Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டவா......... ?!

Featured Replies

530089_10150692637787532_518397531_9604554_1380691839_n.jpg

... சில வருடங்களுக்கு முன் ..... ஒரு வெள்ளிக்கிழமை ... ஈலிங் அம்மன் கோயிலுக்கு .... மாலை நேர பூஜை காண, மகனையும் அழைத்து சென்றிருந்தேன். பூஜை நேரத்து முன் போனதால், அம்மனுக்கு முன் சப்பாணி கட்டியபடி அமர்ந்து இருக்க, மடியில் மகன். ... பூஜைக்கு முன் அம்மனுக்கு பாலாபிசேகம் - பல குடங்கள், தயிர் - அதுவும் பல, அதற்கு முன் தேன், பழங்கள், அது, இது என்று அள்ளி தோய வார்த்துக் கொண்டிருந்தார், கோயில் பிரதமகுரு! ... நானோ பக்தி பரவசத்தில் கைகளை கூப்பியபடி உருகி இருக்க ... என் மடியில் அமர்ந்திருந்த மகனோ ...... "அப்பா, ஏன் இவ்வளவற்றையும் அநியாயமாக ஊத்துகிறார்கள்/கொட்டுகிறார்கள்?" என்றான். ... உண்மை! ..

... ஆண்டவனா/ஆண்டவளா கேட்கிறார்கள், எம்மை இவ்வளவற்றையும் ஊற்றி அநியாயப்படுத்தச் சொல்லி????????

... கி.மு எழுதப்பட்ட வேத ஆகமமங்களை ... இன்றும் !!! ... அதில் உள்ள பலதுகள் பிழைகள் என்று உணர்ந்தும் ... கைவிட தயங்குகிறோம்!!!!!

301738_3805153252698_1393380529_33514220_231875484_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எமது மதத்தை பழிக்கும் உங்கள் கண்ணில் அம்மனின் வேல் வந்து பாய..........

இது என்னுடைய சாபம் மட்டுமில்லை அனைத்து இந்துக்களின் சாபமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் அண்ணை கவனம்....சாமி கண்ணைக்குத்தப்போவுது... :unsure:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலவிடயங்கள் எமது சமுதாயத்திலிருந்து தூக்கியெறியப்பட வேண்டும்.பக்தி எனும் பெயரில் பட்டிக்காட்டுத்தனங்களும்.......அடாவடித்தனங்களும் தலை தூக்கிவிட்டது..அதிலும் புலம்பெயர் நாடுகளில்..."கடவுளின் பெயரில் தமிழர்களின் கேளிக்கை கொண்டாட்டங்கள்" அதிகமாய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சூல வைரவா சுழட்டி குத்து.

.

எங்கே எளிமை இல்லையோ அங்கே இறைவன் இல்லை.

இந்தியாவில் உள்ள சில இந்துக் கோவில்களிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. இந்தியாவின் வறுமையை ஒழிக்க இந்தப் பணம் போதாது. ஆனால் ஏழைகளுக்கு பல நற்காரியங்களைச் செய்யலாம். உதாரணமாக இலவச மருத்துவமனைகள், ஏழைச் சிறுவர்களுக்கு ஒரு வேளை உணவு.....

இந்தக் கோவில்களில் இறைவன் இல்லை !!

உரோமன் கத்தோலிக்கச் சபையிடம் 60,000 தொன்களுக்கு அதிகமான தங்கம் இருக்கிறது. 1 தொன் = 1000 கிலோ.

இதைவிட அவர்களிடம் இருக்கும் ரியல் எஸ்டேட் பல ஆயிரம் பில்லியன் டொலர்களைத் தாண்டும். பாப்பரசர் படுக்கும் கட்டில் தங்கம். (மெத்தையை தவிர). அவர் குடிக்கும் கிண்ணங்கள், தட்டுகள் தங்கம். அவர் கக்கா இருக்கும் கொமட்டின் கைபிடி தங்கம். அவர் பாத்ரூம் தண்ணீர் பைப் கைபிடிகள் தங்கம்.

கத்தொலிக்கச் சபை மனம் வைத்தால் உலகின் ஆட்கொல்லி நோய்களை ஒழிக்கும் ஆய்விற்குத் தேவையான பணம் அவ்வளவையும் வளங்கலாம்...

ஆபிரிக்காவின் பஞ்சத்தில் மடியும் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றலாம்.... ..

  • கருத்துக்கள உறவுகள்

.

எங்கே எளிமை இல்லையோ அங்கே இறைவன் இல்லை.

இந்தியாவில் உள்ள சில இந்துக் கோவில்களிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. இந்தியாவின் வறுமையை ஒழிக்க இந்தப் பணம் போதாது. ஆனால் ஏழைகளுக்கு பல நற்காரியங்களைச் செய்யலாம். உதாரணமாக இலவச மருத்துவமனைகள், ஏழைச் சிறுவர்களுக்கு ஒரு வேளை உணவு.....

