Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20010
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19112
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/13/25 in all areas

  1. வினா 15) 3 விக்கேற்றுக்களினால் தென்னாபிரிக்கா அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 29 புள்ளிகள் 2) ஏராளன் - 27 புள்ளிகள் 3) ரசோதரன் - 27 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 25 புள்ளிகள் 5) கிருபன் - 25 புள்ளிகள் 6) வீரப்பையன் - 25 புள்ளிகள் 7) புலவர் - 23 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 23 புள்ளிகள் 9) சுவி - 22 புள்ளிகள் 10) வசி - 19 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 19 புள்ளிகள் 12) வாதவூரான் - 19 புள்ளிகள் 13) கறுப்பி - 19 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 19 புள்ளிகள் 15) வாத்தியார் - 17 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 15, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  2. ஆதி அந்தம் இல்லா அருள் ஜோதியே .......! 😍
  3. எழும்பி தமது வீட்டில் என்ன நடக்குது என்று பார்ப்பதில்லை அடுத்தவன் வீட்டில் என்ன நடக்குது என்று ஆராய்வதே வேலை.
  4. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹமாஸ் விடுவித்த 7 பணயக்கைதிகளுடன் இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற காட்சி 13 அக்டோபர் 2025, 09:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் நீண்ட நாட்களாக பிரிந்திருந்த உறவுகளை மீண்டும் சந்திக்கும் ஆவலில் குடும்பத்தினர் உணர்ச்சிமயமாக காட்சியளித்தனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்ரேலிய பணயக்கைதி எய்ட்டன் ஹார்னை வரவேற்கும் ஆவலில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, முதல் 7 பேரில் ஒருவராக இஸ்ரேலிய பணயக்கைதி ஆலன் ஒஹெல்லை ஹமாஸ் விடுவித்த செய்தி அறிந்ததும் மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பாலத்தீன சிறைக்கைதிகள் விடுதலை ஒப்பந்தப்படி, ஹமாஸ் 48 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். அவர்களில் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பேர் 2 தொகுதிகளாக விடுவிக்கப்பட்டனர். அதற்கு ஈடாக, இஸ்ரேல் 250 பாலத்தீன கைதிகளையும், தடுப்புக்காவலில் உள்ள 1,700 பாலத்தீனியர்களையும் விடுவிக்கும். இஸ்ரேல் சிறையில் இருந்து வெளியே வந்த பல வேன்கள் பாலத்தீன கைதிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது. அவர்களை வரவேற்க ரமல்லா நகரில் குடும்பத்தினரும், உறவினர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து வந்த வேன்கள். விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதிகள் அந்த வேன்களில் ஏற்றிச் செல்லப்படுவதாக நம்பப்படுகிறது. படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலத்தீன கைதிகளை வரவேற்க காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள். ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் கூடிய மக்கள் முன்னதாக, இஸ்ரேலிய பணயக்கைதிகளின் வருகைக்காக அவர்களது உறவினர்கள் டெல் அவிவ் நகரில் உள்ள ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் அதிகாலை 5 மணியளவிலேயே திரளாக கூடிவிட்டனர். அங்குள்ள பெரிய திரைகளில் பணயக்கைதிகள் விடுதலை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த சதுக்கத்தில் காத்திருந்த மக்களின் புகைப்படத்தை ஒரு சமூக வலைதளப் பயனர் பகிர்ந்துள்ளார். 'சதுக்கம் பணயக்கைதிகளின் வருகைக்காக காத்திருக்கிறது' என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, பணயக்கைதிகளின் விடுதலைக்காக காத்திருக்கும் இஸ்ரேலியர்கள் போர் நிறுத்தம் தொடரும் - டிரம்ப் இஸ்ரேலுக்கு புறப்படும் முன்பாக, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம் தொடரும் என்றும், காஸாவிற்கான அமைதி வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்றும் கூறினார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்கிறார் "யூதர்கள், இஸ்லாமியர்கள் அல்லது அரேபியர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே எங்கள் குறிக்கோள். இஸ்ரேலுக்குப் பிறகு, நான் எகிப்துக்குச் செல்வேன். அங்குள்ள மிகவும் சக்திவாய்ந்த, பெரிய, பணக்கார நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்," என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேலுக்கு வந்த பிறகு, டிரம்ப் திங்கட்கிழமை எகிப்துக்குச் செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் காஸா பிரச்னை குறித்து ஆலோசிக்க உள்ளார். பிரிட்டன் பிரதமர் ஸ்டாமரும் எகிப்துக்கு வந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவரும் பங்கேற்க உள்ளார். எகிப்தில் முக்கிய பேச்சுவார்த்தைகள் பாலத்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவர் ஹுசைன் அல்-ஷேக் ஞாயிற்றுக்கிழமை காலை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து, காஸாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தார். பாலத்தீன விடுதலை அமைப்பு (PLO), காஸா பிரச்னையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் டோனி பிளேருடன் சேர்ந்து, மற்ற நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், காஸா விவகாரங்களை மேற்பார்வையிடும் குழுவில் டோனி பிளேர் இருப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேல் பயணத்துக்கு புறப்படும் முன் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், 'போர்களுக்கு தீர்வு காணவும், அமைதியை நிலைநாட்டவும் தான் நான் பணியாற்றுகிறேன்' என்று கூறினார். 'இது நான் தீர்த்து வைத்த எட்டாவது போர். நான் இதை நோபல் அமைதி பரிசுக்காக அல்ல, மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக செய்கிறேன்' என்றும் அவர் கூறினார். டிரம்புக்கும் பிற தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெற உள்ளன. இந்த மாநாடு 'காஸா அமைதி உச்சிமாநாடு' என்று அழைக்கப்படுகிறது. காஸா போருக்கு முடிவு காண்வதை நோக்கமாகக் கொண்ட இந்த உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் பிரிட்ரிக் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் மெலோனி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காஸாவில் உணவு விநியோக லாரிகளுக்கு அருகில் மக்கள் கூடி, அவற்றை எடுத்துச் செல்லும் காட்சி. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ், தானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். பாலத்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவிற்கு பிரிட்டன் ரூ.216 கோடி நிதி உதவி அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgvdn91lzdo
  5. உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத்துவருக்கு கொமிசன் கொடுத்து அதை பெறும் மருத்துவருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அடிப்படியில் தொழில் ஒன்றுதான் கவர்ச்சிகரமான ஆடைகளால் அது மறைக்க படுகிறது. BP ( British Petrolium) செய்யாத ஊழலையா மேலே இருக்கும் இருவரும் செய்து விடடார்கள்? இப்போதும் இல்லை எப்போதும் BP கொடி கட்டி பறக்கும் காரணம் சடடத்தை எழுதுபவர்களே அவர்க்ளின் அடியாட்கள்தான். இங்கு சடடபடி என்று எதுவுமே இல்லை ....... இன்னொரு மனிதனை பிடித்து அடிமையாக வைத்திருக்கலாம் என்பது நான் வாழும் அமெரிக்க நாட்டில் சட்டமாக இருந்த்தது. மற்ற நாடுகளுக்கு சென்று அங்கு வசிப்பவர்களை கொன்று பொருட்டுகளை கொள்ளையடித்து வருவது நீங்கள் வாழும் நாட்டில் அரச கடமையாக இருந்தது. உங்கள் வளர்ச்சி கொஞ்சம் கண்ணை குத்தும்படியாக இருந்தால் .... நீங்கள் குற்றவாளி. மற்ற எல்லோரும் சுத்தவாளி இங்கு நாளும் நாளும் பல நூறு கம்பெனிகள் திவால் ஆகிறது .... அவை அனைத்திலும் பண மோசடி இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் திவால் ஆக்குவதற்கு என்றே நாளும் நாளும் 1௦௦ கம்பெனிகள் வியாபார நிறுவனங்கள் நிறுவ படுகிறது. சட்ட்தில் உள்ள ஓடடைகளும் திமிங்கலங்கள் தமக்காக எழுதிய சட்ட்ங்களும் அதற்கு துணை போகிறது. எதுக்கும் வக்கில்லாதவர்கள் திண்ணையில் அமர்ந்து நீதிமான் போல பஞ்சாயத்து செய்யவேண்டியதுதான்.
  6. புகுந்த வீடு படத்தில் எல்லாமே அருமையான பாட்டுக்கள். இதில் மிகவும் பிரபலமாக இருந்த பாட்டு செந்தாமரையே செந்தேன் இதளே. கண்ணன் பிறந்த வேளையிலே மாடிவீட்டுப் பொண்ணு மீனா
  7. இந்த தாயார் எழுதியது சுத்த அலப்பறைதான்…. மகளின் திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதை போட்டோ எடுத்து போடலாம்….அதற்குள்ளும் பூர்வகுடி, பூர்ஷுவா குடி என தனது இடதுசாரி அரசியலை நுழைத்த்திருக்க தேவையில்லை. ஆனால்….விமர்சனம் அதை விட்டு விட்டு, மாப்பிள்ளையின் இனம் சார்ந்து குரோதமாக அமைவது ஏற்புடையதல்ல.
