Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் கடு;ப்பேத்திறார் மைலாட்!!!!!!!!!

  • Replies 109
  • Views 6k
  • Created
  • Last Reply

இங்க பாருங்க இந்த 83 கதை எல்லாம் இப்ப வேண்டாம் இது 2012 பழச பேசிட்டு இருந்தா வடக்கும் போய்டும் ....எல்ஸ் கனடால கால ஆடிட்டு இருப்பார்....... தெரிவுகுளுக்குல போக சொல்லி தான் எல்லா நாடும் சொல்லுது போய் பாப்பம் இருந்து பேசுவம் நாங்களும் விட்டு கொடுப்பம் அவையளும் விட்டு தரட்டும் எல்லாம் முடியாது தானே அவங்களும் பொலிடிக்ஸ் பண்ண வேண்டாமா சிங்கள மக்கள்கிட்டா.... :D

அண்ணா, தெரிவுக்குழு என்பது சர்வதேசத்தை ஏமாற்ற நினைக்கும் மற்றும் காலத்தை இழுத்தடிக்க நினைக்கும் ஏற்பாடு. கூட்டமைப்பு இதற்கு சென்றால் கொஞ்ச காலம் இழுபட்டுச்செல்லும். பின்னர் தெரிவுக்குழு தோல்வியில் முடிவடைந்து விட்டது என்று கூறி புதிதாக ஒரு குழு அமைப்பார்கள். இப்பிடியே மாறி மாறி அவர்கள் குழு அமைக்க நாமும் போய்க்கொண்டிருந்தால் எப்படி பிரச்சினை தீரும்?

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ஒவ்வொருவராக எல்லாரும் வெளிநாட்டுக்கு வரட்டும்....இன்னும் கொஞ்சகாலம் இப்படியே போகட்டும்...இன்னும் கொஞ்ச சொந்தக்காரரை எடுக்கவேண்டியிருக்கு வெளிநாட்டில் செற்றில்லான நாங்கள்..நீங்கள் என்ன விசர்க் கதை கதைக்கிறியள் சுண்டல்...இணக்கம் அது இதெண்டு..உது நடந்தால் எப்பிடி அங்க இருக்கிற தம்பி சகோதரங்களை இஞ்ச எடுக்கிறது..? போனது கிழக்குதானை..வடக்கு இருக்குமட்டும் வாய்வீரம் பேசுவம்....அதுக்கிடையிலை சகோதரங்கள் எல்லாரையும் எடுத்திடுவம்.... பிறகு இருக்கிற வன்னிச்சனமும், ஏலாத போராளிகளும் பட்டபாடு...கேட்டா அப்பப்ப அஞ்சப் பத்தை ஒதுக்குவம்...ஆனால் ஒண்டு அவங்கள் மட்டும் வாழவேண்டும் எண்டு நினைச்சால் வெளிநாட்டுக்கு வந்து வாழட்டும்..ஊரிலை இருந்து வாழவேணும் எண்டு நினைச்சா செத்தாலும் சிங்களவனோட உரிமைபற்றி பேசக்கூடாது..ஒண்டில் போராடிச்சாகவேணும்...இல்லையெண்டால் வெள்நாட்டுக்கு கிளம்பி வந்துடனும்..இங்கை வந்தை நாட்டைமறந்து மொழியை மறந்து திரிஞ்சாலும் நீ நல்லவன்...ஆனால் ஊரில் இருந்து மொழியையும் வழர்த்து இன அடையாளங்களைப் பேணியபடி தந்திரமாக தற்காலிகமாக இனத்தின் இருப்பை நிலை நிறுத்துவதற்க்கு ஏதாவது செய்தால் இனத்துரோகிதான் நீங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்றது பாப்பாண்ட அம்மாட்டயும் அப்பாடையும் காசு இருந்திச்சு agencya பிடிச்சு அணுப்பினாங்க....பாப்பாவும் படிக்க போகும் வரைக்கும் பந்தி பந்தியா எழுதும்....அப்புறம் ரெண்டு மூண்டு பேர் friends வந்த உடன பாப்பாவும் கிளப்பிங் ஷாப்பிங் எண்டு பிஸி ஆகிடும் .....

அங்க இருக்கிற என்னோட அப்பாகளுட்டையும் அம்மாகளுட்டையும் சகோதரங்களுட்டையும் காசில்ல பிரச்னை தீரனும் எண்டு எதிர்பாகினம் இவையள் இல்லை இன்னும் ஒரு 30 வருஷம் போனாலும் பருவால்ல சிங்களவனோட பேச கூடாது எண்டினம் :D

தமிழர்கள் எல்லாரும் சிங்களவராக மாறினால், இப்போது சிங்களவராக இருப்பவர்கள் புது சிங்களவரை எப்படி நடத்துவார்கள்

?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நஜீப் அப்துல் மஜீத்தே தொடர்ந்து 5 வருடங்களுக்கும் முதலமைச்சராகப் பதவி வகிப்பார் SLMCக்கு இடமில்லை[/size]

