Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்!: சரத் ஃபொன்சேகா!

Featured Replies

இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்!

லகின் மிகக் குரூரமான போர்களை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவர்... சரத் ஃபொன்சேகா!

முப்படைகளையும் கொண்ட விடுதலைப் புலிகளை வீழ்த்தியபோது ராஜபக்ஷே - ஃபொன்சேகா கூட்டணி ஆசியக் கண்டத்தைத் தாண்டியும் கவனம் ஈர்த்தது. ஆனால், வெற்றியின் பலனை அறுவடை செய்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போட்டி ஃபொன்சேகாவைச் சிறைக்குள் தள்ளியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் இரண்டு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய ஒவ்வோர் அசைவும் இன்று இலங்கை அரசால் கண்காணிக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஃபொன்சேகாவுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை இலங்கையில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்பதற்கு அப்பட்டமான ஓர் உதாரணம்.

''ராஜபக்ஷே 'நினைத்ததை முடிப்பவன்’ ஆக அவரின் தளபதியாக இருந்த நீங்களே, அவருக்கு எதிரியாகிப்போனதன் பின்னணி என்ன?''

p20.jpg

''இலங்கை மக்களிடையே எனக்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்ததுதான் காரணம். எங்கள் மக்கள் இந்தப் போர் வெற்றியை இன்னொரு விடுதலையாகக் கருதினார்கள். இந்த வெற்றிக்குப் பின் ராணுவம் எவ்வளவு பெரிய விலை கொடுத்திருந்தது என்பது மக்களுக்குத் தெரியும். அதனால், என்னைக் கொண்டாடினார்கள். என்னைப் பொறுத்த அளவில், இந்தப் போர் பயங்கரவாதத்தில் இருந்து மக்களை விடுவிக்க நாங்கள் நடத்திய போர். ஒரு ராணுவத் தளபதியாக அதை மீறிய எதிர்பார்ப்பு எதுவும் எனக்கு இல்லை. ஆனால், ராஜபக்ஷேவுக்கு நிறைய உள்நோக்கங்கள் இருந்தன. போர் வெற்றியைத் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்வது அதில் முக்கியமானது. போர் வெற்றிக்குப் பின் மக்கள் என்னைக் கொண்டாடியது, அவருக்குப் பெரிய பொறாமையை உருவாக்கியது. அவருடைய அரசியல் கணக்குகள் காலியாகிவிடுமோ என்று பயப்பட் டார். அதனால், அவரே என்னை அவருக்கு எதிரிஆக்கினார்.''

''உங்கள் அரசியல் அபிலாஷையும் அதற்கு ஒரு காரணம் அல்லவா?''

p21.jpg''இல்லை. போருக்குப் பின் பல்வேறு தரப்பினரும் என்னைச் சந்தித்தபோது, ஊழலும் அடக்குமுறையும் கொண்ட ராஜபக்ஷே குடும்பத்தின் காட்டாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனாலும், நான் அமைதியாகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் ராஜபக்ஷேவே என்னை அரசியலை நோக்கித் தள்ளினார்.''

''சரி, போர் காலகட்டத்துக்குப் போவோம். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? புலிகளின் பலம் என்ன... பலவீனம் என்ன?''

''இலங்கை ராணுவத்தின் பலவீனம்தான் புலிகளின் பலமாக இருந்தது. நான் பொறுப் பேற்பதற்கு முன்பு இலங்கை ராணுவம் எல்லா வகைகளிலும் பின்தங்கி இருந்தது. குறிப்பாக, தொழில்நுட்பத்தில். அதே போல, எங்கள் கடற்படை பலவீனமாக இருந்தது. அரசியல் சூழலும் புலிகளுக்குச் சாதகமாக இருந்தது. இவைதான் புலிகளின் முக்கியப் பலமாக இருந்தது. நான் பொறுப்பேற்றதும் இவை எல்லாவற்றையுமே மாற்றினேன். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், புலிகள் நவீனப் போர் உத்திகள், தொழில்நுட்பங்களில் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகான சர்வதேசச் சூழலை அவர்கள் உணராததும் முக்கியக் காரணம்.''

''உண்மையைச் சொல்லுங்கள்... பிரபாகரனின் முடிவு என்னவானது?''

''ஒரே உண்மைதான். பிரபாகரன் இப்போது உயிரோடு இல்லை. போரில் அவர் இறந்துவிட்டார்!''

''போரில் சண்டையின்போதுதான் பிரபாகரன் இறந்தாரா? அவர் சரணடையவில்லை என்றும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படவில்லை என்றும் உங்களால் உறுதி அளிக்க முடியுமா?''

p20a.jpg

''கண்டிப்பாக.

