Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஸ்ஸாம் - இஸ்லாமியர்களின் துயரம்

Featured Replies

குஜராத் படுகொலைகளுக்குப் பிறகான மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறிய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையின் கீழ் இத்தகைய மிகப்பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், போடோ பழங்குடி மக்கள், போடோ அல்லாத பிற இனத்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கொட்டும் மழையில் ஒரு அகதிப் பெண் தனது குடும்பத்திற்கான உணவைத் தயாரிக்கும் புகைப்படங்கள் நம்மை என்னவோ செய்கிறது. இவ்வருடம் ஜூலையில் அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் ஆரம்பித்த இக்கலவரங்கள் போடோலாந்து பகுதி முழுவதும் பரவியது. போடோ மக்களுக்கும், போடோ அல்லாத மக்களுக்குமான கலவரம் என சொல்லப்பட்டாலும் போடோ பழங்குடிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில்தான்தான் பிரதான கலவரம் நடைபெற்றது.

அஸ்ஸாமில் நடைபெற்றுள்ள கலவரங்களை ஏதோ இந்தியாவின் ஒரு மூலையில் நடைபெற்ற ஒரு கலவரமாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. தாக்கப்பட்ட மக்கள் இஸ்லாமியர்கள், சிறுபான்மை மக்கள் எனும்போது அந்நிகழ்வு இந்தியா முழுமைக்கும் மிகப்பெரும் அதிர்வுகளை உருவாக்குகிறது. மும்பையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அது வன்முறை நிகழ்வாக மாறுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு எத்தகைய அச்சத்தில் மும்பை உறைந்திருந்ததோ அந்நிலைக்கு மீண்டும் மும்பை சென்றது. மும்பை இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்பது நமக்குத் தெரியும். மும்பையின் அச்சநிலை இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கவல்லது. அவ்வன்முறைக்கு மறுநாட்களில் மஹாராஷ்டிராவின் இரு வலதுசாரி கட்சிகளும் நடத்திக் காட்டிய பொதுக்கூட்டங்களிலும் பாசிசக் கருத்துகள் உதிர்க்கப்பட்டன. பீகார் மாநில போலீஸ்காரர்கள் மிரட்டப்பட்டனர். பதிலுக்கு பீகார் மாநிலத்தின் அரசியல்வாதிகள் தாக்கரேக்களின் பூர்வீகமே பீகார்தான் என்று தொல்பொருள் ஆராய்ச்சி செய்தனர். மற்றொருபுறம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவின் தெற்குப்பகுதியில் வாழும் வட-கிழக்கு மக்கள் மிரட்டப்பட்டனர். அதன் விளைவு அம்மக்களின் பெரும் இடப்பெயர்ச்சி. பிரிவினைக்குப் பிறகான மிகப்பெரும் இடப்பெயர்ச்சி.

assam_riots_600.jpg

இந்தியாவில் நடைபெறும் கலவரங்கள் அனைத்தும் மதரீதியான பரிமாணத்தை மிக விரைவில் அடையும் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தும். முதலாவதாக மதம் ஒரு வன்முறை நிகழ்வின் வீரியத்தை அதிகரிக்கவல்லது. வன்மத்தை அதிகரித்து அதைக் கொண்டிருப்பவர்களை பைத்திய நிலைக்கு கிறங்கடிக்கும் ஆற்றல் மதத்துக்கு உண்டு. ஒரு வன்முறை நிகழ்வுக்கு மதத்தை அடிப்படையாக்கினால் அவ்வன்முறைக்குப் பொறுப்பானவர்கள் எளிதில் தங்கள் குற்றங்களிலிருந்து விடுபடலாம். அல்லது மதம் தக்க பாதுகாப்பை அவர்கள் கேட்காமலேயே அளிக்கும். உலகத்து மனிதர்களின் மனங்களைப் பண்படுத்தத் தோன்றியதாக விளக்கப்படும் மதம் இன்றைக்கு உலகின் ரத்த ஆறுகளுக்கு ஊற்றுக் கண்களுமாக அமைந்து போனதை யாரும் மறுக்கமுடியாது.

இந்தியாவிற்குள் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் இஸ்லாமிய மக்களின் பரவலைப் பற்றி அறிய இந்திய வரலாற்றை நாம் கூர்ந்து நோக்கவேண்டும். இந்தியப் பிரிவினை நடத்திய ஊழிக்கூத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். முதலாவது ஆங்கிலேய-பர்மியப் போரில் ஆங்கிலேயர்கள் வென்றதன் அடிப்படையில் 1826-ல் ஆங்கிலேயர்கள் பர்மாவுடன் செய்துகொண்ட‌ 'யாண்டாபூ' ஒப்பந்தத்தின்படி அஸ்ஸாம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு அஸ்ஸாமின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. காலனியாதிக்கவாதிகளின் லாபவெறி அஸ்ஸாமையும் விடவில்லை. அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேயிலைத் தோட்ட முதலாளிகள் ஆங்கிலேயர்களாக இருந்தார்கள். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு மிகப் பெரும் எண்ணிக்கையில் வேலையாட்கள் தேவைப்பட்டார்கள். இந்நேரத்தில் தமிழகத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதையும், இலங்கை சுதந்திரம் அடைந்தபின்பு அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு நிராதரவாக விடப்பட்டார்கள் என்பதையும் அவர்களில் ஒரு பகுதியினர் தமிழகத்திற்கு திருப்பியனுப்பப்பட்டனர் என்பதையும் மிக்க வேதனையோடு நாம் நினைவு கூர வேண்டும்.

