Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )

Featured Replies

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

இதனை தொடராக எழுதுவதனால் புதிதான ஒரு பதிவை இடும் போது அதன் தலைப்பை மாற்றியிருந்தேன். அதாவது புதிதாக பதிவு இடப்பட்டுள்ளதா என பதிவிற்குள் வந்து பார்க்காமலே புரிந்து கொள்வதற்காக. இந்த நடைமுறையை இனிமேல் தவிர்க்கிறேன்.இது தொடர்பான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. ஆனால் கோமகன் அண்ணா கூறுவது போல இது விபச்சாரத்தை ஒத்த குற்றம் என்று நான் எண்ணவில்லை.

தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் மணிவாசகன் . உங்களை மனம் நோகச் செய்து விட்டேன் .நான் அந்த வார்த்தையைப் பாவித்திருக்க கூடாது . உங்களுக்கு இடிச்சுச் சொல்லவேண்டும் என்பதற்காக கை வழுக்கிவிட்டது . உங்களில் உள் நோக்கம் எதுவும் இல்லை . இந்தத் தொடர் சொல்லவேண்டிய செய்தியைக் காய்தல் உவத்தல் இன்றி உங்களால் தொடரப்படவேண்டும் என்பதே எனது ஆத்மார்த்தமான ஆசை . நிறைவேற்றுவீர்களா ?

  • Replies 205
  • Views 28.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் மணிவாசகன் . உங்களை மனம் நோகச் செய்து விட்டேன் .நான் அந்த வார்த்தையைப் பாவித்திருக்க கூடாது . உங்களுக்கு இடிச்சுச் சொல்லவேண்டும் என்பதற்காக கை வழுக்கிவிட்டது . உங்களில் உள் நோக்கம் எதுவும் இல்லை . இந்தத் தொடர் சொல்லவேண்டிய செய்தியைக் காய்தல் உவத்தல் இன்றி உங்களால் தொடரப்படவேண்டும் என்பதே எனது ஆத்மார்த்தமான ஆசை . நிறைவேற்றுவீர்களா ?

புரிந்து கொண்டேன் அண்ணா. மன்னிப்பெல்லாம் எதற்கு?'அறியாமல் செய்யப்படும் தவறுகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன'

  • கருத்துக்கள உறவுகள்

மணி, சிக்கனமுறையில் கருத்துக்களத்தைப்பாவிப்பது எப்படி என்று பயிற்சி எடுக்கிறீங்களா? :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசில சனம் மற்றவனை பேயன் புண்ணாக்கு எண்டு நினைச்சிட்டினம் போலை கிடக்கு????? அதிலையும் தாங்கள் படிச்சுக்கொண்டிருக்கிற பாலகன்களாம் :icon_mrgreen: . பண்டார கூட்டங்கள். :D வலைஞன் என்ன கோமாவிலா? :lol:

பண்டார கூட்டங்கள்.

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மருது நீங்கள் மனதில் எடுக்காவிட்டால் , ஒருவிடையத்தைச் சொல்ல விரும்புகின்றேன் . பொன்னம்மான் யாழ் இந்துவில் கா பொ தா உயர்தரம் என்னை விட ஒருவருடம் சீனியராக , 1982ம் ஆண்டு உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் படித்தார் . இவரின் மறு பெயர் குகன் . சொந்த இருப்பிடம் யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடி . கைதடியில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தில் இவர் வீரமரணமானார் . இவரது தம்பிதான் முன்னாள் அரசியல் பேச்சாளரும் பொறுப்பாளருமான யோகி . இதற்கு ஆதாரம் நான் தான் . எனது கல்லூரி நண்பர்களது வரலாறு திரிபு அடைவது எனக்கு மனக்கஸ்ரமாக உள்ளது . தயவு செய்து மாற்றி விடமுடியுமா ?

பொன்னம்மான் அவர்களுடன் வீரமரணமான கப்டன் வாசு அவர்களின் தம்பி என்றுதான் எழுத வந்தேன்.............

பொன்னம்மானின் தம்பி என்றே எழுதிவிட்டேன்.

அதை வசி அவர்கள் சுட்டி காட்டி. மேலே எழுதியும் இருக்கிறார்

நானும் எழுதியுள்ளேன்.

