Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவரையும் ஒரு சந்தோசமான செய்தி அல்லது சோகமான செய்தியுடன் அடுத்த கிழமை சந்திக்கிறேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கை என்பது தொடர்ச்சியான ஓர் செய்முறை. ஒருநாளும் பூரணத்துவத்தை/முழுமையை நாம் பெறமுடியாது. வாழ்க்கையின் எல்லாக்காலத்திலும் ஏதாவது பிரச்சனைகள், தவிப்புக்கள், திருப்தியின்மைகள், குறைபாடுகள் தொடர்ந்துகொண்டே காணப்படும்.

.

சிலவேளைகளில் முன்பு நன்றாக இருந்தது போல தோற்றம் வரும், அதுவும் ஒரு கனல் நீரே. இன்றுள்ள பிரச்சனைகளை எதிர்கொண்டாலே போதுமானது. அதிகமான மன அழுத்தம் வந்தால் என்னால் காரியம் ஆற்ற முடிவதில்லை. இன்னும் ஒரு மாத்திர்ற்குள் பல முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும், எதோ டைம் பாஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

உங்களது முடிவு -உங்களுக்கு கிடைக்கிற முடிவு- எப்படி இருந்தாலும், அதிலிருந்தும் வாழலாம் என்று நண்பி, - முடிந்தால் பிளான் B மாற்றி சிந்திக்கவும்

  • Replies 112
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் ஒருசில வசனங்கள் சிந்திக்கவைத்தாலும்...சகலதும் நலமாக முற்றுப்பெறவேண்டுகின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

காதலைக் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காதலைக் காணவில்லை.

காதலின் மறு அவதாரம் தான்.... துளசி.

துளசி, துளசி, துளசி என்று... மூன்று தரம் சொல்லி... பச்சைத்தண்ணியை குடியுங்கோ.

காதலை... மறந்து விடுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா தேடி பாருங்க நந்தன் காதல் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் துளசியைத் தான் பழைய பெயரில் அழைத்து விட்டேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் அருள் கிடைக்க வேண்டுகின்றேன்.....எல்ல இடமும்..இதுதான் நடக்கிறது.....கவலை வேண்டாம்...

வந்த சில நாட்களிலேயே அனைவர் மனங்களிலும் இடம் பிடித்துவிட்டிருந்தீர்கள்.உங்களுக்கு நல்லதே நடக்கும் என வேண்டுகின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

துளசி,

கலங்காதீர்கள்.

உங்கள் பிரச்சினையினை நீங்கள் தான் செய்ய வேண்டுமே அன்றி வேறு ஒருவரும் இல்லை.

பலருக்கு அகதிகள் தொடர்பான வழிமுறைகள் (சிஸ்டம்) சரியாகப் புரியாமையினால், சில அபத்தர்களிடம் சிக்கி தமது ஒரே ஒரு முறை கிடைக்கக் கூடிய அருமையான சந்தர்ப்பத்தினை இழந்து விடுகின்றனர்.

முதலாவதாக இந்த வகையான வழக்குகளில் வெற்றி அடைந்தர்வர்களிடம் நீங்கள் பேசி விடயங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

என்ன வகையான விடயங்களை உங்கள் வழக்கில் இணைப்பதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தினை பலமாக்க முடியும் என அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், நீங்கள் கொடுக்க கூடிய விடயங்கள் இலங்கையிலே, பிரித்தானிய தூதராலய முகவர்களினால் விசாரிக்கப் பட்டு உறுதி செய்யப் படுகின்றன என புரிந்து கொள்ளுங்கள்.

எக்காரணம் கொண்டும் உங்கள் solicitor அல்லது மொழி பெயர்ப்பாளர் உங்கள் விடயத்தில் புதிதாக எதுவும் செய்ய முடியும் என கருதாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களைப் போல் பலருக்கு வேலை பார்ப்பதால், புதிய, வித்தியாசமான விடயங்களை உங்கள் வழக்கில் சேர்க்க முடியாது. ஆகவே நீங்கள் தான் சிந்தித்து சரியான, வேறு பட்ட, வித்தியாசமான விடயங்களை சேர்க்க வேண்டும்.

முடிந்தால் உங்கள் வழக்கினை எவ்வாறு சரியான வழிமுறைக்கு கொண்டு வர முடியும் என ஆற அமர இருந்து யோசியுங்கள். ஏற்கனவே கொடுக்கப் பட்ட விடயங்கள் தவறான மொழி பெயர்ப்பு என சொல்ல முடியுமா என பாருங்கள்.

உங்கள் விடயங்களை நீங்கள் முதலில் தமிழில் எழுதுங்கள். அதனை மொழி பெயர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். freelancer.com, elance.com, போன்ற பல இணையத் தளங்களில், இலங்கை, இந்தியாவில் இருந்து அருமையான மொழி பெயர்ப்பு குறைந்த விலையில் செய்கின்றனர்.

நீங்கள் உங்கள் வழக்கில் முழுவதுமாக இறங்கி, அடுத்தவரை தேவைக்கு மட்டும் உபயோகப் படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

எனது வழக்கில் லண்டனில் இருந்த அநேகமான (32) தமிழ் சொலிசிட்டர்களிடம் போய் இருந்தேன். எவருமே நான் சொன்னவாறு கேஸ் எழுத தயாராக இருக்கவில்லை. எனக்கும் அரைத்த மாவினை அரைத்தால் வெல்ல முடியாது என தெரிந்து இருந்தது.

பின்னர் ஒரு வெள்ளையர் நிறுவனத்திற்கு எனது கேஸ் குறித்து கடிதம் போட, imigration case செய்வதில்லை என முடிவு செய்திருந்த அந்த நிறுவனம், எனது கேஸ் வித்தியாசமான முறையில் எழுதப்பட்டு உள்ளது என கூறி எடுத்துக் கொண்டனர்.

அந்த வருடம் அகதி அந்தஸ்து வழக்கப் பட்ட ஒரே இலங்கையர் நான் மட்டுமே. (அப்போது எல்லோருக்கும் விசா கொடுத்துக் கொண்டிருந்தனர். எனவே ஒருவரும் பிரச்சனை இல்லது விசா பெற்று ஏழு வருடத்தில் நிரந்தர வதிவுருமை எடுத்த காலம் அது).

எனவே எனது அனுபவத்தில் நான் சொல்லக் கூடியது என்னவெனில், சிஸ்டம் எவ்வாறு இயங்குகின்றது என முதலில் புரிந்து கொண்டு, உங்கள் விபரத்தினை எவ்வாறு வித்தியாசமாக, ஒன்றுக்கு ஒன்று பொருந்தக் கூடியவாறு அமைக்கலாம் என தீர்மானியுங்கள்.

வெற்றி நிச்சயம்.

காலம் சென்ற ஊடகவியலாளர் தராகி சிவராம், மொழி பெயர்ப்பாளர்களின் கவனம் இல்லா வேலை குறித்து ஒருமுறை எழுதி இருந்தார்.

'You lost the woods for the tree' என்பது ஒரு ஆங்கில சொல்லடை. கருத்து: மரத்தினை மட்டும் பார்த்த உன்னால் அதன் பின்னால் இருந்த பெரும் தோப்பினை பார்க்க முடியவில்லையே' என்பதாகும்.

தனது கட்டுரை ஒன்றில் பயன் படுத்திய இந்த சொல்லடையை, தமிழ் பத்திரிகைக்காக மொழி பெயர்த்த பத்திரிகையாளர், அதனை 'அருமையான மரம் ஒன்றினை விறகுக்காக இழந்தது போல' என குறித்திருந்தார்.

மேலே நான் குறித்த தளங்களில் ஒருவரின் வேலை தரம் குறித்து 'feedback' கொடுத்து இருப்பார்கள். அது உங்களுக்கு, தேர்வில் உதவும்.

மிகவும் கஷ்டப் பட்டு இங்கு வந்து, பின்னர் அடுத்தவரின் கவனையீனத்தில் எமது வாழ்க்கையினை ஒப்படைப்பது மிகவும் அபத்தமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமாக இந்த பதிவை லைக் பண்ண மனம் வரவில்லை சகோதரி,இதே தடைகளைத்தாண்டி வந்ததால் அதன் கஸ்டங்கள்,வேதனைகள்,தார்ப்பரியங்கள் புரியும். உங்களுக்கு எல்லாம் நல்லதாக நடக்க எல்லாருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மனதைத்தளரவிடாதையுங்கோ அது தான் முக்கியம்.

இதே போலத்தான் எனக்கும் நடந்தது ஆனால் எல்லாம் நானே தான் செய்தேன்.

நான் வெளிநாடு போகவேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை எதிர்பாராத விபத்து.

சிவனே என்று படிச்சிட்டு,ஊர் பொடியளோடை மதகிலும்,பாலத்திலும்,ரோட்டிலும் இருந்து அரட்டை அடிச்சு உறவுக்கார வைத்தியர் ஒருவரின் டிஸ்பென்ஸரியில் அவருக்கு உதவியாக அப்பப்ப நின்று பழகி அவற்றை புத்தகங்களைத்தான் வாங்கி படிச்சு கொண்டு இருந்தனான். தினமும் பஸ்சில் போய் வரும்போது வல்லை,இருபாலையில் எல்லாம் ஆமி மறிச்சு சோதனை செய்யும் போது பாக்கில் இருக்கும் ஸ்டெதஸ்கோப்,மாணவர் அடையாள அட்டை பார்த்ததும் உடனே போய் பஸ்சில் ஏறச்சொல்லுவான். வயது போனவர்கள் கூட இறங்கி நடக்கும் போது கல்விக்குரிய மரியாதை தரப்படும் போது மனதில் வரும் சந்தோசம் வார்த்தையில் சொல்லவே முடியாது.

இது நீண்ட காலம் நிலைக்கவில்லை ஒன்றுவிட்ட அண்ணா இனந்தெரியாதவர்களால் காரணம் தெரியாமல் சுட்டுக்கொல்லப்பட்டதும் சிறிது பயம் காரணம் கோவத்தில் யார் சொன்னாலும் கொலை செய்யுமளவுக்கு நிலைமை இருந்தது. நான் வேறை உள்ளை இருந்த சில இயக்க தொடர்புகள்,ஊர்கோவில் நிர்வாகத்தோடு சண்டை போஸ்ரர் ஒட்டின பிரச்சனை என்று இருந்தன். இதுக்குள்ளை நான் பழகுற டிஸ்பென்ஸரியில் என்னுடைய பெயரை கேட்டு யாரோ விசாரித்தார்களாம்,என்னை வெள்ளை வான் தேடுது என்று ஊரிலை கதை. (ஆனால் உண்மையில் என்னை தேடவில்லை என்னுடைய பெயரில் இருந்த இன்னொருத்தரை என்பது பிறகு என்னுடைய பெயரில் இருந்தவரை வெள்ளை வான் கடத்தின பிறகு அதுவும் நான் ஜேர்மனிக்கு வந்த பிறகு தான் தெரியும்)

அம்மா சொல்லிட்டா என் பிள்ளை சாகுறதை பார்க்க கூடாது நீ இயக்கத்துக்கு போ என்று(ஜீவா இதை சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை,சத்தியமாக உண்மை) ஆனால் பாதை பூட்டு போக முடியவில்லை. பிறகு தெரிஞ்ச ஒருத்தர் மூலம் சக்கோட்டை ஆமி பெரியவனை பிடிச்சு பாஸ் எடுத்து கொழும்பு வந்து உடனையே பாஸ் போட் எடுத்து சிங்கப்பூருக்கு வந்தன். 15 நாள் விசா தர நான் மலேசியா போட்டேன் 6 மாதத்துக்கு மேல் மலேசியா,சிங்கப்பூர் என்று மாறி,மாறி இருந்து அங்கை ஒரு ஏஜென்சி ஏத்துறேன் என்று ஏத்தலை. எனக்கு வேறை வழி தெரியவில்லை திரும்ப கொழும்பு போய் வேறு ஒரு ஏஜென்சியை நானே பிடித்து பல்கேரியாக்கு மருத்துவம் படிக்க என்று சொல்லி விசா எடுத்து தென்னாபிரிக்கா ட்ரான்சிற்றிலை ஜேர்மனி ப்ராங்போட் வந்தேன். ஜேர்மனி வரும் போது கூட நான் ரிக்கட்டை மட்டும் தான் கிழித்தேன். பாஸ்போட்,அடையாள அட்டை,மாண்வர் அடையாள அட்டை,டெபிட்காட் எல்லாமே வைத்திருந்தேன். விமானத்தில் இருந்து இறங்கி வர ஜேர்மன் போலிஸ் பாஸ்போட் கேட்க குடுத்தேன். தட்டி பார்த்திட்டு விசா எங்கை என்று கேட்க இல்லை என்றேன்.

