Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்திகள் வாசிப்பது -............

Featured Replies

அந்த பள்ளிகூட பஸ் வழக்கம் போல் எம்மையும் எம்மவர்களையும் ஏற்றி தனது ஏக்கபெருமூச்சை புகையாக தள்ளி பொற்பதி பிள்ளையார் கோவிலடியில் வந்து அடுத்த பட்டாளத்தை சுமக்க தயாரானது.

யாரோ ஒரு புதுவரவு வெள்ளை சட்டை, வேம்படி ரை ஆனால் கண் முட்ட மை,கறுப்பு பொட்டு,கை நிறைய வளையல்,காதில் சிமிக்கி, ஆள் அவித்து வைத்த முட்டை கலர். இதென்னடா புதுவரவு என நாம் வாயில் கையை வைக்க எனக்கு அடுத்து இருந்த குரங்கு “வேம்படியில் இப்ப சின்ன மேளமும் படிப்பிக்கினமோ” என கேட்க பஸ் முழுக்க ஒருமுறை சிரித்ததிர்ந்தது.

முகத்தில் எதுவித உணர்ச்சியும் காட்டாமல் முதல் நாள் பாடசாலை ராகிங் இல் அனுபவம் போல் அப்படியே அமர்ந்துவிட்டது அந்த பெண். பின்னர் காலை மாலை அதே கோலங்களுடன் தினமும் காண்பதால் எங்களுக்கு அது பழகிப்போய் விட்டிருந்தது,அதை விட நாங்களும் எங்கட அலுவலில் பிசி.

இந்தியர்கள் என்றும் புதிதாக வாடைக்கைக்கு வந்து தங்கியிருக்கின்றார்கள், தாய் நடன ஆசிரியர் எனவும் காதுக்கு வந்த செய்தி.

நான் பாடசாலை முடித்து வெளிநாடு போக ஓடித்திரிந்த நாட்களில் எனது நெருக்கமில்லாத நண்பனொருவன் கொக்குவிலுக்கு சுழட்டபோய் வருகின்றான் என்ற செய்தி பரவ “என்னடா விஷயம் “என்று அவனிடம் நான் போய் கேட்டேன். தனக்கு ஏனோ அவளை பிடித்துவிட்டது ஆனால் அவள் தான் திரும்பி பார்க்கின்றாளில்லை என்றான் பாவி.

ஒரு ஆறுமாதம் அலைந்துவிட்டு அவனும் ஜெர்மன் போய்விட்டான்.நானும் லண்டன் பறந்துவிட்டேன்.உனது நண்பனின் பழைய சுழட்டல் என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறுவர் பாடசாலையில் நடனம் கற்பிப்பதாகவும், இலங்கை தமிழ் சினிமாவிலும் நடிப்பதாகும் லண்டனுக்கு அண்மையில் வந்த ஊர்ப்பெடி ஒன்று பாட்டியில் வைத்து சொன்னது.

அதன் பின் எதுவித செய்தியுமில்லை. ஐந்து,ஆறு வருடங்களுக்கு முன் கணவர் சகிதம் கொழும்பில் சுடப்பட்டு இறந்ததாக படங்களுடன் செய்தி பார்த்தேன்.அப்போது தான் தெரியும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தபனத்தில் செய்தி வாசித்துக்கொண்டிந்ததாக.

போன வாரம் ராஜேஸ்வரி சண்முகத்தின் மறைவு பற்றிய பதிவில் இவர் “பயங்கரவாதிகள்”என்று நல்லா உறுத்தித்தான் செய்தி வாசிப்பதாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

காலம் எப்படியெல்லாம் ஓடுகின்றது,மனிதர்கள் எப்படி எல்லாம் நினைவில் இருந்து, அழிந்தும் எழுந்தும் வருகின்றார்கள்.