[size=3][size=4]கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜீப் அப்துல் மஜீத்தே தொடர்ந்து 5 வருடங்களுக்கும் முதலமைச்சராகப் பதவி வகிப்பாரென அரசின் அதிஉயர் மட்ட தரப்புத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.[/size][/size]

[size=3][size=4]கிழக்கு முதலமைச்சர் பதவி எக்காரணம் கொண்டும் பங்கீடு செய்யப்படமாட்டாதென்றும் அந்த உயர் மட்டம் சுட்டிக்காட்டியது. கிழக்கு முதலமைச்சர் பதவிக்கு, முதல் இரண்டரை வருடங்களுக்குத் தற்போதைய முதலமைச்சர் நஜீப்பும், மீதி இரண்டரை வருடங்களுக்கு மு.கா. உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்படுவர் என வெளிவரும் தகவல்கள் இந்த அறிவிப்பையடுத்து முடிவுக்கு வந்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]கிழக்கு முதல்வராக மீதி இரண்டரை வருடங்களும், மு.கா. தனது கட்சி மாகாணசபை உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமதை முன்மொழிந்திருந்தது.[/size][/size]

[size=3][size=4]இது தொடர்பில் ஏற்கனவே மு.கா. தலைவருக்கு உத்தியோக பூர்வமாக அரசு எடுத்துக்கூறியிருப்பதாகவும், அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அரச உயர்மட்டம் கூறியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]கிழக்கு மாகாணசபையில் மு.காவுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளை மட்டும் வழங்குவது குறித்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதை விடுத்து வேறு எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை என அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]மாகாண முதலமைச்சர்களாக சு.க. சார்பானவர்களே நியமிக்கப்படுவர் என்பது சு.கவின் கொள்கை என்றும் இது அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்த விடயமென்றும் அந்த உயர்மட்டம் மேலும் சுட்டிக்காட்டியது.[/size][/size]

[size=3][size=4]அதேவேளை, கிழக்கு அமைச்சரவையில் தமிழர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக அரசு அதி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது எனத் தெரியவருகின்றது. [/size][/size]

[size=3][size=4]தமிழர் சார்பில் அமைச்சரவையில் ஒருவர் அங்கம் வகிப்பதன் அவசியத்தை கிழக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]எனினும், அமைச்சுப் பதவியை தான் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உறுதியாக அரசிடம் எடுத்துக் கூறியுள்ளார்.[/size][/size]

[size=3]http://www.globaltam...IN/article.aspx[/size]

[size=4][size=3][size=4]தமிழர் சார்பில் அமைச்சரவையில் ஒருவர் அங்கம் வகிப்பதன் அவசியத்தை கிழக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.[/size][/size][/size]

[size=4][size=3][size=4]எனினும், [/size][/size][/size][size=3][size=4]அமைச்சுப் பதவியை தான் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உறுதியாக அரசிடம் எடுத்துக் கூறியுள்ளார்.[/size][/size]

[size=4][size=3][size=4]கக்கீம், கருணாநிதி காங்கிரசில் நன்றாக மாட்டுப்பட்டு அடிமையாகி, சரித்திரம் படைத்த திமுகாவை அழித்து, தானும் அழிந்து போன அதே சரித்திரத்தை இலங்கையில் செய்து, முஸ்லீம் காங்கிரசையும் அழித்து தானும் அழிந்திருக்கிறார்.[/size][/size][/size][size=4][size=3][size=4] மு.கா வுக்கு (கக்கீமுக்கும்) வீர வணக்கங்கள். அதன் சிறுகால சாதனைகள் இலங்கைத்தீவின் முஸ்லீம்களின் சரித்திரத்தில் எழுதி வைக்கப்படும்.[/size][/size][/size]

"அமைச்சுப் பதவியை தான் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உறுதியாக அரசிடம் எடுத்துக் கூறியுள்ளார். "

அரசின் இந்த நாடகத்தின் ஒரு பகுதி கூட்டமைப்பை உடைக்க என்பது தெளிவு. கூட்டமைப்பு இரு நிலைப்பாடுகள் மட்டும் கொண்டிருக்க வேண்டும்.

1. இணைந்த வடக்கு கிழக்கில், பொலிஸ், காணி,13+ உடன் அரசில் இணைந்து தேசிய அரசு. தேசிய அரசுக்கு முதல் நிபந்தனை இல்லாமல் வடக்கு தேர்தல், வடக்கு-கிழக்கு இணைப்பு இரண்டும் நடந்தேற வேண்டும். தெரிவுக்கு குழுவுக்கு வெளியில் பேச்சுவார்த்தைகள்!