அந்த இரவு எனக்கு எப்போதுமே மறக்க முடியாதது. ஒரு சின்ன பகுதிக்குள் பிரபாகரனைச் சுற்றி வளைத்தோம். மூன்று அணிகளைக்கொண்டு மூன்று வளையங்களை புலிகள் அமைத்திருந்தார்கள். அதிகபட்சம் அவர்கள் 400 பேர் இருந்திருக்கலாம். முதல் அணியில் 100 பேர். நடேசன், பூலித்தேவன் தலைமையிலானது. அழித்தோம். அடுத்த அணியில் 200 பேர். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையிலானது. அழித்தோம். கடைசிக் கட்டத் தாக்குதல் நள்ளிரவில் நடந்தது. 100 பேர்கொண்ட அணி அது. பிரபாகரன் தலைமையிலானது. அழித்தோம். சண்டையில் குண்டடிபட்டுத்தான் பிரபாகரன் இறந்தார்.''

''உங்கள் கூற்றுப்படி, நீங்கள் கொன்றது உண்மையான பிரபாகரனைத்தான் என்றால், ஊடகங்களைக் கூட்டிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?''

''உங்கள் கேள்வியில் ஒரு திருத்தம். நாங்கள் பிரபாகரனைக் கொல்லவில்லை. அவர் போரில் இறந்தார் என்பதே சரி. யுத்த களத்துக்குச் செல்லும்போது அங்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது. பத்திரிகையாளர்களை உடன் அழைத்துக்கொண்டு போருக்குப் போக முடியாது. அங்குள்ள சூழலே வேறு. பிரபாகரன் சடலம் கிடைத்தவுடன் அவருடைய மரணத்தை அறிவிப்பதற்கு முன் நாங்கள் அதைத் துளியும் சந்தேகம் இன்றி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருந்தது. பிரபாகரனைத் தெரிந்தவர்களை அழைத்துவந்தோம். பிறகு, மரபணுப் பரிசோதனை மேற்கொண்டோம். முற்றுமுதலாக இறந்தது பிரபாகரன் என்று தெரிந்துகொண்ட பின்னரே அறிவித்தோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்... நம்புங்கள். ஊடகங்களில் நீங்கள் பார்த்த சடலம் பிரபாகரனுடையதுதான்.''

''எந்தத் தருணத்திலாவது பிரபாகரனுடன் பேசி இருக்கிறீர்களா?''

''ஒருபோதும் இல்லை!''

''சரண் அடையும் முடிவை விடுதலைப் புலிகள் எடுத்த பின்னணி என்ன?''

p20b.jpg''அவர்கள் அந்த முடிவை எடுக்கவில்லை; அந்த முடிவை நோக்கித் தள்ளப்பட்டார்கள். நாலாபுறமும் நாங்கள் சுற்றி வளைத்துஇருந்தோம். அவர்கள் வசம் இருந்த பகுதி கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே வந்தது. தப்பிக்க வழியே இல்லாத நிலையில்தான் அவர்கள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்தார்கள்.''

''ஆனால், சரண் அடைவது தொடர்பாக ராணுவத்துடன் புலிகள் பேசினார்கள் இல்லையா?''

''இல்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிலும் ராணுவம் புலிகளுடன் ஈடுபடவில்லை.''

''அப்படி என்றால், சரண் அடைவது தொடர்பாக யார் யாருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது? தமிழகத் தலைவர்கள் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? அப்போது ராணுவத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?''

''அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தமிழகத் தலைவர்கள் யாரெல்லாம் பேசி னார்கள் என்று தெரியவில்லை. அரசு சாரா அமைப்புகள் பேசியது தெரியும். எங்களிடம் கேட்டபோது, 'யார் சரண் அடைந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம். சர்வதேசப் போர் விதிமுறைகளின்படி சரண் அடைபவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள்’ என்று சொன்னோம். எங்களை நம்பி வந்த பொதுமக்களையும் சரி, புலிகளையும் சரி, அப்படித்தான் நடத்தினோம்.''

''வெள்ளைக் கொடி ஏந்தி சரண் அடைய வருபவர்கள் கொல்லப்பட்டதுகூட போர் விதிமுறைகள்படிதானா?''

''சரண் அடைய வருபவர்கள் தொடர்பாக என் வீரர்களுக்கு நான் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தேன். அதனால்தான் இன்றைக்கு உயிரோடு விடுதலையாகும் புலிகளை நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல வெள்ளைக் கொடியை ஏந்திக்கொண்டெல்லாம் எவருமே சரண் அடைய வரவில்லை. நாங்கள் போர் அற நெறிகளை எந்த வகையிலும் மீறவில்லை என்பதுதான் உண்மை.''

''எண்ணற்ற குழந்தைகள் போரில் கொல்லப்பட்டார்கள். உதாரணமாக, பிரபாகரனின் இளைய மகன். அவர் மீது இருந்த காயங்கள் மிகக் குறைந்த தூரத்தில் இருந்து அவர் கொல்லப்பட்டதை உறுதி செய்கின்றன. அதாவது, பிடித்துவைத்துக் கொன்று இருக்கிறீர்கள். உங்கள் போர் அறம் இதுதானா?''

