Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிக்கு இந்த தோழரால் நாளை விளக்கமாக முற்று புள்ளி வைக்கப்டும்.. எனக்கு எழுதுவதற்கு ரைம் இல்லை... திராவிடம் .. தமிழ் தேசியம்... எடுத்து போகுபவர்கள் இப்ப சரி கிடையாது..

டிஸ்கி:

முக்கியமான ஒன்று.. நீங்கெல்லாம் சாவும் போது.. எல்லாம் உண்ணாவிரதம் ஊர்வலம் என்று திரிந்த பயலுகள்தான்.. உண்ணாவிரதம் அல்லது உண்டு விட்டு இருக்கிற விரதம் என்றாலும் மக்களை ஏமாற்றுகிற வேலை தானே.. இவனுங்கள் அரசியல் வாதிகள்.. மக்கள் இங்கு தமிழ் நாட்டில் ஈழ தேசம் தொப்புள் கொடி உறவுகள் என தெளிவாக இருக்கிறார்கள்.. ஆனால் எலக்சன் ரைமில் நாங்க தான் ஈழத்தை வாங்கி கொடுப்பம் .. என வார்த்தை சிலம்பாடுவதில் தான் ஏமாந்து போகிறார்கள்.. சிவானி கேஸ் (அவ பெரிய கில்மா) நக்மாவையே நரசிம்ம ராவு பையன் கூட ஜில்மா பண்ண அனுப்பி வைத்தவ நம்ம ஜெ.. வந்தந்தற்கப்புறம்.. அவ சிவானி அல்லது விஜயலட்சுமி.. அல்லது கோயம்புத்தூர் ஜான் சோப்பியா..அவ தெளிவாகத்தான் ஸ்கெட்ச் போடுகிறா...

MTR_MangoAvakai.jpg

நான் சொல்வது அவுங்க பிக்கிள் மாறி உங்களை தொட்டுகிறாங்க இல்ல.. நீங்களும் அப்ப அப்ப தொட்டுக்கணும்.. வந்த வரை லாபம் என்று இருக்கணும் வேற வெளிநாடுகளை போக்கஸ் செய்யவேணும்....

அதற்கும் மேல யாரு என்ன குலம் கொத்திரம்.. இதெல்லாம் நோண்டி கொண்டிருந்தால் சத்தியமா விளங்காது.. எவனும் வரமாட்டான் .. நடுவில இந்தியன் என்று சொல்லிடுவான்.. அவன நம்பி நீங்கள் போனீர்கள் என்றால் நடுவில் நீங்க குச்சி மிட்டாய் சப்பிட்டு நிற்பீர்களா!!....

உங்க வழிய நீங்க தான் கவணிக்கணும்.. நீங்கள் ஜெயித்தால் இனிசியல் போட ஒரு கூட்டம் கிளம்பிடும்.. அவுங்க ஜெயித்தால் நீங்கள் கிளம்புவீர்களா கிடையாது..!

இவனுங்க பேருக்கு திரியற பயலுகள்..

இந்த திரிக்கு இந்த தோழரால் நாளை விளக்கமாக முற்று புள்ளி வைக்கப்டும்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • Replies 165
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் தீவிரமாக உள்ள தமிழகத்தில் தான் திராவிடமற்ற அநேக முஸ்லீம் கட்சிகள் உள்ளன. தமிழ் மொழி ரீதியில் தமிழ் தேசிய.. தமிழனாக உணர்ந்ததால் தான்.. மதம் கடந்து இஸ்லாமிய தோழர்கள்.. உயிர்விட்டார்கள். அதனை திராவிடம் தனக்கான கீழ்த்தரமான பிரச்சாரத்திற்கு பாவிப்பது கேவலம் ஆகும்.

இதே திராவிடம்.. தமிழகத்தில் தூண்டிவிட்ட இஸ்லாமிய மத வன்முறைகள் எத்தனை..???! அதில் இருந்து மீட்சி பெற உதயம் பெற்ற முஸ்லீம் லீக்குகளும் கட்சிகளும் எத்தனை..???!

