Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    38754
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    31956
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19121
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3052
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/04/25 in all areas

  1. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது இடத்தில் நகர்ந்த @புலவர் ஐயாவுக்கும், நான்காவது இடத்திற்குச் சென்ற @செம்பாட்டான் க்கும், ஐந்தாவது இடத்தை இறுதி நாளில் எட்டிப் பிடித்த @கந்தப்பு வுக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் பல நாட்களாக முன்னணியில் நின்ற @suvy ஐயா, @செம்பாட்டான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che க்கும், பின்னர் இறுதி நிலையை பிறருக்கு பலநாட்கள் விட்டுக்கொடுக்காமல் நிற்கும் @Ahasthiyan க்கும் நன்றிகள்! யாழ்களப் போட்டி வெற்றியாளர் @நந்தன் க்கான £5 காசோலையை ஐபில் 2025 இல் இறுதி நிலையில் நிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @வீரப் பையன்26 ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @கந்தப்பு , @Eppothum Thamizhan , @vasee , @செம்பாட்டான் , @வீரப் பையன்26 போன்றோருக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய @suvy ஐயா,@ஈழப்பிரியன் ஐயா, @alvayan , @வாத்தியார் க்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.
  2. யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம் Published By: RAJEEBAN 04 JUN, 2025 | 04:33 PM A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy malay mail எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில். ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது - எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை. அது குமுழமுனையில் ஆரம்பமானது. மாரடைப்பு, உண்மையானது அமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது. நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். வலது தமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது. அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் - புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம். முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர். அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர். நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள். பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை செய்தனர். ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள். அவர்களின் வாயிலிருந்து 'மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்" என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை. அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை. எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் - கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் பிரிட்டன், அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர். சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர். இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள் - பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள் - ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன். அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல் புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர். ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு (முதியவர்) அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன். ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன். குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன். உண்மையான மகிழ்ச்சி. நான் ஒன்றை உணர்ந்தேன் - இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம். அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள். ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது. https://www.virakesari.lk/article/216581
  3. மேற்படி கொலைச் சம்பவம் நேற்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் பெரும் பாலான மக்களின் பின்னூட்டங்களில் இந்த மோசமான வன்முறை கலாச்சாரத்தை கண்டிக்காமல் நியாயப்படுத்தி எழுதி இருந்ததை காணக்கூடியமதாக இருந்தது. சிலர் குற்றசெயல் என்பதன் வீரியத்தை குறைத்து குடும்ப ஆலோசனை கருத்துகளை/ ஒருவனுக்கு ஒருவன் தமிழ் கலாச்சார பெருமைகளை தெரிவித்திருந்தனர். கணவனுக்கு துரோகம் நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சில கருத்துக்கள் வந்திருந்தன. துரோகத்தின் வலியை விட கொலை பெரிதல்ல என்று கூட கொலை செய்தவருக்கு ஆதரவான கருத்து ஒன்று வந்திருந்தது . அவற்றை வாசித்த போது எமது சமூகம் மூடப்பட்ட தலிபான் மனநிலையில் வாழ்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு திரியில் @goshan_che கூட இதையே தெரிவித்திருந்தார். நடந்தது உணர்சசி வசப்பட்ட படு மோசமான கொலை. எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம்ஆனால் இதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களை என்னெ கூறுவது? இவற்றை வாசிக்கும் சிறுவர்/ சிறுமியர் கூட இப்படியான கொலைகளை ஏற்றுக்கொள்ளும் , இதை முன்மாதிரியாக கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தாதா?
  4. அண்ணா, அறுதியாக பொய்கள் என்றோ அல்லது உண்மைகள் என்றோ எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதிகளாக நிறுவ முடியாத நம்பிக்கைகள் பல இங்கே காலம் காலமாக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நடுப்புள்ளித் தேற்றம் போன்றோ அல்லது நியூட்டனின் வகை பௌதீக விதிகள் போன்றோ இந்த நம்பிக்கைகளை நிறுவமுடியாது. இப்படியான நம்பிக்கைகளில் ஒன்று சோதிடம். கடவுள் நம்பிக்கையும் அவ்வாறானதே. இன்னும் ஏராளமான அமானுஷ்ய விடயங்களும் இப்படியே இங்கு நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. இப்படியான ஒரு விடயத்தை ஒரு ஆசிரியர் எப்படி நிறுவினார் என்று ஒரு வேடிக்கையான சம்பவம் இருக்கின்றது. நான் சிறு வயதில் இருக்கும் போது ஊரில் நடந்தது. அடுத்த பதிவில் அதை எழுதுகின்றேன். பொதுவாகவே இயற்கையில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு normal distribution ஆகவே இருக்கின்றது. முற்றிலும் எழுந்தமானமாக நூறு நூறு ஆட்களாக எடுத்து அவர்களின் பாடல் பாடும் திறமையையோ அல்லது பந்தடிக்கும் திறமையையோ கணித்தோம் என்றால், ஆச்சரியமேயில்லாமல் அவை கிட்டத்தட்ட ஒரு முடிவையே மீண்டும் மீண்டும் தரும். ஐந்து பேர்கள் நன்றாக பந்தை அடிப்பார்கள். ஐந்து பேர்களுக்கு அது சரியே வராது. ஓரளவு விளையாடக் கூடியவர்கள் என்று நடுவில் ஒரு ஐம்பது பேர்கள் இருப்பார்கள். இப்படியே தான் ஒவ்வொரு நிகழ்வின் ஒவ்வொரு தொகுதியும் இருக்கும். இதற்கும் நாள் - நட்சத்திரம் - கைரேகை போன்ற பிறப்பால் வரும் அடையாளங்கள் எவற்றுக்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. இதையே தான் நர்லிகர் அவர்களும் இன்னொரு விதமாகச் சொல்லி, அதை தரவுகளின் அடிப்படையில் நிரூபித்தும் இருக்கின்றார். என்னுடைய அனுபவங்களும், எண்ணமும் கூட இதுவேயாகவே எப்போதும் இருந்து வருகின்றது. இதில் மிகவும் ஆபத்தான ஒரு நிலையும் இருக்கின்றது. நாங்கள் பிறக்கும் கணமும், பிறப்பில் கிடைக்கும் அடையாளங்களுமே பலவற்றை ஏற்கனவே தீர்மானித்து விடுகின்றது என்றால், ஸ்மிருதிகளும், வர்ணாசிரமக் கோட்பாடுகளும், சாதிய பாகுபாடுகளும் கூட சரியென்று ஆகிவிடும் அல்லவா. இந்தப் பாகுபாடுகளை, தீண்டாமைகளை கைக்கொள்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களின் ஆதராமே ஒவ்வொருவரின் பிறப்பே அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது என்பதே. தாழ்த்தப்பட்ட ஒரு வீட்டில் பிறந்தால், அதுவே தலைவிதி அல்லது கர்மவினைப் பயன் என்றும், அதை இந்தப் பிறவியில் அப்படியே வாழ்ந்து கடந்து விட வேண்டும் என்றல்லவா அவர்கள் சொல்கின்றார்கள். இதை ஏற்றுக் கொள்ளாமல், தீண்டாமைகளை எதிர்க்கும் நாங்கள், பிறப்பால் மட்டுமே கிடைக்கும் இன்னொரு தலைவிதியை மட்டும் சரியென்று எப்படி ஏற்றுக் கொள்ளலாம்.... அண்ணா, உலகத்தை நோக்கிய என்னுடைய ஒரு கருத்தே இது. உங்களையோ அல்லது வேறு எவரையுமோ தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கும் பார்வையில் இதை நான் எழுதவில்லை.
