Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      1987

    • Posts

      76532


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      1777

    • Posts

      28869


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      1341

    • Posts

      42961


  4. Justin

    Justin

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      1295

    • Posts

      5615


Popular Content

Showing content with the highest reputation since 03/19/23 in Posts

  1. சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன் ஒரு சட்டத்தரணி. இப்பொழுது என்னைப் போலவே அவனும் ஓய்வில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் வெளிநாடு அனுப்பி விட்டு குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். முற்றம் கூட்டவும் எடுபிடி வேலைகளுக்கும், சமையல், துவையல் போன்ற வேலைகளுக்கும் என இரண்டு வேலையாட்களை வைத்திருக்கிறான். ஏகப்பட்ட தமிழ் தொலைக்காட்சிகள் இருப்பதால் பழைய பாடல்கள் திரைப்படங்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனிடம் நான் சிக்கிக் கொண்டேன். நண்பனுக்கு இங்கே நான் வைத்திருக்கும் பெயர் மணியன். இலங்கையில் சுற்றுலாவுக்குத்தான் இம்முறை போயிருந்தேன். பொது வேலைகள் என்று பரந்த நோக்கம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மணியனுக்கு நான் எனது வரவைப் பற்றி அறிவித்திருந்தேன். “நீ சிறிலங்காவில், எங்கே வேணுமெண்டாலும் போ. ஆனால் உன்ரை முக்கிய இருப்பிடம் எனது வீடுதான். என்னுடனேயே தங்குகிறாய்” என்று மணியன் சொல்லி விட்டான். புதுக் கட்டிடங்கள் உயர்ந்திருந்தாலும், தமிழ் பெயர்களுடன் கடைகள் பல இருந்தாலும், பாசி பிடித்து கறுப்பாக இருக்கும் மதில்கள், வீட்டுச் சுவர்கள், பள்ளம் விழுந்த வீதிகள்... என வெள்ளவத்தை முன்னர் போலவே, மாறாமல் அப்படியே இருந்தது. வெள்ளவத்தையில் கடற்கரை ஓரமாக ஆறாவது மாடியில் உள்ள மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டுக்கு மாத வாடகையாக இரண்டு இலட்சங்கள் ரூபா கேட்டார்கள். அப்படி ஒரு வீட்டில் தங்கிக் கொண்டு பல இடங்களைச் சுற்றி வரத்தான் முதலில் தீர்மானித்திருந்தேன். ஆனால் மணியன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவனது விருப்பத்துக்கு ஏற்ப அவனது வீட்டில் தங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மணியன் வீட்டின் மாடியில் ஒரு அறை எனது இருப்பிடமாகிப் போனது. முதல் நாளே இரவு படுக்கப் போகும் போது மணியன் என்னிடம் சொன்னான், “காலையில் ஏழு மணிக்கு கீழே வந்து விடு” என்று. ஏழு மணிக்கு 'சூடாக தேநீர் கிடைக்கும்' என்று மாடியை விட்டு கீழே வந்தால், “வா…வா கடைக்குப் போவம்” என்று மணியன் அவசரம் காட்டினான். பருத்தித்துறை,கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த தாமோதரத்தார், நாகேந்திரத்தின் தேநீர் கடைகள் இரண்டும் நினைவுக்கு வந்தன. இளைஞர்களாக இருந்த போது நானும் மணியனும், பொன்னையா அண்ணனின் உளுந்து வடையை பேப்பரில் வைத்து அழுத்தி எண்ணை நீக்கி, நன்னாரி சேர்ந்த ‘பிளேன் ரீ’யை பல மாலை வேளைகளில் சுவைத்து மகிழ்ந்திருந்திருக்கிறோம். ஆக மணியனும் நானும் இப்பொழுது ஏதோ ஒரு தேநீர் கடைக்குப் போகப் போகிறோம் எனக் கணித்துக் கொண்டேன். மணியனின் காரில் ஏறிக் கொண்டேன். கார் புறப்படும் போது ‘சீற் பெல்டை’ போட முயன்ற போது, “இதெல்லாம் இங்கே அவசியம் இல்லை” என்று மணியன் சொன்னான். காலை நேரம். காலி வீதியில் வாகனங்களின் சத்தம் அதிகமாக இருந்தது. ‘கோன்’ அடிக்காமல் எந்த வாகனங்களும் நகர்ந்ததாகத் தெரியவில்லை. மணியனின் கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பல வாகனங்கள் எங்களைத் தாண்டிச் செல்லும் போது அதில் இருந்தவர்கள் எங்களை முறைத்துப் பார்த்தார்கள். அல்லது எரிச்சலுடன் பார்த்தார்கள். நான் மணியனைப் பார்த்த போது, மணியன் புன்முறுவலுடன் சொன்னான், “கண்டு கொள்ளாதை. எனக்கு என்ரை கார் முக்கியம். அவையளுக்கு அவசரம் எண்டால், என்னை முந்திக் கொண்டு போகட்டும்”. ஊர்ந்து ஊர்ந்து சென்று ஒருவாறு தனது காரை ஒரு தரிப்பிடத்தில் நிறுத்தினான். ஒரு பேக்கரிக்குள் நுளைந்தான். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். பாண் வாங்கும் எல்லோர் கைகளிலும் பிளாஸ்ரிக் பைகள் இருந்தன. ‘Slice Bread என்று கேட்டு அவனும் பிளாஸ்ரிக் பையில் பாண் வாங்கிக் கொண்டான். “மச்சான் சம்பலோடை பாண் சாப்பிட நல்லா இருக்கும்” என்றான். “காலமைக்கு பாண்தான் சாப்பாடோ?” “ஏன்டா, பாண் விருப்பமில்லையே? நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு சரஸ்வதி விலாஸிலே வேண்டின இடியப்பம், வெந்தயக் குழம்பு, சொதி எல்லாம் மிஞ்சிப் போச்சுடா. சூடாக்கித் தாரன். வேணுமெண்டால், நீ அதைச் சாப்பிடு. நான் பாண் சாப்பிடுறன்” சொல்லிவிட்டு என்னைப் பார்த்தவனுக்கு, இதமான காலை வெய்யிலிலும் என் முகம் வாடி இருந்தது புரிந்திருக்கும். “நீ காலமை ரீயும் குடிக்கேல்லை என்ன? வா, பால் வாங்கிக் கொண்டு போவம்” என்றவன், ஒரு பெட்டிக் கடையில் இரண்டு பால் பக்கெற்றுகளும் வீரகேசரி பேப்பரும் வாங்கினான். “வீரகேசரி வாங்கினால் தினத்தந்தி இலவசமடா” என்று சொன்னவன் அடுத்து ஒரு பழக்கடைக்கு முன்னால் நின்று கப்பல் வாழைப்பழத்துக்கு விலை கேட்டான். “ஐயா, இந்தப் பழம் இப்ப உடனை சாப்பிடலாம். இந்தச் சீப்பை வெட்டட்டே?” என்ற கடைக்காரரிடம் “ஆறு பழம் போதும்” என்று சொல்லி வாங்கிக் கொண்டான். “நல்ல பழம்தானேடா. ஒரு சீப்பாவே வேண்டி இருக்கலாம்” என்று கேட்ட என்னை மணியன் உடனே இடை மறித்தான். “நல்ல பழம்தான். நான் ஒரு பழம்தான் சாப்பிடுவன். சீப்பா வேண்டிக் கொண்டே வைச்சால் எல்லாத்தையும் ஒரேநாளிலே சாப்பிட்டு முடிச்சிடுவாங்கள்” மணியன் தன் வேலையாட்களை குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது. அவனுக்கு ஒரு பழம்.அவன் மனைவிக்கு ஒன்று. ஒன்றுதான் எனக்கும் வருமா? இல்லை இரண்டு தருவானா? யேர்மனியில் கிடைக்கும் பெரிய வாழைப்பழத்துக்கு இந்தச் சின்ன கப்பல் பழம் ஈடு கொடுக்குமா? கார் தரிப்பிடத்தில் ஒருவன் பச்சை உடுப்போடு காத்திருந்தான். மணியன் அவனுக்கு ஐம்பது ரூபாத் தாளை எடுத்துக் கொடுத்தான். “எதுக்கு அவனுக்கு ஐம்பது ரூபா ?” “பார்க்கிங் சார்ஜ். காரை ஒருக்கால் நிப்பாட்டி எடுத்தாலே எழுபது ரூபா. ரிசீற்றை வேண்டாமல் விட்டால் ஐம்பது” “அப்போ இந்தக் காசு அரசாங்கத்துக்குப் போகாது” “போகாது” காருக்கு வெளியே பார்த்தேன். அழுக்கான நடைபாதையில் கைகளை நீட்டிக் கொண்டு ஏதாவது கிடைக்குமா என்று பலர் இருந்தார்கள். பச்சை உடையுடன் ஒருவன் ஓடியோடி கௌரவமாக ஐம்பது ரூபாப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். “சமையலுக்குத்தானே வீட்டிலை ஆள் வைச்சிருக்கிறாய்? பிறகேன் கடையிலை வாங்கிச் சாப்பிடுகிறாய்?” என்று மணியனைக் கேட்டேன். “வேலைக்காரரை நாலு மணிக்கு அனுப்பிப் போடுவன். இரவுச் சாப்பாடு எனக்கும் மனுசிக்கும்தானே. ஒருநாள் இடியப்பம், அடுத்தநாள் புட்டு, பிறகு அப்பம், மசாலா தோசை, பொங்கல், கொத்து எண்டு விரும்பினதை வாங்கிச் சாப்பிடுவம். மிஞ்சுறதை அடுத்தநாள் காலமை சூடாக்கி சாப்பிடுவம். அது சுகமான வேலை” “மத்தியானத்தை எதுக்கு விட்டாய். அதுக்கும் கடையிலை வாங்கலாம்தானே?" “வாங்கலாம். எங்களுக்குத் தேவையான மரக்கறிகள் அதுவும் எங்கடை பாணிச் சமையல், மீன்,இறைச்சி எண்டு வேணும்தானே” காலை எழுந்தவுடன் பால்,பாண்,பழங்கள் வாங்குவது. பத்து மணியளவில் மரக்கறிகள், மீன் வாங்குவது, மாலையில் ஏதாவது ஒரு உணவு விடுதியில் இரவுச் சாப்பாடு வாங்குவது என்று ஓரிரு நாட்களிலேயை வெள்ளவத்தை எனக்கு பழகிப் போனது. கூடுதலான வரையில் மணியன் தனது பேர்ஸைத் திறக்காமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.
    20 points
  2. 2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம். நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம். ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
    18 points
  3. இலங்கையில் ஆறு மாதங்கள் நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என் நண்பியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று அவளுக்குக் கூறினேன். நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே. அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம். இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத் தங்கையின் வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது என்பதும் ஒரு நண்பியுடன் அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும் என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள் இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம் என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண் செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும் வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம் அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை. அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது. அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும் இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. ஒன்று
    18 points
  4. முன்குறிப்பு பகுதி 1 இங்கே *** மீள்குடியேற்றம் நாம் ஏதோகாரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து விட்டாலும் எமது சரியான நோக்கம் அல்லது இலக்கு எதுவென்று தெரியாமல் வாழ்கிறோமா என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. வெளிநாட்டில் எனது குடும்பத்தை உருவாக்கியபோது அது தனது அடுத்த சந்ததியுடன் தமிழர் என்ற ஆலமரத்தின் விழுதுகளிலிருந்து பிரிந்து போகப்போவதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழன் என்ற பேருணர்வு என்னுடன் முற்றுப் பெறுகிறது. மேற்கூறிய நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தவோ எதிர்பார்க்கவோ முடியாது. வேறு என்ன செய்யலாம் ? அங்கு சென்று குடியேறுவதன் மூலம் எமது பணம் அனுபவம் ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் அங்கே வாழ்ந்தபடியே பயன்படுத்தலாம். அண்மைய நாட்களாக பல திரிகளிலும் இது பற்றி மேலோட்டமாகப் பேசப்படுவதுதான். அங்கு வாழலாம் வாழ முடியாது என்பது ஒவ்வொருவரினது தனிப்பட்ட முடிவு. இதில் சரி பிழை என பிரிவினை பேச வேண்டாம். எனக்கு இது அனுகூலமாக இருப்பதால் எனது பார்வையில் எனது நிலையிலிருந்து இதன் சாத்தியங்களை விபரிக்கிறேன். எல்லோராலும் மீளக் குடியேற முடியாது என்பதும் அதன் காரணங்களும் புரியும். ஒருவேளை தனிநாடு கிடைத்திருந்தாலும் எம்மில் பெரும்பான்மையானவர்கள் எமது நாட்டிற்குத் திரும்பியிருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து மாற்று வழிகளுக்கான பதில்களை நானே தேட முயல்கிறேன். ஓய்வூதியத்தில் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றிய எனது அவதானிப்புதான் மீள் குடியேற்றத்துக்கான முதலவது காரணம். என்னைச் சுற்றியுள்ள வயதானவர்களின் அன்றாட வாழ்க்கை இப்படி உள்ளது . சமையல், வீட்டு வேலைகள பேரப்பிள்ளையைப் பராமரித்தல் உலகம் முழுவதுமுள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது பெரும் பகுதி தொலைக்காட்சிக்கு முன்னால் இத்தனையும் நான்கு சுவருக்குள்ளேயே நடக்கும். வீட்டை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு. ஆனாலும் தொலைபேசி உரையாடல்களின்போது இலங்கையில் வாழ்ந்த ஏக்கம் அடிக்கடி அசைபோடப்படும். சிலர் விடுமுறைக்குப் போவதுபோல் அடிக்கடி இலங்கை சென்றாலும் ஆகக் கூடியது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டதுதான் அவர்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டது. இதே வட்டத்துக்குள் நான் அடிமையாக விரும்பவில்லை. நான் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது. அதை அனுபவித்து வாழ விரும்புகிறேன். இதற்காகச் சில தடைகளைத் தாண்டி வர வேண்டும். தடைகள் துணை வாழ்க்கைத் துணையின் அனுகூலம் இல்லாமல் முதலாவது அடியை எடுத்து வைக்க முடியாது. இது எனது தனிப்பட்ட விடயமாதலால் விவாதத்திலிருந்து கடந்து செல்கிறேன். உறவுகள் நாம் பிரதானமாகச் சொல்லும் காரணம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பிரிந்து வாழ முடியாது. நியாயமானது. ஆனால் நாம் இலங்கையிலிருந்து இங்கு வரும்போது எமது தாய் தந்தை மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிட்டு வந்துள்ளோம். இப்போது அவர்களைப் பாதுகாப்பான சூழலில் அல்லவா இருக்கவிட்டுத்தான் போகப் போகிறோம். அவசியப்படும்போது திரும்பி வந்து சில நாட்கள் அவர்களுடன் இருந்து செல்லலாம். அதேபோல் அவர்களும் அடிக்கடி இலங்கை வரலாம். பிரிவு என்பது நீண்டது கிடையாது. எப்படியோ பிள்ளைகள் திருமணம் செய்தவுடன் பிரிந்துதான் வாழப் போகிறார்கள். எனது மகளிடம், உன்னைச் சின்ன வயதிலிருந்து பாட்டி தாத்தா பராமரித்ததுபோல் என்னை அதிகம எதிர்பார்க்க வேண்டாம் என்று அடிக்கடி சொல்வேன். பார்க்கலாம். மருத்துவம் இது ஒரு பெரிய பிரச்சனை. நோய் வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவதே சிறந்த வழி. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல நித்திரை அவசியமாகும். நீண்டகால நோய்களை வருடத்துக்கு ஓரிரு தடவை வெளிநாட்டுக்கு வரும்போது கவனித்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அங்குள்ள பாதுகாப்பற்ற காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளை அடைப்புக் குறிக்குள்ளும் தருகிறேன் - இராணுவ அச்சுறுத்தல் (அரசியல் - குழுக்கள் - இனவாதம போன்ற வில்லங்கங்களில் நுளையக் கூடாது) - உள்ளூர் சண்டித்தனம் (உள்ளூர் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது கூடாது. முடிந்தவரை அயலவர்கள் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும்) - கொள்ளை (நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்) - பாம்பு பூச்சி நுளம்பு (பாதுகாப்பு வழிகள் உள்ளன) வாழ்க்கை வசதி குடியேறுவதற்கு முன் ஆடம்பரம் இல்லாமல் அதற்குரிய வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும். இப்போது மேலத்தேய வீடுகளைப் போன்ற வசதிகளை அங்கே செய்து கொள்ளலாம். வெப்ப காலநிலை உலக வெப்பமாதலில் இலங்கையிலும் கோடை காலத்தில் வெளியே போக முடியாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இதற்கும் முன்னேற்பாடான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரம் உண்மையில் வெளிநாடு வந்தபின்தான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்தது. நான் மேலே குறிப்பிட்டது போல் வெளிநாட்டில் ஓய்வூதியத்தில் குறுகிய வாழ்க்கைமுறைக்குள் அடிமைப்பட வேண்டாம் என்று கருதுவதால் இதுவும் பெரிய பிரச்சனையாக இராது என்றே கருதுகிறேன். நோக்கம் ஓய்வுபெற்ற பின் இங்கு இருக்கக் கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னரே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது இருந்த மனநிலை வேறு. முதல் பகுதியில் சொன்னதுபோல் பிரான்ஸ் மட்டுமே எனது நாடு என்றிருந்தேன். Guadeloupe, Martinique போன்ற கரிபியன் தீவு அல்லது ரெயுனியன் தீவு போன்ற இடம் ஒன்றில் குடியேறலாமா என்றும் யோசித்திருந்தேன். மகிழ்ச்சியன வாழ்க்கைதான் எனது நோக்கம் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் இருக்க வேண்டாமா என்ற சிந்தனையில் காலப்போக்கில் இலங்கையில் குடியேறுவதையே விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன் அங்கு சென்றிருந்தபோது வெளிநாட்டிலிருந்துவிட்டு நிரந்தரமாக மீழ் குடியேறிய இருவரைச் சந்தித்தேன். எனது ஆவல் மேலும் அதிகமானது. என்னதான் நாம் இங்கிருந்து தமிழ்த் தேசியம் பேசினாலும் அங்கிருப்போருக்கு சிங்கள அரசின் கீழிருக்கும் இலங்கைதன் அவர்களது நாடு. எமது இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் முயற்சிப்போம். அங்கு அவர்களோடு வாழ்வதன் மூலம் என்னாலான ஒரு சிறு முன்னேற்றத்தை ஒரு கிரமத்த்திலாவது ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டப் போகிறேன். இது எனது பூமி என்ற பரந்த சிந்தனையில் பார்த்தால் எல்லாமே எனது மண்தான். அந்த மண்ணைப் பாதுகாப்பது எனது கடமை. நான் இத்தனை காலமும் வாழ்வதற்காக பூமியிலிருந்து எடுத்ததை மறுபடி பூமியில் வைக்கப் போகிறேன். இறுதியாக, நான் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோட்டை பற்றிய சில குறிப்புகளோடு விடை பெறுகிறேன். எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம். இதுவே எனது தேசியம். நன்றி.
    17 points
  5. பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?
    16 points
  6. அக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!
    16 points
  7. கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.
    16 points
  8. சில காலமாக எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “இளமை விடை பெறும் போது உடலில் அங்கங்கே ஏதாவது பிரச்சனைகள் வருவது இயற்கை. நீங்கள் இரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் வில்லையின் எதிர்தாக்குதலாகவும் இருக்கலாம். கணினியைப் பாவிக்கும் போது நீங்கள் உங்கள் கையை வைத்திருக்கும் நிலையால் கூட மணிக்கட்டுப் பிரச்சனை வரலாம். கணினியில் படம் வரைவதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அதிகளவு பாரமான வேலைகளையும் தவிருங்கள்” என பல ஆலோசனைகளைத் தந்திருந்தார். இப்பொழுது சிறீலங்காப் பயணத்தின் போது 23 கிலோ சூட்கேசை ஏற்றி இறக்கியதில் மணிக்கட்டில் மறைந்திருந்த நோ மீண்டும் எட்டிப் பார்த்தது கூடவே சிறு வீக்கமும் வந்து விட்டது. அங்கே இருக்கும் போது கூடுதலான வரையில் வலது கையைப் பாவிப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். இதை அவதானித்த மணியன், “உன் வலது கைக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான். விடயத்தைச் சொன்னேன். “காரில் ஏறு” என்றான். ஏறிக் கொண்டேன். எங்கே போகிறோம் என்று மணியன் சொல்லவில்லை. இரவு நேரம். மழை பெய்து கொண்டிருந்தது. “ முந்தி இப்பிடி இல்லை. இப்பத்தான். இந்த நேரத்திலை வழக்கமா வடக்கு கிழக்கிலைதான் மழை இருக்கும். எல்லாம் இப்ப இஞ்சை மாறிப் போச்சு” என்று மணியன் சலித்துக் கொண்டான். “இங்கை மட்டுமில்லை. உலகம் முழுக்க இப்படித்தான் நிலமை” என்று அவனுக்குப் பதில் தந்தேன். கார், காலி வீதியில் ஒரு சிறிய தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் நின்றது. வைத்தியசாலையில் கார் நிறுத்த கட்டணம் வாங்கிக் கொண்டார்கள். “மச்சான். நல்ல ஒத்தப்பேடி. களுபோவில ஹொஸ்பிற்றலிலை வேலை செய்கிறார். அங்கை வேலை முடிஞ்சு இரவு எட்டு எட்டரைக்குத்தான் இஞ்சை வருவார். உன்ரை கையை ஒருக்கால் அவருக்கு காட்டு” மணியனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவன் பின்னால் போனேன். நம்பர் எடுத்துக் கொண்டு வந்து கையில் தந்தான். “காசு குடுக்க வேணுமெல்லோ?” என்று மணியனைக் கேட்டதற்கு, “அதை நான் கட்டிட்டேன்” என்றான். நேரம் போய்க் கொண்டிருந்தது. டொக்டர் வரவேயில்லை. நான் சலிப்படைவது மணியனுக்குப் புரிந்து விட்டது. “இன்னும் ஒரு பிரைவேட் ஹொஸ்பிற்றல் அதுவும் வெள்ளவத்தையிலை பக்கத்திலைதான் இருக்கு, டொக்டர் அங்கையும் ஆக்களைப் பாக்கிறவர். வருவார். பொறுமையாக இரு” என்று சொன்னான். பத்து மணியளவில் டொக்டர் வந்தார். கடைசி ஆளாக அவர் அறைக்கு நான் போனேன். மணியனும் கூட வந்தான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ப்ளட் ரெஸ்ற் செய்யோணும். பெயின் கில்லரும் கிறீமும் எழுதித் தாறன். மாறாட்டில் வாங்கோ” டொக்டரின் அறிவுரையை வேதவாக்கா மணியன் எடுத்துக் கொண்டு இரத்த பரிசோதனைக்கு என்னை அழைத்துச் சென்றான். அங்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அதையும் மணியனே கட்டினான். வீட்டுக்குத் திரும்பும் போது மணியனைக் கேட்டேன், “நான்தானே கடைசி ஆள் எதுக்குடா நம்பர் எடுத்தாய்?” என்று. “பழக்கதோசம் “ என்று பதில் வந்தது. அடுத்தநாள் முதல் வேலையாக வைத்தியசாலைக்குப் போய் எனது இரத்தப் பரிசோதனை முடிவையும் பார்மஸியில் டொக்டர் எழுதிய மருந்தையும் மணியன் எடுத்து வந்தான். “இரத்தத்தில் பிரச்சினை இல்லை” என்று சொன்னான். அன்று மாலை அவனது நண்பர் ஒருவர் மணியனைக் காண வந்தார். வந்தவரது இடது கையில் கட்டுப்போட்டிருந்தது. வெள்ளைக் கொடியை கையில் ஏந்திக் காட்டுவது போல கையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். “கையிலை என்ன பிரச்சனை?" என்று அவரை மணியன் கேட்க, “கன காலமா ஊருக்குப் போகேல்லை. புத்தூரிலை இருந்த காணியை கொஞ்சம் துப்பரவாக்கி நல்ல விலைக்குக் குடுக்கலாம் எண்டு போனால், காணிக்குள்ளை இருந்த பள்ளத்திலை விழுந்து கையிலை எலும்பு முறிஞ்சு போச்சு. அப்பிடியே எல்லாத்தையும் போட்டிட்டு வந்திட்டன்” என்று அவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் தன் கதையை விரிவாக்கு முன்னரே மணியன் என் கையின் கதையைச் சொல்லிவிட்டான். “நான் ஒத்தப்பேடியிட்டை எல்லாம் போகேல்லை. இஞ்சை வெள்ளவத்தை மாக்கெற்றுக்குப் பக்கத்திலே (Manning place) மனிங் பிளேஸிலே ஒரு ஆயுர்வேத கவர்ன்மென்ற் ஹொஸ்பிற்றல் இருக்கு. ஒண்டவிட்ட ஒருநாள் போகோணும். எண்ணை பூசி மசாஜ் செய்து பத்தும் போட்டு விடுவினம். இப்ப கையிலை நல்ல முன்னேற்றம்” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணியன் என்னைப் பார்த்தான். நாளை நான் ஆயுர்வேத ஹொஸ்பிற்றலுக்குப் போக வேண்டிய வேலை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். “காலமை ஏழு மணிக்குப் போய் நம்பர் எடுத்திட்டால் வெள்ளெணவா வேலை முடிஞ்சிடும். எட்டரைக்கு டொக்டேர்ஸ் வந்திடுவினம். இரண்டு பேர்தான் டொக்டேர்ஸ். அதிலை லேடி டொக்டர் தமிழ். நானும் நாளைக்குப் பத்துப் போடணும். நீங்கள் நாளைக்கு ஏழு மணிக்கு வாங்கோ. நான் அங்கை நிப்பன். உங்களுக்கு எண்ணைதான் தருவினம் எண்டு நினைக்கிறன். எதுக்கும் வரக்கை ஒரு போத்தலையும் கொண்டு வாங்கோ. பத்துப் போடுறதெண்டால் பஞ்சும், பன்டேஜ்ஜும் பார்மஸியிலை வேண்டிக் குடுக்க வேணும். ஏழு மணிக்கு பார்மஸி திறக்க மாட்டாங்கள். எதுக்கும் நீங்கள் வாங்கோவன்” என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். காலை 6:45க்கே ஆயுர்வேத வைத்தியசாலைக்குப் போய் விட்டேன். அங்கே இருந்த கதிரைகளில் எல்லாம் தமிழ், சிங்களம் கலந்த (என்னைப் போன்ற) முதியவர்கள் இருந்தார்கள். இருப்பதற்கு இடம் இல்லாததால் மணியனின் நண்பனுக்காக காத்திருந்தேன். 7:30க்கு வந்து சேர்ந்தார். “வெள்ளனவே வந்திட்டீங்கள் போல. ஏன், இருக்கிறதுக்கு இடம் கிடைக்கேல்லையே? கடைசி ஆள் இருக்கிற கதிரைக்குப் பக்கத்திலை நிண்டிருக்கலாமே?” என்று தன் ஆதங்கத்தைச் சொன்னார். 7:45க்கு ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். கதவுகளைத் திறந்த பின்னர் இருக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு, உள்ளே இருந்து கதிரைகளை எடுத்து வந்து போட்டு அமரச் சொன்னார்கள். கூட்டிப் பெருக்கி, புத்தரை வணங்கிய பின்னர் இலக்கங்களைத் தந்தார்கள். வரிசையில் நின்று அங்கிருந்த யன்னலூடாக இலக்கத்தைக் கொடுத்து மற்றவர்கள் போல் நானும் பதிவு செய்து கொண்டேன். தமிழ் ‘லேடி டொக்டர்’ முகக் கவசம் போட்டிருந்ததார். “உங்களுக்குப் பத்து போட்டால் நல்லது. அது நீங்கள் இங்கே இருக்கிறவரைதான் சாத்தியம். எண்ணை தரலாம். இலவசம் என்றபடியால் ஒரு அவுன்ஸுக்கு மேலே ஹொஸ்பிற்றலிலை தரமாட்டினம். வெள்ளவத்தை மாக்கெற்றில் இருந்து தெஹிவலப் பக்கமாகப் போறவழியிலே பஸ்ஸல் லேனுக்கு முன்னுக்கு உள்ள பில்டிங்கிலே முதலாவது மாடியிலே ஒரு ஆயுர்வேதக் கடை இருக்கு. யேர்மனிக்கு நீங்கள் எண்ணை கொண்டு போறதெண்டால் தேவையானதை அங்கை வாங்கலாம். இரண்டு வகையான எண்ணை எழுதித்தாறன். ஒண்டு வீக்கத்துக்கும் குணமாகிறதுக்கும். மற்றது நோ இருந்தால் பூசுறதுக்கு. நீங்கள் இரண்டையும் சேர்த்தும் பாவிக்கலாம்” என்று அன்போடு சொன்னார். வைத்தியாசாலையில் தந்த ஒரு அவுன்ஸ் எண்ணையுடன் வைத்தியர் சொன்ன ஆயுர்வேத மருந்துக்கடையிலும் இருக்கட்டுமே என்று சில அவுன்ஸ் எண்ணெய் வாங்கிக் கொண்டேன். விலை மலிவாக இருந்தது. ஒரு அவுன்ஸ் எண்ணெய்க்கு ரூபா 200/- தான் கொடுக்க வேண்டி இருந்தது. “இப்பிடி ஒரு கடை இருக்குது, எண்ணை வாங்கலாம் எண்டது எனக்குத் தெரியாமல் போட்டுது” என்று மணியனின் நண்பர் சொன்னார். அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது. அந்த ஆயுர்வேத மருந்துக் கடை ஒரு பழைய கட்டிடத்தின் மேல்மாடியில் மறைவாக இருந்தது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கட்டிடத்தின் வெளிப் பக்கத்தில் இல்லாததும், கடை இருப்பதற்கான அறிவிப்புப் பலகை வெளியில் தெரியாமல் இருந்ததும் அப்படி ஒரு ஆயுர்வேத மருந்துக் கடை இருப்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். நான் மறந்தாலும், “கைக்கு எண்ணை பூசினியோ?” என்று மணியன் நினைவு படுத்திக் கொண்டே இருந்தான். கொழும்பில் இருக்கும் போது கைக்கு எண்ணை பூசிக் கொண்டேன். வீக்கம் குறைந்து மணிக்கட்டில் நோ போய்விட்டது. கைக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்காததாலா? பாரங்கள் அதிகம் தூக்காததாலா? அல்லது எண்ணை பூசிக் கொண்டதாலா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் எண்ணையை யேர்மனிக்கு கொண்டு போவதற்காக சூட்கேசில் பத்திரமாக எடுத்த வைத்துக் கொண்டேன்
    15 points
  9. (எழிலன்): - முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்) முதலாளி:- இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு க‌டையை நடத்துற‌ வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி முதலாளி:- இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் முதலாளி:- சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும் வராத‌ என்றார் முதலாளி. (எழிலன்): உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க முதலாளி:- எத்தனை நாள்? (எழிலன்): 15 நாள் ஐயா 15000 ரூபா முதலாளி:- இந்தா 10000 பிறகு வந்து 5000 ரூபாவை வாங்கித்துப்போ என்றார் முதலாளி நம்ம தமிழ் முதலாளிகளின் நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று காசை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நான் செல்ல அங்கே காவாலாளி இன்றைக்கு ஓ பி ரி (O.P.T) இல்லை நாளைக்கு வாங்க என்றார். எனக்கு நிற்க முடியல மருந்து எடுக்கணூம் தம்பி உள்ள விடுங்க யாரையாவது பார்த்து மருந்து எடுத்து செல்கிறேன் என நானும் சொல்ல அவங்க விடுவதாக இல்லை லேசாக மயக்கம் வருவது போல அமர உள்ளே கிளினிக் செய்யும் வைத்திரியரிட்ட அனுப்புங்க என சொல்லி உள்ள விட அங்கே ஒரு பெண் தரையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் சென்றால் அந்த பகுதி மீண்டும் அழுக்காகிவிடும் என்ற காரணத்தால் காயும் வரைக்கும் நிற்க அவளோ போங்க பறவாயில்லை என்றாள் ஆளை அடையாளம் காண முடியவில்லை முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்திருந்தாள். சரி நான் போய் வைத்தியரைப்பார்க்க வரிசையில் நிற்க அந்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என மனம் சொல்ல அந்த‌ குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ என்ற‌ ?? கேள்விதான் எழுகிறது பதில் இல்லாமல் வைத்தியர் :- அடுத்த ஆள் வாங்கோ உள்ளே அழைக்க என்ன பிரச்சினை! ஐயா நேற்றில இருந்து நடுங்கி காய்ச்சல் காயுது சரி இந்த குழுசைகளை விழுங்குங்க பனிக்காலம் என்ற படியால் பனிவெளியில திரியாதிங்கோ சரி ஐயா நன்றி என்று வெளியில் வர நீலன் நீலன் என அழைக்க திரும்பி பார்த்தேன் அந்த பெயரோ போராட்ட காலத்தில் எனக்கு வைத்த பெயர் அது அந்த பெயரை தெரிந்தவர் யார் என திரும்பி பார்த்த போது அந்த பெண்தான் நீங்க?? நான் ரோசி (சுடர்) அக்கா நீங்களா? நீங்கள் எப்படி இங்க இந்த வேலைக்கு அது பெரிய கதை வா என கூட்டிக்கொண்டு போனா இங்க இரு......... சாப்பிட்ட நீயா? ஓம் சாப்பிட்ட நான் சரி பிளேன் டி குடி இல்ல அக்கா வேணாம் தம்பி ஒரு பிளேன் டீ போடு அக்கா காசை எடுத்துவர போனா வேலைக்கு கொண்டு வரும் பையை எடுக்க‌ அதிலதான் காசு வைத்திருந்தா அப்போது சிற்றுண்டி சாலைக்கு முன்னால் உள்ள சிறிய கோவிலில் பதறி விழுந்து ஒருவன் ஓடி வந்து நீயெல்லாம் கடவுளே இல்லை உன்னை நான் கும்பிட்டிருக்கவே கூடாது என்றான் உறவினர் யாரோ இறந்திருப்பார்கள் போல இன்னொருவன் வந்து விழுந்து வணங்கினான் ஆண்டவரே உனக்கு நன்றியப்பா என் வாழ் நாள் உனக்காகவே என்றான் பாவம் கடவுள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. கல்லாகவே இருப்பது கடவுளுக்கு நல்லது என என் மனதுக்குள் தோன்ற அக்கா ஓடி வந்தா என்ன குடிச்ச நீயோ ஓம் குடிச்சன் இங்க நல்ல புதுனம் பார்க்கலாமே அக்கா இங்க நேரம் போறதே தெரியுறல்ல கடைக்கார தம்பி இந்தா 20 ரூபா அக்கா கடை பக்கமே வாரல்ல போல இப்ப பிளேண்டீ 25 ரூபா ஓ அப்படியா சரி அஞ்சு ரூபா பிறகு தாரன் கடைக்கு வார ஆட்கள் இதயே சொல்லுங்க‌ இப்ப எல்லாம் விலை கூடிப்போச்சு அக்காவுக்கு தெரியாதே என்று கேட்டான் அந்த சிற்றுண்டிச்சாலை தம்பி அக்கா இத கொடுங்க நான் கூட வேலையில் இருந்து விலகித்தான் ஆஸ்பத்திரிக்கு வந்த நான் காய்ச்சலுக்கு லீவு கேட்ட நான் கணக்க முடிச்சு துரட்டிட்டாரு அக்கா இந்தா கையில இருக்கு 10000 ரூபா பார்த்தியா நம்ம சனத்தா ஓம் அக்கா உலகமே அப்படித்தானே இயங்குது ஓம் ஓம் பறவாயில்ல நீ வச்சுக்க ................. சரி குழுசையை காட்டு இந்தா பாருங்க உங்களுக்கு தெரியாத குழுசையா என்ன‌ ?? இந்த பவர் கூடுன குழுசைகளை விழுங்காமல் நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி அது உடம்புக்கும் நல்லது பச்சை தண்ணியில அளையாமலும் இரு ம் சரி அக்கா என்ன நடந்த? அந்த கதைகளை விடு அதைப்பேசி பலன் இல்லை என மறுத்துவிட்டார் இஞ்ச பாரு என முகத்தை காட்டுனா முகம் ஒரு பக்கமாக தீ காயம் ஏற்பட்டு கழுத்து வரை நீண்டு இருந்தது. நீங்க மருத்துவ பிரிவிலிருக்கும் போது பார்த்தது அக்கா ம் நம்மட பிள்ளைகள் எல்லாம் போயிட்டுது நான் மட்டும் தான் அந்த ஷெல் தாக்குதல்ல காயப்பட்டு வந்த நான் ஊருக்கு எங்கயும் போக முடியல. போனாலும் பிரச்சினை இப்ப இங்கதான் ஒரு பிள்ளை படிக்குது அவரும் இறந்து போனார் ஓ அப்படியா? அதுதான் இந்த வேலையில சேர்ந்த நான் சாப்பாடு இங்க கிடைக்கும் அந்த செலவு மிச்சம் பிள்ளைக்கு படிப்புக்கு மட்டும் காசு............... ம் அக்கா இப்ப முன்னாள் போராளிகளுக்கு கனபேர் உதவி செய்யுறாங்க தானே அக்கா ம் செய்யுறாங்க ஆனால்???? அவங்க போண் நம்பற எடுத்து நமக்கு நீங்க போராளிதானா என பரீட்சை வைத்து பார்த்து உதவி செய்யுறதுல பல மாதம் போய் விடுகிறது தம்பி.............. ஓம் அக்கா நானும் கூட யாரிட்டயும் சொல்கிறதில்லை கடந்த காலத்தை . சரி சாப்பாடு ஒன்று கட்டித்தருகிறேன் கொண்டு போய் சாப்பிடு இங்க ஆஸ்பத்திரி சாப்பாடு என்று யாரும் பெரிதாக சாப்பிடமாட்டார்கள் சாப்பாடு இருக்கு கோழிகறி இன்றைக்கு என அக்கா சாப்பாடு எடுக்க போனா கையில் இருந்த அந்த 10000 ரூபாவை அவ பையில் அவக்கு தெரியாமல் வைத்துவிட்டு இருந்தேன் .அக்கா பொலித்தீன் பையையினுள் சாப்பாடு இட்டு தந்தா நானும் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன் திடிரெனா யாரோ அதட்டி எழுப்புவது தெரிந்தது கோழி சாப்பிட்டு கோவிலுக்கு முன்ன உறங்க கடவுள் கோபித்து விட்டாரோ அவர்தான் அதட்டி எழுப்புகிறாரோ???? என எழும்ப கோவில் நிர்வாகியாம் இங்க படுக்க கூடாது போங்க என்றார். நானோ அந்த பஸ் நிற்கும் நிறுத்துமிடத்தில் இருக்கையில் அன்றிரவு தூங்க ஆயத்தமாகிறேன் அப்போது அந்த‌ சுவற்றில்............. இதோ கடவுள் வருகிறார் என போஸ்டர் ,இன்னும் பல கோவில்களின் போஸ்டர்கள் ஒட்டி இருந்தது அந்த நிலையத்தில் நான் கூட பயமில்லாமல் தூங்கினேன் நாளை என்னை எழுப்பி விடுவார் என்ற நினைப்பில்... மலிந்து போன கடவுள்களை நோக்கி..................................