தமிழ் தேசிய வாதம் என்பது ஒரு குறுந்தேசிய வாதம் என்பதே தவறு. அது ஒரு தேசிய இன அடையாளம் சார்ந்த வாதமாகும். முஸ்லீம்கள் மதத்தால் அன்றி வேறு வழிகளில் நில எல்லைகள் பகிர்ந்து வாழும் ஒரு சமூகத்தினர். தனித்துவமான நில எல்லைகள் கொண்ட இன மக்கள் அல்ல. அந்த வகையில் தான்.. அவர்கள்.. மொழி ரீதியில் நில ரீதியில்.. பொதுவான கலை.. பண்பாட்டு விழுமிய ரீதியில் தமிழர்களாகவே இனங்காணப்படுகின்றனர். மதம் அவர்களுக்கு தனிச் சமூக அந்தஸ்தை அளிக்கிறது.

தமிழ் தேசியம்.. முஸ்லீம் சமூகத்திற்கு தனிக் கட்சி அடையாளம் அளிக்க தடை போடவில்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமை. எப்பவும் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு முரண்பட்டுக் கொண்டு ஒட்டி இருப்பதிலும் முஸ்லீம்கள்.. மலையக தமிழ் மக்களைப் போன்று தனிக்கட்சி ஜனநாயக அரசியல் செய்வது ஒன்றும்.. தமிழ் தேசியத்துக்கு எதிரானது அல்ல. அதனை அப்படி இனங்காட்டும் திராவிடமே.. பகுப்புவாதத்தின் அடிப்படை என்பதை மீண்டும் இங்கு நிறுவி நிற்கிறார்கள் தீவிர திராவிட வெறியர்கள்.

இதனால் தான் சொல்கிறோம்.. மாயைத் திராவிடம் அழிந்து.. தமிழ் தேசியமும்.. நாம் தமிழர் என்ற உணர்வும்.. மதம் கடந்து வலுப்பெற வேண்டும் என்று. அது திராவிடம் என்ற மாயை பகுப்புவாதம் உள்ளவரை சாத்தியப்படுவது சவாலானதாகவே இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது திராவிடம் என்பது ஒரு அரசியற் கோட்பாடு. தமிழர் என்பது தேசிய இனத்துவ அடையாளம்.

திராவிடர் என்பது தமிழ் மூதாதையரின் அடையாளம். எமது பழமையான அடையாளத்தைப் பேண வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை.

ஆனால் `பழமையான` திராவிட-ஆரிய பண்பாட்டுக் கூறுகளில் இருந்து வந்த மதமும்,சாதியமும், ஒடுக்குமுறையும் இருக்கும் நிலையில், `திராவிட` அரசியல் சமூக வரலாற்றில் இருந்தே , நாம் தமிழரின் அடையாளத்தை முன் நிறுத்த முடியும். தமிழர் மீதான ஒடுக்குமுறை, `ஆரிய`-திராவிட முரண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கும் போது, அந்த முரண்பாடே மாயை என்று சொல்வது, `எதிரியே` இல்லை என்பதாகவும், `எதிரிகள்` போராடும் இயக்கத்துக்குள்ளாகவே ஊடுருவி அதனை அழிக்கவுமே வழி வகை செய்யும்.

அதனாலயே சொல்கிறோம், தமிழ் தேசிய அரசியல் என்பது, தெளிவாக எதிரியை இனம் காணும், ஆரிய-திராவிட முரணில் இருந்தே முன் வைக்கப் பட வேண்டும்.

Dravididam is not a race, but Tamils is a race!!!! The whole of South Indians are known as Dravidians, but they don't identify themselves are 'Dravidians' or use the word 'Dravidam'. South Indian Tamils should remove the word of 'Dravidam' and identify themselves as 'Tamils' only.

'Tamils' should be identified by language not by religion!!!

