Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதையும் ஒரு முறை படித்து பாருங்கள்

Featured Replies

இதை இங்கு இணைத்தது மட்டுமே நான் ... என்னை நோக்கி கல் எறியவேண்டாம் :lol:

இந்த பதிவு முழுக்க முழுக்க தமிழ் மற்றும் தமிழ் கலாசார கொலைகாரர்களாக இருக்கக்கூடிய பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களை பற்றியே! அங்கு வாழக்கூடிய ஒட்டுமொத்த புலம்பெயர் சமுதாயத்தையும் பற்றியது அல்ல. விரல்விட்டு எண்ணகூடிய தமிழ் மொழி பற்றுள்ள குடும்பங்கள் அங்கு வாழ்வதையும் நான் அறிவேன். இனிய புலம்பெயர் உறவுகளே உங்களது முயற்சிகள் போற்றுதலுக்குரியது , ஏற்றுக்கொள்ள‌த்தக்கது அவசியமானதும் கூட , ஆனால் இப்படியான ஒரு நுட்பமான ஒரு கோட்பாட்டை அடைய போராடும் நாங்கள் நூறுவீதம் உண்மையாய் பூரணமாய் இருப்பது அவசியம். அதைத்தான் எனது பதிவில் சுட்டிக்காட்ட முனைகிறேன். வேறு எந்த நோக்கங்களோ அல்லது உங்களது அளப்பெரிய தியாகங்களை கொச்சை படுத்தும் நோக்கமோ எனக்கு கிடையாது. புலம் பெயர் நாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழ் உணர்வாலனுக்கும் எனது வாதத்தின் நியாயம் புரிந்திருக்கும்.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட‌ நிலையில் தமிழீழம் என்பது வெறும் பேப்பர்களில் மட்டுமே இருந்தது. அத்தோடு இலங்கையில் இருக்கும் தமிழர்களால் தமது தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதே சூனியமாகி போய்விட்டிருந்த காலகட்டத்தில் தமிழீழம் பற்றி அவர்கள் நினைத்துப் பார்பதே பூச்சிய நிகழ்தகவாகி போனது.

இந்த நிலையில் தான் தமிழீழம் என்ற கோட்பாட்டை தமது கையில் எடுத்தார்கள் புலம் பெயர் தமிழர்கள். விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டது பொறுக்காது அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லாத ஒரு சில தமிழர்களால் தமது மனதை தாமே சமாதானப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றே இந்த புலம் பெயர் தமிழர்களின் தமிழீழ கோட்பாடு சகல தரப்பினராலும் பார்க்கப்பட்டது. ஆனால் 2009 மே மாதத்துக்கு பின்னர் இந்த நாள் வரை அவர்களது செயற்பாடு விஸ்வரூபமாய் யாரும் எதிர்பாத்திராத அளவு வளர்ந்து நிற்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசை பிரகடனம் செய்தார்கள், தமக்கென்று ஒரு பிரதமர் அமைச்சர் குழாம் உருவாக்கினார்கள், இலங்கையின் அல்லது இலங்கை அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளை தாம் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் முடக்கிப் போட்டார்கள். இலங்கையின் புலனாய்வு வட்டாரங்களும் , ராஜதந்திரிகளும் கணித்ததுக்கு மேலாய் இருந்தது புலம் பெயர் தமிழர்களின் நடவடிக்கை. உலகில் சுதந்திரமும், சமத்துவமும், பேச்சு சுதந்திரமும் , ஜனநாயகமும் மிகுந்த நாடுகளுள் ஒன்றான பிரித்தானியாவில் , இலங்கையின் அதிபரது ராஜதந்திர நகர்வுகளை கூட முடக்கி போட்டது யாருமே எதிர் பாத்திராத ஒரு நகர்வு. இவ்வாறாக தமது தமிழீழ கோட்பாட்டில் அடுத்தடுத்து முன்னேறி வரும் புலம் பெயர் தலமையிலான நாடுகடந்த தமிழீழ அரசு சமீப காலத்தில் வெளியுலகோடு பல்வேறு தொடர்புகளை பேணுவதற்கு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக வெகுஜன ஊடகங்களை பயன்படுத்துவதில் தொடங்கி விளையாட்டு நிகழ்வுகளை குறிவைத்தும் காய் நகர்த்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாகத்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழீழ உதைபந்தாட்ட அணியின் உதை பந்து பிரவேசம் அமைந்திருந்தது. ஒரு நாட்டுக்கு விளையாட்டு அவசியம் என்ற அடிப்படை தேவையைத் தாண்டி , உலகின் பிரபலமான ஒரு விளையாட்டில் இன்னமும் அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டின் அணியை களமிறக்குவதன் மூலம் , தமிழீழ‌ம் என்ற ஒரு நாட்டை உலகின் பேசுபொருளாக ஆக்குவது என்ற ராஜதந்திர வெற்றியை எட்டுவதற்கே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கணக்கிட்டு காய் நகர்த்தியது. இதை நாடுகடந்த தமிழீழ அரசின் விளையாட்டுத்துறை அமைச்சரும் தனது பேட்டியொன்றின் போது குறிப்பிட்டிருந்தார்.

அந்த அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்காக ஃபீபா நடாத்தும் வீவா உலக கிண்ணத்தில் தனது கன்னி பிரவேசத்தை கண்டது தமிழீழ அணி. செய்திகளிலும் , இணையத்திலும், அதுபோக நண்பர்களது பேஸ்புக்கிலும் இந்த கிண்ணம் தொடர்பாகவும், தமிழீழ அணி தொடர்பாகவும் செய்திகள் + புகைப்படங்களை நான் பார்த்து இருந்ததால் இந்த போட்டி பற்றி தேடவும், படிக்கவும் செய்தேன். எனது வேலைப்பழு காரணமாக போட்டி இடம்பெற்ற காலப்பகுதியில் அது தொடர்பான செய்திகளையோ , காணொளிகளையோ பார்ப்பதற்கு கிடைக்கவில்லை. அது போக இந்த போட்டியின் முடிவு பற்றியோ , மேலதிக விபரங்கள் தொடர்பிலோ எந்த நண்பர்களும் ஃபேஸ்புக்கில் ஏதும் பின்னர் பதிவிடவில்லை. சில நாட்களுக்கு முன்னர் யூரோ போட்டிகளுக்காக பதிவொன்றை தயார் செய்வதற்கு இணையத்தை மேய்ந்த போது தான் இந்த வருடத்துக்கான வீவா உலககிண்ண போட்டிகளின் முடிவுகள் + காணொளிகள் என்பனவற்றை பார்க்க கிடைத்தது.

உலகம் முழுவதும் செறிந்து வாழும் ஒவ்வொரு தமிழனின் ஆர்வத்தை போலவே நானும் ஆர்வத்துடன் தமிழீழ அணியின் ஆட்டத்தை காண்பதற்கு காணொளிகளை தேடினேன். நான் தேடிய இணையங்களில் எந்த விதமான முழுமையான போட்டி காணொளிகளும் இடம்பெற்றிருக்கவில்லை. "யூ டியூப்பில்" ஒரு சில வீடியோக்கள் மட்டுமே தரவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் என் ஆர்வம் அத்தனையும் செத்துப் போய் , சில நிமிடங்களுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு வெறி கொண்ட அகோரி போல் ஆகிவிட்டேன். எனக்கு தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் அந்த தமிழீழ அணிமீது உமிழ்ந்து தள்ளினேன். யூரோ கிண்ண பதிவை கைவிட்டு இந்த பதிவை எழுத தொடங்கி விட்டேன்.

இணைக்கபட்டிருந்த அநேகமான காணொளிகளில் விஷேடமாக வீரர்கள் பேசும் போது பச்சையாய் ஆங்கிலம். பேட்டி கொடுக்கும் போது சரி , மைதானத்துள்ளே அணிவீரர்கள் குழு சபதத்தின் போதும் சரி பச்சையாய் கொச்சையாய் ஆங்கிலம். மருந்துக்கு ஒரு தமிழ் வார்த்தை கிடையாது. கேட்டால் தமிழீழ (?????) உதை பந்தாட்ட அணி!!!

முதலில் தயவுசெய்து யாராவது தமிழீழம் என்றால் என்னவென்று வரையறுப்பீர்களா? என்னடா இப்படி கேட்கிறானே என்று நினைக்க வேண்டாம், விடுதலைப் புலிகள் இருந்த வரையில் எனக்கு தமிழீழம் என்றால் என்னவென்று தெளிவான ஒரு அறிவு இருந்தது, ஆனால் இப்போது புலம் பெயர் தமிழர்களால் கொண்டு நடாத்தப்படும் இந்த தமிழீழம் தொடர்பில் சமீப காலமாக எனக்கு மயக்க நிலை தோன்றி இருக்கின்றது.

எனக்கு தெரிந்து தமிழீழம் என்பது "தமிழர்களது" தேசம். தமிழர்கள் என்பவர்கள் யார்? தமிழர்கள் என்போர் உலகில் வழங்கிவரும் மொழிகளுள் ஒன்றான 'தமிழ்" என்ற மொழியை "பேசுகின்ற", "எழுத", "வாசிக்க" தெரிந்த ஒரு மக்கள் கூட்டம். இப்போது இந்த வரைவிலக்கணங்களின் அடிப்படையில் எத்தனை புலம் பெயர் தமிழர்கள் தமிழர்கள் என்ற பதத்துக்குள் அடங்குகின்றீர்கள்? நீங்கள் அந்த தமிழர் என்ற வட்டத்துக்குள் அடங்கி விட்டீர்களானால் சந்தோஷப்பட்டுகொள்ளுங்கள். சரி இந்த எழுத, வாசிக்க வகையறாவுக்குள் நுளைவதற்கு முன்னர் இந்த தமிழீழ உதைபந்தாட்ட அணியுடன் மீதமிருக்கின்ற வாய்க்கால் தகராறை முடித்துக்கொண்டு வருகின்றேன்.

