Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் அன்று சொன்னதை இன்று உணர்கிறார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில்.. பிச்சை போடுவது கணக்கா.. வெளியாரிடம் தங்கியிருக்கச் செய்யாதேங்கோ என்றும்.. கோழிக்குஞ்சு.. தையல் மிசின்.. ஜமுனாப் பாரி ஆடு.. என்று எல்லாரும் ஒன்றையே கொடுப்பதிலும்.. அவர்களுக்கு நீண்ட பயனளிக்கக் கூடிய வாழ்வாதாரத்தை நிரந்தரமாக கட்டி வளர்க்கக் கூடிய பொருண்மியம் ஈட்டித்தரக் கூடிய திட்டங்களை அவர்களிடம் கொண்டு செல்லுங்கோ என்று.. கெஞ்சாத குறையாக.. நேசக்கரம் உட்பட பலரிடம் சொன்னோம். இங்கு யாழிலும் கருத்துப் பகிர்ந்திருந்தோம். அதற்காக சம்பந்தப்பட்டவர்களின் பழிப்புக்கும் இழிப்புக்கும் காரணமானோம்..!

போர் முடிந்து.. இப்போ 3 ஆண்டுகள் கழிந்த பின் வந்திருக்கும் இந்தச் செய்தியையும் படியுங்கள்.. அன்று நாம் சொன்னதை இன்று அங்கு உதவி பெற்றவர்களே சொல்கிறார்கள்.. கேளுங்கள்..!

எமது உதவி நிறுவனங்களிடம் சரியான long term strategic plan மற்றும் contingency plan என்று எதுவுமே கிடையாது. ஆளையாள் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப செயற்படுவது மட்டும் தான் இவர்களுக்குத் தெரியும். புத்தி சொன்னாலும் கேட்கமாட்டாங்க..!

சரி எனியாவது சரியான திட்டங்களோடு... காலத்தின் தேவைக்கு ஏற்ப.. நீண்ட கால வருவாய் அளிக்கக் கூடிய போட்டியை சமாளிக்கக் கூடிய திட்டங்களோடு.. மக்களை நாடுங்கள்..! அவர்களின் அடிப்படை வசதிகள்.. கட்டுமானங்களை மீளமைத்துக் கொடுங்கள்...! இவற்றின் மூலமே பெண்களோ.. அல்லது ஆண்களோ.. போரால் பாதிக்கப்பட்ட மக்களை நிரந்தரமாக மீட்க முடியும். அற அற ஒரு சோடி செருப்பும்.. தேயத் தேய குடமும் கொடுத்துக் கொண்டிருப்பதில்.. பயனில்லை..! மக்களே அவற்றை தம் சொந்த வருவாயில் வாங்க வழி செய்வதே அவசியம்..!

வடபகுதி பெண்களின் அவலம்; இராணுவமும், சில குழுக்களுமே காரணம்.

ஞாயிற்றுகிழமை, மே 13, 2012

Women_1.jpg

போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகின்ற போதிலும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்று பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

''யுத்தத்தில் கணவனை இழந்தும், கணவன்மார் தடுப்பில் இருப்பதனாலும், பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியவர்களாகவும், குடும்பச் சுமையைத் தாங்க வேண்டியவர்களாகவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கின்றார்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ள போதிலும் இந்த உதவிகள் ஒரே மாதிரியானதாகவும், சமூக சூழலுக்குப் பொருத்தமற்றதாகவும் இருக்கின்றன. இதனால் இந்த உதவிகள் உரிய பயனை அளிக்கவில்லை'' என மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிலையம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பெண்கள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த ஷெரின் ஷரூர் கூறியுள்ளார்.

தோல்வியடைந்த வாழ்வாதாரத் திட்டங்களினால் கடனாளிகளாகியுள்ள பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கு வேறு பல்வேறு தொழில்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்றும் இதனால் அவர்களில் சிலர், பாலியல் தொழிலுக்குள் வலிந்து தள்ளப்படுகின்ற அளவிற்கு மோசமான நிலைமைக்கு ஆளாக நேரிட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்..

நன்றி ஈழநாதம்.

Edited by nedukkalapoovan

உதவும் அமைப்புகளே !

தயவு செய்து இவர்களையும் கொஞ்சம் கருத்தில் எடுங்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=102489

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, என்ன மாதிரியான திட்டங்களை/உதவிகளை சமூக நிலைமைக்குப் பொருத்தமாக வழங்க வேண்டும் என்றும் இங்கே எழுதினால் உங்கள் பதிவு முழுமையடையும். இல்லையேல் புலியைத் திட்டுவோர் மாதிரித் தான் உங்கள் விமர்சனமும் இருக்கும். இந்த விடயத்தில் மன்னார் அமைப்பின் ஷெரின் சரூராவது ஏதாவது எழுத்து வடிவில் முன் மொழிவு ஏதாவது வைத்திருக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திடம் 1 லட்சம் ரூபாவை உதவியாக கொடுத்தால் அவர்கள் அதனை சில காலத்தில் உணவுப்பொருட்களாக வாங்கி செலவளித்து முடித்து விட்டு மீண்டும் கையேந்தும் நிலையில் தொடர்ந்தும் இருப்பார்கள்.

இதனையே 1 லட்சம் ரூபாவுக்கு கோழிகளையோ,பால் மாடுகளையோ வாங்கி கொடுத்தால் முட்டைகள்,மேலும் கோழிகளை உருவாக்குதல்,பால்,மேலும் பல கன்றுகளை உருவாக்குதல் மூலம் அவர்களுக்கு சுய தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முதலாக (மாடு,கோழி)உள்ளதால் தொழிலை மேலும் விஸ்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாவதோடு சொந்தக்காலில் அம்மக்கள் நிற்க வழி ஏற்படுகிறது.தொழிலை அம்மக்கள் ஊக்கமாக செய்யும் போது அவர்களுக்கு ஊக்கப்பணம் கூட வழங்கலாம்.அத்தோடு மற்றவர்களுக்கும் அவர்களை போல் செய்ய வேண்டும் என ஆர்வம் பிறக்கலாம்.அத்தோடு உதவி செய்யும் நிறுவனமோ அல்லது தனிப்பட்டவரோ ஏதாவது சுய தொழில் செய்தால் தான் பணமோ உதவியோ வழங்கப்படும் என தெரிவித்தால் அம்மக்களே தங்களுக்கு ஏற்ற தொழிலை தேர்ந்தெடுப்பார்கள்.