(sorry, I can't write in Tamil at the moment, can't find software link)

http://en.wikipedia.org/wiki/Dravidian_civilization

The term Dravidian civilization refers to the civilization of the ancient speakers of the proto-Dravidian languages. Due to the obscure history of the proto-Dravidian speakers, and prevalence of several theories about their origin, the term "Dravidian civilization" is used to describe many concepts:

Many scholars believe that before the arrival of the Indo-Aryans in the Indian subcontinent, the speakers of the proto-Dravidian languages (Proto-North Dravidian, Proto-Central Dravidian, Proto-South Dravidian) were widespread throughout the subcontinent, including Gangetic valley. This pre-Vedic civilization is often referred to as "Dravidian civilization".[1]

A section of scholars believes that the people of the ancient Indus Valley Civilization were proto-Dravidian speakers, and hence refer to it as "Dravidian civilization". The hypothesized family of Elamo-Dravidian languages is also believed to be connected with the Indus Valley Civilization.[2]

The proponents of the now-obsolete theory identifying Kumari Kandam with Lemuria used the term "Dravidian civilization" to describe the civilization of the hypothetical "Lemuria" continent.[3] According to them, Kumari Kandam was a landmass that became submerged by the successive floods. Some Tamil writers, such as Devaneya Pavanar and T. R. Sesha Iyengar, identified Kumari Kandam with the hypothetical Lemuria continent, and claimed that in ancient times, there was a highly developed Tamil civilization in Lemuria, which was the cradle of civilization.[4]

A few scholars, such as Kamil Zvelebil and Clarence Maloney, believe that there is no tangible archaeological or literary evidence of any early purely Dravidian or Aryan civilization, and Aryan or Dravidian elements cannot be sought out in the Indian culture.[5]

Edited by Queen

அப்படி என்றால் ஏன் மலையாளி,கன்னடன்,தெலுங்கன் மூவரும் திராவிடத்தை ஏற்கவில்லை ??? திராவிடம் என்பது தமிழ் இனத்தையும் இந்து மதத்தையும் அழிக்க சில தரப்பினரால் வளர்க்கப்பட்ட தீய சக்தி,அவ்வளவு தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியத்தை எப்பொழுது ஆனந்த சங்கரியும் சித்தார்த்தனும் எதிர்த்தார்கள்? தமிழர்களுக்கு ஒரு தாயகம் உண்டு என்பதையோ, அதை ஆவர்கள் ஆள வேண்டும் என்பதையோ எதிர்த்து அவர்கள் எப்பொழுது பேசினார்கள்?

ஏன் டக்ளஸ், கதிர்காமர் இவர்கள் கூட இப்படிச் சொல்லியது இல்லையே! அப்படி என்றால் எந்த மூடப்பயல் இவர்களை தமிழின எதிரியாக பிரகடனம் செய்தான்?

நீங்கள் கிட்டத்தட்ட உங்கள் எழுத்தாலேயே சிலவற்றை சொல்லி விட்டீர்கள். ஆனந்த சங்கரியும், சித்தார்த்தனும் விடுதலைப் புலிகளை எதிர்த்தார்கள். அவர்களின் வழிமுறைகளை கண்டித்தார்கள். இவற்றையே நீங்கள் தமிழ் தேசியத்தை எதிர்த்தாக சொல்கிறீர்கள்.

அப்படி என்றால் உங்கள் எழுத்துக்களால் டக்ளஸ், கருணாக்களின் தமிழ் தேசியத்தையும் ஒருக்கால் சொல்லிவிடுவதுதானே?

ஆதாவது தமிழ் தேசியத்தின் உருவமாக விடுதலைப் புலிகளைப் பார்க்கின்றீhகள். ஆகவே அதில் இருந்து வந்த கருணா போன்றவர்கள் எப்படி தாயகமும் வேண்டாம், ஒரு உரிமையும் வேண்டாம் என்று போனார்கள்? தமிழ் தேசியம் எந்த இடத்தில் தவறு விட்டது?

தமிழ்தேசியத்தின் உருவமாக விடுதலைப் புலிகளைப் பார்க்கப்பட்டால் கருணா போன்றவர்கள் எப்படி வந்தார்கள் என்றா கேட்கின்றீகள்?

ஆக சிங்களத்தேசியத்தின் உருவமாக விடுதலைப் புலிகளைப் பார்த்திருந்தால் "கருணா போன்றவர்கள் தாயகமும் வேண்டும் உரிமையும் வேண்டும் என்றா சொல்லி இருப்பார்கள்" என்றாசொல்ல வருகின்றீர்கள்!