  5. என்னை பொறுத்தமட்டில் நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும்தான் பொய் என ஐயம் திரிபற நம்புகிறேன். அது மதம். கடவுள் எனும் ஒரு சூப்பர் பவர் இருக்கிறதா இல்லையா என்றால் என்பதில் தெரியவில்லை என்பதே - ஆனால் நிச்சயமாக அப்படி ஒரு கடவுள் இருப்பின் அவரின் மார்க்கமாக, ஏஜென்சிகளாக இப்போ நாம் அறியும் எந்த மதமும் இல்லை. சகல மதங்களும் மனிதரால், மனிதரை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட செயன்முறைகளே என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. நானாக தேடிப்போவதில்லை ஆனால் கோவில்கள், சர்சுகள், மசூதிகள், விகாரைகள் போக வாய்ப்பு வரும் போது போகாமல் தவிர்ப்பதும் இல்லை. கண்மூடுவதும் உண்டு, கை கூப்புவதும் உண்டு. ஆனால் எல்லாமுமே எந்த இலயிப்பும் இல்லாமல்தான். மனதில் பிரார்தனைகள் வைப்பதும் மிக குறைவு. இப்போதெல்லாம் இல்லை என்றே சொல்லலாம். எந்த மத குருவையும் பார்த்து 1% கூட பக்தியோ, பயமோ, மரியதையோ வருவதில்லை. அதே போல் ஒரு அணுகுமுறைதான் சாத்திரம், பிதிர்கடன், குறித்த நாட்களில் மரக்கறியாய் இருப்பது, போன்றவற்றிலும். சிலதை பெற்றோர் சொல்லியபடி செய்ய வேண்டியது கடமையாகிறது. சிலது பழக்கதோசமாக தொடர்கிறது. சிலது கொஞ்சம் open minded ஆகத்தான் இருந்து பார்ப்போமே என்ற எண்ணத்தால் ஆர்வம் காட்டுவது. இதே போல் சில மூடபழக்கம் என தெரிந்தும் கைவிடாதவை உண்டு, எவர் கையாலும் நல்லெண்ணை வாங்க தயங்குவது, மாலை மங்கிய பின் பணத்தை கொடுக்காமல் விடுவது இப்படி சில. ஆனால் இவை எதையும் உண்மைதான் என முட்டு கொடுத்து என்னால் வாதாட முடியாமல் இருக்கிறது. இவை உண்மையா, புரட்டுக்களா என சொல்லியே ஆக வேண்டும் என நிர்பந்தித்தால் - புரட்டு என்பதே என் பதிலாக வரும். அநேகமாக சிறுவயதில் இருந்து என்னை condition படுத்தியதால் இவற்றை கைவிட முடியாது ஒரு ஆழ்மன பயத்தால் தொடருகிறேன் என்றே நினைக்கிறேன். ஆனால் இப்படி வாழ்வது இலகுவாக இருக்கிறது. நாம் அனைவரும் ஏற்கும் உண்மை நம் காலம் மட்டுப்பட்டது என்பதே - அதை கொஞ்சம் இலகுவாக கழித்து விட்டு போனால்தான் என்ன?
  6. முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்ததுக்கு தம்முள் சண்டையிட்ட போது சிவன் பேசாமல் ஏலத்துக்கு விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவருக்கு பாம்பழம் என்று விட்டிருக்கலாம்.😂
  7. ‘`இந்தத் தலைமுறையைவிட, எங்கள் தலைமுறை, குறைவாகவே மூடநம்பிக்கை கொண்டிருந்தது. நகரத்தில் வாழும் மக்கள், டெக்னாலஜி அணுகல் உள்ள மக்கள் அனைவரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஜோதிடத்திலும், சாமியார்கள் மீதும் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கிரகணம் என்றால், அவர்கள் வானியல் அறிஞர், ஜோதிடர் என இருவரிடமும் பேசுகிறார்கள். ஆனால், ஜோதிடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!’’ - சமீபத்தில் மறைந்த, இந்தியாவின் தலைசிறைந்த வானியற்பியல் அறிஞர் ஜயந்த் விஷ்ணு நர்லிகரின் (Jayant Vishnu Narlikar) வார்த்தைகள் இவை. அந்த வருத்தம் அவருக்கு இருந்ததால்தான், தனது அறிவியல் ஆராய்ச்சிகள் தாண்டியும், மக்களின் மூட நம்பிக்கைகளைக் களையெடுத்து பகுத்தறிவை வளர்க்கவும், அடிப்படை அறிவியல் ஊட்டவும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். அறிவியலை தனது கட்டுரைகள், புத்தகங்கள், உரைகள், மீடியாவின் மூலம் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, அப்படியே வாழ்ந்தார். ‘ஜோதிடம், திருமண ஜாதகப் பொருத்தம் எல்லாம் பொய்’ என ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு அடித்து நொறுக்கிய இவருடைய பகுத்தறிவுவாதி முகம், வலிமை வாய்ந்தது. அதனால்தான், இந்தியாவில் வானியற்பியல் மற்றும் அண்டவியல் (Cosmology) உலகில் தனக்கென ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்ற அவர், சமீபத்தில் (மே 20) தனது 87 வயதில் மறைந்தபோது, அறிஞர்கள் வட்டம் தாண்டி, பகுத்தறிவுவாதிகளும் பொதுமக்களும் பகிர்ந்துவருகின்றனர் அவருக்கான புகழஞ்சலியை. மகாராஷ்டிரா டு கேம்பிரிட்ஜ் பட்டம்! 1938-ம் வருடம் மகாராஷ்டிராவில் பிறந்த நர்லிகர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வானியலாளர் ஃபிரெட் ஹோய்ல் (Fred Hoyle)-ஐ தன் மென்டாராக ஏற்று, அவருடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் உருவாக்கிய ஸ்டடி ஸ்டேட் கோட்பாடு’ (Steady State Theory), அவர்களை உலகப் புகழ் பெற வைத்தது. அதாவது, பிரபஞ்சம் பிறந்தது, வளர்ந்தது என்றில்லாமல், எப்போதும் அது ஒரே நிலைமை மற்றும் அடர்த்தியில் இருக்கிறது’ என்றனர். ஜயந்த் நர்லிகர் தலைமைப் பண்பும், தன்னிச்சை ஆய்வுகளும்! இந்தியா திரும்பிய நர்லிகர், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் இணைந்து, கோட்பாட்டு வானியற்பியல் குழுவை தனது தலைமையில் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தினார். தொடர்ந்து, வானியல் மற்றும் வானியற்பியலுக்கான இன்டர் - யுனிவர்சிட்டி மையத்தின் (IUCAA - The Inter-University Centre for Astronomy and Astrophysics) நிறுவன இயக்குநரானார். நர்லிகர், தன்னிச்சையான பல ஆய்வுகளை மேற்கொண்டார். சார்பியல் கோட்பாடுகள், கருந்துளைகள், காந்தக் களங்கள், கோள்களின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானக் கொள்கைகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், `நேச்சர்' (Nature) உள்பட பல சிறப்பான அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. மூடநம்பிக்கைக்கு எதிராக... ஆய்வு! பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற நர்லிகர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்பு உணர்வை சமூகம் அடைய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்காக பேசியது, எழுதியதோடு நிறுத்தவில்லை அவர். ஜோதிட மூட நம்பிக்கையைத் தகர்க்க, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவு செயற்பாட்டாளரான மருத்துவர் நரேந்திர தபோல்கருடன் இணைந்து, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு, முடிவுகள் வெளியிட்டு, ஜோதிடப் பொய்களை வெளிப்படுத்தினார். ஜாதகம் பொருந்தியவர்கள் எல்லாம் சூப்பராக வாழ்கிறார்களா?! நம் இந்திய திருமணங்களில், ஜாதகப் பொருத்தம் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. உண்மையில், ஜாதகம் பார்த்து திருமணம் செய்துவைக்கப்படும் தம்பதிகள் அனைவரும் அந்தப் பொருத்தங்கள் உறுதிப்படுத்தும் சிறப்பான வாழ்வை வாழ்கிறார்களா என்று, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் சேர்ந்து பல தம்பதிகளிடம் ஆய்வு நடத்தினர். முடிவில், ஜாதகப் பொருத்தம் உள்ள