Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்59Points33964Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்52Points89195Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்45Points19934Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்43Points39480Posts
Popular Content
Showing content with the highest reputation since 03/07/26 in Posts
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இறுதி நிலைகள்: T20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இல் இறுதி நேரத்தில் பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் வெற்றியைத் தட்டிச் செல்லும் அதிகம் உரையாடாத @Newbalance க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வெற்றியைத் தட்டிச் செல்லும் @Newbalance க்கு துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தில் இருந்து பெற்ற தங்க நாணயத்தின் நிழல்பிரதி தரப்படுகின்றது! இரண்டாவது இடத்தைப் பிடித்த @கந்தப்பு வுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள @நியாயம் க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @alvayan , @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள். அத்துடன் பல நாட்கள் சுமைதாங்கியாக இறுதி நிலையில் நிற்கும் @வாதவூரான் க்கும் நன்றி பல! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @செம்பாட்டான் @வீரப் பையன்26, @goshan_che @ரசோதரன், @vasee , @suvy ஐயா, @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கு நன்றி பல. விடுமுறையில் மத்திய கிழக்கில் நின்றபோது புள்ளிகளைக் கணிக்கவும், நிலைகளை சரியாக வரிசைப்படுத்தவும் உதவிய @செம்பாட்டான் க்கு பிரத்தியேகமான நன்றிகள்!13 points
-
கறையான் புற்று
9 points2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது. தாயகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், காந்தி நிலையம், குருகுலம், இனியவாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு மையங்கள், முன்பள்ளிகள், தொழில்சார் பயிற்சிநிலையங்கள், சத்துணவு நிலையங்கள் போன்ற பல சமூகநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில்கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் ‘வெண்புறா’ திட்டமும் ஒன்றாக இருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் இயங்கி வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளைகளுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளின் விருப்பத்திற்கேற்ப பொறுப்பளிக்கப்பட்டன. நான் வசித்த யேர்மனியில், உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பப்படாத காரணத்தால், யேர்மனிக் கிளைக்கு மன்னார் மாந்தை மேற்கு குடியேற்றத் திட்டத்துடன்‘வெண்புறா’ திட்டமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ‘வெண்புறா’ திட்டத்தில் யேர்மனிக்கிளைத் தொண்டர்களுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்கவில்லை. அப்போது வன்னியில் அலுமினியத் தகரத்தில் செய்யப்பட்ட, மடிக்க முடியாத செயற்கைக்கால்களே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றுடன் இயல்பான நடை சாத்தியமில்லாது, இழுத்து இழுத்தே நகரவேண்டியிருந்தது. மாற்று வழிகளை ஆராய்ந்தபோது, யேர்மனியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பைபர்கிளாஸ் செயற்கைக் கால்களை அங்கு அறிமுகப்படுத்துவது, சாத்தியப்படுமா என்ற யோசனை எழுந்தது. ஆனால் இது செலவான முயற்சி. மூலப்பொருட்கள், பயிற்சி, நிபுணத்துவம் ஆகியவை இதற்கு அவசியம். இந்த விவகாரம் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழக கிளைப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது முயற்சியால், இந்தத் துறையில் நிபுணரான ஹொல்கர் என்பவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். ஒரு யேர்மனியரை வன்னிக்கு அழைத்துச் செல்வது, அதற்காக சிறீலங்கா அரசின் அனுமதி பெறுவது, குறைந்தது ஒருமாதம் அங்கே தங்கி பயிற்சி வழங்குவது இவை அனைத்தும் போர்நிலைச் சூழலில் பல அபாயங்களைக் கொண்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. எனவே நாட்டில் அமைதியான சூழல்உருவான பின் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவோம் என்று முடிவு செய்து, இடைக்காலமாக மாந்தை மேற்குகுடியேற்றத் திட்டத்தில் கவனம் செலுத்தினோம். 2002ஆம் ஆண்டு சூழல் மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் போன்ற மாற்றங்கள் நம்பிக்கையை உருவாக்கின. 2002 மே மாதத்தில், ஹொல்கருடன் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டோம். போர்நிறுத்தம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னர் நாங்கள் போனபோது பல சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், பயணம் நிறைவேறியது. யேர்மனிய தொழில்நுட்ப முறையில் அளவெடுத்து, உடல் நிலையை கருத்தில் கொண்டு, முதுகெலும்பு பாதிப்பு ஏற்படாதவகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக் கால் ‘வெண்புறா’ நிறுவனப் பொறுப்பாளர் வீரனுக்கு பொருத்தப்பட்டது. இந்த முயற்சி குறித்து கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் செய்தி வெளியானது. இந்தியப் பத்திரிகையாளர்களும் அதைப்பற்றி குறிப்பெடுத்துச் சென்றனர். அந்தவேளை, இரண்டு கைகளையும் இழந்திருந்த ஒரு பெண்ணுக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வன்னியில் எழுந்தது. ஒரு கை பொருத்துவதற்கே 30 முதல் 35 ஆயிரம் யூரோ வரை செலவாகும். அத்தோடு கணினிவழிப் பயிற்சியும் அவசியம் என்பதால், தொடர்ச்சியாக பல தடவைகள் தான் வரவேண்டும் என ஹொல்கர் சொன்னார். செலவுகள் அதிகமாக இருந்தாலும், கால்களுடன் சேர்த்து கைகளையும் பொருத்தும் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். எனது வேலை நிமிர்த்தம் அடிக்கடி வன்னிக்கு வர இயலாது என்பதால், யேர்மன் மொழி அறிந்த ஒருவர் அவசியம் தேவை என்று சொன்னேன். அவர்கள் தங்களிடம் யேர்மனிய மொழி தெரிந்த ஒரு இளைஞன் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். அந்த இளைஞனுக்கு ஹொல்கர் தனது நிலையத்தில் ஐந்து மாதங்கள் முழுமையான பயிற்சி அளித்தார். வன்னியில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், இணையத் தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில், ஜபிசி இலண்டன் வானொலியில், வன்னியில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டத்தை இலண்டன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக, தான் முன்னெடுக்க இருப்பதாக மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்தார். இந்தச் சம்பவங்களை நினைவுகூரும்போது, பட்டங்களையும் புகழ்ச்சிகளையும் தாண்டி, அந்நேரத்தில் பலரின்அமைதியான உழைப்பும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயத்தை இணைக்க முயன்ற சிலர் எடுத்த சவாலான முடிவுகளும்தான் மனதில் முதலில் தோன்றுகின்றன. வரலாற்றைப் பேசும் போது, அந்தப் பின்னணியையும் மறக்காமல் நினைவுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.9 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த @Newbalance @கந்தப்பு அண்ணை @நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அவர்களுக்கம் நன்றியும் வாழ்த்துக்களும். நான் அதிகம் கருத்துக்கள் எழுதாவிட்டாலும், பலரின் கருத்துக்களை வாசித்து வருகின்றேன். குறிப்பாக @ஈழப்பிரியன் அண்ணா, @செம்பாட்டான் , @வீரப் பையன்26 @goshan_che இன்னும் பலருக்கும் நன்றிகள்7 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இல் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி சஞ்சு சாம்சனின் புயல்வேக 89 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் மின்னல்வேக 54 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், அபிஷேக் ஷர்மாவின் அபாரமான அதிரடியான 52 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத கடுகதியான 26 (08 பந்துகள்) ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே ஓட்டவிகிதத்தைத் தக்கவைக்க வேகமாக அடித்தாட முயன்றனர். ரிம் செய்ஃபேர்ட்டின் அதிரடியான 52 (26 பந்துகள்) ஓட்டங்கள், மிச்சல் சன்ட்னரின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. ஜஸ்ப்ரிற் பும்ரா 4 விக்கெட்டுகளை 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்துச் சாய்த்திருந்தார். முடிவு: இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2026 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்களில் இந்திய அணியின் வெற்றியை சரியாகக் கணித்த 14 பேருக்கு தலா 5 புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்! குறிப்பு: யாழ்களப் போட்டியின் வெற்றியாளர் அடுத்த 12 கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவார்!7 points
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
கொ.ப.செ : கொள்கைகளை பறக்கவிடும் செயலாளர்.6 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 74) இலிருந்து 79) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 256/4 சரியாகக் கணித்தவர்கள்: ஏராளன் வசீ அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் சுவி கிருபன் கோஷான் சே கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் ENG ஏராளன் IND வசீ IND புலவர் SA சுவைப்பிரியன் IRE அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் ENG கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SL 95/10 சரியாகக் கணித்தவர்: நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் ITA ஏராளன் ITA வசீ ITA புலவர் ITA சுவைப்பிரியன் USA அல்வாயன் ITA ஈழப்பிரியன் CA நியூ பலன்ஸ் CAN வாத்தியார் ITA கறுப்பி ITA வாதவூரான் ITA வீரப் பையன்26 OMA சுவி OMA கிருபன் UAE கோஷான் சே UAE அஹஸ்தியன் ITA கந்தப்பு OMA நியாயம் ITA எப்போதும் தமிழன் OMA ரசோதரன் NAM பிரபா OMA நிலாமதி NAM நந்தன் SL 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sahibzada Farhan (PAK) - 383 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Abhishek Sharma ஏராளன் Travis Head வசீ Aiden Markram புலவர் Abhishek Sharma சுவைப்பிரியன் Abhishek Sharma அல்வாயன் Travis Head ஈழப்பிரியன் Babar Azam நியூ பலன்ஸ் Jos Buttler வாத்தியார் Sanju Samson கறுப்பி Abhishek Sharma வாதவூரான் Abhishek Sharma வீரப் பையன்26 Abhishek Sharma சுவி Abhishek Sharma கிருபன் Dewald Brevis கோஷான் சே Suryakumar Yadav அஹஸ்தியன் Aiden Markram கந்தப்பு Abhishek Sharma நியாயம் Suryakumar Yadav எப்போதும் தமிழன் Abhishek Sharma ரசோதரன் Suryakumar Yadav பிரபா Ishan Kishan நிலாமதி Suryakumar Yadav நந்தன் Abhishek Sharma 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sahibzada Farhan (PAK) - 383 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் IND வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் IND ஈழப்பிரியன் SA நியூ பலன்ஸ் ENG வாத்தியார் IND கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி AUS கிருபன் IND கோஷான் சே NZ அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah (IND) - Wickets: 14, Ave: 12.42, Econ: 6.21 சரியாகக் கணித்தவர்கள்: செம்பாட்டான் புலவர் நியூ பலன்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 சுவி கோஷான் சே போட்டியாளர் பதில் செம்பாட்டான் Jasprit Bumrah ஏராளன் Arshdeep Singh வசீ Jacob Duffy புலவர் Jasprit Bumrah சுவைப்பிரியன் Varun Chakaravarthy அல்வாயன் Varun Chakaravarthy ஈழப்பிரியன் Jofra Archer நியூ பலன்ஸ் Jasprit Bumrah வாத்தியார் Jasprit Bumrah கறுப்பி Varun Chakaravarthy வாதவூரான் Adil Rashid வீரப் பையன்26 Jasprit Bumrah சுவி Jasprit Bumrah கிருபன் Varun Chakaravarthy கோஷான் சே Jasprit Bumrah அஹஸ்தியன் Varun Chakaravarthy கந்தப்பு Adam Zampa நியாயம் Varun Chakaravarthy எப்போதும் தமிழன் Varun Chakaravarthy ரசோதரன் Kuldeep Yadav பிரபா Shaheen Shah Afridi நிலாமதி Varun Chakaravarthy நந்தன் Varun Chakaravarthy 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) சரியாகக் கணித்தவர்கள்: வசீ அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் AUS வசீ IND புலவர் AUS சுவைப்பிரியன் PAK அல்வாயன் IND ஈழப்பிரியன் AUS நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் PAK வீரப் பையன்26 IND சுவி ENG கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் SA கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND கேள்விகள் 79) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: @Newbalance முதல்வர் நாற்காலியை பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளார்!6 points
-
வீதியோரம்.