''நீங்கள் தொடர்ந்து யூகத்தின் அடிப்படையிலான விஷயங்களை முன்வைத்தே கேள்விகளைக் கேட்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடுவதுபோல பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டுவிட்டதாக நான் நம்பவில்லை. கடைசி நாள் தாக்குதல் நடந்த இடங்களில் சில பெண்கள், நான்கைந்து சிறுவர்களின் சடலங்களைக் கைப்பற்றினோம். அதில் பெரும்பாலானவர்கள் சயனைடு உட்கொண்டு இறந்தவர்கள். பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள்- கருணா அம்மான் போன்றவர்களை அழைத்துவந்து காட்டினோம். பிரபாகரன் மனைவியோ, இளைய மகனோ, மகளோ அதில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எங்களைப் பொறுத்த அளவில் பிரபாகரன் குடும்பத்தில் கொல்லப்பட்டது பிரபாகரனும் அவருடைய மூத்த மகனும் மட்டும்தான். மற்ற மூவரின் நிலைபற்றி எங்களுக்கே இதுவரை எந்தத் தகவலும் தெரியாது.''

p20c.jpg

''ஒரு போர் அறநெறியும் பின்பற்றப்படாத இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தப் போரை முன்னெடுத்த மனிதனாக உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''

''இந்தப் போரைத் தொடங்கியபோதே என் வீரர்களுக்கு நான் பிறப்பித்த முக்கியமான உத்தரவு, பொதுமக்கள் உயிர் முக்கியம். கடைசி வரை அந்த உத்தரவை என் வீரர்கள் காப்பாற்றினார்கள். நீங்கள் சொல்வதுபோன்றெல்லாம் நடக்கவே இல்லை. ஒரு போரை முன்னெடுத்தவனாக நான் முழுத் திருப்தியான மனநிலையிலேயே இருக்கிறேன்.''

''இந்தப் போரில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் பங்களிப்பு என்ன? விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கள் எடுக்கக் காரணம் என்ன?''

''அது அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ... பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எல்லா நாடுகளுமே நினைக்கின்றன. புலிகள் விஷயத்தைப் பொறுத்த அளவில் மாற்றுப் பாதை அல்லது வேறு விதமான தீர்வுகளுக்கு அவர்கள் தயாராக இல்லை என்பதை இந்த நாடுகள் தெளிவாகப் புரிந்துகொண்டன. அதற்குப் பிறகுதான் எங்கள் நிலைப்பாட்டை ஆதரித்தன. சீனாவைப் பொறுத்த அளவில் அது எப்போதுமே எங்கள் நண்பன். எங்களுக்கு முக்கியமான ஆயுத இறக்குமதியாளர் சீனா என்பதும் முக்கியமானது.''

''விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றனவா?''

''இலங்கை இன்றைக்கு அழிந்துகொண்டு இருக்கும் தேசமாகிவிட்டது. பொருளா தாரம் மிக மோசமான நிலையில் இருக் கிறது. விலைவாசி உயர்வோ மக்களைக் கொல்கிறது. அடித்தட்டு மக்கள் செய்வது அறியாது நிற்கிறார்கள். அரசிடமோ சுருட்டுவதைத் தவிர வேறு எந்தத் திட்டங்களும் இல்லை. இங்கு சுதந்திரம் இல்லை. ஜனநாயகம் இல்லை. யாருக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை. உங்களைச் சர்வ நேரமும் யாரோ கண்காணித்துக்கொண்டும் வேவு பார்த்துக்கொண்டும் உங்கள் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக்கொண்டும் இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம். ஊடகங்கள் முழுமையாக முடக்கிவைக்கப் பட்டு இருக்கின்றன. அரசுஊடகங்கள் சொல்வதுதான் செய்தி. அரசுக்கு எதிராக யோசிப்பதுகூடக் குற்றம் என்று நினைக் கிறது அரசு. தான் ஆட்சியில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராஜபக்ஷே. எங்கள் நாட்டில் இப்போது சர்வ சுதந்திரத்துடனும் சகல வசதிகளுடனும் இருப்பது ஒரே ஒரு குடும்பம்தான். அது... ராஜபக்ஷேவின் குடும்பம். நாட்டைச் சூறையாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள். எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல்... மக்கள் வெறுத்துப் போய் இருக்கின்றனர். குறிப்பாக, இளை ஞர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

ராஜபக்ஷேவின் அடக்குமுறையும் ஊழலும் மிக்க இந்தக் காட்டாட்சி தொடர்ந்தால், விடுதலைப் புலிகள் மட்டுமா? இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். வடக்கில் இல்லை; தெற்கிலேயே அரசுக்கு எதிரான இளைஞர்களின் புரட்சி வெடித்தாலும்... ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.''

''முன்பு ஒரு முறை 'சிங்களர்களிடம் தமிழர்கள் அடங்கித்தான் போக வேண்டும்’ என்று பேசி இருந்தீர்கள். இப்போதும் 'தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும்’ என்று பேசி இருக்கிறீர்கள். தமிழர்கள் மீதான உங்கள் வெறுப்புக்குக் காரணம் என்ன? சிங்களர்களுக்குக் கீழேதான் தமிழர்கள் இருக்க வேண்டுமா?''