தமிழ்த்தேசியத்தின் உருவமாக கொள்ளத்தக்க விடுதலைப் புலிகளுக்குள் மறைவாக இருந்தது ஒரே கருணா! ஆனால் திராவிடத்தின் பாசறைகளுக்கு தூணாண்களாக இருப்பவை அனைத்துமே கருணாக்கள்தான்!

அரிசிக்குள் கல் இருந்தாலும் அவை அரிசிதான் அப்படியே கல்லூக்குள் அரிசி இருந்தாலும் அவையும் அரிசிதான் என்று சாதிக்கின்ற அறிவுடமையோ இது?

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை திசை திருப்ப மீண்டும் ஒருமுறை ஈ.வெ.ராமசாமியும் அவரது அல்லைக்கைகளும் யாழ் களப்பக்கம் மீண்டும் ஒரு முறை வருகை தந்துள்ளனர், இப்படித்தான் 2008ம் ஆண்டு ஜனவ்ரி மாதம் இவர்கள் இங்கை வந்து வன்னியில் போர் உக்கிரம் அடைய இருந்த சந்தர்ப்பத்தில் நன்றாக திராவிடம் பேசி எமது மக்களின் கவனத்தை திசை திருப்பினார்கள், அதில் மாபெரும் வெற்றியும் கண்டார்கள் ஏன் என்றால் இங்கை எல்லாரும் திராவிட மயக்கத்தில் இருந்து மீண்ட போது சிங்களவன் A9 பாதையின் கிழக்குப் பக்கம் நின்றான், திராவிடம் கதைத்து மூளைச் சலவை செய்ய்யத் தொடங்கிய போது சிங்களவன் மன்னாரில ஒரு அடி கூட நகர முடியாது நின்றவன். இப்பொழுது மீண்டும் எம்மை குழப்ப வேண்டிய அவசியம் வந்து விட்டது போல் உள்ளது அதனால் தான் மீண்டும் ஈ.வே.ராமசாமியும் திராவிடமும் வருகை தந்து உள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ தமிழ்நாட்டு காரர் வந்து குழப்பிட்டார்.. வாக்குவாதத்தை நிறுத்துங்கப்பா முதலில் குடிக்க கஞ்சி வேணும்.. முதலில் இடைக்கால தீர்வு தன்னாட்சி அல்லது குறைந்தபட்சம் வீட்டு குழாயடிக்கு முன் சிங்களவருக்கு சரி சமமாக குண்டான் நிறைய தண்ணீர் பிடிக்கும் உரிமையை பெற்று கொள்ளுங்கள்.. அப்படியே நீங்கள் பெற்று விட்டாலும் எங்களால் தான் போஸ்டர் அடிச்சு ஒட்டிவிடுவங்கள்... இவுங்க சொகுசா வாழ பழகிட்டவர்கள்.. அடுத்தவன் பிள்ளைக்கு பேர் போடுற கோஸ்டிகள்..

டிஸ்கி:

உண்மையில் கஞ்சிக்கு கஸ்ட படுறவன் எல்லாம் இப்படி மெனகெட்டு உக்கார்ந்து ரைப்படித்து கொண்டுருக்க மாட்டான்.. வாழ்க்கையில் வறுமை .. அது ஒரு வேளை கூழுக்கோ கஞ்சிக்கோ கஸ்ர பட்டாத்தான் தெரியும். எவ்வளோ ஈழ தோழர்கள் என்னின்ட வயலில் வேலை செய்குறார்கள் .. போக கல்லுடக்கைம் வேலைக்கு போகிறார்கள்..... வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு போகிறார்கள்...

ஆனால் எழுதுவது மட்டும் அம்பானி பிர்லா கோஸ்ரி மாறி.. அவுங்க திரவிடம் அது இது அடித்து கொள்ளுவார்கள் இது நமக்கு தேவையா..? நம்ம வயிற்றுக்கு என்ன வேணும் ...நமக்கு என்ன வேணும்..?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவருடைய கதாநாயக விம்பத்தின் அடிப்படையேலேயே அவருடைய தொண்டர்களும் சேர்ந்தார்கள். அன்றைக்கு எம்ஜிஆரை வழிபட்டவர்கள் இன்றைக்கு ஜெயலலிதாவை வழிபாடுகிறார்கள்.