அனைவருக்கும் தெரிந்தவர் என்பதால் பெயரை தவிர்த்துவிட்டேன்.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

5 வருடங்களுக்கு முன் இறந்தவர்கள் தாங்கள் கொண்டிருக்கின்ற வழமையான உட்கட்சிப் படுகொலையின் சாட்சியங்களாக இருக்கலாம். ஆனால் எமது பார்வையில் இதில் அவர்களைப் பற்றிக் கவலைப்பட என்ன இருக்கின்றது எனப் புரியவில்லை. ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் கொல்லப்படும்போது, அதில் தங்களின் தொழில் என்ற போர்வைக்குள் நின்றபடி, அவர்களை எவ்விட சங்கடமோ, கவலையோ இன்றி அவர்களைப் பயங்கரவாதிகள் என்றும், அவர்களின் கொலைகளில் நியாயமிருப்பதாகவும் காரணம் கற்றபித்த இவர்களின் சாவுகள் சாதாரணமான ஒன்றாகத் தான் இருக்குமே தவிர, இவர்கள் இனத்துக்காகத் தியாகம் செய்த தியாகிகள் அல்லவே!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசு நாதரைத் தவிர.. வேறொருவரும் எழுந்து வர முடியாது.. என்று அந்த..வீதி ஓர பிச்சக்காரன் ஒரு குட்டிப் பாட்டில்.. மேளம் அடிச்சுச் சொன்னான்... எங்கேயே வீதி ஓரமாய் சொந்த வளர்ப்பு நாய்களாலேயே கடித்துக் குதறி.. கொல்லப்பட்டுக் கிடந்த.. உமா என்ற அந்த அடுத்த ஊர்ப் பெட்டை.. ஊர்மிளாவின் கள்ளக் காதலன்.. அவனும்.. தான்..!

(இந்த நாலடி வரிக் வெரி குட்டிக் கதையில் வரும் பெயர்கள்... ஜேசு நாதரைத் தவிர மிச்சம் கற்பனை ஆகும்.) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கு கூட்டம் தான் நினைவில் வந்து தொலைத்தது.

  • தொடங்கியவர்

ஜேசு நாதரைத் தவிர.. வேறொருவரும் எழுந்து வர முடியாது.. என்று அந்த..வீதி ஓர பிச்சக்காரன் ஒரு குட்டிப் பாட்டில்.. மேளம் அடிச்சுச் சொன்னான்... எங்கேயே வீதி ஓரமாய் சொந்த வளர்ப்பு நாய்களாலேயே கடித்துக் குதறி.. கொல்லப்பட்டுக் கிடந்த.. உமா என்ற அந்த அடுத்த ஊர்ப் பெட்டை.. ஊர்மிளாவின் கள்ளக் காதலன்.. அவனும்.. தான்..!

(இந்த நாலடி வரிக் வெரி குட்டிக் கதையில் வரும் பெயர்கள்... ஜேசு நாதரைத் தவிர மிச்சம் கற்பனை ஆகும்.) :)

நல்ல கதைக்கேற்ற விமர்சனம் .

கள்ள காதலியா ? கடத்திய மற்றவன் காதலியா? திறம் என பட்டிமன்றம் வைக்கலாம் எமது தலைவர்களை பற்றி.

இரு தலைவர்கள் விடுதலை தமக்கு மட்டும் சொந்தம் என நினைத்த துரோகிகளாலும்,ஒரு தலைவர் நம்பிவந்தவர்களை நட்டாற்றில் விட்ட துரோகத்திற்காக அவர்களாலேயும்,மற்ற இருவர் எதிரியிடம் சரணடைந்தும் வீர மரணம் எய்தினார்கள் .

இதில் யார் வீரர் என்பதும் நல்ல தலைப்புத்தான்.சரணடைந்தவர்களை வீரர்கள் என்ற பட்டியலில் இடலாமோ தெரியாது ,தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லவும் .

கதை சுவாரசியமாய் உள்ளது. ஆனால் பொருள் புரியவில்லை. பொற்பதி பிள்ளையார் கோயிலடியால் பாடசாலைப்பேருந்து போனதா? என்ன இலக்கம்? கே.கே.எஸ் வழி நமக்கு அத்துப்படி. சுழட்டுவது எனுஞ்சொல்லை பல வருடங்களின்பின் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் கதை சொல்லும்பாங்கு ஈர்ப்புமிக்கதாய் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்காக பல ஆயிரம் இளைஞர்களை சேர்த்து சாமர்த்தியமாக செயற்படுவதாக மக்களுக்கு சொல்லி முழு இலங்கைகையும் பிடிக்கப்போவதாக விக்கிரமாதித்தன் கதை கூறி தனது இயக்கப்போராளிகளை கொல்ல தனது உளவுப்படையை பாவித்த அறிவாளியான தலைவரையும் மறுகரையில் எத்தகைய இடர் வரினும் இறுதி மூச்சு வரை தனது போராளிகளும் தானும் போராடி இறந்ததை எப்படி ஒப்பிட முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைக்கேற்ற விமர்சனம் .