  • தொடங்கியவர்

மணி, சிக்கனமுறையில் கருத்துக்களத்தைப்பாவிப்பது எப்படி என்று பயிற்சி எடுக்கிறீங்களா? :lol: :lol:

அக்கா! இப்ப என்ன சொல்ல வாறியள்.... சொல்லுறதைக் கொஞ்சம் விளக்கமாவே சொல்லுறது. :D

  • தொடங்கியவர்

ஒருசில சனம் மற்றவனை பேயன் புண்ணாக்கு எண்டு நினைச்சிட்டினம் போலை கிடக்கு????? அதிலையும் தாங்கள் படிச்சுக்கொண்டிருக்கிற பாலகன்களாம் :icon_mrgreen: . பண்டார கூட்டங்கள். :D வலைஞன் என்ன கோமாவிலா? :lol:

'கல்வி கரையில'பாலகர்கள் மட்டும் தான் படிக்கலாம் என்ற விதி எப்போது அமுலாக்கப்பட்டது? நான் அப்பொழுது மட்டுமல்ல இப்பொழுதும் படித்துக் கொண்டு தானிருக்கிறேன்.

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

புலி முத்திரை குத்தப்பட்ட எனது நண்பர்கள்.....

90 களின் இறுதிப் பகுதி

கொழும்பில் பல குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்ற காலப்பகுதி. அப்பொழுது நான் கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இந்தக் குண்டுத் தாக்குதல்கள் குறித்த தகவல்களை குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு முன்னரே புலிகள் தமிழ் மக்களுக்கு வழங்கி விடுகிறார்களோ என்ற சந்தேகம் சிங்கள மக்களிடம் நிலவிக் கொண்டிருந்தது. இதனால் அலுவலகங்களில் தமிழ் உத்தியோகத்தர்கள் யாராவது விடுப்பில் சென்று விட்டால் சிங்கள அலுவலர்கள் பெரும் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் கடமையாற்றும் நிலையும் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஒரு நாள் எமது நண்பரொருவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நானுள்ளிட்ட எமது பிரிவில் பணியாற்றிய மூன்று தமிழ் உத்தியோகத்தர்களும் விடுப்பில் இருந்தோம். அலுவலகத்தில் வேலை செய்யும் ஏனைய சிங்கள உத்தியோகத்தர்களுக்குப் பெரும் சந்தேகம் வந்துவிட்டது. ஒரே நாளில் மூவரும் விடுப்பெடுத்து விட்டார்களே! இன்றைய தினம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படப் போகிறதோ என்ற சந்தேகத்தில் அலுவலகத்தில் வேலை செய்த பல சிங்கள ஊழியர்கள் விடுப்பில் சென்று விட்டனர். அன்றைய தினம் ஒரு அறிவிக்கப்படாத விடுமுறை தினமாக எங்கள் அலுவலகம் மாறியிருந்தது.

இதே போல சந்தேகத்தின் பேரில் புலியாக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் சொல்லிலடங்கா...

எமது திணைக்களத்தில் ( வேறு பிரிவில்) வேலை செய்த இரண்டு அப்பாவி தமிழ் உத்தியோகத்தர்கள் புலிகளாக்கப்பட்டது மட்டுமன்றி சிங்களப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியை அலங்கரித்த நிகழ்வும் எனக்கு நினைவிற்கு வருகிறது.

திடீரென ஒருநாள் அலுவலகத்தின் எங்கள் பிரிவில் சலசலப்பு. இனத்துவேசத்தைக் கக்குவதில் முன்னிற்பவர்கள் ஒரு இடத்தில் கூடி கடுமையான தொனியில் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். ஏனைய உத்தியோகத்தர்களின் முகத்திலும் கலவரம். எமது திணைக்களத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் உத்தியோகத்தர்கள் தற்கொலைத்தாக்குதலின் மூலம் சந்திரிக்காவைக் கொல்லும் திட்டத்தோடு ஒரு தனியார் பேருந்தைக் கொள்வனவு செய்து கொண்டு வரும் போது கைது செய்யப்பட்டு விட்டதான செய்தியே அந்தக் கலவரத்திற்குக் காரணம்.

அமது பிரிவில் வேலை செய்யாத போதிலும் அவர்கள் இருவரையும் நான் நன்கறிவேன். எமது பாசையில் கூறுவதானால் இளம் வயதிலேயே கொழும்பில் வாழ்ந்து வந்த அவர்கள் இருவரும் அரசியல் தொடர்பில் அப்பிராணிகள். நடக்கும் போராட்டத்திற்கும் தமக்கும் எதுவித சம்பந்தமுமமில்லாதவர்கள் போல அன்றாட நடப்புக்களில் அக்கறை காட்டாத குடும்பம் குட்டி படிப்பு உழைப்பு என்று குறுகிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள். இவர்கள் இப்படியான ஒரு சம்பவத்துடன் சம்பந்தப்படட்டிருப்பார்கள் என்பதை என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட ஒரு சில சிங்கள ஊழியர்களும் இதே கருத்தையே கொண்டிருந்தனர். அவர்களைச் சென்று பார்ப்போம் என்று கூட ஒரு சிலர் தயாராகினர். ஆனால் அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரத்தை எமது திணைக்களத் தலைவரால் கூடப் பெற முடியாமல் இருந்தது. (அவ்வளவிற்கு பயங்கரமான குற்றவாளிகள்)

