Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87988Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்7Points31956Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்5Points19112Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்4Points7045Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/15/25 in all areas
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 17) மழை காரணமாக பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 33 புள்ளிகள் 2) ஏராளன் - 31 புள்ளிகள் 3) ரசோதரன் - 31 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 29 புள்ளிகள் 5) கிருபன் - 29 புள்ளிகள் 6) வீரப்பையன் - 29 புள்ளிகள் 7) புலவர் - 27 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 27 புள்ளிகள் 9) சுவி - 26 புள்ளிகள் 10) வசி - 23 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 23 புள்ளிகள் 12) வாதவூரான் - 23 புள்ளிகள் 13) கறுப்பி - 23 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 23 புள்ளிகள் 15) வாத்தியார் - 21 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 17, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.2 points
-
பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை
பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே கட்டுரை தகவல் பென்னி லு பிபிசி சைனீஸ் விபெக் வெனிமா பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் 37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார். 1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. சிறுவயதில், மற்ற குழந்தைகளைப் போலப் பள்ளிச் சீருடையுடன் செல்வதே லீயின் கனவாக இருந்தது. ஆனால், அவர் நிறைய ஏளனத்தைச் சந்தித்தார். சில குழந்தைகள் அவரை "வீணானவர்" என்றும், அவரால் "சாப்பிட மட்டுமே முடியும், வேறு எந்தப் பயனும் இல்லை" என்றும் கூறினர். "இது என்னை மிகவும் காயப்படுத்தியது," என்று லீ கூறுகிறார். லீக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, கால்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவரால் நடக்க முடியும் என்று அவரது பெற்றோர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மேலும் கடன் வாங்கி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அந்த அறுவை சிகிச்சை மீது லீ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். "நான் வார்டில் குணமடைந்து வந்தபோது, மற்ற குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் நான் சிரித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் என்னால் விரைவில் ஒரு சாதாரண மனிதரைப் போல நடக்க முடியும் என்று நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார். ஆனால், அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது. லீயின் நடக்கும் நம்பிக்கை சிதைந்ததுடன், அவர் ஆழமான மன அழுத்தத்திற்கு ஆளானார். தன் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதைப் போல உணர்ந்த அவர், தன் தாயிடம் தான் இறந்துவிட விரும்புவதாகக் கூறினார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருதுவர் லீ சீனாவின் ஐந்து புனித மலைகள் மற்றும் ஹுவாங்ஷன் மலை, அத்துடன் சீனப் பெருஞ்சுவர் அனைத்திலும் ஏறியுள்ளார். ஆனால், அவருடைய தாயார் அவரிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறினார். "நாங்கள் வயதான காலத்தில் பேசுவதற்கு ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக உன்னை வளர்க்கிறோம். ஒரு பூனையோ நாயோ பேச முடியாது, ஆனால் உன்னால் பேச முடியும்," என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் ஆழமாகப் பதிந்தன. "எனக்காக என் பெற்றோரும் குடும்பத்தினரும் எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்று நான் நினைத்தேன். கண்ணீர் விட்டு அழுதேன். நான் எனக்காக மட்டுமல்ல, அவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன்," என்கிறார் லீ. அதன்பிறகு சிறிது காலத்திலேயே, வெளியூர் நபர் ஒருவர் கிராமத்திற்கு வந்து, கோவில்களில் ஊதுபத்தி விற்க மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தேடினார். அந்த நபர், லீ அந்த நேரத்தில் அவரது தந்தையின் மாதச் சம்பளத்திற்குச் சமமான தொகையை வீட்டிற்கு அனுப்புவார் என்று உறுதியளித்தார். "என் பெற்றோர் அதை உறுதியாக எதிர்த்தனர். ஆனால், பணம் சம்பாதிக்கவும், என் குடும்பத்தின் சுமையைக் குறைக்கவும் எனக்கு இது ஒரு வாய்ப்பாகத் தெரிந்தது," என்று லீ கூறுகிறார். அவர் அந்த நபருடன் செல்ல ஒப்புக்கொண்டார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே தெருவில் பிச்சை எடுக்க நேரிட்ட துயரம் ஆனால், வேலை குறித்த வாக்குறுதி ஒரு ஏமாற்றுவேலை என்று லீ விரைவில் அறிந்தார். அந்த வெளியூர் நபர் ஒரு பிச்சை எடுக்கும் கும்பலை நடத்தி வந்ததாக மருத்துவர் லீ கூறுகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, அவர் மற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனது புதிய "முதலாளியுடன்" கழித்த முதல் நாள் இரவில், மற்ற குழந்தைகளில் ஒருவர், கடினமாக உழைக்கவில்லை என்றால் அடிக்கப்படுவீர்கள் என்று லீயை எச்சரித்தார். இது உண்மையாகவும் ஆனது. அடுத்த நாள் காலையில், லீ சட்டை இல்லாமல், நாணயங்களுக்கான ஒரு கிண்ணத்துடன், அதிக அனுதாபத்தைத் தூண்டும் வகையில் அவரது கால்கள் முதுகுப்புறமாக முறுக்கப்பட்ட நிலையில் நடைபாதையில் விடப்பட்டார். மக்கள் தன் கிண்ணத்தில் பணம் போடுவது ஏன் என்று லீக்கு முதலில் புரியவில்லை. அப்போது, பாதசாரிகள் அவரிடம், பள்ளியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. "என் சொந்த ஊரில், பிச்சை எடுப்பது அவமானகரமானது. நான் அதையே செய்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்திருக்கவில்லை. உண்மை தெரிந்தபோது நொறுங்கிப் போனேன்," என்று லீ கூறுகிறார். லீ ஒரு நாளைக்குச் சில நூறு யுவான்களைச் சம்பாதிக்க முடிந்தது – இது 1990களில் ஒரு பெரிய தொகையாகும் – ஆனால் அது அனைத்தும் அவரது முதலாளியிடம் சென்றது. "நான் மற்ற குழந்தைகளை விடக் குறைவாகச் சம்பாதித்தால், அவர் நான் சோம்பேறித்தனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி, சில சமயங்களில் என்னைத் தாக்குவார். அதனால் அந்த ஆண்டுகள் மிகவும் வேதனையாக இருந்தன." என்று அவர் கூறுகிறார். அடுத்து வந்த ஆண்டுகளில் மற்ற குழந்தைகள் ஓடிவிட்டனர் அல்லது காவல்துறையால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற உறுதியுடன் லீ அங்கேயே தங்கினார். காவல்துறை உதவி வழங்கிய போது, அவர் மறுத்துவிட்டார். ஏழு ஆண்டுகளாக கோடை மற்றும் குளிர்காலத்தில், லீ நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்தார். "அது நரகத்தில் வாழ்வது போல் இருந்தது. நான் வெட்கப்பட்டேன், கண் தொடர்பைத் தவிர்த்தேன். பரிதாபத்தைத் தூண்டுவதற்காக என் காலை வலி நிறைந்த நிலையில் பின்புறமாக முறுக்கிக் கொள்வேன். பிச்சை எடுப்பதைத் தவிர்க்க மழை அல்லது இருளுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்," என்று அவர் பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் கூறினார். ஒவ்வொரு புத்தாண்டுக்கு முந்தைய தினம் அவர் வீட்டிற்கு அழைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் தன் பெற்றோரை ஆசுவாசப்படுத்துவார். "ஆனால், அழைப்புக்குப் பிறகு, நான் என் அறையில் அழுது கொண்டிருப்பேன். நான் தெருவில் பிச்சை எடுக்கிறேன் என்பதை அவர்களிடம் சொல்ல முடியவில்லை." என்று அவர் கூறுகிறார். இப்போதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வேதனை நீங்கவில்லை எனக் கூறும் அவர், "பிச்சை எடுத்தது ஆழமான உளவியல் காயங்களை விட்டுச் சென்றது - நான் இன்னும் அதைப் பற்றி கொடிய கனவு காண்கிறேன். அது ஒரு கனவு மட்டுமே என்று அறிந்து நிம்மதியுடன் எழுந்திருக்கிறேன்." என்கிறார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மலையேறுவது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக மருத்துவர் லீ கூறுகிறார். கல்வி மூலம் ஒரு புதிய பாதை லீ தெருவில் ஒரு செய்தித்தாளைக் கண்டெடுத்து, அதில் தனது பெயரில் உள்ள எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடிந்ததை உணர்ந்தபோது எல்லாம் மாறியது. அப்போது 16 வயதான அவர், வீட்டிற்குத் திரும்பி இறுதியாகப் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தார். "என்னால் படிக்கவோ எழுதவோ முடியாது, கல்வி மூலம் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும்," என்று அவர் நினைத்தார். அந்த நேரத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது குற்றமாக ஆக்கும் புதிய கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் லீ கேள்விப்பட்டார். அவர் தனது முதலாளியிடம் தான் தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார். தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்த போது, அவர் உண்மையில் எப்படி வாழ்ந்து வந்தார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரைச் சுரண்டியவர் உறுதியளித்ததை விட மிகக் குறைவான பணத்தை அவர்களுக்கு அனுப்பியிருந்ததைக் கண்டு லீ கோபமடைந்தார். தனது பெற்றோரின் ஆதரவுடன், லீ ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் வகுப்பில் சேர்ந்தார். அங்குப் படிக்கும் மாணவர்கள் அவரை விட 10 வயது இளையவர்கள். அவர் முதல் நாள் பள்ளிக்குச் சென்றபோது, குழந்தைகள் அவரது மேசையைச் சுற்றி மொய்த்தனர் – ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. "நான் வருத்தப்படவில்லை - அதற்கு முன்பு நான் நிறைய ஏளனங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருந்தேன். இப்போது, ஒரு மாணவனாக, நான் கற்றலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார். லீ மிகவும் அர்ப்பணிப்புள்ள மாணவராக ஆனார், இருப்பினும் அவரது உடல்நிலை கழிப்பறைக்குச் செல்வது போன்ற வேலைகளைக் கூடச் சிரமமாக்கியது. "கழிப்பறைக்குச் செல்ல நிறைய முயற்சி தேவைப்படும். அதனால் நான் பெரும்பாலும் பள்ளியில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்," என்று அவர் கூறுகிறார். தளர்வில்லாத உறுதியுடன், லீ ஒன்பது ஆண்டுகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். அவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளை விளையாட அழைத்து, பின்னர் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்பார். கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவரது உடல்நிலை அவருக்கு இருந்த வாய்ப்புகளை குறைத்தது. ஆனால், அவர் மருத்துவத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். "தான் ஒரு மருத்துவரானால், என் சொந்த நிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம், என் குடும்பத்திற்கு உதவலாம், உயிர்களைக் காப்பாற்றலாம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கலாம்," என்று அவர் நினைத்தார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, கல்லூரிக்குச் செல்ல, லீ தனது மொபிலிட்டி ஸ்கூட்டரில் பல மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. 25 வயதில் லீ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குள்ள வசதிகள் அவருக்கு மிகவும் அணுகக்கூடியதாக இருந்தன. ஆனால், செய்முறை வகுப்புகள் மிகவும் கடினமானதாக இருந்ததை அவர் கண்டார். "சக மாணவர்கள் ஆசிரியரைப் பின்தொடர்ந்து நோயாளிகளைப் பார்க்கச் செல்ல அல்லது இன்டர்ன்ஷிப்பின் போது வார்டுகளுக்கு இடையில் ஓட முடிந்தாலும், எனது நடமாடும் பிரச்னைகள் அதைக் கடினமாக்கின. மற்றவர்கள் ஒரு நாளில் கற்றுக்கொண்டதை நான் கற்றுக்கொள்ள அதிக நேரம் ஆகும்." என் றார். லீ தான் பலமடைய வேண்டும் என்று உணர்ந்தார். மலை ஏறுதலைத் தொடங்க முடிவு செய்தார். தனது முதல் மலையேற்றத்தில், தைய் மலையின் உச்சியை அடைய அவருக்கு ஐந்து பகலும் இரவும் ஆனது. அவரது கைகளும் கால்களும் வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டபோதும், அவர் கைவிடவில்லை. ஒவ்வொரு கல் படியையும் தனது பிட்டத்தைப் பயன்படுத்தி நகர்ந்து ஏறினார். மருத்துவர் லீ தனது மலை ஏறும் காணொளிகளைப் பகிர்ந்தபோது, அது இந்த கோடையில் வைரலாக மாறியது. மலை ஏறுவது அவருக்கு இப்போதும் ஒரு விருப்பமான விஷயமாக உள்ளது. இப்போது மருத்துவர் லீ, ஜின்ஜியாங்கில் ஒரு சிறிய கிராமப்புற கிளினிக்கை நடத்தி வருகிறார். அவர் இரவு பகலாகப் பணி செய்ய தயாராக உள்ளார். அவரது நோயாளிகள் அவரைத் தங்களின் "அற்புத மருத்துவர்" என்று அழைக்கிறார்கள். "என் சொந்தக் கைகளால் நோயாளிகளைக் கவனிப்பது, என் அண்டை வீட்டாரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது – இது எனக்கு எல்லாவற்றையும் விட அதிக திருப்தியை அளிக்கிறது," என்று அவர் கூறுகிறார். உலகம் முழுவதும் சீன சமூகத்திடம் முழுவதும் அவரது கதை சென்றடைந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர், இது மக்களின் மனப்பான்மையை மாற்ற உதவும் என்று நம்புகிறார். "சிலர் மாற்றுத்திறனாளிகளைப் பயனற்றவர்களாகப் பார்க்கிறார்கள். உணவகங்களில் நான் அமர்ந்திருக்கும்போது பிச்சைக்காரன் என்று தவறாகப் புரிந்துகொண்டு, உணவு இல்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். நான் சிரித்துவிட்டு வெளியேறுவேன் - பெரும்பாலான மக்கள் கனிவானவர்கள்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, ஒரு கிராமப்புற கிளினிக்கை நடத்துவதை மருத்துவர் லீ விரும்புகிறார். நம்பிக்கை மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கை லீயைச் சுரண்டியவர் குறித்து ஏன் புகார் அளிக்கவில்லை என்று பலர் அவரிடம் கேட்டுள்ளனர். "நான் கடந்த காலத்தைக் கடந்த காலத்திலேயே விட்டுவிட முடிவு செய்தேன்," என்று அவர் கூறுகிறார். "அந்த ஏழு ஆண்டுகள் ஒரு வேதனையான அனுபவம், ஆனால் அவை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன." லீயின் பயணம் அவரது கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. "பள்ளிக்குச் செல்ல முடிந்த பிறகு, மற்றவர்களின் கருத்துகள் அல்லது மதிப்பீடுகள் பற்றி நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். அந்த விஷயங்கள் அர்த்தமற்றவை என்று நான் உணர்ந்தேன். எனது நேரத்தையும் ஆற்றலையும் படிப்பதிலும், என் வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதிலும் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார். பல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்கள் தங்களை மதிப்பிடுவார்கள் அல்லது கேலி செய்வார்கள் என்று பயப்படுவதால் "முன்னோக்கிச் செல்ல அஞ்சுகிறார்கள்" என்று அவர் கூறுகிறார். "ஆனால், என்னைப் பொறுத்தவரை, அது முக்கியமில்லை. நான் வளாகத்திலும் நகரங்களிலும் வகுப்புகளுக்காகவோ, பட்டறைகளுக்காகவோ, அல்லது எனது வேலை மூலம் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுவதற்காகவோ குந்திக் கொண்டும், தவழ்ந்தும் செல்கிறேன். அதைச் செய்யும்போது நான் நம்பிக்கையுடன் இருப்பதாக நினைக்கிறேன். நான் மற்றவர்களின் பார்வையைப் பற்றி இப்போது கவலைப்படுவதில்லை." என்கிறார். பொதுமக்களுக்கு அவர் இந்த அறிவுரையையும் கூறுகிறார்: "நம் வாழ்க்கை மலைகளைப் போன்றது - நாம் ஒன்றில் ஏறுகிறோம், அதற்கு முன்னால் இன்னொன்று உள்ளது. நாம் தொடர்ந்து பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்." "ஒருவர் எப்போதும் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும், தங்கள் கனவுகளை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்." மருத்துவர் லீ சுவாங்யே பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் பேசினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crexdg0lnx0o2 points
-
பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை
டாக்டர் லீ க்கு வாழ்த்துக்கள். அந்த பெடியனை பார்….நீயும் இருக்கிறியே என சராசரித் தமிழ் பெற்றார் திட்ட இன்னுமொரு உதாரணபுருசர் 🤣2 points
-
சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
(2030 தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் இருந்து …) தம்பிங்க இத உன்னிப்பா கவனிக்கணும்… இத போலத்தான் 2026 இல என் வீட்ல குண்டு வச்சாங்க. அண்ணி கிச்சன்ல இருந்தா… மூத்தவன் அப்பதான் நாதக மாநில துணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்று வெளியூர் கலந்தாய்வுக்கு போயிருந்தான்… சின்னவன் இங்கிலீஸ் லிட்டரேச்சர் டியூசன் போயிருந்தான்…. தீடீர்ன்னு பார்த்தா எவனோ ஒரு ஆயிரம் டன் அணுகுண்ட என் வீட்டு உள்ளார வச்சிட்டு ஓடீட்டான்… பொலிசே பதறிடிச்சு…உள்ள வரமாட்டேன் என்னுட்டானுக… அமெரிக்க அணு விஞ்ஞானிகள் கூட கை விட்டுட்டானுக…. கிட்டதட்ட ஒட்டு மொத்த தெற்காசியாவே சாம்பல் ஆகும் தருணம்… அப்பதான் பாக்கிறேன்…. அந்த குண்டுக்கு பக்கத்தில்லே அதுக்கு எனர்ஜி வேணும்ல எனர்ஜி… அதுதான் மின் வலு… மின் வலு கொடுக்கணும்ணு நாலு 3அ மின்கலத்தை (3A battery) வச்சிருந்தானுங்க… விடுவேனா நான்…எங்க அண்ணன் தந்த டிரெயினிங் அப்படியே என் மனசுல ரிப்ளே ஆச்சு…. மெதுவா அது கிட்ட போய் என் வாயாலயே அந்த கலங்களை ஒண்ணு ஒண்டா கழட்டி எடுத்தேன்… இத White House situation ரூம்ல இருந்து பார்த்த அமெரிக்க அதிபர் பரன் டிரம்ப்… சீமான் சாதிச்சுட்டான்ப்பா என டொனால்டு கிட்ட அழுதுகிட்டே சொன்னார். (கூட்டத்தில் புதிதாக பள்ளிகூடத்தில் இருந்து நேற்று கட்சியில் சேர்ந்த தம்பிகள் விசில் பறக்கிறது)2 points
-
யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!
ஏன்? செவ்வந்தியை போன்ற பெண் கிளிநோச்சியில் இருந்துள்ளார் , ஆகவே யாழிலும்(யாழ் களத்தில) பல செவ்வந்திகள்,பத்மேக்கள்,சஞ்ஞீவிக்கள்.ஜீகே பாய்,மொகமட் எல்லாம் இருப்பினம் என்ற பயமா?🤣2 points
-
சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
யாழ் கருத்துக்களத்தின் தீவிர சீமான் எதிர்ப்பாளர் அதி தீவிர விஜய் ஆதரவாளர் ஆகிவிட்டார். மேலதிக நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம். 😁1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எங்கேயோ ஒரு மூலையில் எதோ ஒரு அப்பாவி இந்த மழையால் பாதிக்கப்பட்டிருப்பான் 🙂 ஆனாலும் அவன் நம்பிக் கொண்டிருப்பான் நாளை நமதே என்று 😇1 point
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஐநா சபை என்ற ஒன்றை பாதுகாப்பிற்கு வைத்துக்கொண்டுதான் உலகில் அனைத்து படுகொலைகளும் அரங்கேறுகிறது ........ இவர்கள் கொலையாளிகளை பாதுக்காவே இருக்கிறார்கள். இறந்துபோன யாருக்கும் எந்த தீர்வும் கிடைப்பதில்லை.1 point
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
செய்வினை, செயற்பாட்டு வினை எல்லாம் தாறுமாறாக ஓடுகிறது😂!1 point
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
வர வர சாவச்சேரி ஒரு மார்க்கமாய்த்தான் போகுது. 🙃 தனங்கிளப்பு ரோட்டிலை ஒரு நன்னடத்தை பள்ளிக்கூடம் கட்டி திருத்தியெடுக்கத்தான் இருக்கு..... இடம் தவறணைக்கு அங்காலை.....சுடலைக்கு இஞ்சாலை 😂1 point
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
எங்களுக்கே... செவ்வந்தியை பார்க்க பாவமாய் இருக்கு, வக்கீல் சுமந்திரனை பிடித்து, ஆளை ஜாமீனில் வெளியே எடுத்து விடுங்க. 😂1 point
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
பார்த்தேன், மனசுடைந்தேன். வெலிக்கடைக்கு சென்று பார்ப்பது ஒன்றும் எனக்கு புதுசு இல்லை.😊 மூக்குத்தியை மூக்கில் தான் குத்த முடியும்.1 point
-
சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி
சிறுகதை சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 25 செப்டம்பர் 2025 * ஓவியம் - AI கூட்டங்கூட்டமாகநின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்னையே இப்பிடி உலுக்கியிருக்கெண்டால் லக்கியாவின்ர குடும்பத்துக்கு எப்பிடியிருக்கும்?’ உள்ளங்கை வியர்த்துக்கொட்டுகிறது. பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தபோது, என் சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தைவிட என் இதயம் அதிக சத்தத்தில் அலறுகின்றது. யார், யார் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பீதி கடந்துசெல்வோரை நிமிர்ந்து பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கிறது. “Instagram, twitter எண்டு எல்லாத்திலும் படம்போடுற, கருத்திடுற வேலை எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடு! ஆர் என்ன சொன்னாலும் சொல்லிப்போட்டுப் போகட்டும். பள்ளிக்கூடம் போறனா, வாறனா எண்டிருக்கவேணும். படிப்பைத்தவிர வேறையொண்டும் உன்ரை வேலையில்லை, விளங்கிச்சுத்தானே?” விடிந்ததிலிருந்து குறைந்தது ஐஞ்சு தடவையாவது அம்மா சொல்லியிருப்பா. ‘பீற்றரைப் பாத்தால், கொலைசெய்வான், அதுவும் துடிக்கத்துடிக்கக் கத்தியாலை வெட்டிக்கொலைசெய்வான் எண்டு சொல்லேலுமே?’ மீளமீள எனக்கு அதே நினைப்பாகவிருக்கிறது. இலக்கியாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியிருக்கிறோம். அவளின் படம் மேடையின் கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பப் பாடசாலை graduation உடுப்பில், தடித்த உதடுகள் மெல்லப் பிரிந்த புன்சிரிப்பும், இரு தோள்களிலும் படர்ந்திருந்த சுருட்டைத் தலைமயிருமாக இலக்கியா மிக அழகாக இருக்கிறாள். “நேற்றுவரை எங்களோடை இருந்த லக்கியா இண்டைக்கு உயிரோடை இல்லை எண்ட செய்தி எங்கள் எல்லாரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கு. உங்கடை சக மாணவி ஒருத்தி கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டிருக்கிறா. கோரமான இந்தச் செய்தி தரக்கூடிய மன அழுத்தத்தையும் சோகத்தையும் சமாளிக்கிறது லேசான விஷயமில்லை. இதைக் கடந்துசெல்கிறதுக்கு ஏதாவது உதவி தேவைப்படுறவை தயவுசெய்து எங்கட கவுன்சிலர் மிசிஸ். ஜோனோடை கதையுங்கோ. லக்கியான்ரையும் பீற்றரின்ரையும் குடும்பங்களுக்கு எங்கடை ஆழ்ந்த அனுதாபங்களைச் சொல்லுறதைத்தவிர வேறை என்னத்தைச் செய்யலாமெண்டு எங்களுக்கும் தெரியேல்லை. இப்பிடியான கோரச் செயல்களின் விளைவுகள் எங்கட முழுச் சமூகத்தையும் பாதிக்குது… உங்கட வெறுப்பை, கோபத்தை, ஏமாற்றத்தை எல்லாம் எப்பிடி ஆரோக்கியமான முறையில வெளிப்படுத்தலாமெண்டு நீங்க எல்லாரும் அறிஞ்சிருக்கிறது அவசியம்,” தாழ்ந்த குரலில் சொற்களிடையே இடைவெளி விட்டுவிட்டுப் பிரின்சிப்பல் பேசுகின்றார். அவரின் கண்களும் கலங்கியிருக்கின்றன. “லக்கியாவுக்கு நிகழ்ந்த சோகம் தங்களுக்கும் நிகழலாமோ எண்டு அஞ்சுறவை, அப்பிடி நிகழாமலிருக்கிறதுக்கு என்னெல்லாம் செய்யலாமெண்டு சொல்ற சில கையேடுகளை அலுவலகத்தின்ர முன்பக்கத்தில வைச்சிருக்கிறம். அப்படிப் பயப்படுகிறவையும் தயவுசெய்து என்னை வந்து சந்தியுங்கள்.” பிரின்சிப்பலுக்குப் பக்கத்தில் நின்றிருந்த மிசிஸ். ஜோன் தொடர்கிறார். அஞ்சலி முடிந்து வகுப்புக்கு அமைதியாய்போன எங்களைப் பார்த்து, “படிக்கிற மனநிலை இண்டைக்கு ஒருத்தருக்கும் இருக்காது. உங்கட கரிசனைகளைப் பற்றிக் கதைக்கிறதுக்கு ஆராவது விரும்பினா, என்னோடை கதைக்கலாம். அல்லது நாங்க லைபிரரிக்கும் போவம்,” என்கிறார் சயன்ஸ் ரீச்சர் மிஸ்ரர் ரைலர் ஆதரவானதொரு குரலில். இங்கிலிஸ் ரீச்சர் மிசிஸ் நிமாலும் லைபிரரிக்கே வருகிறா. பிறகு ஜிம்மிலை விளையாட்டுப்பாடத்தை முடித்துக்கொண்டு லஞ்சுக்குப் போகிறோம். “AIஇன்ர உதவியோடை எங்கட படங்களையும் உடுப்பில்லாமல் பண்ணித் தங்களுக்கை பகிர்ந்துகொள்ளுவினமோ எண்டு எனக்குப் பயமாய்க்கிடக்கு! இவங்க எவ்வளவு அருவருப்பான விஷயங்களைச் செய்யிறாங்க.” பக்கத்திலிருந்த கிரிஸ்ரினா குசுகுசுக்கிறாள். அவளின் தொண்டை கட்டிப்போயிருக்கிறது. “பீற்றருக்கு லக்கியாவிலை சரியான விருப்பமிருந்தது, அதாலை அவளுக்கு அவனைப் பிடிக்கேல்லை எண்டதை அவனாலை ஏற்றுக்கொள்ள முடியேல்லை. அதுதான் இத்தனை பிரச்சினை,” தலையைக் குனிந்தபடி சொல்கிறான் ஈதன். “அவை விரும்பினா, நாங்க சம்மதிக்கோணும், எங்களுக்கெண்டு விருப்பு வெறுப்பு ஒண்டுமில்லையெண்டு அவை நினைக்கினம்.” பெருமூச்செறிகிறாள் அக்சயா. “ஓம், ஆம்பிளையளுக்கு வாயிருக்கு, பொம்பிளையளுக்குக் காதுமட்டும்தானிருக்கு. என்னைத்தை அவை சொன்னாலும் நாங்க கேட்டுக்கொள்ள வேண்டியதுதான், திருப்பிக் கதைக்கக்கூடாது. கதைச்சால் எல்லாவகையாலும் எங்களைத் துன்புறுத்துவினம், பிறகு கொலையும்செய்வினம்” பல்லை நெருமுகிறாள் ஆர்த்தி. “வகுப்பிலை பீற்றர் இருக்கிறதே தெரியாது. இந்தப் பூனையும் பால்குடிக்குமோ எண்டமாதிரி அத்தனை அமைதியாய் இருந்தான்.” தலையை வலமும் இடமுமாக ஆட்டுகிறாள் திரேசா. “இனி அம்மா பார்க்கிலை விளையாடப்போறதுக்கும் விடமாட்டா.” கவினின் முகம் வாடிப்போயிருக்கிறது. “கேட்டவுடனை லக்கியாவின்ர அம்மா மயங்கிப்போனாவாம். பாவம் லக்கியா. பெரிய சிங்கரா வரவேணுமெண்டு கனவுகண்டவள். எனக்கிப்ப பீற்றரைக் கொல்லோணும் போலையிருக்கு!” மேசையில் முஷ்டியால் அடிக்கிறாள் மரியா. அவளின் கண்களிலிருந்து வடிந்தோடிய கண்ணீர் அவள் கன்னங்களை முழுமையாக நனைக்கிறது. “பீற்றரின்ர தாயும் தகப்பனும் ஆள் மாறிவந்திட்டியள், அவன் அப்பிடியான ஆள் இல்லையெண்டு பொலிஸ் காருக்குப் பின்னாலை ஓடினவையாம், பாவம் அதுகள், அதுகளுக்கு மகனைப் பற்றித் தெரியேல்லை,” அலெக்ஸ் சொல்ல, “ஓமோம், அவன் எங்கே செய்தவன், பிழையாய்த்தான் கைதுசெய்து போட்டினம்!” கோவமாக எள்ளல் செய்கிறாள் லீசா. எனக்கு என்னத்தைச் சொல்வதென்று தெரியவில்லை. பீற்றரின் அம்மாவும் அப்பாவும் தங்கைச்சியும் எனக்கு முன்னால் அழுதுகொண்டு நின்றிருப்பதுபோலவும், இலக்கியாவின் அம்மா தற்கொலை செய்வதற்கு முயற்சிப்பதுபோலவும் எனக்குப் பிரமையாக இருக்கிறது. கண்களைக் கண்ணீர் மறைக்கிறது. சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கமறுக்கிறது. லஞ்சுக்குப் பின் வகுப்புக்குப் போகிறோம், கவுன்சிலர் மிசிஸ். ஜோன் எங்களுக்காக அங்கு காத்திருக்கின்றா. “என்னோடை கதைக்க விரும்புறவை என்ர அலுவலகத்துக்கு வரலாமெண்டது உங்களுக்குத் தெரியும். இப்ப நான் சிலதைப் பொதுவாய்க் கதைக்கவிரும்புறன்,” குரலைச் செருமிக்கொண்ட அவ ஆரம்பிக்கின்றா. “உங்கட வகுப்பிலை இருந்த ஒரு மாணவி கோரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள், ஒரு மாணவன் அதற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறான், இது ஜீரணிக்கமுடியாத பெரிய சோகம்... உங்களுக்குள்ளை பலவிதமான உணர்ச்சிகள் அலைமோதிக் கொண்டிருக்கும். அவை எதுவுமே தப்பானதில்லை. எங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுறதுக்காக நாங்க எல்லோருமாய்ச் சேர்ந்து ஒரு மூச்சுப்பயிற்சி செய்துபாப்பமா? பாதங்களை நிலத்தில வைச்சிருந்தபடி, கதிரையில பின்னுக்குச் சாய்ந்து செளகரியமாக இருங்கோ. முதலில 1 2, 3, 4 என மனசுக்குள்ளை எண்ணினபடி ஆழமா மூச்செடுங்கோ. பிறகு 1 2, 3, 4 என மெதுவாக எண்ணிமுடிக்கும்வரைக்கும் மூச்சைப் பிடிச்சிருங்கோ. அதுக்குப் பிறகு 1 2, 3, 4 என மனசுக்குள்ளை சொல்லிக்கொண்டு மூச்சை மெதுவா வெளியேற்றுங்கோ. பிறகு 4 செக்கன் காத்திருந்திட்டுத் திரும்பவும் இப்பிடி மூன்று முறை செய்வம், சரியா?” மிசிஸ். ஜோனுடன் சேர்ந்து அப்படிச் செய்தபோது இதயம் படபடப்பது சற்றுக் குறைந்திருப்பதுபோல எனக்குத் தோன்றியது. “கொஞ்சம் ரிலாக்ஸாவிருக்கா? மன அழுத்தத்தை எப்போதாவது உணரும்போது இப்படிச் செய்துபாருங்கோ. 