Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் பற்றிய விவரணம் -வீடியோ

Featured Replies

இணைப்புக்கு நன்றி கோமகன்.

இவரது கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும், பாடல்வரிகளை நினைவில் நிறுத்தி பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடாத்திய திறமையும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம்.

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி கோமகன்.

இவரது கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும், பாடல்வரிகளை நினைவில் நிறுத்தி பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடாத்திய திறமையும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம்.

இவரில் விமர்சனங்கள் இருந்தாலும் , காலத்தால் அழிக்கமுடியாத அரும்பெரும் பொக்கிசமாக எம்மிடையே வாழ்கின்றார் . மிக்க நன்றிகள் ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு .

இவரில் விமர்சனங்கள் இருந்தாலும் , காலத்தால் அழிக்கமுடியாத அரும்பெரும் பொக்கிசமாக எம்மிடையே வாழ்கின்றார் . மிக்க நன்றிகள் ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு .

யாரில் தான் விமர்சனங்கள் இல்லை? நல்லவற்றை எடுத்து கூடாததை விட்டு விடுவோமே!

  • தொடங்கியவர்

யாரில் தான் விமர்சனங்கள் இல்லை? நல்லவற்றை எடுத்து கூடாததை விட்டு விடுவோமே!

நானும் உங்கள் பக்கம் தான் ஈஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழரை திருமணம் செய்ததால் அரசினால் நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.இக்கூற்று உண்மையா??

  • தொடங்கியவர்

இவர் தமிழரை திருமணம் செய்ததால் அரசினால் நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.இக்கூற்று உண்மையா??

அப்துல் ஹமீட் ஓர் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர் . இவர் விசாலாட்சி என்ற பிராமணப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் .. விசாலாட்சி ஹமீத் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார் . ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட தமிழ்சேவைப் பணிப்பாளர் நியமனத்தில் அருந்ததி சிறீ ரங்கனாதன் , வீ என் மதியழகன் தலமையில் ஏற்பட்ட உள் அரசியல் வேலைகளால் மனமுடைந்தவர் , நாட்டை விட்டே வெளியேறினார் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை டிசைன் சில்க்ஸ்.. சங்கு மார்கு கைலிகள் .. பவர் சோப்பு.. எல்லாம் இவரின்ட குரலில் விற்பனை ஆனவை.. கொழும்பு வானோலி வர்த்தக சேவை 1900களில்

  • தொடங்கியவர்

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

அதிகாரமட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சுயநலவாதிகள் என்றால் தமிழர்கள் எல்லோருமே சுயநலவாதிகளாகின்றனர் . அன்றைய காலகட்டத்தில் பெரும் பதவிகள் யாவுமே தமிழர்கள்தான் அலங்கரித்தார்கள் . ஒருவகையில் தமிழுக்கும் தேசியத்திற்கும் அதிகாரமட்டத்தில் இருந்த தமிழர்கள் உதவியுள்ளார்கள் . உதாரணமாக அப்போதய கொழும்பு மேயராக இருந்த கணேசலிங்கம் பலவழிகளில் தேசியத்திற்கு உதவியுள்ளார். இவ்வாறான உதவிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை . எதையும் பறைதட்டிதான் செய்யவேண்டும் என்ற அவசியமில்லையே தமிழரசு . உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

***********எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் தமிழ் உச்சரிப்பை இன்றும் அன்றும் கண்டு

வியந்தவன். ஆங்கில வாடை இல்லாமல்

தமிழைப் பேசும் ஒரு அறிவிப்பாளர் மட்டுமல்ல

மிகத் திறமைவாய்ந்த ஒரு கலைஞர்.

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

Edited by tamilsooriyan

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கே எஸ் ராஜாவின் மரணத்தின் பின்னர் தான் இந்தியாவிற்கு போனவர் என யாரோ சொல்லிச்சினம் உண்மையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன், ரதி,

கோ,

நான் அறிந்த வகையில் அப்புதுல் கமிதினது சேவைக்காலம் மற்றையவர்களுடன் ஒப்பிடும் போது குறைவு என்றுதான் நினைக்கிறன்..அவர் வெளியே பிரபல்யமாக இருந்தாலும் நிர்வாக நிலையில் ஒரு இளையவாராக இருந்தார் ஒன்று ஒருவர் சொன்ன ஞாபகம்.- என்னுடன் கதைத்தவர் சொன்னவர்- பகிடியாகவே அல்லது கால்புனர்வாகவோ தெரியவில்ல, அப்துல் கமிதுவும் - "மழையில் மலை பெய்கிறது" என்றுதானாம் ரேடியோ சிலோனுக்கு வந்தவர். :)

ரதி,

உண்மையில் KS ராஜா இற்கும் BH கமிதுக்கும் இடையில் தொழில் ரீதியான போட்டிதான் இருந்தது என்று சொல்லுவார்கள். அப்படி பார்த்தல், ஒருவர் இல்லாமல் போனபிறகு மற்றவர் நாட்டை விட்டு வெளியேறினார் என்பது பொருத்தமில்லாமல் உள்ளது.

