Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசிப்புப் பழக்கம், சுய தேடல் இல்லாத யாழ். சமூகம்

Featured Replies

[size=4]யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களை சுயமாக முயற்சிக்க தூண்டாது, பணத்தை அனுப்பி சீரழித்தது புலம் பெயர் சமுதாயம் இழைத்த பாரிய தவறு என்பது இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது.[/size]

[size=4]புலம் பெயர்ந்த தமிழர்கள் வாசிப்பு, தெடலை கோட்டைவிட்டது போலவே யாழ். சமுதாயமும் கோட்டை விட்டுள்ளதை யாழ். நூலகரின் கருத்து தெளிவாக விளக்குகிறது.[/size]

[size=4]யாழில் இருந்தாலும், கனடா – அமெரிக்காவில் இருந்தாலும் தமிழினம் தேடலற்ற, வாசிப்பற்ற இனம் என்பதே யதார்த்தமாக உள்ளதை மறுபடியும் இந்தச் செய்தி உறுதி செய்கிறது.[/size]

[size=4]இதோ செய்தி…[/size]

[size=4]சமூக மேம்பாடு என்பது தனி மனித அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி மனித அபிவிருத்தி என்பது பேசப்படாத ஒரு பொருளாகவே காணப்படுகின்றது என யாழ்.பல்கலைக்கழக நூலகர் காந்தலட்சுமி அருளானந்தம் தெரிவித்தார்.[/size]

[size=4]ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய டாவட்டங்ககைச் சேர்ந்த 46 நூலகங்களுக்கு ஒரு தொகுதி நூல்கள் கையாளிக்கும் நிகழ்வும் நூலகர்களுக்கான பயிற்சி பட்டறை வழங்கும் நிகழ்வும் இன்று காலை 9 மணிக்கு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.[/size]

[size=4]இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,[/size]

[size=4]சமூகம் சார்ந்த சில செய்திகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தவகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தனி மனித அபிவிருத்தி என்பது சுய கற்றலில் தான் தங்கியுள்ளது. இந்த சுய கற்றல் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்திக் கொள்வதனால் மட்டுமே ஏற்படும்.[/size]

[size=4]அதன்படி இன்றைய நிலையினை எடுத்து நோக்கினால் இன்று நுலகங்களை பார்க்கும் போது வாசிப்பு [/size]

[size=4]பழக்கம் என்பது அருகி போய் விட்டதனைக் காணலாம்.[/size]

[size=4]அத்துடன் இன்று நூல் நிலையங்களைப் பார்க்கும் போது தனி மனித அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை. எங்களுடைய அறிவை நாங்கள் வளர்த்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.[/size]

[size=4]இன்று யாழ். பல்கலைக்கழக நூலகம் மற்றும் யாழ்.பொது நூலகம் ஆகியன போதியளவிலான வளங்களுடன் மக்களது பாவனைக்கு ஏற்றதாக உள்ளது.[/size]

[size=4]அத்துடன் எங்களுடைய சமூகம் மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு சுயமாக கற்கின்ற ஆற்றல் இல்லை இவை மனித மேம்பாட்டுக்கு அவசியமானது.[/size]

[size=4]எனவே இவற்றை எமது சமூகத்தில் மேம்படுத்துவதற்கான அவசியம் நுலகத்திற்குண்டு. அத்துடன் ஏசியா பவுண்டேசன் போன்ற அன்பளிப்பாளர்கள் சிறுவர் நூலகங்களிலும் தமது பங்களிப்பை செய்வது இன்றைய காலகட்டத்தின் அவசியமாகும்.[/size]

[size=4]எனவே அவற்றையும் ஏசியா பவுண்டேசன் நிறுவனம் கவனத்திற் கொண்டு தமது பங்களிப்பை செய்யும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]http://www.alaikal.com/news/?p=112486[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்புப் பழக்கம் மட்டுமல்ல.. பணத்தின் பெறுமதி கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்..! சுய முயற்சி இன்மை.. எதற்கும் மற்றவர்களை பணத்திற்கு எதிர்பார்ப்பது.. என்று.. ஒரு பொருளாதார தங்கு நிலையில் இருக்கிறார்கள் அங்கு மக்கள்.