இரண்டு தினங்கள் சென்று விட்டன. ஆனால் குறித்த இரண்டு உத்தியோகத்தர்களும் விடுவிக்கப்படவில்லை. மாறாக செவி வழியாக எட்டும் செய்திகளோ எம்மையே சந்தேகப்படும்படியான அளவிற்குக் கொண்டு சென்றிருந்தது.

குறித்த ஒரு ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் கட்டுறாயக்கா விமான நிலையத்திற்கு அண்மையாக இளநீர் விற்கும் ஒருவரின் விபரத்தை தெரிவித்திருந்ததாகவும் அவரைக் கைது செய்ய அதிரடிப்படையினர் சென்ற போது அவர் சைனைட்டை விழுங்கி இறந்து விட்டதாகவும் ஒரு செய்தி.

இன்னொரு ஊழியரின் வீட்டிலிருந்து பல தற்கொலை அங்கிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஒரு செய்தி.

இவ்வாறாக ஏராளமான செவி வழிச் செய்திகள் வந்து என்னையே சந்தேகப்பட வைத்து விட்டது, ஒரு வேளை அவர்கள் புலிகளாக இருப்பார்களே என்று நானும் எண்ணத் தலைப்படுமளவிற்கு செய்திகள் வந்து குவிந்து கொண்டிருந்தன.

ஒரு வாரத்தின் பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள். வெளிநாட்டில் இருந்து தனது சகோதரன் அனுப்பிய பணத்திலேயே தான் அந்த வாகனத்தை வாங்கியதை நிரூபித்ததன் பின்னர் வேறு சில 'அன்பளிப்புகளை' வழங்கித்தான் விடுவிக்கப்பட்டதாக அந்த நண்பர் கூறினார். அத்தோடு அந்த விசயம் முற்றுப் பெற்று விட்டது.

சந்தேகத்தின் பேரில் புலியாக்கப்பட்ட எனது நண்பருக்கு அதிலிருந்து வெளிவருவதற்குத் தேவையான வளங்கள் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனால் இது போலக் கைது செய்யப்பட்ட எத்தனை இளைஞர்கள் இவ்வாறு பணம் செலவளித்து வெளிவர முடியாத நிலையில் இன்னமும் சிறைக்குள்ளே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

இது போல புலியாக்கப்படுவதிலிருந்து ஒரு சிங்களக் குடும்பத்தின் நம்பிக்கை காரணமாக நான் தப்பிப் பிழைத்த அனுபவம் கொலன்னாவையில் எனக்கு ஏற்பட்டது. அந்தச் சம்பவத்துடன் மீண்டும் தொடர்கிறேன்.

சந்தேகத்தின் பேரில் புலியாக்கப்பட்ட எனது நண்பருக்கு அதிலிருந்து வெளிவருவதற்குத் தேவையான வளங்கள் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனால் இது போலக் கைது செய்யப்பட்ட எத்தனை இளைஞர்கள் இவ்வாறு பணம் செலவளித்து வெளிவர முடியாத நிலையில் இன்னமும் சிறைக்குள்ளே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ( மனதில் வலி ) .

இது போல புலியாக்கப்படுவதிலிருந்து ஒரு சிங்களக் குடும்பத்தின் நம்பிக்கை காரணமாக நான் தப்பிப் பிழைத்த அனுபவம் கொலன்னாவையில் எனக்கு ஏற்பட்டது. அந்தச் சம்பவத்துடன் மீண்டும் தொடர்கிறேன். ( எனது மனைவியும் கன கதையள் சொல்லுறவா தொடருங்கோ மணி கேக்க நாங்கள் இருக்கிறம் ) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

சந்தேகத்தின் பேரில் புலியாக்கப்பட்ட எனது நண்பருக்கு அதிலிருந்து வெளிவருவதற்குத் தேவையான வளங்கள் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனால் இது போலக் கைது செய்யப்பட்ட எத்தனை இளைஞர்கள் இவ்வாறு பணம் செலவளித்து வெளிவர முடியாத நிலையில் இன்னமும் சிறைக்குள்ளே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ( மனதில் வலி ) .