5 pointsவீதியோரம் ( சாம்பலில் பூத்த மலர்கள் ) அந்தத் தார் வீதியில் மிக வேகமாய் வந்த ஜீப் வண்டி வீதியோரத்தில் இருந்த வாகன தரிப்பிட தார் பொட்டலில் அரை வட்டமடித்து நிக்கிறது. அதில் இருந்து ஒரு இளைஞனைத் தள்ளி விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு பெண்ணையும் இரண்டு பிள்ளைகளையும் சப்பாத்து காலால் உதைத்து தள்ளி விழுத்தி விட்டு நிக்காமல் வந்தவழியே செல்கின்றது.அப்போது அதிகாலை நான்கு மணி இருக்கும் கருக்கல் கலைந்து பறவைகளின் ஒலியோடு விடியல் தொடங்குகின்றது. அந்த இளைஞன் எழும்பத் திராணியின்றி வீதியில் கிடக்கிறான். பகல்பொழுதில் காய்ந்த தார் வீதியின் வெப்பம் அவனது வெற்றுடலுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் தேகத்தின் வலிகளைக் குறைக்கின்றது. அது அவனது உடம்புக்கு தேவையாய் இருப்பதால் அப்படியே கிடக்கிறான். சற்று தூரத்தில் அந்தப் பெண்ணும் சுயநினைவின்றிக் கிடக்கிறாள். தோசைக்கல்லில் இருந்து வராமல் அடம்பிடிக்கும் தோசை தோசைக் கரண்டியால் நிறைய குத்து வாங்கி உருண்டு பிரண்டு வந்து சட்டியில் விழுந்ததுபோல் கிடக்கிறாள் . கால்கள்வழியே ஒழுகிய ரத்தம் ஆடைகளில் சிந்தி உறைந்துபோய் இருக்கு. சிறுவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாய் இருக்கு. இருந்தும் அவர்கள் பசிமயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிக்கின்றனர் . அப்போது தூரத்தே ஒரு வண்டி வருவதை அதன் வெளிச்சம் தெரிவிக்கின்றது.அது மிக நெருங்கி அவர்களின் அருகில் வந்து நிக்கின்றது. அது ஒரு பாரவூர்தி.அதிலிருந்து இறங்கிய சாரதியும் உதவியாளரும் கிட்ட வந்து இவர்களின் நிலமையைக் கண்டு நடந்திருக்கும் சம்பவத்தை ஒருவாறு ஊகித்துக் கொள்கிறார்கள்.பின் இருவரும் சேர்ந்து இவர்களைக் கரையோரமாய் தூக்கி வந்து பெரிய கல்லுகளின் அருகில் சாய்த்து இருத்திவிட்டு தண்ணீரால் முகத்தில் அடித்து முதலுதவிகள் செய்து அவர்களின் மயக்க நிலைமையைப் போக்கி விடுகின்றனர். அண்ணை இப்ப எங்களைக் கடந்துபோன ஜீப்பில் இருந்தவங்கள்தான் இந்த அநியாயத்தை செய்திட்டுப் போறாங்கள் போலக் கிடக்கு என்று கிளீனர் ரமேஷ் சொல்கிறான்.அதை சாரதி அண்ணாத்துரையும் ஆமோதித்தபடி இரண்டு பிள்ளைகளுக்கும் தங்களிடம் இருந்த சாப்பாட்டில் பாதியை பகிர்ந்து குடுத்துவிட்டு மீதியை அவனுக்கும் அவளுக்கும் பிரித்துத் தருகிறார்.அவள் சிறிது தண்ணீரைக் குடித்து ஒருவாய் உணவை சாப்பிடுகிறாள். அவன் அதுவும் சாப்பிடவில்லை. இப்ப இருக்கும் நாட்டு நிலைமையில் யாரையும் மட்டுக்கட்ட முடியவில்லை. இயக்கங்களா , இராணுவமா என்று தெரியாது. ஓமண்ணை அவர்கள் எல்லோரும் ஒரேமாதிரியான உடுப்புகள் போடுகினம் அப்படியே ஜீப்புகள், ட்ரக்குகளில் வருகினம். சரி விடு ரமேஷ் , விடியுது நேரத்துக்கு மார்கெட்டுக்கு போகாவிடில் மீன் நாறிடும்.இனி நிறைய வாகனங்கள் வந்து விடும் அவர்களும்கூட இவர்களுக்கு உதவிசெய்யலாம் என்று சொல்லி தம்மிடம் இருந்த சில உடுப்புகள் மற்றும் கையில் கொஞ்சம் பணம் எல்லாம் எடுத்து குடுத்துவிட்டு வரும்போது பார்க்கலாம் என்று சொல்லிப் போகிறார்கள். விடியலின் பனிப்புகை மூட்டத்தில் தூரத்தே ஒரு பௌத்த விகாரையின் விமானமும் கோபுரமும் தெரிகின்றன.......! மலர் .......1.🌻5 points
-
சமூகப் பார்வை (பயம்)??¿
5 pointsஎமது சமுதாயம் சில உளநம்பிக்கைகள் அல்லது பயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு முயலாமல் ஒன்றின் தார்ப்பரியத்தை கேள்விக்குட்படுத்தாமல் அல்லது அதனால் ஏற்பட்டுக் கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்காமல் அல்லது அதனையும் மீறிய சமுதாய பயம் காரணமாக பல தலைமுறைகளாக சிலவற்றை தலைமுழுகி விடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது அதிகாரத்தை பயன்படுத்திக்கூட தமது சந்ததியினரையும் அதனை பின்பற்றி நடக்க செய்து கொண்டு வருகிறது. அதிலும் பெண்பிள்ளைகள் சார்ந்து கேட்கவே தேவையில்லை. இதனடிப்படையில் எமது தமிழ் பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் பயம் அல்லது சந்தேகம் அல்லது அடக்குமுறை சார்ந்த பதிவே இது. பெண் பிள்ளைகள் சார்ந்த மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கால சுழற்சியில் மாற்றங்கள் நிகழும் போது அதன் விளைவுகள் அவர்களது அன்றாட வாழ்வில், மனதளவில், உடல் நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவர்களது எதிர்காலம் சார்ந்த எத்தனிப்புக்களை நாசமாக்கக்கூடியது என்பதை பெற்றோர்கள் அறிந்துள்ள போதும் அதற்கான மருந்தான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள எமது தமிழ் பெற்றோர்கள் மறுக்கின்றனர். 28 நாட்களில் ஒழுங்காக வரவழைக்ககூடிய மாத்திரைகளை உடலுறவுக்கான பாதுகாப்பு மாத்திரைகள் என்று புரிந்து கொண்டு அதனை திருமணமாகாத கன்னிப் பெண்கள் பாவிப்பது அப்பெண் பிள்ளைகளின் கன்னித்தன்மை சார்ந்ததாக அல்லது அவர்களை சந்தேகிப்பதாக அல்லது தாமே அவர்களுக்கு பிழையான வழியை திறந்து விடுவதாக பார்க்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்களாவது இதை உணர இப்பதிவால் முடிந்தால்..... நன்றி.5 points
-
வீதியோரம்.
5 pointsவீதியோரம். மலர் ...........2. அந்தப் பெண் கொஞ்சம் தெம்பு வந்து எழுந்து தன் நிலையைப் பார்க்கிறாள். நேற்று மாலை நடந்ததெல்லாம் மனதில் நிழலாடுகின்றது. கிழிந்த ஆடைகளோடு உடலெல்லாம் இரத்தம் வழிந்து உறைந்து இருக்கு. திரும்பி அந்த இளைஞனைப் பார்க்க அவனுக்கு நினைவுகள் வருவதும் போவதுமாய் புசத்திக் கொண்டு இருக்கிறான். அந்நேரம் ஏதோ ஸ்லோகங்கள் சொல்லியபடி காவியுடை தரித்து தலை மழித்த சாதுக்களும் சிறுவர்களும் அவ்வழியே நடந்து வருகின்றனர். அவர்கள் இவர்களின் நிலையைக் கண்டு விசாரித்து விட்டு இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை மறித்து அவர்களை பன்சாலையில் சேர்க்கும்படி சொல்லி கொஞ்சம் பெரிய சிறுவர்களை அவர்களுடன் அனுப்பிவிட்டு தாங்களும் விகாரையை நோக்கி விரைந்து நடக்கின்றனர். பௌத்த விகாரையில் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பிக்குமாரும் ஓரிரு வயதான பிக்குணிகளுமாய் சிரத்தையுடன் செய்கிறார்கள்.அவர்களின் காயங்களைக் கழுவி நீராட்டி மூலிகை தைலங்களால் வலிகுறையும் பொருட்டு நன்றாகத் தேய்த்து அமைதியாகத் தூங்க வைத்து விடுகிறார்கள். அப்படி மாலை ஐந்து மணிவரை நன்றாக உறங்கியவர்கள் பின் ஒவ்வொருவராய் எழுந்து வெளியே வருகிறார்கள்.அவர்களை வராந்தாவில் இருந்த பிக்குமார் அங்கன வந்து அமரும்படி கூறுகிறார்கள். அப்போது அங்கு வந்த தலைமைப் பிட்சுவானவர் பொதுவாய் அவர்களின் நலன்களை விசாரித்துக் கொண்டே பெயர் விபரங்களையும் கேட்டுக் கொள்கிறார். அதில் அந்த வாலிபனின் பெயர் விநோதன் என்றும், பெண்ணின் பெயர் மணிமேகலை என்றும், சிறுவன் யுகேந்திரன்,மற்றும் சிறுமி சுஜிதா என்றும் தெரிந்து கொள்கிறார்கள். அதிலும் அவர்கள் முன்பின் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்திருக்கவில்லை.நேற்று அந்த ஜீப்பில் கிடந்து வந்து வீதியில் விழுந்ததுவரை எதுவும் தெரியாது. நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்து பிடித்து வரப்பட்டு வாரங்கள் மாதங்களாய் எங்கெங்கோ காம்புகளில் ஆளாளாய் கைமாறி சொல்லொனா சித்திரவதைகள் அனுபவித்துக் கொண்டு வந்த நிலையில் ஏதோ அவங்களுக்கு ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணத்தால் எல்லோரையும் கொண்டுவந்து வீதியில் வீசி விட்டுப் போய் விட்டார்கள்.இவர்களின் கதையைக் கேட்ட பிக்கு பிக்குணிகள் எல்லோரும் மிகவும் பச்சாதாபப்பட்டு வார்த்தைகளால் இவர்களை ஆறுதல் படுத்துகிறார்கள்.சிலநாளில் அவர்கள் அந்த வளாகங்களில் நடக்கவும் மடத்துக்கு தேவையான சில சில வேலைகள் செய்யவும் தயாராகி விடடார்கள். சில வாரங்களின்பின் சாதுக்களின் முறையான சிகிச்சையாலும் கவனிப்பாலும் உடல் தேறி நன்றாகக் குணமடைந்து விட்டனர். அன்று நல்ல பௌர்ணமி நாள். காலை நேரம் தலைமைப் பிக்குவானவரும் மற்றும் சிலரும் அவர்களைக் கூட்டிக் கொண்டு நடந்து வந்து அன்று எந்த வீதியோரத்தில் அவர்கள் விழுந்து கிடந்தார்களோ அங்கே வந்து சேர்ந்தார்கள். அங்கு கிடுகுகளால் ஒரு நீண்ட கொட்டில் போடப்பட்டு தரையில் பலதரப்பட்ட காய்கறிகள்,பழவகைகள், வாழைக்குலைகள் எல்லாம் ஓலைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பின்னால் ஒரு மூலையில் களிமண்ணால் பிடித்த அடுப்பும்,சில சமையல் பாத்திரங்களும், ரெண்டு வாளிகளும் இருக்கின்றன. அடுத்த மூலையில் சில பாய்கள், தலையணைகள், போர்வைகளுடன் அவரவர்களுக்கேற்ற ஆடைகள் துவாய்கள் என்று எல்லாம் இருக்கின்றன. பிக்குவானவர் அவர்களிடம் இப்போதைக்கு நாங்கள் உங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான சில பொருட்கள் தந்திருக்கின்றோம். பின்னாலே ஒரு பெரிய குளமும் இருக்கின்றது. அங்கு முதலைகளும் கபரகொய்யாக்களும் பெரிய பெரிய மீன்கள் பாம்புகள் இருப்பதால் பிள்ளைகளுடன் நீங்களும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் எடுக்கும் போதும், இரவுகளில் அவ்வழியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு யானைகளும் வந்து போகும். முக்கியமாய் பிள்ளைகள் கவனம். ஒருநாளும் தனியே விடவேண்டாம். நரி, ஓநாய்,பாம்புகள் போன்றவையும் நிறைய இருக்கின்றன. இந்த பொருட்கள் யாவும் உங்களுக்காக நாங்கள் மக்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டு வந்தவையே. நீங்கள் விகாரையில் தங்கியிருந்த நாட்களில் உங்களுக்குத் தெரிந்திருக்கும் நாங்களும் எங்களுக்குத் தேவையான அளவு மட்டுமான சொற்ப சாமான்களே வைத்திருக்கிறோம். நாளைக்கு என்று எதையும் நாங்கள் சேர்த்து சேமித்தோ வைத்திருப்பதில்லை.