  8. தாலாட்டு பாடி தாயாக வேண்டும் படம் பிராப்தம்
  9. நானும் தமிழ் தேசிய கொள்கை உடையவனாக இருந்துகொண்டு கருணாவை ஆதரிக்கவில்லையா. தனக்கென்று வரும்போது கொள்கையாவது கோற்பாடாவது. இரண்டாவதாக தாயார் சும்மா புகைப்படத்தை பதிவேற்றிவிட்டு சென்றிருக்கலாம். சமூகத்திற்கு எதோ சொல்லவந்து இந்த கருத்து சாம்பாரை பதிவேற்றியிருப்பதால் சரவெடி வெடித்திருக்கிறது இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது இப்படி பதிவேற்றியதற்கு பதிலாக இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, வந்தேறி இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் வந்தேறிகளான எனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது இப்படி பதிவேற்றியிருக்கவேண்டும். பழங்குடி ,பூர்வகுடி என்று அதிகப்பிரசங்கிதனமாக அலப்பறை செய்தவர் தான் யாரென்பததையும் சுயவிமர்சனம் செய்திருக்கவேண்டும் என்பதே எனது பார்வை
  10. விஜையின் அரசியல் வரவு நாம் த‌மிழர் க‌ட்சியினரை வெகுவாகக் கலவரப்பட வைத்திருந்தது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. விஜையின் கூட்டங்களுக்குக் கூடியவர்களை அணில்க் குஞ்சுகள் என்று அழைக்கும் அளவிற்கு நாம் தமிழர் கட்சியினர் இறங்கியிருந்தனர். கரூர்வரை கடுமையாக விமர்சித்துவந்த நா த க வினர், கரூரின் பின்னர் தி முக வினர் செய்யவேண்டியதை தாமே செய்யத் தொடங்கிவிட்டனர் என்று எண்ணுமளவிற்கு மிகவும் வெளிப்படையாகவே தமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்த்தனர். கரூர் மரணங்களை வைத்து விஜையை அரசியலில் இருந்து அகற்ற தி மு க நினைக்கிறதோ இல்லையோ, நா த க நிச்சயமாக முயன்று வருகிறது. எமது இனக்கொலையில் நேரடியாகப் பங்கெடுத்த காங்கிரஸ் / தி மு க‌ கூட்டணியினை வீழ்த்த விஜை தனியாகவோ அல்லது வேறு யாருடனோ கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு வருவதை முழுவதுமாக வரவேற்கிறேன். சீமான் செய்யவேண்டிய ஒரு விடயம், ஆனால் அவரால் ஒருபோதுமே அதனைச் செய்ய முடியாது, விஜையினால் அது சாத்தியப்படுமானால் நிச்சயம் வரவேற்பேன். கொலைகார காங்கிரஸ் / தி மு க கூட்டணி அவமானகரமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்.
  11. அகஸ்தியன் - 27 புள்ளிகள் @Ahasthiyan முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
  12. வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன் - 25 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 23 புள்ளிகள் 5) கிருபன் - 23 புள்ளிகள் 6) வீரப்பையன் - 23 புள்ளிகள் 7) புலவர் - 21 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 21 புள்ளிகள் 9) சுவி - 20 புள்ளிகள் 10) வசி - 17 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 12) வாதவூரான் - 17 புள்ளிகள் 13) கறுப்பி - 17 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 15) வாத்தியார் - 15 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 14, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  13. கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி ........ ! 😍
  14. :) சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்... இப்படியாவது இந்த தளம் இங்கே தெம்பாக இயங்குவது சந்தோசம்.
  15. மாவீரர் தளபதி விதுசா அவர்கள் மற்றும் விதுசான் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம் ஐயாவின் இறுதி கிரியைகள் நாளை (13.10.2025) காலை பொன்னாலையிலுள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் #கப்புது #சனசமூக நிலையத்தில் இறுதி அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று உடலம் தீயுடன் சங்கமமாகும்... போராளிகள் நலன்புரிச் சங்கம்
  16. கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை! October 10, 2025 சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது. சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொழிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன. வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர். இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும். சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது. ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள். எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்). https://www.thesamnet.co.uk/?p=113593
  17. கஸ்ரப்பட்டு ஓவர்ரைம் அடித்து உழைத்த காசே நிலைக்குதில்லை.மோசடி செய்த காசு எப்படி நிலைக்கும். கொஞ்சகாலம் .ஆடாத ஆட்டம் ஆடுவார்கள். ஒருநாள் அடங்கிவிடுவார்கள்.பெரிய பெரியகார் எடுத்து பகட்டாக ஓடித்திரிவார்கள். ஆனால் வங்கியில் மாதம் மாதம் பெரிய தொகை சம்பளத்தில் இருந்து போகும். புதுக்கார் கொஞ்சம் உரஞ்சுப்பட்டாலே அவ்வளவுதான் அதன் மதிப்பு குறைந்து விடும். அதை விட சில வேளைகளில் விபத்து நடந்து காரைக்கைவிடும்நிலை வந்தால் கொம்பனிக்கு முழுக்காசும்கட்டத்தான் வேண்டும்.காப்புறுதி செய்தாலும் அதுக்குக்கட்டும்காசும் அதிகம் அதைவி ஓரளவு பழைய காரை குறைந்த விலையில் முழுப்பணத்தையும் செலுத்தி வாங்கினால் சின்ன உராய்வுகள் வந்தாலும் வைச்சு ஓடலாம் கவலையும்படத்தேவையில்லை.போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  18. தென்னாபிரிக்கா பற்றி மட்டும் என்றில்லாமல், எல்லா மகளிர் அணிகளையும் சேர்த்தே சொல்ல வந்தேன், அண்ணா.............. எல்லா மகளிர்களுமே பின்னுக்கு வருவதை முன்னுக்கே யோசித்து வைக்கும் 'பின் புத்தி' உள்ளவர்கள் தானே...................🤣. தென் ஆபிரிக்கா அணி நல்லாவே விளையாடுகின்றார்கள்.............. போகிற போக்கில் நாலில் ஒன்றாக வந்து விடுவார்கள் போலத் தெரியுதே................
  19. நான் lyca, Lebara என்பதை குறிப்பிட்டதற்கு காரணம் அவர்கள் எனக்கு பக்கத்தில் இருந்து வீங்கியவர்கள் என்பதால் மட்டுமே.