''என்னுடைய பேச்சுகள் திரிக்கப்படுகின் றன என்று நினைக்கிறேன். நான் அப்படிப் பேசுபவன் இல்லை. தமிழர்கள் மீது எனக்கு வெறுப்பு எதுவும் இல்லை. இலங்கை இன்றைக்கு ஒரே நாடு. அதில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. எல்லோரும் கூடி வாழ வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அமெரிக்காவில் எப்படி ஒபாமா அதிபர் ஆனாரோ... அதேபோல, இலங்கையில் ஒரு தமிழர் அதிபராகும் நாள் வர வேண்டும் என்றே விரும்புகிறேன்.''

''போருக்குப் பின் தமிழர் பகுதிகள் ராணுவமயமாக்கப்பட்டு இருக்கின்றன. இன்னமும் அங்கு இவ்வளவு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்க என்ன தேவை இருக்கிறது?''

''நான் இப்போது ராணுவத் தளபதி இல்லை என்பதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், 2010-க்குள் அங்கு எல்லா புனரமைப்புப் பணிகளையும் முடித்து, படையினரை வெளியேற்றிவிட வேண்டும் என்று அப்போது அரசிடம் சொல்லி இருந்தேன். அரசு இன்னமும் புனரமைப்புப் பணிகளை முடிக்கவில்லை. பணிகள் முடியாத நிலையில், படையினரை முழுமையாக வெளியேற்றுவது தொடர்பாகவும் முடிவெடுக்க முடியாது.''

''இந்தியா - சீனா... இலங்கையின் இணக்கமான கூட்டாளி யார்?''

''இந்தியா எங்களுக்கு மிக அருகில் இருக்கும் நாடு. வரலாற்றுரீதியாக, கலாசார ரீதியாக நம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு முக்கியமானது. எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட மாட்டோம். அதே சமயம், சீனா எங்களுக்கு மிக முக்கியமான நண்பன். இரு நாடுகளுமே இலங்கையால் தவிர்க்க முடியாதவர்கள்.''

''உங்களுடைய அடுத்த கட்ட அரசியல் திட்டங்கள் என்ன?''

''இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்வது... எல்லோருக்கும் பேச்சு உரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமை கிடைக்கவும் ஊழலற்ற நிர்வாகத்தைக் கொண்டுவரவும் உழைப்பது!''

''ஒருவேளை அதிபர் தேர்தலில் வென்றால், தமிழர்கள் பிரச்னைக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள்?''

''ஓட்டுக்காகப் பொய் பேசும் அரசியல்வாதி இல்லை நான். இந்தப் பிரச்னைக்கான தீர்வு காகிதங்களிலோ, வார்த்தைகளிலோ இல்லை. மனித மனங்களில் இருக்கிறது. அதை நான் சொல்ல விரும்பவில்லை. செய்துகாட்டுவேன்.''

''சர்வதேச நீதிமன்றம் போர்க் குற்றங்களுக்காக சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?''

''வரவேற்கிறேன். போர்க் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.''

''எதிர்கால வரலாறு உங்கள் பெயரை ஹிட்லர், முசோலினி, போல்பாட் வரிசையில் வைக்கும். இதை உணர்கிறீர்களா?''

''ராணுவத்தைக் கையாண்டவர்கள் என்பதாலேயே அவர்களோடு என் பெயரை வரலாறு சேர்த்துவிடாது. நீங்கள் குறிப்பிடு பவர்கள் எல்லோருமே சர்வாதிகாரிகள். நானோ ஜனநாயகத்துக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறேன்!''

vikatan.com

  • தொடங்கியவர்

ஒரு பெரும் போர்க்குற்றவாளி, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர் எவ்வளவு சுலபமாக உலகை ஏமாற்ற முயல்கின்றார்.

இவரை ஆதரித்து இவருக்காக வாக்கு போட்ட எம் மக்களையும் என்னவென்று சொல்வது

[size=5]"அட்ரா சக்கை"! "அம்மன் கோயில் புக்கை"![/size]

அமெரிக்க இந்திய நிகழ்ச்சி நிரல் படி தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் சரத் ஆதரவு எடுக்க முக்கிய காரணம். இத எதிர்த்த சிவாஜி லிங்கம் வெளியேற்றப் பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் நரி என்றால் பொன்சேகா குள்ளநரி மொத்தத்தில் இருவருமே போர் குற்றவாளிகள் சிங்கள அரச பயங்கரவாதிகள் , ஒருவரை ஒருவர் வென்ற இனத்துவேசிகள் என்பதினை தமிழ்மக்கள் ஒருபோதும் மறக்க கூடாது .

இவர் தன் சுயலாபத்துக்காக மீதம் இருக்கும் எம்மையும் தன் பக்கம் சேரவைக்க முயற்சிக்கிறார் என்பது புலனாகிறது.