13 வயசு - கொஞ்சம் கஷ்டமான காலகட்டம்தான். தங்கியிருத்தலிலிருந்து விலகிச் சுயாதீனமா இருக்க முயற்சிக்கிற இந்தக் கட்டத்தில நிறையக் குழப்பங்கள் இருக்கும். அதோடை பருவமடைகிற காலம் இது, உங்கட உடம்பிலை சுரக்கிற ஓமோன்களின்ர தாக்கத்தையும் நீங்க சமாளிக்க வேண்டியிருக்கும். ஆரம்பப் பாடசாலை ஒன்றிலையிலிருந்து இந்த இடைநிலைப் பாடசாலைக்கு வந்திருக்கிறீங்க. உங்களில் சிலருக்கு நெருக்கமான ஒரு நட்பு இன்னும் கிடைக்காமலிருக்கலாம். தனிமையை, வெறுமையை நீங்க உணரக்கூடும். பாடங்கள் சிரமமானதாக இருக்கலாம். வீட்டில உங்களிட்டை எதிர்பாக்கிறதுகளை உங்களால செய்யமுடியாம இருக்கலாம். இந்த அழுத்தங்கள் எல்லாத்தையும் தாங்கிற சக்தி உங்களுக்கு இல்லாமலிருக்கலாம்... தயவுசெய்து உங்கட உணர்ச்சிகளைப் பற்றிப் பெற்றோரோடையோ, ஆசிரியர்களோடையோ அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்களோடையோ மனம்விட்டுக் கதையுங்கோ. என்ர கதவு உங்களுக்காக எப்பவும் திறந்திருக்கும். வார விடுமுறை கழிஞ்சு பாடசாலைக்குத் திரும்பிவரேக்கை எல்லாருக்கும் கொஞ்சமாவது அமைதி கிடைக்குமெண்டு எதிர்பாப்போம்.” மிசிஸ் ஜோன் போனதும், மீளவும் லைபிரரிக்குப் போகிறோம். பள்ளிக்கூடம் முடிந்ததும், பீற்றரின் வீட்டருகில் என்ன நிகழ்கின்றதென அறியும் ஆர்வத்தில் வழமையில் வீட்டுக்குப் போவதுபோல எங்களின் தெருவில் திரும்பாமல், அதற்கு முன்பாகவிருந்த தெருவில் திரும்புகிறேன். பின் அங்கிருந்து எங்களின் தெருவை நோக்கி நடக்கிறேன். எங்களின் தெருவின் தெற்குப் பக்கத்தில்தான் பீற்றரின் வீடிருந்தது. அவனின் வீட்டுக்கு அண்மையில் செல்லச்செல்ல என் உடல் நடுங்குகிறது, நெஞ்சடைக்கிறது. ஆனால், அவனின் வீட்டுக்கு வெளியில் எந்தச் சஞ்சாரமும் இருக்கவில்லை. அவனின் வீட்டைக் கடந்து எங்கள் வீட்டுக்கு எப்படிப் போனேன் என்றே தெரியவில்லை, கால்கள் தடுமாறுகின்றன. எங்களின் வீடு வழமைவிட அதிக நிசப்தமாக இருப்பதுபோலிருந்தது. எதைச் செய்யவும் எனக்குப் பிடிக்கவில்லை. சோபாவில் படுத்துக்கொள்கிறேன். மனம் எங்கெல்லாமோ அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. நேரம்போகப்போக மேலும் துக்கமாகவும், களைப்பாகவும், பசியாகவும் இருக்கிறது. குளிரூட்டியில் இருந்த பீசாவை மைக்கிரோவில் சூடாக்கியபடி instagramஐப் பார்ப்போமா என நினைத்தாலும், அதைப் பார்க்கப் பயமாகவும் இருக்கிறது. இந்தக் கொலையைப் பற்றி அதிலை என்னவெல்லாம் பேசிக்கொள்வார்களோ என்ற என் நினைவைத் தொலைபேசியின் ஒலி குழப்புகிறது. FB messangerஇல் லீசாதான் அழைக்கிறாள். “ஹாய் லீசா” மறுமுனையில் விசும்பல் ஒலி. “ஏய் லீசா, என்ன நடந்தது?” எனக்குள் ஆயிரம் கேள்விகள். “என்ர போனைப் பறிச்சுப்போட்டினம், சுவேதா. கொம்பியூட்டரும் இனி லிவ்ங் ரூமிலைதான் இருக்குமாம். லக்கியா பீற்றருக்குப் போட்ட கொமன்ற்ஸ் பற்றி எனக்குத் தெரியுமோ? அதைப் பற்றி நானும் ஏதேனும் எழுதினேனா? ஏன் அதுகளைப் பற்றி ரீச்சர்மாரிட்டை சொல்லேல்லை எண்டு ஒரே அறுவை.” “ஓ, சொறி லீசா. பீற்றர் ஒரு incel, அவனாலை கேர்ள்ஸ் ஐக் கவரமுடியாதெண்டு லக்கியா அவனை bully பண்ணேக்கை, நீரும் அதைப்பற்றி ஏதாவது எழுதினீரா?” “இல்லை, நான் ஒண்டும் எழுதேல்லே, ஆனா லக்கியான்ர கொமன்ற்றுக்கும், மற்றவை சொன்னதுகளுக்கும் லைக் போட்டனான். அதுதான் வீட்டிலை பெரிய பிரச்சினை” “இங்கையும் என்ன நடக்கப்போகுதோ தெரியாது. பீற்றரின்ர வீட்டுக்காரரைத் தெரியுமெண்டதாலை, நான் அதுக்கொரு கொமன்றும் எழுதேல்லை. ஆனா வேறை ஆக்களுக்கு என்னெல்லாம் எழுதியிருக்கிறன், எதையெல்லாம் லைக் பண்ணியிருக்கிறன் எண்டு பாக்கோணும். அம்மா வாறதுக்கிடையிலை எல்லாத்தையும் அழிச்சுப்போடோணும். சொறி, லீசா, உமக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்கேல்லை.” “இது பொலிஸ் கேஸ் எண்டதாலை என்ன பிரச்சினையெல்லாம் வருமோ தெரியாது எண்டு அப்பா பயப்படுத்துறார். என்ர Instagram எக்கவுண்டையும் அழிச்சுப்போட்டார். அத்தையோடை கதைக்கிறதுக்காண்டி FBஐ விட்டிருக்கினம். போன் இல்லாமல் எனக்கு ஒரே விசராயிருந்துது. ஆரோடையாவது கதைக்கோணும் போலையிருந்து... கடைக்குப் போனவை வருகினம்போலை இருக்கு, பிறகு கதைக்கிறன்.” ஒரு மணித்தியாலத்துக்குள் அப்பாவும் அம்மாவும் வந்திடுவார்கள். எனக்குப் பதற்றமாகவிருக்கிறது. ‘கையும் ஓடேல்லை, காலும் ஓடேல்லை’ என்று இந்த நிலையைத்தான் சொல்கிறவைபோலும். “சுவேதா, இதென்ன லஞ்சுக்குக் கொண்டுபோன சாப்பாடு அப்படியேயிருக்கு, Microwaveக்குள்ள பீசா கிடக்குது. நீ ஒண்டுமே சாப்பிடேல்லையே? கீழை வா!” வந்ததும் வராததுமாக அம்மா சத்தமாகக் கூப்பிடுகிறா. அப்பா மேலே வந்து என் அறைக்கு முன்னால் நிற்கிறார். “சுவேதா, என்ன செய்யிறாய்?" “ஒண்டுமில்ல, எனக்குத் தலையிடிக்குது" “சாப்பிடாட்டிலும் தலையிடிக்கும், வா, வந்து முதலிலை சாப்பிடு" போய்ப் பீசாவை எடுத்துக்கடிக்க ஆரம்பித்தபோது, “கொத்துரொட்டி வாங்கிக் கொண்டுவந்தனான். உதை வைச்சிட்டு அதைச் சாப்பிடு,” என்று அம்மா சொல்ல, அப்பா அதை எடுத்துக்கொண்டுவந்து தருகிறார். எனக்குப் பிடித்த சிக்கன் கொத்து. ஆனால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. “சாப்பிட்டு முடி, உன்னோடை ஆறுதலாய்க் கதைக்கோணும்,” அம்மா சொல்ல என் மனம் குறுகுறுக்கத் தொடங்குகிறது. “சும்மா பீடிகை போடாம நேரடியாய்க் கேளும்,” என்ற அப்பா, அவரே ஆரம்பிக்கிறார். “வகுப்பிலை எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சியாயிருந்திருக்கும். பாவம் அந்தப் பிள்ளை லக்கியா! என்ன பாடுபட்டிருக்கும். நினைச்சுப்பாக்கவே முடியேல்லை. மனசுக்குப் பெரும் கஷ்டமாயிருக்கு. சமூக ஊடகமெண்டு ஒண்டு வந்ததும் வந்தது, அந்தக் காலத்திலை எங்களுக்கிருக்காத பிரச்சினைகளெல்லாம் உங்களுக்கு வந்திட்டுது.” சொல்லிமுடித்துவிட்டு என்னையே உற்றுப்பார்க்கிறார், அவர். “13 வயசிலை மூளை முழுசா வளர்றதில்லை. அதாலை சிந்திச்சுச் செயலாற்றுறது கஷ்டம்தான்... உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நாங்க இருக்கிறம் எண்டது உனக்குத் தெரியோணும், எங்களோடை நீ என்னத்தையும் கதைக்கலாம், என்ன?” என்கிறா அம்மா, உறுதிதரும் குரலில். ‘ம்ம், திட்டம்போட்டு நல்லாய்த்தான் கதைக்கினம். இப்பிடிக் கதைச்சால் நான் விட்ட பிழையெல்லாம் சொல்லுவன் எண்டு நினைக்கினம்போல, ஆனா சொன்னா என்ன நடக்குமெண்டு தெரியும்தானே,’ என்ர மூளை என்னை எச்சரிக்க, நான் எதுவுமே பேசாமலிருக்கிறேன். “இண்டைக்குக் கதைக்கிறது உனக்குக் கஷ்டமாயிருகெண்டா நாளைக்கு ஆறுதலாய்க் கதைப்பம்,” என்ற அம்மாவைத் தொடரவிடாமல், “லக்கியாவோடை எனக்குப் பழக்கமில்லை. பீற்றரோடையும் ஒரு நாளும் கதைச்சதில்லை. நடந்ததுகளைப் பற்றிக் கதைக்கோணுமெண்டால் கவுன்சிலரோடை கதைக்கலாமெண்டு பள்ளிக்கூடத்தில சொன்னவை,” இந்தக் கதை மீளவும் தொடராமல் இருப்பதற்காக அவசரப்படுகிறேன் நான். “எங்களோடை கதைக்கேலாதெண்டால். கவுன்சிலரோடையாவது கதை, என்ன? கதைப்பியோ?” என்ற அம்மாவைப் பார்த்து தலையை மேலும் கீழும் ஆட்டுகிறேன். பின்னர் என்னுடைய அறைக்குப் போன நான் படுக்கையில் விழுந்து குப்புறப் படுத்துக்கொள்கிறேன். அடக்கமுடியாமல் அழுகை அழுகையாக வருகிறது. கொஞ்ச நேரத்தில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வது கேட்கிறது. “நாங்களும் வேலையாலை பிந்தித்தான் வாறம். வீட்டிலை அவள் கதைக்கிறதுக்கும் ஒருத்தருமில்லை. சின்னப்பிள்ளையிலை நீந்துறதுக்கு, சொக்கர் விளையாடுறதுக்கு அதுக்கு இதுக்கெண்டு கூட்டிக்கொண்டுபோனமாதிரி கூட்டிக்கொண்டு போறதுக்கும் எங்களுக்கு இப்ப நேரமில்லை.” “தனியப் போய்வாற வயசு அவளுக்கு இப்ப வந்திட்டுத்தானே. அவளை பிஸியாக்கோணும், விருப்பமான புரோகிராம்களிலை சேத்துவிடோணும். அல்லது Instagram, twitter எண்டு நேரத்தைச் செலவழித்து வீண்பிரச்சினைகளைத்தான் விலைக்கு வாங்கினதாயிருக்கும்.” “ம்ம், வேலையாலை வந்து நீர் சமைக்காட்டிலும் பரவாயில்லை, அவளோடை மனம்விட்டுப் பேசப்பாரும். ஒன்றாய் நேரத்தைக் கழிக்கப்பாரும். தேவைப்பட்டால் சாப்பாட்டைக் கடையிலை வாங்குவம். சமூக வேலை அது இதெண்டு ஓடித்திரியிறதை நானும் குறைக்கிறன்.” “ஓமப்பா, நாங்க வேலையாலை வந்த களைப்பிலை, ‘வா சாப்பிடு’, ‘சாப்பாடு காணுமோ’, ‘homework செய்துபோட்டியோ’, ‘நேரமாகுது படு', எண்டு சும்மா பேருக்குக் கதைச்சால் என்ணெண்டு பிள்ளையள் மனம்விட்டுக் கதைக்கிறது. ஆறுதலாயிருந்து கதைச்சாத்தானே அதுகளும் கதைக்கலாம்.” “அவள் சின்னப்பிள்ளையாயிருக்கேக்கை நீர் அப்பிடிக் கதைச்சனீர்தானே. அப்ப அவள் உமக்கெல்லாம் சொல்லுறவள்தானே. திரும்பவும் அப்பிடியொரு ஐக்கியத்தை உருவாக்கப் பாருமப்பா. இந்த வயசிலை பிள்ளைகளுக்கு வாற உணர்ச்சிகளையும் ஆசைகளையும் நாங்க விளங்கிக்கொள்ள முயற்சிக்கோணும். மனம்விட்டுக் கதைக்கோணும். அப்பிடியில்லாம நெடுகப் பிழைகண்டுகொண்டிருந்தம் எண்டால் எங்களுக்கு ஒண்டும் தெரியவராது.” “ஓம், இதை நாங்க ஒரு wakeup call மாதிரி நினைக்கோணும், பிள்ளை வழிமாறினா, என்னத்தைச் சம்பாதிச்சும் பயனில்லை. இண்டைக்கு முழுக்க வேலையிலை எனக்கு இதே நினைப்பாய்த்தானிருந்துது? லக்கியாவின்ர பெற்றோரின்ர நிலையிலைருந்து யோசிச்சுப்பாருங்கோ, எப்பிடியிருக்கும்?” “ம்ம், பீற்றரின்ர குடும்பமும் பாவம்தான். அவையும் பிசியாக இருந்திட்டினம். இப்ப அவைக்கும் பெருங்கஷ்டமாயிருக்கும்.” “அவனுக்குச் சுயமதிப்பு இருக்கேல்லை. ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தத் தெரியேல்லை. போதாதற்கு எப்பிடிப் பழிவாங்குறது எண்டதைத்தானே ரீவி புரோகிறாம்களும் சினிமாவும் பிள்ளையளுக்குச் சொல்லிக்குடுக்குது. நாங்களும் பிஸியாயிருந்தால் யார் அதுகளுக்கு வழிகாட்டுறது?” அம்மா விசும்புவது கேட்கிறது. “பிள்ளையள் பாதுகாப்பாய் இருக்கோணுமெண்டு போனை வாங்கிக்குடுத்தால், இப்ப அதாலை வேறை பிரச்சினையாய்க்கிடக்கு… அந்தப் பிள்ளை எங்கை போய்வாறள் எண்டதையெல்லாம் கண்காணிச்சுத் திட்டமிட்டுக் கொலைசெய்யிறளவுக்கு மனசிலை அவன் வன்மத்தை வளத்திருக்கிறானே…” அப்பாவின் குரல் உடைகிறது. “சூழலின்ர பாதிப்பிலிருந்து எவ்வளவு தூரம் எங்களாலை பாதுகாக்க முடியுமெண்டு எனக்குத் தெரியேல்லை, எண்டாலும் எங்களாலை ஏலுமானதை நாங்க செய்யோணும்!” அம்மா நா தழுதழுக்கச் சொல்கின்றா. அம்மாவின் விசும்பலும் அப்பாவின் கரிசனையும் என்னையும் விம்மச்செய்கின்றது. படுக்கையில் புரண்டுபுரண்டு படுக்கிறேன். நித்திரைவருவது மாதிரித் தெரியவில்லை. இருந்தாலும், வருமென்ற நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொள்கிறேன். :sri.vije@gmail.com https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9358-2025-09-25-03-40-32?fbclid=IwY2xjawNCrTBleHRuA2FlbQIxMABicmlkETE4bUZFQVBUZjFXZFpMQ2MxAR7ZjRHT7zB7w9ybArj_7I4QgNL7IuNIQlnO6X--cdmYJnMwQGdsYFwE1HgxNw_aem_vZ3_mns0u6NAPvg-Efbvnw1 point
-
சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி
Adolescence என்று ஒரு தொடர் Netflix ல இருக்கிறது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர். நன்றாக எடுக்கப்பட்ட தொடர். பல விருதுகளையும் வென்றிருக்கிறது. இந்தக் கதையும் அதே சம்பவத்தைத்தான் கதைக்கிறது. எம்சமூகத்தைச் சேர்த்து இந்தக் கதை பேசுவது சிறப்பு.1 point
-
சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி
1 point
-
பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை
1 point
- மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி?
சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர். மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா. மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள குறைந்தது 3 மாதம் பயிற்சி தேவை என்கிறார் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த நரம்பியல் மருத்துவரான வி சதீஷ் குமார். மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களால் முடிந்த தூரம் மட்டுமே செல்ல வேண்டும் என்கிறார் சதிஷ் குமார். "பெரும்பாலான மாரத்தான் போட்டிகளில் கட்டணம் செலுத்தி தான் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறுபவர்கள் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று கருதி அவர்கள் உடல் ஒத்துழைக்கும் தூரத்தையும் தாண்டி செல்வது தான் சிக்கல்களுக்கு காரணம்," என்கிறார் சுஜாதா. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் இதய துடிப்பின் முக்கியத்துவம் மாரத்தான், மலையேற்றம் போன்ற தீவிர செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அதற்கான முன் தயாரிப்பின்றி செல்லக்கூடாது என்றும் கூறுகிறார். "தசை, எலும்பு ஆரோக்கியம் இதில் முக்கியமானது. மாரத்தான் போட்டிக்கு முன்பாக நம்முடைய உடல் தகுதியை தீர்மானிக்க சில வழிகள் உள்ளன. இதயம் மற்றும் சுவாசம் சீராக இருப்பது முதன்மையானது. இதய துடிப்பின் அளவை கணிக்க வேண்டும்." என்கிறார் சுஜாதா. இதில் ரெஸ்ட்டிங் ரேட் (resting rate), ரிக்கவரி ரேட் (recovery rate) என்கிற இரண்டு அம்சங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ரெஸ்ட்டிங் ரேட் என்பது நாம் தூங்கி எழுந்த உடன் உள்ள நமது இதயத் துடிப்பின் அளவைக் குறிப்பதாகக் கூறும் அவர், அது 60 - 80 என்கிற அளவில் இருக்க வேண்டும். மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? "முன் அனுபவம் இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் படிப்படியாகத் தான் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்கு பின்பு இதய துடிப்பு அதிகரிப்பது இயல்பானது. ரிக்கவரி ரேட் என்பது நாம் உடற்பயிற்சியை நிறுத்திய பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கால அளவை தான் இது குறிக்கிறது. இந்த அளவை நாம் கண்காணிக்க வேண்டும். 1 நிமிடத்திற்குள் நமது இதய துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்." என்றார். பல்வேறு அம்சங்கள் நாம் இயல்புநிலைக்கு திரும்புவதை பாதிப்பதாகக் கூறும் அவர், "அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தீவிர பணிச் சுமை இருப்பவர்கள் மாரத்தானில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சுவாசம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்." என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் இரு கட்ட பரிசோதனை மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை அவசியம் என்கிறார் சுஜாதா. "நம்முடைய உடலில் அறியப்படாமல் நோய்கள் அல்லது அறிகுறிகள் ஏதேனும் இருக்கின்றவா என்பதை உறுதி செய்து முழுமையான சான்று பெற்றுக் கொள்ள வேண்டும். மலையேற்றம் செல்வதற்கு உள்ளதைப் போலவே மாரத்தான் போட்டிகளுக்கும் உடல்தகுதி சான்று கட்டாயமாக்கப்பட வேண்டும்." என்று தெரிவித்தார். மாரத்தான் ஒடுவதற்கு இதயமும் தசைகளும் பழக வேண்டும் என்கிறார் மருத்துவர் சதீஷ்குமார். "மாரத்தான் போட்டிகளில் அட்ரினலின் அதிக அளவில் வெளியேறும் என்பதால் ஜோன் 2 (Zone 2) என்கிற பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய அதிகபட்ச இதய துடிப்பிலிருந்து ஒரு சீரான அளவில் பயிற்சி மேற்கொள்வதை அது குறிக்கிறது." என்றார். முன் பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாமல் மாரத்தான் சென்றால் இதயத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்று குறிப்பிடுகிறார். அதனை மேலும் விவரித்த அவர், "குறைந்தது ஆறு வார காலம் பயிற்சி எடுத்துக் கொண்டால் தான் அதிகரித்த இதய துடிப்புக்கு நம் உடல் தகவமைத்துக் கொள்ளும். இதயத்தின் மீது சுமை அதிகரிக்கும் போது சமநிலை பாதிக்கப்பட்டு ரத்த சுழற்சி நின்றுவிடும். இதனால் ரத்த நாளங்கள் அடைக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகின்றது." என்றார். மாரத்தான் போட்டி அல்லது பயிற்சியில் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக நிற்க வேண்டும் என்றும் கூறுகிறார். "நம்மால் தொடர முடியாதபோது நம் உடல் அதனை வெளிப்படுத்தும். அதனை புறந்தள்ளிவிட்டு தொடர்வது தவறு." என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி? முதலில் நாம் ஓட நினைக்கும் தூரத்தை தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார் சதீஷ்குமார். "நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 4 மாதம் பயிற்சி அவசியம். உதாரணத்திற்கு 40 கிமீ மாரத்தான் என்றால் 10 கிலோமீட்டரிலிருந்து தொடங்க வேண்டும், வாரத்திற்கு மூன்று நாட்களாவது ஓடி பயிற்சி எடுக்க வேண்டும். அதனை பகுதியாக மேற்கொள்ளலாம். வாரத்தில் ஒருநாள் இடைவெளி இல்லாமல் நீண்ட தூர பயிற்சியில் ஈடுபட வேண்டும். தூரத்தை ஒவ்வொரு வாரமும் சீராக அதிகரிக்க வேண்டும். அதிகரித்த இதய துடிப்பை சமாளிக்க இதயம் பழக வேண்டும், அதற்கான கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crklddknello1 point- மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி?