  20. சிலருக்கு சுட்டு விட்டது. அஞ்ஞாதவாசம் கலைக்கும் அளவுக்கு சுட்டு விட்டது. “அண்டங்காக்காயை சொன்னா, சாதா காக்காயுக்கு கோவத்தை பாரேன்” -அமரர் விவேக்- பிகு இதே ஆட்கள்தான். சிறுவர் துஸ்பிரயோகத்தை, ஜெப்ரி இஸ்டீன் செய்யவில்லையா? இளவரசர் அண்டுரூ செய்யவில்லையா ஒரு அப்பாவி தமிழ் பையன் செய்தால் தப்பா என எழுத கூடிய பிரகிருதிகள். தாம் கறுப்பாடுகளாய் இருந்து வயிறு வளர்ப்பது மட்டும் இன்றி, அதில் தப்பில்லை என சமூகத்தையே கறுப்பாடுகளாகும் படி வேதம் ஓதும் சாத்தான்கள். நல்வழி சொல்பவர்களுக்கு இவர்கள் வைக்கும் பெயர் வக்கில்லாதவர்கள். மொள்ளமாரித்தனம் பண்ணி வயிறு வளர்ப்பதற்கு, திண்ணை பேச்சு வீரராய் வாழ்ந்து விட்டு போகலாம்.
  21. ஊழலை சிறப்பாக செய்ய தெரிந்த மனிதன் முன்பு ஆப்பிள் நிறுவனமும் 24 காரட் தங்கத்தை கொடுத்து இருந்தது. ஒரு 100 பில்லியன்கள் கொடுத்தால் 2 என்றாலும் சுருட்டிட கூடிய அறிவு கருணாநிதியின் உடன் பிறவா சகோதரர்
  22. நீங்கள் அமைதியாக தூங்கலாம் ...... ஈழத்தமிழர்கள் உள்ளவரை விதுசா அக்காவின் வீரம் போற்றப்படும்!
  23. அடிக்கடி நடப்பது போலவே நாலு, ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பின் வந்தவர்கள் நின்று விளையாடுகின்றார்கள். நல்ல 'பின் புத்தி' உள்ளவர்கள்...............🤣 பின்னுக்கு வரப் போகும் நிலைமைகளையும் முன்னேயே கணித்து திட்டமிடுபவர்கள் என்ற குற்றமற்ற பொருளில் அந்த நாட்களில் இந்த முதுமொழியைச் சொல்லியிருப்பார்கள் போல.................👍.
  24. 13 Oct, 2025 | 02:40 PM செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் நிதியை கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே விடுவித்து வருகிறது. செம்மணிப் புதைகுழிகளில் இருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் எலும்புக்கூடுகள் ஒரேயடியாக வெளிப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை, அவ்வாறு வெளிப்படுவது, படைத்தரப்பை ஒருபோதும் தண்டிக்க விரும்பாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இதனாலேயே, நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு ஞாயிற்றுக்கிழமை (12) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு, அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், செம்மணியில் கிரிசாந்தி கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் தவிர்க்க முடியாமல் விசாரணைகளை முன்னெடுத்தது. இவ்வழக்கில் இராணுவச் சிப்பாய் சோமரட்ண ராஜபக்ச சாட்சியமளித்தபோது தங்களால் 400பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் புதைகுழிகளைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியபோதும் புதைகுழிகளைத் தொடர்ந்து அகழ்வதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. அதற்குவேண்டிய போதுமான அழுத்தங்களை எமது தலைமைகளும் அரசாங்கத்துக்குக் கொடுக்கவில்லை. இப்போது, சிந்துபாத்தி மயானத்தில் கட்டுமானப் பணிகளுக்காக அகழப்பட்ட இடத்தில் தற்செயலாக வெளிப்பட்ட எலும்புக்கூடே இதுவரையில் இருநூறுகளுக்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கான கதவுகளை முள்ளிவாய்க்கால் பேரவலம் திறந்து விட்டிருந்தது. ஆனால், அவற்றைத் தமிழ்த் தலைமைகள் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசாங்கத்துக்குச் சர்வதேச அரங்கில் பிணையெடுத்துக் கொடுக்கும் வேலைகளிலேயே ஈடுபட்டன. இப்போது, இனவழிப்பின் சாட்சியங்களாக செம்மணிப் புதைகுழிகளில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் எழுந்து நிற்கின்றன. தமிழின அழிப்பு நிகழ்ந்தது என்பதற்கான சாட்சிகள் பலர் இன்னமும் உள்ளனர். அவர்களால் பயத்தின் காரணமாகத் தங்களை வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால், உயிருள்ள அந்த சாட்சியங்களைவிட உயிர் இல்லாத எலும்புக்கூடுகள் வலுவான சாட்சியங்களாக இன்று எழுந்து நிற்கின்றன. காலம் எங்களுக்குத் தந்திருக்கும் இந்த வாய்ப்பையாவது எமது தமிழ்த் தலைமைகள் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227614
  25. https://www.ft.com/content/51134511-15a3-4be0-acc3-5c84c10514ba இதில் இருவரின் படமும் உள்ளது. தெரிகிறதா?