இந்தக் கோவில்களில் இறைவன் இல்லை !!

உரோமன் கத்தோலிக்கச் சபையிடம் 60,000 தொன்களுக்கு அதிகமான தங்கம் இருக்கிறது. 1 தொன் = 1000 கிலோ.

இதைவிட அவர்களிடம் இருக்கும் ரியல் எஸ்டேட் பல ஆயிரம் பில்லியன் டொலர்களைத் தாண்டும். பாப்பரசர் படுக்கும் கட்டில் தங்கம். (மெத்தையை தவிர). அவர் குடிக்கும் கிண்ணங்கள், தட்டுகள் தங்கம். அவர் கக்கா இருக்கும் கொமட்டின் கைபிடி தங்கம். அவர் பாத்ரூம் தண்ணீர் பைப் கைபிடிகள் தங்கம்.

கத்தொலிக்கச் சபை மனம் வைத்தால் உலகின் ஆட்கொல்லி நோய்களை ஒழிக்கும் ஆய்விற்குத் தேவையான பணம் அவ்வளவையும் வளங்கலாம்...

ஆபிரிக்காவின் பஞ்சத்தில் மடியும் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றலாம்.... ..

கடவுளை இந்த உலகில் அழிப்பதே இந்த நாதாரி கூட்டம்தானே.............

இந்த நாதாரி கூட்டத்தை அழித்துவிட்டால் கடவுளுக்கே இங்கே வேலை இல்லை.

எல்லாம் நன்றாய் நடக்கும்.

  • 1 month later...

.

எங்கே எளிமை இல்லையோ அங்கே இறைவன் இல்லை.

மிக அற்புதமான வார்த்தைகள் ஈசன். எத்தனையோ ஞானிகளும் அறிஞர்களும் காலாகாலமாக சொல்லிச் சென்றவை இவைதான்.

கோவிலை வைத்து பணம் புரட்டும் கோஷ்டிகள் இவ்வாறான களியாட்டங்களை ஊக்குவிக்கின்றனர். என்ன செய்வது? எமது மக்கள் அறிவிலிகளாகவும், சுயநலம் மிக்கவர்களாகவும், சிந்திக்கும் திறனற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் பல கோடி மக்கள் ஒருவேளை உணவிற்கு வழி இன்றி ஒவ்வொரு நிமிடமும்... இறக்கும் தருணத்திலும் கூட.. ஏன் சொந்த ஊரில் மக்கள் வறுமையில் தற்கொலை செய்யும் நிலையிலும் கூட... எம்மவர்கள் போடும்.. இந்தக் கூத்துக்களையும் போடுங்கோ.... நீங்கள் மட்டும் என்னவோ மனிதாபிமானம் மிஞ்சியவர்கள் என்ற வேடம் தகுமா..????!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தனிப்பட்டவர்கள் செலவழிப்பதற்கும் ஒரு ஆன்மீக அமைப்பு/நிறுவனம் செலவழிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தனிப்பட்டவர்கள் செலவழிப்பதற்கும் ஒரு ஆன்மீக அமைப்பு/நிறுவனம் செலவழிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பல தனிப்பட்டவர்கள் சேர்ந்து செலவழிக்கும் போது அது கருத்தில் கொள்ளப்படும் அதேவேளை அதே பலர்.. தனியத் தனிய அநாவசிய செலவு செய்வது.. கருத்தில் எடுக்கப்படக் கூடாது என்பது தான் புரிய முடியாத வாதமாக உள்ளது கிருபண்ணா.

எல்லா தனி நபர்களும்.. அநாவசிய.. ஆடம்பர செலவுகளை தவிர்த்து.. அந்த வளங்களை வறுமையிலும்.. ஏழ்மையிலும்.. வரட்சியாலும்.. அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் சம்ர்ப்பிப்பதில் என்ன புரிந்துணர்வு வேண்டி இருக்கிறது...????! அங்கு மனிதாபிமான நோக்கம்.. தேவை.. உள்ளது என்பது மட்டுமே புரியப்பட வேண்டி உள்ளது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தற்போது சில பேருக்கு குறுகிய மனப்பான்மை உள்ளது...ஒரு தனிப்பட்ட விழாவை ஒரு பொது விழாவோடு ஒப்பிடுமளவிற்கு அவர்கள் கீழிறங்கி உள்ளது வருந்ததக்கது...தனிப்பட்ட விழாவை செய்பவர்கள் தங்கள் சொந்தக் காசில் தான் விழாவை செய்கிறார்கள் அத்தோடு தங்களது இந்த நாள் மறக்க முடியாத,வித்தியாசமான நாளாக இருக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம் அத்தோடுஅவர்கள் ஊரில் உள்ளவர்களுக்கு உதவி செய்யவில்லை என இவருக்கு எப்படித் தெரியும்...புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு அடுத்தவன்ட‌ சொந்த விட‌யத்தில் தலையிடுவது போன்ற கேவலமான விட‌யம் வேறு ஒன்றுமில்லை...எல்லாத்தையும் சந்தேகத்தோடு பார்ப்பதும்,அதில் பிழை கண்டு பிடிப்பதும்,அடுத்தவன் பொண்டாட்டிக்கு[அதாவது அன்ரி] உட‌ம்பு வைத்து விட்டது என கவலைப்படுவதும் ஒரு வித மன நோய் இதற்கு மருத்துவரை நாடலாம் அதில் தப்பில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வருத்தம் என்று ஆஸ்பத்திரிக்கு வரும் போது தனியாள் என்று பார்ப்பதில்லை. நோயாளி என்று தான் பார்ப்போம். அதுபோலத்தான்.. தனியாட்களால் ஆனது தான் சமூகம். சமூகம் வேறு தனியாள் வேறு அல்ல. இப்படிப் பார்க்கப் போய் தான்.. எவனோ போராடிச் சாக.. எவனோ அகதி அந்தஸ்து வாங்கி இருக்கிறான்...!