2.இல்லையேல் எதிர்க்கட்சில் மட்டும். தலைமை பிரிந்து போபவர்களுக்கு எச்சரிக்கை கூட கொடுக்க தேவையில்லை. அவர்களை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்பலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

பேசாமல் ஒவ்வொருவராக எல்லாரும் வெளிநாட்டுக்கு வரட்டும்....இன்னும் கொஞ்சகாலம் இப்படியே போகட்டும்...இன்னும் கொஞ்ச சொந்தக்காரரை எடுக்கவேண்டியிருக்கு வெளிநாட்டில் செற்றில்லான நாங்கள்..நீங்கள் என்ன விசர்க் கதை கதைக்கிறியள் சுண்டல்...இணக்கம் அது இதெண்டு..உது நடந்தால் எப்பிடி அங்க இருக்கிற தம்பி சகோதரங்களை இஞ்ச எடுக்கிறது..? போனது கிழக்குதானை..வடக்கு இருக்குமட்டும் வாய்வீரம் பேசுவம்....அதுக்கிடையிலை சகோதரங்கள் எல்லாரையும் எடுத்திடுவம்.... பிறகு இருக்கிற வன்னிச்சனமும், ஏலாத போராளிகளும் பட்டபாடு...கேட்டா அப்பப்ப அஞ்சப் பத்தை ஒதுக்குவம்...ஆனால் ஒண்டு அவங்கள் மட்டும் வாழவேண்டும் எண்டு நினைச்சால் வெளிநாட்டுக்கு வந்து வாழட்டும்..ஊரிலை இருந்து வாழவேணும் எண்டு நினைச்சா செத்தாலும் சிங்களவனோட உரிமைபற்றி பேசக்கூடாது..ஒண்டில் போராடிச்சாகவேணும்...இல்லையெண்டால் வெள்நாட்டுக்கு கிளம்பி வந்துடனும்..இங்கை வந்தை நாட்டைமறந்து மொழியை மறந்து திரிஞ்சாலும் நீ நல்லவன்...ஆனால் ஊரில் இருந்து மொழியையும் வழர்த்து இன அடையாளங்களைப் பேணியபடி தந்திரமாக தற்காலிகமாக இனத்தின் இருப்பை நிலை நிறுத்துவதற்க்கு ஏதாவது செய்தால் இனத்துரோகிதான் நீங்கள்...

ஒரு சாரமேயில்லாத சப்பை வாதம் இது. நீங்கள் சொல்வதைப்போன்ற மனநிலையில் ஒரு சிலர் அல்லது ஒரு பகுதியினர் இருக்கலாம். ஆனால் தமிழர்களில் பலர் எமது இருப்பு கலாச்சாரம் பற்றிய அக்கறை கொண்டவர்களாகவே இருக்கின்றோம்.

எமது சந்ததி சொந்த பண்பாடு கலாச்சாரங்களைத் தொலைத்த அவல வாழ்வு வாழ்வதை யாரும் விரும்பவில்லை. எங்கள் இருப்பும் வளர்ச்சியும் மலர்ச்சியும் எங்கள் சொந்த மண்ணில் தான் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

"அப்போ... போராட்ட காலத்தில் நீங்கள் உதவியது எல்லாம் உங்கள் உறவுகளை வெளியில் எடுத்து விட வேண்டுமென்பதற்காகவா? அப்படியாயின் உங்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது உயர்ந்த எண்ணம் மிச்சம் மீதி இருக்கின்றதா?"

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பார்கள்.நாம் எத்தனைதான் வெளிநாடுகளில் வசதியாக வாழ்ந்தாலும் இங்கு எம்மால் எப்போதும் ஒட்டமுடியாது. வெளிநாட்டவர்களும் உங்களை எப்போதும் அந்நாட்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. உங்களுக்கு சிற்றிசனே தந்து வைத்திருந்தாலும் அவர்கள் மனதளவில் நீங்கள் அகதிகள் அல்லது அதிதிகள்...அவ்வளவே.

நாட்டில் நல்லதொரு தீர்வு கிடைத்தால் நிம்மதியாக ஊர்போய்ச் சேரஎத்தனையோ பேர் தவியாய்த் தவிக்க்கின்றார்கள். நான் கூட யோசிப்பதுண்டு ..இலங்கையில் பிரச்சினை தீராவிட்டால் பேசாமல் தமிழ்நாட்டில் போய் இருந்து விடுவோமா? என்று. அந்த கலாச்சாரமும் பண்பாடும் தான் எங்களது. வெளிநாடுகளில் இருப்பது வேறு.

எமது மனமும் குணமும் நிறமும் எப்போதும் இங்கு ஒட்டவேபோவதில்லை. அப்படியே எங்கள் பிள்ளைகள் இங்கு இருக்க ,வாழ விரும்பினாலும் அது சூரிநாம், கயானா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கும் -அப்போதைய இந்திய தொழிலாளர்களின் பிள்ளைகள் - இன்றைய தலைமுறை போன்று எந்தவித கலாச்சாரமும் இன்றி தாங்கள் யார் என்ற பிரக்ஞையும் இன்றி வைக்கப்படும் தாம் கொண்டிருக்கும் பெயரும் அர்த்தம் இழந்து (பாலகிருஷ்ணன் - பால்கிஷூன்) மொட்டையாக வாழும் அவலம் தான் வாய்க்கும்.

