Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவும் ஒருவருடையதாம்.இப்படி ஊருக்கு பத்துபேர் இருந்தா போதும்.தனிமரத்தோப்பு

The%2BZiona%2Bfamily%2Bin%2Bits%2Bentirety%2Bwith%2Ball%2B181%2Bmembers.jpg

தமிழ்நாட்டில 7 கோடித் தமிழன் பெருகி இருக்கிறான்... என்ன செய்திட்டான்..???! வறுமையும்.. மூட நம்பிக்கைகளும்.. சாதியும்.. கல்வி அறிவின்மையும்.. சமூக ஏற்றத்தாழ்வுகளுமே தலைவிரித்தாடுகிறது. இனம்... விடுதலை.. தமிழர் என்ற எண்ணத்தையே யாரோ தான் ஊட்ட வேண்டி இருக்கிறது..! இந்த இலட்சணத்தில்.......??????????! :):icon_idea:

  • Replies 145
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=5]பொருளாதாரமும் - சனத்தொகையும் [/size]

[size=4]இன்று உலகின் பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மக்கள் தொகை குறைந்தே வருகின்றது. அதேவேளை அபிவிருத்தி அடைந்து வரும் மூன்றாம் உலக நாடுகளில் பொதுவாக மக்கள் தொகை கூடியே வருகின்றது. [/size]

[size=1]

[size=4]முடிவு: நாட்டின் அபிவிருத்தி கூடக்கூட மக்கள் தொகை குறையும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சரி. புலம்பெயர்ந்தவர்களை திரும்ப நாடு செல்ல சொன்னீர்கள். நீங்கள் புலம்பெயர் நாட்டில் இருந்தால் இப்பொழுது மீண்டும் நாடு செல்ல தயாரா? அல்லது அதுவும் பொழுதுபோக்கிற்காக சொல்லப்பட்டதா? :rolleyes:

அவசரப்பட்டு வாசிக்கக்கூடாது!

நான் எழுதியது இதுதான்..

/////////

தமிழர்களின் சனத்தொகையை வெகுவிரைவில் அதிகரிக்கவேண்டும் என்றால் மிகவும் இலகுவான வழி இருக்கின்றது. யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் மீளவும் நாடு திரும்பினாலே சனத்தொகை அதிகரித்துவிடும். ஆனால் அதற்கு இரண்டாம், மூன்றால் தலைமுறைகளை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் யாரும் தயாரில்லை.

/////////

இதில் நாம் புலம்பெயர்ந்தவர்களை நாடுதிரும்பவேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லையே! தாயகத்தில் இருப்பவர்கள் அதிக பிள்ளைகளை பெற்றுத்தான் தமிழர்களின் இருப்பைக் காப்பாற்றலாம் என்ற ஆலோசனை செய்ய வெளிக்கிட்டவர் புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்பினால் மக்கள் தொகையை அதிகரிக்கச்செய்யலாம் என்பதை வசதியாக மறந்துவிட்டார். ஏனென்றால் அப்படியான விடயங்கள் எல்லாம் நடைமுறைக்குச் சாத்தியப்படாது. அதேவேளை தாயகத்தில் 60% மேற்பட்ட வருமானத்தை அன்றாடம் சாப்பிடவே செலவழிக்கும் மக்களுக்கு அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்ற அறிவுரை சொல்ல எந்தத் தயக்கமும் இல்லை.! அதைக் குறிப்பால் உணர்த்தவே நான் எழுதியிருந்தேன் :icon_idea:

நான் நாடு திரும்பும் நோக்கில் இல்லை. எனது தலைமுறைகளும் நாட்டுக்கு நிரந்தரமாகத் திரும்பாது! இதுதான் மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களின் நிலையும் ஆகும்.

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]கேள்வி: அலசப்படும் விடயம் என்ன?[/size][/size][size=1]

[size=4]பதில்: இயலுமானவர்கள் ஐந்து பிள்ளைகளை பெற வேண்டும் என பரிந்துரை.[/size][/size]

[size=1]

[size=4]கேள்வி: இந்த கட்டுரை யாரால் எழுதப்பட்டது?[/size][/size][size=1]

[size=4]பதில் : தாயக பத்திரிக்கை ஒன்றால் [/size][/size]

[size=1]

[size=4]கேள்வி: ஏன் இவ்வாறான பரிந்துரை?[/size][/size][size=1]

[size=4]பதில்: தமிழர் அரசியல் பிரதிநித்துவத்தை தக்கவைத்தல்.சிங்கள மயமாக்கலை எதிர்த்தல். [/size][/size]

[size=1]

[size=4]கேள்வி: இதில் புலம்பெயர் மக்களின் உதவி கோரப்பட்டதா? [/size][/size][size=1]

[size=4]பதில்: இல்லை [/size][/size]

அவசரப்பட்டு வாசிக்கக்கூடாது!