மேற் சொன்னவை சிறு உதாரணங்களே.சூழ்நிலைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புக்களை மாற்றிக் கொள்ளலாம்.

நேசக்கரம் இப்படியான உதவிகள் தான் செய்கின்றது என அதன் இணையப் பக்கத்தில் போட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் இப்படியான உதவிகள் தான் செய்கின்றது என அதன் இணையப் பக்கத்தில் போட்டிருக்கு.

நேசக்கரம் அப்படியா தங்கட இணையத்தில போட்டியிருக்கினம் எனக்குத் தெரியாது :unsure: ஆனால் இங்கே சாந்தி அக்கா வந்து கேட்கிற உதவிகள் எல்லாம் தற்காலிக உதவிகளாகத் அதிகம் இருக்குது[படிக்கிற பிள்ளைகளுக்கு காசு கேட்டதைத் தவிர] கடைசியாக கேட்ட உதவி கூட வெளி நாட்டில் இருக்கும் அண்ணா ஊருக்கு திரும்பி போறதிற்கு தானே...கணக்க எழுதினால் நான் துரோகியாய் போய் விடுவேன் :(

ரதி,

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அட்டவணை வடிவில் உதவி கோருவோரின் விபரமும் உதவி கேட்பதற்கான காரணமும் நேசக்கரம் தளத்தில் இருந்தது. எல்லாக் காரணங்களும் ஒரு குறிப்பிட்ட தொழில் ஆரம்பிப்பதற்காக என்று இருந்தது. இப்ப காணவில்லை. ஆனால் இப்ப கணக்கறிக்கையில் பல கல்விக்கும், உடல் இயலாதவர்களுக்கு செலவு உதவி, உடல் இயலும் பெண்களுக்கு தொழில் செய்யும் உதவி என்று குறிப்பிட்டிருக்கு. சொன்னால் துரோகியாகி விடுவேன் என்று சொல்லியே சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால், நெடுக்கோடும் (நான் புரிந்து கொண்ட கருத்தின் படி) உங்களோடும் நேசக்கரம் பற்றிய விமர்சனத்தில் எனக்கு உடன் பாடில்லை. சாப்பாட்டையும் செருப்பையும் கொடுத்துத் தூக்கி விட்ட பிறகு தொழில் தொடங்க உதவுவதில் ஒரு பிழையும் இல்லை. அல்லது நேசக்கரம் தான் இரண்டையும் செய்ய வேண்டுமென்றும் இல்லை. ஐயாயிரம் பேர் இருக்கும் யாழில் இன்னும் சிலர் சேர்ந்து "பாசக் கரம்" என்று ஒரு புதிய அமைப்பைத் தொடங்கியும் இந்த தொழில் முதலீடுகளுக்கு உதவலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!

ஜஸ்டின் படிக்கும் மாணவருக்கும்,அங்கவீனர்களுக்கும் கொடுக்கும் உதவியைத் தவிர மற்றவர்களுக்கு[அங்கிருப்போருக்கு] தொழில் வாய்ப்புகள் தான் தேவை...மாதம்,மாதம் ஒரு குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக் கொண்டு இருந்தால் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை திட்டமிடாமல் எங்களையே நம்பிக் கொண்டு இருப்பார்கள் அதை விடுத்து ஏன் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க முடியவில்லை?...தொழில் வாய்ப்பு என்டால் நாங்கள் மூலதனம் போட்டால் மட்டும் சரி அதை வைத்து அவர்கள் தங்கட திறமையால் முன்னேறி விடுவார்கள் என்பது என் கருத்து.

நான் நேசக்கரம் மூலம் இது வரை உதவி செய்யவில்லை,இனி மேலும் செய்யப் போறதில்லை.ஏன் என்பதையும் இங்கு சொல்லப் போவதில்லை...நேசக்கரம் மூலம் கொடுக்க விரும்புவர்கள் கொடுக்கட்டும் அது அவர்களது விருப்பம் அதற்கு நான் தடை போடவில்லை ஆனால் நேச‌க்கர‌ம் மூலம் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் அதிகம் நன்மை அங்கு உள்ளவர்களுக்கு தான்[அன்றாட செலவுக்கு காசு அனுப்பாமல்]...நான் என்னவோ நே.க அங்குள்ளவருக்கு உதவி செய்வதில்லை என்று எழுதின மாதிரியல்லவா நீங்கள் கதைக்கிறீங்கள்.

நீங்கள் எப்படி உதவி செய்கிறீர்கள் என நான் உங்களைக் கேட்கவில்லை அதே மாதிரி எனக்குத் தெரியும் நான் எப்படி உதவி செய்கிறது என்று ...நீங்கள் பாச‌க்கர‌ம் அமைக்க விரும்பினால் அமையுங்கள் யாழில் உள்ள சிலர் விரும்பினால் உங்களோடு சேருவர்.