D30903110.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாரமேயில்லாத சப்பை வாதம் இது.

ஒரு விவாதத்தின்போது எதிர்ப்பக்கத்தில் இருப்பவர் ஒருபோதும் இப்படியான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தக்கூடாது...ஏனெனில் நீங்கள் என் கருத்துடன் முரண்பட்டவர் என்பதால்தான் எதிர்க்கருத்தேவைக்கிறீர்கள்...அப்படியானால் எனது கருத்து தவறு என்றுதானே நீங்கள் உங்கள் கருத்தையே வைக்கிறீர்கள்...பிறகு இப்படி அதையே சொல்லிக்காட்டி மினக்கெட்டுக்கொண்டிருக்ககூடாது..பார்ப்பவர்களுக்கு சலிப்பாக இருக்கும்..நேரடியாக விடயத்திற்கு வரவேண்டும்..இதெல்லாம் தங்கள் கருத்துக்களில் பலவீனமானவர்கள் பாவிப்பது...அல்லது அருவரியில் எழுதத்தொடங்குபவர்கள் பாவிப்பது...தாங்கள் அப்படி இல்லை என்று உங்கள் வேறுகருத்துக்களில் அவதானித்தேன்..பிறகேன் இங்கு வந்து தரம் தாழ்ந்தீர்களோ தெரியலை... :)

நீங்கள் சொல்வதைப்போன்ற மனநிலையில் ஒரு சிலர் அல்லது ஒரு பகுதியினர் இருக்கலாம்.

அவர்களையே குறிப்பிட்டேன்... :) இங்கு சுண்டலின் கருத்தை மறுப்பவர்கள் எல்லோரும் அதே மனநிலையில் உள்ளவர்களாகவே இருக்கமுடியும்..நீங்கள் மறுதலித்தால் நீங்களும் அதே மனநிலையில் இருப்பவர் என்றே அர்த்தம்..அப்படி என்றால் உங்களுக்கும் பொருந்தும்..இல்லையென்றால் உங்களுக்குரியதல்ல இது...

"போராட்ட காலத்தில் நீங்கள் உதவியது எல்லாம் உங்கள் உறவுகளை வெளியில் எடுத்து விட வேண்டுமென்பதற்காகவா? அப்படியாயின் உங்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது உயர்ந்த எண்ணம் மிச்சம் மீதி இருக்கின்றதா?"

[size=5]போராட்ட காலத்தில் உதவியது எல்லாம் [/size] போராட்டம் வெல்லட்டும் என்று....எல்லாரையும் அங்கு தனிய போராடவிட்டிட்டு ஓடிவந்திட்டனே எனும் குற்ற உணர்வில் கொடுத்தது...என்னத்தைக்கொடுத்தும் அவர்களின் தியாகங்களை ஓடிவந்த எங்களின் தப்புடன் சமப்படுத்தமுடியுமா..? போராடப் போகாமல் இங்கு ஓடிவந்து ஒளிந்திருந்தேன்..அதனால் போராளிகளுடன் ஒப்பிடும்போது என்மேல் ஒருபோதும் எனக்கு மதிப்பில்லை...நான் போலி விம்பம் காட்ட விரும்பவில்லை..நேரடியாகவே எழுதுகிறேன்...அங்கு நின்று போராடாமல் அகதியாக தப்பி ஓடிவந்ததையிட்டு அங்கேயே நின்று எதை நேசித்தார்களோ அதற்க்காகவே கடைசிவரை போராடிய என் நண்பர்களுடன் என்னை ஒப்பிட்டு பார்த்து என்மேலேயே எனக்கு வெறுப்பாக இருக்கு....

தமிழர்களில் பலர் எமது இருப்பு கலாச்சாரம் பற்றிய அக்கறை கொண்டவர்களாகவே இருக்கின்றோம்.

எமது சந்ததி சொந்த பண்பாடு கலாச்சாரங்களைத் தொலைத்த அவல வாழ்வு வாழ்வதை யாரும் விரும்பவில்லை. எங்கள் இருப்பும் வளர்ச்சியும் மலர்ச்சியும் எங்கள் சொந்த மண்ணில் தான் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பார்கள்.நாம் எத்தனைதான் வெளிநாடுகளில் வசதியாக வாழ்ந்தாலும் இங்கு எம்மால் எப்போதும் ஒட்டமுடியாது. வெளிநாட்டவர்களும் உங்களை எப்போதும் அந்நாட்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. உங்களுக்கு சிற்றிசனே தந்து வைத்திருந்தாலும் அவர்கள் மனதளவில் நீங்கள் அகதிகள் அல்லது அதிதிகள்...அவ்வளவே.

நாட்டில் நல்லதொரு தீர்வு கிடைத்தால் நிம்மதியாக ஊர்போய்ச் சேரஎத்தனையோ பேர் தவியாய்த் தவிக்க்கின்றார்கள். நான் கூட யோசிப்பதுண்டு ..இலங்கையில் பிரச்சினை தீராவிட்டால் பேசாமல் தமிழ்நாட்டில் போய் இருந்து விடுவோமா? என்று. அந்த கலாச்சாரமும் பண்பாடும் தான் எங்களது. வெளிநாடுகளில் இருப்பது வேறு.

