Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவலை, ஆத்திரம், அப்பப்போ ஆவேசம்...: ஹக்கீம்

Featured Replies

இந்த நாட்டிலே நாலா புறத்திலும் வாழுகின்ற முஸ்லிம்களின் மனதிலே இன்று மிகப்பெரிய ஒரு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு தம்புள்ளையில் நடந்த சம்பவம் எங்கள் எல்லோரையும் ஆழ்ந்த கவலையை அதே நேரம் ஆத்திரம் அப்பப்போ ஆவேசம் என்ற நிலைமைக்கு தள்ளியிருக்கிறது என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவ+ப் ஹக்கீம் தெரித்தார்.

காத்தான்குடியில் நேற்று மாலை இடம்பெற்ற கதீப், முஅத்தின் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்.

'நேற்று(சனிக்கிழமை) முழு நாளும் காலையிலே மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையில் நாங்கள் ஒரு சிலர் கூடி இந்த கள நிலைவரத்தை ஆராய்ந்தோம். அதனோடு சேர்த்து நேற்று பிற்பகல் அஸருக்கு பிற்பாடு கொழும்பிலே அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையகத்திலே அங்கு அவர்களின் ஏற்பாட்டிலே கொழும்பிலே அப்போது இருந்த அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் , பிரபல புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் எல்லோருமாகக் கூடி இந்த நிலைவரத்தின் தாக்கம் சம்பந்தமாக எங்களுக்குள்ளே விரிவாகப் பேசினோம்.

பேச்சின் இறுதியிலே அரசியல் ரீதியாக சில நடவடிக்கைளை நாங்கள் எடுக்க வேண்டும் எனவும் அதற்கு உறுதுணையாக சட்;ட ரீதியாகவும்; நாங்கள் சில செயற்பாடுகளை முடக்கி விட வேண்டும் எனவும் இவற்றிற்கு மத்தியில் நாடு முழுவதும் இந்த சம்பவத்தினால் ஆத்திரம் அடைந்திருக்கின்ற, ஆவேசம் அடைந்து இருக்கின்ற முஸ்லிம்களுக்கு அமைதி காக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை எடுத்துத்திருந்தோம்.

அதைத்தான் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் இங்கு பிரதிபலித்தார்கள். ஆனால் இந்த சமூகத்தினுடைய பூர்வீகம் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் அனைத்து அம்சங்களிலும் எங்களுடைய சமூகத்தின் பங்களிப்பு என்பது எவரும்; குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று என்பதை மிகத் திட்டவட்டமாக எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

முஸ்லிம்களுடைய பூர்வீகம் சகிப்பு தன்மையோடும் எங்களுடைய இஸ்லாமிய வரலாறு வன்முறைக்கு நாங்கள் செல்லக் கூடாது வலிந்து வன்முறையை வரவழைக்கின்ற சமூகமாக நாங்கள் இருக்க மாட்டோம் என்றவொரு நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்க வேண்டும் இருக்கிறோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஆன்மிக ரீதியாக ஒரு சமூகத்துக்கிருக்கின்ற அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுகிறபோது அதனூடாக உருவாகும் விளைவுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

இஸ்லாமிய வரலாறு எமக்கு சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. அந்நிய சமூகங்களுடன் எவ்வாறான அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கூறுவதாக இருந்தால் இஸ்லாத்தில் இரண்டாவது கலீபாவாகிய (ஆட்சியாளராகிய) உமர்(ரழி)அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஜெரூசலம் கைப்பற்றப்பட்டு அந்த இடத்திற்கு கலீபா விஜயம் செய்த போது அங்கு இருந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவ்வேளையில் பாங்கு(அதான்) ஒலிக்கிறது. அப்போது குறித்த தேவாலயத்திலிருந்த கிறிஸ்தவ பாதிரியார் உங்களுடைய தொழுகைக்கான நேரம் வந்து விட்டது. இந்த இடத்தில் எங்காவது தொழுது கொள்ளுங்கள் எனக் கூறிய போது உமர்(ரழி)நான் இந்த தேவாலயத்தில் தொழுவதற்கு விரும்பவில்லை. நான் இதில் தொழுதால் இதைக் காரணமாக வைத்து எனக்குப் பின்னால் வரக்கூடிய சமூகம் இதை வணங்கப்படும் மஸ்ஜிதாக ஆக்கிவிடுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது எனக் குறிப்பிட்டார்கள்.

