Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டாரத் தமிழ் வழக்கு அவசியமா????

Featured Replies

இதை நான் சமூகச் சாளரத்தில் இணைப்பதற்கு ஒரு காரணம் உண்டு . தமிழ் மொழி , பேச்சு நடை , எழுத்து நடை , இலக்கிய நடை என்று மூன்று பெரிய பகுதிகளாகப் பொதுவாக உள்ளது . இதில் எழுத்து நடை தமிழ் அந்தந்த வட்டார வழக்குகளில் இப்பொழுது எழுதப்பட்டு வருகின்றது . இதற்கு யாழ் கருத்துக்களமும் விதிவிலக்கல்ல . என்னைப் பொறுத்தவரையில் ஒருவர் வட்டார வழக்கில் தமிழை எழுதினால் , அது வாசகர்களிடையே கூடிய தொடுகையை எழுதுபவரால் ஏற்படுத்த முடியும் என நினைக்கின்றேன் . அத்துடன் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தமிழ் சொற்பிரையோகங்களையும் மற்றயவர்கள் அறிய முடியும் . ஆனால் கூடுதலாக எழுத்து நடைத் தமிழையே எல்லோரும் பாவிப்பதை நான் காண்கின்றேன் .(என்னையும் சேர்த்து ) இதனால் ஒருவிதமான உலர்தன்மையை கருத்துக்களத்தில் அவதானிக்கின்றேன் . இதை மாற்றி அவரவர்களுக்கேற்ற வட்டார தமிழ் வழக்கில் எழுதினால் என்ன ?? இந்த இணையம் சர்வதேச தமிழர்களுக்காக பரந்துபட்டு இயங்கவேண்டுமானால் பலதரபட்ட நாட்டு தமிழ்மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் . அப்பொழுது அவர்கள் போடுகின்ற அவர்கள்பாணியிலான கருத்துக்களை உள்வாங்குகின்ற மனப்பக்குவம் எங்களிடம் வரவேண்டும் . தமிழகத்தில் இருந்து வருகின்ற உறவுகளின் எழுத்துக்களை ஒருசிலரால் ஒருவித விரோதமனப்பான்மையுடன் பார்க்கின்ற நிலமைகள் அவ்வப்போது எழுவதை அவதானிக்க கூடயதாக இருக்கின்றது . இவைகள் இல்லாது எல்லோரையும் அவரவர்களது வட்டரத் தமிழ் வழக்கில் எழுத அனுமதித்தால் என்ன ? இதுபற்றிய உங்கள் கருத்தக்களை எதிர்பார்க்கின்றேன் .

நேசமுடன் கோமகன்

Edited by கோமகன்

கிட்டதட்ட நீங்கள் சொல்வது யாழில் நடைமுறையில் இருக்கிறது என்றுதான் நினக்கிறேன். யார்கள விதி தமிழும், நாகரீக வார்த்தைகளும் மட்டும்தான் என்று நினக்கிறேன். மற்றவை எல்லாம் திறந்துதான் இருக்கிறது. பெரும்பாலனவை செய்திகள் சம்பந்தப் பட்டிருப்பதால் கருத்தையும் அதே வகையில் வைத்துகொள்ள பலரும் முயல்கிறார்கள்.

அதைவிட ஒருபிரச்சனை இருக்கிறது என்று நினக்கிறேன். தமிழ்நாட்டின் பலவிதமான பேச்சுவழக்குகளும் சினிமாவில் காட்டப்படுவதால் அதை எழுத்திலும் போட முடிகிறது. ஈழத்தமிழ் இதுவரையில் அப்படி வெளியில் பாவிக்கப் படாததால் யாழ்களத்தில் அதை சரளமாக எழுதுவது எளிதல்ல.

மேலும் பகிடிகள் (நகைசுவை) எழுதும் போதும் பலரும் ஏதவது ஒரு தமிழ் நாட்டு வழக்கைத்தான் உபயோகிக்கிறார்கள். இது சினிமாவில் இருந்து திருடப்பட்ட வழமை. நகைச்சுவை எழுதும் போது மிகச்சிலரே தமது வட்டர சம்பாஷ்ணையை பாவிக்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து வருகின்ற உறவுகளின் எழுத்துக்களை ஒருசிலரால் ஒருவித விரோதமனப்பான்மையுடன் பார்க்கின்ற நிலமைகள் அவ்வப்போது எழுவதை அவதானிக்க கூடயதாக இருக்கின்றது .
இது ஒரு அவமானகரமான நடத்தை. நாம் எல்லோரும் திருந்திக்கொள்ள வேண்டும்.