தம்பதிகள், அந்தப் பொருத்தம் இல்லாத தம்பதிகள் என இரு தரப்புமே ஒரே சதவிகிதத்தில்தான் சேர்ந்து வாழ்கின்றனர் என்று தரவுகளுடன் வெளியிட்டனர். அதாவது, கணவனும் மனைவியும் இணைந்து வாழ ஜாதகப் பொருத்தம் அவசியமில்லை எனத் தரவுகளுடன் நிரூபித்தனர். அதேபோல, திருமண முறிவு ஏற்பட்ட தம்பதிகளின் ஜாதகத்தைப் பரிசோதித்து, ஜாதகப் பொருத்தம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் சற்றேறக்குறைய அதே சதவிகிதத்தில்தான் திருமண முறிவு செய்து கொள்கின்றனர் என்றும் ஆதாரபூர்வமாக இவர்கள் நிறுவினார்கள். குணம், திறன், முன்னேற்றம்... ஜாதகத்தின்படி அமையாது! அடுத்தாக இந்த ஜோடி, ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் அவரது குணம், திறன், முன்னேற்றம் அமையும்’ என்ற மூட நம்பிக்கைகளையும் உடைத்தது. இந்த ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றாகப் படிப்பார்கள்... அதுவே இந்த ராசி, நட்சத்திரம் உடையவர்களுக்குப் படிப்பே வராது’ என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. அதை நம்பி, சிலர் அதீத தன்னம்பிக்கையில், ‘எல்லாம் நம்ம ஜாதகம் பார்த்துக்கும்’ என உரிய உழைப்பைக் கொடுக்காமல் இருப்பார்கள். சிலரோ, ‘என்ன பண்ணுறது, கட்டம் சரியில்ல...’ என்று தங்கள் முன்னேற்ற மின்மைக்கு ஜாதகத்தை சாக்குச் சொல்லி உழைப்பு, முனைப்பில் இருந்து விலகுவார்கள். `ஜாதகம் ஒருவரின் அறிவை தீர்மானிப்ப தில்லை’ என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்த, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அறிவார்ந்த மாணவர்கள் மற்றும் படிப்பில் சுணக்கமாக உள்ள மாணவர்கள் என 200 மாணவர்களின் ஜாதகங்கள் தொகுக்கப்பட்டு, 53 ஜோதிடர்களிடம் அவை கொடுக்கப் பட்டன. அவர்கள் ’சூப்பராக படிப்பார்கள்’, ‘சுமாராகப் படிப்பார்கள்’ என்று கணித்த ஜாதகங்கள், முரணாக இருந்தன. இவ்வாறு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தாங்கள் ஏற்படுத்தி வந்த பகுத்தறிவு விழிப்புணர்வும், பிரசாரமும் அவர்களுக்குப் பல எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் பெற்றுத்தந்தன. 2013-ம் ஆண்டு அடிப்படைவாத கொடூர்களால் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஸ்து நன்மை, தீமை... எந்த லாஜிக்கும் இல்லை! நர்லிகர், வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பேசினார். ‘`வாஸ்து என்பது வீட்டின் உள்கட்டமைப்பை அதன் சூழலுடன் இணைக்கும் விதிகளால் ஆனது. ஆனால், அதனால் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும், தீமைகள் விளையும் என்று சொல்லப்படுவதில் எந்த லாஜிக்கும் இல்லை’’ என்று விளக்கினார். வழி காட்டும் ஒளி! நர்லிகர், மாணவர்களுடன் தான் உரையாடும் சந்தர்ப்பங்களை மிகுந்த விருப்பத்துடன் உருவாக்கிக்கொண்டார். அவர்களின் கடிதங்கள், இ-மெயில்களுக்கு பதில் அளிப்பது, பள்ளி கண்காட்சிகளில் கலந்துகொண்டு அவர்களுடன் உரை யாடுவது, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உரை நிகழ்த்துவது என... எதிர்கால இந்தியாவின் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், பகுத்தறிவு வாதிகள் எனப் பலருக்கும் அவரது ஆராய்ச்சிகளும் கருத்துகளும்... வழி காட்டும் ஒளி! Vikatan Plus - 08 June 2025 - ``ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர் | discussion about astrology
  8. பாடப்புத்தக அறிவை விட சமூக அறிவூட்டல் வேண்டும் என நினைக்கிறேன். ஒத்துவரவில்லையா, கணவன் மீதோ மனைவி மீதோ சந்தேகமா நேரடியாகவே இருவரும் பேசி இன்ன காரணத்திற்காக உன்னைப் பிரிகிறேன் என்று தெளிவுபடுத்தி விவாகரத்து வாங்கி புதிய வாழ்க்கையை தொடங்கலாம். கொலையோ தற்கொலையோ தீர்வாகாது.
  9. "செவ்வாய் தோஷம்" என்று திருமணங்களைத் தாமதமாக்குதல், அல்லது சாதகத்தை முன்னிலைப் படுத்தி வெறும் பயலுக்கு பெண்ணைக் கட்டிக் கொடுத்தல், இது போன்ற துன்பகரமான பின் விளைவுகளும் இருக்கின்றன. இவற்றைக் கடந்து போகாமல், ஏறி மிதித்து விட வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து!
  10. இதை ஒத்த இன்னொரு சம்பவத்துக்கான எம்மவர்களின் பின்னூட்டங்களும், செய்தியை உள்வாங்கிய விதமும் எனக்கும் அண்மையில் கவலையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு தமிழ் இளைஞன் (21 வயது என நினைக்கின்றேன்), நீரில் மூழ்கி இறந்து விட்டார். அந்த செய்தியைக் கேட்டவுடன், அவரது காதலியும் தற்கொலை செய்துவிட்டார். எம்மவர்களின் பின்னூட்டங்களில் 90 சதவீதமானவை, அப் பெண்ணை மிகவும் பாராட்டியும், இது தான் உண்மையான காதல் , காவியக் காதல், புனித காதல், என்றெல்லாம் மெய்சிலிர்த்து இருந்தனர். தாலிபானிசம் என்பது கொலைகளை மட்டுமல்ல, தற்கொலைகளையும் ஆதரிக்கும் (தற்கொடைகளை அல்ல). இப்படியான சமூகத்தில் போலி மதிப்பீடுகளின் மூலம் தான் ஒருவரை எடை போடுகின்றனர்.
  11. எண் சோதிடம் பற்றி பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிலும் இந்தியர்கள் / தமிழர்கள் / இந்துக்கள் அதிகம் எண் சோதிடத்தை நம்புகின்றனர். உண்மையில் எனக்கு ஆச்சரியம் தரும் விடயமும் இதுதான். இவர்களால் எவ்வாறு இதனை நம்ப முடிகின்றது என. ஏனெனில் எண் சோதிடம், நாம் பிறந்த திகதியின், மாதத்தின்,ஆண்டின் அடிப்படையில் கணிக்கப்படுவது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் காலண்டரின் அடிப்படையில் இது கணிக்கப்படுகின்றது. நாம் இன்று பயன்படுத்தும் இந்த காலண்டர் Gregorian Calendar ஆகும். இது 1582 இல் போப்பாண்டவர் Gregory XIII இனால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆரம்பத்தில் ஐரோப்பியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட காலண்டர். இவ்வாறான ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய (கத்தோலிக்கர்கள்) முக்கிய தலைவர் ஒருவரால், அதுவும் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் தான் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படுவது எப்படி சரியாகும்? ஒரு இந்துவோ, ஒரு சைவரோ,ஒரு பெளத்தரோ, ஒரு நாத்திகரோ, ஒரு ஆத்திகரோ இதனை எப்படி நம்புகின்றனர்? இவர்கள் தம் காலண்டரின் அடிப்படையில் அல்லவா எண் சாத்திரத்தை கணிக்க வேண்டும்? உதாரணமாக இந்து ஒருவர், இந்துக் காலண்டரின் அடிப்படையில் அமைந்த திகதியை அல்லவா, கணிப்பீட்டுக்கான திகதியாக கொள்ள வேண்டும்? நான் எண் சாத்திரத்தை நம்புகின்ற சக சைவர்களை நோக்கி கேட்கும் கேள்வி "நீங்கள் இந்து மதம் சார்ந்த சாஸ்திரத்தையும் நம்பிக் கொண்டு எவ்வாறு கத்தோலிக்க மதத்தை சார்ந்த காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படும் எண் சாத்திரத்தையும் நம்புகின்றீற்கள் என. யாராவது இதற்கு பதில் தர முடியுமா?