எப்படி வந்தாய் என்றால் தெரியாது என்றேன். உடனே என்னை விமானத்திற்கு கூட்டிச்சென்று எந்த இருக்கையில் அமர்ந்தாய் என்று கேட்க 20K என்று இருக்கையை காட்ட கூட்டி எல்லாம் செக் பண்ணிட்டு

வெளிய கொண்டு வந்து என்ன வேணும் என்று கேட்டான்? ஏன் வந்தாய்? நான் சொன்னேன் ஊரிலை இருக்க முடியாது அசைலம் வேணும் என்று.

உடனை என்னை ஒரு அறைக்கு கூட்டி சென்று இருக்க வச்சு குடிக்க தண்ணி தந்து கேட்டான். எப்படி வந்தாய்? என்ன மாதிரி என்று ? ஆங்கிலம் தெரிஞ்சதால் பிரச்சனை இல்லை எல்லாம் சொல்லி முடிய 2 போலிஸ் காவலோடு பஸ்ஸில் ஏற்றி ஒரு இடத்திற்கு கொண்டு போய் பிங்கர்பிரின்ட் எடுத்திட்டு என்னுடைய ஆவணங்களை வாங்கிவிட்டு விமான நிலைய காம்ப்பிற்கு கொண்டு வந்தார்கள். மறு நாள் சொன்னார்கள் விசாரணை இருக்கு சட்ட வல்லுனர் தேவையா என்று நான் சொன்னேன் தேவை இல்லை என்று ஆனால் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அவர்களே கூட்டி வந்தார்கள். மறுநாள் விசாரணை நான் புலியையும் சொல்லவில்லை,ஆமியையும் சொல்லவில்லை. இனந்தெரியாத நபர்களால் பிரச்சனை என்று சொல்ல மொழிபெயர்ப்பாளர் சொன்னார் இப்படி சொல்லாதை விசா கிடைக்காது ஆமி,இயக்கம் 2பேரையும் சொல்லு என்று. நான் சொன்னேன் பரவாயில்லை நான் சொன்னதை அப்படியே மொழிமாற்றச்சொல்லி. எல்லாம் முடிந்ததும் மறுபடி பொலிஸ் வாசிச்சுக்காட்ட சரி சொல்லி கையெழுத்து வைக்க 2 நாளின் பின் வேறு இடம் மாற்றினார்கள் அங்கு 2கிழமை இருக்க மறுபடி டுசில்டோவ் இல் விசாரணை அதுக்கும் அவர்களே மொழிபெயர்ப்பாளரை வைத்திருந்தார்கள். சொன்னதையே அப்படியே ஒப்புவித்தேன். முடிந்து வெளியே வர 3மாத விசா தந்து வேறு காம்புகு போக சொன்னர்கள் அங்கு போய் ஒரு மாத காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் அவர்களே வீடு எடுத்து தந்தார்கள் அங்கு தான் இருக்க முடியும் வெளியே செல்வதென்றால் அனுமதி பெற்று போக வேணும். படிக்க போறேன் என்று சொல்லி போக 3மாத விசாவிலை படிக்க முடியாது என்றார்கள்.

1€ வேலைக்கு போக சொல்லி கடிதம் வந்தது 3,4 மாதம் போனேன் வீதி துப்பரவு பணி. அப்போ தான் செத்தாலும் ஓரிலை இருந்திருக்கலாம் என்று தோணிச்சுது. தலை எழுத்தை நினைத்து நொந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டேன். திரும்ப போய் படிக்கட்டா என்று கேட்டேன். நல்ல காலம் நான் அந்த வேலை செய்ததால் கருணை காட்டி என்னை 3மாதம் ஜேர்மன் படிக்க அவர்களே காசும் குடுத்து,போக்குவரத்து செலவும் தந்தார்கள். அதற்கு பிறகு படிக்க இந்த விசாவுக்கு அனுமதி இல்லை என்று சொல்லியாச்சு 2008, 5ம் மாதம் வந்தனான் 2010 ரிஜெக்ட் பண்ணி வந்திச்சுது அதுக்கு பிறகு லோயரிடம் போய் வழக்குக்கு கோட்டுக்கு கூப்பிட போனேன். எந்த மாற்றமும் இல்லை அதையே சொன்னேன். நீதிபதி கேட்டார் நீ சொன்னதை நம்புறேன். ஆனால்

சிங்கப்பூரில் இருந்து திரும்ப கொழும்பு போய் ஜேர்மனி வந்டிருக்கிறாய் பிரச்சனை என்றால் எப்படி கொழும்பு போவாய் என்று? அப்பத்தான் இந்த பாஸ்போட்டை கிழிச்சிருந்திருக்கலாம் என்று தோன்றிச்சு.

நான் சொன்னேன் இல்லை கொழும்பிலை ஒருமாதம் தான் செல்வாக்குள்ள ஒருத்தரை பிடிச்சு தங்கினான். பிரச்சனை இல்லாமல் மருத்துவம் படிச்சிட்டு இங்கை வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொருளாதாரத்தில் அவ்வளவு பிந்தங்கி இல்லை அண்ணா ஜேர்மனியில் இந்த இடத்தில் வசிக்கிறான்,மற்ற அண்ணா லண்டனில் இந்த இடத்தில் என்று சொல்லி சகல தகவல்களையும் குடுத்தேன்.

விசாரணை முடிந்து போக சொல்லியாச்சு 2011 தை வர சொல்லி கடிதம் வந்தது போக அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மனிதாபிமான அடிப்படையில் ஜெர்மனியில் தங்க அனுமதிக்கப்பட்டு எனது இலங்கை பாஸ்போட்டில் விசா தந்தாங்கள். 25வது சட்டம்3வது பிரிவின் கிழ் ஆனால் குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கலாம்,மேற்படிப்பு படிக்க முடியாது என்று.

அங்கை திரும்ப நான் போய் படிக்க போறேன் என்று கேட்க நாங்கள் உதவி செய்ய முடியாது வேலை செய்ய சொல்லி மஞ்சள் நிற விண்ணப்பம் தந்தார்கள். நான் தெரிஞ்ச ஒருத்தரைக்கொண்டு மக்டொனாட்ஸ் இல் வேலை எடுத்து குடுத்திட்டு ஒரு மாதம் போனதும் சொன்னேன். எனக்கு சம்பளம் காணாது வேறு நல்ல வேலை இருக்கு வேறு இடம் மாறப்போகிறேன் என்று அதற்கு அவர்கள் வேலை எடுத்து வா என்று சொல்ல நானும் அண்ணாவின் நீண்ட கால இத்தாலி நண்பன் ஒருவன் தனது உணவகத்தில் நிரந்தர வேலையும் அதிக சம்பளமும் தருவதாக எழுதித்தந்தான் அதை குடுத்து அந்த இடத்திலிருந்து மாறி இங்கை வந்ததும் இந்த நிர்வாகம் எனக்கு இங்கை தான் இருக்க வேண்டும் என்பதை மாற்றி எங்கையும் இருப்பதற்கான அனுமதியை தந்தார்கள்.

மற்ற நாடுகளைப்பற்றி தெரியாது ஜேர்மனியில் அரசாங்க உதவி பெறாமல் வேலை செய்தால் எல்லாம் இலகுவில் கிடைக்கும். இப்ப வாழ்க்கையே அப்படியே தலைகீழாய் மாறி விட்டது.

றோட்டில் நடக்கும் போது ஹலோ சொல்ல நாலு பேருக்காவது என்னை தெரியுமளவுக்கு மாறியாச்சு.

ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக சொன்னார்கள்,அப்படிச்செய்,இப்படிச்செய் என்று. எல்லாத்திலும்,எப்போதும் என் முடிவு தான். சரி,என்றாலும், பிழை என்றாலும் நானாக தேடிக்கொண்டது என்று எதையும் செய்யும் தைரியம் வந்து விட்டது.

புலம்பெயர்ந்து வந்து நான் கண்ட அனுபவம் என்றால் தலையே போனாலும் கவலை இல்லை என்ற வைராக்கியமும். எதைச்செய்தும் என்னை நிலைநாட்டக்கூடிய தைரியமும் வந்து விட்டது. இது ஊரில் இருந்திருந்தால் சாத்தியமாய் இருந்திருக்குமா தெரியவில்லை,அந்த வகையில் புலம்பெயர்வாழ்வுக்கு நன்றி தான் சொல்ல வேணும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதில் சொல்ல முடியாத அளவுக்கு மனவலி இருந்தது, தனிய இருந்தே பழக்கப்படாத நான்,அழுது தொலைத்த நாட்கள் போய் அனுப்ப போறியோ,வச்சிருக்க போறியோ போடா..போய் பண்ணுறதை பண்ணு என்ற நிலைக்கு தைரியசாலி ஆக்கிவிட்டது.

நீங்களும் விசா கிடைத்தாலும் உங்களை முதலில் நிலைநிறுத்தப்பாருங்கள். எல்லாரும் சொல்கிறார்கள் என்று எல்லாத்தையும் பரீட்சித்துப்பாராதீர்கள். இயன்றளவு சொந்தக்காலில் நில்லுங்கள், தீர்க்கமான முடிவுகளாய் எடுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

துளசி நீங்கள் டூரீஸ் விசாவில் தானே வந்தனீங்கள் அதிக காசை செலவழிச்சு அலைச்சல்பட்டு வந்திருக்க மாட்டீங்கள் தவிர உங்களுக்கு கொஞ்ச வயது என்றும் ஊரில் பல்கலைகழகம் கிடைத்தது என்றும் வேறு திரிகளில் எழுதி உள்ளீர்கள் ஆகவே நீங்கள் ஊருக்கு திரும்பி போனாலும் உங்களால் அம்மா,சகோதரங்களோடு இருந்து படித்து நல்லதொரு நிலைமைக்கு வர முடியும்...இங்கிருந்து தனியே கஸ்டப்படுவதை விட ஊரில் நல்ல வாழ்க்கை உங்களுக்கு இருக்கும் என்பது எனது கருத்து...தனிப்பட உங்களுக்கு அங்கு வேறு பிரச்சனைகள் இருக்குதோ எனக்குத் தெரியாது...இங்கு விசா கிடைத்தால் இங்கு இருங்கள் அப்படி கிடைக்கா விட்டால் மகிழ்ச்சியோடு ஊருக்குப் போய் படித்து முன்னேறுங்கள்.

