Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள் 22 பேருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

22 பேரைக் கொண்ட புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளே இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

யுத்த வலய தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, புலம்பெயர் தமிழர்களிடம் உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனிதாபிமான விவகாரங்கள், வடக்கு கிழக்கு புனரமைப்பு, புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களே பாதுகாப்புச் செயலாளரை சந்தித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் வடக்கு கிழக்கு மனிதாபிமான விவகாரங்கள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் சில நாடுகளில் பிழையான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தம் காரணமாக ஏற்பட்ட காயங்களை ஆற்ற அனைத்து தரப்பினரினதும் ஆதரவு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூற்றுக் கணக்கான முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81419/language/ta-IN/article.aspx

[size=4]

தமிழீழ விடுதலைப் புலிகளின் [size=5]முன்னாள்[/size] சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
[/size]

[size=4]

பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே [size=5]ஒரு காலத்தில் [/size]தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
[/size]

[size=4]நிறை குடங்கள் தளும்ப மாட்டா. [/size]

நிறை குடங்கள் தளும்ப மாட்டா.

தளும்பும் (ஒரு காலத்தில் அல்ல, புலிகள் அங்கு போராடும் எல்லாக் காலத்திலும் புலிகளுக்காக பு.பெ. நா. களில் உழைத்தவர்கள் என்று சொன்னவர்களிம் முக்கால் வாசிக்கும் மேலானவர்கள்)

இவர்கள் யார் யார் என்னும் விபரங்கள் தெரியுமா? தெரிந்தவர்கள் தெரியத் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் புலம் பெயர் தமிழர்கள் கோத்தபாயாவை சந்திக்கும் பொழுது 22 ஆட்களாக சந்திக்கின்றனர்....???? 22 ராசியான இலக்கமோ?

இவர்கள் யார் யார் என்னும் விபரங்கள் தெரியுமா? தெரிந்தவர்கள் தெரியத் தரவும்.

இங்கு லண்டனிலிருந்தும் ஓரிரண்டுமாம் ... ILC வானொலியை தற்சமயம் விளம்பங்களை குத்தைக்கைக்கு எடுத்திருக்கும் லண்டன் மலர் காஸ் அன்ட் கரிகாரரும், கேபியின் செக்கட்டரி ஜெரனலும், பிரபல நடிகருமான வாசுதேவபாண்டரின் தீராத முயற்சியால் ... அனுப்பப்பட்டார்களாம்!!

Tamil Councillor meeting Gota’s agent KP

Kana.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனிலிருந்தும் ஓரிரண்டுமாம் ... ILC வானொலியை தற்சமயம் விளம்பங்களை குத்தைக்கைக்கு எடுத்திருக்கும் லண்டன் மலர் காஸ் அன்ட் கரிகாரரும், கேபியின் செக்கட்டரி ஜெரனலும், பிரபல நடிகருமான வாசுதேவபாண்டரின் தீராத முயற்சியால் ... அனுப்பப்பட்டார்களாம்!!

Tamil Councillor meeting Gota’s agent KP

Kana.jpg

கேபியின் செக்கட்டரி ஜெனராலா? ஜெரனாலா? :lol:

புலம்பெயர் ஈனத் தமிழர்கள் 22 பேர் சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் இரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளனர்.இலங்கையின் கை பொம்மை கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அவரது தலைமையிலேயே குழுவினர் கோத்தபாயவைச் சந்தித்துப் பேசினர். இலங்கையில் முதலீடுகளைச் செய்வது குறித்தே இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இலங்கை அரசு குறித்து தவறான பரப்புரைகளில் ஈடுபடவேண்டாம் என்று இந்தச் சந்திப்பில் கோத்தபாய அவர்களிடம் கேட்டுக் கொண்டார் என்று நம்பகரமாகத் தெரியவந்தது.

புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்த சிலர் முன்னாள் போராளிகளின்புனர்வாழ்வு நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயங்கள் என்பவற்றைக் கோத்தபாயவிடம் இருந்து கேட்டறிந்து கொண்டனர்.

அதேவேளை இலங்கையில் முதலிடுவதாக இருந்தால் தமக்கு அதற்குச் சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும், அத்தகைய ஒரு சூழல் ஏற்படுவது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில்தான் தங்கி இருக்கிறது என்று அவர்கள் கூறியதாகவும், அவ்வாறான சூழலிலேயே நம்பிக்கையுடன் முதலிட புலம்பெயர் தமிழர்கள் முன்வருவார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர் என்றும் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா, சுவிஸ், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய 22 பேரே இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் அவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கும் பயணப்பட்டு நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=28607

சுவிஸ் முன்னாள் பொறுப்பாளர் (கேபியின் வால்) குலமும் சென்று வந்தததாக தகவல்

K.P. செய்கிறாரா. K.P.யின் பெயரை வைத்து செய்கிறார்களா? அப்புறம் எதற்கு கோத்தாவையும் பார்க்க வேண்டும். K.P.யை மட்டும் பார்த்தால் போதாத?

