்கள் வரிசையை மீறி விட்டார்கள் என்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முதல் நாளும் அந்த மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அங்கு மருத்துவமனை வாசலிலேயே அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். உலகமும், அராபியர்களும் பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்து இதைத் தடுக்க முடியாதா? மணிப்பூரிலும் இதே நிலை தான். ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று இருக்கும் பெரும் தேசங்களில் எல்லாம் இந்தக் கொடுமைகள் தினமும் நடந்து கொண்டேயிருக்கின்றன. வெகு சில செய்திகளும், நிகழ்வுகளுமே வெளியே தெரியவருகின்றன. ஆதிக்கங்களின் அடக்குமுறைகளுக்குள் எத்தனையோ மக்கள் திரள்கள் தங்களின் அடையாளங்களை இழந்து வாழ்ந்து மடிகின்றார்கள். ஆனாலும் இவற்றில் சில மக்கள் திரள்கள் பெரும் இழப்புகள் தங்களுக்கு வரும் என்று தெரிந்தும் முடிந்தவரை ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். உலகம் ஒரு முள்ளிவாய்க்காலையோ அல்லது ஒரு காசாவையோ மட்டும் கண்டுவிடவில்லை. இவை திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன. உக்ரேனுக்கு தற்காலிகமாகவேனும் உதவிகள் கிடைப்பது அந்த உக்ரேனிய மக்களுக்கு கிடைத்த ஒரு கொடை. என்ன தான் உதவிகள் கிடைத்தாலும் களத்தில் போராடுவதும், இழப்பதும் அந்த மக்கள் மட்டும் தானே, உதவும் உலகம் எதையும் இழக்கவில்லை. கொடுத்த உதவிக்கு கணக்கு எழுதி, அவர்களின் வளங்களையல்லவா ஈடாகக் கேட்கின்றது இந்த உலகம். இந்த உலகில் எந்த ஒடுக்கப்படும் மக்கள் திரளுக்கும் ஒரு தார்மீக ஆதரவு கூட காட்ட முடியாவிட்டால், நான் கடந்து வந்த பாதைதான் என்ன................. இந்த தாக்குதல் நடப்பதற்கு முதல் நாளும் ரஷ்யா உக்ரேன் குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அப்பாவி உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் உக்ரேன் தெரிந்தெடுத்த ரஷ்ய இராணுவ விமான இலக்குகள் மீதே தனது தாக்குதலை நடத்தியது. இப்போது 'உக்ரேன் செய்தது ஒரு பயங்கரவாதச் செயல்................' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது ரஷ்யா. இப்படித்தானே நாங்களும் இலங்கை அரசால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்.
  3. கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 286/6 11 பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) KKR 95 @செம்பாட்டான் மாத்திரம் சரியாகக் கணித்துள்ளார். மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sai Sudharsan (GT) Runs Highest Score Average 2025-2025 759 108* 54.21 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sai Sudharsan (GT) Runs Highest Score Average 2025-2025 759 108* 54.21 மூன்று பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Prasidh Krishna (GT) Wickets Best Performance Average 2025-2025 25 4/41 19.52 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Prasidh Krishna (GT) Wickets Best Performance Average 2025-2025 25 4/41 19.52 மூன்று பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் ஐ முந்த ஒருவராலும் முடியாது போலிருக்கின்றது!
  4. ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் விராட் கோலி நிதானமாக 43 ஓட்டங்களை எடுத்தார். மற்றையவர்கள் நிலைத்து ஆடாவிட்டாலும் கமியோ ஆட்டங்கள் மூலம் 15-25 ஓட்டங்களை எடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்களை எடுக்க உதவினர். பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக அடித்தாடினாலும், குருனல் பாண்டியாவின் இறுக்கமான பந்து வீச்சாலும், ஷ்ரேயஸ் ஐயர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்த காரணத்தாலும் ஜொஷ் இங்கிலிஸின் விக்கெட் பறிபோன பின்னர் வந்த வீரர்களில் ஷஷாங் சிங்கின் புயல்வேக 61 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் பங்களிக்காததாலும், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டி ஐபிஎல் 2025 க்கான சம்பியனாகியது! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் என சரியாக கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா ஐந்து புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: குறிப்பு: கேள்விகள் 78) இலிருந்து 90) வரையான புள்ளிவிபரப் பதில்களின் பின்னரே யாழ்கள போட்டியின் வெற்றியாளார் தீர்மானிக்கப்படுவார்!
  5. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது இடத்தில் நகர்ந்த @புலவர் ஐயாவுக்கும், நான்காவது இடத்திற்குச் சென்ற @செம்பாட்டான் க்கும், ஐந்தாவது இடத்தை இறுதி நாளில் எட்டிப் பிடித்த @கந்தப்பு வுக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் பல நாட்களாக முன்னணியில் நின்ற @suvy ஐயா, @செம்பாட்டான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che க்கும், பின்னர் இறுதி நிலையை பிறருக்கு பலநாட்கள் விட்டுக்கொடுக்காமல் நிற்கும் @Ahasthiyan க்கும் நன்றிகள்! யாழ்களப் போட்டி வெற்றியாளர் @நந்தன் க்கான £5 காசோலையை ஐபில் 2025 இல் இறுதி நிலையில் நிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @வீரப் பையன்26 ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @கந்தப்பு , @Eppothum Thamizhan , @vasee , @செம்பாட்டான் , @வீரப் பையன்26 போன்றோருக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய @suvy ஐயா,@ஈழப்பிரியன் ஐயா, @alvayan , @வாத்தியார் க்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.
  6. ஜக்கம்மா நண்டுகளை கைவிட்டு விடார். இது நல்ல முடிவு, எனக்கு புள்ளிகள் அந்த கேள்விகளுக்கு வராது.🤣
  7. புள்ளிகளை அறிவிக்காமல் விட்டு, அனைவரும் வெற்றியாளர் என அறிவித்தாலும் எனக்கு உடன்பாடே.
  8. தட்டித் தூக்கிட்டமில்ல...............