நடேசன் தலைமையில் சரணடைய வந்ததையே மறுக்கிறாரே.

[size=5]ஒண்ணும் தெரியாத பாப்பா கதவ சாத்தி போட்டாளாம் தாப்பா![/size]

ஒரு சின்ன கற்பனை

''ராஜபக்ஷே 'நினைத்ததை முடிப்பவன்’ ஆக அவரின் தளபதியாக இருந்த நீங்களே, அவருக்கு எதிரியாகிப்போனதன் பின்னணி என்ன?''

தேர்தலில் தமிழ்தலைவர்களையும் ஏமாற்றி தமிழர்கள் கூட இன அழிப்பு செய்த என்னை தலைவராக்க வாக்களித்திருந்தார்கள்.அப்படி வெற்றி பெற்ற என்னை மகிந்த குடும்பம் சதி செய்து ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள் விடமாட்டேன்.

''சரி, போர் காலகட்டத்துக்குப் போவோம். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? புலிகளின் பலம் என்ன... பலவீனம் என்ன?''

போர் நிறுத்த காலத்தில் புலிகளின் கட்டமைப்புக்குள் ஒருவாறு புகுந்து கொண்டோம். அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு பின் வெளி நாட்டு புலித்தலைவர்களிடையே பதவி மோகம் மற்றும் பணம் சம்பாதிக்கும் ஆசையும் இருந்தது.எங்கள் வலையில் விழுத்தினோம்.விழாதவர்களை பங்கரவாதிகளாக்கி அந்த அந்த நாடுகளின் சிறைக்குள் தள்ளினோம்.இதற்கும் எமது வலையில் வீழ்ந்திருந்த புலித்தலைவர்கள் சிலரை உபயோகப்படுத்தினோம்

''உண்மையைச் சொல்லுங்கள்... பிரபாகரனின் முடிவு என்னவானது?''

ஒரே உண்மைதான் அவரா இவர் இவரா அவர் குழப்பமாகவுள்ளது

''போரில் சண்டையின்போதுதான் பிரபாகரன் இறந்தாரா? அவர் சரணடையவில்லை என்றும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படவில்லை என்றும் உங்களால் உறுதி அளிக்க முடியுமா?''

கண்டிப்பாக,அது தான் குழப்பமே

''உங்கள் கூற்றுப்படி, நீங்கள் கொன்றது உண்மையான பிரபாகரனைத்தான் என்றால், ஊடகங்களைக் கூட்டிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?''

ஏதாவது ஒரு வல்லரசு பிரபாகரன் இறக்க வில்லை உயிருடன் இருக்கிறார் என நிரூபித்தால்....

''எந்தத் தருணத்திலாவது பிரபாகரனுடன் பேசி இருக்கிறீர்களா?''

பேசவில்லை ஆனால் அவர்களின் அன்பளிப்புகளை பெற்றிருக்கிறேன்

( [size=4]தொடர்ச்சி கீழே[/size])

Edited by BLUE BIRD

இவரை ஆதரித்து இவருக்காக வாக்கு போட்ட எம் மக்களையும் என்னவென்று சொல்வது

இதை இணைத்த உங்களை என்னவென்று சொல்வது

''சரண் அடையும் முடிவை விடுதலைப் புலிகள் எடுத்த பின்னணி என்ன?''

எங்கள் சதியால் தான் வெளி நாட்டு புலிகளும் இந்திய தமிழ் தலைவர்கள் சிலரும் அவ்ர்களை தவறாக வழி நடத்தி கொண்டிருந்தார்கள்.அவர்கள் சரணடையும் முடிவை எடுத்ததுகூட எம்மால் தான் அரங்கேற்றபட்டது.

''அப்படி என்றால், சரண் அடைவது தொடர்பாக யார் யாருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது? தமிழகத் தலைவர்கள் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? அப்போது ராணுவத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?''

என்னில் விட கோத்தாவின் கை தான் ஓங்கியிருந்தது

''வெள்ளைக் கொடி ஏந்தி சரண் அடைய வருபவர்கள் கொல்லப்பட்டதுகூட போர் விதிமுறைகள்படிதானா?''

சுருக்கமாகக் கூறின் எமது மனதில் இருந்த வெறி..எந்த வொரு புலியோ தமிழனோ வன்னியில் மிஞ்சக்கூடாது

''எண்ணற்ற குழந்தைகள் போரில் கொல்லப்பட்டார்கள். உதாரணமாக, பிரபாகரனின் இளைய மகன். அவர் மீது இருந்த காயங்கள் மிகக் குறைந்த தூரத்தில் இருந்து அவர் கொல்லப்பட்டதை உறுதி செய்கின்றன. அதாவது, பிடித்துவைத்துக் கொன்று இருக்கிறீர்கள். உங்கள் போர் அறம் இதுதானா?''