நேரடியாக மரதன் (~26 மைல்கள்) போட்டிக்குப் போக முன்னர் அரை- மரதன் (~13 மைல்கள்) முயற்சி செய்து பின்னர் மரதன் முயற்சி செய்யலாம். புதிதாக அரை மரதன் ஓடும் ஒருவர் 2 மணி நேரங்களுக்குள் 13 மைல்களை ஓடி முடித்தாலே ஒரு சாதனை தான்! இப்படி இரண்டு மணி நேரங்களுக்குள் ஓடி முடிக்க, ஒரு மைல் தூரத்தை சராசரியாக ~9 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி எடுத்தால் இது சாத்தியம். ஆனால், எங்கள் இதயம் பற்றிய புரிதல், அது இல்லா விட்டால் ஒரு மருத்துவப் பரிசோதனை என்பன அவசியம் (கட்டுரையில் இருப்பது போல). அண்ணளவாக ஒருவரின் அதியுச்ச இதயத் துடிப்பை 220 இல் இருந்து அவரது வயதைக் கணிப்பதால் கணிக்கலாம் (Eg: 220-40=180 bpm). அந்த அதியுச்ச இதயத் துடிப்பினை நெருங்காதவாறு ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி பயிற்சி தான்.1 point- சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
எல்லாம் சரி! இந்த வரிகள் மட்டும் வயிற்றில் புளி கரைக்கிறது! டொனால்டு 2030 வரை இருப்பார் என நினைக்கும் போது, நாம் அதற்கு முதலே போய் விட வேண்டுமென்று தோன்றுகிறது!1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்தப் பாடல் கருப்பு பணம் படத்தில் இடம் பெற்றது. கண்ணதாசன் தயாரித்து நடித்த படம். “பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் கூட தலைவனடி…”, “…போராடாச் செல்பவனே வீராதி வீரனடி போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி..” இந்த வரிகள் என்றும் பொருந்தும்.1 point- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
1 pointகண்டது சந்தோசம் பையா, இணந்திருங்கள்.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நீங்கள் கேட்ட மாதிரியே ஏழாவது விக்கெட்டும் போய்விட்டது பையன் அப்ப பாகிஸ்தான் கி ஜிந்தா பாத் 😂1 point- பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை
இது ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான நல்ல உபயோகமான கட்டுரை ........ மருத்துவர் திரு லீ சுவாங்கியே க்குப் பாராட்டுக்கள் . ......! 👍 நன்றி ஏராளன் ........!1 point- "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்": இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு - இணையத்தில் விமர்சனம்
Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 02:41 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியைப் பார்த்து பேசிய வார்த்தைகள், எகிப்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் சலசலப்பையும், இணையத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதையொட்டி, எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப், "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்," என்று தெரிவித்தார். மேலும், இதைத் தொடர்ந்து டிரம்ப் கிண்டலாக, "இதே வார்த்தையை நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்" என்றும் கூறினார். ட்ரம்பின் இந்தப் பேச்சு, அரசியல் அரங்கில் ஒரு தலைவரை அவரது பணியின் அடிப்படையில் அல்லாமல், தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடுவதாகக் கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த மாநாட்டில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/2277061 point- "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்": இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு - இணையத்தில் விமர்சனம்
இதென்ன கோதரியாய் கிடக்கு, "நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள்" என்று திரைமறைவில் சொல்லாமல் நேருக்கு நேராய் சொல்லியிருக்கிறார் . ..... இதை சொல்லக்கூட முதல்தரமான அமெரிக்காவின் ஜனாதிபதியான அவருக்கு உரிமை இல்லையா . ...... ஜோர்ஜியாவே ஜாலியா எடுத்துக் கொண்டு இருக்கிறார்....அல்லது இதற்காக அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு இத்தாலி போயா சொல்ல முடியும் . ......! 😇1 point- வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்!
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்! adminOctober 15, 2025 வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.10.25) சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய தண்டபாணிக தேசிகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது , வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக எம். கே சிவாஜிலிங்கத்தின் பெயர் காணப்பட்டது தேர்தல் முடிவுகளின் படி, பட்டியல் உறுப்பினராக பெண் உறுப்பினர்களையே தெரிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தமையால் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக சிவாஜிலிங்கம் உறுப்பினராக முடியவில்லை. இந்நிலையில் , வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ததன் ஊடாக அவரது வெற்றிடத்திற்கு , புதிய உறுப்பினராக சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221521/1 point- கருத்து படங்கள்
1 point1 point- யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!
தொழில் ரீதியாக பத்திரிகை நடத்துபவர்களையும், யாழில் கருத்து எழுதுபவர்களையும்… ஒரு தராசில் வைத்து பார்க்கக் கூடாது அல்வாயன். 😁1 point- சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சும்மாவே நல்லா ரீல் வுடுவான்! இன்னும் ஒரு நாலைஞ்சு வருசம் பொறுங்கோ, நல்ல ‘புல்டா போண்டா’ கதை கேட்கலாம்!🤣1 point- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
1 pointஉண்மை.............தோனி ராசியான கப்டன்...........................1 point- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறந்த அறிவுரை பழமொழி. செய்தியில் உள்ள மோசடிக்கார தம்பதியினர் போல் அல்லாத நல்ல மக்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சட்டபூர்வமான முறைபடி வருமானத்தில் புத்தம் புதிய கார் வாங்கி தாராளமாக ஓடலாம். தன்னால் முடிகின்ற பல ஆயிரம் டொலர்களுக்கு புத்தம் புதிய கார் ஒன்று வாங்குவது ஒன்றும் பிரச்சனைக்கு உரியது இல்லை. தங்கள் சக்திக்கு மீறி பேராசையால் நடிகர் விஐயின் வீடு மாதிரி வீடு வாங்க வேண்டும் என்று பழைய வீட்டை சில மில்லியன் டொலர்களுக்கு வாங்கியே பிரச்சனைபடுகின்றனர்.1 point- கருத்து படங்கள்
1 point- இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
ETA விசா இணையத்தளத்தில் விண்ணப்பித்து எடுத்து கொண்டு போன போதும் அப்படி எடுக்காமல் போனால் விமான நிலையத்திலேயே கட்டணம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம் என்று இருந்தது தானே நாங்கள் சிங்கல அதிகாரி என்ன மனநிலையில் நிற்பாரோ திருப்பி அனுப்பிவிட்டாலும் என்று தான் இணையத்தளத்தில் முதலே விண்ணப்பித்து விசா எடுத்தோம். ஆனால் இனி கட்டாயம் முதலே இணையத்தளத்தில் விண்ணப்பித்து விசா எடுக்க வேண்டுமாம்.1 point- இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
இப்போது இலங்கை போவதற்கு விசா தேவை இல்லை. ஆனபடியால் ETA விசா.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தித்திப்பது எது அதுவோ .......... மனோகர் & கே .ஆர் . விஜயா ........! 😍1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 16) மழை காரணமாக நியூசிலாந்து இலங்கைக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 31 புள்ளிகள் 2) ஏராளன் - 29 புள்ளிகள் 3) ரசோதரன் - 29 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 27 புள்ளிகள் 5) கிருபன் - 27 புள்ளிகள் 6) வீரப்பையன் - 27 புள்ளிகள் 7) புலவர் - 25 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 25 புள்ளிகள் 9) சுவி - 24 புள்ளிகள் 10) வசி - 21 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 21 புள்ளிகள் 12) வாதவூரான் - 21 புள்ளிகள் 13) கறுப்பி - 21 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் 15) வாத்தியார் - 19 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 16, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point- யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!
மேலே உள்ள செய்தியில் எத்தனை பிழைகள் உள்ளன என பார்த்த போது…. எனது கண்ணில் பட்டவை. வெளிநாட்டு அனுப்புவதாக — வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தெரியவருகையில் — தெரிய வருகையில் ஏற்கனே — ஏற்கனவே அந்தவகையில் — அந்த வகையில் நேற்றையதினம் — நேற்றைய தினம் விளக்கம்மறியலில் — விளக்க மறியலில் தமிழில் ஒரு சிறிய பந்தியை… பல எழுத்துப் பிழைகளுடன், பிரசுரிக்கும் போக்கு அதிகரித்து காணப் படுகின்றது. அதில் 100 ஆண்டுகளை கடந்த பிரபல பத்திரிகைகளில் இருந்து இணையம் மூலமாக செய்திகளை வெளியிடும் தளங்கள் வரை அதிகரித்து காணப்படுகின்றது. மற்றைய மொழிகளில் இப்படி அதிகப் படியான பிழைகள் இருக்கும் என நான் நினைக்கவில்லை. தமிழில் இப்படி இவர்கள் அதிக பிழை விடுவதற்கு இவர்களின் அரைகுறை படிப்பா….. அல்லது, இவர்களுக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சரி இல்லையா என்று தெரியவில்லை.1 point- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
கட்டுரையை வாசிக்கும்பொழுதே புரிகின்றது என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டுள்ளது ...புலம் பெயர் சமுகத்தையும் ,தமிழ் இனத்தையும் இலக்கு வைத்து எழுதப்பட்டுள்ளது...1980 களில் தமிழகத்தில் கல்விகற்க வந்த பல ஆபிரிக்க இளைஞர்களை தமிழ்பெண்கள் மணமுடித்து இன்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் இணைந்து வாழ்கின்றனர் சமுகத்துடன் .....1 point- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நான் lyca, Lebara என்பதை குறிப்பிட்டதற்கு காரணம் அவர்கள் எனக்கு பக்கத்தில் இருந்து வீங்கியவர்கள் என்பதால் மட்டுமே.1 point- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
ஒவ்வொருத்தருக்கும் அவரவர் பிரச்சினை😇!1 point- பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!
யார் ஆட்சிக்கு வந்தாலும், மலையக மக்களை கொத்தடிமைகளாக குத்தகை எடுத்த தொண்டைமானுக்கும், அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கு தற்போதைய மாற்றம் குடைச்சல் கொடுக்க தான் செய்யும்.1 point- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
நானும் இந்த குப்பை கூழங்களை வாசித்தேன் ...எத்தனையோ சனம்வேற்றினத்தவரை மணந்து படம் போடுது...இந்தக் கலியாணத்துக்குத்தான் ...இவ்வளவு வரவேற்பு...காரணம் பெண்ணிந்தாய் இனவிடுதலையை ..தீவிரமாக ஆதரிப்பவர்...காப்புலி என்ற வார்த்தையை சர்வசாதரணமாக பாவிக்கின்றார்கள்...1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடைசிச் சனி எள்ளுச்சட்டி எரித்தது எனக்கு வேலை செய்யுதோ செய்யவில்லையோ ...இந்தியன் பெட்டையளுக்கு நல்லா வேலை செய்யுது (பெட்டையள்_..எழுத்து சுவராசியத்துக்கு பாவித்த சொல்... மன்னிக்கவும்) வந்தவள் ...நிண்டவள் ...எல்லோரும்..அடிதான்.. அட அதைவிட கண்ணுக்கு மைபூசியும் வந்து .. வெளுத்து வாங்குகினம்...1 point- நடனங்கள்.