  9. 18 வருட காத்திருப்பு. KING KOHLI சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
  10. ஐயா, நீங்கள் எந்த மொழியில் எழுதுகின்றீர்கள் என சொல்ல முடியுமா? அல்லது, நீங்கள் மர்ம மொழியில் எழுதிய பின் தமிழில் பொழிப்புரை யை சுருக்கமாகவேனும் தர முடியுமா? நான் ஒரு பாமரன் எனக்கு மண்டை காயுது ஐயா கருணை காட்டுங்கள்
  11. ஒரு மாபெரும் எதிரியை எதிர்க்க துணிந்த பின், தனித்து நிற்காமல், ஏனைய நாடுகளின் நலனினை தமது நலனுடன் சமாந்திரபடுத்த, இடைவிடாது உழைப்பதே, ஒரு அசாத்திய திறமைதான். குறிப்பாக டிரம்பின் அத்தனை தகிடுதத்தங்களுக்கு பின்னும் - இந்த சமாந்தரப்படுத்தலை உந்திதள்ளுவது, உக்ரேனின் சகல இராணுவ நகர்வுகளையும் விட பிரமிக்கதக்க விடயம். ஆனால் உக்ரேன் ஐரோப்பாவில் இருப்பதும், அதன் எதிரியால் பாதிக்க படக்கூடிய ஏனைய பலமிக்க நாடுகள் அதை சூழ இருப்பதும் உக்ரேனின் அமைவிட-அதிஸ்டம்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.
  12. பாண்டிட்சேதுராமன் எழுதிய புத்தகமா? என்னைப்பற்றி எழுதியது 99% சரி, அதை வைத்து பிள்ளைகளுக்கு பெயரும் வைத்தேன், பிரகாசமாக இருக்கின்றார்கள், எண் சாத்திரத்தில் மட்டும் னக்கு நம்பிக்கையுண்டு
  13. யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... அநீதிகளை வேட்டையாட வந்த வேடனா... அதர்மங்களை தட்டிக் கேட்க வந்த வேடனா... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... கொட்ட கொட்ட குனிஞ்ச கூட்டம் எழுந்து நிற்குதே... உன் பாடல் கேட்டு எழுந்து நிற்குதே... தட்டிக் கேட்கும் உணர்வுகளோ எட்டி பாக்குதே... உன் பாடல் கேட்டு எட்டி பாக்குதே... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் நீ... ஆதிக் குடியின் வழியில் வந்த எளியோர் மொழி நீ... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... வீழ்ச்சியுற்ற இனத்திற்கு நீ எழுச்சியூட்ட வந்தாய்... நீ சொல்லிசையால் சூடு சொரணை கொப்பளிக்க செய்தாய்... நீ சாதி மத பேதங்களை வேட்டையாடும் வீரனா... நீ சமத்துவத்தின் பாதைகளை சமைக்க வந்த தீரனா... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... உந்தன் பாடல் மானுடத்தின் விடுதலை குரலே... உன் பாடல் வழியே விழிப்புக் கொள்ளும் மக்கள் திரளே... சுரண்டலுக்கு எதிராய் நீ சூளுரைக்கிறாய்... சூழ்ச்சி எல்லாம் வீழ்ச்சியுற பாடல் சமைக்கிறாய்... யாருடா நீ... யாருடா நீ... புயலப் போல கெளம்பி வந்தாய் யாருடா நீ... வேடனா நீ... வேடனா நீ... அநீதிகளை அதர்மங்களை வேட்டையாட வந்த வேடனா நீ... _ ஏ. இரமணிகாந்தன் திரைப்படப் பாடலாசிரியர்
  14. உண்மையில் எனக்கு இவற்றில் துளி அளவும் நம்பிக்கை இருந்ததில்லை பின்பு ஒரு எண்கணித சாஸ்திர புத்தகம் கிடைத்த பொது எனது பிறந்த தேதி பற்றி வாசித்தேன். 80 வீதம் என்னைப்பார்த்தே எழுதியதுபோல இருந்தது. ஆதலால் அதனை என்னால் அடித்து மறுக்க முடியாது போனது ... இது எவ்வாறு சாத்தியம்? பின்பு மற்றைய தேதிகளையும் வாசித்து எனக்கு நெருக்கமானவர்கள் குணாதிசயங்களை பார்க்கும்போது அவையும் பெரும்பாலும் பொருந்திய போகினறது. வெள்ளைகார்கள் கூட அதற்கு விதிவிலக்காக இல்லை. ஒருவேளை இதில் எழுதி இருக்கும் விடயங்கள் மட்டுமே நான் பார்க்கிறேன் அது மற்றவர்களிலும் இருக்கலாம் நான் பார்க்காமல் விடுகிறேன் அப்படி இப்படி என்று அதை மறுதலிப்பதற்கும் பொய் என்று சொலவதற்கும் நிறைய ஆதாரம் தேடியும். அதை மறுக்க எனக்கு போதிய ஆதாரம் எதுவும் இல்லை.......... இதன் பின்பே ராசிகள் பற்றியும் வாசிக்க தொடங்கினேன் பொதுவான குணாதிசயங்கள் அவர்கள் சொலவதுபோலவே அந்த அந்த ராசி காரர்களுக்கு இருக்கிறது. நான் பழகும் சிலரை நீங்கள் இன்ன இராசியா என்று கேட்டு அவர்களும் ஆம் அதுதான் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இது பொய்யா மெய்யா என்ற குழப்பம் இப்போதும் உண்டு. மேலே உள்ளவர் போல ஏதன் அடிப்படையில் அவர்கள் குணாதிசயங்களை எழுதுகிறார்கள்? அது எப்படி கொஞ்சம் என்றாலும் பொருந்தி போகிறது என்பதற்கு சரியான விளக்கம் எழுதினால் நாமும் விளங்கிக்கொண்டு வெறும் பொய்தான் என்று அடித்து கூறி விடலாம்
  15. ஒவ்வொரு ட்ரோனும் சில நூறு ஈரோ செலவில் செய்யப்பட்டவை. மொத்தமாக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று உக்ரேன் அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர். இந்தச் சிறிய ட்ரோன்கள் ஒரு வீட்டின் அடுப்படி வரை போகுமே............ இதில் ரஷ்யர்கள் அவர்களின் விமானங்களை எங்கே நிற்பாட்டி இருந்தார்கள், ஏன் அப்படி நிற்பாட்டி இருந்தார்கள் என்பது தான் பிரச்சனையா........... ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு எதிராக உக்ரேனிய மக்களும், அரசும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு மிகவும் ஆச்சரியமாக, பிரமிப்பாக இருக்கின்றது. அதுவும் அமெரிக்காவின் சமீபத்திய மிகத் தளம்பலான ஒரு நிலைப்பாட்டின் பின்னும் கூட. ஒரு எல்லை நாடாக இருந்து கொண்டே ஒரு பெரிய வல்லரசுடன் இப்படி மோதுவது என்பது ரஷ்யாவிற்கு மட்டும் இல்லை, அமெரிக்காவிற்கும் ஒரு பாடமே. உக்ரேன் ஒரு வருடத்தில் இப்படியான ஐந்து மில்லியன் ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை தங்களுக்கு இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றது. உலகமே பெரிய ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றது. எந்த நாட்டிலும், எந்த தளமும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது போல.