  12. இதில் தாங்கள் கல்வி சமூகம் என்று வேறு சொல்லி கொள்வது.
  13. ஒருவிடயம் உண்மையாக இருந்தால் அது நிரூபிக்கப்பட வேண்டும். ஒரே பிறப்பு எண்ணைக் கொண்ட பத்தாயிரம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் குறைந்தபட்சம் 75வீதம் - 7500 பேராவது தமது திகதி எண்ணுக்குரிய ஒரே தன்மையான வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும். 9 எண்கள் மட்டுமே உள்ளதால் இது மிகவும் இலகுவானது இதில் பிறந்த திகதி எண்ணுடன் கூட்டெண்ணும் ஒரே மாதிரியானவர்கள் 1 வீதம் இருந்தால்கூட 100 பேர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். திகதி எண், கூட்டெண், பெயர் ஆகிய மூன்றும் பொருத்தமான 100 நபர்களைக் கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையை ஆராய வேண்டும். இவ்வாறு யாராவது செய்திருக்கிறார்களா ? ஒவ்வொரு எண்ணுக்கும் பொதுப் பலன்கள் கூறும்போது பணக்காரன் ஆகுவார், உயர் பதவியில் இருப்பார், பிரபலமானவராக இருப்பார், கடுமையாக உழைத்து முன்னேறுவார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கும். ஏழையாக இருப்பார், வாழ்க்கை முழுவதும் தோல்வியடைவார், முட்டாளாக இருப்பார் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்காது. ஒருவரது வாழ்வில் பல ஆயிரம் நிகழ்வுகள் நடந்திருக்கும். பலன்களை வாசிக்கும் ஒருவர் தன்னோடு தொடர்புடைய நிகழ்வுகள் சில ஒத்துப் போகிறது என்றால் மீதியான நிகழ்வுகளைப் புறம்தள்ளி அதனை நம்ப ஆரம்பித்து விடுவார். எண்ணுக்கேற்றவாறு பெயரை வைத்துவிட்டால் எல்னோரும் வாழ்வில் வெற்றியடைந்துவிடுவார்களே. நிலமை அப்படி அல்ல. தெற்கசியாவை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்கள் அடக்குமுறைக்குள்ளும் வறுமைக் கோட்டுக்குக் கீழும், துன்பத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.
  14. அணியின் விபரங்கள், மைதானங்கள் போன்ற தரவுகள் இருப்பதால் கணிப்புகள் சிலவேளை வேலை செய்யும். ஆனால் இறுதிக்கேள்விகள் @வீரப் பையன்26 சொல்வது போல “குண்டக்க மண்டக்க” கேள்விகள்தான்🤣
  15. உங்கள் மீம்ஸில் இருக்கும் முருகன் பிரான்ஸ் நாட்டு குடிமகனுக்குத்தான் நன்றி சொல்லவேணும், கனடாவுக்கு அல்ல.
  16. இன்றும் கூட பேச்சுவார்தை மூலம் தமிழ் ஈழம் அடைந்து விடலாம் என்ற புதிய நம்பிக்கை எனக்கு பிறக்கிறது. எமது தரப்பில் ஒரே ஆள் மட்டும் போவார். சிங்களவன் எத்தனை குழுவை அனுப்பினாலும் - ஒவ்வொரு குழுவாக மண்டைகாய வைத்து முல்லேரியாவுக்கு அனுப்புவார் தமிழர் பிரதிநிதி. ஈற்றில் சிங்களவனுக்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்ப ஆள் இராது. அவனாகவே தமிழ் ஈழம் அறிவிப்பான்.
  17. சாய் சுதர்சன் . ......... ! 😂
  18. இருவரின் வாழ்வும் தொலைந்தது. எமது சமூகத்தில் பெண் ஒழுக்கமீறலில் ஈடுபடக்கூடாது. ஆண் ஈடுபட்டால் பெரிதுபடுத்தமாட்டார்கள்!
  19. நன்றி கிருபன். பங்குனி 7ம் திகதி இந்தத் திரியைத் திறந்ததில் இருந்து, இன்றுவரை சிறப்பாக வழிநடத்திச் சென்று, சிறப்புற முடித்து வைத்தமைக்கு மிக்க நன்றி. மூன்று மாதங்கள் கிருபன். எப்படித்தான் பொறுமையாக இருந்தீர்களோ தெரியவில்லை.
  20. கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 286/6 11 பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) KKR 95 @செம்பாட்டான் மாத்திரம் சரியாகக் கணித்துள்ளார். மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sai Sudharsan (GT) Runs Highest Score Average 2025-2025 759 108* 54.21 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sai Sudharsan (GT) Runs Highest Score Average 2025-2025 759 108* 54.21 மூன்று பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Prasidh Krishna (GT) Wickets Best Performance Average 2025-2025 25 4/41 19.52 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Prasidh Krishna (GT) Wickets Best Performance Average 2025-2025 25 4/41 19.52 மூன்று பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் ஐ முந்த ஒருவராலும் முடியாது போலிருக்கின்றது!
  21. அதிர்ஷ்ட விஞ்ஞாம். இலங்கையில் வேலனையில். சிவராசா ஒஎன்றுஒருவர் இருந்தவர் அவரிடம் நான் சோதிடம் கேட்டு உள்ளேன். மற்றும் நவலார் றேட். யாழ்ப்பாணதில். கனகரத்தினம். எனறு ஒரு சோதிடருமிருந்தவர். 1,..5,..6,.9,..தான் நல்ல எண்கள் மற்ற எண்களில் பிறந்தவர்கள். இந்த எண்களில் தான் பெயர் வைக்க வேண்டும் புத்தகம் இணையத்தில் வாசிக்கலாம் குறிப்பு,...நல்லாகப் படித்தால் சோதிடம் பார்த்து உழைக்க முடியும் 🤣🤣
  22. ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் விராட் கோலி நிதானமாக 43 ஓட்டங்களை எடுத்தார். மற்றையவர்கள் நிலைத்து ஆடாவிட்டாலும் கமியோ ஆட்டங்கள் மூலம் 15-25 ஓட்டங்களை எடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்களை எடுக்க உதவினர். பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக அடித்தாடினாலும், குருனல் பாண்டியாவின் இறுக்கமான பந்து வீச்சாலும், ஷ்ரேயஸ் ஐயர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்த காரணத்தாலும் ஜொஷ் இங்கிலிஸின் விக்கெட் பறிபோன பின்னர் வந்த வீரர்களில் ஷஷாங் சிங்கின் புயல்வேக 61 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் பங்களிக்காததாலும், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டி ஐபிஎல் 2025 க்கான சம்பியனாகியது! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் என சரியாக கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா ஐந்து புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: குறிப்பு: கேள்விகள் 78) இலிருந்து 90) வரையான புள்ளிவிபரப் பதில்களின் பின்னரே யாழ்கள போட்டியின் வெற்றியாளார் தீர்மானிக்கப்படுவார்!