நான் எழுதியது இதுதான்..

/////////

தமிழர்களின் சனத்தொகையை வெகுவிரைவில் அதிகரிக்கவேண்டும் என்றால் மிகவும் இலகுவான வழி இருக்கின்றது. யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் மீளவும் நாடு திரும்பினாலே சனத்தொகை அதிகரித்துவிடும். ஆனால் அதற்கு இரண்டாம், மூன்றால் தலைமுறைகளை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் யாரும் தயாரில்லை.

/////////

இதில் நாம் புலம்பெயர்ந்தவர்களை நாடுதிரும்பவேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லையே! தாயகத்தில் இருப்பவர்கள் அதிக பிள்ளைகளை பெற்றுத்தான் தமிழர்களின் இருப்பைக் காப்பாற்றலாம் என்ற ஆலோசனை செய்ய வெளிக்கிட்டவர் புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்பினால் மக்கள் தொகையை அதிகரிக்கச்செய்யலாம் என்பதை வசதியாக மறந்துவிட்டார். ஏனென்றால் அப்படியான விடயங்கள் எல்லாம் நடைமுறைக்குச் சாத்தியப்படாது. அதேவேளை தாயகத்தில் 60% மேற்பட்ட வருமானத்தை அன்றாடம் சாப்பிடவே செலவழிக்கும் மக்களுக்கு அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்ற அறிவுரை சொல்ல எந்தத் தயக்கமும் இல்லை.! அதைக் குறிப்பால் உணர்த்தவே நான் எழுதியிருந்தேன் :icon_idea:

அண்ணா, நீங்கள் கோரிக்கை வைக்காவிட்டாலும் அதனை இலகுவான வழி என்று சொன்னது நீங்கள் தான்.

உங்கள் கருத்தை முழுக்க பிழை என்று நான் சொல்லவில்லை.

இதை ஒருக்கா வாசித்து பாருங்கோ. ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் தவிர ஏனையோர் நாட்டுக்கு திரும்பி போக மாட்டார்கள் என்று தான் நானும் சொன்னனான்.

http://www.yarl.com/...=20#entry774942

எனவே இங்கு நடைமுறைக்கு சாத்தியமான விடயம் எது?

நான் நாடு திரும்பும் நோக்கில் இல்லை. எனது தலைமுறைகளும் நாட்டுக்கு நிரந்தரமாகத் திரும்பாது! இதுதான் மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களின் நிலையும் ஆகும்.

நான் நாட்டை விட்டு வந்து ஒருவருடம் தான். நாட்டில் பிரச்சினை இல்லாவிட்டால் நான் நாட்டுக்கு போவன். university படிப்பன். :D

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]கேள்வி: அலசப்படும் விடயம் என்ன?[/size][/size]

[size=1][size=4]பதில்: இயலுமானவர்கள் ஐந்து பிள்ளைகளை பெற வேண்டும் என பரிந்துரை.[/size][/size]

[size=1][size=4]கேள்வி: இந்த கட்டுரை யாரால் எழுதப்பட்டது?[/size][/size]

[size=1][size=4]பதில் : தாயக பத்திரிக்கை ஒன்றால் [/size][/size]

[size=1][size=4]கேள்வி: ஏன் இவ்வாறான பரிந்துரை?[/size][/size]

[size=1][size=4]பதில்: தமிழர் அரசியல் பிரதிநித்துவத்தை தக்கவைத்தல்.சிங்கள மயமாக்கலை எதிர்த்தல். [/size][/size]

[size=1][size=4]கேள்வி: இதில் புலம்பெயர் மக்களின் உதவி கோரப்பட்டதா? [/size][/size]

[size=1][size=4]பதில்: இல்லை [/size][/size]