துவக்கு தூக்கத் தெரியாதவன் எல்லாம்.. புலியாகி இருக்கிறான்..!

தனி நபர்களின் நகழ்வுகளில் மீதப்படும் செலவு தான்.. சமூகத்துக்கான பங்களிப்பாகும்..! தனிநபரின் செலவு கூடிச் செல்லின் சமூகத்தில் உள்ள பிறருக்கான மனிதாபிமானப் பங்களிப்பு குறைந்து செல்லும்..!

புலம்பெயர்ந்த நாட்டில் வந்து வாழ்ந்தால் மட்டும் போதாது. அந்த நாட்டைப் பற்றி அறிந்திருக்கவும் வேண்டும். உடற்பருமன் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக பிரித்தானிய அரசு செலவிடும் தொகையை ஒட்டியே அது இன்று பெரும் கவலை கொண்டுள்ளது. அதனால் தான் இன்று பள்ளிகளுக்கு அருகில் பாஸ்ட் பூட் கடைகள் அமைக்கக் கூடாது என்ற விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது. பள்ளிகளில் ஜங் பூட் விற்பதற்கு தடை உள்ளது. பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான கருத்தரங்குகளை நாங்கள் (Health science faculty) மாணவர்கள் மத்தியில் நடத்துகிறோம். அங்கெல்லாம்.. நாங்கள் சாப்பிடுறதை இவங்கள் என்ன கணக்குப் பார்க்கிறது என்று எவரும் அறிவிலித்தனமாகக் கேட்பதில்லை. ஆனால்.. யாழில் உங்களைப் போன்றோர் கேட்கிறீர்கள். இது தமிழ் சமூகத்தின் மட்டமான சமூக அறிவையும் எடுத்துக்காட்டுகிறது.

+[size=4] £80m bill for obesity: Benefit claims by those too fat to work have soared under Labour[/size]

+ Obesity 'threatens future of NHS'

http://news.bbc.co.u...lth/6987695.stm

+ In his speech in support of reforming the NHS last week, David Cameron stated that obesity was costing the NHS £4 billion a year, with this expected to reach £6.3 billion by 2015.

Department of Health UK

http://www.number10.gov.uk/news/speech-on-the-nhs/

இவற்றை எல்லாம் தனியாள் விரும்பிச் சாப்பிடுறதை இட்டு.. பிரிட்டன் அரசுக்கு என்ன கவலை என்று கேட்கும் மிக அறிவிலித்தனமே தங்கள் கருத்தில் பதியப்பட்டுள்ளது ரதி அக்கா... அதை உணராமல் எதையோ எழுதித் தள்ளுகிறீர்கள். குறுகிய மனப்பான்மை என்று ஏதோ எழுதுகிறீர்கள். அப்படி என்றால் என்ன என்பதன் அர்த்தமாவது தெரியுமா. அது உங்கள் எழுத்தில் தான் தொனிக்கிறதாவது தெரிகிறதா..???! நீங்கள் எல்லாம்... பிரித்தானிய சமூகப் பிரஜைகள்..! இது பிரித்தானியாவுக்கு வந்த சாபக்கேடு.