கள்ள காதலியா ? கடத்திய மற்றவன் காதலியா? திறம் என பட்டிமன்றம் வைக்கலாம் எமது தலைவர்களை பற்றி.

இரு தலைவர்கள் விடுதலை தமக்கு மட்டும் சொந்தம் என நினைத்த துரோகிகளாலும்,ஒரு தலைவர் நம்பிவந்தவர்களை நட்டாற்றில் விட்ட துரோகத்திற்காக அவர்களாலேயும்,மற்ற இருவர் எதிரியிடம் சரணடைந்தும் வீர மரணம் எய்தினார்கள் .

இதில் யார் வீரர் என்பதும் நல்ல தலைப்புத்தான்.சரணடைந்தவர்களை வீரர்கள் என்ற பட்டியலில் இடலாமோ தெரியாது ,தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லவும் .

சொந்தக் காதலியை காந்தர்வ மணம் செய்வது ஒன்றும் இலக்கிய காலத்தில் கூட குற்றமில்லை. பாவம்.. மேற்படி எனது குட்டிக்கதையின் நாயகி ஊர்மிளாவின் கள்ளக் காதலனோ பிஸ்ரலைக் காட்டி.. நாய்ச் சண்டை போட்டு.. சப்பா... அதை நினைச்சா.. மலையான் கடை சோத்துப் பார்சல் தான் நினைவுக்கு வருகிறது..!

யார் தலைவர்..???! லெட்டர் கெட் வைச்சிருந்தவன் எல்லாம் தலைவன் என்றால்.. ரபர் ஸ்ராம் வைச்சிருந்தவன் எல்லாம் தலைவன் என்றால்.. எங்க ஊர் போஸ்ட் மாஸ்டரும் தான் தலைவர்..! :lol:

ஜேசுநாதர் தலைவர்.. மக்கள் அவர் பின் சென்றனர். பிரபாகரன் தலைவர் மக்கள் அவர் பின் நின்றனர். காந்தி தலைவர் மக்கள் அவர் வழி நடந்தனர். மண்டேலா தலைவர் மக்கள் அவர் பின் போராடினர். ஏப்ரகாம் லிங்கன் தலைவர் மக்கள் அவர் கொள்கை பின்பற்றி நின்றனர்..! விவேகானந்தர் தலைவர் மக்கள் அவர் போதனையின் வழி நின்றனர். அருட்சகோதரி தெரேசா தலைவர் மக்கள் அவர் தொண்டின் வழி நின்றனர். எங்கப்பா கூட தலைவர் தான் நாங்கள் வழிநடக்க வழிகாட்டி நின்றவர். இவர்கள் தான் தலைவர்கள்...! சும்மா தமக்குள் தாமே துப்பாக்கியை வைச்சுக் கொண்டு...ஒழுக்கமற்ற கொள்கையற்ற ரவுடிகள் கூட்டத்தைக் கூட்டி வைச்சுக் கொண்டு.. அதுக்கு ஒரு லெட்டர் கெட்டையும் வைச்சுக் கொண்டு.. தன்னைத் தானே.. தலைவன் என்றவன் எல்லாம் தலைவன் கிடையாது. :):lol:

Edited by nedukkalapoovan

ஜேசு நாதரைத் தவிர.. வேறொருவரும் எழுந்து வர முடியாது.. என்று அந்த..வீதி ஓர பிச்சக்காரன் ஒரு குட்டிப் பாட்டில்.. மேளம் அடிச்சுச் சொன்னான்... எங்கேயே வீதி ஓரமாய் சொந்த வளர்ப்பு நாய்களாலேயே கடித்துக் குதறி.. கொல்லப்பட்டுக் கிடந்த.. உமா என்ற அந்த அடுத்த ஊர்ப் பெட்டை.. ஊர்மிளாவின் கள்ளக் காதலன்.. அவனும்.. தான்..!

(இந்த நாலடி வரிக் வெரி குட்டிக் கதையில் வரும் பெயர்கள்... ஜேசு நாதரைத் தவிர மிச்சம் கற்பனை ஆகும்.) :)

ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் விரும்பி தானே உறவுவைத்தார்கள்?

தலைப்பு சமந்தமில்லாத கருத்துக்கள் வைப்பதை தவிர்க்கவும்............

