Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

missile-060512-150.jpg

எதிரி நாடுகளின் ஏவுகணைகளை இடையிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்து பார்த்தது. இதன் மூலம் இதுபோன்ற வசதியை பெற்றுள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை இடையிலேயே வழி மறித்து அழிக்கும் சோதனையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. இப்பாதுகாப்பு ஏவுகணை மேலும் 5000 கிலோ மீட்டர் அளவிற்கு சென்று தாக்கும் வகையில், 2016 ஆண்டிற்குள் மேம்படுத்தப்படும் என டி.ஆர்.டி.ஓ. தலைவர் சரஸ்வத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரு நகரங்களில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்படும் எனவும், அந்த இரு நகரங்கள் இன்னும் முடிவாகவில்லை எனவும் தெரிவித்தார். இச்சோதனையில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும் ஏவுகணைகளை பயன்படுத்தி ஆறுமுறை சோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும், அதில் பூமியின் வளிமண்டலத்திற்குள்ளும், வெளியிலும் சோதனை செய்யப்பட்டதாக சரஸ்வத் தெரிவித்தார்.

மேலும் நீண்ட தூர ராடார் மற்றும் ஏவுகணை வழித்தட சாதனங்கள், நிகழ் கால தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்கள் வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

http://www.seithy.co...&language=tamil

  • Replies 58
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இனி சீனாக்காரன் ஈக்குவாணம் விட்டாலும் பக்கெண்டு பறந்துபோய் திருப்பியடிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி சீனாக்காரன் ஈக்குவாணம் விட்டாலும் பக்கெண்டு பறந்துபோய் திருப்பியடிக்கும்.

:lol: :lol:

ஒரு நிஜ போர் வரும் போது ஹிந்திய பயங்கரவாதிகளின் முக மூடிகள் கிளியும்!

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வீட்டு பக்கிரி சாமி அங்க விட்டது ஏன் எங்க வீட்டுக்குள்ள வரணும்..? விளையாடுவது என்றால் தெருவில் வைத்து விளையாட வேண்டியதுதானே என சண்டைக்கு வந்துட போறார்..

தீபாவளி சீசன் வந்தாலும் வருது.. எப்பா சாமி சொல்லி வேலையில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவோ, உடம்பெல்லாம் புல்லரிக்குது! :D

இணைப்புக்கு நன்றிகள், தோழரே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை சாதித்தித விஞ்சானிகளுக்கு வாழ்த்துக்கள், போர் வரும் போது இந்தியாவின் தோல்வியை எதிர்பார்க்கும் சிலருக்கு முகத்தில் நன்றாக கரி பூசுவது நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அத்திவாரத்தைப் பலமாகப்போடாமல்

ஆகாய உயரத்திற்குக் கட்டிடத்தைக் கட்டி

என்ன பயன். ஒரு நாள் அப்படியே சரிந்து விடும் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏவுகணை எப்படி என்பது யுத்தம் ஒன்று சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ வந்தால்தான் தெரியும் அதுவரைக்கும் ஏவுகணை என்ற பேரளவில்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்திவாரத்தைப் பலமாகப்போடாமல்

ஆகாய உயரத்திற்குக் கட்டிடத்தைக் கட்டி

என்ன பயன். ஒரு நாள் அப்படியே சரிந்து விடும் :)

நீங்க அத்திவாரத்தை போட்டீங்களா? இல்லை அத்திவாரத்தை போடும் போது கண்காணீத்தீர்களா?

எதையும் தெரியாமல் அடித்து விட்டால் எங்க ஊரில் சொல்வார்கள் உதார் விடுவது என்று

உங்கள் ஆசை சரிய வேண்டும் என்று. ஆனால் அது நிராசையாகதான் முடியும்

இந்த ஏவுகணை எப்படி என்பது யுத்தம் ஒன்று சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ வந்தால்தான் தெரியும் அதுவரைக்கும் ஏவுகணை என்ற பேரளவில்தான்.