1905-ல் வங்காளப் பிரிவினைக்கு முன்னர் அஸ்ஸாமும், கிழக்கு வங்காளமும் ஒரே மாநில அலகில் இடம் பெற்றிருந்தபோது முஸ்லீம்களின் அஸ்ஸாமியக் குடியேற்றங்கள் தீவிரமடையவில்லை. அதன் பிறகு கிழக்கு வங்காள மக்களை (இஸ்லாமியர்களை) அஸ்ஸாமில் குடியமர்த்தும் வேகம் அதிகரித்தது. 1905-க்குப் பிறகான காலத்தில் ஏறத்தாழ 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் கிழக்கு வங்க இஸ்லாமிய மக்கள் அஸ்ஸாமில் குடியேறினர் என்றும் இது அன்றைக்கு அஸ்ஸாமின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிலிருந்து ஆறில் ஒரு பங்கு அளவு வரை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சமீந்தாரி ஆட்சி முறையும், பர்மனென்ட் செட்டில்மெண்ட் முறையும் வங்காளத்தை பஞ்சம், பஞ்சமாக சிதைத்துப் போட்டிருந்த காலம் அது. வங்காளக் குடியானவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும், நிலம் தேடி, பிழைப்பு தேடி இந்தியாவின் எப்பகுதிக்கும் செல்ல அவர்கள் அணியமாகவிருந்தார்கள் என்பதும் வரலாறு.

அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா நதிக்கரையில் செழிப்பான வனங்களும், மேய்ச்சல் நிலங்களும் அபரிதமாக இருந்தன. அவ்வனப்பகுதிகளிலும், மேய்ச்சல் நிலங்களிலும் பாரம்பரியமாக வசித்து வந்த போடோ இனப் பழங்குடிகளினால் எவ்வித லாபமும் ஆங்கிலேய முதலாளிகளுக்குக் கிடைக்கவில்லை. காரணம் போடோ மக்கள் பழங்குடிகளுக்கே உரித்தான பயிரிடு முறையை (shifting cultivation) பின்பற்றி வந்தனர். அது அம்மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றியதே தவிர உபரி உற்பத்தியை அவர்கள் மூலம் பெற வாய்ப்பில்லை என உணர்ந்த ஆங்கிலேய முதலாளிகள் உபரி மக்கள்தொகையைக் கொண்ட வங்காள மக்களைக் குடியேற்றத் தொடங்கினர். ஆங்கிலேயர்களின் லாபவெறிதான் பிரதான காரணம் என்றாலும் அன்றைக்கு இருந்த வங்காளத்தின் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையும் இக்குடியேற்றத்திற்குப் பெரும் உதவி செய்தது. போடோ பழங்குடிகளின் மற்றுமொரு பண்பையும் நாம் காணவேண்டும். காலம் காலமாக தாங்கள் பயன்படுத்தி வந்த விளைநிலங்களை, மேய்ச்சல் நிலங்களை தங்களுடையது என்று அவர்கள் என்றும் உரிமை பாராட்டியது கிடையாது. வனங்கள் முழுவதையுமே தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்தாலும் வனம் என்றைக்கும் அழிந்தது கிடையாது. இந்தியா முழுவதும் இன்று பழங்குடி மக்களினங்கள்தான் இருக்கும் சொற்ப வனங்களைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இன்னமும் காப்பாற்றி வருகிறார்கள். அவ்வனங்களுக்குக் கீழே இருக்கும் கனிம வளங்களைக் கொள்ளைக் கொண்டு போவதற்கு வசதியாக அரசு அப்பழங்குடிகளின்மீது பச்சைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அஸ்ஸாமில் குடியேறிய இஸ்லாமியர்களை தொடக்கத்தில் அஸ்ஸாமியர்கள் வரவேற்றனர். அஸ்ஸாமின் வளர்ச்சியில் அவர்கள் பங்கு செலுத்தினர். கிழக்கு வங்காள முஸ்லீம்களின் குடியேற்றத்தை ஒரு கட்டத்தில் அச்சத்தோடு நோக்கிய அஸ்ஸாமியர்கள் குடியேற்றப் பகுதிகளில் ஒரு எல்லை வரை மட்டுமே அவர்கள் குடியமர்த்தப்படவேண்டும் என்ற Line System முறையைக் கொண்டுவந்தனர். 1920களில் Line System அமுல்படுத்தப்பட்டது. இம்முறையினால் இஸ்லாமியர்களின் குடியேற்றங்கள் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. 1939-ல் காங்கிரஸின் பர்டோலோய் அமைச்சரவையின் ராஜினாமாவையடுத்து முஸ்லீம் லீக் உதவியுடன் பதவியேற்ற சையத் முகம்மது சதுல்லா Line System முறையை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். கிழக்கு வங்க இஸ்லாமியர்களைத் தொடர்ச்சியாகக் குடியேற்றம் செய்தார். 1942-ல் மீண்டும் பதவிக்கு வந்த சதுல்லா, "போருக்கு உதவ அதிகமான உணவை விளைவிக்கவேண்டும்" என்றத் திட்டத்தின்கீழ் நவ்காங், டார்ரங், காம்ரூப் மாவட்டங்களின் வனப்பகுதிகளையும், மேய்ச்சல் நிலங்களையும் குடியேற்றங்களுக்காகத் திறந்துவிட்டார். சதுல்லாவின் இத்திட்டத்தை "Grow More Muslims" என்று வேவல் பிரபு அழைத்தார். 1940 வாக்கில் கீழ் அஸ்ஸாமின் பார்பீட்டா கோட்டத்தின் இஸ்லாமியர்களின் தொகை 49 சதவீதமாக மாறியது. 1911-ல் இது 0.1 சதவீதம் மட்டுமே. சுதந்திரத்திற்குப்பின்பு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசிலும், அஸ்ஸாம் இயக்கத்திற்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்த அசாம் கனபரிசத் அரசிலும் போடோ பழங்குடிகளின் வாழ்வுரிமைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

