Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )

Featured Replies

  • தொடங்கியவர்

மன்னிக்கவும். இந்தப் பதிலை இசைக் கலைஞனுக்குத் தனிமடலாக அனுப்பியிருக்கிறேன்.

Edited by Manivasahan

  • Replies 205
  • Views 28.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வடக்குக் கிழக்குப் போரின் போது தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்த விடயங்கள் சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லப்படவில்லை.

தென்பகுதி ஊடகங்கள் அரசில்வாதிகள் என அனைவருமே முழுமையான இனப்படுகொலையை நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட நிலையில் இதைப் பயங்கரவாதிகளுக்கெதிரான போராக முழுமையாகச் சித்தரிப்பதில் வெற்றி பெற்றிருந்தார்கள்.

தமிழர் தரப்பும் சிங்கள மக்களிடத்தில் இந்த விடயங்களில் தெளிவுபடுத்த முடியாத சு+ழல் இருந்தது.

இந்தநிலையில் விடுதலைப் புலிகள் என்பவர்கள் பொடுமையானவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து அப்பாவி மக்களைக் கொல்பவர்கள் என்பதே பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாயிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மணி,

முன்பு இதைப்போன்ற ஒரு விடயத்தை தொடர் கவிதையாக எழுத முனைந்தீர்கள் அல்லவா....

உங்கள் அனுபவப்பகிர்வுகளை நாமும் வாசிக்கிறோம். தொடருங்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்திலே என் மனதிலே ஒரு கேள்வி.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இது போல ஒரு இனக்கலவரம் ஏற்பட்டு ஒரு சிங்களவரை தமிழ்க் குழுவொன்று தாக்கிக் கொண்டிருந்தால் நம்மில் எத்தனை பேர் இடையில் புகுந்து அந்த உயிரைக் காப்பாற்ற முயற்சித்திருப்போம்..........

1983 ஆடிக்கலவரத்தால் கொழும்பில் படிப்பு உட்பட எல்லாவற்றையும் இழந்து ஊரில் வந்து நின்ற நேரம். சில மாதங்களின் பின் சிங்களவர்கள் வாகனங்களில் குழுக்களாக நயினாதீவுக்கு வர ஆரம்பித்தார்கள். இவர்கள் நயினாதீவுக்கு படகு ஏறுமுன் எனது ஊரில் (புங்குடுதீவு) உள்ள கோயிலுக்கு (பெருங்காடு - கிராஞ்சியம்பதி கந்தசுவாமி) முன்னால் இருந்த ஆலமர நிழலில் இறங்கி சமைத்து சாப்பிட்டு ஆறிச்செல்வது வழமை. அன்றும் அதுபோல் நின்றபோது என்னைப்போல் கலவரத்தால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து வந்து நின்றவர்களால் அவர்களது வாகனத்தை அவர்களுடன் வைத்து எரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கடைசி நிமிடத்தில் அந்த முயற்சியை நான் எனது சில நண்பர்களின் உதவியுடன் முறியடித்திருந்தோம். அந்த வயதிலும் அதேநேரம் நானே அவர்களிடம் அடி வாங்கி எல்லாவற்றையும் இழந்திருந்தநிலையில் இதற்காக கடுமையாக மற்றவர்களுடன் போராட வேண்டியிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. நீங்கள் இமயத்திலும் உயர்ந்துவிட்டீர்கள்..!

இதுதான் தமிழனின் பெருந்தன்மை ஆனால் சிங்களவன் என்றால் கண்டிப்பாக கொளுத்தி இருப்பான்.

