Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை சுட்டவருக்கு மரணதண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maheswaran.jpg

[size=4]முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

கிறிஸ்தோபர் வலன்ரின் என்ற பிரதான சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, அவருக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ச தீர்ப்பளித்தார்.

ஐதேக ஆட்சிக்காலத்தில் இந்து சமய விவகார அமைச்சராக இருந்த தி.மகேஸ்வரன் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் வைத்து கடந்த 2008 ஜனவரி முதலாம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேகநபரான வலன்ரினை, மகேஸ்வரனின் மெய்க்காவலர்களால் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.puthinapp...?20120827106875[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க பட வேண்டிய விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான கொலையாளியா அல்லது பேரறிவாளன் கதையா?

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

கொல்லச்சொல்லி இந்த அம்பை அனுப்பியவனுக்கு........??? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி தன்ரநிலையே தெரியாம நிக்குது . அப்புறம் என்ன அம்போதான் .

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி முன்பு கிருசாந்தி கொலை வழக்கில் சிலருக்கு மரண தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதா?.

மகேஸ்வரன் கொலை வழக்கு - விளக்குகளை அணைத்து விட்டு தீர்ப்பை படித்த நீதிபதி [ செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, 02:09 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனை சுட்டுக்கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட அவரது மனைவியான ஐ.தேக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மறுத்துள்ளார்.

“இந்தத் தீர்ப்பு பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் கடவுளே தீர்மானிப்பவன் என்று கருதுகிறேன். தீர்ப்பும் கடவுளின் முடிவே.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று மகேஸ்வரனை சுட்டவரான வசந்தன் எனப்படும் ஜோன்சன் கொலின் வலன்ரினோவுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கினார்.

2008 ஜனவரி 01ம் நாள் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் வைத்து முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் மற்றும் சந்திரகுமார் மகிந்தன் ஆகியோரைச் சுட்டுக்கொலை செய்ததாக இவருக்கு எதிராக எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ச நேற்று 150 பக்க தீர்ப்பை அறிவித்தார்.

சந்திரகுமாரை சுட்டுக் கொன்றதற்கு போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படாததால் மேற்படி குற்றச்சாட்டில் இருந்து வசந்தன் விடுவிக்கப்பட்டார்.

எனினும் இவர் மகேஸ்வரனை சுட்டுக்கொன்றதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக நீதிபதி அறிவித்தார்.

நேரில் கண்ட சாட்சிகளும் , விசாரணை அறிக்கைகளும் இதனை உறுதி செய்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மகேஸ்வரனை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் இருந்த இரத்தமாதிரியும், சந்தேகநபரின் இரத்த மாதிரியும் ஒத்துப் போவதாக மரபணுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டின்போது சந்தேக நபரின் விரலில் காயம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தண்டனையை அறிவிப்பதற்கு முன்னர், வழக்கு தொடர்பாக ஏதும் கூறவிரும்புகிறீர்களா என்ற சந்தேக நபரிடம் நீதிபதி கேட்டார்.

அதற்கு சந்தேகநபர் தனக்கு இந்த சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த மின் குமிழ்கள் யாவும் அணைக்கப்பட்டன.

அதன்பின்னர் குற்றவாளியை வெலிக்கடை சிறைச்சாலையில் மூச்சு அடங்கும் வரை தூக்கிலிடுமாறு உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பில் ஒப்பமிட்ட பின்னர் பேனா முனையை உடைத்தெறிந்தார்.

http://www.puthinapp...?20120828106880

பி.கு

சில கேள்விகள். இந்த வசந்தன் யார்? EPDP க்கு வேண்டப்படாதவரா அல்லது EPDPயால் ஏற்கனவே வேண்டப்பட்டு இதில் மாட்டினாரா?

இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த மின் குமிழ்கள் யாவும் அணைக்கப்பட்டன. அதன்பின்னர் குற்றவாளியை வெலிக்கடை சிறைச்சாலையில் மூச்சு அடங்கும் வரை தூக்கிலிடுமாறு உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பில் ஒப்பமிட்ட பின்னர் பேனா முனையை உடைத்தெறிந்தார்.