ஏவுகணை சோதனை என்பதே இலக்கை சோதனை செய்யதான். இலக்கை சரியானபடி தாக்கினால் வெற்றி என்பதே அர்த்தம்

உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அதற்க்காக DRDO ஒன்றும் செய்யமுடியாது. வழக்கம் போல இந்தியா ஒழிக என கோசம் போட்டபடி சந்தோசமாக இருக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

Hehe Lolz@rocky

நீங்கள் வந்தே மாதரம் என்று சொல்லிக்கொண்டு இருங்கோ அவங்கள் உங்களை மதராசி சாம்பார் என்று கிண்டல் செய்வாங்கள் மகிழ்சியாக கேட்டு கொண்டு இருங்கோ :D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வந்தே மாதரம் என்று சொல்லிக்கொண்டு இருங்கோ அவங்கள் உங்களை மதராசி சாம்பார் என்று கிண்டல் செய்வாங்கள் மகிழ்சியாக கேட்டு கொண்டு இருங்கோ :D:icon_mrgreen:

அதனால் என்ன? நாங்களும் தான் அவங்களை பல விதங்களில் கிண்டல் செய்து கொண்டு தானே இருக்கிறோம். ஒரே வீட்டில் இருக்கும் அண்ணன் தம்பி இடையே இதை போல கிண்டல் வருவது இல்லையா? இதைஎல்லாம் பெரிய மேட்டர்னு சொல்றீங்க. :D

இந்தி தமிழ் சண்டை எல்லாம் காலாவதி ஆகி ரொம்ப நாள் ஆச்சு :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏவுகணை, உண்மையாகவே... வேலை செய்யுமா என்று சோதித்துப் பார்க்க...

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஒன்றிரண்டு ஏவுகணைகளை அனுப்ப வேண்டும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஏவுகணை, உண்மையாகவே... வேலை செய்யுமா என்று சோதித்துப் பார்க்க...

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஒன்றிரண்டு ஏவுகணைகளை அனுப்ப வேண்டும். :D

நீங்கள் உங்கள் தொடர்புகளை வைத்து சீனா பாகிஸ்தான் நாடுகளை அனுப்ப சொல்லி தாழ்மையுடம் கேட்டு கொள்கிறேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உங்கள் தொடர்புகளை வைத்து சீனா பாகிஸ்தான் நாடுகளை அனுப்ப சொல்லி தாழ்மையுடம் கேட்டு கொள்கிறேன் :D

நாங்கள் கேட்க..., அவங்களும் இதுதான் சந்தர்ப்பம் என்று அனுப்ப...

இந்தியா கண்டு பிடிச்ச... ஏவுகணை வேலை செய்யாமல் இருந்தால்... என்ன செய்யுறது எண்டு தான் யோசிக்கிறம். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறகு சென்றவாரம் ISRO (indian space research organisation) க்ரையோஜினிக் இஞ்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்து விட்டார்கள். இந்த தொழில்நுட்பம் இந்தியாவிற்க்கு கிடைக்க கூடாது என பல நாடுகள் மும்முரமாக இருந்த நிலையில் இந்தியா சொந்தமாகவே தனது விஞசானிகளை வைத்து உள்நாட்டிலேயே தயார் செய்து விட்டது. இந்த கிரையோஜினிக் இஞ்சின் திரவ் ஹைட்ரஜன் (-272 ‘C) எரிபொருளாக பயன்படுத்தும்..செய்து முடித்தது திருநெல்வேலி மகேந்திரகிரி ISRO அலுவலகம்.

இதனால் என்ன நண்மை??

10,000 கிமீ மேற்பட்ட தூரம் செல்லும் ஏவுகணைகள் செய்யலாம், ஏற்கனவே நிலவிற்க்கு சந்திராயன் ராக்கேட் அனுப்பி ஒருமுறை இந்தியா இந்த தொழில் நுட்பத்தை சோதனை செய்து இருக்கிறது.

Geo synchronous எனப்படும் பூமி பந்தின் வேத்தோடு சுழலும் செயற்கைகோள்களை இந்த இஞ்சினை பயன்படுத்தி ஏவலாம்.

நாங்கள் கேட்க..., அவங்களும் இதுதான் சந்தர்ப்பம் என்று அனுப்ப...

இந்தியா கண்டு பிடிச்ச... ஏவுகணை வேலை செய்யாமல் இருந்தால்... என்ன செய்யுறது எண்டு தான் யோசிக்கிறம். :D:lol:

அது உங்களுக்கு தேவை இல்லாத கவலை..நீங்கள் கேட்டு உடனே செய்ய அவங்க தயாராக இருக்கிறார்கள். உடனே அவன செய்யவும்//

விடுங்க சார், உங்களுக்கு எங்க நாடு எது செய்யாலும் குற்றம். விவாதம் செய்து ஏதும் மாறபோவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கேட்க..., அவங்களும் இதுதான் சந்தர்ப்பம் என்று அனுப்ப...