குடியேறிய இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் அஸ்ஸாமிய மொழியைக் கற்று, அஸ்ஸாமிய இஸ்லாமியர்களாயினர். இந்நிகழ்வுதான் இயல்பாகவும் இருக்கமுடியும். மொழியால் அவர்கள் அஸ்ஸாமியராயினர். தமிழகத்திலும் கூட மராட்டிய, நாயக்கர் ஆட்சிக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான கன்னடர்களும், தெலுங்கர்களும், மராட்டியர்களும் குடியேறினர். தமிழ் பயின்ற அவர்கள் இன்று அயலவர்கள் என்று பிரித்தறியப்பட முடியாதவர்களாக உள்ளனர். ஒரு தேச உருவாக்கத்திலும் சரி, ஒரு சமூக உருவாக்கத்திலும் சரி மொழி வகிக்கும் பங்கை நாம் நிராகரித்துவிட முடியாது. அதுபோல மதம் என்ற ஒன்று ஒரு தேச உருவாக்கத்திற்கோ, ஒரு சமூக உருவாக்கத்திற்கோ உதவி செய்துவிட முடியாது. மதம் என்பது தேச, சமூக உருவாக்கங்களுக்கு அடிப்படையாக இருக்குமானால் பாகிஸ்தானும், பங்களாதேஷும் பிளவு பட்டிருக்காது. ஐரோப்பாவின் பல தேசங்கள் ஒரே நாடாகத் தான் இருந்திருக்கும். எனவே தான் அஸ்ஸாம் மாநிலத்தில், அஸ்ஸாம் சமூகத்தில் இஸ்லாமியர்களும் என்றைக்குமே பிரிக்கமுடியாத ஒரு அங்கம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. போடோ இன‌த்தவர்களின் நிலமும், வனமும், அவற்றில் அவர்களுக்குரிய உரிமையும் எவ்வளவு நிதர்சனமான உண்மையோ, அந்த அளவுக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் நீண்ட காலத்துக்கு முன்னரே குடியேறிய இஸ்லாமியர்களுக்குமான உரிமையும் உண்மை.

assam_riot_570.jpg

தங்களின் ஒரே வாழ்வாதாரமான வனங்களும், மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டே வருவதை உணர்ந்த போடோ மக்கள் தனி மாநிலம் கேட்டுப் போராட்டம் தொடங்கினர். தொடக்கத்தில் மத்திய, மேற்கு அஸ்ஸாம் நிலப்பகுதிகளை ஒருங்கிணைத்து அங்கு வசிக்கும் அனைத்துப் பழங்குடி மக்களுக்குமான ஒரு தனி மாநிலம் வேண்டும் எனத் தொடங்கப்பட்ட இப்போராட்டம், நாளடைவில் மிஷிங் மற்றும் ராஃபா இன மக்களின் எதிர்ப்பையடுத்து போடோ இனத்துக்கான தனி மாநிலக் கோரிக்கையாக மாறியது. தாங்கள் கோரிய தனி மாநில நிலப்பரப்பில் போடோ இனமக்கள் மிகப் பெரும் பழங்குடி இனத்தவராக இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பான்மையினராக இல்லை. தனிமாநில இயக்கம் வன்முறையில் இறங்கியது. அன்றைய அஸாம் கனபரிசத் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய காங்கிரஸ் அரசு போடோ பிரிவினையை ஊக்குவித்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தபிறகு போடோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி அரசியல் சட்டத்தின் ஆறாம் பிரிவு திருத்தப்பட்டு போடோ தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இக்கவுன்சிலின் மொத்தமுள்ள 46 இடங்களில் 30 இடங்கள் போடோ இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆட்சிப்பிரதேசத்தில் போடோ அல்லாத மீதம் 70 சதவீத மக்களுக்கு மீதம் 16 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டன. பழங்குடி அல்லாத மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்க ஒப்பந்தத்தில் ஷரத்துகள் இருந்தாலும் அந்த ஷரத்துகள் தங்களுக்கு எதிரானவை என போடோக்களும், அந்த ஷரத்துகள் நடைமுறையில் மதித்து செயல்படுத்தப்படவில்லை என போடோ அல்லாத மக்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர்.