இயக்கம் நினைத்திருந்தால் பொது இடங்களில் குண்டுகள் வைத்து ஆயிரக்கணக்கில் கொன்றிருக்கலாம் அவர்களின் இருப்பே கேள்விக்குறியான சந்தர்ப்பத்தில் கூட அப்படியான ஒன்றை செய்யவில்லை .............. ஆனால் சிங்களவன் இலக்கின்றி போடும் குண்டுகளால் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் பதிலுக்கு நாங்கள் பெரிய அழிவுகளை ஏற்படுத்தவில்லையே ........... இதில்தான் சிங்களவனுக்கும் தமிழனுக்கும் உள்ள வேறுபாடு தெரிகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிவாசகன்,

இது உங்களுக்கு மாத்திரமல்ல, நான் அறிந்த பல பேர், சிங்களவருடன் பலவிதாமான தொடர்பை பேணி வந்துள்ளார்கள், இப்பவும் பேணுகிறார்கள்- நான் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்கிற மாதிரி ஒரு சிங்கள நண்பன் வைத்திருக்கிறேன் facebook இல், அது எனது நண்பர்கள் எனக்குக்கு தகவல் சொல்ல முன்பு நடத்து. - பிறகு நானாக தேடிப்போகவும் இல்லை, வந்ததுகளை ஏற்பதுவும் இல்லை. ஆனால் எனது நண்பர்களில் நண்பர்கள் மூலம் இப்ப இறுதியாக மேர்வின் சில்வா, போன கலியான விட்டுப்படங்களும் இருக்கு.

என் இதை சொல்ல வருகிறேன் என்றால், சிங்களவனுடன் சேர்ந்து இருந்தவர்களே/ வாழ்ந்தவர்களே, அவர்கள் நல்லவர்கள் என்றும் சொல்லுகிறார்கள், அவர்கள் கூடாதவர்கள் என்றும் சொல்லுகிறார்கள். இதில் சீவிய காலத்தில் ஒரு சிங்களவன் உடன் தன்னும் பழகாத- ராணுவத்தை தவிர- சந்திக்காத தமிழனுக்கு, சொல்லும் செய்தி என்ன?

இன்னுமொரு இடத்தில் பதிய நேரம் இல்லாதால் இங்கேயே அதையும் கேட்டு விடுகிறேன், சம்பந்தன் தான் நினைத்த படி/ அல்லது யாரோ சொல்லிய படி நடத்து கொள்கிறார் என்று பலரும் பேசிய பின்பும் சிலர் அவர் நன்றே செய்வரர் நல்லதே நினைப்பார் என்றார்கள். ஆனால் திடீரென, கொடி பிடித்தவுடன் மீண்டும் சலசலப்பு- facebook உதவாது௦-

எனக்கு விளங்கவில்லை, 13 ம் திருத்தம், அதுக்கு அப்பால் என்பன எல்லாம் இலங்கை என்ra நாட்டை ஏற்ருக்கொண்டுதானே நடக்குது, அப்படி என்றால் இலங்கை கொடிய பிடித்ததில் என்ன தவறு?

கொஞ்ச பேர், கயேந்திரகுமார் தலைமையில் மற்ற பகுதிக்கு தலைமை மாற்ற வேண்டும் என்கிறார்கள், அவர்களும் சொல்லுகிறார்கள், "ஒரு நாடு இரு தேசம்" எனக்கு இந்த தேசம் என்பதன் சரியான வரையறை தெரியாது, ஆனால் ஒரு நாடு என்னும் போது அது இலங்கையைத்தானே அல்லது ஸ்ரிலன்காவைத்தானே குறிக்கிறது- எனவே இதில் என்ன புதிதான தவறு என்றுதான் விளங்கவில்லை.சிங்க கொடி பிடிப்பது-

எங்களுக்கு தெளிவில்லாத விடையங்களை, யானை பார்த்த குருடர் மாதிரி விமர்சித்து விமர்சித்து பைத்தியம் பிடித்ததுதான் மிச்சம்.

  • தொடங்கியவர்

விசுகு,

உண்மையில் உங்களை நினைக்க மிகவும் பெருமையாக இருக்கிறது. என் மனதில் அந்தச் சிங்களச் சகோதரர் எந்த அளவிற்கு உயர்ந்து இருந்தாரோ அந்த அளவிற்கு நீங்களும் உயர்ந்து இருக்கிறீர்கள்.

காரணம் என்னைப் பொறுத்தவரை அப்பாவி உயிர் அது தமிழனாக இருந்தாலென்ன சிங்களவனாக இருந்தாலென்ன முஸ்லிமாக இருந்தால் என்ன அதைக் காப்பாற்ற துணிந்து முயல்பவன் உயர்ந்தவனே!