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் விரும்பி தானே உறவுவைத்தார்கள்?

தலைப்பு சமந்தமில்லாத கருத்துக்கள் வைப்பதை தவிர்க்கவும்............

முதலில்.. கதையின் அடிக்குறிப்பை வாசிக்கவும். அதன் பின் கருத்து எழுதவும்.. போதனை செய்யவும்..! :lol:

அதுமட்டுமல்ல.. உமாமகேஸ்வரன்.. அவருக்கும்.. இங்குள்ள கதைக்கும் ஏதும் சம்பந்தம்... அப்போ அர்ஜின் அண்ணாவின் மேல உள்ள கதைக்குள்ளும் திட்டமிட்ட அரசியல் செருகல்கள் இருக்குமோ..????! அதை சிலர் வரவேற்கினமோ..???! ஏன்னா.. கேள்வி எம்மை நோக்கி மட்டுமே நீள்கிறது.. அடுத்தவனை தப்புச் செய்ய தப்ப விடுகிறதே.. ஏனோ...?????! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கிறது அண்ணா...தொடர்ந்தும் வேற கதைகள் எழுதுங்கள்

.

.

இந்தியர்கள் என்றும் புதிதாக வாடைக்கைக்கு வந்து தங்கியிருக்கின்றார்கள், தாய் நடன ஆசிரியர் எனவும் காதுக்கு வந்த செய்தி.

.

******** யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவராவார். http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE

  • கருத்துக்கள உறவுகள்

******** யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவராவார். http://ta.wikipedia....%AE%9C%E0%AE%BE

இவர் (ரேலங்கி) இ.ஒ.கூ.வில் ஒலிபரப்பாகிவரும், EPDP க்கு ஆதரவளிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் இதயவீணை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வந்தார். இந்நிகழ்ச்சி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அவர்களது செயல்களுக்கும் எதிரான கருத்துக்களை கொண்டதாகும்.

ரேலங்கியின் கணவர் முன்னாள் ஆயுதக்குழுவும் இப்போது ஆயுத அரசியல் கட்சியாக விளங்கும் PLOT(E) உறுப்பினராவார். இக்கட்சி விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டது என டெயிலி மிரர் பத்திரிகை கொலை தொடர்பான செய்திக் குறிப்பில் வெளியிட்டிருக்கிறது.[3]

--------------------------------

இவரின் கொலைக்கும் விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டாலும் அவர்கள் அதை மறுத்திருந்தார்கள்.

இதனையும் வெளில தெரிய இணைச்சு விடுங்கோ.. அபராஜிதன். அப்ப தான் தெரியும்.. இவர்களின் ஆக்கங்களின்.. கதைகளின்... அநேக கருத்துக்களின் பின்னணிகள் என்ன என்று..! எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கப் போயினம்..! :):lol:

ஒரு இனத்தின் அழிவை தங்கள் காட்டிக்கொடுப்புகளால் தீர்மானித்தவர்கள் எல்லாம் தலைவர்களாக இங்கு இனங்காட்டப்பட முடியுமுன்னா.. ஒரு இனத்தின் இருப்புக்காக தங்களையே இந்தத் துரோகங்களின் மத்தியிலும் தாரை வார்த்தவர்களை என்னென்பது..???!

யாழ் செல்லும் பாதையில்.. இவர்கள்... நெருஞ்சி முட்கள். அவதானமாக இருப்பது அவசியம்..! :)

Edited by nedukkalapoovan

இதுhttp://www.yarl.com/forum/lofiversion/index.php/t6044.html ரேலங்கி கொலை சம்பந்தமாக பழைய yarl இல் வந்த கருத்துகள்

நெடுக்ஸ் இவர்களுடன் வாதிடுவதை விட இவர்களின் கதைகள் வெறும் புனைவுகள் என்று வாசகர்களுக்கு ஆதாரங்களுடன்

இணைத்து விட்டால் வாசகர்கள் முடிவு எடுப்பார்கள் எது சரி எது பிழை என இவர்களுடன் வாதிடுவதால் இவர்கள் மாற போவதில்லை ஒரு போதுமே ..வீணாக திரிகள் நீண்டுகொண்டு செல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கு கூட்டம் தான் நினைவில் வந்து தொலைத்தது.

இது எல்லாம் முற்போக்கு சிந்தனை என்று எடுத்தால்தான் இப்ப காலம்கடத்தலாம்,பிரசர்,டென்சன் இல்லாம் வாழ்க்கை ஒடும்..