    14 points
  10. நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார். ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை.
    14 points
  11. 23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன. அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்” என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது. மகனின் சகலன் ஆதியும் கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியில அதிக நாட்டம் இருந்ததில் வியப்பில்லை. கடத்தப்பட்டவரைத் தனக்குத் தெரியுமென்றும் குறோஸியா நாட்டைச் சேர்ந்தவன், வயது 50க்குள்தான் இருக்கும் என்றும் ஆதி சொன்னான். கொலை, கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதை மருந்துகள் என ஏகப்பட்ட செய்திகள் நாளாந்தம் தவறாமல் வந்து கொண்டிருக்கும் போது, வந்த இந்தச் செய்தியும் அது போல ஒரு செய்தி தான் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. அதனால் எங்கள் நகரில் நடைபெற்ற அந்தக் கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. “அந்த ஒப்பந்தம் காரனின் பெயர் டாலிபோ“ என்று ஆதி குறிப்பிட்ட போது, எனது மகன் என்னைப் பார்த்துக் கேட்டான், “உங்களின்ரை குளியல் அறை செய்தது ஆர்?” “டாடோ” என்றேன். “அது அவனுக்கு நெருக்கமானவர்கள் அவனை அழைக்கும் பெயராக இருக்கலாம். அவனுடைய குடும்பப் பெயர் தெரியுமோ?” என்று எனது மகன் மீண்டும் கேட்க என் தலை இல்லை என்று வலம் இடம் ஆடியது. 2020இல் எங்களை வெளியில் நடமாட விடாது வீட்டுக்குள்ளே கொரோனா அடைத்து வைத்திருந்த ஆரம்ப கால நேரம். மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சந்திக்கலாம், அதுவும் நான்கு பேர்கள் மட்டும் ஒன்று கூடலாம் என்ற அறிவிப்பினால் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தேன். பென்சன் எடுத்து விட்டு வீட்டுக்குள்ளேயே இருந்ததால் நிறைய ‘போர்’ அடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் நீண்டநாள் நான் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்த குளியல் அறையைத் திருத்தினால்... என்ற எண்ணம் எனக்குள் வந்தது. இணையத்தில் தேடி எனது நகரில் இருக்கும் ஒரு பிளம்பர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளும் போது ஜோர்க் அறிமுகமானார். தொழிலாளிகள் யாரும் வேலைக்கு வராததால் கையைப் பிசைந்து கொண்டு வீட்டில் இருந்து பியர் குடித்து, வயிறு வளர்த்துக் கொண்டிருந்த (ஜோர்க்) முதலாளிக்கு எனது அழைப்பு உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும். எனது வேண்டுகோளை உடனேயே ஏற்றுக் கொண்டார். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்வதற்காக தானே தனக்குத் தெரிந்த ஒரு கட்டிடக்காரரை அழைத்து வருவதாகவும் சொன்னார். அப்படி அவர் அழைத்து வந்தவன்தான் டாடோ(47). டாடோவும் ஒரு நிறுவனத்தின் முதலாளி. ஆக மூனாவின் குளியலறை வேலைக்கு இரண்டு மூனாக்கள் வேலைக்கு வந்தார்கள். உயரமான, பருத்த உடம்புவாசிதான் டாடோ. “குளியலறை என்பதால் ஜோர்க் சட்டப்படிதான் எல்லாம் செய்வார். ஏதாவது பைப் லீக்காகினாலோ, உடைந்தாலோ கொம்பனியின் உத்தரவாதம் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பின்னால் எது நடந்தாலும் காப்புறுதி ஈடு செய்யாது. ஆனால் என்னுடைய வேலை அப்படி இல்லை. ‘கறுப்பு’த்தான். மணித்தியாலத்துக்கு 42 யூரோ தர வேண்டும்” என்று டாடோ கேட்டுக் கொண்டான். கறுப்புத்தானே எனக்குப் பிடித்த கலர். ஒத்துக் கொண்டேன். டாடோவும், ஜோர்க்கும் குளியலறைத் திருத்தத்துக்கான முழுப் பொருட்களையும் தாங்களே கொள்வனவு செய்து எனது சிரமத்தைக் குறைத்துக் கொண்டார்கள். நான் செய்து கொடுத்த ‘சிக்கன் றோல்ஸ்’ மற்றும் அடிக்கடி நான் கொடுக்கும் கோப்பி, மதிய உணவான சோறு, கறிகள் எல்லாம் அவர்களுக்குப் பிடித்துப்போக, மாலையில் வேலை முடிய “பியர் கொண்டு வா” என்று என்னிடம் அவர்கள் உரிமையுடன் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகிப் போனோம். அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களை கேலிச்சித்திரமாகவும் வரைந்து கொடுத்திருந்தேன். நான் வரைந்த சில படங்கள் எனது கைத் தொலைபேசியிலும் இருந்தன. தேடிப் பார்த்த போது டாடோவின் படமும் அங்கே இருந்தது. “டாடோ இப்படித்தான் இருப்பான்” என எனது மகனுக்குக் காட்டினேன். மகன் ஆதியிடம் கொடுக்க, அதைப் பார்த்து விட்டு, “இவன்தான்... இவன்தான் டாலிபோ” என ஆதி கூவ, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அந்தக் கொண்டாட்டத்தை என்னால் ரசிக்க முடியாமல் போயிற்று. “மிகவும் இலாபமான முறையில் வீடுகளைக் கட்டித்தருவதாக பலரோடு ஒப்பந்தம் செய்திருக்கிறன். என்னட்டை ரூமேனியாவிலை இருந்து வந்த வேலையாட்கள் இருக்கினம். அவையள் சட்டப்படியான வேலையாட்கள் இல்லை. மணித்தியாலத்துக்கு ஏழு, எட்டு யூரோக்கள் குடுத்தால் போதும். இரவு பகல் என்று பாராமல் வேலை செய்வாங்கள். இப்ப கொரோனா வந்ததாலை எல்லாரும் தங்கடை நாட்டுக்கு திரும்பிப் போட்டாங்கள். வேலையாட்கள் இல்லை. சட்டப்படி சம்பளம் கொடுத்துச் செய்யிறதெண்டால் கட்டுப்படி ஆகாது. பயங்கர நட்டம்தான் வரும். கொரோனா எப்ப தொலையுமோ? போனவங்கள் எப்பத் திரும்ப வரப்போறாங்களோ? இல்லாட்டில் வராமலே இருந்திடுவாங்களோ? என்று டாடோ என்னிடம் கவலைப் பட்டுச் சொன்னது நினைவுக்கு வந்தது. டாடோ நல்லதொரு வேலையாள். பழகுவதற்கு இனிமையானவன். அவனுக்கு ஏன் இந்த நிலமை வந்தது? யார் டாடோவைக் கடத்தி இருப்பார்கள்? எதற்காகக் கடத்தினார்கள் என்று எனக்குக் குளப்பமாக இருந்தது. அடுத்தநாள், தொலைக்காட்சியில் டாடோவின் செய்திகள் வந்து கொண்டிருந்தன. பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக டாடோவின் செய்தியே இருந்தது. Mann aus Schwaebisch Hall nach Brandenburg entfuehrt – mutmassliche Entfuehrer forderten Loesegeld Zwei Maenner sollen einen 46-Jaehrigen in ein Auto gezerrt und verschleppt haben. Einer der Verdaechtigen war vergangene Woche an einer Schiesserei in Berlin beteiligt (ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பிராண்டன்பூர்க்கிற்கு ஒருவர் கடத்தப்பட்டார் - கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கடத்தப்பட்டவரை மீட்பதற்கு ஒரு தொகை பணத்தைக் கேட்கிறார்கள். இரண்டு பேர் 46 வயதுடைய ஒருவரை இழுத்துச் சென்று காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த வாரம் பெர்லினில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்) கொஞ்சம் கொஞ்சமாக விபரங்கள் வெளியேவர ஆரம்பித்தன
    14 points
  12. அது ஒரு நிலாக்காலம். வானத்தில் நட்சத்திரங்களை மேவி நிலா பொழிந்து கொண்டு இருந்தது. குளிர் அடர்ந்த வனமாக வானம் விரிந்து கிடந்தது. பறவைகளின் கூடுகளிற்குள் இருந்து அவற்றின் கலவி ஒலி சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. நந்தியாவட்டை மொட்டுக்கள் பூப்பதற்கான தன் இதழ்களை அவிழ்த்துக் கொண்டு இருந்தன. தெருவில் பவள மல்லிகையின் வாசம் பரவிக் கிடந்தது. என்று இப்படி எல்லாம் வர்ணணைகளுடன் ஒரு கதை எழுதுவம் என்று யோசித்தால், இந்த சொந்தக் கதை, சோகக் கதையைத் தான் முதலில் எழுது என்று மனம் அருட்டிக் கொண்டு இருந்தது. இது போன வருடம் சென்னை சென்று திரும்பும் போது நிகழ்ந்த சோகக் கதை. சோகக் கதை என்பதை விட நான் கிலோக்கணக்கில் அசடு வழிந்த வண்ணம் விமானத்தில் பயணம் செய்த கதை இது. எப்பவும் விமானப் பயணம் என்றால் பக்கத்தில் ஒரு பருவ மங்கை அமர்ந்து பயணிக்கும் அதிஷ்டம் கிடைக்கலாம், அவர் என்னை பார்த்த முதல் வினாடியிலேயே சொக்கிப் போய் விட வேண்டும் என்று நல்ல ஆடையை தேர்ந்தெடுத்து அணிவது வழக்கம். அன்றும் அப்படி தான் சென்னைக்கு அக்கா குடும்பத்தை பார்க்க போய் 10 நாட்கள் நின்று விட்டு மீண்டும் ரொரண்டோ திரும்பு நாள். சென்னை - எப்ப நினைத்தாலும் என் மனசுக்குள் இனிக்கும் நகரம்! அங்கு போனவுடன் ஒரு பழைய பாட்டா (Bata) செருப்பை மாட்டிக் கொண்டு, அரைக்காற்சட்டையுடன், ரொரண்டோவில் 10 டொலருக்கு வாங்கிய ஷேர்ட் போட்டுக் கொண்டு ஆட்டோவில் (Auto) வெளியே சுற்றுவது பிடித்த விடயங்களில் ஒன்று. பத்து நாட்கள் நின்றால் 5 நாட்களாவது அங்குள்ள சைவ கடைகளான சரவணபவனிலோ அல்லது அடையார் ஆனந்தபவனிலோ ஒரு நேரச் சாப்பாடாவது சாப்பிடுவன். ஊருக்கு சென்றாலோ அல்லது சென்னைக்கு சென்றாலோ "வெளிநாட்டு மிதப்பை " காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுண்டு. எனவே எப்பவும் சாதாரண உடுப்பும் பாட்டா செருப்பும் தான். ஆனால் விமானப் பயணத்தில் அப்படிச் செய்ய முடியுமோ? தச்சுத்தவறி பக்கத்து சீட்டில் ஒரு அழகி வந்து அமர்ந்து விட்டால் என்ன ஆவது? அதுவும் தனியாக பயணம் போகும் போது... சொல்லி வேலை இல்லை...! எனவே அங்கு கொண்டு போய், ஒரு நாளும் போடாத நல்ல முழுக்கை ரீஷேர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, ஒன்றுக்கு பல தடவை கண்ணாடியில் என்னை நானே அழகு பார்த்து "நீ மன்மதன் தாண்டா.. " என்று திருப்தி பட்டுக் கொண்டு, அக்காவிடம் "நான் நல்ல வடிவா இருக்கின்றேனா" என கனக்க தரம் கேட்டு வெறுப்பேற்றி விட்டு, விமான நிலையம் வந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் சென்னை விமான நிலையம் ஒரு கரைச்சல் இல்லாத விமான நிலையம். நல்ல வசதியான விமான நிலையம் (இன்னும் 100 வரிகளிற்குள் இதை நான் மாற்றிச் சொல்ல போகின்றேன் என்று எனக்கே தெரியாது அப்ப). 10 வயது சின்னப் பிள்ளை கூட குழப்பம் இல்லாமல் பயணிக்கலாம் . வாசலில், கடவுச் சீட்டையும் விமான சீட்டையும் பரிசோதிக்கும் வேறு மானிலத்தை சேர்ந்த பொலிஸ்காரர் மேல் மட்டும் தான் குறை சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும், வேண்டும் என்றே தாமதித்து விட்டு, முறைத்து பார்த்து விட்டு தான் உள்ளே செல்ல அனுமதிப்பார். தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்று தொண்டைத் தண்ணீர் வற்ற பேசும் தம்பி சீமான் , தமிழர் விமான நிலைய வாசலில் தமிழர் தான் நின்று பரிசோதிக்க வேண்டும் என்ற உப கோரிக்கையையும் வைத்து பேசினால் புண்ணியம் கிடைக்கும் என எண்ணிக் கொண்டு உள்ளே சென்றேன். விமான நிலையம் சென்று 30 நிமிடங்களில் பரிசோதிப்புகள் எல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் (Boarding pass) எல்லாம் எடுத்து விமானத்துக்காக காத்திருக்கும் அறைக்குள் சென்று விட்டேன். பாஸ்போர்ட்டை செக் பண்ணிய, நல்ல கறுத்த தமிழர் ஒருவர் "...அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற.. அள்ளி எடுத்த கைகள்" என்று "இளமை எனும் பூங்காற்று" பாடல் வரிகளை முணு முணுத்துக் கொண்டே செக் பண்ணினார். ஆள் வேலைக்கு வர முன்னர் வீட்டில் என்ன செய்து விட்டு வந்திருப்பார் என்று ஊகித்துக் கொண்டேன். உள்ளே இருக்கும் ஒரு பெரிய கண்ணாடியில் மீண்டும் என்னை பார்த்து... "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்து விட்டு மேலும் உள்ளே சென்றேன். அக்கா வீட்டில் இரவுச் சாப்பாட்டை 8 மணிக்கே முடித்து இருந்தேன். சாமம் 3 மணிக்கு கிளம்பும் விமானத்தை பிடிக்க நடு இரவு 11:30 இற்கே விமான நிலையம் வந்து விட்டேன். எப்பவும் 4 மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையம் வந்து விடுவேன். ( ஒரு முறை தாமதமாக போய் அருந்தப்பில் விமானத்தை தவற விட பார்த்த பின் ஏற்பட்ட ஞானத்தால் வந்த பழக்கம் இது) 8 மணிக்கே சாப்பிட்டதால் லைட்டாக பசி எடுக்க ஆரம்பித்தது. சரி என்ன விற்கின்றார்கள் என்று பார்த்து வருவதற்காக எழும்பி மெதுவாக விமான நிலையத்துக்குள் நடக்க ஆரம்பித்தேன். ஒரு இடத்தில் அழகான சின்ன சின்ன சிலைகளுடன் பெரிய நடராஜர் சிலையையும் வைத்து இருந்தார்கள். நவராத்திரி காலம் அப்பதான் முடிவடைந்தமையால் கொலுவும் வைத்து இருந்தார்கள். ஒன்றிரண்டு படங்களை கிளிக்கி விட்டு என்ன சாப்பாட்டுக் கடை இருக்கு என்று பார்க்கத் தொடங்கினேன். ஒரு இடத்தில் இட்டலியும் சட்னியும் வைத்து இருந்தார்கள். ஆஹா, இட்டலி என்று நினைத்து வாங்க போகும் போது "உதை சாப்பிட்டால் உழுந்து சில நேரம் 'பின்' விளைவுகளை வேகமாக்கும்" என்று மனம் எச்சரித்தது. சரி இட்டலி வேண்டாம் என்று அங்கிருந்து நகர்ந்து இன்னொரு பக்கம் போனால், நல்ல சுடச் சுட பால் கோப்பியும், சமோசாவும் விற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐரோப்பியர் ஒருவர் அவற்றை வாங்கி நல்ல ஸ்ரைலாக சமோசாவை சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்க்க எனக்கு வாயூறியது. சமோசாவை சாப்பிட்டு விட்டு கோப்பியை குடித்தால் இந்த சாமத்தில் நல்ல தெம்பாக இருக்கும் என்று அவற்றை வாங்கினேன். இப்படி உணவை வாங்கியவர்கள் நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். "என்ன இப்படி நின்றபடி சாப்பிடுகின்றார்கள்... நாகரீகம் தெரியாதவர்கள்... ஐ யாம் ப்றோம் கனடா.. இப்படி நின்று சாப்பிட்டால் சரியாக இருக்காது" என்று நினைத்துக் கொண்டு, வசதியாக எங்காவது அமறலாமா என தேடத் தொடங்கினேன். ஒரு கையில் சில்லு இருக்கும் சூட்கேஸ் (Hand luggage). மற்ற கையில் கோப்பியும் சமோசாவும் உள்ள ஒரு சிறு Tray. கோப்பி வாசனை நாக்கில் உள்ள சுவையரும்புகளை மீட்டிக் கொண்டு இருந்தது. கதிரைகள் வரிசையாக இருக்கும் ஒரு இடத்தில் நாலு ஐந்து கதிரைகள் காலியாக இருந்தன. ஒருத்தரும் அந்த வரிசையில் இல்லை. அப்பாடி, ஒருத்தரும் அருகில் இல்லை...ஆற அமர இருந்து சமோசாவை சாப்பிட்டு கோப்பியை குடிப்பம் என்று போய் ஐந்து கதிரைகள் கொண்ட வரிசையில் நடு நாயகமாக போய் இருக்கும் கதிரையில் போய் அமர்ந்தேன். ஒரு கிளிக் சத்தம்.. .சின்ன கிளிக் சத்தம்... அவ்வளவு தான். அந்த 5 கதிரைகளும் அப்படியே சற்று பின்னால் சரிந்தன. அமரப் போகும் போது, கதிரைகள் பின்னால் சரிந்ததால், நிலை தடுமாறினேன். முதலில், முதலாவது சமோசா Tray யில் இருந்து வழுக்கி, என் மூக்கில் மோதி கீழே வீழ்ந்தது. இரண்டாவது சமோசா நெஞ்சில் வீழ்ந்து, நிலத்தில் கலந்து, இரண்டாக பிழந்து தரையில் வீழ்ந்தது. இவை எல்லாம் இப்படி சரிய முன்னரே.. கோப்பையில் இருந்த நல்ல சூடான பால் கோப்பி, முழுதுமாக என் மேல் கவிண்டு, என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி, தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது. என்ன நடந்தது என்று நான் உணரும் போது பால் கோப்பி என்னை முழுதுமாக நனைத்து விட்டது. பாலாபிஷேகம் போல், பால் கோப்பி அபிசேகம்! எவராவது இந்த கோலத்தை பார்க்கின்றார்களா என சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவரும் கவனித்து இருக்கவில்லை. "ஆஹா.. இந்த கதிரைகளின் நிலை தெரிந்து தானா இந்த சனம் இந்த கதிரை வரிசைக்கு கிட்ட கூட வரவில்லை" என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன். "சரி இப்படி கோப்பி நாற்றத்துடன் (வாசம் நாற்றமாகியது இந்த வரியில் இருந்து தான்) போக முடியாது, கோப்பியில் ஊறிய நனைந்த உடுப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என ஹாண்ட் லக்கேஜ் (Hand luggage) இனை திறந்து பார்த்தேன். வழக்கமாக இப்படி அவசரத்துக்கு தேவைப்படும் என்று இரண்டு செட் உடுப்பும் சறமும் ஹாண்ட் லக்கேஜ் ஜில் வைப்பது வழக்கம். கிட்டத்தட்ட 60 தடவைகளாவது விமானப் பயணம் செய்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக எடுத்து வைப்பேன். ஹாண்ட் லக்கேஜ் ஜினை திறந்து பார்க்கின்றேன்... அதில் மனுசிக்கு வாங்கிய சாறியும், துவாயும், போன் சார்ஜரும், தான் இருக்கு. என் உடுப்பு ஒன்றையும் காணவில்லை.. மாற்றிக் கொள்ள ஒரு உடுப்பும் இல்லை... இனி நான் என்ன செய்வேன்... (மிகுதி தொடரும். அதில் நான் புது உடுப்பு வாங்க இந்த வசதி ஒன்றும் இல்லாத விமான நிலையம் எங்கும் கோப்பியில் ஊறிய, பால் கோப்பி நாற்றத்துடன் கடை கடையாக ஏறி இறங்கிய கதையையும் எனக்கு வாய்த்த ரீஷேர்ட் பற்றியும் எழுதுகின்றேன்.)
    14 points
  13. உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.
    13 points
  14. அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அதிகமான வருடங்கள். சரி விடயத்துக்கு வருகிறேன். சனிக்கிழமைகளில் வரும் பத்திரிகையில்தான் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன. வீடு விற்பனைகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்று ஏகப்பட்டவை அடங்கி சனிக்கிழமைப் பத்திரிகை ஊதிப் பெருத்துப் போய் இருக்கும். 17.12.2022 அன்று வந்த பத்திரிகையிலும், வழமைபோலவே எல்லா விடயங்களும் இருந்தன. அதில், மரண அறிவித்தல்கள் பகுதியில் எடித் லாங் (86), 14.12.2022, புதன்கிழமை காலமாகிவிட்டதாகவும் அவரது உடல் 19.12.2022 அன்று தகனம் செய்ய இருப்பதாகவும் தகவல் இருந்தது. என்னைப் போலவே, எடித் லாங்கினைத் தெரியாதவர்கள் அந்த அறிவித்தலைக் கடந்து போயிருப்பார்கள். ஆனால் எடித் லாங்கின் மரணம் ஒரு கிழமை கழித்து செய்தி ஒன்றைச் சொல்லக் காத்திருந்தது. எடித் லாங்கின் வீட்டில் இருந்து 315 மீற்றர் தூரத்தில் வசித்த இன்னும் ஒரு மூதாட்டி, எடித் லாங்கின் இறப்புக்குப் பின் ஒரு கிழமை கழித்து 21.12.2022,புதன் கிழமை அன்று இறந்து போனார். ஒரு கிழமை இடைவெளியில் அதுவும் சொல்லி வைத்தது போல் புதன்கிழமையில் அருகருகே வசித்த இரு மூதாட்டிகளுக்கு மரணம் சம்பவித்திருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரணைகளின் பின்னர், எடித் லாங்கின் மரணம், அவர் தரையில் தவறி விழுந்ததால் ஏற்பட்டது என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மற்றைய மரணம் ஒரு கொலை என்று அறிவிக்கப்பட்டது. நகரில் சந்தைக்கு வந்தவர்கள், வீதிகளில் சந்தித்துக் கொண்டவர்கள் என எல்லோர் வாய்களும் இந்த மரணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டன. “ஒருவேளை எடித் லாங்கின் மரணமும் கொலையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் மெதுவாக எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது. அமைதியாயிருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம் மெது மெதுவாக அதை இழந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான், நகரத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மிஹேல்பாக் என்ற கிராமத்தில் 89 வயதான இன்னுமொரு மூதாட்டி, இறந்து போனார். 'அவரது இறப்பும் கொலைதான்' என விசாரணைகளை முடித்த பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார். யேர்மனியின் ஒரு ஓரமாக அமைதியாக இருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம், அரச, தனியார் வானொலிகளில்,தொலைக்காட்சிகளில். இணையத் தளங்களில், சமூக வலைத்தளங்களில்... என்று எல்லாவற்றிலும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கொலைச் செய்திகளை வாங்கி, வெளி நாடுகளிலும் தங்கள் தங்கள் மொழிகளில் ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் புதன் வந்தாலே நடுக்கம் வர ஆரம்பித்திருந்தது. வயோதிபம் வந்தாலே நடுக்கம் தானாக வந்து விடும். புதன் வந்தாலே ஸ்வேபிஸ் ஹாலில் முதியவர்கள் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில் இன்னொரு கொலையும் எல்லோர் கவனத்துக்கும் வந்தது. ஏற்கெனவே திகிலாகப் பேசப்பட்ட அந்தக் கொலை 2020 இல் நடந்தது. எல்பிரிடே கூகெர் என்பவர் ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் தனிமையில் வசித்து வந்தவர். அவர் பியர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரி. பெரும் செல்வந்தரான அவர் கொலை செய்யப்பட்டிருந்ததும் ஒரு புதன் கிழமைதான். ‘புதன் கிழமைகள் கொலையாளிக்குப் பிடித்த நாள் போல’ என்று பத்திரிகையும் ஒரு குண்டைத் தூக்கிப் போட எழுபதுக்கு மேலே உள்ளவர்கள், அடுத்த புதன் “ நீயா?, நானா? எதுக்கும் வியாழக்கிழமை இருந்தால் பார்ப்போம்” எனப் பேச ஆரம்பித்தார்கள். “கொரோனா வந்து கனக்க வயது வந்தவர்களை அள்ளிக் கொண்டு போயிட்டுது. இப்ப கொலையாளி ஒருத்தன் வந்திருக்கிறான். பொலிஸ் என்னதான் செய்து கொண்டிருக்கு?” என மக்களிடம் இருந்து முணு முணுப்பு வர ஆரம்பித்தது. “தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்..
    13 points
  15. ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டின் கீழ் மூன்று கட்டமாக ஹைல்புறோன் நகரில் வழக்கு நடத்தப்பட்டது. எனது மகன் தொலைபேசியில் அழைத்துக் கேட்டான், நாளைக்கு (09.01.2024) டாடோவின் வழக்கின் முடிவு அறிவிப்பார்கள். வரப் போறீங்களோ?” “ஓம், வாறன்” “ விவசாயிகள் போராட்டம் நாளைக்குத் தொடங்கினம். ரக்ரர்களைக் கொண்டுவந்து றோட்டுகளை ப்ளக் செய்யலாம். வெள்ளெனவாப் போறது நல்லது. ஏழு மணிக்கு நான் உங்களை பிக் அப் பண்ணுறன்” நீதிமன்றத்தின் உள்ளே போகும் முன் கைத்தொலைபேசி உட்பட அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டு ‘லொக்கரில்’ என்னைக் கொண்டே பூட்ட வைத்து திறப்பை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். கூடவே உடல் எல்லாம் தடவிப் பார்த்து விட்டு, “ நீங்கள் பார்க்க வந்த ஆட்கடத்தல் வழக்கு 106வது மண்டபத்தில், ஒன்பது மணிக்குத் தொடங்குகிறது” என்று தகவலைத் தந்தார்கள். கைவிலங்கு போட்டபடியே முகமதுவையும் லூக்காவையும் பொலிஸார் அழைத்து வந்தார்கள். முதல் வரிசையில் முகமதுவும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். இரண்டாவதில் லூக்காவும் அவனது சட்டத்தரணியும் மூன்றாவதில் எல்விஸும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். “போதைப் பொருட்களை முகமது பாவிப்பதால் அவனுக்கு, தான் என்ன செய்கிறேன் என்று சில சமயங்களில் தெரிவதில்லை. சம்பவத்தன்றும் ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்குப் பயணிக்கும் போதும் அவன் போதைப் பொருள் எடுத்திருந்தான்” என்பதை முகமதுவின் சட்டத்தரணி தனது தொகுப்புரையில் வலியுறுத்தி இருந்தார். “லூக்கா சம்பவம் நடந்த அன்று போதைப் பொருள் உட்கொண்டிருந்தான்” என லூக்காவின் சட்டத்தரணி சொன்னார். எல்விஸ் முகமதுவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி . முதலாளி சொன்ன வேலையைத்தான் அவர் செய்தார். மற்றும்படி குற்றச் செயல்களில் அவர் ஈடுபடவில்லை” என எல்விஸின் சட்டத்தரணி குறிப்பிட்டார். “நடந்த சம்பவங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன்,வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன். அழகானதும் ஒழுங்கானதுமான வாழ்க்கை எனக்கு இருந்தது. போதைப் பழக்கத்தால் எல்லாவற்றையும் நான் வீணடித்து விட்டேன். எனக்கு எனது பழைய வாழ்க்கை வேண்டும். நல்லபடியாக நான் வாழ வேண்டும். லூக்கா காரை ஓட்டி வந்ததைத் தவிர அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தயவு செய்து அவனுக்கு தண்டனை தந்து விடாதீர்கள்” என முகமது குறிப்பிட்டான். “போதைப் பொருள் பாவித்ததால் தடுமாறி விட்டேன். மன்னித்து விடுங்கள்” என லூக்கா சொன்னான். “குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்” என எல்விஸ் சொன்னான். அரச சட்டத்தரணியான லுஸ்ரிக் தன்னுடைய முடிவுரையில், “டாலிபோ மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார். உடல் வலிகளால் சிரமப்படுகிறார். அதிகளவு வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் மட்டுமே அவரால் எழுந்து நடமாட முடிகிறது. வீட்டை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார். இப்பொழுது மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். டாலிபோவுடன் வாழ்வது ஆபத்தானது என அவரது மனைவி அவரைப் பிரிந்து தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு குரோஸியாவுக்குப் போய்விட்டார். தனிமையில் ஒருவரது உதவியும் இல்லாமல் வாழ்வது அவருக்குச் சிரமமானது. சினிமாவில் வருவது போல்தான் நிஜத்தில் டாலிபோ மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முகமது போதைக்கு அடிமையானவர் என்பது இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் கண்ட வழி. இது லூக்காவிற்கும் பொருந்தும். சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்தில் பார்த்ததை அறிக்கையில் விபரித்திருக்கிறார்கள். ஆகவே முதலாவது,இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகளுக்கு முறையே ஏழு,ஐந்து,இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என முடித்தார். நீதிபதி தோமாஸ் பேர்க்னர் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “டாலிபோவை ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்கு கடத்தியது, அவரைச் சித்திரவதை செய்தது, மரண பயத்தை ஏற்படுத்தியது என்பவை நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஆகவே முகமதுவுக்கு ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது…” நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது முகமது மேசையில் தன் கைகளால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். வாசிப்பை நீதிபதி இடைநிறுத்த, அவனின் சட்டத்தரணி முகமதுவை சமாதானம் செய்தார். அதன்பின்னர் நீதிபதி தனது வாசிப்பைத் தொடர்ந்தார் “முகமது போதைப் பொருள் பாவித்ததாகக் கருத முடியாது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என வைத்திய அறிக்கை சொல்கிறது. இதில் முகமது போதைப்பொருள் பாவிப்பவரா இல்லையா என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆகவே அதைக் கருத்தில் கொண்டு மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனைக்குப் பின் போதைப்பொருளில் இருந்து விடுபட மருத்துவ உதவி பெறுவதற்கு முகமதுவுக்கு இரண்டு ஆண்டுகள் வாய்ப்பளிக்கப்படுகிறது” ஒருநாள் மட்டும் போதைப் பொருள் பாவித்தேன் என்ற லூக்காவின் கூற்றை இங்கே ஏற்றுக் கொள்ள முடியாது. கடத்தல், சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து வருடங்களும் ஆறு மாதமும் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. முகமது சொன்னார் என்பதற்காக அவற்றைச் செய்திருந்தாலும் எதற்காகச் செய்கிறேன் என்று எல்விஸுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே எல்விஸுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கிறேன். ஆனாலும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருதி இரண்டு வருட சிறைத்தண்டனையை மூன்று வருடங்கள் நன்னடத்தையாக மாற்றி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த மூன்று வருடங்களில் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டால், எல்விஸ் இரண்டு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” வழக்கு முடிந்து விட்டது. ஆனால், டாடோ உண்மையில் தனது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தானா? அல்லது பணத்தை பதுக்கி வைத்து விட்டு திவால் என அறிவித்தானா? டாடோவிடம் பணம் இல்லை, நிறுவனம் திவால் என்றால் இருபத்தைந்தாயிரம் யூரோக்களை வங்கியில் எடுப்பதற்கு அவனது மனைவி ஏன் போனாள்? உண்மையிலேயே டாடோவின் மனைவி அவனைப் பிரிந்து போய் விட்டாளா? அல்லது எல்லாம் ஆறிய பின்னர் குறோஸியாவில் சொகுசாக குடும்பமாக வாழப் போகிறார்களா? இது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இங்கே முகமதுவின் நிலை அபாயகரமானது. தண்டனை முடிந்து வந்தாலும் அவன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். அவனது தாயும் சகோதரியும் பேர்லினில் வாழ்வதால் எங்கேயும் அவனால் மறைந்து வாழ முடியாது. மாபியாக்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன? Photos Thumilan Selvakumaran
    13 points