தாயகப் பத்திரிகையில் வந்திருந்தாலும் பரிந்துரை எதுவித அடிப்படைகளையும் ஆராயாமல் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்தலுக்கும், சிங்கள மயமாக்கலை எதிர்த்தலுக்கும் பிள்ளைகளைப் பெறுதல்தான் தீர்வு என்பது நகைப்புக்கிடமானது. தற்போதைய வங்குரோத்து அரசியல் நிலையில் இதையும் விடக் கேணைத்தனமான ஆலோசனைகள் வந்தாலும் ஆச்சரியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவும் ஒருவருடையதாம்.இப்படி ஊருக்கு பத்துபேர் இருந்தா போதும்.தனிமரத்தோப்பு

The%2BZiona%2Bfamily%2Bin%2Bits%2Bentirety%2Bwith%2Ball%2B181%2Bmembers.jpg

எனது தாய் தகப்பனார் பெற்றவை = 9 பேர்

அவர்களது பிள்ளைகள் நாங்கள் பெற்றவை = 35 பேர்

நாங்கள் பெற்றவை இதுவரை = 30 பேர்

எங்கப்பரும் ஒரு ஊரைத்தான் உருவாக்கியுள்ளார்

(தமிழரின் எதிர்காலம் பற்றி சிந்தித்து) :wub::icon_idea:

  • தொடங்கியவர்

தாயகப் பத்திரிகையில் வந்திருந்தாலும் பரிந்துரை எதுவித அடிப்படைகளையும் ஆராயாமல் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்தலுக்கும், சிங்கள மயமாக்கலை எதிர்த்தலுக்கும் பிள்ளைகளைப் பெறுதல்தான் தீர்வு என்பது நகைப்புக்கிடமானது. தற்போதைய வங்குரோத்து அரசியல் நிலையில் இதையும் விடக் கேணைத்தனமான ஆலோசனைகள் வந்தாலும் ஆச்சரியமில்லை!

[size=4]அவர்கள் பத்திரிகையை துறைசார்ந்தவர்கள், தாயகத்திலேயே இருப்பவர்கள், நாளும் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறவர்கள். அவர்கள் ஆலோசனையில் "கேணைத்தனம் இருக்கின்றது" என்று கூறுவது மூலம் யாருமே மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவில்லை என்பது உண்மை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அவர்கள் பத்திரிகையை துறைசார்ந்தவர்கள், தாயகத்திலேயே இருப்பவர்கள், நாளும் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறவர்கள். அவர்கள் ஆலோசனையில் "கேணைத்தனம் இருக்கின்றது" என்று கூறுவது மூலம் யாருமே மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவில்லை என்பது உண்மை. [/size]

அனுபவம் மிக்க பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள் போலும்!

தமிழர்களின் சனத்தொகை குறைந்தது இனப்பிரச்சினையால். காதன் ஒரு அங்கம்தான் புலப்பெயர்வு.

புலம்பெயர்ந்தவர்கள் திரும்பமாட்டார்கள், தமிழ் அரசியல்வாதிகள் காணி அபகரிப்பையும், பெளத்த விகாரைகள் பெருகுவதையும் தடுக்கமாட்டார்கள் என்று புரிந்ததனால் மக்கள் தொகையை அதிகரிக்க ஐந்து -பத்தென்று பெற்றுவிட்டால் இருபது வருடங்களுக்குப் பின்னரும் வடக்கையும் கிழக்கையும் தமிழர்களின் தாயகப் பகுதியாக தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற பரிந்துரை வந்ததாக்கும்!

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்களைப் பற்றி யார்தான் கவலைப்பட்டார்கள்? தமிழர்களின் அரசியல் தலைமைகளாகட்டும், அமைப்புக்களின் தலைமைகளாகட்டும் தங்கள் சொந்த நலன்களில்தானே அக்கறை காட்டுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை, (உங்களை விட எனக்கு தான் வயது குறைவென்று எனக்கு நம்பிக்கை :D)

உதவி கிடைக்காமல் பிள்ளை பெற சொல்லி நான் சொல்லேல்லை. வேறு யாரும் கூட இந்த திரியில் அப்பிடி சொன்னதாக எனக்கு தெரியேல்லை.

உதவி அவர்களுக்கு கிடைக்கும் ஒழுங்கு செய்த பிறகு தான் அவர்களை பிள்ளை பெற சொல்லி சொல்லியிருக்கு.

