Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தா ஹிந்தியா 1962 இல் வாங்கின அடிமாதிரிதான் இருக்கும்

வந்தால் பார்போம். தமிழ்நாடும் இந்தியாவில் தான் இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்தவும்

  • Replies 58
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரர்களாக இருக்கும் உங்களுக்குள் நதி நீரைக்கூட பகிந்து தரக்கூட மறுக்கின்றார்கள் இதுதான் உங்களின் சகோதரத்துவமா ?

நீங்கள் குறிப்பிடும் அண்ணன் தம்பி உறவில் நீரையுமா விளையாட்ட விளையாடுவீர்கள் !? :rolleyes:

நாடாளுமன்றத்தில் நீங்கள் வாய்கிழிய கத்தினாலும் உங்களை நிங்கள் குறிப்பிடும் சகோதரர்கள் கணக்கே எடுப்பதில்லையே இதுவும் உங்களின் சகோதரத்துவமா ? அல்லது அடிமைத்தனமா ?? :icon_mrgreen:

இந்தி தமிழ் சண்டையெல்லாம் காலாவதியாக வில்லை தற்போதைக்கு தணிந்துள்ளது அவ்வளவுதான். :icon_idea:

50களில் பெய்த அதே மழை அளவுதான் இன்றைக்கும்

மக்கள் தொகை பெருக்கம், உணவு தேவை அதிகமாகி வருகிறது. பல இடங்களில் தமிழ்நாட்டிலும் உணவு தாணிய உற்பத்தி அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் தேவை , அதை தீர்க்க வேண்டிய அரசியல்வாதிகள் ஓட்டுக்காக உணர்சிகளை தூண்டி வருகிறார்கள். இது சாதாரண மக்களை எந்தவிதத்திலும் அவர்களின் உறவை பாதிக்காது. இதற்க்காக தமிழ் நாட்டில் இருப்பவர்களும் அடுத்த மாநில மக்களும் துப்பாக்கி எடுத்து போருக்கு கிளம்பவில்லை. பிரச்சனை இல்லாத இடம் உலகில் ஏதும் இல்லை, சிறிய பிரச்சனைகளுக்கே பெரிய முடிவு எடுத்தால் வருங்கால சமூகம் பாதிக்கும்.

நாடாளுமன்றத்தில் கட்சி அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கபடும், இதை அடிமைதனம் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்ய? இலங்கை தமிழர்களின் பிரச்சனையும் இந்தியாவில் தமிழர்கள் பிரச்சனையும் ஒரு சேர பார்க்க முடியாது.இந்தியாவில் தமிழர்கள் எந்த விதத்தில் அடிமைபடுத்தபடவில்லை. முழு பொருளாதார உரிமையோடு பேச்சுரிமையோடு இருக்கிறார்கள். தமிழர்கள் மட்டும் அல்ல மற்ற எந்த மொழி பேசுபவரும் அப்படிதான்.

தற்போது இந்தி மொழி பேசுபவர்கள் தென் மாநிலங்களுக்கு அதிகமாக வருவதால் அவர்கள் தான் தென் மாநில மொழிகளை கற்று கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். உலகமயமாக்கல் காரணம் கூட இதை போல உணர்வு ரீதியான பிரச்சனைகளை பெறுமளவு குறைத்து விட்டது.

இந்தியாவையும் மற்ற மாநிலங்களையும் சில சம்பவங்களை வைத்து மதிப்பிட முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தைச் சிங்களவன் ஆள்கிறான்! அது அவனது நாடு!

ஆனால் இந்தியாவை மட்டும், ஏன் அந்நியன் ஆள்கிறான்?

என்றைக்கு சொந்தக் குரலில் குரைக்கப் போகின்றீர்கள்?

உங்கள் ஆயுதப் பெருமைகளை ஏற்றுக் கொள்கின்றோம்!

அதை எப்படிப் பாவிப்பது என்று தீர்மானிக்கும் உரிமையை, இன்னொரு அந்நியனிடம் விட்டு வைத்திருக்கும் அதி புத்திசாலித் தனம் மட்டும் விளங்கவில்லை!

அமெரிக்காவின் முதுகில் ஏறி நின்று, சீனாவை நோக்கிச் சவால் விடுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

ஜெய்! ஹிந்த்! ( இதன் தமிழ் முழி பெயர்ப்பு என்ன?)

இந்தியாவை ஆள்பவர்களை அன்னியர்களாக உங்களுக்குதான் தெரிகிறது. அதில் தவறு இல்லை.

இந்தியாவை ஆள்பவர்களின் முக்கியமானவரான சிதம்பரம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான். இந்தியாவில் முக்கிய கேந்திரங்கள் இருக்கும் அதிகாரிகள் ஐபிஸ் ஐஏ எஸ் இவர்களில் பலர் தமிழர்கள். பல காலமாக தமிழக கட்சிகளே மத்திய அரசில் முடிவெடுக்கும் உரிமையை பெற்று வருகின்றன.

நீங்கள் சொல்வது போல தனி நாடு எல்லாம் வேலைக்காது. தமிழக நதிகளுக்கான நீரே அடுத்த மாநிலங்களில் இருந்து தான் வர வேண்டும். தமிழகத்தின் புவியியல் நிலை அவ்வாறு.

இதை போல தனி தமிழ்நாடு பேச்சுகளால் தான் ஈழ போராட்டுத்துகான ஆதரவு தமிழ்நாடு மக்களிடம் இருந்து முழுதும் கிடைக்காமல் போகிறது.

ஜெய் ஹிந்த் - ஜெய் இந்துஸ்தான் - வெல்க இந்தியா

தங்கள் பொறுமையான பதிலுக்கு, நன்றிகள், rockyOne!