  16. முகமதுவின் கார் பேர்லினை அடையும் போது இருட்டி விட்டிருந்தது. கார் முகமதுவின் இருப்பிடத்துக்கு வந்தவுடன், முகமதுவும், லூக்காவுமாக டாடோவின் முகத்தை மூடி, வாகனத்தில் இருந்து இறக்கி, வீட்டுக்குள் இழுத்துப் போனார்கள். முகம் மூடப்பட்டிருந்தாலும் வெளியே என்ன நடக்கிறது என்பதை டாடோவால் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. வீட்டின் முதல் மாடியில் இருந்த அறை முழுவதும் பொலித்தீன் விரிக்கப் பட்டிருந்தது. அதன் மேலே மரம் வெட்டும் வாள், சுத்தியல், துளையிடும் இயந்திரம், கத்தி, பேஸ்போல் துடுப்பு... போன்ற பல பொருட்கள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. அதை எல்லாம் ஒழுங்கு செய்து வைத்தது எல்விஸ். தொலைபேசியில் அழைத்து முகமது அவனுக்குச் சொன்ன வேலைகள் அவை. முகமூடி அகற்றப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு உள்ளாடை மட்டும் அணிந்திருந்த டாடோ பொலித்தீன் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்திருந்தான். பார்ப்பதற்கு மரண பயம் தரும் வகையில் அவன் முன்னால் தாக்குதலுக்குத் தேவையான பல வகையான ஆயுதங்கள். டாடோ அணிந்திருந்த ஆடைகளில் இரத்தக் கறைகள் இருந்ததால் அவற்றை அழித்து விடும்படி முகமது, எல்விஸ்ஸிடம் சொன்னான். எல்விஸ் அவற்றை எல்லாம் ஒரு பொலித்தீன் பையில் போட்டுக் கட்டி காட்டுக்குள் எறிந்து விட்டு வந்தான். பயணக் களைப்புத் தீர்ந்ததன் பிற்பாடு தரையில் இருந்த டாடோவின் முன்னால் முகமது வந்து நின்றான். முதலில் அவன் கையில் எடுத்த ஆயுதம் துளையிடும் இயந்திரம். டாடோவின் பின்புறம் போய் நின்ற முகமது ஒன்றி்ல் இருந்து எண்ணும்படி டாடோவுக்குச் சொன்னான். துளையிடும் இயந்திரத்தின் சத்தம், கட்டளையிடும் முகமதுவின் அதிகாரக் குரல். டாடோ எண்ண ஆரம்பித்தான். ஒன்று, இரண்டு…. டாடோ இருபது என்று சொல்லும் போது, அவனின் பிடரியை அண்டிய முதுகில் முகமது ஒரு துளை போட்டான். வலி தாங்காமல் துடித்த டாடோவிடம் “சத்தம் போடாமல் தொடர்ந்து எண்ணு” என்று சத்தமாகச் சொன்னான். வலியுடன் டாடோ தொடர்ந்து எண்ணினான். முகமது என்ன கணக்குப் போட்டானோ தெரியாது 20,40,60,.. என ஒவ்வொரு இருபதுக்கும் டாடோ முதுகில் ஒவ்வொரு துளையாகப் போட்டுக் கொண்டிருந்தான். மொத்தமாக ஆறு துளைகள். 120க்கு மேலே எண்ண டாடோவால் முடியவில்லை. முகமது ஓய்வெடுக்கும் போதெல்லாம், தன் பங்குக்கு லூக்காவும் டாடோவைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தான். டாடோவின் மேலான தாக்குதல்கள் அடுத்த நாளும் தொடர்ந்தன. தனக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவரைக் குறிப்பிட்டு, அவரை அழைத்து வரும்படி முகமது எல்விஸ்ஸிடம் சொன்னான். வந்த வைத்தியர், அறையில் இருந்த நிலைமையைப் பார்த்து உறைந்து போய் நின்றார். “டொக்டர் எந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்டால் ஒரு மனிதன் உடனடியாக இறக்கமாட்டான்?” கையில் துப்பாக்கியுடன் நின்ற முகமதுவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் டொக்டரால் அங்கே நிற்க முடியாது. “தொடையில் சுட்டால்…” “எல்விஸ், டொக்டருக்கு காசு குடுத்து அனுப்பி விடு” கனரக வாகனங்களுடன் முகமதுவின் வீடு இருந்த பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் நின்றனர். வழமைபோல் யாரோ சிரியா நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியைக் கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பொது மக்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதைச் சிறப்பு படை அணியினரால் அவதானிக்க முடியவில்லை. தங்களது அதிகாரியின் கட்டளைக்காக அவர்கள் ஆயத்தமாக நின்றார்கள். முகமது துப்பாக்கியால் சுட்ட குண்டுகள் இரண்டு இலக்குத் தவறாமல் டாடோவின் தொடையில் போய்த் தங்கின. துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டதும், “இது உயிரைப் பறிக்கும் வேலை. இனியும் தாமதிக்க முடியாது. நிலமை தீவீரமாக இருக்கிறது. உள்ளே செல்லவும்” அதிகாரியின் கட்டளை கேட்டு சிறப்பு அதிரடிப்படை முகமதுவின் வீட்டுக்குள்ளே நுளைந்தது. பேர்லின் அரச சட்டத்தரணி முன்னால் முகமது, லூக்கா,எல்விஸ் மற்றும் அறுபது வயதான முகமதுவின் இன்னுமொரு தொழிலாளியும் நின்றார்கள். முகமது, லூக்கா இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு இருவரையும் தடுப்புக் காவலில் வைக்கும்படியும் எல்விஸின் மேல் வழக்குப் பதியும் படியும், மற்ற ஊழியரில் ஒரு குற்றமும் இல்லாததால் அவரை விட்டுவிடும்படியும் அரச சட்டத்தரணி உத்தரவிட்டு, கையெழுத்திட்டார்.
    13 points
  17. அடுத்து வவுனியா. இந்தப் பயணத்தில் மணியன் என்னுடன் கலந்து கொள்ளவில்லை. வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலேயே ரிக்கெற்றைப் பதிவு செய்து கொண்டேன். எயார் கொன்டிசனில் இடம் இல்லை என்று கையை விரிக்க சதாரண வகுப்பில் பதிவு செய்தேன். இரயில் பெட்டியில் சுத்தம் குறைவாகவும் சத்தங்கள் அதிகமாகவும் இருந்தது. இடம் வலமாக ஆடியாடிப் போய்க் கொண்டிருந்த இரயில் அநுராதபுரத்துக்கு அப்பால் சீராக, வேகமாகப் போக ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவரிடம் இதைப்பற்றிக் கேட்க, “இப்ப கிட்டடியலேதான் பாதையை திருத்தினவங்கள்” என்று பதில் கிடைத்தது. வவுனியா வீதிகள் துப்பரவாக இருந்தன. நல்லதொரு மழை நேரத்தில் அங்கே மாட்டிக் கொண்டதால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. தங்கியிருந்த ஹொட்டலின் வாசலில் இரண்டு துவார பாலகர் போல் நாய்கள் (நிற்காமல்) படுத்திருந்தன. நாய்கள் வவுனியா வீதிகளில் மட்டுமல்ல, தெற்கே நெடுஞ்சாலையில் இடைநிறுத்தும் உணவகம் தொட்டு பருத்தித்துறை வரை அவை வீதிகளிலும் பொது வெளியகளிலும் படுத்திருந்தன. அவைகளைக் காணும் போதெல்லாம் அச்சம், மடமை இல்லாமல் எட்டிப் பார்த்தது. பருத்தித்துறை நான் பிறந்த ஊர். கைத்தடி இல்லாமல் வடக்கே கடலைப் பார்த்து உட்கார்ந்திருந்த காந்தி இப்பொழுது எழுந்து நிற்கிறார். சிலையின் அழகு முன்னதைப் போல் இல்லை. முன்பிருந்த வணிக நிலையங்கள் எதுவும் இப்பொழுது அங்கே என் கண்களில் படவில்லை. மழை என்னைத் தொடர்ந்து கொண்டிருந்ததால் நினைத்து வந்த பலதை ப் பார்க்க முடியாமல் போயிற்று. ஆனாலும் பலரைச் சந்திக்க முடிந்தது. புற்றளை மகா வித்தியாலத்தில்தான் என் ஆரம்பக் கல்வி இருந்தது. ஒருதடவை பள்ளியை எட்டிப் பார்த்தேன். பக்கத்தில் இருந்த புற்றளை ப் பிள்ளையார் கோவில் கேணிக்கு முன் இருக்கும் மகிழமரத்தில் குரங்குகளாக ஏறி விளையாடி மகிழம் பழங்களைச் சாப்பிட்டது நினைவுக்கு வர வயதை மறந்து மரத்தில் ஏறி பழங்களைப் பறித்துச் சாப்பிட்டேன். பழங்களைச் சாப்பிட்டதும் தொண்டையில் கரகரப்பு வந்து கொஞ்சம் சிரமப்பட்டேன். பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அருகே ஒரு அம்மா சுடச்சுட தோசை சுட்டுத் தருகிறார். சுவையாக இருக்கும் எனக் கேள்விப்பட்டு ஒரு காலைச் சாப்பாட்டை அங்கே எடுத்துக் கொண்டேன். பொலித்தீனால் சுற்றப்பட்ட தட்டில் சாப்பிட்டதாலோ என்னவோ அங்கே உணவை என்னால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. அதுவும் குடிக்கத் தண்ணீர் கேட்ட போது, நீல நிற பிளாஸ்ரிக் குடுவையில் இருந்து அவர் தண்ணி எடுத்துத் தந்த அழகும், அந்த குடுவை இருந்த கோலமும் எனக்குத் திருப்தியாக இருக்கவில்லை. வேலாயுதம் பாடசாலைக்கு முன்னால் நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்றார்கள். அங்கேயும் பொலித்தீன் சுற்றிய தட்டில் உணவு வந்தது. பொலித்தீனின் விளைவுகளைத் தெரியாமல் இருக்கிறார்களே என்ற கவலை வந்தும் நான் எதுவும் அவர்களிடம் சொல்லவில்லை. ஏனெனில் இப்பொழுது பருத்தித்துறைக்கு நான் அந்நியன். ஹொலண்டில் வசிக்கும் ஒரு தமிழர், விஎம் (விநாயகர் முதலியார்) றோட்டில் ஒரு ஹொட்டலை வைத்திருக்கிறார். அங்கேதான் தங்கினேன். ஹொட்டலில் எங்கெல்லாம் கமரா வைக்க முடியுமோ அங்கெல்லாம் வைத்திருந்தார்கள். ஹொட்டலின் பொறுப்பாளரைக் கேட்டால், “இங்கே நடப்பதை ஹொலண்டில் இருந்து முதலாளி பார்ப்பதற்காக” எனப் பதில் வந்தது. கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து மருதங்கேணி போகும் வீதியில்தான் என் வீடு இருந்தது. சந்தியில் இருந்து முதலியார் வாசிகசாலைவரை எனது உறவினர்கள்தான் வசித்தார்கள். இப்பொழுது அந்த வீதியே வெறிச்சோடி இருந்தது. உறவுகள் மட்டுமல்ல பல வீடுகளையும் அங்கே காணவில்லை. இருந்த ஒன்றிரண்டு வீடுகளும் பாழடைந்திருந்தன. அத்தி பூத்தாப்போல் ஒரே ஒரு குடும்பம், அதுவும் கணவன்,மனைவி இருவரும்தான் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. பல வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்து விட்டு இப்பொழுது ஊருக்கு வந்து வீட்டைத் திருத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போய் பார்த்தேன். “ஆரெண்டு தெரியேல்லை. இடம் பெயர்ந்த ஆக்களாத்தான் இருக்கவேணும். அவையள்தான் இப்ப உங்கடை வீட்டிலை இருக்கினம். வீடு பாழடைஞ்சு போகுது, சும்மாதான் இருக்குது எண்டு ஆறுமுகமண்ணைதான் அவையளை இருக்க விட்டவர். அவர் இப்ப புற்றளையிலை தம்பிக்காரனோடை இருக்கிறார். அவருக்கும் ஏலாமல் வந்திட்டுது. வந்தனீ எதுக்கும் போய் அவரை பாரன்” தேனீருக்கு மத்தியில் அங்கே அவர்களிடம் இருந்து எனக்கு அறிவுரை கிடைத்தது. ஆறுமுகண்ணையைப் பார்ப்பதற்கு முன்னர் நான் வாழ்ந்த வீட்டைப் பார்ப்பது என்று முடிவு செய்து அங்கே போனேன். எனது அம்மா சொல்லுவார், “எனக்கு எந்தக் குறையும் எப்போதும் வராது. நாலு இளவரசர்களுக்கும் ஒரு இளவரசிக்கும் நான் தாய்” வீட்டின் கேற்றை நான் நெருங்கும் போது ஏனோ அம்மா எங்கள் சொந்தங்களுக்குச் சொல்லும் வாசகங்கள் எனக்குள் கேட்டன. 2008இல் எனது தாய் இறந்த சோகம் மறையும் முன்னர் அடுத்த ஆண்டு அண்ணன் ஒருவன் இறந்து போக எங்கள் கோட்டை தளர ஆரம்பித்து விட்டது. மிகுதியான மூன்று இளவரசர்களும் இளவரசியும் இராச்சியங்களை இழந்து இப்போ வெவ்வேறு நாடுகளில் சிதறி இருக்கிறார்கள். இதற்குள் சிதிலமடைந்திருக்கும் இந்த வீட்டுக்குள் போய் நான் எதைப் பார்க்கப் போகிறேன்? எதைத் தேடப் போகிறேன்? உள்ளே இருப்பவர்களுக்கு என்னைத் தெரியாது. அவர்களை எனக்கும் தெரியாது. அப்படியே எதுவும் தெரியாமலே இருந்து விட்டுப் போகட்டும் என்று முடிவெடுத்தேன். அம்மா வைத்த விலாட் மாமரம் பெரிதாக வளர்ந்து காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதை மட்டும் வீதியில் நின்றே கமராவில் பதிந்து கொண்டு திரும்பி விட்டேன். ஆறுமுகமண்ணையைப் போய்ப் பார்த்தேன். முதுமையும் இயலாமையும் அவரிடம் தெரிந்தது. “என்னாலை இப்ப ஏலாது தம்பி. அதுதான் அவையளை இருக்க விட்டனான். வாடகை எண்டு ஒண்டும் வேண்டிறதில்லை.சும்மா கிடந்து பாழடையிற நேரத்திலை..” “நான் உங்களைப் பாக்கத்தான் வந்தனான். வீட்டை அல்ல” நான் இதைச் சொன்ன போது அவரது முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. “உங்கடை அம்மான்ரை தையல் மெசினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தனான்” “அப்பிடியே அதை நான் பாக்கலாமா?” “அது நல்லா கறல் பிடிச்சுப் போட்டுது. சும்மா எப்பவாவது தைப்பம்” கறள் பிடித்திருந்தாலும் அது அம்மாவின் தையல் மெசின். எத்தனை தீபாவளி, தைப்பொங்கல்களுக்கு அம்மா அதைப் பயன்படுத்தி இருப்பார். அந்தத் தையல் மெசினைப் படம் பிடித்துக் கொண்டு ஆறுமுகமண்ணையிடம் இருந்து விடை பெற்றேன். பாலா எனது பாடசாலை நண்பன். நீண்டகாலமாக அமெரிக்காவில் இருந்து விட்டு இப்பொழுது ஊருக்கு வந்திருக்கிறான். மந்திகைச் சந்தைக்கு அருகே அவனது நண்பர் இருவர்களுடன் (அவர்களும் அவனுடன் அமெரிக்காவில் இருந்தவர்கள்) இருப்பதாகச் சொன்னார்கள். தகவல் அறிந்து அவனைக் காணப் போனேன். புதிதாக, பாதுகாப்பு வசதிகளுடன் அந்த வீடு இருந்தது. வெளியில் இருந்து அழைப்புமணி அடித்தும் யாரும் வரவில்லை. பக்கத்தில் இருந்த நாகேந்திரத்தின் (தெரிந்தவர்) கடைக்குப் போய் கேட்டேன். “பாலுவோ? ஆளைப் பிடிக்கிறது சரியான கஷ்டம். அமெரிக்கப் பென்ஷனியர். ஆனால் சாமிப் போக்கு. காலமை பின்னேரம் எண்டு எந்த நேரமும் கோயில்தான். வல்லிபுரக் கோவிலுக்குப் போய் கூட்டி, குளிச்சு ஆழ்வாரைக் கும்பிட்டு எப்ப வருவார் போவார் எண்டு தெரியாது. வேணுமெண்டால் ஆளின்ரை ரெலிபோன் நம்பர்தாரன் அடிச்சுப் பாருங்கோ” ஹொட்டலுக்குப் போய் நானும் குளித்து, சுத்தமாக ‘சாமி’க்கு ரெலிபோன் எடுத்தால் பாலுவின் குரல் கேட்டது. “என்ன சாமியாராயிட்டியாம்?” பாலுவின் சிரிப்புத்தான் பதிலாக வந்தது. “தனியாக இருக்கிறாயோ? அல்லது குடும்பமாகவோ..?” “நான் கலியாணமே கட்டேல்லை” எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காலை, மாலை என நேரம் தவறாமல் அட்டவணை போட்டு வடமராட்சி,மெதடிஸ் பாடசாலைகளை என்னுடன் சேர்ந்து சுத்தி வந்த பாலு ஏன் இப்படி மாறினான் என்பது எனக்கு விளங்கவில்லை. நான் இருக்கும் ஹொட்டலை சொன்னேன் வந்து பார்ப்பதாகச் சொன்னான். சொன்னது போல் அடுத்தநாள் மதியம் என்னைப் பார்க்க பாலு வந்திருந்தான். அந்த நேரம் நான் அங்கே நிற்கவில்லை. அவன் வந்த தகவல் அறிந்து ஓட்டோ பிடித்து அவன் வீட்டுக்குப் போனால் அவன் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை. “பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள் கடலிலே மீன் பிடிக்க நானும் போனேன் மீன் கரையேறிப் போனதாக ஒருத்தி சொன்னாள்..” என்ற கண்ணதாசன் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. தொலைபேசியில் பல தடவைகள் அழைத்தும் பாலுவை மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று இரவு நான் மீண்டும் கொழும்புக்குப் பயணம் செய்ய வேண்டி இருந்தது. இனி எனக்கு, பருத்தித்துறைக்குப் போக வேண்டிய தேவை இல்லை. எனது அடுத்த பயணத்தில் பருத்தித்துறை வருவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு என்று மனது சொன்னது. பல இடங்களுக்குப் போக வேண்டும். அதிலே கிழக்கு மாகாணம் முக்கியம் என கணக்குப் போட்டிருந்தேன். மழை பெரிதாக ஆக்கிரமித்து இருந்ததால் இந்த முறை அது முடியவில்லை. அடுத்தடுத்த பயணங்களில் பார்க்கலாம். மணியனுடன் கொழும்பில் இருந்த போது, அஞ்சப்பன், சண்முகாஸ், தலைப்பாய்கட்டு, இந்தியன் மசாலா, சரஸ்வதிவிலாஸ், ஹோல் பேஸ் ஹொட்டல், … என்று ஏகப்பட்ட இடங்களில் வயதை மீறி சாப்பிட்டிருக்கிறேன். கொஞ்சம் அவகாசம் எடுத்து உடம்பைக் குறைக்க வேணும். ஊர்உலாவில் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும், யாழ் இணையத்துக்கும் நன்றி.
    13 points
  18. காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால் மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில் பாணை வாங்கிக் கொண்டு ஒரு புன் சிரிப்போடு வந்த மணியன், “உனக்கு பல்லெல்லாம் ஓகேதானே?” என்று என்னைக் கேட்டான். அவன் அப்படி அதுவும் காலையிலேயே என்னைக் கேட்டது ஏன் என்று புரியாமல் விழித்து நின்ற எனக்கு, அவன் தொடர்ந்து சொல்லும் போதுதான் புரிந்தது. “எனக்குப் பின்னாலே மூண்டாவதா நின்றாரே, அவர் ஒரு டென்ரிஸ்ட். ஊர் வல்வெட்டித்துறை. வெள்ளவத்தையிலைதான் அவரின்ரை டிஸ்பென்சரி இருக்கு. நான் அவரிட்டைத்தான் பல்லைக் காட்டுறனான். எனக்கு முன் பல்லிலை ஒரு ‘ஈவு’ இருந்ததெல்லோ! அந்த இடைவெளியை மறைச்சவர் இவர்தான்” என்று தன்னுடைய பல்லைக் காட்டிச் சிரித்தான் மணியன். கதைத்துக் கொண்டிருக்கும் போதே பல் வைத்தியர் பாணுடன் எங்கள் பக்கத்தில் வந்து நின்றார். “எப்பிடி, சுகமா? கனகாலமா அந்தப் பக்கம் காணேல்லே?” “ ஓம்..ஓம். ஒருக்கால் வரத்தான் வேணும். இவர் என்னுடைய பழைய சினேகிதன். யேர்மனியிலை இருக்கிறார்” மணியன் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான். “அப்பிடியே! நல்லது. நாளைக்கு மகள் நியூசிலாந்திலை இருந்து வாறா. எயார் போர்ட்டுக்குப் போயிடுவன். வாறதெண்டால் செவ்வாய், புதனிலை வாங்கோ” சொல்லிவிட்டு, சிரித்து விடை பெற்றார். “டென்ரிஸ்ரட்டை போற எண்ணம் இருக்கோ? போறதெண்டால் சொல்லு” “ டென்ரிஸ்ற் சிரிக்கக்க பாத்தன். மேல் பல் வரிசையில் இடது, வலது பக்கங்களில் ஒன்றிரண்டு பல்லுகளைக் காணேல்லை. முதலிலே அவர் தன்ரை பல்லைக் கட்டட்டும். பிறகு பாப்பம்” என்று மணியனுக்குச்சொன்னேன். “சரி உன் இஷ்டம். இங்கை எண்டால் செலவு குறைவு” என்று மணியன் சொல்ல, “பல்லை விடு, பிறகு பாப்பம்.” என்று சொல்லிவிட்டு கதையை வேறு பக்கம் திருப்பினேன். “உன்னைக் கேக்கோணும் எண்டு நினைச்சனான். இப்ப சிறீலங்காவிலை முள் முருங்கை முற்றா அழிஞ்சு போச்சு எண்டு சொல்லுறாங்களே உண்மையோ?” மணியனிடம் இருந்து பதில் வரவில்லை. வீட்டில் காரை நிறுத்தி விட்டு “வா” என்ற ஒற்றை வார்த்தையுடன் தன் வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். “பார். இதுதான் முள் முருங்கை. பழைய மரம் பெருத்து உயர்ந்து நிக்கிறதாலை உன்ரை கண்ணுக்குப் படேல்லை. முள் முருங்கை மட்டுமில்லை. பனையும் வெள்ளவத்தையிலை இருக்கு. நீ மேலை இருக்கக்கை பல்கணியிலை இருந்து பார் தெரியும்” என்று சொல்லிவிட்டு, “வா சாப்பிடுவம்” என்று வீட்டுக்குள் போனான். அடுத்தநாள் மணியனின் பிறந்தநாள். கோல்பேஸ் ஹொட்டலில் மனைவி, உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடினான். அன்றுதான் நான் அந்த ஹொட்டலுக்கு முதன் முதலாகப் போனேன். வெளிநாட்டுத் தலைகள் ஹொட்டலில் அதிகமாகத் தெரிந்தன. "விரும்பியதைச் சாப்பிடு" என்று என்னிடம் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தன் விருந்தை அனுபவித்தான். கோல் பேஸ் ஹொட்டலில் பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் கிறிஸ்மஸ் கேக் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்மஸுக்கு ஒருமாதம் முன்பே பழங்களை மது பானங்களில் ஊற வைத்து, பின்னர் கேக் தயாரிப்பார்கள். என்னிடமும் ஒரு போத்தல் விஸ்கி தந்தார்கள். பழங்களில் ஊற்றி விட்டு வந்தேன்.
    13 points
  19. அண்ணளவாக இற்றைக்கு சரியாக இரண்டுவருடங்களுக்கு முன் புற்றுநோயால் தாயை இழந்த குடிக்கடிமையான ஒரு பொறுப்பற்ற தகப்பனால் குடும்பத்தை சரியாக நடத்திச்செல்ல முடியாததையிட்டு பாதியிலே பட்டப்படிப்பை நிறுத்த முற்பட்ட யாழ் பல்கலையில் வணிகபீடத்தில் இரண்டாமாண்டு கற்றுக்கொண்டிருந்த ஒரு தங்கையின் கடிதம் எனக்கு வந்து சேர்ந்திருந்தது. அதனை ஒரு திரியிலும் குறிப்பிட்டிருந்தேன். அதனை கண்ணுற்ற இரு யாழ்கள உறவுகள் (@வாலி ,@ஏராளன்) அவர்களால் முடிந்த உதவிகளை உடனடியாகவே வழங்கியிருந்தனர். இன்று அந்த தங்கை தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து தனது பட்டமளிப்பு விழாவை எதிர்பார்த்து மகிழ்வுடன் காத்திருப்பதை பேருவகையுடன் யாழ்கள உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன். அடுத்த வருடம் மாசி மாதமளவில் பட்டமளிப்பு விழா நடைபெறக்கூடும். அதுமட்டுமல்லாமல் அவருக்கு எனது வங்கி முகாமையாள நண்பன் ஒருவர் மூலமாக வேலைக்கும் ஏற்பாடுசெய்துவிட்டேன். @வாலி ,@ஏராளன் உங்களுக்கு எனது மனங்கனிந்த நன்றிகள் பல உங்களுக்கு அந்த தங்கை அனுப்பிய நன்றிக்கடிதங்களையும் இந்தத்திரியில் இணைத்துள்ளேன் @வாலி @ஏராளன் மீண்டுமொருமுறை நன்றி உறவுகளே காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
    13 points
  20. எனது வேலைக்கான பயணத்தில் நாள்தோறும் பேருந்தில் போய்வருவது வழமை தினம் தினம் பஸ்கட்டணம் அதிகரிப்பதால் போக்குவரத்து செலவு அதிகமாக வரவே கையில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்வது வாடிக்கையானது. சில நேரம் சிலர் ஏற்றிச்செல்வார்கள் சில நேரம் கையசைத்தும் ஏற்றிசசெல்ல மாட்டார்கள் ஆரம்பத்தில் நானும் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன் காலப்போக்கில் பொருளாதார சுமை காரணமாக பஸ்ஸில் பயணிக்க ஆரம்பமானேன் . பஸ் சீசன் ரிக்கட் எடுத்தாலும் சீசனைக்கண்டால் பஸ்ஸை தூர நிறுத்தும் நம்மூர் சாரதிகளும் நான் தற்போது தலைக்கவசத்துடன் பாதையில் நிற்கும் இந்த நிலைக்கு காரணம் . வேலையிடத்தில் எனது உயரதிகாரியை சந்தித்து எனக்கு பயணம், சாப்பாட்டு செலவு அதிகமாகிறது என்னால் வேலைக்கு ஒழுங்காகவும்,குடும்ப சூழ்நிலை காரணமாகவும் நேரத்துக்கும் வரமுடியாமல் உள்ளது என்னை நீங்கள் வேறு பாடசாலைக்கு விடுவித்தால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என சொல்ல அவர் விடுதலை தர மறுத்துவிட்டார். காரணம் அதிக வேலைகளை இழுத்துப்போட்டு செய்த காரணத்தால் மாறுதல் எடுக்கவும் முடியவில்லை தினம் தினம் தலைக்கவசத்துடன் நிற்பேன் யாராவது என்னை ஏற்றிக்கொண்டு போவார்கள் என‌. அன்றைய நாள் நானும் கையை காட்ட‌ ஒருவர் ஏற்றினார் ஏற்றிய அவர் என்னை நியாபகம் இருக்கா என அவர் கேட்க? இல்லையென நான் சொல்ல அவரோ நீங்கள் என்னை ஒரு நாள் ஏற்றி சென்று இருக்குறீங்க என அவர் சொல்ல ம் இருக்கலாம் (நாம் செய்யும் நல்லது எங்கோ ஓர் இடத்தில் நாம் அவதியுறும் போது அது வந்து சேரும்) நான் தனியே போகும் யாரும் தலைக்கவத்துடன் நின்றால் ஏற்றிப் போவ‌து ஏற்றிச்செல்வது வழமை என்றேன். ம் தற்போது பலர் செல்வார்கள் ஆனால் ஏற்றுவதில்லை அதற்கு காரணமும் உண்டு சிலர் தனியே நின்று ஏறி யாரும் அற்ற இடத்தில் இறங்குவதாக சொல்லி கத்தியை காட்டி கொள்ளை அடிச்ச சம்பவங்கள், மற்றது போதைப்பொருள் கடத்திய சம்பவங்களும் நடந்ததால் யாரும் ஏற்றிச்செல்வதில்லை என்றேன். நீங்க எங்க போகணும் தம்பி? அண்ண கல்முனைக்கு போகணும் சரி ஏறுங்க எங்க வேலை செய்யறீங்க பாடசாலையில் வேலை செய்கிறன் அப்படியா சொந்த இடம் எது? என் ஊரை நான் சொல்ல‌ அப்படியானால் நீங்கள் எடுக்கும் சம்பளம் பஸ்ஸுக்கும் சாப்பாட்டுக்கும் செலவாக‌ போயிடுமே தம்பி என கேட்டார் ஓம் அண்ணன் இப்படித்தான் போகிறது என நானும் சொல்ல காத்தான்குடி வருகிறது அங்கே அண்ணை மிக கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள் இங்கே மனித எருமை மாடுகள மிக அதிகமாக குறுக்காக பாய்ந்து பாதையை கடந்து செல்லும் என நான் சொல்ல அவர் சிரிக்கிறார். என்ன உங்க குரல் சத்தமே வருகுதில்ல போங்க காரணத்தை சொல்கிறேன் என நானும் சொல்ல‌ நீங்கள் எங்க வேலை செய்கிறீர்கள் என்று கேட்க அவரோ நான் மிதிவெடிகளை அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என சொன்னார் அப்போது மிதிவெடி மிகவும் பயங்கரமானதாக இருக்குமே நான் கேட்க லேசான மழைதூறல் வேற வாகனம் புதுக்குடியிருப்பை அடைகிறது .................. புது குடியிருப்பு பகுதி சன நடமாட்டம் குறைவான பகுதி ஆங்காங்கே சிலசில ஓலை குடிசைகள் இருக்கும் அங்கே இருக்கும் மக்கள் சீசனுக்கு ஏற்றால் போல் முந்திரிகை , நாவல் பழம் , சோளன் அவித்து பாதையோரம் விற்பது வழமை மழையும் அதிகரிக்க‌ நாங்களும் ஒரு ஓலை குடிசை நோக்கி ஒதுங்க அங்கே அம்மா மழையில் நனைந்து கொடுகி நின்றா சோள‌ன் இருக்கிறதா? ஓம் மகன் இருக்கு எங்கள் இருவருக்கும் தாருங்கள் எனச் சொல்ல அவர் சோளனை அடுப்பில் இருந்து எடுத்து இருவருக்கும் தருகிறார் இருவரும் மெதுவாக கதைத்துக் கொண்டிருக்கும் போது மின்னல் வெட்ட‌ இடியும் காதை பிளந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சிறுவனை நான் காண டேய் தம்பி இங்க வாடா என நான் கூப்பிட அவன் ஓடுகிறான் பின்னங்கால் *** அடிபட ஏன் தம்பி அவன் உங்கள காண ஓடுகிறான் என அந்த அம்மாவும் என்னை ஏற்றி வந்த அண்ணரும் கேட்க நான் வெட்ட எடுத்த கோழி போல‌கத்துர குரல் இவனாலதான் வந்தது என நான் சொல்ல என்ன நடந்தது என இருவரும் கேட்க ஒரு கிழமைக்கு முன்னன் நான் நல்லா கேட்டுத்தான் இவனிட்ட நாவல் பழம் வாங்கினன் பாவி பழம் பழுக்க சுண்ணாம்பு தண்ணி தெளிச்சிருக்கான் போல அத சாப்பிட்ட நாளில் இருந்து தொண்டை இப்படி இருக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை மூணு நாளைக்கு முன்னம் எல்லாம் கைப்பாசைதான் என சொல்ல இருவரும் சிரிக்கின்றனர். அந்த அம்மாவோ தம்பி இவங்க வாகரையிலிருந்து பழம் எடுத்து விற்கிறவங்கள் நீங்கள் யோசிக்கலையா முழுப்பழமும் மொத்தமாக பழுத்த்திருக்குமா என ? ஓம் அம்மா அது தெரிஞ்சுதான் கேட்டன் பல வருசமா இந்த ரோட்டால போய்வாரதால எனக்கு நல்ல அனுபவம் இவங்க கிட்ட என நானும் சொல்ல சோளம் கதையோடு கதையாக முடிந்து விட்டது இன்னுமொரு சோளனை தாங்கள் இருவரும் எடுக்கிறோம். ஏன் அண்ண‌ நீங்கள் இன்றைக்கு வேலைக்கு லீவா என நான் கேட்க இல்ல தம்பி நான் வேலையை விட்டு எழுதிக்கொடுத்து விட்டு வருகிறேன் வேலையை முற்றாக விட்டு வருகிறேன் என்று அவர் சொன்னார். ஏன் என்ன காரணம்? தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் மிக கஷ்டமே வேலையில்லாதது நானும் கேட்க ம்ம்ம் தம்பி நேற்றைய நாள் வேலை செய்திருக்கும்போது நண்பர் ஒருவர் மிதிவெடியில் தனது காலை வைத்து இழந்து விட்டார் அதனால் நானும் பல வருடமாக வேலை செய்கிறேன் நேற்றைய சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதனால் வேலையை விட்டு விலகுகிறேன் என்றார் அவர் ...........ம்ம்ம் திருமணம் ஆகிவிட்டதா? இல்லை ஏன் கட்டவில்லை நாளைக்கும் எனக்கும் இந்த நிலை வந்தால் என்ன செய்வது?? பதில் சொல்ல முடியாமல் நானும் ஏன் அவர் பயிற்ச்சிகள் எடுக்கவில்லையாயென நானும் கேட்க புதுசாக புதுசாக வேலையில்லா திண்டாட்டத்தில் நிறைய பேர் வந்து இணைகிறார்கள் எங்களுக்கு சுமார் ஒரு வருட காலம் பயிற்ச்சி தந்தார்கள் தற்பொழுது நிறைய பேர் பூரணமாக பயிற்சி பெறுவதில்லை வேலையென‌ வந்து இணைகிறார்கள் தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அகற்றுவது சிரமம் என்றார் நாங்கள் வேலை செய்து துப்பரவாக்கிய பகுதியில் தான் அந்த வெடி வெடித்தது நாங்கள் அகற்றிய பகுதியில் மழை நீர் ஒடியதால் அதிலிருந்த வெடி ஒன்றே நீரோட்டத்தில் வந்து மண் மூடி இருந்து அது ஒருவருக்குமே தெரியவில்லை வெளியாக்கிய பகுதியென நினைத்து மீண்டும் அகற்ற செல்லும் போதே வெடித்தது என அவர் சொல்ல மனம் கனத்தது. பாவம் அவரும் குடும்பஸ்த்தர் இரு குழந்தைகள் உள்ளது ஒரு நாளைக்கு 20 மீற்றர் நிலம் கூட அகற்ற முடியாமல் விதைத்து வைத்திருக்கிறார்கள் நான் கூட ஒருதரம் சிக்கினேன் அது மிகப்பழையது வெடிக்கவில்லை தப்பித்துவிட்டேன் என அவர் காலைப்பார்க்கிறார் முழங்கால் தொடக்கம் தேய்ந்து இருந்தது சரி அண்ண மழை ஓய்கிறது வாருங்கள் போவோம் என நான் சொல்ல அந்த கடைகார அம்மாவோ கவனம் மனே பார்த்து போங்கள் ரோட்டு முழுக்க தண்ணியாக் கிடக்கு என சொல்ல நீங்களும் நனையாமல் போங்க இருட்டுகிறது என காசைக்கொடுக்கிறேன் அவவோ முழுக்க நனைந்திருந்தார் மழை நின்றாலும் தூவானம் எம்மவர்க்கு அடித்துக்கொண்டே இருக்கும் ..................................
    13 points
  21. இவ்விடயத்தில் என் கருத்துக்கு எவ்வளவு பெறுமானம் இருக்கிறதோ தெரியாது😂 இருந்தாலும்: மேலே நுணா சொல்லியிருப்பதே சரியானது. தலைமையை நிராகரித்தோ, தப்பியோடும் எண்ணத்திலோ வெள்ளைக் கொடி ஏந்தியோர் சரணடையவில்லை. அந்த சரணடைதல் யுத்தத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. சரணடைந்த பின்னர், உடனடியாகவோ அல்லது 7 வருடங்கள் கழித்தோ எதிரி கொலை செய்திருந்தால், நிச்சயமாக அவர்கள் மாவீரர்கள் கௌரவத்திற்குரியோரே! புலிகள் அமைப்பு 2009 இற்கு முன்னர் பின்பற்றிய மரபை (convention), இந்த விடயத்தில் நாம் இன்றும் பின்பற்றினால் பாதகமான பின்விளைவுகள் ஏற்படுமென நினைக்கிறேன். உதாரணமாக, 10 வருடம் போராடிய ஒரு போராளி சரணடைந்து , கொலையாகாமல் தப்பி வாழ்ந்தால், அவரது 10 வருட வாழ்க்கைத் தியாகத்தை உதாசீனம் செய்ய முடியுமா? இல்லையல்லவா? இப்படி உயிரோடு மீண்ட சரணடைந்த போராளிகள், முன்னாள் போராளிகள் என்றால், சரணடைந்து எதிரியால் கொல்லப் பட்டோர் மாவீரர்களே. இது மிகவும் எளிய தர்க்க முடிவு, இதற்கு ஏன் புதுச் சொல் தேடி தலை முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்?
    13 points
  22. உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால் உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு. உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால் மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின் குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர். மயில் ஆடும் .........🦚
    12 points
  23. எச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக ஒரு பில் கொடுத்தார் இனிமேலும் பொறுக்க முடியாது நேற்றிரவு கூரைக்குள் உங்களின் இரு குரல்கள் ஒன்று கொஞ்சம் சிணுங்கியது ம்ம் ......... குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறீர்கள் போலிருக்கு ஒரு பூனையைக் கொண்டு வந்தால் உங்கள் கதை முடியும் பின்னர் பூனையை என்ன செய்வது? பகலிலும் பிராண்டுமே பூனை ஒரே வழி பொறி தான் உள்ளே வா உட்கார்ந்து சாப்பிடு என்று கூப்பிட்டு போட்டுத் தள்ளலாம் என்றிருக்கின்றேன் இப்பவும் நீங்கள் தப்பி வாழ ஒரு வழியிருக்குது அம்மணியின் கண்ணில் விழாதே அவவின் பொருட்களை தொடாதே சத்தமில்லாமல் ஓரமாக இருந்து விட்டு போங்கள் நான் பொறியை திருப்பிக் கொடுக்கின்றேன்.
    12 points
  24. இந்தின் இளம்பிறை -------------------------------- ஒரு உறவினர்களின் திருமண விழா மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு இடத்தில் நடந்தது. இப்பொழுது சில பிள்ளைகள் வேறு தேசம் ஒன்று போய், அங்கு விழா வைப்பதையே விரும்புகின்றனர். திருமண விழா முடிந்து அடுத்த நாளும் நான் அந்த விழா நடந்த இடத்திற்கு போயிருந்தேன். அன்று அந்த இடம் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆதலால், நான் அந்த இடத்தை இரண்டு படங்கள் எடுத்தேன், இன்று நானாவது எடுப்போமே என்று. நேற்று ஒரு சோடி செருப்பு அங்கே காணாமல் போயுள்ளது, அதைக் கண்டால் எடுத்து வரவும் என்ற தகவலையும் கையோடு வைத்திருந்தேன். கடலோர மணல் மேல் போட்டிருந்த மேடை இன்னமும் அங்கேயே இருந்தது. ஆனால் கடற்கரை வெள்ளை மணல் திட்டு திட்டாக மேடையெங்கும் ஏறி ஒழுங்கில்லாமல் பரவிக்கிடந்தது. மேடை மேலே கட்டியிருந்த முக்கால்வாசி அலங்காரத் துணிகள் விழுந்து அங்கங்கே குவியலாகக் கிடந்தன. இன்னும் விழாமல் இருந்தவை இனிமேல் விழுவதற்காக கடல் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிரேக்கச் சிலையில் இருந்து அதன் கடைசி உடுபுடவையும் காற்றில் பறக்கத் தயாராக இருப்பது போல. நான் படமெடுக்கும் போது இரண்டு உல்லாசப் பயணிகள் அந்த மேடையின் ஓரத்தில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர். இதற்கு முந்தைய நாள், திருமண நாளன்று, மேடையில் இவர்கள் இருவரும் இருந்து அருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் உள்ளே புரோகிதர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இந்த இரு பயணிகளின் இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். புரோகிதர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இப்பொழுது மெக்ஸிக்கோவில் வசிப்பதாகவும் அங்கே சொல்லியிருந்தனர். புரோகிதர் ஒரு கையில் தேங்காயையும், இன்னொரு கையில் கல் ஒன்றையும் கொடுத்து, அந்தத் தேங்காயை சரியாக அவர் சைகை செய்யும் நேரத்தில் என்னை உடைக்கச் சொன்னார். தேங்காயை சரி வட்டப் பாதிகளாக உடைக்க வேண்டும் என்ற அழுத்தம் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் போன்ற தவிர்க்க முடியாத ஒன்றாக இரண்டு மூன்று நாட்களாக என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. புரோகிதர் கொடுத்த கல்லுக்கு நிகரான கல்லை நான் ஊரில் மயிலியதனைப் பக்கம் இருக்கும் மண்டபக்கிடங்கு பகுதியில் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். எல்லாப் பக்கமும் கூரான, எங்கே பிடிப்பது எங்கே அடிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மக்கல் அது. மயிலியதனைக்கும், மெக்ஸிக்கோவிற்கும் 'ம' வரிசையில் ஆரம்பிக்கின்றன என்ற ஒற்றுமையுடன், கல்லிலும் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. புழுக்கொடியலுக்கு தோதான சில்லுச் சில்லாக தேங்காய் சிதறப் போவது திண்ணம் என்று தெரிந்தது. முக்கிய பார்வையாளரான என் துணைவி மற்றும் இதர பார்வையாளர்களுக்கு மண்டபக்கிடங்கு கல் தான் என் கையில் இருக்கும் ஆயுதம் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. நடப்பவை நடந்த பின் முழுப்பழியையும் சுமக்க வேண்டியது தான். இயேசு பிறப்பதற்கு முன், அவர் பிறந்த தேசத்தில், ஆடுகள் மீது மனிதர்களின் பாவங்களும் பழிகளும் ஏற்றப்பட்டு, அவை பாலைவனத்திற்குள் துரத்தி விடப்பட்டன என்று சொல்கின்றனர். பின்னர் எல்லோருடைய பாவங்களையும் ஏற்க பாலன் இறங்கி மனிதனாக வந்தார். இன்று சனத்தொகை எக்கச்சக்கமாக எகிறி ஏறி விட்டதால், தேவபாலன் தனியாக எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் திக்குமுக்காடிப் போய் நிற்கின்றார். இந்த தேங்காய் உடைப்பதில் ஏதும் பிழை, பாவம் வந்தால் நானே தான் சுமக்கவேண்டும் ஓங்கி அடிக்கின்ற அந்தக் கணத்தில் தேங்காய் முழுதாக கையை விட்டுப் பறந்தது. அன்று புரோகிதரின் இடுப்பு எலும்பு தப்பியது ஒன்பதாவது அதிசயம். மயிரிழையில் தப்பினார். புரோகிதர் என்ன நடந்தது என்று கூட்டிப் பெருக்கி உணர்வதற்குள், நான் தேங்காயை பாய்ந்தெடுத்து சில்லுச் சில்லாக குத்தி தட்டில் போட்டுவிட்டேன். மிக அருமையாக தேங்காயை உடைத்ததற்காக எல்லோரையும் கை தட்டுமாறு புரோகிதர் சொன்னார். மறுபேச்சில்லாமல் கூட்டமும் தட்டியது, ஐயர் சொல்லிவிட்டாரே. எல்லாம் முடிந்த பின், தனியாக இருந்த புரோகிதரிடம் மெதுவாகக் கேட்டேன். 'குஜராத்தில் கல்யாண வீட்டில் தேங்காயை கல்லால் தான் குத்துவீர்களா?' 'குஜராத்தா, அது எங்கேயிருக்கின்றது?' 'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?' 'மெக்ஸிகன்.' இங்கு ஏற்கனவே பல அர்த்தங்கள் ஏற்றப்பட்டு விட்ட ஒரு கனமான சொல் இது. அந்தச் சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்களை மீறி புதிதாக எதையும் சிந்திக்க முடியவில்லை. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூகநீதிச் சட்டம் தமிழ்நாட்டில் இருப்பது தெரியும். ஆனால் பழைய அர்ச்சகர்கள் கோயில் நடையைப் பூட்டுவதும், நீதிமன்றம் மீண்டும் திறப்பதும் என்று, அங்கே அதுவே இன்னும் ஒரு இழுபறியில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இது இன்னுமொரு பரிமாணம். 'அப்ப இந்த மந்திரங்கள், சுவாஹா, ராதா, கிருஷ்ணா, பிரபஞ்சம்,....' 'நான் சில காலம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கூட்டத்தில் இருந்தேன்.' 'அ.....' 'இந்த மாதிரி சிலவற்றை அங்கே கேட்டிருக்கின்றேன். இப்ப எல்லாம் ஃபோனிலும் இருக்குது தானே. அப்படியே பார்த்து வாசிக்க வேண்டியது தான்.' 'ம்.....' அப்படியே தொலைந்து போனதாகச் சொன்ன சோடிச் செருப்பை தேடத் தொடங்கினேன்.