எமது மனமும் குணமும் நிறமும் எப்போதும் இங்கு ஒட்டவேபோவதில்லை. அப்படியே எங்கள் பிள்ளைகள் இங்கு இருக்க ,வாழ விரும்பினாலும் அது சூரிநாம், கயானா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கும் -அப்போதைய இந்திய தொழிலாளர்களின் பிள்ளைகள் - இன்றைய தலைமுறை போன்று எந்தவித கலாச்சாரமும் இன்றி தாங்கள் யார் என்ற பிரக்ஞையும் இன்றி வைக்கப்படும் தாம் கொண்டிருக்கும் பெயரும் அர்த்தம் இழந்து (பாலகிருஷ்ணன் - பால்கிஷூன்) மொட்டையாக வாழும் அவலம் தான் வாய்க்கும்.

அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்....உண்மையான வார்த்தைகள்...இதை நாட்டையும்,இனத்தையும் மறந்து வாழ்பவர்கள் உணரட்டும்...

Edited by சுபேஸ்

ஒரு விவாதத்தின்போது எதிர்ப்பக்கத்தில் இருப்பவர் ஒருபோதும் இப்படியான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தக்கூடாது...ஏனெனில் நீங்கள் என் கருத்துடன் முரண்பட்டவர் என்பதால்தான் எதிர்க்கருத்தேவைக்கிறீர்கள்...அப்படியானால் எனது கருத்து தவறு என்றுதானே நீங்கள் உங்கள் கருத்தையே வைக்கிறீர்கள்...பிறகு இப்படி அதையே சொல்லிக்காட்டி மினக்கெட்டுக்கொண்டிருக்ககூடாது..பார்ப்பவர்களுக்கு சலிப்பாக இருக்கும்..நேரடியாக விடயத்திற்கு வரவேண்டும்..இதெல்லாம் தங்கள் கருத்துக்களில் பலவீனமானவர்கள் பாவிப்பது...அல்லது அருவரியில் எழுதத்தொடங்குபவர்கள் பாவிப்பது...தாங்கள் அப்படி இல்லை என்று உங்கள் வேறுகருத்துக்களில் அவதானித்தேன்..பிறகேன் இங்கு வந்து தரம் தாழ்ந்தீர்களோ தெரியலை... :)

நீங்கள் மீண்டும் சப்பைக்கட்டுத்தான் கட்டுகின்றீர்கள். உங்கள் வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். வெறும் கிண்டலும் கேலியும் எள்ளலும் தான் இருந்ததே தவிர..ஒரு சீரிஸ்னெஸ் இருக்கவில்லை.

இந்தப் பிரச்சினையை இட்டு எவ்வாறு சிந்திக்கின்றீர்களோ தெரியாது. ஆனால் உங்கள் எழுத்து முறை திசைதிருப்பாது இருக்க வேண்டுமென்பது தான் என் எண்ணம்...

அவர்களையே குறிப்பிட்டேன்... :) இங்கு சுண்டலின் கருத்தை மறுப்பவர்கள் எல்லோரும் அதே மனநிலையில் உள்ளவர்களாகவே இருக்கமுடியும்..நீங்கள் மறுதலித்தால் நீங்களும் அதே மனநிலையில் இருப்பவர் என்றே அர்த்தம்..அப்படி என்றால் உங்களுக்கும் பொருந்தும்..இல்லையென்றால் உங்களுக்குரியதல்ல இது...

அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்....உண்மையான வார்த்தைகள்...இதை நாட்டையும்,இனத்தையும் மறந்து வாழ்பவர்கள் உணரட்டும்...

சுண்டலை மறுதலித்தே இதை எழுதியிருந்தேன் //.நீங்கள் மறுதலித்தால் நீங்களும் அதே மனநிலையில் இருப்பவர் என்றே அர்த்தம்// எப்படி?

பின்னர் எப்படி நான் எழுதியதை உண்மையான வார்ட்த்தைகள் என்று உங்களால் ஒத்துக்கொள்ள முடிந்துது.ஒன்ன்றுக்கொன்று முரணாக இருக்கின்றது உங்கள் வாதம்...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மீண்டும் சப்பைக்கட்டுத்தான் கட்டுகின்றீர்கள். உங்கள் வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். வெறும் கிண்டலும் கேலியும் எள்ளலும் தான் இருந்ததே தவிர..ஒரு சீரிஸ்னெஸ் இருக்கவில்லை.

இந்தப் பிரச்சினையை இட்டு எவ்வாறு சிந்திக்கின்றீர்களோ தெரியாது. ஆனால் உங்கள் எழுத்து முறை திசைதிருப்பாது இருக்க வேண்டுமென்பது தான் என் எண்ணம்...