கோபத்தை அடக்கி விட்டு நான் எழுதியிருப்பதை வாசியுங்கள். நீங்கள் நான் எழுதினதாக சொல்லியிருக்கும் எதையும் நினைத்துக் கொண்டு நான் எழுதவில்லை என்பது அப்போது புரியக் கூடும். நான் எழுதியதன் சாராம்சம் இது தான்:

நே.க அடிப்படைத் தேவைகளுக்கும் உதவுகிறது, தொழில் தொடங்கவும் உதவுகிறது. 100 வீதம் தொழில் தொடங்க மட்டும் தான் உதவுவேன் என்று ஒரு உதவி அமைப்பு அடம் பிடிக்க முடியாது. அதுவும் எல்லாவற்றையும் இழந்தவர்களிடம் போய் இதை முகத்திற்கு நேரே சொல்ல உங்களாலோ நெடுக்காலோ கூட முடியாது. அதனால் நெடுக்கின் (அதை ஆதரிப்பின்) உங்களின் நே.க மீதான விமர்சனம் அவசியமற்ற ஒன்று. பாசக்கரம் என்பதும் உங்களை ஆரம்பிக்கச் சொல்லி நான் சொன்னதல்ல. அரசியல் போலவே உதவி செய்வதிலும் பன்முகத் தன்மை இருப்பது ஆரோக்கியமானது என்பதால் இருப்பதை விமர்சிப்பதை விடவும் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கலாம் என்றேன்.

Are we cool now? :D

மன்னிச்சு கொள்ளுங்கோ ஜஸ்டின் நானும் அவசரப்பட்டு விட்டேன் :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தரமான பொருளாதார வாழ்வாதாரங்களை தமிழ் பிரதேசங்களில் கட்டியெழுப்புவது என்பது போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கான வாய்ப்புகளிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது. இறுதிப்போரின் பிந்திய காலங்களில் பெருமளவிலான அவசர உதவிகள் வழங்கப்பட்டது இன்றியமையாதது எனினும் அது காலப்போக்கில் குறைக்கப்பட்டு சுயதொழிலுக்கான வாய்;ப்புகளை மக்களுக்கு வழங்குவதற்கான உதவிகள் படிப்படியாக அதிகரிக்கப்படுதலும் முக்கியமானதே. இவ்வாறான உதவிகளையும் கடனுதவித் திட்டங்களையும் புலம்பெயர்ந்த உறவுகள் செய்ய முன்னின்றபோதும் அதைப் பெறுவதில் மிகச் சிலரே அதில் நாட்டம் காட்டினார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதையும் பிழையென்று சொல்லிவிடமுடியாது. ஏனெனில் அத்தருணத்தில் மக்களுக்கு வேறு முக்கியமாக பிரச்சினைகளும் மற்றும் பல சிக்கல்களும்

இருந்ததால் தமது நேரத்தை இவ்வாறான திட்டங்களில் செலவழிக்க அவர்கள் முன்வரவில்லை. பெரும்பாலும் வெளியில் இருந்து கிடைத்த இலவச பொருட்களையும் உதவிகளையும் பெற்று வாழ்கையை ஓட்டவே விரும்பினார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, என்ன மாதிரியான திட்டங்களை/உதவிகளை சமூக நிலைமைக்குப் பொருத்தமாக வழங்க வேண்டும் என்றும் இங்கே எழுதினால் உங்கள் பதிவு முழுமையடையும். இல்லையேல் புலியைத் திட்டுவோர் மாதிரித் தான் உங்கள் விமர்சனமும் இருக்கும். இந்த விடயத்தில் மன்னார் அமைப்பின் ஷெரின் சரூராவது ஏதாவது எழுத்து வடிவில் முன் மொழிவு ஏதாவது வைத்திருக்கிறாரா?

இது தொடர்பாக நடத்தப்பட்ட விவாதம் ஒன்றில் இதே கேள்வியை நேசக்கரத்தைச் சார்ந்தவர்கள் முன் வைத்த போது.. விரிவான பதில் எழுதி இருந்தேன்.

பின்னர் அந்தக் கருத்துக்களை நக்கல்.. நையாண்டித்தனத்திற்கு பாவித்துக் கொண்டார்களே தவிர.. கவனத்தில் எடுக்கவில்லை..!

அந்த கருத்தியல் தாக்கத்தின் விளைவாகவே.. தையல்மிசின் நாயகிகள்.. என்ற கவிப்பூ வரையப்பட்டது..!

உண்மையான.. நடைமுறைக்கு உகந்த நீடித்த நிரந்தர பயனளிக்கக் கூடிய திட்டங்களை வகுக்கனும் என்றால் களத்தில் இருந்தான சரியான மதிப்பீடு பெறப்படுதல் வேண்டும். 3 ஆண்டுகளில் பல மாற்றங்கள்.. சூழ்நிலைகள்.. தேவைகள்.. என்று பல மாறி உள்ள நிலையில்.. சும்மா சகட்டு மேனிக்கு இதைச் செய்.. அதைச் செய் என்று சொல்ல முடியாது தானே ஜஸ்ரின் அண்ணா.

அந்த வகையில் களத்தில் இருந்து வரும்... இப்படியான செய்திகள் தான் தொலைநோக்கற்ற உதவி நிறுவனங்களின் போட்டா போட்டியால்... உதவிகள் சரியான பயனை பயனாளிகளுக்கு வழங்கவில்லை என்று இனங்காட்டுகின்றன. மேலும்.. உதவி நிறுவனங்கள் எவையும் சுயமதிப்பீடு செய்து தங்கள் உதவிகளின் பலாபலன்கள் சரியாக எட்டப்பட்டுள்ளனவா என்று கருத்துக் கூறாமையே அவற்றின் செயற்பாடுகளில் அவற்றிடம் சரியான அணுகுமுறை இல்லை என்பதைக் காட்டுதே ஜஸ்ரின் அண்ணா.

இந்த நிலை முதலில் மாறி.. களத்தில் நிகழ்த்தப்படும்.. சரியான நடுநிலை ஆய்வுகள் மூலம்.. கள மாற்றங்களை இனங்காட்டி.... பயனாளிகளினால் அடையப்பட்ட.. அடையப்பட வேண்டிய... குறுகிய கால.. நீண்ட கால நலன்கள் குறித்த மதிப்பீடுகளை உதவி நிறுவனங்கள் மாதாந்த.. அல்லது வருட கணக்கறிக்கைகளுடன் வெளியிட முன்வருதல் வேண்டும்.