இதில் கருத்து எழுதின பல பேர் ஈழத்திற்கு ஆதர‌வாளர்கள் இதில் எனக்கு புரியாதது என்ன என்டால் எல்லோரும் புலம் பெயர்ந்து வர‌ வேண்டும் என்றும்,இங்கு வந்து விசா கிடைக்காதோரை பாவம் பட்டவர் மாதிரி பார்ப்பதும் ஏன் என்று தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ரதியக்கா.. உங்களுக்கு கிடைச்ச வாழ்க்கை அவங்களுக்கு கிடைக்கக் கூடாதோ..???!

தெரிஞ்சே தெரியாமலோ.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து.. அந்தப் பிள்ளை வந்திருக்குது. அந்தப் பிள்ளையின் முயற்சி வெற்றி அடையனும் என்றது தான் இப்ப முன்னிலைல நிற்குதே தவிர.. அவாட முயற்சிகள் வீணாவதில் யாருக்குத் தான் விருப்பம் இருக்கும்..!

முயற்சி மட்டுமல்ல.. அவர் எவ்வளவோ பணத்தை.. காலத்தை.. சந்தர்ப்பங்களை வீணடிச்சிருப்பார். அதற்கு எல்லாம் பிரதியீடாக இந்த விசா அமையாதா என்று அவரும் மற்றவர்களும் ஏங்குவதில்.. தவறிருப்பதாகத் தெரியவில்லை.

தாயகத்தில் இருந்து கொண்டு.. வரப் போறன் என்றால் நிச்சயமா.. அதற்கு இவ்வளவு ஆதரவு இருக்காது. காரணம்.. தாயகத்தில் ஏதோ ஒரு வழியில் பிழைக்க வழி இருக்கும். ஆனால் அந்நிய தேசங்களில் அப்படியல்ல.. அந்த வகையில் விசா என்பது அந்நிய தேசங்களில் பிழைக்க முக்கியம்..! அந்த வகையில் தான் பாவப்பட்டவராக பார்க்கப்படக் கூடும்..!

மற்றும்படி தாயகம் திரும்பிப் போவதை.. பற்றி நீங்கள் சொல்லப்படாது. அதை தீர்மானிக்க வேண்டியது அவர். வேணுன்னா.. நீங்கள் அவருக்கு முன்மாதிரியா இருந்துவிட்டு சொல்லுங்கள்... அதுபற்றி...! :icon_idea::)

உங்கட கருத்து இங்க[வெளி நாட்டில்] எல்லோரும் சந்தோசமாக இருக்கினம் அப்படித் தானே!

தெரிஞ்சே தெரியாமலோ.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து.. அந்தப் பிள்ளை வந்திருக்குது. அந்தப் பிள்ளையின் முயற்சி வெற்றி அடையனும் என்றது தான் இப்ப முன்னிலைல நிற்குதே தவிர.. அவாட முயற்சிகள் வீணாவதில் யாருக்குத் தான் விருப்பம் இருக்கும்..!

முயற்சி மட்டுமல்ல.. அவர் எவ்வளவோ பணத்தை.. காலத்தை.. சந்தர்ப்பங்களை வீணடிச்சிருப்பார். அதற்கு எல்லாம் பிரதியீடாக இந்த விசா அமையாதா என்று அவரும் மற்றவர்களும் ஏங்குவதில்.. தவறிருப்பதாகத் தெரியவில்லை.

அவ எப்படி இங்கே வந்தார் என்று அவவே எழுதியிருக்கிறார் இதே அவ ஏஜென்சி மூலம் காசை அதிகமாக செலவழித்து வேறு,வேறு நாடுகளில் முகாம்களில் அடைபட்டு கடைசியாக இங்கே வந்து அசேலம் அடித்தார் என்டால் கட்டாயம் அவவிற்கு விசா கிடைக்க வேண்டும் என்று கும்பிடும் முதல் ஆளாக நான் இருப்பேன்...அவ காலத்தை மட்டும் தான் தேவையில்லாமல் வீணடித்து இருக்கிறார்...அவவுற்கு வேறு எதாவது ஊரில் இருக்க முடியாத பிரச்சனை இருக்குதோ தெரியாது அதை அவ தான் சொல்ல வேண்டும்...ஆனாலும் அவவிற்கு விசா கிடைத்தாலும் சந்தோச‌ம் கிடைக்கா விட்டால் தான் திரும்பிப் போக சொன்னனான் அவ விரும்பினால்

தாயகத்தில் இருந்து கொண்டு.. வரப் போறன் என்றால் நிச்சயமா.. அதற்கு இவ்வளவு ஆதரவு இருக்காது. காரணம்.. தாயகத்தில் ஏதோ ஒரு வழியில் பிழைக்க வழி இருக்கும். ஆனால் அந்நிய தேசங்களில் அப்படியல்ல.. அந்த வகையில் விசா என்பது அந்நிய தேசங்களில் பிழைக்க முக்கியம்..! அந்த வகையில் தான் பாவப்பட்டவராக பார்க்கப்படக் கூடும்..!

மற்றும்படி தாயகம் திரும்பிப் போவதை.. பற்றி நீங்கள் சொல்லப்படாது. அதை தீர்மானிக்க வேண்டியது அவர். வேணுன்னா.. நீங்கள் அவருக்கு முன்மாதிரியா இருந்துவிட்டு சொல்லுங்கள்... அதுபற்றி...! :icon_idea::)

நிச்சயமாக தாயகம் திரும்பிப் போறதை பற்றி அவ தான் தீர்மானிக்க வேண்டும் எவரும்,எவரையும் வற்புறுத்தவோ,கட்டாயப்படுத்தவோ முடியாது ஆனால் அவட‌ நிலைமையில் நான் இருந்திருந்தால் கட்டாயம் நான் ஊருக்கு திரும்பி போய் இருப்பேன்...தற்போதைய நிலைமையில் நான் ஊருக்குப் போக வேண்டிய எந்த வித அவசியம் இல்லை அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் நான் ஊருக்குப் போவேன் அதை தீர்மானிக்க வேண்டியதும் நானே :icon_idea:

  • தொடங்கியவர்

ஆறுதல் வார்த்தை கூறிய அனைவருக்கும் நன்றி. என்ன முடிவு என்று நாளைக்கு இரவு அனைவருக்கும் அறிவிக்கிறேன்.

எனினும் நீங்கள் அனைவரும் ஆறுதல் வார்த்தை கூறி என்னை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால் இப்பொழுது உங்கள் கருத்துகளுக்கு பதிலளிக்கிறேன்.

உங்கள் சொந்த அனுபவப் பகிர்வு வாசிக்க.. கவலை தான் மிஞ்சுது. எத்தனை சிரமங்கள்.. போராட்டங்கள். :(

இங்க தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அநேகர் குருட்டுவாக்கில.. தங்களுக்கு தெரிஞ்சதை தான் சொல்லுறவை. மொழிபெயர்க்கிறது தெரியாது அவைக்கு...!! :lol:

காவடி எடுத்திட்டீங்க.. எனி ஆடித் தான் இறக்கனும்... எல்லாம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்..!

உங்கட ஸ்ரேட்மெண்ட்.. credibility ஐ கொண்டிருந்தா.. நிச்சயம்.. விசா கிடைக்கும்.

இல்லைன்னா.. இன்னும் கொஞ்சம் கஸ்டப்பட வேண்டி இருக்கும். இன்னும் பல வழிகளில் அப்பீல்.. பண்ணலாம்.. அப்படித்தான் இங்க (லண்டனில) செய்து கொடுக்கினம்... எதையும் உங்கள் வழக்கை கையில் எடுத்தவர்களிடம் கலந்தாலோசிச்சு செய்யுங்கோ. பணம் தான்.. தண்ணியா இறைக்கப்படும்..!

நீங்கள் அதிகம்.. நித்திரையே கொள்ளுறதில்லை என்றது.. உங்க எழுத்தில் மட்டுமல்ல.. யாழில பார்க்கவே தெரியுது. மனக் கஸ்டம் போல. அது நீங்கனுன்னா.. முதலில நல்ல நித்திரை கொள்ளுங்க. ஒரு அண்ணணா.. சொல்லக் கூடியது இது தான். :icon_idea:

நெடுக்ஸ் அண்ணா இதெல்லாம் எனக்கு கவலையாக தெரியவில்லை. இதை பார்த்து நீங்கள் கவலைப்பட்டால் ஏஜென்சி மூலம் வந்தும் பல வருடங்களாக அல்லல் படும் மக்களை பார்த்தால் அழுவீர்கள். அதிலும் இப்பொழுது வந்தவர்களை விட பல வருடங்களின் முன் வந்தவர்கள் பல மடங்கு கஸ்ரப்பட்டிருப்பார்கள்.

இங்கு சிலருக்கு மொழிபெயர்க்க தெரிந்தாலும் grammer படி சரியாக எழுத தெரியாதவர்களும் மொழிபெயர்ப்பாளர்களாக உள்ளனர். இங்கு தமிழர்களுக்கென்று உள்ள ஒரு குணத்தையும் அவதானித்தேன். ஒருவரிடம் மற்ற மொழிபெயர்ப்பாளர் பற்றி கேட்டால் அந்தாளுக்கு சரியா மொழிபெயர்க்க தெரியாது என்று கூறுவார். இதே அந்த நபரிடம் கேட்டால் இவருக்கு சரியா மொழிபெயர்க்க தெரியாது என்று கூறுவார். :D

நான் இரவில் நித்திரை கொள்வது குறைவே தவிர விடிய விடிய நல்ல நித்திரை கொள்வேன்... :lol: எனக்கு மனக்கஸ்ரம் என்பதால் இங்கு சண்டை பிடிக்கிறேன் என்று யோசித்து விடாதீர்கள். அப்படி அல்ல. சில திரிகளை பார்த்தால் என்னையறியாமலே எனக்கு கோபம் வந்து விடும்.

நன்றி உங்கள் ஆறுதல் வார்த்தைக்கும் வாழ்த்துக்கும். :)

துளசி விசா கிடைக்க வாழ்த்துக்கள். மொழி பெயர்க்க யாழ்களத்திலேயே எத்தனை அண்ணாமார்,அக்காமார் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகிறார்கள்.அவர்களிடமே கேட்டிருக்கலாமே??

ஏனையவர்கள் மொழி பெயர்த்தாலும் அவுசில் உள்ளவர்களுக்கு தான் எப்படி எழுத வேண்டும் என தெரியும்.

நன்றி நுணா அண்ணா, நான் இருக்கும் நாட்டில் ஆங்கிலம் மொழியல்ல. எனவே அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு இந்த நாட்டு மொழி தெரியுமோ தெரியாது. எனினும் அவர்கள் பெயரை குறிப்பிட முடிந்தால் குறிப்பிடுங்கள். வேறு யாரும் தேவைப்பட்டால் அவர்களிடம் உதவி கேட்பார்கள்.

நான் இருக்கும் நாட்டில் உள்ளவர்களை யாழில் இனங்கண்டுள்ளேன். தேவைப்பட்டால் அவர்களிடம் இனி உதவி கேட்கிறேன்.

வாழ்த்துக்கும் உதவிக்கும் நன்றி. :)

துளசி, உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் பதிவு, மனதை பாதித்துவிட்டது.

நெடுக்ஸ், நுணாவிலான் சொன்னமாதிரி.... நிராகரிக்கப்பட்டால், பணம் தான் இனி... வீண்விரயமாகும். உங்களின் மொழி பெயர்ப்பு விடயங்களை, யாழ் கள மொழிபெயர்ப்பாளர்களிடம் தனி மடலில் பேணவும்.