சும்மா வெளிநாட்டுக்கு ஓடி வந்தால் மட்டும் போதாது. அந்த நாடுகளின் நடைமுறைகளோடு ஒட்டி வாழவும் பழகிக் கொண்டால் மட்டும் தான் அந்த நாடுகளுக்கு உங்களால் உபயோகம். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல் தான்.. தமிழர்கள் தான் தான் என்று வாழ்ந்தால் மட்டும் போதாது. தாம் சார்ந்த சமூகமும் முன்னேற வேண்டும் என்று வாழ சேமிக்கப்பழக வேண்டும். ஒரு வெள்ளை தொண்டு அமைப்புக்களுக்கு செலவழிக்கும் எத்தனை சதவீதம் நீங்கள் அவற்றிற்கு வழங்குகிறீர்கள். எந்த தமிழ் அமைப்பாவது சர்வதேச தொண்டு அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவி அளிச்சிருக்கா..???! ஆனால்.. நீங்கள் மற்றவர்களின் வரியில்.. ஓசி காசு எடுத்துக் கொண்டு வாழ்வீர்கள். அது மற்றவனது உழைப்பை சுரண்டுவது என்று தெரியாமல்.. வாழ்ந்தும் கொள்வீர்கள். பிறகு அவை தனி நபர் நிகழ்ச்சி நடத்தினம்.. இவைக்கென்ன வயிற்றெரிச்சல் என்றும் சொல்வீர்கள்.

எவனாவது 20,000 பவுன்கள் செலவு செய்து திருமண வீடு செய்வானா..??! தமிழர்கள் செய்வார்கள்..! ஆனால் வெள்ளைகள் செய்யாதுகள். ஏன்னா அதுகளுக்கு தெரியும்.. 20,000 பவுனின் பெறுமதியும்... இந்த உலகில் அதற்குள்ள வெவ்வேறு தேவைகளும். இந்தப் பட்டறிவு இல்லாததன் விளைவு உங்கள் மன உளைச்சல் என்றான கருத்து. இதனை மாற்றிக் கொண்டு உலகத்தை சரியாக புரிந்து கொண்டு தனிநபர்கள் நீங்கள் ஒழுங்காக வாழ்ந்தால்.. செலவை மீதப்படுத்தி.. வளங்களைப் பகிர்ந்து வாழ்ந்தால்.. உலகமே சிறப்பாக வறுமை போக்கி வாழும்..! பட்டினிச் சாவுகளை அது தடுக்கும்..!

இது ஒவ்வொரு பிரஜையின் கையிலும் உள்ளது. கோவிலிலும்.. குளத்திலும் அல்ல..! கோவிலை இயக்குவதும்.. பிரஜைகள் தான். குளத்தில் குளிப்பதும் பிரஜைகள் தான். பெரும் ஆடம்பர செலவில் திருமணம் நிகழ்வு பிற நிகழ்வுகள் செய்வதும்.. பிரஜைகள் தான்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவர்களுக்காக டாம்பீகமாகச் செலவழிப்பதை இந்தத் திரியில் விவாதிப்பது பொருத்தம். தனிப்பட்டவர்களின் ஊதாரித்தனத்தை வேறு திரியில் அலசலாம் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உட‌ற்பருமனைப் பற்றி ஆண்/பெண் இரு பாலாருக்கும் பொதுவாக ஒரு கட்டுரை எழுதி இருந்தீர்கள் என்டால் அதை நான் பாராட்டி இருப்பேன்...எதை,எதை சாப்பிட வேண்டும்,அல்லது எப்படி சாப்பிட்டால் உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்று மருத்துவத்தோடு சம்மந்தப்பட்ட நீங்கள் ஒரு கட்டுரை எழுதி இருந்தால் அதை தமிழர்கள் மீதான அக்கறை என எடுத்துக் கொள்வேன் ஆனால் உங்கள் எழுத்தில் தொனித்தது அக்கறை இல்லை அது என்ன என்பது உங்களுக்குத் தெரியும் அதை நான் சொல்ல விரும்பவில்லை.

துவக்கு தூக்கத் தெரிஞ்ச‌வன் தான் புலியாக இருக்க வேண்டும் என்டால் தலைவர் கூட‌ புலியாக இருக்க முடியாது ^_^

ஈழத்தில் எங்கட‌ மக்கள் எவ்வளவு பேர் அகதிகளாய் இருக்கிறார்கள் முதலில் அவர்களை தலை நிமிர்த்தி விட‌ வேண்டும் அதை விடுத்து நாங்கள் ஏன் வெள்ளைக்கார‌ நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்? ஆனால் எனக்கு தெரிஞ்சு கண பேர் செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றிக்கு மாதம்,மாதம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்...எதற்கெடுத்தாலும் வெள்ளைகள் திறம் என சொல்லுவதை நிப்பாட்டுங்கள் இதுவே உங்களது அடிமைப் புத்தி தான்...எங்கட‌ ஆட்கள் தங்களால் இயலுமானவரை ஊரில் உள்ள மக்களுக்கு உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள்...அது எப்படி உங்களுக்குத் தெரியும் தமிழர்களோடு சேர்ந்து,பழகினால் தானே தெரியும்.

தங்கட‌,தங்கட‌ திருமணத்தை எப்படிச் செய்வது ஒவ்வொருவர‌து விருப்பம் அதை தீர்மானிப்பது அந்த திருமணம் செய்யப் போற பெடியனும்,பெட்டையும் தானே ஒழிய நீங்களோ/நானோ அல்ல அதற்காக அவர்கள் £20 000 யிர‌த்தில் செய்யும் திருமணத்தை ஆதரிக்கிறேன் என்றில்லை எனக்கும் அதில் விருப்பமில்லைத் தான் ஆனால் அதைத் தடுப்பதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ எங்களுக்கோ எந்த உரிமையும் இல்லை.