நீங்கள் தமிழீழ அணியை பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள் ஆனால் உங்களது எந்தவிதமான நடவடிக்கைகளிலும் நீங்கள் தமிழர் என்ற அடையாளத்தை காணமுடியவில்லையே! பேட்டி கொடுக்கிறீர்கள் ஆங்கிலத்தில்! சக வீரருடன் உரையாடுகிறீர்கள் ஆங்கிலத்தில் அட , அதை தான் மன்னித்துவிடுவோம் , ஆனால் போட்டி தொடங்கமுன்பு வீரர்கள் கூடி எடுக்கும் குழுசபதத்தை கூட ஆங்கிலத்தில் தான் எடுக்கிறீர்கள். இறுதியில் "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் " என்ற சப்பைகட்டு வேற! புலிகளின் தாரக மந்திரமான இதை நீங்கள் உங்கள் வாயால் சொன்னது அந்த கூற்றையே கொச்சை படுத்துவது போன்றது. இந்த மந்திரம் தமிழனுக்கு உரியது, தமிழன் என்பவன் தமிழை நேசிப்பவன் சுவாசிப்பவன். தன் இனத்தவனுடனேயே ஆங்கிலத்தில் குப்பை கொட்டும் சாக்கடைகள் எல்லாம் தமிழனாய் ஆகிவிட முடியாது. தமிழன் என்ற போர்வைக்குள் இருக்க உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் எல்லாம் தமிழ் அப்பனுக்கு பிறந்தவர்கள் தானா?

TG1.jpg தமிழீழ உதைபந்தாட்ட அணி

சரி நீங்கள் ஆங்கிலத்தில் கொடுத்த பேட்டியை கூட , நானாக ஒரு சமாதானத்துக்கு எடுத்துக்கொள்கிறேன் எவ்வாறெனில் அதாவது வேற்று மொழி எவனாவது இந்த காணொளியை பார்க்கும் போது உங்களது நோக்கங்களை , அனுபவங்களை நீங்கள் ஆங்கிலத்தில் கூறி இருப்பதால் தமிழீழம் தொடர்பான ஒரு அனுமானத்தை அவர்களால் மேற்கொள்ள முடியும் என்ற கோணத்தில் அந்த பேட்டி விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் போட்டிக்குமுன்னரான குழுநிலை சபதம் ( அது தாம்பா போட்டி தொடங்க முன்னர் வட்டமாக நின்று அணிவீரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வார்களே) என்பது ஒரு போட்டிக்கு உத்வேகம்! ஒரு அணியின் அணியின் ஓர்மத்தின் வெளிப்பாடு, போட்டிக்கு முன்னர் ஒரு அணி களத்தில் தான் சாதிக்கவேண்டியதை வீரர்களை உசுப்பேற்றி விடுவதன் மூலம் சாதிக்க ஆரம்பிக்கும் முன்நிலை தருணம். அப்படியான இந்த குழுநிலை விவாதத்தில் தமிழீழ அணியென்று புறப்பட்டு போன நீங்கள் உங்களுக்குள் ஆங்கிலத்தில் பீற்றியதை என்னவென்று சொல்ல? என்ன சொல்லி இதற்கு சப்பைகட்டு கட்ட போகிறீர்கள்? நீங்கள் தமிழர்கள் தானே? அதுவும் தமிழீழம் என்ற தனிநாட்டுக்கான ராஜதந்திர நகர்வான நீங்கள் இப்படி வேறு தேசம் போய் நடுமைதானத்தில் நின்று ஆங்கிலத்தில் வாந்தி எடுத்ததை அந்நியன் எவனாவது பார்த்தால் சிரிக்க மாட்டானா? சொந்த மொழி பேச கூசும் , அல்லது பேச தெரியாத உங்களுக்கு எதற்கடா தனி நாடு என்று அவனாவது ஒரு கேள்வியை கேட்டால் உங்கள் வாயையும் அதையும் எதை வைத்து பொத்துவீர்கள்?

ஆங்கில நாடாக இருந்த போதிலும், ஆங்கில வீரர்களே ஆடுகின்ற போதிலும் தங்களது பழமையை, பூர்வீக மக்களை மறக்காமல் போட்டிக்கு முன்னர் "ஹகா" பாடும் நியூசிலாந்தின் றக்பி அணி எங்கே? நேற்று பெய்த மழையில் இன்று முழைத்த காளான்கள் போல் தமிழனை பிரதிநிதுவப்படுத்தியும் கூட ஆங்கிலத்தில் மலம் கழிக்கும் நீங்கள் எங்கே?

இந்த உதைபந்தாட்ட விடயம் ஒரு பொறி தான், இந்த விடயத்துக்கு பின்னர் புலம் பெயர் தமிழர்களின் தனிநாட்டு கோசமும் , இவர்களது ஆர்ப்பாட்டங்களும் எந்தளவு அர்த்தமுடையாதாக இருக்கின்றது என்று சிந்திக்கவேண்டியுள்ளது. தொடர்ந்து நான் எழுதப் போவதில் ஒரு சில புலம் பெயர் தமிழர்களை தவிர அனேகமானோர் பலியாக போவதை நினைத்தால் தான் எனக்கு கவலையாக இருக்கிறது?

முதலில் உங்களில் எத்தனை பேருக்கு தமிழ் எழுத , வாசிக்க, பேச தெரியும்? இதை படித்துக்கொண்டு நீங்கள் இருப்பதால் நிச்சயம் உங்களுக்கு வாசிக்க தெரிந்திருக்க வேண்டும், எழுதவும் தெரிந்திருக்கும் அப்படியானால் நீங்கள் தமிழீழம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தவோ, தனிநாட்டுக்காக போராடவோ தகுதியானவர் தான். ஆனால் ஒன்று சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கோ, சகோதரர்களுக்கோ, உறவினர்களுக்கோ தமிழ் எழுத , வாசிக்க , பேச தெரியுமா? அல்லது ஒரு மொழியாய் தமிழை நேசிக்க உங்களது சொந்தங்கள் தயாராய் இருக்கின்றார்களா? இந்த கேள்விக்கு நீங்கள் உதடு பிதுக்கினால் உங்கள் தமிழீழ கோசம் எல்லாம் வெறும் வேஷம் . அது அர்த்தமற்றது.

யாரெல்லாம் தமிழீழத்துக்கு குரல் கொடுக்கலாம்? யாரெல்லாம் போராடலாம் ? அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தமிழன் என்ற போர்வையில் இருப்பவன் தமிழீழத்துக்காக போராடுகின்றான் என்றால் அவனுக்கு மொழி அறிவும் தனது மொழி மேல் நேசமும் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவன் தமிழனே கிடையாது, தமிழனே இல்லை என்று ஆகிவிட்ட பிறகு உனக்கு எதற்கடா தனிநாடு?

எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். அதாவது நான் பார்த்தது கேட்டவைகளை வைத்துக்கொண்டு சொல்கிறேன். இன்று புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்களில் நூறுக்கு எண்பது வீதமானோர் தமிழை நேசிக்கவோ , தமிழில் பேசவோ தயாராய் இல்லை. அந்நிய நாகரீகத்தில் மூழ்கி கிடக்கும் இவர்களுக்கு தமிழீழ கோஷம் ஒரு கேடு! அதிலும் குறிப்பாக 1985களின் பின்பு பிறந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் தலைமுறையில் நூறுக்கு தொண்ணூறு சதவீதம்பேருக்கு தமிழ் முறையாக எழுத வாசிக்க தெரியாது, தெரிந்த ஒரு சிலருக்கும் தமிழில் பேசுவதற்கு வெட்கம். இப்படியான சாக்கடை புழுக்களுக்கு தமிழீழம் கோர என்ன தகுதி இருக்கிறது?

புலம்பெயர் தமிழர்களுள் தமிழில் பேசுவதை கௌரவகுறைச்சலாகவோ, அவமானமாகவோ கருதி அந்நிய மொழிகளில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் தமிழரையும், "என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது" என்று சொல்வதில் அளப்பெரிய ஆனந்தம் அடையும் கும்பலுக்கு பிறந்த கும்பல்களையும், தனது பிள்ளைக்கு தமிழ் கற்றுத்தராமல் "அப்பம்மா ஸீ தெயா!. அப்பப்பா ஸீ தெயா " என்று பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் பரதேசி பெற்றோர்களையும், இலங்கைக்கு வந்து எமது கலாசாரத்துக்கு சற்றும் பொருந்தாத வகையில் ********************** ************** *************** தமிழச்சிகளையும் கண்கூடே பார்த்தவன் நான். இதே கூட்டம் தமிழீழம் வேண்டுமென்று இதே கோட்பாடுகள் , கொள்கைகளோடு ஆர்ப்பாட்டம் பண்ணியதையும் அறிவேன். சேற்றுப் பன்றிகளே நீங்கள் கோரும் தமிழீழம் நாசமாய் போக! அப்படியொரு தமிழீழம் அடைவதை விட‌ அடிமையாய் இருக்க நான் தயார்.