  • தொடங்கியவர்

வணக்கம் வல்கானோ!

சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பதும் தமிழர்களின் அரசியல் உரிமை என்பதும் இரண்டு வேறுபட்ட விடயங்கள் என்று நினைக்கிறேன்.

சாதாரண சிங்கள மக்களை அயலவர்களாகக் கொண்டு வாழ்வதில் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை.

ஆனால் பெரும்பலான அரசியல்வாதிகள் சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தி தமது அரசியலை முன்னெடுத்துச் செல்வதால் சிறுபான்மை இனங்களை நசுக்கின்ற சட்டமூலங்களையும் செயற்பாடுகளையும தொடர்ந்து முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். தனிச்சிங்களச் சட்டம், தரப்படுத்தல், சிங்களக் குடியேற்றங்கள் என அவர்கள் சிறுபான்மையினரை நசுக்குவதையே திட்டமிட்டுச் செயற்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச தலையீட்டுடன் அரசியல் உரிமைகளைப் பெற வேண்டியது தமிழர்களின் கடமையாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

!

ஆனால் பெரும்பலான அரசியல்வாதிகள் சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தி தமது அரசியலை .

சாதாரண சிங்கள மக்கள்தான் அரசியல்வாதிகளை தெரிவு செய்கின்றனர்....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்கானோ!

சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பதும் தமிழர்களின் அரசியல் உரிமை என்பதும் இரண்டு வேறுபட்ட விடயங்கள் என்று நினைக்கிறேன்.

சாதாரண சிங்கள மக்களை அயலவர்களாகக் கொண்டு வாழ்வதில் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை.

ஆனால் பெரும்பலான அரசியல்வாதிகள் சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தி தமது அரசியலை முன்னெடுத்துச் செல்வதால் சிறுபான்மை இனங்களை நசுக்கின்ற சட்டமூலங்களையும் செயற்பாடுகளையும தொடர்ந்து முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். தனிச்சிங்களச் சட்டம், தரப்படுத்தல், சிங்களக் குடியேற்றங்கள் என அவர்கள் சிறுபான்மையினரை நசுக்குவதையே திட்டமிட்டுச் செயற்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச தலையீட்டுடன் அரசியல் உரிமைகளைப் பெற வேண்டியது தமிழர்களின் கடமையாகிறது.

மீண்டும் உங்களைக் களத்தில் காண்பது மிகவும் மகிழ்ச்சி, மணிவாசகன்!

இந்தச் சிங்கள, தமிழ் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம், மதம் எனவே எண்ணுகின்றேன்!

புத்தமதம், புத்த பிக்குகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பனவற்றை இந்தச் சமன்பாட்டில் இருந்து, அகற்றிவிட்டால், சிங்களவனும், தமிழனும், இஸ்லாமியனும் ஒன்றாக வாழ்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என எண்ணுகின்றேன்!

அதே நேரத்தில், நடந்துவிட்ட கொடுமைகளின், பாரிய தாக்கங்கள், இனிமேலும் இந்த இனங்கள் சேர்ந்து வாழ அனுமதிக்காது!

அதற்கான காலம் கடந்து போய் விட்டது எண்பது எனது கருத்தாகும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் நீங்களா அகோதா :unsure::):D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தாக்கவேண்டிய இடத்தில் தாக்கியிருக்கின்றான்.

சிங்களவனைக் காக்கவேண்டிய இடத்தில் பாதுகாத்திருக்கின்றான்.

சிறிய உதாரணம்: எங்கள் ஊரில் ஒரே ஒரு பேக்கரி இருந்தது.

அது பண்டா என்ற ஒரு சிங்களவருடையது. கலவரத்தின் பின்னர்

அவருடைய பேக்கரி இரவோடு இரவாக எரிக்கப்பட்டது.