அப்படிப்பட்ட பூர்வீகத்தைக் கொண்ட மார்க்கமாகத் திகழ்கிற இஸ்லாத்தில் பிறந்த நாங்கள்; அரபு நாடுகளுக்குச் சென்ற போது அந்த நாட்டுத்தூதுவர்களிடத்திலும் தலைமைத்துவத்தில் இருப்பவர்களிடத்திலும் தற்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் முன்மொழிதலுடன் கொண்டு வரப்பட்ட பிரேரனைக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கக் கூடாது எனக் கூறினோம்.அதற்கான நியாயத்தையும் முன்வைத்தோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான இந்த அரசாங்கத்தில் காணப்படுகின்ற இன நல்லிணக்கத்தை எடுத்துக்கூறியதோடு இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டால் நாட்டில் உருவாகியிருக்கின்ற நெருக்கம் இல்லாமல் போவதோடு தீய சக்திகளின் ஆதிக்கம் ஓங்கும் அபாயகரமான நிலை உருவாகும் எனக் கூறினோம்.குறிப்பாக நான் எனது உரையில் அதைக் குறிப்பிட்டிருந்தேன். நேற்று நான் கட்டாரிலிருந்து வந்து இறங்கியவுடன் எனது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை உறுப்பினர் றம்ழான் ஓர் அறிக்கையை விட்டிருந்தார். ஜெனீவாவில் இலங்கைக்கு சார்பாக சர்வதேசம் தமது வாக்குகளை பிரயோகிக்க வேண்டுமென வேண்டிக்கொண்ட அமைச்சர்களுக்கு கைம்மாறாக தம்புள்ளைப் பள்ளிவாசலில் தொழுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அங்கு பள்ளிவாயல் இருப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளது என ஓர் அறிக்கையொன்றை விட்டிருந்தார அது உண்மையாகவே இன்று நாடு பூராகவுமுள்ள முஸ்லிம்களின் உணர்வு என்பதை நாங்கள் சொல்லியாக வேண்டும்.

இந்த விடயம் சம்பந்தமாக இன்று காலை நான் தம்புள்ளை சென்றிருந்தேன். நேற்றைய தினம் அமைச்சர்களான பௌஸி , றிசாத் பதியுதீன், பிரதியமைச்சரும் எனது நண்பருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் சென்றிருந்ததனர். இவர்களிடமிருந்து நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டேன்.அவற்றை மேடைகளில் தொடர்ந்து பேசுவதனால் பிரச்சினைதான் உருவாகும் என்பதற்காக நாம் அதனை இங்கு பேசவில்லை.

நேற்று ஒரு தொலைக்காட்சியிலே இந்தப் பிரச்சினையின் சூத்திரதாரிகளின் வேகத்தையும் அவர்களின் வார்த்தைப் பிரயோகத்தின் அசிங்கத்தையும் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.

பார்த்த பின்னணியிலே இன்று நான் தம்புள்ளைக்குச் சென்ற போது எனக்கு மிக ஆறுதல் தருகின்ற விடயம் என்னவெனில் முஸ்லிம் சகோதரர்கள் மாத்திரம் என்னை அங்கு சந்திக்கவில்லை.

தம்புள்ளையில் பூர்வீகக் குடிமக்களாக இருக்கின்ற சிங்கள சகோதரர்கள், தம்புள்ளை மாநகர சபை உறுப்பினர்கள்' நாங்களும் (குறிப்பாக மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் என்னை சந்தித்த போது ) எங்களுடைய பெற்றோருடைய காலத்திலிருந்து இயங்கி வருகின்ற பள்ளிவாயல் இது.சுமார் 60வருடங்கள் பழமை வாயந்த இப்பள்ளிவாயலை அகற்றுவது நியாயமற்றது என தமது கவலைகளை வெளியிட்டனர்.