ஆனாலும் ஈழத்து அபலைத் தமிழனைப் பொறுத்த மட்டில், சிதம்பரம் ஒரு தமிழராக ஏற்றுக்கொள்ளப் படவில்லை!

என்னைப் பொறுத்த வரையில், இவர் ஒரு போர்க் குற்றவாளி!

காலம் உங்களுக்குப் பதிலளிக்கும்!

எமது தனிநாட்டுப் போராட்டம் பற்றிய கருத்தை, நான் உங்களிடம் கேட்கவில்லையே? நன்றிகள்!

எனக்கும் சிதம்பரம் பிடிக்காதுதான். ஆனால் தற்போது அவர் வலிமையான இடத்தில் இருக்கிறார் என்பது தான் உண்மை. மற்றபடி யார் தமிழர் போன்ற சான்றிதழ் வழங்கும் விடயங்களுக்குள் நான் போக விரும்பவில்லை.

நான் உங்கள் போராட்டம் தொடர்பாக ஏதும் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன தனி தமிழ்நாடு தொடர்பாக என் கருத்தை சொன்னேன்.

நன்றிகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை ஆள்பவர்களின் முக்கியமானவரான சிதம்பரம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான். இந்தியாவில் முக்கிய கேந்திரங்கள் இருக்கும் அதிகாரிகள் ஐபிஸ் ஐஏ எஸ் இவர்களில் பலர் தமிழர்கள். பல காலமாக தமிழக கட்சிகளே மத்திய அரசில் முடிவெடுக்கும் உரிமையை பெற்று வருகின்றன.

நீங்கள் சொல்வது போல தனி நாடு எல்லாம் வேலைக்காது. தமிழக நதிகளுக்கான நீரே அடுத்த மாநிலங்களில் இருந்து தான் வர வேண்டும். தமிழகத்தின் புவியியல் நிலை அவ்வாறு.

இதை போல தனி தமிழ்நாடு பேச்சுகளால் தான் ஈழ போராட்டுத்துகான ஆதரவு தமிழ்நாடு மக்களிடம் இருந்து முழுதும் கிடைக்காமல் போகிறது.

பிழையான கருத்து.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொகுப்பில் அதிக்ம் கோலோச்சுவது மலையாளிகளும்,ஹிந்தியர்களுமே. இதில் ஐபிஸ் ஐஏ எஸ் அதிகாரிகளும் அடக்கம். இது தமிழ் நாட்டில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களிலும் அவர்களின் ஆதிக்கமே.

தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமையில்லா டெல்லி செயல்பாடு அசிங்க துரோகத்தின் மொத்த வெளிப்பாடு. இதில் முடிவெடுக்கும் உரிமையை தமிழகம் பெற்றிருப்பதாக கூறிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.

நதிநீர் ஆதாரங்களின் புவிநிலையும், தற்போதைய அரசியல் சூழ்ச்சிகளும் தெரிந்த மத்திய அரசு, கூடங்குளம் மற்றும் நெய்வேலி மின் உற்பத்தியில் தமிழகத்தை ஏமாற்றி அடுத்த மாநிலத்திற்கும், ஏன் தமிழன் ஏமாந்தால் இலங்கைக்கும் தாரைவார்க்க தெரிந்த உங்கள் இந்திய அரசுக்கு, நதிநீர் வளங்களை ஏன் தேசியமயமாக்க முடியவில்லை? குறைந்த பட்சம், ஏன் முயலவில்லை?

இங்கு யாரும் தனித் தமிழ்நாடு கேட்கவில்லை..ஆனால் தங்களைப் போன்றோரின் ஏமாளித்தனத்தை- 'தேசிய ஒருமைப்பாடு' என்ற பெயரில் ஹிந்திய நா*கள் ஏறிமேவ ஒரு மேடையாக்கி, ஆட்டம் போடுவதை காண சகிக்காமல், தமிழன் என்ற ஒரே உணர்வில் சிலர் இங்கே கருத்தெழுதுவதை குறைகூறி புறந்தள்ளுவது கொடுமை!

.

ஏதோ நீங்கள் அருணாசல பிரதேசத்தில் வசிப்பது போலவும் அங்கு இருக்கும் அனைத்து பிர்ச்சனையும் அறிந்தது போல எழுதுக்றீர்கள். எதையும் எழுதும் முன் தெரிந்து கொண்டு எழுதினால் நல்லது

:( :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிழையான கருத்து.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொகுப்பில் அதிக்ம் கோலோச்சுவது மலையாளிகளும்,ஹிந்தியர்களுமே. இதில் ஐபிஸ் ஐஏ எஸ் அதிகாரிகளும் அடக்கம். இது தமிழ் நாட்டில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களிலும் அவர்களின் ஆதிக்கமே.

தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமையில்லா டெல்லி செயல்பாடு அசிங்க துரோகத்தின் மொத்த வெளிப்பாடு. இதில் முடிவெடுக்கும் உரிமையை தமிழகம் பெற்றிருப்பதாக கூறிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.

நதிநீர் ஆதாரங்களின் புவிநிலையும், தற்போதைய அரசியல் சூழ்ச்சிகளும் தெரிந்த மத்திய அரசு, கூடங்குளம் மற்றும் நெய்வேலி மின் உற்பத்தியில் தமிழகத்தை ஏமாற்றி அடுத்த மாநிலத்திற்கும், ஏன் தமிழன் ஏமாந்தால் இலங்கைக்கும் தாரைவார்க்க தெரிந்த உங்கள் இந்திய அரசுக்கு, நதிநீர் வளங்களை ஏன் தேசியமயமாக்க முடியவில்லை? குறைந்த பட்சம், ஏன் முயலவில்லை?