TEFA+2012+football+kit+packed.jpg தமிழீழ உதைபந்தாட்ட அணியின் சீருடை

'

தமிழீழம் கோருவதற்கு முன்னர் நீங்கள் தமிழராக இருக்கிறீர்களா என பாருங்கள். உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தமிழ் தெரியுமா என சிந்தியுங்கள். தமிழீழ கோஷமிடும் எத்தனை பேர் தமிழில் பேசுவதற்கு தயாராய் இருக்கிறார்கள் என்று சோதியுங்கள். அப்புறம் பார்க்கலாம் தமிழீழம் பற்றி.

ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் இன உணர்வு என்பது அடிப்படையில் தனது மொழிப்பற்றின் மீது இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். மொழியின் மீது நேசமில்லாத இனப்பற்று அஸ்திவாரமில்லாத கட்டடம் போல, எந்த நேரத்திலும் மண்ணில் சரியும். நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் , என்முகத்தில் காறி உமிழ்ந்தாலும் உங்களுக்கு கசப்பான உண்மை ஒன்றை சொல்கிறேன். மொழிப்பற்றில்லாமல், மொழி அறிவில்லாமல் நீங்கள் தொடர்ந்து தமிழீழ போராட்டத்தை முன்னெடுப்பீர்களேயானால் அந்த போராட்டம் அந்நியர்களார் வீழ்த்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இனப்பற்றோ அல்லது இனம் மீதான பிடிப்போ அடிப்படையில் மொழியின் மீதான பற்றில் தான் இருந்து தான் ஆரம்பிக்கிறது. மொழி மீது பற்ரில்லாமல் தமிழில் பேசுவதற்கு கூசி , குறுகி அதை ஒரு அவமானமாக கருதும் நீங்கள் நடாத்தும் தமிழீழ போராட்டம் அர்த்தமற்றதும் , தோல்வியில் முடிவடையப்போவதாகவும் தான் இருக்கும்.

எனது இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நீங்கள் நடாத்தும் இந்த போராட்டம் புலம் பெயர் தமிழரிடத்தில் எத்தனை காலம் நீடிக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா? இந்த தமிழின உணர்வு புலம்பெயர் தமிழரிடத்தில் இன்னமும் எத்தனை தலைமுறைக்கு நீடிக்கும்? உங்களைக் கேட்டால் கடைசி தமிழன் இருக்கும் வரை, வாழ்வின் எல்லை வரை, தமிழீழம் அடையும் வரை , உயிர் போய் உடல் மண்ணில் வீழும் வரை என்று பதில் சொல்வீர்கள். உண்மையில் இந்த எண்ணம் சரியானதும் , நியாயமானதும் தான். ஆனால் இப்போது பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் இருக்கும் நிலையிலும், இப்போது வளர்ந்துவரும் புலம்பெயர் தலைமுறையையும் வைத்துப் பார்க்கும் போது அடுத்த தலைமுறைக்கு இந்த போராட்டம் தாங்காது என்று தான் சொல்லுவேன்.

காரணம் இல்லாமல் நான் ஒன்றையும் சொல்லவில்லை. 1980களில் போராட்டம் உக்கிரமாக ஆரம்பித்தபோது அந்த காலப்பகுதியிலும் அதற்கு சற்று பிற்பட்ட காலப்பகுதியிலும் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களை புலம் பெயர் தமிழர்களின் முதலாம் சந்ததி எனலாம். அவர்களது பிள்ளைகளை அதாவது இப்போது இருக்கின்ற இளம் புலம்பெயர் தலைமுறையை இரண்டாம் தலைமுறை எனலாம். முதல் புலம்பெயர் தலைமுறையின் இனப்பற்றையும், போராட்டத்தின் வலிகளையும், போராட்டம் தொடர்பான அறிவையும் பாதியாகத்தான் இந்த இரண்டாம் தலைமுறை சுமந்துகொன்டிருக்கிறது. இது அவர்களது பிளை அல்ல, காரணம் இந்த இரண்டாம் தலைமுறை பிறந்தது அல்லது சிறு வயதுமுதலே வளர்ந்தது எல்லாம் போராட்டத்தின் நேரடி நிழல்களில் அல்ல.

இந்த இனப்பற்றும், போரட்டத்தின் வலிகளும் முதல் தலைமுறையுடமிருந்து கடத்தப்பட்டவை. ஆக ஒரு தலைமுறையால் தனக்கு அடுத்துவரும் தலைமுறைக்கு தனது வலிகளை அல்லது உணர்வுகளை தான் அனுபவித்தது போன்றோ அல்லது தான் உணருவது போன்றோ நூறு வீதம் அப்படியே கடத்துவதென்பது சாத்தியப்படாத ஒன்று. அது இயற்கையும் கூட.

அதுபோல் இப்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற யௌவனர் சந்ததிக்கு இந்த முதல் தலைமுறை அனுபவித்த வலிகளிலும், இன உணர்விலும் பத்துசதவிகதம் கூட கிடையாது என்று ஆணித்தரமாக சொல்லுவேன். முதல், மற்றும் இரண்டாம் தலைமுறகளிடமிருந்து வாய்வழி கேட்ட கதைகள் வழியாகவும், சம காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களின் போது அறியப்படுகின்ற ஒரு சில தகவல்களின் அடிப்படையில் தமிழரின் போராட்டத்தை ஒரு கதையாக அறிந்து வைத்திருக்கிறர்களே ஒழிய உணர்வு ரீதியாக அவர்களுக்கு தமிழர் போராட்டத்தின் தார்ப்பரியம் புரிந்திருக்கிறதா என்றால் விடை 0.01 சத‌விகிதமே! இதற்கு காரணம் மூன்றாம் தலைமுறைக்கு போராட்டம் பற்றிய வலிகளும் கனாகனமும் முந்தய தலைமுறையில் இருந்து கடத்தப்பட்டபோது அது வீரியம் மிக்கதாய் இல்லை. முதல் காரணம் அது இயற்கையான ஒரு விதி! அடுத்தது முதல் தலைமுறையில் பாதிப்பேரும் இரண்டாம் தலைமுறையில் ஏறக்குறைய அனைவரும் அந்நிய மொழிகளுக்கு பல்லக்கு தூக்க ஆரம்பித்ததும் தான்.

இப்போது இருக்கும் இந்த புலம்பெயர் யௌவன பருவத்து தலைமுறைக்கு தாங்கள் இனிவரும் காலங்களில் தங்களை தமிழராக அடையாளப்படுத்தி கொள்ளவோ, தமிழரது பாரம்பரியங்களில் வாழவோ அல்லது இலங்கை தமிழருடன் தொடர்புகளை பேணவோ நாட்டம் கிடையாது என்பதை பலபேரின் அனுபவத்திலும் எனது சொந்த அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் தங்களை அவர்கள் தமிழராய் உணர்வது கிடையாது. எப்படி உணருவார்கள்? இந்த யௌவன பருவ புலம்பெயர் தலைமுறையும் நூறுக்கு தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு தமிழ் எழுதவோ , வாசிக்கவோ, பேசவோ தெரியாது. அப்படி செய்வது அவமானம் என்றும் மேல்நாட்டு வாழ்க்கை தான் உத்தமம் என்றும் இவர்களது மானம்கெட்ட பெற்றோரும் , சுற்றாரும் இந்த பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைத்திருப்பது தான் இந்த விபரீதத்துக்கு காரணம்.

ஆக நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு உணர்வை, ஒரு வலியை அதே கனாகனத்தோடு தலைமுறை தலைமுறையாக கடத்துதல் என்பது சாத்தியம் இல்லாதது, ஆனால் இந்த தமிழின உணர்வு நீடிக்க வேண்டுமானால் செய்யவேண்டியது ஒன்று மட்டும் தான். எந்த தலைமுறையும் தன்னை ஒரு தமிழன் என்று உணரவைப்பது மட்டும் தான். எப்போது ஒருவன் தன்னை தமிழன் என்று உணருவான் என்றால் அவனுக்கு மொழி அறிவும் மொழிப்பற்றும் இருக்கின்ற போதுதான். இல்லை என்றால் இன்னும் இருபது வருடங்கள் கடந்தபின்பு புலம்பெயர் நாடுகளில் தமிழர் போராட்டம் என்றால் இப்போது ஒரு சிலர் செய்வது போல் பெண்களை பார்க்கவும், காதலிக்கவும், தமது சுய அரசியல் லாபத்துக்காக கோஷம் போடவும் என்று இந்த போராட்டங்கள் அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஏனென்றால் அப்போதுதான் பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தெரியாமல் இருக்குமே!

பின்னர் அந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த அந்நியனாவது வந்து "எவன்டா இதில் தமிழன்? தமிழ் எழுதவோ , வாசிக்கவோ தெரியாமல் ஆங்கிலத்தில் கூச்சல் போடும் நீங்கள் எல்லாம் ஒரு தமிழர்கள், உங்களுக்கெல்லாம் ஒரு தனி நாடு"? என்றொரு கேள்வியை கேட்டுவிட்டால் விரல் சூப்பிக்கொண்டு வீடு திரும்பவேண்டிய நிலை வரும் என்பது நிச்சயம்.