போடோ பழங்குடி மக்களுக்கும், குடி பெயர்ந்த இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதல்கள் கடந்த பல்லாண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கிறது. அஸ்ஸாம் கிளர்ச்சியின்போது தற்போதைய மாரிகோவான் மாவட்டத்தின் நெல்லீ என்னுமிடத்தில் 1983, பிப்ரவரி 18ல் ஒரே நாளில் வங்காள இஸ்லாமிய குடியேற்ற மக்கள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 1800 பேர் பழங்குடி மக்களால் கொல்லப்பட்டனர். 1993 அக்டோபரில் நடைபெற்ற கலவரத்தினால் இடம்பெயர்ந்த 4000 இஸ்லாமியக் குடும்பங்கள் இன்னமும் உதவி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 1994ல் பார்பீடா மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் போடோக்களும், இஸ்லாமியர்களுமாக 113 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்திருக்கிறார்கள். 2008 அக்டோபரில் டார்ரங், உடல்குரி மாவட்டங்களில் நடைபெற்ற கலவரங்களில் இரு தரப்பிலும் 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டு லட்சத்திற்கும் பேற்பட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள். இப்படியான ஒரு தொடர்ச்சிதான் சமீபத்தியக் கலவரங்களும்.

போடோக்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கமுடியாது. அதேபோல் போடோ தன்னாட்சிப் பிரதேசத்துக்கு அரசியல் சாசனத்தின் ஆறாவது பிரிவு (இந்தியப் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் ஆட்சித் திறம் பற்றியது) அதிகாரத்தை வழங்கியது பற்றியும், அக்கவுன்சிலில் போடோக்களுக்கு உள்ள மிக அதிகப்படியான உரிமையை ம‌றுப‌ரிசீல‌னை செய்வ‌து ப‌ற்றியும் மத்திய‌ அர‌சும், மாநில‌ அர‌சும் ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌து அவ‌சிய‌ம். அதோடு மார்ச், 25, 1971 (பாகிஸ்தான் அர‌சு டாக்காவில் ந‌ட‌வ‌டிக்கை தொட‌ங்கிய‌ நாள்)‍க்குப் பிற‌கு ப‌ங்க‌ளாதேஷிலிருந்து அஸ்ஸாமில் குடியேறிய‌ ம‌க்க‌ளை அடையாள‌ம் க‌ண்டு அவ‌ர்க‌ள் மீது ச‌ட்ட‌பூர்வ‌ ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தும் மிக‌ மிக‌ அவ‌சிய‌ம். இத்த‌கைய‌ இரு முனை ந‌ட‌வ‌டிக்கைக‌ள் போடோக்க‌ளுக்கும், க‌ட‌ந்த‌ 100 ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ வாழ்ந்துவ‌ரும் இஸ்லாமிய‌ மக்களுக்கும் இண‌க்க‌த்தை ஏற்ப‌டுத்தும். போடோ ம‌க்க‌ளுக்கும், இஸ்லாமிய‌ ம‌க்க‌ளுக்குமான‌ இக்க‌ல‌வ‌ர‌ம் ஒரு இந்து முஸ்லீம் க‌ல‌வ‌ர‌மாக‌ எவ‌ரும் க‌ருதிவிட‌வும் கூடாது.

போடோக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நடைபெறும் கலவரங்களில் போடோ அல்லாத அஸ்ஸாமியர்கள் ஒருபோதும் இஸ்லாமியர்களை கைவிட்டுவிடக்கூடாது என்பதை மிகவும் அழுத்தமாகக் குறிப்பிடவேண்டும்.

- செ.சண்முகசுந்தரம், தஞ்சாவூர்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21239

இப்படித்தான் முட்டாள் தனமான கருத்துகளை எழுதுவதற்கு ஒரு கூட்டமும் அதை எதோ பெரிய கருத்துபோல ஆமோதிக்கும் கூட்டமும் நம் தமிழினத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

இந்த கருத்து எங்கே இருந்து இணைக்க பட்டதோ அதே இணையத்தில் பல மறுமொழிகளின் எனக்கு பிடித்த சிலவற்றை இணைத்து இருக்கிறேன் கீழே.

!!!!!!!!!!!!!!!!