இங்கு யாரும் தனித் தமிழ்நாடு கேட்கவில்லை..ஆனால் தங்களைப் போன்றோரின் ஏமாளித்தனத்தை- 'தேசிய ஒருமைப்பாடு' என்ற பெயரில் ஹிந்திய நா*கள் ஏறிமேவ ஒரு மேடையாக்கி, ஆட்டம் போடுவதை காண சகிக்காமல், தமிழன் என்ற ஒரே உணர்வில் சிலர் இங்கே கருத்தெழுதுவதை குறைகூறி புறந்தள்ளுவது கொடுமை!

.

நண்பரே cool down please !!

கடைசி 15 வருடங்களாக தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்ற IAS and IPS எண்ணிக்கை மிக அதிகம். என் நண்பர் இது தொடர்பான பணியில் தகவல் சேகரிப்பில் சென்ற ஆண்டு ஈடுபட்டு இருந்தார். அவரிடம் நான் தகவல் கேட்டு இருக்கிறேன் கிடைத்தவுடன் இணைக்கிறேன். IAS IPS மட்டும் அல்ல IFS IES என அனைத்து தகவல்களும் வேறு ஒரு விடயத்திற்க்காக அவர் சேகரித்தார். அவர் சொன்னது.. தமிழ்நாட்டில் இருந்து தான் இந்திய அரசு பணிக்கு அதிக பேர் செல்கிறார்கள் . தகவல் கிடைத்தவுடன் மலையாளி இந்தி அது தொடர்பாக பேசலாம்

மின்சாரம் பாதியளவில் தேசியமயம். Grid தேசியமயம் அந்த Gridல் மின்சாரம் கொடுக்கும் நிலையங்கள் பல தேசியமயம். தமிழ்நாட்டிற்க்கு karnataka kaigaவில் இருந்தும் மின்சாரம் வருகிறது கூடவே ஆந்திரா ராமகுண்டத்தில் இருந்தும் மின்சாரம் வருகிறது. கூடவே நெய்வேலியில் இருந்தும் தமிழ்நாட்டின் பகுதி தவிர்த்து வெளி மாநிலங்களுக்கு செல்கிறது.

இந்த துறை தேசியமயமாக்கியபோதும் கூடவே கூடங்களும் நெய்வேலி என உங்களை போல ஆட்கள் விவரம் அறியாமல் கூச்சல் போடுகிறீர்கள்.

நீங்கள் விரும்பினால் சென்ற ஐந்து ஆண்டுகளில் நெய்வேலி உற்பத்தி என்ன அதில் தமிழ்நாடு பெற்றது என்ன என்ற தகவலை இணைக்கிறேன். பாண்டிசேரி என்ற மாநிலம் எந்த வித மின்சார உற்பத்தியும் இல்லாமல் தேசியமயமாக்கல் மூலம் பயன் அடைகிறது.

தேசியமயமாக்கல் என்பதே மாநில அரசின் உரிமையை இழப்பதே. மாநில அரசின் உரிமையை மத்திய அரசிடம் கொடுப்பதே தேசியமயக்கால் என்பது!

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என விவாதம் நடை பெறும் நேரத்தில் நீங்கள் இன்னமும் அந்த கால கிராமபோன் ரிகார்ட் போல வழக்கு அழிந்தது போல வாதம் செய்கிறீர்.

மின்சாரம் தேசிய வயமான பின் ஏகப்பட்ட கூச்சல் போடும் உங்களை போல ஆட்கள் தவிர்க்க முடியாத நீர் நிலைகளை தேசிய மயமான பின் என்ன செய்வீர்?

தேசியமாக்கல் என்பது சரியான செய்கை அல்ல. நீர் நிலைகளை தேசியமாக்குதல் பல குழப்பங்களை உண்டு செய்யும்,.

மழை நீரை சரியாக பயன்படுத்துதல், மழை அதிகாமக பொய்ய ஏற்பாடு செய்தல், நீர் நிலை ஆதாரங்களை ஆவன செய்தல் என காரியங்களே பயன் அளிக்கும்

மற்றபடி எம் பி எம் எல் ஏ இவர்களை நான் என்றுமே குற்றம் சொல்வது இல்லை. சாதி ஓட்டு துட்டுக்கு ஓட்டு கட்சி ஓட்டு என ஓட்டு போட்டால் இப்படிதான் இருப்பார்கள்.

முதலில் தமிழ் ஆர்வம் இருந்தால் தெலுங்கு நடிகர் படம் போட்ட அவதாரை விடுத்து வாங்க , நிறைய பேசலாம்

சற்று யோ

:( :( :(

என்ன வருத்தம், கவலை ?? மூன்று தடவை வேற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hello thanga

இலங்கை யாழ்பாண வீடியோக்களை நான் இணைக்க ரொம்ப நேரம் ஆகாது.

முதலில் உங்கள் நாட்டின் நிலையை பார்க்கவும். இதை போல சமூகத்தில் இருக்கும் சில அழுக்ககளை இணைத்து ஏதும் ஆவ போவதில்லை.

புலிகளின் ஆதரவளான என்ன படிபடியாக எதிர்பாளாரக மாற்றி கொண்டு இருக்கின்றீர்

தமிழ்நாட்டில் வந்து கல்வி கற்று வெளிநாட்டில் வசதியாவ வாழும் பல ஈழத்தவர்களை இந்த களத்திலே என்னால் காட்டமுடியும்,. இலவச அல்லது குறைவான கட்டணத்தில் இந்தியாவில் கல்வி கற்று இந்தியாவிற்க்கு எதிராக செய்நன்றி இல்லாமல் செயல்படும் ஆட்களும் பலர் உண்டு.