  23. ஐயா, நீங்கள் எந்த மொழியில் எழுதுகின்றீர்கள் என சொல்ல முடியுமா? அல்லது, நீங்கள் மர்ம மொழியில் எழுதிய பின் தமிழில் பொழிப்புரை யை சுருக்கமாகவேனும் தர முடியுமா? நான் ஒரு பாமரன் எனக்கு மண்டை காயுது ஐயா கருணை காட்டுங்கள்
  24. இருவருக்கும் ஒத்து வரவில்லை கணவனை விட காதலன் ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்ணைக் கவர்ந்து விட்டார் . இருவரும் பிரிந்து வாழ்வதுதான்இந்தப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக அமையும்.மேலும் இருவருக்கும் வேறுபிள்ளைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கொடுரமான கொலையின் மூலம் சாதித்தது என்ன இரண்டு உயிர்கள் அழிந்தத மட்டுமல்ல கொலை செய்தவரின் வாழ்க்கையும் அழிந்து விட்டது.அந்தப் பெண்ணின் காதலன் போட்டோக்களை அனுப்பியதும் மிகவும் தவறான செயல்.
  25. 👇"மருத்துவ சோதிடம் - Medical Astrology " என்ற துறையில் முனைவர் பட்டம் பெற்றதாக இவர் போட்டிருக்கிறார். ஆனால் "மருத்துவ சோதிடம்" என்ற துறையே மருத்துவத்திலோ, விஞ்ஞானத்திலோ ஒரு துறையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை (இப்படி செயற்கை நுண்ணறிவு சொல்கிறது). செயற்கை நுண்ணறிவு இப்படிச் சொல்லாமலே, இது கஞ்சா கப்சா என்று முனைவர் பட்ட ஆய்வு பற்றிப் பரிச்சயம் உள்ளோர் எவரும் உடனே கண்டு பிடித்து விடுவர். இதெல்லாம் எடு கோள் எடுத்து ஆராய இயலாத விடயம். நீங்கள் குறிப்பிட்ட பல்கலைகள் எந்த சோதிடருக்காவது முனைவர் பட்டம் வழங்கியிருக்கிறதாமா? "தமிழர் வாழ்வில் சோதிடத்தின் பங்கு" என்று ஒருவர் சமூகவியல் ஆய்வு செய்தால் , அது "சோதிடத்தில் முனைவர் பட்டம்" என்று கொள்ளப் பட வும் முடியாது. "சமூகவியல் முனைவர் பட்டம்" என்று தான் எடுத்துக் கொள்ளப் படும். சுருக்கமாக, சோதிடர் ஒருவர் தனக்கு சோதிடத்தில் PhD இருக்கிறது என்று சொன்னால், அதை "permanent head damage" 😎என்று எடுத்துக் கொண்டு நகர்ந்து விடலாம்!
  26. அவன் நினைத்தானா ....... ! 😍
  27. இப்போது வடக்கில் எங்கு(நீண்ட தூரங்களில்) ஆபத்தான நிலையில் நோயாளிகள் இருந்தாலும் யாழ் போதனா வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள். நீண்டகால நோக்கில் மாங்குளம் பகுதியில் சகல வசதிகளுடன் மற்றும் பிரிவுகளுடன் கூடிய வடமாகாணத்துக்கான பெரிய ஒரு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். இது வன்னிப்பிரதேச அபிவிருத்தியின் அடிநாதமாக இருக்கும். இது எதிர்கால யாழ்ப்பாணத்திற்குள்ளே மக்களின் வாழ்விட நெருக்கடிகளை குறைக்கலாம் என்பது எனது கருத்து. அத்தோடு காலநிலை மாற்றங்களால்(துருவப்பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடல்மட்டம் உயரும்போது) யாழ்ப்பாணம் கடலால் மூழ்கடிக்கப்படும்போது எமக்கு கைகொடுக்கும்.
  28. 2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது கடந்த 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம் பிரிக்கபட்டு தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ். பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!
  29. 200% என் ரத்தமையா நீ.. இந்த எனது நிலைப்பாட்டால் தானே என்னவோ மூத்தமகன் முழு விஞ்ஞானி இளையவன் முழு மெய்ஞானி 😄 மக்களுக்கும் அதே. நீயே தேடு. படி அனுபவி கண்டுகொள். ஆனால் ஒரு மதத்தை விட இன்னொன்று சிறந்தது என்று சொன்னால் கோபம் வரும். உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று தான் பதில் சொல்லப்படும்.
  30. 2025 ஐபிஎல் தொடரில் இலங்கை வீரருக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்! ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கிண்ணத்தை வென்றுள்ளது. அதனைதொடர்ந்து, நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், மிகசிறந்த பிடியெடுப்புக்கான விருதை சன்ரைஸஸ் ஐதராபாத் அணியில் விளையாடிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார். விருது ஐபிஎலில் இலங்கை வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தமை பாராட்டுக்களுடன் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. அதன்படி, ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிக சிறந்த பிடியெடுப்பு என பேசப்பட்டு வருகின்றதுடன், அதற்கு இறுதி விருது வழங்கும் விழாவின் போது அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. விருது வென்றவர்களின் முழு பட்டியல்: சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: சூர்யகுமார் யாதவ் செம்மஞ்சள் தொப்பி வென்றவர்(Orange Cap): சாய் சுதர்சன் (759 ஓட்டங்கள்) தொடரின் சிறந்த பிடிப்பு (கேட்ச்) : கமிந்து மெண்டிஸ் ஊதா தொப்பி வென்றவர்(Purple Cap): பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்டுகள்) ஃபேர்பிளே விருது(Fairplay Award): சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தொடரின் வளர்ந்து வரும் வீரர்: சாய் சுதர்சன் https://ibctamil.com/article/catch-of-the-season-ipl-2025-kamindu-mendis-1749020194#google_vignette @கிருபன்அண்ணை இன்னும் இரு கேள்விகளை அடுத்த ஆண்டு சேர்க்கலாமா?