அப்படி அமைந்தால் அன்றி களத்தை சரியாக மதிப்பிட்டு.. திட்டங்களில் மாற்றங்கள்.. சீராக்கங்கள் செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இவற்றைச் செய்யாது.. பயனாளிகளின் மாறி வரும் தேவைக்கு ஏற்ப அவர்களை சரியான வகையில் பயன்கள் சென்றடைய மாட்டாது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை முதலில் மாறி.. களத்தில் நிகழ்த்தப்படும்.. சரியான நடுநிலை ஆய்வுகள் மூலம்.. கள மாற்றங்களை இனங்காட்டி.... பயனாளிகளினால் அடையப்பட்ட.. அடையப்பட வேண்டிய... குறுகிய கால.. நீண்ட கால நலன்கள் குறித்த மதிப்பீடுகளை உதவி நிறுவனங்கள் மாதாந்த.. அல்லது வருட கணக்கறிக்கைகளுடன் வெளியிட முன்வருதல் வேண்டும்.

PLOTE தமிழீழம் கண்டடையப் போராட வெளிக்கிட்ட கதைதான் நினைவுக்கு வந்து தொலைத்தது..

  • கருத்துக்கள உறவுகள்

நேரமெடுத்துப் பதில் பதிந்தமைக்கு நன்றி நெடுக்கு! உங்கள் ஆலோசனை நல்லது தான். நே.க இந்த வழியில் போக வேண்டுமா இல்லையா என்பதை நே.க இயக்குனர் சபை தான் தீர்மானிக்க வேணும். என்னைப் பொறுத்தவரை சிறையில் இருக்கும் உறவுகளின் அடிப்படைத் தேவைகளைக் கவனிக்கவும் ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மற்றும் இந்த மக்களின் தேவையறியும் வேலைகள் (feasibility study, impact analysis) களத்தில் இருக்கிற ஒரு நம்பிக்கையான அமைப்பு அல்லது ஆட்கள் மூலம் தான் செய்யப் பட வேணும். பல சமயங்களில் அப்படியான தொடர்புகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. உங்களிடம் ஏதாவது செயற் படுத்தக் கூடிய திட்டம் இது சம்பந்தமாக இருந்தால் நேரம் இருக்கும் போது அறியத் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முற்குறிப்பு :- இத்தலைப்பில் விவாதத்தை எனக்கு மின்னஞ்சல் செய்த முகமறியா உறவுக்கு நன்றிகள். எல்லா தலைப்புகளையும் நான் பார்ப்பதில்லை நேரமில்லை. அதனையறிந்து அவ்வப்போது இத்தகைய இணைப்புகளை மின்னஞ்சல் செய்யும் முகமறியா உறவுக்கு மீண்டும் நன்றிகள்.

ஜஸ்ரின்,

நேசக்கரம் ஆரம்பகாலத்தில் அதிகம் அவசர உதவிகள் அதாவது உடனடியான பண உதவிகள் மற்றும் மாணவர்களின் அவரச தேவைகளையே அதிகம் அக்கறை செலுத்திச் செய்தது. பின்னர் மீள்குடியேறிவர்களின் தேவைகளை (கையில் எதுவுமில்லாமல் போனவர்கள் தானே) மாதாந்த உதவிகள் மற்றும் பிள்ளைகளின் கல்வியையே பிரதான கவனிப்பாக செய்தோம்.

அவசர நிலமைகள் தாண்டி அண்மைய ஒருவருடத்திற்குள்ளான திட்டங்கள் 80 சதவிகிதமானவை சுயதொழில் முயற்சிகளுக்காகNவு வழங்கப்பட்டு வருகிறது. அதையும் உதவி செய்கிறவர்களே நேரடியாக அனுப்புகிறார்கள். ஒருவருக்கு ஒரு தொழிலுக்கு உதவினால் பயனாளியின் பயனை 4மாத முடிவில் அறிக்கையாக எடுப்பேன். அந்த அடிப்படையில் தொடர்ந்த முயற்சிகளை தரவிட்டே ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

மற்றும் பயனாளிகளின் விருப்பப்படி தொழில் முயற்சிகளை சொல்வார்கள். அந்த பிரதேச அமைவில் எது அவர்களுக்கு பொருத்தம் என்பதனை முகவர்களை அனுப்பி நமது தரப்பால் அவர்களுககு எது பொருத்தம் என்பதனையும் தெரிவிப்பேன். அதுவும் அவர்களுக்கு மிகுந்த பலனைக் கொடுத்திருக்கிறது.

இந்த விபரங்கள் உதவிபெற்றோர் என்ற இணைப்பில் எமது வெப்சைற்றில் இருக்கிறது. முன்பக்கத்தில் வருகிற 10செய்திகள் கடைசி அப்டேற் மட்டுமே. மற்றும் மாத கணக்கறிக்கையில் கணக்கறிக்கை மட்டுமே வரும். ஊதவி பெற்றோர் இணைப்பில் மட்டுமே விபரமான தரவுகள் இருக்கிறது.

சுயதொழில் வகைகள் :-

கால்நடை வளர்ப்பு , கோழி வளர்ப்பு (இறைச்சிக்கோழி , ஊர்க்கோழி) , விவசாயம் , சிறுவியாபார நிறுவனம் , உணவுதயாரித்து விற்றல் (பாடசாலைகள் , கடைகளுக்கு) தையல் (தையல் நாயகிகள் பலரை சிறந்த பொருளாதாரத்தை ஈட்டும் வகையிலான ஓடர்களையும் எடுத்துக் கொடுத்துள்ளோம். பலர் நாம் நினைத்ததைவிட தையலில் முன்னேறியுள்ளனர்) கடற்தொழில் செய்யக்கூடியவர்களுக்கு வலை போன்ற சில அடிப்படை உதவிகள் வழங்கியுள்ளோம். வலைகளை வாடகைக்கு விடுதல் தங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தல் என அதிலும் கணிசமான பயன் கிடைத்துள்ளது. கடற்கரையை அண்டி வாழ்கிற பெண்கள் கடலுணவுகளை பதனப்படுத்தி வியாபாhரம் செய்கின்றனர்.

