Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசின் ஆதரவில் நியூயோர்க் விளையாட்டுப் போட்டி

Featured Replies

  • Replies 120
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கீழ் சுட்டியை அழுத்தி பதிந்து கொள்ளலாம்

https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dFFKcFFTa1lGNU5udEdjdnNubzF2Z1E6MQ#gid=0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் செய்யப்படவேண்டியவிடயம். நடந்துகொண்டிருக்கி்றதுக்க தடியோட்டமல் யார் தமிழருக்குச்செய்தாலும் ஆதரவு நிட்சயம் கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசின் ஆதரவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி ஆடி 8 ம்

திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால் தமிழர்கள் எல்லோரும் இந்நாளில்

ஒன்று கூடுமாறு போட்டி ஒழுங்கமைப்பாளர்களால் வேண்டப்படுகிறீர்கள்.

இந்த போட்டியை திறம்பட நடாத்த நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கும்

தெரியப்படுத்தவும்

கணனி மூலம் பதிவு செய்யக் கூடியவர்கள் கீழ்வரும் சுட்டியை அழுத்தி பதியவும்.

https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dFFKcFFTa1lGNU5udEdjdnNubzF2Z1E6MQ#gid=0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஆக்கள் டபுள் அக்டிங், triple அக்டிங் செய்வதால் வரும் வினை. வேறு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை///

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரண்டு நாட்களில்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும்

போன மாதம் புனர்வாழ்வுக்கழகம் ஒரு உதைபந்தாட்ட நிகழ்வை நாடு கடந்த அரசுடன் சேர்ந்து செய்தார்கள்

வானொலிகளில் இன்னும் உதைபந்து ஓடித்திரியுது.

ஆனால் எனக்குப்புரியாதது ஒன்று தான்

வேறு அலுவல்கள் ஒன்றும்இல்லையே செய்ய.

ஒருவன் செய்வதைத்தான் நாமும் செய்யவேண்டுமா?

மன்னிப்பார்களா மாவீர செல்வங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும்

போன மாதம் புனர்வாழ்வுக்கழகம் ஒரு உதைபந்தாட்ட நிகழ்வை நாடு கடந்த அரசுடன் சேர்ந்து செய்தார்கள்

வானொலிகளில் இன்னும் உதைபந்து ஓடித்திரியுது.

ஆனால் எனக்குப்புரியாதது ஒன்று தான்

வேறு அலுவல்கள் ஒன்றும்இல்லையே செய்ய.

ஒருவன் செய்வதைத்தான் நாமும் செய்யவேண்டுமா?

மன்னிப்பார்களா மாவீர செல்வங்கள்.

இப்பவாவது கொஞ்சம் புரிய தொடங்குவதையிட்டு மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும்

போன மாதம் புனர்வாழ்வுக்கழகம் ஒரு உதைபந்தாட்ட நிகழ்வை நாடு கடந்த அரசுடன் சேர்ந்து செய்தார்கள்

வானொலிகளில் இன்னும் உதைபந்து ஓடித்திரியுது.

ஆனால் எனக்குப்புரியாதது ஒன்று தான்

வேறு அலுவல்கள் ஒன்றும்இல்லையே செய்ய.

ஒருவன் செய்வதைத்தான் நாமும் செய்யவேண்டுமா?

மன்னிப்பார்களா மாவீர செல்வங்கள்.

ஏன் விசுகு அண்ணா.. தாயகத்திலும்.. விளையாட்டுத் துறை.. இருந்தது தானே. போர்க்காலத்திலும்.. விடுதலைப்புலிகளால் விளையாட்டுப் போட்டிக்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டது தானே..!

நாடு கடந்த தமிழீழ அரசு.. ஒவ்வொரு துறை அமைச்சகத்தைக் கொண்டுள்ளது. அதன் கீழ்.. அதன் செயற்பாடுகள்.. மக்களை நோக்கி பரவலடைவதில் என்ன தவறு கண்டீர்கள்..???!