  16. பெங்களூர் அணி பலமான அணிதான் ஆனால் அவர்கள் இறுதி போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக மட்டும் விளையாடவில்லை யாழ்கள ஒட்டு மொத்த நண்டுகளுக்கு எதிராக விளையாடுகிறார்கள்.
  17. சசிக் குமரன் Sooedntsprhic123lf5ac71g16f0 4u4iu60i29lait035f5643g275i879u · நாங்க தோத்தது மேட்ச் தான் போர்ல இல்லைன்னு சொல்லும் போதே பையன் அடுத்து எதோ சம்பவம் பண்ண போறான்னு நினைச்சேன் செஞ்சுட்டான் இல்லை இல்லை செதுக்கிட்டான் கட்டபொம்மன் ஊர் எனக்கு கெட்டவன்னு பேர் எனக்கு எட்டப்பன்னு எவனும் வந்தா எட்டி எட்டி மிதி இருக்கு வாரான் வர்றான் வரான் வரான்ல இவன் பைனலுக்கு வாரான் வரான் வரான்ல இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 17 வருசமாக கப் அடிக்காத இரு அணிகள் பைனலில் மோதுகின்றனர் 🙏🏻" ........ ! 😂
  18. ‘`இந்தத் தலைமுறையைவிட, எங்கள் தலைமுறை, குறைவாகவே மூடநம்பிக்கை கொண்டிருந்தது. நகரத்தில் வாழும் மக்கள், டெக்னாலஜி அணுகல் உள்ள மக்கள் அனைவரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஜோதிடத்திலும், சாமியார்கள் மீதும் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கிரகணம் என்றால், அவர்கள் வானியல் அறிஞர், ஜோதிடர் என இருவரிடமும் பேசுகிறார்கள். ஆனால், ஜோதிடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!’’ - சமீபத்தில் மறைந்த, இந்தியாவின் தலைசிறைந்த வானியற்பியல் அறிஞர் ஜயந்த் விஷ்ணு நர்லிகரின் (Jayant Vishnu Narlikar) வார்த்தைகள் இவை. அந்த வருத்தம் அவருக்கு இருந்ததால்தான், தனது அறிவியல் ஆராய்ச்சிகள் தாண்டியும், மக்களின் மூட நம்பிக்கைகளைக் களையெடுத்து பகுத்தறிவை வளர்க்கவும், அடிப்படை அறிவியல் ஊட்டவும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். அறிவியலை தனது கட்டுரைகள், புத்தகங்கள், உரைகள், மீடியாவின் மூலம் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, அப்படியே வாழ்ந்தார். ‘ஜோதிடம், திருமண ஜாதகப் பொருத்தம் எல்லாம் பொய்’ என ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு அடித்து நொறுக்கிய இவருடைய பகுத்தறிவுவாதி முகம், வலிமை வாய்ந்தது. அதனால்தான், இந்தியாவில் வானியற்பியல் மற்றும் அண்டவியல் (Cosmology) உலகில் தனக்கென ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்ற அவர், சமீபத்தில் (மே 20) தனது 87 வயதில் மறைந்தபோது, அறிஞர்கள் வட்டம் தாண்டி, பகுத்தறிவுவாதிகளும் பொதுமக்களும் பகிர்ந்துவருகின்றனர் அவருக்கான புகழஞ்சலியை. மகாராஷ்டிரா டு கேம்பிரிட்ஜ் பட்டம்! 1938-ம் வருடம் மகாராஷ்டிராவில் பிறந்த நர்லிகர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வானியலாளர் ஃபிரெட் ஹோய்ல் (Fred Hoyle)-ஐ தன் மென்டாராக ஏற்று, அவருடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் உருவாக்கிய ஸ்டடி ஸ்டேட் கோட்பாடு’ (Steady State Theory), அவர்களை உலகப் புகழ் பெற வைத்தது. அதாவது, பிரபஞ்சம் பிறந்தது, வளர்ந்தது என்றில்லாமல், எப்போதும் அது ஒரே நிலைமை மற்றும் அடர்த்தியில் இருக்கிறது’ என்றனர். ஜயந்த் நர்லிகர் தலைமைப் பண்பும், தன்னிச்சை ஆய்வுகளும்! இந்தியா திரும்பிய நர்லிகர், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் இணைந்து, கோட்பாட்டு வானியற்பியல் குழுவை தனது தலைமையில் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தினார். தொடர்ந்து, வானியல் மற்றும் வானியற்பியலுக்கான இன்டர் - யுனிவர்சிட்டி மையத்தின் (IUCAA - The Inter-University Centre for Astronomy and Astrophysics) நிறுவன இயக்குநரானார். நர்லிகர், தன்னிச்சையான பல ஆய்வுகளை மேற்கொண்டார். சார்பியல் கோட்பாடுகள், கருந்துளைகள், காந்தக் களங்கள், கோள்களின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானக் கொள்கைகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், `நேச்சர்' (Nature) உள்பட பல சிறப்பான அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. மூடநம்பிக்கைக்கு எதிராக... ஆய்வு! பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற நர்லிகர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்பு உணர்வை சமூகம் அடைய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்காக பேசியது, எழுதியதோடு நிறுத்தவில்லை அவர். ஜோதிட மூட நம்பிக்கையைத் தகர்க்க, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவு செயற்பாட்டாளரான மருத்துவர் நரேந்திர தபோல்கருடன் இணைந்து, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு, முடிவுகள் வெளியிட்டு, ஜோதிடப் பொய்களை வெளிப்படுத்தினார். ஜாதகம் பொருந்தியவர்கள் எல்லாம் சூப்பராக வாழ்கிறார்களா?! நம் இந்திய திருமணங்களில், ஜாதகப் பொருத்தம் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. உண்மையில், ஜாதகம் பார்த்து திருமணம் செய்துவைக்கப்படும் தம்பதிகள் அனைவரும் அந்தப் பொருத்தங்கள் உறுதிப்படுத்தும் சிறப்பான வாழ்வை வாழ்கிறார்களா என்று, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் சேர்ந்து பல தம்பதிகளிடம் ஆய்வு