திட்டங்கள் கையில் நிறைய இருக்கிறது. ஆதனை செயற்படுத்த நிதிவளம் இல்லை. இதே யாழ்களத்தில் திட்டங்களை கொண்டு வாருங்கள் உதவுகிறோம் என்ற வேண்டுதல்கள் பலமுறை வந்தது பார்த்திருப்பீர்கள். ஆனால் அதனை செயற்படுத்த இலவச ஆலோசனைகள் மட்டுமே கிடைக்கிறது. ஆலோசனைகளை மட்டும் வைத்து பணமில்லாமல் எதனைச் செய்ய முடியும் ?

கடந்தவாரம் சாம்பிராணி குச்சிகள் செய்து விற்பனை செய்வதற்கான ஒரு பயிற்சிப்பட்டறை ஆரம்பிக்க 25ஆயிரம் தேவைப்பட்டது. அதற்கான பண உதவி இன்னும் கிடைக்கவில்லை. இதில் 15விதவைப்பெண்கள் ஈடுபட்டுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்தாயிற்று. சாம்பிராணிக்குச்சி வியாபாரத்திற்கான சந்தைப்படுத்தல் மற்றும் அதன் வருமானம் யாவும் குறைந்த செலவில் நிறைந்த வருவாயை பெருக்குவதற்கான ஏற்பாடுகளும் இருக்கிறது. ஆனால் இந்த 15பேரையும் இதில் ஈடுபடுத்த பணம் தான் முன்னுக்கு பிரச்சனையாக இருக்கிறது.

இதுபோல வெவ்வேறு தொழில் முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் இருக்கிறது. குறைந்தது 10லட்சம் தயாராக இருப்பின் உள்ளுர் வளங்களோடு தொழில் திட்டத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பணத்தை யாரிடம் இருந்து பெற்றுக் கொள்வது ? எனது சொந்த அனுபவம் ஆலோசகர்களை நம்பி எதுவும் நடக்காது என்பதே.

கடன் உதவி அடிப்படையில் உதவியைப் பெற்றவர்கள் பலர் அதனை திரும்பி கட்டாது விட்டார்கள். அந்த முயற்சியும் நமது மக்களுக்கு சரிவராது உள்ளது. கடன் அடிப்படையில் திருப்பி தருவோம் என்று கேட்ட சிலரில் நம்பிக்கை வைத்து தனித்த எனது பொருளாதாரத்தில் 3000ஆயிரம் யுரோ கடன் எடுத்துக் கோடுத்தேன். அதிலிருந்து ஒரு லட்ச ரூபா மட்டுமே திருப்பிக் கிடைத்தது.(ஒரு போராளி கோளி வளர்ப்பிற்கு வேண்டி திருப்பி அதனை இன்னொரு போராளிக்கு ஆடுவளர்ப்பிற்கு கொடுத்துள்ளார்) மீதி ????? எடுத்த கடனைக் கட்ட இப்போ நான் மிகுந்த சிரமப்படுகிறேன். இந்த விசப்பரீட்சையில் நானே விரும்பி போனதால் இந்தக் கடனை யாரையும் தாருங்கோ எனக்கேட்கவில்லை. நடைமுறையைச் சொல்கிறேன்.

இங்கு பலர் பல கட்டளைகளை எழுதுகிறார்கள். அவர்களது கட்டளைகளை செய்ய என்னிடம் சக்தியில்லை. அவர்களும் ஏதாவது ஒரு அமைப்iபா ஆரம்பித்து தங்கள் திறமை மிக்க சிந்தனைகளால் எதையாவது செயற்படுத்தினால் எனது பங்களிப்பையும் செய்யலாம். எனது சக்திக்கு மேற்பட்டு செய்கிறேன். இதில் இன்னும் 10பேர் இணைந்தால் இன்னொரு நூறுபேரை உருவாக்கலாம். ஆலோசகர்களை விடவும் செயற்பாட்டாளர்களே இப்போது தேவை. ஆனால் நமது விதி படித்த மேதாவிகள் புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் இலவச ஆலோசகர்களாக இருப்பது எதையும் சாதிக்க உதவாத ஆலோசனைகள் தானே.

நேசக்கரம் பதிவு செய்யப்பட்டு 3வருடமாகிறது. இதுவரையில் நேசக்கரம் நிர்வாகச்செலவுகள் தொலைபேசி ,தபால் உட்பட எல்லாம் எனது தனித்த பொருளாதாரமே. நானும் ஒரு அம்மா எனக்கும் குடும்பம் குழந்தைகள் எல்லோரையும் போல இருக்கிறது. ஆனால் பலரது நினைப்பு ஏதோ கட்டாயம் நான் அவர்கள் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டுமென்ற விருப்பு. மண்ணின் எல்லா நிலமைக்கும் நானும் காரணமாக இருக்கிறேன். அந்த குற்ற உணர்வால் மட்டுமே இந்த விசப்பரீட்சையை விரும்பி ஏற்றுள்ளேன். ஒரு கட்டத்தில் நானும் ஒதுங்கிப்போகிற நிலமையும் வரலாம். ஆயினும் இன்னொரு 10பேரையேனும் தொடர்ந்து இயங்க உருவாக்கிவிட்டே போவேன். ஆதற்கான ஆதரவினை எல்லோரும் தந்தால் 10ஐ நூறாக்கிவிட்டு போய்விடுவேன்.

PLOTE தமிழீழம் கண்டடையப் போராட வெளிக்கிட்ட கதைதான் நினைவுக்கு வந்து தொலைத்தது..