இலகுவான முறையில் இலட்சங்களை.. கோடிகளை பார்க்கக் கனவு காண்கிறார்களே தவிர.. உழைப்பு.. சேமிப்பு இதனை மறந்த பலரையே இன்று வடக்குக் கிழக்கு மற்றும் கொழும்பில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் காண முடிகிறது.

வெளிநாட்டு அகதி வாழ்வு கிடைக்கும் என்ற அவதியில் படிப்பை கோட்டை விடுவதும் தொடர்கிறது..! வெளிநாட்டு விசாவின் அருமை புரிகின்ற அளவிற்கு.. படிப்பின் அருமை பலருக்குப் புரிவதில்லை.

இது ஒன்றைத் தெளிவாகக் காட்டுகிறது.. வடக்குக் கிழக்கில் இருந்து மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த பலர்.. பொருண்மிய அகதிகளே அன்றி.. அரசியல் அகதிகளாக இல்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒன்றைத் தெளிவாகக் காட்டுகிறது.. வடக்குக் கிழக்கில் இருந்து மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த பலர்.. பொருண்மிய அகதிகளே அன்றி.. அரசியல் அகதிகளாக இல்லை..! :icon_idea:

ரூ லேட் பிரதர்.. :icon_idea:

  • தொடங்கியவர்

[size=4]யாழ் ஆடுகளம் போன்று வாசிக்கும் எழுதும் துறைகளை வளர்க்கும் போட்டிகளை தாயகத்தில் உள்ள பாடசாலைகளில் பத்திரிகைகளில் நடாத்தலாம்.[/size]

[size=4]தனிப்பட்டவர்கள், அமைப்புக்கள், ஏன் யாழ் களம் கூட அதை செய்யலாம்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிப்புப் பழக்கம் மட்டுமல்ல.. பணத்தின் பெறுமதி கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்..! சுய முயற்சி இன்மை.. எதற்கும் மற்றவர்களை பணத்திற்கு எதிர்பார்ப்பது.. என்று.. ஒரு பொருளாதார தங்கு நிலையில் இருக்கிறார்கள் அங்கு மக்கள்.

இலகுவான முறையில் இலட்சங்களை.. கோடிகளை பார்க்கக் கனவு காண்கிறார்களே தவிர.. உழைப்பு.. சேமிப்பு இதனை மறந்த பலரையே இன்று வடக்குக் கிழக்கு மற்றும் கொழும்பில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் காண முடிகிறது.

வெளிநாட்டு அகதி வாழ்வு கிடைக்கும் என்ற அவதியில் படிப்பை கோட்டை விடுவதும் தொடர்கிறது..! வெளிநாட்டு விசாவின் அருமை புரிகின்ற அளவிற்கு.. படிப்பின் அருமை பலருக்குப் புரிவதில்லை.

இது ஒன்றைத் தெளிவாகக் காட்டுகிறது.. வடக்குக் கிழக்கில் இருந்து மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த பலர்.. பொருண்மிய அகதிகளே அன்றி.. அரசியல் அகதிகளாக இல்லை..! :icon_idea:

article-1180829-04E4BCE1000005DC-482_468x501.jpg

Canada_Kiliththaddu_2012_04.jpg

யார் இவர்கள்???

Edited by குமாரசாமி

யாழ் சமூகம் என்று இல்லை, புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தில் கூட வாசிப்பு பழக்கம் என்பதே முற்றிலும் அருகி வருகின்ற விடயமாகத்தான் இருக்கின்றது. தரமான இலக்கியம், தரமான வாசிப்பு என்பனவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு இன்று தமிழகத் தொலைக்காட்சி நாடகங்களில் வளர்ந்தோர் சமூகம் மூழ்கியிருக்க, சிறுவர்கள் தொலைக்காட்சி கார்ட்டூன்களில் மூழ்கி இருக்கின்றனர். வாசிப்பும், நூலகம் செல்லுவதும் மிகவும் அருகி விட்டது எம் சமூகத்தில்.

வாசிப்பும் தேடலும் எது சரி எது பிழை என்று இன்றுவரை எனக்கு புரியாத புதிர் .