நன்றி..அது என்னோட எழுத்து நடை இல்லைத்தான்...ஒத்துக்கிறேன்...இனிமேல் சீரியஸான விடயங்கள் பேசும்போது அவ்வாறான எள்ளல் நடையை தவிர்த்துக்கொள்கிறேன்...நன்றி அண்ணா எடுத்துக்காட்டியதற்கு....சொல்லியவிதம் சப்பையாக எழுதி இருக்கிறீர்கள் என்று சொல்லி இருக்கலாம்...ஆனால் எழுதிய விடயம் சப்பை என்று சொல்லி மினக்கேடதேவை இல்லை..நேரடியாகவே உங்கள் கருத்தை எப்படி மறுதலிக்கிறீர்கள் என்பதை எழுதி இருக்கலாம் என்பதையே குறிப்பிட்டன்....

சுண்டலை மறுதலித்தே இதை எழுதியிருந்தேன் //.நீங்கள் மறுதலித்தால் நீங்களும் அதே மனநிலையில் இருப்பவர் என்றே அர்த்தம்// எப்படி?

பின்னர் எப்படி நான் எழுதியதை உண்மையான வார்ட்த்தைகள் என்று உங்களால் ஒத்துக்கொள்ள முடிந்துது.ஒன்ன்றுக்கொன்று முரணாக இருக்கின்றது உங்கள் வாதம்...

நான் குவோட் பண்ணிய பகுதியை வடிவாக வாசித்துப்பாருங்கள்..அதற்கும் சுண்டலின் விவாதத்திற்கும் சம்பந்தமில்லை...நல்ல விடயங்கள் அங்கு இருக்கின்றன..எனக்கு ஒருவரின் கருத்துடன் முரண்படும்போது அவர் எழுதும் நல்ல விடயங்களையும் தப்பாகக் காட்டி ஒருவித விரோதமனப் பான்மையில் எழுதத்தெரியாது..ஏனெனில் நான் யார் எழுதியது என்பது குறித்து கவலைப் படுவதில்லை..என்ன எழுதப்பட்டிருக்கு என்பது குறித்ததே எனது அக்கறை....அப்படி இருக்கையில் நான் ஏன் நீங்கள் எழுதிய நல்லவிடயங்களை பாராட்டாமல் இருக்கவேண்டும்..? :)

  • கருத்துக்கள உறவுகள்

எமது மனமும் குணமும் நிறமும் எப்போதும் இங்கு ஒட்டவேபோவதில்லை. அப்படியே எங்கள் பிள்ளைகள் இங்கு இருக்க ,வாழ விரும்பினாலும் அது சூரிநாம், கயானா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கும் -அப்போதைய இந்திய தொழிலாளர்களின் பிள்ளைகள் - இன்றைய தலைமுறை போன்று எந்தவித கலாச்சாரமும் இன்றி தாங்கள் யார் என்ற பிரக்ஞையும் இன்றி வைக்கப்படும் தாம் கொண்டிருக்கும் பெயரும் அர்த்தம் இழந்து (பாலகிருஷ்ணன் - பால்கிஷூன்) மொட்டையாக வாழும் அவலம் தான் வாய்க்கும்.

புலம்பெயர் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் புலம்பெயர் நாடுகளின் கலாச்சாரத்தையும் உள்வாங்கி தமிழர்களின் கலாச்சாரத்தையும் மறக்காமல் இருக்கின்றனர். பலருக்குத் தமிழர்கள் என்ற பிரக்ஞை இருப்பதால்தான் தமிழர்களையே அதிகம் நண்பர்களாக வைத்திருக்கின்றார்கள்.. எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்த்தால் பார்வையில்தான் பழுது..

மேலும் தாயகத்தில் தற்போது வாழ்பவர்கள் 20 வருடங்களுக்கு முந்தைய உறைநிலையில் வாழவில்லை. அவர்களும் பரவிவரும் மேலைத்தேயக் கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்கின்றனர்.. அண்மையில் தாயகம் சென்ற நண்பன் ஒருவன் "சாரம்" கட்டும் இளைஞர்களைக் காணவில்லையென்றும் தான் "சாரம்" உடுத்தியதை ஒரு மாதிரியாகப் பார்த்ததாகவும் குறைபட்டுக்கொண்டார். அவரும் ஊரிலுள்ளவர்கள் பிரக்ஞை இல்லாமல் வாழ்கின்றனர் என்று நினைத்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தற்காலிகமாக நாங்கள் விரும்புவது சிங்களவர்களுடன் ஒரு reconciliation ..... That's all

நாங்கள் தோற்கடிக்க பட்டதை கௌரவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் மீண்டும் மீண்டும் இழப்பு எங்களுக்கே

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பிடி எல்லாம் எழுத வெக்கமா தான் இருக்கு....வேதனையா தான் இருக்கு....அனால் சில கசப்பான மருந்துகளையும் நாங்க குடிச்சு தான் ஆகணும்....

