"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 141 மேலும், 'புத்தரும் அவருடைய போதனைகளும்' என்ற தலைப்பை தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் சேர்த்துள்ளேன். / Additionally, I am including the topic 'The Buddha and His Teachings' in both Tamil and English. பகுதி: 141 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" சமூக மாற்றம் [Transformation of Society]: புத்தரின் போதனைகள் தனிநபர்களை மட்டுமல்ல, சமூகங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமூக சமத்துவம், நீதி மற்றும் அகிம்சை [social equality, justice, and non-violence] மீதான அவரது முக்கியத்துவம், 20 ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் [Martin Luther King Jr.] தலைமையிலான வன்முறையற்ற சிவில் உரிமைகள் இயக்கம் உட்பட சமூக மாற்றத்திற்கான இயக்கங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நீடித்த செல்வாக்கு [Enduring Influence]: கௌதம புத்தரின் போதனைகள் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து இன்றும் பொருந்தக் கூடியதாகவே இருக்கின்றன. பௌத்த மரபுகள் மற்றும் நடைமுறைகள் தலைமுறைகளாகக் கடத்தப்பட்டுள்ளதுடன் அவரது போதனைகள் திரிபிடகம் [Tripitaka] போன்ற புனித நூல்களில் பாதுகாக்கப்பட்டும் இன்றுவரை உள்ளன. பலர் அவரது போதனைகளில் உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் காண்கிறார்கள், அவை தனிப்பட்ட வளர்ச்சி, நெறிமுறை நடத்தை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான கட்டமைப்பை [provide a framework for personal growth, ethical conduct, and spiritual development] எல்லோருக்கும் வழங்குகின்றன. கௌதம புத்தர் என்பது புத்த மத வரலாற்றில் மிக முக்கியமான, தாக்கம் கொண்ட ஒரு ஆளுமையாக இருந்தாலும், அவரைப் பிற உலகப் பெரும் நபர்களுடன் ஒப்பிடுவது என்பது ஒரே மாதிரியான விடயம் அல்ல; இது ஒவ்வொருவரின் சாதனைகள், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவரவர் கால சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. இருப்பினும், அவரைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள இங்கே, கௌதம புத்தருக்கும் சில குறிப்பிடத்தக்க நபர்களுக்கும் இடையிலான சுருக்கமான ஒப்பீடுகளை கீழே பார்ப்போம். [1] கௌதம புத்தர் மற்றும் இயேசு கிறிஸ்து இருவரும் முக்கிய உலக மதங்களை நிறுவிய மரியாதைக்குரிய மதத் தலைவர்கள் ஆகும். புத்த மதத்தில் புத்தர் மைய நபராக இருப்பது போல, கிறிஸ்தவத்தில் இயேசு கிறிஸ்து மைய நபராக உள்ளார். அவர்கள் இருவரும் இரக்கம், அன்பு மற்றும் ஆன்மீக ஞானம் [compassion, love, and spiritual enlightenment] பற்றிய செய்திகளைப் போதித்தார்கள். இருப்பினும், அவர்களின் போதனைகள் மற்றும் நம்பிக்கைகள் கணிசமாக வேறுபடுகின்றன, மேலும் அவர்களின் வரலாற்று சூழல்களும் வேறுபட்டவை. [2] கான்பூசியஸ் அல்லது கன்பூசியஸ் [Confucius] ஒரு சீன தத்துவஞானி, அவர் கௌதம புத்தரின் அதே காலத்தில் வாழ்ந்தார். இரு நபர்களும் நெறிமுறைகள், தார்மீக மதிப்புகள் மற்றும் நல்லொழுக்க வாழ்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டும் கொள்கைகளை [ethics, moral values, and guiding principles for leading a virtuous life] வலியுறுத்தினர். புத்தர் தனிப்பட்ட ஆன்மீக வளர்ச்சி மற்றும் ஞானம் பெறுவதில் கவனம் செலுத்திய அதே வேளையில், கன்பூசியஸ் சமூக நல்லிணக்கம், பிள்ளைப் பாசமும், பெற்றோரை மதிக்கும் பண்பும் மற்றும் சமூக கட்டமைப்புகளுக்குள் சரியான நடத்தை [social harmony, filial piety, and proper conduct within societal structures] ஆகியவற்றை வலியுறுத்தினார். [3] சாக்கிரட்டீசு [Socrates] பண்டைக் கிரேக்கத்தின், ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும். அவரது விசாரணை முறைக்கும், உண்மை மற்றும் அறிவைத் தேடும் திறனுக்கும், இவர் பெயர் பெற்றவர். சாக்ரடீஸ் மற்றும் கௌதம புத்தர் வெவ்வேறு காலகட்டங்களிலும் கலாச்சார சூழல்களிலும் வாழ்ந்தாலும், அவர்கள் கேள்வி கேட்பது, சுய பரிசோதனை மற்றும் ஞானத்தைத் தேடுவதில் [questioning, self-examination, and the search for wisdom.] பொதுவான முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டனர். இருப்பினும், புத்தரின் போதனைகள் அறிவுசார் விசாரணையைத் தாண்டி மனித துன்பங்களைத் தணிப்பதை உள்ளடக்கியது. சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். இது தான் அவரின் முறையாகும். Part: 141 / APPENDIX – "The Buddha and His teachings" Transformation of Society: Buddha's teachings have not only influenced individuals but also had a significant impact on societies. His emphasis on social equality, justice, and non-violence has inspired movements for social change, including the nonviolent civil rights movement led by Martin Luther King Jr. in the 20th century. Enduring Influence: Gautama Buddha's teachings have endured for over 2,500 years and continue to be relevant today. Buddhist traditions and practices have been passed down through generations, and his teachings have been preserved in sacred texts such as the Tripitaka. Many people find inspiration and guidance in his teachings, which provide a framework for personal growth, ethical conduct, and spiritual development. Gautama Buddha, also was an influential figure in the history of Buddhism and Comparing him to other great figures in the world is subjective and depends on various factors such as their achievements, impact, and historical context. However, Here, I will provide brief comparisons between Gautama Buddha and a few other notable figures, Just to understand more about him. Jesus Christ: Both Gautama Buddha and Jesus Christ are revered religious leaders who founded major world religions. While Buddha is the central figure in Buddhism, Jesus Christ is the central figure in Christianity. They both preached messages of compassion, love, and spiritual enlightenment. However, their teachings and beliefs differ significantly, and their historical contexts are distinct. Confucius: Confucius was a Chinese philosopher who lived around the same time as Gautama Buddha. Both figures emphasized ethics, moral values, and guiding principles for leading a virtuous life. While Buddha focused on personal spiritual development and attaining enlightenment, Confucius emphasized social harmony, filial piety, and proper conduct within societal structures. Socrates: Socrates was an ancient Greek philosopher known for his Socratic method of inquiry and his pursuit of truth and knowledge. Although Socrates and Gautama Buddha lived in different time periods and cultural contexts, they shared a common emphasis on questioning, self-examination, and the search for wisdom. However, Buddha's teachings extended beyond intellectual inquiry to encompass the alleviation of human suffering. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 142 தொடரும் / Will follow துளி/DROP: 2110 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 141 https://www.facebook.com/groups/978753388866632/posts/34464971656484708/?
By
kandiah Thillaivinayagalingam · 33 minutes ago 33 min
Archived
This topic is now archived and is closed to further replies.