அசாமில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ குடியேறிய‌ ப‌ங்க‌ளாதேசிக‌ளை முஸ்லீம்க‌ளாக‌ ம‌ட்டும் பார்த்து ஏனைய‌ இந்திய‌ முஸ்லீம்க‌ளைத் திருப்திப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ எழுதுவ‌தையும், அர‌சிய‌ல் க‌ட்சிகள் அவ‌ர்க‌ளின் வாக்குக‌ளைப் பெறுவ‌த‌ற்காக‌ உப‌யோகிப்ப‌தையும் நிறுத்த‌ வேண்டும். அசாமிலுள்ள‌ ப‌ங்க‌ளாதேசிக‌ள் ச‌ட்டவிரோதமான‌ குடியேறிக‌ள். அவ‌ர்க‌ளுக்கென‌ சுத‌ந்திர‌மான‌, அவ‌ர்க‌ளின் ம‌த‌ச்சார்புள்ள வள‌மான‌ நாடிருக்கும் போது, இந்தியாவின் எல்லைக‌ளைச் ச‌ட்ட‌விரோத‌மாக‌க் க‌டந்து குடியேறிய‌வ‌ர்க‌ளை இந்தியாவில் குடிய‌ம‌ர்த்தி, இந்திய‌ர்க‌ளாகிய‌ அசாமிய‌ர்க‌ளின் பூர்வீக‌ ம‌ண்ணை அவ‌ர்க‌ளுக்கும் பிரித்துக் கொடுக்குமாறு கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் நியாய‌மான‌தாகும்? அசாம் பிர‌ச்சனை, இந்து முஸ்லீம் பிர‌ச்சனைய‌ல்ல‌. அய‌ல் நாட்டிலிருந்து ச‌ட்ட‌ விரோத‌மாக‌ அசாமில் குடியேறிய‌/ குடியேறுகிற‌ இந்திய‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌து. இந்தியாவின் குடிவ‌ர‌வு ‍ குடிய‌க‌ல்வு ச‌ட்டங்க‌ள் முறையாக‌, ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளிலுள்ள‌ வாக்குக‌ளைப் ப‌ற்றிச் சிந்திக்காம‌ல் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப் ப‌ட்டால் அசாம் பிர‌ச்ச‌னை இல‌குவாக‌த் தீர்க்க‌ப்ப‌ட‌க் கூடிய‌தொன்றாகும். இன்று த‌மிழ‌ர்க‌ளின் பழமை வாய்ந்த‌ த‌லைந‌க‌ராகிய‌ த‌ஞ்சை மாந‌க‌ர‌த்தில் முஸ்லீம்க‌ள் தான் பெரும்பான்மையின‌ர் அல்ல‌து பெரும்பான்மையின‌ராகி வ‌ருகின்ற‌ன‌ர் என‌க் கேள்விப்ப‌ட்டேன். த‌மிழும் தேவார‌மும் ஒலித்த‌ ம‌ண்ணில் அன்னிய‌ அர‌பி மொழி ஒலிப்ப‌தை உண்மையான‌, மான‌முள்ள‌ எந்த‌ த‌மிழ‌னும் விரும்ப‌மாட்டான். ஆனால் ப‌ல‌ரும் அதை வெளிப்ப‌டையாக‌ச் சொல்ல‌த் த‌ய‌ங்குவார்க‌ள். த‌ஞ்சாவூர் முஸ்லீம்க‌ள் த‌மிழைப் பேசுப‌வ‌ர்க‌ளாக இருப்ப‌தால் ஏனைய‌ த‌மிழ‌ர்க‌ள் அதைப் பெரிது ப‌டுத்த‌ மாட்டார்க‌ள். ஆனால் அசாமைப் போல், த‌ஞ்சாவூரிலும் ப‌ங்க‌ளாதேஸ் முஸ்லீம்க‌ள் குடியேறி, த‌மிழ‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் சொந்த‌, பார‌ம்ப‌ரிய‌ ம‌ண்ணிலேயே சிறுபான்மையின‌ராக்கி, க‌லாச்சார‌ அடையாள‌ங்க‌ளை மாற்றி, வ‌ள‌மான‌ தஞ்சாவூரின் வ‌ய‌ல் நில‌ங்க‌ளிலும் ப‌ங்கு கேட்டால் நிச்ச‌ய‌மாக‌ திருவாள‌ர் செ.சண்முகசுந்தரம், இப்படியான‌ க‌ட்டுரையை எழுத‌மாட்டார். “தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்பார்க‌ள். முஸ்லீம்களால் மீண்டும், மீண்டும் முதுகில் குத்த‌ப்ப‌ட்ட‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் அசாமிய‌ர்க‌ளின் உண‌ர்வை நிச்ச‌ய‌மாக‌ப் புரிந்து கொள்ள‌ முடியும். இன்று, ஈழ‌த்தின் கிழ‌க்கு மாகாணத்தை முழுமையாக‌ முஸ்லீம் மாகாண‌மாக‌ மாற்றுவோம் என்கிறார் இல‌ங்கை முஸ்லீம் காங்கிர‌சின் இளைஞ‌ர் காங்கிர‌சிஸ் தேசிய‌ அமைப்பாள‌ரும், கிழ‌க்கு மாகாண‌ ச‌பை உறுப்பின‌ராகிய‌ முக‌ம்ம‌து ஜெமில். அப்ப‌டியொரு முஸ்லீம் த‌லைவ‌ர் த‌ஞ்சாவூரிலும் உருவாகாம‌லிருக்க‌ த‌ஞ்சைப் பெருவுடையாரை வேண்டுவ‌தைத் த‌விர‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு வேறு வ‌ழி கிடையாது.

!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அஸாம் வன்முறையின் போது முஸ்லீம் அல்லாத பெண் ஒருவர் முஸ்லீம்களால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு.. காட்சிப் படுத்த கொடுமைகளையும் இப்படியான கட்டுரை வரைபவர்கள் வெளிக்கொணரும் பக்குவத்தையும் துணிச்சலையும் அடைய வேண்டும். குறிப்பாக முஸ்லீம் எழுத்தாளர்கள்.. முஸ்லீம்களுக்காக எழுதுபவர்கள்.. தங்களை சுயமதிப்பீடு செய்வதோடு கூடிய சனநாயகத்தன்மையை பின்பற்ற முன் வர வேண்டும்..!

முஸ்லீம்கள் மற்றவர்கள் மீது செய்யும் மத ரீதியான.. மனிதம் சாராத சமூக ரீதியான கொடுமைகளை அவர்கள் கைவிடும் போது.. அவர்கள் மீதான வெறுப்புணர்வும்.. வன்முறைகளும் தானாகக் குறையும்..! இதனை முஸ்லீம்கள் உணராதவரை.. அவர்கள் மீது எவரும் நம்பிக்கை வைக்க இலகுவில் முன்வர மாட்டார்கள் என்பதே உலக யதார்த்தம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

பூர்வீக பழங்குடி மக்களின் உரிமையை நிராகரித்து, சட்ட விரோதமாக வந்து குடியேறிய பங்களாதேசிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது இந்தக் கட்டுரை.

இவர்கள் வந்து குடியேறிய இடங்களில் எல்லாம் இவர்களால் பிரச்சனைதான்.

.