இந்து கல்லூரியில் படிப்பு முடித்து வெளிநாடு புறப்படமுன் பூபாலசிங்கம் புத்தகசாலையில் ஆனந்தவிகடன் ,குமுதம் ,குங்குமம் ,கல்கி ,பொம்மை வாங்கிக்கொண்டு வந்து இந்து கல்லூரி மதிலுடன் சாய்ந்துகொண்டு ஒரு கிரிக்கெட் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்தேன் .கையில் பொம்மையை கண்ட எனது நண்பன் என்னை கேலி செய்ததில் ஆரம்பித்து எனக்கு இந்த பிரச்சனை .இது பின் இந்தியாவில் இருக்கும் போதும் தொடர்ந்தது .சாமான் வாங்க போன இடத்தில் வண்ணதிரையை புரட்டினேன் .என்னுடன் வந்த எனது தோழர்(இந்நாள் மச்சுனர் ) இது வேறு வாசிப்பீர்களோ என்று தொடங்கி அன்று பெரிய சண்டையே நடந்து விட்டது .

எனது வாதம் இதுதான் ,நான் தனிய சினிமா மட்டும் வாசிப்பதில்லை பலதும் பத்துடன் சினிமாவும் ஒன்று ,இன்று வரை அதுதான் தொடர்கின்றது ஆனால் அதை நக்கல் அடிப்பவர்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்கள் .

இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் எதுவும் வாசிப்பதில்லை . எமது மிக பெரிய பிரச்சனையே அதுதான் .

  • தொடங்கியவர்

[size=4]' சுய தேடல்' என்பதன் அர்த்தம் என்ன? நன்றிகள். [/size]

' சுய தேடல்' என்பதன் அர்த்தம் என்ன? நன்றிகள்.

தன்னை தானே எந்தவித பக்கச்சார்பும் இன்றி விமர்சனங்களினூடு அறிந்து கொண்டு அதன் மூலம் தான் சார்ந்த சமூகத்தை தெளிவாக அறிய முற்படுதல்.

நன்றி

  • தொடங்கியவர்

தன்னை தானே எந்தவித பக்கச்சார்பும் இன்றி விமர்சனங்களினூடு அறிந்து கொண்டு அதன் மூலம் தான் சார்ந்த சமூகத்தை தெளிவாக அறிய முற்படுதல்.

நன்றி

[size=4]சுயதேடல் பற்றிய விளக்கத்திற்கு நன்றிகள். எனது பார்வையில் இது எமது மக்களுக்கு கடினமான ஒன்றாகவே இருக்கும். காரணம் அங்குள்ள அரசியல், பொருளாதார, இராணுவ சூழ்நிலைகள். [/size]

[size=1]

[size=4]அடிப்படையில் வாசிக்கும் பழக்கம் என்பது சிறுவயதில் இருந்தும் பெற்றோர் உறவினர் இடமும் இருந்தும் வரவேண்டும். அடுத்து எமது மக்கள் மத்தியில் பலவேறு தரப்பட்ட சிந்தனை உடையவர்களுக்கும் போய்ச்சேரக்கூடிய விதத்தில் இலக்கியங்கள், நவீன படைப்புகள் வேண்டும். அவை கூட ஒரு பற்றாக்குறை நிலையிலேயே உள்ளது எனலாம். [/size][/size]

கனடாவின் பல முக்கிய நகரங்களில் 'இலவச பத்திரிகைகள்' விநியோகிக்கப்படுகின்றன. அவ்வாறு தாயகத்தின் முக்கிய நகரங்களிலும் செய்யலாம். இங்கே இவற்றுக்கான செலவை விளம்பரம் ஊடாக பெறுகின்றனர். தாயகத்திலும் அவ்வாறு அதற்குரிய செலவை பெறலாம்.

[size=1]

[size=4]எமது மக்கள் பலரும் ஆரம்பத்தில் இவற்றை கடலை சுற்ற பாவித்தாலும் <_< காலப்போக்கில் வாசிக்கும் பழக்கத்தை கூட்டலாம்.[/size] [size=4]அத்துடன் அந்த பத்திரிகைகளில் பரிசுப்போட்டிகள், பரிசு பொது அறிவுப்போட்டிகள், பரிசு கட்டுரைகள் என ஊக்கம் கொடுக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]ஒரு நீண்டகால திட்டங்களுடன் இவைக்குரிய வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்தாவிட்டால் மீள பெறமுடியாத நிலைக்குள் போய்விடுவோம். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிப்பும் தேடலும் எது சரி எது பிழை என்று இன்றுவரை எனக்கு புரியாத புதிர் .