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன் ஆக்களோடை மல்லுக்கு நிக்காமல் எழுதுங்கோ. உங்களால் நல்ல இலக்கியத்தை படைக்க முடியும். புலி புலியென்று திட்டி துரத்தித்துரத்தி திட்டு வாங்காமல் இப்படி எழுதினீங்களானால் பலவிடயங்கள் பதிவாகும்.

+4

Edited by shanthy

http://en.wikipedia.org/wiki/Relangi_Selvarajah

அர்யுன்... நீங்கள் கதையெழுதும்போது கூட காரியத்தில கண்ணாய் இருக்கின்றீர்கள்!

நாங்களும் அப்பிடித்தானாக்கும்! :D

அர்யுன் ஆக்களோடை மல்லுக்கு நிக்காமல் எழுதுங்கோ. உங்களால் நல்ல இலக்கியத்தை படைக்க முடியும். புலி புலியென்று திட்டி துரத்தித்துரத்தி திட்டு வாங்காமல் இப்படி எழுதினீங்களானால் பலவிடயங்கள் பதிவாகும்.

+4

இப்ப கொஞ்ச நாளாக அர்ஜூன் அண்ணையின் கருத்துக்களுக்கு ஊக்கம் கொடுக்கிறீர்கள் ஏன்?

உசுப்பேத்தும் வேலையா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன என்று நாங்க ஒற்றுமை படுறது என்றே தெரியல்ல :(

இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்

ஐயாத்துரை நடேசன்பலனதராஜா ஐயர்கே. எஸ். ராஜாமயில்வாகனம் நிமலராஜன்ரிச்சர்ட் டி சொய்சாதேவிஸ் குருகேதர்மரத்தினம் சிவராம்ரேலங்கி செல்வராஜாநடராஜா அற்புதராஜாஐ. சண்முகலிங்கம்சுப்பிரமணியம் சுகிர்தராஜன்சின்னத்தம்பி சிவமகாராஜாசந்திரபோஸ் சுதாகரன்சம்பத் லக்மால் சில்வாலசந்த விக்கிரமதுங்கசெல்வராஜா ரஜீவர்மன்

புளொட் ஆயுதக் கும்பலைச் சேர்ந்தவனும்.. வளும்.. ஈபிடிபி ஆயுதக் கும்பலைச் சேர்ந்தவனும்.. இதர கும்பல்களைச் சேர்ந்தவர்களும்.. ஊடக அவியலாளர்களாக நிஜ ஊடகவியலாளர்களோடு பட்டியலிடப்படும் வேளையில்.. யாழ்ப்பாணத்தில்.. வன்னியில் விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வன்னி ஊடகவியலாளர்கள் பற்றி எந்தப் பெயரும் இந்தப்பட்டியலில் இல்லையே. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய தகவலும் இல்லையே..????!

இந்த இலட்சனத்தில்.. ஒற்றுமை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. மனிதம் எல்லோருக்கும் பொதுவானது. அது.. வன்னிக்கு வாகரைக்கு புலிக்கு என்று புறக்கணிக்கப்படுமானால்.. அது மனிதமும் அல்ல.. அது மனித அக்கறையும் அல்ல.

ரேலங்கி செல்வராஜா என்பவர்.. சிங்களப் பேரினவாத ஊடகங்களில் கூலிக்கு தொழிலாற்றிய ஒருவர். அதுமட்டுமன்றி அவர் ஒட்டுக்குழு துரோகக் கும்பல்களின் பேச்சாளராக இயங்கியவர். அவரின் கணவர் முழு நேர ஒட்டுக்குழு ஆள். மக்களை மிரட்டி பணம் பார்ப்பதை கொழும்பில் இருந்து செய்தவர். அவர் இன்று..பெரிய ஊடகவியலாளராக தெரிகின்ற அதேவேளை வடக்குக் கிழக்கைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் கடந்த 35 ஆண்டுகாலப் போரில் சிங்கள அரச முப்படைகளாலும்.. எதிரிக்கு துணைபோன.. ஈபிடிபி.. புளொட்.. ஈபிஆர் எல் எவ்.. ஈ என் டி எல் எவ்.. கருணா குழு.. மோகன் குழு. ராசிக் குழு.. ஜிகாத் குழு.. போன்ற இனத்துரோகக் கும்பல்களாலும் கொல்லப்பட்டது பற்றிய நீண்ட பட்டியல் மறைக்கப்படுவது ஏன்..????????????????????????!