அவர் பக்கத்தில் இருந்த ஒரு ஆசிரியரின் வீட்டில் தஞ்சம் கோர

அந்த ஆசிரியர் அவரை யாழ்ப் பொலிசாரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண சிங்களவர் நல்லவர்கள் என்பது ஒரு மாயை.. :D கொழும்பில் 83 இன அழிப்பின்போது வெட்டவெளிச்சமாகத் தெரிந்துவிட்டது.. :rolleyes:

சாதாரண சிங்கள மக்கள் நல்லவர்கள் என்றால் அடுத்த தேர்தலில் விக்ரமபாகு கருணாரட்ன வெல்லாவிட்டாலும், அதிக வாக்குகளைக் குவிப்பார்.. :wub: பொறுத்திருந்து பார்ப்போம்.. :D

  • தொடங்கியவர்

<p>

சாதாரண சிங்கள மக்கள்தான் அரசியல்வாதிகளை தெரிவு செய்கின்றனர்....

சிங்கள மக்களில் பெரும்பாலானோர் வாக்களிப்பது தமது அன்றாடப் பிரச்சினைகளை முன்வைத்தே! வாழ்க்கைச் செலவு, தொழில்வாய்ப்பு முதலானவையே தேர்தலில் அவர்ககள் வாக்களிப்பதற்கு ஆராயும் முக்கிய பிரச்சினைகள்.அடுத்ததாக அவர்களுக்கு இருக்கும் தெரிவுகள் எவையென்பதையும் பார்க்கவேண்டும். சிறிலங்க◌ா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளுமே இனவாதத் தலைமைகளைக் கொணடுள்ளதால் அவர்களுக்கு தெரிவு என்பது இவைகளில் ஒன்றே

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் நீங்களா அகோதா :unsure::):D

:rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்

<p>

மீண்டும் உங்களைக் களத்தில் காண்பது மிகவும் மகிழ்ச்சி, மணிவாசகன்!

இந்தச் சிங்கள, தமிழ் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம், மதம் எனவே எண்ணுகின்றேன்!

புத்தமதம், புத்த பிக்குகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பனவற்றை இந்தச் சமன்பாட்டில் இருந்து, அகற்றிவிட்டால், சிங்களவனும், தமிழனும், இஸ்லாமியனும் ஒன்றாக வாழ்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என எண்ணுகின்றேன்!

அதே நேரத்தில், நடந்துவிட்ட கொடுமைகளின், பாரிய தாக்கங்கள், இனிமேலும் இந்த இனங்கள் சேர்ந்து வாழ அனுமதிக்காது!

அதற்கான காலம் கடந்து போய் விட்டது எண்பது எனது கருத்தாகும்!!!

நன்றி புங்கையூரான்!மதம் ஒரு முக்கிய பங்கு என்பதுடன் சிங்களவனக்கு இருப்பது ஒரு நாடு அதையும் தமிழன் தட்டிப் பறிக்கப் போகிறான் என்ற பிரச்சாரம் இனவாதமும் பகையுணர்ச்சியும் மேலேழும்பக் காரணமென்று நினைக்கிறேன்.

:rolleyes: :rolleyes:

மணிவாசகன் நீங்களா அகோதா :unsure::):D

கிளம்பீட்டாங்கையா! கிளம்பிட்டாங்கஇல்லை ரதி.

மணி,

முன்பு இதைப்போன்ற ஒரு விடயத்தை தொடர் கவிதையாக எழுத முனைந்தீர்கள் அல்லவா....

உங்கள் அனுபவப்பகிர்வுகளை நாமும் வாசிக்கிறோம். தொடருங்கள் :rolleyes:

வணக்கம் சஹ◌ாறா அக்காம்ம்ம நான் கவிதை ஒன்றை எழுதினேன். அது இலங்கையின் வரலாறு தொடர்பானது. அதைவிட பாராண்ட தமிழர்கள் பயங்கரவாதிகளான கதை என கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தேன்.

தமிழன் தாக்கவேண்டிய இடத்தில் தாக்கியிருக்கின்றான்.

சிங்களவனைக் காக்கவேண்டிய இடத்தில் பாதுகாத்திருக்கின்றான்.

சிறிய உதாரணம்: எங்கள் ஊரில் ஒரே ஒரு பேக்கரி இருந்தது.