Edited by மல்லையூரான்

வட்டார மொழிதான் மனசுக்கு மிக அருகில் வரக்கூடியது. அத்துடன் ஒவ்வொரு வட்டாரத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் என்பனவற்றையும் அவை தாங்கி வருகின்றன. ஈழத்து தமிழ் வட்டார மொழிகளில் எனக்கு கேட்க கேட்க திகட்டாத மொழி மட்டக்களப்பைச் சேர்ந்த மீனவ சமூகங்களின் மொழி. கதைக்கும் போதே சங்கீதம் கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டார மொழியில் களத்தில் எழுதுபவர்களின் கருத்துக்களை விரும்பி வாசிப்பேன்.

யாழ்களத்தில் குமாரசாமி அண்ணா, புரட்சிகர தமிழ்த்தேசியன், சொப்னா போன்றோர் அதிகமாக வட்டாரத்தமிழில் எழுதுவார்கள்.

கோமகன் குறிப்பிட்டது தமிழக உறவுகளின் வட்டார மொழிக் கருத்துக்களை யாரும் விரோதமாக பார்த்ததாக நான் நம்பவில்லை.

சிலவேளை அவர்களுக்கு, நகைச்சுவையாக அவர்களின் வட்டார மொழியில்... சிலர் பதிலளிக்க முற்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகின்றேன். எனக்கும் மட்டக்களப்பு வட்டாரமொழி கேட்க ஆசை.

தப்பிலி, மனசு வைச்சால்.... அந்த ஆசை நிறைவேறும். :)

  • தொடங்கியவர்

கிட்டதட்ட நீங்கள் சொல்வது யாழில் நடைமுறையில் இருக்கிறது என்றுதான் நினக்கிறேன். யார்கள விதி தமிழும், நாகரீக வார்த்தைகளும் மட்டும்தான் என்று நினக்கிறேன். மற்றவை எல்லாம் திறந்துதான் இருக்கிறது. பெரும்பாலனவை செய்திகள் சம்பந்தப் பட்டிருப்பதால் கருத்தையும் அதே வகையில் வைத்துகொள்ள பலரும் முயல்கிறார்கள்.

அதைவிட ஒருபிரச்சனை இருக்கிறது என்று நினக்கிறேன். தமிழ்நாட்டின் பலவிதமான பேச்சுவழக்குகளும் சினிமாவில் காட்டப்படுவதால் அதை எழுத்திலும் போட முடிகிறது. ஈழத்தமிழ் இதுவரையில் அப்படி வெளியில் பாவிக்கப் படாததால் யாழ்களத்தில் அதை சரளமாக எழுதுவது எளிதல்ல.

மேலும் பகிடிகள் (நகைசுவை) எழுதும் போதும் பலரும் ஏதவது ஒரு தமிழ் நாட்டு வழக்கைத்தான் உபயோகிக்கிறார்கள். இது சினிமாவில் இருந்து திருடப்பட்ட வழமை. நகைச்சுவை எழுதும் போது மிகச்சிலரே தமது வட்டர சம்பாஷ்ணையை பாவிக்கிறார்கள்.

இது ஒரு அவமானகரமான நடத்தை. நாம் எல்லோரும் திருந்திக்கொள்ள வேண்டும்.

மிக்க நன்றிகள் மல்லை உங்கள் நேரத்திற்கு . மேலும் கள உறவுகளில் ஆர்வமும் தேடலும் இருந்தால் நிட்சயமாக வட்டார வழக்கில் எழுதுவது சுலபம் என நினைக்கின்றேன் . உதாரணமாக வட பகுதியில் வடமராட்சி , தென்மராட்சி இன்னும் பல பகுதிகளில் பல வட்டாரத் தமிழ் சொற்கள் இருக்கின்றன . குமாரசாமி அண்ணை தென்மராட்சி வழக்கில் கொடி கட்டுபவர் . கிழக்கு மாகணத்திலேயே பல வட்டார வழக்குகள் இருப்பாக கேள்விப்பட்டிருக்கின்றேன் . ஆனால் அங்கிருந்து வரும் கள உறவுகள் அப்படி எழுதுவதில்லை . எழுதுவதில் பிரதேசவாதம் இருக்கின்றது என்று யாராவது நினைத்தால் அவர்களைப்போல முட்டாள்கள் யாரும் இருக்கமுடியாது . வட்டார வழக்கைப் போட்டு பிற்குறிப்பாக அதற்கான விளக்கத்தையும் போட்டால் கருத்துக்களம் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமென்றே கருதுகிறேன், கோமகன்!