நாம் அணியும் ஆடைகள் கூட சனங்களிடம் யாசகமாய் பெற்று ஊசி நூல் கொண்டு கைகளால் தைத்து அணிகிறோம்.கூடியவரை பகவான் புத்தமுனி போதித்த நெறிகளில் இருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வருகின்றோம்.இனி நீங்கள் இவைகளைக் கொண்டு வீண் ஆடம்பரங்களை நாடாமல் உங்களின் தேவைகளை சுருக்கி வாழ்ந்து வரவும். பிள்ளைகளைப் பார்த்து நீங்கள் இருவரும் தினமும் காலையில் சிலமணி நேரம் பன்சாலைக்கு வந்து பாடங்கள், பாஷைகள், உடற்பயிற்சிகள், கலைகள், கைவினை வேலைகள் என்று கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றுக்காக அங்கு பாடசாலையும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.பின் மாலையில் நீங்கள் இங்கு வந்து இவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்று சொல்ல அவர்களும் அவர் பாதத்தில் விழுந்து வணங்கி அப்படியே செய்கிறோம் சாமி என்கிறார்கள். பின் சாதுக்களும் அவர்களை ஆசீர்வதித்து விட்டு தம் வழியே செல்கின்றார்கள்.....! மலர் . ........ 2. 🌼🌼5 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை மிகச் சிறப்பாக, எப்போதும் போல, நடத்திய கிருபனுக்கு @கிருபன் மிக்க நன்றிகள் பல! போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் நன்றிகள்! முதல் இடங்களைப் பிடித்த @Newbalance , @கந்தப்பு , @நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.....................👍. பி.கு: ஆப்கானிஸ்தானில் எனக்கும், வாதாவூரானுக்கும் சிலைகளை திறப்பதாக முடிவெடுத்து இருந்த நேரத்தில் ஒரு உலகப் பிரச்சனை வந்துவிட்டது.................🤣.5 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெற்றிபெற்றநியூபலன்சுக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் போட்டியை திறம்படநடத்திய கிருபன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.நான் கோசானின் வீட்டை ஆட்டையைப்போடுவன் எண்டு எனக்கு எப்பவோ தெரியும். @goshan_che5 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் ஏற்கனவே என்னை அறிமுகப்படுத்தியிருந்தேன் நான் ஜெர்மன் பிரெமனிலிருந்து நியூபலன்ஸ் .நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, முதல் இடம் பிடித்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்5 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பூனைக்குட்டி இப்ப தான் வெளிய வருது. வென்றிருந்தால் இத்தனை முறைப்பாடுகளும் வந்திருக்காது. சரி சரி வரும் ஐபிஎல் சோதனையில் இவர்களை ஒதுக்கி வையுங்கள். ஆப்கானில் இடம் இல்லாவிட்டால் என்ன ரம்பிடம் சொன்னால் ஈரானில் இருவருக்கும் சிலை(உயிரோடு)வைத்துவிடுவார்.4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்ணை நீங்களாச்சும் கேட்டது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கு. அவுஸ்திரேலியாவையும் நன்றாக விளையாடுவினம் என்று நான் கருதிய அணிகளும் தோற்றது ஒரு காரணம். அதிக ஓட்டம், அதிக விக்கெட் போன்ற குண்டக்கமண்டக்க(உபயம் தம்பி @வீரப் பையன்26) கேள்விகளில் சறுக்கியதும் மற்றொரு காரணம். எனக்கு நல்ல துணை தம்பி @வாதவூரான் இருக்கிறபடியால பயமில்லாமல் இருக்கிறேன்! @goshan_che அண்ணை தான் ஏமாத்திப்போட்டார்!4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல்வர் நியூபலன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ......! அவரைத் தொடர்ந்து வந்திருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் பாராட்டுக்கள் .......! முதலில் இது போன்ற போட்டிகளை திறமையாக நடத்திவரும் கிருபனுக்கு பாராட்டுக்கள் . .....! இப்போட்டியில் அவருக்கு பக்கபலமாய் நின்ற செம்பாட்டானுக்கும் நன்றிகள் ........! பங்குபற்றிய மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் ........! எல்லாவற்றுக்கும் களம் அமைத்துத் தந்த யாழ் இணையத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ......!4 points
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் செய்வது மனிதகுலத்திற்கு மிகவும் அவசியமான களையெடுக்கும் நடவடிக்கையே. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் உந்தப்பெற்று, இஸ்லாமியர் அல்லாதவரை அழிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டுவரும் ஈரானின் அணுக்குண்டு எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு இஸாலாமிய அடிப்படைவாத காட்டாட்சி அழிக்கப்படுவதுதான் வழியென்றால், அதனைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஈரான் அணுவாயுத உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமே அணுவாயுத நிலைகளை அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல் எல்லைகளுக்கு அப்பால், நிலக்கீழ் சுரங்கங்களில் அது கட்டிக் காத்து வருவதே. கையில் கிடைக்கும் எவ்வாயுதத்தைக் கொண்டும் மதவெறியில் உந்தப்பட்டு "அல்லாகு அக்குபர்" என்று கோஷமிட்டபடி தன்னையும் அழித்து ஏனையவரையும் அழிக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளிடம் அணுவாயுதம் கிடைத்தால் என்னாகும் என்பதை ஈரானின் அபிமானிகள் சிந்திப்பது நல்லது. இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்தில் இருந்து அழிப்போம், அமெரிக்காவிற்கு மரணத்தைக் கொடுப்போம் என்று கங்கணம் கட்டிச் செயற்படும், இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், பயிற்சி, பணம் என்று வாரியிறைக்கும், நீண்டதூர ஏவுகணைகளை உற்பத்திசெய்து தனது பயங்கரவாத கொடுக்குகளை உலகம் முழுக்கப் பரப்ப எத்தனிக்கும் மூர்க்கர்களின் ஆட்சி முற்றாக நிர்மூலமாக்கப்பட வேண்டும், இது காலத்தினதும், மனித இருப்பினதும் அவசியமாகும். சொந்த நாட்டு மக்களையே அடிமைகளாக, அச்சுருத்தி வைத்துக்கொண்டு, மிருகத்தனமாக கொடுங்கோலாட்சி செய்யும் ஈரானிய மத அடிப்படைவாதிகள் சின்னாபின்னமாக்கப்பட வேண்டும். வேடிக்கை என்னவென்றால் ஈரானின் கொடுங்கோலாட்சி அகற்றப்படவேண்டும் என்று ஈரானியர்கள் கேட்கிறார்கள், கொடுங்கோலன் கமெய்னி கொல்லப்பட்டபோது வீதிகளில் ஆர்ப்பரித்து மகிழ்வதோடு அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் நன்றி கூறுகிறார்கள். ஆனால், ஈரானிற்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத சிலர் ஐயோ, இது தகுமா? ஐ நா விடம் அனுமதி கிடைத்ததா? ஈரானிடம் அணுவாயுதம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? என்று கூவுகிறார்கள் 😆.4 points
-
இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
மிக அண்மையில் மகளின் குழு ஆளில்லாத எரிபொருள் நிரப்பும் விமானத்தை வெற்றிகரமாக இயக்கினார்கள். அதன் காணொளியைத் தேடினேன் காணவில்லை.3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points
- வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
வட பகுதியில் போதை பிரச்சனைகள் வர முன்பே இப்படி குடும்பத்துக்குள்ளான பிரச்சனைகளும்,வெட்டுக்கொத்துகளும்,கொலைகளும் நடந்துள்ளன. பிள்ளைகள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் போன பின்...... அவர்களாச்சு அவர்கள் குடும்பமாச்சு என தாய் தகப்பன் வாயை மூடிக்கொண்டு இருக்கணும். பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைக்குள் தாய் தகப்பன் மூக்கை நுழைத்து நாட்டாண்மை பண்ணக்கூடாது.3 points- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
தம்பரின் உலகு தனி உலகு… அங்கே கச்சா எண்ணை பரலுக்கு 40 டொலர் போகிறது😂 தெஹ்ரானில் சிங்க கொடி பறக்கிறது…😂 தம்பருக்கு நோபல் பரிசை கமிட்டி அறிவிக்கிறது😂 ஏதோ இஸ்ரேல் காரன் கூட போயிருக்கிறான் எண்டது மட்டும்தான் ஒரே நம்பிக்கை. இல்லாட்டில் தம்பரும், வான்சும், ஹெக்செத்தும், ரூபியோவும் சேர்ந்து…அமெரிக்காவின் கோவணத்தையே முல்லாக்கள் கையில் கொடுத்து விடுவார்கள் 😂3 points- அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
தம்பர் யுத்தத்தை விரும்பாதவர்… யேசு…புத்தர்….தம்பர் தான்… எண்டு பைடன் காலத்தில் ஒரு அண்ணை யாழில் சலங்கை கட்டி ஆடினவர்😂 மானஸ்தன் எங்க எண்டு தேடிப்பார்த்தால்….. ஐயோ அமெரிக்கா ஈரானை அடிக்குது எண்டு ஒரு திரில நிண்டு கொண்டு மூக்கால அழுகிறார்😂…. தோசையை திருப்பி போடுவதில் யாழ்கள அண்ணைமார் தமிழக அரசியல்வாதிகளுக்கே டஃப் கொடுப்பார்கள்.3 points- வீதியோரம்.