    12 points
  25. சிந்திப்போம் செயல்படுவோம் களியாட்டத்தில் கலாட்டாவா அனைவருக்கும் வணக்கம். அண்மையில் யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வின் பொழுது நடந்த ஒர் அசம்பாவிதத்தை பற்றி பல வாத பிரதிவாதங்கள் இடம் பெறுவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அசம்பாவிதத்தை ஊதி பெருப்பித்த பெறுமை நெட்டிசன் மாரை சேரும் .அதாவது சமுக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்யும் நபர்கள்..அநேகமான நபர்கள் தங்களுக்கு அதிக பார்வையாளர்கள்,மற்றும் லைக் வேணும் என்ற காரணத்தால் கவர்ச்சிகரமான தலையங்கங்களை எழுதி தங்களது கற்பனைக்கு எட்டியவற்றை கூறினார்கள் ..அவர்களில் அனேகமானவ்ர்கள் போட்ட படம், அதாவது சனம் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு முன்னுக்கு செல்லும் காட்சி...இந்த ஒரு காட்சியை ஏதோ ஒரு மூலத்தில் கொப்பி பண்ணி அதை தாங்கள் எடுத்த காட்சி போல பிரசுரித்து கருத்துக்களை அள்ளி வாரி இறைத்தனர். யாழ்ப்பாணத்தவன் உலகத்திலயே சிறந்த பிறவியாக இருக்க வேணும் என்ற கருத்து பட சிலர் எழுதினர்.இன்னும் சிலர் இந்த அசம்பாவிதத்தினால் யாழ்ப்பாணத்தானின் மானம் கப்பல் ஏறிவிட்டது என முதலை கண்ணீர் விட்டனர்.. இந்த யூ டியுப் விண்னர்கள் முழுக்க முழுக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொழிலதிபர் இந்திரன்,மற்றும் நடன தயாரிப்பாளர் கலா மாஸ்டர் மற்றும் தமன்னா மீது குற்றங்களை சாட்டுகிறார்கள் அல்லது அவர்களை வசை பாடுகிறார்கள். அவர்களின் ஒழுங்கமைப்பில் தவறுகள் இருக்கின்றது அதை சுட்டி காட்டுங்கள் இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகள் வராமல் செயல் பட உதவியாக இருக்கும்...இவர்களுக்கு மட்டுமல்ல எந்த ஒழுங்கமைப்பாளர்களுக்கும் அது உதவியாக இருக்கும் அதாவது பொது மனபான்மை ... தொழிலதிபர் தனது கல்வி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நிகழ்ச்சியை நடத்தியதாக குற்றம் சாட்டுகிறீர்கள் அதில என்ன தப்பு இருக்கின்றது? தாயகத்தில் இன்று புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தொழிலதிபர்கள் பலர் தொழில் முதலீடு செய்ய முன் வருகின்றனர் ,ஈடுபடுகின்றனர்.அவர்கள் புலம் பெயர்ந்த மண்ணிலயோ, இந்தியா,அல்லது ஏனைய ஆசிய நாடுகளில் தங்கள் முதலீடுகளை இலகுவாக செய்யலாம் இருந்தும் தாயகத்தில் இருக்கும் தங்களது பற்று காரணமாக அங்கு முதலீடு செய்ய முன்வருகின்றனர். அவர்களை ஊக்கபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தாயக மக்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் .சில யூ டியுப் நபர்கள் இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர் .அவர்கள் உண்மையிலயே பாராட்ட பட வேண்டியவர்கள் தொழிலதிபர் இந்திரனின் அரவணைப்பால் தாயக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அதிமாக இருக்கும்..இந்த இசை நிகழ்ச்சியின் பொழுது நடை பெற்ற அசம்பாவிதத்தினால் பாதிப்பு பொருட்களுக்கு மட்டுமே...எனவே எந்த தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வந்தாலும் அரவணைத்து ஊக்க படுத்த வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.. யாழ் மாநகர சபையினர்,மற்றும் பொலிசார்,அரசு போன்ற துறையினரும் இந்த அசம்பாவித் நிகழ்வுக்கு பொறுப்பாளிகள் ..இவர்களை கேள்வி கேட்க வேண்டிய மண்னின் யூ டியுப் விண்ணர்கள்,சமுக வலைத்தள ஜாம்பவாங்கள் எல்லாம் பணத்தை முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர் மீது குற்றம் சாட்டுகின்றனர். காவாலி கூட்டங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு இவர்களை திறுத்த முடியாது .ஆனால் கட்டுப்படுத்த முடியும் அதை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொலிசார் செய்ய வேண்டும் . மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போதைப்பொருள் பாவிப்பவர்கள் நடமாடுவதை பொலிசார் தடை செய்திருக்க வேணும் .மாநகர சபை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி கொடுக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேணும் .. ஒர் அரசியல்கட்சியின் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு மக்களை விட கலகம் அடக்கும் பொலிசார் அதிகமாக நிற்பார்கள் இங்கு அப்படியான எதுவும் ஒழுங்கு செய்ய படவில்லை.. பாதுகாப்பு செய்ய வேண்டியவர்கள் இங்கு தவறு செய்து விட்டார்கள் .. ஏற்கனவே மக்கள் கொந்தளிப்பு நிலையில் இருக்கும் பொழுது மக்களை அமைதி படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரி சிங்கள மொழியில் அமைதி காக்கும் மாறு கோருகின்றார் இது இன்னும் மக்களின் மனவேதனையை தூண்டும் செயல் ...அடுத்து தமிழில் பேசிய அதிகாரி கூறியவை எதுவும் மக்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. இன்று தொழிலதிபர் இந்திரன் தனது சார்பில் அறிக்கை விடுத்துள்ளார் அதைப்பற்றி எவரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை...அதை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையும் இந்த யூ டியுப் விண்ணர்களுக்கு உண்டு... இளைய வயதில் பிரபல தொழிலதிபராக வந்து தாயக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக வடமாகாண மக்களுக்கு ஒர் கல்வி நிறுவனத்தை தொடங்குவது என்பது உண்மையிலயே பாராட்டபட வேண்டிய ஒன்று ..கல்வி அறிவே எவராலும் அழிக்க முடியாத சொத்து...எம் மக்கள் இதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். இப்படி எழுதிய காரணத்தால் நானும் இந்திரனிடம் பணம் வாங்கி எழுதுகிறேன் பதிவுகளை போட சிலர் நினைக்கலாம் எனக்கு அவர் யார் என தெரியாது என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.. எல்லோரையும் குற்றம் சாட்டி, எம் மண்ணின் மைந்தர்கள் தொழில் செய்ய விடாமல் தடுக்க பல முயற்சிகள் திரைமறைவில் நடை பெறுவது கசப்பான உண்மை... நலன் விரும்பி
    12 points
  26. எழில் மிகுந்த இலங்கை மாதாவின் வடபகுதியின் பிரதான நகரம் யாழ்ப்பாணம். இம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதியைக் கொண்ட பகுதி தென்மராட்சியாகும். தென்மராட்சியின் தென் மேற்குப் பகுதியில் சுமார் 6 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கைதடி நாவற்குழி தெற்குப் பகுதியாகும். இதன் எல்லைகளாக கிழக்குப் பகுதி தென்னஞ்சோலைகளாலும் மறவன்புலோ மேற்கும், தெற்கு கடலாலும், மேற்கு தென்னஞ் சோலையும் பனைவளமும் கொண்டதாகவும் இயற்கை எழில் கொண்ட பசுமை நிறைந்த பகுதிகளாகவும் அமைந்துள்ளன. இக்கிராமம் கைதடி நாவற்குழி தெற்காக இருந்தாலும் கோவிலாக்கண்டி என்றால் தான் அநேகருக்கு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கைதடி நாவற்குழி தெற்கு மக்கள் அநேக காலமும் தாமும் தன்பாடும் என்ற நிலையில் சந்தோசமாகவும் அமைதியாகவும் எந்தவிதமான கோபதாபம் பிணக்குகளின்றி வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆதிமுதல் “பெரும்படை” என்னும் தெய்வத்தையே தமது குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். வழமையாக வருடாந்தம் பங்குனி மாதம் கொண்டாடப்படும் பெரும் பொங்கல் தினத்தையே பெருவிழாவாகக் கொண்டாடி வந்தனர். ஒரே சமூகமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இவர்களைப் பிரிக்க வேண்டுமென்ற சிலரின் தீய எண்ணத்தாலோ ஏதோ ஒரு காரணத்தாலோ ஒரு பொங்கல் தினத்தன்று இவர்களுக்கிடையே பிரச்சனைகளும், மனஸ்தாபங்களும், குரோதங்களும் ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் தமக்கொன அதே பெயரில் இன்னொரு “பெரும்படை” என்னும் கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர். அன்று தொடங்கிய பகை நீண்ட காலம் வேண்டத்தகாத சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறமைகளையும் இவர்களுக்கிடையே வளர்த்தது. இது இவர்களுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்து இவர்களின் சீரான வாழ்வைச் சீரழித்தது. இம் மக்கள் கடற்கரையையண்டி வாழ்ந்தபடியால் கடல்படு திரவியம் தேடும் தொழிலே பிரதான தொழிலாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட சிலர் விவசாயத்தையும் தம் தொழிலாகக் கொண்டனர். அக்காலம் போதிய போக்குவரத்து வசதி இன்மையால் தாம் பெற்ற சரக்கைத் தனங்கிளப்பிற்கு நேரேயுள்ள கடற்கரையிலிருந்து காவுதடி கொண்டு சாவகச்சேரிச் சந்தையில் விற்றுப் பணமாக்கினர். இந்த நிலை வீண் சிரமத்தையும் கஷ்டத்தையும் கொடுத்ததைக் கண்டு ஒரு சில பெரியவர்களினதும் நல்ல உள்ள கொண்டவர்களது மன எண்ணத்தின்படியும் தம் கடற்கரையிலே தாம் பிடித்த சரக்கை விற்பனை செய்து சம்பாதிப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது. கூட்டுறவுச் சங்கம் உதயம் இம்மக்களை ஒன்றுபடுத்தி இவர்களது வாழ்வைச் சிறப்புறச் செய்யவும் வீணான குரோதங்களை இல்லாமற் செய்யும் நோக்கத்திற்கும் ஒரு ஸ்தாபனம் தேவைப்பட்டது. அதன் நிமித்தம் கூட்டுறவுச் சங்கம் உதயமானது. அதன் தலைவராக தச்சன்தோப்பைச் சேர்ந்த அறிவு மிக்க திருவாளர் முருகேசு காசிப்பிள்ளையும், செயலாளராக திரு கனகர் சதாசிவம், பொருளாளராக திரு வேலுப்பிள்ளை பொன்னம்பலம் ஏனைய சிலர் நிர்வாக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர். இந்நிகழ்வு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. சந்தை ஆரம்பம் கைதடி நாவற்குழி தெற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் சந்தையைச் செயற்படுத்தும் நோக்கத்தோடு கடற்கரையோரம் சிறு கொட்டிலை அமைத்தது. நல்ல நாளாக சித்திரைப் பரணி தினத்தன்று வியாபாரம் தொடங்கத் தீர்மானித்தனர். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் பல ஊர்களுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தினர். அன்றைய தினம் தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையுள்ளோர் சமூகம் கொடுத்து மீன் வகைகளைக் கொள்வனவு செய்தாலும் நாளடைவில் – காலப்போக்கில் மக்கள் அநேகம் பேர் கூடவும் வியாபரம் பெருகவும் வழி உண்டாயிற்று. வியாபாரத்தைக் கண்காணிக்க மகேசனும், சிப்பந்தியாக திரு.வி.சின்னத்துரையும் நியமிக்கப் பெற்றனர். சிப்பந்தி நகைச்சுவையாக “காத்தடி கொண்டு காவினதெல்லாம் அந்தக்காலம், இப்போ கையிலே தூக்கி கரையிலை வைப்பது இந்தக் காலம்” எனக் கவிதையும் யாத்துப்பாடியது இப்போதும் காதில் கேட்கின்றது. கூட்டுறவுச் சங்கத்தின் சேவை கூட்டுறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதும் ஆரம்பத்திற் குறிப்பிட்ட ஒரு தொகையினர் அங்கத்துவராகச் சேரப் பின்னடித்தாலும், ஏனையவர்களோடு சங்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. சங்கத்திற்கு ஒரு பெயர் வைப்பதற்காக பூசாரி க.சதாசிவம் பூசை செய்யும் வைரவர் கோயில் முன்றலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடற்றொழில் இலாகாவைச் சேர்ந்த திரு சோமசுந்தரம் என்னும் உயர் அதிகாரியால் “ஸ்ரீ மகாவிஷ்ணு கடற் தொழில் கூட்டுறவுச் சங்கம்” என்னும் பெயர் மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சங்கம் வளர்ச்சியடைந்து அங்கத்துவர்களுக்கு கடன் வசதி, வலை, கம்பு, வள்ளம் போன்ற உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்தது. இதனைக் கண்ட ஏனையோரும் அங்கத்துவர்களாகச் சேரத் தொடங்கினர். கடற்கரை வீதி வரலாறு கூட்டுறவுச் சங்கத்தின் முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடற்கரை மைதானத்தில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு வே.குமாரசாமி அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். கோவிலாக்கண்டி சந்தியில் இருந்து கடற்கரை வரையான பாதை மோட்டார் வாகனமன்றி துவிச்சக்கர வண்டி கூட செல்ல முடியாதளவு பெரும் மண் தரையாக இருந்தபடியால் பாராளுமன்ற உறுப்பினர் தமது மோட்டார் வாகனத்தை திரு.வே.சிவசுப்பிரமணியம் ஆசிரியரது வீட்டில் நிறுத்தி விட்டு கூட்டம் கூடும் இடத்திற்கு நடந்தே வந்தார். மக்களும் மேளதாளத்தோடு மாலை அணிவித்து மிகவும் மரியாதையாக அழைத்து வந்தனர். அன்றைய தினம் தனது பேச்சின் போது, தான் இவ்விடத்திற்கு மோட்டார் வாகனத்தில் வரமுடியாது நடந்தே வரவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அடுத்த முறை இவ்விடத்திற்கு வருவதாயிருந்தால் தனது மோட்டார் வாகனத்திலேயே இவ்விடம் வந்து இறங்குவேன் எனக் கூறினார். அவர் அப்பொழுது பாராளுமன்றத்தில் செல்வாக்குள்ளவராகவும் இருந்தபடியால் குறுகிய காலத்தில் வீதிக்கு ரூபா 10000/= ஒதுக்கப்பட்டது. அப்போது சதத்தில் பணப் புழக்கம். இப்போது இத் தொகை பத்துக் கோடிக்குச் சமனாகும். இவ் வீதியை புனரமைக்க காரைநகைரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அவரும் விரைவில் வீதியைச் சீரமைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் தாம் கூறியவாறு மோட்டார் வாகனத்தில் வந்திறங்கினார். இவ் வீதி சீரமைக்கப்பட்டதால் கிராமமும் மக்களும் பெரிதும் அபிவிருத்தியடைந்ததோடு பெற்றவராயினர். பல நன்மைகளும் கிடைக்கப் பெற்றவராயினர். இவ்வேளை இக் கிராமத்து மக்களை ஒன்று படுத்துவதில் திரு.க.சதாசிவமும் திரு.வே.பொன்னம்பலமும் பெரிதும் முயற்சியெடுத்தனர். ஓரளவு வெற்றியும் நிறைவும் பெற்றனர். பாடசாலை ஆரம்பம் இக்கிராமத்துப் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை யா/கோவிலாக்கண்டி மகாலக்குமி வித்தியாசாலையில் கற்று வந்தனர். ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அப்பாடசாலையிற் கற்றவர்கள் அதனோடு தமது கற்றலையும்,சிலர்நாலாந்தரத்தோடும் நிறுத்தியுள்ளனர். இதற்கு அவர்களது போக்குவரத்து வசதியீனமும் வறுமையும் காரணமாக அமைந்துள்ளது. இக்காலத்தில் நான் க.பொ.சா/தரப்(SLC) பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.உ/ தரம்(HSC) சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கற்று வந்த வேளையில் திரு.ந.இளையப்பா ஆசிரியர் அவர்களைச் சந்தித்த வேளையில், இக் கிராமத்துப் பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்காமல் நிறுத்தியதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு என ஒரு பாடசாலையை எமது கிராமத்திலே ஆரம்பித்தால் அவர்கள் தொடர்ந்து கற்கச் சந்தர்ப்பம் உண்டாகுமென, ஆண்டவன் அருளால் உதித்த எனது எண்ணக் கருத்தினை வெளிப்படுத்தினேன். அதற்கு அந்த நல்ல உள்ளம் கொண்ட பெரியவரும் தானும் வேண்டிய உதவி செய்வதாகவும் பாடசாலையை ஆரம்பிக்கும்படியும் கூறினார். அப்போதுள்ள சமூக, சமுதாய சூழ்நிலை இக் கைக்காரியத்துக்கு கடும் எதிர்ப்பும், பகையும் கிடைக்கும் என்றுணர்ந்தும் நல்லதொரு காரியத்துக்கு ஆண்டவன் பக்க பலமாக துணைநிற்பான் என்ற அசையாத துணிச்சலோடும், நம்பிக்கையோடும் பாடசாலை ஆரம்பிக்கத் தொடங்கினேன். பாடசாலை நடாத்துவதற்கு ஒரு இடம், கட்டிடம் தேவைப்பட்டது. அப்பொழுது கடற்றொழிளாருக்கென கட்டிடம் ஒன்று புதிதாகக் கட்டப் பெற்ற நிலையில் இருந்தது. அதனை சங்க நிர்வாகிகளுடன் கதைத்துப் பெற்றுள்ளேன். 1960 ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 30.09.60 நவராத்திரி காலத்தின் விஜயதசமியன்று பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.ந.நவரத்தினம் அவர்களைக் கொண்டு திறப்பதற்கு தீர்மானித்த வேளை அவர் அவசியம் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் துணைவியார் திருமதி இரகுபதி நவரத்தினம் அவர்களை அனுப்பியிருந்தார். அந்த அம்மையாரும் சமூகம் கொடுத்து அன்றைய தினம் பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலை இக் கிராமத்தில் தொடக்கி வைக்கப் பெற்றதால் பிரிந்து நின்றவர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாகவும் பழைய பகைமைகளை மறந்து சந்தோஷமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. பாடசாலையை அரசு பொறுப்பேற்பதாக இருந்தால் நிரந்தரக் காணி, நிரந்தரக் கட்டிடம் தேவைப்பட்டது. இதற்காக இப்போது பாடசாலை அமைந்துள்ள காணியை உரியவர்களான திரு.மு.கனகர், திரு.ம.ஆறுமுகம், திருமதி ம.சின்னாச்சி என்போரிடம் இருந்து பெருமுயற்சி எடுத்து சம்மதம் பெறப்பட்டது. உடனே நொத்தரிசுக்கு கிளாக்கராக இருந்த திரு.வ.செல்லத்துரை என்பவரைக் கொண்டு உறுதி எழுதப்பட்டது. இனி நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும். அதற்குரிய கல், சீமெந்து பாடசாலைக் காணிக்கு கொண்டு வர முடியாத நிலை. அந்தளவுக்கு புழுதி மணல் நிரம்பிய பாதை. திரு.சு.கந்தையா என்பவர் தனது மெசினில் கொண்டு வரும் கல், சீமெந்தை தற்போது ஆலடி அம்மன் கோயிலாகவிருக்கும் இடத்தில் பறித்துவிட்டுப் போய் விடுவார். அப்போது எம்மிடம் வண்டில் மாடு இருந்தமையால் மாடுகள் இழுக்கக்கூடிய அளவு கல், சீமெந்தை ஏற்றி பாடசாலைக் காணிக்கு கொண்டு வந்து சேர்த்தேன். ஏனைய உதவிகள் பெற்றோராலும் கிடைக்கப் பெற்று கட்டிடம் கட்டி முடிக்கப் பெற்றது. கிணற்றினைத் திரு.வியாழரத்தினமும் அவரது மகன் தியாகராசா உடன் நானும் சேர்ந்து வெட்டினோம். மேசன் திரு.வ.சிதம்பரநாதனுக்கு நான் உதவியாளராக இருந்து கிணறு கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இப் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியரான திருமதி அ.இளையப்பா அவர்கள் தலைமை ஆசிரியராகவும், திரு.வே.இராமர், செல்வி.வி.சிவபாக்கியம், செல்வி.சி.இராசேஸ்வரி பின்பு செல்வி.சி.சின்னக்குட்டி ஆகியோர் உதவி ஆசிரியர்களாகவும் கடமையாற்றினர். வகுப்புகள் தரம் | தொடக்கம் தரம் V வரையுமே நடைபெற்றன. அரசு பொறுப்பேற்றல் அப்போதுள்ள கல்விச் சட்டத்தின்படி பாடசாலை ஆரம்பித்து சில மாதங்களில் பொறுப்பேற்க வேண்டிய நிலையிருந்தும் எதிர்ப்புகள் காரணமாக காலதாமதமாகியது. அப்போது மத்துகம் தொகுதி பா.உறுப்பினராக இருந்த திரு. பங்குவில என்பவரை இங்குள்ள அவரது நண்பர் பாடசாலை விடயமாகக் கதைத்ததனால் அவர் பாராளுமன்றத்தில் எமது பாடசாலையின் விபரம், நிலைமையை எடுத்துக் கூறியதால் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.வை.துடாவையின் உத்தரவின் பேரில் யாழ் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய கல்வியதிகாரி திரு.எஸ். முத்துலிங்கம் அவர்கள் 1963 ஆம் ஆண்டு தை மாதம் 30ந் திகதி பாடசாலைக்கு சமூகம் கொடுத்து அரசாங்க பாடசாலையாகப் பதிவு செய்து பொறுப்பேற்றதை சம்பவத் திரட்டுப் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளார். இவ் வைபவம் இக்கிராமத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதனைத் தொடர்ந்து பாடசாலை வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1964ஆம் ஆண்டு திரு. V.S.கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றதிலிருந்து அந்த வருடமே கிராமசபை அங்கத்தவர் திரு.வே.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றதும், பரீட்சைகளில் மாணவர் திறமை காட்டி கல்வியில் முன்னேற்றமடைந்ததும், பெற்றார் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதும் மறக்க முடியாதவையாகும். 1965, 1966 ஆகிய இரு வருடங்கள் ஆசிரிய பயிற்சி பெற்று 1967 ஆம் ஆண்டு தொடக்கம் க/புசல்லாவை சரஸ்வதி ம.வியில் 6 வருடங்கள் கடைமையாற்றி விட்டு இப் பாடசாலைக்கு மாற்றம் பெற்று வந்த பொழுது ஆண்டு 9 வரையும் உள்ள பாடசாலையில் ஆண்டு 5 வரையும் இருப்பதைக் கண்டு அதிபர் திரு.வே.நாகராசாவுடன் முரண்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு அதிபர் தரம் கிடைத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ம/கள்ளியடி அ.த.க பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். ஒன்பது வருடங்கள் அம்மாவட்டத்தின் பாடசாலைகளில் கடமையாற்றி விட்டு 1984ஆம் ஆண்டு யா/ கைதடி முத்துக்குமாரசாமி ம.வி.க்கு பிரதி அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது யா/கல்வித் திணைக்களத்தில் பிரதம கல்வி அதிகாரியாக கடமையாற்றிய திரு.கு.சோமசுந்தரம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது பதில் அதிபராக கடமையாற்றிய செல்வி இ.வசந்தாதேவி பாடசாலைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். 1984ம் ஆம் ஆண்டு பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நான் 5ம் வகுப்புக்கு மேல் வகுப்புகள் வைப்பதற்கு முயற்சி எடுத்தேன். கொத்தணி முறையில் நிர்வாகம் இயங்கிய காலம் கைதடிக் கொத்தணி அதிபர் திரு.சோ.கணேசலிங்கம் தலைமையில் நடந்த அதிபர்கள் கூட்டத்துக்கு கல்விப் பணிப்பாளர் திரு. மன்சூர் அவர்களும் சமூகம் கொடுத்திருந்தார். அவரிடம் இப்பாடசாலையில் 6ம் வகுப்பு வைக்க வேண்டிய தேவைகளை எடுத்துக் கூறியதோடு அது பற்றிய கடிதமும் கொடுத்துள்ளேன். கொத்தணி அதிபர், ஏனைய அதிபர்கள் யாவரும் ஒத்துழைப்பு நல்கியதால் கல்விப் பணிப்பாளர் உடனடியாக 6ம் வகுப்பு வைப்பதற்கு அனுமதி தந்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்க சந்தர்ப்பம் உண்டானது. 9ம் வகுப்பு வைப்பதற்குக் கல்வி அமைச்சிலிருந்து அனுமதி கிடைக்க வேண்டும். அதற்கு இங்குள்ள கல்வித் திணைக்கள அதிகாரிகள் சிபார்சு செய்ய வேண்டும். நானும் பலமுறை வேண்டுதல் செய்தும் அவர்களும் ஏதோ காரணங்களைக் கூறி சிபார்சு செய்வதைப் பின் போட்டுக் கொண்டு வந்தார்கள். இந்தநிலையில் திருமதிபுஸ்பாகணேசலிங்கம் அவர்கள் சாவகச்சேரி கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்கள் மேல் வகுப்பு படிப்பதற்குப் படும் கஷ்டங்களையும், போக்குவரத்து வசதியின்மையையும், வறுமை நிலையையும் எடுத்துக் கூறியதன் பேரில் இதனை நன்குணர்ந்து 9ஆம் வகுப்பு வைப்பதற்கு சிபார்சு செய்தமையை இந்நேரம் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். தொடர்ந்து ஏனைய வகுப்புகளும் வைக்கப் பெற்று 1996ஆம் ஆண்டு க.பொ.சா/தரப் பரீட்சை எழுத வேண்டியிருந்த பொழுது பொல்லாத காலமாக நாட்டில் யுத்தம் மூண்டது. இக் கால இடைவெளிக்குள் மாணவர்கள் கல்வியில் அதீத முன்னேற்றம் கண்டனர். கல்வி அதிகாரிகளின் பாராட்டுதலையும் நன்மதிப்பையும் பெற்றனர். இப்பாடசாலையில் பன்னிரண்டு வருடங்கள் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் என்னோடு ஒத்துழைத்துக் கடமையாற்றிய ஆசிரியர்களின் கடமையுணர்ச்சி, அர்ப்பணிப்பான சேவை, ஆக்கபூர்வமாக கல்விப்பணி, மாணவர்களைக் கல்வியில் முன்னேற்றம் காணச் செய்தமையோடு பாடசாலைக்குப் பெரும் புகழையும் பெருமதிப்பையும் தேடித் தந்தன. இதனால் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நல்ல அதிபர் தெரிவில் மாவட்ட மட்டத்தில் நல்ல அதிபராகத் தெரிவுத் தெரிவு செய்யப் பெற்று கல்விப்பணிப்பாளர் திரு.இ.சுந்தரலிங்கம் அவர்களால் பாராட்டப்பெற்றுச் சான்றிதழும் பெற்றுள்ளேன். இந்தப் பெருமை எனக்கு கிடைக்கச் செய்தமை இக்காலத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களையே சாரும் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இக்கால இடைவெளி எல்லைக்குள் பாடசாலை அபிவிருத்தியோடு கிராமத்தின் அபிவிருத்தியிலும் பங்கு பெறும் வாய்ப்பு உண்டானது. தலைமையாசிரியர் திரு.V.S.கந்தையா அவர்களது பெரும் பங்களிப்புடன் கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இச் சங்கத்தின் மூலம் பாடசாலை வீதி, பாடசாலை கடற்கரை வீதி, புதிய கிணறு கட்டியது, ஒழுங்கைகள் திருத்தம் போன்ற பணிகள் செய்யப் பெற்றன. உணவு இக் கிராமத்து மக்கள் சங்கக் கடையிலேயே அத்தியாவசியமான அரிசி,மா,சீனிபருப்பு போன்றவற்றைகூப்பன் முறையில் பெற்றனர். இச் சங்கக்கடை கைதடி நாவற்குழி வடக்கிலுள்ள முருக மூர்த்தி கோயிலுக்கருகில் அமைந்துள்ளது. இம் மக்கள் பெரும் வயல் வெளியைத் தாண்டியே நடந்து சென்று பொருள்களைப் பெற்று வந்தனர். மாரி, மழை காலங்களில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்தனர். இதனால் ஒரு பகுதியினர் கைதடி நாவற்குழி (வடக்கு) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும், ஒரு பகுதி மக்கள் கோவிலாக்கண்டி மத்தி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் கூப்பன் பொருட்களைப் பெற்று வந்தனர். நாளடையில் இவ்விரு சங்கத்தினரும் இக் கிராமத்திலேயே இரு கிளைகளை நிறுவி திரு.சி.சங்கரப்பிள்ளை ஒரு கிளைக்கு மனேஜராகவும், திரு.க.கனகரத்தினம் என்பவரை ஒரு கிளையின் மனேஜராகவும் நியமித்து பொருட்களை விநியோகித்து வந்தனர். இந்த இழிநிலையைப் போக்கும் முகமாக நாம் எமது கிராமத்துக்கென பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை நிறுவ முயற்சி எடுத்தோம். அப்போது உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த திரு.க.சிவப்பிரகாசம் என்பவரும் அரியாலையைச் சேர்ந்த கூட்டுறவுப் பரிசோதகர் திரு.க.பொன்னுத்துரை என்பவரும் பெரும் உதவி செய்தனர். கூட்டுறவுப் பரிசோதகருக்கு அவர் வேண்டுதலின் பேரில் இம் மக்களின் தொகை விபரங்களை வேலையாள், சாதாரணம், பிள்ளை, குழந்தை என்ற வகையில் வகைப்படுத்தியும் மேலும் வேண்டிய விபரங்களையும் வழங்கி உதவினேன். அப் பெரியவர்களது முயற்சியினால் இப் பகுதிக்கு கைதடி நாவற்குழி தெற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் என தனியாக சங்கம் உருவானது. இதற்கும் கடைசி நேரத்திற் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவற்றை எழுத நான் விரும்பவில்லை. தென்மராட்சி மேற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க சமாசத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு திரு.க.ஐயாத்துரை என்பவரது வீட்டின் ஓர் அறையில் வைக்கப்பட்டு வியாபாரம் தொடங்கப் பெற்றது. திரு.க.கனகரத்தினம் மனேஜராகக் கடமையாற்றினார். திரு.வே.பொன்னம்பலம் அடிக்கடி கண்காணித்து சங்க வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியதால் ஓரிரு வருடங்களில் சங்கம் பெரும் இலாபத்தை ஈட்டியது. அந்த இலாபப் பணத்தைக் கொண்டே புதிதாகக் கட்டிடம் கட்டப் பெற்றுள்ளது. அதுவே இப்போதுள்ள சங்கக் கட்டிடமாகும். உடை கைதடி நாவற்குழி தெற்கு கி.அ.சங்கத்தின் தலைவராக இருந்த நானும் செயலாளரான திரு.ஆ.கந்தையாவும் கிராம அபிவிருத்திச் சிறு கைத்தொழிற் திணைக்களத்தினருடனும் தொடர்பு கொண்டபடியால் மீசாலையிலிருந்து ஒரு தையற் பயிற்சி ஆசிரியர் இங்கு வந்து தையல் பயிற்சி வகுப்புகளை பயிற்றுவித்தார். புதிய வடிவில் சட்டைகளை அமைக்கவும், விதம் விதமாக றேந்தைகள் பின்னவும், அழகான வகை வகையான தையற் பயற்சிகளையும் நடாத்தினார். இப் பயிற்சியால் பெண்களும் குறிப்பாக இளம் யுவதிகளும் நன்மையடைந்தனர். கண்காட்சியும் நடாத்தப்பட்டது. வைத்தியம் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகா விஷ்ணு க.தொ.கூ. சங்கம் அதன் நிர்வாகத் திறமையால் இலங்கையில் முதற் தரமான சங்கமாகக் கணிக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது கடற்றொழிற் திணைக்களப் பணிப்பாளர் திரு.பீற்றர் அவர்கள் இங்கு சமூகம் கொடுத்து விருந்துபசாரத்தில் பங்கு பற்றிய பொழுது இங்கு வைத்தியத் தேவையை எடுத்துக் கூறிய பொழுது தான் கொழும்பு சென்று சுகாதாரப் பகுதியினருடன் கதைத்து ஒழுங்குபடுத்துவதாகக் கூறினார். சில மாதங்களின் பின் கைதடி வைத்தியசாலையிருந்து வைத்தியரும், உதவியாளரும் வார நாட்களில் இரண்டு நாட்கள் சமூகம் கொடுத்து வைத்திய சேவை ஆற்றினர். சிலரது வேண்டுகோளினால் ஏனைய கிராம மக்களும் பயன் பெறும் பொருட்டு ஆசிரியை திருமதி இராசம்மா வீட்டுக்கு மாற்றினர். பின்னர் மறவன்புலோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போது எந்த இடத்திலும் வைத்திய வசதி இல்லை. மின்சாரம் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள், பாடசாலை, கோயில்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றுக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றி கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது, அப்போதைய யாழ் மாவட்ட அமைச்சருக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றிக் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து எனது விடயம் கவனத்தில் எடுக்கப்படும் எனப் பதிற் கடிதம் கிடைத்தது. சாவகச்சேரிப் பிரதேச உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.சுந்தரம்பிள்ளை அவர்களுடன் மின்சாரத்தின் தேவை பற்றிக் கதைத்த பொழுது அப்பிரதேசம் நீண்ட வயல் வெளிப்பிரதேசம், அதிக பணம் தேவைப்படும், ஆசிய பவுண்டேசனுக்கு தெரியப்படுத்துகின்றேன், கிடைத்தால் உங்கள் அதிஷ்டம் எனக் கூறினார். சில மாதங்களின் பின் எமது பகுதிக்கு மின்சாரம் வழங்க அனுமதி கிடைத்ததாகவும், அது கோவிலாக்கண்டி பகுதிக்குப் போக இருப்பதாகவும் தகவல் அறிந்தோம். உடனடியாக மாவட்ட அமைச்சரது கடிதத்துடன் நான் தனஞ்செயன் என்பவருடன் அரசாங்க அதிபரைச் சந்தித்து கடிதத்தையும் காட்டி இது எமது பகுதிக்கே வரவேண்டியது என்றும், உதவி அரசாங்க அதிபருடன் கதைத்த விடயத்தையும் கூறினேன். அவர் உடனடியாக சுன்னாகத்தில் உள்ள மின்சாரசபை அதிகாரிகளைச் சந்திக்கச் சொன்னார். உடனே சுன்னாகம் சென்று மின்சாரசபை உயர் அதிகாரிகளைச் சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறினேன். அவர்களும் நாளை மின்சாரக் கம்பங்களை ஏற்றிக் கொண்டு வாகனம் வரும். கைதடிச் சந்தியிலிருந்து வாகனத்தை மறித்து அவர்களுக்கு இடத்தைக் காட்டும்படியும் கூறினார்கள். அடுத்த நாட் காலை கைதடிச் சந்தியிற் காத்திருந்த வேளை மின்சாரம் பொருத்துவதற்கான வாகனம் தூண்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அதனை மறித்து வாகனத்தில் ஏறி இடத்தைக் காட்டினேன். கடற்கரையிலிருந்து தூண்கள் பறிக்கப்பட்டு விரைவில் வேலைகளைத் தொடங்கினார்கள். முதலாவது தூண் தற்போது வயலோரம் அம்மன் கோயில் செல்லும் வீதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தி நாட்டப்பட்டது. திரு.க.ஆறுமுகம் இந்த இறைபணியைச் செய்தார். விரைவாக மின்சார வேலைகள் செய்து முடிக்கப் பெற்றது. மக்களும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ச்சி கொண்டாடினர். இதுவே மின்சாரம் கிடைத்த வரலாறு. இதனைத் தொடர்ந்து கிராம அபிவிருத்திக்குப் பல வேலைத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இவ்வாறன பணிகள் தொடங்கவும் நிறைவேறவும் ஏதே ஒரு மாபெரும் சக்தி துணை நின்றதை உணர்கின்றேன். வாழ்க்கை முறைகளும் வழிபாடுகளும் ஆரம்ப காலம் இம் மக்கள் கூட்டுறவு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்தனர். ஒரே காணிக்குள் பல வீடுகளைக் கட்டியும் ஒரே வீட்டில் சில குடும்பங்களுடனும் வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையும் உதவியும் புரிந்தும் உணவு வகைகளைப் பங்கிட்டுக் கொடுத்தும் சந்தோசமாக வாழ்ந்து வரலாயினர். பனை ஓலையாலும், கிடுகுகளாலும் வேயப் பெற்றதும், கிடுகுகளால் மறைப்புத் தட்டிகள் அமைத்தும், மண் தரையுமாக வீடுகள் அமைந்துள்ளன. வேலிகளை கிடுகளாலும், அலம்பல் எனும் தடிகளாலும், மட்டை வரிந்தும் மறைப்புச் செய்தனர். தற்போது மாற்றமடைந்து கல்வீடுகளாகவும் மதில் சுவர்களாகவும் மாறியுள்ளன. கிராமத்தில் நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளில் சகலரும் பங்கு பற்றியும் சில நாட்கள் அவ் வீட்டிலேயே தங்கி நின்று உதவி செய்தும் தமதன்பை வெளிப்படுத்தினர். ஆதிகாலம் தொட்டு இவர்களது வழிபாட்டுத் தலங்களாக பெரும்படை அம்மன் கோயில், மகாவிஷ்ணு ஆலயம், வைரவர், வீதிகளில் சிறு கட்டிடங்களில் அமைந்த அம்மன் ஆலயங்கள் என அமைந்துள்ளன. இரண்டாகப் பிரிந்து நின்றவர்கள் தற்போது சகல ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது மகிழ்ச்சியைத் தருவதோடு ஒற்றுமையையும் வளர்ப்பது ஆண்டவன் அருளாகும். இத்தோடு முன்பள்ளி பாடசாலை, அறநெறிப் பாடசாலையும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிராமத்தின் வளர்ச்சியில் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகாவிஷ்ணுக.தொ.கூசங்கம், ஸ்ரீ மகாவிஷ்ணு சனசமூக நிலையம், ஸ்ரீ மகாவிஷ்ணு விளையாட்டுக்கழகம் போன்றவை அரும் சேவையாற்றி வருகின்றன. இன்னும் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். இக்கிராமம் மேன்மேலும் சிறப்புறவும் அபிவிருத்தியடையவும் இக்கிராம மக்கள் உறுதுணையாக இருப்பதோடு குறிப்பாக அறிவுசால் பெரியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் அனைவரும் ஒத்துழைத்தும் நல்சேவையும் ஆற்றி கிராமத்தைச் செழிப்புறச் செய்வார்களாகுக. வே.இராமர் ஓய்வு நிலை அதிபர் https://raamu.vaathiyaar.blog/ Download PDF file