வெள்ளையல் £20 000 யில் கல்யாணம் செய்யதாவர்களாக இருக்கலாம்... அவர்களின்ட‌ வாழ்க்கையில் அவர்கள் எத்தனை கல்யாணம் கட்டியிருப்பார்கள் எங்கட‌ ஆட்கள் வாழ்க்கையில் ஒரு கல்யாணம் கட்டுவதால் தங்கட‌ கல்யாணத்தை சிறப்பாக செய்ய நினைக்கினம் அதை விட‌ வெள்ளையல் ஒவ்வொரு நாளும் குடி,பார்ட்டி,பெட்டையல் என்று செலவழிக்கிறதை விட‌ எங்கட‌ ஆட்கள் செல்வழிக்கிறது ஒன்டும் பெரிதாக அதிகமில்லை...அவர்களின்ட‌ வாழ்க்கையில் ஒரே தட‌வை இந்த சந்தோச‌த்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள்...தமிழர்களுக்கு சேமிப்பை பற்றி நீங்கள் பாடம் எடுக்கிறீங்கள் :o

இங்க யாழில் கொஞ்ச‌ப் பேர் இருக்கிறார்கள் வெள்ளைக்கார‌ர் ஏதோ திறம் என்றும் எங்கட‌ ஆட்கள் ஏதோ சோறு சாப்பிடுவதால் கீழ் என்றும் எழுதுவார்கள்...ஏதோ வெள்ளைக்கார‌ரில் உட‌ம்பான ஆட்களே இல்லாத மாதிரியும்,தமிழர்கள் தான் எல்லோரும் உட‌ம்போட‌ இருக்கிறார்கள் என்ட‌ மாதிரித் தான் அவங்கட‌ கதை இருக்கும்...அவர்களுக்கு எல்லாம் அடிமை புத்தி இவர்கள் தாழ்வு மனப்பான்னையால் எங்கட‌ சமூகத்தோட‌ சேர்ந்து நட‌க்க மாட்டார்கள் அல்லது எங்கட‌ சமூதாயம் ஏதோ ஒரு கார‌ணத்தால் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கும்...எங்கட‌ சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதை மட்டும் நோக்கமாக வைத்திருப்பவர்கள் அடுத்த சமுதாயத்தோடு எம்மை ஒப்பிட‌ ம‌ட்டார்கள்...யாராவது ஆங்கிலேயர் இன்னொரு ஆங்கிலேயருக்கு தமிழன் இந்த விட‌யத்தில் சிறப்பாக இருக்கிறான் அதைப் பார்த்து நாங்களும் செய்ய வேண்டும் என சொல்கின்றானா? ஆனால் நாங்கள் மட்டும் தான் ஒரே அடுத்தவனை எங்களோடு ஒப்பிட்டு கதைப்பது...இவர்களை மாதிரி ஆட்களுக்கு எங்கட‌ சமுதாயம் முன்னேற வேண்டும் என்ட‌ நோக்கத்தை விட‌ எங்கள் இனத்தை அவமானப்படுத்த வேண்டுமென்பதே முக்கிய நோக்கமாக இருக்கும்...இங்காலேயும் இருக்கேலாமல் அங்காலேயும் போகேலாமல் நடுவில இருந்து கொண்டு முக்கிக் கொண்டு இருப்பார்கள் :lol: ...தன்னால் இப்படிச் செய்ய இயலாமல் கிட‌க்குதே அல்லது அடுத்தவன் எப்படி இப்படி எல்லாம் செய்கிறான் என்ட‌ எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கும்

நான் இதில் எழுதி மினக்கெட‌ப் போவதில்லை ஏனென்டால் நீங்கள் திரும்ப,திரும்ப சொன்னதைத் தான் திரும்ப சொல்லப் போகிறீர்கள்...புதிதாக எதாவது எழுதினீர்கள் என்டால் திரும்ப வந்து எழுதுவேன் இல்லா விட்டால் நன்றி வணக்கம் :D

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கு தூக்கத் தெரிஞ்ச‌வன் தான் புலியாக இருக்க வேண்டும் என்டால் தலைவர் கூட‌ புலியாக இருக்க முடியாது ^_^

அந்தாள்.. இந்தியா போய் துவக்குத் தூக்கிட்டு வந்ததால தான்.. நீங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கே வர முடிஞ்சுது. இப்ப அவருக்கே.. அல்வாவா..!

வெள்ளைக்காரனை உதாரணம் காட்டுறம் ஏன்னா.. அவனிட்ட நம்மளவிட சில நல்ல பழக்கங்கள்.. இயல்பான மனிதாபிமான எண்ண ஓட்டங்கள்.. இருக்குது என்பதால.