ரேலங்கி பற்றி கதை எழுத ஊக்கிவிக்கிற ஆக்கள் வன்னியில் அநாதையா இறந்து போன சத்தியமூர்த்தி போன்ற நூற்றுக்கணக்கானோர் பற்றி ஏன் எழுதுவதில்லை..???! அவர்கள் எல்லாம் உங்களுக்கு ஊடகவியலாளர்களாக தெரிவதில்லையோ..???! அவர்கள் தமிழர்கள் இல்லையோ..??! அதேபோல்.. போராளி ஊடகவியலாளர்கள்.. ஈழநாதம் மீதான.. புலிகளின் குரல் மீதான குண்டு வீச்சுக்களில் கொல்லப்பட்ட போதும்.. அவர்கள் குறித்த கதைகளை எவரும் எழுதுவாரில்லை..???! எந்த துரோகக் கும்பலாவது அவை சார்ந்துள்ள அரசுகளிடம்.. தமிழ் மக்களிடம் ஒற்றுமை வேண்டி அந்தப் போராளி ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுத்ததுண்டா..??!

இந்த பாரபட்ச போக்கோடு.. ஒற்றுமை என்று ஓலமிடுவதும்... துரோகிகளுக்கு காக்கா பிடிப்பதும்.. இனத்துக்கு அழிவாக அமையுமே தவிர விடிவாகாது..! இது மறைமுகமாக இன அழிவிற்கு உதவி நிற்பதற்கு ஒப்பாகும்..! இதனை இவர்கள் செய்வதன் மூலம் இனம் அடையும் இலாபம் என்ன..??! இவர்களை முன்னிறுத்துவதன் மூலம்.. இந்தத் துரோகிகள் மறைக்க விரும்புகின்ற விடயம் தான்.. என்ன..??! அதனால்.. மக்கள் அடையப் போகும் நன்மை என்ன..???!

ரேலங்கி போன்றோர் அவர்களின் சொந்த வர்த்தகப் போட்டியில் கொல்லப்பட்டவர்கள். அவை தனிப்பட்ட கொலைகள் சார்ந்தவை.

கொழும்பில் முக்கிய வர்த்தகளாக விளங்கிய சண்முகம்.. சுப்பையாவை.. வர்த்தகப் போட்டியில் போட்டுத்தள்ளிய பிரேமதாச அவற்றை ஜே வி பி தலையிலும்.. தமிழ் ஒட்டுக்குழுக்கள் அதை புலிகள் தலையிலும் 1989 காலப் பகுதில்.. போட்டதைப் போன்ற ஒரு சம்பவமே இது.

இதனை யாழன்புக்கான கேள்வியாக அன்றி யாழுக்கான கேள்வியாகவே முன்வைக்கிறோம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி சாந்தியக்கா இனி கதைக்குள் அரசியல் சேர்ப்பதில்லை .

நன்றி கவிதை .சும்மா என்னுடன் பஸ்இல் வந்தவர் என்று சொல்ல போக விக்கிபஈடியாவா ?

அர்ஜுன் நீங்கள் உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

அர்ஜுன்,

நான் ஒண்டு சொன்னால் நீங்கள் கோவிக்க மாட்டீங்களே. ? நீங்கள் நன்றாக கதை எழுதிறீங்களே. பிறகு எதுக்கு வீண் அரசியல் விவாதங்கள். பேசாமல் கதை எழுதங்களேன்.

உங்களின் 808 பாடசாலை பேரூந்தும், அதில் ஏறிய அழகு மங்கையும் உண்மை.

ஆனால் பொற்பதி பிள்ளையார் கோயில் முன்பாகவா, நாமகள் பாடசாலை முன்பாகவா அந்த அழகு மங்கை பாடசாலை பேருந்தில் ஏறினா .?

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் குறுங்கதைகள் எழுதும் திறமை உங்களிடம் நிறைய இருக்கின்றது அதில் அரசியல் கலந்தாலும் பரவாயில்லை உங்களிற்கென ஒரு தனி பாணியை உருவாக்கி எழுதுங்கள். அதுவே உங்களை தனித்துவமாக அடையாளமிடும். இது எனது சொந்த அனுபவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.