</span>

கருத்திற்கு நன்றி அண்ணா!தமிழ் அரசியல் தலைமைகள் கூட இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் தமது கடமையைச் உரிய அளவில் செய்யவில்லை என்பது துரதிஸ்டவசமானது

Edited by Manivasahan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்மிகவும் நல்லவர்கள் என்பதில் எனக்குக் சந்தேகம் இல்லை.முஸ்லிம்களும் அப்படியே.தமிழர்கள் நல்லவர்களா?சந்தேகம்இருக்கிறது.தமிழ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 4000 சிங்கள பொதுமக்கள் இறந்து போனார்கள்.அந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெறும் 400000 லட்சம் பேர்தான் இறந்தார்கள்.

உன்மொழியை என் வாயில் இருந்து துப்புவதால் தானே என்னை தமிழன் என்கிறாய் எனச் சொன்ன முஸ்லிம்கள் பேசும் மொழி அரபு?

நெடுந்தீவில் ஒரு உடல் வலுவிழந்த தமிழ் தங்கையைத் தானே முஸ்லிம்கள் பாலியல் கொடுமை செய்தார்கள்.பரவாயில்லை.

புத்தளம் அனுப்பப்பட்ட முஸ்லிம்கள் யாழ்ப்பாணம்

திரும்பவேண்டுமல்லவா.திரும்பட்டும்.

எல்லாத்திசைகளிலும் இருந்து தமிழர்களுக்கு ஒளிபிறக்கிறது.நல்லது.தலை நிமிர்ந்து சாவோம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

1995ம் ஆண்டு!

நான் அப்பொழுது கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதற்காக கொலொன்னாவையில் தங்கியிருந்தேன். தமிழர்கள் பலரும் வெள்ளவத்தை பம்பலப்பிட்டி என முற்றுக்கையிட்டிருக்க நான் கொலொன்னாவை என்ற கொழும்பின் புறநகரப் பகுதியில் தங்கியிருந்ததற்குக் காரணம் இருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வந்து குவிந்து கொண்டிருந்த டொலர்களின் மகிமையால் வெள்ளவத்தை பம்பலப்பிட்டி தெஹிவளை உள்ளான பகுதிகளில் அறை வாடகை உச்சத்iதைத் தொட்டிருந்த நிலையில் வெறும் அரசாங்கச் சம்பளத்தை நம்பியிருந்த என்னால இந்த கிடுகிடு உயர்வின் முன் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

கொலொன்னாவையில் எனது வாழ்க்கை முறை பற்றியும் சொல்ல வேண்டும். படிப்பறிவு குறைவான பாமர மக்கள் அதிகம் வாழுPம் பகுதியது. போதைப்பொருள் வர்த்தகர்களும் சட்டவிரோதச் செயல்களில் ஈ:படும் பாதாள உலகக் கும்பல்களின் சொர்க்க பூமியது. (அண்மையில் கோத்தாவின் நெருங்கிய நண்பரும் போதப் பொருள் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்தவருமான துமிந்த சில்வா தன் சக கட்சிக் காறரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவைச் சுட்டுக் கொன்றதும் இங்கு தான்).

மிகக் குறைந்த வாடகை என்பதாலும் புதிய அனுபவங்களைத் தேடி வரவழைப்பவன் என்பதாலும் அந்த இடத்தை எனது வசிப்பிடமாக்கிக் கொள்கிறேன். வீட்டிலே குழாய் வசதிகள் இல்லை. எனவே வீதியோரத்திலே உள்ள பொதுக் குழாயில் தான் குளிக்க வேணஒ;டும். தண்ணீர் பிடிக்க வேண்டும். தென்னிந்திய சினிமாப் படங்களில் காண்பிக்கப்படுகின்ற குழாயடிச் சண்டைகளுக்கு குறைவில்லை. ஆனாலும் காலையிலே நான்

(மன்னிக்கவும் சிறிது நேரத்தில் தொடர்கிறேன்.)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

(நீண்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.)

மிகக் குறைந்த வாடகை என்பதாலும் புதிய அனுபவங்களைத் தேடி வரவழைப்பவன் என்பதாலும் அந்த இடத்தை எனது வசிப்பிடமாக்கிக் கொள்கிறேன். வீட்டிலே குழாய் வசதிகள் இல்லை. எனவே வீதியோரத்திலே உள்ள பொதுக் குழாயில் தான் குளிக்க வேணஒ;டும். தண்ணீர் பிடிக்க வேண்டும். தென்னிந்திய சினிமாப் படங்களில் காண்பிக்கப்படுகின்ற குழாயடிச் சண்டைகளுக்கு குறைவில்லை. ஆனாலும் காலையிலே நான் குளிக்கச் சென்றதும் மஹத்தயா வந்துவிட்டார் என்று சொல்லி தங்கள் குடங்களை வைத்து விட்டு ஒதுங்கி விடுவார்கள்.