இதன் வழமையான தூக்குதண்டனை வழக்குகளின் முறையா அல்லது இங்கே நடந்த ஸ்பெஷலா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரனை... மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் ஒரு சிறந்த அரசியல்வாதி.

அவரைக் கொன்றவருக்கு, தூக்குத்தண்டனை விதித்தது வரவேற்கக் கூடியது

----

இதன் வழமையான தூக்குதண்டனை வழக்குகளின் முறையா அல்லது இங்கே நடந்த ஸ்பெஷலா?

தூக்குத்தண்டனை விதிக்கும் போது... அந்தத் தீர்ப்பை எழுதிய பேனையின், முனையை... முறிப்பது, அநேக நாடுகளில் உள்ள பொதுமுறை.

மகேஸ்வரனை... மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் ஒரு சிறந்த அரசியல்வாதி.

அவரைக் கொன்றவருக்கு, தூக்குத்தண்டனை விதித்தது வரவேற்கக் கூடியது

தூக்குத்தண்டனை விதிக்கும் போது... அந்தத் தீர்ப்பை எழுதிய பேனையின், முனையை... முறிப்பது, அநேக நாடுகளில் உள்ள பொதுமுறை.

நன்றி தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான கொலையாளியா அல்லது பேரறிவாளன் கதையா?

டக்கிளசிக்கு இனிமேல் தேவைப்படாதவராகவோ அல்லது டக்கிளசின் வண்டவாளங்களை அவிழ்த்து விடக்கூடியவராக இருக்க வேண்டும்.பிந்துருவெலவிலவில் கொலை செய்தவர்கள் வெளியில் நடமாடும் போது இவர் மட்டும் எப்படி தூக்கு கயிறுக்கு அனுப்பப்படுவார்?

ஐ.நாவில் நடைபெறப்போகும் கூட்டத்தொடரில் நல்ல பிள்ளையாக காட்ட இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியில் கருத்தை எழுதுகிறவர்கள் யாவரும் தேசம் தேசியம் என்ற சொற்களை நேசிக்கிறவர்கள். தயவு செய்து உங்கள் கருத்துக்களில் சற்று நிதானம் கொள்ளுங்கள். பிறேமதாசா முதல் ராஜீவ்காந்தி வரை கொலையானவர்களை யார் கொலைசெய்தார்கள் என்று ஆராட்சியில் நாம் இறங்கினால் அச்சம்பவங்களில் தொடர்புபட்ட நபர்களையும் நாம் துரோகிகளாகவே முத்திரையடிக்க வேண்டும்.

வலன்ரினோ பற்றி இன்னொரு அரசியல்காரருடன் தொடர்புபடுத்துவதோ அல்லது இந்த மரணதண்டனை சரியென்றும் கருத்தெழுதுவதோ சரியான கருத்தாடல் இல்லை.

தாம் நேசித்தவர்கள் சொன்ன எல்லாவற்றையும் தேசியத்தின் பெயராலும் தேசத்தின் பெயராலும் செய்து முடித்தவர்கள் வரிசையில்தான் வலன்ரினோ மகேஸ்வரன் கொலையில் தொடர்பானதும்.

மகேஸ்வரனின் மனைவி இவ்விடயத்தில் அடக்கிவாசிப்பதன் உள்நோக்கம் தன்னை அரசியலில் தக்க வைக்க. அதனாலேயே கடவுளை துணைக்கு அழைத்துள்ளார்.

எத்தனையோ போராளிகள் துரோகிகளாகவே வாழ்ந்து மடிந்து போன வரலாறு எங்கள் விடுதலை வரலாற்றில் பதியப்படாத கதைகள் இருக்கிறது.