நடத்தினர். முடிவில், ஜாதகப் பொருத்தம் உள்ள தம்பதிகள், அந்தப் பொருத்தம் இல்லாத தம்பதிகள் என இரு தரப்புமே ஒரே சதவிகிதத்தில்தான் சேர்ந்து வாழ்கின்றனர் என்று தரவுகளுடன் வெளியிட்டனர். அதாவது, கணவனும் மனைவியும் இணைந்து வாழ ஜாதகப் பொருத்தம் அவசியமில்லை எனத் தரவுகளுடன் நிரூபித்தனர். அதேபோல, திருமண முறிவு ஏற்பட்ட தம்பதிகளின் ஜாதகத்தைப் பரிசோதித்து, ஜாதகப் பொருத்தம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் சற்றேறக்குறைய அதே சதவிகிதத்தில்தான் திருமண முறிவு செய்து கொள்கின்றனர் என்றும் ஆதாரபூர்வமாக இவர்கள் நிறுவினார்கள். குணம், திறன், முன்னேற்றம்... ஜாதகத்தின்படி அமையாது! அடுத்தாக இந்த ஜோடி, ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் அவரது குணம், திறன், முன்னேற்றம் அமையும்’ என்ற மூட நம்பிக்கைகளையும் உடைத்தது. இந்த ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றாகப் படிப்பார்கள்... அதுவே இந்த ராசி, நட்சத்திரம் உடையவர்களுக்குப் படிப்பே வராது’ என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. அதை நம்பி, சிலர் அதீத தன்னம்பிக்கையில், ‘எல்லாம் நம்ம ஜாதகம் பார்த்துக்கும்’ என உரிய உழைப்பைக் கொடுக்காமல் இருப்பார்கள். சிலரோ, ‘என்ன பண்ணுறது, கட்டம் சரியில்ல...’ என்று தங்கள் முன்னேற்ற மின்மைக்கு ஜாதகத்தை சாக்குச் சொல்லி உழைப்பு, முனைப்பில் இருந்து விலகுவார்கள். `ஜாதகம் ஒருவரின் அறிவை தீர்மானிப்ப தில்லை’ என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்த, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அறிவார்ந்த மாணவர்கள் மற்றும் படிப்பில் சுணக்கமாக உள்ள மாணவர்கள் என 200 மாணவர்களின் ஜாதகங்கள் தொகுக்கப்பட்டு, 53 ஜோதிடர்களிடம் அவை கொடுக்கப் பட்டன. அவர்கள் ’சூப்பராக படிப்பார்கள்’, ‘சுமாராகப் படிப்பார்கள்’ என்று கணித்த ஜாதகங்கள், முரணாக இருந்தன. இவ்வாறு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தாங்கள் ஏற்படுத்தி வந்த பகுத்தறிவு விழிப்புணர்வும், பிரசாரமும் அவர்களுக்குப் பல எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் பெற்றுத்தந்தன. 2013-ம் ஆண்டு அடிப்படைவாத கொடூர்களால் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஸ்து நன்மை, தீமை... எந்த லாஜிக்கும் இல்லை! நர்லிகர், வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பேசினார். ‘`வாஸ்து என்பது வீட்டின் உள்கட்டமைப்பை அதன் சூழலுடன் இணைக்கும் விதிகளால் ஆனது. ஆனால், அதனால் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும், தீமைகள் விளையும் என்று சொல்லப்படுவதில் எந்த லாஜிக்கும் இல்லை’’ என்று விளக்கினார். வழி காட்டும் ஒளி! நர்லிகர், மாணவர்களுடன் தான் உரையாடும் சந்தர்ப்பங்களை மிகுந்த விருப்பத்துடன் உருவாக்கிக்கொண்டார். அவர்களின் கடிதங்கள், இ-மெயில்களுக்கு பதில் அளிப்பது, பள்ளி கண்காட்சிகளில் கலந்துகொண்டு அவர்களுடன் உரை யாடுவது, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உரை நிகழ்த்துவது என... எதிர்கால இந்தியாவின் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், பகுத்தறிவு வாதிகள் எனப் பலருக்கும் அவரது ஆராய்ச்சிகளும் கருத்துகளும்... வழி காட்டும் ஒளி! Vikatan Plus - 08 June 2025 - ``ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர் | discussion about astrology
  19. சட்டுப்புட்டென்று ஆர் கடைசி எண்டு சொல்லுங்கோநிறைய வேலை இருக்கு
  20. இதுதான் தலைவனுக்கு அழகு. எங்கே பார்ப்போம்.
  21. என்ன செய்வது வாதவூரன் . ....... எனக்கும் 50% கவலைதான் .......ஆனால் என்ன நான் பொங்களூருக்கத்தான் பதிந்திருந்தேன் அது வென்று விட்டது .......... ! 😂
  22. நானும் நீங்களும் தமிழர்கள் அல்லவா? ஆகவே உங்கள் மனநிலைதான் எனதும். உங்களை போலவே, நானும் நேரடியாக கண்டும், அனுபவித்ததுமான அடிப்படையில் உருவான மனநிலை இது. ஆனால் சிங்கள மக்களில் மிக பெரும்பான்மையானோருக்கு ஆமியுடன் இந்த அனுபவம் இல்லை. அவர்கள் அறிந்தது எல்லாம், அறந்தலாவ, அனுராதபுரம், புறக்கோட்டை, மத்திய வங்கி போல சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை செய்பவர்கள் புலிகள், அவர்களிடம் இருந்து சிங்கள இனத்தையும், சிங்கள நாட்டையும் காப்பாவர்கள் ஆமி. கொஞ்சம் சிங்களவர்களுக்கு ஜேவிபி காலத்தில் தமக்கு என்ன நடந்தது என்பது நினைவிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் அனுரா. உண்மையில் அவர் ஆமியை ரணவிரு என அழைக்காமல் இட இதுவும் (நாடகம் ஆடுவதும்) ஒரு காரணம். தன் தோழர்களை, சகோதரனை கொண்ட ஆமியை ரணவிரு என அழைக்க அனுர விரும்பவில்லை. எம்மை கொண்டதால் அல்ல.
  23. உக்ரேனுக்குப் பதிலடி குடுக்க செத்தகிளியிட்ட காசில்லையாம். செத்தகிளி லவ்வர்ஸ் ஆளாளுக்கு பத்துப் பவுண் அனுப்பினால் தாக்குதல் செய்யலாமாம். இவையளோட சேர்ந்து வாயாலை வடைசுடும் இந்தியனுகளும் அனுப்பினால் செத்தகிளியை காப்பாற்றலாம். செய்வார்களா?😂
  24. அதுக்கு லிவிங்ஸ்டன் ஒரு காட்டு காட்டினால்தான் உண்டு!! கோலி இன்னும் ஒரு ஐந்து ஓவர் நிண்டிருந்தால் பஞ்சாப் ஈஸியா வென்று இருக்கலாம்!!