முதலில் உங்கள் இலக்கு என்ன என்பதை அறிந்து செயல் படுங்கள்

இணைப்பு கிடைக்கிறதே என்று நானும் சிங்கள இணையங்களில் இருந்து தகவல்களை இணைத்தால் என்ன சொல்வீர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செருப்பால் அடிக்க வேண்டும் என் புத்தியை.

ஈழ தமிழர்கள் என் ரத்தம் என நினைத்து பேச வந்த பிறகு தான் தெரிகிறது பல பேருக்கு இங்கு மூளையே இல்லாமல் சலவை செய்யபட்டவர்கள் என

போங்கடா நீங்களும் உங்க போராட்டமும்

இனி இந்த இடத்துக்கு வரவே மாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தியாவில் உள்ள 70% மக்களது பசிப் பிர‌ச்சனையை தீருங்கோ...அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு பொருளாதார‌த்தை கட்டி எழுப்புங்கோ...அர‌சியல்வாதிகள் பதுக்கு வைத்த பணத்தை வைத்து கஸ்ட‌ப்படும் ஏழை மக்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கோ...சினிமா மோகத்தில் இருந்தும்,சாமியார் மோகத்தில் இருந்தும் ,அர‌சியல்,பதவி மோகத்தில் இருந்தும் முதலில் வெளியே வாங்கே...எயிட்ஸ்சை இல்லாமல் செய்யுங்கள்...அங்குள்ளவர்கள் மனிதம் என்டால் என்ன என்பதை கற்றுக் கொள்ளுங்கோ.அதற்கு பிறகு நீங்கள் ஏவுகணை விடுங்கோ நானும் பாராட்டுகிறேன்.

உங்கட‌ நாட்டுக்கு முதலில் வந்தால் வர‌வேற்பது பிச்சைக்கார‌ர்கள் முதலில் அவர்களை இல்லாது ஒழியுங்கோ.எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு என்ட‌ கணக்கில் தான் உங்கட‌ கதை இருக்குது...எங்கட‌ ஊரில் மட்டும் இனவாத யுத்தம் இல்லா விட்டால் நாங்கள் எங்கேயோ முன்னேறி போயிருப்போம்...யுத்தத்தினால் எங்கள் மக்கள் கொஞ்ச‌ப் பேர் சாப்பாட்டுக்கு கையேந்துகிறார்களே தவிர‌ மற்றப்படி எங்கள் ஊர் நல்லாத் தான் இருக்குது உங்கட‌ இந்தியாவைத் தவிர‌.

ராஜவன்னியன் அண்ணா போன்றோர் என்னை மன்னிக்கவும்

இந்தியாவில் 70%என யார் சொன்னது சொந்த கற்பனையோ!!

எல்லாரும் இங்க அதயாவசிய சேவைகள் எல்லாம் இருக்கு, முதலில் நாங்க அகதி என்று எந்த நாட்டுக்கும் சென்று அடிபடிவயவில்லை அதை முதலில் கணக்கில் எடுங்கோ

எங்கள் நாட்டை உங்கள் தேவைக்கு எல்லாம் பாவித்து விட்டு அட்வைஸ் கொடுப்பதை நிறுத்துக்கோ

சரியா

நீங்கள் பிரிட்டனில் இருந்தாலும் கண்டாவில் இருந்தாலும் அகதி தான்

வார்த்தையை அளந்து பேசுங்கோ

சரி போயிட்டு வாங்கோ பிறகு எதற்கு அகதி தமிழனில் இணையத்தில் வெட்கமில்லாமல் வந்து எழுதுகிறீர்கள் உங்கட‌ பொன்னான நேர‌த்தை வீணாக்கிக் கொண்டு ^_^

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்போர் நடைபெற்ற காலத்தில் சோவியத் யூனியனும் இப்படித்தான் ஆட்டம்போட்டது.

நாட்டின் அனைத்து வளங்களையும் ஆயதத் தயாரிப்பிலும் ஏவுகணைத் தயாரிப்பிலும்

குவித்தது. மக்கள் பசியால் வாடிக்கொண்டிருக்கும்போது அரசாங்கம் விண்வெளியை

ஆராய்ந்து கொண்டிருந்தது.

இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சுக்குநூறாகியதும் இன்றைய ரஸ்யாவின்

நிலமையும் வரலாறு.

அடுத்தது இந்தியாவின் நிலமையும் இப்படியே ஆட்டம் காணாமல் இருக்க வேண்டும் என்றால்

ஊழல், வறுமை, பல்வேறுபட்ட இனங்களின் ஒற்றுமையின்மை,மதவாதிகளின் வெறியாட்டம்

போன்றவை முதலில் ஒழிக்கப்படவேண்டும்.

முக்கியமாக சீனாவுடன் மோதவேண்டுமென்றால் ஈழத்தை ஆதரிக்க வேண்டும்.

இல்லையேல் நாலுபக்கமும் சீனப்படைகளுக்கு நடுவில் இந்தியா திண்டாடவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே cool down please !!