எங்கேயோ புரியுறமாதிரி இருக்கு இதுக்கு மேல கதைக்காமல் வாயை மூடுவோம்

... மண்ணெண்ணையின் கொலையையும், ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையையும் ஒன்றாக எடை போடாதீர்கள்! அந்த மாமனிதர் கொள்கைக்காக உயிர் பறிக்கப்பட்டவர், ஆனால் மண்ணெண்ணை வியாபார வருமான பகிர்வில் ஏற்பட்ட முரன்பாட்டுக்கு உயிர் விட்டவர்.

மண்ணெண்ணை ஓர் வியாபாரி .. அவரது மனைவி உட்பட!! ... உங்கள்/எங்கள் நலனில் அக்கறைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை! மாறாக தன் வியாபாரத்தை பலப்படுத்தவே அரசியல்வாதியானார்! அக்காலகட்டத்தில் அரசியலில் யாழில் காலூன்றுவதானால் குத்தி டக்ளஸுக்கு யாரும் ஆப்பு கொடுக்க வேண்டும்! அதை மண்ணெண்ணை தன் பண பலத்தால் செய்தார்! அதில் பிரபலமானார்!

வியாபாரம் ஆகா ஓகோ என்று வடக்கில் போகவேண்டுமென்றால் புலிக்கும் வாலை காட்ட வேண்டும் ... புலியின் சாமானுகளையும் இறக்கி பறிக்க வேண்டும் ... இது ஓர் வியாபார தந்திரம்!

குத்திக்கு ஆப்படிப்பது போல் காட்டிய அதே சமயம் குத்தியுடனும் வியாபார ஒப்பந்தம்! ... யாழில் கப்பலில் கொண்டு சென்று இறக்குகிறதுகளில் ... வரும் லாபத்தில் ... இத்தனை வீதம் குத்திக்கு கொடுக்க வேண்டும்! ... அதில் இழுபறி ... குத்தியும் யாழ் வியாபாரத்தை முழுக்க தான் எடுத்தால் என்னவென்று யோசித்தான் ... சிங்களத்துக்கு போட்டுக் கொடுத்தான், ... புலிக்கு சாமான் இறக்குகிறான், அது இது என்றெல்லாம், அதற்கு மேலாக புலியின் பினாமியாக! ... சிங்களவனும் பச்சைக்கொடி காட்ட ... குத்தியின் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கிறேன் என நினைத்து ... மண்ணெண்ணையை போட்டான்!

ஆனால் இக்கொலைக்கு பின் புலமாக சிங்களமே நின்றது, குத்தி கருவியே!!!! ... ஆமா அக்கொலையை செய்தது குத்தியே ஒழிய, அதற்கும் சிங்களத்துக்கும் தொடர்பில்லை என்பது போலவே மண்ணெண்ணையின் மனைவியின் ஒப்பாரியும்!!! இன்றுவரை சிங்களத்தை குறை கூறவில்லை! ... இன்றும் மண்ணெண்ணையின் மனைவியின் திண்ணைவேலி வீடுகளோ, மண்ணெண்னையின் வசதிகளைத்தான் மகிந்த/ரணில் உட்பட்ட சிங்கள தலைவர்கள் பயன்படுத்துகின்றார்கள் யாழில்!!!

மண்ணெண்னையின் வியாபாரங்களோ, வருமானங்களோ ... இன்று வரை சிங்களத்தால் முடக்கப்படவில்லை! ... இங்கு நாமோ மண்ணெண்ணையை தியாகியாக்க முயல்கிறோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ... நெடுக்ஸ், காதிலை விழுதா?

வாங்கோ... நாங்களும், நீங்களும் நேசம். :rolleyes::D:lol:

நன்றி, நெல்லையன். :wub::rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிறு திருத்தம்.

அந்த வீட்டில்... தான், இந்தியாவின்.. உப தூதுவராலயம் இருக்குது என, நினைக்கின்றேன்.