எல்லாருக்கும் உதவி தேவை என்றில்லை. பொருளாதார வசதி உள்ளவர்கள் வேறு உதவியை எதிர்பார்க்காமலேயே தாமாக முன்வந்து இதை செய்வது நலம்.

உங்களுக்கு இப்ப தான் திருமணமான என்று கேள்விப்பட்டன். உங்களிடம் பொருளாதார வசதி இருக்கா இல்லையா என்று யோசித்து முடிவெடுங்கோ. :D

26வயதை விட குறைவென்றால் அண்ணை என்று சொல்லுங்கோ :rolleyes: அது இருக்கட்டும் மேட்டருக்கு வருவம்,

நான் நினைக்கிறேன் எங்கள் இனம் குறித்த புரிதல் உங்களுக்கு போதாது என்று. அதாவது சாத்தியப்பாடான விடையங்களை விடுத்து வெறும் வாய்மொழிச்செயற்பாடுகளிலேயே காலத்தை வீணாக்குகிறோம்.

குட்டி போடுதல் இலகு அதை பராமரிக்கும்,வளர்க்கும் கல்வியும் மேலதிகமாக கொடுக்க வேண்டுமே. பிறந்த குழந்தைக்குரிய அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யணுமே?

நானும் உதவி கிடைக்கும் வழிகள் பற்றித்தான் சொன்னேன். மேலதிக விளக்கங்கள் தேவை எனில் நேசக்கரம் சாந்தி அக்கா,மற்றும் உதவும் அமைப்புக்களை தொடர்புகொண்டு கேளுங்கள் அவர்களின் கஸ்டங்களை. அவலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தான் அனைவரும் உள்ளார்கள். அதையும் விடுத்து புலம்பெயர்ந்தவர்கள் உதவும் நிலையிலும் தற்போதைய பொருளாதார நிலைகள் இல்லை. வரவை விட அந்தந்த நாடுகள் பிடுங்கும் வரிகள் அதிகம். இதில் உதவுவது என்பதும்,பிள்ளை பெறுவது என்பதும்............ ???????

அப்புறம் எனக்கு பொருளாதார வசதி இருக்கோ இல்லையோ ஒண்ணே ஒண்ணு .. கண்ணே .. கண்ணு தான். அதுவும் என்(ஜோ)ஜாய் பண்ணி முடிச்சு 5,6 வருடத்தின் பின்பு தான். :rolleyes::lol::icon_mrgreen::icon_idea:

26வயதை விட குறைவென்றால் அண்ணை என்று சொல்லுங்கோ :rolleyes:

நீங்கள் sure ஆ எனக்கு அண்ணா தான். :)

அது இருக்கட்டும் மேட்டருக்கு வருவம்,

நான் நினைக்கிறேன் எங்கள் இனம் குறித்த புரிதல் உங்களுக்கு போதாது என்று. அதாவது சாத்தியப்பாடான விடையங்களை விடுத்து வெறும் வாய்மொழிச்செயற்பாடுகளிலேயே காலத்தை வீணாக்குகிறோம்.

ஆம் அண்ணா, எம் இனம் பற்றிய புரிதல் எனக்கு குறைவு தான்.

ஆனால் எனக்கு தெரிந்ததை வைத்து நான் சொல்வது சாத்தியமானவர்கள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று.

குட்டி போடுதல் இலகு அதை பராமரிக்கும்,வளர்க்கும் கல்வியும் மேலதிகமாக கொடுக்க வேண்டுமே. பிறந்த குழந்தைக்குரிய அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யணுமே?

நானும் உதவி கிடைக்கும் வழிகள் பற்றித்தான் சொன்னேன். மேலதிக விளக்கங்கள் தேவை எனில் நேசக்கரம் சாந்தி அக்கா,மற்றும் உதவும் அமைப்புக்களை தொடர்புகொண்டு கேளுங்கள் அவர்களின் கஸ்டங்களை. அவலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தான் அனைவரும் உள்ளார்கள்.

நிச்சயமாக.... அதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. என்னாலேயே உணர முடியும்.

புலம்பெயர்ந்தவர்கள் உதவி அமைப்புகள் மூலம் உதவி செய்வது மட்டும் தான் உங்களுக்கு தெரியுமோ தெரியவில்லை. வெளிநாடு வந்தவர்களில் பலர் தமது குடும்பத்தினர், உறவினர்களுக்கு பணம் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு அந்த பணம் போதும் பிள்ளைகளை வளர்க்க.