  26. யாழ்.கள நிருபர்... அவர்களின் படத்தை எடுத்துப் போடவும். 😂
  27. ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகளும் விடுவிப்பு! ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை கொண்ட முதலாவது குழுவை முன்னதாக ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ள நிலையில் தற்போது அடுத்த குழுவையும் ஒப்படைத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் தடுத்துவைத்துள்ள 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக மொத்தமாக 20 உயிருடன் உள்ள பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்திருந்த நிலையில் இன்று இரண்டு குழுக்களாக 20 பணயக்கைதிகளை ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இதேவேளை பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சி வெளியிட்டுவருகின்றனர். எதிர்வரும் நாட்களில் காசாவில் பணயக் கைதிகள் விடுதலை, பாலஸ்தீன கைதிகள் விடுதலை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிண்ணனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிராந்திய அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று எகிப்துக்கு செல்வதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோர் ஷர்ம் எல்-ஷேக்கில் இன்று நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளனர். இந்த மாநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். “காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல்” ஆகியன இந்த மாநாட்டின் நோக்கமாக கருதப்படுகின்றன. https://athavannews.com/2025/1450242
  28. ஏங்கோ அவ்வளவு தூரம் போறீங்கோ. நம் இனம் விழுந்து, எழுந்து நடமாட துடித்திருக்கும்போது, அந்த இனத்தின் பிரதிநிதி என்று பினாத்திக்கொண்டு திரிபவர், அவர்களை அழித்தவர்களோடு கிறிக்கெற் விளையாடினார். கேட்ட போது, அவர்களோடுதான் பேச்சு நடத்த வேண்டும் ஆகவே நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாடினேன் என்று விளக்கம் கொடுத்தார். நமது விடுதலைக்காய் போராடி இறந்த நம் வீரருக்கு வணக்கம் செலுத்த முடியவில்லை, இவரோ பொப்பிப்பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போய் நம் இனத்தை அழித்த இராணுவத்திற்கு தம் மரியாதையை காட்டினார். சிங்கள மக்களோடு வாழ்வது தனது அதிஷ்டம் என்று வேறு பெருமை பாராட்டினார். ஆனால் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் மகன்கள் சிங்கள பெண்களை மணந்ததால், சிங்களச்சம்பந்தி என்று வாய்க்கு வாய் தூற்றிக்கொண்டு திரிந்தார். தனது மகன் சிங்களப்பெண்ணை மணந்து, தான் சிங்களசம்பந்தியான போது அமைதியாக இருந்துவிட்டார். எங்கள் வீட்டில் நடந்தால் போற்றுவோம், அடுத்தவர் வீட்டில் நடந்தால் தூற்றி ஏளனம் செய்வோம்.
  29. போர் முடிந்துவிட்டது என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் 13 October 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், “போர் முடிந்துவிட்டது” என அறிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் உச்சிமாநாட்டிற்காக எகிப்திற்கு செல்வதற்கு முன்னர் அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் போர்நிறுத்தம் நிலைத்திருக்கும் என்றும், காசாவுக்காக விரைவில் ஒரு “அமைதிக் குழு” (Board of Peace) அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். காசா தற்போது ஒரு “சிதைவுப்பகுதி” போல தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கட்டார் ஆகியவற்றின் பங்களிப்பையும் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டினார். https://hirunews.lk/tm/424981/donald-trump-declares-the-war-is-over
  30. அததெரண கருத்துப் படம்
  31. தமக்குப் பிடித்த துணையுடன் வாழ முடிவு எடுத்த… தம்பதிகளுக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள். குடும்பப் படங்களை…. சமூக வலைத்தளங்களில் பதியும் போது, ஏற்படும் ஆபத்தான விடயங்களில்… மேற்படி சம்பவமும் ஒன்று. பெண்ணின் தாய்… தமது மகிழ்ச்சிக்காக இயல்பாக பதிந்த படத்திற்கு இவ்வளவு விமர்சனம் வைத்தமை மிகவும் அருவருப்பான செயல். மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை… விமர்சிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. வாழ்த்த விருப்பம் இல்லாவிடில்… ஒதுங்கி இருந்திருக்கலாம். இது…. அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு மன உழைச்சலை கொடுத்திருக்கும் என்பதை, சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்து இருந்திருக்க வேண்டும். நாளைக்கு இது… அவர்களின் குடும்பத்திலும் நடக்கலாம்.
  32. இஸ்ரேலுடனான போரின்போது இஸ்ரேலுக்கு உதவினார்கள் என்கிற காரணத்திற்காக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்த்தீனர்களை ஹமாஸ் கைதுசெய்திருக்கிறது. இவர்களுள் பலர் மக்கள் முன்பாக மரணதண்டைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மேலும் இன்று ஹமாஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அமைப்பானது இஸ்ரேலினால் வளர்க்கப்பட்டு வரும் சமூக விரோத அமைப்பென்று ஹமாஸும், ஹமாஸிற்குச் சார்பான அல் ஜஸீரா போன்ற செய்தி அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றன. இவற்றுள் உண்மை இருக்கலாம். விடுதலைக்காகப் போராடும் இனத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி, பின்னர் அவ்வினத்தின் போரிடும் வலுவை முற்றாக அழித்து, அடிமைப்படுத்துவதென்பது ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கைவந்த கலை. எமது சரித்திரமே அதற்குச் சாட்சி.