மட்டக்களப்புத் தமிழும், நெடுந்தீவில் பேசப்படும் தமிழும், வல்வெட்டித் துறைத் தமிழும், தனித்துவமானவை!

மதுரைத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழைப் போன்றது ஏன் நினைக்கிறேன்!

'மதராஸ்' தமிழ் எனக்கு அதிகம் விளங்குவதில்லை!

முஸ்லிம் தமிழ், கொஞ்சம் விளங்கும்! அர்த்தங்கள் ஆபத்தான கருத்தைத் தருபவை!

வாப்பா, உம்மா எல்லாம் சூத்தோட ஈக்காங்களா?

இதன் அர்த்தம் என்ன? :D

  • தொடங்கியவர்

அவசியமென்றே கருதுகிறேன், கோமகன்!

மட்டக்களப்புத் தமிழும், நெடுந்தீவில் பேசப்படும் தமிழும், வல்வெட்டித் துறைத் தமிழும், தனித்துவமானவை!

மதுரைத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழைப் போன்றது ஏன் நினைக்கிறேன்!

'மதராஸ்' தமிழ் எனக்கு அதிகம் விளங்குவதில்லை!

முஸ்லிம் தமிழ், கொஞ்சம் விளங்கும்! அர்த்தங்கள் ஆபத்தான கருத்தைத் தருபவை!

[size=4]வாப்பா, உம்மா எல்லாம் சூத்தோட ஈக்காங்களா?[/size]

இதன் அர்த்தம் என்ன? :D

[size=4]இது எங்கள் பார்வைக்கோளாறும் தவறான மொழிபெயர்ப்புமாகும் . இது சொல்கின்ற செய்தி அப்பா அம்மா சுகமாக இருக்கின்றார்களா? என்பதே . ஆனால் சூத்து என்பதை ஆசனவாயிலாக தவறாக மொழிபெயர்க்கின்றோம் . மேலும் ஒருசொல்லாடல் பாவிக்[/size][size=4][/size][size=4]படும் நேரத்தில்தானே அது சொல்லும் அர்த்தமும் வேறுபடும் ?? ஆக தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் வந்த தவறான மொழிபெயர்பு என்றே நினைக்கின்றேன் . உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் புங்கை .[/size]

கிழக்கு மாகணத்திலேயே பல வட்டார வழக்குகள் இருப்பாக கேள்விப்பட்டிருக்கின்றேன் .

மட்டக்களப்புப் பேச்சுத் கேட்பதற்குப் பொதுவாக இருந்தாலும், இடத்திற்கு இடம் மாறுபடும். அவதானித்தால் சில வார்த்தைகளும்அதனைப் பேசும் விதமும், இழுத்து இழுத்துக் கதைப்பதிலும் வேறுபாடு இருக்கும். நான் அவதானித்ததில்,

பாணமை, பொத்துவில், கோமாரி ஒரே வட்டார வழக்கு. திருக்கோயில், தம்பிலுவில் சற்று வேறு மாதிரி இருக்கும். அக்கரைப்பற்று, கோளாவில் தனி. காரைதீவு, சம்மாந்துறை இன்னுமொரு மாதிரி. கல்முனை, பாண்டிருப்பு, மணல்சேனை, நற்பிட்டிமுனை வட்டார வழக்கில் ஒருவித ஒற்றுமை இருக்கும். சவளக்கடை, கிட்டங்கி, மத்தியமுகாம், கொலனிப் பகுதிகளில் இன்னுமொன்று. இடையில் முஸ்லிம்களின் பேச்சு வழக்கு வேறு மாதிரியிருக்கும். துறை நீலாவணை, துரவந்திய மேடு, பெரிய நீலாவணை, கோட்டைக் கல்லாறு, பெரிய கல்லாறு, ஒந்தாச்சி மடம் இன்னுமொன்று. களுதாவளை, களுவாஞ்சிக் குடி, குருக்கள் மடம், பெரிய போரதீவு வேற மாதிரி. நாவற்குடா, ஆரையம்பதி,கல்லடி ஒரே மாதிரியிருக்கும். மட்டக்களப்பு ரவுணுக்குள் வாழ்பவர்களின் பேச்சு வழக்கிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்பவர்களின் பேச்சு வழக்கிலும் வித்தியாசம் தெரியும். அங்கால ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை, கிரான், வாழைச்சேனை ஒரே மாதிரியிருக்கும். இடையில் படுவான்கரைப் பக்கமுள்ள பழுகாமம், மண்டூர், கொக்கட்டிச்சோலை,மகிழடித் தீவு....... என்று அவர்களுக்குள்ளும் வேறு வேறு விதமான பேச்சுத் தமிழ் உண்டு. இப்படியே தொடர்ந்து கொண்டு போகலாம். (ஸ்..ஸ்..ஸ் ஸப்பா முடியல்ல :D )