அமைச்சு மட்டத்தில் குறித்த பகுதி அரசியல் வாதியும் காணி அமைச்சருமான ஜனக பண்டார தென்னக்கோனை தம்புள்ளையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது இது அப்பட்டமான அநியாயம். ஒரு சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற விடயத்தை நான் உளப்பூர்வமாக எதிர்க்கிறேன்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களில் 5சதவீதமானோர் கூட தம்புள்ளை மக்கள் அல்லர்.வெளி மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட கும்பல் எனவும் இவற்றையெல்லாம் ஜனாதிபதியிடம் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

இன்று சில தகவல்கள் அதாவது அந்தப் பள்ளிவாயலை அகற்றுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் வேறு இடத்தில் பள்ளி கட்டித் தருவதாகக் கூறியுள்ளதாகவும் சில செய்திகள் கசிந்திருக்கின்றன.என்னைப் பொறுத்த மட்டிலே நான் சம்பந்தப்படவில்லை.எனக்குத் தெரிந்த வரையில் ஏனைய அமைச்சர்களும் சம்பந்தப்பட்டார்களா என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது.நேற்றைய சந்திப்பின் போது அவ்வாறான எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

இங்கு கூறப்பட வேண்டிய ஒரு விடயம் யாதெனில் நேற்று நான் கொழும்பிலிருந்து தம்புள்ளைக்கு வருகின்ற போது எனக்கு ஏலவே கேள்விப்பட்ட ஒரு விடயம் ரங்கிரி எப்.எம்.வானொலி வன்முறையிலே ஈடுபட்ட கும்பல் திட்டமிட்டு ஒரு சமூகத்துக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் துவேசப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையிலே நான் வரும்போது குருநாகலிலிருந்து சுமார் 2மணித்தியாலங்கள் எனது வாகனத்தில் வைத்து அந்த அலைவரிசையைக் கேட்;டேன்.

வழிநெடுகக் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு இந்த நாட்டிலே ஒரு சமூகத்துக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் துவேசப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிற இனவாதத்திற்கு தூபமிடுகிற ஒரு வானொலியாக அவர்களுடைய நிகழ்ச்சிகளும் வார்த்தைப்பிரயோகங்களும் காணப்படுகின்றன.

சாதாரணமாக ஒரு எஃப்எம் வானொலி ஒரு வாசகர் நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் தொலைபேசி இலக்கத்தை வழங்குவார்கள்.இதனூடாக நீங்கள் கதைக்கலாம்.ஆனால் இவர்கள் எவ்வித தொலைபேசி இலக்கத்தையும் வழங்கவில்லை.அதில் பேசும் ஒவ்வொருவரும் எவ்வித தங்கு தடையுமின்றி மிக வேகமாக ஆவேசமாக ஆத்திரமாக தம்புள்ளையில் முஸ்லிம்கள் எமது புனித பூமியை ஆக்கிரமித்து விட்டார்கள்.இது போன்று பல இடங்களில் இடம்பெற்றுள்ளது என சொல்லுகின்றார்கள். இவ்வாறு எவ்வித தங்கு தடையுமின்றி மிக வேகமாகப் பேசுவதைப் பார்த்தால் எழுதி வாசிப்பதும் திட்டமிட்டு செய்யப்படுகின்றது என்பதும் தெளிவாகின்றது.

இவற்றை வைத்துப் பார்த்தால் இந்த எப்.எம்.அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.அது எந்த சமயத்தின் எந்தப் பெரியாராக இருந்தாலும் எமது அரசியல் சட்டத்தின் 14ஆவது ~ரத்தின் படி அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு.

அரசாங்கம் கூட பேச்சுரிமையைப் பறிக்க முடியாது.ஆனால் ஒரு சில காரணங்களுக்காக பேச்சுரிமையைத் தடுக்க முடியும்.

நாட்டிலே ஒற்றுமையை இல்லாமல் செய்வதற்கும் சமயங்களுக்கு மத்தியில் விரிசலை ஏற்படுத்துவதற்கும் அது பாவிக்கப்படுமாக இருந்தால் அந்த நேரத்தில் அதைப் பறிப்பதற்கான உரிமை அனுமதி அரசாங்கத்திற்கு உள்ளது.

அரசாங்கத்திலே அரசுக்கு விசுவாசமாக இருப்போம் என சத்தியப்பிரமாணம் செய்த ஒவ்வொரு அரசியல் வாதியும் நான் உட்பட இந்த அலைவரிசையைத் தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்பதற்கான முழு அருகதையும் எமக்கு உள்ளது.