நான் தங்கியிருந்த வீட்டின் நிலையைப் பற்றியும் சற்றுச் சொல்ல வேண்டும். வீட்டுத் தலைவர் லேக் ஹவுசிலே ஒரு சிற்றூழியராக வேலை செய்து கொண்டிருந்தார். மிகக் குறைந்த வருமானம். வறுமை துள்ளி விளையாடிய வீடது. எனது மாத வாடகையான 500 ருபாய்களில் தினமும் இருபது முப்பது ரூபாய்களாக வாங்கி அந்தப் பணத்திலே தான் அன்றைய சமையலுக்கான மீன் வாங்கப்படும்.

வழமையாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் வீடு திரும்பி பிறகு திங்கள் காலையில் கொழும்புக்குச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தேன்.

ஆனாலும் ஓக்டோபர் 20ம் திகதி ஒரு முக்கியமான கிறிக்கெற் போட்டி நடைபெற இருந்ததால் ( இந்திய இலங்கை ஆட்டமாகவோ அல்லது இந்திய பாகிஸ்தான் ஆட்டமாகவோ இருக்க வேண்டும் சரியாக நினைவில்லை) வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு திரும்பி விட்டேன்.

ஆனால் ஒக்டோபர் 20ம் திகதி அதிகாலையில் கொலன்னாவை எண்ணெய்க் குதங்களின் மீது விடுதலைப் புலிப் போராளிகளால் பெரும் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது பலருக்கும் நினைவிருக்கும்.

அன்று அதிகாலைபெரும் நெருப்புப் பிழம்புகளுடன் எண்ணெய்க் குதங்கள் பற்றியெரிய நான் தங்கியிருந்த வீட்டுக் காறர் உள்ளிட்ட அந்தப் பகுதி மக்கள் எல்லோரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து சற்றுத் தள்ளியிருந்த பாடசாலைகள் விகாரைகள் எனபவற்றில் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தார்கள்.. அன்றைய தினம் நான் அங்கு தங்கியிருந்தால் என் கதி என்னவாகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

என்னுடைய கடவுச் சீட்டு சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் மற்றுமு: உடமைகள் அந்த வீட்டிலேயே இருந்தன. எனவே தொடர்ந்து அந்த ஊரில் தங்குவது பாதுகாப்பற்றதாக இருந்தாலும் நான் அந்த வீட்டிற்குச் சென்று என் பொருட்களை எடுத்துவர வேண்டியிருந்தது. நாலைந்து தினங்கள் கழிந்தபி; என்னுடைய இன்னொரு நண்பரையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் செல்கிறேன். எனக்கான வரவேற்பு எப்படியிருக்கும் என்றதொரு அச்சம் என் மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

நானும் நண்பரும் சென்றதும் சேனாதீர என்ற அந்த வீட்டு உரிமையாளர் கூறிய விடயம் இதுதான். நீங்கள் தொடர்ந்து இங்கு தங்குவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தப் பிரதேசத்தில் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் கிடையாது. உங்களைத் தாக்க முயற்சிக்கவும் கூடும்.

உங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என்பது எங்களுக்குத் தெரியும். யாரோ ஒரு சிலர் செய்த செயலுக்காக எல்லாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஆனாலும் நீங்கள் உங்கள் பாதுகாப்பைப் பற்றியும் யோசிக்க வேண்டும். நீங்கள் யோசித்து ஒரு முடிவெடுங்கள்.

நான் அங்கும் தங்கும் நோக்கில் போகவில்லை. என் உடமைகளை திரும்ப எடுத்துவருவதற்காகவே போயிருந்தேன். எனவே எனது உடமைகளை எடுத்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டேன்.

இந்தச் சம்பவத்தை நான் எழுதியதற்குக் காரணம் அன்று அந்தக் குடும்பம் நினைத்திருந்தால் பொலிசாரையோ இராணுவத்தினரையோ அழைத்து இவர் மீது எமக்குச் சந்தேகம் இருக்கிறது எனக் கை காட்டியிருந்தால் நான் கூட இன்னொரு நிமலரூபனாய் ஆகியிருக்கக் கூடும். ஆனால் அந்த ஏழைக் குடும்பத்தின் என் மீதான் நம்பிக்கையால் இன்றும் உயிர் பிழைத்திருக்கிறேன்.