3 pointsமலர் ......... 3. விநோதன், மணிமேகலை சிறுவர்கள் சுஜிதா மற்றும் யுகேந்திரன் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தமது துன்பங்களை மறந்து சாதுக்கள் அமைத்துக் கொடுத்த கடை சாமான்களை விற்று வாழ ஆரம்பிக்கின்றனர்…….. அவ்வழியே செல்லும் வாகனங்கள் அங்கே தரித்து நின்று செல்ல ஆரம்பிக்கின்றன . அப்போது அங்கு அண்ணாதுரையின் லொறி வந்து கடையின் முன்னால் நிற்கின்றது. அண்ணாதுரையை கண்டதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிள்ளைகள் ஓடிச்சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள விநோதனும் மணிமேகலையும் அவருக்கும் ரமேஷ்சுக்கும் முகமன் கூறி கடைக்குள் அழைத்து செல்கின்றனர்…… அவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்து அவர்களது சுகதுக்கங்களை விசாரித்து அறிந்து கொள்கின்றார்…… அப்போது அங்கு பல வாகனங்களும் வந்து நின்று கடையில் பலவிதமான பழங்கள் மரக்கறி வகைகளை வாங்கி செல்கின்றனர். அவை எல்லாவற்றையும் கவனித்த அண்ணாத்துரையும் அவர்களிடம் இங்கு நிறைய வாகனங்கள் வந்து தரித்து நின்று செல்வதால், நீங்கள் ஏன் தேநீர் வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்…..! அதுக்கு மணிமேகலையும் எங்கை அண்ணை இப்ப இந்தப் பிள்ளைகளும் வினோத்தும் ஊருக்குள் நடந்து போய்த்தான் பழங்கள், மரக்கறிகள் என்று வாங்கி கைகளிலும் தோளிலும் சுமந்து வருகின்றார்கள் என்று சொல்கிறாள். அவரும் சரி நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, நாங்கள் இந்த வழியால் போகும் போதும் வரும் போதும் உங்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வந்து தருகிறோம். இப்போதைக்கு நீங்கள் காசு ஒன்றும் தரவேண்டாம். இந்தப் பிக்குகள் மிகவும் நல்லவர்கள் போல் இருக்கிறார்கள். கையில் இருக்கிறதையும் பிடுங்கி தூசண வார்த்தைகள் பேசி அடாவடி செய்யும் காவி உடையில் இருக்கும் போலிப் பிக்குகளையும் நான் பத்திரிகைகளிலும் செய்திகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் போன்ற தூய்மையான சாதுக்களால்தான் இந்த நாட்டில் கொஞ்சமாவது காருண்யமும் அன்பும் நிலைத்திருக்கின்றது என்று சொல்லி அவரும் ரமேசும் சிற்சில பழங்களை வாங்கிக் கொண்டு அவர்களின் மறுப்பையும் பொருட்படுத்தாது அதிகமாகவே பணத்தைக் கொடுத்து விட்டு செல்கின்றனர். நாளடைவில் அவர்கள் கடையையும் பெருப்பித்து தேநீர், பலகாரங்கள், சாப்பாடு என்று விற்கத் தொடங்கி விட்டனர். அதற்கான பாய்லர்,பாத்திரங்களை அண்ணாத்துரையே கொண்டுவந்து குடுத்ததுடன் தன்னிடமிருந்த பெரிய கேரியர் கொண்ட சைக்கிளையும் வினோதனிடம் குடுத்திருந்தார். அது ஊருக்குள்ளும் பக்கத்து நகரங்களுக்குள்ளும் சென்று சாமான்கள் வாங்கிவர ரொம்ப உதவியாய் இருக்குது. கடை வேலை முடிந்ததும் அவர்கள் பின்னால் உள்ள குளத்தை அண்மித்த இடத்தில் வருபவர்கள் இயற்கை உபாதையை கழிக்கக் கூடியதாக கழிவறையும் கட்டி விட்டு அதற்கு அப்பாலும் காடழித்து தமக்காக ஒரு சிறிய வீடும் கட்டி பயிர்செய்கைக்கு ஏற்றவாறு காணியும் வைத்திருந்தனர். இரவில் மணிமேகலையும் சுஜிதாவும் வீட்டில் தங்கிக் கொள்வார்கள். வியாபாரத்தை விநோதனும் யுகேந்திரனும் பார்த்துக் கொள்வார்கள். கால ஒட்டத்தில் சுஜிதாவும் பெரியவளாக வளர்ந்து நிக்கிறாள்.யுகேந்திரனுக்கும் பூனை மீசை அரும்பியிருக்கு. சாதுக்களும் அவ்வழியே வரும்போது இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து மனநிறைவுடன் இவர்களிடமும் பிக்ஷை ஏற்று ஆசி வழங்கிச் செல்கின்றனர். யுகேந்திரனும் சுஜிதாவும் இப்பவும் தொடர்ந்து விகாரைக்கு சென்று கழுவுதல், துடைத்தல் போன்ற உதவிகளை செய்வதுடன் அங்குள்ள பாடசாலையில் பெரிய வகுப்பில் படிக்கின்றனர் கூடவே பிக்குகளுடன் சேர்ந்து தியானப்பயிற்சி, யோகா, சிலம்பம் போன்ற பல கலைகள் கற்பதும் சிறுவர்களுக்கு கற்பிப்பதுமாக இருக்கின்றனர். இவர்களது கடையும் விளம்பரம் இல்லாமலே “வீதியோரக்கடை” என்று பிரபலமாகி இருந்தது. அதற்கு மணிமேகலையின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் சுவையான சுத்தமான உணவு வகைகளும் மலிவான விலைகளுமே காரணம். வருபவர்கள் தாங்களும் சாப்பிட்டுவிட்டு பார்சலும் கட்டிக்கொண்டு போகிறார்கள். முன்பு ஐந்தாறு லாந்தர் விளக்குகள் இருந்த இடத்தில் இப்பொழுது சில பெற்றோல்மாக்ஸ் விளக்குகள் வெளிச்சம் தருகின்றன. அடர்ந்த காட்டின் நடுவே வீதியோரத்தில் இப்படியொரு பிரபலமான கடை இருந்தால் கூடவே சில தவறான வியாபாரங்களும் அங்கு உருவாகி விடுவது இயல்புதானே. முதலில் சில சாரதிகளும் கிளீனர்களும் சாராயம் போன்ற குடிவகைகளை தெரிந்தும் தெரியாமலும் கடைக்கு அருகில் வைத்து குடிக்க ஆரம்பித்தனர். பின் சில நாளில் கஞ்சா போன்ற போதைவஸ்துகள் சிலரால் சில்லறை வியாபாரமாகவும் புழக்கத்துக்கு வந்தன. அவர்களின் தேவைக்காக இவர்களும் உறைப்பான மாமிச கறிவகைகள், முட்டை பரோட்டாக்கள், கொத்து ரொட்டி போன்றவையும் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். தொடர்ந்து எங்கோ தூரத்தில் இரவுகளில் தொழில் செய்யும் சில பெண்கள் இப்பொழுது கடைக்கு அண்மையில் தமது வாடிக்கையாளர்களுடன் காட்டுக்குள் செல்வதும் வருவதுமாய் தொழில் செய்து வருகின்றனர். தாங்கள் தங்குவதற்கு முன்பு யாரோ பழுதாகி விட்டுப் போன ஒரு லொறியை பாவிக்கின்றார்கள். சாராயம் மற்றும் போதைவஸ்துகள் விற்பவன் லொறியின் முன்பக்கத்தில் தனது சாமான்களுடன் தங்கிக் கொள்கிறான். அவர்களும் கடை வாடிக்கையாளர்களாய் இருப்பதாலும் அதனாலும் கடைக்கு வருமானம் பெருகி வருவதாலும் எல்லாமே ஒரு தொடர் சங்கிலியாய் மாறிவிட்டிருந்தன. ஒரு கட்டத்தில் இவர்களால் கூட இங்கு நடக்கும் தப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது......! மலர் ..............🌸 🌸 🌸3 points- சித்திரமும் கைப்பழக்கம் - T. கோபிசங்கர்
சித்திரமும் கைப்பழக்கம் இன்று: Phone ஐ எடுத்து Tamil font ஐ தேடித்தேடி type பண்ணிக் கொண்டிருக்க வந்த பேத்தி போனைப் பறிச்சு “ஏன் இவ்வளவு கஸ்டப்படிறீங்கள் voice typing செய்யலாம்” எண்டு சொல்லத் தொடங்க, “பரவாயில்லை கொண்டா” எண்டு ஒவ்வொரு எழுத்தாத் தேடித்தேடி, தட்டித்தடவி எழுதத் தொடங்கினார் சந்திரன். குடும்பங்கள் busy ஆப் போனதால காலமை good morning இல இருந்து , பிறந்த நாள் வாழ்த்தெல்லாம் what’s app இல மட்டும் எழுத்தாய் மாறி, பிறகு அதுக்கும் பஞ்சி வர, voice message விடத்தொடங்கி, இப்ப என்னெண்டே விளங்காத emoji வந்து நிக்க, தானாவது ஏதாவது எழுதுவம் எண்டு போட்டு, கண்ணாடியை போட்ட படி type பண்ணத் தொடங்கினார். எண்டாலும் பேத்தி சொன்னதைக் கேட்டு ஒரு ஆர்வத்தில voice typing க்குப் போய்ப் பாத்துச் சரி வராம, ஒவ்வொரு எழுத்தா அடிக்க வெளிக்கிட, எழுதத் தொடங்க முதலே அடுத்த என்ன எண்டு googleம், யோசிக்க முதலே என்னெண்டு சொல்ல AI எண்டு எல்லாச் சொற்களும் வசதியும் இருந்தும் எங்கடை தமிழைக் காணாம திருப்பியும் type பண்ணத் தொடங்கினார். டைப் பண்ணிக் கை சோந்த போய் , typo mistake எல்லாம் correct பண்ணிக் களைச்சுப் போய் சாய்மனையில சாய்ஞ்சவரின்றை வீட்டு hall லை காட்சிக்கு மட்டும் வைச்சிருந்த, ஆச்சி பொங்கலுக்குப் பாவிச்ச பித்தளைக் குடத்துக்குப் பக்கத்திலை இருந்த…. Typewriter கண்ணில பட்டுது. அந்தக் காலத்தில இதுதான் தொழிலாயே இருந்திச்சுது , ஆனால் இப்ப கை நோகாம எழுதினாலும் ஐஞ்சு வரி எழுதவே கஸ்டமா இருக்குது எண்டு யோச்சபடி நித்திரையானார். அன்று: முதல் நாள் காலமை குண்டெறிந்தவனை ஓடவிட்டிட்டு, சாவகாசமா பின்னேரம் “ round up” எண்டு சனத்தைக் கூப்பிட்டிருத்தி வைச்சு கைக்கு அம்பிட்ட ஆக்களை அள்ளிக் கொண்டு போக, மிச்சச் சனம் எல்லாம் வீட்டோட பதுங்க பகல்லயே ஊர் இருண்டிச்சுது. இந்தக் களோபரத்தில கடைகளைப் பூட்ட, தேத்தண்ணிக் கடைக்காரன் தானமாப் போட்ட வடைத் துண்டோட பறந்து போய் காகத்தார் வயர்கம்பீல இருந்தபடி நரி இல்லைத்தானே எண்டு வடையைச் சாப்பிடத்தொடங்க கேட்ட வெடிக்கு இந்தமுறையும் வடை கீழ விழ ஆலமரத்தடிக்குப் போய் தானும் அடங்கிக் கொண்டார் ஊரடங்கினது போல. இனி ஊருக்கு விடிஞ்சு தான் என்ன எண்டு போட்டுச் அடுத்த நாள் சூரியனும் சோம்பலோட பிந்தி எழும்ப, இன்னும் நித்திரையால எழும்பாமக் காக்கையார் நித்திரை கொள்ள, சந்திரன் சைக்கிளைக் கொண்டந்து நிறுத்தி “ குட் மோர்னிங்” சொல்ல, கழுத்தை நிமித்தி ஒரு கண்ணால பாத்திட்டு கொஞ்சம் தள்ளிப் போய் “ஆக்கள் எல்லாம் எழும்பீட்டினம் மானத்தை வாங்காம எழும்புங்கோ” எண்டு பிள்ளைகளைப் பாத்துக் கரையத் தொடங்கிச்சுது. சைக்கிளால இறங்கி stand இல விடுவம் எண்டு சந்திரன் இழுக்க , அது , பிள்ளை அங்கால படுத்திருக்கேக்க கையைப் போடேக்க முறண்டு பிடிக்கிற மனசி மாதிரி வர மாட்டன் எண்டு நிண்டிச்சுது. சைக்கிள் பாரம் கூடவா இல்லாட்டி உடம்பில பலமில்லையா எண்டு சந்தேகம் வர, இந்தா பார் இழுக்கிறன் எண்டு ஒருமாதிரி இழுத்து நிமித்தி சைக்கிளை விட்டிட்டு சந்திரன் நிமிர மூண்டு