  31. உண்மையில் அக்கறை கொண்டு தான் உங்கள் கேள்வியும் என்ற அடிப்படையில். ஆனால், இதை ஓரளவு விபரம் இல்லாமல் அறிவது கடினம், ஆயினும், இயன்ற அளவு சுருக்கி விளக்கம். முதலில் உங்களுக்கு treaty என்றால் என்ன என்பதற்கு உங்களுக்கு அடிப்படையான புரிவு இருக்க வேண்டும் மிகவும் சுருக்கமாக, அடிப்படையாக, treaty என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளுக்கு இடையில் செய்யப்படும் ஒப்பந்தம். ஒப்பந்தம் அமுலுக்கு வரும் நேரத்தில் இருந்து, குறித்த காலம் வரையுள்ள எதிர்காலத்தில் (treaty காலாவதி ஆகும் வரையும். காலாவதி இல்லாததும் இருக்கிறது) கட்டாயமாக, துல்லியமாக நடக்க அல்லது செய்யப்பட வேண்டிய விடயத்தையும், அதனுடன் சம்பந்த்ப்பட்ட அனைத்து விபரங்கள், செயற்பாடுகள் போன்றவற்றை ஆவணமாக உள்ளடக்கியது (சர்வதேச சட்ட வலுவுள்ளது). அரசுகளுக்கு இடையில் செய்யப்படுவதால், இதில் அரசுகளுக்கு சிறப்புரிமை, ஏகோபித்த உரிமை (உ.ம். காலவதியாக முதல் விலத்துவது, அப்படி விலத்துவதற்கு இடம் இருந்தால்). இந்த treaty இல் மிக முக்கியமானது, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பது. (அதை, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதை, ratification என்று ஆங்கிலத்தில் அழைப்பது). ஒவ்வொரு அரசுக்கும், அதன் தமையை பொறுத்து, இந்த முழு அரசும் ஏற்றுக்கொள்ளும் ( ratification) முறை வேறுபாடும். மேற்கில், பாராளுமன்றம் அல்லது அதை ஒத்த அரசாங்க அவையால் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்டுவது முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதாகும. (UK) போல முடியும் அரசில் ஒரு பகுதியாக இருந்தால், அதுவும் ஏற்றுக்கொள்ளவேண்டும்; இது இப்பொது சம்பிரதாய ஏற்பாடு. அப்படி முழு அரசாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒப்பந்தங்கள் treaty அல்ல. இது (treaty) எவ்வாறு அரசுகளுக்கு இடையில் வந்தது என்பதற்கே தனி வரலாறு இருக்கிறது. ஒரு காலம் இருந்தது treaty ஐ ஒரு அரசு (அல்லது அரசுகள்) நிறைவேற்றவில்லை என்றால், வலோற்கராமாக நிறைவேற்ற படைபலத்தை மற்ற அரசு அல்லது அரசுக்கள் பிரோயோகிக்கலாம் என்று. (இப்பொது treaty ஐ நிறைவேற்ற படைபலம் பாவிப்பது மிக அரிது ஆயினும், ஏனெனில் சர்தேச சட்டம் மற்றும் UN தடுப்பதால். ஆனால் வெளிப்படையாக நடப்பது உக்கிரைன் இல், அதன் முன் நடந்தது இராக்கில் மேற்கால், நேட்டோ ஆல் 2003 இல். இரண்டு சந்தர்ப்பத்திலும் வேறு முக்கிய நோக்கங்கள் இருந்தாலும்.) இனி சொன்ன விடயத்துக்கு அல்லது நீங்கள் கேட்ட விடயத்துக்கு. வரலாற்று நூலில் சொல்லப்பட்டு இருக்கும் 1991 ஆம் ஆண்டு அளவில், மற்றும் அதுக்கு முதல் இருந்த அணுஆயுத ஒப்பந்தங்களை (treaty). அந்த நூல்களில் அவற்றை பற்றி சொல்லப்பட்டு இருப்பதை கொண்டு, இப்போது இருக்கும் அணுஆயுத ஒப்பந்தங்களுடன் (treaty) ஒப்பிட முடியாது, கூடாது என்பதே சொல்லியது. 1. ஒரு ஒப்பந்தத்தை (treaty) வரலாற்று நூலில் முழுமையாக சொல்ல முடியாது. 2. அப்படி வரலாற்று நூலில் சொல்லப்பட்ட இருக்கும் அணுஆயுதா ஒப்பந்தங்களை பற்றி வரலாற்று பார்வை, நியாயாதிக்கமே தவிர, அந்த ஒப்பந்தங்களின் (சட்ட பூர்வ) இறுக்க தன்மை பற்றி அல்ல. 3. அவை 1991 காலப்பகுதி ஒப்பந்தங்கள் (அநேகமாக 1991 க்கு முதல் அமுலுக்கு வந்து இருக்கும்), அவை காலாவதி ஆகி விட்டன 4. இவற்றின் அடிப்படையில் இப்போதைய அணுஆயுத ஒப்பந்தங்கள் (treaty) பற்றி சொல்ல முடியாது, கூடாது 5. ஏனெனில் தொழில்நுட்பம், பொருளாதாரம், பூகோள அரசியல் போன்றவை பெருமாற்றம் கண்டுவிட்டது. இதனால் தான் ஒவொரு குறிப்பிட்ட காலத்துக்கு (பொதுவாக 10 வருடங்களுக்கு) அணுஆயுத ஒப்பந்தம் (treaty). பின்பு புதிய ஒப்பந்தம் அல்லாதது முந்தைய ஒப்பந்த மீட்கப்பட்டு காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு நீடிக்கப்படுவது. சிலவேளைகளில், ஒப்பந்தங்கள் அமுலில் இருக்கும் போதே திருத்தங்கள், மாற்றங்கள், உ.ம். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி (உ.ம். ஆக அணுஆயுதம் மறைக்கப்படுவதை) மறைப்பதை சாத்தியம் ஆகிவிட்டது என்பதால். இன்னொரு உதாரணம், புதிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் மரபு வழி ஏவுகணையும், அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் (treaty) வரும் அணு ஆயுத ஏவுகணைகளும் உ.ம் தூரம், வீச்சால் குறுக்கிட்டால், அவற்றை வேறுபடுத்துவதற்கு. வேறு உதாரணமாக, ஒரு அரசு, மற்ற அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை உளவு மூலம் சந்தேகித்து அல்லது உறுதிப்படுத்தி, நேரடியாக சரிபார்க்கும் முறையை மாற்றுவது அல்லது நேரடி சரிபார்த்தலுக்கு மற்ற அரசுக்கு கொடுக்க வேண்டிய அறிவுறுத்தல் அவகாசத்தை (notice) குறைப்பது. இது தன மாற்றம் என்பதை குறித்து சொல்லமுடியாது. 6. 1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள் அந்த நேரத்துக்கு சரி. 7. அவற்றை (1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள்) வரலாறு நூல்கள் வழியாக அறிந்து, இப்போதைய ஒப்பந்தங்களுடம் ஒப்பிடுவது மிகவும் தவறான முறை, உண்மையில் செய்யக் கூடாது. இதையே சொன்னது. ஆனால், இது வெளிப்படை. இதுக்கு பின்னணியாவது - எல்லா அரசுகள் எப்போதுமே கபடத்தனம் கொண்டு இருப்பது. வரலரசுகளுக்கு, அணுஆயுத வல்லரசுகளுக்கு எப்போதுமே பாதுகாப்பு போதாது. அவற்றின் அடிப்படை பார்வை அவற்றின் இருப்பை தக்கவைகப்பது எப்போதுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பது . எனவே எந்த வல்லரசும் எவ்வளவு ஏமாற்ற முடியுமோ அந்த அளவுக்கு எத்தனிக்கும். அணு ஆயுதத்தில் இருப்பை அடகுவைத்தே ஒப்பந்தம் (treaty) செய்வது. எனவே காற்றுபுக முடியாத இறுக்கமாக ஒப்பந்தம் இருக்க வேண்டும். முக்கியமாக நிறைவேற்றுவது (அணுஆயுதம், மற்றும் அதன் வழங்கல் அமைப்பை எண்ணிக்கை, வினைத்திறன் போன்றவற்றை சரிபார்ப்பது அல்லத் குறைப்பது. ஏனெனில் ஒரு அரசு குறைத்து, மற்ற அரசு அதே அளவு குறைக்கவில்லை என்றால், குறைத்த அரசின் பயம் இன்னும் கூடும்) காற்றுப்புகமுடியாத தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
  32. 🤣............ பல வருடங்களின் முன் இங்கு அமெரிக்காவில் ஒரு நண்பனின் வீட்டில் அறுவைச் சிகிச்சை மூலம் அவர்களது குழந்தையின் பிரசவம் நடைபெற வேண்டி வந்தால், அது அடுத்த 17ம் திகதி என்று மருத்துவரால் ஒரு நாள் குறிப்பிடப்பட்டது. அவர்கள் 17 வேண்டவே வேண்டாம் என்றும், 18ம் திகதி என்று மாற்ற முடியுமா என்றும் கேட்டார்கள். அந்தப் பிள்ளை வளர்ந்து இன்று அமோகமாக இருக்கின்றது. எனக்கும் ஒரு மகள் போலவே. ஆனால் பிறந்த திகதி 17, 18, 19,........ இதில் எது என்று எனக்கு ஞாபகமில்லை. பெற்றோர்களினதும், எங்கள் எல்லோரினதும் அன்புடனும், ஆசீர்வாதத்துடனும் மகள் என்றும் நல்லாவே இருப்பார். எம்ஜிஆர் 17ம் திகதி பிறக்காமல், 18ம் திகதி பிறந்திருந்தால் இன்னும் அமோகமாக வாழ்ந்து முடித்திருப்பாரோ.................😜. தமிழில் மிக இலகுவான, தரமான அறிவியல் கட்டுரைகளை எழுதியவர் என்றால் அது திரு. என். ராமதுரை அவர்கள். 2018ம் ஆண்டில் மறைந்தார். 'தினமணிசுடர்' ஆசிரியராக இருந்தார். அவருடைய இணைய தளம் இன்றும் இயங்குகின்றது: https://www.ariviyal.in/ வானவியல் சம்பந்தமாகவும் பல எளிமையான கட்டுரைகள் அவருடைய தளத்தில் இருக்கின்றது. உதாரணமாக சனிப்பெயர்ச்சி பற்றிய ஒரு கட்டுரை. ராமதுரை அவர்கள் மிகவும் தன்மையான ஒரு மனிதர் போல. அவர் தடாலடியாக எதையும் நிராகரிக்கவில்லை, ஆனால் சோதிடம் ஒரு அறிவியல் அல்ல. அதை நம்புவதும், நம்பாததும் உங்களின் தனிப்பட்ட இஷ்டம் என்று கேள்வி - பதில் பகுதிகளில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் முன்னரே எனக்கு இவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை. பின்னர் சுத்தமாகவே இவை மனித மனங்களின் அடியில் என்றும் தங்கியிருக்கும் அச்சங்களின் ஒரு வகையான வெளிப்பாடுகள் என்று தான் தோன்றுகின்றது. திருக்கோணேஸ்வரர் கோவிலின் கீழே நின்று முகம் பார்த்து பலன் சொல்பவர்களைப் பற்றிய என் அனுபவத்தை கடந்த வருடம் இலங்கை போய் வந்து இங்கு களத்தில் எழுதியிருந்தேன். மனிதர்களுக்கு என்றே சில பொதுவான குணங்கள் இருக்கின்றன போல. அவற்றை இந்த சோதிடர்கள், ஒரு அனுபவமுள்ள விற்பனைப் பிரதிநிதி போல, நம்பத்தகுந்த வகைகளில் சொல்லுகின்றார்கள், எழுதுகின்றார்கள் போல.