சர்வதேச சமூகத்தின் பார்வை இதன்பால் திரும்பியிருக்கின்ற இச்சந்தர்ப்பத்திலே நல்லிணக்கங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் அதன் விதப்புரைகள் அரசாங்கத்திடம் அமுல்படுத்துமாறு வேண்டிக்கொண்டிருக்கும் இந்நிலையிலே இந்த ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டவர்கள் 5சதவீதமானோர் கூட தம்புள்ளை மக்கள் அல்லர்.வெளி மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட கும்பல் என அங்கு வந்திருந்த பெரும்பான்மை சிங்களவர்கள் திட்டவமாகத் தெரிவித்தனர்.

இது புனித பூமி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை. தகரக் கொட்டிலாக 60வருடங்களாக இருந்த இப்பள்ளிவாயலை முஸ்லிம் சமுதாயம் விட்டுக் கொடுக்குமாக இருந்தால் பின் விளைவுகள் நிறைய ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்பது எனது கருத்தாகும்.

என்னைப் பொறுத்த வரையில் இதற்கு எந்தவொரு உடன்பாட்டையும் தெரிவிக்கமாட்டேன்.இந்த அரசாங்கத்தின் நீதியமைச்சராக இருந்து கொண்டு நான் சொல்லுகிறேன் எங்களுடைய அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பதற்கு எத்தனிக்கிற இந்த சக்திகளுக்கு நாங்கள் தலைசாய்த்துப் போவது என்பது வருங்கால எமது சந்ததியினருக்கு நாம் செய்யும் மிகப்பெரும் பாதகமாகும் என்பதைத் திட்டவட்டமாக நான் உணர்கிறேன்.

இது சம்பந்தமாக பள்ளி நிர்வாகத்தினரைக் கொழும்பில் அழைத்து விருப்பம் கேட்பதாக தீர்மானித்திருந்தோம்.ஆனால் இன்று நான் அங்கு சென்றதற்கு பின்னால் இதிலிருந்து ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.

இவ்வாறு நாம் பின்வாங்கினால் வன்முறையின் மூலம் எங்களது மத இடங்களில் மத உரிமைகளில் கை வைப்பதற்கு இடமளிதத்தாக மாறிவிடும்.அந்த அடிப்படையில் நிர்வாக ரீதியாக எந்தப் பலவந்தம் வந்தாலும் கூட இன்றிருக்கின்ற நெருக்கடி நிலைமையில் தம்புள்ளை மாநகர சபை எல்லைக்குள் வாழ்கிற மக்களுக்கு மத்தியில் இது தொடர்பாக வாக்கெடுப்பொன்றை நடத்தினால் எங்களுக்கு இந்தப்பள்ளியை அகற்றக்கூடாது என்பதற்கு முழு ஆதரவு கிடைக்கும் என நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால் அவர்கள் எமக்கோ அங்கு பள்ளியிருப்பதற்கோ எதிர்ப்பில்லை. நிர்வாக மட்டத்தில் எந்த நிர்ப்பந்தமும் எந்த வலுக்கட்டாயமும் ஏற்படுத்தப்படக்கூடாது என்பது எனது வேண்டுகோள்.

நேற்று தம்புள்ளை மக்கள் ஆத்திரத்தோடு என்னிடம் ' நாட்டிற்கு முஸ்லிம் நீதியமைச்சர் இருக்கும் போது எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையே "எனக் கேட்டார்கள்.

இந்த நாட்டிலே நீதி நியாயம் சிறுபான்மையினருக்கும் இருக்கின்றது என்றால் இதற்கு சிறந்த நீதி வழங்கப்பட வேண்டும்.

பீதியுடனும் பயத்துடனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றுவிடும் என்பதற்காக விட்டுக்கொடுப்போடு செல்ல வேண்டும் என அரசாங்கம் சொன்னால் இது சிறந்ததோர் அரசாங்கத்திற்கு உகந்ததல்ல. இதைத் தான் அமைச்சரவைக் கூட்டத்திலும் அடித்துப் பேசவுள்ளேன்.

இந்த விடயம் நிர்வாக ரீதியாக எந்தப் பலவந்தத்திற்கும் உட்படுத்தப்படக்கூடாது. அறிவு ரீதியாக அஹிம்சை ரீதியாக இதை எதிர்த்து நிற்பதற்கு திராணியுள்ளவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.வன்முறையால் அல்ல.