ஆனால் தலைமுறை தலைமுறையாக புலம் பெயர் சமூகம் தங்களது சந்ததிக்கு தமிழ் அறிவையும் மொழிப்பற்றையும் அளித்துக்கொண்டுவருமானால் பின்னொரு காலத்தில் தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் எதிர் கால சந்ததிகள் ரத்தமும் சதையுமாய் அறியாமல் போனாலும் அல்லது முற்றாக‌ தெரியாமலே போனாலும் கூட தாம் தமது மொழி மீது கொண்டிருக்ககூடிய பற்றினாலும், அதன் மீது உள்ள பிடிப்பினாலும் பின்னாளில் எங்கேனும் தமிழனுக்கு ஏதேனும் அநீதிகள் இழைக்கப்படின் அவர்களால் இனஉணர்வோடு அணிதிரளமுடியும், இல்லையென்றால் இப்போதே பெரும்பாலான இந்த புலம்பெயர் சமூகம் தாம் தமிழர் என்பதை மறைப்பதில் குறியாய் இருக்கின்றது, அப்படியானால் இன்னுமொரு பத்து வருடத்தில்? ??? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

ஆகவே தான் சொல்கிறேன் வெங்காயங்களே எவனுக்கெல்லாம் தமிழ் தெரியாதோ இப்போதே போய் படித்துக்கொள்ளுங்கள். எந்த பன்றி பெத்த பிள்ளைகளுக்கு தமிழ் எழுத வாசிக்க வராதோ போய் கற்றுக்கொள்ளுங்கள் , இல்லையென்றால் மொழியறிவு இல்லத நீங்கள் நடாத்தும் தமிழீழ போராட்டம் பெரியார் பாணியில் சொல்லப்போனால் வெறும் வெங்காயமே!

TEFA+logo.jpg

சரி இன்னொரு வாதமும் இங்கு வரலாம் சில விதண்டா வாதத்துக்கு பிறந்ததுகள் சொல்லலாம் நாங்கள் எப்படி இருந்தாலும் உனக்கென்ன ?தமிழீழத்தை பெற்றுத்தந்தால் சரி தானே என்று. அந்த விளக்கெண்ணைகளிடம் நான் கேட்கப்போவது என்னவென்றால் சரி நீங்கள் இப்படியே இருப்பது போலவே இருந்து கொண்டு தமிழீழத்தை பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த தமிழீழம் எப்படி தெரியுமா இருக்கும்?

ஒரு அந்நியன் தமிழீழம் தொடர்பில் அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவை சொடுக்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அங்கு தகவல்கள் இப்படி இருக்கும்.

பெயர் : தமிழீழம்

சனத்தொகை:xxxxxxxxxxxx

அமைவிடம்:xxxxxx xxxxxx

ஆட்சி மொழிகள்: ஆங்கிலம் , பிரஞ்சு, டச்சு, நோர்வேஜியன், டெனிஸ் , ஜேர்மன்.

கலை மற்றும் கலாசாரம்:

முன்னொரு காலத்தில் இன்று உலகின் சிங்கபூர், மலேசியா , மொரீசியஸ் , இந்தியா ஆகிய நாடுகளிள் வழகில் இருக்கும் தமிழ் என்ர மொழி பேசப்பட்டு வந்தது. கலாசார ஆடைகளாக சேலை, வேட்டி, தாவணி, சல்வார் போன்ற ஆடைகள் இருந்தன. விடுதலை புலிகளின் ராணுவ தோல்விக்கு பின்னர் எழுப்பப்பட்ட தமிழீழத்தின் வீதிகளில் பிகினி மற்றும் அவுத்துவிட்ட ஆடைகளுடன் பெண்கள் அலைவதை சாதாரணமாக காணலாம். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இருக்கக்கூடிய ஒரு உணர்வை தரக்கூடிய ஒரு நாடாக இது இருக்கிறது.

இப்படியான ஒரு தமிழீழத்தை தான் நீங்கள் அமைப்பீர்கள். இதுவல்ல விடுதலைப்புலிகள் கனவு கண்டது, விடுதலைப்புலிகள் இப்போது உயிரோடு இருப்பார்களேயானால் நீங்கள் தமிழீழம் என்று அடிக்கும் கூத்துக்கு உங்களை காலிடுக்கில் சுடுவார்கள்.

முழங்காலுக்கு மேல் ஆடையணிந்த பெண்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதும், ஜட்டி தெரியும் படியாய் ஜீன்ஸ் போட்ட ஆண்கள் சில எச்சரிக்கைகளுக்கு பின்னர் செமத்தையாய் அடிவாங்கியதும் நான் கண்கூடே பார்த்த நிஜங்கள்.

விடுதலைப் புலிகளின் ஆட்சியின் போது கடைகளுக்கு வணிக ஸ்தாபனங்களுக்கும் தூய தமிழில் அவர்கள் பெயர் சூட்டியது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இளம்பருதி குளிர்களி, தூயவன் மகிழுந்து நிலையம், மலரன்பன் உந்துருளி திருத்தகம், கலையரசன் ஈருருளி தரிப்பகம், நிலா வெதுப்பகம் என்று அவர்கள் தூய தமிழில் பெயர்கள் சூட்டியது உயர் தமிழ் பற்றின் வெளிப்பாடு. யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் , உலகின் அத்தனை நாகரீகங்களும் முளைவிட்ட பின்பும் விடுதலை புலிகளின் கட்டுப்பாடின் கீழ் இருந்த மக்களின் வணிக ஸ்தாபனங்கள் இன்னமும் தூயதமிழிலேயே பெயர்ப்பலகை தாங்குகின்றன. புதிதாய் தொடங்கப்படும் வணிக நிலையங்களும் தமிழிலேயே பெயர்பலகை சுமக்கின்றன. இது நான் கண்ணால் பார்த்த நிஜம். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பெயர்களும் தூய தமிழில் மாற்றப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது புரிகிறதா விடுதலை புலிகள் அடைய துடித்த தமிழீழமும் நீங்கள் நாடுகடந்த தமிழீழம் என்று பிரகடனம் செய்துவிட்டு அதன் கீழ் அடிக்கின்ற கூத்துக்களும் முற்றிலும் எதிரானவை என்று?

நீங்கள் இப்போது இருக்கின்றவாறே இருந்துகொண்டு தமிழீழம் அடையமாட்டீர்கள் அப்படி அடைந்தாலும் அந்த தமிழீழம் இன்னுமொரு இந்தோனேசியாவின் "பாளி" நகரமாகித்தான் போகும்.

இப்போதும் சொல்கிறேன் தமிழர் போரட்டத்தில் புலம்பெயர் சமூகத்தின் பங்கு மறக்கமுடியாததும் முக்கியமானதும் தான். இப்போது கூட இயங்க வேண்டியவர்களாய் நீங்கள் தான் இருக்கிறீர்கள். ஆனால் இப்படியான ஒரு தமிழீழம் என்ற கோட்பாட்டை வைத்துக்கொண்டு தமிழ் மொழி அறிவு இன்றியும், மொழி பற்று இன்றியும் , கலாசரம் பற்றிய கணக்கேதும் இன்றியும் நீங்கள் இருப்பீர்களேயானால் உங்கள் தமிழீழ போராட்டம் வெற்றிபெறப்பொவது இல்லை பூக்கப்போவதும் இல்லை, அது கருகிவிடட்டும் என்றே நானும் பிரயாசைப்படுகிறேன். காரணம் தமிழ் வாழாத ஒரு தமிழீழம் கிடைப்பதைவிட கிடைக்காமல் போவது எவளவோ உத்தமம்.

images+%25281%2529.jpg தொன்னமை தமிழுக்கு இப்போதுதான் அர்த்தமே கண்டுபிடிக்க ஆரம்பித்திருக்கிறோம், அதற்குள் அது செத்துவிட வேண்டாமே!

தமிழீழத்தின் பிரதமர் என சொல்லிக்கொள்கின்ற திரு.உருத்திரகுமாரன் அவர்களே! தமிழீழத்துக்காக ஒன்று கூடுங்கள் என்ற அறைகூவலுக்கு முன்னர் புலம்பெயர் தமிழர்களே உங்களில் தமிழ் தெரியாத ஒவ்வொருவனும் தமிழை படியுங்கள் என்ற அறைகூவலை விடுங்கள். இல்லையென்றால் தமிழே இல்லாத ஒரு தமிழ் நாட்டுக்கு தலைமை தாங்குகின்ற வெட்கக்கேடான வேலையை நீங்கள் செய்வதாகி போய்விடும்.

http://kishoker.blogspot.com/

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உங்களைபோல் சில ஆதங்கங்கள் உள்ளது விமான நிலையத்தில் வந்து இறங்கியவர்களை வரவேற்க தேசியக்கொடியுடனும் கேக்குடனும் இருந்த மக்கள் கூட்டத்தின் இடையே வந்த தமிழீழ உதைபந்தாட்ட அணியில் உள்ள அவர்களின் செவ்வியை கேக்க ஆவலாக இருந்த என்போன்றோருக்கு அன்று கிடைத்தது ஏமாற்றமே அன்றி வேறு எதுவும் இல்லை ஏனெனில் அணியில் உள்ளவர்கள் வழங்கிய செவ்வியில் மருந்துக்கு கூட தமிழ் பேசவில்லை நாங்கள் இங்கிலாந்து அணியை வரவேற்க போகவில்லை போனது தமிழீழ உதைபந்தாட்ட அணியை வரவேற்கவே

[size=4]பெயர் : தமிழீழம்[/size]

[size=4]சனத்தொகை:xxxxxxxxxxxx[/size]

[size=4]அமைவிடம்:xxxxxx xxxxxx[/size]

[size=4]ஆட்சி மொழிகள்: ஆங்கிலம் , பிரஞ்சு, டச்சு, நோர்வேஜியன், டெனிஸ் , ஜேர்மன்.[/size]

ஆட்சிமொழியான தமிழை காணோம் :rolleyes:

http://youtu.be/eu25yKGaMts

http://youtu.be/-V-a10Q9m8I

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த பெற்றோர்.. இருவருக்கும் வேலை.. இவ்வாறான சூழலில் பிள்ளைகளுடன் உரையாடும் நேரம் வாய்ப்பதே குறைவாக இருக்கும்.. பிள்ளைகள் பள்ளிக்கூடம், Day care போன்றவற்ரிலேயே மொழியறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள்..