  25. இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி வியாழக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனி ஏற்பாட்டாளர் சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுதர்சிகா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும். ஆனாலும் ஆபத்து என்று தெரிந்தும் பாவனையாளர்கள் அந்த பாவனையில் இருந்து விடுபடுவதாக தெரியவில்லை. சில பொலித்தீன்கள் ஒன்று மண்ணுள் புதையும் போது அது உக்கலடைய 1000 ஆண்டுகள் செல்கின்றன. இதனால் பல்வேறு தாக்கங்களை உயிரினங்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது. அந்தவகையில் பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அதனடிப்படையில் நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டமானது வியாழக்கிழமை (05) காலை 7.30 மணிக்கு யாழ் பொது நூலக பின் நுழைவாயில் அருகே ஆரம்பிக்கப்பட்டு யாழ் நகர் ஊடாக பிரவேசித்து நூலகத்தின் பிரதான நுழைவாயில் வரை நடைபவனி நிறைவு பெறவுள்ளது. இதில் மாணவர்கள் பொதுநல விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை வலுப்படுத்தி விழிப்புணர்வின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒத்துழைக்க வேண்டும் என்றனர். யாழில் பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான நடைபவனி நடைபெறவுள்ளது - சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் | Virakesari.lk
  26. அண்ணை, தானாகச் சென்று வாதாடி வெளில வர இருந்தவரை உள்ளுக்கை போக வைச்சிற்று அதை வைத்து அரசியல் செய்வதாக கூறுகிறார்கள்.
  27. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கவிதா பூரி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற "மக்கள் விஞ்ஞானிக்கு" 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என சியான் சேசென் போற்றப்படுகிறார். சீனாவின் முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியவரும், ராக்கெட்டுகளை உருவாக்க உதவிய ஆய்வை மேற்கொண்டவருமான சியான் சேசென், அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஏவுகணைகளையும் உருவாக்கத் தனது ஆய்வுகள் மூலம் உதவியவர். அவரது அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். ஆனால் அமெரிக்காவுக்காக பணிபுரிந்த அவர், சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முக்கியமான நபராக மாறியது எப்படி? அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து, அங்கேயே பணி புரிந்தார். அங்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவரை அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற்றியது. அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது "முக்கியமான துறைகளில்" படிப்பவர்கள் உள்பட சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்க நிர்வாகம் "திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டும்" என்று அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் சட்டவிரோத குடியேற்றக் கொள்கைக்கு மத்தியில், நியூயார்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள், விஞ்ஞானி சியான் சேசென் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. அமெரிக்கா பல தசாப்தங்களுக்கு முன்பு செய்த தவறைச் சுட்டிக் காட்டும் விதமாக இந்தச் செய்திகள் வெளியாகின. சியான் சேன்சென் போன்ற திறமையாளர்களை வரவேற்பதற்குப் பதிலாக வெளியேற்றுவதன் அபாயங்கள் ஏற்கெனவே ஒரு காலத்தில் அமெரிக்காவை பாதித்துள்ளன. அமெரிக்கா மீண்டும் தடுமாறி தவறு செய்கிறதா? சீன விஞ்ஞானி சியான் சேசென் போன்ற புத்திசாலித்தனமான நபர்களை வெளியேற்றியது, அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தவறு என்று கூறப்பட்டது. இந்நிலையில், முந்தைய கால தவறையே அமெரிக்கா மீண்டும் தொடருமா என்ற கேள்வி தற்போது எழுப்பப்படுகிறது. அறிவுத் திறனால் அமெரிக்காவில் கிடைத்த வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது திறமையின் பயனாக அவர் எம்.ஐ.டியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார் சீனாவின் ஏகாதிபத்திய வம்சம் முடிவடைந்து, அந்நாடு குடியரசாக மலரக் காத்துக் கொண்டிருந்த தருணத்தில் 1911ஆம் ஆண்டு சியான் சேசென் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்த சியான் சேசென்னின் தந்தை ஜப்பானில் பணிபுரிந்து அங்கு பெற்ற அனுபவங்கள் மற்றும் தனது அறிவாற்றலால், சீனாவின் தேசிய கல்வி முறையை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திறமை மிக்க மாணவரான சியான் சேசென், ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்தார். அது அவருக்கு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) சிறப்பு உதவித்தொகையைப் பெற உதவியது. கடந்த 1935ஆம் ஆண்டில் அவர் பாஸ்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தார். அமெரிக்காவுக்கு மெலிதான உடல்வாகு கொண்ட, கண்ணியமான நபராக வந்து சேர்ந்தார். அமெரிக்காவில் அவர், அந்நிய வெறுப்பு மற்றும் இனவாத பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கலாம் என்று வடக்கு ஜார்ஜியா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார். ஆனால், "சீனா (அடிப்படையில்) குறிப்பிடத்தக்க வழிகளில் மாறிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் நிலவியது." மேலும் அறிவுக்கு மதிப்பு கொடுத்தவர்களும் நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்று அவர் நம்புகிறார். கால்டெக் அனுபவங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1960இல் எடுக்கப்பட்ட வில்லியம் பிக்கரிங், தியோடர் வான் கர்மா மற்றும் பிராங்க் மலினாவின் புகைப்படம் எம்ஐடியில் இருந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (கால்டெக்) குடிபெயர்ந்த சியான் சேசென், அன்றைய மிகவும் செல்வாக்கு மிக்க விமானப் பொறியாளர்களில் ஒருவரான ஹங்கேரிய குடியேறி தியோடோர் வான் கர்மானிடம் படிக்கச் சென்றார். அங்கு அவர், மற்றொரு முக்கிய விஞ்ஞானியான பிராங்க் மலினாவுடன் இணைந்தார். 