ஒரு கும்பலுக்கு அடிபணிந்து துவேசத்தைத் தூண்டுகின்ற வானொலிக்கு அடிபணிந்து வன்முறைக்கு அடிபணிந்து எங்களை விட்டுக்கொடுப்போடு நடக்க வேண்டும் என சொல்வதாக இருந்தால் அதை விட மிகப் பெரிய அநியாயம் வேறு என்ன?

நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டிலே சகல இனத்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப்படல் வேண்டும்.இல்லையேல் நிரந்தர சமாதானமொன்று ஏற்பட முடியாது.

ஆகவே இந்த நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை எதிர்த்து அஹிம்சை வழியிலும் அறிவு பூர்வமாகவும் எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராட உள்ளோம்; என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37737

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே இந்த நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை எதிர்த்து அஹிம்சை வழியிலும் அறிவு பூர்வமாகவும் எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராட உள்ளோம்; என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்

இதைத்தானேடா நாங்கள் இவ்வளவு காலமும் சொல்லி வந்தோம்??? எங்களின் சொந்தங்களை நீங்கள் முண்டுகொடுத்த சிங்கள மிருகங்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தபோது நீங்கள் எவராவது ஒரு துளிக் கண்ணீர் சிந்தினீர்களா??? மகிழ்ந்து ஆர்ப்பரித்தீர்க்ள் அல்லவா?? இன்று வெறும் மண்ணாலும், கல்லாலும் கட்டப்பட்ட கட்டிடன் இடிக்கப்பட்டதற்கே உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் என்றால், எங்கள் நிலையை யோசித்துப் பாருங்கள்.உங்கள் மேல் இரக்கப்பட முடியவில்லை. நீங்கள் எப்பாடு பட்டாலும் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. அனுபவியுங்கள் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்
dance.gifparty-smiley-028.gifparty-smiley-048.gif
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/G2xyrt3mLOQ

ஐநாவுக்கு எதிரான முஸ்லிம்களின் கொழும்பில் போராட்டம் ............. இப்படியெல்லாம் செய்து போட்டு குத்துது குடையுது என்றால் நாங்கள் என்ன செய்யுறது ?

எதுக்கு வீண் பேச்சு முடிஞ்சா அதே இடத்தில இன்னொரு பள்ளிவாசலை கட்டிப் பார்க்கிறது.

நீங்கள் கட்ட மாட்டியள் அது எங்களுக்குத் தெரியும்.. பேசாமல் மொட்டை முடிச்சுகளுடன் காத்தான்குடிக்கு போங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

திரு ஹக்கீம் அவர்கட்கு, இதுக்குமேல் பெரிதாக உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. அப்படி எதாவது செய்ய எத்தனிப்பீர்களாகவிருந்தால். உங்கள் வீட்டிற்குமுன்னால் யாராவது ஒரு இளம்பெண்வந்து தீகுளிப்பார் பிறகு உங்கட நிலமை நாற்றமடிக்கும். கடந்தகாலங்களை ஒருமுறை ரீவைன்ட் பண்ணிப்பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய தருணங்களில் நாம் முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டும்.

அவர்கள் எவ்வாறு செயல்பட்டாலும் நம் மொழிவழி சொந்தங்கள். தண்ணீரைவிட இரத்தம் தடிப்பானது என்பார்கள் அல்லவா? நாம் வெற்றி பெறுகிறபோது அவர்கள் எங்களோடு எங்கள் பலமாக இருப்பார்கள்.

அரசியல் சொற்பநாட்களிலே பலனை எதிர்பார்த்து செய்கிற முழைக்கீரை தோட்டமல்ல. அது நெடுங்காலத்துக்குப் பின்னர் பலன் கிடைக்குமென்று நம்பி செய்கிற பழமர தோப்பு.

இத்தகைய தருணங்களில் நாம் முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டும்.

அவர்கள் எவ்வாறு செயல்பட்டாலும் நம் மொழிவழி சொந்தங்கள். தண்ணீரைவிட இரத்தம் தடிப்பானது என்பார்கள் அல்லவா? நாம் வெற்றி பெறுகிறபோது அவர்கள் எங்களோடு எங்கள் பலமாக இருப்பார்கள்.