1 point- திருமணம் செய்து கொள்வதன் நன்மைகள், தீமைகள் என்ன? - சார்லஸ் டார்வின் செய்த பகுப்பாய்வு
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்மா (1808 –1896) மற்றும் சார்லஸ் டார்வின் (1809-1882), தங்களது 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், 10 குழந்தைகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் பிபிசி நியூஸ் முண்டோ 6 ஜூலை 2025 சார்லஸ் டார்வின் 1838ஆம் ஆண்டில் இயற்கைத் தேர்வு (Natural selection) குறித்த தனது கருத்துக்களை வகுக்கத் தொடங்கினார். ஹச்எம்எஸ் (HMS) பீகிள் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக தென் அமெரிக்காவில் அவர் பெற்ற அவதானிப்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார். இந்த காலகட்டத்தில், அவர் லண்டன் புவியியல் சங்கத்தின் செயலாளராகவும் ஆனார், அந்தப் பதவி கணிசமான பொறுப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் பிற ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் டார்வின் சமர்ப்பித்தார். அந்த வருடத்தின் அத்தனை பணிகளுக்கும் மத்தியில், ஒரு தனிப்பட்ட விஷயம் அவரது எண்ணங்களை ஆக்கிரமித்தது. வாழ்க்கைத் துணை இருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? திருமணம் அவரது வாழ்க்கையிலும் வேலையிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அதே வருடம், ஏப்ரல் மாதத்தில், தனியாக வாழ்வதன் நன்மைகள் மற்றும் துணையோடு வாழ்வதன் தீமைகள் குறித்து அவர் சில குறிப்புகளை எழுதினார். திருமணம் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள் ஜூலை மாதம், டார்வின் இந்த விஷயத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தினார், ஆனால் இந்த முறை மிகச்சிறப்பாக, 29 வயதான அந்த இயற்கை ஆர்வலர், திருமணம் குறித்த அந்த முக்கியமான கேள்விக்கு விடை கண்டறிய இரண்டு பட்டியல்களை உருவாக்கினார். 'திருமணம் செய்து கொள்வது' என்ற தலைப்பின் கீழ், நன்மைகள் என அவர் கருதியவற்றை பின்வருமாறு பட்டியலிட்டார்: குழந்தைகள் (இறைவன் நாடினால்). உங்கள் மீது அக்கறை காட்டும் நிலையான துணை (வயதான காலத்தில் அந்த துணை நண்பராகவும் இருக்கக்கூடும்). விளையாடவும் நேசிக்கவும் ஏதோ ஒன்று இருக்கும் (எப்படியும் ஒரு நாயை விட சிறந்தது). வீடும், அந்த வீட்டைப் பராமரிக்க ஒருவரும். இசையின் வசீகரமும் பெண்ணிய உரையாடலும். "இந்த விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நேரத்தை வீணடிப்பதாகும்." என பின்னர் அவர் கூறினார். "அய்யோ கடவுளே, வாழ்நாள் முழுவதையும், ஒரு ஆண்மை நீக்கப்பட்ட தேனீயைப் போல, வேலை செய்து கொண்டே, வேறு எதுவுமே செய்யாமல் கழிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இல்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்." என்றார் டார்வின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் அவர் இரண்டு காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தார்: "லண்டனில், ஒரு அழுக்கு வீட்டில் தனியாக வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள். மறுபுறம், ஒரு நல்ல சோஃபா, மென்மையான மனைவி, குளிருக்கு நல்ல நெருப்பு, அதனுடன் புத்தகங்கள் மற்றும் இசை என கற்பனை செய்து பாருங்கள்." பின்னர் அவர் 'திருமணம் செய்யாதீர்கள்' என்ற தலைப்பின் கீழ், பின்வருபவற்றை பட்டியலிட்டார்: எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான சுதந்திரம். மற்றவர்களுடன் பழகலாமா வேண்டாமா என்பதைத் நீங்களே தேர்ந்தெடுப்பது. கிளப்களில் புத்திசாலி மனிதர்களுக்கு இடையேயான உரையாடல். உறவினர்களைப் பார்க்கச் சென்று ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குழந்தைகளின் செலவுகள் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்கலாம். (ஒருவேளை சண்டைகள்). நேர விரயம். மதிய வேளைகளில் படிக்க முடியாமல் இருப்பது. உடல் பருமன் மற்றும் சோம்பல். பதற்றம் மற்றும் பொறுப்பு. புத்தகங்கள் போன்றவற்றுக்குக் குறைவான பணம். உங்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தால், நீங்கள் உணவுக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள் (அதிகமாக வேலை செய்வது உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் மோசமானது). ஒருவேளை என் மனைவிக்கு லண்டன் பிடிக்காமல் போகலாம்; அப்படியானால் நான் நாடுகடத்தப்பட்டு, எங்கோ ஒரு இடத்தில் சோம்பேறியாகவும், படைப்புத்திறன் அற்றவனாகவும் வாழும் நிலையை அடையலாம். தீமைகளின் பட்டியல் நீளமாக இருந்தாலும், நன்மைகள் அதிக மதிப்பைக் கொண்டிருந்தன, ஏனெனில் டார்வினின் இறுதி முடிவு என்பது: "எனவே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் தர்க்கரீதியான முடிவு." திருமணம் எப்போது செய்துகொள்ள வேண்டும்? ஒரு முடிவுக்கு வந்த பிறகு, டார்வின் புதிய கேள்விகளை எடுத்துக்கொண்டார்: "திருமணம் செய்வது அவசியம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, எப்போது செய்துகொள்ள வேண்டும்? கூடிய விரைவிலா அல்லது பின்னரா?" "நீங்கள் இளமையாக இருந்தால், வளைந்து கொடுக்கும் குணம் அதிகம் இருக்கும், அதற்கு ஏற்ப உணர்வுகளும் தெளிவாக இருக்கும். நீங்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிறைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். எனவே விரைவில் திருமணம் செய்யுமாறு" சமூகம் டார்வினுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு அவரைப் பயமுறுத்தியது. "முடிவற்ற பிரச்னைகள் மற்றும் செலவுகள், அற்பமான சமூக வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய விவாதங்கள் மற்றும் தினசரி நேரத்தை வீணடிப்பது" ஆகியவற்றை அவர் எதிர்பார்த்தார். நேரம் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கூட வீணாகும் என அவர் நினைத்தார். "என்னால் பிரெஞ்சு கற்றுக்கொள்ள முடியாது, முழு கண்டத்தை சுற்றிப் பார்க்க முடியாது, அமெரிக்கா செல்ல முடியாது, பலூன் விமானத்தில் பறக்க முடியாது, வேல்ஸுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள முடியாது. ஒரு அடிமை போன்ற வாழ்க்கை" என்று அவர் எழுதினார். ஆனால், தன் கருத்தில் இருந்து அவர் பின்வாங்குவது போல் தோன்றியபோது, அவர் தனது தொனியை மாற்றி எழுதினார்: "உற்சாகமாக இருங்கள். நீங்கள் இந்த தனிமையான வாழ்க்கையை, ஒரு சோர்வு நிறைந்த முதுமையுடன், குளிரில், நண்பர்கள் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் வாழ முடியாது." மேலும், "கவலைப்படாதே, வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொள். பல மகிழ்ச்சியான அடிமைகள் நம்மைச் சுற்றி உள்ளனர்." என்றும் குறிப்பிட்டார். நவம்பர் 11ஆம் தேதி, அவர் தனது நாட்குறிப்பில், "மிகவும் சிறந்த நாள்!" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். காரணம் அன்று, டார்வினின் உறவினர் எம்மா வெட்ஜ்வுட், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். அதை டார்வின் கொண்டாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். எம்மாவின் "சம்மதம்" மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தாலும், அது எதிர்பாராதது அல்ல. டார்வின் மற்றும் வெட்ஜ்வுட் பரம்பரைகளுக்கு இடையே பல தலைமுறைகளாக திருமண பந்தங்கள் இருந்தது. டார்வினுக்கு எம்மா தான் பொருத்தமான தேர்வாக இருந்தார். அவர்களது குடும்பத்தினரும், இருவரும் நல்ல ஜோடியாக இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். இருப்பினும், டார்வினின் 'திருமண ஆசை மற்றும் முன்மொழிவு' எம்மாவை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் அவர் டார்வினை விரும்பினார், ஆனால் டார்வின் தன்னை ஒரு சாதாரண உறவினராக மட்டுமே பார்த்தார் என எம்மா நினைத்திருந்தார். ஆனால் டார்வினை திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்பது பற்றிய பட்டியல்களை எம்மா உருவாக்கியிருந்தால், அவருடைய பட்டியல் வேறுபட்டிருக்கும் என ஹெலன் லூயிஸ் பிபிசி தொடரான "கிரேட் வைவ்ஸ்"-இல் சுட்டிக்காட்டுகிறார். தனியாக வாழ்ந்தால், டார்வினுக்கு கிடைக்கக்கூடிய எந்த வசதிகளும் அவருக்குக் கிடைத்திருக்காது. பலூன் விமான பயணங்களோ அல்லது வேல்ஸுக்கு தனியாக பயணிக்கவோ முடியாது. அந்தக் காலத்தில், ஒரு பெண்ணுக்கு, ஒரு வளர்ப்பு நாய் இருப்பதை விட, ஒரு கணவன் கிடைப்பதே சிறந்தது எனக் கருதப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, ஒரு பெரிய அல்லது பணக்கார மனிதரின் மனைவியாக இருப்பது ஒரு சிறந்த, தர்க்கரீதியான தேர்வாக இருந்தது. 'எம்மா- ஒரு அற்புதமான துணைவி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டவுன் ஹவுஸ் தோட்டத்தில் சார்லஸ் டார்வின் (1870). இங்கு அவர் தனது பெரும்பாலான நேரத்தை நடைபயிற்சி மற்றும் சிந்திப்பதில் செலவிட்டார். இந்த வீட்டில்தான் அவர் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, எம்மாவும் சார்லஸ் டார்வினும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர், பத்து குழந்தைகளைப் பெற்றனர், அன்பான குடும்ப வாழ்க்கையை நடத்தினர், 1882இல் டார்வின் இறக்கும் வரை ஒன்றாக இருந்தனர். அந்த 43 வருடங்களில், எம்மா தனது கணவரின் எழுத்துக்களை நகலெடுத்து தட்டச்சு செய்தது மட்டுமல்லாமல், தனது மொழித் திறனைப் பயன்படுத்தி, அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான செய்திகளை மொழிபெயர்த்து அவருக்குத் தெரிவித்தார். மேலும், இது அவரது மிகவும் பலவீனமான உடல்நலம் குறித்த அழுத்தத்தில் இருந்தும், தொற்று மற்றும் பரம்பரை நோய்களால் அவரது குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பாதிக்கப்படுவதைப் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் துயரத்தில் இருந்தும் அவரைக் காப்பாற்றியது. டார்வினின் பக்கம் அவர் இருந்ததால், டார்வினுக்கு கிடைத்த நன்மைகள் எண்ணற்றதாக இருந்திருக்கும். ஏனெனில் டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். இதனால் (டார்வினின் மகன்களில் ஒருவர் விவரித்தபடி) டார்வினின் தினசரி வாழ்க்கை சீராக இருந்தது: காலை 7:00 மணிக்கு அவர் தனியாக காலை உணவை உட்கொள்வார், காலை 7:45 மணி முதல் மதியம் வரை அவர் வேலை செய்வார். பிறகு தோட்டத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிடுவார். அன்றைய தினம் தனது அறிவுசார் பணிகளை முடித்த பிறகு, அவர் எம்மாவிடம் ஒரு நாவலையோ அல்லது வேறு இலக்கியப் படைப்பையோ படித்துக் காட்டச் சொல்வார்; பின்னர் அவர் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொள்வார், சில வேலைகளைச் செய்வார், பின்னர், மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, இரவு உணவிற்கு முன் எம்மா மீண்டும் அவருக்கு வாசித்துக் காட்டுவார். டார்வின் விரும்பியதெல்லாம் அவரது விருப்பப்படி வழங்கப்பட்டது. ஒரு அற்புதமான துணை இருப்பது, வாழ்க்கையின் சலிப்பான, முடிவில்லாத பணிகளால் திசைதிருப்பப்படாமல், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தில் கவனம் செலுத்த அனுமதித்தது. 