தப்பிலி, மனசு வைச்சால்.... அந்த ஆசை நிறைவேறும். :)

இஞ்சரக்க அய்னைக்க கதைச்ச மாதிரி எழுதுவம் எண்டுதான் நெச்சனான். மறுகா மக்களுக்கு விளங்கா எண்டு போட்டு பொதுவா எழுதப் போய், இப்ப அங்கிட்டுமில்லாம இங்கிட்டுமில்லாமப் போச்சி. :(

முட்டைச்சிர மக்களின் போக்கை வைச்சி ஒரு அரசியல் ஆய்வு எழுதினால் போயிட்டு. :D

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்

மட்டக்களப்புப் பேச்சுத் கேட்பதற்குப் பொதுவாக இருந்தாலும், இடத்திற்கு இடம் மாறுபடும். அவதானித்தால் சில வார்த்தைகளும்அதனைப் பேசும் விதமும், இழுத்து இழுத்துக் கதைப்பதிலும் வேறுபாடு இருக்கும். நான் அவதானித்ததில்,

[size=4]பாணமை, பொத்துவில், கோமாரி ஒரே வட்டார வழக்கு. திருக்கோயில், தம்பிலுவில் சற்று வேறு மாதிரி இருக்கும். அக்கரைப்பற்று, கோளாவில் தனி. காரைதீவு, சம்மாந்துறை இன்னுமொரு மாதிரி. கல்முனை, பாண்டிருப்பு, மணல்சேனை, நற்பிட்டிமுனை வட்டார வழக்கில் ஒருவித ஒற்றுமை இருக்கும். சவளக்கடை, கிட்டங்கி, மத்தியமுகாம், கொலனிப் பகுதிகளில் இன்னுமொன்று. இடையில் முஸ்லிம்களின் பேச்சு வழக்கு வேறு மாதிரியிருக்கும். துறை நீலாவணை, துரவந்திய மேடு, பெரிய நீலாவணை, கோட்டைக் கல்லாறு, பெரிய கல்லாறு, ஒந்தாச்சி மடம் இன்னுமொன்று. களுதாவளை, களுவாஞ்சிக் குடி, குருக்கள் மடம், பெரிய போரதீவு வேற மாதிரி. நாவற்குடா, ஆரையம்பதி,கல்லடி ஒரே மாதிரியிருக்கும். மட்டக்களப்பு ரவுணுக்குள் வாழ்பவர்களின் பேச்சு வழக்கிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்பவர்களின் பேச்சு வழக்கிலும் வித்தியாசம் தெரியும். அங்கால ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை, கிரான், வாழைச்சேனை ஒரே மாதிரியிருக்கும். இடையில் படுவான்கரைப் பக்கமுள்ள பழுகாமம், மண்டூர், கொக்கட்டிச்சோலை,மகிழடித் தீவு....... என்று அவர்களுக்குள்ளும் வேறு வேறு விதமான பேச்சுத் தமிழ் உண்டு. இப்படியே தொடர்ந்து கொண்டு போகலாம்.[/size] (ஸ்..ஸ்..ஸ் ஸப்பா முடியல்ல :D )

[size=4]இஞ்சரக்க அய்னைக்க கதைச்ச மாதிரி எழுதுவம் எண்டுதான் நெச்சனான். மறுகா மக்களுக்கு விளங்கா எண்டு போட்டு பொதுவா எழுதப் போய், இப்ப அங்கிட்டுமில்லாம இங்கிட்டுமில்லாமப் போச்சி. :(

முட்டைச்சிர மக்களின் போக்கை வைச்சி ஒரு அரசியல் ஆய்வு எழுதினால் போயிட்டு. :D[/size]