நாளா வருமானமில்லாத முன் சைக்கிள் கடைக்காரன் “ அண்ணை ஒருக்கா கழுவிப் பூட்டுங்கோவன் “ எண்டு சொன்னான். பாவம் தன்னிலும் பாக்க அவன்டை நிலமை மோசம் போல எண்டு நெச்சிட்டு அப்பிடியே மரத்ததடீல இருந்த தேத்தண்ணிக்கடைக்குப் பின்னால இருந்த மேசையையும் கதிரையையும் எடுத்துக்க கொண்டந்து போட்டிட்டு பேப்பரைத் துறந்தார். சந்திரன் மூக்குக் கண்ணாடியின்டை உடைஞ்ச காதுப்பிடியைக்( கைபிடி) விழாம rubber band ஐப் போட்டு ஆடிக்கொண்டிருந்த கைபிடியை இறுக்கிக் கட்டீட்டு பேப்பரைத் துறந்து நேத்தைக்கு நடந்த சம்பவத்தை பாத்திட்டு பாவப் பட்டாலும் எப்பிடியும் ஐஞ்சு பேராவது வருவினம் எண்ட உள்மனசு சொல்ல fileஐ எடுத்து பேப்பரை அடுக்கத் தொடங்கினார். கச்சேரிக்கு முன்னால ஆலமரத்தை குத்தகைக்கு எடுத்தமாதிரி சுத்திவரக் கடைகள். வெய்யிலுக்கு ஒதுக்கமா வடக்கை சைக்கிள் கடையும் தெற்க தேத்தண்ணிக்கடையும் வர, கிழக்க கச்சேரி வாசலுக்கு நேர முன்னுக்கு சந்திரன் ஐக்கியமானர். மரத்திற்கு மேற்கை ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கிறதுக்கு எல்லாரும் பாவிச்சிச்சினம். ”your highness” எண்டு தொடங்கி பேர் தெரியாத ஒருத்தனுக்கு, (வாசிக்கத் தெரியுமா எண்டும் தெரியாது ) நாலு வரீல கடிதம் எழுதி “yours truly ” எண்டு முடிச்சு, பேருக்கும், விலாசத்துக்கும் எண்டு இடம் விட்டபடி நாலு பேப்பரை அடிச்சு வைச்சிட்டு ஆக்களுக்காகப் பாத்துக்கொண்டிருந்தார் சந்திரன். காஞ்சு போன காபன் பேப்பரை வைச்சு தேய்ஞ்சு போனவிரலால இறுக்கி அடிச்சாத்தான் மற்றப் பேப்பரில ஏதாவது தெரியுது, அதிலேம் குண்டு செய்யிறாங்களோ எண்ட சந்தேகத்தில தடை விதிச்சதால இப்ப வாங்கிறதும் கஸ்டம் , எப்படியாவது அடுத்த முறை form எடுக்குப் கச்சேரிக்குள்ள போகேக்க CC ( Chief Clerk) ற்றை ரெண்டு பழசைக் கேட்டு வாங்கோணும் எண்டு யோசிச்சுக் கொண்டு இருக்க சனப்பிழக்கம் கூடத் தொடங்கிச்சுது. விடியாத காலையில ஊர்ச்சனம் எல்லாம் பிடிபட்டதை தேடினபடியும், பிடிச்சுவங்களைத் திட்டினபடியும் ஒவ்வொரு “campஆ” ஓடித்திரிஞ்சிட்டு ஒண்டும் சரிவராம கடைசியா GAக்கு ஒண்டு, ICRC க்கொண்டு, uniform போட்டபடி ஆமியே நடத்தின சிவில் நிர்வாகத்துக் கொண்டு எண்டு முறைப்பாட்டுக் கடிதம் கேட்டு வந்து நிக்க சைக்கிள் கடைக்காரன் சந்திரனைப் பொறாமையாய்ப் பாத்தான். எழுவதின்டை கடைசீல, அப்பரோட அதே தொழிலுக்குப் போகாம ஏதோ O/L ஐஞ்சு பாடம் திக்கிமுக்கிப் பாஸ் பண்ணி A/L பக்கம் எட்டிப்பாக்காம , “ விதி”ப்பட மோகன் மாதிரி பொம்பிளைப் பள்ளிக்கூட typing course க்குப் போனவர் சந்திரன். கச்சேரியடியில செஞ்சிலுவைச்சங்கம் பெண்களுக்கு மட்டும் எண்டு boardஐ வெளீல போட்டு உள்ளயே போகவிடாமத் தடுக்க , ஆரியகுளத்தடீல bond institute இல கடைசீல இடம் கிடைச்சுது. முதல் நாள் வகுப்பு எல்லா ரெட்டைப் பின்னலும் முன்னால இருக்க கடைசி வாங்கில சந்திரனும் முன்னுக்குப் படிப்பிச்ச கிழவனும் தான் அங்க trouser போட்ட ஆக்கள். வந்த கிழவன் அடிப்படையில இருந்து தொடங்கிறன் எண்டு அறுக்கத் தொடங்கிச்சுது. “ Ink ribbon ஐ load பண்ணுறது முக்கியமான வேலை கமராவிற்கு film roll போடிறது மாதிரித் தான் மேல மூடியைத் திறந்து வட்ட roller க்கால இழுத்து மற்றப் பக்க rollerஐக் கொண்டேச் சுத்தி lock பண்ணிறது முதல் வேலைஅடுத்தது paper load பண்ணிறது. Type பண்ணிற நல்ல பேப்பரைக் கடைசீல தலைகீழா வைச்சு பிறகு காபன் பேப்பரை வைச்சு அதுக்கு மேல copy பண்ணிற பழைய பேப்பரை வைச்சு மேல இருக்கிற வலப்பக்க குமிழை இழுத்தபடி அடுக்கின set ஐ உள்ள தள்ளீட்டு குமிழை உருட்ட சரியான பேப்பர் முன் பக்கம் வந்து நிக்கும்” எண்டு முடிச்சார் முதல் நாள் வகுப்பை. வாத்தியார் ஒவ்வொண்டா இது தான் key board , கடைசி வரீல நீட்டா இருக்கிறது space bar, இடது பக்கம் கீழ shift எண்டு சொல்லிக் கொண்டே போனார். அமெரிக்காரான் கண்டு பிடிச்சதால qwerty keyboard தான் type writerக்கும். எழுத்து அடிக்கிற இடமும் , எழுத்தும் சரியா எண்டு பாக்க hairpin நுனி மாதிரி ஒரு சின்ன வளை வொண்டிருக்கும் sniper point மாதிரி. “நாலு வரிசை key board இல ரெண்டாம் வரிசையில இருந்து தான் தொடங்கிறது. இடது கை நாலு விரல் , வலது கைநாலு விரல், தொடங்கேக்க நடுவில இருந்து தொடங்கி மேல கீழ side இல எண்டு விரலை நீட்டி ,அகட்டி மேல் வரிசை கீழ் வரிசை ஏறி இறங்கி , Capitalக்கு கீழ போய் shift ஐத் தேடிப்பிடிச்சு அமத்தி வைச்சு அடிக்கோணும். எப்பவும் line பாத்து paperஐ உருட்டி, மேல ஒட்டி இருக்கிற scale பாத்து alignment adjust பண்ணி இடைவெளி விடோணும்” எண்டு சொன்னது விளங்கின மாதிரி மண்டையை ஆட்டினார் சந்திரன். a, b, c, d பாத்துப் பாத்து அடிக்கிறது தானே சின்ன வேலை எண்டு நெச்சவர் ஒரு சொல் அடிக்கவே ஒரு நிமிசம் போச்சுது. அந்தாள் என்னெண்டா 50-60 words per minute எண்டாத் தான் வேலை கிடைக்கும் எண்டத்தான் விளங்கிச்சுது இதுகும் கஸ்டம் தான் எண்டு சந்திரனுக்கு. “ஒரு நாள் முழுக்க type பண்ணினால் விராலயே 3 மைல் நடக்கிற களை வரும்” எண்டு முதல் நாள் வாத்தி சொன்னது உண்மையோ எண்ட மாதிரி விரல் வீங்கி ஒரே நோ. விரலின்டை ரேகை எல்லாம் key board ஓட போச்சுது. நல்ல வேளை at least பெருவிரலை பயன்படுத்தாத படியால கைநாட்டுப் போட அதாவது மிஞ்சிச்சுதே எண்டு சந்தோசப்பட்டார். உத்தியோகம் தேடிற பொம்பிளைகள் O/L முடிய அப்ப தேடிப்போறது இந்த tutoryஐ தான். பழைய படங்கிளில வாறமாதிரி short hand & typing தெரிஞ்சாத் stenographer வேலை கிடைக்கும். கிளாக்கர் உத்தியோகம் தேடிக் களைச்சு கடைசீல typist ஆ இருந்து , முல்லைத்தீவுக்கு டிரான்ஸ்பர் வர, மனிசி சொன்னதைக் கேட்டு retire பண்ணீட்டு கச்சேரி வாசலில தஞ்சமடைஞ்சார் ஏற்கனவே இருந்த நாலுபேரோட ஐஞ்சாவதா போன சந்திரனை வாங்கோ எண்டு கூப்பிட்டது அந்த மரத்தைச்சுத்தி இருந்த நாலு பேர், என்ன எல்லாம் அவரிலும் பாக்கக் கிழடுகள் தான். பிறப்பு, இறப்பு, கலியாணம் , பென்சன் , பெட்டிசன் எண்டு எல்லாதுக்கும் formஓட, ஒரு கடிதம் இணைக்கோணும் எண்டதால சந்திரனுக்கும் சோத்துக்கு வழிசெஞ்சது இந்த type writer. அப்ப Town க்குள்ள ஆசுப்பத்திரிக்கு முன்னாலே இருக்கிற பாமசிகளுக்கு முன்னாலேம் ஆக்கள் இருக்கிறவை type writer ஓட. போயக் கொஞ்ச நாளிலியே எங்க போய் எந்த form வாங்கோணும் ,எத்தினை காபன் கொப்பி அடிக்கோணும், எங்க கையெழுத்துப் போடோணும், நிரப்பீட்டு எங்க போய் ஆரைச் சந்திக்கோணும், வேலை நடக்காட்டி எப்பிடி முடிக்கோணும் எண்டு எல்லாத்தையும் தெரிஞ்ச சந்திரன் சூரியனாய்ப் பிரகாசித்தார். ஏதோ பெருமாள் தாற பிச்சையில வாழ்க்கை போக புடிங்கித் திண்ண வந்த அனுமார் மாதிரி மினிபஸ்ஸால வந்திறங்கிறவயை மடக்கிப் பிடிச்சிக் கொண்டந்து விடத் தொடங்கினான் ஒருத்தன். முதல்ல வடை பிளேன்ரீக்கு ஒமெண்டவன் கடைசீல ஐஞ்சு, பத்தெண்டு கையை நீட்ட, விட்டால் வாறதும் போயிடும் எண்டு அவனையும் கவனிச்சுக் கொண்டு ஓடவேண்டியதாப் போட்டுது எல்லா டைபிஸ்ட் மாருக்கும். தொண்ணூறுக்குப்பிறகு காணாமல் போனோர் கடிதங்கள் இல்லாமல் போக, அங்க பக்கத்திலயே வந்த புது நிர்வாகத்திட்டை “ pass” எடுக்க கேட்டுக் கடிதம் , கையெழுத்தெண்டு நிலமை மாற type பண்ணிக்கொண்டிருந்த ஐஞ்சு கடைசீல ரெண்டாக அதே மரத்தடி உறவுகள் எண்டு தொடர்ந்து கொண்டிருந்தார் சந்திரன் . 95 இல சனம் இடம்பெயரத் தொடங்க வீட்டை விட்டுப் போக விருப்பமில்லாத சந்திரன் கடைசீல வெளிக்கிட்டு வேலைக்குப் போக பயம் எண்டு வேலையை விட்ட ஊருக்கே போய்த் திரிஞ்சலைஞ்சு திரும்பி வந்தார். சந்ததிக்கெண்டு சேத்து வைச்சதுகள் எல்லாம் இழந்து போனாலும் அவரின்டை type writer எங்கயோ பக்கத்து வீட்டில இருந்து வந்து சேர திருப்பியும் தூக்கிக்கொண்டு போய்ப் பாத்தா மரத்தைச்சுத்தி மண்மூட்டையும் கச்சேரியடீல காவலும் வர வீட்டோட நிரந்தரமா ஐக்கியமானார். இன்று பேத்தி கேக்கிறாள் license எடுக்க வரச்சொல்லி எண்டு கச்சேரியடிக்கு வந்தவர் இடம் வலம் பிடிபடாமக் கஸ்டப்பட்டார். ஆலமரத்தடியில மோட்டச் சைக்கிளை விட்டு stand ஐத் தட்டத் தலைக்கு மேல கத்தின காகம் பழைய காகம் தானோ எண்டு நிமிந்து பாத்திட்டு, வாசலுக்க போக “ ஏதும் வேணுமா ?செய்தரலாம் form ஐ check பண்ணிக் கொண்டு போங்கோ எண்டு வந்த அனுமாரைத் தாண்டி” உள்ள வந்தார். முந்தி அடிக்கடி போன இடம் இப்ப அந்நியப்பட்டுப் போனதை உணர்ந்த படி அறையைத் தேடி formஐக் குடுக்க, ஐயா மூண்டு கொப்பி வேணும் போய்க் கொண்டு வாங்கோ எண்டவரை இழுத்துக் கொண்டந்த பேத்தி முன்னால இருந்த கடையில Photocopy க்கு குடுக்க , அங்க இருந்த ஒரு பிள்ளை computer இல எதையோ தேடி அழிச்சழிச்சு அடிக்கிறதை எட்டிப் பாத்திட்டு qwerty key ஆவது மாறாமல் இருக்கெண்டு ஆறுதலோட திரும்பி நடந்தார். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம். பி.கு( எண்பதுகளில St. John’s இல steno ஒராள் இருந்ததாகவும் அவவைப் பாக்கிறதுக்கே பிரின்சிப்பலிட்டை அடி வாங்கப் பல அண்ணாமார் போனதாகவும் வரலாறு உண்டு)3 points- இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