'சூசைட் ஸ்குவாட்' என்ற கண்டுபிடிப்பாளர்களின் சிறிய குழுவின் முக்கிய உறுப்பினராக பிராங்க் மலினா இருந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் ராக்கெட்டை உருவாக்க முயன்ற இந்தக் குழுவினரின் சில பரிசோதனைகள், ஆவியாகும் ரசாயனங்கள் மூலம் தவறாகிப் போனதால், அவர்களின் குழுவை தற்கொலைப் படை என்று அழைத்ததாக "Escape from Earth: A Secret History of the Space Rocket" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஃப்ரேசர் மெக்டொனால்ட் பிபிசியிடம் தெரிவித்தார். அவர்களின் அந்தப் பரிசோதனையில் யாரும் இறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நாள், மலினா மற்றும் அவரது குழுவின் பிற உறுப்பினர்களுடன் ஒரு சிக்கலான கணிதப் பிரச்னை பற்றிய விவாதத்தில் ஈடுபட்ட சியான், விரைவில் 'தற்கொலைப் படை' குழுவில் ஒருவராக மாறிவிட்டார். அவரும், ராக்கெட் உந்துவிசை குறித்த அடிப்படை ஆராய்ச்சியில் பங்களித்தார். அந்தக் காலகட்டத்தில், ராக்கெட் அறிவியல் என்பது "முட்டாள்கள் மற்றும் கற்பனையாளர்களின் பொருளாக" இருந்தது என்று மெக்டொனால்ட் கூறுகிறார். "ராக்கெட் அறிவியலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கணிதத்தில் விருப்பம் இருந்த பொறியாளர்களில் யாருமே அதுதான் எதிர்காலம் என்று கூறி தனது நற்பெயருக்கு ஆபத்தை விளைவித்திருக்க மாட்டார்கள்." ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன், நிலைமை துரிதகதியில் மாறியது. போர் படைப்பிரிவு 'தற்கொலைப் படை' அமெரிக்க ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது, ஜெட் உதவியுடன் கிளம்புவது தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியுதவி கிடைத்தது. குறுகிய ஓடுபாதைகளில் இருந்து விமானங்கள் புறப்பட ஏதுவாக ப்ரொப்பல்லர்கள் இணைக்கப்பட்டன. கடந்த 1943ஆம் ஆண்டில் தியோடோர் வான் கார்மனின் வழிகாட்டுதலின் கீழ் ஜெட் புராபல்ஷன் ஆய்வகத்தை (JPL) நிறுவ ராணுவ நிதியும் கிடைத்தது. சியான் சேன்சென் மற்றும் ஃபிராங்க் மலினா இருவருமே திட்டத்தில் முக்கியமானவர்களாக இருந்தனர். அப்போதைய சீன குடியரசு அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்ததால், அமெரிக்க விண்வெளித் திட்டத்தில் சீன விஞ்ஞானி முக்கியப் பங்கு வகிப்பதில் எந்தச் சிக்கலும் எழவில்லை. ரகசிய ஆயுத ஆராய்ச்சியில் பணியாற்ற பாதுகாப்பு அனுமதி பெற்ற சியானுக்கு, அமெரிக்க அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் இடம் கொடுக்கப்பட்டது. போரின் முடிவில், உலகின் முன்னணி ஜெட் உந்துவிசை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்தார். தியோடோர் வான் கார்மனுடன் ஜெர்மனிக்கு ஒரு முக்கியமான பணிக்காக அனுப்பப்பட்ட சியான் சேன்சென் அங்கு தற்காலிக லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றினார். ஜெர்மனியின் முன்னணி ராக்கெட் விஞ்ஞானியான வெர்ன்ஹர் வான் பிரவுன் உள்பட நாஜி பொறியாளர்களைச் சந்தித்துப் பேசுவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஜெர்மனியர்களுக்கு தெரிந்த அனைத்தையும் சரியாக அறிய அமெரிக்கா விரும்பியது. அந்த தசாப்தத்தின் இறுதியில், அமெரிக்காவில் சியானின் வாழ்க்கை திடீரென நிலைதடுமாறியது. அவரது வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. சர்வதேச அரசியலில் மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சியானின் அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாக போற்றப்படுகிறார் கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார். அந்தப் பின்னணியில், சீனர்கள் என்றாலே "கெட்டவர்கள்" என்று பார்க்கும் போக்கு அமெரிக்காவில் தொடங்கிவிட்டதாக கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார். "அமெரிக்காவில், சீனாவை நேசித்த காலகட்டம் முடிவுக்கு வந்தது. ஏதோ நடந்தது, திடீரென நாம் அந்நாட்டை இழிவாகப் பார்க்கத் தொடங்கி விட்டோம்," என்று வரலாற்றாசிரியர் பிபிசியிடம் கூறுகிறார். JPL-இன் புதிய இயக்குநர், தங்கள் ஆய்வகத்தில் உளவாளிகள் இருப்பதாக நம்பினார். சில ஊழியர்கள் குறித்த தனது சந்தேகங்களை எஃப்.பி.ஐ உடன் பகிர்ந்து கொண்டார். "அவர்கள் அனைவரும் சீனர்கள் அல்லது யூதர்கள் என்பதை அவர் கவனித்தார்," என்கிறார் ஃப்ரேசர் மெக்டொனால்ட். பனிப்போர் நடந்து கொண்டிருந்தது, மெக்கார்த்தி சகாப்தம் தொடங்கிய அந்த வேளை கம்யூனிச எதிர்ப்பு வீரியமடையத் தொடங்கிய காலம். இந்தக் காலகட்டத்தில்தான் எஃப்.பி.ஐ., சியான், ஃபிராங்க் மலினா மற்றும் பிறரை கம்யூனிஸ்டுகள் என்றும், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் என்றும் குற்றம் சாட்டியது. சியான் சேன்சென் செய்த தவறு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார் கடந்த 1938ஆம் ஆண்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணத்தின் அடிப்படையில் சியானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அமைந்தன. அவர் ஒரு சமூகக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை அது காட்டுகிறது. பசடேனா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டமாக அது இருக்கலாம் என்று எஃப்.பி.ஐ சந்தேகித்தது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இல்லை என்று சியான் கூறினாலும், அவர் 1938இல் பிராங்க் மலினாவுடன் இணைந்திருந்தார் என்பதை புதிய ஆராய்ச்சி உறுதி செய்தது. ஆனால் இதனால் மட்டுமே அவர் ஒரு மார்க்சியவாதி என்று கூறிவிட முடியாது. இருப்பினும், அந்த நேரத்தில் கம்யூனிஸ்டாக ஒருவர் இருப்பது இனவெறிக்கு எதிரானது என்ற எண்ணம் நிலவியது என ஃப்ரேசர் மெக்டொனால்ட் தெளிவுப்படுத்துகிறார். இந்தக் குழு, பாசிசத்தின் அச்சுறுத்தலையும், அமெரிக்காவில் இனவெறியின் பயங்கரத்தையும் முன்னிலைப்படுத்த விரும்பியதாக அவர் கூறுகிறார். பிரிவினைக்கு எதிரான பிரசாரங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் கம்யூனிஸ்ட் கூட்டங்களைப் பயன்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக உள்ளூர் பசடேனா நீச்சல் குளத்தில் மதிய வேளையில் கறுப்பினத்தவர்கள் குளித்தால், அவர்கள் பயன்படுத்திய குளத்தை, வெள்ளையர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தம் செய்வார்கள். பொமோனாவில் அமைந்திருக்கும் கலிபோர்னியா மாநில பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான சூயோயு வாங், சியான் அமெரிக்காவில் இருந்தபோது சீனாவுக்காக உளவு பார்த்ததாகவோ அல்லது உளவுத்துறை முகவராக இருந்ததற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுகிறார். இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் சியான் சேசெனின் பாதுகாப்பு அனுமதி பறிக்கப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சியான் குற்றமற்றவர் என தியோடோர் வான் உள்பட சியானின் கால்டெக் சகாக்கள் அரசுக்கு எழுதிய கடிதங்களால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த பிறகு, அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர், சியானை சீனாவுக்கு நாடு கடத்த முடிவு செய்தார். 