இந்து கல்லூரியில் படிப்பு முடித்து வெளிநாடு புறப்படமுன் பூபாலசிங்கம் புத்தகசாலையில் ஆனந்தவிகடன் ,குமுதம் ,குங்குமம் ,கல்கி ,பொம்மை வாங்கிக்கொண்டு வந்து

நான் சொல்லுவேன் இந்த புத்தகங்களை வசித்து அழிந்ததை விட ஏதாவது அறிந்தது என்பது குறைவு என்று. சின்ன வயதிலேயே ரமணிச்சந்திரன் கதைகள் ஒரு குப்பை என்று அறிந்து கொண்டேன்- அதில் அறிவதர்ற்கு எதுவும் இல்லை என்கிற நிலை/ ஆனால் அதை படித்து அதை பற்றி விவாதித்து தங்கள் உறவுகளை வளப்படுதியவர்களுடன் கூட இருந்திருக்கிறேன் - ஆனால் அதிகம் பாலகுமாரின் கதைகள் வாசித்தது உண்டு- அது கூட அதில் வரும் காமத்தினால் என்று உணர சில காலம் பிடித்தது...இப்போது எதுவும் வசிப்பதில்லை. அதைவிட சில புத்தகங்களும் வாசித்திருக்கிறேன் சொல்லும் படியாக இப்போது ஞாபம் இல்லை.

யாழ்பாணம் நூலகதிர்ற்கு பெரிய வாடிக்கையாளர் குழாம் என்றால்; உந்த கதை வாசிக்கிற கூட்டமே..மாதம் மாதம், வருடம் வருடம் அதற்கு செலவழிக்கும் காசிற்கு வேறு பிரயோசனமான புத்தகம் வாங்கலாம், முந்தி நல்லூர் அடியில் இருக்கும் பொது சனிக்கிழமைகளில் போக வேண்டும், காகம் மாதிரி ஒரு குழு சுத்தி சுத்தி புதிய புத்தங்களை எடுத்து செல்லும்...பார்த்து கொண்டு நிற்கும் போதே நூலகர்கள் கிழே உள்ள கபோட்க்குள் போடுவார்கள்...பிற்காலத்தில் அங்கு வேலை செய்த ஒரு வீனைவித்துவான் நண்பன் ஆனா பின்பு, எங்களுக்கும் புதிய புத்தகங்கள் கிடைக்க தொடங்கியது

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பு என்றது பொதுவாக எல்லா நாடுகளிலும் தான் குறைந்து வருது ஆஸ்திரேலியாவில் இது ஒரு முக்கிய பிரச்சனை அதனால் தான் பிரதமர் முதல் கொண்டு எதிர்க்கட்சித்தலைவர் வரை பாடசாலைகளுக்கு செல்லும் போது சிறுவர்களுடன் இருந்து அமர்ந்து கதைகளை வாசித்து வாசிப்பு பழக்கத்தை ஊக்கிவிக்குறார்கள்

மற்றது இன்டர்நெட் இன்னும் ஒரு ஐந்து வருடங்களில் ஆஸ்திரேலியா பத்திரிகைகள் எல்லாம் செய்தித்தாளை அச்சடிப்பதை நிறுத்தி இன்டர்நெட் ஊடாகவே வெளியிட போகின்றார்கள் நமது மொழி நூல்களும் பத்திரிகைகளும் அதனை பின்பற்ற வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசிக்கத் தொடங்கியது 2ம் வகுப்பு படிக்கும் போது வீரகேசரிப் பத்திரிகையின் கடைசிக்கு முதல் பக்கத்தில் வரும் செல்லமகால் கொட்டாஞ்சேனை, முருகன் ஜிந்துப்பிட்டி, நவா கொம்பனித்தெரு, ஈரோஸ் பம்மான்கடை, கொன்கோட் , கெயிட்டி.... என்ற விளம்பரங்களைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

article-1180829-04E4BCE1000005DC-482_468x501.jpg

Canada_Kiliththaddu_2012_04.jpg

யார் இவர்கள்???