    12 points
  27. அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில் கஞ்சி வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில் கரிகரனைப் பார்க்க வந்த கூட்டம்.! கரிசனையில்லாத கூட்டம்.! *எங்கே போகிறது எம் சமுதாயம்? - இதிலே யாருக்கு இங்கு ஆதாயம்? *எப்போ ஆறியது இன அழிப்பின் காயங்கள்? இப்போ வெளுத்து விட்டது பலரின்… சாயங்கள்! *தமிழனைப் பார்த்தால் முப்பது ரூபா கூடக் கொடுக்காதவன், தமண்ணாவைப் பார்க்க முப்பதாயிரத்துடன் நிற்கிறான்….. *நட்புகளுக்குக் கூட கை கொடுக்காதவன், நடிகர்களுக்கு கை கொடுக்க மேடை ஏறுகிறான்! *ஆணும் பெண்ணும் என அத்தனை பேரும் கம்பத்தில்! அறுந்து விழுந்தால்…. அனைவரும் இருப்பார் நரகத்தில்..! *அப்படி இதிலென்ன மோகம்?... ஆருக்கு இதில் உண்டு லாபம்...? அங்கே, *கஞ்சப்பயல் எல்லாம், இலவசம் என்று வந்து,….. காசு கட்டியதுதான்….. கண்றாவியின் உச்சம்! *கஞ்சா அடித்தவனெல்லாம் களியாட்டம் என்று வந்து கால் கடுக்க நின்றதுதான் மிச்சம்.! “பனங்காட்டான்” என்றாலும் படித்தவன், பண்பாடு ஆனவன் என்ற பெயர் (எமக்கு) இருந்ததுண்டு! இன்று…. *படம் காட்டுபவர்கள் பின் ஓடிப் பெற்ற பெயர் “பட்டிக்காட்டான்!” -வெறும் “வெட்டிக்” காட்டான்.! *நடிப்பவர்களைச் சுமப்பது என்பது நமக்கெல்லாம் அவமானம்…! நாம் கேரளாவைப் பார்த்து அறிய வேண்டியது…. ஏராளம்…! *வெளிநாட்டுக் காசு இங்கு வெகுவாக இருக்குதென்று- பலருக்கு இங்கே கண்! .. - இதனால் பாழாய்ப் போகுது எமது மண்…! *இனியாவது, அனுப்புவதை நிறுத்துங்கள்! அலுப்பானவனை உழைக்க விடுங்கள்! *முடிவில், அடிதடியில் முடிந்திருக்கிறது அரிதரனின் நிகழ்ச்சி..! அவமானப் பட்டதில் அடமானம் போனது மகிழ்ச்சி?...... *கத்தலும், கதிரை எறிதலும் கலவரமும் என, காணொளிகளில் பல காட்சி! *நல்ல தலைவன் இல்லாததற்கு இவை எல்லாம் சாட்சி! *வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி வலிகள் சுமந்த மக்களுக்கு வாழ்வு தருவது வேலை வாய்ப்புகள்தான்! *இவர்கள் செய்யும் வேலையெல்லாம் வெறும் ஏய்ப்புக்கள்தான்.! *கல்வி எம்நாட்டில் முக்கியம்தான்.. மறுப்பவரும் இல்லை! வெறுப்பவரும் இல்லை! *கட்டிக் கொடுங்கள் கல்லூரிகளை! கண்டிப்பவர்கூட எவரும் இல்லை..! *அதைவிட, முதலில் கற்பவனைத் தயார்படுத்துங்கள்! காலித் தனத்தைக் கட்டுப்படுத்துங்கள்! *கஞ்சா அடிப்பவன் கற்றுத் தெளிவானா? கஞ்சிக்கு வழியிலாதவன் கல்லூரிக்கு வருவானா? *கடைசியில் கிடைத்த நீதி……., *மக்களுக்குச் செய்ய ஆயிரம் உண்டு! மனம் வைத்தால் திருத்த வழிகளும் உண்டு! *காயப்பட்டவனுக்கு நாட்டில், கலைநிகழ்ச்சிகள் தேவையில்லை! வீட்டில், உலை எரிந்தாலே போதும்…! February 9, 2024 - எனது நீண்டகால நண்பரும் அயலவரும் எழுதிய கவிதை. மிகவும் தெளிவாக உள்ளத்தை தொட்டும் எழுதியுள்ளார்.
    12 points
  28. காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினேன். ஆனைப்பந்தியூடாக, பலாலி வீதியை குறுக்கறுத்து பருத்தித்துறை வீதியில் ஏறினோம். பருத்தித்துறை வீதியில் நல்லூருக்கு அண்மையில் ஒரு அசைவக உணவகம். காலைச்சாப்பட்டிற்காக வண்டியை நிறுத்தி வாங்கிக்கொண்டோம். சுடச்சுட பட்டீஸும், ரோல்ஸும். அருமை. ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான். பயணம் முழுதற்கும் என்று யோசித்திருக்கலாம். மீண்டும் பலாலி வீதியில் வண்டி ஏறியது. தின்னைவேலி, பாமர்ஸ் ஸ்கூல், கோண்டாவில்ச் சந்தி, டிப்போவடி என்று நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த வீதிகளும் ஊர்களும் நண்பனது வாகனத்தில் பயணிக்கும்போது சடுதியாகத் தோன்றி மறைந்தது போலவும், வீதிகள் சுருங்கிவிட்டது போலவும் ஒர் உணர்வு. இந்தவிடங்கள் எல்லாவற்றிலும் நிறையவே நினைவுகள் கலந்திருக்கின்றன. பசுமரத்தாணி போல என்று சொல்வார்களே? அதுபோல. என்றும் பசுமையான நினைவுகள். எளிதில் எழுத்தில் வடித்துவிடமுடியாதவை. ஆதலால் தொடர்ந்து செல்கிறேன். சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவரது தகப்பனாரைப் பார்ப்பதே உரும்பிராய்ப் பயணத்தின் நோக்கம். ஊரில் பிரபல வர்த்தகரான அவர் அண்மைக்காலமாகச் சற்று சுகயீனமற்று இருந்தார். அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நண்பருக்கு இருந்து வருகின்றன‌. ஆகவே நான் யாழ்ப்பாணம் போகிறேன் என்று கேள்விப்பட்டதும், "ஒருக்கால்ப்போய் அப்பாவையும் பார்த்துவிட்டு வரமுடியுமா?" என்று கேட்டபோது ஆமென்றேன். டிப்போவடி தாண்டியதும் வரும் சிற்றொழுங்கையில் வீடு. விசாலமான இரண்டுமாடிக் கட்டடம். ஒழுங்கையினிரு மரங்கிலும் கமுக மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வீட்டைச் சுற்றி சோலைபோன்று மரங்கள் நடப்பட்டிருந்த அமைதியான அழகான வீடு. நண்பன் தான் வாகனத்திலேயெ இருப்பதாகக்கூறிவிட நான் உள்ளே சென்றேன். என்னை முதன்முதலாகப்பார்ப்பதால் அவர் அதிகம் பேசவில்லை. பலவீனமாகத் தெரிந்தார். சிறிதுநேரம் மட்டுமே அவரால் வெளியில் வந்து அமர்ந்துகொள்ள முடிந்தது. "தம்பி, எனக்கு இப்படி கனநேரம் இருக்கேலாது, நான் உள்ளுக்கை போகப்போகிறேன், இருந்து தேத்தண்ணி ஏதாச்சும் குடிச்சுப்போட்டு போம்" என்று சொன்னார். "இல்லை அங்கிள் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளுக்கைபோங்கோ, முடிந்தால் கொழும்பு போகுமுன் இன்னொருமுறை வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். உரும்பிராயிலிருந்து பலாலி வீதியூடாக கோண்டாவில்ச் சந்திநோக்கிச் சென்றோம். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இருபாலை, பின்னர் செம்மணிப் பகுதியூடாகச் சென்று கண்டிவீதியில் ஏறினோம். செம்மணி பற்றி 80 களிலும் 1995 இலும் நாம் கேள்விப்பாடிருக்கிறோம். புளொட் அமைப்பின் ஆரம்பகால உள்வீட்டுப்பிரச்சினைகளின்போதும் பின்னர் கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரர், உறவினர் ஆகியோரின் படுகொலைகளின் போதும் இப்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பரீட்சயமாகிப்போனது. செம்மணிச் சுடலையூடாக வரும்போது, "இதுதான் மச்சான் செம்மணிச் சுடலை, இங்கதான் கிருசாந்தியையும் மற்ற ஆக்களையும் கொண்டு புதைத்தவங்கள்" என்று நண்பன் கூறிக்கொண்டு வந்தான். கண்டிவீதிவழியாக பூநகரி நோக்கித் திரும்பி பயணிக்கத் தொடங்கியது நண்பனின் வாகனம். பூநகரி என்று கேள்விப்படும்போதெல்லாம் 1993 இல் புலிகள் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையும் நாகதேவந்துறை என்கிற பெயரும் என்னால் தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது. பூநகரியின் புதிய பாலத்தினூடு வரும்போது இருவகையான உணர்வுகள். முதலாவது தமிழ்மக்களின் பயணம் இப்பகுதியில் சற்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எம்மீதான இனக்கொலை புரிந்தவர்கள் கட்டியிருக்கும் இப்பாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது. மக்களுக்கு இப்போது எது தேவையானதோ, அது இருந்தால்ப் போதும் என்று மனதை ஆறுதல்ப்படுத்திக்கொண்டேன். மப்பும் மந்தாரமுமாக இருந்த அந்த முற்பகல் வேளையில், சனநடமாட்டம் இல்லாத அப்பாதையில் நண்பன் 130 - 140 வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்றான். சிறுவயதில் இருந்தே காரோட்டுவதில் நன்கு பரீட்சயமானவன். ஆகவே, அவனது திறமையில் முழு நம்பிக்கை வைத்து இருக்கையில் அட்டை போல ஒட்டிக்கொண்டேன். பாலம் கடந்து இருமருங்கிலும் அண்மையில் பெய்த வெள்ளத்தில் வழிந்தோடாது இன்னும் மிச்சமாய் இருக்கும் நீர் வீதியின் ஓரங்களில் தரித்து நிற்க, பனை வடலிகளும், பற்றைகளும் செழித்து வளர்ந்து நிற்க, நன் இதுவரை வந்திராத தாயகத்தின் ஒரு பகுதியூடாகச் சென்றுகொண்டிருந்தேன், நண்பனின் அனுக்கிரகத்தில். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த 7 வருடங்களில் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதிகளுக்கும் சென்றது கிடையாது. அதற்கான தேவையும் அப்போது இருந்ததில்லை. ஆகவே, தாயகத்தில் கிட்டத்தட்ட 90 வீதமான பகுதிகள் நான் வாழ்நாளில் பார்க்காதவை. எனவேதான் அக்கராயன் நோக்கிய பயணத்தில் எல்லாமே புதிய இடங்களாக எனக்குத் தெரிந்தது. நாவற்குழி - கேரதீவு - மன்னார் வீதியிலிருந்து விலகி கிளிநொச்சி நோக்கிப் பயணித்தோம். இந்த வீதியின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கை அழகு அபரிமிதமானது. சிட்னியில் சில இடங்கள் பார்க்கும்போது அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆகா ஓகோ என்று செயற்கையாகப் புகழ்ந்துந்துகொள்கிறோம் என்றுகூட நினைப்பதுண்டு. ஆனால், தாயகத்தில் இருக்குமிந்த அழகையெல்லாம் பார்க்க மறந்துவிட்டோமே என்று பெரிய ஏக்கம் வந்துபோனது. அத்துடன் நான் இங்கு இருக்கப்போவது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தபோது ஏக்கமும் சேர்ந்துகொண்டது. தாயகத்தில் வாழும் மக்கள்பேறுபெற்றவர்கள் என்று நான் நினைப்பதற்கு இந்த இயற்கை அழகும் இன்னொரு காரணம். ஒருவாறு கிளிநொச்சி நகரை அடைந்தோம். நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாவீரர் நாள். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலும், அவ்வீதியிலிருந்து கனகபுரம், அக்கராயன் நோக்கிச் செல்லும் வீதியிலும், வீதியின் மேலாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வளைவுத் தோரணம் "மாவீரர் நாள் 2023" என்று சொல்லிற்று. ஆக்கிரமிப்பாளனின் ஏதோவொரு படைத் தலைமையகம் முன்னால் இருக்க, மாவீரர் நாள் அனுஷ்ட்டிக்கப்படும் கொட்டகைகளும், வளைவுகளும், தோரணங்களும் அப்பகுதியெங்கிலும் சிவப்பு மஞ்சள் வர்ணத்தை அள்ளித் தெளித்திருந்தன‌. எமது விடுதலை வீரர்களை அழித்துவிட்டோம், எச்சங்களையும் தோண்டி எறிந்துவிட்டோம் என்று ஆக்கிரமிப்பாளன் கொக்கரித்து வந்தபோதும் மக்களின் மனங்களில் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதற்கு நான் அன்று பார்த்த காட்சிகள் சாட்சியம். மாவீரர் நாள் வளைவுகளூடாக நாம் பயணிக்கும்போது அவற்றை முடிந்தளவு படமாக்கிகொண்டேன். "மச்சான் , கவனம், பாத்தெடு. உன்ர போனை நோண்டினாங்கள் என்டால் பிரச்சினை வரலாம்" என்று நண்பன் கூறவும், "உவ்வளவு சனம் நிண்டு அவனுக்கு முன்னாலை உதைச் செய்யுது?" என்று கேட்டேன். "ஆருக்குத் தெரியும், பிரச்சினை குடுக்கிறதெண்டால் குடுப்பாங்களடா" என்று பதில் வந்தது. கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போகும் வீதியில்த்தான் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது. நாம் அவ்விடத்தை அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் ஆக்கிரமிப்பாளனினால் அழிக்கப்பட்டபோது மாவீரர் கல்லறைகள் தோண்டப்பட்டு, நடுகற்கள் உடைத்தெறியப்பட்டிருந்தன. ஆனால், தொடர்ந்து வந்த வருடங்களில் அப்பகுதி மக்கள் துயிலும் இல்லத்தைப் புணரமைத்து, நடுகற்களைச் சேகரித்து ஒரு மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அக்குவியலின் அடிவாரத்திலிருக்கும் இன்னும் முற்றாக உடையாத நடுகற்களில் மாவீரரது பெய‌ர்கள் உச்சரித்துக்கோன்டிருந்தன. இவற்றோடு அந்தத் துயிலும் இல்லம் எங்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கவென தென்னங்கன்றுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் வீதிகளும், வளைவுகள் மஞ்சள் சிவக்கு நிறக் கொடிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, தேசம் எழுச்சி பெற்று நின்ற‌து போன்ற உணர்வு. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் பெருத்த சனக்கூட்டம். நிகழ்வுள் ஆரம்பிக்கப்பட இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கவே மக்கள் பெருவாரியாக அப்பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்கள். மழை தூரத் தொடங்கியிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளமும் குறையவில்லை. அக்கூட்டத்தைப் படமெடுக்கவென ஒரு சிலர் வீதியின் எதிர்க்கரையில் நின்றுகொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. அவர்கள் எமது மக்களில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. எனது தம்பியின் பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.
    12 points
  29. கோரோனாவின் பின்னர் விலைவாசிகள் ஏறிக் கொண்டே இருந்தன. கூடவே பல பொருட்களுக்குத் தட்டுப்பாடுகளும் இருந்தன. அதிலும் முக்கியமாக கட்டிடப் பொருட்களை பெரும் விலைகள் கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இந்த நிலையால் பெரிய பெரிய நிறுவனங்களே ஆட்டம் காணத் தொடங்கிய போது, சின்னச் சின்ன நிறுவனங்கள் தள்ளாடி விழுந்து கொண்டிருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. டாடோவினால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைத்துக் கட்ட முடியாத நிலை உருவாகி இருந்தது. அவனுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் “வீட்டு வேலை எப்போது முடியும்?” என்று அவனை நெருக்க ஆரம்பித்தார்கள். தனியாக இருந்து தவிப்பதை விட வேறு சில கட்டிட ஒப்பந்தக்காரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால், இந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்து விடலாம் என்று டாடோ கணக்குப் போட்டுக் கொண்டான். பலரைத் தொடர்பு கொண்ட போது பேர்லின், பிராண்டன்பூர்க் நகரத்தில் இருந்து சேர்பியா நாட்டைச் சேர்ந்த முகமுது(28), டாடோவுடன் துணை ஒப்பந்தக்காரராக இணைய விருப்பம் தெரிவித்தான். இங்கேதான் தவறு நடக்கப் போகிறது. அது தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை டாடோ அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அப்பொழுதே தனது நிறுவனம் திவால் ஆகிப் போய்விட்டது என்று டாடோ அறிவித்திருந்தால் தப்பித்திருப்பான். கொரோனா காலம் முடிந்ததன் பின்னர் பல நிறுவனங்கள் தாங்கள் திவாலாகிவிட்டன என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அரச உதவிகளையும் பெற்றுக் கொண்டன. ஆனால் ஏனோ டாடோ அதைப் பற்றி அப்பொழுது சிந்திக்கவில்லை. புதிதாக இணைந்த துணை ஒப்பந்தக்காரன் முகமதுவின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் டாடோ ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பித்தான். புத்துணர்ச்சி வந்ததால் பழைய, புதிய ஒப்பந்தங்களுக்கான கட்டிட வேலைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் முடுக்கி விட்டான். வரும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிக்கத் தொடங்கினான். டாடோ கேட்கும் பொழுதெல்லாம் முகமது பணம் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி முகமது, தனது பங்குக்காக, டாடோவிடம் கொடுத்த பணம் இப்பொழுது இரு நூறு ஆயிரங்களைத் தாண்டி விட்டிருந்தது. ஆனால் இலாபத்தின் பங்கோ அல்லது கொடுத்த பணத்துக்கான கணக்கோ முகமதுவுக்குக் கிடைக்கவில்லை. பல தடவைகள் நச்சரித்தும் வெறும் பத்தாயிரம் யூரோக்கள் மட்டுமே டாடோவிடம் இருந்து முகமதுவுக்கு திரும்பக் கிடைத்திருந்தது. அதே நேரம் டாடோவிடம் முதலீடு செய்யவென கடனாகப் பெற்ற பணத்தை, திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் முகமதுவுக்கு வந்திருந்தது. முகமதுவுக்கு பணம் தந்தவன் குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவன். ஒரு மாபியா குழுவாக பேர்லீனில் செயற்பட்டுக் கொண்டிருப்பவன். தமிழ்ச்சினிமாவில் வரும் கந்து வட்டி வில்லன்களை இப்பொழுது கற்பனை செய்து பார்த்தீர்களானால் குர்தீஸ் இன மாபியாவை ஓரளவுக்கு நீங்கள் வடிவமைத்துக் கொள்வீர்கள். பணக் கொடுக்கல் வாங்கல்களினால், 18.03.2023 இல் பேர்லின் வீதியில் இரு குழுக்களுக்கிடையே ஒரு கை கலப்பு நடந்திருக்கிறது. அந்தக் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கியும் இருக்கிறார்கள். இந்தக் கைகலப்பில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் அடிபட்ட காயங்களுடனும் 26 மற்றும் 28 வயதுடைய இருவரை பொலிஸார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கைகலப்பில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்தக் கைகலப்பில் முகமதுவும் இருந்திருக்கிறான் என்பதை விசாரணையில் பொலிஸார் தெரிந்து கொண்டார்கள். முகமது ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரனாக இருந்து கொண்டு யேர்மன் நாட்டின் கராட்டி சம்பியனாகவும் இருந்தவன். ஆகவே அவனுக்கும் அடிதடி கைவந்திருந்தது. இன்னும் பணம் இருந்தால்தான் டாடோவினால் தனது கட்டிட வேலைகளைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகி விட்டிருந்தது. மேற்கொண்டு பணம் வரும் வழிகள் எதுவும் இனி இல்லை என்று டாடோவுக்குத் தெரியத் தொடங்கியது. ஒரு பக்கம் கொடுத்த பணத்தை முகமது திருப்பிக் கேட்டு அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். மறு பக்கம் “வீடு எப்போ முடியும்?” என ஒப்பந்தக்காரர்கள் நெருக்க ஆரம்பித்திருந்தார்கள். டாடோ பயணித்த இரு குதிரைகளும் ஒன்றாகத் தரையில் வீழ்ந்திருந்தன. வேறு வழியில்லை எனத் தீர்மானித்த டாடோ, தான் திவாலாகி விட்டதாக அரசாங்கத்துக்கு அறிவித்து விட்டான். விடயத்தை அறிந்து தொலைபேசியில் அழைத்து தான் கொடுத்த பணத்தை முகமது கேட்ட போது அரசாங்கத்துக்கு அறிவித்த ‘திவால்’ என்ற வார்த்தையையே டாடோ, முகமதுவுக்கும் சொன்னான். பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்ட மனவுளைச்சல், பணத்தைக் கடனாகத் தந்தவனிடம் இருந்து வந்த அச்சுறுத்தல் இரண்டுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட முகமது தூக்கம் இன்றித் தவித்தான். முகமதுவால் ஓடி ஒளிய முடியாது. காரணம் அவனது தாயும் சகோதரியும் பேர்லினில்தான் வசிக்கிறார்கள். தன்னால் அவர்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஒரு புறம் பயமுறுத்தியது. முகமது தனது வேலையாளான லூக்காவை தொலைபேசியில் அழைத்தான். “காரை எடுத்துக் கொண்டு வா ஸ்வேபிஸ்ஹாலுக்குப் போகவேணும்” என்றான். லூக்காவும் வேலை நிமித்தம் சேர்பியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவன்தான். லூக்கா, முதலாளி முகமதுவுக்கு மிகவும் பிடித்தவன், நம்பிக்கையானவன். சாலை விதிகளைச் சரியாகக் கடைப் பிடிக்காமல் தனது சாரதி பத்திரத்தை இழந்திருந்த முகமதுவுக்கு லூக்காதான் இப்பொழுது சாரதி. VW UP காரில் பேர்லினில் இருந்து இருவரும் அதிகாலை புறப்பட்டு மதியம் ஸ்வேபிஸ்ஹாலை வந்தடைந்தார்கள். டாடோ வீட்டில் ஒன்று கூடிப் பேசினார்கள். இனிமையாக, கோபமாக, அதட்டி என்று எந்தவகையில் கேட்டாலும், டாடோ திரும்பத் திரும்பச் சொன்னது ,”என்னிடம் பணம் இல்லை. நான் திவாலாகிப் போயிட்டன்” என்பதுதான். முகமது பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவன் பழகிய கராத்தே வெளியேவரத் தொடங்கியது. வன்முறைக்கும் டாடோ அசைந்து கொடுக்கவில்லை. டாடோவை இழுத்துக் கொண்டு வந்து காருக்குள் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். நடந்ததை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த டாடோவின் மனைவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் குறேஸியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவள். மொழி அவளுக்கு இன்னும் பரிட்சயம் ஆகவில்லை. திகைத்துப் போய் பல்கணியில் அவள் நின்றாலும் தனது கணவனை ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்ட வாகனத்தின் இலக்கத்தை எழுதி வைத்துக் கொண்டாள். காரின் வலது பக்க இருக்கையில் டாடோ இருந்தான். பின் இருக்கையில் முகமது இருந்தான். அவன் கையில் ஒரு சுத்தியல் இருந்தது. வாகனத்தில் பயணிக்கும் போது முன் இருக்கை இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தைக் காட்டி “இங்கே உன் வலது கையை வை” என்று டாடோவிடம் முகமது சொல்ல அவனும் அந்த இடத்தில் கையை வைத்தான். முகமதுவின் கையில் இருந்த சுத்தியல் வேகமாக டாடோவின் கையில் இறங்கியது. டாடோ அலற ஆரம்பித்தான். சிறிது நேரப் பயணத்துக்குப்பின், “டாடோ உன் இடது கையை வை” என முகமது திரும்பவும் கட்டளையிட்டான். முகமதுவின் கையில் இருக்கும் சுத்தியல் தன் தலையில் இறங்கினால்..? டாடோவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. காரை ஓட்டிக் கொண்டிருந்த லூக்காவும் இடையிடையே டாடோவுக்கு ஏதாவது செய்து கொண்டிருந்தான். தலைக்கு வர இருப்பது கையோடு போகட்டும் என்று டாடோ இடது கையை வைத்தான். மீண்டும் சுத்தியலால் முகமது டாடோவின் கையில் அடித்தான். பேர்லினுக்கான பயணம் ஆறு மணித்தியாலங்கள் நீடித்தது. அந்த ஆறு மணித்தியாலங்களும் தமக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் டாடோவை சுத்தியலாலும் கைகளாலும் முகமதுவும் லூக்காவும் தாக்கிக் கொண்டே பயணித்தார்கள். பயணத்தின் போது தனது இன்னுமொரு வேலையாளான எல்விஸ்ஸை முகமது அலைபேசியில் அழைத்து, சில வேலைகளைச் செய்யும்படி சொன்னான். எல்விஸ்ம் சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன் . அவனது அடுத்த தொலைபேசி டாடோவின் வீட்டுக்குப் போனது. வீட்டுத் தொலைபேசி அழைப்பை டாடோவின் மனைவியே எடுத்தாள். “உன்னுடைய புருசன் உனக்குத் திரும்பத் தேவை என்றால், முதற்கட்டமாக இருபத்தைந்தாயிரம் யூரோக்களை தருவதற்கு ஏற்பாடு செய்” முகமதுவின் குரல் அவளுக்கு எச்சரித்தது. “ஹலோ” சொல்லிவிட்டு புன்னகையுடன் டாடோவின் மனைவியைப் பார்த்த வங்கி ஊழியர் என்ன வேண்டும் என்ற பார்வையுடன் நின்றார். “பணம். இருபத்தையாயிரம்” “இருபத்தையாயிரம்?” கேட்டு விட்டு டாடோவின் மனைவியைப் பார்த்தார் வங்கி ஊழியர். “அவ்வளவு பணத் தேவையா? தனியாகவா வந்தீர்கள்?” கேட்டுக் கொண்டே பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்பித் தரும்படி அவளிடம் கொடுத்தார். யேர்மனியில் சில காலமாக தனியாக இருப்பவர்களை வயது போனவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், வங்கிகளில் அதிகமாகப் பணத்தை எடுக்கும் போது இப்படியான கேள்விகள் கேட்பது வழக்கம். இன்றும் வங்கி ஊழியர் டாடோவின் மனைவியிடம் அப்படித்தான் கேட்டார். அது பலனைத் தந்தது. பொலிஸாரின் கேள்விகளுக்கு டாடோவின் மனைவி பதில் சொல்ல, அவளுக்கு அப்பொழுது மொழி பிரச்சனையாக இருக்கவில்லை. அவளது இரண்டு மகள்மாரும் பாடசாலை முடித்து வீடு திரும்பி இருந்ததால், தாயின் பதிலை அவர்கள் மொழிபெயர்த்தார்கள். ஒரு குற்றம் நடந்த இடத்தில் அதைச் செய்தவன் பதட்டத்தில் ஏதாவது சிறிய தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்று சொல்வார்கள். முகமது தனது சொந்தக் காரில் வந்து பெரிய தடயத்தையே விட்டுச் சென்றிருந்தான். பொலிஸாருக்கு அதிக பிரச்சனைகள் இருக்கவில்லை. வாகன இலக்கத்தை வைத்தே ஆளை அடையாளம் கண்டு விட்டார்கள். ஸ்வேபிஸ்ஹால் பொலிஸாரிடம் இருந்து பேர்லின் பொலிஸாருக்கு தகவல்கள் போனாலும் அவர்கள் நிதானமாகவே நடவடிக்கை எடுத்தார்கள். முகமதுவின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே அவதானித்து இருந்ததால், சிறப்பு அதிரடிப்படையை வரவழைத்தார்கள்.
    12 points
  30. யூலியன் கப்பெலி (Julian Cappelli)அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். அவருடைய சிறுவர்களுக்கான இரண்டு புத்தகங்களுக்கு( The Missing cup cake, Block Party) நான் படங்களை வரைந்திருக்கிறேன். யூலியன் கப்பெலி ஒருதடவை ஒரு தமிழ்க் குடும்பத்தை சிட்னியில் சந்தித்த பொழுது, “பாயசம் வைக்க வேண்டும் பானையிலே அரிசி இல்லை…” என்று அங்கே சிறுவன் ஒருவன் பாடுவதைக் கேட்டு அந்தப் பாடல் பிடித்துப் போய் அதைப் பற்றி என்னிடம் கேட்டார். அந்தப் பாடலை இணையத்தில் தேடி எங்கோ ஒளிந்திருந்த பாடலைத் தேடி எடுத்து அதன் விளக்கத்தை அவரிடம் சொன்னேன். அதை வைத்து அவர் எழுதிய சிறுவர்களுக்கான பாடல் புத்தகம்தான் Oats and honey. நான் படம் வரைந்து அவரது மூன்றாவது புத்தகமாக Oats and honey கடந்த வருடம் மார்கழியில் வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் இறுதியில் “பாயசம் வைக்க வேண்டும் பானையிலே அரிசி இல்லை…” என்ற பாடலை தமிழிலேயே அவர் பதிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாயாசம் செய்யும் முறையையும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கிறார். புத்தகத்தின் முகப்பை யாழ் இணைய விம்பகத்தில் பதிவிட்ட கிருபனுக்கு எனது நன்றி.
    12 points