மாவீரர்கள்.. மக்களுக்காகவே தான் மாண்டார்கள்..! மக்களை அசைலம் அடிக்கச் சொல்லி இல்லைத் தானே. அங்கெல்லாம் மன்னித்த மாவீரர்கள்.. இதில்..?????????????????! :(:rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் அன்று நடந்த விளையாட்டுப் போட்டிகளுக்கும்

புலம்பெயர்ந்த நாடுகளில் இன்று நடைபெறும் விளையாட்டுப்

போட்டிகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்களை என்னால்

உணரக்கூடியதாக இருக்கின்றது.

அவர் அவர்கள் தங்களுக்கு முக்கியமாக உள்ளவற்றை

முன்னுரிமை கொடுத்து செயய வேண்டும்.

இல்லாவிட்டால் எல்லாம் விளையாட்டாகவே முடிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சாரத்திற்காகச் செய்யவேண்டுமானால், அனைவருக்குமான போட்டி என்று அறிவித்து முதல் பரிசாக ஒரு $25,000 அறிவித்தால், வேற்ரு இனத்தவரும் வருவார்கள்..! அவர்களுக்கு தமிழீழப் பதக்கம் அணிவித்துவிட்டால் போயிற்று..! :D

உருத்திரகுமாரனும் ஓடுகிறரா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு ஆரம்பித்து, இரண்டு கிழமைக்கு மேலாகியும்....

நெல்லையனை இந்தப் பக்கம் காணேல்லையே... என்று நேற்றுத்தான் யோசித்தேன்.

ஆள் வந்திட்டார். :D

உருத்திரகுமாரனும் ஓடுகிறரா? :icon_mrgreen:

அடுத்த தேர்தல் வர எல்லாம் தெரிந்துவிடும்தானே..

அதற்குள் அவசரப்பட்டால் எப்படி..??

அதுசரி நீங்கள் அவரை கலைபதிலதான் குறியாய் இருக்கிறியள் போல.....

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமாரனும் ஓடுகிறரா? :icon_mrgreen:

நீங்கள் எப்போதுதான் அவரை உட்கார்ந்து இருக்க விட்டீர்கள்.

நீங்கள் தொடர்தும் துரத்தினால் ஓடுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது கொஞ்சம் புரிய தொடங்குவதையிட்டு மகிழ்ச்சி

இந்த விடயத்தில் ரொம்ப அடிபட்டு நொந்தவர் தாங்கள்.

எனக்கு இன்னும் நம்பிக்கையிருக்கு.

தற்போதைக்கு ஒருவருடைய விடயத்தில் மற்றவர் தலையிடாமல் மக்களுக்கான வேலையை செய்யணும் என்பது தான் எனது விருப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விசுகு அண்ணா.. தாயகத்திலும்.. விளையாட்டுத் துறை.. இருந்தது தானே. போர்க்காலத்திலும்.. விடுதலைப்புலிகளால் விளையாட்டுப் போட்டிக்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டது தானே..!

நாடு கடந்த தமிழீழ அரசு.. ஒவ்வொரு துறை அமைச்சகத்தைக் கொண்டுள்ளது. அதன் கீழ்.. அதன் செயற்பாடுகள்.. மக்களை நோக்கி பரவலடைவதில் என்ன தவறு கண்டீர்கள்..???!

மாவீரர்கள்.. மக்களுக்காகவே தான் மாண்டார்கள்..! மக்களை அசைலம் அடிக்கச் சொல்லி இல்லைத் தானே. அங்கெல்லாம் மன்னித்த மாவீரர்கள்.. இதில்..?????????????????! :(:rolleyes::icon_idea:

இது பற்றி அதிகம் பேசணும் நெடுக்கு

ஆனால் எமது பல்லைக்குத்தி நாமே மணப்பது போன்றது.

நாடு கடந்த அரசை முழுமையாக ஆதரிப்பவன் என்ற வகையில் எனக்கு அவர்களுடான முரண்பாடு இதில் மட்டுமே.

அவர்களை நாம் தேர்ந்தெடுத்தது ஐனநாயக வழியில் சர்வதேச அளவில் தாயக மக்களால் செய்ய முடியாத தமிழ் மக்களுக்கான ஐனநாயக அரசியலை செய்வதற்கே ஒழிய

ஏற்கனவே கட்டுமானங்களுடன் செயற்படும்

விளையாட்டு கழகங்களை

தொண்டர் நிறுவனங்களை

பாடசாலைகளை நிர்வகிக்க

மாவீரர் தினம் செய்ய

யாகம் செய்ய...............???