இதற்கான தீர்வு என்ன என்பதுதான் தெரியவில்லை..

ராஜமனோகரன் ஐயா அவர்களுடன் மிக நன்றாக தமிழில் உரையாடுகிறார்கள்.

என்னையா நீங்கள் கதைகிறீர்கள்..?

Edited by Gajen

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகள் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது.

அவர்களது தாயகப்பற்றை புரிந்து கொள்ளுவோம்.

மீதி தானே வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாகப் பிறந்தவனுக்குத் தமிழ் சரளமாகப் பேசத் தெரியாதது காலத்தின் கொடுமை.

ஆனாலும் அவன் தன்னைத் தமிழனாக உணர்ந்து கொள்வது வரவேற்கப்பட வேண்டியது.

எமது புலம்பெயர் இளையோர்கள் காலத்தின் நிமித்தமும் பெற்றோரின் அசட்டையீனத்தினாலும்

தமிழக் கற்றுக் கொள்ளாதது வருந்தத் தக்கது.

அதற்காக அவர்களது உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவது அழகல்ல.

உதைபந்தாட்டத்தில் திறமையுள்ளவர்கள் விளையாட்டுக்கு அழைக்கப்படும் போது அவர்களுக்குத் தமிழ்த் திறமை இருக்கின்றதா என் ஆராய முனைவது மடமைத்தனம்.

இளையோர்கள் தமக்குத் தமிழ் அறிவு இல்லாவிட்டாலும் தாங்கள் எப்போதும் தமிழர்கள் என்ற உணர்வுடன் தேசியத்திற்கான போராட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும்

பங்கேற்றுக் கொள்வதை நாங்கள் வரவேற்று அவர்களை எங்கள் பாதையில் நீண்ட நோக்குடன் அணைத்துச் செல்வதே எமக்கும் எமது தேசிய விடுதலைக்கும் வழி சமைக்கும்.

இப்படியான கட்டுரைகள் தேசியத்திற்குச் சார்பான இளையோர்கள் அதற்கு எதிரான முடிவுகளை எடுப்பதற்கும் வழிவகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக அவர்களது உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவது அழகல்ல.

இப்படியான கட்டுரைகள் தேசியத்திற்குச் சார்பான இளையோர்கள் அதற்கு எதிரான முடிவுகளை எடுப்பதற்கும் வழிவகுக்கும்.

தன் இனத்தவனுடனேயே ஆங்கிலத்தில் குப்பை கொட்டும் சாக்கடைகள் எல்லாம் தமிழனாய் ஆகிவிட முடியாது. தமிழன் என்ற போர்வைக்குள் இருக்க உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் எல்லாம் தமிழ் அப்பனுக்கு பிறந்தவர்கள் தானா?

:( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்தவனுடனேயே ஆங்கிலத்தில் குப்பை கொட்டும் சாக்கடைகள் எல்லாம் தமிழனாய் ஆகிவிட முடியாது. தமிழன் என்ற போர்வைக்குள் இருக்க உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் எல்லாம் தமிழ் அப்பனுக்கு பிறந்தவர்கள் தானா?

:( :( :(

சில இடங்களில் மிகவும் காழ்ப்புணர்வுடன் எழுதப்பட்டிருக்கின்றது.அந்த இடங்களில் எழுதியவரின் நோக்கம் புரிகின்றது.

புலம்பெயர்ந்த பெற்றோர்.. இருவருக்கும் வேலை.. இவ்வாறான சூழலில் பிள்ளைகளுடன் உரையாடும் நேரம் வாய்ப்பதே குறைவாக இருக்கும்.. பிள்ளைகள் பள்ளிக்கூடம், Day care போன்றவற்ரிலேயே மொழியறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள்..

இதற்கான தீர்வு என்ன என்பதுதான் தெரியவில்லை..

இப்போதைய தீர்வு தொடர்ந்து இட்டித்துக்கொண்டிருப்பதே. அதனால்த்தான் ஒரு தீர்வு வரும். அது தனிமனித தீர்வாக இல்லாமல் இனத்தின் தீர்வாக இருக்கும்.

தமிழீழத்தின் பிரதமர் என சொல்லிக்கொள்கின்ற திரு.உருத்திரகுமாரன் அவர்களே! தமிழீழத்துக்காக ஒன்று கூடுங்கள் என்ற அறைகூவலுக்கு முன்னர் புலம்பெயர் தமிழர்களே உங்களில் தமிழ் தெரியாத ஒவ்வொருவனும் தமிழை படியுங்கள் என்ற அறைகூவலை விடுங்கள். இல்லையென்றால் தமிழே இல்லாத ஒரு தமிழ் நாட்டுக்கு தலைமை தாங்குகின்ற வெட்கக்கேடான வேலையை நீங்கள் செய்வதாகி போய்விடும்

கல்வி அமைச்சின் நோக்கம் தரப்படுத்தபட்ட(அதாவது ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியவிலும் இரு பிள்ளைகள் நாடுகடந்த அரசின் சான்றிதளை வைத்திருந்தால் இரு பிள்ளைகளும் ஒரேதரம்) தமிழை புலம்பெயர் சிற்றார்களுக்கு ஊட்டுவதென்று அறிகிறேன். ஆனால் இவற்றை பாரதூர இழப்புக்கு முன் செயல்படுத்த முடியமா என்பது கேள்வியே.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மொழியைப்பற்றிய நல்ல விடயத்தை இது தொட்டுச்சென்றாலும் பல இடங்களில் இது கட்டுரை அல்ல...குப்பை....பெண்கள் இப்படித்தான் உடைபோடவேண்டும் என்று சொல்ல இவர் யாரு..? ஒருவித மேலாதிக்க மேட்டுக்குடி மனநிலையில் சுத்த முட்டாள்தனமான பிற்போக்குத்தனமான விடயங்களை பேசுகிறது இந்தக்கட்டுரை...

ஆனால் தமிழன் என்ற போர்வையில் இருப்பவன் தமிழீழத்துக்காக போராடுகின்றான் என்றால் அவனுக்கு மொழி அறிவும் தனது மொழி மேல் நேசமும் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவன் தமிழனே கிடையாது, தமிழனே இல்லை என்று ஆகிவிட்ட பிறகு உனக்கு எதற்கடா தனிநாடு?

புலம்பெயர் தமிழர்கள் பலர் தமிழ் பேசாதது எமக்கு கவலையளித்தாலும் சொந்த மொழி பெசத்தேரியாதது அவர்கள் பிழையல்ல. அவர்கள் பெற்றோர்கள் பிழை. வளர்ந்த பின்னர் தமிழன் என்ற உணர்வு வந்த பின் தமிழ் படிக்க நினைக்கும் போது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க யாருமில்லை.

ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளை இணையத்தின் உதவியுடன் படிக்க முடியும். ஆனால் தமிழ் எழுத்துகளோ, உச்சரிப்போ இதிலிருந்து முற்றாக வேறுபட்டவை. இன்னொருவர் உதவியின்றி படிக்க முடியாது.

அதையும் மீறி ஆங்கிலத்தில் தமிழை கற்போம் என்று தேடுவோருக்கு இந்திய தமிழ் தான் இணையத்தில் கிடைக்கிறது. அதுவும் பல பிழைகளுடன். எமது தமிழை காண முடிவதில்லை.

எனினும் தமிழன் என்ற உணர்வு இருந்ததால் தான் தமிழர்களுக்கான போராட்டத்தில் பங்குபற்றுகிறார்கள். அந்த உணர்வு இல்லாதவர்கள் போராட்டத்திற்கு சென்றிருக்க மாட்டார்கள். என்னை பொறுத்தவரை புலம்பெயர் தமிழர்கள் வன்முறை வழியில் செல்லாவிட்டாலும் அகிம்சை வழி போராட்டத்தில் பங்குபற்றினால் அது தமிழீழத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.

இங்கு தனிநாட்டு கோரிக்கை என்பது தாயக தமிழர்களுக்கானது. அவர்கள் இலங்கையில் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். அவர்களால் இலங்கையில் வாழமுடியாது. அவர்களுக்கு தான் தமிழீழம் தேவை. தமிழீழம் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம்.

எனவே இந்த கட்டுரையை பார்த்து குழப்பமடையாமல் புலம்பெயர் தமிழர்கள் தமிழ் பேசுகிறார்களோ இல்லையோ தாயக தமிழர்களுக்காக தொடர்ந்து போராட்டங்களில் பங்குபற்ற வேண்டும்.

ஆனாலும் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு தமிழை, தமிழ் உணர்வை ஊட்டி வளருங்கள்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையாளின் கருத்தில் எனக்கு நிறையவே உடன்பாடு உண்டு.

பெண்கள் இப்படித் தான் உடை போட வேண்டும் என்ற சிந்தனை தொடர்பாக இயக்கம் எந்த சிந்தனையில் உள்ளது என்பதை இங்கே யாரும் கடைப்பிடிக்கவில்லை. இயக்கம் ஜீன்ஸ் போடுவதையோ, அல்லது மேற்கத்தைய பாணி ஆடைகளில் அரைகுறையைத் தான் விரும்பவில்லை. இங்கே சாதாரண தமிழ் நிகழ்வு என்றாலும் அது தான் நடக்கின்றது. அதுகும் ஏதாவது வணிக நிறுவனம் ஒழுங்கு செய்தது என்றால் நிச்சயம் அங்கே எல்லாம் நிச்சயம் உண்டு.