20,000 பவுணில.. ஒருத்தன் கலியாண வீடும் செய்து.. கிழமைக்கு 200 பவுனுக்கு அற்ககோலும்.. குடிச்சிக்கிட்டு.. இருக்கிற நிலையில வெள்ளை இல்லை..! ஆனா தமிழன் செய்கிறான்..! அதுதான் ஊதாரித்தனம் என்கிறோம். சமூக அக்கறையற்ற வாழ்க்கை என்கிறோம்.

அநேக தமிழர்கள் வீடுகளில் வீட்டை ஆளுறது ஆன்ரிங்க தான். அவங்க கொழுப்பை குறைக்க அறிவூட்டினா.. குடும்பமே குறைக்கிற அறிவைப் பெறும். பிரிட்டனில் ஒரு நடைமுறையாகச் சொல்லுவாங்க.. பிள்ளைகள் படிப்பை... தாய் தான் அதிகம் கவனிக்கனும் என்று..! காரணம்.. தாய் - பிள்ளை நெருக்கம். தாய் அறிவூட்டப்பட்டால்.. அந்த அறிவு பிள்ளைகளை இலகுவில் அடையும். அது தந்தையரை கட்டுப்படுத்தும்..! இந்த எளிமையான உண்மையைக் கூட புரிய முடியாதவரகள்.. கவிதைப் பக்கம் போய் அதைப் படிக்கபடாது..! இல்லைன்னா.. அதைப் படிச்சிட்டு.. அரைகுறையா உங்க அறிவுக்கு ஏற்ப விளங்கிட்டு வந்து.. மன உளைச்சல்.. மனப்பிராந்தி என்று வழமையான இயலாமை.. வாந்தி எடுக்கப்படாது..!

நலமும்.. நல வாழ்வும் என்று கட்டுரை எழுதி அதை எல்லாம் சோத்தான்ரிங்க அக்கறையோட படிச்சு.. குடும்ப ஆரோக்கியத்தை தங்க உடல் ஆரோக்கியத்தை பேணக் கூடியவங்க என்றா ஏன்.. இந்தப் பாடு. அது முடியல்ல.. என்ற நிலையில தான்.. சிலவற்றை உறைக்கச் சொல்ல வேண்டி இருக்குது.

மேலும்.. உங்கட கருத்தில நியாயமில்லைன்னா.. நீங்க வழமையாச் சொல்லிச் செல்லுற நன்றி வணக்கம் தான் சொல்லிச் செல்லுறீங்க..! இதெல்லாம் நமக்கு பழக்கப்பட்டிட்டுது. :D

நாங்க இப்பவும் சொல்லுறம்.. சமூகம் என்பது தனிநபர்களால் ஆனது. தனிநபர்களின் இயல்பை.. சேமிப்பை.. வளப் பகிர்வை ஊக்குவிக்காமல்.. ஆயிரம் பக்கத்திற்கு ஒரு சில செயற்பாடுகளை மட்டும் திட்டி எழுதி இந்த உலகில் எதனையும் சாதிக்க முடியாது. சாதித்ததா வரலாறில்லை. எமது போராட்டம் கூட தோற்றதற்கு காரணம்.. அதை ஒரு தொகுதி மக்கள் தான் நடத்தனும் என்று அடுத்தவர்களால் (தப்பிப்பிழைத்து தமது சொந்த வாழ்க்கையை குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டு எங்கென்றாலும் அடிமையாகக் கிடந்தென்றாலும்.. செழிப்புற வாழ விரும்பியவர்களால்..) அது.. திணிக்கப்பட்டமை..! அதையே ஒவ்வொரு ஈழத்தமிழனும் தனக்கான விடுதலைக்கான போராட்டம் என்று நினைச்சுப் போராடி இருந்தா.. இன்று விடுதலை எம் கையில்.

அந்த உணர்வேந்தல் வராமைக்குக் காரணம்.. உங்கள் கருத்துக்களில் பிரதிபலிக்கிக்கிறது. அது தமிழ் சமூகம் இந்த அடிப்படையில் இருந்து தான் உங்களை எல்லாம் வளர்த்திருக்குது என்பதை துல்லியமாக இனங்காட்டுது. நீங்கள் எல்லாம் எங்கு போனாலும் உங்களை மாற்றிக் கொள்ளப் போற பேர்வழிகளே இல்லை. மாறாக.. உங்களுக்கு தேவையானதிற்கு ஒரு வியாக்கியான அங்கீகரிப்புக் காரணமும்.. அடுத்தவனின் தேவைக்கு நிராகரிப்புக் காரணமும் சொல்லிக்கிட்டே இருப்பீங்க. இதுதான் தமிழங்க குலப் புத்தி. நாய் வாலை நிமிர்த்திறது கஸ்டம்.. தான். ஆனால்.. ஆப்பிரேசன் செய்தால் நிமிர்த்தலாம்.. என்று நம்புறவங்க நாங்க..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

//துவக்கு தூக்கத் தெரியாதவன் எல்லாம்.. புலியாகி இருக்கிறான்..!//

இது நீங்கள் எழுதியது

//துவக்கு தூக்கத் தெரிஞ்ச‌வன் தான் புலியாக இருக்க வேண்டும் என்டால் தலைவர் கூட‌ புலியாக இருக்க முடியாது//

இது அதற்கு நான் எழுதியது.