  33. @நந்தன் கூகிள் ஷீற்றில் பதில்களை தெரிவு செய்ய முக்காலமும் தெரிந்த முனிவர் ஒருவரின் சிஷ்யை உதவியதாகத் தகவல்😜 நீங்களும் சட்ஜீபிடியை விட்டுவிட்டு கூகிள் ஷீற்றைப் பாவித்திருக்கலாம்!
  34. இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் சோதிடம் கேட்டு இந்திய இலங்கை மக்கள் தங்களுக்கு என்று உயர்ந்த வாழ்க்கையை அமைத்து கொண்டனர். சோதிடம் கேட்காத இதர மக்கள் பரதேசிகளாக வாழ்கின்றார்கள்.
  35. சட்டுப்புட்டென்று ஆர் கடைசி எண்டு சொல்லுங்கோநிறைய வேலை இருக்கு
  36. எங்களின் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு மட்டுமே போதுமானது, அண்ணா. வேறு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நாங்கள் சமாளித்திருப்போம். இன்று கூட அது தான் நிலை. ஆனால் இந்திய மத்திய அரசு என்றும் அப்படியான ஒரு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்பவில்லை. எங்களின் நிலை மட்டும் இல்லை, காசாவில் பாலஸ்தீன மக்களின் நிலையைப் பாருங்கள், அண்ணா. நேற்று நிவாரணம் பெற வரிசையில் நின்ற அந்த மக்கள் வரிசையை மீறி விட்டார்கள் என்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முதல் நாளும் அந்த மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அங்கு மருத்துவமனை வாசலிலேயே அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். உலகமும், அராபியர்களும் பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்து இதைத் தடுக்க முடியாதா? மணிப்பூரிலும் இதே நிலை தான். ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று இருக்கும் பெரும் தேசங்களில் எல்லாம் இந்தக் கொடுமைகள் தினமும் நடந்து கொண்டேயிருக்கின்றன. வெகு சில செய்திகளும், நிகழ்வுகளுமே வெளியே தெரியவருகின்றன. ஆதிக்கங்களின் அடக்குமுறைகளுக்குள் எத்தனையோ மக்கள் திரள்கள் தங்களின் அடையாளங்களை இழந்து வாழ்ந்து மடிகின்றார்கள். ஆனாலும் இவற்றில் சில மக்கள் திரள்கள் பெரும் இழப்புகள் தங்களுக்கு வரும் என்று தெரிந்தும் முடிந்தவரை ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். உலகம் ஒரு முள்ளிவாய்க்காலையோ அல்லது ஒரு காசாவையோ மட்டும் கண்டுவிடவில்லை. இவை திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன. உக்ரேனுக்கு தற்காலிகமாகவேனும் உதவிகள் கிடைப்பது அந்த உக்ரேனிய மக்களுக்கு கிடைத்த ஒரு கொடை. என்ன தான் உதவிகள் கிடைத்தாலும் களத்தில் போராடுவதும், இழப்பதும் அந்த மக்கள் மட்டும் தானே, உதவும் உலகம் எதையும் இழக்கவில்லை. கொடுத்த உதவிக்கு கணக்கு எழுதி, அவர்களின் வளங்களையல்லவா ஈடாகக் கேட்கின்றது இந்த உலகம். இந்த உலகில் எந்த ஒடுக்கப்படும் மக்கள் திரளுக்கும் ஒரு தார்மீக ஆதரவு கூட காட்ட முடியாவிட்டால், நான் கடந்து வந்த பாதைதான் என்ன................. இந்த தாக்குதல் நடப்பதற்கு முதல் நாளும் ரஷ்யா உக்ரேன் குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அப்பாவி உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் உக்ரேன் தெரிந்தெடுத்த ரஷ்ய இராணுவ விமான இலக்குகள் மீதே தனது தாக்குதலை நடத்தியது. இப்போது 'உக்ரேன் செய்தது ஒரு பயங்கரவாதச் செயல்................' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது ரஷ்யா. இப்படித்தானே நாங்களும் இலங்கை அரசால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்.
  37. ஒரு வேளை நடிகர் கமலஹாசந்தான் இப்படி ஒரு பெயரில் வந்து யாழ் கள உறுப்பினர்களுக்கு மண்டைகாய வைக்கிறாரோ என நான் சந்தேகிக்கிறேன்🤣. நுனிப்புல் மேய்வதும்… அதைவைத்து கொண்டு மேதாவி போல காட்ட முனைந்து மூக்குடை படுவதும்…. தனக்கென புதிய மொழி ஒன்றை உருவாக்கி கொள்வதும்…. பத்து பொருத்தமும் பொருந்துகிறதா இல்லையா?
  38. 18 வருட காத்திருப்பு. KING KOHLI சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
  39. தமிழ்வின்னுக்கு அரசியல் ஆய்வுமுதல் சாதாரண செய்திகள்வரை குசும்பு கூடி ஆடுகிறது. இவர்கள் இப்போது 'பரபரப்பு,அதிர்ச்சி,வாய்ப்பு' இப்படித் தலைப்புகளைப்போட்டுத் தமது பார்வையாளர்களைக் கூட்டும் தந்திரம்.