நன்றி தமிழ்சிறி அண்ணா உங்கள் பிரார்த்தனைகளுக்கும் ஆலோசனைக்கும்... :)

[size=5]உங்களுக்கு விசா கிடைக்க கடவுளை [/size]

[size=1][size=5]வேண்டுகிறேன் [/size][/size]

உங்கள் வேண்டுதலுக்கு நன்றி. :)

எல்லாம் வெற்றிகரமாக அமைய எனது பிரார்த்தனைகள்.....!

உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. :)

  • தொடங்கியவர்

கேஸ் எழுதுகிறவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோராலேயே இங்கு பலருக்குப் பிரச்சனை வந்துள்ளது. அவர்களும் வேண்டுமென்று செய்வதில்லை. விடயம் தெரியாமல்தான் செய்கிறார்கள். இனிவரும் காலங்களில் தீர விசாரித்து நல்ல திறமையானவர்களை அணுகுங்கள். முக்கியமாக நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள விசா கிடைத்த அகதிகளின் அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

தெரிந்த ஒருவருக்கு வழக்கு நீண்டகாலமாக இழுபட்டது. இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு திருப்பி அனுப்ப விமான நிலையத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். பின்பு ஏதோ ஒரு காரணத்தினால் அனுப்புவதில்லை என்று முடிவெடுத்து வழக்கு நடந்து வழக்கு அவருக்கு சாதகமாக முடிந்து விசா கொடுத்துவிட்டார்கள். மகிச்சியில் அழுதார். இப்பொழுது அதனது குடும்பத்தை இங்கு அழைக்கப் போகிறார்.

நம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கேஸ் எழுதுபவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பொதுவாக (நான் அவதானித்தவர்கள்) எம்மக்களை மதிப்பதில்லை. அவர்கள் பிழை விட்டதை கூறி ஏன் பிழையாக எழுதியுள்ளீர்கள் என்று கேட்டால் உங்கள் பேச்சை நான் கேட்க வேண்டுமா என் பேச்சை நீங்கள் கேட்கபோறீர்களா என்று கேட்பவர்களும் உள்ளார்கள்.

ஒரு நேரத்தை கூறி அந்நேரத்துக்கு வரும்படி கூறி விட்டு அவர்கள் 2, 3 மணித்தியாலங்கள் தாமதமாக வருவார்கள். பின் தமக்கு நேரமில்லை இன்னொரு நாள் வாருங்கள் என்று கூறி அனுப்பிவிடுபவர்களும் உள்ளார்கள்.

உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. :)

துளசி, மனத்தைத் தளர விட வேண்டாம்!

அனைத்தும் நல்ல படியாகவே முடியும்! :D

நன்றி புங்கையூரன் அண்ணா, உங்களிடம் எனக்கு பிடித்ததே மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதும் உடனே ஆறுதல் வார்த்தை கூறுவதும் தான். நீங்களும் மனதை தளர விட கூடாது. ஏனென்றால் நீங்கள் எனக்கும் பகி அண்ணாவுக்கும் ஆறுதல் சொல்லி களைத்திருப்பீர்கள்.

நம்பிக்கையூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. :)

பி.கு: நீங்கள் படித்தவர். உங்களை போன்றவர்கள் கோட் போட்டால் கோட்டுக்கு ஒரு மதிப்பு உள்ளது. அல்லது படிக்காவிட்டாலும் மற்றவர்களுடன் பொறுமையாக கதைப்பவர்கள் கோட் போட்டாலும் கோட்டுக்கு ஒரு மதிப்பு இருக்கும். இங்கு கண்டவர்களெல்லாம் கோட் போட்டு கோட்டின் மரியாதையை கெடுக்கிறார்கள்.

கொஞ்சம் மொழி தெரிந்தால் நாங்களும் மேசை கதிரையை போட்டிட்டு மொழிபெயர்ப்பு வேலை செய்யலாம் போலிருக்கு. :icon_idea:

சந்தோசமான செய்திதான் வரும்.

உங்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தைக்கு நன்றி. :)

இந்தக் கேஸ் எழுதுபவர்களில் பலர் சரியான தொழில் நிபுணத்துவம் இல்லாதவர்கள். எப்போதும் பணத்தில் குறியாக இருப்பதால், கடைசி நாள் மட்டும் வைத்திருந்துவிட்டு ஏதோ தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மாதிரி எழுதிப் பலரின் வாழ்க்கையை நிர்க்கதியாக்கியுள்ளார்கள். ஒரு அகதிக் கோரிக்கை ஏற்கப்படுவதற்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று தனிப்பட்ட ரீதியில் ஒருவருக்கு உள்ள உயிராபத்து சரியான ஆதாரங்களுடன் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்படவேண்டும். இரண்டாவது கொடுக்கப்பட்ட விண்ணப்பம் நம்பகத்தன்மையாக இருக்கவேண்டும்.

நீங்கள் நேர்மையாக உங்கள் விண்ணப்பத்தில் உள்ளவற்றுக்குப் பதில் அளித்திருப்பதால், தனிப்பட உயிராபத்து இருக்கும் என்றும் நீதிபதி கருதும் பட்சத்தில் அவர் அகதிக் கோரிக்கையை ஏற்கச் சந்தர்ப்பம் அதிகம் என்று நம்புகின்றேன்.

ஆம் அண்ணா,

ஆனால் நான் கேஸ் எழுதுபவரிடம் கொடுக்கவில்லை. மொழிபெயர்ப்பாளரிடம் கொடுத்தேன். அவர்கள் பகுதி நேர வேலையாக கேஸ் எழுத முடிவெடுத்து விட்டார்களோ தெரியவில்லை. எங்கள் கேஸில் தான் எழுதி பழகுகிறார்கள். :icon_idea:

அத்துடன் இங்கு எவராக இருந்தாலும் ஆரம்பத்திலேயே முழு பணத்தையும் வழங்க கூடாது. அட்வான்ஸ் கொஞ்சம் கொடுத்து விட்டு பின்னர் தான் மீதி பணத்தை வழங்க வேண்டும்.

உங்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி. :)

Edited by துளசி

  • தொடங்கியவர்

உங்கள் வழக்கில் உங்களுக்கு வெற்றி கிட்ட இறைவனை வேண்டுகிறேன். உங்கள் துன்பம் மிகவும் மனதை தொட்டது. எம்மவர்களின் அலட்ச்சிய போக்கும் காசில் மட்டும் குறியாய் இருக்கும் தன்மை தான் பல கேஸ்கள் தோற்பதற்கு காரணம். கொஞ்சம் நேரம் எடுத்து மனிதாபிமானத்துடன் எம்மவர்கள் நடந்து எம் மவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. :)

நீங்கள் சொல்வது சரி. தொட்டதுக்கும் பணம் வாங்குவதற்கு நிற்கிறார்கள். பலரின் பெயரை அவதானித்து வைத்திருக்கிறேன். அத்துடன் தம்மை விட்டால் வேறு யாரிடம் போக போகிறார்கள் என்ற திமிர் காட்டுவார்கள்.

இவர்களை பற்றி மக்களுக்கு தெரியாதா என்று ஒருவரிடம் கேட்டேன். அவர் கூறினார். தெரிந்தும் போகிறார்கள். ஏனென்றால் பொதுவாக அனைவரும் இப்படி தான் நடக்கிறார்கள் என்பதால் என்று....

நல்லவர்களுக்கும் காலம் வர வேண்டும். இவர்கள் எல்லாம் தூக்கி எறியப்பட வேண்டும்...

உங்களது பதிவை வாசித்து முடிக்கும்போது மனது கனக்கிறது. உங்கள் நிலையினை தத்ருபமாக எதியிருக்கின்றீர்கள்;.

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லை என்றபோதும் சரியாக அணுகப்படுவதற்கும் நேர்மையாக அணுகப்படுவதற்கும் இடையில் துரதிஸ்ரவசமாக வேறுபாடுகள் இருக்கவே செய்கிறன. ஏனோ இந்தத் திரியில் கூறத்தோன்றுவதால் பின்வருவனவற்றைக் கூறுகிறேன். தவறெனில் மன்னித்துக் கொள்ளுங்கள்.

வழக்கோடு தொடர்புபட்ட நீதிபதிகளும் மற்றைய அலுவலர்களும் அவர்களும் என்னதான் மனிதர்களாக இருந்தாலும், ஒவ்வொரு வழக்குச் சார்ந்தும,; ஒவ்வொரு கேசையும் வாசித்து உள்வாங்கி தமது உள்ளம் என்ன சொல்கிறது என்று முடிவெடுப்பதற்கான சாத்தியங்களோ அல்லது உரிமையோ அவர்களிற்கு மிக அரிது. அவர்களிற்கு இது வேலை. இன்ன இன்ன பிறிசிடென்ஸ் (முன்னுதாரணம்) இன்ன இன்ன புள்ளிகள் இருக்கின்றனவா என்று ஒரு சரிபார்த்துக்கொள்ளும் சிட்டிகையை வைத்துப் பேனாவால் இருக்கா இல்லையா என்று குறித்துக் கொள்வதைப் போலத் தான் அவர்களால் பார்க்கமுடியும். மேலும், அவர்கள் சரிபார்க்கும் சிட்டிகை எப்பெப்போ எப்படி மாறும் என்பதிலும் அவை சார்ந்த அறிவுறுத்தல்களிலும் ஒரு அரசின் பல்வேறு அருவ உருவ கரங்கள் தொடர்புபட்டிருக்கும். இந்நிலையில், பணம்பெற்று வழக்கு எழுதும் மொழிபெயர்ப்பாளர் செய்யக்கூடியது குறித்த நேரதத்தில் அமுலில் இருக்கும் மேற்படி சரிபார்க்கும் சிட்டிகைக்குப் பொருந்தும் ஒரு வழக்கை உங்களைச் சார்ந்து பின்னக்கூடியது மட்டுமே என்றே எனக்குத் தோன்றுகிறது. இங்கு மொழிபெயர்ப்பு என்பது வெறும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு என்பதாக இருக்கமுடியாது. இங்கு ஆங்கிலம் அல்ல உண்மையில் மொழி, ஆங்கிலம் வெறும் கருவி மட்டும் தான். உண்மையில் இங்கு மொழி என்பது விற்பனையாகும் கதை எப்படி இருக்கவேண்டும் என்ற விதி தான். இதனால், ஆங்கிலம் தெரிந்தால் வழக்கெழுதலாம் என்று தோன்றவில்லை.

கருத்துக்கு நன்றி. :)

நான் இருக்கும் நாட்டில் ஆங்கிலம் மொழியல்ல. அத்துடன் நான் வழக்கு எழுத கொடுக்கவில்லை. மொழிபெயர்க்க தான் கொடுத்தேன். அவர்கள் அதற்குள்ளும் வழக்கு எழுத ஆசைப்படுகிறார்கள் :icon_idea: .... என்ன செய்ய?

சில நாடுகளில் நீதிபதிகள் கையில் முடிவு இல்லை. வழக்கு எத்தனை points கொண்டிருக்கிறது என்பதை பொறுத்தும் உண்மை சொல்கிறார்களா என்பதை பொறுத்தும் முடிவு இருக்கும்.

சில நாடுகளில் பிரச்சினையை புரிந்து கொண்டவுடன் முடிவெடுத்து விட்டு தான் எம்மை அழைத்து விசாரிப்பார்கள். இந்த நிலையில் எவ்வளவு points கொடுத்தாலும் சிறிய ஒரு பிழையை வைத்து reject பண்ணுவார்கள். அல்லது எவ்வளவு பிழை விட்டாலும் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று அவர்கள் கருதினால் அப்பிழைகளை கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.