தமது வாடகை ஆட்டோவில் ஏறி வரும் தமிழ் மக்களைப் பற்றி பொய்யான தகவலைப் பொலிசிற்கு அறிவிக்கும் ஓட்டோ சாரதிகள் பற்றிய கதையும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் சந்தேகப்படுவதற்கேற்ற பல சம்பவங்கள் நடந்து முடிந்திருந்த போதிலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் என்னைக் காப்பாற்றிய அந்த குடும்பமும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தானே என எண்ணிப் பார்க்கிறேன்.

அப்பொழுது இருந்த சிங்களத்தின் மன உணர்வு இன்றும் உள்ளதா மணி ? விச ஊசி அடித்த வாரிசுகள்தானே தங்கள் செயல்கள் மூலம் நிரூபிக்கின்றார்கள் .

  • தொடங்கியவர்

அப்பொழுது இருந்த சிங்களத்தின் மன உணர்வு இன்றும் உள்ளதா மணி ? விச ஊசி அடித்த வாரிசுகள்தானே தங்கள் செயல்கள் மூலம் நிரூபிக்கின்றார்கள் .

மனஉணர்வு என்பதற்கப்பால் இலகுவாக திசை மாற்றப்படக் கூடியவர்களாக சாதாராண சிங்கள மக்கள் இருக்கிறார்கள். என்பதே என் கணிப்புஇதனையே இனவாத அரசியல்வாதிகள் தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்

மனஉணர்வு என்பதற்கப்பால் இலகுவாக திசை மாற்றப்படக் கூடியவர்களாக சாதாராண சிங்கள மக்கள் இருக்கிறார்கள். என்பதே என் கணிப்புஇதனையே இனவாத அரசியல்வாதிகள் தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்

மக்களின் ( மந்தைகள் ) வரைவிலக்கணமே அதுதானே மணி . இலங்கை ஆசியாவின் இரண்டாவது எழுத வாசிக்க படிக்க தெரிந்த ( 99 % ) படிப்பறிவுள்ள நாடு என்று படித்த ஞாபகம் .

  • தொடங்கியவர்

இந்த கணக்கெடுப்பெல்லாம் எப்படி நடத்திறவை எண்டு எனக்குத் தானே தெரியும். ஏனெண்டால் நான் அங்கை தான்வேலை செய்தனான்...

எந்த இடத்திலும் நாளாந்த மக்களுக்கும் மக்களுக்குமான (people to people contact ) உறவுகள் பாதிப்புகளை உண்டாக்குவதில்லை...

ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் போதோ, பழிக்கு பழி என்னும் போதோ தான் பிரச்னை..

அதுவே பிரிவுகளை வளர்க்கிறது..

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட இன்னொரு நிமலரூபனாய் ஆகியிருக்கக் கூடும். ஆனால் அந்த ஏழைக் குடும்பத்தின் என் மீதான் நம்பிக்கையால் இன்றும் உயிர் பிழைத்திருக்கிறேன்.

83ஆண்டு சிறையில் நடந்த சம்பம் இன்றும்2012 ஆம் ஆண்டும் நடந்திருக்கின்றது.....மாற்றம் இந்த இனத்தில் இன்னும் வரவில்லை என்பதை இது எடுத்துகாட்டுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மணி அந்த மலிபன் பிஸ்கற் வான் நீங்கள் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்திலையோ நிண்டது.?? இந் தாக்குதல் பற்றியும் விரிவான பதிவொன்று எழுதியிருக்கிறன். விரைவில் இங்கும் இணைக்கிறன்.

மணி அந்த மலிபன் பிஸ்கற் வான் நீங்கள் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்திலையோ நிண்டது.?? இந் தாக்குதல் பற்றியும் விரிவான பதிவொன்று எழுதியிருக்கிறன். விரைவில் இங்கும் இணைக்கிறன்.