அதிமுகவை எந்தக் கோணத்தில் ஒரு திராவிடக் கொள்கைகளை கொண்ட கட்சியாக நோக்க முடியாது. நாம் இங்கே திராவிட இயக்கங்கள் என்று பார்க்கின்ற பொழுது திராவிடர் கழகம் மற்றும் அதிலிருந்து நேரடியாக பிறந்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பெரியார் திராவிட கழகங்களையே நோக்க முடியும்.

இதன் தலைமைகளோடு தொண்டர்களையும் கணிப்பிட்டே நாம் திராவிட இயக்கங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

சு. சுவாமியின் முட்டை அபிஷேகத்திற்கு பிராயச்சித்தமாக வளக்கறிஞரின் மண்டைகள் உடைக்கப்பட்ட சம்பவம் ஜனனாயகத்தை அம்மணமாக்கி அதிகார துஸ்பிரயோகத்தால் பார்பானியம் சூடுபோட்டது திமுக ஆட்சியில் அல்லவா?

ஒரு பச்சைக் குழந்தையின் உயிரை மன்னனின் கரத்தைக் கோண்டே பறிக்க வைத்தால் அவன் ஆட்சியில் இருக்கும் மிச்ச தர்மங்கள் எந்த அளவாகுமாம்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னினட கருத்தை ரெலீட் பண்ணால் எனக்கு சத்தியமாக கெட்ட கோவம் வரும்... <_< <_<

  • கருத்துக்கள உறவுகள்

அகில, உலகத்திலேயே.....

செத்தவர்களை வைத்து, அரசியல் நடத்தும் இனம், தமிழினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் சபேசனின் வருகை மகிழ்வை ஏற்படுத்துகிறது. 2009 ன் பின்னர் அவரது ஆக்கங்களை காண இயலவில்லை.

ஒன்றைப்பற்றி பேச இருக்கிறோம் என்றால் அதை நாம் முதலில் முழுவதும் ஆய்வு செய்து தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் யானையை கண்ட 3 குருடர்கள் கதையாகத்தான் இருக்கும்.

நம் தமிழ் மண்ணுக்கேற்ற மார்க்ஸியமே திராவிடம்.

"திராவிட தேசியம்" என்று எங்குமே நாம் தெரிவித்ததில்லை. திராவிடத்தின் செயல்பாடு தமிழ் தேசியத்தை பற்றியே மேடைப்பேச்சாக இல்லாமல் தமிழ்தேசியத்தை நோக்கியே கள செயல்பாடே. மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், இது பற்றிய விளக்கத்தை கொளத்தூர் மணி உரையில் இங்கே காணவும்: இவ்வுரையினை இங்குள்ள கள உறவுகள் அனைவரும் கேட்டுவிட்டு கருத்தினை பதிந்தால் விவாதம் சரியான பாதையில் தெளிவாக செல்லும்...

இந்த யாழ் களத்தில் பதியப்பட்டு வரும் அனைத்து கருத்துக்களையும் தோழர் கொளத்தூர் மணி அவர்களும் படித்தே வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர திராவிட கொள்கையாளர்கள்.. வெறுமனவே யாழ் களத்தை பார்த்துக் கொண்டிருக்காமல்.. விவாதத்தில் கலந்து கொள்வது அவசியம். காரணம்.. வெறுமனவே வரலாறை.. ஆராய்ந்து பார்.. தூக்கிப் பார்.. நிறுத்துப் பார் என்று சொல்லிக் கொண்டிருப்பதால்.. தமிழர்கள் சார்ந்த வரலாறு திராவிடம் ஆகி நிற்க முடியாது. திராவிடம் என்ற பதத்தின் இருப்பும் தேவையும் தமிழர்களைப் பொறுத்தவரை இன்று காலாவதியான ஒன்று.