அது பண்டா என்ற ஒரு சிங்களவருடையது. கலவரத்தின் பின்னர்

அவருடைய பேக்கரி இரவோடு இரவாக எரிக்கப்பட்டது.

அவர் பக்கத்தில் இருந்த ஒரு ஆசிரியரின் வீட்டில் தஞ்சம் கோர

இது போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் வாழ்கிறது வாத்தியார்.1984ம் ஆண்டு எமது வீடு சிங்களக் காடையார்களால் தீக்கிரையாக்கப்பட்டுக் கொண்டிந்த போது எம்மை தமது வீட்டுப் படுக்கையறைக்குள் வைத்துப் பாதுகாத்தது வங்கி ஊழியரான சுமனசிறியும் அவரது குடும்பத்தினரும் தான்....அந்த ஆசிரியர் அவரை யாழ்ப் பொலிசாரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

சாதாரண சிங்களவர் நல்லவர்கள் என்பது ஒரு மாயை.. :D கொழும்பில் 83 இன அழிப்பின்போது வெட்டவெளிச்சமாகத் தெரிந்துவிட்டது.. :rolleyes:

சாதாரண சிங்கள மக்கள் நல்லவர்கள் என்றால் அடுத்த தேர்தலில் விக்ரமபாகு கருணாரட்ன வெல்லாவிட்டாலும், அதிக வாக்குகளைக் குவிப்பார்.. :wub:  பொறுத்திருந்து பார்ப்போம்.. :D

வணக்கம் இசைக் கலைஞன்சிங்கள மக்களின் வாக்குகள் என்பது தனியே இனப்பிரச்சினையை மட்டும் சார்ந்ததல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை, வேலைவாய்ப்பு என்பது சம்பந்தப்பட்டதாகும்.விக்கிரமபாகு விடயத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல தமிழ் அரசியல் தலைமைகளோ தமிழ் மக்களோ கூட விக்கிரமபாகு போன்ற யதார்த்த அரசியல் வாதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. விக்கிரமபாகு குறித்து சில மீள்பதிவுகள் இடப்பட்டிருப்பதால் இந்த விடயத்தில் எனது அனுபவமொன்றை அடுத்ததாக எழுதுகிறேன். இதைத் தமிழ் இனவாதம் என்றும் குறிப்பிடலாம்.

  • தொடங்கியவர்

என்னுடைய இந்தத் தொடர் சிங்கள மக்களிற்கு வெள்ளையடிக்கும் ஒரு தொடர் அல்ல என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கள மக்களிலும் அதே போல தமிழ் முஸ்லிம் மக்களிலும் வெள்ளையும் கறுப்பும் இருக்கின்றன என்பதை எனது சொந்த அனுபவங்களினூடாகச் சொல்ல வருகிறேன்.

சிங்கள இனவாதத்தால் நேரடியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவன் நான். எனக்கு உங்களில் பலரை விட பல கடுமையான வேதனைதரும் அனுபவங்கள் சிங்களவர்களால் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும; ஒரு குறித்த இனம் முழுவதும் தூய்மையானதாகவோ அல்லது ஒரு முழுமையான இனம் கொடூரமானதோ அல்ல என்பதே என்னுடைய கருத்து.

இன்னொரு விடயத்தையும் இங்கே கூற வேண்டும். கள உறவுகளில் பலர் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை வடக்கு கிழக்குப் பகுதிகளில் கழித்திருப்பீர்கள். நீங்கள் அறிந்த அல்லது மிக அண்மையில் கண்டு பழகிய சிங்களவர்கள் என்றால் அது இராணுவத்தினராகவொ அல்லர் பொலிஸ்காரராகவோ, அல்லது சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிறைக்கதிகளின் குடும்பங்களாகவோ இருக்கலாம். இந்த இராணுவத்தில் பெரும்பகுதியனர் தென்பகுதியில தேங்காய திருடர்களாக கோழித் திருடர்களாக கஞ்சா கடத்துபவர்களாக இருந்தவர்கள். வேறு தொழில்களைப் பெற முடியாத நிலையில் இலகுவாக இணைந்து கொள்ளக் கூடிய இராணுவத்தில் இணைந்தவர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எமது நாட்டுபிரச்சனை தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல.இலங்கை இராணுவத்திலேயே தமிழர்களுக்கு நாங்கள் செய்வது பெரும் அநியாயம் என்று உணர்ந்த பலர் இருக்கலாம்,எமது பிரச்சனை அரசியல் பிரச்சனை .சிங்கள அரசியல்வாதிகளில் (அவர்கள் எந்த கட்சியாகவும் இருக்கலாம்) பெரும்பான்மையானோர் இனவாதிகளாகவே இருக்கின்றார்கள்.தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பல சிங்கள அரசியல்வாதிகளே சந்தர்ப்பம் வரும் போது குத்துக்கரணம் அடித்ததுதான் வரலாறு .(வாசுதேவா போன்றோர் ).