கடைசி 15 வருடங்களாக தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்ற IAS and IPS எண்ணிக்கை மிக அதிகம். என் நண்பர் இது தொடர்பான பணியில் தகவல் சேகரிப்பில் சென்ற ஆண்டு ஈடுபட்டு இருந்தார். அவரிடம் நான் தகவல் கேட்டு இருக்கிறேன் கிடைத்தவுடன் இணைக்கிறேன். IAS IPS மட்டும் அல்ல IFS IES என அனைத்து தகவல்களும் வேறு ஒரு விடயத்திற்க்காக அவர் சேகரித்தார். அவர் சொன்னது.. தமிழ்நாட்டில் இருந்து தான் இந்திய அரசு பணிக்கு அதிக பேர் செல்கிறார்கள் . தகவல் கிடைத்தவுடன் மலையாளி இந்தி அது தொடர்பாக பேசலாம்

மின்சாரம் பாதியளவில் தேசியமயம். Grid தேசியமயம் அந்த Gridல் மின்சாரம் கொடுக்கும் நிலையங்கள் பல தேசியமயம். தமிழ்நாட்டிற்க்கு karnataka kaigaவில் இருந்தும் மின்சாரம் வருகிறது கூடவே ஆந்திரா ராமகுண்டத்தில் இருந்தும் மின்சாரம் வருகிறது. கூடவே நெய்வேலியில் இருந்தும் தமிழ்நாட்டின் பகுதி தவிர்த்து வெளி மாநிலங்களுக்கு செல்கிறது.

இந்த துறை தேசியமயமாக்கியபோதும் கூடவே கூடங்களும் நெய்வேலி என உங்களை போல ஆட்கள் விவரம் அறியாமல் கூச்சல் போடுகிறீர்கள்.

நீங்கள் விரும்பினால் சென்ற ஐந்து ஆண்டுகளில் நெய்வேலி உற்பத்தி என்ன அதில் தமிழ்நாடு பெற்றது என்ன என்ற தகவலை இணைக்கிறேன். பாண்டிசேரி என்ற மாநிலம் எந்த வித மின்சார உற்பத்தியும் இல்லாமல் தேசியமயமாக்கல் மூலம் பயன் அடைகிறது.

தேசியமயமாக்கல் என்பதே மாநில அரசின் உரிமையை இழப்பதே. மாநில அரசின் உரிமையை மத்திய அரசிடம் கொடுப்பதே தேசியமயக்கால் என்பது!

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என விவாதம் நடை பெறும் நேரத்தில் நீங்கள் இன்னமும் அந்த கால கிராமபோன் ரிகார்ட் போல வழக்கு அழிந்தது போல வாதம் செய்கிறீர்.

மின்சாரம் தேசிய வயமான பின் ஏகப்பட்ட கூச்சல் போடும் உங்களை போல ஆட்கள் தவிர்க்க முடியாத நீர் நிலைகளை தேசிய மயமான பின் என்ன செய்வீர்?

தேசியமாக்கல் என்பது சரியான செய்கை அல்ல. நீர் நிலைகளை தேசியமாக்குதல் பல குழப்பங்களை உண்டு செய்யும்,.

மழை நீரை சரியாக பயன்படுத்துதல், மழை அதிகாமக பொய்ய ஏற்பாடு செய்தல், நீர் நிலை ஆதாரங்களை ஆவன செய்தல் என காரியங்களே பயன் அளிக்கும்

மற்றபடி எம் பி எம் எல் ஏ இவர்களை நான் என்றுமே குற்றம் சொல்வது இல்லை. சாதி ஓட்டு துட்டுக்கு ஓட்டு கட்சி ஓட்டு என ஓட்டு போட்டால் இப்படிதான் இருப்பார்கள்.

முதலில் தமிழ் ஆர்வம் இருந்தால் தெலுங்கு நடிகர் படம் போட்ட அவதாரை விடுத்து வாங்க , நிறைய பேசலாம்.

முதலில் புள்ளி விவரணையில் தெளிந்துகொண்டு அப்புறம் பேச வாருங்கள். உங்கள் வசதிக்கேற்றவாறு தேசிமயமாக்கல் கொள்கைகளை வளைத்துப் பேசுகிறீர்கள்.

நீரிலிருந்து கிடைக்கப்பெறும் மின்சாரம் தேசிமயம், ஆனால் அந்த உற்பத்திக்கு தேவையான நீர் ஆதாரத்தை தேசிமயமாக்குதல் குழப்பம் விளைவிக்குமாம். நன்றாகவே நகைச்சுவை சொல்கிறீர்கள்.

இறுதியில், நான் என்ன அவதாரம் வைப்பது, எந்த சட்டை அணிவது என்பது என் தனிப்பட்ட விடயம். அதற்கு உங்கள் அனுமதியோ, தமிழ் ஆர்வமோ தேவை இல்லை.

நன்றி.

ரொக்கி வன்

உங்கள் எழுத்து மற்றும் பேச்சு நடை தமிழக உறவு போல இல்லையே? :unsure:

இந்த ஏவுகணை, உண்மையாகவே... வேலை செய்யுமா என்று சோதித்துப் பார்க்க...

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஒன்றிரண்டு ஏவுகணைகளை அனுப்ப வேண்டும். :D

சொல்லிடு அனுப்பலாமா? இல்ல சொல்லாமல் அனுப்பலாமா சிறி அண்ணா?? ^_^

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கிடையே பகைமூட்டவும் பல தமிழர்கள் இருக்கின்றார்கள்.

இவருடைய கருத்துக்கள் பல அப்படித்தான் இருக்கின்றன.

டெல்லி : நாட்டின் ராணுவ தளவாடங்கள் இருப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் அமைச்சரவை செயலக மூத்த பெண் அதிகாரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் அண்மையில் எழுதிய கடிதம் ஒன்றில், ராணுவத்தில் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகளும், ஆயுதங்களும் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த ரகசிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் அமளியை ஏற்படுத்தியது.