அதனை இன்னும் இன்னும்.. போலி வாதங்களால்.. நியாயங்களை முன் வைத்து சுய இலாப.. அரசியல் நலன் நோக்கி.. கட்டிக்காக்க முனைவதிலும்.. தமிழர் வரலாற்றை தமிழர்களின் நில இருப்பை.. தொல்பொருளியல் வரலாற்றோடு.. இணைத்து தமிழர் வரலாறாக முன்னிறுத்த வேண்டுமே தவிர.. தமிழ் தேசிய இருப்புக்கு உறுதி சேர்க்க அதனைப் பயன்படுத்த வேண்டுமே தவிர... தமிழர்களின் வரலாற்றை மறைத்து.. அதனைக் கொண்டு திராவிடம் என்ற காலாவதியான கொள்கை காப்பதை கைவிட.. உண்மையான தமிழர் மொழி நில இன இருப்பை விரும்பும்..... திராவிட சக்திகள் முன் வந்து நாம் தமிழர் என்ற தமிழ் தேசிய சிந்தனைக்கு அரசியல், சமூகச் செயல்வடிவம் கொடுக்க.. தம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்..! இதுவே இன்றைய காலத் தேவையும் ஆகும்..! :icon_idea:

இந்த அறைகூவலோடு.. இந்த விவாவதத்தில் இருந்தும் நன்றே விடைபெறுகின்றோம்.

Edited by nedukkalapoovan

இங்கு இணைக்கப்படும், முன்வைக்கப்படும் சில விடயங்கள், கருத்துக்கள் - தமிழ் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த, பலவீனப்படுத்த - எடுக்கப்படும் ஒரு முயற்சி போல தென்படுகிறது.

போலித் திராவிடக் கும்பல் தாம் அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக "திராவிடம்" என்ற சொல்லை வரிந்து கட்டிக் கொண்டனர் - என்பதே அண்மைக்கால வரலாறு. இதில் பெரியாரும் அடக்கம். அவர் சாதிப் பிரச்சினையை, பிராமண ஆதிக்கத்தை வேறு விதமாக கையாண்டு இருக்கவேண்டும். சாதிப் பிரச்சினை அனைத்து சமயங்களுக்கும் பொதுவானது என்று தெரியாமல், உணர முடியாமல், அதை ஒரு சமயத்துக்கு எதிராக மட்டும் பயன்படுத்தியது அவரது பகுத்தறிவின்மையை தெளிவாக காட்டுகிறது. இது தமிழனின் வரலாறு, கலாச்சாரம் சிதைவடைய காரணமாகிவிட்டது. தமிழ் நாட்டுத் தமிழனும் கோழையாக மாறிக் கொண்டிருக்கிறான்.

போலித் திராவிடமும் இல்லாதொழிக்கப்பட வேண்டும், பார்ப்பனிய (பிராமண) ஆதிக்கமும் இல்லாதொழிக்கப்பட வேண்டும், மதமாற்றம் செய்வதற்காவே வாழும் மத போதகர்களும் அமைப்புக்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும், இஸ்லாமிய மத வெறியும் இல்லாதொழிக்கப்பட வேண்டும், பல்கிப் பெருகும் போலிச் சாமியார் கும்பலும் இல்லாதொழிக்கப்பட வேண்டும்,

சாதி ஏற்றத் தாழ்வுகளை தூக்கிப் பிடிப்பவர்களும் அமைப்புக்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும், அம்பேத்கார் - தலித் என்ற போர்வையில் வசதி வாய்ப்புக்கள் குறைந்த மக்களை பௌத்தர்களாக மாற்றும் பேர்வழிகளும் அமைப்புக்களும் (சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் கைகூலிகளும்) இல்லாதொழிக்கப்பட வேண்டும் - அப்போது தான் தமிழ் மக்கள் இழந்த பலத்தை, பெருமைகளை முழுமையாக மீண்டும் பெறமுடியும்.

இவர்கள் ஈழத்தமிழரின் அவல நிலையை வைத்து பிழைப்பு நடத்துவதையும் அனுமதிக்க முடியாது.

திராவிடம் என்பதன் சரியான பொருள் அறியாது இங்கு பலர் இருக்கின்றனர். அறிய விரும்பாமலும் சிலர் இருக்கின்றனர்.