புலம்பெயர் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் புலம்பெயர் நாடுகளின் கலாச்சாரத்தையும் உள்வாங்கி தமிழர்களின் கலாச்சாரத்தையும் மறக்காமல் இருக்கின்றனர். பலருக்குத் தமிழர்கள் என்ற பிரக்ஞை இருப்பதால்தான் தமிழர்களையே அதிகம் நண்பர்களாக வைத்திருக்கின்றார்கள்.. எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்த்தால் பார்வையில்தான் பழுது..

மேலும் தாயகத்தில் தற்போது வாழ்பவர்கள் 20 வருடங்களுக்கு முந்தைய உறைநிலையில் வாழவில்லை. அவர்களும் பரவிவரும் மேலைத்தேயக் கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்கின்றனர்.. அண்மையில் தாயகம் சென்ற நண்பன் ஒருவன் "சாரம்" கட்டும் இளைஞர்களைக் காணவில்லையென்றும் தான் "சாரம்" உடுத்தியதை ஒரு மாதிரியாகப் பார்த்ததாகவும் குறைபட்டுக்கொண்டார். அவரும் ஊரிலுள்ளவர்கள் பிரக்ஞை இல்லாமல் வாழ்கின்றனர் என்று நினைத்திருக்கலாம்!

இரண்டாம் தலைமுறை பற்றிப் பேசுகிறீர்கள். நான் குறிப்பிட்ட சூரிநாம் .கயானா மக்கள் வெறும் மூன்றாம் நான்காம் சந்ததி தான் .அவர்கள் எல்லாவற்றையும் மறந்து/தொலைத்து விட்டு நிற்கின்றார்கள்.

அப்படி எங்கள் தமிழர் இல்லாவிட்டால் சந்தோஷமே. .. இது எதிமறையாகப் பார்ப்பது அன்று. நடைமுறை உண்மைகளினூடாக எதிர்வு கூறுவது. ஆடை உடுத்துவது வேறு. கலாச்சார விழுமியங்களைக் கட்டிக்காப்பது வேறு.

இப்பொழுது தற்காலிகமாக நாங்கள் விரும்புவது சிங்களவர்களுடன் ஒரு reconciliation ..... That's all

நாங்கள் தோற்கடிக்க பட்டதை கௌரவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் மீண்டும் மீண்டும் இழப்பு எங்களுக்கே

என்ன சுண்டல் ..ஏன் இந்த மூடுமந்திரம் .நீங்கள் என்ன சிங்களவரிடம் வேண்டுகின்றீர்கள் அல்லது அவர்கள் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்பதைப் போட்டுடைத்து விடவேண்டியது தானே..?

அவர்கள் எதுவும் தரமறுத்தது தானே இத்தனை போராட்டத்திற்கும் காரணம்?

உங்கள் எண்ணத்தை விரிவாக நீங்கள் எழுதாவிட்டால் .. உங்களுடன் அழுகுணி ஆட்டம் ஆட நான் தயாரில்லை :D :D

சுரினாம் ,கயானா வில் இருப்பவர்களுடன் எம்மை ஒப்பிட முடியாது .அவர்கள் சுதந்திரத்திற்கு முன் கூ லிகளாக கொண்டுசெல்லப்பட்டு மொழி ,கலாச்சாரம் அத்தனையும் தொலைத்தவர்கள் .

கனடாவில் பல்கலை கழகம் செல்ல தமிழ் ஒரு கிறேடிற் ஆக கொடுக்கலாம் .புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் வானொலி பத்திரிகை டி வி என்று சனம் அந்த மாதிரி இருக்கு .இவர்களை போய் கூலிகளாக தோட்டங்களில் வைத்திருந்தவர்களுடன் ஒப்பிட முடியாது .

யுனெஸ்கோவெ அகிலத் தமிழுக்கு ஐம்பது வருசம் தான் கொடுத்தானாம். அவ்வளவு காலம் கனேடியன் தமிழுக்கு கொடுக்க என்ன ஆங்கிலம் பேசும் கனேடியன்ஸ் எல்லோருமே கர்னங்களா - போர்தான் வேண்டாம் ஒரு வாக்குவாதம் கூட இல்லாமல் அர்சுன் உடன் ஒத்துப் போய்விட.

[size=6]வ.ஐ.ச.ஜெயபாலன்[/size]

2rzf7gp.jpg

மாண்புமிகு நஜீப் ஏ மஜீத் அவர்களை வரவேற்கிறோம்!

கிழக்கு மாகாண முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் மாண்புமிகு நஜீப் ஏ மஜீத் அவர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் சார்பிலான எனது நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரதும் முஸ்லிம்களதும் தாய் மண் என்கிற யதார்த்தம் இன்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி முழு வடகிழக்கு மாகாணத்திலுமே உயர் பதவிகள் சுழற்சி முறையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் ஆண்டனுபவிக்க வேண்டும் என கனவு காண்கின்றேன்.

நீங்கள் பாரம்பரியமாக தமிழருடன் நல்லுறவு பேணிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது மேலும் மகிழ்ச்சி தருகிறது. திருகோணமலையில் தமிழர் முஸ்லிம்கள் உறவுக்கு உங்கள் தந்தையார் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.