சிங்கள பொதுமக்களிடம் எமது பக்க நியாயத்தை கொண்டுசெல்வது என்பது நடைமுறை சாத்தியமற்ற ஒரு விடயம் (அதற்கான காலம் கடந்துவிட்டது )முற்போக்கு சக்திகள் ,இடதுசாரிகள் என்று சொல்பவர்களே இனவாதம் கக்க தொடங்கிவிட்டார்கள் .

சிங்களம் வெகு நேர்த்தியாக திட்டமிட்டு இலங்கை என்பது சிங்களவரின் நாடுt(அதாவது பௌத்த சிங்கள நாடு ) அதில் சிறுபான்மையினராக தமிழ்பேசும் மக்களும் (வட கிழக்கு தமிழர்கள்,மலையக தமிழர்கள், முஸ்லிம்கள்) என்ற நிலையை அரசியலமைப்பு மூலமாகவே உருவாக்கிவிட்டது .

உதாரணத்திற்கு அரசியலமைப்பில் சகல மதங்களுக்கும் சம அந்தஸ்த்தும் அவர்களுக்குரிய மரியாதையும் வழங்கபடவேண்டும் என்று இருக்கு .ஆனால் இணைப்பு சரத்து சொல்லுது பௌத்தமதம் தான் இலங்கைக்குரிய மதம் அதற்கு விசேட அந்தஸ்து இருக்கென்று .

இப்படி பல விடயங்களை அவர்கள் அரசியலமைப்பில் பல விசேட இணைப்புகள் போட்டு மாற்றிவிட்டார்கள்

(நான் இணைப்பு என்று எழுதுவது AMENDMENTS TO THE CONSTITUTION )

அடுத்து புலிகள் செய்த கென்பாம்,டொலர்பாம் ,அனுராதபுர கொலைகள்,இன்னும் பல கிழக்கில்செய்த கொலைகள் சிங்கள பொதுமக்களையும் தமிழர் விரோதிகளாக்கிவிட்டது

இதில் புலிக்கும் பாட்டுபாடி சிங்கள பொதுமக்களையும் காப்பாற்றிய சிங்கங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு .என்ன முரண்நகை .

  • தொடங்கியவர்

வணக்கம் அர்ஜ+ன்

சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து அரசியல் தீர்வு கிடைக்கும் என்பது பகற்கனா. சர்வதேச தலையீட்டின் மூலமே அது முடியும்.

இடதுசாரிகள் குறித்த உங்கள் கருத்தில் எனக்கு ஓரளவு உடன்பாடு உள்ளது. நானறிந்த வரையில் ஒரு மொழி இரு நாடு ஒரு மொழி எனச் சொல்லித் திரிந்த கொல்வின் ஆர் டி சில்வா பிற்காலத்தில் சிங்களஞ் சார்பான அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். அதேபோல என்.எம் பெரேராவையும் நீங்கள் குறிப்பிட்ட வாசுதேவாவையும் குறிப்பிடலாம். வாசுதேவாவைப் பொறுத்த வரையில் அவர் மனச்சாட்சிக்கு விரோதமாகவே தற்போது அரசாங்கத்தில் ஒட்டிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் என்பதே எனது கணிப்பு.