[size=4]இது............. இது.......... இதைத்தான் எதிர்பாத்தனான் . தப்பு தப்புங்கோ ( மேளத்தை ) கேக்க நாங்கள் இருக்கிறம் . சாய் இவ்வளவு நாளும் எங்கை போட்டியள் ?? மிக்க நன்றிகள் உங்கள் மேலதிக தகவலுக்கு தப்பிலி .[/size]

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

வட்டார மொழிதான் மனசுக்கு மிக அருகில் வரக்கூடியது. அத்துடன் ஒவ்வொரு வட்டாரத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் என்பனவற்றையும் அவை தாங்கி வருகின்றன. ஈழத்து தமிழ் வட்டார மொழிகளில் எனக்கு கேட்க கேட்க திகட்டாத மொழி மட்டக்களப்பைச் சேர்ந்த மீனவ சமூகங்களின் மொழி. கதைக்கும் போதே சங்கீதம் கேட்கலாம்.

[size=4]இதைத் தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் நிழல் . எது அதிக தொடுகையை ஏற்படுத்துகின்றதோ அதைச் செய்வதில் பிழையில்லை என்று நினைக்கின்றேன் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நான் லண்டனுக்கு வந்த புதுசில் மட்டக்களப்பு தமிழில் தான் கதைக்கிறது எங்கட ஆட்கள் எல்லோரும் நக்கலடித்து பழைய படி யாழ்ப்பாண தமிழுக்கு மாறி விட்டது ^_^

எப்படி சுகமாய் இருக்கியலா

பிள்ள என்ன ஆக்கினாய்?

இம்முட்டு கடலை

எப்படி சுகமாய் இருக்கியலா

பிள்ள என்ன ஆக்கினாய்?

இம்முட்டு கடலை

நீங்க படுவான்கரைப் பக்கம் இரிந்திரிக்கோணும் எண்டு நெய்க்கன் புள்ள. :D

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வழக்கில் இருக்கும் வட்டாரத்தமிழ் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் புதினமாகவும் இருக்கும்.

  • தொடங்கியவர்

நான் லண்டனுக்கு வந்த புதுசில் மட்டக்களப்பு தமிழில் தான் கதைக்கிறது எங்கட ஆட்கள் எல்லோரும் நக்கலடித்து பழைய படி யாழ்ப்பாண தமிழுக்கு மாறி விட்டது ^_^

எப்படி சுகமாய் இருக்கியலா

பிள்ள என்ன ஆக்கினாய்?

இம்முட்டு கடலை

[size=4]அறப்படிச்ச பல்லி கூழ் பானைக்கை விழுந்த கதையா , மத்தவன் நக்கல் அடிக்கறான் எண்டதுக்காக தன்ர வட்டார தமிழை துலைச்ச ரதி அக்கையை வன்மையா கண்டிக்கறன் :D:D:lol: .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க படுவான்கரைப் பக்கம் இரிந்திரிக்கோணும் எண்டு நெய்க்கன் புள்ள. :D

நான் அங்கிட்டு[படுவான்கரை] எல்லாம் இரிக்கேல்ல :D

நான் அங்கிட்டு[படுவான்கரை] எல்லாம் இரிக்கேல்ல :D

சரி பொட்ட. அப்ப வவுணதீவு இல்லாட்டி கல்லடியா இரிக்கோணும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வட்டார எழுத்துநடை மிகவும் பிடிக்கும். எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கரிசல் வட்டார வழக்கில் வந்த கதைகள், நாவல்களை படிக்கும்போது கதை மாந்தர்களோடு பயணிப்பதுபோன்ற உணர்வு வரும். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் வட்டார மொழியில் எழுதுகின்றவர்கள்தான். ஆனால் வட்டார வழக்கும் காலத்திற்கு ஏற்ப மாறுவதால் எழுதும்போது கவனமாகச் சொற்களைக் கையாளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சரக்க அய்னைக்க கதைச்ச மாதிரி எழுதுவம் எண்டுதான் நெச்சனான். மறுகா மக்களுக்கு விளங்கா எண்டு போட்டு பொதுவா எழுதப் போய், இப்ப அங்கிட்டுமில்லாம இங்கிட்டுமில்லாமப் போச்சி. :(

முட்டைச்சிர மக்களின் போக்கை வைச்சி ஒரு அரசியல் ஆய்வு எழுதினால் போயிட்டு. :D

பொங்கை பார்...