இந்தியா கண்டு பிடிச்ச... ஏவுகணை வேலை செய்யாமல் இருந்தால்... என்ன செய்யுறது எண்டு தான் யோசிக்கிறம். :D:lol:

:icon_mrgreen::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

, உங்களுக்கு எங்க நாடு எது செய்யாலும் குற்றம். விவாதம் செய்து ஏதும் மாறபோவதில்லை

ஹிந்திக்காரன் -

அருணாச்சலம் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா, ஹிந்தி படைகளிடம் கேட்டுப்பாருங்க சொல்லுவாங்க 'ஆடு, மாடு ...என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிந்திக்காரன் -

அருணாச்சலம் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா, ஹிந்தி படைகளிடம் கேட்டுப்பாருங்க சொல்லுவாங்க 'ஆடு, மாடு ...என்று

இந்திகாரன்? என்ன சம்பந்தம் இல்லாமல் ஏதோ சொல்றீங்க!!?

அருணாச்சல பிரதேசத்தில் எந்த பிரச்சனையும், சீனா அந்த மாநிலத்தில் சில பகுதிகளை உரிமை கோருகிறது, பேப்பர் அளவில்.

ஏதோ நீங்கள் அருணாசல பிரதேசத்தில் வசிப்பது போலவும் அங்கு இருக்கும் அனைத்து பிர்ச்சனையும் அறிந்தது போல எழுதுக்றீர்கள். எதையும் எழுதும் முன் தெரிந்து கொண்டு எழுதினால் நல்லது

இந்திய படைகள் அனைத்து மாநில மக்களையும் கொண்டது. இந்தி பேசும் மக்கள் மட்டும் அதில் அல்ல.

இந்தி படைகள் என குறிப்பிடாமல் இந்திய படைகள் என சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்

indian-army-rape-us.jpgmanorama+mothers.jpg

ஹிந்தியாவின், அதன் படைகளின் பெருமை பேசும் இத்தருணத்தில், இச்சிறுமையையும் மனதில் கொள்வது நல்லது என்பதால் இங்கே இணைக்கப்படுகிறது...

.

என்னத்தை கண்டுபிடிச்சு என்ன பலன் எல்லாம் கர்ணனின தேர் மாதிரி சமயத்தில கை கொடுக்காது. இவர்களின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு கட்டுநாயக்காவில் புலிகள் காட்டின காட்டு காணாது.

(ஏற்கனவே சீனாமலைப்பாம்பு இவர்களை சுத்திவளைச்சுப்போட்டுது இனி முழுங்க வேண்டியதுதான் பாக்கி )

இந்தியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ( ஆகாஷ் , ப்ருத்வி) இதுவரை யாருக்கு கொடுக்கபட்டதில்லை. அது இலங்கையில் உபயோகபடுத்தபடவில்லை. புலிகள் தொடர்பாக நீங்க சொன்ன கருத்து எனக்கு புரியவில்லை.

சீனா மலைபாம்பு என்று சொல்வதேல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர். இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் போர் வரும் என்பது மிகைபடுத்தபட்ட செய்தி. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே இருக்கும் பொருளாதார தொடர்பு போர் வரும் சூழ்நிலையை கொண்டு வராது.

  • கருத்துக்கள உறவுகள்

வந்தா ஹிந்தியா 1962 இல் வாங்கின அடிமாதிரிதான் இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதனால் என்ன? நாங்களும் தான் அவங்களை பல விதங்களில் கிண்டல் செய்து கொண்டு தானே இருக்கிறோம். ஒரே வீட்டில் இருக்கும் அண்ணன் தம்பி இடையே இதை போல கிண்டல் வருவது இல்லையா? இதைஎல்லாம் பெரிய மேட்டர்னு சொல்றீங்க. :D

இந்தி தமிழ் சண்டை எல்லாம் காலாவதி ஆகி ரொம்ப நாள் ஆச்சு :icon_idea:

சகோதரர்களாக இருக்கும் உங்களுக்குள் நதி நீரைக்கூட பகிந்து தரக்கூட மறுக்கின்றார்கள் இதுதான் உங்களின் சகோதரத்துவமா ?

நீங்கள் குறிப்பிடும் அண்ணன் தம்பி உறவில் நீரையுமா விளையாட்ட விளையாடுவீர்கள் !? :rolleyes:

நாடாளுமன்றத்தில் நீங்கள் வாய்கிழிய கத்தினாலும் உங்களை நிங்கள் குறிப்பிடும் சகோதரர்கள் கணக்கே எடுப்பதில்லையே இதுவும் உங்களின் சகோதரத்துவமா ? அல்லது அடிமைத்தனமா ?? :icon_mrgreen:

இந்தி தமிழ் சண்டையெல்லாம் காலாவதியாக வில்லை தற்போதைக்கு தணிந்துள்ளது அவ்வளவுதான். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.