ரகசியக் கடிதத்தை அம்பலப்படுத்தியது ஒரு தேசத்துரோகச் செயல் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ரகசிய கடிதம் வெளியானது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையில் மத்திய அமைச்சரவை செயலகத்தின் உளவு அமைப்புகளைக் கையாளும் பொறுப்பு வகித்த ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் ரகசிய கடிதத்தை ஊடகங்களில் கசியவிட்டவர் எனத் தெரியவந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தத் தகவல்கள் வெளியான உடனேயே நேற்று இரவே மத்திய அரசு இதனை மறுத்து அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இது தொடர்பான வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது........

Oneindia.com

post-6010-0-14482900-1337020975.jpg

மேலே படத்தில் இருக்கும் பெண்மணி வல்லரசு (அல்லது) developing country எனும் வேற்றுகிரகத்தை சேர்ந்தவர். இந்த வேற்றுக்கிரகவாசிகளை சாதாரண மனித உருவத்தில் தேனி - மதுரை முதற்கொண்டு ரயில்வே நிலையங்கள் வரை அநேகம்பேர் பார்த்திருப்போம். ஒருமுறை இதுபோன்றதொரு வேற்றுகிரகவாசியை சந்திக்க நேர்ந்தது. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, மிகுந்த ஆச்சரியகரமான ஒரு விஷயம் தெரிய வந்தது. அந்த கிரகத்திலும் ஜாதி என்று அமைப்பு - ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்ததே, அது போல இருக்கிறதாம். இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் 98% ஒரே ஜாதி தானாம். ஆஸ்துமா - காசநோய் - சர்மநோய்கள்(இன்னும் என்னென்னவோ நோய்கள் எல்லாம் சொன்னார்கள்) எல்லாவற்றையும் விட கடுமையான மன உளைச்சல் - சமூக தீண்டாமை போன்றைவகள் எல்லாம் இருந்தும் இந்த வேலைதான் செய்வோம் என்று பிடிவாதமாக இருப்பதாக சொன்னார்கள். அதில் 30 - 40% வரை தங்களது வாரிசுகளையும் இந்த தெய்வ செயலுக்கே நேர்ந்து விட்டிருப்பதாய் சொன்னார்கள்.

இருந்தாலும் எனக்கு மனசு கேக்கவில்லை. ஏன் உங்கள் அரசாங்கம் பல நடவடிக்ககைள் எடுக்கிறதே. உங்களுக்கு உதவுவதற்கென்றே நிறைய திட்டங்கள் வகுத்துள்ளதே, அதெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்று கேட்க, அப்படியா என்று பதிலுக்கு அவர் என்னை கேட்கிறார். உங்க நாடு மாதிரி இல்ல தம்பி, இங்க ஜாதி ரொம்ப பாப்பாங்க. அதுவும் இந்த வேல செஞ்சவங்கனு தெரிஞ்சா வேற வேலையும் தர மாட்டேங்குறாங்க. வேற வேல கெடைக்காட்டி என்ன பண்ண, மறுபடியும் இதுக்குதான் போகணும். ஆனா இப்ப கொஞ்சம் நெலம பராவாயில்ல. நிறைய பேர் வேற பக்கம் பொழப்பு தேடி போக ஆரம்பிச்சுட்டாங்க.

இன்னொரு விஷயமும் சொன்னாரு. படிக்க பள்ளிகூடத்துக்கு போகுற அவுங்க பிள்ளைகள விட்டு ஆசிரியர்களே டாய்லெட்ட கழுவச் சொல்றாங்களாம். யப்பா....என்னவொரு கொடூர கிரகம் அது. நம்ம நாடு சொர்க்கமங்க. நல்லவேல, நம்மநாடு அந்த கிரகம் மாதிரி இல்ல. பயங்கர வசதியோட - அணுவுலை வெச்சு - நுக்ளியர் பார்க்லாம் கொண்டு வரப்போற பயங்கர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாடாக இருப்பதால் இந்த கீழ்த்தரமான - சக மனிதனை நடத்தும் அசிங்கம் எல்லாம் இங்க இல்ல. எத்துனை குடுத்து வைத்தவர்கள் நாம்.

During the partition of India and Pakistan in 1947, migration to India was allowed except for the manual scavengers, because if they were allowed to leave, then who would do their job? Government of India
was concerned about Hindus residing in Pakistan but not them. The author of the Indian Constitution Dr. Ambedkar expressed his deep concern about this unfortunate community in Pakistan by writing a letter to the then Prime Minister Jawahar Lal Nehru. He said that the Hindu scavenging employees in Pakistan were being forced to do the degrading work warranting the intervention of the government of India. Yet, even after so many years of Independence the practice continues. It also exists in Bangladesh, Sri Lanka, Nepal and Pakistan but in different forms. In all the countries it is based on caste hierarchy.

நா சொல்லியிருக்குறது நூத்துல பத்து சதவிகிதம் தான். மதுரையில் எவிடன்ஸ் அமைப்பினர் - கதிர் - கூட இதுபற்றி நிறைய பத்திரிக்கைகளில் எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். இன்னொரு முக்கிய விஷயம், இந்த புள்ளி விவரங்கள் அரசாங்கமே கொடுத்தது. அரசாங்க புள்ளி விவரங்கள் எப்படி இருக்கும்னு நமக்கு தெரியும். அப்ப, உண்மை நிலவரம் எப்படி இருக்குமோ ?

மேலும் அந்த கிரகத்த பத்தி நா தேடி எடுத்த புள்ளி விவரங்கள பாருங்க.

  • 65% மக்களுக்கு டாய்லெட் வசதி இல்லை, இருங்க இது வெறும் ஆரம்பம்தான். கொஞ்சம் பின்னாடி வரும் ஷாக்கிங்கான பாய்ன்ட்கள ஊன்றி படிங்க.