முன்பு கூறிய பதில் பொருத்தமாகவிருக்கும்

''ஒரு போர் அறநெறியும் பின்பற்றப்படாத இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தப் போரை முன்னெடுத்த மனிதனாக உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''

''இந்தப் போரைத் தொடங்கியபோதே என் வீரர்களுக்கு நான் பிறப்பித்த முக்கியமான உத்தரவு,எந்த வொரு புலியோ தமிழனோ வன்னியில் மிஞ்சக்கூடாது

''இந்தப் போரில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் பங்களிப்பு என்ன? விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கள் எடுக்கக் காரணம் என்ன?''.

இந்தியா நாட்டை முற்றாக குழப்பி விட்டது.இந்தியாவிலிருந்து விடுபட சீனாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விற்றுவிட்டோம்.இனி சீனாவும் இந்தியாவும் அடிபடட்டும்.

''விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றனவா?''

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்,ஈழம் என்ன முழு இலங்கையும் கூட தமிழன் கையில் போகலாம்.

''முன்பு ஒரு முறை 'சிங்களர்களிடம் தமிழர்கள் அடங்கித்தான் போக வேண்டும்’ என்று பேசி இருந்தீர்கள். இப்போதும் 'தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும்’ என்று பேசி இருக்கிறீர்கள். தமிழர்கள் மீதான உங்கள் வெறுப்புக்குக் காரணம் என்ன? சிங்களர்களுக்குக் கீழேதான் தமிழர்கள் இருக்க வேண்டுமா?''

நிலைமைகளை பார்த்தால் தமிழனுக்கு மாத்தையா போடும் காலம் வெகு தூரத்தில் இல்லை

''போருக்குப் பின் தமிழர் பகுதிகள் ராணுவமயமாக்கப்பட்டு இருக்கின்றன. இன்னமும் அங்கு இவ்வளவு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்க என்ன தேவை இருக்கிறது?''

விடுதலைப்புலிகள் ஒரு நாளைக்கு கப்பல்களில் வந்து இறங்குவார்கள்.அப்போது சிங்கள தேசத்தை காப்பாற்ற இவ்வளவு தமிழனும் தான் மனித கேடயங்கள்

''உங்களுடைய அடுத்த கட்ட அரசியல் திட்டங்கள் என்ன?''

அது தான் எனது பிரச்சனையே.இலங்கைச் சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்து வெளி நாட்டு நீதிமன்றில் என்னை ஆஜராக்க சதி நடக்கின்றது என்பதை உணருகிறேன்.எப்படியோ செய்த பாவத்தை அனுபவிக்க வேண்டும் தானே.அப்படியொரு நிலை வந்தால் என்னுடன் கோத்தாவும் மகிந்தாவும் சேர்ந்து தான் வருவார்கள்.இதில் நான் உறுதியாகவுள்ளேன்

''இந்தியா - சீனா... இலங்கையின் இணக்கமான கூட்டாளி யார்?''

இந்தியாவை எதிர்தால் புலிகள் விரைவாக நாட்டுக்குள் புகுந்துவிடுவார்கள்.அல்லது இந்தியாவே புகுந்துவிடும்.அன்னல் சீன எமது நண்பர், மேலும் சொல்லபோனால் தற்போது அவர்கள் எங்கள் பாலியல் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்,காரணம் தற்போது எமது சகோதரிகள் சீனக்குழந்தைகளை வயிற்றில் சுமந்து பெற்று கொண்டிருக்கிறார்கள்

''ஒருவேளை அதிபர் தேர்தலில் வென்றால், தமிழர்கள் பிரச்னைக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள்?''

சண்டையில்லாமல் தமிழர்களை அழிப்பது

''சர்வதேச நீதிமன்றம் போர்க் குற்றங்களுக்காக சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?''

எப்படியோ செய்த பாவத்தை அனுபவிக்க வேண்டும் தானே.அப்படியொரு நிலை வந்தால் என்னுடன் கோத்தாவும் மகிந்தாவும் சேர்ந்து தான் வருவார்கள்.இதில் நான் உறுதியாகவுள்ளேன்

''எதிர்கால வரலாறு உங்கள் பெயரை ஹிட்லர், முசோலினி, போல்பாட் வரிசையில் வைக்கும். இதை உணர்கிறீர்களா?''

இவ்வளவு காலமும் வெளியில் குப்பை கொட்டினேனா ஒரு சந்தோசம் என்னுடன் கோத்தாவும் மகிந்தாவும் வருவார்கள் தானே?

நான் மட்டுமா? மகிந்தாவும் கோட்டாவும் தானே!இதில் கூட இலங்கை கின்னஸில் இடம்பெறும்,அதையிட்டு சந்தோசப்படுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்!: சரத் ஃபொன்சேகா!

இதன்படி பார்த்தால்

புலிகளும் புரட்சியாளர்கள் என்பதை ஏற்கிறார்.

  • தொடங்கியவர்

இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்!: சரத் ஃபொன்சேகா!

இதன்படி பார்த்தால்

புலிகளும் புரட்சியாளர்கள் என்பதை ஏற்கிறார்.