இவர்களை ஏற்பாடு செய்தோம்????

இதனால் அடிப்படைத்தொண்டர்கள் முதல் மக்கள்வரை எவ்வளவு குளறுபடிகள் தெரியுமா?

எனதுது கேள்வி இதைத்தவீர் வேறு எமதுவும் செய்ய முடியாதா இவர்களால்??

அல்லது எதுவும் எமது மக்களுக்கு தற்போது செய்ய தேவை இல்லையா?

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு

இங்கு உலகத் தமிழர் இயக்கத்தால் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டி கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்த் தான் நாடு கடந்த அரசினால் மீண்டும் தொடக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு

இங்கு உலகத் தமிழர் இயக்கத்தால் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டி கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்த் தான் நாடு கடந்த அரசினால் மீண்டும் தொடக்கப்பட்டது.

அப்படியானால் சரியே

நான் பிரான்சில் மற்றும் புலம் பெயர்ந்த சில நாடுககளில் நடப்பது பற்றியே எழுதுகின்றேன்.

ஏட்டிக்கு போட்டியாக

ஒருவர் வழமையாக செய்வதை தட்டிப்பறிப்பதையும்

தொடர்ந்து நடந்து வரும் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்வதையுமே நான் கண்டிக்கின்றேன். அவர்களுடன் தொடர்பில் உள்ளேன். இதையே நேரிலும் சொல்லியுள்ளேன்.

நாடு கடந்த அரசிடமிருந்து

இவற்றிற்குகு அப்பால்

தாயக தமிழரது ஐனநாயக அரரசியல் சார்ந்த செய்ற்பாடுகளை எதிர்பபார்க்கின்றேன். அதுவே இன்றைய முதற்தேவை. அது இவர்களால் மட்டுமே முடியும்.

உருத்திரகுமாரன் என்னென்ன விளையாட்டுகளில் எல்லாம் பங்கு பற்றக்கூடும்???????

1) 5 வயய பிள்ளைகளுக்கு போட்டியாக பழம் பிக் பண்ணப்போகிறார்?

2) 7 வயது பிள்ளைகளுடன் போட்டிக்கு நின்ற இடத்தில் யம்ப் பண்ணப்போகிறாரா?

3) ....??

...

... அறிய ஆவலாக இருக்கிறது??????

...... ............ ............. ................. .......................

.... சென்ற வருடம் இங்கிலாந்தில் மில்ரன் கெயின்ஸ் எனும் இடத்தில் சிறுவர்களுக்காக நடைபெற்ற விளையாட்டு விழாவை தலைமைச்செயலக வீராதி வீரர்கள் சென்று தூசன வார்த்தைகளால் அர்ச்சனை செய்து குழப்பியது யாவரும் அறிந்ததே! அவ்வாறு இங்கு நடைபெறாது ... ஏனெனில் நாகதஅ வை இயக்குவதே தலைமைச்செயலகத்தார்கள் தானே!!!!!!!!! ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் விசுகு அண்ணா.. தாயகத்திலும்.. விளையாட்டுத் துறை.. இருந்தது தானே. போர்க்காலத்திலும்.. விடுதலைப்புலிகளால் விளையாட்டுப் போட்டிக்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டது தானே..!

நாடு கடந்த தமிழீழ அரசு.. ஒவ்வொரு துறை அமைச்சகத்தைக் கொண்டுள்ளது. அதன் கீழ்.. அதன் செயற்பாடுகள்.. மக்களை நோக்கி பரவலடைவதில் என்ன தவறு கண்டீர்கள்..???!

மாவீரர்கள்.. மக்களுக்காகவே தான் மாண்டார்கள்..! மக்களை அசைலம் அடிக்கச் சொல்லி இல்லைத் தானே. அங்கெல்லாம் மன்னித்த மாவீரர்கள்.. இதில்..?????????????????! :(:rolleyes::icon_idea:

நெடுக்ஸ் அண்ணா,

தாயகத்தில் விடுதலைப்புலிகள் போர்க்காலத்தில் நடத்திய விளையாட்டுப்போட்டிகளுக்கும்,இங்கு நடக்கும் விளையாட்டுக்களுக்கும் இருக்கிற அடிப்படை வித்தியாசம் கூடவா தெரியவில்லை?