அத்துடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் அடிபட்டு அடிபட்டு வளர்ந்தவர்கள். அவர்களுக்கு குறைந்தளவு பணத்தை வைத்தே குடும்பம் நடத்த தெரியும். பிள்ளை வளர்க்க தெரியும். வசதியாக வளர்ந்தவர்களுக்கு தான் குடும்பம், பிள்ளைகளை கவனிக்க அதிகளவு பணம் தேவை.

அதையும் விடுத்து புலம்பெயர்ந்தவர்கள் உதவும் நிலையிலும் தற்போதைய பொருளாதார நிலைகள் இல்லை. வரவை விட அந்தந்த நாடுகள் பிடுங்கும் வரிகள் அதிகம். இதில் உதவுவது என்பதும்,பிள்ளை பெறுவது என்பதும்............ ???????

அண்ணா,

புலம்பெயர்ந்தவர்கள் நினைத்தால் இதையெல்லாம் மீறி உதவி செய்யலாம். எம்மக்கள் பலர் இந்த நாட்டுக்கு வந்ததும் தமக்கு சொந்த வீடு வேணும், பொருட்கள் வேணும், வசதியாக வாழ வேணும் என்று நினைப்பதும் உண்டு. அவற்றை தவிர்க்க நினைத்தால் மற்றவர்களுக்கு உதவ முடியும். சுவிஸில் வாழும் தமிழர்கள் அதிகமாக சொந்த வீடு வாங்குவதில்லை. முடிந்தவரை வாடகை வீட்டில் தான் வசிப்பார்கள். ஆனால் பிரான்ஸ், லண்டனை சேர்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி வாழ நினைப்பார்கள்.

சொந்த வீடு வாங்குபவர்களுக்கு பிற்காலத்தில் நல்லது தான். ஆனால் 15 அல்லது 25 வருடங்கள் பணம் கட்டி முடிக்கும் வரை அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வது தடைப்படும். முக்கியமாக அந்த காலப்பகுதி தான் எம்மக்களுக்கு மிகவும் உதவி தேவைப்படும் காலப்பகுதி. சொந்த வீடு வாங்காமல் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு current bill, water bill கூட குறைவு என்று நினைக்கிறேன்.

இதனை நடைமுறைப்படுத்திய பின்னர் tax பற்றி எவரும் உங்கள் கருத்தை முன்வைத்தால் பதிலளிக்க நான் தயார். :)

அத்துடன் புலம்பெயர் தேசத்தில் வாழும் பெண்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். பல பெண்கள் திருமணத்திற்கு செல்லும் போது விலையுயர்ந்த சாறி, நகைகள் போட்டுக்கொண்டு செல்வார்கள். நகை போடாமல் சென்றால் அல்லது விலை குறைந்த சாறி உடுத்தினால் மக்கள் தம்மை மதிக்க மாட்டார்கள் என்று. மற்றவர்கள் தம்மை மதிக்கிறார்களோ இல்லையோ அவர்கள் அதனை வாங்கி போடுவதை தவிர்க்க வேண்டும். அந்த பணத்தை தாயகத்திலுள்ளவர்களுக்கு அனுப்பி அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேணும்.

அதே போல் ஆண்கள் தாம் சிகரெட் பத்துவதையும், குடி வகைகளை குடிப்பதையும் தவிர்க்க வேணும். அந்த பணங்களை சேமித்தாலே எவ்வளவோ பணம் மிஞ்சும். அதை தாயகத்திலுள்ளவர்களுக்கு அனுப்பினால் பல மக்களுக்கு உதவி செய்ய முடியும். மற்றவர்கள் எப்படி என்பதை விட நீங்கள் நீங்கள் உங்களை சிக்கனப்படுத்தி மக்களுக்கு உதவி செய்யுங்கள்.

புலம் பெயர்ந்தவர்களை உதவ தான் சொல்கிறோம். அவர்களை 5 பிள்ளைகளை பெற சொல்லி சொல்லேல்லை. இங்கு தாயகத்தில் உள்ளவர்களை தான் 5 பிள்ளைகளை பெறும்படி கூறப்பட்டுள்ளது.

அப்புறம் எனக்கு பொருளாதார வசதி இருக்கோ இல்லையோ ஒண்ணே ஒண்ணு .. கண்ணே .. கண்ணு தான்.

நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா? இருந்தால் நீங்கள் ஒன்றுடன் நிறுத்தி விட்டு உங்கள் பொருளாதார வசதியை பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். :D

Edited by காதல்

  • தொடங்கியவர்

[size=4]ஆனால் மலையகத்தின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் இரண்டு பிள்ளைகளை பெற்ற பெண்கள் [size=5]நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும்[/size] அங்கு மக்கட்தொகை வளர்ச்சி குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குநர் பெரியசாமி முத்துலிங்கம் சுட்டிக்காட்டுகிறார்.

தோட்டங்களில் தொழில்புரியும் பெண்களிடம், அவர்கள் எதிர்கொள்ளும் [size=5]வறுமை மற்றும் வாழ்க்கை பிரச்சினைகளை காரணம் காட்டி அவர்களை சம்மதிக்கவைத்து நிரந்தர கர்ப்பத்தடைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.[/size]

இங்கு பெண்களின் சம்மதம் பெறப்பட்டாலும், [size=5]மற்ற சமூகங்களில் இல்லாத அளவுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு பணியாளர்களின் செயற்பாடுகள் மலையக தோட்டங்களில் அதிகளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.[/size][/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104463

- இதிலிருந்து நீக்கப்பட்டு மேலே சேர்க்கப்பட்டுள்ளது -

Edited by காதல்

- இதிலிருந்து நீக்கப்பட்டு மேலே சேர்க்கப்பட்டுள்ளது -

Edited by காதல்

மனித வாழ்வு இயற்கையான ஆற்றொழுக்கான வாழ்கையை அனுபவிக்கத்தான் சுதந்திரம். எவரும் எந்த கருத்தையும் வைக்கலாம் என்பதுவும் சுதந்திரம் தான். ஆனால் அந்த கருத்தொன்று மக்களை அவர்கள் தங்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க வேண்டுமென்று கேட்குமானால் அது அவர்களை அடிமைபடுத்த முயலும் முயற்சி. அத்தைகைய கருத்துகளின் தொகுப்பு நூல்தான் மகிந்த சித்தாந்தம் என்று வைத்துகொள்ளலாம். "நீ உன் தமிழ் கணவனுக்கு பிள்ளைகளை பெற்றுப்போடாதே" என்பது மகிந்த சித்தாந்தம் படித்த ஆமிகளின் கட்டளை. ஆமிகளும் நம்ம அறிஞர்களும் தாம் விரும்பும் சமுதாயத்தை பரப்ப முயல்கிறார்கள். தமிழருக்கு மிஞ்சுவது வயலால் மீண்ட எருது வண்டில் நுகத்தில் களுத்தை கொடுப்பதுதான். எத்தனை கைவிரல்களுக்கு நடேசன் மீது நீட்ட துணிச்சல் இருக்கு. அவர் தமிழ் ஈழத்தில் வசித்த தமிழ் தோல் போர்த்த சிங்கள ஆமி என்பதா அப்படி நீலும் விரல்கள் சொல்ல வருதும் சேதி? திரும்பவும் மனித வாழ்வு இயற்கையான ஆற்றொழுக்கான வாழ்கையை அனுபவிக்கத்தான் சுதந்திரம்.

இப்படி கருத்துக்களை சொல்லவருபவர்கள் மக்களை மகிந்தாவிடமிருந்து மீட்கத்தேவை இல்லை. மக்களுக்கு பழகிபோய்விட்ட அந்த அடிமைச்சுமை. பழகவேண்டியிருக்கும் இந்த புதியதை விட நிச்சயமாக இலகுவாக இருக்கும். இதற்குள் எதற்கு பொருளாதார விவாதம். தாயகத்தில் பொருளாதாரத்தை விவாதிக்க எமக்கு என்று தாயக பொருளாதார சுதந்திரம் என்றுமே இருக்கவில்லையே.