இது என்ன வகையான பதில் விசுகு? பொன்சேகா ஒட்டு மொத்தமாக போர்க்குற்றங்களை அதுவும் தமிழக ஊடகம் ஒன்றில் நிராகரிக்கும் போது, அதுபற்றி எதுவும் விமர்சிக்காமல் வெறுமனே புலிகளை புரட்சியாளர்களாக சொல்லிவிட்டார் என்று திருப்தி கொள்வது என்ன வகையான இன்பம் விசுகு?

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன வகையான பதில் விசுகு? பொன்சேகா ஒட்டு மொத்தமாக போர்க்குற்றங்களை அதுவும் தமிழக ஊடகம் ஒன்றில் நிராகரிக்கும் போது, அதுபற்றி எதுவும் விமர்சிக்காமல் வெறுமனே புலிகளை புரட்சியாளர்களாக சொல்லிவிட்டார் என்று திருப்தி கொள்வது என்ன வகையான இன்பம் விசுகு?

அவரிடமிருந்து எதையாவது எதிர்பார்த்தால் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தான் சிங்களவன் நிற்கிறான்.இவ்வளவு சிறைவாசம் அனுபவித்தும் சிங்களவரை சரத் காட்டிக்கொடுக்கவில்லை.

மறுபக்கமாக யோசித்து பாருங்கள்.உதாரணத்துக்கு புளட்.புலிகளில் இருந்து பிரிந்தவர்கள்.புலிகளை அழித்தவர்கள், புலிகளை தமிழர்களை அழிக்க தமிழர்களின் எதிரி அரசுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்தது,கொலை, கொள்ளைகளை செய்தது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.இவ்வளவும் செய்து விட்டு நல்ல பிள்ளை போல புலிகளுக்கு எதிராக யாழில் விமர்சனம் வைக்கும் கூட்டம்.இதற்கெல்லாம் ஒரு நெஞ்சழுத்தம் வேண்டும்.

இது என்ன வகையான பதில் விசுகு? பொன்சேகா ஒட்டு மொத்தமாக போர்க்குற்றங்களை அதுவும் தமிழக ஊடகம் ஒன்றில் நிராகரிக்கும் போது, அதுபற்றி எதுவும் விமர்சிக்காமல் வெறுமனே புலிகளை புரட்சியாளர்களாக சொல்லிவிட்டார் என்று திருப்தி கொள்வது என்ன வகையான இன்பம் விசுகு?

விசுகு தீர்கமுடியாத பிரச்சனையொன்றை கையாண்டு கொண்டு இங்கேயும் பதிலெளுதிவிட்டார் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை குறை சொல்லுவது அவரையே அவமானப்படுத்துவது போன்றது. கூட்டமைப்பால் அங்கீகாரம் கொடுக்கப்பட்ட கூட்டமைப்பை குறை சொல்லும் வீணர்கள் உந்துருளியில் அகப்படக் கடவது.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

]இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்!

பார்த்து ...வெடித்து கொழும்பில் உள்ள கட்டங்களுக்கு எல்லாம் சேதாரம் ஆகிவிட போகுது..

டிஸ்கி:

தொடர்ந்து இனவாதத்தை கக்கிவந்தால் வெடிக்காத அளவுக்கு மக்களை மயக்கத்தில் வைத்திருக்கலாம் தானே.. ஈரதுண்டை வயிற்றை சுற்றி கட்டி கொண்டால் பசியே எடுக்காது...

:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்!: சரத் ஃபொன்சேகா!

இதன்படி பார்த்தால்

புலிகளும் புரட்சியாளர்கள் என்பதை ஏற்கிறார்.

இவ்வளவு இழப்புகளும் தியாகங்களும் சிங்களவனிடமிருந்து வரும் வெறும் அங்கீகாரத்துக்காகத்தானா விசுகு ?

இதற்கு புரட்சிகர தமிழர் இலங்கைக்கு வரவேண்டும்!

இலங்கை மக்களிடையே எனக்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்ததுதான் காரணம். ...................... இந்த வெற்றிக்குப் பின் ராணுவம் எவ்வளவு பெரிய விலை கொடுத்திருந்தது என்பது மக்களுக்குத் தெரியும். அதனால், என்னைக் கொண்டாடினார்கள். ............................................... போர் வெற்றிக்குப் பின் மக்கள் என்னைக் கொண்டாடியது, அவருக்குப் பெரிய பொறாமையை உருவாக்கியது.

146000 மக்களை கொன்று, இறந்ததவர்களுக்கான மனிதாபிமானப்போர் நடத்தியதாக கூறும் பொன்சேக்கா தனது பாட்னருடன் சேர்ந்து செய்த வியாபரம் முறிந்து போக பாட்னருக்கு தன்மீது பொறாமை என்கிறார். நம்பத்தக்க கதைகளை கூறி நம்பத்தக்க மாதிரி நடந்த மனிதனை நிச்சயமாக நம்பலாம்.