மக்களை போராட்டத்தின் பாதையிலிருந்து மாறாமல் வைத்திருக்கத்தான் புலிகள் போட்டிகளை நடாத்தினார்கள்,ஊக்குவித்தார்களே தவிர இங்குள்ளது போல சமர் ஹாலிடேக்கு போட்டி நடத்தி மனிசி,பிள்ளை குட்டியளோடை போய் பிகர்பார்த்து, பியர் அடிச்சு,கிறில் போட்டு டைம் பாஸ் பண்ணிட்டு வர அவர்கள் நடத்தவில்லையே?

அது அவர்களுடைய பிரச்சார உத்தி.

தலைவரையோ,மூத்த தளபதிகளையோ நேரில் பார்ப்பதென்பது பலரின் கனவு இப்படி போட்டி நிகழ்ச்சிகள் நடத்தி தலைவர்,தளபதிகள் பரிசளிப்பதனூடு இளைஞர்,யுவதிகளை தமிழீழத்தின் பால் உழைக்க வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்ததே தவிர களியாட்டமல்ல.

ஒரு பிஸ்டலை,ஏ.கே யை தொட்டு பார்க்கும் போதே இனம்புரியாத உணர்வுகள் தோன்றி மயிர்க்கூச்செறியும். கிளிநொச்சியில் நடந்த ஆயுதக்கண்காட்சியில் பலூன் கட்டி ஒரு குண்டு சுடுவதற்கு 5ரூபா வாங்கி சுடவிட்டார்கள்.

இதில் ஒரு சிலராவது இயக்கத்தில் இணைந்தார்கள். அவர்கள் எல்லாத்தையும் செய்தார்கள் இயக்கத்துக்கும் நாட்டுக்குமாய்.. நாம்??????????????????????

ஊடக அடக்குமுறைக்கு எதிராய் மனிதவுரிமை அமைப்புகள்,வெளிநாட்டு தூதுவராலயங்கள் குரல் கொடுக்க, இராணுவப்பயிற்சிக்கெதிராக தமிழ்நாட்டு தலைவர்கள்,உணர்வாளர்கள் கண்டனம்,போராட்டம் செய்ய..

அதை விடுவம்,

சிறையில் அடித்தே கொல்லப்பட்ட தமிழனுக்காய்,சொந்த சகோதர்களின் சண்டையில் குறுக்கிட்டு அடித்துக்கொன்ற சிங்கள இராணுவக்காடையர்களுக்கு எதிராக ,தாயகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக ஒரு கண்டனத்தையேனும் இவர்கள் பதிவு செய்தார்களா? இதுவா இப்ப முக்கியம்? காறித்துப்பாதா சனம்?????? ^_^:wub:

அசைலம் அடிச்சாக்களுக்குத்தான் அறிவில்லை([size=2]அப்படி வச்சுக்கொள்ளுங்கோ)[/size]

படிச்ச ஆக்கள் நீங்கள் கூடவா சொல்லக்கூடாது? :wub: :wub: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. மாவீரர் தினத்தை ஊரில் அனுஷ்டித்த வடிவத்திற்கும்.. இங்கு கொண்டாடப்படும் வடிவத்திற்கும் இடையில் வேறுபாடுண்டு. ஊர் நிலவரம் வேறானது. இங்கு இளையவர்களை கவர.. இணைய.. பங்கு கொள்ளச் செய்ய.. சில மாற்றங்கள் அவசியமாக உள்ளதுடன்.. எங்கட சனம்.. கூத்துக்காட்டத்தான் பல நிகழ்ச்சிகளுக்கே வருகிறது.