எனக்கும் ஒரேநாளில் தமிழீழம் காணலாமென்ற புளொட்டின் நினைவுதான் வந்து தொலைத்தது கிருபன். :o

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தவாரம் சாம்பிராணி குச்சிகள் செய்து விற்பனை செய்வதற்கான ஒரு பயிற்சிப்பட்டறை ஆரம்பிக்க 25ஆயிரம் தேவைப்பட்டது. அதற்கான பண உதவி இன்னும் கிடைக்கவில்லை. இதில் 15விதவைப்பெண்கள் ஈடுபட்டுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்தாயிற்று. சாம்பிராணிக்குச்சி வியாபாரத்திற்கான சந்தைப்படுத்தல் மற்றும் அதன் வருமானம் யாவும் குறைந்த செலவில் நிறைந்த வருவாயை பெருக்குவதற்கான ஏற்பாடுகளும் இருக்கிறது. ஆனால் இந்த 15பேரையும் இதில் ஈடுபடுத்த பணம் தான் முன்னுக்கு பிரச்சனையாக இருக்கிறது.

இதுபோல வெவ்வேறு தொழில் முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் இருக்கிறது. குறைந்தது 10லட்சம் தயாராக இருப்பின் உள்ளுர் வளங்களோடு தொழில் திட்டத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பணத்தை யாரிடம் இருந்து பெற்றுக் கொள்வது ? எனது சொந்த அனுபவம் ஆலோசகர்களை நம்பி எதுவும் நடக்காது என்பதே.

நமது விதி படித்த மேதாவிகள் புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் இலவச ஆலோசகர்களாக இருப்பது எதையும் சாதிக்க உதவாத ஆலோசனைகள் தானே.

எனக்கும் ஒரேநாளில் தமிழீழம் காணலாமென்ற புளொட்டின் நினைவுதான் வந்து தொலைத்தது கிருபன். :o

எனது விருப்பு வாக்கை தங்களுக்கு இட்டுள்ளேன். அதற்கு காரணம் தங்களதுது பணியின் பாரத்தையும் அதைத சுமக்க தாங்கள் படும் வேதனைகளையும் அறிவேன். ஆனால் இங்கு தாங்கள் எழுதிய பல கோணங்களும் பதில்களும் பிடிக்கவில்லை.

இனி விடயத்துக்கு வருவோம்.

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள 10 லட்சம் இருந்தால் ஒரு திட்டத்தை செயற்படுத்தலாம் என்பது என்ன?

ஏற்கனவே நாம் இது பற்றி களத்திலும் தொலைபேசியிலும் பேசியுள்ளோம். இதே அளவு தொகைக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் ஒரு திட்டத்தை வன்னியில் செய்யும் திட்டமும் பணமும் உண்டு. இதை ஏற்கனவே தங்களுக்கும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கும் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை அபப்படியொரு திட்டத்தை எவரும் சமர்ப்பிக்கவில்லை. அந்தத்திட்டம் கிட்டத்தட்ட நெடுக்கு குறிப்பிடும் நீண்டகால நன்மை பயக்குகும் திட்டமாக அமையும். மற்றும் இத்திட்டம் எமது அங்கத்தவரின் பணத்தினால் செய்யப்படுவதால் சில கட்டுப்பாடுகளுடனேயே அவற்றைச்செய்யமுடியும். அது பற்றி தங்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன்.

குறிப்புஃ இப்படி ஒரு திட்டத்தை தங்களுடன் சேர்ந்து செய்யணும் என்பதால்தான் இங்கு தங்களால் இணைக்கப்படும் சில திட்டங்களிலிருந்து தள்ளி நிற்கின்றேன்.

உலகிலயே மிகவும் இலகுவான விடயம் ஒன்றை குறைசொல்வது அல்லது புத்திமதி சொல்வது. ஆனால் நாம் அந்த நிலையில் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பலர் சிந்திப்பதில்லை (சிந்திக்கவும் விரும்புவதில்லை).

ஒரு பொதுஅமைப்பு என்பது விமர்சனத்திற்க்கு வரும் என்பது தவிர்க்கமுடியாது. ஆனால் 10பேர் 10விதமான திட்டங்களுடன் வந்து அதனை நடைமுறைப்படுத்தவும் என்பது போல் உள்ளது இங்கு. திட்டம் வகுப்பது மட்டும் எமது வேலை அதை நடைமுறைப்படுத்துவது அமைப்பின் தலையில். இதை தான் இங்கு பலர் எதிர்பார்ப்பது போல் உள்ளது.

ஒரு அமைப்பு குறிகியகால திட்டத்தில் செயற்படுகின்றது. அதில் தவறும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். சரி என்று நினைப்பவர்கள் சேர்ந்து உதவிகளை செய்யலாம். பிழை என்று நினைப்பவர்கள் தாமே ஒரு அமைப்ப தொடங்கி அவர்களிற்க்கு சரி என்று படுவதை செய்யலாம். காலப்போக்கில் அவர்களின் நடவடிக்கைகளை பார்த்து பலர் அவர்களுடன் இணையலாம் அல்லது அந்த அமைப்பு இல்லாமலும் போகலாம். அதைவிட்டு இலவச ஆலோசனைகளை மட்டும் கொடுத்துவிட்டு ஒதுங்குவது அழகல்ல. பணத்தை கொடுத்துவிட்டேன் இனி தமழீழத்தை பெற்றுத்தரவேண்டியது இயக்கத்தின் வேலை என்பது போல உள்ளது.

இங்கு யாருக்கும் நான் வக்காலத்து வாங்கவில்லை. எந்த அமைப்பு உதவி வேண்டி வந்தாலும் என்னால் முடிந்ததை செய்வேன்.