உங்கள் வழக்கில் உங்களுக்கு வெற்றி கிட்ட இறைவனை வேண்டுகிறேன்

உங்கள் வேண்டுதலுக்கு நன்றி. :)

நன்றாக எழுதியுள்ளீர்கள்.துணிச்சலான பெண்ணுக்கு விசா கிடைக்க வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி. ஆசிரியர்களின் ஆசீர்வாதம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். :)

விசா கிடைக்க என்னுடைja வாழ்த்துக்கள் கலந்த பிரார்த்தனைகளும்

பிராத்தனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. :)

எல்லாம் நல்லபடியாக நடக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கன்றேன்.

காதலைக் காணவில்லை.

பிரார்த்தனைக்கு நன்றி. :) என்னை தேடியமைக்கும் நன்றி. நீங்கள் தேடியதால் தான் நானும் அனைவருக்கும் இப்பொழுது பதில் கருத்து எழுதுவம் என்று வெளிக்கிட்டன்.

[size=5]சந்தோசமான செய்தி கிடைக்கும், கிடைக்கும், கிடைக்கும்!!!!![/size] :)

கிடைக்கும் என்று உறுதியா சொல்கிறீர்கள். சாத்திரம் பார்ப்பீர்களோ தெரியவில்லை. :lol: நம்பிக்கையூட்டும் வார்த்தைக்கு நன்றி. :)

Edited by துளசி

  • தொடங்கியவர்

இதை வாசிக்கும் போது மிகவும் கஸ்டமாக இருந்தது. இதனை துளசியினுடைய தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கவில்லை. புலம்பெயர் தேசங்கில் குறிப்பாக இங்கிலாந்தில் ஏராளனமானவர்கள் தங்கள் எதிர்காலம் நிச்சயிக்கப்படாமல் பல காலமாக வழக்கு இழுபடும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்குகளுக்காக பெருமளவு பணம் தேவைப்படும் நிலையில் ஒரு தொழிலையும் சட்டரீதியாகச் செய்ய முடியாத காரணத்தால் நம்மவர்களால் மிகக் குறற்நத சம்பளத்திற்கு அமர்த்தப்படுிகிறர்கள். அதைவிட மிகக் கொடுமையான விடயம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் சட்டத்தரணைிகளும்: பணம் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு இவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது தான். (சிலமாதங்கள் ஒரு சட்டத்தரணியின் அலுவலகத்தில் வேலை செய்த அனுபவத்தில் சொல்கிறேன்.)

அதைவிட இத்தனை கஸ்டங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நம்மவர்களே செய்யும் ஏளனங்கள் கொடுமையிலும் கொடுமை.

துளசி, நம்பிக்கையோடு இருங்கள்.நல்ல தீர்ப்பே வர வேண்டும் என்று பலரும் விரும்புகிறோம். தீர்ப்பு பாதகமாக அமைந்தாலும் உடனடியாக நாட்டை விட்டுதிருப்பி அனுப்ப மாட்டார்கள். அதற்குள்ளாக நம்பிக்கையான விசயம் தெரிந்தவர்க் மூலமாக நல்லதொரு சட்டத்தரணியின் உதவியோடு மேன்முறையீடு செய்யலாம்.

எல்லாம் நல்லதாக நடக்கட்டும்....

நீங்கள் சொல்வது சரி தான். இங்கு பலரும் பணம் பறிக்கும் நோக்குடன் தான் செயற்படுகிறார்கள். நல்லவேளை இங்கு இன்னும் தமிழ் சட்டத்தரணிகளை நான் காணவில்லை. (இருக்கிறார்களோ தெரியவில்லை)

நான் இந்த நாட்டு சட்டத்தரணியை தான் பிடித்தேன். அவர்கள் பொய்யான கேஸை விரும்ப மாட்டார்கள். அத்துடன் தமிழர்களளவுக்கு பணம் பறிக்க மாட்டார்கள்.

நம்பிக்கையூட்டும் வார்த்தைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. :)

எல்லாம் நன்றாக அமையட்டும்.

[size=1][size=4]வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்த முள்ளுக்காடு. எதையும் கடந்து செல்லும் மனத்துணிவும் பக்குவமும் உள்ளவர்கள் நீங்கள். உங்களைப்பற்றி எனக்கு கவலை இல்லை. [/size][/size]

நன்றி உங்கள் வாழ்த்து மற்றும் நம்பிக்கையூட்டும் வரிகளுக்கு.... :)

என்றும் சந்தோசமாக இருக்க மகிழ்சியான செய்தி வரும் அதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் துளசி.

வாழ்த்துக்கும் நம்பிக்கையூட்டும் வரிக்கும் நன்றி அக்கா. :)

உங்களுக்கு விசா கிடைத்துவிட்டது......கவலையை விடுங்கள் ...ஏனனில் இறைவன் மனிதர்களை துன்பம் ,சோதனை மிகுந்த கரடுமுரடான பாதை வழியே அழைதுச்சென்றுதான் ....இன்பம் என்னும் சிகரத்தில் உயர்த்தி வைப்பான்...அப்போ உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து துன்பங்களும் விலகி அமைதியடைவீர்கள் .....நானும்

எல்லாம் வல்ல அந்த இறைவனிடம் உங்களுக்குரிய தேவைக்காக வேண்டுகிறேன்.....

கேளுங்கள் தரப்படும்........தட்டுங்கள் திறக்கப்படும்...........தேடுங்கள் கிடைக்கப்பெறும்........[ ஜேசு பிரான்]

இது மதப்பிரச்சாரம் அல்ல.........ஒவ்வொரு மனிதத்தின் மனக்குமுறல்களும் .........

உங்கள் வேண்டுதலுக்கு நன்றி. :) என்னைவிட நீங்கள் எனக்கு விசா கிடைக்கும் என்று உறுதியாக இருக்கிறீர்கள். :lol:

இவ்வளவு துணிச்சலான பெண்ணாயிருக்கின்றிர்கள். ஆகவே உங்களுக்கு நிச்சயமாக நல்ல செய்திகிட்டும்.

உங்கள் நம்பிக்கையூட்டும் வரிகளுக்கு நன்றி. :)

காதல், உங்களுக்கு நிச்சயம் நல்லதொரு பதிலே கிடைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்.

உங்கள் நம்பிக்கையூட்டும் வரிகளுக்கு நன்றி அக்கா. :)

வாழ்க்கை என்பது தொடர்ச்சியான ஓர் செய்முறை. ஒருநாளும் பூரணத்துவத்தை/முழுமையை நாம் பெறமுடியாது. வாழ்க்கையின் எல்லாக்காலத்திலும் ஏதாவது பிரச்சனைகள், தவிப்புக்கள், திருப்தியின்மைகள், குறைபாடுகள் தொடர்ந்துகொண்டே காணப்படும்.

ஒருவேளை உங்களுக்கு தொடர்ந்து தங்க அனுமதி கிடைக்காவிட்டாலும், உங்கள் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள், ஆற்றல்கள் கிடைத்துள்ளன என்பதை எப்போதும் நினைத்துக்கொள்ளுங்கள். வெளிநாடு வந்தபோது பெற்ற அனுபவங்களை வைத்து உங்கள் வாழ்க்கையை இன்னும் செழிப்பாக முன்னேற்றிக்கொள்ளுங்கள்.

தொடர்ந்து தங்க நிரந்த அனுமதி இந்த நாட்டில் கிடைக்கும்போது வராத முன்னேற்றம் அனுமதி மறுக்கப்படும்போது கிடைக்கலாம். இங்கு நான் கனடாவில் எத்தனையோ பல குடும்பங்களைப் பார்க்கின்றேன். எத்தனை சச்சரவுகள், நோய்கள், பிடிபாடுகள், மன அழுத்தங்கள்... அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் கனடாவுக்கு வந்து ஊரில் இல்லாதவகையில் புதினமாக என்னத்தை வாழ்ந்து கிழிக்கின்றார்கள் என்றும் யோசிப்பதுண்டு.

அதற்காக, தற்போதைய முயற்சியைகைவிடவேண்டும் என்று இல்லை. திட்டம் 01, திட்டம் 02, திட்டம் 03, திட்டம் 04 என பலமாதிரியான பாதைகளையும் கடப்பதற்கு, சவால்களை எதிர்கொள்வதற்கு உங்களைத்தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது தொடர்ச்சியான ஓர் செய்முறை.

உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி அண்ணா. :)

மகளே துளசி

நம்பிக்கை தான் வாழ்க்கை.நல்ல முடிவு கிட்ட எல்லோரும் வேண்டுகிறோம்.

ஈழப்பிரியன் அண்ணா (தந்தையே :lol:) நன்றி உங்கள் அன்பான நம்பிக்கையூட்டும் வார்த்தைக்கு.... :)

  • தொடங்கியவர்

உங்களின் ஒருசில வசனங்கள் சிந்திக்கவைத்தாலும்...சகலதும் நலமாக முற்றுப்பெறவேண்டுகின்றேன். :)

உங்கள் வேண்டுதலுக்கு நன்றி. :) உங்களை சிந்திக்க வைக்கும் வசனங்கள் எவை? சந்தேகம் ஏதும் இருந்தால் பட் பட் என்று கேட்டு தீர்த்து கொள்ளுங்கோ.

இறைவன் அருள் கிடைக்க வேண்டுகின்றேன்.....எல்ல இடமும்..இதுதான் நடக்கிறது.....கவலை வேண்டாம்...

உங்கள் வேண்டுதலுக்கு நன்றி. :) எல்லா இடமும் நடக்கிறது தான். ஆனால் தமிழர்களே தமிழர்களுக்கு துன்பம் கொடுக்கிறார்கள் என்பது தான் கவலை.

வந்த சில நாட்களிலேயே அனைவர் மனங்களிலும் இடம் பிடித்துவிட்டிருந்தீர்கள்.உங்களுக்கு நல்லதே நடக்கும் என வேண்டுகின்றோம் .

உங்கள் வேண்டுதலுக்கு நன்றி. :) (இப்பொழுது என்னை அனைவருக்கும் பிடிக்கிறதா என்பது சந்தேகமே... :D )

துளசி,

கலங்காதீர்கள்.

உங்கள் பிரச்சினையினை நீங்கள் தான் செய்ய வேண்டுமே அன்றி வேறு ஒருவரும் இல்லை.

பலருக்கு அகதிகள் தொடர்பான வழிமுறைகள் (சிஸ்டம்) சரியாகப் புரியாமையினால், சில அபத்தர்களிடம் சிக்கி தமது ஒரே ஒரு முறை கிடைக்கக் கூடிய அருமையான சந்தர்ப்பத்தினை இழந்து விடுகின்றனர்.

முதலாவதாக இந்த வகையான வழக்குகளில் வெற்றி அடைந்தர்வர்களிடம் நீங்கள் பேசி விடயங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

என்ன வகையான விடயங்களை உங்கள் வழக்கில் இணைப்பதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தினை பலமாக்க முடியும் என அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், நீங்கள் கொடுக்க கூடிய விடயங்கள் இலங்கையிலே, பிரித்தானிய தூதராலய முகவர்களினால் விசாரிக்கப் பட்டு உறுதி செய்யப் படுகின்றன என புரிந்து கொள்ளுங்கள்.

எக்காரணம் கொண்டும் உங்கள் solicitor அல்லது மொழி பெயர்ப்பாளர் உங்கள் விடயத்தில் புதிதாக எதுவும் செய்ய முடியும் என கருதாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களைப் போல் பலருக்கு வேலை பார்ப்பதால், புதிய, வித்தியாசமான விடயங்களை உங்கள் வழக்கில் சேர்க்க முடியாது. ஆகவே நீங்கள் தான் சிந்தித்து சரியான, வேறு பட்ட, வித்தியாசமான விடயங்களை சேர்க்க வேண்டும்.