Edited by மல்லையூரான்

அது ஏன் புலம் பெயர் தமிழர்கள் கோத்தபாயாவை சந்திக்கும் பொழுது 22 ஆட்களாக சந்திக்கின்றனர்....???? 22 ராசியான இலக்கமோ?

11 + 11 : சந்திப்பின் முடிவில் சினேகபூர்வமான கிரிகெட் அல்லது புட்போல் ஆட்டம் விளையாடுவதற்கு கன்னை பிரிப்பதற்கு வசதியாக அமைவதற்காக என்று நினைக்கின்றேன்.

11 + 11 : சந்திப்பின் முடிவில் சினேகபூர்வமான கிரிகெட் அல்லது புட்போல் ஆட்டம் விளையாடுவதற்கு கன்னை பிரிப்பதற்கு வசதியாக அமைவதற்காக என்று நினைக்கின்றேன்.

சிரிப்பை அடக்க முடியவில்லை...

சுவிஸ் முன்னாள் பொறுப்பாளர் (கேபியின் வால்) குலமும் சென்று வந்தததாக தகவல்

அப்போ ... மனோ>>> சர்வே>>> ... >>>> அகரன் >>> ... முதல் ... உருத்திரகுமாரர் வரை செல்ல கனகாலம் இல்லிங்கோ!!!!!!!!!!!!

தளும்பும் (ஒரு காலத்தில் அல்ல, புலிகள் அங்கு போராடும் எல்லாக் காலத்திலும் புலிகளுக்காக பு.பெ. நா. களில் உழைத்தவர்கள் என்று சொன்னவர்களிம் முக்கால் வாசிக்கும் மேலானவர்கள்)

[size=4]சரி முழுப்பேரும் ஏமாற்றுக்காரர்கள் என்றே வைத்தாலும் கூட இன்றும் சிங்களம் புலம்பெயர் தமிழர்கள் மீதே கடுப்பாக உள்ளது. எனவே செயல்படும் மக்களை இனம்கண்டு ஆதரவு கொடுக்கவேண்டியது - காலத்தின் கடமை. [/size]

[size=4]நெர்டோ அமைப்பின் செயலாளர் குமரன் பத்மநாதனின் (கேபி) ஏற்பாட்டில் கடந்தவாரம் இலங்கை வந்த புலம்பெயர் உணர்வாளர்கள் 22 பேர் புனர்வாழ்வு முகாம்கள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்தனர். இவ்வியத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புதுக்குடியிருப்பில் வாழ்ந்ததாக் கருதப்படும் நிலக்கீழ் மாளிகையினை கேபி உட்பட புலம்பெயர் உணர்வாளர்கள் பார்வையிடுவதை படங்களில் காணலாம்.[/size]

kkp1.jpg

http://www.tamilmirror.lk/--main/46672-2012-08-14-14-07-54.html

[size=5]முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு துரிதப்படுத்தப்படும்: புலம்பெயர் உணர்வாளர்களிடம் கோட்டாபய உறுதி[/size]

[size=4]புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென நெர்டோ அமைப்பின் செயலாளர் குமரன் பத்மநாதனின் (கேபி) ஏற்பாட்டில் இலங்கை வந்த புலம்பெயர் உணர்வாளர்களிடம் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.[/size]

[size=4]நெர்டோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை வந்த வெளிநாட்டு உணர்வாளர்களுடன் கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்ததாக குமரன் பத்மநாதன் - தமிழ்மிரருக்கு பிரத்தியேகமாகத் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக கேபி மேலும் கூறுகையில்...

கனடா, லண்டன், அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, சுவீடன், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 உணர்வாளர்கள் நெர்டோ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்தவாரம் இலங்கை வந்தனர். இந்த உணர்வாளர்களுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்திய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ பல உறுதிமொழிகளை வழங்கினார்.

புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பில் முக்கியமாக நாங்கள் கலந்துரையாடினோம். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பற்றி ஆழமாக கலந்துரையாடினோம். எமது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு செயலர் - 'வேறு எந்த நாட்டிலும் இல்லாதளவிற்கு எமது அரசு – முன்னாள் போராளிகளில் புனர்வாழ்வு தொடர்பில் அதீத அக்கறை காட்டி வருகிறது. முன்னாள் போராளிகளும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழல் நிச்சயமாக உருவாகும். குறிப்பாக புனர்வாழ்வு முகாம்களில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் கூடிய விரைவில் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவர்' என்று கூறினார்.

அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மறுவாழ்வுக்கும் ஜீவனோபாய வழிகாட்டல்களுக்கும் புலம்பெயர் சமூகம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு விஜயம் செய்த புலம்பெயர் உணர்வாளர்கள் வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், வெலிக்கந்தை – கந்தக்காடு, சேனபுர ஆகிய புனர்வாழ்வு முகாம்களுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டதோடு அவர்களுக்கு தேவையான சிறு உதவிகளையும் வழங்கினர். குறிப்பாக வவுனியா – பூந்தோட்டம் முகாமிலுள்ள தமிழினி உட்பட முன்னாள் பெண் போராளிகளுக்கு 3 தையல் இயந்திரங்கள் மற்றும் 2 கணினிகள் என்பவற்றை புலம்பெயர் உணர்வாளர்கள் நன்கொடையாக வழங்கினர். அத்தோடு, வெலிக்கந்தை முகாமிலுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் சிலவற்றையும் வழங்கினர்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/46669-2012-08-14-14-01-10.html

kp6.jpg

kp8.jpg

kp9.jpg

kp4.jpg

kp1(7).jpg

முன்பு 21. இப்பொழுது 22

http://www.yarl.com/...showtopic=55212

[size=4]அதே பல்லவி தான் பாடப்பட்டது: விடுதலை துரிதப்படுத்தப்படும். பண உதவி தேவை. [/size]

இந்த கள்ளர்தான் ரனிலை தோற்க பண்ண காசு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் எதிரிகளை பலதடவைகள் வாங்கியதால்தான் மன்மோகன் சிங், பிளேக், அக்காசி, கனிமொழி, கருணாநிதிவரைக்கும் வாங்கப்பட்டவர்கள்.

போர்குற்ற விசாரணை ஒன்றை முன்னெடுப்பதன் மூலம்தான் நாம் தீர்வொன்றை காணமுடியும். அப்போதுதான் இந்த அகதிகளாக இருக்கும் சனம் திரும்ப ஒருநாள் 65% அரசவேலைகளை வைத்திருந்த சனமாக மாறமுடியும். அந்த சனததைதான் 1956 லிருந்துஅடித்து அடித்து இப்படி அகதிகளாக்கி வைத்து தண்டசோறு போட்டு இப்படி சோ காட்டுகிறார்கள்.

புலம் பெயர்மக்கள் அவர்களின் வீடுகள் மீது செல் அடிக்க காசு கொடுக்கவில்லை.அவரகள் மீளக்கட்ட பணம் கொடுக்கவேண்டியதில்லை. பங்கு சந்தையை கூட திருடி தின்னும் மகிந்தா குடும்பம் போட்டுக்கட்ட வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தாவின் தயாரிப்பில் KP இன் இயக்கத்தில் போடுகிற கூத்துக்கு இந்த 22 பேரும்தான் வில்லங்கமான கொமடியனுகலாம் :D

போன மாட்டு திரவியங்கள்,... இங்கிருந்து சுற்றி வளைத்து பிடித்து அனுப்பிய மாமாக்களையும் ,... அடுத்த ரவுண்ற்கு பிடிக்கப்படப்போகும் மாடுக்களையும் ..... விபரங்கள்/முகங்களை, பார்க்க ஆசையாக இருக்கிறது! ... மலிய சந்திக்கென்ன சந்தைக்கும் வரும் ... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டர பிடிச்சு கேட்டா விபரமா சொல்லுவார் தானே?

பாண்டர பிடிச்சு கேட்டா விபரமா சொல்லுவார் தானே?

செக்கட்டரி ஜெனரல் ... வன்னியில் உதவி செய்வதாக கூறிப்போய் .... அன்பை பரிமாறி ... உபத்திரவம் வாங்கி வந்திருப்பதாக கேள்வி ... ஓசிப்பேப்பர் ஒன்றில் கட்டுரை கட்டுரையாக வரப்போகிறதென்றும் கேள்வி ... நானறியேன் பாராபரமே ... என்னை விடுங்கோப்பா :icon_mrgreen:

Edited by Nellaiyan

[size=4]போனவர்களை அந்த நாட்டு உளவுகள் நிச்சயம் துருவும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் முன்னாள் பொறுப்பாளர் (கேபியின் வால்) குலமும் சென்று வந்தததாக தகவல்

அன்பு உங்கள் குற்றச்சாட்டு உண்மையானதா ? இதற்கான ஆதாரம் என்ன ? ஒரு விடயத்தை முன்வைக்கிற போது அதற்கான ஆதாரத்தையும் இணைத்தால் உண்மைகளை பிரித்தறிய வசதியாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.