அடுத்ததாக சர்வதேச தலையீட்டுடன் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதில் ஈழவிடுதலை என்ற பெயரில் புறப்பட்ட அனைத்து இயக்கங்களினதும் கடமை. ஆனாலும் துரதிஸ்டவசமாக ஜெனிவா வரை சென்று சிங்கள அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குவதற்கும் முன்னாள் போராளிகள் எனக் கூறிக்கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் இன்றும் தயாராயிருப்பது வேதனை.

இறுதியாக குடியேற்றத்திட்டங்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்காவிட்டால் தமிழர் போராட்டத்தை சிங்கள மக்கள் ஆதரித்திருப்பார்கள் என்பது மிகையான கூற்று என்பதே எனது கருத்து.

கடந்த காலக் கசப்பான அனுபவங்களைக் களைந்து தாயகத்தில் அடிமைகளாக உயிராபத்தை கலாச்சாரக் கொலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிற தமிழ் உறவுகளுக்கு நாம் செய்யும் கைம்மாறு அவர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு பேதங்களை மறந்து ஒன்றிணைவதே!

  • கருத்துக்கள உறவுகள்

1- பெரும்பான்மையானோர் இனவாதிகளாகவே இருக்கின்றார்கள்.தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பல சிங்கள அரசியல்வாதிகளே சந்தர்ப்பம் வரும் போது குத்துக்கரணம் அடித்ததுதான் வரலாறு .(வாசுதேவா போன்றோர் ).

சிங்கள ஒரு விடயம் (அதற்கான காலம் கடந்துவிட்டது )முற்போக்கு சக்திகள் ,இடதுசாரிகள் என்று சொல்பவர்களே இனவாதம் கக்க தொடங்கிவிட்டார்கள் .

2- அடுத்து புலிகள் செய்த கென்பாம்,டொலர்பாம் ,அனுராதபுர கொலைகள்,இன்னும் பல கிழக்கில்செய்த கொலைகள் சிங்கள பொதுமக்களையும் தமிழர் விரோதிகளாக்கிவிட்டது

3-இதில் புலிக்கும் பாட்டுபாடி சிங்கள பொதுமக்களையும் காப்பாற்றிய சிங்கங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு .என்ன முரண்நகை .

உங்களது முதலாவது மற்றும் இரண்டாவது கருத்தே ஒன்றுக்கொன்று முரணானவை.

3வது கருத்து என்னைப்பற்றியது

30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் மக்கள் தெளிவாகவே இருந்தனர்.

பிரச்சினை எமது மண்ணை மீட்பது. சிங்களத்தின் ஒரு துளிக்காணியையும் அபகரிக்கும் நோக்கம் எந்தத்தமிழனுக்கும் இருந்ததில்லை. எந்தச்சிங்கள மக்கள் மீதும் தமிழர் கோபம் கொண்டதில்லை. பழி வாங்கியதில்லை.

புலிகள் ஆனாலும் வேறு இயக்கமானாலும் ஏன் சாதாரண அரசியல்வாதி மற்றும் பொதுமக்கள் ஆனாலும் சிங்கள மக்களைத்தாக்கணும் வெட்டணும் கொழுத்தணும் என இன்றுவரை நினைத்ததில்லை.

அது எமது இலட்சியத்துக்கு இடையூறானது என்பதை 1983இலிலேயே பொதுமகனாக நானும் கட்டடுநாயக்க தாக்குதலில் பொதுமக்களை தாக்காது கடைசியில் தன்னை அழித்தானே போராளி அவனிலிருந்து முள்ளிவாக்காலில் முன்பு பிடித்த ராணுவத்தை உயிரோடு விட்டாரே தலைவர் அவர்வரை.............. கடைசிவரை தெளிவாகவே இருந்துள்ளோம். இருக்கின்றோம்.