  31. நீரிழிவும் சிறு நீரகமும் "ஒரு வினைத்திறனான இயந்திரம் மிகவும் சிக்கனமானது. அதனால், அவசியமில்லாத எந்தவொரு பாகமும் ஒரு நல்ல இயந்திரத்தில் இருக்காது!" - HUGO திரைப்படத்தில் கதாநாயகன். பட உதவி நன்றியுடன்: Huppert’s Notes: Pathophysiology and Clinical Pearls for Internal Medicine; 2021. எங்கள் உடலும் ஒரு வினைத்திறனான இயந்திரத்திற்கு ஒப்பிடக் கூடிய ஒன்று. கூர்ப்பின் எச்சங்களாக குடல்வால் போன்ற சில அமைப்புகள் முக்கிய தொழில்களின்றி எங்கள் மனித உடலில் தங்கி விட்டாலும், அனேகமாக எல்லா உறுப்புகளும் எங்கள் வாழ்க்கைக்குத் தேவை. இவ்வுறுப்புகளில், உயிர் உடலில் தங்கி நிற்க அவசியமான ஐந்து உறுப்புகளை முக்கியமான உறுப்புகள் (vital organs) என்று சொல்லலாம். இதயம், மூளை, சுவாசப்பை, சிறு நீரகம், கல்லீரல் என்பனவே அந்த 5 முக்கிய உறுப்புகள். எனவே, இந்த உறுப்புகளை நேரடியாக , அல்லது மறைமுகமாகப் பாதிக்கும் நோய்கள் அனேகமாக உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவை. தற்போது, உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நீரிழிவு இந்த உறுப்புகளில் மூன்றை நேரடியாகப் பாதிக்கும் தன்மை கொண்டதால் பிரதானமான மரணம் விளைவிக்கும் தொற்றா நோயாக விளங்குகின்றது. நீரிழிவினால் கல்லீரல், சிறுநீரகம், இதயம் என்பன பாதிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் நீரிழிவிற்கும் சிறுநீரகத்திற்குமிடையிலான தொடர்பைப் பார்க்கலாம். சிறுநீரகத்தின் முதன்மைத் தொழில் கழிவுகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் முதன்மையான தொழில். உடலினுள் உருவாகும் கழிவுகளும், நாம் உள்ளெடுக்கும் உணவுப் பொருட்களை, மருந்துகளை உடல் உடைப்பதால் வரும் கழிவுகளும் இப்படி அகற்றப்படும். இப்படி சிறுநீரகம் அகற்றும் கழிவுகளை இரத்தத்தில் அளப்பதன் மூலம் சிறுநீரகத்தின் கழிவகற்றும் செயல்பாட்டை ஓரளவு மதிப்பிட முடியும். உதாரணமாக கிரியற்றினைன் (creatinine) எனும் கழிவுப் பொருளை இரத்தத்தில் அளந்து சிறுநீரக நலனை மதிப்பிடுவர். ஆனால், இந்தக் கழிவகற்றல் மூலம், உடலின் மேலும் பல தொழிற்பாடுகளுக்கும் சிறுநீரகம் பங்களிப்புச் செய்கிறது. உதாரணமாக, சிறுநீரகம் உப்பையும், நீரையும் அகற்றுவதால் எங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்கும் முக்கிய வேலையை மறைமுகமாகச் செய்கிறது. மேலும், சிறுநீரகத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி இரத்த உற்பத்திக்கு அவசியமான ஒரு ஹோமோனையும் சுரக்கிறது. எனவே, நீண்டகால சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப் பட்டோரில் இரத்தச் சோகையும் ஏற்படக் கூடும். நீரிழிவில் சிறுநீரகம் பாதிக்கப் படுவது ஏன்? நாள்பட்ட சிறுநீரக வியாதி (Chronic Kidney Disease – CKD) என்று அழைக்கப்படும் சிறுநீரக செயலிழப்பிற்கு நீரிழிவு பிரதான காரணியாக இருக்கின்றது. Diabetic nephropathy என்று அழைக்கப் படும் இந்த நாள்பட்ட சிறுநீரக வியாதி அமெரிக்காவைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கு நீரிழிவு நோயாளர்களில் ஏற்படுகிறது. உலக ரீதியிலும், ஏனைய நாடுகளிலும் கூட இதே விகிதாசாரத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் இருக்கக் கூடும். எங்கள் ஒவ்வொரு சிறுநீரகத்தினுள்ளும் சிறுநீரகத்திகள் (nephrons) என அழைக்கப் படும் நுண் அமைப்புகள் வடிகட்டிகளாக வேலை செய்த படி இருக்கின்றன. இந்த வடிகட்டிகள் 30 மணித்தியாலங்களில், எங்கள் உடலின் 5 லீற்றர் வரையான இரத்தத்தை முழுமையாக சுத்திகரிக்கும் அயராத பணியைச் செய்கின்றன. நீரிழிவின் போது ஏற்படும் ஒரு முக்கியமான மாற்றம் மேலதிகமாக எங்கள் இரத்தத்தில் சுற்றித் திரியும் குழூக்கோஸ் இந்த சிறுநீரகத்திகளால் வடிக்கப் பட்டு, அதில் ஒரு பகுதி சிறுநீரோடு வெளியேற்றப் படுவது. இதைத் தான் நாம் glucosuria என்று அழைக்கிறோம். நீரிழிவு நோயாளர்களில் இது நீண்டகாலப் போக்கில் நிகழும் போது, சிறுநீரகத்திகள் நிரந்தரமாகப் பாதிப்படைந்து அவற்றின் வடிகட்டும் தொழிலும் பாதிக்கப் படுகிறது. சேதமடைந்த சிறுநீரகத்திகளூடாக, சாதாரணமாக வடிக்கப் படாத புரதங்களும் கூட வெளியேறுவதால், உடல் மேலும் புரத இழப்பையும், பின் விளைவுகளையும் எதிர் கொள்ள வேண்டியேற்படுகிறது. குழூக்கோஸ் என்பது பக்ரீரியாக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு போசணைப் பொருள். இதனால், அதிகரித்த குழூக்கோஸ் சிறுநீரில் சேரும் போது, பக்ரீரியாத் தொற்றுக்கள் ஏற்படுவதாலும் சிறுநீரகம் பாதிக்கப் படலாம். இன்னொரு பொறிமுறை, நீரிழிவு நோயாளர்களில் ஏற்படக் கூடிய உயர் குருதியமுக்கம் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிக்கப் பட்டு, அதனால் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம். எனவே, இந்த மூன்று முக்கிய பொறிமுறைகளையும் கட்டுப் படுத்துவது மூலம், நீரிழிவு நோயாளர்கள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பேண முடியும். பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு நோயோடு வாழும் நோயாளிகளில் தான் இந்த நாள்பட்ட சிறு நீரக நோய் நிலை ஏற்படுகிறது. ஆனாலும், மூன்றில் ஒரு நீரிழிவு நோயாளியில் தான் இந்த நிலை ஏற்படுகிறது. எனவே இதைத் தடுக்கும் இயற்கையான பாதுகாப்பு சிலரில் இருக்கக் கூடும். இது ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்போரில் கூட வாழ்க்கை முறை மாற்றங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நாள்பட்ட சிறுநீரக நோயேற்படும் ஆபத்தை நீக்க அல்லது குறைக்க உதவுகின்றன. தடுப்பு முறைகள் எவை? நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு, இரத்த குழூக்கோஸ் எகிறுவதும், அதனால் சிறுநீரில் குழூக்கோஸ் வெளியேறுவதும் முக்கிய காரணிகள் என மேலே பார்த்தோம். எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்த குழூக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனை ஒழுங்காக நீரிழிவு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்வதாலும், உணவு முறையில் கட்டுப்பாடு கொள்வதாலும், உடற்பயிற்சிகளாலும் தான் அடைய முடியும். உலகின் 90% ஆன நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் இன்சுலின் சுரந்தாலும் அது வேலை செய்யாத "இரண்டாம் வகை" நீரிழிவு (T2D) தான் வருகிறது. இவர்களில் அதிகம் பரிந்துரைக்கப் படும் மருந்து மெற்fபோமின் (Metformin) எனப்படும் தீவிர பக்க விளைவுகள் குறைவான மருந்தாகும். ஆனால், உடலில் தன் வேலையை முடித்த பின்னர், மெற்fபோமின் நேரடியாக சிறுநீரகத்தினால் அகற்றப் படுவதால், நாள் பட்ட சிறுநீரக நோயுடைய நோயாளிகளில் மெற்fபோமின் பயன்பாடு பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. சில ஆய்வுகளில், மெற்fபோமின் நாள் பட்ட சிறுநீரக நோயாளிகளில் மரணத்தைக் குறைத்ததாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், மெற்fபோமின் பாவனையினால் நாள் பட்ட சிறுநீரக நோய் உருவாவதாக நிறுவும் ஆய்வுத் தகவல்கள் இல்லை. எனவே, தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, மோசமான நாள்பட்ட சிறுநீரக நோயுடையோரில் மட்டும் மெற்fபோமின் பாவனையைத் தவிர்க்கும் படி ஆலோசனை வழங்கப் படுகிறது. ஏனைய சிறுநீரகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவை? 35 - 40 வயதுக்கு மேல் அனைவரும் வருடாந்தம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரத்த, சிறுநீர்ப்பரிசோதனைகள் இந்த வருடாந்த சோதனையில் உள்ளடங்கியிருக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், சிறு நீரக செயல்பாட்டை மதிப்பிடும் சில பரிசோதனைகளை வருடாந்தம் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் கால இடைவெளியில் செய்து கொள்வது அவசியம். அனேகமாக இந்தப் பரிசோதனைகளில் இரத்த கிரியேற்றினைன் மட்டம், இரத்த யூரியா நைட்ரஜன் (Blood Urea Nitrogen – BUN) மட்டம், Glomerular Filtration Rate (GFR) எனப்படும் சிறுநீரக வடிகட்டல் வேகம் ஆகிய மூன்று அளவீடுகளை மருத்துவர் கவனித்து உங்கள் சிறுநீரக நலனை மதிப்பீடு செய்வார். மேலதிகமாக, சிறுநீரில் வெளியேறும் அல்புமின் புரதத்தின் அளவையும் பரிசோதிப்பார்கள் - இது நீரிழிவு நோயாளிகளில் முக்கியமானது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவர் ஆலோசனைகளை வழங்கினால், அவற்றைக் கவனமாகப் பின்பற்றுவது உசிதம். நீரிழிவு நோயாளிகளில் மட்டுமன்றி, எல்லோரிலும் உப்புக் குறைந்த உணவுப் பழக்கம் சிறுநீரகத்தின் நண்பன். உப்புக் குறைந்த உணவினால் இரத்த அழுத்தம் குறையும், இதனால் சிறு நீரகம் மட்டுமன்றி, இதயமும் நன்மை பெறும். மூளை இரத்த அடைப்புக்கான (stroke) ஆபத்தும் குறையும். எனவே, சுருக்கமாக, நீரிழிவு நோயாளிகள்: 1. இரத்த குழூக்கோசைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும். 2. கிரமமாக சிறுநீரக நலனை மருத்துவர் மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 3. உப்பைக் குறைத்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். 4. உயர் குருதி அமுக்கம் இருந்தால் அதைக் குறைக்கும் உணவு, மருந்து வழியான வழிகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வழிகளால் சிறுநீரக நலனைச் சிறப்பாக நீண்டகாலத்திற்குப் பேண முடியும். - ஜஸ்ரின். மூலங்களும், மேலதிக தகவல்களும்: 1. அமெரிக்க உணவு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு: மெற்fபோமின் பற்றிய 2022 குறிப்பு. https://www.fda.gov/drugs/fda-drug-safety-podcasts/fda-drug-safety-podcast-fda-revises-warnings-regarding-use-diabetes-medicine-metformin-certain 2. அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி மையம் (NIH). நாள்பட்ட சிறுநீரக நோய் பற்றிய குறிப்பு. https://www.niddk.nih.gov/health-information/kidney-disease/chronic-kidney-disease-ckd/causes 3. அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி மையம் (NIH). மெற்fபோமின் பாவனை, சிறுநீரக நலன் பற்றிய விளக்கங்கள். https://www.niddk.nih.gov/health-information/professionals/diabetes-discoveries-practice/metformin-and-chronic-kidney-disease 4. சிறுநீரக அமைப்புத் தொழில்பாடுகள் பற்றிய குறுங்காணொளி: நாள்பட்ட சிறு நீரக நோயோடு தொடர்பில்லா விட்டாலும், விளக்கத்திற்காகப் பார்க்கக் கூடியது. https://www.nature.com/articles/d41586-023-00805-8
    12 points
  32. உள்ளக விசாரணையில் இருக்கும் போது பெயரை வெளியிட்டது தவறு. ஊடக தராதரம் எவ்வளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு தவறு இது. மறுபக்கம், இவர் சொல்லும் உள்ளக முரண்பாடுகள் உண்மையானால், நான் முன்னரே குறிப்பிட்டது போல, வெளி மாவட்ட/மாகாண மருத்துவமனையொன்றில் இருந்து மருத்துவர்களைக் கொண்டு வந்து விசாரணை செய்வதே நல்லது. இனி மருத்துவ அவதானிப்புகள் சில: 1. Staphylococcal Scalded Skin Syndrome என்பது 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படும் ஒரு தோல் தொற்று. இது 2 வயதுக்கு மேல் வருவது மிக அரிது. அப்படியே வந்தாலும் கையில் அழுகல் (gangrene) ஏற்படும் அளவுக்கு தோல் நோய் போகாது -அதுவும் இரண்டு வலுவான அன்ரிபையோரிக்குகள் பாவனையில் இருக்கும் போது சாத்தியம் குறைவு. 2. தனியார் மருத்துவ மனையில் ஆரம்பித்த வாங்கோமைசின் (vancomycine) என்ற அன்ரிபையோரிக், ஏன் ஆரம்பிக்கப் பட்டதென யாராவது கேள்வி கேட்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். ஏனெனில், பெனிசிலின் போன்ற அன்ரிபையோரிக்கிற்கு துலங்கல் காட்டாத MRSA இற்கு எதிராகத் தான் வாங்கோமைசினைப் பாவிக்க வேண்டும். எதற்கு வாங்கோமைசினும், அதே நேரம் பெனிசிலின் குடும்பத்தைச் சேர்ந்த Augmetin இனையும் கலந்து பாவித்தார்கள் என்பதை தனியார் மருத்துவமனை விளக்க வேண்டும், அனேகமாக மருத்துவ விளக்கம் இதற்கு இருக்காது. இது ஏன் முக்கியம்👇#3? 3. வாங்கோமைசின் பிரச்சினைக்குரிய பக்க விளைவுகள் கொண்ட ஒரு அன்ரிபையோரிக். அதனால் தான் வளர்ந்தோரில் கூட அது கடைசி அஸ்திரம். உடலில் நோயெதிர்ப்புக் குறைந்த சிலரில், வாங்கோமைசினால், Stevens-Johnson Syndrome என்ற ஒரு தோல் அழிவு (Toxic Epidermal Necrolysis) நிலை ஏற்படும். இதுவும் மேலே பக்ரீரியா தொற்றினால் வந்த Staphylococcal Scalded Skin Syndrome போலத் தான் வெளிப்பார்வைக்குத் தெரியும். ஆனால், இது ஆபத்துக் கூடிய ஒரு நிலை. அத்தோடு, வாங்கோமைசின் சிறுநீரகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் (கை, கால் வீக்கம் இதன் அறிகுறியாக இருக்கலாம்!). எனவே, சகட்டு மேனிக்கு எல்லா அன்ரிபையோரிக்குகளையும் கலந்து ஒரு 8 வயதுப் பிள்ளைக்குக் கொடுத்தது ஏன் என அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களையும் விசாரிக்க வேண்டியது அவசியமெனக் கருதுகிறேன்.
    12 points
  33. அண்மைக் காலமாக போதைப்பொருள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வருகின்றது. போதைப் பொருட்களுடன் யாராவது பிடிபட்டால் அல்லது அதன் பாவனையால் பாதிக்கப்பட்டால் மட்டுமே செய்தி ஊடகங்களில் வரும் என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர் யாழ் சென்றிருந்தபோது காணக் கூடியதாக இருந்தது. மற்றும்படி யாழ் ஊடகங்கள் பெரிதாக இது பற்றி எழுதுவதாகத் தெரியவில்லை. ஊடகங்களில் வரும் செய்தியை வாசித்துவிட்டு இது சிங்கள அரசாங்கத்தினதும் இராணுவத்தினரினதும் திட்டமிட்ட தமிழ் சமுதாய அழிப்பு என்று கூறிவிட்டுக் கடந்து போனோம். இக் கருத்தில் முற்றுமுழுதான உண்மை இல்லை. போதைப் பாவனை தமிழர் பகுதியெங்கும் பரவிக் கொண்டே செல்கிறது. பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் பாவனையைப் பழக்குவது, விற்பனை செய்வது யார் போன்ற தகவல்கள் பலருக்கும் தெரியும். பல ஊர்களில் இதற்குப் பொறுப்பாளர்கள் அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள் என கட்டமைப்புகளும் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது விதத்தில் ஒரு இளைஞர் குழு மறைமுகமாக இயங்கும். அல்லது மிகப் பெரிய குழு ஒன்றின் கிளை இருக்கும். இளைஞர்களுக்கு வேண்டியது ஒரு ‘கெத்து’. ஏதாவது ஒரு விததில் தன் திறமையை வெளிப்படுத்த முடியாத சில இளைஞர்களுக்கு அது இக் குழுக்களில் இணைவதால் கிடைக்கிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நேரடியாகக் கைநீட்டுவது ஆதாரமில்லாத விதத்தில் அவதூறு செய்வதாக ஆகலாம் என்பதால் இதற்குமேல் வெளிப்படையாக இது பற்றி விவாதிக்க முடியாது. இதை எழுதுவதன் நோக்கம் குற்றவாளிகளைத் தேடித் தண்டிக்க வேண்டும் என்பதல்ல. அது முடியாத காரியம். ஆகவே இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்று விவாதிக்கவே. சிவில் அமைப்புகள் அல்லது பொதுநல நிறுவனங்கள் மூலமாக இப் பிரச்சனையை அணுகலாம். அவர்கள் மூலமாக விளிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஆனால் இவற்றைச் செய்ய முன்வரக்கூடிய பலமான அமைப்புகள் உள்ளனவா தெரியவில்லை. இது பற்றித் தேடியபோது அருண் சித்தார்த்தின் சிவில் அமைப்புத்தான் கூகிளில் முன்னே வருகிறது. நான் நினைக்கிறேன், பொழுதுபோக்கு, கலை, விளையாட்டு போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களின் கவனத்தைத் திருப்பலாம் என்று. உங்கள் கருத்து என்ன ? (திரியை நாற்சந்தியில் ஆரம்பிக்கிறேன். வேறு பகுதிக்கு மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும்)
    12 points
  34. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2023 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 101 2 ஏராளன் 98 3 பிரபா 95 4 தமிழ் சிறி 90 5 எப்போதும் தமிழன் 90 6 கல்யாணி 89 7 நுணாவிலான் 86 8 வாதவூரான் 85 9 அஹஸ்தியன் 84 10 நீர்வேலியான் 83 11 சுவைப்பிரியன் 82 12 பையன்26 80 13 புலவர் 80 14 ஈழப்பிரியன் 75 15 முதல்வன் 74 16 கிருபன் 73 17 நில்மினி 72 18 நந்தன் 72 19 வாத்தியார் 70 20 நிலாமதி 70 21 கோஷான் சே 67 22 கறுப்பி 64 23 குமாரசாமி 64 தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @suvy ஐயாவுக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் பல நாட்களாக இரண்டாவது நிலையில் நிற்கும் @ஏராளன் க்கும் வாழ்த்துக்கள்! தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che ஐ மேலே தள்ளிவிட்டு அவரிடத்தில் சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்! அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
    12 points
  35. சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே 99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள்.
    12 points
  36. அந்தக் கண்கள் *************************** அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன. எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது, நாசிகளில் மரணத்தின் வாசனை. . ************************* எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு. மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக. மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும். பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது. ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன். அன்றும் அப்படித்தான் டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது. இரவு 8 மணி. சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது. பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது. தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார். ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். அந்த முட்டைகளின் ருசி தனி ருசி! மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்.... தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர். நான் தொடர்து காரை செலுத்துகின்றேன். திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார். 85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன். என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன. அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார். எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன... அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன.. அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன.. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன. என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன... அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம். ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது. என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன. அழ வேண்டும் போலவும் இருந்தது. நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது. சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. "மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார். "இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன். அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார். என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது. பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன். அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார் மீண்டும் அவ் வழியால் திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன். அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன. நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன். "பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார். "இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள். நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன். அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர். அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார். என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம். யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார். இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும் இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!
    12 points
  37. இரண்டு என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான். அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது. DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன். பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.
    12 points
  38. தம்பி நீ கனடாவோ? வருடங்கள் உருண்டு விட்டன வயது போகுமுன் வருவேன் ஊருக்கென்று வாக்குக் கொடுத்தேன் வந்து இறங்கியும் விட்டேன்… வடிவான ஊராகிவிட்டது நம்மூரு.. வலம் இடம் தெரியவில்லை… வடிவான வீடும் ஆட்களும் வசதியாக வாழும் நம் சனத்தையும் கண்டு வாய் நிறைந்த சிரிப்புடன் வணக்கமும் சொன்னேன்.. வந்தார் கந்தையா அண்ணர் வயதும் வட்டுக்கை போயிட்டுது வந்தவுடன் கேட்ட கேள்விதான் வயித்தை கலக்கிப் போட்டுது விசிட்டர் விசாவில் வந்த பேரப் பொடியன் கனடாவில் நிக்கிறான் கண்டனியோ… போத்தல் தண்ணி குடித்து தவண்டை அடித்த வாய்க்கு… கோயில் கிணத்தில் தண்ணி குடிக்கப் போக…. கைமண்டையில் தண்ணி ஊத்திய ஆச்சி கேட்டா.. ஆறுமுகத்தின்ரை மருமோன் விசிட்டர் விசாவிலை வந்தவர்…. வேலை கீலை ..செய்யிறாரோ…. பொட்டுக்கடை பொன்னையர் வீட்டடியால் போகையில் பொன்னற்றை…பூட்டப் பொடியனாம் தான் அண்ணை ..அண்ணை… அண்ணன் விசிட்டர் விசாவில் வந்தவர் வன்கூவரில்தான் ..இருக்கிறார்… அவர் எப்படி அண்ணை இருக்கிறார்.. பந்தடி வெட்டைக்குப் போகவும் பயமாக்கிடக்கு.. படிச்ச பள்ளிக்குடப் பக்கம் போகவும் கூச்சமாக் கிடக்கு பள்ளித் தோழரையும் காணப் போகவும் பயமாக்கிடக்கு.. பலகால ஆசை….சொந்தங்கள் பந்தங்கள் ….காணுகின்ற ஆசை கனடா விசிட்டர் விசாவால். பாதியில் முடிந்ததுவே… ஏனென்று…கேட்பியள் முப்பது வருசம் முந்தி வந்த என்னிடம்.. மூத்தவனின் பேரனைத்தெரியுமோ மருமோனைத் தெரியுமோ வன்கூவர் அண்ணனைத் தெரியுமோ என்றால் நான் என்ன சொல்லமுடியும்… தம்பி நீ கனடாவோ என்ற கேள்வி வருமுன்… பாதியில் பயணத்தை முடித்துவிட்டேன்..
    11 points
  39. ஆதி அறிவு ------------------- இப்பொழுது வரப்போகும் புகைவண்டி மூன்றாவது தடத்தில் வந்து கொண்டிருக்கின்றது. முதலாவது மேடையில் நிற்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பக்கம் போகவும் என்ற அறிவிப்பு தலைக்கு மேலேயிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கு முதலாவது தடம், இரண்டாவது தடம், மூன்றாவது தடம், முழு நிலையத்திற்கும் சேர்த்து நான் ஒருவனே முதலாவது மேடையில் நின்று கொண்டிருந்தேன். மனிதர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல், இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு இயந்திரம் செய்யும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். சுற்றிவர மெல்லிய இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென ஒருவர் முன்னால் தோன்றி, எனக்கு ஏதாவது சில்லறைகள் கொடு என்று கேட்கக்கூடும். கேட்பதைக் கொடுத்தால், தோன்றியது போலவே மறைந்தும் விடுவார்கள். ஆனால் ஒரு டாலர் கூட கையிலோ, பையிலோ இல்லை. கடன் மட்டைகள், காசு மட்டைகள் செல்லாத இடம் இது. வந்து கேட்பவர் என் வங்குரோத்து நிலை கண்டு கோபப்படவும் கூடும். இந்த நிலையில் 'நோ இங்கிலீஸ்' என்று சொல்வது தான் உசிதம். முழுதும் துறந்து தெருக்களில் வாழும் இந்த மனிதர்களிடம் மொழிப்பற்று, தீவிரம் இருக்க சாத்தியமில்லை. இங்கு எவரும் எவரையும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக அடித்ததாகவோ அல்லது சுட்டதாகவோ நான் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. மூன்றாம் மேடைக்குப் போக முன், முதலாம் மேடையின் பின்புறம் பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னும் ஒரு அறிவிப்பு மேலிருந்து என் மீது இறங்கியது. தனி ஒரு மனிதனுக்காக அரசு இயந்திரம் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. அறிவிக்கும் குரல் இருமி, கம்மி, புகைவண்டி நிற்கப் போகும் அடுத்த அடுத்த தரிப்பிடங்களைச் சொன்னது. உலகில் செயற்கை நுண்ணறிவு இன்னமும் இருமத் தொடங்கவில்லை, ஆதலால் இந்த இடத்தில் இன்னும் ஒரு சாதாரண மனிதனும் என்னுடன் இருக்கின்றார் என்ற அந்த நினைப்பே ஆறுதலாக இருந்தது. இன்னும் ஒருவர் அவசரமாக வந்தார். வீடு வேண்டாம் என்று வீதியில் வாழ்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் இலகு. இவர்கள் ஒரு வீட்டுச் சாமான்களை தங்களுடன் எப்போதும் சுமந்து கொண்டு திரிவார்கள். சுமக்கும் தள்ளு வண்டி கூட அருகில் இருக்கும் பெரிய கடைகளில் ஒன்றினுடையதாக இருக்கும். வந்தவர் கடகடவென்று என்னைத் தாண்டி, உயர்த்தியில் ஏறி, அவசர அவசரமாக உயர்த்தியின் கதவை மூடி, மேம்பாலத்தில் ஓடி நடந்து, மறுபக்க உயர்த்தியால் இறங்கி, மூன்றாவது மேடையில் உயர்த்தியின் பின்பக்கம் ஒளித்து நின்றார். புகைப்பதைத் தவிர, செயல்கள் என்று இவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. பல புகைத்தல்கள் இங்கே சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டும் உள்ளது. ஒளித்து நின்று புகைக்க வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு இல்லை. இலங்கையில் 28 கோடி ரூபாய்கள் பெறுமதியான ஆணிகளை ஒரு பாலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்றுள்ளனர் என்ற சமீபத்திய செய்தி நினைவில் மின்னி மறைந்தது. பார்த்துக் கொண்டே இருக்க, நீளம் பாய்தலுக்கு ஓடி வருபவர் போன்று ஒரு பெண்மணி ஓடி வந்தார். நின்றார். 'ஜேக்கப், உன்னை எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். (தடை செய்யப்பட்ட வார்த்தை). (தடை செய்யப்பட்ட வார்த்தை). நீ அந்த உயர்த்தியின் பின்னால் ஒளிந்து நிற்கின்றாய். (இரண்டு தடை செய்யப்பட்ட வசனங்கள்). ஜேக்கப் வெளியில் வரவேயில்லை. புகைவண்டி வந்து கொண்டிருந்தது. ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை. வாழ்க்கை வீடோ வீதியோ, ஜேக்கப்பிற்கும் இது என்றும் விளங்கப் போவதில்லை.
    11 points
  40. மயிலிறகு........ 03. அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன், வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம் ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........! மயில் ஆடும்....... 🦚
    11 points
  41. திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ) பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை ....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு... இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்திற்காக வாசுகி மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வழமை போல லெட்டாக வரவேண்டாம்" என சிணுங்கலுடன் சொன்னாள். திரு வேலை பளுகாரணமாக "ஒம் " என சொல்லி தனது குரளை எப்படி எழுதி முடிப்பது என ஆராச்சியில் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருந்தார் .இரு வரிகளில் ஏழு சொற்களில் எல்லாவற்றையும் அழகிய இலக்கிய இலக்கண தமிழில் எழுதுவது இலகுவான காரியமல்ல என்பது நீங்கள் அறிந்ததே.....தனது நிழலை பார்த்தார், மறைந்து விட்டது வீடு செல்லும் நேரம் என நினைத்து எழுதி கொண்டிருந்த ஒலைச்சுவடிகளையும் எழுத்தாணியையும் தூக்கி கொண்டு வீடு சென்றார். வழமையாக வாசலில் வந்து வரவேற்கும் வாசுகியோ வந்து வரவேற்கவில்லை அதை திரு பெரிதாக கண்டு கொள்ளவில்லை ,வாசுகியோ அவரது கையில் இருப்பது திருநெல்வேலி அல்வா ஆகா இருக்குமோ என ஆசையுடன் எட்டி பார்த்தாள் ,புரிந்து கொண்டாள் கிழவன் வழமை போல ஒலைகளை சுருட்டி கொண்டு வந்திருக்கிறது ..இந்த ஒலைகளினால் என்ன பயன் என மனதில நினைத்தவாறு கையில் இருந்த அகப்பையை தரையில் வீசினாள்.. அன்று ஐயன் திரு 1108 ஆவது குரளை எழுதி கொண்டிருந்தார் . அதுதான் "வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படா அ....." வீடு போகும் வரை இதை எப்படி முடிப்பது என தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்து வீடு சென்றும் எழுத முடியாமல் தவித்த வண்ணமிருக்கையில் திரு ,வாசுகியின் அகப்பை சத்ததை கேட்டு ஒடிச் சென்று முயக்கினான் (கட்டி தழுவினார்) ஏற்கனவே திரு மீது மிகவும் கடுப்புடன் இருந்த வாசுகி தள்ளி போங்கள் என கூறி விலகிச்சென்றாள். உடனே வள்ளுவனுக்கு தனது 1108 ஆவது குரலின் இறுதிச் சொல் உதிக்கவே ஒடிச்சென்று "முயக்கு" என அந்த குரளை எழுதி முடித்து விட்டு மீண்டும் வாசுகியிடம் வந்தார். வாசுகியோ அவரை பார்க்காமல் வேறு திசையை பார்த்தவாறு இருந்தாள்.திருவுக்கு புரிந்து விட்டது மிகவும் ஆத்திரத்தில் இருக்கின்றாள் ,இருந்தாலும் என் வரவுக்காகவும் என்னை மகிழ்ச்சி படுத்தவும் மல்லிகை பூ அழங்காரத்துடன் இன்னும் இருக்கின்றாள் ....திரு ஏற்கனவே எழுதிய 1108 குரளினால் உணர்ச்சி பிழம்பாக இருந்தார் ...வாசுகியின் அருகே சென்று கண்ணே ஏன் இந்த ஊடல் என மிகவும் தாழ்மையாக கெஞ்சி குலாவி கேட்க , "உங்களுக்கு காலையில் என்ன கூறி வழி அனுப்பினேன் " சிறுது நேரம் யோசித்த திரு "மாலையில் சற்று விரைவாக வருமாறு" "ஏன் வரவில்லை" "வேலைப்பளு கண்ணே" "இன்று என்ன நாள் என தெரியுமா" "தெரியவில்லையே தேனே" "காதலர் தினம் ,பக்கத்துவீட்டில் அவர்கள் இருவரும் காலையில் இருந்து கொண்டாடுகிறார்கள்,அவளது கணவன் அல்வா வாங்கி கொடுத்ததாக எனக்கு கொண்டு வந்து தந்தாள் .." "அவன் அல்வா தான் கொடுத்தான் நான் உனக்காக குரளே எழுதியுள்ளேன் அந்த குரளின் இறுதி சொல்லும் உன்னை கண்டதும் உதித்தது மலரே" "எங்கே வாசியுங்கள்" திரு உணர்ந்து கொண்டார் தப்பு செய்து விட்டேன் ..உடனே அவளின் அருகில் சென்று அவரது 1108 குரளை வாசித்தார் . வாசுகி தன்னிலை மறந்தாள் ,திருவும் தன்னிலை மறந்தார் .இருவரும் உச்சத்துக்கு சென்று பிரிந்தனர். கண்ணே நீ இன்று என் மீது கோபம் கொண்டாய்,அதன் காரணத்தை உணர்ந்தேன் நீயும் உணர்ந்தாய் முடிவில் கூடினோம், காதல் தினம் அல்வா கொடுப்பதோ பூக்கள் கொடுப்பதோ அல்ல என சிரித்தபடி தனது மீசையும் ,தாடியையும் தடவினார். "மலரே,எனக்கு இன்று இன்னோரு குரளும் எழுத கை துடிக்கின்றது" "எழுதுங்கள் நாதா" "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியோர் பெற்ற பயன்" "அருமை நாதா" வாசுகியை தன் வசம் மயக்கிய மகிழ்ச்சியில் "பூவே ,எனது இந்த அதிகாரத்தை எழுதி முடிக்க இன்னுமொரு குரள் தேவை படுகிறது" "எழுதுங்கோ பிரபு" " அதற்கும் உன் ஒத்துழைப்பு வேண்டும் இளவ்ரசியே" " இன்று இவை போதும் நாதா ,நாளை மிகுதி குரளை எழுதுவோம் " என கூறி திருவின் வயிற்றில் செல்லமாக குத்திவிட்டு சென்றாள் ..
    11 points