துரதிஸ்டவசமான எங்கள் கடந்தகால வரலாற்றின் குப்பைமேடுகள் எங்கள் மேம்பாட்டுக்கான வழிகளை எல்லாம் மூடிச் சவாலாக ஓங்கிக் கிடக்கிறது. கிழக்கு மாகாணத்தின் மூவின மக்களையும் அணிதிரட்டுவதன்மூலம்தான் மேற்படி சவாலை எதிர்கொள்ள முடியும் என்கிறதை நீங்கள் உணர்ந்திருப்பது நம்பிக்கை தருவதாக உள்ளது. மேற்படி வரலாற்றின் சவால்களை மக்கள் துணையுடன் நீங்கள் எதிர்கொள்ளவேண்டும். .

தாய்மண்ணில் வாழ ஏங்கியபடி அகதிமுகாம்களில் வாடும் சம்பூர் தமிழ் மக்களதும் படுவான்கரை முஸ்லிம் அகதிகளதும் வாழ்வை மீட்டுத்தந்து துன்பப்படும் மக்களின் நம்பிக்கை நட்சதிரமாக நீங்கள் செயல்படவேண்டும். என்பது இந்தக் கவிஞனின் ஆசை.

காலம் காலமாக கிழக்குமண் தமிழ் மற்றும் முஸ்லிம் வன்னியனார்கள் என்ற குறுநிலத் தலைவர்களால்தான் ஆழப்பட்டு வந்தது. கண்டி அரசின்கீழ் இருந்த காலத்திலும் இதுதான் நமது வரலாறாக இருந்தது. எனவே ஒரு தமிழ் முதலமைச்சருக்குப் பிறகு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் பதவி ஏற்பது காலத்தின் நீதியும் நியதியுமாகும். இதனை ஏற்று கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் நமது முதலைமைச்சர் மாண்புமிகு நஜீப் ஏ மஜீத் அவர்களை வரவேற்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் சம்பந்தபட்ட அரசியல் கட்சிபற்றிய விமர்சனங்களுக்கு வெளியில், உங்கள் நல்லியல்புகளையும் உங்களூடாக சகோதர முஸ்லிம் மக்களுக்குக் கிட்டியிருக்கும் வரப்பிரசாதத்தையும் கௌரவிக்கும் தமிழர்களுள் ஒருவனாக உங்களுக்கு பல்லாண்டு கூறுகிறேன். கட்சி அரசியலுக்கும் போராட்டங்களுக்கும் வெளியில் மாண்புமிகு நஜீப் ஏ மஜீத் அவர்கள் நீதியுடன் செயல்படுகிறதற்கான கால அவகாசத்தையும் ஆதரவையும் தமிழர் கூட்டமைப்பு நல்கவேண்டும். இதுவே முஸ்லிம் மக்களின் நல்மதிப்பை பெற்றிருக்கும் தமிழ் மக்களின் தலைவரான சம்பந்தர் அவர்களுக்கும் தமிழர் கூட்டமைப்புக்கும் என்னுடைய பணிவன்பான வேண்டுகோள்.

நமது பாரம்பரிய தாயகமான வடகிழக்கு மண்ணை சூரியனும் சந்திரனும் உள்ள வரைக்கும் காலமெல்லாம் தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் நீதியுடனும் ஆண்டனுபவிக்கவேண்டும் என்கிற என்னுடைய கனவை வடகிழக்கு மக்கள் மனசில் விதைக்கிறேன்.

9/19/2012 12:17:26 AM

http://ponguthamil.c...83-816de98294ca

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கு போதிமரத்தின் கீழ் ஞானம் பிறந்தது ....சிறிலங்காவில் சிலருக்கு தமிழனின் அழிவில் ஞானம் பிறக்குது...

தனது தேவைக்கேற்ப கவிஞர் செயபாலன், குறுகிய காலத்தை மாத்திரம் எடுத்து, முன்னைய வரலாறுகளைத் திரித்துக் கூறியுள்ளார். மீண்டும் கிழக்குத் தமிழனை விற்கும் செயல். கவிதை எழுதுபவர்களுக்கு ஒரு நேர்மை வேண்டும். கவிதைகளை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் நாக்கு வழிப்பதா? போங்கையா நீங்களும் உங்கள் பிழைப்பும். முன்பு பிரபாகரன், இப்போ மஜீத். நாளை யாரோ?

Edited by தப்பிலி

புத்தருக்கு போதிமரத்தின் கீழ் ஞானம் பிறந்தது ....சிறிலங்காவில் சிலருக்கு தமிழனின் அழிவில் ஞானம் பிறக்குது...

அழிவுக்கு முன்னர் ஞானம் பிறந்திருந்தால் அதற்குப் பெயர் துரோகம் :D

அழிவுக்கு முன்னர் ஞானம் பிறந்திருந்தால் அதற்குப் பெயர் துரோகம் :D

'காலத்தே பயிர் செய்'

அது நன்றாகவே நடக்கிறது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.