ஊரில் படிச்சு உழைச்சு முன்னேறனும் என்று நினைக்கிறவன் குறைஞ்சு வெளிநாட்டுக் காசில.. மதில் மேல குந்தி இருந்து சாப்பிடவும்.. சுதி பண்ணவும்.. லவ் பண்ணவும் விரும்பிறவையே இன்று அதிகமாகி உள்ளதோடு.. பள்ளிப் பருவத்தில் பாடப்புத்தகம் படிக்குதுகளோ இல்லையோ.. ஆடு மாடு போல.. பாலியல் படிச்சு பத்து மாதங்களையும் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்குதுங்க..! அதுகளையும் வரிசையில நிற்பாட்டி படம் எடுத்தால்.. அந்த வரிசை உதுகளை விடப் பெரிசா இருக்கும்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பு என்றது பொதுவாக எல்லா நாடுகளிலும் தான் குறைந்து வருது ஆஸ்திரேலியாவில் இது ஒரு முக்கிய பிரச்சனை அதனால் தான் பிரதமர் முதல் கொண்டு எதிர்க்கட்சித்தலைவர் வரை பாடசாலைகளுக்கு செல்லும் போது சிறுவர்களுடன் இருந்து அமர்ந்து கதைகளை வாசித்து வாசிப்பு பழக்கத்தை ஊக்கிவிக்குறார்கள்

மற்றது இன்டர்நெட் இன்னும் ஒரு ஐந்து வருடங்களில் ஆஸ்திரேலியா பத்திரிகைகள் எல்லாம் செய்தித்தாளை அச்சடிப்பதை நிறுத்தி இன்டர்நெட் ஊடாகவே வெளியிட போகின்றார்கள் நமது மொழி நூல்களும் பத்திரிகைகளும் அதனை பின்பற்ற வேண்டும்

சுண்டலின் கருத்தோடு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும்.

இன்னும் அச்சு உலகில் தான் வாசிப்பு தங்கி இருக்கிறது என்ற மாயை அவசியம் இல்லை. இன்று இலத்திரனியல் உலகில் இருக்கும் அளவு சங்கதிகள் அச்சுலகில் இல்லை.

ஆனால் தாயகத்தைப் பொறுத்தவரை அங்கு வெளிநாடு போல.. இணைய வசதிகள் இல்லை. மட்டுப்படுத்திய எண்ணிக்கையுள்ள குடும்பங்களிடமே அது இருக்குது. ஈபுக் போன்ற இலத்திரனியல் வாசிப்பு ஊடகங்களை பெறவும் வாசிக்கவும்.. அதற்குரிய இலத்திரனியல் உபகரணங்களும் மட்டுப்படுத்திய எண்ணிக்கையுள்ள குடும்பங்களிலேயே உள்ளது. பள்ளிகளில்.. இவற்றை அறிமுகப்படுத்தி.. நல்ல விடயங்களை இணையத்தில் தேடவும்.. பெறவும்.. வாசிக்கவும் கற்றுக்கொடுத்தல் அவசியம்..!

மேற்கு நாடுகளில் ICT இல் இதனை செய்கிறார்கள். ஊரிலும் தற்போது ICT பள்ளிகளில் படிப்பிக்கிறார்கள். இருந்தாலும்.. இன்னும் அது வீடுகளை நோக்கி எல்லோருக்கும் என்று நகரவில்லை..! மேலும் கணணி அறிவு பெற்றோர் மத்தியில் மட்டுப்பட்டுப் போய் உள்ளமை.. பிள்ளைகள் கணணிகளை.. இலத்திரனியல் உபகரணங்களை நல்ல தேவைக்காகவே பாவிக்கின்றனர் என்பதை கண்டறிந்து வழிநடத்த முடியாமல் இருக்கச் செய்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் இந்த நிலை உள்ளது.

எனவே தாயகத்தில் கணணி மற்றும் இலத்திரனியல் வாசிப்பு முறைகள் பற்றி கலந்துரையாடல்களும் செயன்முறைப் பட்டறைகளும் பெற்றோர்களுக்கு கிராமங்கள் ரீதியாக நடத்த வேண்டும்.

வெறுமனவே நாலு புத்தக்கத்தை வாங்கிப் போட்டிட்டு.. எவனும் வாசிக்கிறான் இல்லை என்று திட்டிக் கொண்டிருப்பதிலும் 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற வகையில் நூலகங்கள் தங்களை நவீன மயப்படுத்தவும் அதற்கேற்ப மக்களைத் தயார்ப்படுத்த திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும்.