3 pointsஉலக நாடுகள் அணி திரண்டுள்ளன எப்படி? 130 சொச்சம் நாடுகளின் அனுசரணையோடு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேறி உள்ளது. சாராம்சம்: ஈரானின் அரபு நாடுகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம். நிறுத்த வேண்டும். ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக திறக்க வேண்டும். பாதுகாப்பு கவின்சிலிலில் ரஸ்யா, சீனா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை(வீட்டோ பாவிக்கவில்லை). இது இப்படி இருக்க, வீரகத்தியளும், கிறீஸ் கத்தியளும், கொடுவா கத்தியளும் படுகிற பாட்டை பார்த்தால் ஒரே சிரிப்புத்தான்😂.3 points- சமூகப் பார்வை (பயம்)??¿
3 pointsவிசுகரின் எழுத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. மாதாந்த இரத்தப் போக்கை சில ஹோர்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பிற்போடலாம் (period delaying pills). இந்தக் குளிசையை நிறுத்தியவுடன் 3 நாட்களில் மாதாந்த இரத்தப் போக்கு ஆரம்பிக்கும். ஆனால், இந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் படும் மாத்திரை கருத்தடை மாத்திரை அல்ல. இதை எடுத்துக் கொண்டு உடலுறவு கொண்டால், கருத் தரிக்கும். பக்க விளைவுகள் சில உண்டு: உடலில் நீர் சேர்தல் (இதனால் வயிறு ஊதியது போல உணர்தல்), தலை வலி, நிறுத்தியவுடன் அதிக இரத்தப் போக்கோடு மாதாந்த இரத்தப் போக்கு உருவாதல் என்பன பரவலான பக்க விளைவுகள். ஆபத்துக்கள்: இரத்தம் இலகுவாக உறையக் கூடிய கண்டறியப் படாத நோய் நிலை (blood clotting disorders) சிலரில் இருக்கலாம். அத்தகைய நோய் நிலை இருப்போரில் இரத்தக் கட்டிகள், மூளை இரத்த அடைப்பு என்பன ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மட்டுமே இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.3 points- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
3 pointsவிடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப் பற்றி நான் கதைப்பதில்லை. “எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற உயரிய எண்ணம்தான் அதன் காரணம். ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும். அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன். “என்ன, சிறீலங்கா போறியாம்?” “சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?” “விடாதை . கதை விடாதை . எனக்குத் தெரியும். சிறீலங்காவிலையிருந்து எனக்கொரு தாலிக்கொடி வாங்கி அனுப்பிவிடுறியே?” தங்கம் விற்கும் விலையில் தாலிக்கொடி வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. நல்லவேளை அவர் அடுத்ததாகச் சொன்னவார்த்தைகளில் நான் தப்பித்தேன். “பவுணில இல்லை. இமிட்டேஷன் தாலிக்கொடி. இஞ்சை எனக்குத் தெரிஞ்ச ஒருத்தியின்ரை மகளுக்கு கொஞ்ச நாளைக்கு முன் கல்யாணம் நடந்தது. அவையள் ஹொலிடேக்குப் போயினம். போற இடத்திலை சொந்தக்காரர்கள் வீட்டுக்கும் போவினம். பவுண் தாலிக்கொடியை போட்டுக் கொண்டு போய் எதுவும் நடந்தாலும் எண்டு பயப்படுயினம். அதுக்குத்தான். வெள்ளவத்தையில வாங்கலாம். ‘யாழ்ப்பாணத் தாலிக்கொடி’ என்று கேள். வட்டமா இருக்கும்.” நான் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க முயன்றாலும், வில்லங்கம் எப்படியோ என்னைத் தேடி வந்துவிடும் போல. இந்த இமிட்டேஷன் யாழ்ப்பாணத் தாலிக்கொடியே அதற்கான ஆரம்பமாக இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. கொழும்பில் நான் வழமையாகத் தங்குவது என் நண்பன் கணேசனின் வீட்டில். அவன் சட்டத்தரணியாக இருந்த காலத்தில் மாலை நேரத்தில் மட்டும் “தீர்த்தம்” அருந்துவான். இப்போது வயதும் ஓய்வும் சேர்ந்து, மதியம் ,மாலை இரு வேளைகளிலும் தீர்த்தக் களிப்பில் இருக்கிறான். இந்த வருடப் பொங்கலை அவனுடனேயே கொண்டாடினேன். 40, 45 வருடங்களுக்கு பிறகு நான் காணும் பொங்கல் அது. பொங்கல் முடிந்து இரண்டுநாட்களுக்குப் பிறகு நியூசிலாந்து அக்கா கேட்ட யாழ்ப்பாணத் தாலிக்கொடி நினைவுக்கு வந்தது. அதை வாங்கி அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். நான் வாங்கி வந்த தாலிக்கொடியைப் பார்த்து கணேசனின் மனைவி உடனேயே சொன்னார், “பிழையா வாங்கிட்டீங்கள். இது இமிட்டேஷன் என்று அப்பிடியே காட்டிக்குடுக்கும்.” சொன்னதோடு மட்டும் நின்று விடாமல், தனது கழுத்தில் இருந்த தடித்த தாலிக்கொடியைக் காட்டினார். “இது செய்து எத்தினை வருசமாச்சுது . செத்த பாம்பு மாதிரி இருக்குது. அவன் வாங்கினது சரிதான். யாழ்ப்பாணத் தாலிக்கொடி இப்பிடித்தான். இதுதான் இப்ப பாஷன்” என்று கணேசன் என்னைக் காப்பாற்றினான். “சிவபெருமான் கழுத்தில சுத்தியிருக்கிற பாம்பு மாதிரி…” என்று முணுமுணுத்தபடி கணேசனின் மனைவி எங்களை விட்டு அகன்றார். அடுத்த நாள் அந்த யாழ்ப்பாணத் தாலிக்கொடியை நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்தேன். அந்தத் தாலிக்கொடி வாங்கச் சென்றபோது ஒரு கடையில் பார்த்த ஒரு விளம்பரம் என்னைச் சற்று யோசிக்க வைத்தது. “மாணிக்கக்கற்கள் பொருந்திய நகைகள் 40% முதல் 60% வரை தள்ளுபடி” என்று ஒரு கண்காட்சி விளம்பரம். சும்மா போய் பார்த்து வரலாம் என்று நினைத்து அந்த கண்காட்சிக்குச் சென்றேன். இடம் கொள்ளுப்பிட்டிய. அங்கு சென்றபோது, மூன்று ஊழியர்களும் ஒரு காவலாளியும் தவிர வேறு யாரும் இல்லை. அப்போதே திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உள்ளேபோனேன். அங்கு சபையர் கல் பதித்த ஒரு மோதிரம் என்னைக் கவர்ந்தது. அவர்கள் சபையரை பரிசோதித்து காட்டினார்கள். மோதிரம் 14 கரட் என்று சொன்னார்கள். விலையையும் குறைத்துத் தந்தார்கள். நான் வாங்கிவிட்டேன். யேர்மனிக்குத் திரும்பினேன். சிறீலங்காவில் +30°C யேர்மனியில் -12°C என காலநிலை இருந்தது. நேரமாற்றமும் குளிரும் சேர்ந்து நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தபோது சூட்கேஸ் எல்லாம் திறந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. உடுப்புகள் தோயலுக்குப் போயிருந்தன. கொண்டு வந்தபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் மோதிரப் பெட்டியும் இருந்தது. மனைவியை ஆச்சரியப்படுத்த வாங்கி வந்த மோதிரம். “நல்ல வடிவான மோதிரம்,” என்றாள். கண்காட்சியில் வாங்கிய விபரத்தைச் சொன்னேன். ஆனால் அந்த மோதிரத்தை நான் மீண்டும் பார்த்தபோது, வாங்கிய போது இருந்த கவர்ச்சி கல்லில்இப்போது குறைந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. தவறு கல்லிலா? இல்லை நீண்ட நித்திரையில் இருந்த என் கண்களிலா? அந்தச் சந்தேகத்தை அப்போது மனைவியிடம் சொல்லவில்லை. அவளது மகிழ்ச்சி வீணாகிவிடக் கூடாது என்று நினைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியபோது என் சந்தேகத்தை மனைவியிடம் கூறினேன். “கடையில குடுத்துக் கேட்டால் அதன் பெறுமதி சொல்லிவிடுவினம். வேணுமென்டால் நான் கேட்டுப் பார்க்கிறன்,” என்றாள். அடுத்த நாள் முடிவு தெரிந்தது. மோதிரம் 14 கரட் தங்கம். அதில் பொருத்தியிருந்தது உண்மையிலேயே சபையர் கல்லுதான். ஆனால் அதன் தரம் வெறும் 0.9 கரட் மட்டுமே. வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் வந்தபின்னே அது தாழைமரம் அதாவது நான் கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ற கல் இல்லை. நான் பார்த்த மோதிரத்தை மாற்றி வேறு ஒன்றைத் தந்திருக்கலாம் என்ற சந்தேகம்உறுதியாகியது. அவர்களின் விவரங்களை இணையத்தில் தேடியபோது, நான் தனியாளாக இல்லை. எனக்குத் துணைகளும் இருப்பது தெரிந்தது. என்னைப் போல சிலவெளிநாட்டவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பது அங்கே பதியப்பட்டிருந்தன. யேர்மனியில் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சட்டப்படி சுலபமாக கையாளலாம். ஆனால் சிறீலங்காவில் நடந்த விஷயம். அதுவும் நான் யேர்மனியில்இருந்து கொண்டே முடியுமா? “விட்டு விடலாமா?” என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது. உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்? குறைந்தபட்சம் சிலருக்காவது இது பற்றி எச்சரிக்கையைத் தரவேண்டும் முதலில் யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு முழு விவரத்தையும் எழுதினேன். அவர்கள் உடனடியாக பதில் அனுப்பினார்கள், “இந்த தீவிரமானவிஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. உங்கள் புகாரை விசாரணைக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.” அடுத்ததாக என் வங்கியையும் தொடர்புகொண்டேன். அவர்கள் சொன்னது, “நீங்கள் வாங்கிய பொருள் உங்களிடம் இருக்கிறது. ஆகவே நேரடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அந்தப் பொருளைஅவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் பெற்றுக்கொண்டதாக உறுதிப்பத்திரம் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.” மோதிரம் வாங்கிய ரசீதைப் பார்த்தேன். அதில், “Goods once sold can be exchanged only” என்று இருந்தது. ஆனால் நான் விடவில்லை. அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன், “வாங்கிய பொருள் தரமற்றது. கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ப இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளைத் திருப்பி அனுப்புகிறேன். பணத்தை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவும். 