நீங்கள் எழுதினதை மறந்து விட்டு நான் எழுதினதை தூக்கிப் பிடிப்பது சூப்பர்...மற்றது எல்லாம் அரைத்த மாவை அரைத்தலேயன்றி வேறு ஒன்றுமில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

//துவக்கு தூக்கத் தெரியாதவன் எல்லாம்.. புலியாகி இருக்கிறான்..!//

இது நீங்கள் எழுதியது

//துவக்கு தூக்கத் தெரிஞ்ச‌வன் தான் புலியாக இருக்க வேண்டும் என்டால் தலைவர் கூட‌ புலியாக இருக்க முடியாது//

இது அதற்கு நான் எழுதியது.

நீங்கள் எழுதினதை மறந்து விட்டு நான் எழுதினதை தூக்கிப் பிடிப்பது சூப்பர்...மற்றது எல்லாம் அரைத்த மாவை அரைத்தலேயன்றி வேறு ஒன்றுமில்லை :lol:

உங்களுக்கு தமிழும் புரியாதா..! சாறி உங்களுக்கு இந்த இடத்தில் பதில் இட்டதே தப்புத்தான்..!

நான் எழுதியது யாருக்கு என்றால்..காலத்தால்.. அகதி அந்தஸ்துக்காக புலியானவங்க பலருக்கு துவக்கே தூக்கவே தெரியாதுன்னு. அதற்குள் தலைவரை செருகி கேவலப்படுத்தியது நீங்க..! அவருக்கு துவக்கு தூக்கத் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம் தானே. அப்புறம் எதற்கு அவரை இதுக்க இழுத்தீங்க..! நோக்கம் என்ன..??! :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மேல உள்ள படங்கள் தயாரிச்சது.. தமிழன்..

இது வெள்ளைக்காரன்...

303456_377863595602067_230003471_n.jpg

நன்றி:FB

வெள்ளை தனிமனிதனில் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்கிறான்.. தமிழன்.. தனியாளா தான் என்னவும் செய்யலாம்.. கூட்டமா செய்யுறதிலும்.. கோவிலுக்கு செய்யுறது தான் தப்பு என்றான்..! மிச்ச எல்லா ஆடம்பரமும் அவனுக்கு அவசியம்..! அங்கெல்லாம் மனிதாபிமானம் கிளம்பாது.. கோவில் என்றால் மட்டும் கிளம்பும்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 21யில் நெல்லையன் தொடங்கிய திரியை காப்பு காரணமாய் தனிப்பட்ட விழாவை அதுவும் ஒரு விழா மலேசியாவில் நடந்தது இங்கு கொண்டு வந்து புகுத்தினது நீங்களே ஒழிய நானில்லை.

அதிலும் படிக்க வந்தவர்கள் எல்லோரும் நாட்டிற்கு பிரயோசனமாய் இருக்கின்ற மாதிரியும்,உயிருக்கு பயந்தோடி வராத மாதிரியும் அகதியாய் வந்தவர்கள் மட்டும் தான் தாய் நாட்டிற்கு எதுவும் செய்யாமலும்,அத்தோடு உயிருக்கு பயந்தவர்கள் என்ட உங்கட கருத்து இருக்குது அல்லவா அதற்கு ஒரு சபாஸ் சொல்லத் தான் வேண்டும் :D ...எப்படி உங்களால் இப்படி உண்மையை மறைத்து கேவலமாய் எழுத முடிகிறது உண்மையில் படிக்க வந்தவனை விட‌ அசேலம் அடித்தவன் தான் இர‌ண்டு வேலை செய்தாவது நாட்டிற்கு ஏதோ செய்கிறான் ஆனால் படிக்க வந்தவனோ உழைத்து தன்ட‌ செலவுக்கும்,படிப்புக்குமே காசை செல்விடுகிறான் ஏதோ கொஞ்ச‌ம் அகதியாய் வந்தவனோட‌ ஒப்பிடேக்குள்ள ஊருக்கு கொடுக்கிறான் அதை விட‌ அவர்களது படிப்பால் ஊருக்கு ஏதாவது உபகாரமோ அல்லது படிப்பு முடித்து திரும்பி போறதோ ஏதுவுமில்லை ஆனால் தாங்கள் ஏதோ கட‌வுள் மாதிரியும் அகதியாய் வந்தவன் ஏதோ கேவலம் மாதிரியும் மற்றவரை நக்கலடிக்கிறது