தமிழ் தேசியத்திற்கான தத்துவங்களை திராவிடம் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இதை சீமான் போன்றவர்கள் உணர வேண்டும். வரலாற்றுத் திரிவுகளை கைவிட வேண்டும்.

தந்தை பெரியாரை மலினப்படுத்துவதற்கு சீமான் முயற்சித்தால், உள்ளே இருந்தே அவர் மீது கல் எறியப்படும். இதற்கு தமிழன உணர்வாளர்களால் இங்கே பதியப்பட்டிருக்கும் கருத்துக்களே சான்று.

சீமான் போன்ற துடிப்புமிக்க செயற்பாட்டாளர்கள் தடம்மாறிப் போனால் அது தமிழ் தேசியத்திற்கே இழப்பு. சரியானவர்களின் ஆலோசனையைப் பெற்று சரியான பாதைக்கு சீமான் திரும்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா தமிழ் தேசியத்தால் வளர்க்கப்பட்ட ஒருவரல்ல. விடுதலைப்புலிகள் என்ற போராட்ட அமைப்பைச் சேர்ந்தவர். விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் தேசிய அமைப்பல்ல. தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்ட அமைப்பு. அது தமிழீழ விடுதலை அமைப்பு. இந்த அடிப்படையையே சிலர் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை..!

தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை, விடுதலை என்பவற்றை இலட்சியமாகக் கொண்ட அமைப்பு தமிழ்த்தேசிய அமைப்பல்ல என்ற உங்கள் நிறுவலை தேசியத் தலைவர் பிரபாகரன் முன்னரே பார்த்திருந்தால் பாதையை மாற்றியிருப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்ற பதத்தின் இருப்பும் தேவையும் தமிழர்களைப் பொறுத்தவரை இன்று காலாவதியான ஒன்று.

இதை நான் ஆமோதிக்கின்றேன். பார்ப்பனியம் என்பதுபோன்று திராவிடம் ஒரு சித்தாந்தமாக எனக்குப் பட்டதில்லை. திராவிடத்தை ஆதிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு ஆதரவாகப் பாவிக்கமுயன்றால், திராவிடக் கட்சித் தலைமைகளின் மேட்டுக்குடித்தனத்திற்கு எதிராகத்தான் முதலில் பாவிக்கவேண்டும்!

Edited by கிருபன்

.

தென்னகம் மாத்திரம் அல்ல வட மானிலங்களிலும் பெருமளவான மக்கள் திராவிடப் பிண்ணனியைக் கொண்டவர்களே. சிங்களவர்களிலும் பெருமளவானோர் திராவிடர்களே. பாகிஸ்தானியர்களிலும் திராவிடர் உள்ளார்.

திராவிட அடையாளம் தமிழகம் எடுப்பது கிட்டத்தட்ட இந்திய உபகண்ட அடையாளம் எடுப்பதற்குச் சமன்.

தி.மு.க. என்பதை பேசாமல் மா.மு.க. என்று மாற்றலாம். :lol:

மானுட முன்னேற்றக்கழகம்.

சீமான் சரியான திசையில் செல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழி – இந்திய ஒருமைப்பாடு

ஈழத் தமிழர்களின் காவலர்கள் எனத் தம்மைப் பிரகடன்ப்படுத்திக்கொள்ளும் பெரும்பாலானவர்கள் நயவஞ்சகத் தனமான சந்தர்ப்பவாதிகள் என மக்கள் இப்போது உணர ஆரம்பித்துவிட்டார்கள். சாதி வெறியர்கள், அமரிக்க மற்றும் இந்திய ஏகபோகங்களின் அடிவருடிகள், ஒடுக்கப்பட்டவர்களின் எதிரிகள் என்று ஒரு ஏமாற்றுக் கும்பலின் தமது சொந்த நலன்களுக்காக ஈழத்தமிழர் அவலத்தைப் பாவித்துக் கொள்கிறது. இவர்களில் பெரும் பகுதியானோர் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் நிலை கொண்டுள்ளனர். இதன் மறுபகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேட்டுக்குடித் தமிழர்களாக கொழும்பை மையமாகக் கொண்டு இயங்குகின்றனர். மகிந்த அரச பாசிசத்திற்கு நேரடியாகத் துணைபோவோரும் இவர்களும் ஏதாவது ஒரு புள்ளியில் ஒன்று படுகின்றனர்.மக்களை அதீதமாக உணர்ச்சியூட்டி அதன் வெப்பத்தில் குளிர்காயும் இந்த அரசியல் வாதிகளுள் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சீமானும் ஒருவர். சீமானின் நாம்தகிழர் கட்சியின் கொள்கைப் பிரகடனம் தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் ஊடாக வலுவடையும் பார்ப்பனீய பாசிசத்திற்கு ஆதரவான பல கூறுகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீமானின் கட்சியில் சேருகின்றவர்கள் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்திய இந்திய மேலாதிக்க வாதத்தை ஆதரிக்கும் அந்த உறுதிமொழிப் பிரகடனம் இது தான்: “நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகிய கொள்கைகளின்பால் உண்மையான நம்பிக்கைக் கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி, வலிமைப்படுத்தக் கட்சி உறுதி அளிக்கிறது.”