இத்திரியில் கருத்தை எழுதுகிறவர்கள் யாவரும் தேசம் தேசியம் என்ற சொற்களை நேசிக்கிறவர்கள். தயவு செய்து உங்கள் கருத்துக்களில் சற்று நிதானம் கொள்ளுங்கள். பிறேமதாசா முதல் ராஜீவ்காந்தி வரை கொலையானவர்களை யார் கொலைசெய்தார்கள் என்று ஆராட்சியில் நாம் இறங்கினால் அச்சம்பவங்களில் தொடர்புபட்ட நபர்களையும் நாம் துரோகிகளாகவே முத்திரையடிக்க வேண்டும்.

வலன்ரினோ பற்றி இன்னொரு அரசியல்காரருடன் தொடர்புபடுத்துவதோ அல்லது இந்த மரணதண்டனை சரியென்றும் கருத்தெழுதுவதோ சரியான கருத்தாடல் இல்லை.

தாம் நேசித்தவர்கள் சொன்ன எல்லாவற்றையும் தேசியத்தின் பெயராலும் தேசத்தின் பெயராலும் செய்து முடித்தவர்கள் வரிசையில்தான் வலன்ரினோ மகேஸ்வரன் கொலையில் தொடர்பானதும்.

மகேஸ்வரனின் மனைவி இவ்விடயத்தில் அடக்கிவாசிப்பதன் உள்நோக்கம் தன்னை அரசியலில் தக்க வைக்க. அதனாலேயே கடவுளை துணைக்கு அழைத்துள்ளார்.

எத்தனையோ போராளிகள் துரோகிகளாகவே வாழ்ந்து மடிந்து போன வரலாறு எங்கள் விடுதலை வரலாற்றில் பதியப்படாத கதைகள் இருக்கிறது.

[size=4]ஆராய்ச்சி என்று இறங்கினால் முழுமையாக இறங்க வேண்டும். அது பிரேமதாசாவில் தொடங்காமல் இராஜீவில் முடியாமல் இருக்கவேண்டும்.[/size]

[size=4]அப்பொழுது நீதி வெல்லும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆராய்ச்சி என்று இறங்கினால் முழுமையாக இறங்க வேண்டும். அது பிரேமதாசாவில் தொடங்காமல் இராஜீவில் முடியாமல் இருக்கவேண்டும்.[/size]

[size=4]அப்பொழுது நீதி வெல்லும்.[/size]

அகூதா, இங்கு கருத்தெழுதியவர்கள் பலர் வலன்ரீனோ ஈபீடிபி கட்சியின் பழிவாங்கல் என்ற தோற்றத்திலும் மகேஸ்வரனின் பிள்ளைகளின் கண்ணீரை மறக்க முடியாது அதற்கு வலன்ரீனோவுக்கான தண்டனை சரியென்று எழுதியிருந்தார்கள். அவர்களுக்கே இப்படி எழுத நேர்ந்தது. நாங்கள் கொண்டாடும் வெற்றிகள் பலவற்றின் வேர்களில் வரலன்ரீரோவின் பணியும் பங்கும் நிறையவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தன்கடமையை சரிவரச்செய்தான். அதற்குள் கருணை கண்ணீர் எதனையும் பார்க்கவில்லை. அதனை இங்கு எழுதிய பலர் புரிந்து கொள்ளவில்லை. எழுந்தமானத்தில் எல்லாவற்றையும் ஆமாபோடுகிற கருத்துக்களை நாம் மாற்ற வேண்டும்.

எனது கருத்து உங்களால் தவறாக புரியப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றைக்கண் சிவராசன் புலியா.. தாணு புலியா.. இல்ல சி ஐ ஏ ஏஜெண்டுகளா.. இல்ல.. புலில இருந்தவங்கள றோவும் சி ஐ ஏயும் வாங்கினதா.. இல்ல புலிக்க ஊடுருவி இருந்த வேற ஒட்டுக்குழு ஆக்களா.. இல்ல புலியை பகைச்சுக்கிட்ட ஒட்டுக்குழு ஆக்களா.. சோனியா ஏஜெண்டுகளா... கருணாநிதி ஏஜெண்டுகளா.. என்று எத்தனையோ கேள்விகளுக்கு இன்னுமே விடை கிடைக்கல்ல..!