அகதியாய் வந்தவனுக்கு துவக்கு தூக்க தெரியாது என்டால் படிக்க என்டு உயிருக்கு பயந்து ஓடி வந்தவனுக்கு எல்லாம் துவக்கு தூக்கத் தெரியுமா?...தலைவர் பிறக்கும் போது அவருக்கு துவக்கு தூக்கத் தெரியுமா?...அவர் பழகினார் அத்தோடு போராளிகளுக்கும் பழக்கினார்...ஏதோ நீங்கள் போராளியாய் இருந்து துவக்கு தூக்கின மாதிரியும் அகதியாய் ஓடி வந்தவன் அதுவும் செய்யாத மாதிரியும் கேவலப்படுத்தி எழுதிறீங்களே வெட்கமாயில்லை...அவனாவது மாணவ விசாவில் வந்த உங்களால் செய்ய முடிந்ததை விட‌ அதிகமாய் ஊருக்கு செய்கிறான்

தலைப்போட‌ சம்மந்தம் இல்லாமல் தலைப்பை திசை திருப்புவதே உங்களது வாடிக்கை இது யாழில் உள்ள அனைவருக்கும் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாய் வந்தவனுக்கு துவக்கு தூக்க தெரியாது என்டால் படிக்க என்டு உயிருக்கு பயந்து ஓடி வந்தவனுக்கு எல்லாம் துவக்கு தூக்கத் தெரியுமா?...தலைவர் பிறக்கும் போது அவருக்கு துவக்கு தூக்கத் தெரியுமா?...அவர் பழகினார் அத்தோடு போராளிகளுக்கும் பழக்கினார்...ஏதோ நீங்கள் போராளியாய் இருந்து துவக்கு தூக்கின மாதிரியும் அகதியாய் ஓடி வந்தவன் அதுவும் செய்யாத மாதிரியும் கேவலப்படுத்தி எழுதிறீங்களே வெட்கமாயில்லை...அவனாவது மாணவ விசாவில் வந்த உங்களால் செய்ய முடிந்ததை விட‌ அதிகமாய் ஊருக்கு செய்கிறான்

தலைப்போட‌ சம்மந்தம் இல்லாமல் தலைப்பை திசை திருப்புவதே உங்களது வாடிக்கை இது யாழில் உள்ள அனைவருக்கும் தெரியும்

ஆமா.. இவா நின்று அளவுகோல் வைச்சு அளந்திட்டு வந்து சொல்லுறா.. யார் அதிகம் செய்தவை என்று. அகதிகளாய் வந்து விடுதலைப் போராளிகளைப் பற்றி... கள்ளப் பொய் சொல்லி தான் எம் போராட்டம் பயங்கரவாதமானது. அதுவே அதன் அழிவுக்கும் காரணமானது. அந்தக் கறையை எந்த அகதித் தமிழனாலும் அழிக்க முடியாது. இதைப்பற்றி முன்னரும் பல தடவைகள் விபரித்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் அதை கதைப்பதால்.. அகதிகள் பரிகார பூசை செய்து தமிழீழத்தையோ அல்லது மாண்ட வீரர்களையோ உயிர்ப்பித்துத் தரப்போறதில்ல..!

இதுவே உங்களுக்கு பிழைப்பா போச்சு. உப்புச் சப்பற்று எதையாவது எழுத வேண்டியது. அப்புறம் அதைச் சடைய நாலு இட்டுக்கட்டுகையை எழுத வேண்டியது. அப்புறம்.. உங்களைப் பற்றி களத்தில எல்லோருக்கும் தெரியும் என்று சொந்த தயாரிப்பில்.. சேட்டிபிக்கட் கொடுக்க வேண்டியது. நன்றி வணக்கம் போட்டுக்கிட்டு போக வேண்டியது.

இதெல்லாம்.. நீங்கள் இங்க பன்னெடும் காலமாக தொடர்ந்து செய்து வாற ரெக்னிக் தான் அக்கா. நியாயமிருந்தா அதை எழுதுங்க. இல்லைன்னா.. இந்த வெற்றிக்கு கருத்தெழுதிற போட்டி நடாத்திற வேலை நம்கிட்ட வேண்டாம். அதுக்கு நாங்கள் சரியான ஆக்களில்ல..!

தேவையில்லாமல் இந்த தலைப்பில்.. எங்கையோ கிடந்த ஆன்ரிகளை இழுத்தது வசை பாடினதும் நீங்க.. இப்ப தலைப்பு திசை திரும்புது என்று புலம்பிறதும் நீங்க...! உங்களையும் இப்படி வசைபாடிக்கிட்டு திரிய எங்களுக்கு அதிக நேரம் எடுக்காது. ஆனால் நமக்கு அது அல்ல.. தேவை. தலைப்போடு எம் கருத்தை மக்கள் பார்வைக்கு வைப்பதே எமது குறிக்கோள். எழுதுவது நாங்கள். தீர்மானிப்பது மக்கள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.