1955ஆம் ஆண்டில், தனது மனைவி மற்றும் அமெரிக்காவில் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் சீனாவுக்கு கிளம்பிய சியான் சேன்சென், மீண்டும் ஒருபோதும் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இறுதி வரை தனது வாக்குறுதியை சியான் சேன்சென் காப்பாற்றினார். வேறொரு இலக்கை நோக்கி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1950இல் நாடு கடத்தப்படுவது தொடர்பாக நடந்த வழக்கின்போது தனது வழக்கறிஞர் கிராண்ட் கூப்பருடன் சியான் "அமெரிக்காவின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்ந்த சியான் சேன்சென், அறிவியலுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருந்தார். அவரால் இன்னும் அதிகமாகப் பங்களித்திருக்க முடியும். ஆனால், அவர் இவ்வாறு அவமதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது அவருக்கு அவமானம் மட்டுமல்ல, துரோகமும்கூட" என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தியான்யு ஃபாங் கூறுகிறார். அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு கதாநாயகனைப் போல் சியான் சேன்சென் வந்தார். ஆனால் அவர் உடனடியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அதற்குக் காரணம், சியானின் மனைவி ஒரு தேசியவாதத் தலைவரின் செல்வ மகள். அதுமட்டுமல்ல, பதவி விலகும் வரை சியான் அமெரிக்காவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். மேலும், அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான முதல்கட்ட ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியிருந்தார். கடந்த 1958இல் சியான் சேன்சென் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானபோது, ஆட்சியின் நம்பிக்கைக்கு உரியவராகவே இருந்தார். இதனால் அவர் சுத்திகரிப்பு மற்றும் கலாசாரப் புரட்சியில் இருந்து தப்பிப் பிழைத்தார். சீனாவில் அவரது வாழ்க்கை நிம்மதியாகவும் மேம்பட்டதாகவும் இருந்தது. அவர் சீனாவுக்கு வந்தபோது, அங்கு விண்வெளி அறிவியலைப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இருந்து ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோளுக்கான பணிகளை அவர் மேற்பார்வையிட்டார். பல தசாப்தங்களாக, அவர் புதிய தலைமுறை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்தார். அவரது சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஏவுகணைத் திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சியானின் சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. சியான் உதவியுடன் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் திட்டம்தான், பின்னொரு காலத்தில் அமெரிக்காவை நோக்கி ஏவப்பட்ட ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்தது என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. சியானின் "silkworm" ஏவுகணைகள் 1991 வளைகுடா போரில் அமெரிக்கர்கள் மீதும், 2016இல் ஏமனில் ஹுட்டு கிளர்ச்சியாளர்களால் யுஎஸ்எஸ் மேசன் மீதும் ஏவப்பட்டதாக ஃப்ரேசர் மெக்டொனால்ட் குறிப்பிடுகிறார். "இது காலத்தின் விசித்திரமான சுழற்சி: அமெரிக்கா வெளியேற்றிய சக்தி, திரும்ப அதையே தாக்கியது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் சாங்க்-4 2019ஆம் ஆண்டு நிலவின் வெகு தூரத்தில் கால் பதித்த முதல் செயற்கைக்கோளாக மாறியது சியான் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். அன்று பல விஷயங்களில் பின்தங்கியிருந்த சீனா, தற்போது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பூமியிலும் விண்வெளியிலும் வல்லரசாக வளர்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக சியான் இருந்தார். ஆனால் அவரது கதை அமெரிக்காவை பெருமைப்படுத்தும் ஒன்றாகவும் இருந்திருக்கக்கூடும். திறமையுள்ள ஒருவர் எங்கு இருந்தாலும் செழித்து வளர முடியும் என்பதை நிரூபித்துவிட்டார் சியான் சேன்சென். கடந்த 2019ஆம் ஆண்டில், சந்திரனின் தொலைதூரப் பகுதியில் சீனா தரையிறங்கிய இடத்திற்கு, அமெரிக்காவில் சியானுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்த விமானப் பொறியாளர் வான் கார்மனின் பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பானது, சீனாவை விண்வெளிக்கு கொண்டு செல்ல உதவியது என்று கூறப்படுகிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14km2jxlzvo
  28. அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
  29. பாலக்காடு கோட்டை மைதானம் அதிர்ந்தது
  30. உண்மை தான் பிறந்த திகதி கூட்டுத்தொகை இலக்கம் இவற்றைப் பார்க்கும் போது எண்சாத்திரத்தை மறுக்க முடியவில்லை. எப்படி என்றும் தெரியவில்லை.
  31. இவ்வளவு காலம் இழுத்துவிட்டு இறுதி போட்டியை ஏன் அவசரமாக முடிக்கின்றார்கள்? இறுதி போட்டியை ஒரு போட்டியாக இல்லாமல் மூன்றாகவோ ஐந்தாகவோ வைக்கலாமே. 😁
  32. கோசானே எழுதி விட்டார் பல விடயங்களை. மேலதிகமாக, இராணுவத்திடம் இருந்தது போன்ற பார வாகனங்கள் முதல் கொண்டு, தாங்கிகள் , பீரங்கிகளை எப்படி ஒரு தடை செய்த அமைப்பு சந்தையில் வாங்கியிருக்க முடியும்? வாங்கினாலும் எப்படி சமுத்திரங்களூடாகக் கொண்டு வந்திருக்க முடியும்? நீங்கள் புலிகள் அமைப்பின் உள் நிலைமைகள் தெரிந்த ஒருவராக இருந்தவர், இப்படியாக எங்கே பலவீனம் இருந்தது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்து, உக்ரைன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கைவிடப் பட்ட ஆயுதங்கள் சட்ட விரோத ஆயுதக் கடத்தல் காரர்களிடம் மாட்டிக் கொண்ட பின்னர் தான், புலிகளுக்கு ஆயுதங்கள் சர்வதேசச் சந்தையில் இலகுவாகக் கிடைக்க ஆரம்பித்தன என ஊகிக்கிறேன். இத்தகைய சோவியத் ஆயுதங்களை, கைவிடப் பட்ட அன்ரனோவ் சரக்கு விமானங்களில் கூலிக்கு விமானிகளை வைத்து உலகம் முழுவதும் கடத்திய ரஷ்யர் Victor Bout, அண்மையில் தான் அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். கிழக்கு, தெற்கு ஆசியாவிலும் இவருக்கு வாடிக்கையாளர்கள் இருந்திருக்கிறார்கள்.