இது.. எங்கட சனத்தின் மனநிலை சார்ந்தது அன்றி.. ஒழுங்கமைப்பாளர்களில் தவறிருப்பதாக எனக்குப் படல்ல. லண்டனில்.. சில விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துபவர்களோடு கதைக்க 2008/10 வாக்கில் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. வெண்புறா அமைப்பினர் ஒழுங்குபடுத்திய நிகழ்வு ஒன்றிலும் அவர்களோடு உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது.. நானும்.. இதே ஆதங்கத்தை வெளியிட்ட போது.. மக்கள் எதை எங்கு விரும்புகிறார்களோ.. அதைக் கொடுத்தால் தான் அவர்களை வரவைக்க முடியும் என்ற ஒரு கருத்து அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய அளவில் தான் மக்களின் செயற்பாடுகளும் இருந்தன. இப்படியான நிலையில்.. ஒழுங்கமைப்பாளர்களை குறை சொல்லிப் பயனில்லை. ஒன்றை ஒழுங்கமைக்க அவர்கள் படுறபாடு.. எவ்வளவு கஸ்டம் என்பதை அவர்களோடு இணைந்திருந்து பார்த்த போது தெரிந்தது..!

அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் அமைந்ததே எனது கருத்து. மற்றும்படி.. புலம்பெயர் நாடுகளில்.. மாவீரர் தினத்தை கோவில் திருவிழாப் போல கொண்டாடுவதில் இருந்து விளையாட்டு நிகழ்வுகளை களியாட்டமாக்குவது வரை எனக்கும் உடன்பாடில்லை தான்...! ஆனால் பெரும்பாலான மக்கள்.. அதையே விரும்புகின்றனர். அதனை உடனடியாக மாற்றவும் முடியாது. படிப்படியாகத் தான் மாற்ற முடியும். அதனை ஏற்பாட்டாளர்கள்.. எதிர்காலத்தில் செய்ய முனைவார்கள் என்றே நினைக்கிறேன்.

ஏன் 2009 எமது போராட்டங்களில்..புலம்பெயர் நாடுகளில் பிறந்த பல இளையோர்கள் (எல்லோரும் அல்ல).. fun க்காக கலந்து கொண்டிருந்தனர். அதனை தட்டிக் கேட்க முடியாதிருந்தது. காரணம்.. அந்த அவர்கள் உணர்ந்த fun ஆட்களை கவர உதவியது என்பதால்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேட்டதற்கு நீங்கள் ஏதும் பதில் சொல்லவில்லையே நெடுக்ஸ் அண்ணா?

வழமையான மழுப்பலாக எல்லோ இருக்கு? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப் போனால் இப்படி எடுப்புக்களே தேவை இல்லை..இன்று வரைக்கும் ஊரில் நடந்து கொண்டு இருப்பது அறிந்து கொண்டே இருக்கிறம்..இப்படி ஏற்பாடுகளை செய்பவர்கள் காதுகளுக்கும் நடக்கும் துக்க செய்திகள் போய் சேரும் என்று நினைக்கிறன்.அல்லது ஒன்iயும் பார்க்க,கே;க,பேசக் கூடாது என்று கண்ணை,காதை,வாயைப் மூடிக் கொண்டு இருந்து தான் இப்படி பட்ட நிகழ்வுகளை எல்லாம் நடத்துகீனமோ தெரிய இல்லை.தமிழன் இறக்கும் போதும் அடுத்தவன் கால் சப்பாத்தை நக்கி உயிர் பிச்சை கேட்டும் முடியாத கட்டத்தில் உயிர் துறந்து கிடப்பது கூட இவர்களின் உணர்வுகளைத் தூண்ட இல்லையா..இந்த ஏற்பாடுகளை செய்பவர்களும் தமிழர்கள் தானே..இவர்களின் உணர்வுகள் எங்கே போனது.....???