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கைஎடுப்பேன்.” காத்திருந்து சரியாக 14வது நாள் அவர்கள் பதில் அனுப்பினார்கள். “நாங்கள் விற்ற பொருள் தரமானது. திருப்பிப் பெற முடியாது.” எதிர்பார்த்த பதில்தான். “அப்படியானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன். உங்களின் இறுதிப் பதிலுக்கான கால எல்லை நாளை சிறீலங்கா நேரம் 14:00வரை” எனப் பதில் அனுப்பினேன். மீண்டும் நான் எதிர்பார்ததபடி நேர எல்லைக்குள் அவர்களிடம் இருந்து பதில் வந்தது, “நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள். நாங்கள் பேசித்தீர்க்கலாம்” “நன்றி. நான் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுகிறேன்” என அவர்களுக்கு பதிலைத் தந்துவிட்டு, அடுத்து நான் நாடியது சிறீலங்காவின் Tourist Police. மறுநாள் மாலை நேரம், கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “எதுக்கு உன்னுடைய Power of Attorneyயை எனக்கு அனுப்பியிருக்கிறாய்? அதென்ன மோதிரம்? எப்ப வாங்கினனீ? ” விஷயத்தைச் சொன்னேன். அவன் போனில் கன நேரம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். மாலை நேரமாக இருந்ததால் அவன் தமிழ் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.3 points- கறையான் புற்று
3 pointsஇது விவகாரமான கேள்வியல்ல. விபரமான கேள்விதான் உறவே!! மாமனிதர் விருது மாமனிதர் விருது – தமிழீழத்தின் அதிஉயர் விருதினை ஈழப்போராட்டத்தில் பல்வகைகளிலும் தோளோடு தோள்நின்று பங்காற்றிய கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கு மேதகு தலைவர் வே. பிரபாகரனால் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார்.3 points- ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இதையே எத்தனை நாளைக்கு அறுந்த இசைத்தட்டு போல சொல்லிக்கொண்டிருக்கப்போகிறீர்கள். ஈரானிய மொத்த சனத்தொகை எவ்வளவு? அதில் எத்தனைபேர் வந்து அமெரிக்காவிடமும் இஸ்ரயேலிடமும் தமக்கு சுதந்திரம் பெற்றுத்தர கேட்டார்கள்? எத்தனைபேர் காமெனியின் இறப்பை வீதிக்கு வந்து கொண்டாடினார்கள். ஏன் ட்ரம்பை அதிபர் பதவியில் இருந்து அகற்றினால் அமெரிக்காவில் மக்கள் கூடி கொண்டாட மாட்டார்களா? வடகொரியாவிடமும்தான் அணுஆயுதம் இருக்கிறது. தன்னை யாராவது தாக்கினால் தான் அதை பாவிப்பேன் என்கிறது. அதில் பிழை எதுவும் இல்லையே! ஈரானிடம் அணுஆயுதமே இல்லை. பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கத்தான் போர் என்கிறது அமெரிக்கா. ஏன் அது உலகில் வேறு யாரிடமும் இல்லையா! தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு நாடு அதை உருவாக்குவதில் என்ன தவறு கண்டீர்கள்! இதில உக்கிரேனுக்கு ரஷ்யா அடித்ததற்கு கூப்பாடு வேறை!! சுதந்திரம் பெற்றுக்கொடுக்கிறோம் என்று கூவிக்கொண்டு போர் தொடுத்த ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் எல்லாம் தேனும் பாலும்தான் ஓடுகிறதா!!3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு அண்ணை, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் க்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டு போட்டியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கு பாராட்டுக்கள். @Newbalance @கந்தப்பு @நியாயம் வாழ்த்துக்கள்.3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் ஜீக்கும், துல்லியமான கணிப்புகள் மூலம் முதல் மூன்று இடங்களை பிடித்துக் கொண்ட @Newbalance, @கந்தப்பு , @நியாயம் ஆகியோருக்கும்… போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட கள உறவுகளுக்கும் பாராட்டுக்கள். 👏🏻👏🏻👏🏻3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பல சிரமங்களுக்கு மத்தியிலும் சிரமமான போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் க்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டு போட்டியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கு பாராட்டுக்கள். கடும் போட்டிக்கு மத்தியில் நிரந்தர முதல்வராக வந்த @Newbalance க்கு வாழ்த்துக்கள். முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்த @கந்தப்பு @நியாயம் இருவருக்கும் வாழ்த்துக்கள்.3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொண்டாட்டம் அளவு மீறியதால் எழும்ப முடியவில்லை.😆3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுகமோ, சுகமில்லையோ வீட்டுக்கு வந்தாயிற்று.. விமான நிலையத்தில் காத்திருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்😊3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம் ✌️3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடேங்கப்பா இவ்வளவு விதிகள் உள்ளனவா ....... எல்லாம் எங்கள் தலைவிதி . ......!3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டி நடாத்துபவரின் விதிகளுக்கமைய போட்டியாளர்களுக்கு வாக்கெடுப்பு நடாத்தும் உரிமை கிடையாது! அத்தோடு விதி 240, துணை விதி 3034, உபவிதி 1003 இன்படி போட்டி நடாத்துபவரின் அதிகாரங்களுக்கு அமைய ஏற்கனவே குறிக்கப்பட்ட வகையிலேயே புள்ளிகள் வழங்கப்படும்🤪3 points- கருத்து படங்கள்
2 points2 points- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
பொய் சொல்வதில் தம்பருக்கு நிகர் தம்பர்தான்.போரின் முதல்நாளே ஈரானின் தலைவரைப் போட்டவுடன் போர் முடியும் என்று சம்பிய அமெரிக்காவும் இஸ்ரேலும் 12 நாட்களாக தலைவன் இல்லாத நாட்டை அடக்க முடியாமல் படாத பாடுபடுகிறார்கள்.அமெரிக்காவை நம்பிய அரபுநாடுகள் தேவையில்லாமல் அடிவாங்குகின்றன.இஸ்ரேலும் அடிவாங்குவதும் அடி கொடுப்பதுமாக இருக்கிறது.இரானுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை .அவர்கள் எந்த எல்லை வரையும் போவார்கள். அமெரிக்கா இந்தப் பேரில் பெரிய பொருளாதார இழப்பைச் சந்ததித்ததுடன் உக்கிரைனிடம் உதவி கேட்கும் நிலைக்குப் போய்விட்டது. எண்ணை விலை அப்பொழுது உச்சத்துக்குப் போய்விட்டது. இன்னும் போர்நீடித்தால் கொரோனா போன்ற முடக்கநிலை ஏற்பட வாய்ப்புண்டு. எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக விநியோகச்சங்கிலி தாறுமாறாகப் பாதிக்கப்படப் போகின்றது.புட்டினும. இப்பொழுது கொடுக்கின்ற எண்ணெய் வழங்கலை தடுக்கப் போவதாக வேறு மிரட்டுகிறார்.. தம்பர் வெனிசுலாவைக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் அவருக்கு எண்ணெய் பற்றிக் கவலை இல்லை.ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படும். மக்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலை வரும்.பொருட்களின் விலை கட்டுப்பாடுகளின்றி அதிகரிக்கும்.சீனாவுக்கு இது பெரிய பாதிப்பைக் கொடுக்கலாம். சீனா அதற்காக இந்த முட்டுக்கட்டையை உடைப்பதற்கான நகர்வுகளைச் செய்ய வேண்டி வரலாம். அதனை ஈரானுக்குடாகவும் செய்ய முயற்சிக்கலாம். போர் அமெரிக்கா எதிர்பார்த்த மாதிரி போகவில்லை. அமெரிக்கா அணுக்குண்டை வீசினாலும் ஆர்சரிப்படுவதற்கில்லை.இப்போதைக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்.2 points- அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
நோபல் பரிசை தனக்கு தரும்படி வாயால் கேட்கும் மனிதரல்லவா அவர்? ஈரான் போர், டிரம்புக்கு தீராத வடுவையும் வலியையும் தரப்போகிறது.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... தாரை தப்பட்டை என்று எதையாவது தூக்கிக் கொண்டு உடனேயே கலந்து கொள்ளுகின்றோம்...................... கூட்டம் சேர்ந்து விடும்................2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2024 இல் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இதே போல இரண்டுமுறை போட்டி விபரங்களை வெளியிட்டார்கள் . நீங்கள் இரண்டாவதாக வெளியிட்ட போட்டிகளைவைத்து போட்டியினை நடாத்தினீர்கள். சென்ற வருடம் 74 போட்டிகள் நடைபெற்றன. இம்முறை 84 போட்டிகள் நடைபெறவுள்ளது. 20 போட்டிகளின் விபரங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. மிகுதி 64 போட்டிகளை மட்டும் வைத்து நீங்கள் போட்டியை நடாத்துங்கள். கடந்த சிலவருடங்கள் போட்டிகளை அழகாக நடாத்தியுள்ளிர்கள். போட்டிகளை நீங்கள் நடாத்தினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு இம்முறை போட்டியினை நடாத்த நேரமில்லாமல் இருந்தால் மட்டும் நான் போட்டியினை நடாத்துகிறேன். தமிழக சட்டசபை தேர்தல் போட்டி கட்டாயம் நடைபெறும்2 points- குட்டிக் கதைகள்.