முடிந்தால் உங்கள் வழக்கினை எவ்வாறு சரியான வழிமுறைக்கு கொண்டு வர முடியும் என ஆற அமர இருந்து யோசியுங்கள். ஏற்கனவே கொடுக்கப் பட்ட விடயங்கள் தவறான மொழி பெயர்ப்பு என சொல்ல முடியுமா என பாருங்கள்.

உங்கள் விடயங்களை நீங்கள் முதலில் தமிழில் எழுதுங்கள். அதனை மொழி பெயர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். freelancer.com, elance.com, போன்ற பல இணையத் தளங்களில், இலங்கை, இந்தியாவில் இருந்து அருமையான மொழி பெயர்ப்பு குறைந்த விலையில் செய்கின்றனர்.

நீங்கள் உங்கள் வழக்கில் முழுவதுமாக இறங்கி, அடுத்தவரை தேவைக்கு மட்டும் உபயோகப் படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

எனது வழக்கில் லண்டனில் இருந்த அநேகமான (32) தமிழ் சொலிசிட்டர்களிடம் போய் இருந்தேன். எவருமே நான் சொன்னவாறு கேஸ் எழுத தயாராக இருக்கவில்லை. எனக்கும் அரைத்த மாவினை அரைத்தால் வெல்ல முடியாது என தெரிந்து இருந்தது.

பின்னர் ஒரு வெள்ளையர் நிறுவனத்திற்கு எனது கேஸ் குறித்து கடிதம் போட, imigration case செய்வதில்லை என முடிவு செய்திருந்த அந்த நிறுவனம், எனது கேஸ் வித்தியாசமான முறையில் எழுதப்பட்டு உள்ளது என கூறி எடுத்துக் கொண்டனர்.

அந்த வருடம் அகதி அந்தஸ்து வழக்கப் பட்ட ஒரே இலங்கையர் நான் மட்டுமே. (அப்போது எல்லோருக்கும் விசா கொடுத்துக் கொண்டிருந்தனர். எனவே ஒருவரும் பிரச்சனை இல்லது விசா பெற்று ஏழு வருடத்தில் நிரந்தர வதிவுருமை எடுத்த காலம் அது).

எனவே எனது அனுபவத்தில் நான் சொல்லக் கூடியது என்னவெனில், சிஸ்டம் எவ்வாறு இயங்குகின்றது என முதலில் புரிந்து கொண்டு, உங்கள் விபரத்தினை எவ்வாறு வித்தியாசமாக, ஒன்றுக்கு ஒன்று பொருந்தக் கூடியவாறு அமைக்கலாம் என தீர்மானியுங்கள்.

வெற்றி நிச்சயம்.

காலம் சென்ற ஊடகவியலாளர் தராகி சிவராம், மொழி பெயர்ப்பாளர்களின் கவனம் இல்லா வேலை குறித்து ஒருமுறை எழுதி இருந்தார்.

'You lost the woods for the tree' என்பது ஒரு ஆங்கில சொல்லடை. கருத்து: மரத்தினை மட்டும் பார்த்த உன்னால் அதன் பின்னால் இருந்த பெரும் தோப்பினை பார்க்க முடியவில்லையே' என்பதாகும்.

தனது கட்டுரை ஒன்றில் பயன் படுத்திய இந்த சொல்லடையை, தமிழ் பத்திரிகைக்காக மொழி பெயர்த்த பத்திரிகையாளர், அதனை 'அருமையான மரம் ஒன்றினை விறகுக்காக இழந்தது போல' என குறித்திருந்தார்.

மேலே நான் குறித்த தளங்களில் ஒருவரின் வேலை தரம் குறித்து 'feedback' கொடுத்து இருப்பார்கள். அது உங்களுக்கு, தேர்வில் உதவும்.

மிகவும் கஷ்டப் பட்டு இங்கு வந்து, பின்னர் அடுத்தவரின் கவனையீனத்தில் எமது வாழ்க்கையினை ஒப்படைப்பது மிகவும் அபத்தமானது.

நான் பிரித்தானியாவில் இல்லை. அத்துடன் பொய்யாக கேஸ் எழுதவில்லை. உண்மை பிரச்சனைகளை தான் கூறியிருந்தேன். பத்து, பதினைந்து வருடமாக இங்கு இருக்கும் தமிழர்களை கேட்டு தான் மொழிபெயர்ப்பாளரின் பெயரை தெரிந்து கொண்டேன். மிகவும் பிரபலமான மொழிபெயர்ப்பாளர் வேறு. அவர்களே தவறு விடுகிறார்கள்.

உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. :)

  • தொடங்கியவர்

சத்தியமாக இந்த பதிவை லைக் பண்ண மனம் வரவில்லை சகோதரி,இதே தடைகளைத்தாண்டி வந்ததால் அதன் கஸ்டங்கள்,வேதனைகள்,தார்ப்பரியங்கள் புரியும். உங்களுக்கு எல்லாம் நல்லதாக நடக்க எல்லாருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மனதைத்தளரவிடாதையுங்கோ அது தான் முக்கியம்.

இதே போலத்தான் எனக்கும் நடந்தது ஆனால் எல்லாம் நானே தான் செய்தேன்.

நான் வெளிநாடு போகவேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை எதிர்பாராத விபத்து.

சிவனே என்று படிச்சிட்டு,ஊர் பொடியளோடை மதகிலும்,பாலத்திலும்,ரோட்டிலும் இருந்து அரட்டை அடிச்சு உறவுக்கார வைத்தியர் ஒருவரின் டிஸ்பென்ஸரியில் அவருக்கு உதவியாக அப்பப்ப நின்று பழகி அவற்றை புத்தகங்களைத்தான் வாங்கி படிச்சு கொண்டு இருந்தனான். தினமும் பஸ்சில் போய் வரும்போது வல்லை,இருபாலையில் எல்லாம் ஆமி மறிச்சு சோதனை செய்யும் போது பாக்கில் இருக்கும் ஸ்டெதஸ்கோப்,மாணவர் அடையாள அட்டை பார்த்ததும் உடனே போய் பஸ்சில் ஏறச்சொல்லுவான். வயது போனவர்கள் கூட இறங்கி நடக்கும் போது கல்விக்குரிய மரியாதை தரப்படும் போது மனதில் வரும் சந்தோசம் வார்த்தையில் சொல்லவே முடியாது.

இது நீண்ட காலம் நிலைக்கவில்லை ஒன்றுவிட்ட அண்ணா இனந்தெரியாதவர்களால் காரணம் தெரியாமல் சுட்டுக்கொல்லப்பட்டதும் சிறிது பயம் காரணம் கோவத்தில் யார் சொன்னாலும் கொலை செய்யுமளவுக்கு நிலைமை இருந்தது. நான் வேறை உள்ளை இருந்த சில இயக்க தொடர்புகள்,ஊர்கோவில் நிர்வாகத்தோடு சண்டை போஸ்ரர் ஒட்டின பிரச்சனை என்று இருந்தன். இதுக்குள்ளை நான் பழகுற டிஸ்பென்ஸரியில் என்னுடைய பெயரை கேட்டு யாரோ விசாரித்தார்களாம்,என்னை வெள்ளை வான் தேடுது என்று ஊரிலை கதை. (ஆனால் உண்மையில் என்னை தேடவில்லை என்னுடைய பெயரில் இருந்த இன்னொருத்தரை என்பது பிறகு என்னுடைய பெயரில் இருந்தவரை வெள்ளை வான் கடத்தின பிறகு அதுவும் நான் ஜேர்மனிக்கு வந்த பிறகு தான் தெரியும்)

அம்மா சொல்லிட்டா என் பிள்ளை சாகுறதை பார்க்க கூடாது நீ இயக்கத்துக்கு போ என்று(ஜீவா இதை சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை,சத்தியமாக உண்மை) ஆனால் பாதை பூட்டு போக முடியவில்லை. பிறகு தெரிஞ்ச ஒருத்தர் மூலம் சக்கோட்டை ஆமி பெரியவனை பிடிச்சு பாஸ் எடுத்து கொழும்பு வந்து உடனையே பாஸ் போட் எடுத்து சிங்கப்பூருக்கு வந்தன். 15 நாள் விசா தர நான் மலேசியா போட்டேன் 6 மாதத்துக்கு மேல் மலேசியா,சிங்கப்பூர் என்று மாறி,மாறி இருந்து அங்கை ஒரு ஏஜென்சி ஏத்துறேன் என்று ஏத்தலை. எனக்கு வேறை வழி தெரியவில்லை திரும்ப கொழும்பு போய் வேறு ஒரு ஏஜென்சியை நானே பிடித்து பல்கேரியாக்கு மருத்துவம் படிக்க என்று சொல்லி விசா எடுத்து தென்னாபிரிக்கா ட்ரான்சிற்றிலை ஜேர்மனி ப்ராங்போட் வந்தேன். ஜேர்மனி வரும் போது கூட நான் ரிக்கட்டை மட்டும் தான் கிழித்தேன். பாஸ்போட்,அடையாள அட்டை,மாண்வர் அடையாள அட்டை,டெபிட்காட் எல்லாமே வைத்திருந்தேன். விமானத்தில் இருந்து இறங்கி வர ஜேர்மன் போலிஸ் பாஸ்போட் கேட்க குடுத்தேன். தட்டி பார்த்திட்டு விசா எங்கை என்று கேட்க இல்லை என்றேன்.

எப்படி வந்தாய் என்றால் தெரியாது என்றேன். உடனே என்னை விமானத்திற்கு கூட்டிச்சென்று எந்த இருக்கையில் அமர்ந்தாய் என்று கேட்க 20K என்று இருக்கையை காட்ட கூட்டி எல்லாம் செக் பண்ணிட்டு

வெளிய கொண்டு வந்து என்ன வேணும் என்று கேட்டான்? ஏன் வந்தாய்? நான் சொன்னேன் ஊரிலை இருக்க முடியாது அசைலம் வேணும் என்று.

உடனை என்னை ஒரு அறைக்கு கூட்டி சென்று இருக்க வச்சு குடிக்க தண்ணி தந்து கேட்டான். எப்படி வந்தாய்? என்ன மாதிரி என்று ? ஆங்கிலம் தெரிஞ்சதால் பிரச்சனை இல்லை எல்லாம் சொல்லி முடிய 2 போலிஸ் காவலோடு பஸ்ஸில் ஏற்றி ஒரு இடத்திற்கு கொண்டு போய் பிங்கர்பிரின்ட் எடுத்திட்டு என்னுடைய ஆவணங்களை வாங்கிவிட்டு விமான நிலைய காம்ப்பிற்கு கொண்டு வந்தார்கள். மறு நாள் சொன்னார்கள் விசாரணை இருக்கு சட்ட வல்லுனர் தேவையா என்று நான் சொன்னேன் தேவை இல்லை என்று ஆனால் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அவர்களே கூட்டி வந்தார்கள். மறுநாள் விசாரணை நான் புலியையும் சொல்லவில்லை,ஆமியையும் சொல்லவில்லை. இனந்தெரியாத நபர்களால் பிரச்சனை என்று சொல்ல மொழிபெயர்ப்பாளர் சொன்னார் இப்படி சொல்லாதை விசா கிடைக்காது ஆமி,இயக்கம் 2பேரையும் சொல்லு என்று. நான் சொன்னேன் பரவாயில்லை நான் சொன்னதை அப்படியே மொழிமாற்றச்சொல்லி. எல்லாம் முடிந்ததும் மறுபடி பொலிஸ் வாசிச்சுக்காட்ட சரி சொல்லி கையெழுத்து வைக்க 2 நாளின் பின் வேறு இடம் மாற்றினார்கள் அங்கு 2கிழமை இருக்க மறுபடி டுசில்டோவ் இல் விசாரணை அதுக்கும் அவர்களே மொழிபெயர்ப்பாளரை வைத்திருந்தார்கள். சொன்னதையே அப்படியே ஒப்புவித்தேன். முடிந்து வெளியே வர 3மாத விசா தந்து வேறு காம்புகு போக சொன்னர்கள் அங்கு போய் ஒரு மாத காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் அவர்களே வீடு எடுத்து தந்தார்கள் அங்கு தான் இருக்க முடியும் வெளியே செல்வதென்றால் அனுமதி பெற்று போக வேணும். படிக்க போறேன் என்று சொல்லி போக 3மாத விசாவிலை படிக்க முடியாது என்றார்கள்.