எல்லாவற்றையும் தங்களுக்கும்,தங்களுக்கு சார்பானவர்களுக்காகவுமே செய்யிறார்களே ஒளிய உண்மையாக பாதிக்கபட்ட இனத்திற்காக ஏதாவது நடக்கிறதா என்றால் அது கேள்விக் குறியாகவே இருக்கிறது.....யாகத்தில் இருந்து அனைத்துமே ஒரு வேண்டப்படாத நிழக்வுகளாகத் தான் நடந்து கொண்டு இருக்கிறது..ஏன் இவற்குக்கு செலவளிக்கும் பணம் என்ன வானத்தில் இருந்து கொட்டுதா..யாகம் செய்யும் போது ஒரு ஆலயதில் இருந்தே நான்கிற்கும் மேற்பட்ட அந்தணப் பெருமக்கள் வந்திருந்தார்களே அவர்கள் எல்லாம் ருத்திர தாண்டவத்திற்கு ஓசியில மந்திரம் ஓதிட்டு போக வந்தார்களா...பத்துக்கும் மேற்பட்ட அந்தணர்கள் இருந்தார்கள் இவர்கள் அனைவருமே ஒரு சதமுமே வாங்கமால் தான் ருத்திர யாகம் செய்துட்டு போனார்களா..இந்த நிமிசம் வரைக்கும் ஊரில் எத்தனை உயிர் பசியால் வாடி,வதங்கி உயிர் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..அப்படி இருக்கையில் தான் இந்த கேளிக்கை கூத்துக்கள் எல்லாம் செய்யிறார்கள்..எந்தக் கூத்தாக இருந்தாலும் வேறை நாடுகளில் இருந்து யாரையாவது அழைத்து வைச்சு கூத்தும்,கும்மாளமும் தானே நடக்கிறது..நான் நேரடியாக எந்த நிகழ்வுகளுக்கும் இதுவகை;கும் போனவள் இல்லை இனிமேலும் போகும் எண்ணம் இல்லை..ஆனால் வீட்டு தொலைக்காட்சிகளில் கண்ணுறாவி நிகழ்வுகளை பார்க்க கூடியதாக இருக்கும்....எல்லாம் தங்களுக்கு பெயர் தேடிக் கொள்ளும் விதமான நிகழ்வுகள் தான்..அப்படி இல்லாட்டி விடுதலைப் பாடல்களை கொச்சைப்படுத்தும் விதமான நடன நிகழ்வுகள்.அர்த்தம் இல்லாத திரைப்படப் பாடல்களுக்கு குத்தாட்டம் போடுவது..இதைத் தான் ஊரிலும் செய்தார்களா இல்iயே....

ஊரில் உண்மையாக சில நிகழ்வுகளை உருக்கத்தோடு,உணர்வுபூர்மாக செய்தார்கள் அவ்வாறே அங்குள்ள மக்களும் தங்கள் பங்களிப்புக்களை செய்தார்கள்...ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படி இல்லை நேரத்தை செலவளிப்பதற்காகவும்,சுய தம்பட்டம் அடிப்பதும்,படங்களுக்கு வீடியோக்களுக்கு முகம் காட்டுவதிலும் தான் முன்னணி வகித்து நிக்கிறார்கள்..பதின் எட்டு ஆண்டுகளாக புலம் பெயர் மண்ணில் என்ன,என்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கிறது என்று விலாவாரியப் பார்த்து கொண்டு இருக்க கூடியதாக இருக்கிறது....என்ன செய்வது உங்களோடு ஒருத்தியாக நானும் கண்ணையும்,வாயையும்,காதையும் மூடிட்டு இருக்க வேண்டிய நிலை தான்..

இறுதியாக ஒன்றை சொல்லிட்டு போறன்..இதே அமெரிக்க மண்ணின் மைந்தனாக இருந்த ஜோன் எப்.கெனடி அவர்கள் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது சொல்லி சென்றாராம்..நாடு உனக்கு என்ன செய்தது என்று யோசிக்காதே..நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று யோசி..என்று சொல்லி சென்றாராம்...ஆகவே நாடு எங்களுக்கு ஒன்றும் செய்யத் தேவை இல்லை..நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொரு தமிழ்மகளும்,தமிழ்மகனும் நித்தமும் நினைத்து வாழ்வோமாக இருந்தால் எங்கள் மண் இப்படி போகாது,எங்கள் உடன் பிறப்புக்கள் நாளுக்கு நாள் இறப்பை சந்திக்க மாட்டார்கள்...நன்றி.

இந்தப் பகுதிக்கு என் கருத்து வேண்டப்படாத ஒன்றாக இருந்தால் நிர்வாகத்தினருக்கு என் கருத்தை நீக்கி கொள்வதற்கு பூரண அனுமதி அளிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டதற்கு நீங்கள் ஏதும் பதில் சொல்லவில்லையே நெடுக்ஸ் அண்ணா?