Edited by மல்லையூரான்

எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களில் ஒருவரின் பதில் தான் நினைவுக்கு வருகிறது.............................இயல்பாகவே நகைசுவைகள் .சிநேகபூர்வமாய் தனது கற்பித்தலை முன்னெடுத்து செல்லும் அவர் இனப்பெருக்கம்

என்னும் தலையங்கத்தின் கீழ் ஒரு விளக்கம் தந்து கொண்டிருந்தார் ....நாம் எல்லோரும் கலகலப்பாகவும்,

ஆர்வமுடனும் பல கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பன் அவரிடம் ஒரு கேள்வி கேட்டான் .........என் சேர் நீங்கள் இரண்டு குழந்தைகளுடன் நிறுத்தி விட்டீர்கள் என்று......... அதற்கு அவர் அழித்த பதில் உமக்கு எப்படிதெரியும் ....நான் நிறுத்திவிட்டேன் என்று............ :D :D :icon_idea:

இப்படி கருத்துக்களை சொல்லவருபவர்கள் மக்களை மகிந்தாவிடமிருந்து மீட்கத்தேவை இல்லை. மக்களுக்கு பழகிபோய்விட்ட அந்த அடிமைச்சுமை. பழகவேண்டியிருக்கும் இந்த புதியதை விட நிச்சய்மாக இலகுவாக இருக்கும். இதற்குள் எதற்கு பொருளாதார விவாதம். தாயகத்தில் பொருளாதாரத்தை விவாதிக்க எமக்கு என்று தாயக பொருளாதார சுதந்திரம் என்றுமே இருக்கவில்லையே.

:rolleyes: :rolleyes: :rolleyes:

உங்களை போன்ற ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைப்பவர்களை வரவேற்க தான் இந்த திரியில் பொருளாதார விவாதம் நடந்தது என்று நினைக்கிறன். :)

Edited by காதல்

இந்த திரிக்குள்ளும் தேவையில்லாத விவாதங்களுக்குள் போய் விட்டேன் போலிருக்கு. :( சிலவற்றை தவிர்த்தாலும் சிலவற்றை தவிர்க்க முடியவில்லை. :(

எதற்கும் ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைப்பவர்கள் உங்கள் கருத்துகளை வழங்குங்கள். நான் விலகி நின்று வாசிக்கிறன். :)

  • தொடங்கியவர்

548157_199162306879687_1911606489_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சேரனின் ஒரு திரைப்படத்தின் தலைப்பை பற்றிக் கூட அறிந்து இருப்பீர்கள்.."அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" நான் சொல்ல வாறது என்ன வென்றால்....நம்மளால் முடியாட்டிக்கும் அவற்றை செய்ய கூடியர்களை முடிந்த மட்டுக்கு எந்த ஒரு விடையமாக இருந்தாலும் ஊக்கு விக்க வேணும்....

சேரனின் படமல்ல

சேரனின் படமல்ல

தயாரிப்பு சேரன். இயக்குனர் வேறு யாரோ.

  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தைப் பற்றிய என் தேடலில் கிடைத்த தகவல்.

Directed by

S.D. Vijay Milton

Produced by

Cheran

Written by

S.D. Vijay Milton

Narrated by

R. Parthiban

Starring

Bharath

Arun Vijay

Mallika Kapoor

Deepu

Music by

Yuvan Shankar Raja

Cinematography

S.D. Vijay Milton

Editing by

Sasi

Studio

Dream Theatres

Release date(s)

14 April 2006

Running time

157 min

Country

India

Language

Tamil

Edited by யாயினி

.

போனவருட கணக்கெடுப்பின்படி அவுஸில் 51,000 தமிழர்களாம். கப்பலில் வந்துசேர்பவர்களையும் சேர்க்க இன்னும் சில ஆயிரம் கூடும்.

ஒரு பிள்ளை பெற்றால் அரசாங்கம் 6,000 டொலர்களைக்கொடுக்கும். 7 இலட்சம் இலங்கைக் காசு. (ஒவ்வொரு பிள்ளைக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதினயவர்கள் ....திருமணமாகி புலத்தில் வாழ்ந்தால் தங்களுக்கு எத்தனை பிள்ளை என்று முதலில் சொல்லுங்...கோ....பிறகு ஏன் அடுத்த பிள்ளை பெறவில்லை என்பதயும் சொல்லுங்கோ....பிள்ளைகள் இல்லாவிடில் பந்தியாக எழுதி மற்றவனை பிள்ளை பெறு என்று சொல்லக்கூடாது அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பிள்ளை = 4

2 ஆண்

2 பெண்

இதற்கு மேல் ஏன் பெறவில்லை.

மற்றவர்கள் வளர்ந்தது

எமது வயது

இருவரும் வேலை

ஆனால் தமிழுக்காக பிள்ளை பெற இருவருக்கும் விருப்பம்.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.