  33. 🤣 அவர் அப்படி ஒரு கூட்டணி (பாஜக வோடு சேர்ந்து) சேர்ந்தால் - எனது மானசீக வாக்கு திமுகவுக்கு. பிகு நான் எழுதுவதை வாசிக்கிறீர்கள்தானே அண்ணை? எனது நிலைப்பாடு என்ன என்பதையிட்டும் நீங்கள் கனவில் இருப்பது போல உள்ளது.
  34. யார் ஆட்சிக்கு வந்தாலும், மலையக மக்களை கொத்தடிமைகளாக குத்தகை எடுத்த தொண்டைமானுக்கும், அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கு தற்போதைய மாற்றம் குடைச்சல் கொடுக்க தான் செய்யும்.
  35. கல்யாண ஊர்வலம் வரும் படம் அவன்
  36. இஸ்ரேலுக்கு முழு பலஸ்தீனத்தையும் தாரை வார்க்காமல் ஹமாஸ் ஓயமாட்டார்கள்.
  37. 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா இதுக்கு புள்ளி க‌ண்டிப்பாய் கிடைக்கும் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் 5விக்கேட் எடுத்து இருக்கிறா......................
  38. நீங்க‌ள் சொல்லுவ‌தின் ப‌டி கூட‌ இருக்க‌லாம் இல‌ங்கை ம‌க‌ளிர் ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌து வெத‌றின் அடிப்ப‌டையில் கூட‌ இருக்க‌லாம் என நீங்க‌ள் எழுதினா பிற‌க்கு யோசிக்க‌ தோனுது இல‌ங்கை ஆண்க‌ள் உந்த‌ மைதான‌த்தில் நான‌ய‌த்தில் வென்றால் ம‌ட்டைய‌ தான் தெரிவு செய்வின‌ம்.................நான் பார்த்த‌ ம‌ட்டி உந்த‌ மைதான‌த்தின் ஆண்க‌ள் அணி மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடுவின‌ம்..............உந்த‌ப் பெரிய‌ இந்தியாவையே போன‌ வ‌ருட‌ம் தோக்க‌டிச்சு தொட‌ரை வென்ற‌வை............................
  39. உண்மைதான். அந்த அவுஸ்ரேலிய அணி மாதிரி ஒரு அணி இனி அமைய வாய்ப்பே இல்லை. இது ஒரு தொடர்ச்சிதான். 80களில மேற்கிந்திய அணியின் ஆளுமையைச் சமாளிக்க ஒருவராலும் முடியவில்லை. அவுஸ்ரேலியா பல தொடர்களின் வாங்கின அடியுடன், மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கினார்கள். உள்ளகக் கட்டமைப்பை மாற்றினார்கள். உள்ளூர் மைதானங்களை மாற்றினார்கள். பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். சிறந்த வீர்ரகளை இனங்காண குழுவை அமைத்தார்கள். அது எல்லாம் சேர்ந்து, 90களுக்குப் பிறகு அவர்களை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. அதே நேரம் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் ஓய்வு, அவர்களின் பணம் மற்றும் நிர்வாகப் பிரச்சினை காரணமாக, அவர்கள் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டார்கள். லாரா மட்டும் இல்லையென்டால், காணாமலே போயிருப்பார்கள். 90களில் இந்திய அணி அதே விதியை எதிர்கொண்டது. பலமான அவுஸ்ரேலியா. இலங்கையின் எழுச்சி. தென்னாபிரிக்காவின் வருகை. இந்தியாவை நிமிரவே விடவில்லை. போன இடமெல்லாம் அடி. சச்சின் மட்டும் முயற்சி செய்துகொண்டே இருந்தார். சச்சின் ஆட்டமிழந்தால், தொலைக்காட்சியை அணைத்து விட்டுப் போவது சர்வசாதாரணம். அந்த இடத்தில்தான், இந்தியாவும் எல்லா மாற்ற்ங்களையும் ஏற்படுத்தத் தொடங்கியது. 80களின் இறுதியில் அவுஸ்திரேலியா என்ன செய்ததோ, அதையே இந்தியா 90களின் இறுதியில் செய்யத் தொடங்கியது. IPLன் எழுச்சி, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. இப்போ நாம் பார்க்கும் இந்தியா, அன்று விதைத்த விதை. இப்போ பணம்தான் எல்லாம். இந்தியவை இனி உடைக்க முடியுமோ என்று தெரியவில்லை. அவர்களின் ஆதிக்கம் மிக நீ....ண்.....ட.... காலம் நீடிக்கும் என்று நினைக்கிறேன். மற்ற அணிகள் சும்மா போய் தட்டிவிட்டு வரவேண்டியதுதான்.