1€ வேலைக்கு போக சொல்லி கடிதம் வந்தது 3,4 மாதம் போனேன் வீதி துப்பரவு பணி. அப்போ தான் செத்தாலும் ஓரிலை இருந்திருக்கலாம் என்று தோணிச்சுது. தலை எழுத்தை நினைத்து நொந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டேன். திரும்ப போய் படிக்கட்டா என்று கேட்டேன். நல்ல காலம் நான் அந்த வேலை செய்ததால் கருணை காட்டி என்னை 3மாதம் ஜேர்மன் படிக்க அவர்களே காசும் குடுத்து,போக்குவரத்து செலவும் தந்தார்கள். அதற்கு பிறகு படிக்க இந்த விசாவுக்கு அனுமதி இல்லை என்று சொல்லியாச்சு 2008, 5ம் மாதம் வந்தனான் 2010 ரிஜெக்ட் பண்ணி வந்திச்சுது அதுக்கு பிறகு லோயரிடம் போய் வழக்குக்கு கோட்டுக்கு கூப்பிட போனேன். எந்த மாற்றமும் இல்லை அதையே சொன்னேன். நீதிபதி கேட்டார் நீ சொன்னதை நம்புறேன். ஆனால்

சிங்கப்பூரில் இருந்து திரும்ப கொழும்பு போய் ஜேர்மனி வந்டிருக்கிறாய் பிரச்சனை என்றால் எப்படி கொழும்பு போவாய் என்று? அப்பத்தான் இந்த பாஸ்போட்டை கிழிச்சிருந்திருக்கலாம் என்று தோன்றிச்சு.

நான் சொன்னேன் இல்லை கொழும்பிலை ஒருமாதம் தான் செல்வாக்குள்ள ஒருத்தரை பிடிச்சு தங்கினான். பிரச்சனை இல்லாமல் மருத்துவம் படிச்சிட்டு இங்கை வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொருளாதாரத்தில் அவ்வளவு பிந்தங்கி இல்லை அண்ணா ஜேர்மனியில் இந்த இடத்தில் வசிக்கிறான்,மற்ற அண்ணா லண்டனில் இந்த இடத்தில் என்று சொல்லி சகல தகவல்களையும் குடுத்தேன்.

விசாரணை முடிந்து போக சொல்லியாச்சு 2011 தை வர சொல்லி கடிதம் வந்தது போக அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மனிதாபிமான அடிப்படையில் ஜெர்மனியில் தங்க அனுமதிக்கப்பட்டு எனது இலங்கை பாஸ்போட்டில் விசா தந்தாங்கள். 25வது சட்டம்3வது பிரிவின் கிழ் ஆனால் குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கலாம்,மேற்படிப்பு படிக்க முடியாது என்று.

அங்கை திரும்ப நான் போய் படிக்க போறேன் என்று கேட்க நாங்கள் உதவி செய்ய முடியாது வேலை செய்ய சொல்லி மஞ்சள் நிற விண்ணப்பம் தந்தார்கள். நான் தெரிஞ்ச ஒருத்தரைக்கொண்டு மக்டொனாட்ஸ் இல் வேலை எடுத்து குடுத்திட்டு ஒரு மாதம் போனதும் சொன்னேன். எனக்கு சம்பளம் காணாது வேறு நல்ல வேலை இருக்கு வேறு இடம் மாறப்போகிறேன் என்று அதற்கு அவர்கள் வேலை எடுத்து வா என்று சொல்ல நானும் அண்ணாவின் நீண்ட கால இத்தாலி நண்பன் ஒருவன் தனது உணவகத்தில் நிரந்தர வேலையும் அதிக சம்பளமும் தருவதாக எழுதித்தந்தான் அதை குடுத்து அந்த இடத்திலிருந்து மாறி இங்கை வந்ததும் இந்த நிர்வாகம் எனக்கு இங்கை தான் இருக்க வேண்டும் என்பதை மாற்றி எங்கையும் இருப்பதற்கான அனுமதியை தந்தார்கள்.

மற்ற நாடுகளைப்பற்றி தெரியாது ஜேர்மனியில் அரசாங்க உதவி பெறாமல் வேலை செய்தால் எல்லாம் இலகுவில் கிடைக்கும். இப்ப வாழ்க்கையே அப்படியே தலைகீழாய் மாறி விட்டது.

றோட்டில் நடக்கும் போது ஹலோ சொல்ல நாலு பேருக்காவது என்னை தெரியுமளவுக்கு மாறியாச்சு.

ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக சொன்னார்கள்,அப்படிச்செய்,இப்படிச்செய் என்று. எல்லாத்திலும்,எப்போதும் என் முடிவு தான். சரி,என்றாலும், பிழை என்றாலும் நானாக தேடிக்கொண்டது என்று எதையும் செய்யும் தைரியம் வந்து விட்டது.

புலம்பெயர்ந்து வந்து நான் கண்ட அனுபவம் என்றால் தலையே போனாலும் கவலை இல்லை என்ற வைராக்கியமும். எதைச்செய்தும் என்னை நிலைநாட்டக்கூடிய தைரியமும் வந்து விட்டது. இது ஊரில் இருந்திருந்தால் சாத்தியமாய் இருந்திருக்குமா தெரியவில்லை,அந்த வகையில் புலம்பெயர்வாழ்வுக்கு நன்றி தான் சொல்ல வேணும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதில் சொல்ல முடியாத அளவுக்கு மனவலி இருந்தது, தனிய இருந்தே பழக்கப்படாத நான்,அழுது தொலைத்த நாட்கள் போய் அனுப்ப போறியோ,வச்சிருக்க போறியோ போடா..போய் பண்ணுறதை பண்ணு என்ற நிலைக்கு தைரியசாலி ஆக்கிவிட்டது.

நீங்களும் விசா கிடைத்தாலும் உங்களை முதலில் நிலைநிறுத்தப்பாருங்கள். எல்லாரும் சொல்கிறார்கள் என்று எல்லாத்தையும் பரீட்சித்துப்பாராதீர்கள். இயன்றளவு சொந்தக்காலில் நில்லுங்கள், தீர்க்கமான முடிவுகளாய் எடுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும். :)

பல வருடங்களாக பலவிதமாக துன்பப்பட்டிருக்கிறீர்கள். வாசிக்கும் போது கவலையாக இருந்தது. எனக்கு ஏஜென்சி மூலம் வந்து பிரச்சினைப்பட விருப்பமில்லை. அதனால் தான் tourist விசாவில் வந்தேன். நான் கொடுத்து வைத்தவள் போலிருக்கு. நிச்சயம் உங்கள் பிரச்சினைகளுடன் ஒப்பிடுகையில் என் பிரச்சினை 1% ஆக தான் இருக்கும்.

நான் விமான நிலையத்தில் வைத்தே எனது வழக்கை சொல்லாமல் விட்டதால் தான் இப்படி கேஸ் எழுதி அனுப்ப வேண்டியிருந்தது. அதுவும் ஆங்கில மொழியில்லை. ஆங்கிலமென்றாலும் ஓரளவு வாசித்து என்ன எழுதப்பட்டிருந்தது என்று விளங்கிக்கொண்டிருந்திருப்பேன்.

ஏனைய விடயங்கள் நானாக தான் செய்து கொண்டிருக்கிறேன். வேறு யாரேனும் ஒருவரின் உதவியில் வந்திருக்கும் பலர் எதை கேட்டாலும் "தெரியாது, சித்தி தான் செய்தவா, மாமா தான் செய்தவர்" என்பதை போல் சொல்வதை கேட்டு கேட்டு அலுத்து போய் விட்டது. அவர்களை விட எனக்கு கொஞ்சம் தெரியும். :)

உங்கள் பிரச்சனைகளை கண்டு like பண்ணவில்லை. நீங்கள் சவால்களை எதிர்கொண்ட விதம் எனக்கு தரும் ஆலோசனைகளுக்காக like போட்டிருக்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

இத்திரி மூலம் உங்கள் கதையை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நானும் ஏதோ சின்ன பெடியன்.. ஹாயா fun அடிச்சுக்கொண்டு திரியுது என்று நினைத்தன். :lol: உங்களுக்குள் எரிமலை குழம்பு கொதித்துக்கொண்டிருந்தது என்று இன்று தான் தெரியும். :(

துளசி நீங்கள் டூரீஸ் விசாவில் தானே வந்தனீங்கள் அதிக காசை செலவழிச்சு அலைச்சல்பட்டு வந்திருக்க மாட்டீங்கள் தவிர உங்களுக்கு கொஞ்ச வயது என்றும் ஊரில் பல்கலைகழகம் கிடைத்தது என்றும் வேறு திரிகளில் எழுதி உள்ளீர்கள் ஆகவே நீங்கள் ஊருக்கு திரும்பி போனாலும் உங்களால் அம்மா,சகோதரங்களோடு இருந்து படித்து நல்லதொரு நிலைமைக்கு வர முடியும்...இங்கிருந்து தனியே கஸ்டப்படுவதை விட ஊரில் நல்ல வாழ்க்கை உங்களுக்கு இருக்கும் என்பது எனது கருத்து...தனிப்பட உங்களுக்கு அங்கு வேறு பிரச்சனைகள் இருக்குதோ எனக்குத் தெரியாது...இங்கு விசா கிடைத்தால் இங்கு இருங்கள் அப்படி கிடைக்கா விட்டால் மகிழ்ச்சியோடு ஊருக்குப் போய் படித்து முன்னேறுங்கள்.

இதில் கருத்து எழுதின பல பேர் ஈழத்திற்கு ஆதர‌வாளர்கள் இதில் எனக்கு புரியாதது என்ன என்டால் எல்லோரும் புலம் பெயர்ந்து வர‌ வேண்டும் என்றும்,இங்கு வந்து விசா கிடைக்காதோரை பாவம் பட்டவர் மாதிரி பார்ப்பதும் ஏன் என்று தெரியவில்லை?

நன்றி.

  • ஏஜென்சி மூலம் வந்தவர்களளவுக்கு காசு செலவளிக்காவிட்டாலும் நாட்டிலிருந்து புறப்பட முன்னமும் இந்த நாட்டுக்கு வந்த பின்னரும் காசு செலவழித்துக்கொண்டு தான் இருக்கிறன்.
  • அலைச்சல் பட்டு வராவிட்டாலும் இங்கு வந்த பின் பல விடயங்களுக்காக அலைச்சல் பட்டிருக்கிறன்.
  • ஊரில் எனக்கு பல்கலைக்கழகம் கிடைத்தது. பிரச்சினை எதுவும் இல்லாமல் காசுபணம் சம்பாதிக்கவோ அல்லது வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டோ யாருமில்லாத இந்த நாட்டில் தனியாக வந்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா?

அப்படி நினைத்தால் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன்....

அம்மா வேலை செய்கிறார்.

எனது சகோதரர்களும் பல்கலைக்கழகம் தான்.