கோவில்களை புனரமைக்க செலவு செய்யப்படும் பணத்தில் ஒரு பகுதியில் கோவில்கள் தோறும் இலத்திரனியல் வாசிப்பு இடங்களை அமைத்து அடியார்களுக்கு இலத்திரனியல் ஊடக வாசிப்பு பழக்கத்தைக் கூட்டலாம். இலத்திரனியல் விளம்பரங்களை கோவில்களில் காண்பிக்கலாம்..! இணையத்தை இலத்திரனியல் பெருந்திரையில் காண்பிக்கலாம்..! இப்படி எத்தனையோ வழிமுறைகள் மேற்கு நாடுகளில் பின்பற்றப்படுகின்றன தானே..! ஏன் எம்மால் செய்ய முடிவதில்லை. இப்பவும் காண்டா மணிக்கு முலாம் பூசிறதில மட்டும் தான் எங்கள் கவனம் உள்ளது..! வெளிநாட்டுக்கு வந்தும் திருந்தாத ஜென்மங்கள் பல..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற பதிவு, அகூதா!

யாழ்ப்பாண சமூகத்தில், எமது வளர்ப்பு முறை, கண்கள் மறைக்கப் பட்ட குதிரையைப் போன்றது!

இந்த உவமானம், பலருக்கு விளங்காத படியால், ஒரு படத்தையும் போடுகிறேன்!

covered-eyes-of-a-horse-a731a1.jpg

இந்தக் குதிரைக்குப் பக்கங்களில், என்ன நடக்கிறது என்று தெரியாது!

மருத்துவமும், பொறியியலும், சீதனமும், மட்டும் தான் அதன், பார்வைக்கு அனுமதிக்கப் படுகின்றது! அதைத் தவிர, தேசிய லொத்தர் சபையினால் விற்கப் படும், லொத்தர் டிக்கட்டுத் தான் அது வாசிப்பது!

ஏனெனில், அதிலும் பணம் உண்டு!

இந்த நிலையை, நாங்கள் தான் மாற்றுவதற்கு, ஏதாவது செய்யவேண்டும்!

புலத்திலிருந்து, பணம் பெறும் தலை முறை கொக்கோ கோலாவில் தான் கை கழுவுகின்றது!

ஏனெனில், அந்தத் தலைமுறைக்குத் தேவைகள், அற்றுப் போகின்றன!

தேவைகள் இல்லாத போது, முன்னெடுப்புகளுக்கு அவசியம் இல்லை!

எமது சமூகத்தில், ஒரு பகுதி, சந்தனம் மிஞ்சிய நிலையில் உள்ளது, என்பதே எனது எண்ணமாகும்!

அது மற்றைய பகுதியை, தவறான வழிகளில் செல்ல ஊக்குவிக்கிறது!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=4]இன்று இவ்வாறு ஒரு மடல் போட்டேன். பதில் போட்டால் மேற்கொண்டு அறியத்தருகின்றேன். [/size]

[size=4]------------------------------------------------------------------------------------------------------------------------------------------[/size]

[size=5]to: admin@uthayan.com[/size]

[size=4]விடயம் : வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்க பரிசுப்போட்டி[/size]

[size=4]வணக்கம்,[/size]

[size=1]

[size=4]அண்மையில் வசித்த ஒரு செய்திக்குறிப்பின் படி யாழில் மாணவர்கள் இடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க உங்களால் ஒரு மாதந்த போட்டியை நடாத்தி பரிசளிக்க முடியுமென்றால், அதற்கான பரிசுத்தொகையை நான் தந்துதவ முன்வருகின்றேன். [/size][/size]

[size=1]

[size=4]எவ்வாறான போட்டி, அவை மாதம் மாதம் மாறலாமா ..என்ற விதிகளை உங்களிடமே விட்டுவிட விரும்புகிறேன். இது சாத்தியமானால் மேலதிக விபரங்களை, தொகையை அறியத்தாருங்கள்.[/size][/size]

[size=1]

[size=4]நன்றி,[/size][/size][size=1]

[size=4]வணக்கம்.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.