இரு வாரங்களுக்கு முன்பு தமிழர் வணிகம் ஒன்று ஒழுங்கு செய்த நிகழ்வில் கெனிக்கன் தான் விளம்பர அனுசரனை வழங்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். என்ன சோகம் என்றால், மழை காரணமாக யாரும் போகவில்லை

தவிரவும் பெற்றோரே குழந்தைகளுக்கு மது அருந்துவதை ஊக்குவிக்கின்ற நிலமையையும் இங்கே புதியதல்ல. அப்படியிருக்கையில் என்ன தேவைக்குத் தமிழீழத்தை வேண்டுகின்றோம்?

எம் போராட்டம், இத்தனை மாவீர்ரகள் கொண்டிருந்த கொள்கைக்கும், செயற்பாட்டிருக்கும் ஒரு விகிதம் கூட ஒத்துப் போகாமல் தமிழீழம் என்று வாய் கிழியக் கத்தி என்ன பிரியோசம்.

பெற்றோர்கள் வேலைக்குப் போகின்றார்கள் என்பது எல்லாம் நொண்டிச் சாட்டு. நொண்டிச்சாட்டுச் சொல்வது, நம்மவர்களுக்கு அது நிறையவே வரும். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் தனது 4வது வயதில் கனடா வந்தார். தந்தை கிடையாது. வந்தபுதிதில் பிரம்பனில் தான் இருந்தார்கள். தமிழரே அப்பகுதியில் இல்லை. தாய் அங்குள்ள கல்லுாரியில் ஆசிரியராக இணைந்திருந்தார். மகன் பாடசாலையால் வந்த பின்னர் திறப்பு எங்கே இருக்கின்றது என்பதைத் தமிழில் தான் எழுதி வைத்து விட்டுச் செல்வார். அவன் தமிழ் படிக்க முடிந்தால் தான், திறப்பினை அவனால் கண்டு பிடிக்க முடியும். இல்லை எனில் தாய் வரும்வரை வெளியில் இருக்க வேண்டி வரும் என்பதால் அப்பையன் தானாகவே தமிழ்படித்தான். இன்று உயர் பதவியில் இருந்தாலும், என்னை விடத் தமிழில் கவிதை, கட்டுரை என்று எழுதித் தள்ளுவான்.

அது போல பாராளுமன்ற உறுப்பினர் ராதிகாவும் தான் தமிழ்படிக்கப் பட்ட கடினத்தை ஏற்கவே சொல்லியிருக்கின்றார். மற்றும்படி படிக்கவில்லை. முடியவில்லை, அப்பா, அம்மா வேலை, நேரமில்லை, துாரம்,வசதியில்லை என்று சொல்லுகின்ற அனைத்துமே நொண்டிச்சாட்டுக்கள் தான்.

முன்பு இளையோர் அமைப்புக்களில் சேரும்படி பலரைக் கேட்கின்றபோது, பெற்றோர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என நொண்டிச் சாட்டுச் சொல்வார்கள். அதே இளையோர் நைட்கிளப் போவதை ஆதாரத்தோடு கேட்டு, இதற்கும் பெற்றோர் அனுமதி கிடைத்ததா என்று கேட்டால் பதில் சொல்லமாட்டார்கள்.

கனடாவைப் பொறுத்தவரை தமிழ் படிப்பதற்கு வசதிகள் நிறைவே தரப்படுகின்றது. அதை யாருமே பாவிப்பதில்லை.

---------------

Edited by தூயவன்

இந்தக் கட்டுரை தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை வெறுக்கும் ஒருவரால் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது, முதலில் திராவிடம், இப்போது இது, தமிழ் ஈழம் தேவை இல்லை என்ற கருத்தை தமிழ் மக்கள் மத்தியில் விதைக்க இவர்கள் பாடு படுவது தெரிகிறது

இந்தக் கட்டுரையாளின் கருத்தில் எனக்கு நிறையவே உடன்பாடு உண்டு.

பெண்கள் இப்படித் தான் உடை போட வேண்டும் என்ற சிந்தனை தொடர்பாக இயக்கம் எந்த சிந்தனையில் உள்ளது என்பதை இங்கே யாரும் கடைப்பிடிக்கவில்லை. இயக்கம் ஜீன்ஸ் போடுவதையோ, அல்லது மேற்கத்தைய பாணி ஆடைகளில் அரைகுறையைத் தான் விரும்பவில்லை. இங்கே சாதாரண தமிழ் நிகழ்வு என்றாலும் அது தான் நடக்கின்றது. அதுகும் ஏதாவது வணிக நிறுவனம் ஒழுங்கு செய்தது என்றால் நிச்சயம் அங்கே எல்லாம் நிச்சயம் உண்டு.

இரு வாரங்களுக்கு முன்பு தமிழர் வணிகம் ஒன்று ஒழுங்கு செய்த நிகழ்வில் கெனிக்கன் தான் விளம்பர அனுசரனை வழங்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். என்ன சோகம் என்றால், மழை காரணமாக யாரும் போகவில்லை

தவிரவும் பெற்றோரே குழந்தைகளுக்கு மது அருந்துவதை ஊக்குவிக்கின்ற நிலமையையும் இங்கே புதியதல்ல. அப்படியிருக்கையில் என்ன தேவைக்குத் தமிழீழத்தை வேண்டுகின்றோம்?

எம் போராட்டம், இத்தனை மாவீர்ரகள் கொண்டிருந்த கொள்கைக்கும், செயற்பாட்டிருக்கும் ஒரு விகிதம் கூட ஒத்துப் போகாமல் தமிழீழம் என்று வாய் கிழியக் கத்தி என்ன பிரியோசம்.

பெற்றோர்கள் வேலைக்குப் போகின்றார்கள் என்பது எல்லாம் நொண்டிச் சாட்டு. நொண்டிச்சாட்டுச் சொல்வது, நம்மவர்களுக்கு அது நிறையவே வரும். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் தனது 4வது வயதில் கனடா வந்தார். தந்தை கிடையாது. வந்தபுதிதில் பிரம்பனில் தான் இருந்தார்கள். தமிழரே அப்பகுதியில் இல்லை. தாய் அங்குள்ள கல்லுாரியில் ஆசிரியராக இணைந்திருந்தார். மகன் பாடசாலையால் வந்த பின்னர் திறப்பு எங்கே இருக்கின்றது என்பதைத் தமிழில் தான் எழுதி வைத்து விட்டுச் செல்வார். அவன் தமிழ் படிக்க முடிந்தால் தான், திறப்பினை அவனால் கண்டு பிடிக்க முடியும். இல்லை எனில் தாய் வரும்வரை வெளியில் இருக்க வேண்டி வரும் என்பதால் அப்பையன் தானாகவே தமிழ்படித்தான். இன்று உயர் பதவியில் இருந்தாலும், என்னை விடத் தமிழில் கவிதை, கட்டுரை என்று எழுதித் தள்ளுவான்.

அது போல பாராளுமன்ற உறுப்பினர் ராதிகாவும் தான் தமிழ்படிக்கப் பட்ட கடினத்தை ஏற்கவே சொல்லியிருக்கின்றார். மற்றும்படி படிக்கவில்லை. முடியவில்லை, அப்பா, அம்மா வேலை, நேரமில்லை, துாரம்,வசதியில்லை என்று சொல்லுகின்ற அனைத்துமே நொண்டிச்சாட்டுக்கள் தான்.

முன்பு இளையோர் அமைப்புக்களில் சேரும்படி பலரைக் கேட்கின்றபோது, பெற்றோர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என நொண்டிச் சாட்டுச் சொல்வார்கள். அதே இளையோர் நைட்கிளப் போவதை ஆதாரத்தோடு கேட்டு, இதற்கும் பெற்றோர் அனுமதி கிடைத்ததா என்று கேட்டால் பதில் சொல்லமாட்டார்கள்.

கனடாவைப் பொறுத்தவரை தமிழ் படிப்பதற்கு வசதிகள் நிறைவே தரப்படுகின்றது. அதை யாருமே பாவிப்பதில்லை.

---------------

எல்லா விடயத்திலும் தெளிவாக இருக்கும் நீங்கள் கூட இதில் கட்டுரையாளரின் உள்நோக்கம் தெரியாமல் அவரது கருத்துடன் உடன்படுவது கவலை அளிக்கிறது, நீங்கள் அதை சரியாக வாசிக்கவில்லை போல் உள்ளது, க்ட்டுரை முழுவதும் தமிழ் ஈழம் தேவை இல்லை என்ற கருத்தே முன் வைக்கப்படுகிறது, இக்கட்டுரை திராவிட செல்வர்களால் தயாரிக்கப்பட்டு இருக்கலாம்

இங்கு நான் தமிழ் புலமை பற்றியோ அல்லது வெளிநாடுகளில் நம்மவர் கலாச்சாரம் பற்றியோ ஒன்றும் கூறவரவில்லை. ஆனால், மேலே வாத்தியார் கூறிய ஒரு விடயத்தை சற்று அழுத்தி கூறலாம் என்று விரும்புகின்றேன்.

அதாவது விளையாட்டு அணிகளுக்கு வீரர்களை தெரிவு செய்யும்போது அவர்களுக்கு தமிழ் தெரியுமா, தமிழில் எழுதுவார்களா, சரளமாக தமிழில் பேசுவார்களா என நுணுக்கம் பார்த்தால் யதார்த்தத்தில் சிறந்த விளையாட்டு அணியை உருவாக்குவது மிகக்கடினமாக அமையும்.