எனவே அவர்கள் தமது எதிர்கால வாழ்வுக்கு பணத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்.

நான் இயக்கத்தில், அரசியலில் இல்லை. ஆனால் பிரச்சினை என்னை தேடி வந்தது. என்ன பிரச்சினை என்று இங்கு சொல்லி விடுவேன். சொன்னால் யாரும் என்னை இனங்கண்டால் எனது குடும்பத்தினருக்கு ஆபத்து.

இதற்கு மேல் கூற விரும்பவில்லை. நன்றி. :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

பய் தி வே துளசி ஊருக்கு கொண்டு போக நிறைய சாக்லேட் எல்லாம் வாங்கியாச்சா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்திரி மூலம் உங்கள் கதையை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நானும் ஏதோ சின்ன பெடியன்.. ஹாயா fun அடிச்சுக்கொண்டு திரியுது என்று நினைத்தன். :lol: உங்களுக்குள் எரிமலை குழம்பு கொதித்துக்கொண்டிருந்தது என்று இன்று தான் தெரியும். :(

எரிமலை குழம்பா?????? it's a great insult .. :rolleyes::D:lol:

இதெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் எவ்வளவோ கடந்து வந்தவங்களை என்ன சொல்ல? கொஞ்சநாள் கவலை அப்புறம் எல்லாம் சரியாகி விட்டது. விசா கிடைக்க எடுத்த 2,3 வருடத்தில் களவாக அண்ணா இருக்கிற இடத்துக்கு வந்து அண்ணாவுடைய கடையில் நிப்பேன் அப்போது தான் யாழில் இணைந்தேன். யாழில் இணைந்து நிறைய உறவுகள் கிடைத்தது.

அப்புறம் காதல்.. இப்படியே ஜாலியா போச்சு.. :D :D :lol:

இதுக்கு போய்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

காதல்... வலிகளைச் சந்திக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை...நம்பிக்கைகளும்,போராட்டங்களும்தான் மனிதர்களை வெற்றியை நோக்கிகொண்டு செல்கிறது..இலக்கை அடைவதற்க்கிடையில் ஓராயிரம் வேதனைகளும்,அவமானங்களும்,மற்றவர்களின் ஏளனங்களும்,கேலிகளும்,நம்பிக்கைத்துரோகம்களும்,துயரங்களும் சுழல்காத்தாய் மனதைத்தாக்கும்..எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டுதான் நாம் எமது பயணத்தை முடிக்கவேண்டும்...எங்கள் நிலமை கொஞ்சம் இறங்கி வரும்போது நிழல்கூட எங்களை மிதிக்கும்...இந்த நிலையில் கூட இருக்கும் மனிதர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா...ஒவ்வொருவருக்குள்ளும் சொல்லக்கூடியதும்,சொல்லமுடியாததுமாக ஓராயிரம் வேதனைகள் புதைந்து கிடக்கின்றன...உள்ளே அழுதுகொண்டு வெளியே சிரிக்கும் மனிதர்கள்தான் இந்த உலகில் மிக அதிகம்...இந்தவகை மனிதர்களில் ஒருவர் தான் நானும்,நீங்களும்..நீங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்கிறீர்கள்..இதைவாசிக்கும் என்னைப்போல் பலர் எதையும் வெளிப்படையாக சொல்வதில்லை..குறிப்பாக நான் யாரும் என்னைப்பற்றி இரக்கப்படுவதை வெறுப்பவன்..எதையும் நானே தனியாக எதிர்கொள்வது வழக்கம்...எது நடந்தாலும் பொசிற்றிவாக எடுத்துக்கொள்ளும் மனநிலையே துன்பங்களில் இருந்து எங்களைக் காப்பாற்றும் அருமருந்து...மிக நெருக்கமாக பழகியவர்கள் ஏமாற்றும்போது இந்த மனநிலை உங்களுக்குள் தானாக வரும்...இந்தக்காலங்களில் உங்களுக்கு கிடைக்கும் அநுபவங்கள்தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சேமித்துக்கொள்ளும் அரிய பொக்கிசம்கள்..இப்படியான துன்பப்படும் நேரம்களில்தான் பொய்யாகப் பழகியவர்களையும்,உண்மையான மனிதர்களையும் கண்டுகொள்ள சந்தர்ப்பமும் கிடைக்கிறது...எனவே கவலையை விடுங்கள்...எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளருங்கள்...எங்கள் காலடியில் பூமி கிடக்கும்போது வானம் என்ன வானம்..அது எட்டவே இருந்துவிட்டுப் போகட்டும்...நீங்கள் வெல்லுவீர்கள்..இல்லை இங்கு தோற்றாலும் வாழ்க்கையில் நிச்சயம் வெல்லுவீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஹா சுபேஷ் அண்ணா நெஞ்ச நக்கிட்டிங்க இனில இருந்து நீங்க சுவாமி சுபெஷானந்தா என்று அழைக்கபடுவிங்க நிஜமா சுபெர்ப்

முற்றிலும் உண்மையான பகிர்வு..நன்றி சுபேஸ்.

  • தொடங்கியவர்

பய் தி வே துளசி ஊருக்கு கொண்டு போக நிறைய சாக்லேட் எல்லாம் வாங்கியாச்சா?

:lol: :lol:

அண்ணா சுண்டல் (கடலை) செய்து தாளித்து வைத்திருக்கிறன். விசா accept பண்ணினால் ஜட்ஜ் க்கு கொடுப்பம் என்றும் reject பண்ணினால் lawer க்கு கொடுத்து மீண்டும் apply பண்ணுவமென்று. :icon_idea:

எரிமலை குழம்பா?????? it's a great insult .. :rolleyes::D:lol:

இதெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் எவ்வளவோ கடந்து வந்தவங்களை என்ன சொல்ல? கொஞ்சநாள் கவலை அப்புறம் எல்லாம் சரியாகி விட்டது. விசா கிடைக்க எடுத்த 2,3 வருடத்தில் களவாக அண்ணா இருக்கிற இடத்துக்கு வந்து அண்ணாவுடைய கடையில் நிப்பேன் அப்போது தான் யாழில் இணைந்தேன். யாழில் இணைந்து நிறைய உறவுகள் கிடைத்தது.

அப்புறம் காதல்.. இப்படியே ஜாலியா போச்சு.. :D

இதுக்கு போய்..

சுபேஸ் அண்ணா சொன்னது போல் "உள்ளே அழுதுகொண்டு வெளியே சிரிக்கும் மனிதர்கள்தான் இந்த உலகில் மிக அதிகம்". அந்த வகையில் தான் நீங்களும். :)

"வெளிநாட்டில் தமிழர்கள் படும் துன்பங்கள்" என்ற தலைப்பில் ஒரு திரி ஆரம்பிக்கும் நோக்கம் எனக்கு உள்ளது. :rolleyes:

காதல்... வலிகளைச் சந்திக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை...நம்பிக்கைகளும்,போராட்டங்களும்தான் மனிதர்களை வெற்றியை நோக்கிகொண்டு செல்கிறது..இலக்கை அடைவதற்க்கிடையில் ஓராயிரம் வேதனைகளும்,அவமானங்களும்,மற்றவர்களின் ஏளனங்களும்,கேலிகளும்,நம்பிக்கைத்துரோகம்களும்,துயரங்களும் சுழல்காத்தாய் மனதைத்தாக்கும்..எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டுதான் நாம் எமது பயணத்தை முடிக்கவேண்டும்...எங்கள் நிலமை கொஞ்சம் இறங்கி வரும்போது நிழல்கூட எங்களை மிதிக்கும்...இந்த நிலையில் கூட இருக்கும் மனிதர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா...ஒவ்வொருவருக்குள்ளும் சொல்லக்கூடியதும்,சொல்லமுடியாததுமாக ஓராயிரம் வேதனைகள் புதைந்து கிடக்கின்றன...உள்ளே அழுதுகொண்டு வெளியே சிரிக்கும் மனிதர்கள்தான் இந்த உலகில் மிக அதிகம்...இந்தவகை மனிதர்களில் ஒருவர் தான் நானும்,நீங்களும்..நீங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்கிறீர்கள்..இதைவாசிக்கும் என்னைப்போல் பலர் எதையும் வெளிப்படையாக சொல்வதில்லை..குறிப்பாக நான் யாரும் என்னைப்பற்றி இரக்கப்படுவதை வெறுப்பவன்..எதையும் நானே தனியாக எதிர்கொள்வது வழக்கம்...எது நடந்தாலும் பொசிற்றிவாக எடுத்துக்கொள்ளும் மனநிலையே துன்பங்களில் இருந்து எங்களைக் காப்பாற்றும் அருமருந்து...மிக நெருக்கமாக பழகியவர்கள் ஏமாற்றும்போது இந்த மனநிலை உங்களுக்குள் தானாக வரும்...இந்தக்காலங்களில் உங்களுக்கு கிடைக்கும் அநுபவங்கள்தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சேமித்துக்கொள்ளும் அரிய பொக்கிசம்கள்..இப்படியான துன்பப்படும் நேரம்களில்தான் பொய்யாகப் பழகியவர்களையும்,உண்மையான மனிதர்களையும் கண்டுகொள்ள சந்தர்ப்பமும் கிடைக்கிறது...எனவே கவலையை விடுங்கள்...எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளருங்கள்...எங்கள் காலடியில் பூமி கிடக்கும்போது வானம் என்ன வானம்..அது எட்டவே இருந்துவிட்டுப் போகட்டும்...நீங்கள் வெல்லுவீர்கள்..இல்லை இங்கு தோற்றாலும் வாழ்க்கையில் நிச்சயம் வெல்லுவீர்கள்...

நன்றி சுபேஸ் அண்ணா. உண்மை.

பலரும் தமது பிரச்சினையை வெளிப்படையாக சொல்வதில்லை தான். நானும் என்னை பார்த்து ஏனையோர் இரங்குவதை விரும்புவதில்லை. அதனால் தான் போனமுறை ஒரு திரியில் எழுதியதை நினைத்து கவலைப்பட்டு மன்னிப்பு திரி வேறு ஆரம்பித்து இருந்தேன்.

ஆனால் இப்பொழுது யாழில் எமது கதையை (நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை தவிர்த்து) சொல்வதால் பிரச்சினை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒருவரும் இரக்கப்பட கூடாது தான். ஆனால் இந்த திரியில் இரக்கப்பட்டாலும் கூட இன்னொரு திரியில் அவர்களுக்கெதிராக நாம் கருத்து வைக்கும் போது எமது கருத்து பிடிக்காவிட்டால் அவர்கள் விட்டிட்டு இருக்க மாட்டார்கள். நிச்சயம் எதிர்த்து பதிலளிப்பார்கள். அந்த நம்பிக்கை எனக்கு வந்து விட்டது.

இன்று ஜீவா அண்ணாவை பார்த்து கவலைப்படுகிறேன். அதற்காக இன்னொரு திரியில் அவர் வைக்கும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லாவிட்டால் பேசாமல் இருக்க மாட்டேன். நிச்சயம் எதிர்த்து பதில் எழுதுவேன்.

எமது பிரச்சனைகளை சொல்கிறோம் என்று பார்க்காமல் விழிப்புணர்வூட்டும் ஒரு நடவடிக்கையாக புலம்பெயர் தேசத்திற்கு வருபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக அனைவரும் பார்த்தால் நல்லது. மற்றபடி தனிப்பட்ட வாழ்வில் இவற்றை எவருக்கும் சொல்லாமல் இருப்பது நல்லது.

சவால்களை எதிர்நோக்குவதற்காக நீங்கள் கூறிய ஆலோசனைக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி. :)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.