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

நீங்களும் இலங்கையில் தரயிறங்கியதும் I am A Sri Lankan என்று தான் சொல்லிகொண்டு போவீர்களே தவிர நான் தமிழ் ஈழ தமிழன் என்றா சொல்லிகொண்டு போவீங்கள்? அங்கே வாழவேண்டும் என்றால் சிலதுகளை அடக்கி தான் வாசிக்கணும் கண்டியளோ? இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

விடிவெள்ளி,

நிச்சயமாக நான் I am Sri lankan என்று பெருமையாக சொல்லிக்கொண்டு போகமாட்டேன், அதே நேரம் ஈழ தமிழன் என்று மார்தட்டி கூறாட்டிலிம் மனதுக்குள் நினைத்துக்கொண்டு போவேன் எனக்கு அதுதான் பெருமையும் கூட Sri lankan என்று நினைக்க முடியவில்லை ஏனெனில் அவர்கள் செய்த கொடுமை அப்படி ...... :(

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

ஆமாம், இல்லாதுபோனால் ஓடிவந்து உதவி விடுவார்கள் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முஸ்லிம்கள் என்ன உதவி தமிழருக்கு செய்திருக்கின்றார்கள் ????

இவர்களுக்கு புலிகள் மேல் கோபம் என்றால் இப்போது அவர்கள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுகின்றது ஏன் என்னும் தமிழர்களின் பிரச்சனைக்கு இவர்கள் சேர்ந்து குரல் கொடுக்கவில்லை ?????

புலிகளும் தமிழரும் ஒன்று தானே. எமக்கு மற்றவர் மேல் உள்ள கோபம் ஆறாதது போல அவர்களுக்கும் இருக்கலாம். அவர்கள் உதவத் தேவையில்லை. எம்மை நாமே காப்பாற்றவும், எம்மக்களுக்கு நாமே உதவவும் முன் வரவேண்டும்.

  • தொடங்கியவர்

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

உங்கள் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது தமிழ்சூரியன் . மாவீரர்தினத்தில் கலந்துகொண்டுதான் அப்துல்ஹமீட் தமிழ்பற்றாளர் என்று நிரூபிக்கவேண்டுமா ? பிழை சொல்வதானால் எப்படியும் சொல்லலாம் . ஒர் இஸ்லாமியன் என்பதற்காகவும் , அரசியலை தன்அருகே வைத்திருக்காத ஒரு கலைஞனை , சுயநலவாதி என்றும் , துரோகி என்றும் சித்தரிக்க முயலுவது எமது குறுகியமனப்பான்மையைத் தான் காட்டுகின்றது . இதைத்தான் மணிவாசகனும் தனது மொழியில் சொல்லுகின்றார் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

இதைத்தான் முதலிலேயே நான் இப்படிக்குறிப்பிட்டேன் நுணாவிலான்

அதேநேரம் அதையும் மீறி எமக்காக உழைத்த K.S. RAJAH அவர்கள் எவ்வாறு இறந்தார் என்பதையும் நினைவுகூறுகின்றேன்.

உங்கள் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது தமிழ்சூரியன் . மாவீரர்தினத்தில் கலந்துகொண்டுதான் அப்துல்ஹமீட் தமிழ்பற்றாளர் என்று நிரூபிக்கவேண்டுமா ? பிழை சொல்வதானால் எப்படியும் சொல்லலாம் . ஒர் இஸ்லாமியன் என்பதற்காகவும் , அரசியலை தன்அருகே வைத்திருக்காத ஒரு கலைஞனை , சுயநலவாதி என்றும் , துரோகி என்றும் சித்தரிக்க முயலுவது எமது குறுகியமனப்பான்மையைத் தான் காட்டுகின்றது . இதைத்தான் மணிவாசகனும் தனது மொழியில் சொல்லுகின்றார்

.

வணக்கம் கோமகன் அண்ணா நான் கலைஞ்சர் திரு அப்துல் ஹமிட் அவர்களை துரோகி என்றோ சுயநலவாதி என்றோ இங்கு குறிப்பிடவில்லை .எனது ஆதங்கம் என்னவென்றால் தமிழீழ தமிழனாக பிறந்து விட்ட அல்லது தமிழனாக பிறந்துவிட்ட அனைவருக்கும் இந்தப்போராட்டத்தில் ஒரு பங்கு இருக்கவேண்டும் ,அவரவர் திறமைக்கு ,தகுதிக்கு ஏற்றவாறு அந்த பங்கு அமையவேண்டும்.அந்தவகையில் திரு அப்துல் ஹமீத் போல் நான் ஓர் சிறந்த ,பிரபல்யமான கலஞ்சனாக இல்லாவிட்டாலும் எனக்கு இறைவன் தந்த அந்த சிறிய திறமையை என் இன விடுதலைக்கு ஏதோ ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். இந்த சூழ்நிலையில் ஓர் படைப்பாளி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நான் உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்,இதே போல் ஒவ்வொரு கலைஞ்சனும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா .....இந்த எனது அவா தவறா ,சரியா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் திரு அப்துல் ஹமீத் ஒரு தமிழனா .முஸ்லிமா என்பதற்கப்பால் .தமிழ் கலை உலகிலேயே அவரது பணியும் அவரது வளர்ச்சியுமுள்ளது. அப்படிப்பட்டவர் இப்படி ஏன் நடந்து கொண்டார் என்பதை நான் கேட்டது தவறா...............