அரசியல் சொற்பநாட்களிலே பலனை எதிர்பார்த்து செய்கிற முழைக்கீரை தோட்டமல்ல. அது நெடுங்காலத்துக்குப் பின்னர் பலன் கிடைக்குமென்று நம்பி செய்கிற பழமர தோப்பு.

இந்த கருத்தை ஆதரிக்கின்றேன். நாம் இங்கே வெல்ல வேண்டியது அரசியல்.

எமக்கு இஸ்லாமிய நாடுகளினதும் இஸ்லாமியர்களினதும் ஆதரவு முக்கியம். எண்பது மில்லியன்கள் தமிழர்களை அவர்களும் பொருளாதார அரசியல் இலாபங்களுக்காக கூட்டுச்சேரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீதி அமைச்சர்...அருமையான கதை வசனம் எழுதி இருக்கிறார்..இடை இடையே....சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலையும் பாவித்திருக்கிறார்....சபாஸ்....

ஐயா..மற்றவனை மண் தோண்டி புதைக்க வெளிக்கிட்டால் இதுதான் கதி...இனியாவது சொந்த நலன் அரசியலை விட்டு விட்டு...பொது நல அர்சியலை

செய்யுங்கள்...

இலங்கையின் நீதி அமைச்சரே இலங்கையில் நீதி இருக்கா என்று யோசிக்கிறார்போல... தமிழருக்கு ஒரு தீர்வு வர எண்ணும்போது தனி அலகு கேட்டுத் துள்ளும் இவர், அமைச்சுப்பதவி பெற்றபின் முஸ்லீம் மக்களுக்கு எந்த ஒரு அலகையும் பற்றிப் பேசவில்லை. தமிழினப் படுகொலை பற்றிக்கூட வாய் துறக்காதவர்... ஜெனிவா வரை தமிழரின் நீதிக்கான குரலை அடக்க வந்தவர். இப்ப இப்படி... தனக்கு வந்தால்தான் தெரியும் குளிரும் கூதலும்... என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

இத்தகைய தருணங்களில் நாம் முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டும்.

அவர்கள் எவ்வாறு செயல்பட்டாலும் நம் மொழிவழி சொந்தங்கள். தண்ணீரைவிட இரத்தம் தடிப்பானது என்பார்கள் அல்லவா? நாம் வெற்றி பெறுகிறபோது அவர்கள் எங்களோடு எங்கள் பலமாக இருப்பார்கள்.

அரசியல் சொற்பநாட்களிலே பலனை எதிர்பார்த்து செய்கிற முழைக்கீரை தோட்டமல்ல. அது நெடுங்காலத்துக்குப் பின்னர் பலன் கிடைக்குமென்று நம்பி செய்கிற பழமர தோப்பு.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

நமக்குத் துன்பம் வந்தபோது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலை விட அடையாததே நன்மையாகும்.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

நமக்குத் துன்பம் வந்தபோது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலை விட அடையாததே நன்மையாகும்.

குர் ஆன் ஊதுபவர்களுக்கு திருக்குறள் விளங்காது!

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது நாம் தமிழர் என உரத்துப் பேசுங்கள்

முஸ்லீம்களும் தமிழர்களே என அடித்துக் கூறுங்கள்

தமிழர்களாய் இணைவோம்

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய தருணங்களில் நாம் முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டும்.

அவர்கள் எவ்வாறு செயல்பட்டாலும் நம் மொழிவழி சொந்தங்கள். தண்ணீரைவிட இரத்தம் தடிப்பானது என்பார்கள் அல்லவா? நாம் வெற்றி பெறுகிறபோது அவர்கள் எங்களோடு எங்கள் பலமாக இருப்பார்கள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை??!! :D

அரசியல் சொற்பநாட்களிலே பலனை எதிர்பார்த்து செய்கிற முழைக்கீரை தோட்டமல்ல. அது நெடுங்காலத்துக்குப் பின்னர் பலன் கிடைக்குமென்று நம்பி செய்கிற பழமர தோப்பு.

ஓம்.. பழம் புடுங்க ரெடியா வருவினம்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கூட்டமைப்பு முஸ்லீம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்

தமிழ்க் கூட்டமைப்பு முஸ்லீம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்

முதல்ல அவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும்.

எங்கட பிரச்னையை தீர்க்கவே கூட்டமைப்புக்கு வாக்கில இதில இதுவும் வேறையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.