  33. திரும்பவும் மூன்று பேர் தானா. ஆனா இம்முறை, அந்தக் கிளியுடன். எல்லாம் பிரகாசமாக இருக்கே. 5 புள்ளிகளை அள்ளுறம். எல்லா நண்டும், அமைதியாகவே இருங்க!!!!
  34. இல்லை. அப்போ இராணுவத்திடம் புலிகளை விட மேலதிகமாக இருந்தது சியாமாசெட்டி, அவ்ரோ ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராடார் கருவிகளும், ரன்வேக்களும், முக்கியமாக வெளிநாட்டு உள்நாட்டு இராணுவ கல்லூரிகளில் கிடைத்த பயிற்சியிம். இதில் பலதும் இனாமாக வேறு நாடுகள் கொடுத்தவை. இவை எதையும் வாங்கும் திறன் எந்த ஈழத்தமிழரிடமும் அப்போ இருந்ததில்லை. புலம்பெயர்ந்தோரே மிக சொற்பம் அவர்களும் கூட நிரந்தரமற்ற நிலையில்தான் இருந்தனர். அதே போல் பணம் இருந்திருந்தாலும், அதை மனமுவந்து கொடுத்திருந்தாலும் - நான் மேலே சொன்ன வளங்கள எதையுமே வெளியார் சந்தையில் வாங்க முடிந்திராது, அப்படி வாங்கி இருந்தாலும் அதை இலங்கக்கு கொண்டு வர முடிந்திராது, அப்படி கொண்டு வந்திருந்தாலும் அதை பாதுகாத்திருக்க முடியாது, அப்படியே பாதுகாத்து விட்டாலும் தனியே கேணல் சங்கரை மட்டும் வைத்து கொண்டு ஒரு விமான படையணிதை அமைத்திருக்க முடியாது. புலிகள் ஏன் கரும்புகளில் நம்பி இருக்கும் நிலை வந்தது என்பதற்கு பல புறச்சூழல் காரணிகளே முக்கிய பங்காற்றின. பணம்/மனம் இல்லை. புலிகள் கடைசிவரை ஒரு சமச்சீர் அற்ற நிலையில் இருந்து கொண்டே - ஒரு வலுசமநிலை தோற்றப்பட்டை உருவாக்கினார்கள். அதுதான் அவர்களின் பெரும் சாதனைகளில் ஒன்று. அதை அவர்களே நம்ப ஆரம்பித்தது வீழ்சியின் காரணிகளில் ஒன்று.
  35. நாளை செவ்வாய் (03 ஜூன்) எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 77) செவ்வாய் 03 ஜூன் 2:00 pm GMT அஹமதாபாத் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS மூன்று பேர் மாத்திரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் 2025 சம்பியன்ஸ் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி சம்பியன்ஸ் எனக் கணிக்கவில்லை. போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய இறுதிப் போட்டியில் ஐந்து புள்ளிகள் பெறுபவர்கள் யார்?
  36. ஏதாவது ஒரு Antivirus software கூட காரணமாக இருக்கலாம், எப்போதும் தமிழன். அதுவே தானாக புதிதாக உங்களின் கவனத்தையும் மீறி உள்ளே இறங்கியிருக்கலாம். Please check all the running process in the task manager. முன்னர் ஒரு தடவை சுவைப்பிரியனும் இப்படிச் சொல்லியிருந்ததாக ஞாபகம். Avast தான் அதன் காரணம் என்றும் ஒரு ஞாபகம்.
  37. யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on June 1, 2025 by சமர்வீரன் யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். மேற்படி நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பேர்லின் நகரில் ஹிட்லர் ஆட்சியில் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட நினைவிடத்தின் (Bebelplatz) முன்றலில் 01.06.2025 அன்று மதியம் நடைபெற்றது. “எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்” எனும் வாசகம் பதாதையில் பொறிக்கப்பட்டு, 44 ஆண்டுகளை நினைவுபடுத்தும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பால் கண்காட்சி வைக்கப்பட்டது பல்லினமக்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்தது. பிரசித்திபெற்ற நினைவிடத்தில் வித்தியாசமான முறையில் இக் காட்சிப்படுத்தல் நடைபெற்றதால் பல்லின மக்கள் அதிகம் ஆர்வத்தோடு கவனித்ததோடு, மட்டும்மல்லாமல் மேலதிகமான விளக்கங்களை பெற்றுக்கொள்ள உரையாடல்களிலும் ஈடுபட்டனர். அத்தோடு ஆர்வம் கொண்டவர்களுக்கு ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. https://www.kuriyeedu.com/?p=677349
  38. கூகிள் டிரான்சிலேட்டர் நவ் 👇 https://youtube.com/shorts/gHgpCYDUF1E?si=9eoohbiee8-ywjFD
  39. இவர் தமிழ் சார்ந்தும் புலி சார்ந்தும் கொஞ்சம் ஓவராக பாடுகிறார் அவரின் கையை பிடித்து இழுத்தார் என்று ஒரு விபச்சாரியை கண்ணகி ஆக்கினால்தான் என் தாகம் தீரும்
  40. விதைகள் எங்கு முளைத்தாலும் அதற்கான வீரியத்தை காட்ட தவறுவதில்லை.
  41. எப்படித்தான் கூட்டிக்கழிச்சு பார்த்தாலும்....அண்மைக்கால செய்திகள் இனவாத சிங்களத்திற்கு நெஞ்சில் உதைப்பது போலவே இருக்கும்.
  42. 🙏என்னை நிராகரித்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். நான் தொடருவேன்...?
  43. ஊர் மாறி பிறந்தாலும், பேர் மாறி வளர்ந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் உணர்வு, அவன் உதிரத்தில் கலந்தது தமிழின துடிப்பு, வெளியில் அவன் வேடன், உள்ளுக்குள் அவன் வேங்கை. சாலையின் ஓரத்தில் சகதியில் புரண்டவன், சாதி மதங்களால் வேதனை சுமந்தவன். ஆதிக்க சமூகத்தால் அலைந்து திரிந்தவன், அன்னை மொழியை அடி நெஞ்சில் உணர்ந்தவன். வேடன் வேடன் என்று விரட்டியடிக்கப்பட்டவன், மக்கள் விரும்பும் ஒருவனாய் வளர்ந்து நிற்பவன். பாட்டில் வறியோரின் வலியை சொன்னவன், பல்லாயிரம் மக்களின் மனங்களை கவர்ந்வன். தாங்கிடா வலிகளை தனக்குள்ளே சேர்த்தவன் வேங்கையின் வீரம்பெற்று வீதியுலா வருகின்றான். தயாளன் கனியன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.