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

febbaby.gif

வணக்கம் நுணாவிலான் அண்ணா [தம்பி]

தங்கள் சுய நலன்களுக்கு.அல்லது விருப்பு வெறுப்பு இவைகளுக்காகவோ இன்னொருவரை துரோகியாக்கும் படலம் நீங்கள் கூறியது போல் இப்போ நிறைய நடந்து கொண்டிருக்கிறது.உண்மை . நான் விடுதலைப்புலிகளுடன் ,அல்லது அவர்களின் செயற்பாடுகளுடன் பின்னிப்பினைந்தவன் என்று பொய் கூறுபவன் அல்ல .ஆனால் தமீழத்தில் வாழ்ந்த காலத்திலும் சரி,புலம்பெயர் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்திலும் சரி அவர்கள் காட்டிய வழியில் வாழ முயற்சிப்பவன்.அந்த வகையில் எழுந்தமானத்திற்கு யாரையும் துரோகி என்று இதுவரை நான் கருதேழுதியதுமில்லை [ சம்பந்தர்.................உட்பட] ஆனால் இந்த திரியில் திரு அப்துல் ஹமஈட்டிற்கு ஒரு கவ்ரவம் கொடுக்கப்படும் போது அந்த கவுரவம் தமிழர்களால் கொடுக்கப்படும் போது கொஞ்சம் சிந்தித்தே நான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன்.அவரது திறமயை நான் எப்போதும் மதிப்பவன் .அப்படி நான் மதிக்காவிட்டால் நான் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதன் [கலைஞ்சன் ] என்ற வரையறைக்கு அப்பாற்பட்டவன்

  • தொடங்கியவர்

.

வணக்கம் கோமகன் அண்ணா நான் கலைஞ்சர் திரு அப்துல் ஹமிட் அவர்களை துரோகி என்றோ சுயநலவாதி என்றோ இங்கு குறிப்பிடவில்லை .எனது ஆதங்கம் என்னவென்றால் தமிழீழ தமிழனாக பிறந்து விட்ட அல்லது தமிழனாக பிறந்துவிட்ட அனைவருக்கும் இந்தப்போராட்டத்தில் ஒரு பங்கு இருக்கவேண்டும் ,அவரவர் திறமைக்கு ,தகுதிக்கு ஏற்றவாறு அந்த பங்கு அமையவேண்டும்.அந்தவகையில் திரு அப்துல் ஹமீத் போல் நான் ஓர் சிறந்த ,பிரபல்யமான கலஞ்சனாக இல்லாவிட்டாலும் எனக்கு இறைவன் தந்த அந்த சிறிய திறமையை என் இன விடுதலைக்கு ஏதோ ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். இந்த சூழ்நிலையில் ஓர் படைப்பாளி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நான் உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்,இதே போல் ஒவ்வொரு கலைஞ்சனும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா .....இந்த எனது அவா தவறா ,சரியா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் திரு அப்துல் ஹமீத் ஒரு தமிழனா .முஸ்லிமா என்பதற்கப்பால் .தமிழ் கலை உலகிலேயே அவரது பணியும் அவரது வளர்ச்சியுமுள்ளது. அப்படிப்பட்டவர் இப்படி ஏன் நடந்து கொண்டார் என்பதை நான் கேட்டது தவறா...............

இந்தப்பதிவிலே அப்துல்ஹமீட் ஐ சுயநலவாதி , மறைமுகத் துரோகி , என்ற பாணியிலான விமர்சனங்கள் வந்திருதன . அவற்றை உங்களுக்கு குவாட் செய்து நான் பதிலிட்டமைக்கு மனம் வருந்துகின்றேன் . அதேவேளையில் அவரிடம் இருதரப்புகளும் அரசியல் சார்பாகப் போய் நின்ற பொழுது தன்னை யாருமே அரசியல் சாயம் பூசி ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் ( கலைஞன் ) இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அதில் விடாப்பிடியாக நின்றவர் . இதை நான் சொல்லக்காரணம் எனக்கு ஓரளவு அவரைத் தெரியும் . அதனாலேயே கள உறவு ஈஸ் இன் பின்னூட்டத்திற்கு விமர்சனங்கள் இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய கலைஞர் எனக் குறிப்பிட்டிருந்தேன் . எல்லோரும் எங்களைப்போல் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் எமது தவறு தானே தமிழ்சூரியன் . மீண்டும் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கூறுகின்றேன் .

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.