இந்திய உள்வுத்துறையின் உறுதி மொழிப்பிரகடனம் போன்ற இது ஈழத் தமிழர் பெயரால் நிறைவேற்றப்படுகின்றது.

நன்றி இனியொரு http://inioru.com/?p=28354...

சீமானைப்பற்றி இப்படியும் சொல்லுறாங்கள்

பயிர் வளர்ந்தால் களைகளும் சேர்ந்து தான் வருகிறது அதுக்காக வயலே செய்ய கூடாது எண்டது போல இருக்கு இன்னொவின் கட்டுரை...!

தயா நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களை களத்தில் பார்ப்பதில் சந்தோஷம், இங்கு திட்டமிட்ட முறையில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை திசை திருப்ப முயற்சி நடக்குது, 2008 ம் ஆண்டும் இதுவே நடந்ததது, மீண்டும் ஒரு முறை இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நான் நினைக்கிரேன் மகிந்த லண்டன் வரப் போகிரார், அதுக்கு எதிராக போராட்டம் நடக்கப் போகுது, அதற்குரிய அழைப்புகழ் யாழ் களத்தில் வரும், எனவே கள உறுப்பினர்களை திசை திருப்பவே திராவிடமும்,ராமசாமியும் அவர்களது சீடர்களும் வந்துள்ளார்கள் என நினைகிறேன்.

ஏன் தந்தை செல்வா ஆயுத போராட்டாம நடத்தினார் பணிந்து போவதற்கு அவர் வெறும் அகிம்சை போராட்டம்தான் நடத்தி இருந்தார்

அஹா . எழுத வந்ததை மறந்துட்டேன்

Edited by tamil paithiyam

தயா நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களை களத்தில் பார்ப்பதில் சந்தோஷம், இங்கு திட்டமிட்ட முறையில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை திசை திருப்ப முயற்சி நடக்குது, 2008 ம் ஆண்டும் இதுவே நடந்ததது, மீண்டும் ஒரு முறை இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நான் நினைக்கிரேன் மகிந்த லண்டன் வரப் போகிரார், அதுக்கு எதிராக போராட்டம் நடக்கப் போகுது, அதற்குரிய அழைப்புகழ் யாழ் களத்தில் வரும், எனவே கள உறுப்பினர்களை திசை திருப்பவே திராவிடமும்,ராமசாமியும் அவர்களது சீடர்களும் வந்துள்ளார்கள் என நினைகிறேன்.

இந்த திரியின் தொடர்ச்சியாக இவரால் இணைக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரே கருத்தை கொண்ட இன்னொரு திரி .

DASH எழுதியுள்ள கருத்தையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க . இப்படி எழுதிவிட்டு மீண்டும் ஒரு திரி தொடங்கியதன் நோக்கம் என்னவோ ??? எங்கேயோ இடிக்கிறதே ???

http://www.yarl.com/...howtopic=103258

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்கும் சீமானும் நாம் தமிழர்கட்சியும்! - அம்பலப்படுத்துகிறார் கொளத்தூர் மணி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103299

  • கருத்துக்கள உறவுகள்

------------------------------------------------------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.