  • பிரசவத்தின் போதும் பிரசுவித்த பிறகு 42 நாட்களுக்கு பெண்கள் இறப்பு விகிதம்(Maternal mortality rate) -
    இங்க இறக்க நேரிடுகிறது (பங்களாதேஷ் - ஸ்ரீலங்கா கூட நமக்கு முன்னாடி தான். Again, இந்த இறப்பு விகிதம் லோயர் க்ளாஸ்ல தான் மிக அதிகம்.

Source:

Source:

  • Human Development index
    - மனிதவள மேம்பாட்டு குறியீட்டில்,
    . நமது ஆதர்ச ஹீரோக்கள் - அமேரிக்கா - பிரான்ஸ் - ஜெர்மனி -கனடா - இங்கிலாந்து எத்தனையாவது இடம் தெரியுமா ? (வல்லரசுனா இதுல காமிக்க வேண்டியதுதான உங்க வளர்ச்சிய). அட, நமக்கு முன்னாடி பல ஆப்ரிக்க நாடுகள் குட இருக்கு.

Source:

இதுமாதிரி பல புள்ளி விவரங்கள அடுக்கிகிட்டே போகலாம். அதுனால என்ன பிரயோஜனம் ? ஒண்ணும் கெடையாது. GDP அதிகமாகுறது மட்டுமே வளர்ச்சின்னு பல காலமா நம்ம பொது புத்தியில பதிய வெச்சாச்சு. இனி அத ஒண்ணும் பண்ண முடியாது.

கவலையெல்லாம் இத்தன அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது, இந்தளவுக்கு அணு சக்தி திட்டங்களில் முனைப்பு காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு ? எந்த ரஷ்யன் விஞ்ஞானியோ, நம்ம ஆட்களின் போராட்டம் பத்தி டிவில நக்கலா பேட்டி தரான். அதையும் வெக்கமில்லாம நாம பாத்துகிட்டு இருக்கோம்.

இந்த வளரும் நாடு - சூப்பர் பவர் - அமெரிக்க - வல்லரசு - லொட்டு லொசுக்குன்னு பேசும் விஞ்ஞானிகள், மேல இருக்கும் கேள்விகளோட இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லுவாங்கன்னு நம்புறேன்.
  • இந்தியா தவிர, அணு சக்தி பயன்படுத்தும் - நீங்க ஆதர்சமா அடிக்கடி இதுபோன்ற "வளர்ச்சிகளுக்கு" உதாரணம் காட்டும் பிரான்ஸ் - அமெரிக்க - ஜப்பான் - கனடா - ஜெர்மனி - இங்கலாந்து போன்ற நாடுகளில், இதுபோல பீயை கைகளில் அள்ளும் ஆட்களை காமிங்க பாப்போம்.

  • 1980கள் முதற்கொண்டு அணு திட்டம் மட்டும் போட தெரியுதுல்ல. சுதந்திரம் வாங்கி 65 வருஷத்துல இதுபோன்ற மனித கழிவுகள அகற்றும் ஆட்களுக்கு என்னத்த கிழிச்சீங்க.(ஓரளவு முன்னேற்றம் இருக்கு. ஆனா, படு பயங்கர ஸ்லோ. அத முன்னேற்றம்ன்னு கூட சொல்ல முடியாது)

  • உண்மையான வளர்ச்சி என்பது வெறும் அணு சக்தி தானா ? அடிப்படை வசதிகளான, சுகாதாரம் - மருத்துவம் - அதற்குறிய காப்பீடு - கல்வி - மாதிரியான விஷயங்கள் இல்லையா ? ரைட்டு, இந்த துறைகளில் முன்னேற்றம் இருக்கவே செய்யுது. ஆனா, உலகத்துலையே மெதுவா நகர்கிற உயிரினம் ஸ்லோத் என்பதுதான் - அதவிட மெதுவால இந்த துறைகளில் வளர்ச்சி இருக்கு.

  • மருத்துவம் - கல்வி வளர்ந்திருக்கு. ஆனா அதுலையே எத்தன ஏற்ற தாழ்வுகள். ஏன் ஒரே மாதிரி சிஸ்டம் இல்ல.

  • இன்னொரு பெரிய ஜோக். பாதுகாப்பு துறைய வலுப்படுத்தவாம். கிளிச்சாங்க. உலகளவில் பாதுகாப்புக்கு என்று அதிகளவில் நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒண்ணு. ஆனா, என்ன பிரயோஜனம். சிறிலங்கா மாதிரி கொசுவ கூட ஒண்ணும் பண்ண முடியல. குறைந்தபட்சம் மிரட்டவாவது முடிஞ்சதா. அதுக்கு கூட துப்பில்ல. தென் கொரியா மாதிரி சின்ன நாடுகளுக்கு இருக்கும் தைரியத்தில் நூத்துல ஒரு சதவீதம் கூட நம்மகிட்ட இல்ல. அப்பறம் என்ன மயிரு பாதுகாப்பு துறைக்கு இத்தன கோடி.அதையாவது ஒழுங்கா செஞ்சாங்களா. அந்த துறைல கூட ஊழல்.(
    )

  • இந்த அடிப்படை தேவைகள எல்லாம் பிற "வளர்ந்த" நாடுகள் மாதிரி ஆக்கிட்டு அப்பறம் இதுக்கு வர வேண்டியதுதான.

  • என்னமோ சொந்த மூளையில கண்டுபுடிச்ச டெக்னாலஜி மாதிரி இத்தன பீட்டரு....இதுவும் ஐரோப்பியர்கள் கண்டுபுடிச்ச விஷயம் தான. இதுல கூட புதுசா ஒண்ணும் கண்டுபுடிக்க முடியல. இதல எங்கிருந்து தன்னிறைவு ?