இந்தியாவில் மட்டும் அல்ல, இங்கிலாந்து (ஐரோப்பா) அவுஸ்திரேலியாவிலும் இன்று மறைவாகப் பதுங்கியிருந்து பெருகும் இஸ்லாமிய பயங்கரவாதம் இந்த பங்களாதேசிகளே !!

.

இந்தியாவில் மட்டும் அல்ல, இங்கிலாந்து (ஐரோப்பா) அவுஸ்திரேலியாவிலும் இன்று மறைவாகப் பதுங்கியிருந்து பெருகும் இஸ்லாமிய பயங்கரவாதம் இந்த பங்களாதேசிகளே !!

கொஞ்சம் பொறுங்கோ, இங்கிலாந்தில் இவர்கள் தனி அலகு கேட்கும் காலம் வெகு தூரத்திலில்லை. அது மற்றைய ஐய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவும்.

[size=4]ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவால் இன்று உலகம் முழுவதும் மேற்குலகம் தூதுவராலயங்களை மூடி ஒருவகையில் அடிபணிந்து குனிந்து நிற்கிறது. காரணம் - இஸ்லாமியர்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் சனநாயக உரிமை அல்ல, அந்த உரிமையுடன் கலந்த பயங்கரவாதம் அதை ஆதரிக்கும் அரச பயங்கரவாதங்கள். [/size]

[size=4]அதனால் உலகம் முழுவதும் இவர்கள் மேலே வெறுப்பே மற்றைய மக்களால் ஏற்படுகிறது.[/size]

[size=4]எனவே பேர்மாவிலும் சரி அசாமிலும் சரி கொல்லப்படும் பொழுது அனுதாப அலைகள் உருவாகாது.[/size]

[size=4] [/size]

[size=4]ஆனால் தமிழர்கள் மட்டும் குரல் கொடுப்பார்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே... முழு முட்டாள் என்றால், முஸ்லீமுக்கு வக்காலத்து வாங்கும் அல்லது அவனை நம்பும் தமிழன் தான்....

இங்கு துருக்கிய‌ரும்.. ந‌ன்றாக‌ வேரூன்றி, நாலு மில்லிய‌ன் ச‌ன‌த்தொகையை... எட்டிக் கொண்டிருக்கின்ற‌து.

அவ‌ர்க‌ளால்... இப்ப‌வே, மெல்ல‌ பிர‌ச்சினை ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

பேர்லினில்... சில‌, துருக்கி ம‌க்க‌ள் வ‌சிக்கும் ப‌குதிக்கு, சாதார‌ண‌ போலிசார் போக‌ யோசிப்ப‌தால்...

அதிர‌டிப் ப‌டையுட‌ன்... தான் செல்வார்க‌ள். இனியாவ‌து... சோன‌க‌னை, ந‌ம்புவ‌தை கைவிடுங்க‌ள்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட விரோதமாக குடியேறியவர்களே அசாம் கலவரத்துக்கு காரணம்: அத்வானி பாய்ச்சல்

Tamil_News_large_519866.jpg

கவுகாத்தி: ""அசாமில் தற்போது நடக்கும் கலவரத்துக்கு, வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறிவர்களே காரணம். சட்ட விரோத ஊடுருவலை தடுப்பதற்கு, மத்திய அரசு, எந்த முயற்சியும் செய்யாததால், பூர்விக மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது,'' என, பா.ஜ., தலைவர் அத்வானி கூறினார்.

பா.ஜ., மூத்தத் தலைவர் அத்வானி, அசாமில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். முகாம்களில் வசிக்கும் மக்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதன்பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக அசாமுக்குள் ஊடுருவும் செயல், பல ஆண்டுகளாக நீடிக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன், உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தெரிவித்தது. அதற்கு பின்னும் கூட, சட்ட விரோத ஊடுருவலை தடுக்க, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்ட விரோதமாக ஊடுருவியவர்களால் தான், தற்போது கலவரம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள், அசாமின் பூர்விக மக்களிடமிருந்து நிலங்களை அபகரித்துக் கொள்கின்றனர். இதனால், பூர்விக மக்கள், நிலம் இல்லாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையை தடுப்பது எப்படி என்பது குறித்து, மத்திய அரசு, சுய பரிசோதனை செய்ய வேண்டும். பிரச்னை எப்படி ஏற்பட்டது என்பது பற்றி, பிரதமரும், காங்கிரஸ் தலைவரும், தீவிரமாக சிந்தித்து பார்க்க வேண்டும். கோக்ராஜ்கரில் உள்ள முகாமில், நான் சந்தித்த மக்கள் அனைவரும், தாங்கள், வீடிழந்து விட்டதாக கண்ணீர் விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்துக்கு, மதம் அல்லது ஜாதிச் சாயம் பூசும், மனப்பான்மை எதுவும் எனக்கு இல்லை. அசாம் கலவரத்தையும், காஷ்மீர் விவகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. காஷ்மீரை பொறுத்தவரை, அங்கு ஏற்பட்ட பயங்கரவாதத்தால், அங்கு வசிக்கும் பண்டிட் மக்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர். இவ்வாறு அத்வானி கூறினார்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=519866

  • தொடங்கியவர்

உலகத்திலேயே... முழு முட்டாள் என்றால், முஸ்லீமுக்கு வக்காலத்து வாங்கும் அல்லது அவனை நம்பும் தமிழன் தான்....