பாடசாலைக்காலங்களில் உங்கள் அனைவருக்கும் தெரியும், சிறந்த விளையாட்டு வீரர்கள், தட, கள போட்டி சாதனையாளர்கள் கல்வியைப்பொறுத்தளவில் பெருமளவு படானாக இருப்பார்கள். பரியோவான் கல்லூரியில் பல்துறை வீரராக சிறந்து விளங்கி, தலமை மாணவாக தேர்வு செய்யப்பட்டவருக்கு உயர்தரத்தில் ஏ.எல் தேர்வில் நான்கு கொடிக்கம்பங்களே கிடைத்தன.

விளையாட்டில் தாமும் கலந்து கொள்வதற்காக ஊர்ப்பாடசாலையில் பலர் பள்ளிக்கு தட, கள விளையாட்டு போட்டி நடைபெறும் காலங்களிலும், உதைபந்தாட்ட போட்டி காலங்களிலும் மட்டுமே வருவார்கள். படிப்பில் படானாக காணப்படுவார்கள். பெருமளவான சிறந்த வீரர்கள் ஓ.எல் சித்தியடைவதும் கிடையாது.

அதாவது தமிழ் தெரிந்தவர்களே விளையாட்டு அணிகளில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது அணிகளில் சேர்க்கப்பட முடியும் எனும் வாதம் ஊரில் படிக்கக்கூடியவர்களே விளையாட முடியும் என்பதற்கு ஒப்பானது என்று நினைக்கின்றேன்.

முதலில் சிறந்த வீரர்களை உள்ளெடுக்க வேண்டும். இதன்பின்னர் மெது, மெதுவாக அவர்களை தமிழ் வகுப்புக்களில் பங்குபெற ஊக்கம் கொடுத்து தமிழறிவை பெருக்குவதற்கு உதவலாம்.

நாடுகளின் விளையாட்டு அணிகளை பொறுத்தளவில், குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு ஆங்கில பயிற்சி கொடுப்பது வழமையான ஓர் விடயம். இவ்வாறே தமிழ் பயிற்சி கொடுத்து வீரர்களின் தமிழறிவை வளப்படுத்தலாம்.

விளையாட்டு அணிகளுக்கு பொறுப்பான கழகங்கள், சங்கங்கள் வாரத்தில் சில மணித்தியாலங்கள் வீரர்களுக்கு தமிழ் கற்பிப்பதற்கு ஒழுங்கு செய்வதோடு தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கள், சாதனையாளர்கள்... இவை பற்றிய அறிவையும் பெற்றுக்கொள்வதற்கு உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜரோப்பாவில் இருக்கும் பிள்ளைகள் ஓரளவிற்கு நன்றாக கதைப்பார்கள் ஆனால் ஆங்கிலம் பேசும் நாட்டில் இருக்கும் பிள்ளைகள் தமிழ் பேச விரும்புவதில்லை அல்லது பெற்றோர் ஊக்கப்படுத்துவதில்லை...லண்டனில் தற்போது தமிழை ஒரு பாடமாக ஆங்கிலப் பாடசாலைகளில் படிப்பிக்க தொடங்கியுள்ளார்கள்

சரி இன்னொரு வாதமும் இங்கு வரலாம் சில விதண்டா வாதத்துக்கு பிறந்ததுகள் சொல்லலாம் நாங்கள் எப்படி இருந்தாலும் உனக்கென்ன ?தமிழீழத்தை பெற்றுத்தந்தால் சரி தானே என்று. அந்த விளக்கெண்ணைகளிடம் நான் கேட்கப்போவது என்னவென்றால் சரி நீங்கள் இப்படியே இருப்பது போலவே இருந்து கொண்டு தமிழீழத்தை பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த தமிழீழம் எப்படி தெரியுமா இருக்கும்?

ஒரு அந்நியன் தமிழீழம் தொடர்பில் அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவை சொடுக்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அங்கு தகவல்கள் இப்படி இருக்கும்.

பெயர் : தமிழீழம்

சனத்தொகை:xxxxxxxxxxxx

அமைவிடம்:xxxxxx xxxxxx

ஆட்சி மொழிகள்: ஆங்கிலம் , பிரஞ்சு, டச்சு, நோர்வேஜியன், டெனிஸ் , ஜேர்மன்.

கலை மற்றும் கலாசாரம்:

முன்னொரு காலத்தில் இன்று உலகின் சிங்கபூர், மலேசியா , மொரீசியஸ் , இந்தியா ஆகிய நாடுகளிள் வழகில் இருக்கும் தமிழ் என்ர மொழி பேசப்பட்டு வந்தது. கலாசார ஆடைகளாக சேலை, வேட்டி, தாவணி, சல்வார் போன்ற ஆடைகள் இருந்தன. விடுதலை புலிகளின் ராணுவ தோல்விக்கு பின்னர் எழுப்பப்பட்ட தமிழீழத்தின் வீதிகளில் பிகினி மற்றும் அவுத்துவிட்ட ஆடைகளுடன் பெண்கள் அலைவதை சாதாரணமாக காணலாம். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இருக்கக்கூடிய ஒரு உணர்வை தரக்கூடிய ஒரு நாடாக இது இருக்கிறது.

இப்படியான ஒரு தமிழீழத்தை தான் நீங்கள் அமைப்பீர்கள்.இதுவல்ல விடுதலைப்புலிகள் கனவு கண்டது, விடுதலைப்புலிகள் இப்போது உயிரோடு இருப்பார்களேயானால் நீங்கள் தமிழீழம் என்று அடிக்கும் கூத்துக்கு உங்களை காலிடுக்கில் சுடுவார்கள்.

[size=5]இந்த கட்டுரை எழுதியவருக்கு (அபராஜிதன் அண்ணாவுக்கு இல்லை :D) நான் கூற விரும்புவது.[/size]

ஒன்றை சொல்வதென்றால் நீங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் அடுத்தவர்களை ஒருமையில் திட்டுவதையும் அடுத்தவரை ஆபாசமாக சித்தரிப்பதையும் தவிருங்கள்.

இங்கு நாம் எதிர்காலத்தில் ஒரு தமிழீழத்தை பெற்றுக்கொண்டால் என்ன நடக்கும், விக்கிபீடியாவில் தேடினால் என்ன கிடைக்கும் என்று மேலே எழுதி விட்டு அதில் கலை மற்றும் கலாசாரம் என்ற பகுதியில் "விடுதலை புலிகளின் ராணுவ தோல்விக்கு பின்னர் எழுப்பப்பட்ட தமிழீழத்தின் வீதிகளில் பிகினி மற்றும் அவுத்துவிட்ட ஆடைகளுடன் பெண்கள் அலைவதை சாதாரணமாக காணலாம்" என்று எழுதியிருந்தால் என்ன அர்த்தம்? மே 2009 இன் பின்னர் இன்று வரையான காலப்பகுதியில் இப்படி நடந்தது போல் எழுதியிருக்கிறீர்கள்.

தமிழீழ வீதி என்று எதை கற்பனை செய்துள்ளீர்கள்? தமிழீழம் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கே தவிர புலம்பெயர் தேசமல்ல.

ஆனால் புலம்பெயர் தேசத்தில் கூட நீங்கள் கூறியபடி ஒரு மாற்றம் இக்காலப்பகுதியில் வரவில்லை.

சொல்லப்போனால் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்கள் கூட வெட்கத்தில் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு நீச்சலடிக்கிறார்கள் என்றும் அதை பார்த்து வெளிநாட்டவர்கள் பலர் சிரிப்பதுண்டு என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்கும் போது வீதியில் பிகினி உடையுடனும் அவிழ்த்துவிட்ட ஆடைகளுடனும் திரிகிறார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்?

உடையணியும் முறையில் சில மாற்றங்கள் வந்தாலும் நீங்கள் சொல்லும் பிகினி உடையணியுமளவுக்கு சடுதியான மாற்றம் வரவில்லை இப்போதைக்கு வரவும் மாட்டாது.

தமிழீழம் கிடைக்காவிட்டால் தான் எம்மக்கள் புலம்பெயர்ந்து வந்து அவர்கள் கலாச்சாரம், மொழி படிப்படியாக மாறி செல்லும். தமிழீழம் கிடைத்து அங்கு சுதந்திரமாக மக்கள் நடமாட முடிந்தால் அவர்கள் ஏன் புலம்பெயரப்போகிறார்கள்? நிச்சயமாக புலம்பெயரும் மக்கள் தொகை குறைந்து குறைந்து இறுதியில் புலம்பெயரவே மாட்டார்கள்.

எனவே தமிழீழம் கிடைத்தால் என்ன நடக்கும் என்ற உங்கள் கற்பனை முற்றிலும் தவறானது.

விடுதலைப்புலிகள் எதையும் செய்யக்கூடிய நிலையில் இப்பொழுதும் இருந்திருந்தால் தமிழீழம் பற்றிய உங்கள் கற்பனை கதையை பார்த்து உங்களை தான் சுட்டிருப்பார்கள்.