  • இத்தன வருஷமா - சுமார் முப்பது ஆண்டு காலமா என்னதான் இந்த அரசாங்கங்கள் மாற்று திட்டம் வெச்சிருந்தது ? இதுகுறித்து கொஞ்சம் கூட யோசிக்கலையா....இல்ல, யோசிக்க ரஷ்யாவின் டோலர்கள் விடலையா ?

சரி, இத்தனையும் மீறி - இதுதெல்லாம் சகஜம் தான். "வளர்ச்சி" தான் முக்கியம்ன்னு சொல்றவங்கிட்ட ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் கேட்க ஆசை.

  • வாரன் ஆண்டர்சன் யாரு தெரியுமா ?

  • போபால் மக்களுக்கு எவ்வளவு ஈழப்பீடு குடுத்தாங்க தெரியுமா ?

நண்பர்களே, அணுவுலை ஆதரித்து பேசுபவர்களிடம், உடனே இந்த ரெண்டு கேள்வியையும் கேளுங்க. மலங்க மலங்க முழிப்பாங்க. சர்வ நிச்சயம். மேற்கொண்டு பதில் சொல்லத் தெரிந்த ஆட்களிடம் மட்டும் கருத்து பரிமாற்றம் செய்யுங்க. மத்த ஆட்களிடம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. குறைந்தபட்சம் போபால் விபத்து நடந்த ஆண்டையாவது கேளுங்க. ஒரு மயிறும் பதிலாக கிடைக்காது. 28 வருஷமா போராடும் மக்களுக்கு நீதி கிடைக்காத இந்த நாடு தானா இந்த விஷயங்களில் ட்ரான்ஸ்பரன்சியோட நடந்துக்க போகுது. ஒண்ணும் நடக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50களில் பெய்த அதே மழை அளவுதான் இன்றைக்கும்

மக்கள் தொகை பெருக்கம், உணவு தேவை அதிகமாகி வருகிறது. பல இடங்களில் தமிழ்நாட்டிலும் உணவு தாணிய உற்பத்தி அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் தேவை , அதை தீர்க்க வேண்டிய அரசியல்வாதிகள் ஓட்டுக்காக உணர்சிகளை தூண்டி வருகிறார்கள். இது சாதாரண மக்களை எந்தவிதத்திலும் அவர்களின் உறவை பாதிக்காது. இதற்க்காக தமிழ் நாட்டில் இருப்பவர்களும் அடுத்த மாநில மக்களும் துப்பாக்கி எடுத்து போருக்கு கிளம்பவில்லை. பிரச்சனை இல்லாத இடம் உலகில் ஏதும் இல்லை, சிறிய பிரச்சனைகளுக்கே பெரிய முடிவு எடுத்தால் வருங்கால சமூகம் பாதிக்கும்.

நாடாளுமன்றத்தில் கட்சி அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கபடும், இதை அடிமைதனம் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்ய? இலங்கை தமிழர்களின் பிரச்சனையும் இந்தியாவில் தமிழர்கள் பிரச்சனையும் ஒரு சேர பார்க்க முடியாது.இந்தியாவில் தமிழர்கள் எந்த விதத்தில் அடிமைபடுத்தபடவில்லை. முழு பொருளாதார உரிமையோடு பேச்சுரிமையோடு இருக்கிறார்கள். தமிழர்கள் மட்டும் அல்ல மற்ற எந்த மொழி பேசுபவரும் அப்படிதான்.

தற்போது இந்தி மொழி பேசுபவர்கள் தென் மாநிலங்களுக்கு அதிகமாக வருவதால் அவர்கள் தான் தென் மாநில மொழிகளை கற்று கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். உலகமயமாக்கல் காரணம் கூட இதை போல உணர்வு ரீதியான பிரச்சனைகளை பெறுமளவு குறைத்து விட்டது.

இந்தியாவையும் மற்ற மாநிலங்களையும் சில சம்பவங்களை வைத்து மதிப்பிட முடியாது

எது எப்படியோ நீங்கள் ஒரு வரலாற்று தவறை விட்டுள்ளீர்கள் உலகெங்கும் பரந்துவாழும் ஈழ தமிழனை ஆதரவை இந்தியா இழந்ததன் ஊடாக சர்வதேச ரீதியில் ஈழ தமிழனின் அரசியல் பிரவேசம் பொருளாதார ரீதியிலான அபாரவளர்சி எதோ ஒரு வகையில் இந்தியாவை பாதிக்கும் அதுமட்டுமின்றி எமக்கான தமிழ் ஈழம் அமையும்போது இந்தியாவின் தென்பிராந்திய பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் இது இந்தியா என்ற நாட்டின் மாநிலங்களை பிரிக்கும் சர்வதேச சதியின் ஊடாக இந்தியாவும் சோவியர் யூனியன் போல் சிதறும் இது இன்று இல்லாது இருக்கலாம் காலப்போக்கில் இது நிகழ்ந்தே ஆகும் இதை தடுக்கவேண்டுமாயின் ஈழ தமிழனுடன் இந்தியா ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும் நாம் ஈழம் பெற எடுக்கும் முயற்சிகளுக்கு தடையாக இருக்ககூடாது உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாது இருந்தால் நாம் எம்பாட்டை பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரையத்தை வேஸ்ட் பண்ணாம ஓட்டு குத்துங்கப்பா... நேரத்தை குலைத்து ஒட்டு போடுவதை தடுக்கும் சதியாகவும் இருக்கலாம்...மலைய பார்த்து .. அது போகட்டும்... நாங்கெல்லாம் இருக்கம் .. காரியத்தில்தான் கண்ணா இருக்கணும்..கண்டினியு ஓட்டிங்க்கு.. :( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.