இங்கு துருக்கிய‌ரும்.. ந‌ன்றாக‌ வேரூன்றி, நாலு மில்லிய‌ன் ச‌ன‌த்தொகையை... எட்டிக் கொண்டிருக்கின்ற‌து.

அவ‌ர்க‌ளால்... இப்ப‌வே, மெல்ல‌ பிர‌ச்சினை ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

பேர்லினில்... சில‌, துருக்கி ம‌க்க‌ள் வ‌சிக்கும் ப‌குதிக்கு, சாதார‌ண‌ போலிசார் போக‌ யோசிப்ப‌தால்...

அதிர‌டிப் ப‌டையுட‌ன்... தான் செல்வார்க‌ள். இனியாவ‌து... சோன‌க‌னை, ந‌ம்புவ‌தை கைவிடுங்க‌ள்.

இன்றும் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக பார்ப்பனர்களை விட அதிகளவில் உள்ளன்புடன் நேர்மையாக குரல் கொடுப்பவர்களில் பலர் முஸ்லிம்கள் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றான் இந்த நிழலி :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக பார்ப்பனர்களை விட அதிகளவில் உள்ளன்புடன் நேர்மையாக குரல் கொடுப்பவர்களில் பலர் முஸ்லிம்கள் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றான் இந்த நிழலி :)

மறுக்கவில்லை நிழலி, அது எத்தனை சதவீதம்?

தமிழகத்து, மூஸ்லீமை கெடுத்தவன், இலங்கை முஸ்லீம்.

இலங்கை முஸ்லீமை கெடுத்தவன், பாகிஸ்தான் முஸ்லீம்.

இது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள பனிப்போரை நடத்த தமிழன் தான்... கிடைத்த இளிச்சவாயன்.

ஒரு சில முஸ்லீம்கள் ஆதரவு கொடுக்கின்றார்கள் என்பதற்காக...

அதற்கு, நாம் வக்காலத்து வாங்கினால்...

முழுத் தமிழ் இனமே... காணாமல் போகும்.

பார்ப்பனரையும், முஸ்லீம்களையும் நம்புவதே... தமிழனுக்கு ஆபத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று த‌மிழ‌ர்க‌ளின் பழமை வாய்ந்த‌ த‌லைந‌க‌ராகிய‌ த‌ஞ்சை மாந‌க‌ர‌த்தில் முஸ்லீம்க‌ள் தான் பெரும்பான்மையின‌ர் அல்ல‌து பெரும்பான்மையின‌ராகி வ‌ருகின்ற‌ன‌ர் என‌க் கேள்விப்ப‌ட்டேன். த‌மிழும் தேவார‌மும் ஒலித்த‌ ம‌ண்ணில் அன்னிய‌ அர‌பி மொழி ஒலிப்ப‌தை உண்மையான‌, மான‌முள்ள‌ எந்த‌ த‌மிழ‌னும் விரும்ப‌மாட்டான். ஆனால் ப‌ல‌ரும் அதை வெளிப்ப‌டையாக‌ச் சொல்ல‌த் த‌ய‌ங்குவார்க‌ள். த‌ஞ்சாவூர் முஸ்லீம்க‌ள் த‌மிழைப் பேசுப‌வ‌ர்க‌ளாக இருப்ப‌தால் ஏனைய‌ த‌மிழ‌ர்க‌ள் அதைப் பெரிது ப‌டுத்த‌ மாட்டார்க‌ள். ஆனால் அசாமைப் போல், த‌ஞ்சாவூரிலும் ப‌ங்க‌ளாதேஸ் முஸ்லீம்க‌ள் குடியேறி, த‌மிழ‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் சொந்த‌, பார‌ம்ப‌ரிய‌ ம‌ண்ணிலேயே சிறுபான்மையின‌ராக்கி, க‌லாச்சார‌ அடையாள‌ங்க‌ளை மாற்றி, வ‌ள‌மான‌ தஞ்சாவூரின் வ‌ய‌ல் நில‌ங்க‌ளிலும் ப‌ங்கு கேட்டால் நிச்ச‌ய‌மாக‌ திருவாள‌ர் செ.சண்முகசுந்தரம், இப்படியான‌ க‌ட்டுரையை எழுத‌மாட்டார். “தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்பார்க‌ள். முஸ்லீம்களால் மீண்டும், மீண்டும் முதுகில் குத்த‌ப்ப‌ட்ட‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் அசாமிய‌ர்க‌ளின் உண‌ர்வை நிச்ச‌ய‌மாக‌ப் புரிந்து கொள்ள‌ முடியும். இன்று, ஈழ‌த்தின் கிழ‌க்கு மாகாணத்தை முழுமையாக‌ முஸ்லீம் மாகாண‌மாக‌ மாற்றுவோம் என்கிறார் இல‌ங்கை முஸ்லீம் காங்கிர‌சின் இளைஞ‌ர் காங்கிர‌சிஸ் தேசிய‌ அமைப்பாள‌ரும், கிழ‌க்கு மாகாண‌ ச‌பை உறுப்பின‌ராகிய‌ முக‌ம்ம‌து ஜெமில். அப்ப‌டியொரு முஸ்லீம் த‌லைவ‌ர் த‌ஞ்சாவூரிலும் உருவாகாம‌லிருக்க‌ த‌ஞ்சைப் பெருவுடையாரை வேண்டுவ‌தைத் த‌விர‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு வேறு வ‌ழி கிடையாது.

!!!!!!!!!!!!!