இவர் இவ்வளவ்வு நாளூம்...., இந்தக் கதையை.... எங்கைய் பொத்தி வைச்சிருந்தவர். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் நிழலி அண்ணா,கிருபன் அண்ணாவின் கருத்தே எனதும்.

வட்டார மொழியில் எழுதும் போது கூட வாழ்ந்த நெருக்கம்,மனதில் பதிந்த,தெரிந்த,கடந்து வந்த ஒன்றை இரைமீட்டிப்பார்ப்பது போன்ற ஒரு உணர்வு வரும். ஏதோ உறவுகளுடன் பழகும் நெருக்கம்.

வாசகரை நேரடித்தொடர்பாளனாய் ஆக்குவதில் சிறந்ததென்றால் வட்டார வழக்கே ஆகும். :icon_idea:

ஜீவா,

உங்கள் கருத்தையும், மேற்கோள் காட்டிய நிழலி, கிருபனின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும்...

வட்டார மொழியை... எல்லோராலும், எழுத்தில் எழுத முடியாது.

அத்துடன், அந்த மொழியை... ஓரளவுக்கேனும் பரிச்சயப்பட்ட வாசகர்களுக்குத்தான் அந்த எழுத்து நடைபுரியும்.

  • தொடங்கியவர்

எனக்கு வட்டார எழுத்துநடை மிகவும் பிடிக்கும். எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கரிசல் வட்டார வழக்கில் வந்த கதைகள், நாவல்களை படிக்கும்போது கதை மாந்தர்களோடு பயணிப்பதுபோன்ற உணர்வு வரும். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் வட்டார மொழியில் எழுதுகின்றவர்கள்தான். ஆனால் வட்டார வழக்கும் காலத்திற்கு ஏற்ப மாறுவதால் எழுதும்போது கவனமாகச் சொற்களைக் கையாளவேண்டும்.

[size=4]உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் கிருபன் . அதேவேளையில் புலம் பெயர் எழுத்தாளர்கள் ஏன் அதிகமாக வட்டார வழக்கைக் கையாழ்வதில் தயக்கம் காட்டுகின்றார்கள் ? ஏதாவது விசேட காரணங்கள் ??????? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வட்டார வழக்கு பேச்சு நடை தான் இனிமையாக சுவாரசியமாக இருக்கும்.எழுத்து நடை எனும் போது எல்லோரும் அதாவது நாடளாவ,உலகளாவ வாசிப்பதால் எல்லோருக்கும் விளங்கக் கூடிய எழுத்து நடை தேவை.

வட்டார வழக்கில் எழுத்தப்பட்ட முறிந்தபனையை தமிழ் நாட்டிலோ அல்லது மலேசியாவிலோ விளங்கிக்கொள்வது கடினமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிக்கு கருத்து எழுதும்முன்.......

வட்டார வழக்கை ஏற்றுக்கொள்ளும் நீங்கள்

எமது பிள்ளைகள் வெளிநாடுகளில் பேசும் தமிழை ஏற்கின்றீர்களா?

அவற்றிற்கும் புலம் பெயர் வட்டார வழக்கு என்ற சொல்லை ஏற்க நீங்கள் தயாரா????

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சரக்க அய்னைக்க கதைச்ச மாதிரி எழுதுவம் எண்டுதான் நெச்சனான். மறுகா மக்களுக்கு விளங்கா எண்டு போட்டு பொதுவா எழுதப் போய், இப்ப அங்கிட்டுமில்லாம இங்கிட்டுமில்லாமப் போச்சி. :(

முட்டைச்சிர மக்களின் போக்கை வைச்சி ஒரு அரசியல் ஆய்வு எழுதினால் போயிட்டு. :D

வாவ்... அந்தமாதிரி இருக்கு மட்டக்களப்பு தமிழைக் கேட்க..தப்பிலி அண்ணா,ரதி அக்கா..இனிமேல் அடிக்கடி இப்படி எழுதுங்கோ...மட்டக்களப்புக்குபோனதுபோல் ஒரு வாசம் மனதுக்குள் வருகிறது...

http://www.yarl.com/...topic=5772&st=0

சின்னக்குட்டி வட்டரா தமிழ் என்று நினைத்து எழுதிக்கொண்டு அறிமுகமாக வந்த பொழுது யாழ் இணையத்தில் நடந்த றாகிங்கை மேலே உள்ள இணைப்பில் பார்க்க விரும்பின் பாருங்கோ

Edited by matharasi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.