2 pointssSprtoneodmc14002thgcc7uf4c5l1 h1451cma8haa9ahcm091g1i7clihi · சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன். . சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, 'சொல் குழந்தாய்!' என்பது போல் பார்த் தார். . ''என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க மாமன் குடும்பமும்தான் பெரிய குடும்பங்கள். எல்லாரும் ஒண்ணுமண்ணா இருப்போம்! . என் மாமனுக்கு வித்யா பொறந்தப்ப முதல்ல அந்தப் பேச்சு விளையாட்டாதான் ஆரம்பிச்சது. ஆனா, கொஞ்ச நாள்ல அதையே ரெண்டு குடும்பங்களும் தீர்மானமா எடுத்துக்கிட்டாங்க. கல்யாண வயசு வந்ததும் வித்யாவுக்கு என்னைக் கல்யாணம் கட்டி வெச்சுப்புடணும்னு முடிவு எடுத் தாங்க. அவங்க ஊட்டுன ஆசையில நான் சின்ன வயசுல இருந்தே 'வித்யா எனக்குத்தான்'கிற நினைப்போடவே வளர்ந்தேன். . வாலிப வயசுல வித்யா பைத்தியம் முத்தி என் உயிர், உலகம் எல்லாமே வித்யாதான் இருந்தா. ஆனா, ஒரு கை மட்டும் தட்டுனா ஓசை வருமா?வித்யா வுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதுல இருந்தே என்கிட்ட ஓர் இடைவெளியோடுதான்நடந்துக்கிட்டா. அது எனக்குப் புரியாத அளவுக்கு வெறித்தனமா அவளை நேசிச்சுட்டு இருந்தேன். நான் எங்கப்பா மாதிரி மை கறுப்பு இல்லேன்னாலும் கொஞ்சம் கறுப்புதான். வித்யாவோ அப்பதான் பூத்த செம்பருத்தி மொட்டு கணக்கா எளஞ்சிவப்பு. எங்க கிராமம் அதோட ஆயுசுக்கும் வித்யா மாதிரி ஒரு அழகியைச் சுமந்திருக்காது. . அழகு ஒரு காரணம்... ரெண்டாவது படிப்பு. நான் ஆறாம் கிளாஸ் ஃபெயில். வித்யா டவுன் காலேஜுக்கு எல்லாம் போய் படிச்சது. கல்யாணப் பேச்சு எடுத் தப்போ, வித்யா ஒரே வரியில் என்னைக் கல்யாணம் கட்டிக்க இஷ்டமில்லைன்னு சொல்லிருச்சு. . அதைக் கேட்டுக்கிட்டு நான் எப்படி உயிரோடு இருந்தேன்னு இப்ப வரைக்கும் தெரியலை. அவளுக்கு அவங்க வீட்டுல நல்லா படிச்ச, சிவப்பா, அழகா ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்களாம். . அவ கல்யாணம் அன்னிக்குக் கிளம்பி இலக்கில்லாம எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு, கடைசியா இந்த ஊர்ல செட்டில் ஆயிட்டேன். இத்தனை வருஷம் பொழைச்ச என்பொழைப்புக்கு ஏதாவது அர்த்தம் இருக்குதா சாமி?'' . சாமி நிதானமாகக் கேட்டார், ''அது கிடக் கட்டும்... மணியஞ்சோலை கிராமத்து ரங்கசாமி, பாக்கியம் தம்பதியோட மகன்தானே நீ?'' . சாமியின் ஞான தீர்க்கத்தை எண்ணி கோபால் புல்லரித்துவிட்டான். . ''சா... சாமி என் ஊரும் அப்பா, அம்மா பேரும் உங்களுக்கு எப்படி சாமி தெரியும்?'' . ''உன் மாமன் மகள் வித்யாவைக் கல்யா ணம் பண்ண அதிர்ஷ்டக்கட்டை நான்தான். அந்த ராங்கிக்காரிகூட மனுஷன் வாழ முடியாதுப்பா. அதான், நான் சாமியாராயிட்டேன்! நீயாவது நிம்மதியா இரு!'' என்று கூறிவிட்டு கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் 'சாமி'கள்.....!2 points- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மத அடிப்படை வாதம் மக்களை முட்டாள்கள் ஆக்கும். இயன்ற அளவுக்கு அது அரசியலில் இருந்து அகற்றப்படல் வேண்டும்்அல்லது அரசியலில் ஆக குறைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாவண்ணம் பலவீனப்படுத்தப்படல் வேண்டும். ஆரம்பத்தில பாலஸ்தீன விடுதலை என்று புறப்பட்ட பாலஸ்தீன விடுதலை இன்று ஹமாஸின் இஸலாமிய மத அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது. மத்திய காலத்தில் மனிதர்களை மூடபழக்கங்களுக்குள் தள்ளிய உலகில் உள்ள எல்லா மதங்களும் மீண்டும் அந்த நிலைக்கு போக அனுமதிக்கக கூடாது. இலங்கையில் புத்தமதம் இந்தியாவில் இந்துமதம் ஆகியவையும் இதே போல செல்லவே முயலுகின்றன. ஈழத்தமிழர்களிடமும் மத அடிபடைவாதத்தை புகுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களிடையே முட்டாள்தனங்களை பரப்பி அதை விமர்சிக்கமுடியாத அளவுக்கு புனிதப்படுத்திவிட்டால் கேள்விகள் எதுவும் இன்று தமது எதேச்சதிகாரத்தை தொடர முடியும் என்பதும் கேள்வி கேட்பவனை கடவுளுக்கு எதிரானவன் என்று அடக்கலாம் என்பதுமே மத அடிப்படைவாதத்தின் நோக்கம். மத அடிப்படைவாதம், கண்மூடித்தனமான தேசபக்தி, இனப்பற்று என்ற ரீதியிலான இனவெறி என்பன மக்களை தர்ககரீதியாக நியாயமான கேள்விகளை கேட்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் கருவிகள். அதை நாடுகளும் விடுதலை இயக்கங்கள் என்று கூறப்படுபவையும் சிறப்பாக பயன்படுத்துகின்றன.2 points- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
வத்திக்கானுடன் முரண்பட்டு பாருங்கள் சுயரூபம் தெரியும்.😎 கீழே இருக்கும் தரவுகளை பார்க்கலாம். எதற்காக அழிப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள் என்பது புரியும்.அங்கே ஆன்மீகமும் இல்லை அண்டங்காககளும் இல்லை. மாறாக தமது பாதையில் குறுக்கே வருபவர்களை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். அது அவர்களுக்கு சரியாக தெரிகின்றது.வல்லமையுள்ளவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியது வல்லமை இல்லாதவர்களின் உலக நிலை. இங்கே ஆன்மீகத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள்.அவ்வளவுதான். மற்றும் படி அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.ஜேர்மனியில் கூட ஆன்மீகத்தை அரசியலிருந்து அகற்ற முடியாது. வல்லரசு என்பது அழிப்பதில் முன்னிலை வகிப்பதல்ல. மாறாக மனிதாபிமானங்களும் வல்லரசுகளுக்கு சொந்தமானது. மற்றும் படி...... ரஷ்யாவின் மகிமை ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் நட்பு பேணியிருந்தால் இன்றும் அதாவது ஈரான் யுத்தத்தின் போதும் அதன் பொருளாதாரம் வலிமையுடன் இருந்திருக்கும்.2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெற்றியாளர் நியூபலன்ஸ்சுக்கும் 2வது இடத்தைப்பிடித்த கந்தப்புவுக்கும் வாழ்த்துகள்.போட்டியைத்திறம்பட நடத்திய கிருபன்ஜீக்கும் திரியைத் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்.2 points- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இப்ப நடக்கிற சண்டையில ஒரு குருவியையும் நம்பேலாது கண்டியளோ..... ஈரானும் எல்லாத்திலையும் குண்டை போட்டுட்டு சாட்டுக்கு மன்னிப்பு கேக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் அரேபிகளை தூண்டி விடுறதுக்காக ஆங்காங்கே குண்டுகளை தூவுகின்றார்களோ எண்ட சந்தேகமும் இருக்கு. எண்டாலும் நோன்புக்காலம் களைகட்டுது.😂2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமோம். அதுக்குள்ள தலை"விதி" யும் ஒன்று. அந்த விதியின்ர இலக்கம் தெரியவில்லை. 🤣2 points- குட்டிக் கதைகள்.
2 pointspSroosnedtgfHtg01u2àut5g328ig66ll6r03:16i89g9uu03et 9 i050,i · ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள். கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார். அங்கிள்... அங்கிள்.... என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்.... அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள் prescription கொண்டுவந்தாயா குழந்தை???? அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா???? எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள். "காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது. சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன????? குழந்தை மென்று விழுங்கி சொன்னது " மெரிக்கள்" கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார். நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு????? மெரிக்கள் அங்கிள்... அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது????? குழந்தை கண்ணீருடன் சொன்னது.... டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது. அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார். அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார். வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார். அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்..... டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற அதற்க்கு மருத்துவர் இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம். எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்........!2 points - வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.