  40. சீனாவில் சில விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன! அவர்கள் மிகவும் விரோதமாக மாறி, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பி, அரிய பூமி தொடர்பான உற்பத்தியின் ஒவ்வொரு கூறுகளின் மீதும், சீனாவில் உற்பத்தி செய்யப்படாவிட்டாலும் கூட, அவர்கள் நினைக்கும் வேறு எதன் மீதும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புகிறார்கள். இதுபோன்ற எதையும் யாரும் இதுவரை பார்த்ததில்லை, ஆனால், அடிப்படையில், இது சந்தைகளை "அடைத்துவிடும்", மேலும் உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக சீனாவிற்கு வாழ்க்கையை கடினமாக்கும். எங்கிருந்தோ வந்த இந்த பெரிய வர்த்தக விரோதத்தால் மிகவும் கோபமாக இருக்கும் பிற நாடுகளால் நாங்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளோம். கடந்த ஆறு மாதங்களாக சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் சிறப்பாக இருந்தது, இதன் மூலம் வர்த்தகத்தில் இந்த நடவடிக்கை இன்னும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்தது. அவர்கள் எப்போதும் காத்திருந்ததாக நான் உணர்ந்தேன், இப்போது, வழக்கம் போல், நான் சொல்வது சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது! சீனா உலகையே "சிறைப்பிடித்து" வைத்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது, ஆனால் அதுதான் நீண்ட காலமாக அவர்களின் திட்டமாகத் தெரிகிறது, "காந்தங்கள்" மற்றும் பிற கூறுகள் தொடங்கி, அவர்கள் அமைதியாக ஓரளவு ஏகபோக நிலையில் குவித்து வைத்திருக்கிறார்கள், இது மிகவும் மோசமான மற்றும் விரோதமான நடவடிக்கை என்று சொல்லலாம். ஆனால் அமெரிக்கா ஏகபோக நிலைகளையும் கொண்டுள்ளது, சீனாவை விட மிகவும் வலுவானது மற்றும் தொலைநோக்குடையது. நான் அவற்றைப் பயன்படுத்தத் தேர்வு செய்யவில்லை, நான் அவ்வாறு செய்ய ஒரு காரணமும் இல்லை - இப்போது வரை! அவர்கள் அனுப்பிய கடிதம் பல பக்கங்கள் நீளமானது, மேலும் விவரங்கள், மிகுந்த குறிப்பிட்ட தன்மையுடன், மற்ற நாடுகளிடமிருந்து அவர்கள் மறைக்க விரும்பும் ஒவ்வொரு கூறுகளும். வழக்கமாக இருந்த விஷயங்கள் இனி வழக்கமானவை அல்ல. அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லாததால் நான் ஜனாதிபதி ஜியிடம் பேசவில்லை. இது எனக்கு மட்டுமல்ல, சுதந்திர உலகின் அனைத்து தலைவர்களுக்கும் ஒரு உண்மையான ஆச்சரியமாக இருந்தது. தென் கொரியாவில் உள்ள APEC இல் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி ஜியை நான் சந்திக்கவிருந்தேன், ஆனால் இப்போது அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகாலப் போராட்டம் மற்றும் சண்டைக்குப் பிறகு, மத்திய கிழக்கில் அமைதி நிலவிய நாள் இது என்பதால் சீன எழுத்துக்கள் குறிப்பாக பொருத்தமற்றவை. அந்த நேரம் தற்செயலாக நிகழ்ந்ததா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட விரோதமான "ஒழுங்கை"ப் பற்றி சீனா சொல்வதைப் பொறுத்து, அமெரிக்காவின் ஜனாதிபதியாக, அவர்களின் நடவடிக்கையை நிதி ரீதியாக எதிர்கொள்ள நான் கட்டாயப்படுத்தப்படுவேன். அவர்கள் ஏகபோகமாக வைத்திருக்க முடிந்த ஒவ்வொரு உறுப்புக்கும், நமக்கு இரண்டு உள்ளன. இது இப்படி வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால், எல்லா விஷயங்களையும் போலவே, நேரம் வந்துவிட்டது. இறுதியில், வேதனையாக இருந்தாலும், இறுதியில், அமெரிக்காவிற்கு இது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் கணக்கிடும் கொள்கைகளில் ஒன்று, அமெரிக்காவிற்குள் வரும் சீனப் பொருட்கள் மீதான வரிகளை பெருமளவில் அதிகரிப்பது. இதேபோல், பல எதிர் நடவடிக்கைகளும் தீவிர பரிசீலனையில் உள்ளன. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! டொனால்ட் ஜே. டிரம்ப், ஐக்கிய மாகாணங்களின் தலைவர். நவம்பர் 1, 2025 முதல், தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும், சிலவற்றை அவர்களால் தயாரிக்கப்படாத பொருட்களின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது, மேலும் இது பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களால் வகுக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, மேலும் பிற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம். சீனா இந்த முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதன் அடிப்படையில், நவம்பர் 1, 2025 முதல் (அல்லது விரைவில், சீனாவால் எடுக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் அல்லது மாற்றங்களைப் பொறுத்து) இதேபோல் அச்சுறுத்தப்பட்ட பிற நாடுகளுக்காக அல்ல, அமெரிக்காவிற்காக மட்டுமே பேசுகிறது, அமெரிக்கா தற்போது செலுத்தும் எந்தவொரு கட்டணத்திற்கும் மேலாக சீனா மீது 100% வரியை விதிக்கும். மேலும் நவம்பர் 1 ஆம் தேதி, எந்தவொரு மற்றும் அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம். சீனா இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நம்புவது சாத்தியமில்லை, ஆனால் அவர்கள் எடுத்திருக்கிறார்கள், மற்றதெல்லாம் வரலாறு. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! டொனால்ட் ஜே. டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது முதலாவது பதிவில் சீனா விசித்திரமாக நடக்கிறது என பணச்சந்தை மூடுவதற்கு 6 மணித்தியாலத்திற்கு முன்னர் கூறினார், அப்போது அவுஸ்ரேலிய டொலரினை விற்று ஜப்பான் ஜென் வாங்கியிருந்திருந்தேன் ஒரு குறிப்பிட்ட சதவிகித இலாபத்தில் இருந்த எனது வர்த்தகம் இந்த அறிக்கை வெளியான பின்பு அதிகளவில் சாதக போக்கினை காட்டியது வார இறுதி என்பதால் வர்த்தகத்தினை மூடிவிட்டேன், பணச்சந்தை மூடிய பின் 6 மணி நேரத்தின் பின்னர் இரண்டாவது 100% வரி அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார். இவரது கடந்த ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு அறிவுப்பகளை விட்டு (Bull trap, Bear trap) சந்தையினை புரட்டி போடுபவர் (இதில் அவருக்கு ஆதாயம் உண்டு என கருதுகிறேன்). வார ஆரம்பத்தில் ஜப்பானிய ஆளும் கட்சிக்கு ஒரு பெண்மணி தலைவராகிறார் எனும் செய்தியால் அவுஸ் ஜப்பான் இணை எகிறியது வார இறுதியில் மீண்டும் அதே நிலைக்கு ட்ரம்ப் கொண்டு வந்து விட்டார், தற்போது வெளியிட்ட இரண்டாவது அறிவுப்பு வரும் வாரத்தில் சந்தையினை என்ன செய்யபோகிறது என தெரியவில்லை. அவுஸ்ரேலியாவின் மூலப்பொருள் ஏற்றுமதி பெருமளவில் சீன இறக்குமதியில் தங்கியிருப்பதால், பெரும் தாக்கம் ஏற்படும் என கருதுகிறேன்; அல்லது முதலாவது அறிவிப்பே அதற்கான விளைவை ஏற்கனவே ஏற்படுத்தியுமிருக்கலாம்.
  41. இந்தக் கூட்டணி அமைந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்பலாம். இந்தக் கூட்டணியை நான் வரவேற்கிறேன்.திமுகவினதும் குடும்ப ஆட்சி துடைத்தழிக்கப்பட வேண்டும்.விஜைக்கும் இப்போது இருக்கும் நெருக்கடியில் இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.(அப்போதும் நாம் தமிழர்கட்சிதான் எனது தெரிவாக இருக்கும். தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப் போகாமல் வைத்திருப்பதற்கு அந்தக்கட்சி ஒன்று மட்டும்தான் தமிழ்நாட்டில் செயற்பாட்டில் இருக்கிறது.)
  42. World of Creatures “A tree gives the same gift to all — shade, peace, and life. Whether it shelters people or sheep, its kindness never changes.” 🌳"
  43. ஒவ்வொரு தேர்தல்கள் வரும்போதும் எங்காவது இருக்கும் இந்த அம்மாவை இழுத்துவிட்ட திருத்த முடியாத கழுதைகளுக்கு மாபெரும் தோல்வி.
  44. என்ரை கவலை என்னெண்டால்...... இவ்வளவுகாலமும் சீமானை வறுத்தெடுக்க விஜயலட்சுமிக்கு நீதி கேக்கிறம் எண்டு போராடிச்சினம்.கதை முடிச்சாச்சு.சும்மா வெறும் வாயை வைச்சு மென்றவர்கள் இனி என்ன செய்யப்போயினம்? அதோட தங்கள் அரசியல் லாபத்திற்காக அப்பப்ப விஜயலச்சுமியை களம் இறக்கி கூத்து காட்டினவையள் இனி என்ன செய்யப்போயினம்.😂 அதைவிட இஞ்சையொரு தம்பி சீமான் கடை எண்ட திரியை திறந்து நல்ல சனத்தை கூட்டி சேக்கஸ் காட்டுவார். இனி என்ன செய்யப்போறார்.🤣
  45. நீங்கள் உங்கள் டிப்பாட்மெண்டில் களவு செய்யிறீங்கள். நாங்கள் எங்கள் டிப்பாட்மெண்டில் களவு செய்கின்றோம். எனவே எங்களை விசாரிக்க நீங்கள் யார் என்பதுதான் போராட்டம்.
  46. டாஸ்மாக்கும்…. சத்து டானிக்தான். 😂 ஆனால் என்ன அதை குடிக்கிறவன் சத்தம் இல்லாமல் மேல்லோகம் போகிறான். 😜 அதற்குள் விசச் சாராயம் குடித்து இறந்தவனுக்கு… 10 லட்சம் ரூபாய், பம்பர் பரிசு. 😂 இது தெரியாமல்… இங்கை நின்று குப்பை கொட்ட வேண்டி இருக்கு. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.