ஒரு காரியத்தை செய்வதற்க்கு வாருங்கள் என்றால் ஒருத்தரும் வரமாட்டார்கள். ஆனால் அதை கெடுப்பதற்க்கு தானாகவே ஒரு குறூப் சேர்ந்திடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயனாளிகளை நீண்ட காலம் உதவிகளில் தங்கி இருக்கச் செய்யும் திட்டங்களில் மக்கள் தொடர்ந்து உதவமாட்டார்கள். அதேபோல்.. பயனாளிகளின் தேவைகளும் காலத்துக்கு காலம் மாறி வரும் நிலையில்.. அவர்களின் எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே போகும். ஒரு குறிப்பிட்ட அளவு உதவிகளை மட்டும் வழங்கி பயனாளிகளை தொடர்ந்து திருப்திப்படுத்திக் கொண்டிருக்க முடியாத நிலையில் பயனாளிகள் வழிதவறிப் போகும் நிலை அதிகரிக்கும். அதையே தான் இங்கு சொல்லத் தலைப்பட்டுள்ளார்கள்.

நேசக்கரம் மட்டுமல்ல.. இன்னும் பல அமைப்புக்கள்.. கோழிக்குஞ்சு.. தையில் மிசினோடதான் நிற்கினம். இதனால் மக்களின் புரதத் தேவையும்.. உடுப்புத் தேவையும் பூர்த்தியாகும்..???????????????!

வழங்கப்பட்ட கோழிக்குஞ்சுகள்.. வளர்ந்து முட்டை போட்டு.. அதை விற்று காசாக்கி.. அதில வீடு கட்டி.. அதில.. வசதியா வாழ முடியும் என்றால்.. ஏன் எம்மில் பலர் ஊரை விட்டிட்டு கள்ளப் பொய் சொல்லி அசைலம் அடிச்சு வெளிநாட்டு அரசுகளை ஏய்ச்சு.. அது கொடுக்கிற பணத்தில வெட்டி பந்தா காட்டிக்கிட்டு.. வாழினம்..?????!

மீண்டும் மீண்டும்.. ஒரே திட்டங்களும்.. மக்களை ஒரே நிலையில் வைத்திருக்கும் மனப்பான்மையும் மாறி.. அந்த மக்களும் பொருண்மியத்தில் தன்னிறைவு நோக்கிப் போக.. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு துறையாக தேர்ந்தெடுத்து.. நீண்ட நோக்குள்ள இலாப நோக்குள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதே அவசியம்..!

செய்வார்களா.. இல்ல.. நான் மாதா மாதம்.. உதவி குடுக்கிறன்.. இவங்க என்ன கேட்கிறது என்று கண்மூடித்தனமாக விவாதங்கள் தான் செய்யப் போறாங்களா..??! அப்படின்னா.. அதையே செய்து கொண்டிருக்கட்டும்..வெளிநாட்டில் இருந்து ஆதரவும் வருவாயும் பெறாத தாயக மக்களின் வாழ்வியல் என்பது மாறாத ஒன்றாகவே இருக்கும். :icon_idea:

Edited by nedukkalapoovan

ஒருமுறை மக்களில் ஒருவர் கேட்ட கேள்விக்கு முதுநிலை புலிகளின் தளபதி ஒருவர் பதிலளித்த போது கூறிய கதையை இங்கே கூறினால் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு ஆற்றங்கரையின் அக்கரையில் ஒரு கொடியவன் சிறு பாலகர்களை வரிசையாக நிறுத்திவைத்து ஒவ்வொருவராக ஆற்றில் தூக்கி எறிகிறான். இக்கரையில் நீந்த தெரிந்த ஒருவன் அந்த கொடியவன் எறியும் ஒவ்வொரு பாலகனையும் கஷ்டபட்டு நீந்தி காப்பாற்றி இக்கரை சேர்க்கிறான்.

ஆனால் பரிதாபம் என்ன என்றால், அந்த கொடியவன் குழந்தைகளை ஆற்றில் எறிவதை நிறுத்தவில்லை, இக்கரை நல்லவனுக்கோ நீந்தி நீந்தி களைத்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார் அந்த தளபதி.

எங்களை திரும்ப திரும்ப களைத்தாலும் ஒவ்வொரு குழந்தையாக காப்பாற்ற சொல்லுகிறீர்களா இல்லை ஒரேயடியாக அக்கரைக்கு சென்று அந்த கொடியவனை அழித்து இந்த கொடுமைக்கு ஒரு முடிவு காண சொல்லுகிறீர்களா என்று கேட்டார். அக்கரைக்கு செல்லும் அந்த நேரத்தில் சில குழந்தைகள் இறக்கவும் நேரிடலாம். ஆனால் நிரந்தரமான தீர்வை காணலாம்.

இப்போது நீங்கள் சொல்லுங்கள் எதனை செய்யலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

எனது விருப்பு வாக்கை தங்களுக்கு இட்டுள்ளேன். அதற்கு காரணம் தங்களதுது பணியின் பாரத்தையும் அதைத சுமக்க தாங்கள் படும் வேதனைகளையும் அறிவேன். ஆனால் இங்கு தாங்கள் எழுதிய பல கோணங்களும் பதில்களும் பிடிக்கவில்லை.

தங்களை எனது கருத்து எழுத்துமுறை சங்கடப்படுத்தியிருப்பின் மன்னியுங்கள் விசுகு. நடைமுறையில் நடைமுறைப்படுத்தலில் ஏற்பட்ட அனுபவங்களே இப்படி எழுத வைக்கிறது.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இனி விடயத்துக்கு வருவோம்.

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள 10 லட்சம் இருந்தால் ஒரு திட்டத்தை செயற்படுத்தலாம் என்பது என்ன?

ஏற்கனவே நாம் இது பற்றி களத்திலும் தொலைபேசியிலும் பேசியுள்ளோம். இதே அளவு தொகைக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் ஒரு திட்டத்தை வன்னியில் செய்யும் திட்டமும் பணமும் உண்டு. இதை ஏற்கனவே தங்களுக்கும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கும் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை அபப்படியொரு திட்டத்தை எவரும் சமர்ப்பிக்கவில்லை. அந்தத்திட்டம் கிட்டத்தட்ட நெடுக்கு குறிப்பிடும் நீண்டகால நன்மை பயக்குகும் திட்டமாக அமையும். மற்றும் இத்திட்டம் எமது அங்கத்தவரின் பணத்தினால் செய்யப்படுவதால் சில கட்டுப்பாடுகளுடனேயே அவற்றைச்செய்யமுடியும். அது பற்றி தங்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன்.