:o :o :o :o

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களில் பெரும்பாலானோர் வாக்களிப்பது தமது அன்றாடப் பிரச்சினைகளை முன்வைத்தே! வாழ்க்கைச் செலவு, தொழில்வாய்ப்பு முதலானவையே தேர்தலில் அவர்ககள் வாக்களிப்பதற்கு ஆராயும் முக்கிய பிரச்சினைகள்.அடுத்ததாக அவர்களுக்கு இருக்கும் தெரிவுகள் எவையென்பதையும் பார்க்கவேண்டும். சிறிலங்க◌ா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளுமே இனவாதத் தலைமைகளைக் கொணடுள்ளதால் அவர்களுக்கு தெரிவு என்பது இவைகளில் ஒன்றே

82ம் ஆண்டு இலங்கை சனாதிபதித்தேர்தலின் போது , அப்பொழுது கூட்டணி போட்டியிடவில்லை. தமிழ்காங்கிரசினைச் சேர்ந்த குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார்.57,79,81 ம் ஆண்டுக்கலவரத்துக்கு பிறகு நடைபெற்ற தேர்தல். சிங்கள மட்டும் சட்டம், சிறிமாவின் ஆட்சியின் பின்பு தரப்படுத்தல் வந்தபின்பு நடைபெற்ற தேர்தல், ஏன் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட பின்பு நடைபெற்ற தேர்தல். யாழ்ப்பாண மாவட்டத்தில் பலர் குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சி(தலைவி சிறிமாவோ பண்டார நாயக்கா)யின் வேட்பாளர் கொப்பேக்கடுவாவுக்கு வாக்களித்தார்கள். தோட்டக்காரர்களுக்கு சிறிமா உதவி செய்வார் என்பது அவர்களின் வாதம். ஆனால் இவர்கள் குமார் பொன்னம்பலம்(தமிழ்க் காங்கிரசு) வாக்களிக்கவில்லை. அதே போல கொழும்பில் பல தமிழர்கள் ஐதேகட்சி வேட்பாளர் ஜெ .ஆர். ஜெயவர்த்தனாவுக்கு வாக்களித்தார்கள். சிறிமா வந்தால் வெளினாட்டு நிறுவனங்களுக்கு இலங்கையில் இடம் கிடைக்காது என்ற காரணத்தினால் ஐதேகட்சிக்கு வாக்களித்தார்கள்.யாழ்மாவட்டத்தில் விழுந்த வாக்குகள்தமிழ் காங்கிரஸ் 87,263 (40.03%)சிறிலங்கா சுதந்திரக் கட்சி 77,300 (35.46%)ஐதே கட்சி 44,780 (20.54%)முக்கியமாக இந்த இரண்டு சிங்கள தேசிய கட்சிக்கு விழுந்த வாக்குகள் தமிழ் காங்கிரசினை விட 15 வீதம் அதிகம்.ஏன் அவுஸ்திரெலியாவில் ஈழத்தமிழர்களுக்காக அதிகம் குரல் கொடுப்பது பசுமைக் கட்சி .ஆனால் எம்மவர்களில் பலர் தொழிற் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் வாக்களிக்கிறார்கள். எம்மவர்களிலே பலர் சுய நலமாக இருக்கிறார்கள். நாங்கள் எப்படி சிங்களவரை எதிர்ப்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் காடையர்கள் என்னை அகதியாக்கிய கதை

1984 டிசம்பர் 4. (திகதி 4 அல்லது 5 எனக்குச் சரியாக நினைவில்லை). என்வாழ்வில் நான் இன்னொரு பக்கத்தைக் கண்ட நாள். எல்லாம் என்னுடையவை என்று எண்ணிக் கொண்டிருந்த என் சின்ன மனத்திற்குள் எதுவும் நிரந்தரமில்லை என்ற வித்து விழுந்த நாள்.

காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்த பத்திற்கும் மேற்பட்ட சிங்கள ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி அன்று மாலையே பரவ ஆரம்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஒருவித பதட்டம் சு+ழ்ந்து கொள்ள தமிழர்கள் தாக்கப்படலாம் என்ற செய்தி மெள்ளக் கசியத் தொடங்கியிருந்தது.

புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலைக்கருகில் சிங்களக் காடையர்கள் வாள்கள், கத்திகள் பொல்லுகளுடன் கிளம்பத் தயாராயிருக்கிறார்கள் என்ற செய்தி எமக்குக் கிடைத்த போது நேரம் இருள ஆரம்பித்திருந்தது. இதற்கு மேல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட புத்தளம் நகரத்திற்குள் போவதற்கு நேரம் இல்லை என்பதுடன் பாதுகாபபும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட 50இற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் அருகிலுள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும் மனிதநேம் மிக்க சிங்களவர்களின் வீடுகளுக்கும் புகுந்து புகலிடம் தேடிக் கொள்கின்றனர்.

நாமும் எமது அடுத்த வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்து கொள்கிறோம். வங்கி ஊழியரான காமினி நவரட்ணவின் படுக்கையறைக்குள் எமது குடும்பமும் இன்னொரு தமிழ்க் குடும்பமும் மரண பயத்துடன் அடங்கிக் கொள்கிறோம்.