இதை நீங்கள் உணராததுதான் இங்கு சிக்கலே தவிர தமிழ் மக்களின் என்றும் தம் பாதையிலும் தமது எதிரி எவர் என்பதிலும் தெளிவாகவே உள்ளனர்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இசைக் கலைஞன்சிங்கள மக்களின் வாக்குகள் என்பது தனியே இனப்பிரச்சினையை மட்டும் சார்ந்ததல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை, வேலைவாய்ப்பு என்பது சம்பந்தப்பட்டதாகும்.விக்கிரமபாகு விடயத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல தமிழ் அரசியல் தலைமைகளோ தமிழ் மக்களோ கூட விக்கிரமபாகு போன்ற யதார்த்த அரசியல் வாதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. விக்கிரமபாகு குறித்து சில மீள்பதிவுகள் இடப்பட்டிருப்பதால் இந்த விடயத்தில் எனது அனுபவமொன்றை அடுத்ததாக எழுதுகிறேன். இதைத் தமிழ் இனவாதம் என்றும் குறிப்பிடலாம்.

ஜனநாயகத்தில் மக்களே கட்சிகளின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள்..! இனவாதக் கோசத்திற்கு மக்கள் ஆதரவு இருக்குமானால், கட்சிகள் அந்தக் கோசத்தைப் போடவே செய்யும்..! :rolleyes:

சுதந்திரக்கட்சி.. ஐ.தே. கட்சி.. இந்த இரண்டு கட்சிகளுமே மாறிமாறி இனக்கொலைகள் புரிந்துள்ளன.. குறிப்பாக 83 இன அழிப்பின் பின்னர், சிங்கள மக்கள் மனச்சாட்சி கொண்டவர்களாக இருந்திருந்தால் ஐ.தே. கட்சியை அடுத்த தேர்தலில் நிராகரித்திருக்க வேண்டும்.. ஆனால் அது நிகழவில்லை.. :rolleyes:

பிரேமதாசவை (அதாவது ஐ.தே. கட்சி அரசாங்கம்) ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தார்கள்.. இது சொல்லும் சேதி என்ன? 83 இல் தமிழர்கள் அழிக்கப்பட்டதற்கான சன்மானம் இன்னொருமுறை ஆட்சி.. :rolleyes:

நீங்கள் சொல்லும் நல்ல சிங்களவர்கள் என்பத்வர்கள் ஒரு வீதத்திற்கும் குறைவு என்பது எனது அபிப்பிராயம்.. :unsure:

இசைக் கலைஞன்,சிங்கள தேசியவாதத்தை ஊக்குவித்து அரசியல் பண்ணும் வித்தை பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் அதில் வெற்றியும் கண்டார்.ஆனால் 1994இல் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவேன் என்று தென்னிலங்கையில் மேடைக்கு மேடை கூறி சமாதானப் புறா வேடமிட்டு வாக்குச் சேர்த்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவை சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் ஆதரித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தெருக்களில் ஒட்டப்பட்டிருந்த சந்திரிக்காவின் படங்களுக்கு  நெற்றியில் பொட்டிட்டு இனவாதத்தைத் தூண்டிய போதிலும் அவரது வெற்றியைத் தடுக்க முடியவில்லை.அதேபோல 12003இல் என்று நினைக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்தால் புலிகளுடன் பேசி சமாதானத் தீர்வு காணுவேன் என்று தென்னிலங்கை மேடைகளிலெல்லாம் பேசியே ரணில் விக்கிரமசிங்கா வாக்குக் கேட்டார். அப்போது ரணில் ஆட்சிக்கு வந்தால் தனித் தமிழ் நாடு உருவாகி விடும் என சந்திரிக்காவின் கட்சியனர் பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கே வெற்றி கிடைத்தது.எனவே தமிழ் மக்களிற்கு உரிமை வழங்குவதற்குத் தடையாக இருப்பவர்கள் சிங்கள ஆட்சியாளர்களே  என்ப என்னுடைய கருத்து.

இந்த இரண்டு முறையும் புலிகள் பலமாக இருந்தனர். புலீகளை இராணுவரீதியாக அழிக்கமுடிடியாது என்பதாலேயே சிங்களவர் வாக்குப்போட்டனரே தவிர கருணையால் அல்ல.

இதத்தவிர்த்து

எல்லாமுறையும் தமிழரை அழித்தவரே அல்லது அழிக்க முடியும் என்பவரே ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.