ராஜபக்ஷேவின் அடக்குமுறையும் ஊழலும் மிக்க இந்தக் காட்டாட்சி தொடர்ந்தால், விடுதலைப் புலிகள் மட்டுமா? இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். வடக்கில் இல்லை; தெற்கிலேயே அரசுக்கு எதிரான இளைஞர்களின் புரட்சி வெடித்தாலும்... ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை

சிங்கள அரசு சிங்களவர் மீது அடக்குமுறைகளை பாவிக்கிறது என்று கூறிக்கொண்டு ஆயுதம் தாங்கி போராடிய JVPயின் பாதைகளில் இருந்து வந்த பொன்சேக்கா தனது அகாராதியில் சிங்கள அடக்கு முறைகளை தமிழர் எதிர்த்தால் அது பயங்கரவாதம் என வரைவிலக்கணப்படுத்தியவர். தமக்கு ஆட்சி கிடைக்காவிட்டால், டட்லிக்கெதிராக பாவிப்பதற்காக SLFP யால் கட்டியெழுப்பபட்ட JVP சிறிமாவாலையே ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களை(20,000) கொலை செய்து அடக்கப்பட்டது. மீண்டும் அந்த JVP, சிங்களவர்கள் அடக்கப்படுவதாக கூறிக்கொண்டு புரட்சியை ஆரம்பித்த போது 80,000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டு அடக்கப்பட்டது. இன்று மனித உரிமைகள் சபையில் போர்குற்றம் சாட்டப்பட்டிருப்பவரான,இந்த நாடக கட்சி SLFPயின் தலைவர், மகிந்த JVP யை காப்பாற் என்று கூறி ஐ.நா மனித உரிமை கவின்சிலுக்கு போனார். அந்த மகிந்தா சிங்களவர் தமிழரை அடக்கியாளுவதை மாற்ற செய்த புரட்சியை இந்த கொலைகார தளபதியின் கைகளைக்கொண்டு, 146,000 பொது சனத்தை மட்டும் கொன்று அடக்கியவர். இந்த சுயநல மனிதனுக்கு புரட்சி என்ற சொல்லு பொருள் விளங்குகிறதா என்பதுதான் கேள்வி. இல்லையேல் தொடர்ந்து இந்த சிங்கள மனிதன் நாட்டில் புரட்சிகளை விதைத்து தான் பதவிக்கு வருவதிலேயே கண்ணும் கருத்துமாக பேசுவாரா? புரட்சி ஒன்றின் போது இராணுவமும் மக்களும் என்ன விலை கொடுக்கிறார்கள் என்பதை தெரியாத சுயநல மனிதவேள்வித்தளபதி இவர். இவரின் நாக்கு புரட்சி என்ற சொல்லை எப்படி உச்சரிக்க முடியும். சம்பந்தர் சமாதானமாக சுயநிர்ணய உரிமைகளை பெறவேண்டும் என்று பேசியதாகவும் அது சுத்த பயங்கரவாதம் என்று கூக்குரல் போடும் சம்பிக்க, விமல் போன்ற அரசியல் வாதிகள், புலிகள் மட்டுமல்ல JVPயும் திரும்பவந்து போராட்டவேண்டும் என்று கூறும் பொன்சேக்கவை கண்டுகொள்ளாதது போல் நடிப்பது ஏன்?

ஓட்டுக்காகப் பொய் பேசும் அரசியல்வாதி இல்லை நான். இந்தப் பிரச்னைக்கான தீர்வு காகிதங்களிலோ, வார்த்தைகளிலோ இல்லை. மனித மனங்களில் இருக்கிறது. அதை நான் சொல்ல விரும்பவில்லை. செய்துகாட்டுவேன்
இன்னொருதடவை பொன்சேக்கா செய்து காட்ட தமிழர் மட்டுமல்ல மிகிந்தா கூட இடம் தரமாட்டர். இவர் தனது புதிய மனிதாபிமான போராட்த்தை அரசியல் கட்சிகளுக்கு வெளியியில் இருந்து செய்யட்டும் என்று மகிந்தா தீர்ப்பளித்துவிட்டார்.

Edited by மல்லையூரான்

மேல படத்திலை தலைவரின் படத்திலை தாடி நரைச்சு இருக்கு மீசை நரையே இல்லாமல் இருக்கே ஒருவேளை டை அடிச்சு இருப்பாரோ....??

மேல படத்திலை தலைவரின் படத்திலை தாடி நரைச்சு இருக்கு மீசை நரையே இல்லாமல் இருக்கே ஒருவேளை டை அடிச்சு இருப்பாரோ....??

அண்ணே உந்த படத்துக்கே ஒருத்தன் பயத்திலே சல்யுட் அடிகிறதை நீங்கள் பார்க்கவில்லையா :lol:

p20d.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மேல படத்திலை தலைவரின் படத்திலை தாடி நரைச்சு இருக்கு மீசை நரையே இல்லாமல் இருக்கே ஒருவேளை டை அடிச்சு இருப்பாரோ....??

:D :D :D

தலைவர் பற்றிய கேள்விக்கு பொன்னரின் பதிலிலேயே பதட்டம் தெரியுது.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.