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த, சிறந்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களை விட, அறிவுசார் பணிகளுக்கு ஏற்ற மிகவும் சரியான வீட்டுச் சூழல்களை சிலர் அனுபவித்திருக்கிறார்கள். காபி அல்லது தேநீர் கோப்பைகள் வருவது அல்லது மேஜையில் உணவுகள் திடீரென தோன்றுவது தவிர, எந்த இடையூறும் இல்லாமல் அவர்களால் பணிகளைச் செய்ய முடியும். ஒரு காதல் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வேரா (1902-1991) விளாடிமிர் நபோகோவ் (1899-1977) உடன், 1923இல் பெர்லினில். ஒரு சிறந்த மனைவியால் எவ்வளவோ விஷயங்களைச் செய்ய முடியும், அது வேரா நபோகோவ் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருந்தது. வேராவின் கணவர் எழுத்தாளர் விளாடிமிர் நபோகோவ் சொற்பொழிவுகளை நிகழ்த்தும்போது, அவருக்கு உதவுவதற்காக மேடையின் ஓரத்தில் வேரா அமர்ந்திருப்பார். வேரா தான், அவருடைய கணவரின் ஏஜென்ட், மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர், கோப்புகளைச் சேமித்து வைப்பவர், ஆடை வடிவமைப்பாளர், நிதி மேலாளர், ஓட்டுநர். கணவரது அனைத்து நாவல்களின் முதல் வாசகராகவும் வேரா இருந்தார். கணவர் பல்கலைக்கழகத்தில் பாடங்களை எடுக்க தவறியபோது கூட, வேராவே கணவருக்குப் பதிலாக வகுப்புகளை எடுத்தார். ஒரு சமையல்காரர், கணவனைக் கவனித்துக்கொள்பவர், சலவைத் தொழிலாளி மற்றும் பணிப்பெண் என அந்த காலத்தில் ஒரு மனைவியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனைத்து கடமைகளையும் அவர் செய்தாலும், தான் ஒரு 'மோசமான இல்லத்தரசி' என்றே அவர் நினைத்துக்கொண்டிருந்தார். மேலும், கணவருடன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். அவை 5 வயதிலிருந்தே கணவரைக் கவர்ந்த உயிரினங்கள். கணவரோ அவற்றைத் தேடி, ஆய்வு செய்ய பயணம் செய்தார். 12 வயது சிறுமியை விரும்பும் ஒரு மனிதனைப் பற்றிய நாவலான "லோலிடா" வெளியான பிறகு, நபோகோவ் சர்ச்சைக்கு ஆளானார். எனவே வேரா தனது பணப்பையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கணவனுக்காக எந்த கொலையாளியையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுடையது ஒரு சிறந்த காதல். 1923இல் பெர்லினில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் சந்தித்தனர். தனது கவிதைகளில் சிலவற்றை வேராவுக்கு, நபோகோவ் வாசித்துக் காட்டினார். பின்னர் அவர் எழுதினார்: "என் ஒவ்வொரு எண்ணத்திற்கும் உங்கள் ஆன்மாவில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது." வேராவின் அறிவுத்திறன், சுதந்திர உணர்வு, நகைச்சுவை உணர்வு மற்றும் இலக்கியத்தின் மீதான காதல் ஆகியவற்றால் கவரப்பட்ட அவர், வேராவுடன் சில மணிநேரங்கள் செலவிட்ட பிறகு வேராவுக்கான தனது முதல் கவிதையை எழுதினார். அவர்களது 52 வருட திருமண வாழ்வில், வரலாற்றின் மிகச்சிறந்த காதல் கடிதங்களில் சில எனக் கருதப்பட்ட கடிதங்களை வேரா பெற்றார். அவை 'லெட்டர்ஸ் டு வேரா' என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எல்லா மேதைகளின் மனைவிகளும் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் மணவாழ்க்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் எழுதி 1889 இல் வெளியிடப்பட்ட "தி க்ரூட்ஸர் சொனாட்டா" என்ற சிறு நாவல், முந்தைய பத்து ஆண்டுகளில் அவர் கட்டமைத்த தார்மீக தத்துவத்திற்கு ஒரு மெல்லிய மறைமுக ஊடகமாக இருந்தது. அதற்குள் அவர், கிறித்தவம் குறித்த தனது சொந்த பதிப்பை உருவாக்கி, தனது பிரபுத்துவ பட்டத்தைத் துறந்து, தனது முந்தைய நாவல்களைப் பற்றி மோசமாகப் பேசியிருந்தார். அவர் "அன்னா கரேனினா"-வை (லியோ எழுதிய ஒரு நாவல்) அருவருப்பானது என்று கூறி, ஒரு விவசாயியைப் போல உடை அணியத் தொடங்கினார். "தி க்ரூட்ஸர் சொனாட்டா"வில், காதலுக்காக திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கேலி செய்யும் ஒரு ஆணுடன், கதை சொல்பவர் ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்கிறார், வாழ்க்கையில் பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட அனைத்து காதல் விவகாரங்களுக்கும் தான் வருந்துவதாக அந்த ஆண் கூறுகிறார். "பெண்களின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்கள் உடைகள் மற்றும் உடலால் ஆண்களை மயக்குகிறார்கள். மனித இனத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களை, பெண்கள் கடின உழைப்புக்கு அடிமைப்படுத்துகிறார்கள். ஏனென்றால் பெண்கள் சுரண்டப்பட்டுள்ளனர், ஆண்களுக்கு சமமான அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பின்னர் அவர்கள் நமது காம உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வலையில் நம்மைச் சிக்க வைத்து பழிவாங்குகிறார்கள்," என்று அந்தக் கதாபாத்திரம் கூறும். டால்ஸ்டாயின் நாவலின் முக்கிய கதாபாத்திரம் பொறாமையால் அவதிப்படுகிறது, ஏனெனில் அந்த நபர் தனது மனைவி ஒரு அழகான வயலின் கலைஞரைக் காதலிக்கிறாள் என்று சந்தேகிக்கிறார். டால்ஸ்டாயின் மனைவி சோபியா, குடும்ப இசை ஆசிரியருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார், எனவே இந்தப் படைப்பை அவர் மீதான விமர்சனமாகப் பார்க்கலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையேயான சிக்கலான உறவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டால்ஸ்டாயின் சீடர்கள் சோபியாவை ஒரு மந்தமான, அறிவற்ற பெண்ணாக, பொருள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே அக்கறை கொண்டவராக சித்தரித்தனர். டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்தவர் சோபியா என்பதால், அவருக்கு செய்தி புரிந்திருக்கும் என்று நாவலாசிரியர் உறுதியாக நம்பலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையே சிக்கலான உறவு இருந்தது. சோபியாவின் வாழ்க்கை, அவரது கணவரின் தொழில், வீட்டுப் பொறுப்புகள் மற்றும் சொத்து மேலாண்மை மற்றும் அவரது பொறுப்பில் இருந்த விவகாரங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர் எப்போதும் தனது கணவரின் இலக்கிய லட்சியங்களை ஆதரித்தார். டால்ஸ்டாய், மனைவியிடம் கருத்துகளைக் கேட்டார், மேலும் பல்வேறு ஆலோசனைகளை அவருடன் நடத்தினார். டால்ஸ்டாயின் முழுமையான படைப்புகளை வெளியிடும் மகத்தான திட்டத்திற்கு சோபியா திட்ட மேலாளராகவும் செயல்பட்டார். அது தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களை கையாண்டார். மேலும் 13 பிரசவங்களின்போது படுக்கையில் இருந்தபோதும், ஒரு சிறப்பு மேசையை உருவாக்கி, அவர் தொடர்ந்து கணவரின் எழுத்துக்களை நகலெடுக்கும் வேலையைச் செய்தார். இவற்றில் சுமார் 6,00,000 வார்த்தைகள் கொண்ட "போர் மற்றும் அமைதி" (War and peace) போன்ற படைப்புகளும் அடங்கும். இது தவிர, டால்ஸ்டாய் நான்கு பெரிய நாவல்கள், சுமார் ஒரு டஜன் குறு நாவல்கள் மற்றும் குறைந்தது 26 சிறுகதைகளை எழுதினார். 'தி க்ரூட்ஸர் சொனாட்டா' வெளியிடப்பட்ட நேரத்தில், கணவருடனான சோபியாவின் உறவு இறுக்கமடைந்தது, ஏனெனில் அந்தச் சிறந்த எழுத்தாளர், இளம் பிரபுவான விளாடிமிர் செர்ட்கோவுடன் அதிக நேரம் செலவிட்டார். அந்தப் பிரபுவோ, மனைவிக்கு எதிரான கருத்துக்களால் டால்ஸ்டாயின் மனதை நிரப்பினார், மேலும் அராஜகவாதத்தில் (அதிகார மையங்களுக்கு எதிரான கோட்பாடு) அவரது ஆர்வத்தையும் ஊக்குவித்தார். எனவே டால்ஸ்டாய் தனது உலக உடைமைகள் அனைத்தையும் துறந்து, அவற்றை ஊழல் நிறைந்ததாகக் கருதியபோது, தனது குழந்தைகள் பசியால் இறக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சோபியாவிடம் இருந்தது. எனவே கணவரது நாவல்களை வெளியிடும் பொறுப்பை சோபியா ஏற்றுக்கொண்டார். மேலும் தணிக்கை காரணமாக கணவரது புத்தகங்களைத் தடை செய்வதை நிறுத்துமாறு ஜார் மன்னர் மற்றும் தேவாலயத்திடம் கெஞ்சினார். 'சோபியாவின் இந்த வணிக ரீதியான பரிசீலனைகள், அவர் ஒரு துரோகி மற்றும் முதலாளித்துவவாதி என்பதை நிரூபித்ததாக' செர்ட்கோவ் டால்ஸ்டாயிடம் கூறினார். அக்டோபர் 28, 1910 அன்று, டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களுக்கு திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு வாரத்திற்கும் மேல் தேடிய பிறகு, இறுதியாக தனது 82 வயதான கணவர் மற்றும் எழுத்தாளர் டால்ஸ்டாயை கண்டுபிடித்தார் சோபியா. ஆனால், ஒரு ரயில் நிலையத்தில், ரசிகர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்ட நிலையில், அவர் மரணத்திற்கு அருகே இருந்தார். டால்ஸ்டாயின் மரணம் ஒரு ஊடக நிகழ்வாக மாறியது. ஆனால் அவரது கடைசி நிமிடங்கள் வரை, டால்ஸ்டாயின் மரணப் படுக்கையிலிருந்து சோபியா ஒதுக்கி வைக்கப்பட்டார். "நான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நூற்றுக்கணக்கான முறை, ஒரு அடிமை போல சேவை செய்திருக்கிறேன். என் அறிவுசார் ஆற்றல் மற்றும் எல்லா வகையான ஆசைகளும் என்னுள் கிளர்ந்தெழுவதை உணர்ந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் அந்த ஏக்கங்களையெல்லாம் நசுக்கி, அடக்கி வைத்திருக்கிறேன்." என அந்நிகழ்வுக்கு சில வருடங்களுக்கு முன்பு சோபியா குறிப்பிட்டிருந்தார். "எல்லோரும் கேட்கிறார்கள், 'ஆனால் உங்களைப் போன்ற ஒரு பயனற்ற பெண்ணுக்கு ஏன் அறிவுசார் அல்லது கலை வாழ்க்கை தேவை? என்று" எனக் குறிப்பிட்டுள்ள சோபியா, "அந்தக் கேள்விக்கு ஒரு பதிலையே கூற முடியும், 'எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு மேதைக்கு சேவை வேண்டும் என்பதற்காக, எனது உணர்வுகளை நிரந்தரமாக அடக்கிவைப்பது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20w9wqqexgo1 point - மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி?
Important Information
By using this site, you agree to our Terms of Use.