  42. எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புகழ்தலுக்காகவும் காத்திருக்காது என்னால் முடிந்ததைத் துணிவுடன் எழுதுவதும் எனக்கு நிறைவைத் தருகிறது. முக்கியமாய் யாழ்களமே எனது எழுத்துக்களுக்கு ஊக்கியாய் இன்றுவரை இருக்கின்றது. அதுமட்டுமன்றி என் கதைகளை விமர்சிக்கும் அத்தனை யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகூற நான் என்றும் கடமைப்பட்டவள். சரியோ தவறோ எம் நன்மைக்காய் விடமின்றி விமர்சிப்பவர்களின் விமர்சனங்களே என் எழுத்துக்களை மெருக்கேற்றிக் கொண்டிருக்கும். நான் கேட்டவுடன் நூல் விமர்சனம் ஒன்றை எழுதித் தந்த காரைக்கவி கந்தையா பத்தமநாதன் அவர்களுக்கும், அணிந்துரையை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தந்த பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்த யாழ்கள உறவான மூணா எனப்படும் ஆள்வாப்பிள்ளை செல்வகுமாரன் அண்ணாவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவள். என்னை எழுதுவதர்க்குத் தூண்டியதே சுமேரிய வரலாறு பற்றிய தூண்டாலே. அதுபற்றிய அடிப்படை அறிவை என்னுள் தூவிய மறைந்த நாதன் சிவகணேசன் அண்ணா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். அணிந்துரை தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராகஅறியப்படுபவர்.| அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக“மனதும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவருகின்றது.ஈழத்துத் தமிழ் புனைவு வெளி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களினது பங்களிப்பால் சற்று அகலக்கால் வைத்தது என்பதை எவரும் மறுபதற்கில்லை. ஈழத்துக் குடாநாடு, இலங்கைத் தீவு என்ற நிலவியல் எல்லைகளுக்குள் நீண்ட காலம் பயணம் செய்த புனைவு வெளி, ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு என்ற செயற்பாட்டாலும் அதன் வழி உருவான கருத்துருவாக்கங்களாலும் 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்" என்ற அந்தஸ்த்தைப் பெற்றது. அதன் பேறாக, நாடுகளும், இயற்கையும் தட்ப வெப்பநிலைகளும், வாழ்வியலும் நேர் மறையாகவும் எதிர்மறையாகவும் நமது மனக்கண்முன் விரிந்தன. 'உலகமயமாதல்" என்ற கருத்தியல் அல்லது 'சுருங்கிய உலகு" என்ற கருத்தியலுக்கு அமைவாக எல்லாம் தான் எமது காலடியில் வந்து குவிந்தன. இதனால் புளகாங்கிதங்களும் கூடவே துயரங்களும் நம்மிடையே நிரம்பி வழிந்தன. மேற்குறித்த கருத்து நிலைகள் ஓரளவிற்குத் தேய்மானங்கண்டுள்ள நிலையில் தற்போது புலம்பெயர் தமிழ் மக்களின் தனியாள் அனுபவங்களும் கலாசாரச் சிதைவுகளும் வாழ்வியற் கோலங்களும் அரசல் புரசலாக புனைவுகளில் வெளிவரத் தொடங்கியமையின் வெளிப்பாடாகவே நிவேதாவின் இந்தத் தொகுதியில் அடங்கிய கதைகளிலும் பெரும்பாலும் முகங் காட்டுவதை இனங்காண முடிகின்றது. நமது பாரம்பரியமான பண்பாட்டில் நம் மூத்தோர் கடவுட்குச் சமமாக வைத்தென்னைப் படுபவர்கள், தாய், தந்தை, பேரன், பெயர்த்தி என அந்தத் தொகுதி நீளும் அந்தப் பெரியோரும் நம்மையும் நம் வாரிசுகளையும் “எம்மில் தம்மைக் கண்டு” மகிழ்வு கொள்பவர்கள்| நம் குடும்ப உறவுகளின் 'எல்லைக்கால்"களா நிற்பவர்கள்| அவர்களே அந்த எல்லைகளை மீறினால்… என்ற கருவை அடியாகக் கொண்ட 'தண்டனை" என்ற கதை வாசகரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடியது. நமது கலாசார விழுமியங்களைக் கேள்விக் குள்ளாக்கக் கூடியது. எனினும் தன் மனைவியை மத்திய கிழக்கிற்கு அனுப்பி விட்டு தன் சொந்தமகளையே வன்புணர்வு செய்யும் தந்தைகள் நிறைந்த உலகிற்தானே நாமும் வாழுகிறோம் என்று இதனால் சமாதானங் கொள்வதா அல்லது சிக்மன்ட் பிறைட்டின் உளவியற் கோட்பாட்டை முன்நிறுத்திக் சமாதானங்கொள்வதா அல்லது ஏங்கல்ஸ் குறிப்பிடும் 'புனசவா" குடும்பம் என்ற கருத்தியலில் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்ப்பதா என்ற வினாக்கள் இதனூடாக மேற்கிளம்புகின்றன. இவ்வாறான கருவை வெளிப்படுத்துவதற்கு 'அயல் நோக்காத்துணிவு" வேண்டும். நிவேதாவிடம் அது நிறையவே உண்டு. அவர் பாரம்பரியத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக நிற்க விரும்பவில்லை. 'தானம் நீ", 'மன வாழ்வு", 'மனக்குரங்கு" ஆகிய மூன்று கதைகளின் கருவை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க முடிகிறது. பெண்களை ஆண்களே பெரும்பாலும் ஏமாற்றுபவர்கள் என்ற பெரும்பான்மையான மதிப்பீடுகளை மறுதலித்து பெண்களும் வாய்ப்புக்கிடைத்தால் ஏமாற்றத் தயங்கார் என்ற கருத்தினை இக் கதைகளூடாக முன்வைக்கிறார் நிவேதா. தன் கல்லூரிக் காலத்தில் காதல் செய்த செந்தூரனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன்னைக் கட்டியவனுடன் போலிவாழ்வு வாழ்ந்து காதலனைக் கரம்பிடிக்கத் துடித்த நயனி, தன்னிலும் வயது கூடிய வெளிநாட்டு மணமகனைக் கரம்பிடித்து விட்டு வங்கியில் தன்னுடன் பணியாற்றும் வாகீசனுடன் வாழத்துடிக்கும் ஜீவா,கரம்பிடித்த காதலனும் கணவனுமான ரவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று மூன்று பிள்ளைகளுடன் கஷ்டஜீவனம் செய்தவருக்கு ஆபத்பாந்தவனாக வந்து கை கொடுத்து மறுவாழ்வு தந்து கடனாவுக்கு கூட்டி வந்து வாழவு தந்தவனை ஏமாற்றிய 'மனக்குரங்கு" கதையின் நாயகி" என இவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகளாக நம்பிக்கைத் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை தான் நினைத்தவனை அடைதல் பெண் களுக்கான சுதந்திரம் என்ற கருத்தியலை இவ்விடத்தில் நிலைநாட்ட நிவேதா முனைகிறாரோ என்று எண்ணத்தோன்றினும் (ஏனெனில் அவரது முந்தைய கதைகள் அவ்வாறானவை) கதைகளின் முடிவுகளின் படி, நம்பி நடந்த ஆண் மக்களை ஏமாற்றிய பெண்களின் கதைகளாகவே அவற்றைக் கருத முடிகிறது. இதில் சித்திரிக்கப்பட்டுள்ள ஆண்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவே உள்ளனர். நிவேதாவின் இந்த மனமாற்றம் அல்லது கருத்தியல் புலம்பெயர் வாழ்வில் பெண்களின் நத்தைக்கோலங்களின் அபத்தங்களால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமாக அல்லது பிழைவிடுபவர் எல்லாத் தரப்பிலுமஉளர் என்ற சமாதானமா? எதுவெனப் புரியவில்லை. 'மருந்தே இல்லா நோய்" என்ற கதை இன்னோர் வகைமையான பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறது. பிரான்ஸில் பிறந்த மது என்ற பெண், புலம் பெயர் நாடுகளில் இன்னமும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்ற சாதீயத் தடைகளைத் தாண்டி, பெற்றோர் திர்ப்பையும் மீறிக் காதலித்த நவீன் என்பவனைக் கரம்பிடித்து இரு குழந்தைகள் பெற்ற பின்பும் தன்கணவன் வேறோர் பெண்ணுடன் காதலுறவு கொண்டுள்ளான் என்பதை அறிந்த மது அவனைத் தீவிரமாகக் கண்காணித்து கையும் மெய்யுமாக பிடித்து அவனிடமிருந்து பிரிந்து விடுவதாக இக்கதை அமைந்துள்ளது. தன் கணவன் எல்லை மீறுகிறான் என்பதை நிதானத்துடன் செல்லிடப்பேசியின்தொழில் நுட்பத்துடன் கண்காணித்து உண்மையை வெளிக்கொணரும் திறன் வாய்ந்த வளாக அவள் உருவாக்கப்பட்டுள்ளாள். ஒரு வகையில் இரு ஒரு புலனாய்வு சார்ந்த தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை வேறோர் வகையில் 'உளவியல் நாடகம்" என்றும் கட்டமைக்கலாம். குற்றமிழைத்த ஒருவரை அவர் சந்தேகப்படும்படியாக நடக்காமல் அவருடன் இயல்பாகப் பழகி, அதனூடாகக் கண்காணிப்பு அல்லது புலனாய்வை நிகழ்த்தி இறுதியில் இக்கட்டான ஒரு சூழலில் சிக்க வைத்து குற்றவாளியின் வாயிலாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதை உளவியல் நாடகம் (Phலஉhழ னுசயஅய) என்பர். உளவியலாளர் அந்த முறைமைதான் இக்கதையிலும் நடந்தேறியுள்ளது. இன்னோர் வகையில் அந்தப் பெண்ணின் ஆளுமையும் தெரிய வருகிறது. தன் கணவன் தனக்குத் துரோகம் செய்வதை எந்தப் பெண்ணால் தான் பொறுத்துக்கொள்ளமுடியும் என்ற பொதுவிதியைத் தாண்டி, கல்லானாலும் கணவன் என்ற கீழைத்தேய நியமங்களைக் கடந்து, மூக்குச் சிந்தி அழுது ஆர்ப்பரிக்காது அப்பெண் நடந்து கொண்டவிதம் அவளுக்கு மேலைத்தேய வாழ்க்கை முறை தந்த துணிவும், தன்னம்பிக்கையம் தான் என எண்ணத் தோன்றியது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தாம் விரும்பியவாறு சேர்ந்து வாழமுடியும் என்ற மேலைத்தேய அனுமதியை அனுசரித்துச் செல்கிறது. 'நான் வசந்தன்' என்ற கதை. கதையின் ஓட்டம் சராசரியாக இருந்தாலும் கதையின் முடிவில் நிவேதா எழுதிய உரையாடல் அந்த உறவின் நன்மையை அல்லது உணர்ச்சியை புரிந்துகொள் வைக்கிறது. அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு இதே வேலையாய்ப் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன். “நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் கொண்டு போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா?” “நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே” என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில். இதில் தெரியவருவது இரண்டு ஆத்மாக்களின் ஆழமான அன்பு தான். அது அபத்தமல்ல என்பதை நிவேதா நிறுவ முனைகிறார். இந்தத் தொகுதியில் உள்ள ஏனைய கதைகள் நிவேதாவின் அனுபவம் சார்ந்தவை. ஆயின் “அவனும் அவர்களும்” என்ற கதை நிவேதாவிற்கு உருவச் செழுமையுடனும் கதை சொல்ல முடியும் என்பதற்குப் பதந் சோறாக அமைகிறது. மரணமடைந்தவரே கதை சொல்லியாக மாறி, நனவோடை உத்தியில் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தால் அக்கதையை இத் தொகுதியின் கணிப்புக்குள்ளாகும் கதையாக மாறியுள்ளது. தவிர நிவேதாவின்கதை சொல்லும் முறை இன்னமும் நேர்கோட்டு முறையியலைத் தாண்டிச் செல்லவில்லை. ஆயின் கதைகளின் முடிவில் அதிர்ச்சி தருவதும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவதும் சில விடயங்களை வாசகரிடமே யுகத்துக்கு விட்டு விடுவதும் நல்ல சிறுகதைகளுக்கான குணாம்சங்கள். அவை நிவேதாவின் எழுத்துக்களில் துலங்கத் தொடங்கியுள்ளன. உரை நடையில் செம்மை சேர்வதும் அல்லது பேச்சோசை மிகுவதும் கதைகளின் களத்தைப் பொறுத்ததேயன்றி கதைசொல்லியின் மனவோட்டத்தை பொறுத்ததல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மற்றும் சுய விருப்பும் வெறுப்புகளுடனான தீர்வுகள் அல்லது அபிப்பிராயங்கள் கதை சொல்லியின் நேர்மையைச் சோதிப்பனவாய் அமைந்தால் அது வெறும் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைந்துவிடும் அபாயங்களும் உண்டு. எனவே முன்வைக்கும் கருத்தைத் தர்க்கத்துடனும் ஆதாரத்துடனும் சமூகவியல் கண்ணோட்டத்துடனும் அழகியலுடனும் படைக்கும் போது கதை சொல்லி நின்று நிலைப்பார்| கதைகள் சாகாவரம் பெறும். நிறைவாக நிவேதா எனும் கதைசொல்லி இன்றும் கடந்து செல்ல வேண்டிய களமும் காலமும் அவர் முன் விரிந்து கிடக்கின்றன. அவற்றை ஒருமுகப்படுத்தும் திறன் நிவேதாவிடம் நிறையவே உண்டு. அவற்றைக் கலா பூர்வமாகக் கட்டமைத்து நமது புனைவு வெளியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எழுத்தாளராக நிவேதா நிலைக்க வேண்டும் என்பது என் அவா. அது ஈடேனும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கையும் எனக்குண்டு. வாழ்த்துக்களுடன் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தகைசால் வாழ்நாட்பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்
    11 points
  43. யாழ்ப்பாணத்துக்கான எனது பயணத்தின் ஒற்றை நோக்கமே சித்தியைப் பார்ப்பதும், அவருடன் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களைச் செலவிடுவதும் தான். ஆனால், அது சாத்தியப்படாது என்பது அவருடனான முதலாவது சந்திப்பிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதற்கு மேலாக, அவரை அவரது அறையிலிருந்து வெளியே அழைத்துவருவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. பிறரை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் அவர், ஆகவே தன்னைப் பார்க்க வருவோரிடத்தில் நீங்கள் அலைக்கழிய வேண்டாம், இடைக்கிடை வந்தால்ப் போதும் என்று கூறியிருக்கிறார். அடுத்தது, மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் அவரால் ஓரளவிற்கு மேல் சக்கர‌நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும் முடியாது. 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் அங்கிருப்பதே கஸ்ட்டமாகத் தெரிந்தது. அவரைப் பார்ப்பதற்காகவே நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடிவெடுத்திருந்தேன். எனது மொத்தப் பயணத்தினதும் காலம் வெறும் 7 நாட்கள்தான். ஒவ்வொருநாளும் போய் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாதென்று நினைத்தேன். இடையில் இருக்கும் இரண்டு நாளில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று ஒரு ஆசை. 1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தின் தெருக்களில் யாழ்ப்பாணத்தவர்களில் ஒருவனாகச் சுற்றப்போகிறேன் என்பதே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை, திடீரென்று முழிப்பு வந்தது. நேரம் 5 மணிதான். இனித் தூங்க முடியாது, மைத்துனரோ நல்ல நித்திரை. அக்குடும்பத்தில் ஆறுபேர். பாடசாலைக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என்று அனைவருமே காலை வேளையில் அவசரப்பட்டு ஆயத்தப்படுவார்கள். ஆகவே, அவர்களின் நேரத்தை வீணடிக்காது, சிரமம் கொடுக்காது எனது காலைக் கடன்களை முடிக்க எண்ணினேன். அதன்படி 5:30 மணிக்கு குளித்து முடித்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி நேற்றைய உதயனைப் படிக்கத் தொடங்கினேன். மைத்துனரின் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயமும் இருக்கிறது. அருகில் இருக்கும் சிறிய கோயிலில் இருந்து காலை 5:45 மணிக்கு மணியோசையும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் சுப்ரபாதமும். அமைதியான அந்தக் காலை வேளையில், மனதிற்கு ஆறுதலைத் தரும் அந்த இசையயைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இருந்த மூன்று நான்கு நாட்களில் அதனை முற்றாக அனுபவித்தேன். இந்த அமைதியும், பரவசமும் எங்கும் இல்லை. ஏனையவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழத் தொடங்கினார்கள். மைத்துனரின் மனைவி சுடச் சுட கோப்பி கொடுத்தார். அருந்திவிட்டு மாமியோடும் மைத்துனரோடும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க காலையுணவு வந்தது. அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்ட விதம் அருமை. தமது வீட்டில் ஒருவனாக என்னையும் நடத்தியது பிடித்துக்கொண்டது. நிற்க, முதலாவது நாளில் நான் சந்தித்த முக்கியமான இன்னொருவரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். நண்பனுடன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ராசா அண்ணையைப் (நண்பனின் மூத்த சகோதரர், எனக்கும் நெருங்கிய நண்பர்) பற்றிக் கேட்டேன். "இருக்கிறாரடா, பாக்கப்போறியோ?" என்று கேட்டான். "உங்களுக்கு நேரமொருந்தால்ப் போகலாம்" என்று நான் கூறவும், ராசா அண்ணையைப் பார்க்க ஆரியகுளத்திற்கு வாகனத்தை ஓட்டினான். ராசா அண்ணை சற்று மெலிந்து காணப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரிலும் சிறிய மாற்றங்கள். ஆனால் அதே புன்சிரிப்பும், அன்பான வார்த்தைகளும். சில நிமிடங்கள் ஆளையாள் சுகம் விசாரித்துக்கொண்டோம். "உங்களைப்பற்றிச் சிறிய கதையே எழுதினேன் அண்ணை" என்று நான் கூறியபோது, "என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று கூறிச் சிரித்தார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். உரும்பிராயில் இருக்கும் சபரிமலை ஆலயத்திற்கு தனது வேலைத்தளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் போகவிருந்தவரை நாம் நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட கோப்பியும் வடையும் கொடுத்தார். அதிகநேரம் அவரைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. "நான்கு நாட்கள் நிற்கிறேன், இன்னொருநாள் வந்து ஆறுதலாகப் பேசலாம்" என்று கிளம்பி வந்துவிட்டோம். சரி, பழையபடி இன்றைய நாளுக்கு வரலாம், ஒரு 7:30 - 8 மணியிருக்கும். நண்பன் தொலைபேசியில் வந்தான். "மச்சான், இண்டைக்கு என்ன பிளான் உனக்கு?" என்று கேட்டான். "ஒண்டுமில்லை, சில நண்பர்களைப் பார்க்க வேண்டும். உரும்பிராயில் எனது நண்பர் ஒருவரின் தகப்பனாரைச் சென்று சந்திக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான்" என்று கூறினேன். "சரி, பின்ன வா அக்கராயனுக்குப் போவம். நானும் கமத்துக்குப் போய் ஒரு மாசமாகுது, ஒண்டு இரண்டு மாத்து உடுப்பும் கொண்டுவா, அங்க இண்டைக்கு இரவு நிண்டு வருவம்" என்று கூறினான். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நண்பன் அடிக்கடி அக்கராயனில் உள்ள கமம் பற்றிப் பேசியிருக்கிறான். கொழும்பில் இருந்த காலங்களில் கமத்திலிருந்து வருவோரைக் கண்டு நான் பேசியிருக்கிறேன். ராசா அண்ணையும், நண்பனும் அக்கராயன் பற்றி அந்நாட்களில் பேசும்போது நானும் அங்கிருந்திருக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறேன். அந்த அக்கராயனைக் காணச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறதென்றால் எனது மகிழ்ச்சிபற்றிக் கேட்கவும் வேண்டுமா? இந்த அக்கராயன் பற்றிக் கூறவேண்டும். வன்னியில் இருக்கும் பச்சைப் பசேல் என்கிற விவசாயக் கிராமங்களில் ஒன்று அக்கராயன். 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைக் கலைத்துவிட்டு இப்பகுதியை தமிழ் மன்னனான அக்கராயன் ராசன் ஆண்டுவந்ததால் இதனை அக்கராயன் என்று அழைக்கிறார்கள். 70 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் தங்கி நின்று விவசாயம் செய்வதற்கு பொதுமக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கமம் செய்வதற்கு 10 ஏக்கர்களும், வீடுகட்டி தோட்டம் செய்வதற்கு 5 ஏக்கர்களும் என்று மொத்தமாக 15 ஏக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள் நாடுதிரும்பத் தொடங்கியிருந்தார்கள். அவ்வாறு மலேசியாவிலிருந்து நாடுதிரும்பிய நூறுபேருக்கும் அக்கராயனில் இந்த 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அப்படி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களில் ஒன்று எனது நண்பன் ஜெயரட்ணத்தின் குடும்பமும். அவர்கள் பிற்காலத்தில் இன்னும் பல நிலங்களைப் பணம் கொடுத்தும் வாங்கியிருந்தார்கள். அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது. அக்கராயனில் ஜெயரட்ணத்தின் குடும்பத்தாரின் காணிகள் இருக்கும் பகுதியை ஊடறுத்து ஒரு அழகான சாலை செல்கிறது. வன்னியில் இருக்கும் மிகவும் ரம்மியமான சாலைகளில் முதன்மையானது அது. அப்பகுதிக்குச் சென்று அதனைக் காட்சிப்படுத்தாத யூடியூப் பதிவாளர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமானது. அதற்கான காரணம் இந்தச் சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து பாதையினை மூடிக் குடைபோல காத்துநிற்கும் மரங்களும், சாலையின் ஒருபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியும் பச்சைப் பசேல் என்ற வயற்காணிகளும் மறுபுறம் தெரியும் தென்னை மற்றும் கமுகு மரத் தோட்டங்களும்தான். இச்சாலையினைப் பலர் சொர்க்கத்தின் வாசற்படி என்று கூறவும் கேட்டிருக்கிறேன். இதில் விசேசம் என்னவென்றால், சாலையை அணைத்து வளர்ந்து நிற்கும் மரங்களை வைத்தது வேறு யாருமல்ல, அதே ராசா அண்ணைதான். சுமார் 600 மீட்டர்கள் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் இந்த மரங்களை அவர் நட்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாட்டிற்கு அமைதி திரும்பிவிட்டதாக நினைத்து பலர் நற்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் ஒருவர் ராசா அண்ணை. அக்கராயனில் தமது கமம் இருந்த பகுதியூடாகச் செல்லும் சாலையின் இரு பக்கத்திலும் மரங்களை அவர் நட்டார். அவ்வாறு நட்டுக்கொண்டுவருகையில் இந்தியா ராணுவம் எம்மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தது. இந்திய வல்லாதிக்கம் வன்னியை ஆக்கிரமித்த காலத்திலும் ராசா அண்ணையின் மர நடுகை தொடர்ந்து நடந்துவந்தது. அப்படியான‌ ஒரு நாளில் ராசா அண்ணையை இந்திய ராணுவம் தாக்கியது. புலிகள்மீதான ஆத்திரம் வீதியில் மரம் நட்டவர் மீது பாய்ந்தது. ஆனால், அவர் அன்று செய்த இந்த நற்காரியத்தின் பலனை இன்று அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு வருவோரும் அனுபவிக்கிறார்கள். தனது நோக்கம் கனகபுரத்திலிருந்து அக்கராயன் முழுவதற்குமான வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுவதுதான் என்று அண்மையில் கூறியிருந்தார். அவரது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
    11 points
  44. மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களாலும் தென்னை மரங்களாலும் சூழப்பட்ட கட்டடம் அது. வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. திறக்கத் தெரியவில்லை. குமுழியைத் திருகித் திருகிப் பார்க்கிறேன், முடியவில்லை. நண்பன் காரில் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, "கூப்பிட்டுப் பாரடா" என்று சொல்லவும், கொஞ்சம் சத்தமாக கேட்டைத் தட்டினேன். உள்ளிருந்து பெண்ணொருவர் வந்து திறந்துவிட்டார். அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் குமிழையையே இவ்வளவு நேரமும் திருகியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "நீங்கள் போட்டு வாங்கோ, நான் ஆட்டொ பிடித்து போய்க்கொள்கிறேன்" என்று நண்பனைப் பார்த்துக் கூறினேன். "இல்லை, நீ முடிச்சுக்கொண்டுவா. நான் நிக்கிறன். இண்டைக்கு உன்னோட யாழ்ப்பாணம் சுத்துறதுதான் வேலை" என்று அன்புடன் கட்டளையிட்டான். சரியென்று கூறிவிட்டு கட்டடத்தினை நோக்கி நடந்தேன். உள்ளே சென்றதும் என்னை அமரச் சொல்லிட்டு யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். சித்தியின் பெயரைச் சொன்னேன், சிட்னியில் இருந்து வருகிறேன் என்றும் கூறினேன். இருங்கள், வந்துவிடுவா என்று கூறப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் போயிருக்கும், சித்தி வந்தார். சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். நான் அவரை ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உருவமே மாறி, நலிந்து, தோல் சுருங்கி, மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார். பேசுவதே அவருக்குக் கடிணமாக இருந்தது. சிறிதுநேரம் அவரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, "எப்படி அன்ரா இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய புன்முறுவல், "83 வயதில் இருக்கும் ஒருவர் எந்தளவு சுகநலத்துடன் இருக்கமுடியுமோ, அந்தளவு சுக நலத்துடன் இருக்கிறேன்" என்று சொன்னார். "அப்படித் தெரியவில்லையே?" என்று கேட்டேன். அதற்கும் ஒரு புமுறுவல். பல விடயங்களை அவர் மறந்திருந்தார். அவர் தொடர்பாக நான் கூறிய விடயங்களை அதிசயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். "அப்படியெல்லாம் நடந்ததா?" என்று அடிக்கடி கேட்டார். எனது அன்னை, தம்பி, அக்கா என்று நெருங்கிய உறவுகள் தொடர்பாக அவருக்கு நினைவு இருக்கிறது. ஏனையவர்கள் தொடர்பாக அவர் அதிகம் பேசவில்லை. ஆனால், நான் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே எனது குடும்பம் பற்றி கேட்பார், ஒரே பதிலைச் சொல்லுவேன். ஒருசில நிமிடங்களின் பின்னர் அதே கேள்விகள், நானும் சலிக்காமல் அதே பதில்களைக் கூறுவேன். நான் திருமணம் முடித்ததைக் கூட அவர் மறந்திருந்தார். அடிக்கடி, "முடிச்சிட்டீரா, எத்தனை பிள்ளைகள்?" இதுதான் அவர் அடிக்கடி கேட்ட கேள்விகள். சிறிது நேரம் பேசிவிட்டு அமைதியானார். "என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "ஒன்றுமில்லை, நீர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பல யோசனைகள்" என்று கூறினார். மீண்டும் அதே மெளனம். அவர் வலியினால் அவஸ்த்தைப்படுவது தெரிந்தது. ஒரு 35 - 40 நிமிடங்கள் வரை பேசியிருப்போம். அதன்பின்னர் அவரால் தொடர முடியவில்லை. "கஸ்ட்டமாக இருக்கிறதோ, அறைக்குத் திரும்பப் போகிறீர்களோ?" என்று கேட்டேன். "ஓம், கனநேரம் இதில இருக்க ஏலாது, நாரி நோகுது" என்று சொன்னார். கொண்டுவந்த சில பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரது சக்கர நாற்காலியை மெது மெதுவாக உருட்டிக் கொண்டு உள்ளேயிருக்கும் மண்டபம் போன்ற பகுதிவரை செல்ல‌, அங்கிருந்த பெண்ணொருவர், "இனி விடுங்கோ அண்ணா, நாங்கள் அவவைக் கூட்டிச் செல்கிறோம்" என்று சொன்னார். நான் சித்தியிடம் விடைபெற்றுத் திரும்ப, அவரிடம் யாரோ, "ஆரது சிஸ்ட்டர்?" என்று கேட்பதும், "அது என் அக்காவின் மகன், அவுஸ்த்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான்" என்று அவர் கூறுவதும் கேட்டது. வாயிலில் காரில் பொறுமையுடன்ன் காத்திருக்கும் நண்பனை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
    11 points
  45. யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி வழங்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். அதேவேளை புள்ளிகள் வழங்குபவர்கள் சரியான முறையில் வழங்குகின்றார்களா என்பதையும் கண்காணிப்போம். தவறாகப் பயன்படுத்துவதும் குழுக்களாக இணைந்து புள்ளிகள் வழற்குவதும் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட உறுப்பினர்கள் சில காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவே புள்ளி வழங்கும் முறையில் தடை வழங்கப்படும். கால மாற்றத்திற்கேற்ப இடை நிறுத்தப்பட்ட இந்த புள்ளி வழங்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது.
    11 points
  46. என்ன சொல்கிறீர்கள்? நெடுக்கரின் குடியேறி எதிர்ப்பு மனநிலை அவர் குடியேறியாக இருந்த போதே அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர் மீதான காண்டு போலி விஞ்ஞானக் கட்டுரையை இணைத்து வாதிடும் அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இறந்தது பெண், கொன்றது ஆண் என்பதால் கொன்றவரை விட்டு விட்டு, எல்லாரையும் கை காட்டியிருக்கிறார்! இது பழைய நெடுக்கர் தான்! புதிதாக ஒன்றுமில்லை😎. நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பயண ஏற்பாடான செங்கன் (Schengen) நடைமுறையில் இருக்கிறது. எனவே, செங்கனில் இல்லாத பிரிட்டனின் பிரஜைகள் நடந்து தான் போக வேணும்! "போலந்துக் காரன் சட்டரீதியாக பிரிட்டனுக்குள் வரவும் கூடாது - எனவே ஐ.ஓவில் இருந்து நாம் அவுட், ஆனால் பிரிட்டன் பிரஜைகளை ஐரோப்பிய நாடுகளில் திறந்த வீட்டினுள் செல்லப் பிராணி செல்வது போல அனுமதிக்கவும் வேண்டும்!" இரண்டையும் எப்படி எதிர்பார்க்க முடியும்😎?
    11 points
  47. ஓயாத நிழல் யுத்தங்கள் – 1 இது வரை இரு உலகப் போர்களை உலகம் கண்டிருக்கிறது. இவற்றுள் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இரு துருவங்களாக உருவான தேசங்கள் பனிப்போர் எனப்படும் நிழல் யுத்தங்களில் ஈடுபட்டதன் தாக்கம் இன்றும் உலகின் அரசியல், பூகோள நிலைமைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின், ஐரோப்பாவின் சில நகரங்களில் இன்றும் பனிப்போர் காலக் கட்டமைப்புகள் - அணுவாயுதத் தாக்குதலில் இருந்து காக்கும் காப்பரண் கட்டிடடங்கள்- நிலைத்திருக்கின்றன. 90 இற்குப் பிறந்த இளவல்களுக்கு இந்தக் கட்டிடங்கள் பற்றி எதுவும் தெரியாது. 90 களில் வயசுக்கு வந்த (சுவியர் சில சமயங்களில் குறிப்பிடும் 90’s kids) எங்கள் போன்றோருக்கு பனிப்போரின் முடிவு காலம் ஒரு “வாழ்ந்த அனுபவம்”. தனிப்பட்ட ரீதியில், என் வாசிப்பார்வத்தை வளர்த்ததில் பனிப்போருக்கு பெரிய பங்கிருக்கிறது. இதை ஒரு தட்டையான வரலாறாகச் சொல்லி விட முடியாது. ஆனால், அந்தக் காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் சார்ந்து முப்பரிமாணச் சித்திரமாக எங்கள் நினைவுகள் இருக்கின்றன. இவை சார்ந்து சில கட்டுரைகளை தனித்தனியாக எழுதும் முயற்சி இது. இதன் மூலம் உலக வரலாற்று வாசிப்பையும், பகிர்வையும் ஊக்குவிக்கும் ஒரு சிறு முயற்சி. இரு முன்னறிவித்தல்கள்: 1. இது மிகவும் மெதுவாக நகரப் போகும் ஒரு முயற்சி, எழுதுபவருக்கு வேறு வேலைகள் இல்லாமல் வெட்டியாக இருக்கக் கிடைக்கும் போது மட்டும் இது எழுதப் படும். 2. இந்தத் தொகுப்பில் இணைக்கும் படங்கள் அனேகமாக அமெரிக்க ஆவணக்காப்பகத்தில் (National Archives) இருந்து எடுக்கப் பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம், அமெரிக்கா சொல்வதை மட்டும் விபரிக்கும் நோக்கமல்ல. இந்த ஆவணக்காப்பகத்தில் தான் பெரும்பாலான அரிய புகைப்படங்கள் பதிப்புரிமையில்லாமல் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. கொரியா ஜூன் ஜூலை மாதங்கள் கொரிய தீபகற்பத்திற்கு முக்கியமான மாதங்கள். ஜூன் மாதம் 25, 1950 இல் கொரிய நேரப்படி அதிகாலையில் வடகொரியாவின் படைகள் சத்தமில்லாமல் எல்லையைத் தாண்டி தென் கொரிய தலை நகர் நோக்கி நகர்ந்தன. இது ஏன் முக்கியமெனில், இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகில் முதன் முதலாக ஒரு நாட்டின் படைகள் எல்லை தாண்டி இன்னொரு அயல் நாட்டினுள் நுழைவது இது தான் முதல் தடவை. 3 ஆண்டுகள் கழித்து, பல இலட்சம் அமெரிக்க, கொரிய, மற்றும் சீனப் படைகள் உள்ளடங்கிய தரப்புகள் பலியான பின்னர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தது. எப்படி இரு கொரியாக்கள் உருவாகின? ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் தற்காலிகமாக சோவியத்தும், அமெரிக்காவும் பாதியாகப் பிரித்து அங்கேயிருந்து சரணடைந்த ஜப்பானியப் படைகளை அகற்றுவது எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதை எப்படிச் செய்வதென யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சோவியத் நாடு தன் படைகளை வட கொரியாவில் நிலை நிறுத்த ஆரம்பித்தது. அவசர அவசரமாக அமெரிக்கா தன் படைகளை தெற்கில் குவிக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பம், 38thparallel சமாந்தரக் கோடு எனப்படும் latitude இன் படி வட, தென் கொரியாக்களாக உருவானது. இதன் பின்னர், 1946 இல் தற்போதிருக்கும் (கோசானின் தெய்வமச்சான்) கிம்மின் தாத்தா கிம் இல் சங் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவியதுடன் அந்த 38 சமாந்தர எல்லைக் கோடும் அப்படியே நிரந்தர எல்லையாக நிலைத்து விட்டது. இந்த எல்லையைத் தாண்டித் தான் 1950 இல் வட கொரிய படைகள் தெற்கை ஆக்கிரமிக்க முனைந்தன. இந்த வடகொரிய ஆக்கிரமிப்பிற்கு ஒரு பின்கதை இருக்கிறது - இது ஒரே இரவில் நிகழ்ந்த ஒரு திடீர் நடவடிக்கையல்ல. உலகப் போர் முடிந்த பின்னர் 1948 இல், பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தன் பெருமளவிலான படைகளை அகற்றி விட்டிருந்தது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் தளங்களில் மட்டும் அமெரிக்க படைகள் இருந்தன, ஆனால் பாரிய யுத்த தயாரிப்புகள் இருக்கவில்லை. இதைக் கவனித்த வட கொரியாவின் கிம் இல் சங், ஸ்ராலின் தெற்கை ஆக்கிரமிக்க தங்களுக்கு உதவ வேண்டுமெனத் தொடர்ந்து நச்சரித்து வந்தார். முதலில் மறுத்த ஸ்ராலின், ஒரு கட்டத்தில் அனுமதியும் கொடுத்து தனது இராணுவ ஜெனரல்களைத் தாக்குதல் திட்டம் தயாரிக்கவும் வழங்கினார். பின்னர் படிப்படியாக, சோவியத் ஆயுதங்கள், விமானத் தாக்குதல் பாதுகாப்பு என்பனவும் சோவியத் மூலம் கிடைத்தன வட கொரியாவிற்கு. இதையெல்லாம் இன்னொரு கம்யூனிசத் தலைவர் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்: சீனாவின் மாவோ சே துங் தான் அவர். மாவோ, ஸ்ராலினை உலக கம்யூனிசப் பிதாமகராக ஏற்றுக் கொள்வதைத் தந்திரமாகத் தவிர்த்து வந்த ஒருவர். 