மொழி பற்றிய குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது சரி. ஆனால் அதை நாகரீகமாக சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர இப்படி அநாகரிக வார்த்தைகளுடனும் காழ்ப்புணர்வுடனும் எழுதியிருக்க கூடாது. :wub:

Edited by காதல்

இந்த கட்டுரை வெறுமனே பிழை பிடிப்பதற்காக எழுதப்பட்ட ஒரு கட்டுரை

எனது மகனுக்கு (மகளுக்கும் கூட ) தமிழ் மிகவும் மிகவும் சரளமாக வரும். ஆனால் அவன் தன் நண்பர்களுடன் உரையாடும் போது ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றான். அவன் நாளைக்கு எந்த இனமாக அடையாளப் படுத்தப்படுவான் ? அத்துடன் சில கேள்விகளும் கருத்துகளும் எனக்குள் எழுகின்றது

1. இனி வரும் புலம்பெயர் தலைமுறை தமிழில் தொடர்ந்து உரையாடுவது அருகி விடும் போது, அவர்கள் தமிழர்களாக கணிக்கப்பட மாட்டார்களா?

2. தமிழ் என்ற இனம் தமிழ் தவிர்ந்த ஏனைய மொழியை பேசும் இனமாக உருவாகி வருகின்றது, இந்த புதிய மாற்றம் தமிழர் என்ற இனம் பற்றிய புதிய வரையறுப்புகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தேவையை ஏற்படுத்துமா?

3. தனக்கு தெரியாத / உணர்வு பூர்வமான ஓர்மத்தை தர முடியாதளவுக்கு புரிதல் இன்றிய ஒரு மொழியை பேசி விளையாட்டு ஒன்றில் சபதம் எடுப்பதால் என்ன பலனை அவர்கள் அடைய முடியும் என கட்டுரையாளர் எதிர்பார்க்கின்றார்? அப்படி அவர்கள் பேசி இருந்தா அது ஒப்புக்கு பேசியது போலாகி தமிழ் மொழிக்கு செய்யும் அவமானமாக ஆகி விடாதா?

4. ஒரு இனமாக அணி திரண்டு உலகிற்கு பலத்தை காட்டும் யூதர்கள் இன்னமும் தம் யூத மொழியையா பேசுகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை பேசுவதற்கோ கற்பதற்க்கோ பெற்றோர்தான் ஊக்கப்படுத்தவேண்டும் அதைவிடுத்து தமது பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதை அழகுபத்து என்ர பிள்ளைக்கு தமிழ் வருகுதில்லை என்று பெருமை பேசினால் பிள்ளைகள் தமிழ் எப்படி பேசுவார்கள் ?

எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பிள்ளைகள் தாயகத்தில் இருந்து லண்டனுக்கு 99 இல் வந்தார்கள் இருவரும் பெண் பிள்ளைகள் மூத்தவரின் வயசு 8 ம் மற்றையவரின் வயசு 6 ஆகவும் இருந்தது அவர்கள் அப்போது நன்றாக தமிழ் பேசுவார்கள் நானும் இங்கு தனியே இருந்ததினால் அவர்களுடன் அவர்களின் அந்த அழகு தமிழை கேட்பதற்காக அடிக்கடி பேசுவதுண்டு பின்னர் நான் இருக்கும் இடத்தில் பாடசாலைகள் சரியில்லை என்று வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்கள் இரண்டுமாதங்களுக்கு முன்னர் பார்த்த போது 6 வயசாக பாத்த அந்த பிள்ளை நான் பேசும்போது தமிழில் பேசவில்லை நான் தமிழில் கேக்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் கூறுகின்றார் அப்போது நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் தாயகத்தில் இருந்து வரும்போது தமிழில் பேசினீர்கள் இப்போது என்னாச்சு என்று கேட்டதற்கு( I Forgot how to Speak Tamil )அவர் தமிழ் கதைப்பதை மறந்துவிட்டாராம் !

இதில அவரின் தந்தை முன்பு என்னுடன் பேசும்போது தாங்கள் தமிழ் மேல் பற்று கொண்டவர்கள் பிள்ளைகளுக்கும் தமிழ் கண்டிப்பாக சொல்லி கொடுக்கவேண்டும் என்று சொல்லுவார் அவரின் மகள் ஏன் தமிழ் பேசுகின்றார் இல்லை என்பது எனக்கு புரியாத புதிராக உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிவடைந்துள்ளது நிழலி

நானும் வளர்ந்த பிள்ளைகளை வைத்திருப்பவன்.

இப்படி என்னைப்பேட்டி கேட்டால் ஓடி ஒளித்துவிடுவேன்.

அந்தவகையில் தமிழில் தடுமாற்றம் உள்ள பிள்ளைகள் தமக்கு தெரிந்த மொழிகளிலேயே பேட்டி கொடுக்க முனைவார்கள். இது தவிர்க்கமுடியாதது. இல்லையென்றால் வெட்கமும் பதட்டமும் அவர்களை விலகிச்செல்ல வைத்துவிடும்.

அத்துடன் பேட்டி எடுத்தவர்கள் தமிழர்களா? வேற்று மொழிக்காறரா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

கயானத்தமிழர்களின் நிலை என்னவென்று பார்த்தீர்கள் தானே. அவர்கள் கனடாவிலும் கண்டிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் தங்களைத் தமிழர்கள் என அடையாளப்படுத்தியதில்லை. விரு;பியதுமில்லை. உங்களுடைய சுதந்திரத்தில் இது பற்றிக் கதைத்தால் தலையிடுவதாக் கூட நீங்கள் எண்ணக்கூடும். நாளை எம் வம்சமும் அந்த நிலையைத் தான் எட்டும் என்பதுநிலையாக இருக்கப் போகின்றது.

மற்றும்படி இந்தச் சமூதாயத்தோடு நாங்கள் அள்ளுப்பட்டுப் போவதற்கும் எமக்குச் சுதந்திரம் உள்ளது.

உதைப்பந்தாட்ட நிகழ்வுக்குச் சென்றவர்கள், தமிழர்கள். அவர்கள் தொலைக்காட்சிகளில் உரையாடுவதும் தமிழர்களுக்காக. பிறகேன் ஆங்கிலம் பாவிக்க வேண்டும்.

---------------Dash அவர்களுக்கு

இந்தக் கட்டுரை தமிழீழம் வேண்டாம் என்று எங்கே சொல்கின்றது? தமிழே பேசத் தெரியாத, தமிழீழப் போராட்டம் தொடங்கப்பட்டதின் நோக்கத்தினையையோ, வழிகாட்டல்களையோ கடைப்பிடிக்காத ஆட்களுக்கு ஏன் தமிழீழம் என்ற நோக்கத்தில் தான் எழுதப்பட்ட கட்டுரை என நினைக்கின்றேன். கட்டுரைாரின் வேறு கட்டுரைகளும் தமிழீழத்தைக் குறை சொல்லியிருந்தால் நீங்கள் சொல்வது சரி எனக் கொள்ளலாம்.

---------------காதலுக்கு

பெண்கள் நீச்சல் உடையில் இல்லாமல் ஜீன்ஸ் போட்டுக் குளிப்பதைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தார்கள் என்பது என்னவகையில் சரி என்பது தெரியாது. ஆனால் மேற்கு நாடுகளில், ஆண்களும் சட்டை அணிந்து குளிப்பதாக இருந்தால் அதைச் சிறுவயதிலும் சரி, வயது வந்தபிறகும் சரி தடை செய்ய முடியாது என்பது சட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது விளையாட்டு அணிகளுக்கு வீரர்களை தெரிவு செய்யும்போது அவர்களுக்கு தமிழ் தெரியுமா, தமிழில் எழுதுவார்களா, சரளமாக தமிழில் பேசுவார்களா என நுணுக்கம் பார்த்தால் யதார்த்தத்தில் சிறந்த விளையாட்டு அணியை உருவாக்குவது மிகக்கடினமாக அமையும்./ஃஃஃ

கனடாவில் விளையாட்டுக்கழகங்கள் பல ஆண்டுகாலமாக இயங்குகின்றன. கனடியத் தமிழர் விளையாட்டுக்கழகம் பல ஆண்குளாகத் தமிழர் விளையா்டு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துகின்றது. சென்றவருடத்தில் இருந்து(?) கிளித்தட்டினையும் ஒரு தமிழர் விளையாட்டாக நடத்த ஆரம்பித்திருக்கின்றது. அதற்காக அங்கே தமிழர் பற்றிய உணர்விற்காக யாரும் சிந்திக்கவுமில்லை. கதைக்கவுமில்லை.

---------------காதலுக்கு

பெண்கள் நீச்சல் உடையில் இல்லாமல் ஜீன்ஸ் போட்டுக் குளிப்பதைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தார்கள் என்பது என்னவகையில் சரி என்பது தெரியாது. ஆனால் மேற்கு நாடுகளில், ஆண்களும் சட்டை அணிந்து குளிப்பதாக இருந்தால் அதைச் சிறுவயதிலும் சரி, வயது வந்தபிறகும் சரி தடை செய்ய முடியாது என்பது சட்டம்.

தூயவன் அண்ணா, நான் மற்றவர்கள் என்று குறிப்பிடவில்லை. வெளிநாட்டவர்கள் என்று குறிப்பிட்டேன். அதிலும் வெள்ளைக்காரர்கள், ஆபிரிக்க நாட்டவர்கள் போன்றவர்களை குறிப்பிட்டேன்.

இங்கு ஜீன்ஸ் போட்டு நீச்சலடிப்பது வழமை அல்ல என்பதால் அவர்களுக்கு தமிழ் பெண்கள் அப்படி உடை அணிவது சிரிப்பாக உள்ளது. அவர்கள் தம்மை வித்தியாசமாக பார்ப்பதையோ சிரிப்பதையோ பொருட்படுத்தாமல் ஜீன்ஸ் போட்டு நீச்சலடிக்கும் தமிழ் பெண்கள் வீதியில் பிகினி உடை அணிந்து செல்லமாட்டார்கள் என்பதையே நான் குறிப்பிட்டேன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.