ஆனால் அசாமைப் போல், த‌ஞ்சாவூரிலும் ப‌ங்க‌ளாதேஸ் முஸ்லீம்க‌ள் குடியேறி, த‌மிழ‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் சொந்த‌, பார‌ம்ப‌ரிய‌ ம‌ண்ணிலேயே சிறுபான்மையின‌ராக்கி, க‌லாச்சார‌ அடையாள‌ங்க‌ளை மாற்றி, வ‌ள‌மான‌ தஞ்சாவூரின் வ‌ய‌ல் நில‌ங்க‌ளிலும் ப‌ங்கு கேட்டால் நிச்ச‌ய‌மாக‌ தஞ்சாவூரின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தாம் பேசும் மொழி தமிழ் என்ற உணர்வில் தமிழர்களுடன் இணைந்து ஒருபோதும் பங்களாதேஸ் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடமாட்டார்கள்..மாறாக பள்ளிவாசல்களில் தந்திரமாக தமிழர்களை ஒழித்துக்கட்ட மதம் என்ற அடையாளத்தின் பின்னால் ஒன்று திரண்டு காலம்காலமாக தாங்கள் ஒட்டி உறவாடிய தம் மொழியையே பேசும் தமிழர்களுக்கு எதிராகவே ஆயுதத்தை தீட்டுவார்கள்...மதத்திற்காக அவர்கள் தீட்டியமரத்திலேயே பதம்பார்ப்பார்கள்...அவர்களின் மதப் பயங்கரவாதம்தான் மிகவும் ஆபத்தானது,அபத்தமானது...இல்லாத கடவுளுக்காக இருக்கும் மனிதர்களை கொல்லும் ஈனத்தனத்தை அவர்களுக்கு ஒரு மாதம் ஊட்டி வளர்க்குமானால் அதைவிட காட்டுமிராண்டித்தனமான மதம் இந்த உலகில் இருக்கமுடியாது..எப்படி இந்துசமயம் பிற்போக்குத்தனங்களையும்,முட்டாள்தனங்களையும் சம்பிரதாயங்கள் என்றபேரில் எமது சமூகத்துக்கு கற்றுக்கொடுத்திருக்கிறதோ அதைவிடக்கொடுமையான கீழ்த்தரமான,அடக்குமுறைத்தனமான வழக்கம்களை முஸ்லீம் சமூகத்திற்கு அவர்களின் மதம் கற்றுக்கொடுத்திருக்கிறது...அதன் விளைவுகளைத்தான் உலகமெங்கும் முஸ்லீம் நாடுகளின் தெருக்களில் காண்கிறோம்...மத்தின்பேரால் முஸ்லீம் பெண்கள்மேல் திணிக்கப்படும் அடக்குமுறைகள் மிக உச்சமானவை...பெண்களை முகத்தைமூடியபடி அலையவிடும் ஒரு மதத்தை பின்பற்றுபவர்களை எப்படி நாகரிமடைந்தவர்கள் என்று சொல்லுவது..?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக பார்ப்பனர்களை விட அதிகளவில் உள்ளன்புடன் நேர்மையாக குரல் கொடுப்பவர்களில் பலர் முஸ்லிம்கள் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றான் இந்த நிழலி :)

உண்மை...நிறைய நல்லமனிதர்கள் இருக்கிறார்கள்...அதுவே அவர்களின் மதத்தின்பேரால் எதிர்க்கும்படி கேட்கப்படும்போது கண்ணைமூடிக்கொண்டு எதிர்க்க தயங்க மாட்டர்கள்...அது சரியோ பிழையோ,நீதியானதோ,அநீதியானதோ என்றெல்லாம் சிந்திக்கமாட்டார்கள்....இதுதான் முஸ்லீம்களின் மேலான நம்பிக்கையீனத்தை உருவாக்குவது..அவர்களின் அளவற்ற மதவெறியே எந்தவிடயத்தையும் அவர்களுடன் செய்யமுடியாத ஒரு நிலைக்கு இட்டு செல்கிறது...எந்த ஒரு நல்லமனமுள்ள முஸ்லீம்கூட மதத்தின்பேரால் ஒருவிடயத்தை செய்யும்படி கேட்டால் அது அநீதியானது என்றாலும் மனச்சாட்சியைவிட மதத்திற்கே முன்னுரிமை கொடுப்பான்.....அதனால்தான் அவர்களில் பல நல்லமனிதர்கள் இருந்தும் மதபோதை அவர்களை மீழவிடுகிறதே இல்லை...அவர்கள் தங்கள் மதவெறியை குறைத்து மனிதத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்...பல முஸ்லீம் நல்லமனிதர்களின் மனதைபுண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்...ஆனால் யார்த்தம் என்று ஒன்றைப் பேசவெளிக்கிட்டால் இதுதான் உண்மை...

இங்கு குடியேற்றம் பற்றிக் கதைப்பதால் சிறு தகவல்.

17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த கண்டி மன்னன், அவர்களை கல்முனையிலும் (8000 அகதிகள்) காத்தான்குடியிலும் (4000 அகதிகள்) குடியேற்றினான். இன்று கிழக்கு மாகான சபையை அவர்கள் ஆளுகிறார்கள். அங்கு பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர்கள் எதிர்க் கட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

சாக்கடை வங்காளிகளை முதலில், அவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கிருந்தெல்லாம் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பவேண்டும். போடோ இன மக்களது பாரம்பரிய விளைநிலங்களில் திட்டமிட்டுக் குடியேறி தற்போது அவர்களை வீடற்றவராக்கிவிட்டனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.