இதில.. இது வேற..!

எல்லாம் தெரிஞ்சவையால உலகத்திற்கு வந்த பிரச்சனையைக் காட்டிலும்.. எல்லாம் தெரிஞ்சவையா காட்டிக்க விரும்பிறவையால...உலகத்திற்கு வந்த பிரச்சனையே அதிகம்...! :lol:

அடிப்படையில்.. மகேஸ்வரன் பூரணமான சுத்தவாளியும் இல்ல.. சுட்டவன் பூரணமான குற்றவாளியும் இல்ல..!

அரசியல் படுகொலைக்களுக்கு எதிரான மரண தண்டனைகள் இன்றைய 21ம் நூற்றாண்டில் அவசியமுன்னா.. ஈழத்தில் செய்த படுகொலைகளுக்காக ராஜீவ்.. ஜே வி பியை மற்றும் தமிழ் மக்களைக் கொன்ற குற்றத்திற்காக ஜே ஆர்.. பிரேமதாச.. டிங்கிரி பண்டா...சந்திரிக்கா.. மகிந்த.. கோத்தா... போன்றவர்களும்.. தமிழ் ஒட்டுக்குழு தலைவர்களும்.. மதவாத ஜிகாத்.. மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையை தூண்டி தமிழ் மக்களைக் கொன்று குவித்த முஸ்லீம் தலைமைகளும்.. சிறீலங்கா தமிழ் மக்களைக் கொலை செய்ய ஆயுத வழங்கிய உலகத் தலைவர்களுக்கும் மரண தண்டனை கொடுக்கனும்.. நீதிமன்றங்கள் அவற்றைக் கொடுக்க முடியுங்களா..??!

ஈராக்கில.. மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுவிட்டு சீனியர்.. புஸ்ஸும்.. யூனியர் புஸ்ஸும் கொல்ப் விளையாடிக்கிட்டு இருக்கலாமுன்னா... மரண தண்டனை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு..என்றதில என்ன தப்பு இருக்குது..???! உலகம் இதைப் பற்றி எல்லாம் நீதியா சிந்திக்குமா.. செயற்படுமா..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகள் நிரந்தரமாக தப்பிக்கப் போகிறார்கள். அவர் உயிருடன் இருந்தால் இந்தக் கொலையைச் செய்யத் தூண்டியவர்கயை ஒருநாள் போட்டுக் கொடுக்கலாம் அல்லவா.மரண தண்டனை சரியான தண்னை அல்ல.

அகூதா, இங்கு கருத்தெழுதியவர்கள் பலர் வலன்ரீனோ ஈபீடிபி கட்சியின் பழிவாங்கல் என்ற தோற்றத்திலும் மகேஸ்வரனின் பிள்ளைகளின் கண்ணீரை மறக்க முடியாது அதற்கு வலன்ரீனோவுக்கான தண்டனை சரியென்று எழுதியிருந்தார்கள். அவர்களுக்கே இப்படி எழுத நேர்ந்தது. நாங்கள் கொண்டாடும் வெற்றிகள் பலவற்றின் வேர்களில் வரலன்ரீரோவின் பணியும் பங்கும் நிறையவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தன்கடமையை சரிவரச்செய்தான். அதற்குள் கருணை கண்ணீர் எதனையும் பார்க்கவில்லை. அதனை இங்கு எழுதிய பலர் புரிந்து கொள்ளவில்லை. எழுந்தமானத்தில் எல்லாவற்றையும் ஆமாபோடுகிற கருத்துக்களை நாம் மாற்ற வேண்டும்.

சாந்தி,

உங்கள் மன உணர்வுகளை அடக்கி மௌனம் காக்க வேண்டும். அது இன்னும் பலருக்கு நன்மை பயக்கும். காலமும் போராட்டமும் முடிந்துவிடவில்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

சொன்னதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.