வழமையான மழுப்பலாக எல்லோ இருக்கு? :unsure:

தலைப்புக்குள் பதில் அளித்துள்ளேன். அதுக்குள்ள வெளில போய் பதில் அளிக்கனுன்னா...

புலம்பெயர் தேசங்களில் இருந்து ஊடகங்களுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதிலும்.. தாயக நிலவரங்களை நேரடியாக சர்வதேச உயர் மட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வது தான் சிறந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு அதைச் செய்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு..! அதை அவர்கள் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக முன்னெடுப்பார்கள் என்றே நான் நம்புகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வாக்களித்தவன் என்ற வகையில் எனக்கு அவர்களிடம் இன்னும் அதே நம்பிக்கை உண்டு.

அவர்கள் சில இடர்களை.. ஏமாற்றுப் பேர்வழிகளை சரிக்கட்டி நடக்க வேண்டி இருந்தாலும்.. அவர்களில் முதன்மை உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் core strategy இல் தெளிவாக இருப்பதாகவே உணர்கிறேன்.

தாயகத்தில் நடக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு.. மக்கள் பிரதிநிதிகளைச் சாரும். வவுனியா சிறை சம்பவத்தில்.. இளைஞனின் மரணம் வரை.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை ஏன் சுட்டிக்காட்டவில்லை. அந்த விவகாரத்தின் பின்னணியில் ஈபிடிபி சார்பு கொழும்பு வாழ் தமிழ் வழக்கறிஞர் சூசை தாசனின் (இவர் சுமந்திரனுக்கும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது) பங்கு பற்றி.. அந்த இளைஞனின் சாவுக்கு முன்னரே இங்கு யாழில் குறிப்பிடப்பட்டிருந்தும்.. யாருமே கண்டுகொள்ளவில்லை.

மனோ கணேசனை தவிர.. பலர் இந்தச் சம்பவத்தில் அதிக அக்கறை செய்யாமையே.. அந்த இளைஞனின் மரணம் ஏற்படக் காரணமாகும்.

தாயகத்தில் உள்ள நிலவரங்களை கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் சரிவரக் கையாளாமையும்.. அவற்றை அவர்கள் சரியான நேரத்தில் சரியான வகையில் சர்வதேச மயப்படுத்தாமையுமே மக்களை சிங்களம் இன்னும் இன்னும் துன்புறுத்த முக்கிய காரணம்.

மக்கள் வாக்குப் போட்டு தேர்ந்தெடுத்த கூட்டமைப்பின் பிரதிநிதிகளில் பலரும்.. தலைமையும் இந்தியாவை பகைக்காத கொள்கையின் கீழ் எம் மக்களை சிங்களம் வருத்தும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு.. மக்கள் சினம் கொள்ளும் போது ஊடக அறிக்கை விட்டு சாந்தப் படுத்தும்.. சந்தர்ப்பவாத அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தான் எம் மக்கள் இன்னும் இன்னும் துன்பங்களை அனுபவிக்க காரணமாகும். மக்கள் சிங்கள அரசுடன் ஒட்டி வாழும்... ஒட்டுண்ணிகளான.. புளொட்டிடமோ.. ஈபிடிபி இடமோ.. கருணாவிடமோ.. நீதி கேட்டுச் செல்ல முடியாத நிலையில்.. கூட்டமைப்புத் தான் நிலைமை உணர்ந்து செயற்பட வேண்டும். மனோ கணேசனுக்கு உள்ள அக்கறை கூட கூட்டமைப்பில் பலருக்கு மக்கள் பற்றி இல்லை.

நாடு கடந்த தமிழீழ அரசு.. தாயகக் களத்தில் செயற்பட முடியாத நிலையில்.. இங்கிருந்து அறிக்கை விட்டு யாரும் அதனை செயற்படுத்தப் போவதில்லை.

தாயகத்தில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களுக்கும் கூட்டமைப்பும்.. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்வோருமே.. பொறுப்பேற்க வேண்டும்..! மற்றவர்கள் அல்ல. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.