நேரம் ஆக ஆக சிங்களக் காடையர்களின் கூக்குரலும் ஜெயவேவாக் கோசங்களும் மிக அண்மையாகக் கேட்கத் தொடங்கியிருந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவம் இப்போதும் என் மனத்தின் ஒரு மூலையில் பதுங்கியிருந்து அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது.

எமது அண்டை வீடுகள் தீக்கிரையாகிக் கொண்டிருந்த வெளிச்சத்தை முகட்டின் ஓட்டைககளுக்குள்ளால் காணக்கூடியதாயிருந்தது.

ஐயா வணக்கம்... ஐயா பின்னாலை ஓடி.... இந்தக் கொச்சையான நையாண்டி கலந்த குரல் வேறு யாருடையதுமல்ல. எங்கள் தென்னந்தோட்டத்தில் வேலை செய்து எங்கள் வீட்டிலேயே உணவருந்தி ஒவ்வொரு நாளும் எங்களுடைய வீட்டிற்கு வந்து போகும் செபஸ்ரியனுடைய குரல் தான் அது...

அதனைத் தொடர்ந்து எமது உடமைகள் உடைக்கப்படும் சத்தமும் தீப்பற்றியெரிந்ததால் வந்த வெளிச்சத்தையும் எம்மால் உணரக்கூடியதாயிருந்தது.

சுமார் ஒருமணிநேரம் எங்கள் வீட்டில் வெறித் தாண்டவம் ஆடிய அந்தக் கும்பலின் கூச்சலும் ஆரவாரமும் மெல்ல மெல்ல அகன்று கொண்டிருந்தது. எமது அண்டையிலிருந்த தமிழ் வீடுகள் அனைத்தையும் துவம்சம் செய்து விட்டு அந்தக் கும்பல் அகன்று விட்டது.

நிலைமையின் விபரீதத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வயதையெட்டாத எனது தங்கையும் தம்பியும் நித்திரையாகி விட்டார்கள். நானும் அக்காவும் அம்மாவும் அப்பாவும் எம் உணர்வுகளைக் கூடப் பகிர்நது கொள்ள முடியாத நிலையில் மௌனமாக அன்றைய இரவைக் கழிக்கிறோம்.

காலையில் வெளியே வந்து பார்த்த எங்களுக்கு சாம்பல மேடுகள் நிறைந்த அரையும் குறையுமான வீட்டையே காணக் கூடியதாயிருந்தது. வீட்டிற்குள்ளிருந்த சாமான்கள் அத்தனையையும் வீட்டிற்குள் போட்டுக் கொழுத்தி வளவில் நின்ற பெருமளவான வாழை மரங்களை வாளால் வெட்டிச் சாய்த்த அந்தக் காடையர் கும்பல் நகைப்புக்கிடமான ஒரு காரியத்தையும் செய்திருந்தது. எங்கள் சுவாமியறையிலிருந்த முருகன், பிள்ளையார் சரஸ்வதி படங்களை எடுத்து வந்து கிணற்றடியில் பத்திரமாக வைத்து விட்டே அழித்தொழிப்பை முன்னெடுத்திருந்தது. என்னே கடவுள் பக்தி!

கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்த அத்தனை சொத்தையும் அழிச்சுப் போட்டாங்கள் என்று சொல்லிச் சொல்லி அம்மா அழுகிறார். அப்பாவின் முகம் இறுகிப் போயிருந்தது. எந்தவொரு உணர்ச்சியையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

புத்தளம் நகரத்திலிருந்து வந்திருந்த முஸ்லிம் நண்பரொருவரின் வாகனத்திலேறி நாங்கள் புத்தளம் நகரை வந்தடைகிறோம். எம்மைப் போலவே தமது அத்தனை சொத்துக்களையும் ஒரே இரவில் பறிகொடுத்திருந்த சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களிற்கும் புத்தளம் நகரத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அரவணைத்துக் கொள்கிறார்கள்.

சீமேந்து தொழிற்சாலை சிங்கள ஊழியர்களைக் கடத்தி ரெலா என்ற அமைப்பினர்(அமைப்பின் தலைவர் ஒபரே தேவன்)கடத்திவிட்டு பெரும் பணம் கேட்டு பணத்தினை அமிர்தலிங்கத்துக்கு வழங்குங்கள் என்று செய்தி வெளியிட்டார்கள். கடத்தி சில மணித்தியாலங்களில் அச்சிங்களவர்களை கொன்றார்கள். அமிர்தலிங்கம் இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.