ஏற்கனவே பெரிய திட்டம் பற்றி உங்களுடன் பேசியிருக்கிறேன். ஆயினும் உங்கள் தரப்பால் எதிர்பார்க்கப்படும் திட்டத்தை நிறைவேற்றுவது அதாவது ஒரு கிராமத்திட்டம் செயற்படுத்த 10லட்சம் போதாது. உங்கள் அமைப்பினருடன் கதையுங்கள் ஒரு தொழில் முயற்சிக்கு முதலீடு செய்வார்களா என. தொழில் முயற்சித் திட்டங்கள் செய்ய பெரிய பொருளாதாரம் தேவை. கையில் பல திட்டங்கள் இருக்கிறது.

கோழி வளர்ப்பு கூட நாம் சிறிதாகவே செய்து கொடுக்கிறோம். நாம் ஒரு கோழிப்பண்ணையை பெரிய முதலீட்டில் உருவாக்கினால் (இறைச்சிக்கோழி இதன் பயன்காலம் 6வாரம்) மாதம் இலாபத்தை பெற முடியும். பலருக்கான தொழிலையும் குடுக்கலாம்.

ஏற்கனவே நான் தெரிவித்த திட்டங்களில் நீங்கள் பெரிதாக அக்கறையெடுக்கவில்லை அதனால் நானும் விட்டுவிட்டேன்.கிராமம் அமைப்பது பெரியளவில் வெற்றி தராது. தொழில் முயற்சிக்கான ஆதரவினை உங்கள் ஊர் ஒன்றியம் செய்வார்களானால் கதையுங்கள். கையில் உள்ள திட்டத்தினை தந்து உதவுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி தொழில்துறையை நிர்வகிக்க சங்கம் முன்வராததால்தான் முன்னரே அதை நிராகரித்திருந்தனர். அதற்கு ஏதாவது மாற்றீடு இருந்தால் அறியத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி தொழில்துறையை நிர்வகிக்க சங்கம் முன்வராததால்தான் முன்னரே அதை நிராகரித்திருந்தனர். அதற்கு ஏதாவது மாற்றீடு இருந்தால் அறியத்தாருங்கள்.

நீங்கள் ஏற்கனவே கேட்டிருந்தது போல ஒரு கிராமம் அமைக்க 10அல்லது 15 லட்சம் போதாது. குடிசைகள் அமைத்துக் கொடுப்பது ஒரு மழைகாலத்தோடு பாதிப்புகள் வந்துவிடும். மற்றும் தொழில் தொடங்கி அதன் மூலம் அவர்களை உழைப்பால் உயர்த்துவது அவர்களுக்கு நிரந்தரமான வருவாயையும் அவர்களே தங்களை நிர்வகிக்கவும் பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றவும் உதவும். குறைந்தது ஒரு வீடு அமைக்க மூன்றரை லட்சம் தேவை.இதுவே ஒரு தொழில் முயற்சிக்கானால் பலருக்கான பயன் இருக்கிறது. நடைமுறை பொருளாதாரம் அதன் உயர்வு பற்றி உங்கள் ஊரவர்களிடம் கதைத்துப் பாருங்கள்.

ஒருமுறை மக்களில் ஒருவர் கேட்ட கேள்விக்கு முதுநிலை புலிகளின் தளபதி ஒருவர் பதிலளித்த போது கூறிய கதையை இங்கே கூறினால் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு ஆற்றங்கரையின் அக்கரையில் ஒரு கொடியவன் சிறு பாலகர்களை வரிசையாக நிறுத்திவைத்து ஒவ்வொருவராக ஆற்றில் தூக்கி எறிகிறான். இக்கரையில் நீந்த தெரிந்த ஒருவன் அந்த கொடியவன் எறியும் ஒவ்வொரு பாலகனையும் கஷ்டபட்டு நீந்தி காப்பாற்றி இக்கரை சேர்க்கிறான்.

ஆனால் பரிதாபம் என்ன என்றால், அந்த கொடியவன் குழந்தைகளை ஆற்றில் எறிவதை நிறுத்தவில்லை, இக்கரை நல்லவனுக்கோ நீந்தி நீந்தி களைத்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார் அந்த தளபதி.

எங்களை திரும்ப திரும்ப களைத்தாலும் ஒவ்வொரு குழந்தையாக காப்பாற்ற சொல்லுகிறீர்களா இல்லை ஒரேயடியாக அக்கரைக்கு சென்று அந்த கொடியவனை அழித்து இந்த கொடுமைக்கு ஒரு முடிவு காண சொல்லுகிறீர்களா என்று கேட்டார். அக்கரைக்கு செல்லும் அந்த நேரத்தில் சில குழந்தைகள் இறக்கவும் நேரிடலாம். ஆனால் நிரந்தரமான தீர்வை காணலாம்.

இப்போது நீங்கள் சொல்லுங்கள் எதனை செய்யலாம் ?

சாந்திக்கு ஒரு பழைய குப்பியை கடிக்க குடுக்கலாம் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கு ஒரு பழைய குப்பியை கடிக்க குடுக்கலாம் :icon_idea:

KP ஒளிச்சிருந்த மாதிரியே ஒளிச்சிருந்திருக்கலாம். தலைவராக ஆசைப்பட்டு.. கோத்தாவ பணக்காரன் ஆக்கிக்கிட்டு இருக்கிறதிலும்.. மக்களின் பணத்தை மக்களிட்ட கொடுத்தாலாவது.. மக்கள் நலனடைவார்கள்..! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.