1950 இல் தான் மாவோ தன் கம்யூனிச ஆட்சியை சீனாவில் ஓரளவுக்கு நிலை நாட்டி விட்டு, தப்பிப் போய் போர்மோசா (Formosa) தீவில் (இன்று தாய்வான் என்று அழைக்கப் படும் தீவு) தனிதேசம் அமைத்திருந்த போட்டிக் குழுவை நோக்கிப் பாய திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கிம் இல் சங் ஸ்ராலினை நெருங்கி தெற்கைத் தாக்க அனுமதியும் உதவியும் பெற்று, மாவோவின் கனவுக்கு மறைமுக ஆப்பு வைத்திருக்கிறார். அமெரிக்க வடிவில் வந்த ஆப்பு கிம் இல் சங், மாவோவிற்கு வைத்த இந்த மறைமுக ஆப்பு அமெரிக்கக் கடற்படையின் வடிவில் வந்திறங்கியிருந்தது. "தாய்வானிற்கு இராணுவ ரீதியில் உதவப் போவதில்லை" என்ற முடிவை எடுத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், வட கொரியாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஒரு மட்டுப்படுத்தப் பட்ட "பொலிஸ் நடவடிக்கையை" அனுமதித்தார் (இந்தப் பதத்தில் இருந்து தான் பின்னாளில் அமெரிக்கா "உலக பொலிஸ்காரன்" என்ற சொற்பதம் உருவாகியிருக்கக் கூடுமென நினைக்கிறேன்). அதே நேரம், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா கவனம் செலுத்தும் போது, மாவோ தாய்வானை நோக்கிப் படையெடுக்கக் கூடும் என்ற ஊகத்தில், அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற் படையை (7th Fleet) தாய்வான் சீனா எல்லையில் தொடர் ரோந்து செய்யவும் ட்ரூமன் கட்டளை பிறப்பித்திருந்தார். இது தான் மாவோ, 1950 இல் தாய்வானை நோக்கி சீன மக்கள் இராணுவத்தை ஏவாமல் தவிர்த்தமையின் பிரதான காரணம். வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுத்த ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபை உலக வல்லரசுகளின் போட்டிக் களமாக திகழ்கிறது. ஆனால், 1950 இல் உருவாக்கப் பட்ட புதிதில், உண்மையாகவே உலக சமாதானம், பாதுகாப்பு என்பவற்றைப் பேணும் அதன் பணியை சீரியசாகச் செய்ய முயன்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில், இதன் முதல் பணியாக, வட கொரியா மீது நடவடிக்கை எடுத்து தென்கொரியாவை விட்டு படைவிலகலைக் கோரும் தீர்மானத்தை ஏகமனதாக ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. ஆனால்,கொஞ்சம் நிதானித்து இந்த தீர்மானத்தை ஆராய்ந்தால், இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவும் சோவியத் நாடு தான் மறைமுகக் காரணமாக இருந்தது என்பதைக் காணலாம். 50 களில் இருந்த ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக (எனவே வீட்டோ அதிகாரமுடைய நாடுகள்) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனக் குடியரசு, சோவியத் நாடு என்பன இருந்தன. இங்கே “சீனக் குடியரசு” என்பது தாய்வானில் இருந்த, மேற்கு ஏற்றுக் கொண்ட சீனா, தற்போதிருக்கும் “மக்கள் சீனக் குடியரசு” அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். கம்யூனிச சீனாவான மக்கள் சீனக் குடியரசை, ஐ.நா அங்கீகரிக்காமல் இருந்ததை எதிர்த்து, சோவியத் நாடு ஐ.நா பாதுகாப்புச் சபையை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் தான், வட கொரியா மீது படையெடுக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. எனவே, ஸ்ராலின் ஒரு பக்கம் கிம் இல் சங்கிற்கு தெற்கை ஆக்கிரமிக்க உதவி செய்தபடியே, ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் வட கொரியா மீதான எதிர் நடவடிக்கையை தடுக்காமலும் விட்டிருக்கிறார். இது முட்டாள் தனமென சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால், ஸ்ராலினின் நடவடிக்கைகளின் பின்னால் இன்னொரு உள் நோக்கம் இருந்திருக்கலாம். மேற்கு ஐரோப்பாவில் கண் வைத்திருந்த சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே, சோவியத் ஒன்றியமும், மேற்கும் கொள்கையளவில் இரு துருவங்களாக உருவாகின. இந்த விரிசல்கள், ஐரோப்பாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடத்தப் பட்ட பொற்ஸ்டாம் (Potsdam Conference) மாநாட்டிலேயே வெளிப்பட ஆரம்பித்து விட்டன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பாவை மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவையும் கம்யூனிச குடையின் கீழ் கொண்டு வரும் ஆர்வத்தில் காய் நகர்த்தியது. இதற்கு மிகச் சிறந்த சாட்சியமான சம்பவம் கொரிய யுத்தம் ஆரம்பிப்பதற்கு சரியாக இரு ஆண்டுகள் முன்னர், ஜூன் 1948 இல் சோவியத் ஒன்றியம் மேற்கு பேர்லினிக்கான வினியோகப் பாதைகளை ஒரு தலைப்பட்சமாக மூடிய நிகழ்வு. நேட்டோ அமைப்பு உருவாக வித்திட்ட இந்த நிகழ்வை, ஒரு தனிக் கட்டுரையில் பின்னர் பேசலாம். சுருக்கமாகச் சொன்னால், மேற்கின், அமெரிக்காவின் படைகளை ஐரோப்பாவில் இருந்து, தொலைவிலிருக்கும் கொரியா நோக்கிப் போக வைத்தால், தனது மேற்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கம் இலகுவாகலாம் என்ற ஸ்ராலினின் கணிப்பும் வட கொரியாவை அவர் யுத்தமொன்றை நோக்கித் தள்ளக் காரணமாக இருந்தது. சுதாரித்து, வென்று பின் தோற்ற மேற்கு இஞ்சொன் தரையிறக்கத்தின் போது அமெரிக்கப் படையினர். எழுபதாயிரம் அமெரிக்க மரைன்கள், 200 இற்கு மேற்பட்ட கடற்கலங்களில் தரையிறங்கிய இந்த தாக்குதல். பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். ஐ.நா வட கொரியா மீது பொலிஸ் நடவடிக்கையை எடுத்த போதும், ஐ.நா படைகளின் பிரதான அணியாக அமெரிக்காவின் படைகளே விளங்கின. அமெரிக்காவோடு, தென்கொரியாவின் இராணுவமும் சம எண்ணிக்கையில் நடவடிக்கையில் இணைந்தது. தெற்கின் உள்ளே நன்கு ஊடுருவி விட்ட வட கொரிய இராணுவத்தை நேரடியாக அவர்களுக்குப் பரிச்சயமான நிலப்பரப்பில் எதிர் கொள்வது தற்கொலைக்குச் சமன் என அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் கருதினர். இந்த சந்தர்ப்பத்தில் தான், பசுபிக் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெனரல் மக் ஆர்தரின் இராணுவ அனுபவம் மீண்டும் பயன்பட்டது. நோர்மண்டி தரையிறக்கம் போல, ஆனால் எண்ணிக்கையில் சிறிதாக, வட கொரிய படைகளின் பக்க வாட்டில் அமெரிக்க மரைன் டிவிஷன் ஒன்றை 1950 செப்டெம்பரில் இன்ஞொன் (Inchon) என்ற பகுதியில் மக் ஆர்தர் தரையிறக்கினார். இஞ்சொன் தரையிறக்கம் நோர்மண்டி போல பெரிதாகப் பேசப்படா விட்டாலும், பல வழிகளில் அது நோர்மண்டியை விட வெற்றிகரமானதாகக் கருதப் படுகிறது. ஒரு நாளில் இஞ்சொன் அமெரிக்க மரைன்களிடம் வீழ்ந்து, அடுத்த 11 நாட்களில் வட கொரிய படைகள் சியோலில் இருந்து பின்வாங்கி வடக்கு நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தமைக்கு இஞ்சொன் தரையிறக்கம் தான் மூலக் காரணி. 1950 ஒக்ரோபர் 1 ஆம் நாள், ஐ.நா வின் கட்டுப்பாட்டில் தென் கொரியா வந்தது. 38 வது அகலாங்கு எல்லை மீண்டும் வட, தென்கொரியாக்களின் எல்லையாக உருவானது. அடுத்து நடந்த நிகழ்வுகள், அபரிமித வெற்றியுணர்வு எப்படி தோல்விகளுக்கு வழி வகுக்கும் என்பதைப் பற்றிய ஒரு பாடம்! ஜெனரல் மக் ஆர்தர், வட கொரியப் படைகளை, வடக்கு நோக்கி மேலும் துரத்திச் செல்ல வாஷிங்ரனிடம் அனுமதி கேட்கிறார். இதன் மூலம், வட கொரிய இராணுவ பலத்தை நிரந்தரமாக அழித்து, வட - தென் கொரியாக்களை ஒரே தேசமாக இணைப்பதே நோக்கம். இது நிகழ்ந்தால், சோவியத் ஒன்றியத்திற்கும், சீனாவுக்கும் மிக நெருக்கமாக ஒரு மேற்கின் இராணுவப் பிரசன்னம் உருவாகும். இதை, சோவியத் ஒன்றியமும், சீனாவும் எப்படி எதிர் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்டு பதிலைத் தேட அமெரிக்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் யாருக்கும் தோன்றவில்லை அப்போது. இதன் பிரதான காரணம், வட கொரியாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்க அரசியல் தலைமைகள், மற்றும் பொதுமக்கள் அமைப்புகளின் ஆதரவு இருந்திருக்கிறது. அமெரிக்கா இந்த தொடர் இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியதோடு, ஐ.நாவும் வட தென் கொரியா என்ற பதங்களைத் தவிர்த்து "முழுக் கொரியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என மறைமுகமாக கொரியாக்களை இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. எனவே, குறுகிய காலத்தில், 38 வது அகலாங்கு எல்லையைக் கடந்து , வட கொரியாவின் பியொங் யாங்கை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தொடர்ந்து, வட கொரிய - சீன எல்லையில் இருக்கும் யாலு நதி நோக்கியும் அமெரிக்க இராணுவம் நகர ஆரம்பித்த போது சீனா தன் பங்களிப்பைத் தீவிரமாக்கியது. சீனாவின் "கம்யூனிசத் தொண்டர்கள்" “கம்யூனிசத் தொண்டர் படை” என்பது தான், சீனா வட கொரியாவினுள் அனுப்பிய தன் சீன மக்கள் இராணுவத்திற்கு இட்ட பெயர். சீனாவிடம் ஆட்பலம் - மூன்று இலட்சம் படையினர் வரை- இருந்த அளவுக்கு தொழில் நுட்பம் இருக்கவில்லை. ஆனால், வடக்கு நோக்கி நகர்ந்த ஐ.நா படைகளை (பெருமளவுக்கு அமெரிக்க படைகள்) தங்கள் அலை அலையான ஆட்பலம் மூலம் சீன இராணுவம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அமெரிக்கர்களுக்கு இருந்த பிரதான பலம் விமானப் படை. இந்த அமெரிக்க வான்படை மேலாண்மையை ஈடு கட்ட, சோவியத் ஒன்றியம் தன் “மிக்” ஜெற் விமானங்களைப் பயன்படுத்தி யாலு நதிப் பகுதியில் மட்டும் தனது சொந்த விமானிகளை வைத்து நடவடிக்கைகளில் ஈடு பட்டது. எனவே நடைமுறையில், இது அமெரிக்க, சோவியத், சீனப் படைகளிடையேயான போர் என்றாலும், மூன்றாம் உலகப் போர் உருவாகும் ஆபத்தைத் தவிர்க்க மூன்று நாடுகளும் இதனை வெளிப்படையாக அறிக்கையிடவில்லை. இறுதியில், 3 வருடங்கள் முன்னகர முடியாத பதுங்கு குழி யுத்தத்தை எதிர் கொண்ட ஐ.நா படைகள், பின்வாங்கி 38 வது அகலாங்குக் கோட்டு எல்லையில் மீண்டும் பிரிக்கப் பட்ட கொரியாவை ஏற்றுக் கொண்டதோடு, கொரியப் போர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஜூலை 27, 1953 இல், ஐ.நா படைகளின் தளபதியான அமெரிக்க ஜெனரலும், வட கொரிய இராணுவ ஜெனரலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதோடு கொரிய யுத்தம் ஓய்வுக்கு வந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். போரில் இருந்து உதித்த நாயகர்களும் வில்லன்களும் கொரிய யுத்தம் அமெரிக்காவிற்கு பாதகமாகத் திரும்பிய போது, ஜப்பான் மீது அணுவாயுதத் தாக்குதலை எதிர்த்த மக் ஆர்தர், சீனாவின் மீது அணுவாயுதம் பயன்படுத்த வேண்டுமென்று வாதிட ஆரம்பித்தார். ஆனால், 1945 இல் ஜப்பான் நிலையும், 1950 களில் கொரிய நிலையும் ஒன்றல்ல என்ற தெளிவான பார்வையோடிருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், மக் ஆர்தரின் கோரிக்கையை நிராகரித்து, போரை விரைவாக முடித்து வைக்க விரும்பினார். இதற்காக ஒரு கட்டத்தில், ட்ருமன் ஜெனரல் மக் ஆர்தரை அவரது பசுபிக் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து நீக்கவும் வேண்டியிருந்தது. இதன் பின்னரே, கொரிய தீபகற்பத்தின் போர் வெப்பம் ஓரளவு தணிந்து, போர் ஓய்வுக்கு வந்தது. மறுபக்கம், ஸ்ராலின் மார்ச் 1953 இல் இறந்து போக, ஸ்ராலினை விட சிறிது வித்தியாசமான பார்வை கொண்ட குருசேவ் சோவியத் தலைவரானார் - இதுவும் கொரியாவில் சோவியத்தின் பங்களிப்பை மாற்றியது என்கிறார்கள். சீனாவின் மாவோவும், வட கொரியாவின் கிம் இல் சங்கும் தங்கள் கம்யூனிச ஆட்சியை உள்நாட்டில் பலப்படுத்திக் கொண்டனர். இரு கொரியாக்களுக்குமிடையேயான 38 வது அகலாங்கு எல்லை, பனிப்போரில் ஒரு முக்கிய எல்லைக் கோடாக நிலைத்து, இன்றும் தொடர்கிறது. - முற்றும்
    11 points
  48. என்னமாதிரி ராஜா படகு ஒன்று வெளிக்கிடப்போகுது போவமா? என்று கேட்டார் குமார் அண்ண‌ ? எங்க அண்ண அவுஸ்ரேலியாதான் ம்கும் உங்களுக்கு செய்தி தெரியாதோ? இப்ப கடற்படை எங்க கப்பல் கிளம்பினாலும் அங்க வந்து அள்ளிக்கொண்டு போய் கோட்ஸ்ல ஒப்படைச்சு ஜெயிலில போட்டு கேச போடுறான் நாள் மாதம், வருசக்கணக்கா இழுபட என்னால முடியாது. இந்த முறை அப்படி நடக்காது என்ன நம்பு ம் உங்கள நம்பலாம் நீங்கதான் கடலையே கரைச்சு குடிச்சவர் ஆச்சே. ம் சொல்லுறன் குமார் அண்ண! என்று சொல்ல சரி ஆனால் இதைப்பற்றி மூச்சும் விடக்கூடாது சரி அண்ண யாரிட்டயும் சொல்ல மாட்டன் . இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்க நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு கடலாலும் , வானாலும் நாட்டை விட்டு ஓடிக்கொண்டே இருந்தார்கள் பொருட்கள் இல்லை , பொருட்கள் அதிக விலை தட்டுப்பாடு நாள் முழுக்க வரிசை என மக்கள் மனதையும் வாழ்க்கையையும் தினம் தினம் வாட்டி வதைத்தது. எவரிடம் கேட்டாலும் இந்த நாட்டில் இருப்பதை விட எங்கேயாவது ஓடி விடலாம் போய் விடலாம் என சொல்வார்கள் ( இந்த கால கட்டத்தில் இலங்கையில் நின்றவர்களுக்கு அதன் வலி புரியும்) நானும் நாட்டில் நடக்கும் விசயங்களை பார்த்து பேசாமல் படகு ஏறலாம் என நினைத்து அம்மாவிடம் சொன்னேன் அம்மா நானும் படகு ஏறி வேற நாட்டுக்கு போகப்போகிறன். அம்மாவோ உனக்கு என்ன விசரோ நாட்டில நடக்கிறது தெரியாதா செய்தி வாசிக்கலயா புடிச்சு புடிச்சு உள்ள போடுறத்த பார்க்கலயா? அங்க போனாலும் அவனுகள் எடுக்க மாட்டன் என்றூ சொல்லி விளம்பரமா போடுறாங்க............ ம் அப்ப என்னதான் செய்யுற இந்த நாட்டில?? என்று கோபத்தில் கேள்வி கேட்டு நானும் சைக்கிளை எடுத்து கிளம்பி விட்டன் போகும் வழியில் நண்பனை காண்கிறேன் என்ன நண்பா கேஸ் எப்படி போகிறது? நம்மள நடுத்தெருவில தான் நிப்பாட்ட போறாங்கள் என்றான். ஏன்டா? இன்னும் தீர்ப்பு கிடைக்கலையா? இல்லடா மாதம் மாதம் பிற்போட்டுக் கொண்டே இருக்கானுகள். வேற வேலையும் எடுக்க இயலாது வேற நாட்டுக்கும் போக இயலாது என சலிப்பாக சொன்னான் அவன் . அவன்ற விசாரணையோ போலியான நியமனக்கடிதத்தை வைத்து வேலை எடுத்த என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுவரை நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் அந்த வழக்கு நிலுவை வழக்கு போல இழுத்துக்கொண்டே போய்கொண்டிருந்தது அவனது போலிக்கடிதத்தை அச்சடித்தது யார் என ( தெரியும்) கண்டுபிடிக்க முடியாத அரசாங்கம் , பொலிஸ் அதை வைத்து வேலை எடுத்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருடக்கணக்காக வக்கீலுக்கு காசு வாங்கிக்கொடுக்கும் வேலையை செய்தது. நம்ம நாட்டு டிசைன் அப்படி விசித்திரமான‌ நாடும்தானே. சரிடா நீ என்ன செய்யப்போறா? அவன் என்னிடம் கேட்க நான் நாட்டை விட்டுப்போகப்போறன் மச்சி....................................... என்ன? படகு ஏறப்போறன் என்று சொல்ல............................................................. உனக்கு ஒரே பகிடிதான்டா என சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்தோம். தொடரும் உயிர்...............................................................
    11 points
  49. புலமும் தாயகமும்………… போர் நடந்த காலங்களில் புலம் பெயர் தேசங்களில் வாழும் எம்மவர் தாயகத்திற்குச் செய்த பொருளாதார உதவிகள் எம்மைப் பட்டினிச் சாவிலிருந்து தடுத்தது. போர் முடிந்த பின்பு எமது தாயக மண்ணின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் புலம்பெயர் தேசங்களில் வாழும் உறவுகளின் பங்களிப்பு போற்றுதற்குரியது. அரசாங்கத்தை மட்டும் நம்பி இருந்தால் இவ்வளவு வேகமாக எம்மால் மீண்டெழுந்து இருக்க முடியாது. அந்த வகையில் அவர்களின் உதவிகள் நன்றிக்குரியது. வணக்கத்துக்கும் உரியது. தாயக மண்ணுக்கான உங்களது சேவைகள் செம்மையுறக் கவனிக்க வேண்டியவை எனச் சிலவற்றை முன் வைக்கிறேன். 01. நீங்கள் தாயகம் வரும் போது பொது நிகழ்வு ஒன்றில் உதவித் திட்டமொன்றை அறிவிக்கிறீர்கள். தொடங்குகிறீர்கள். ஆனால் சில இடங்களில் அல்லது பல இடங்களில் அத்தகைய உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை. இடையில் நின்று போக பாதிக்கப்படுவது உதவி தேவைப்படுவோர் தான். ஏனெனில் அவர்களுக்கு உதவி போகிறது தானே என நினைத்து ஏனையோர் உதவ மாட்டார்கள். குறிப்பாக அரச துறையின் செயல் திட்டங்களிலிருந்து விலக்கப்படுகின்றனர். ஆகவே திட்டங்களின் தொடர்ச்சித் தன்மையை உறுதி செய்யுங்கள். சிலரது கல்விப் பயணம், வாழ்வாதாரம் என்பவை இதனால் பாதிக்கப்படுகின்றது. 02. அமைப்பு ரீதியாகச் செயற்பட்டு வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றுக்குப் பயனாளிகளை உள்வாங்குகின்றீர்கள். சில இடங்களில் அத்தகைய திட்டங்கள் சொல்லளவில் இருக்கும் போது அரசாங்க, அரசசார்பற்ற நிறுவனங்களது உதவித் திட்டங்களில் அவர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள். ஏனெனில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக கிராம மட்டத்தில் இயங்கும் கிராம அலுவலர் அல்லது அபிவிருத்தி அலுவலர் பயனாளிகள் தொடர்பான பட்டியலைத் தயாரிக்கும் போது இவருக்கு வெளிநாட்டிலுள்ள இன்னார் உதவி செய்வதாக அறிவித்தார்கள். ஆகவே எமது பட்டியலில் இவரை இடத் தேவையில்லையென நீக்கி விடுவார்கள். அதனால் வறிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 03. தாயகத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணதரம் ஆகிய பரீட்சைகளில் திறமை காட்டுவோருக்கு மடிக்கணனி- லப்ரொப் வழங்குவதைத் தவிருங்கள். இவற்றைப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு உபயோகித்து கல்வியைப் பண்புகளைத் தொலைத்தோர் பலர் உண்டு. ஸ்மார்ட் தொடர்பாடல் சாதனங்களின் யுகத்தைத் தெரியாத பெற்றோர் தான் நிறையப் பேர். அதனால் அவர்களுக்குப் பிள்ளைகளைக் கண்காணித்து வழி நடத்தத் தெரிவதில்லை. 04. வறிய மாணவர்களுக்குக் கல்விக்குரிய உதவித் தொகையை வழங்கும் போது மாதாந்தம் குறித்த ஒரு திகதியில் கிரமமாகக் கிடைப்பதற்குரிய பொறிமுறையை தாயகத்தில் உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரே முறையில் பெரிய தொகைக் காசைக் கொடுக்கும் போது அது வேறு நோக்கத்திற்குத் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. அல்லது காசைப் பொறுப்பாக வைத்திருப்போர் துஸ்பிரயோகம் செய்யும் நிலை உருவாகின்றது. கொடுக்கின்ற பணமானது தாயகத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான புரிதலைக் கொண்ட தொகையாக இருப்பதை உறுதி செய்யுங்கள். மிகச் சிறிய தொகையை வழங்குதல் திட்டத்தின் பயனாளியைச் சரியான முறையில் உயர்த்தாது. 05. தாயகத்திலுள்ள வறிய சமூகப் பிரிவினருக்கு காசு கொடுப்பதற்குப் பொறுப்பாக ஒருவரை நியமித்தால் அவர் சரியாக அப் பணியை ஆற்றுகின்றாரா? பயனாளிகள் சரியாக அதனைப் பயன்படுத்தி முன்னேறுகின்றனரா? என்பவற்றை உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான நேர்மையான வேறு தரப்பினர் மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த ஒரு திட்டத்திலும் தொடர் நடவடிக்கைகள் கிரமமாக நடைபெறுகின்றதா எனப் பார்வையிடுங்கள். சில இடங்களில் நிதித் துஸ்பிரயோகங்கள் இடம் பெறுகிறது. 06. பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி வழங்குவதைப் பரவலாகச் செய்கின்றீர்கள். இதனால் நிறையப் பாடசாலைகளின் பௌதீக வளங்கள் உயர்வடைந்துள்ளது. கல்வி வளர்ச்சி உயர்வடைந்துள்ளது. ஆனால் பணம் கொடுத்தோம், வளங்கள் பெற்றுக் கொடுத்தோமென பாடசாலையின் நிர்வாகத்தில் தலையீடு செய்பவர்களும் உள்ளனர். இது மாணவர்களின் கல்வி அபிவிருத்தியைப் பாதிக்கிறது. பணம் கொடுத்தவர்கள் இஸ்டப்படி எல்லாம் நடக்க வேண்டுமென்ற பிடிவாதம் காரணமாக உள்ளுரில் நல்ல திட்டங்கள் சில இடங்களில் விரயமாகின்றது. 07. ஒரு கிராமத்தில் கட்டிடம் ஒன்றை அமைத்துக் கொடுக்கும் போது ஏற்கனவே உள்ள கட்டிடங்களது பாவனை தொடர்பாக ஒரு மீளாய்வைச் செய்யுங்கள். போட்டிக்குக் கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டுப் பாவனையின்றி விரயமாக இருக்கும் நிலையும் உள்ளது. பிரமாண்டமான கட்டிடங்கள் பல எந்தவித சமூகப் பயனையும் தராது குருட்டு முதலீடுகளாக முடங்கி உள்ளன. 08. கல்வி சார்ந்த முதலீடுகளில் கூடிய கவனம் செலுத்துங்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 03 பீடங்கள் கிளிநொச்சியில் உள்ளன. ஓரிரு ஆயிரம் மாணவர்கள் கற்கின்றனர். அது போல சித்த மருத்துவ பீடம் கைதடியில் உள்ளது. வணிக முகாமைத்துவ பீடம் இராசபாதையில் உள்ளது. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தரமான தங்குமிட வசதிகள் இல்லாமல் தூர இடங்களிலிருந்து நாளாந்தம் பயணம் செய்கின்றனர். ஆகவே இவர்களுக்கான விடுதிகளைக் கட்டி நியாயபூர்வமான வாடகைக்கு வழங்கும் முதலீட்டுத் திட்டங்களைச் செய்யுங்கள். 09. புலம்பெயர் தேசங்களில் மரங்கள், செடி கொடிகளை நினைத்த மாத்திரத்தில் அழிக்க முடியாது. முறையான சட்ட திட்டங்கள் உள்ளன. ஆனால் தாயகத்தில் காணிகளை வாங்குவதும் மரம் செடி கொடி ,வேலிகளை அழிப்பதும் நிகழ்கின்றது. எமது இயற்கையை நாம் நேசிக்க வேண்டும். மரங்களை அழிப்பதன் விளைவை நாம் தான் அனுபவிக்கின்றோம். 10. காணிகளை வாங்கிக் குவிப்பதில் பலர் ஈடுபடுகின்றீர்கள். தாயகத்தில் உழைத்துக் காணிகள் வாங்குவதை யாருமே நினைத்துப் பார்க்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. தாயகத்தில் வாழாத நீங்கள் காணிகளை வாங்கிக் குவிக்கத் தாயகத்தில் வாழ்வோர் காணியற்றவர்களாக உள்ளனர். 11. வருடாந்தம் யூன், யூலை விடுமுறைக் காலங்களில் தாயகம் வரும் போது பகட்டுக்காகச் செலவிடும் பல இலட்ச ரூபாக்கள் உள்ளுர் உழைப்பாளிகளது தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றது. நாமும் புலம் பெயர்ந்தால் வசதியாக வாழலாமெனத் தாயகத்தை விட்டு ஓடுவோர் தொகை இன்றும் நீள்கிறது. நீங்கள் இங்கு பிறந்து வளர்ந்த போது வாழ்ந்த எளிமையை மறந்து போவது நன்றல்ல. உற்பத்தித் திறன் தராத ஊதாரிச் செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். எமது தாயகம் பாரியதொரு பொருளாதாரச் சிக்கலுக்குள் இருந்து மீளப் போராடி வருகிறது. அதற்கு உறுதுணையாக உங்களது பணிகள் இருப்பதை வரவேற்கின்றோம். ஆக்கம் - வேதநாயகம் தபேந்திரன் தமிழர்தகவல் 2023 மே.
    11 points
  50. பத்தொன்பது எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் நடைபெற்றதால் நான் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை எனினும் வந்தவுடன் கூறுங்கள் சந்திக்கலாம் என்றுவிட்டு இருந்துவிட்டேன். 14 தை சகாரா போன் செய்கிறார். நாளை எங்கள் ஊரில் பட்டத்திருவிழா நடைபெற இருக்கு சுமே. வந்தீர்கள் என்றால் என் வீட்டில் தங்கிப் போகலாம் என்கிறார். நான் செல்வச்சந்நிதி கோயிலுக்கு சில தடவைகள் சென்று தொண்டைமான் ஆற்றில் குளித்துவிட்டு வந்ததுடன் சரி. வல்வெட்டித்துறை எப்படி என்றுகூடத் தெரியாது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று வருகிறேன் என்றுவிட்டு அடுத்தநாள் காலையில் ஓட்டோ பிடித்துக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவுக்கு 3000 என்று பேசி கிளம்பியாச்சு. போய் இறங்கியவுடன் இன்னொரு ஆயிரம் தரும்படிகேட்க ஏன் முதலே 3000 என்று சொல்லித்தானே வந்தது. பிறகென்ன என்றதும் தூரம் கூட என்கிறார். நீங்கள் வந்த தூரத்துக்கு 3000 சரிதானே. னீகள் கேட்பதானால் 500 ரூபாய் கூடத் தருகிறேன். அதைவிடத் தரமாட்டேன் என்கிறேன். யாவரும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு செல்ல எது சகாராவின் வீடு என்று தெரியாமல் போன் செய்ய வாசலுக்கு வந்து கையைக் காட்டுகிறார். வாசலில் ஒரு மலரின் பெயர் எழுதியிருக்க வெள்ளை நிறப் பெயிண்ட் அடிக்கப்பட்டு கம்பீரமாக நிற்கிறது வீடு. உள்ளே சென்றால் மிக விஸ்தாரமாக உயரமாக பிரமாண்டமான அறைகளுடன் அட்டாச் டாய்லெட் பாத்ரூமுடன் கூடிய வீடு என்னைப் பிரமிக்க வைக்கிறது. சினிமாக்களில் வரும் வீடுபோன்று மிக அழகாய் இருக்கிறது. என் வளவில் இப்படி ஒரு வீடு கட்டினால் எத்தனை அழகாய் இருக்கும் என எழுந்த கற்பனையை வேண்டாம் என்று முடிவெடுத்து இழுத்து மூடுகிறேன். அவரின் மருமகளாக வர இருப்பவர் தேநீர் ஊற்றிவர அவரையும் அறிமுகம் செய்துவிட்டு நாம் ஊர் கதை, உலகத்துக்கதை, யாழ்க் கதை எல்லாம் கதைக்கிறோம். கதைத்து முடியவில்லை. கொஞ்சம் வெயில் தணிய நாம் வெளிக்கிட்டு பட்டத்திருவிழாவுக்குக் கிளம்பினால் சகராவின் வீட்டுக்கு அண்மையில் இருக்கும் அவர் சிறுவயதில் படித்த பள்ளி தெரிய குதூகலத்தோடு பள்ளியைப் பற்றிக் கதைக்கிறார். போகவர அவரின் உறவினர்கள் தெரிந்தவர்கள் என நின்றுநின்று கதைத்தபடி செல்கிறோம். பட்டத் திருவிழாவுக்கு வேறு ஊர்களில் இருந்தும் சனங்கள் வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கு. வீதிகளும் அடைக்கப்பட்டு குறிப்பிட்ட வீதியால் மட்டும் வாகனங்களை அனுமதிக்கின்றனர். கடற்கரைப் பக்கமாக செல்ல எக்கச்சக்கமான வாகனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. சாரிசாரியாக சனங்கள் போகின்றனர். கடற்கரை பார்க்க அந்த வெயிலிலும் அழகாக இருக்கிறது. இடையிடையே மீன்பிடிப் படகுகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்திசந்தியாக சிறு தெய்வங்களும் கட்டடங்களும் அது பற்றிய கதைகளுமாக சகாரா சொல்லியபடி வர நானும் கேட்டபடி நடக்கிறேன். வானத்தில் தூரத்தில் பட்டங்கள் தெரிகின்றன. மனது குதூகலம் கொள்கிறது. சிறுவயதில் திருவிழாவுக்குச் சென்ற நினைவுகள் வருகின்றன. கிட்டச் செல்லச் செல்ல விலத்த முடியாத சனம். எத்தனையோ விதமான பட்டங்கள், பிரமாண்டமான பட்டங்கள், உருமாறும் பட்டங்கள் என நாலு மூலைப் பட்டம் மட்டுமே பார்த்த எனக்கு இவற்றைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் போய் நின்றால் இருப்பதற்கான இடமே இல்லை. ஒரு அரை மணிநேரம் அதில் நின்றுவிட்டு வேறு பக்கம் செல்கிறோம். அங்கும் சனக்கூட்டம் தான். இருந்தாலும் அங்கு நிற்பதும் பட்டங்களைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக நேரம் கழிகிறது. சகாரா போனை எடுத்து வீடியோ கோலில் கண்மணி அக்காவை அழைக்கிறார். அவர் வந்ததும் அவருடன் கதைக்க தானும் வந்திருக்கலாம் என்கிறார் கண்மணியக்கா. நெட்வொர்க் சரியில்லாததாலும் சன இரைச்சலினாலும் கண்மணியக்கா கதைப்பது வடிவாகக் கேட்கவில்லை. பிறகு கதைப்போம் என்று போனை வைத்துவிட்டுப் பார்க்க ஏற்றியிருந்த பெரிய பட்டங்கள் போதிய காற்று இன்மையால் இறக்கப்பட நாம் அங்கிருந்து வேறு இசை நிகழ்வுகள் நடைபெற இருந்த இடம் நோக்கிச் செக்கிறோம். வழியில் பல ஐஸ்பழ வான்கள் நிற்க சகாரா எமக்கு வாங்கித் தர அதைக் குடித்தபடி நடக்கிறோம். வீதியில் போவதும் வருவதுமாக வாகன நெரிசல்கள். நாம் நடப்பதற்கே இடம் இல்லை. மோட்டார் சயிக்கிளில் வருவோரும் போவோரும் எம்மை யாரும் இடித்துவிடாதபடி நாம் முன்னும்பின்னும் பார்த்தபடி நடக்கிறோம். எமக்குக் கிட்டவாக இரண்டு மூன்று மோட்டார் சயிக்கிள்கள் வருவதும் நிற்பதுமாக சகாரா முன்னே செல்ல நடுவே அவர் மருமகள் நான் அவர்கள் பின்னே செல்கிறேன். போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தியபடி அங்காங்கே நிற்க இருந்தாற்போல் ஒருவன். பார்க்க ரவுடி போல இருக்கிறான். எனக்கும் சகாராவுக்கும் அண்மையில் இடிப்பது போல் வருகிறான். என்ன தம்பி கவனமா ஓடுங்கோ என்கிறேன் நான். என்னட்டை சேட்டை விடாதை. தலையிலயோ தட்டுறாய் என்றபடி ஏதேதோ சொல்ல எனக்கோ ஒன்றும் புரியாமல் அவன் என்னைச் சொல்கிறானா அல்லது சகாராவா என்று எண்ண அவன் சகாராவைப் பார்த்துத் திட்டுவது தெரிய தவறுதலாத் தட்டுப்பட்டிருக்கும் தம்பி என்று அவனை நான் அமைதிப்படுத்தப் பார்க்க, நான் வேணும் என்றுதான் அவனுக்கு தலையில அடிச்சனான் என்கிறா சகாரா. எனக்குப் பதட்டமாகிறது. ஏன் அடித்தீர்கள் என்று கேட்க அவர் தேவையிலாமல் தனக்குக் கிட்ட அவர் மோட்டார் சயிக்கிளை கொட்டுவர அதுதான் மண்டையில போட்டனான். இவை எங்கள் ஊரவையும் இல்லை.வாற இடத்தில ஒழுங்கா நடக்க வேண்டாமோ என்று சகாரா கேட்க நான் சரிதான் என்கிறேன். தண்ணியும் அடித்திருக்கிறார்கள் போல. இந்தியத் திரைப்படங்களில் சிறிய ரவுடிகள் போலவே இருக்க இன்று என்ன நடக்கப்போகுதோ, கடவுளே காப்பாற்று என்று மனதில் வேண்டிக்கொள்கிறேன். மெதுவாக எனது போனை எடுத்து அவர்களை வீடியோ எடுத்தால் கண்டுவிடுவார்கள் எனப் பயந்து சும்மா கையில்வைத்திருப்பதுபோல் அவர்களின் மோட்டார் சயிக்கிளை வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறேன். அதன்பின் இரண்டு மூன்றுபேர் எமக்குகிக்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்கவேணும் என்று கூற எனக்கு எந்தப் பக்கத்தால் ஓடுவது என்று கூடத் தெரியவில்லையே என மனதில் எண்ணுகிறேன். சகாராவோ அசரவில்லை. எங்கள் ஊரில வந்து என்ன தனகல் வேண்டிக்கிடக்கு. வந்தா வந்த அலுவலைப் பாருங்கோ. எங்கடை ஊர் ஆட்களைக் கூப்பிட்டன் என்றா வீடுபோய் சேரமாட்டியள் என்கிறா. அவர்கள் ஊரவர் என்று தெரிந்தபின் சமாளித்து பின்வாங்கிச் செல்ல எனக்குப் பதட்டம் தணியவே இல்லை. அதன்பின் இந்தியாவில் இருந்து வரவளைக்கப்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குச் சென்றால் நிகழ்வு ஆரம்பிக்க இரவாகும் என்றதும் நாம் திரும்பி நடக்கிறோம். சிதம்பராக் கல்லூரி வரும் வழியில் இருக்க அதுபற்றியும் சகாரா கூறிக்கொண்டே வருகிறா. அண்ணரின் வீட்டையும் ஒருக்காப் பார்க்கவேண்டும் என்றதும் வீடு எங்கே இருக்கு வளவு மட்டும்தான் என்றபடி கூட்டிக்கொண்டு செல்கிறா. பார்த்தால் மதில்கள் எல்லாம் உடந்த நிலையில் இருக்க வளவு முழுவதும் மோட்டார் சயிக்கிளை நிறுத்தி வைத்துள்ளனர். மனதில் ஒருவித வலி எழுகிறது. இந்தப் பெரிய வீரனை நீங்கள் நினைக்கவேண்டாமா. அவரின் வீட்டைத்தான் இராணுவம் அழித்தால் அந்த வளவை மாசுபடுத்தாது பாதுகாக்கக்கூட முடியாதவர்களாக அவ்வூர் மக்கள் வாழ்கிறார்களே என்னும் ஆதங்கம் எழுகிறது. சந்தியில் உள்ள ஆலமரத்தடியில் கட்டியிருந்த கட்டில் சிறிது நேரம் இருந்து என்னை அசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் எழுந்து அண்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவர் லண்டனில் வசித்தவர். தற்போது அங்கு வாழ்கிறார். அவருடனும் சென்று கதைத்துவிட்டு களைத்துப்போய் வீடு வருகிறோம். சகாராவின் அண்ணியார் எமக்காக தோசை, சம்பல், சாம்பார் என கொடுத்துவிட பசிக்கு அமிர்தமாக இருக்கிறது. அதன்பின் சகாராவின் சகோதரர்கள் வந்து இயல்பாகக் கதைத்துவிட்டுச் செல்ல வேறு உறவினர்களும் வருகின்றனர். மீண்டும் இரவு ஒன்பது மணிபோல் மிகப் பெரிதாக அழகாக வடிவமைக்கப்படிருந்த டோரா பொம்மை ஊர்வலமாக வந்து ஒரு கோவிலுக்கு அண்மையில் நின்று பொம்மையின் உள்ளே நின்று இருவர் ஆட்டுவிக்க பார்க்க அழகாக இருக்கிறது. மின்விளக்கு வெளிச்சத்தில் இளயவர்களும் சிறுவர்களும் குத்துப் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர். அதற்கு ஒரு கதை கூட சகாரா சொன்னார். எனக்கு மறந்துவிட்டது. நடந்து நடந்து கால்கள் சரியான வலி. ஒரு இரண்டு மணி நேரத்தின் பின் வந்து நான்கு பேர் படுக்கக்கூடிய கட்டிலில் நான் மட்டும் படுத்து உடனே தூங்கியும் விட்டேன். அடுத்தநாட் காலை பிந்தி எழுந்து காலை உணவை உண்டு சகாராவுக்கும் எனக்கும் அலுவல்கள் இருந்தபடியால் நான் கிளம்பிவிட்டேன். வரும்போது ஓட்டோ பிடிக்காது பெரிய மினிபஸ்சில் இடங்களைப் பார்த்தபடி யாழ்ப்பாணம் வந்து அங்கு ஒரு திரைப்படமும் பார்த்துவிட்டு ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்கிறேன். சகாராவைச் சந்தித்ததும் பட்டத்திருவிழா அனுபவங்களும் ஒரு நீங்கா நினைவாக எப்போதும் என் மனதில் இருந்துகொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நான் அவ்வூர் விடயங்கள் பலதையும் கூறாது விட்டுவிட்டேன். மன்னியுங்கள் சகாரா. அண்ணர் பிறந்து வளர்ந்த இடம் இப்படியாய் இருக்கு.
    11 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.