  40. அது சரி விசுகர் ....ஜேர்மனியில் புலிகளின். உணகவம். புலிகளின். கடை. புலிகளின். கோயில் .... இப்படி நிறையவே முதலீடுகள் இருந்தது இது இங்குள்ள மக்கள் கொடுத்த பணம,. என்னிடம் பணம் சேர்க்க வந்தவர் 30 யூரோ இருந்து 50 யூரோ மாதக் கொடுப்பனவு உயர்ந்தப்படவேண்டும் என்றார் நான் சொன்னேன் சரி தரலாம். ஆனால் இந்த முதலீடுகளை ஏன் செய்கிறீர்கள் ?? இதனால் தான் பணம் பற்றாக்குறை. ஏற்படுகிறது அல்லது தேவைப்படுகிறது என்றேன் அவர் சொன்னார் .....இலங்கையில் புலிகள் இயங்க முடியாத நிலை ஏற்ப்பட்டாலும். விடுதலை போராட்டம் தொடர வேண்டும் அதற்கு நிதி வேண்டும் அந்த நேரத்தில் இந்த முதலீடுகள். வருமானம் தரும் என்றார் .....வெளிநாடுகளில் புலிகளின் முதலீடுகள். எத்தனை பில்லியன் டொலர் ..??,.....இந்த பணம் யார் கொடுத்தார்கள்???? ஆகவே மக்கள் பணம் கொடுக்கவில்லை என்பது சரியா??? இல்லை வெளிநாட்டில் புலிகளின். நிர்வாகிகள் ... நிதியை கையாண்ட விதம் பிழையா ??
  41. ஒவ்வொரு ட்ரோனும் சில நூறு ஈரோ செலவில் செய்யப்பட்டவை. மொத்தமாக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று உக்ரேன் அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர். இந்தச் சிறிய ட்ரோன்கள் ஒரு வீட்டின் அடுப்படி வரை போகுமே............ இதில் ரஷ்யர்கள் அவர்களின் விமானங்களை எங்கே நிற்பாட்டி இருந்தார்கள், ஏன் அப்படி நிற்பாட்டி இருந்தார்கள் என்பது தான் பிரச்சனையா........... ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு எதிராக உக்ரேனிய மக்களும், அரசும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு மிகவும் ஆச்சரியமாக, பிரமிப்பாக இருக்கின்றது. அதுவும் அமெரிக்காவின் சமீபத்திய மிகத் தளம்பலான ஒரு நிலைப்பாட்டின் பின்னும் கூட. ஒரு எல்லை நாடாக இருந்து கொண்டே ஒரு பெரிய வல்லரசுடன் இப்படி மோதுவது என்பது ரஷ்யாவிற்கு மட்டும் இல்லை, அமெரிக்காவிற்கும் ஒரு பாடமே. உக்ரேன் ஒரு வருடத்தில் இப்படியான ஐந்து மில்லியன் ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை தங்களுக்கு இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றது. உலகமே பெரிய ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றது. எந்த நாட்டிலும், எந்த தளமும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது போல.
  42. நர்லிகர் அவர்கள் அவருடைய ஆராய்ச்சிகளின் நடுவே சாஸ்திரங்கள், சோதிடங்களை பொய்யென நிறுவும் ஒரு பணியையும் செய்திருப்பது நல்ல ஒரு விடயம். இந்த விடயங்களில் சமூகங்களில் பெரிதாக ஒரு மாற்றத்தையும் உடனடியாக எதிர்பார்க்க முடியாது, ஆனாலும் அந்த நாட்களில் கேம்பிரிட்ஜ் பி.எச்டி என்பதற்கு மதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் இவர் என்ன சொல்லுகின்றார் என்று சிலராவது காது கொடுத்து கேட்டிருப்பார்கள். சில பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில், சில பில்லியன் ஆண்டுகளின் முன் நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியிருக்க, அங்கிருந்து வந்த ஒளித் துணிக்கைகளை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இன்று பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தூரம் ,காலம், இடையில் இருக்கும்பொருட்கள், வெளி, நிகழ்வுகள் இவை எல்லாமே மனதால் அளந்து கூட பார்க்க முடியாத ஒரு பிரமாண்டமாக இருக்கின்றது. இந்த மனிதர்கள், பூமி, நாங்கள் உருவாக்கி வைத்திருப்பவை இப்படி எல்லாமே அற்பத்திலும் அற்பமாக தோன்றும் சில கணங்கள் இவை. இந்தக் கணங்களில் எங்களுக்கு ஒரு விதியின் பாதை இருக்கின்றது என்ற நம்பிக்கை ஒரு நகைச்சுவையாகவும் இருக்கின்றது. ஆனாலும், இந்த எண்ணம் வராத மற்றைய நேரங்களில், வாழ்க்கைகள் ஒரு மயக்கத்திலேயே போய்க் கொண்டிருக்கின்றன. இளைய தலைமுறை முந்டைய தலைமுறையை விட அதிகளவில் இந்த சாத்திர சோதிட விடயங்களில் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்று/முடிவு சரியென்று தோன்றவில்லை. ஒவ்வொரு புதிய தலைமுறையும் முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும் போது இந்த விடயங்களில் குறைவாகவே நம்பிக்கை கொள்ளுவார்கள் என்று தான் தோன்றுகின்றது. ஆனால் இன்று விதம் விதமான ஊடகங்கள் உக்கிரமாக இருக்குக்கும் ஒரு காலம். எல்லா வகையான செய்திகளுமே காட்டுத்தீ போல பரவுகின்றன. ஆகவே இது ஒரு மாயத் தோற்றமாகக்கூட இருக்கலாம்.
  43. இல்லை. அப்போ இராணுவத்திடம் புலிகளை விட மேலதிகமாக இருந்தது சியாமாசெட்டி, அவ்ரோ ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராடார் கருவிகளும், ரன்வேக்களும், முக்கியமாக வெளிநாட்டு உள்நாட்டு இராணுவ கல்லூரிகளில் கிடைத்த பயிற்சியிம். இதில் பலதும் இனாமாக வேறு நாடுகள் கொடுத்தவை. இவை எதையும் வாங்கும் திறன் எந்த ஈழத்தமிழரிடமும் அப்போ இருந்ததில்லை. புலம்பெயர்ந்தோரே மிக சொற்பம் அவர்களும் கூட நிரந்தரமற்ற நிலையில்தான் இருந்தனர். அதே போல் பணம் இருந்திருந்தாலும், அதை மனமுவந்து கொடுத்திருந்தாலும் - நான் மேலே சொன்ன வளங்கள எதையுமே வெளியார் சந்தையில் வாங்க முடிந்திராது, அப்படி வாங்கி இருந்தாலும் அதை இலங்கக்கு கொண்டு வர முடிந்திராது, அப்படி கொண்டு வந்திருந்தாலும் அதை பாதுகாத்திருக்க முடியாது, அப்படியே பாதுகாத்து விட்டாலும் தனியே கேணல் சங்கரை மட்டும் வைத்து கொண்டு ஒரு விமான படையணிதை அமைத்திருக்க முடியாது. புலிகள் ஏன் கரும்புகளில் நம்பி இருக்கும் நிலை வந்தது என்பதற்கு பல புறச்சூழல் காரணிகளே முக்கிய பங்காற்றின. பணம்/மனம் இல்லை. புலிகள் கடைசிவரை ஒரு சமச்சீர் அற்ற நிலையில் இருந்து கொண்டே - ஒரு வலுசமநிலை தோற்றப்பட்டை உருவாக்கினார்கள். அதுதான் அவர்களின் பெரும் சாதனைகளில் ஒன்று. அதை அவர்களே நம்ப ஆரம்பித்தது வீழ்சியின் காரணிகளில் ஒன்று.
  44. இதை தலைவரே சொல்லி உள்ளார் - வளமில்லாத நலிந்த இனமொன்றின் மிகபெறுமதியான, ஆயுங்கள் கரும்புலிகள் என. இன்றுவரை மேற்கில் நான் பேசும் பலருக்கு இதை விளங்கவைக்க என்னால் முடியவில்லை. அவர்கள் தற்கொலை என்ற வட்டத்தை தாண்டி சிந்திக்க தயாரில்லை. ஆனால் சாவு நிச்சயம் என தெரிந்தும் முன்னேறிய தாக்கிய தம் வீரர்களை மெச்சுவார்கள். இரெண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது உறைப்பதே இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.